Showing posts with label தைத்தரீய உபநிஷத்-02.3. Show all posts
Showing posts with label தைத்தரீய உபநிஷத்-02.3. Show all posts

Wednesday, July 22, 2015

தைத்திரீய உபநிஷத் - அத்தியாயம்-2 - பகுதி-3

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-02 - பகுதி-3
ப்ரஹ்மானந்தவல்லி
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது  27/04/2022
www.poornalayam.org
அனுவாகம்-8.1
பீ4ஷாஸ்மாத்3வாத: பவதே |
பீ4ஷோதே3தி ஸூரய: |
பீ4ஷாஸ்மாத3க்3னிஶ்சேந்த்3ரஶ்ச |
ம்ருத்யுர்தா4வதி பஞ்சம் இதி |
 
பிரம்மனிடத்தில் கொண்ட பயத்தினால் காற்று வீசுகின்றதுசூரியனும் உதிக்கின்றது. அக்னியும், இந்திரனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். யமதர்மனும் பயந்து தன் வேலையை செய்வதற்கு ஓடுகின்றார். இவ்வாறு கூறி ரிக் மந்திரம் முடிக்கின்றது.
 
ஸைஷானந்த3ஸ்ய மீமாம்ஸா ப4வதி |
கீழ்கண்ட பகுதியில் ஆனந்தத்தைப் பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.
சுருக்கம்:-
1. இந்த விசாரம் எதற்காக செய்யப்படுகின்றது?
2. இதன் மூலம் எதை சொல்ல விரும்புகின்றது!
3. இதனால் அடையும் பலன்கள்.
a. ஆனந்தம்பிரஹ்ம ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம் என்ற அறிவை அடைவோம்
b. வைராக்கியத்தின் முக்கியத்துவத்தை, மேன்மையை அறிந்து கொள்வோம்.
c. ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிந்து கொள்வோம்
 
ஆனந்தம் பிரஹ்ம ஸ்வரூபம்:
அக்னி உஷ்ண ஸ்வரூபம் என்ற வாக்கியத்தின் பொருள் அது உஷ்ணமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லைஅதுபோல ஆத்மா ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்லநானே ஆத்மாவாக இருப்பதால், நான் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை.
 
நாம் எதற்காக இந்த விசாரம் செய்ய வேண்டுமென்றால், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியே உள்ள பொருட்களிலிருந்து வருவதாக உணர்ந்திருக்கின்றோம்அதனால் அந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கின்றேன்நான் சுபாவமாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று உணரவில்லைஇதை உணர்த்துவதற்குத்தான் இந்த விசாரம் தேவைப்படுகின்றது.
 
ஸுபாவத்தை நிரூபித்தல்:
·   நான் ஆனந்தத்தை ஏற்றத்தாழ்வுகளுடன் அனுபவிக்கின்றோம்.
·   இந்த ஏற்றத்தாழ்விற்கு காரணம் எது என்று வினவும்போது விஷயங்கள்தான் இதை உருவாக்குகின்றது என்று புரிந்து கொள்ளலாம்.
·   சுகத்தின் ஏற்றத்தாழ்வு விஷயத்தின் நிமித்த காரணமா அல்லது உபாதான காரணமா, பொருளின் காரணமா அல்லது பொருளின் நிமித்தமாக உண்டாகின்றதா என்று வினவினால், பொருளே காரணம் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் பொருள் எல்லோருக்கும் ஒரே அளவுள்ள சுகத்தை கொடுக்க வேண்டும்ஆனால் அனுபவத்தில் அப்படி இல்லைஎனவே பொருளின் நிமித்தமே வேறுபாட்டிற்கு காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
·   நம்முடைய மனம்தான் உபாதியாக இந்த ஏற்றத்தாழ்வான சுகத்திற்கு காரணமாக இருக்கின்றதுநம் மனதில் அமைதி அதிகரிக்கும்போது சுகமானது அதிகரிக்கிறது. மனம் சூட்சுமத்தன்மை அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது.
·   எப்பொழுது மனம் அமைதியடையும், சூட்சுமமாகும்? இதற்கென்ன வழி என்று கேள்விகளுக்கு உபநிஷத் இரண்டு உபாயங்கள் கூறுகின்றது. அவைகள் அறிவு, வைராக்யம். மனதில் ஆத்மஞானம் வளர வளர மனம் சூட்சுமாகின்றது, அமைதியும் அடைகின்றது. அதற்கேற்றவாறு சுகத்தின் அளவும் அதிகரிக்கின்றது.
·   மனம் சூட்சுமமாகும்போது மிக மிக நுண்ணிய விஷயங்களை கிரகிக்கின்றது. இது அடையும் அறிவினால் நிகழ்கின்றது
·   மனம் அமைதியாக இருக்கும்போது, சூட்சுமமாக இருக்கும்வைராக்கியம் அதிகரிக்கும்போது மனம் அமைதியடைகின்றது.
·   இந்த ஆனந்தம் எங்கிருந்து வருகின்றது என்று கேட்கும்போது நம் மனதிலிருந்து தான் வருகின்றது என்று சொன்னால் தவறு..  மனம் சுகத்தின் உற்பத்தி ஸ்தானம் கிடையாது. மனம் ஒடுங்கி செயல்படாமல் இருக்கும்போது ஆனந்தம் வரக்கூடாது, ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிய நிலையில் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். எனவே மனம் ஆனந்தத்தின் உற்பத்தி ஸ்தானமல்ல என்று நிரூபணமாகின்றது
·   இவ்வாறு எல்லாவற்றையும் நீக்கிக் கொண்டு வந்தால், அதை பார்த்துக் கொண்டு இருப்பவன்தான் ஆத்மா. என்றும், மனமானது ஆனந்தத்தை பிரதிபிம்பிக்கின்ற தன்மையுடன் இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றதுஉதாரணமாக நிலைக்கண்ணாடிக்கு அதன் எதிரே வரும் பொருளை பிரதிபிம்பிக்கும் தன்மையுடையதுதூசிபடிந்த கண்ணாடியில் பிம்பம் தெளிவாக இருக்காது. சுத்தப்படுத்திப் பார்க்கும்போது அதுவே தெளிவாக தெரியும்இதிலிருந்து நாம் அறிய வேண்டியது மனதின் சூட்சும தன்மை அதிகரிக்கும் போது அதில் பிரதிபலிக்கும் ஆனந்தமும் அதிகரிக்கும்ஆத்மா ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதால், மனமானது அதை பிரதிபிம்பிக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றதுஇதிலிருந்து நம்மால் ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
 
வைராக்கியத்தின் பெருமை:-
மனதில் அனுபவிக்கும் ஆனந்தத்தின் ஏற்றத்தாழ்வு வைராக்கியத்தின் அளவை பொறுத்திருக்கின்றதுஆசைகள் குறைய குறைய ஆனந்தம் அதிகரிக்கின்றதுகாமத்தியாகம் இரண்டு விதத்தில் ஏற்படுகின்றது. எப்படி ஆசைகளை மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டால், விரும்பிய பொருளை அடையும் போது அதிலுள்ள குறையை ஆராய்ந்து அறிந்து அந்த ஆசையை நீக்கி விடுதல்.
·   அடையும் பொருள் கொடுக்கும் சுகத்தைவிட அதை விலக்குவதால அடையும் இன்பம நூறுமடங்காக இருக்கும்.   
·   வைராக்கியத்தினல் இரண்டுவிதமான பலன்களை அடையலாம். அவைகள்
o லௌகீக வாழ்க்கையிலே அதிக இன்பத்தை அனுபவிக்கலாம், பிரதிபிம்பானந்தத்தை அனுபவிக்கலாம்வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது. இதனால் மனம் அதிகமாக அமைதியடையும், சூட்சுமமடைகின்றது.
o வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது மோட்சத்தை அடைவதற்கு தகுதியை கொடுக்கின்றது.
 
பிரம்மானந்தம் : நானே சுபாவமாக பிரம்மனாகவே இருக்கின்றேன் என்ற நிலையை அடையும்போது அனுபவிக்கின்ற இன்பம்இந்த இன்பத்தை அனுபவிக்க எதையும் சார்ந்திருக்கத்தேவையில்லை. ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே ஆனந்தமாக இருக்கின்றது. தன்னிடத்திலே திருப்தியுடன் இருப்பவன் தான் நிலையான இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று பகவான் கீதையில் கூறியிருக்கின்றார். இந்த பிரம்மானந்த்த்தை அடைவதற்கு வைராக்கியம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
 
அனுவாகம்-8.2
யுவா ஸ்யாத்ஸது4யுவாத்4யாயக: | ஆஸிஷ்டோ த்3ருடி4ஷ்டோ ப3லிஷ்ட: \
தஸ்ய்யேயம் ப்ருதி2வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் | ஸ ஏகோ மானுஷ ஆனந்த: |
தேயே ஶதம் மானுஷா ஆனந்தா: |
ஸ ஏகோ மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3 | ஸ ஏகோ தேவகந்த4ர்வாணாமானந்த3: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வகந்த4ர்வாணாமானந்த3 |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் பித்ருணாம் சிரலோகானாமானந்த3 |
ஸ ஏக ஆஜானஜானாம் தே3வனாமானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதமாஜானஜானாம் தே3வனாமானந்த: | ஸ ஏக கர்மதே3வானாம் தே3வனாமானந்த: |
யே கர்மணா தேவானபியந்தி | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் கர்மதே3வானாம் தே3வனாமானந்த: | ஸ ஏகோ தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதமிந்த்3ரஸ்யானந்தா: |
ஸ ஏகோ ப்3ருஹஸ்பதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்3ருஹஸ்பதேரானந்த: |
ஸ ஏகோ ப்ரஜாபதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்ரஜாபதேரானந்த: | ஸ ஏகோ ப்3ரஹ்மண் ஆனந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
 
மனித லோகத்தில் அடையக்கூடிய அதிக சுகங்களை கற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் அடைந்தால் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை இந்த சுகங்களை நீக்குவதால் அடையலாம்.
 
இளம்வயதுடைய ஒருவன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்பவன், நன்னெறியை பின்பற்றுகின்றவன், நன்கு சாஸ்திரங்களை கற்றவன், விரைவில் செயல்படும் திறமையுடையவன், மூவரிடம் நன்கு முறையாக உபதேசத்தை பெற்றவன் அவர்களுடைய அனுக்கிரகத்தைப் பெற்றவன், உறுதியான உள்ளமுடையவன், மனோ தைரியமுடையவன், நிச்சயமாக முடிவெடுப்பவன், உடல் வலிமையுடையவன், ஆரோக்கியமாக இருப்பவன் அவன் செழிப்பான இந்த முழு பூமியே அடைந்தவனாக இருக்கின்றான். இதுதான் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஆனந்தம். இது ஒருபங்கு ஆனந்தம் என்று வைத்து கொள்வோம்.
 
மனிதனுடைய நூறுபங்கு ஆனந்தம் எவையோ அவை மனித கந்தர்வர்களுடைய ஒரு பங்கு ஆனந்தம்ஸ்ரோத்ரியஸ்ய, அகாமஹதஸ்ய - மனிதர்களாக பிறந்து சாஸ்திரங்களை கற்றறிந்து மனித லோகத்தில் வைராக்கியம் உடையவனுக்கும் இதே நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கின்றான்.
மனித கந்தர்வனுடைய நூறுமடங்கு ஆனந்தம் தேவகந்தர்வனுடைய ஒரு மடங்கு ஆனந்தம். மனித கந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கு அதே அளவு ஆனந்தத்தை அனுபவிக்கின்றான்.
தேவ கந்தர்வனுடைய நூறு மடங்கு ஆனந்தம் = பித்ரு லோகத்தில் இருக்கின்றவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். தேவகந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பித்ருக்களுடைய 100 ஆனந்தம் = ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். பித்ரு லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ள  100 ஆனந்தம் = கர்ம தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். ஸ்மார்த்த தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
தேவ லோகத்தில் உள்ள 100 மடங்கு ஆனந்தம் = இந்திரனின் ஆனந்தம், தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
இந்திரனின் நூறு மடங்கு ஆனந்தம் = பிருகஸ்பதியின்  ஆனந்தம். இந்திரனின் ஆனந்தத்தில் வைராக்கியம் உடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பிருகஸ்பதியின் நூறு மடங்கு ஆனந்தம். பிரஜாபதியின் (விராட் புருஷன்) ஆனந்தம்.  பிருகஸ்பதியில் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். பிரஜாபதியின் நூறு மடங்கு ஆனந்தம் = பிரம்மாவின் (ஹிரண்யகர்ப்பன்) ஆனந்தம் =
பிரஜாபதியின் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
 
அனுவாகம்-8.3
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவாதி3த்யே | ஸ ஏல” | ஸ ய ஏவம்வித் |
ஸ்மால்ல்லோகாத்ப்ரேத்ய | ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதம் மனோமயமாத்மானுமுபஸங்க்ராமதி | ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ராமதி | தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
 
ஆனந்த மீமாம்ஸத்தின் மூலமாக பிரதிபிம்பானந்தம் எடுத்துரைக்கப்பட்டது  ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் மூலமாக நிரூபிக்கபட்டிருக்கின்றது.
 
மனிதனிடத்தில் இருக்கும் ஆனந்தமும், ஹிரண்யகர்ப்பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றே. இந்த ஆனந்தத்திற்கு காரணம் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கும் ஆத்மாவேதான். அது இரண்டற்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றதுஇந்த ஞானத்தை அடைந்தவனுக்கு வரும் மனநிறைவே மோட்சம் என்று கூறப்படுகின்றது. இங்கே ஆனந்தம் அனுபவமாக இருக்காது, ஸ்வரூபமாக இருக்கும்ஹிரண்யகர்ப்பனின் ஆனந்தத்தை வைராக்கியத்தோடு ஒதுக்கி விட்டால் அடைவது பிரம்ம ஞானம், இதுவே ஜீவன் முக்தி என்றும் கூறப்படுகின்றது.
 
மனிதனின் இதயக்குகையில் இருக்கின்ற ஆத்மா, நம்முடைய அனுபவத்தில் இருக்கின்ற நான் என்ற ஆத்மா, உடலுக்குள் நுழைந்து இருக்கின்ற ஆத்மாஇதுவும் மாயைக்கு ஆதாரமாக இருக்கின்றதும், இந்த ஜகத்துக்கு ஆதாரமாக இருக்கின்றதும், ஹிரண்ய-கர்ப்பனிடத்திலும் இருக்கின்றதுமான ஆத்மாவும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
 
எவனொருவன் இவ்விதம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிகின்றனோ, அவன் இந்த உலகத்திலிருந்து விலகி, அதன் மீது வைராக்கியம் அடைந்து, உலகத்து விஷயங்களை சார்ந்தில்லாமல் என்னுடையது என்ற புத்தியை விட்டுவிடுகின்றான். தான் உபயோகிக்கும் பொருள் என்னுடையது என்ற புத்தியில்லாமல் அனுபவிக்கின்றான்.; இந்த ஸ்தூல சரீரத்தை ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருந்த அகங்காரத்தை துறக்கின்றான். ஸ்தூல பிரபஞ்சத்தையே துறக்கின்றான். இது மித்யா என்று புரிந்து கொள்கின்றான், இந்த ஜகத் உண்மைபோல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது என்ற அறிவுடன் இருக்கின்றான்;.  மேலும் பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம் ஆனந்தமயம் இவைகளிலுள்ள அகங்காரத்தை விட்டவனாக இருக்கின்றான்இறுதியில் பிரம்மத்தையே அடைகின்றான், பிரம்மனாகவே இருக்கின்றான்இந்த விஷயத்தில் ரிக் மந்திரம் பின்வருமாறு விளக்குகின்றது.
 
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஞானிதான் பிரம்மத்தை அடைகின்றான். அக்ஞானி பிரம்ம ஸ்வரூபமாக இருந்தாலும் அதை அறியாமையிலிருப்பதால் பிரம்மத்தை அடைவதில்லை.
 
எல்லோரும் உலகத்தை இரண்டாக பிரித்திருக்கின்றனர். அவைகள் 1. என்னுடையது, 2.என்னுடையதல்ல என்பதாகும்.. இதில் இரண்டாவதுதான் மிகப்பெரியதாக இருக்கின்றதுஇந்த பிரிவினால்தான் நாம் துயரத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.
 
அனுவாகம்-9.1
யதோ வாசோ நிவர்தந்தே | அப்ராப்ய மனஸா ஸஹ |
ஆனந்தம் ப்3ரஹ்மணோ வித்3வான் | ந பி3பே4தி குதஶ்சனதி |
 
வாக்கும் மனமும் பிரம்மத்தை அடைய முடியாமல், விளக்க முடியாமல் திரும்பி வந்து விட்டதுஇதிலிருந்து நாம் அறிவது வாக்காலும், மனதாலும் இதை அடைய முடியாது என்பதாகும். வாச்யார்த்தம் என்பது நேரிடையாக புரிய வைக்கும், லட்சியார்த்தமானது மறைமுகமாக புரியவைக்கும்பிரம்மத்தினுடைய ஆனந்த ஸ்வரூபத்தை அறிபவன், ஆத்மாவிலிருந்து வேறுபடாத தன்னுடைய ஆனந்த ஸ்வருபத்தை அறிந்தவன், பயத்தைக் கொடுக்கும் காரணம் சென்று விடுவதால் எதைக்கண்டும் பயமில்லாதவனாகவும், பயம் என்பதே இல்லாதிருப்பவனாகவும் இருப்பான்இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது
 
அனுவாகம்-9.2
ஏதம்ஹ வாவ ந தபனி கிமஹம் ஸாது4 நாகரவம் |
கிமஹம் பாபமகரவமிதி | ஸ ய ஏவம் வித்3வானேதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |
உபே4 ஹ்யேவைஷ ஏதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |
ய ஏவம் வேத3 | இத்யுபநிஷத் ||
 
ஞானியானவன், நான் ஏன் நல்லது செய்யவில்லை, நான் ஏன் பாவத்தை செய்தேன் போன்ற எண்ணங்களால் வருகின்ற துயரங்கள் வாட்டுவதில்லைஇவன் தன்னிடத்திலே திருப்தியாக இருப்பவன், தன்னிடத்திலே குறையை பார்க்காமலிருப்பவன்பாவ-புண்ணியங்களை தன்னிடமிருந்து வேறாக பார்ப்பதில்லை. த்வைத ஞானம் அவனிடத்தில் இல்லாததால் அவனால் இவ்வாறாக நினைக்க முடிகின்றதுஅதனால் எந்த துயரத்தையும் அனுபவிப்பதில்லைநாம் நம்மையே நேசிக்க ஆரம்பித்துவிட்டால் யாருடைய அன்பையும் எதிர்ப்பார்க்கமாட்டோம், கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைய மாட்டான். அவன் அடைந்த ஞானத்தில் நிலைத்து நிற்கும் அளவுக்கு மனோபலத்தை அடைந்திருக்கின்றான்.
 
ஞானியின் அந்தக்கரணம் ராக-துவேஷங்களால் பாதிக்கப்படுவதில்லைமேலும் அப்படி வெளிப்படும் இவைகள் தன்னுடையதல்ல, அது அந்தக்கரணத்தைச் சார்ந்தது, நான் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கின்றேன் என்ற மனநிலையில் இருப்பான். எப்படி வேறொருவன் மனிதில் வெளிப்படும் ராக-துவேஷங்கள் நம்மை பாதிப்பதில்லையோ அதேப்போன்று இருக்கும் ஞானியின் மனநிலை.
 
முடிவுரை:
·         பிரஹ்மவித் ஆப்னோதி பரம் என்ற சூத்திர வாக்கியம் கூறப்பட்டது.
·         விருத்தி வாக்கியமானஸத்யம், ஞானம், அனந்தம் பிரஹ்ம….ப்ரஹ்மனா விபஸ்சிதாவிளக்கப்பட்டது.
·         அத்யாரோப-அபவாதம் முறையில் பிரம்மம் விளக்கப்பட்டது.
o    ஸ்ருஷ்டியானது பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டது.
o    ஏற்றி வைத்ததையெல்லாம் ஒவ்வொன்றாக பஞ்சகோஷம் விவேகம் மூலமாக நீக்கப்பட்டதுஇதில் சமஷ்டி-வியஷ்டி இரண்டையும் நீக்குதலையும் உபதேசிக்கபட்டது.
o    இந்த பிரபஞ்சத்தை நீக்கி நிர்குண பிரம்மத்தை உபதேசித்தது.
o    ஜகத் மித்யா என்பதையும் பிரம்மம் ஸத்யம் என்பதையும் நிரூபிக்க இந்த முறையை கையாளப்பட்டது.
·         பிரம்மன் இருக்கின்றது என்பதை ஏழு விதத்தில் உபதேசிக்கப்பட்ட்து.
·         ஆனந்த மீமாம்ஸா அதாவது ஆனந்த விசாரம் செய்யப்பட்ட்து.
o    ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று நிலை நாட்டுவதற்கும், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியேயிருந்து வருகின்றது என்று தெரிவதால் இந்த விசாரம் செய்யப்பட்ட்து
o    வைராக்கியத்தின் பெருமையை உணர்த்துவதற்காக மனதில் ஆசைகள் நீங்க நீங்க அமைதியும் அதிகரிக்கும், அதனால் ஆனந்தம் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட்துஆனந்தமே விஷயானந்தம், வைராக்கியானந்தம், ஆத்மானந்தம் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டது
o    ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் உபதேசிக்கப்பட்ட்து.
·         இதன் பலனாக எதைக் கண்டும் பயப்படுவதில்லைபயமும் அதற்கான காரணமும் சேர்ந்து நீங்கி விடுகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி முடிவுற்றது
----oo000oo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...