தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)-பகுதி-2
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 27/04/2022
www.poornalayam.org
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)-பகுதி-2
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 27/04/2022
www.poornalayam.org
அனுவாகம்-4.1
யஶ்ச2ந்த3ஸம்ருஷபோ4 விஶ்வரூப: |
ச2ந்தோ3ப்4யோÅத்4யம்ருதாத்ஸம்பூ4வ
|
ஸ மேந்த்3ரோ மேத4யா ஸ்ப்ருணோது |
அம்ருதஸ்ய தே3வ தா4ரணோ பூ4யாஸம் |
ஶரீரம் மே விசர்ஷணம் |
ஜிஹ்வா மே மது4மத்தமா |
கர்ணாப்4யாம் பூ4ரி விஶ்ருவம் |
ப்3ரஹ்மண: கோஶோÅஸி மேத4யா பிஹித: |
ஶ்ருதம் கோ3பாய ||
யஶ்ச2ந்த3ஸம்ருஷபோ4 விஶ்வரூப: |
ஸ மேந்த்3ரோ மேத4யா ஸ்ப்ருணோது |
அம்ருதஸ்ய தே3வ தா4ரணோ பூ4யாஸம் |
ஶரீரம் மே விசர்ஷணம் |
ஜிஹ்வா மே மது4மத்தமா |
கர்ணாப்4யாம் பூ4ரி விஶ்ருவம் |
ப்3ரஹ்மண: கோஶோÅஸி மேத4யா பிஹித: |
ஶ்ருதம் கோ3பாய ||
இது ஒரு பிரார்த்தனை, மேதா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகின்றது.
வேதாந்த மாணவர்களுக்கு இது மிக முக்கியமான பிரார்த்தனை. இது ஓங்காரத்தை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனிடம் சில வேண்டுதல்களை அடைவதற்காக செய்யப்படுகின்ற
உபாஸனை. ஓங்காரம் ஏன் உயர்ந்ததாக கருதப்படுகின்றது என்றால் இது
எல்லா சப்தத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, வேதத்திற்கே ஆதாரமாக
இருக்கின்றது. பதார்த்தமில்லாமல்
பதங்கள் கிடையாது. எனவே இது பதார்த்தத்திற்கும் ஆதாரமாகவே இருக்கின்றது. ஓம் = அ
+ உ + ம் இவைகள் முறையே தோற்றம், ஸ்திதி, லயம் இவைகளை குறிக்கின்றது.
1. ஓங்காரம் வேத மந்திரங்களில்
சிறந்தது மேலும் அனைத்துமாகவும் விளங்குகின்றது.
2. இதை ஆலம்பனமாக கொண்டு
தியானிக்கும் ஈஸ்வரன் எனக்கு அடைந்த அறிவில் நிலைப்படுத்துவதன் மூலம் வலிமைப்படுத்து, காப்பாற்று. கற்றதை நினைவில் வைக்கும் சக்தி,
ஞாபக சக்தியை கொடு.
3. ஒங்கார ரூபமாக இருக்கும்
இறைவா, மரணமில்லா பெருவாழ்வு தரும் பிரம்ம ஞானத்தை உடையவனாக இருப்பேனாக. என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பிரம்மஞான முயற்சிக்கு
ஒத்துழைக்கும் அளவுக்கு சக்தியுடையதாக இருக்கட்டும்.
4. என்னுடைய நாவிலிருந்து
வெளி வரும் வாக்கானது இனிமையாக, மிருதுவாக இருக்கட்டும். நாம் நம்மையறியாமல் மற்றவர்களை சொல்லால்
துன்புறுத்திவிடுகின்றோம். என் நாவிலிருந்து வரும் வார்த்தைகள்
யாரையும் துன்புறுத்தாத வகையில் இருக்கட்டும். மனதில் இருக்கும்
அறிவை தெளிவாக மற்றவர்களுக்கு வாக்கின் மூலமாக சொல்லும் திறமை வேண்டும்.
5. என்னுடைய இரண்டு
செவிகளினால் வேத சாஸ்திரத்தை பலமுறை எனக்கு புரியும் வரை, சரியான
அறிவு அடையும் வரை கேட்க வேண்டும்.
6. பிரம்மத்திற்கு
உறையாக இருக்கும் ஒங்காரமே!
நான் உன்னை விசாரம் செய்வதன் மூலம் மறைத்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை
நான் அறியும் வகையில் மறைப்பை எடுத்து விடு. ஓங்காரமே ஆலம்பனமாக இருப்பதால் அது
பிரம்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும் உறையாக கூறப்படுகின்றது.
7. குருமுகமாக நான்
பெற்ற வேத சாஸ்திர உபதேசம் என்னிடமே நிலையாக இருக்கட்டும்.
இந்த பிரார்த்தனைகளை ஜபம் மூலமாக ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும். இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து
பிறகு பலமுறை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்ய வேண்டும். இதை விரதமாகவும் எடுத்துக்கொண்டு
இவைகளை அடையும் வரை ஜபத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.
அனுவாகம்-4.2
அவஹந்தி விதன்வானா |
குர்வாணாசீரமாத்மன: |
வாஸாம்ஸி மம கா3வஶ்ச |
அன்னபானே ச ஸர்வதா3 |
ததோ மே ஶ்ரியமாவஹ |
லோமஶாம் பஶுபி4: ஸஹ ஸ்வாஹா ||
இது ஸ்ரீகாமாஸ்ய ஹோமம் என்றும் ஆவஹந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படும்.
எதற்காக இந்த செல்வங்களை கேட்டு பெற வேண்டும்?
·
கர்மத்தை செய்வதற்காகத்தான் இவைகளை பயன்படுத்த வேண்டும், தன்னுடைய
போகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. உபாஸனம் சுதந்திரம், கர்மம் தனதந்திரம். தியானம் செய்ய வேண்டுமென்றால் எதுவும்
தேவை கிடையாது. ஆனால்
யாகம் செய்ய வேண்டுமென்றால் பணமும், மற்றவர்கள் உதவியும் தேவைப்படுகின்றது. சத்துவகுண பிரதானமுடையவர்களால்தான்
தியானம் செய்ய முடியும். இந்த மனத்தூய்மையை அடைவதற்காக கர்மம்
செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்வதற்காகத்தான் செல்வத்தை வேண்டுகின்றான்.
·
கர்மம் எதற்கு செய்ய வேண்டும்? மனத்தூய்மையை அடைவதற்கு கர்மம் செய்தாக
வேண்டும். போகத்திலிருந்து விடுபட தானம் செய்ய வேண்டும்,
இவைகளுக்காக செல்வம் தேவை. பணமிருந்தும் தானம்
செய்யாதவனையும், பணமில்லாமல் இருந்து செய்யாதவனையும் கல்லைக்கட்டி
நீரில் போட வேண்டும்.
·
மனத்தூய்மை எதற்காக பயன்படும்? இது ஆத்ம ஞானத்தை அடைவதற்காக தேவை. குருவின் உபதேசம் ஞானமாக மாற வேண்டுமானால்
மனத்தூய்மை வேண்டும்.
அனுவாகம்-4.3
ஆ மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
வி மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ப்ர மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
த3மாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ஶமாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
யஶோ ஜனேÅஸானி ஸ்வாஹா |
ஶ்ரேயான் வஸ்யாஸோÅஸானி ஸ்வாஹா |
யதா2ப: ப்ரவதா யந்தி |
யதா2 மாஸா அஹர்ஜரம் |
ஏவம் மாம் ப்3ரஹ்சாரிண: |
தா4தராயன்து ஸர்வத: ஸ்வாஹா |
வேதம் படிக்க விரும்பும் மாணவர்கள் என்னை நோக்கி வரட்டும். விதவிதமான தேசத்திலிருந்து, விதவிதமான தகுதிகளை உடையவர்கள் என்னிடன் வர வேண்டும். புத்திக்கூர்மையுடைவர்கள், அறிவுத்திறமையுடைவர்கள் என்னிடம் வரட்டும். இந்திரிய ஒழுக்கமுடையவர்கள், மனக்கட்டுபாடுடையவர்கள் என்னிடம் வரட்டும். .புகழ் பெற்ற ஆசிரியனாக இருப்பேனாக. செல்வந்தர்களுக்குள் மேலானவனாக இருப்பேனாக. எப்படி நீரானது கீழேயுள்ள பிரதேசத்தை நோக்கி இயற்கையாக ஒடுகின்றதோ அதுபோல மாணவர்கள் விரும்பி, வேகமாக ஓடிவர வேண்டும். எவ்விதம் மாதங்கள் வருடத்தை நோக்கி ஓடுகிறதோ, அதுபோல மாணவர்கள் என்னைத்தேடி வரவேண்டும். இறைவா எல்லா திசைகளிலிருந்து என்னிடம் வரட்டும்.
இதுவரை பார்த்த பிரார்த்தனைகள் அனைத்தும் சாதனா பிரார்த்தனை என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இவைகள் வெறும் சாதனங்கள்தான் இதைக்கொண்டுதான் சாத்தியத்தை அடைய வேண்டும். இவைகளை சாத்தியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அனுவாகம்-4.4
தம் த்வா ப4க3 ப்ரவிஶனி ஸ்வாஹா |
ஸ மா ப4க3 ப்ரவிஶ
ஸ்வாஹா |
தஸ்மின்த்ஸஹஸ்ரஶாகே2 |
நி ப4காஹம் த்வாயி ம்ருஜே ஸ்வாஹா
|
ப்ரதிவேஶோÅஸி
ப்ர மா பாஹி ப்ர மா பத்3யஸ்வ ||
இது சாத்திய பிரார்த்தனை: நாம் அடைய வேண்டியதை பிரார்த்திக்கப்படுகின்றது. இது ஜீவ-ஈஸ்வர ஐக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகின்றது. சாதனங்கள் அடைந்தாலும் அவைகளை பயன்படுத்தி சாத்தியத்தை அடைவதற்கு மிகவும் கடினம். எனவே சாத்தியத்தையையும் இறைவனிடம் வேண்டுகின்றேன். ஆத்மஞானம் சாதனம் என்றால், சாத்தியம் என்பது மோட்சம் (ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்)
கர்மஜ தாதாத்மியம் – கர்மவசத்தினால்
நான் என்ற அகங்காரம்
மோகஜ தாதாத்மியம் – மோகவசத்தினால்
நான் என்ற அகங்காரம்
தம் த்வா ப4க3 ப்ரவிஶனி ஸ்வாஹா |
இது சாத்திய பிரார்த்தனை: நாம் அடைய வேண்டியதை பிரார்த்திக்கப்படுகின்றது. இது ஜீவ-ஈஸ்வர ஐக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகின்றது. சாதனங்கள் அடைந்தாலும் அவைகளை பயன்படுத்தி சாத்தியத்தை அடைவதற்கு மிகவும் கடினம். எனவே சாத்தியத்தையையும் இறைவனிடம் வேண்டுகின்றேன். ஆத்மஞானம் சாதனம் என்றால், சாத்தியம் என்பது மோட்சம் (ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்)
ஓங்கார ரூபமாக இருக்கின்ற இறைவா நான் உங்களிடத்தில் நுழைந்து விடுவேனாக, கலந்துவிடுவேனாக, அப்படிபட்ட நீங்களும் என்னிடத்தில் கலந்து விடுவீர்களாக, நுழைந்து விடுவீர்களாக. இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான ரூபங்களாகவும், அனைத்து ரூபங்களாகவும் உள்ள உங்களிடத்தில் இறைவா, நான் தூய்மையடைய வேண்டும். இந்த பிரார்த்தனையால் உலகத்தின் மீதுள்ள ராக-துவேஷம் நீங்கிவிடும். (ஈஸா வாக்கியம் இதம் ஸர்வம்). நீங்கள்தான் நான் ஓய்வெடுக்க உதவும் இடமாக இருக்கின்றீர்கள். என்னுடைய லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது தோல்வியுற நேர்ந்தால், உங்களிடம் வந்து மீண்டும் சக்தி பெற வேண்டும், நம்பிக்கை குறையும் போது உங்களிடம் வந்து புதிய சக்தி பெற்று திரும்ப வேண்டும். எனக்கு உங்களைப்பற்றி விளக்குங்கள், உங்கள் ஸ்வரூபத்தை விளக்குங்கள். நீங்கள் என்னிடத்தில் வர வேண்டும்.
அனுவாகம்-5.1
பூர்பு4வ: ஸ்வரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தாஸாமு ஹ ஸ்மைதாம் சதுர்தீ2ம் |
மாஹசமஸ்ய: ப்ரவேத3யதே |
மஹ இத |
தத்3ப்3ரஹ்ம |
ஸஹ ஆத்மா |
அங்க3ன்யன்யா தே3வதா: ||
இது ஒரு வகையான உபாஸனையை கூறுகின்றது. இதற்கு வ்யாஹிருதி என்று பெயர். இந்த உபாஸனையில் தேவதை ஹிரண்யகர்ப்பர், ஆலம்பனமாக வ்யாஹிருதிகள் வைத்துக் கொள்ளப்படுகின்றது. பிரம்ம தேவர் மூன்று சப்தங்கள் எழுப்பினார். அவைகள் பூ, புவ, ஸுவ இவைகளே மூன்று வ்யாஹிருதிகள். மஹாசமஸ்யர் என்ற ரிஷி மஹ என்ற நான்காவது வ்யாஹிருதியை வெளிப்படுத்தினார்.
வ்யாஹிருதி என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் உண்டு. அவைகள்:
1.
உச்சாரணம் – பிரம்மாவின் வாயினால் உச்சரிக்கப்பட்ட்தால்
இவ்வாறு அழைக்கப்படுகிறது.
2.
விதவிதமான கர்மங்களில் உபயோகப்படுத்தபட்டிருக்கும்.
3.
ஹரதி பாபானி – இதை உச்சரிப்பதால் நமது பாவங்கள்
நீங்கி விடுகின்றது
4.
பொருளற்ற மங்கல சப்தம்.
மந்திர
விளக்கம்:-
பூ, புவ,
ஸுவ என்ற இந்த மூன்று வ்யாஹிருதிகள். இவைகளுடன்
நான்காவதாக ஒரு வ்யாஹிருதியை மஹாசமஸ்யர் என்ற ரிஷி வெளிப்படுத்தினார். ”மஹ” என்பதே அந்த வ்யாஹிருதி, இது மிகப்பெரியதாக இருக்கின்றது.,
ஆத்மாவை வியாபித்திருக்கின்றது, மற்றவைகள் அதனுடைய
அங்கங்களாக இருக்கின்றது.
அனுவாகம்-5.2
அனுவாகம்-5.2
பூ4ரிதி வா அயம் லோக: | பு4வ இத்யந்தரிக்ஷம் |
ஸுவரித்யஸௌ லோக: மஹ இத்யாதி3த்ய: |
ஆதி3த்யேன வாவ ஸர்வே லோகா மஹீயந்தே ||
இது அதிலோக தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும், புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும், மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.3
பூரிதி வா அக்3ன: | பு4வ இத வாயு: | ஸுவரித்யாதி3த்ய: |
மஹ இத சந்த3மா: | சந்த்3ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீம்ஷி மஹீயந்தே ||
இது அதிதெய்வ தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும், புவ என்பதில் வாயுவையும், ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.4
பூ4ரிதி வா ரிச: |
பு4வ இத ஸாமானி |
ஸுவரிதி யஜும்ஷி |
மஹ இதி ப்3ரஹ்ம |
ப்3ரஹ்மணா வாவ ஸர்வே வேதா3 மஹீயந்தே ||
இது அதிவேத தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும், புவ என்பதில் சாம வேதத்தையும், ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.5
பூ4ரிஹி வை ப்ராண: |
பு4வ இத்யபான: |
ஸுவரிதி வ்யான: |
மஹ இத்யன்னம் ||
இது அதிப்ராண தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று), புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்), ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று), மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.6
அன்னேன வாவ ஸர்வே ப்ராண மஹீயந்தே |
தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தா4 |
சதஸ்ரஶ்சதஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தா யோ வேத3 |
ஸ வேத3 ப்3ரஹ்ம |
ஸர்வேÅஸ்மை தே3வா ப3லிமாவஹந்தி ||
இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது. இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
எந்த உபாஸகர்கள் இந்த வ்யாஹிருதிகளை அறிந்து உபாஸனை செய்கின்றார்களோ
அவர்கள் ஹிரண்யகர்ப்பனை அறிவார்கள். இந்த உபாஸனைகளோடு அடுத்த உபாஸனையும் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் இது முழுமையடையும்.
இந்த உபாஸகனுக்கு எல்லா தேவதைகளும் பொருளைக் கொடுப்பார்கள். ஏனென்றால் இவன் உபாஸனை முடிவில் ஹிரண்யகர்ப்பனிடத்தில்
ஐக்கியமாகி விடுகின்றான். ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருப்பதால் அவருக்கு எல்லா தேவதைகளும்
பொருட்களை கொடுப்பார்கள்.
அனுவாகம்-6.1
ஸ ய ஏஷோந்தரஹ்ருத3ய ஆகஶ: |
தஸ்மின்னயம் புருஷோ மனோமய: |
அம்ருதோ ஷ்ரிண்மய: |
அந்தரேண தாலுகே |
ய ஏஷ ஸ்தன இவாவலம்ப3தே |
ஸேந்த்3ரயோனி: |
யத்ராஸௌ கேஶாந்தோ விவர்த்தே |
வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே ||
இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது. இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது. மாயையுடன் கூடிய பிரம்மம் ஈஸ்வரன், சூக்ஷூம பிரபஞ்சத்திற்கு ஆதரமானவராக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர். இந்த உபாஸனைக்கு இவரே தேவதையாக இருக்கின்றாr. இது மனதை ஆலம்பனமாகக் கொண்டது.
விசாரம்:
இருமையில்தான் பயம் ஏற்படும். இதுவரை செய்த உபாஸனைகள் அனைத்தும் பேத உபாஸனம். இதில் உபாஸகனும், உபாஸ்ய தேவதைகளும் வெவ்வேறாக இருக்கின்றது. இந்த உபாஸனைக்கு அபேத உபாஸனை என்று பெயர். இதில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றது. உபாஸகனே ஆலம்பனம், பிறகு அவனே ஹிரண்யகர்ப்பனாக உபாஸிப்பான். இதில் ஹிரண்யகர்ப்பனின் லட்சணம், ஆலம்பனம், உபாஸகன் இறந்த பிறகு எந்த வழியாக ஹிரண்யகர்ப்பனை அடைவான், உபாஸனையின் பலன் ஆகியவைகள் கூறப்பட்டிருக்கின்றது.
நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும். அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும். இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார். அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும். இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர், மனதாலே அறியப்படுபவர், எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர். அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர். அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர். பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார். இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார். இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும். தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது. அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது. இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.
அனுவாகம்-6.2
பூரித்யக்3னௌ ப்ரதிதிஷ்த்தி |
பு4வ இதி வாயௌ |
ஸுவரித்யாதி3த்யே |
மஹ இதித ப்3ரஹ்மணி |
ஆப்னோதி ஸ்வாராஜ்யம் |
ஆப்னோதி மனஸஸ்பதிம் |
வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி |
ஶ்ரோத்ரபதிர்விக்3ஞானபதி: |
ஏதத்ததோ ப4வதி |
ஆகஶ்ஶ்ரிரம் ப்3ரஹ்ம |
ஸத்யாத்ம ப்ராணாரமம் மன ஆனந்தம் |
ஶாந்திஸம்ருத்3த4மம்ருதம் |
இதி ப்ராசீனயோக்3யோபாஸ்ஸ்வ ||
பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான். புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான். ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான். மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான். தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான். அனைத்துக்கும் அதிபதியாகின்றான். எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான். எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான். இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான். ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது. ஆகாசத்தைப் போல சூக்ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான். இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது. எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது. எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார். அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான். இருமைகளற்றவனாகவும், செழிப்பை உடையவனாகவும் இருக்கின்றான். மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான். நீண்ட காலம் இருப்பான். பிரளயம் வரும் வரை இருப்பான். இவ்வாறு உபாஸனை செய்வீராக.
அனுவாகம்-7
ப்ருதி2வ்யந்தரிக்ஷம் த்3யௌர்தி3ஶோÅவாந்தரதி3ஶா: |
அக்3னிர்வாயுராதி3த்யஶ்சந்த்3ரமா நக்ஷத்ராணி |
அப ஒஷத3யோ வனஸ்பதய ஆகஶ ஆத்மா |
இத்யதி4பூ4தம் |
அத2த்4யாத்மம் |
ப்ராணோ வ்யானோÅபான உதா3ன: ஸமான: |
சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாக் த்வக் |
சர்ம மாம் ஸம் ஸ்ராவஸ்தி2 மஜ்ஜா |
ஏதத3தி4விதா4ய ரிஷரவோசத் |
ஸுவரித்யஸௌ லோக: மஹ இத்யாதி3த்ய: |
ஆதி3த்யேன வாவ ஸர்வே லோகா மஹீயந்தே ||
இது அதிலோக தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும், புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும், மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.3
பூரிதி வா அக்3ன: | பு4வ இத வாயு: | ஸுவரித்யாதி3த்ய: |
மஹ இத சந்த3மா: | சந்த்3ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீம்ஷி மஹீயந்தே ||
இது அதிதெய்வ தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும், புவ என்பதில் வாயுவையும், ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.4
பூ4ரிதி வா ரிச: |
பு4வ இத ஸாமானி |
ஸுவரிதி யஜும்ஷி |
மஹ இதி ப்3ரஹ்ம |
ப்3ரஹ்மணா வாவ ஸர்வே வேதா3 மஹீயந்தே ||
இது அதிவேத தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும், புவ என்பதில் சாம வேதத்தையும், ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.5
பூ4ரிஹி வை ப்ராண: |
இது அதிப்ராண தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று), புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்), ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று), மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..
அனுவாகம்-5.6
அன்னேன வாவ ஸர்வே ப்ராண மஹீயந்தே |
இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது. இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
அனுவாகம்-6.1
ஸ ய ஏஷோந்தரஹ்ருத3ய ஆகஶ: |
தஸ்மின்னயம் புருஷோ மனோமய: |
அம்ருதோ ஷ்ரிண்மய: |
அந்தரேண தாலுகே |
ய ஏஷ ஸ்தன இவாவலம்ப3தே |
ஸேந்த்3ரயோனி: |
யத்ராஸௌ கேஶாந்தோ விவர்த்தே |
வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே ||
இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது. இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது. மாயையுடன் கூடிய பிரம்மம் ஈஸ்வரன், சூக்ஷூம பிரபஞ்சத்திற்கு ஆதரமானவராக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர். இந்த உபாஸனைக்கு இவரே தேவதையாக இருக்கின்றாr. இது மனதை ஆலம்பனமாகக் கொண்டது.
விசாரம்:
இருமையில்தான் பயம் ஏற்படும். இதுவரை செய்த உபாஸனைகள் அனைத்தும் பேத உபாஸனம். இதில் உபாஸகனும், உபாஸ்ய தேவதைகளும் வெவ்வேறாக இருக்கின்றது. இந்த உபாஸனைக்கு அபேத உபாஸனை என்று பெயர். இதில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றது. உபாஸகனே ஆலம்பனம், பிறகு அவனே ஹிரண்யகர்ப்பனாக உபாஸிப்பான். இதில் ஹிரண்யகர்ப்பனின் லட்சணம், ஆலம்பனம், உபாஸகன் இறந்த பிறகு எந்த வழியாக ஹிரண்யகர்ப்பனை அடைவான், உபாஸனையின் பலன் ஆகியவைகள் கூறப்பட்டிருக்கின்றது.
நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும். அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும். இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார். அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும். இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர், மனதாலே அறியப்படுபவர், எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர். அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர். அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர். பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார். இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார். இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும். தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது. அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது. இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.
அனுவாகம்-6.2
பூரித்யக்3னௌ ப்ரதிதிஷ்த்தி |
பு4வ இதி வாயௌ |
ஸுவரித்யாதி3த்யே |
மஹ இதித ப்3ரஹ்மணி |
ஆப்னோதி ஸ்வாராஜ்யம் |
ஆப்னோதி மனஸஸ்பதிம் |
வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி |
ஶ்ரோத்ரபதிர்விக்3ஞானபதி: |
ஏதத்ததோ ப4வதி |
ஆகஶ்ஶ்ரிரம் ப்3ரஹ்ம |
ஸத்யாத்ம ப்ராணாரமம் மன ஆனந்தம் |
ஶாந்திஸம்ருத்3த4மம்ருதம் |
இதி ப்ராசீனயோக்3யோபாஸ்ஸ்வ ||
பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான். புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான். ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான். மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான். தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான். அனைத்துக்கும் அதிபதியாகின்றான். எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான். எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான். இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான். ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது. ஆகாசத்தைப் போல சூக்ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான். இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது. எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது. எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார். அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான். இருமைகளற்றவனாகவும், செழிப்பை உடையவனாகவும் இருக்கின்றான். மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான். நீண்ட காலம் இருப்பான். பிரளயம் வரும் வரை இருப்பான். இவ்வாறு உபாஸனை செய்வீராக.
அனுவாகம்-7
ப்ருதி2வ்யந்தரிக்ஷம் த்3யௌர்தி3ஶோÅவாந்தரதி3ஶா: |
அக்3னிர்வாயுராதி3த்யஶ்சந்த்3ரமா நக்ஷத்ராணி |
அப ஒஷத3யோ வனஸ்பதய ஆகஶ ஆத்மா |
இத்யதி4பூ4தம் |
அத2த்4யாத்மம் |
ப்ராணோ வ்யானோÅபான உதா3ன: ஸமான: |
சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாக் த்வக் |
சர்ம மாம் ஸம் ஸ்ராவஸ்தி2 மஜ்ஜா |
ஏதத3தி4விதா4ய ரிஷரவோசத் |
பாங்கம் வா இத3ம் ஸர்வம் |
பாங்கேனைவ பாங்கம் ஸ்ப்ருணோதீதி ||
இது ஒரு பாங்க்தம் உபாஸனம். இதுவும் அபேத உபாஸனம். சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய உபாஸனம். இதில் மூன்று வெளிவிஷயங்கள் சரீரத்திலுள்ள விஷயத்திற்கும் ஐக்கியப்படுத்தி உபாஸனை சொல்லப்பட்டு இருக்கின்றது.
பாங்கம் – ஐந்து வகையானவைகளின் சேர்க்கை,
யாகங்களையும் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. யாகத்திற்கு ஐந்து விஷயங்கள் உண்டு
அவைகள் எஜமானன், பத்தினி, புத்திரன்,
மானுஸ வித்தம் (செல்வம்), தெய்வ வித்தம் (மந்திரங்கள்).
லோக பாங்கம் – ஐந்து விதமான
உலகங்கள்
தேவதா பாங்கம் – ஐந்து விதமான
தேவதைகள்
பூதா பாங்கம் – ஐந்து விதமான
பூதங்கள்
ப்ராண, இந்திரிய, தாது பாங்கம்
என்பவைகளும் உண்டு.
ஐந்து லோக பாங்கம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
தேவதா பாங்கம் – அக்னி,
வாயு, சூரியன், சந்திரன்,
நட்சத்திரம்
பூத பாங்கம் – தண்ணீர்,
தாவரங்கள், மரங்கள், ஆகாசம்,
விராட், பிறகு உடல் சம்பந்தப்பட்டவைகள்
பிராண பாங்கம் - பிராணன்,
வியானன், அபானன், வியானன்,
உதானன்
இந்திரிய பாங்கம் – கண்,
காது, மனது, சொல்,
தோல்
சர்ம பாங்கம் – உள்தோல்,
சதை, தசைகள், எலும்பு,
எலும்புக்குள் உள்ள திரவம்
இவைகளை ரிஷி ஒருவர் எடுத்து சொல்லிவிட்டு மேலும் கூறலானார். இவைகள் அனைத்தும் ஐந்து அங்கங்களின்
சேர்க்கையாக இருக்கின்றன. வியஷ்டி பாங்கம் மூலம் சமஷ்டி பாங்கத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் பலனாக மனம் விரிவடைகின்றது, பொதுநோக்கு பார்வை
வருகின்றது. பிறகு ஹிரண்ய-கர்ப்பனோடு ஐக்கியமாகி விடுவான்.
அனுவாகம்-8 - (ஓங்கார உபாஸனை)
ஓமிதி
ப்3ரஹ்ம |
ஓமிதித3ம் ஸர்வம் |
ஓமித்யேதத3னுக்ருதிர்ஹ ஸ்ம வா
அப்யோ ஶ்ரவயேத்யாஶாவயந்தி |
ஓமிதி ஸாமானி கா3யந்தி |
ஓம் ஶோமிதி ஶஸ்த்ராணி ஶஸ்த்ராணி ஶம்ஸந்தி |
ஓமித்யத்4வர்யு: ப்ரதிக3ரம் ப்ரதிக்3ருணாதி
|
ஓமிதி ப்3ரஹ்ம ப்ரஸௌதி |
ஓமித்யக்3னிஹோத்ரமனுஜானாதி
|
ஓமிதி ப்3ரஹ்மண: ப்ரவக்ஷ்யன்னாஹ
ப்3ரஹ்மைவோபாப்னோதி ||
உபாஸ்ய தேவதை ஹிரண்யகர்ப்பன் அல்லது ஈஸ்வரன். ஓம் என்ற சொல்லில் பிரம்மத்தை தியானம் செய்ய வேண்டும். இங்கு பிரம்ம என்பது ஹிரண்யகர்ப்பனையோ அல்லது ஈஸ்வரனையோ உபாஸன தேவதையாக கருதப்படுகின்றது. ஓம் என்ற சொல்தான் முக்கியம். இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது. ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான். மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது. ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார். எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது. எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது. இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.
இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.
பாங்கேனைவ பாங்கம் ஸ்ப்ருணோதீதி ||
இது ஒரு பாங்க்தம் உபாஸனம். இதுவும் அபேத உபாஸனம். சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய உபாஸனம். இதில் மூன்று வெளிவிஷயங்கள் சரீரத்திலுள்ள விஷயத்திற்கும் ஐக்கியப்படுத்தி உபாஸனை சொல்லப்பட்டு இருக்கின்றது.
ஐந்து லோக பாங்கம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
அனுவாகம்-8 - (ஓங்கார உபாஸனை)
ஓமிதித3ம் ஸர்வம் |
ஓமித்யேதத3னுக்ருதிர்ஹ ஸ்ம வா
அப்யோ ஶ்ரவயேத்யாஶாவயந்தி |
ஓமிதி ஸாமானி கா3யந்தி |
உபாஸ்ய தேவதை ஹிரண்யகர்ப்பன் அல்லது ஈஸ்வரன். ஓம் என்ற சொல்லில் பிரம்மத்தை தியானம் செய்ய வேண்டும். இங்கு பிரம்ம என்பது ஹிரண்யகர்ப்பனையோ அல்லது ஈஸ்வரனையோ உபாஸன தேவதையாக கருதப்படுகின்றது. ஓம் என்ற சொல்தான் முக்கியம். இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது. ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான். மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது. ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார். எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது. எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது. இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.
இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.
·
ஓம் இத்யேத் அனுக்ருதி – இது நமக்கு
அனுமதியை குறிக்கின்றது
·
அபி ஓம் ஸ்ராவய – மேலும்
ஓம் நீ தெரிவிப்பாயாக, ( தேவர்களுக்கு அவிஸ் கொடுக்க வேண்டிய
காலம் வந்தவுடன்) இவ்வாறு ஆணையிடப்படுகின்றது.
·
ஓம் இதி ஸாமானி கா3யந்தி – சாம வேதத்தை
உச்சரிப்பவர்களும் ஓம் என்று சொல்லித்தான் உச்சரிக்கின்றார்கள்.
·
ஓம் ஶோமிது ச2ம்ஸந்தி – ரிக் மந்திரங்களை
ஓதுபவர்களும் ஒம் என்றும் சோம் என்ற சொல்லை உச்சரிக்கின்றார்கள்.
·
ஓம் இதி அதி3வாயு – யஜூர்
வேதம் ஒதுபவர்களும் இந்த சொல்லின் மூலம் தங்கள் அனுமதியை குறிக்கின்றார்கள்.
·
அதர்வண வேதம் ஒடுபவர்களும் ஓம் என்று சொல்லித்தான் ஆணையிடுகின்றார்கள்.
·
அக்னிஹோத்ர யாகத்தை செய்யலாம் என்று அனுமதி அளிப்பதையும் ஓம்
என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார்கள்..
·
வேதத்தை படிக்க ஆரம்பிக்கின்ற பிராமணன் ஓம் என்று சொல்லிய பிறகுதான்
தொடங்குகின்றான். வேதத்தை நான் அடைவேனாக என்ற குறிக்கோளுடன்
வேதத்தை உச்சரிக்கின்றான். அவன் கண்டிப்பாக அடைவான் என்று வேதமே உறுதி செய்கின்றது.
தொடரும்……
----oo000oo----