Showing posts with label தைத்தரீய உபநிஷத்-02.2. Show all posts
Showing posts with label தைத்தரீய உபநிஷத்-02.2. Show all posts

Wednesday, July 22, 2015

தைத்திரீய உபநிஷத் - அத்தியாயம்2 - பகுதி-2

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-02 - பகுதி-2

ப்ரஹ்மானந்தவல்லி 
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம் 
திருத்தம் செய்யப்பட்டது  27/04/2022 
அனுவாகம்-2.1
அன்னத்4வை ப்ரஜா: ப்ரஜாயந்தே |
யா: காஶ்ச ப்ருதி2வீம் ஶ்ரிதா: |
அதோ2 அன்னேனைவ ஜீவந்தி |
அதை2ந்த3பியந்த்யந்தத: |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
ஸர்வம் வை தேÅன்னமாப்னுவந்தி |
யேÅன்னம் ப்3ரஹ்மோபாஸதே |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
அன்னாத்3பூ4தானி ஜாயந்தே |
ஜாதான்யன்னேன வர்த4ந்தே |
அத்3யதேÅத்தே ச பூ4தனி தஸ்மாத3ன்னம் தது3ச்யத இதி ||
 
இதில் முதலில் அன்னமய வியஷ்டியும், சமஷ்டியும் ஒன்றுதான் என்று கூறுகின்றது. இந்த உடலும் மற்றனைது உடல்களும் ஒன்றுதான் என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கப்படுகின்றது. இங்கு அன்னம்-சமஷ்டி, அன்னமயம்-வியஷ்டி. அன்னத்திலிருந்து (விராட்) தனித்தனி அன்னமய கோஷம் தோன்றியது அதாவது இந்த பூமியை சார்ந்திருக்கின்ற அனைத்து விதமான உயிரினங்களூம் தோன்றியது. அவைகள் உணவினாலேயே காக்கபட்டு வருகின்றதுவாழ்வின் முடிவில் இந்த சமஷ்டி அன்னத்தையே அடைகின்றதுஇந்த சமஷ்டி உடலும், வியஷ்டி உடலும் ஒன்றுதான் என்ற கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்ஈஸ்வரன் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தானாகவே இருக்கின்றார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
அனுவாக விளக்கம்:-
விராட், இந்த ஸ்தூல பிரபஞ்சம் எல்லா ஜீவராசிகளுக்கும் காரணமாக, முதன்மையாக இருக்கின்றதுஎனவே உணவே எல்லா ஜீவராசிகளுக்கும் மருந்தாக சொல்லப்படுகின்றது. யார் உணவை பிரம்மனாக உபாஸிக்கின்றார்களோ அவர்களுக்கு அனைத்து விதமான உணவுகளையும் அடைகின்றார்கள். நிஷ்காம பலனானது இந்த உடலின் மீதுள்ள அபிமானம் சென்றுவிடும்உணவினால் தோன்றி, அதனாலே காக்கப்பட்டு கடைசியில் அதினிடத்தே லயம் அடைகின்றது, உணவாகவே மாறி விடுகின்றதுஅன்னம் என்ற சொல் அப்படி வந்தது என்று இப்போது விளக்கப்படுகின்றது. எவைகள் எல்லாம் நம்மால் சாப்பிடப்படுகின்றதோ அவைகள் அன்னம் என்று கூறப்படுகின்றதுஇறந்தபிறகு இந்த ஸ்தூல சரீரத்தை பூதங்களால் சாப்பிடப்படுதல் அன்னம் என்று சொல்லப்படுகின்றதுஇவ்வாறு ரிக் மந்திரத்தால் விளக்கப்படுகின்றது.
 
அனுவாகம்-2.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ன்னரஸமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா ப்ராணமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித: |
தஸ்ய ப்ராண ஏவ ஶிர: |
வ்யானோ தக்ஷிண: பக்ஷ: |
அபான உத்தர: பக்ஷ: |
ஆகாஶ ஆத்மா |
ப்ருதி2வி புச்ச2ம் ப்ரதிஷ்ட |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
முன்னே சொல்லப்பட்ட அந்த அன்னமயத்திலிருந்து வேறாகவும் ஸ்தூல சரீரத்திற்கும் உள்ளேயும் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா.
 
விசாரம்:-
சமஷ்டியாக இருக்கின்ற வியஷ்டியாகவும் இருக்கின்ற அன்னமயத்திலிருந்து வேறாக
ஸ்தூல உடலுக்குள் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா என்று சொல்லும்போது
அன்னமய கோஷம் ஆத்மா இல்லையென்றாகின்றது, அது மித்யாவாகவும், காரியமாகவும், அனாத்மாவாகவும் உள்ள நிலைக்கு சென்று விடுகின்றதுஅன்னமயம் ஆத்மாவல்ல என்று உறுதி செய்து அதைக்காட்டிலும் வேறாக ஒன்றை சொல்லுகின்றதுஇது அன்னமயத்தை விட ஆத்மாவுக்கு அருகிலும், சூட்சுமமாகவும், அதிகமாகவும் வியாபித்து இருக்கின்றதுஒரு பொருள் சூட்சுமமாகும் போது அதிகமான இடத்தை வியாபிக்கும். இது அன்னமயத்தைக் கட்டுபடுத்தும் நிலையில் இருக்கின்றதுஸ்தூல உடல் சரியில்லையென்றால் பிராணனை சரி செய்தால் அது உடலை நல்ல நிலைக்கு கொண்டு வரும்.
 
ஆத்மா என்ற சொல் தோன்றிய விதம்இது அத3 என்ற வினையடியிலிருந்து வந்திருக்கின்றதுஆத்மா என்றால் வியாபித்தல், ஆதாரமாக இருத்தல், பார்த்துக் கொண்டிருத்தல் (சாக்ஷி), என்றும் இருத்தல் என்று பல அர்த்தங்களை குறிக்கின்றதுஅன்னமய கோஷம் ஆத்மாவல்ல என்று சொல்லும்போது அன்னத்தை அதாவது இங்கு எல்லா ஸ்தூல சரீரங்களையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்,.  அதேபோல நம்முடைய பிராணமயமும், சமஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்இந்த அறிவு ஏற்படவில்லையென்றால் இதை உபாஸனை செய்து அடைய வேண்டும். ஆலம்பனமாக இந்த உபாஸனையில் இருப்பது பிராணமயம், ஆனால் இது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் இதற்கு உருவத்தைக் கொடுக்கின்றது உபநிஷத்.
 
பிராணன் உடலுக்கு செல்வதால் அது உடலின் உருவத்தை அடைவதாக எண்ணிக் கொள்ள வேண்டும், பிராணன் ஐந்துவகையாக இருக்கின்றது. பிராணமயம் உடலாக இருக்கின்றது. இதில் வெளியே விடும் மூச்சுக்காற்றான பிராணன் தலைப்பாகமாகவும், வியானன், (சக்தியை, ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்ற காற்று) உடலின் வலதுபாகம், அபானன் (உடலிலிருந்து வெளியேறும் காற்று) உடலின் இடது பாகமாகவும், சமானன் (சாப்பிடுகின்ற உணவை செரிக்க உதவுவது) நடுப்பாகமாகவும், உதானன் (எதிர்மறையாக வேலை செய்வது, வாந்தி வருவது, கண்ணில் நீர் வருவது, இறந்த பிறகு சூட்சும உடலை வெளியே எடுத்துச் செல்வது) வாலைப்போல பிராணமய உடலுக்கு ஆதாரமாக இருக்கின்றதுஇவ்வாறு உபநிஷத் சொல்வதை சிரத்தையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்இந்த பிராணமய  கோஷத்தை பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.
 
அனுவாகம்-3.1
ப்ராணம் தே3வா அனு ப்ராணந்தி |
மனுஷ்யா: பஶவஶ்ச யே |
ப்ராணோ ஹி பூ4தானாமாயு: |
தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே |
ஸர்வமேவ த ஆயுர்யந்தி |
யே ப்ராணம் ப்3ரஹ்மோபாஸதே |
ப்ராணே ஹி பூ4தானாமாயு: |
தஸ்மத்ஸர்வாயுஷமுச்யத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |
 
சமஷ்டி பிராணனும், வியஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று கூறுகின்றதுநம்மிடத்து இருக்கும் பிராணமயமும் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளில் இருக்கும் பிராணமயமும் ஒன்றுதான்.என்று உணர்ந்து செயல்பட வேண்டும். பசி-தாகம் பிராணனின் செயல்பாடுகள்நமக்கு ஏற்படும் இவைகளே அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படுகின்றதுஇந்த ஐக்கியத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால், இதை மனதில் தியானம் செய்ய வேண்டும். இந்த தியானத்தின் பலன் இந்த ஐக்கியத்தை உணர்ந்து கொள்ளுதல், அனுபவமாக இருக்க வேண்டும், நடைமுறையில் இது நம்முடைய சுபாவமாகவே மாறிவிடும். சகாம பலன் விதிக்கப்பட்ட முழு ஆயுளையும் அடைகின்றார்கள், துர்மரணம் ஏற்படாதுஇவ்வாறு ரிக் மந்திரம் விளக்கத்தை முடிக்கின்றது. இந்த பிராணமயத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றதுஎவனொருவன் இதற்கு முன் உள்ள அன்னமய கோஷத்தினுடைய சாரீர ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே பிராணமயன்.
 
அனுவாகம்-3.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் |
அன்யோ
அன்யோÅந்தர ஆத்மா மனோமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய யஜுரேவ ஶிர: |
ரிக்3 த3க்ஷிண: பக்ஷ: |
ஸாமொத்தர: பக்ஷ: |
ஆதே3ஶ ஆத்மா |
அத2ர்வாங்கி3ரஸ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
 
முன் சொல்லப்பட்ட பிராணமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மா மனோமயம். இதன் மூலம் பிராணமய அனாத்மா என்று நீக்கப்படுகின்றது. அதனால் மனோமய கோஷத்தினால் பிராணமயமானது வியாபிக்கப்படுகின்றதுஇந்த மனோமயம் ஸ்தூல உடலை போன்றவன். அந்த பிராணமயனுடைய உடலமைப்பை ஒட்டியே இந்த மனோமயனுடைய உடலும் அமைகின்றதுயஜீர்வேதமே தலைப்பாகம், ரிக்வேதம் வலதுபாகம், சாமவேதம் இடதுபாகம், வேதத்தின் கட்டளைகள் நடுப்பாகம், அதர்வண வேதம் உடலை தாங்கும் பாகமாக அமைகின்றதுபின்வரும் ரிக்மந்திரம் இதை விளக்குகின்றது
 
அனுவாகம்-4.1
யதோ வாசோ நிவர்தந்தே |
அப்ராப்ய மனஸ ஸஹ |
ஆனந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வான் |
ந பி3ப்4தி கதா3சனேதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூரவஸ்ய ||
 
வியஷ்டி மனோமயமும் சமஷ்டி மனோமயமும் ஒன்றுதான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்ஏனென்றால் உபநிஷத் இதை மறைமுகமாகத்தான் கூறுகிறது.
 
வாக்கானது மனதுடன் சென்று ஹிரண்யகர்ப்பனை அடையமுடியாமல் திரும்பி வந்து விடுகின்றதுசூட்சும பிரபஞ்சத்தின் உருவமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனை விளக்க முடியாமல் வியஷ்டி மனமானது திரும்பி வந்து விட்டதுஇதிலிருந்து வியஷ்டியானது சமஷ்டியை விளக்க முடியாது என்று தெரிகின்றதுதனிமரம் தோப்பாகாது என்பது போல இது என்று புரிந்து கொள்ள முடிகின்றதுஇதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்ற அறிவு புகட்டப்படுகின்றதுஎனவே உபாஸகன் ஹிரண்யகர்ப்பனை ஆனந்த ஸ்வரூபமாக தியானிப்பதனால், அவனுக்கு எப்பொழுதும், எதனிடத்திலும் பயமில்லை. அதாவது பயமற்ற நிலையை அடைந்திடுவான்நிஷ்காம பலனானது மனோமயம் ஆத்மாவல்ல என்று புரிந்து கொண்டு அடுத்த கோஷ விசாரத்திற்கு செல்வான்முன் சொன்ன பிராணமயத்திற்கு யார் ஆத்மாவாக உள்ளே இருக்கின்றானோ அவனே இந்த மனோமயன்இத்துடன் ரிக் மந்திரம் முடிவடை-கின்றது
 
அனுவாகம்-4.2
தஸ்மாத்3வா ஏதஸ்மான்மனோமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா விக்3ஞானமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ஶ்ரத்3தை4 ஶிர: |
ரிதம் தக்ஷிண: பக்ஷ: |
ஸத்யமுத்தர: பக்ஷ: |
யோக்3 ஆத்மா |
மஹ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
 
முன் சொல்லப்பட்ட மனோமயத்திலிருந்து வேறாகவும் உள்ளேயும் உள்ள ஆத்மா விக்ஞானமயன்இதனால் மனோமயமானது முழுவதுமாக வியாபிக்கப்பட்டுள்ளதுஎனவே இது மனித உடலைப் போன்றது. அந்த மனோமயன் உடலமைப்பை ஒட்டியே இந்த விக்ஞானமயனின் உடலமைப்பும் அமைகின்றதுஇதனுடைய தலைப்பாகம் சிரத்தை, இது புத்தியை குறிக்கின்றது ஆதலால் அறிவை அடைவதற்கு தலையாக இருக்கும் சிரத்தை அவசியமாகின்றதுசரியான அறிவு வலதுபாகம், சரியாக புரிந்ததை செயல்படுத்துதலான வாய்மையே இடது பாகம். மனவொருமுகப்பாடு நடுப்பாகம். ஹிரண்யகர்ப்பன் வாலைப் போல் ஆதாரமாக இருக்கின்ற பாகம். இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் கூறப்படுகின்றது.
 
காரண சரீரம்ஆனந்தமய கோஷம்
ஸ்தூல சரீரம்அன்னமய கோஷம்
சூட்சும சரீரம்பிராண, மனோ, விக்ஞானமய கோஷங்கள்.
சூட்சும சரீரத்தில் ஐந்துவகை பிராணன்கள், ஐந்துவகை ஞானேந்திரியங்கள், ஐந்துவகை கர்மேந்திரியங்கள், மனம், புத்தி போன்றவைகள் அங்கங்களாக இருக்கின்றன.
பிராணமய கோஷம்    - 5 பிராணன்கள், 5 கர்மேந்திரியங்கள்
மனோமய கோஷம்    - மனமும் 5 வகை ஞானேந்திரியங்கள்
விக்ஞானமய கோஷம் - புத்தியும் 5 வகை ஞானேந்திரியங்கள்
 
விசாரம்:-
நான் என்று நாம் குறிப்பிடும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. 1. சாஸ்திரம் கொடுக்கும் அர்த்தம், 2. நாம் புரிந்து கொண்டிருப்பது.
1.   சாஸ்திரம் நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்கிறது. இந்த ஆத்மாவானது ஸத்யம், ஞானம், அனந்தம் என்ற குணங்களை உடையதுஇந்த நிலையில் எப்பொழுதும் மனநிறைவுடனும், முழுமையாகவும் இருக்கின்றாய் என்று சாஸ்திரம் உரைக்கிறது
2.   நாம் புரிந்து கொண்டிருக்கும் இந்த நான் கீழே விளக்கப்படுகின்றது
a.   அறிவு ஸ்வரூபத்துடனும் உணர்வுடனும் உள்ள இருக்கின்ற ஒன்றைத்தான் குறிப்பிடுகின்றோம்.
b.   இந்த அறிவுடன் மூன்று சரீரங்களையும் சேர்த்து நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்உதாரணமாக நான் நடக்கின்றேன் என்று சொல்லும் போது ஸ்தூல சரீரத்தையும், நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் என்று சொல்லும் போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
c.    இவ்வாறு ஸ்தூல சரீரத்தையொட்டி செய்யும் செயலின் போது ஸ்தூல சரீரத்தையும், மனதுடன் கூடிய இந்திரியங்களை பயன்படுத்தும்போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
d.   எப்பொழுதெல்லம் மூன்று சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அவைகளின் குணங்கள் நான் என்பதின் குணங்களாகின்றன.
e.   ஸ்தூல சரீரம் பல மாற்றங்களையுடையது, அழிவிற்குட்பட்டது ஆகவே அதனுடன் சம்பந்தம் வைக்கும் இந்த நான் அழிவிற்குட்பட்டதாகின்றது.
f.    ஸூக்ஷும சரீரம் பல குணங்களையுடைதாக இருப்பதால், இந்த நான் என்ற சொல்லிலும் பல குணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
3.   சாஸ்திரம் சொல்லும் நான் நிலையானது, குணங்களற்றது எனவே இதை அசம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது
4.   நாம் குறிப்பிடும் நான் அழிவுடையதாகவும், குணங்களுடையதாகவும் இருக்கின்றதுஇதனால் நாம் பலவித சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம். எனவே இதை சம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது.
5.   தேவையில்லாமல் நாம் சேர்த்து புரிந்து கொண்டிருக்கும் இந்த மூன்று சரீரங்களையும் நீக்கி சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் சாஸ்திரத்தின் நோக்கம். சாஸ்திரம் இந்த மூன்று சரீரங்களை ஐந்து கோசங்களாக பிரித்து பிறகு நீக்குகின்றதுஒவ்வொரு கோசமாக எடுத்துக்கொண்டு அது ஆத்மா என்று முதலில் ஏற்றுக்கொண்டு பிறகு அதிலுள்ள தோஷங்களை எடுத்துக்காட்டி அதை நீக்கி விடும். இவ்வாறாக ஒவ்வொன்றாக நீக்கி இறுதியில் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை நமக்கு புரிய வைக்கின்றது
6.   நாமும் சாஸ்திரத்தை பின்பற்றி ஒவ்வொரு கோஷத்தின் மீதுள்ள அபிமானத்தை நீக்கி வர வேண்டும்இது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, முழு முயற்சியுடன் இடைவிடாமல் விசாரம் செய்து இந்த நிலையை அடைய வேண்டும்.
7.   முதலில் நமக்கு எந்த கோஷத்தின் அதிக அபிமானம் இருக்கின்றது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்., அதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த கோஷத்திற்கு செல்ல முடியும்.
8.   சாதாரணமாக நாம் எல்லா கோஷத்திலும் அபிமானம் வைத்துக் கொண்டிருப்போம்ஆனால் அதிகமாக எந்த கோஷத்தின் அபிமானம் வைத்திருக்கின்றேன் என்பதை சிந்தித்து பார்த்து கண்டு பிடிக்க வேண்டும்இதற்கு இரண்டு வழிகள் உண்டு.
a.   நம் மனம் எதைக்குறித்து அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.
b.   எனக்கு வருகின்ற சுக-துக்கங்கள் எங்கிருந்து வருகின்றது என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும், உதாரணமாக உடலைச் சார்ந்து வருகின்றதா, மனதைச் சார்ந்து வருகின்றதா, பிராணன் மூலமாக வருகின்றதா ( நல்ல உணவு கிடைக்காததால் வரும் துன்பம் ) அறிவு சம்பந்தமாக வருகின்றதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை தெரிந்து கொண்ட பின்னர் அதிலிருந்து விடுபட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
9.   அன்னமய கோஷம் - உடல் அலங்காரம், உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்களால் வருத்தத்தை அடைபவன், உடலின் தோற்றத்தில் வயதாகும் போதும், நோயினால், விபத்தினால் ஏற்படும் மாற்றத்தினால் வருந்துபவன்
10.  பிராணமய கோஷம் – உணவில் யாருக்கு அதிக கவனம் இருக்கின்றதோ அவர்கள் இந்த கோஷத்தில் இருப்பவர்கள். விரதங்களை மேற்கொண்டு இந்த அபிமானத்தை நீக்க வேண்டும்ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று நிலையை உடையவர்களும் இந்த கோஷத்தின் இருப்பவர்கள்தான்.
11.  மனோமய கோஷம் - மற்றவர்கள் என்னை நேசிக்க வேண்டும், அன்பாக நடத்த வேண்டும், தான் அன்பு செலுத்துவதற்கு யாராவது வேண்டும் என்று நினைப்பவர்கள்  இந்த கோஷத்தில் இருப்பவர்கள்
12.  விக்ஞானமய கோஷம் - மனம் மிக நுண்ணியதாக சிந்திக்கும்யாராவது சிறிது திட்டினாலோ, அறிவில் குறை கண்டாலோ வருத்தைமடைபவர்கள் இதில் இருப்பவர்கள்
13.  ஆனந்தமய கோஷம் -  நான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்.
 
இவ்விதம் நம் மனம் விதவிதமான நிலையில் இருக்கின்றதுஅதை தெரிந்து கொண்டு அதை நீக்குவதற்கு சாஸ்திரம் உபதேசிக்கும் வழிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு கோஷமாக நீக்கி அடுத்த நிலைக்கு சென்று விட வேண்டும்கடைசியில் ஆனந்தமய கோஷத்தையும் தாண்டி ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.
 
அனுவாகம்-5.1
விக்3ஞானம் யக்3ஞானம் தனுதே |
கர்மாணி தனுதேÅபி ச |
விக்3ஞானம் தே3வா: ஸர்வே |
ப்3ரஹ்ம ஜ்யேஷ்டபுமாஸதே |
விக்3ஞானம் ப்3ரஹ்ம சேத்3வேத3 |
தஸ்மாச்சேன்ன ப்ரமாத்3யதி |
ஶரீரே பாப்மனோ ஹித்வா |
ஸர்வன்காமன்ஸமுஶ்னுத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய ||
 
விக்ஞானமய கோஷமானது (புத்தி கர்த்ரு ஆத்மா) யாகங்களை, வைதீக கர்மங்களை சிரத்தையுடன் செய்வது, மற்ற லௌகீக கர்மங்களையும் செய்வது. இந்த கருத்தின் மூலம் வியஷ்டி, சமஷ்டி விக்ஞானமயங்கள் ஒன்றுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்எல்லா தேவர்களும் விக்ஞானமய கோஷத்தை முக்கியமாகவும், முதன்மையாகவும் உள்ள பிரஹ்மனாக (ஹிரண்யகர்ப்பனாக) உபாஸனை செய்கின்றார்கள்நாமும் இவ்வாறு உபாஸனை செய்ய வேண்டும்நிஷ்காம பலன் இது நம்மை அடுத்த கோஷத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த உபாஸனம் கடினமானது, இதில் தோல்வியடைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்நம்மையறியாமலே பலனை பெற முடியாமல் போய்விடும்.
 
விக்ஞானமய கோஷத்தை ஹிரண்யகர்ப்பனாக ஒருவன் தியானித்தால் அவன் தவறு எதுவும் செய்யாமல் இருந்தால் அதாவது நமது அபிமானம் வெவ்வேறு கோஷத்திற்கு சென்று விடாமல் இருந்தால் அவனுக்கு பின்வரும் பலன்களை அடைவான் என்று சொல்லப்படுகிறதுசரீர சம்பந்தபட்ட பாவங்கள் நீங்கப்பெற்று, எல்லா ஆசைகளையும் அடைகின்றான்இத்துடன் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.
 
நாம் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அன்னமய கோஷத்திற்கு வந்து விடுகின்றோம்எனவே சரீர சம்பந்தத்தில் இருக்கும்போது பாவங்கள் செய்ய நேரிடுகின்றது. இதையே சரீர சம்பந்தபட்ட பாவங்கள் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றதுபுண்ணியத்தினால் இவ்வுலகில் இருக்கும் போது எல்லா இன்பங்களையும் அடைகின்றான்இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனின் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விடுவான்மீண்டும் சம்சாரியாக பிறக்க மாட்டான். இந்த விக்ஞானமய கோஷத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றதுஇந்த கோஷம் மனோமயத்திற்குள் இருப்பதால் அதனுடைய உடலாக ஆத்மா கூறப்படுகின்றது.
 
அனுவாகம்-5.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்3விக்3ஞானமயாத் |
அன்யோÅந்தர ஆத்மாÅÅனந்த3மய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ப்ரியமேவ ஶிர: |
மோதோ3 தக்ஷிண: பக்ஷ: |
ப்ரமோத3 உத்தர: பக்ஷ: |
ஆனந்த3 ஆத்மா |
ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
 
முன் சொல்லப்பட்ட விக்ஞானமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மாவே ஆனந்தமயன். இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கலாம்ஆனந்தமய கோஷத்திற்கு வியஷ்டி, சமஷ்டி கிடையாது, உபாஸனையும் கிடையாது. ஆனந்தமய கோஷம் காரண சரீரத்தை சார்ந்ததுகாரண நிலையில் வேற்றுமைகள் கிடையாது அதனால் ஐக்கியமும், உபாஸனையும் கிடையாது.
 
இதுவரை முன்னேயுள்ள கோஷத்தை நீக்கித்தான் அடுத்த கோஷத்தை அறிமுகப்படுத்தப்பட்டதுஆனால் இங்கு அதுபோல செய்யவில்லைஎனவே இந்த கோஷத்தை நீக்காமல் அதை வைத்துக்கொண்டே ஆத்மாவை அறிமுகப்படுத்துகின்றதுஆத்ம தத்துவத்தை உணர்ந்தவுடன் தானாகவே இந்த கோஷத்திலிருந்து வெளியே வந்து விடுவோம். ஆகாசத்தை விளக்குவதற்கு குடத்திலுள்ள ஆகாசத்தை காட்டி இதுதான் எங்கும் நிறைந்திருக்கின்றது என்று புரிய வைக்கலாம்ஆகாசம் புரிந்தவுடன் இனி இந்தப் பானை தேவையில்லைஅதுபோல ஆத்மாவை விளக்குவதற்கு ஆனந்தமய கோஷம் உபயோகப்படுத்தப்படுகின்றதுஆத்மாவை உணர்ந்தவுடன் இந்த கோஷம் தானாகவே மறைந்து விடுகின்றதுஆத்மாவிற்கு குறிப்பிட்ட குணமும் எதுவும் இல்லாததால் அதை விளக்க முடியாது. ஆதலால் இந்த கோஷம் ஆத்மாவை விளக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
 
ஆனந்தமய என்பது ஆனந்த விகாரத்தை குறிக்கின்றதுஇதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றதுமனதில் எழும் உணர்ச்சிகளுடன் கூடிய எண்ணங்கள் மனோமயத்தைக் காட்டுகின்றதுஇந்த எண்ணங்களில் எது நான் செய்தேன் என்று உபயோகிக்கும்போது அது விக்ஞானமய கோஷத்தை குறிக்கின்றதுசில எண்ணங்களால் நான் சுகத்தை அனுபவிக்கின்றேன் என்று உணரும்போது அது ஆனந்தமய கோஷத்தில் இருப்பதை குறிக்கின்றதுஇதிலிருந்து எண்ணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. கரண ரூபமாக இருக்கும் எண்ணங்கள் மனோமயத்தில் இருப்பதையும், கர்த்துரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் விக்ஞானமய கோஷத்தில் இருப்பதையும், போக்த்ரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் ஆனந்தமய கோஷத்தில் இருப்பதையும் குறிக்கின்றதுமனதிற்கு ஆத்மாவை பிரதிபலிக்கும் குணம் உடையதுஅதனால்தான் ஜடமான மனது உணர்வுடன் செயல்படுவது போல தோன்றுகின்றது. நிலைக்கண்ணாடியில், தூய நீரில் பிரதிபலிக்கும் சூரியனைபோல ஆத்மா மனதில் பிரதிபலிக்கின்றதுஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. இந்த ஆனந்த ஸ்வரூபம் மனதில் பிரதிபலிக்கும்போது நாம் இன்பத்தை அனுபவிக்கின்றோம், ஆனந்தமய கோஷத்தில் இருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.
 
நாம் பார்த்து அனுபவிக்கும் பொருளில் உண்மையிலெ சுகம் கிடையாது. அதேப்பொருள் வேறொரு சூழ்நிலையில் துக்க ஸ்வரூபமாக மாறிவிடுகின்றதுஉலகத்திலுள்ள எந்தப் பொருளிலும் சுகம் என்பது கிடையாது. பிறகு சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற ஆராய்ந்து பார்த்தால், ஏண்ணங்கள் சூட்சுமமாகும் போது மனது ஆத்மாவினுடைய ஆனந்தஸ்வரூபத்தை  பிரதிபிம்பிக்கின்றது. நாம் அடையும் சுகத்தில் ஏற்றத்-தாழ்வையும் பார்க்கின்றோம்இதற்குக் காரணம் மனதில் எழும் சுகத்தைக் கொடுக்கும் எண்ணங்கள்தான்ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபம் எண்ணங்களை பொறுத்து ஏற்றத்-தாழ்வுடன் பிரதிபலிக்கின்றதுஉதாரணமாக தூசிபடிந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியைவிட தூய்மையான கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளியின் பிரகாசம் அதிகமாக இருப்பதைப் போல மனத்தூய்மையை பொறுத்து பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தஸ்வரூபம் இருக்கின்றது.
 
மனதின் சூட்சுமத்தன்மை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது
அவைகள் 1, ப்ரியவ்ருத்தி, 2. மோத வ்ருத்தி, 3. பிரமோத வ்ருத்தி ஆகும்.
ஒன்றைவிட ஒன்று மிக சூட்சுமமானதுஎண்ணங்கள் சூட்சுமம் அதிகமாகும்போது ஆனந்த நிலையும் அதிகரிக்கும்.
1. ப்ரிய வ்ருத்தி     - விருப்பமான பொருளைப் பார்ப்பதினால் தோன்றும் எண்ணம்
2. மோத வ்ருத்தி    - விரும்பிய பொருளை அடையும்போது தோன்றும் எண்ணங்கள்
3. பிரமோத வ்ருத்திஅடைந்த பொருளை அனுபவிக்கும்போது எழும் எண்ணங்கள்
இந்த மூன்று விதமான சூட்சுமமான எண்ணங்கள் (வ்ருத்திகள்) பிரதிபிம்ப ஆனந்தத்துடன் சேரும்போது அதுவே ஆனந்தமய கோஷம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
உண்மையில் உலகத்தில் உள்ள பொருட்களிலிருந்துதான் இந்த எண்ணங்கள் எழுகின்றதுஎனவே பொருட்களில் சுகமில்லை என்று புரிந்து கொள்ள முடியும்ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் சுகம் எந்தப் பொருட்களினாலும் வருவதில்லைஆழ்ந்த உறக்கத்தில் மிகவும் சூட்சுமமான எண்ணங்கள் தோன்றுகின்றது அதில் ஆத்மாவில் ஆனந்த ஸ்வரூபம் அதிகமாக பிரதிபலிப்பதால் அதிகமான சுகத்தை அனுபவிக்க முடிகின்றதுஇதிலிருந்து ஆனந்தமய கோஷம் என்பது மனதில் இருக்கின்ற சூட்சுமமான எண்ணங்கள் அதில் பிரதிபலிக்கின்ற ஆத்மானந்தம். மனதில் எழும் இந்த எண்ணங்களுக்கு சுகம் கொடுக்கும் சக்தி கிடையாது, ஏனென்றால் அவைகள் வெறும் ஜடம்தான் என்று சாஸ்திரம் கூறுகின்றதுஇதில் பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தம்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஆனால் ஆத்மாவில் இருக்கும் ஆனந்தத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இது பூரணமானது, முழுமையானது.
 
ஆனந்தமய கோஷத்தினால் விக்ஞானமய கோஷம் வியாபிக்கப்பட்டிருக்கின்றதுஇந்த ஆனந்தமயன் மனிதனைப்போல உடலை உடையவன்அந்த விக்ஞானமய உடலமைப்ப ஒட்டி இந்த ஆனந்தமயனின் உடல்வடிவம் அமைகின்றதுஇந்த சரீர கற்பணை உபாஸனைக்காக கூறவில்லை. ஆனந்தமயத்தின் தலைப்பாகம் பிரிய விருத்தியாகவும், வலதுபாகம் மோதமாகவும், இடதுபாகம் பிரமோத விருத்தியாகவும், ஆனந்தமே நடுப்பாகமாகவும், பிரஹ்மமே வாலைப்போல் அதை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது
 
ஆனந்தமய கோஷத்தில் உள்ள ஆனந்தமானது மூன்றுவிதமான ஏற்றத்தாழ்வுகளை உடையது என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகின்றதுஎங்கிருந்து ஜடமான இந்த எண்ணங்களில் ஆனந்தமானது வருகின்றது. இந்த ஏற்றத்தாழ்வான ஆனந்தத்திற்கு உபாதான காரணமாக இருப்பது ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாதான் என்றும் பூரணமானதும், முழுமையானதுமான, இருமையற்ற பிரம்மன் தான் இதற்கு ஆதாரமாக உள்ளது. இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் சொல்லப்படுகின்றது.
 
அனுவாகம்-6.1
அஸன்னேவ ஸ ப4வதி |
அஸத்3 ப்3ரஹ்மோதி வேத3 சேத் |
அஸ்தி ப்3ரஹோதி சேத்3வேத3 |
ஸந்தமேனம் ததோ விது3ரிதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

ஒருவன் பிரம்மத்தை இல்லையென்று கருதினால் அவன் இல்லாதவன் போல் ஆகின்றான்இவன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். எப்பொழுதும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்பிரம்மம் இருக்கின்றதென்று ஒருவன் கருதினால் அவனை ஸத்புருஷனாகவும், மேலோனாகவும், புருஷார்த்தத்தை அடைந்தவனாகவும் ரிஷிகள் கருதுகின்றார்கள்இவ்வாறு ரிக் மந்திரம் சொல்லுகிறதுமுன் சொன்ன விக்ஞானமயத்திற்கு உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே இந்த ஆனந்தமயன்.
 
அனுவாகம்-6.2
அதா2தோÅனுப்ரஶ்னா: |
உதாவித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சன க3ச்ச2தி |
ஆஹோ வித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சித்ஸமஶ்னுதா உ |
இவ்விதம் உபதேசம் செய்ததற்கு பிறகும் சந்தேகம் இருப்பதனால் அதை ஒட்டிய கேள்விகள் எழுகின்றனஅவைகள்
1. பிரம்மன் இருக்கின்றதா அல்லது இல்லையா?
2. ஞானி பிரம்மத்தை அடைகின்றானா, இல்லையா?
3. அக்ஞானி பிரம்மத்தை அடைகின்றானா இல்லையா?
 
ஞானியும், அக்ஞானியும் இருக்கும்போதும், இறந்தப்பிறகும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள். எனவே இந்த இரண்டு கேள்விகளும் தவறுஇவர்கள் அடைவதற்கு தேவையே இல்லை. ஆத்ம ஞானத்தை அடைந்தவன் ஆத்மாகவே இருந்து கொண்டு ஆனந்தமாக இருக்கின்றான்ஆத்ம ஞானத்தை அடையாதவன் அறியாமையில் இருந்து கொண்டு கர்ம பலன்களான சுக-துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்ஞானியானவன் பஞ்ச கோஷத்தை கடந்து பிரம்மத்தை அறிகின்றான்அக்ஞானி பஞ்ச கோஷத்திலேயே அபிமானம் கொண்டு அறியாமையில் இருந்து கொண்டு பிரம்மத்தை அறிவதில்லை.
 
அனுவாகம் 6.3லிருந்து அனுவாகம் 7 வரையுள்ள பகுதிகளில் சங்கரர் ஏழு காரணங்களால் இதை விளக்குகின்றார்.
 
அனுவாகம்-6.3
ஸோÅகாமயத |
ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி |
ஸ: தபோÅதப்யத |
ஸ: தபஸ்தப்த்வா |
இத3ம் ஸர்வமுஸ்ருஜத |
யதி3தம் கிஞ்ச ||
 
இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு பிரம்மன் நிமித்த காரணமாக இருப்பதால் அது இருக்கின்றது என்ரு உணர்த்தப்படுகின்றது.
காரணம்-1 (ஜகத் காரணத்வாத்)
பரம்பொருள் ஈஸ்வரன் (மாயையுடன் கூடிய பிரம்மன்) ஆசைப்பட்டார். நான் பலவாக  பிறப்பேனாக என்று தவம் செய்தார். அவர் தவத்தை செய்து எவைகள் முன்பு இருந்ததோ அவைகள் அனைத்தையும் தோற்றுவித்தார்.
அகாமயத  - ஆசைப்படுவதிலிருந்து சேதன தத்துவம்தான் நிமித்தக்காரணம் என்பதை நாம்  புரிந்து கொள்ளலாம்இங்கு ஆசை என்பது அவரிடமிருந்து ஒரு எண்ணம் தோன்றியது என்பதுதான்.
பஹூஸ்யாம்என்னையே பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று சங்கல்பம் செய்து கொண்டார்.
ஸஹ தப அதப்யஹஅதற்கு அவர் தவம் செய்தார்இது எப்படி படைக்கலாம் என்று சிந்தித்தார்இது அவருடைய ஞானமய தவம், ஈஸ்வரன் மனது மாயா, ஸ்ருஷ்டிக்கு தயாராக இருக்கும் நிலைஈஸ்வரனின் சங்கல்பமே செயலாகி விடும்.
 
காரணம்-2 (ஜீவரூபேனே பா4ஸமானவாத்)
தத்ஸ்ருஷ்டவா | ததே3வானுப்ராவிஶத் |
 
ஜீவ வடிவத்தில் வெளிப்படுவதால் பிரம்மன் உபாதான காரணம், ஈஸ்வரன் நிமித்த காரணம்ஜடமான மாயை இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக சொல்லலாம்இது ஈஸ்வரனிடமிருந்து பிரிக்க முடியாதது, மூன்று குணங்களை உடையதுஇதிலிருந்து தோன்றியது பஞ்ச பூதங்கள் கொண்ட பிரபஞ்சம்மாயை ஜடமாக இருப்பதால், இதிலிருந்து தோன்றியவைகள் அனைத்தும் ஜடமாகத்தான் இருக்க வேண்டும்உதாரணமாக மனித உடல், கல், மலை போன்ற அனைத்தும் ஜடமானவை. ஆனால் மனித உடல் அறிவு பூர்வமாக இயங்குவதற்கு காரணம் அதில் பிரதிபலிக்கும் சேதனமான பிரம்மத்தின் இருப்பை புரிந்து கொள்ளலாம்.
 
தத் ஸ்ருஷ்ட்வாஇந்த பிரபஞ்சத்தை படைத்து,
தத்3 ஏவ அனுப்ரவிஶஸ்யஅதற்குள் நுழைந்தார்.
இதை ப்ரவேச ஸ்ருதி என்று அழைக்கப்படுகின்றதுஇதைப்பற்றி சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.
 
ஈஸ்வரன் எந்த ரூபத்தில் ஜீவனுக்குள் நுழைந்தார்?
இந்த பிரபஞ்சமாகவே ஈஸ்வரன் மாறியிருக்கும்போது எப்படி இதற்குள் நுழைய முடியும்! எனவே தன்னுடைய ஸ்வரூபமாக உள்ளே சென்றிருக்க முடியாதுபிறகு எப்படி சென்றிருக்கலாம் என்று கேள்வி எழும்போது அதைப் பற்றி இவ்வாறு விசாரம் செய்யப்படுகின்றது.
·   பிரம்மனுக்கு இரண்டு உருவம் அவைகள் ஈஸ்வரன், ஜீவன்ஈஸ்வரன் பிரபஞ்சமாக இருக்கின்றார், ஜீவன் அதற்குள் நுழைந்தது என்று எடுத்துக் கொண்டால், .பிரம்மன் இரண்டற்றது எனவே இது சாத்தியமில்லை.
·   இரண்டு அவயங்கள் உடையது என்றும் எடுத்துக் கொள்ள முடியாதுஏனெனில் இது நிரவ்யமாக இருப்பதனாலும், எல்லாவிடத்திலும் வியாபித்து இருப்பதாலும் இதுவும் சாத்தியமில்லை.
·   ஈஸ்வரன் ஜீவ ரூபமாக பரிணாம அடைந்தார் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.
 
இவ்வாறு விசாரித்து விட்டு பிரம்மன் புத்தியில் வெளிப்படுகின்றார், புத்தியில் அறியப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தாய் சமையலறையை நோக்கி போய் கொண்டிருப்பதை பார்த்த மகனிடம், உன் தாய் எங்கே இருக்கின்றாள் என்று கேட்டால், சமையலறைக்கு போனதை பார்த்தேன் என்று கூறுவான், இதிலிருந்து அங்கு இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா.
 
காரணம்-3   ( ஜகத்ரூபேனே பா4ஸமானவாத்)
ஸச்ச த்யச்சாப4வத் |
நிருக்தம் சாநிருக்தம் ச |
நிலயனம் சாநிலயனம் ச |
விக்3ஞானம் சாவிக்3ஞானம் ச |
ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமப4வத் |
யதி3தம் கிஞ்ச |
தத்ஸத்யமித்யசக்ஷதே |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
 
ஜகத் வடிவத்தில் தோன்றி கொண்டிருப்பதால் பிரம்மன் இருக்கின்றதை அறிந்து கொள்ள முடியும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக ஈஸ்வரன் இருந்து கொண்டிருக்-கின்றார்இது போ4க்ய பிரபஞ்சம், அதாவது அனுபவிக்கப்படும் பிரபஞ்சமாக கருதப்படுகின்றது.
 
பிரம்மன் புத்தியில் வெளிப்படுபவராக இருந்து கொண்டு, உருவமுடைய, நம்மால் பார்க்கக் கூடிய மூன்று பூதங்களாகவும் (நீர், நிலம், நெருப்பு) தோன்றி கொண்டிருக்கின்றது. உருவமற்ற மற்ற இரு பூதங்களாகவும் ( வாயு, ஆகாசம் ) தோன்றி கொண்டிருகின்றது. தெளிவாக விளக்க கூடியததாகவும், விளக்க முடியாததாகவும், தாங்குவதாகவும், தாங்கப்படுவதாகவும், அறிவுடையதாகவும் (சேதனம்), அறிவற்றதாகவும் (ஜடம்), உண்மையாகவும் (வியாவஹார சத்யம்எல்லோராலும் அனுபவிப்பது) பொய்யானதாகவும், (பிராதிபாஸிக சத்யம்கனவுஒருவனுக்கு மட்டும் உண்மையாக இருப்பது, கயிற்றில் தோன்றும் பாம்பு ), இவ்வாறெல்லாம் பிரம்மன் மாறியிருக்கின்றதுஎவைகளெல்லாம் இருக்கின்றதோ அவைகளெல்லாம் மாறியதுஆகவே பிரம்மனை சத்யம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இந்த விஷயத்தை பின்வரும் ரிக் மந்திரம் மேலும் விளக்குகின்றது.
 
அனுவாகம்-7
அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் |
ததோ வை ஸத3ஜாயத |
ததா3த்மானம் ஸ்வயமகுருத |
தஸ்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி |
 
காரணம்-4  
சாஸ்திரத்தில் பிரம்மத்திற்கு பிரசித்தமான ஸுக்ருதம் ( சுயம்பு ) என்ற வேறொரு பெயரும் உண்டு.
அஸத்3வா இத3ம் அக்3ர ஆஸீத்நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அஸத்தாக இருந்தது, அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருந்ததுவெளித்தோற்றத்திற்கு வந்த நாமரூபங்கள் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கும்வெளித்தோற்றத்திற்கு வராத நாம ரூபங்கள் (அஸத்) பிரம்மத்தை சார்ந்து இருக்கும். நாமரூபத்தை வெளிப்படுத்தாத பிரம்மன் என்பது இறுதியான பொருள்.
 
அப்படிபட்ட பிரம்மனிடமிருந்து வெளித்தோற்றத்திற்கு வந்த விதவிதமான நாமரூபங்கள் கூடிய ஜகத்தானது தோன்றியது. அது தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டதுஅதே பிரம்மன் தானே தோற்றுவிப்பவர் என்று சொல்லப்படுகின்றது. இவ்விதம் ரிக் மந்திரத்தின் விளக்கம் முடிவடைகின்றது. இதிலிருந்து பிரம்மனே இந்த உலகமாக காட்சியளித்துக் கொண்டிருப்பதால், பிரம்மன் இருக்கின்றது என்று நிரூபணமாகின்றது.
 
காரணம்-5  
யத்3வை தத்ஸுக்ருதம் |
ரஸோ வை ஸ: |
ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வானந்தீ ப4வதி |
 
பிரம்மத்திற்கு ரஸஹ (ஆனந்தம்) என்ற வேறொரு பெயராலும் வேதம் குறிக்கின்றதுமனிதன் இந்திரியத்தின் துணைக்கொண்டு விஷயங்களிலிருந்து அதனோடு சம்பந்தம் வைப்பதால் ஆனந்தத்தை அடைகின்றான்ஆனால் ஆழ்ந்த உறக்கத்திலும் சுகம் இருக்கின்றதுஇந்த இரண்டு நிலைகளிலும் சுகத்தை அனுபவிக்கின்றான் ஞானிஇவ்வாறாக சுகம் மூன்று விதமாக இருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் சுகத்தோடு ஒப்பிடும்போது வெளி விஷயங்கள்தான் சுகத்தைக் கொடுக்கும் என்ற கருத்து பொய்யாகிவிடும். ஏனெனில் ஆழ்நிலை உறக்கத்தில் விஷயங்கள் எதுவும் இல்லை ஆனால் சுகத்தை அனுபவிக்கின்றோம்ஞானி எந்த விஷயங்களோடும் சம்பந்தம் இல்லாமல் திருப்தியுடன் இருக்கின்றான். இந்த நிலைக்கு காரணம் அவன் அடைந்த ஆத்ம ஞானத்தினால்தான்இதிலிருந்து அறிந்து கொள்வது பிரம்மன்தான் திருப்திக்கு காரணமாக இருக்கின்றது எனவே பிரம்மன் இருக்கின்றது என்று நிலை நாட்டப்பட்டது.
 
யத்4வை தத் ஸுக்ருதம் | ரஸோ வை ஸஹ |
எந்த ஒன்று ஸக்ருதம் என்று அழைக்கப்படுகின்றதோ அதுவே ஆனந்த ரஸம் என்றும் அழைக்கப்படுகின்றது
ரஸம் ஹி ஏவ அயம்இந்த பிரம்மத்தை (ரஸத்தை)
லப்த்வானந்தீ ப4வதிஅடைந்து திருப்தியுடன் இருக்கின்றான்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது பிரம்மன் என்ற ஒன்று இருக்கின்றது என்பதாகும்..
 
காரணம்-6  
கோ ஹ்யேவான்யத்க: ப்ராண்யாத் |
யதே3ஷ ஆகாஶ ஆனந்தோ3 ந ஸ்யாத் |
 
நமது மனம், உடல், இந்திரியங்கள் செயல்படுவதிலிருந்து பிரம்மத்தின் இருப்பை நிலைநாட்டலாம்பல பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரதமானது அதன் எஜமானனுக்குத்தானே தவிர  அந்தப்பொருட்களுக்காக அல்லஅதுபோல பல உறுப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடல் வேறு ஒன்று பயன்படுத்தத்தான் என்று புரிந்து கொண்டால் அந்த வேறு ஒன்று என்பது அறிவுடைய பிரம்மம்தான் என்று அறிந்து கொள்ள முடியும்பிரம்மத்தின் இருப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
 
யாரால் மூச்சுக்காற்றை உடலுக்குள்ளே இழுக்க முடியும்யாரால் மூச்சுக்காற்றை வெளியே விட முடியும். இந்த ஆனந்த ரூபமான பிரம்மன் மட்டும் ஆகாசத்தில் இல்லை என்றால், இங்கே ஆகாசம் என்பது ஹ்ருதய ஆகாசத்தைக் குறிக்கின்றதுஇந்த பிரம்மம்தான் ஒருவனை மகிழ்விக்கின்றது, திருப்திபடுத்துகின்றது.
 
காரணம்-7  
யதா3 ஹ்யேவைஷ ஏஜஸ்மின்னத்3ருஶ்யேÅனாத்ம்யேÅநிருக்தேÅநிலயனேÅப4யம் ப்ரதிஷ்டாம் விந்த3தே |
அத2 ஸோப4யம் ததோ ப4வதி |
யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மின்னுத3ரமந்தரம் குருதே |
அதா2 தஸ்ய ப4யம் ப4வதி |
தத்த்வேவ ப4யம் விது3ஷோÅமன்வானஸ்ய |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி |
 
4-அப4ய ஹேதுத்வாத்பயத்திற்கும்-அபயத்திற்கும் காரணமாக இருப்பது பிரம்மன்தான்.
கயிற்றில் தோன்றும் பாம்பை பார்த்து பயப்படுகின்றோம்அதற்குக் காரணம் கயிறுதான், இதுதான் பாம்பு தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றதுகயிற்றை அதுவாக பார்க்கும்போது பயம் ஏற்படுவதில்லை அதற்கும் கயிறுதான் காரணமாக இருக்கின்றதுஅதேபோல பிரம்மனை புரிந்து கொண்டால் பயம் ஏற்படுவதில்லை, ஞானி அபயத்தை அடைவதற்கு காரணம், அவர் பிரம்மத்தை அறிந்து கொண்டதால்தான். பிரம்மத்தை புரிந்து கொள்ளாதவனுக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தில் பயந்து கொண்டிருக்கும்அத்யாஸம், அக்ஞானம் இரண்டும் சேர்ந்து நமக்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்நாமே நம்முடைய பயத்திற்கும், அபயத்திற்கும் காரணமாக இருக்கின்றோம்
 
நம்முடைய பயத்திற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்கும் என்றால் அது பிரம்மனாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாக இருக்கின்றதுஅதுபோல அபயத்திற்கு காரணமாக இருப்பதும் பிரம்மன்தான்ஏனென்றால் பிரம்மனாக நம்மை உணர்ந்து விட்டால் எதற்கும் நாம் பயப்படமாட்டோம்.

 

ஒருவன் எந்தக்காலத்தில் பிரம்மனிடத்தில் நிலைப் பெறுகின்றானோ, அந்தக்காலத்தில் பிரம்மத்தில் பயமற்ற ஆத்ம பாவத்தை அடைகின்றான் அல்லது உறுதியான ஆத்ம பாவத்தை, பிரம்ம நிஷ்டையை அடைகின்றான்பார்க்கப்படாத தன்மையுடையதும், மாற்றமடையாததும், பிரதியக்ஷ பிரமாணத்திற்கு விஷயமாக இல்லாததும், சரீரமற்றதும், அனுமான பிராமானத்தினால் அறிய முடியாததும், ஆதாரமற்றதும், எதையும் சார்ந்தில்லாமல் இருப்பதாகவும் உள்ள பிரம்மத்தை உறுதியாக அறிந்தவன் பயத்திலிருந்து நீங்கியவனாகின்றான்எப்பொழுது இந்த அக்ஞானி பிரம்மனிடத்தில் சிறிதளவாவது வேற்றுமையை பார்க்கின்றானோ அவனுக்கு பயம் வந்தடைகின்றது. சாஸ்திரங்களை கற்றறிந்தும் ;ஆத்ம ஞானத்தை அடையாவிட்டால் அவனுக்கும் பிரம்மன் பயத்தை கொடுக்கின்றது. இந்த விஷயத்தில் பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

----------------------------------------------------------------------------------------
                                                                           தொடரும்……

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...