ஶ்ரீருத்ர கீதம்
Skandam -4, Chapter – 24, Stotram
– 33 to 79
ஜிதம் த ஆத்மவித்3 து4ர்ய ஸ்வஸ்தயே ஸ்வஸ்திரஸ்து மே |
ப4வதாராத4ஸா ராத்3த4ம் ஸர்வஸ்மா ஆத்மனே நம: || 1 ||
பகவானே! தாங்களே வெற்றியாக இருக்கிறீர்கள், உங்களிடத்தில் ஆத்மானந்தம்
என்றும் நிலையாக இருக்கிறது. மேன்மையான, உயர்ந்த ஞானிகளிடத்தில் இருக்கின்ற
மனநிறைவை, சுகத்தை எனக்கும் அளிப்பாயாக.
அனைத்து உயிர்களிடத்திலும் வீற்றிருக்கும் தங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்
நம: பங்கஜனாபா4ய
பூ4தஸூக்ஷ்மேந்த்3ரியாத்மனே |
வாஸுதே3வாய ஶாந்தாய
கூடஸ்தா2ய ஸ்வரோசிஷே || 2 ||
தாமரையை தொப்புளில் உடையவரும், ஸ்தூல, சூட்சும பூதங்கள், புலன்கள்
இவைகளுக்கு தலைவனாக இருக்கின்றவரும், எங்கும் வியாபித்து கொண்டிருப்பவரும், அமைதி
ஸ்வரூபமாக இருப்பவரும், மாற்றங்களற்றவரும், சுயபிரகாசமாக விளங்கிக்
கொண்டிருப்பவருமான பகவானுக்கு நமஸ்காரம்
ஸங்கர்ஷணாய ஸூக்ஷ்மாய
து3ரந்தாயாந்தகாய ச |
நமோ விஶ்வப்ரபோ3தா4ய
ப்ரத்3யும்னாயாந்தராத்மனே || 3 ||
அகங்காரத்திற்கு அதிபதியாக இருப்பவரும், அதிநுட்பமாக இருப்பவரும்,
அழிவற்றவராக இருப்பவரும், அனைத்தினுடைய முடிவுக்கு காரணமானவரும், எல்லாவற்றிற்கும்
சாட்சியாக இருப்பவரும், ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரத்திற்கு மூலகாரணமான
ப்ரத்யும்னன் என்கின்ற வ்யூஹ வடிவமானவரும், எல்லா ஜீவராசிகளுக்குள்ளேயும் நுழைந்து
இயக்குபவரும் இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.
நமோ நமோऽநிருத்3தா4ய ஹ்ருஷீகேஶேந்த்3ரியாத்மனே |
நம: பரமஹம்ஸாய
பூர்ணாய நிப்4ருதாத்மனே || 4 ||
அநிருத்தன் என்கின்ற வியூகரூபியும், புலன்களுக்கு தலைவனாகிய மனம்
மற்றும் அனைத்து இந்திரியங்களுடைய ஸ்வரூபமாக இருப்பவருக்கும் அனேக நமஸ்காரங்கள்.
சகல பாவங்களற்றவரும், பரிபூர்ணமானவரும், அனைத்து விருப்பங்களை நிறைவேற்றுபவரும்
ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்
ஸ்வர்கா3பவர்க3 த்3வாராய
நித்யம் ஶுசிஷதே3 நம: |
நமோ ஹிரண்யவீர்யாய சாதுர்ஹோத்ராய
தந்தவே || 5 ||
சொர்க்கம், மோட்சம் இவைகளை அடைய பாதையாக உடையவரும், எப்பொழுதும்
இதயத்தில் வீற்றிருப்பவரும், அக்னி வடிவமானவரும், கர்மாக்களுக்கு சாதனமாக
உள்ளவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.
நம ஊர்ஜ இஷே த்ரய்யா:
பதயே யக்3ஞரேதஸே |
த்ருப்திதா3ய ச
ஜீவானாம் நம: ஸர்வரஸாத்மனே || 6 ||
பித்ருக்களுக்குரிய அன்ன வடிவமாகவும், தேவர்களுக்குரிய அன்ன வடிவமாகவும்,
மூன்று வேதங்களுக்கும் தலைவனும், ஸோமரஸ ரூபமாகவும், ஜீவராசிகளுக்கு திருப்தி
அளிப்பவரும், ஜலஸ்வரூபியும் ஆன பகவானுக்கு நமஸ்காரம்.
ஸர்வஸத்த்வாத்ம தே3ஹாய
விஶேஷாய ஸ்த2வீயஸே |
நமஸ்த்ரைலோக்யபாலாய
ஸஹ ஓஜோ ப3லாய ச || 7 ||
எல்லாப்பிராணிகளுடைய தேஹ வடிவமானவரும் (விராட் ஸ்வரூபியும்), ப்ருதிவீ
ரூபமானவரும், மூவுலகங்களையும் பாதுகாப்பவரும், ஆதியான தர்மம், சக்தி ஆகியவைகளாகவே
இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.
அர்த2லிங்கா3ய நப4ஸே
நமோऽந்தர் ப3ஹிராத்மனே
நம: புண்யாய லோகாய
அமுஷ்மை பூ4ரிவர்சஸே || 8 ||
சப்தத்தினால் ஊகித்தறியக்கூடிய ஆகாய ஸ்வரூபமானவரும், உள்ளும் புறமும்
வியாபித்து இருப்பவரும், சுவர்க்கம் முதலிய புண்ணிய லோகஸ்வரூபமாகவும், இந்த உலக
ஸ்வரூபமாகவும், எல்லா ஜீவராசிகளாகவும் இருக்கின்ற உங்களுக்கு அனேக நமஸ்காரம்.
ப்ரவ்ருத்தாய
நிவ்ருத்தாய பித்ருதே3வாய கர்மணே |
நமோऽத4ர்மவிபாகாய ம்ருத்யவே து3:க2தா3ய ச || 9 ||
செயல்பட்டுக் கொண்டிருத்தல், செயல்படுவதிலிருந்து நீங்கி இருத்தல் என்ற
இருவகையான செயல்களையும், பித்ருக்கள் தெய்வமாகக் கொண்ட தர்ம ஸ்வரூமாக இருப்பவரும்,
வைராக்கியத்தின் பலனாக இருப்பவரும், துயரத்தை தருகின்ற மரணவடிவமாகவும் இருக்கின்ற
பகவானுக்கு நமஸ்காரம்.
நமஸ்த ஆஶிஷாமீஶ மனவே
காரணாத்மனே |
நமோ த4ர்மாய ப்3ருஹதே
க்ருஷ்ணாயா குண்ட2 மேத4ஸே |
புருஷாய புராணாய
ஸாங்க்2ய யோகே3ஶ்வராய ச || 10 ||
ஈஸ்வரனே! எல்லாவிதமான செயல்களுக்கும் பலன் அளிப்பவரும், அனைத்தும்
அறிந்தவரும், மேலான தர்மஸ்வரூபமாகவும், எல்லோருடைய மனதைக் கவரும் கருமையான நிறமானவரும்,
எல்லையற்ற அறிவு படைத்தவரும், அனாதியான புருஷோத்தமனாகவும், ஞானம், யோகம்
இவைகளுக்குத் தலைவனுமாகிய தங்களுக்கு நமஸ்காரம்.
ஶக்தித்ரயஸமேதாய
மீடு4ஷேஹங்க்ருதாத்மனே |
சேதஆகூதிரூபாய நமோ
வாசோ விபூ4தயே || 11 ||
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான சக்திகளை உடையவரும்,
மழைத்தரும் மேகங்களாக இருக்கின்றவரும், அகங்காரம் என்கின்ற தத்துவமாக இருப்பவரும்,
மனமாகவும், வாக்கு போன்ற ஞானேந்திரியஙகளின் சக்தியாகவும் இருக்கின்ற பகவானுக்கு
நமஸ்காரம்
தர்ஶனம் நோ
தித்3ருக்ஷூணாம் தே3ஹி பா4க3வதார்சிதம் |
ரூபம் ப்ரியதமம்
ஸ்வானாம் ஸர்வேந்த்ரியகு3ணாஞ்ஜனம் || 12 ||
பக்தர்களால் விரும்பி வணங்குகின்ற தங்கள் திருவுருவக் காட்சியை காண
விரும்புகின்ற எங்களுக்கு காட்டியருளுங்கள். தங்கள் திருவுருவம் அடியார்களுக்கு
மிகவும் பிரியமானது. எல்லா புலன்களுக்கும் நன்மையளிக்கின்ற மருந்து போன்றது.
ஸ்னிக்3த4ப்ராவ்ருட்3
க4னஶ்யாமம் ஸர்வஸௌந்தர்ய ஸங்க்3ரஹம் |
சார்வாயத சதுர்பா3ஹு
ஸுஜாதருசிரானனம் || 13 ||
தங்களது திவ்யமான உருவம் அழகிய மழைக்கால மேகம் போல் கருநிறமானது.
எல்லாவித அழகுகளின் தொகுதியாக இருக்கின்றது.
நீண்ட அழகான நான்கு கைகள் கொண்டது. நன்கு அமைந்த அழகான முகத்தை உடையது.
பத்3மகோஶபலாஶாக்ஷம்
ஸுந்தரப்4ரு ஸுனாஸிகம் |
ஸுத்3விஜம்
ஸுகபோலாஸ்யம் ஸமகர்ணாவிபூ4ஷணம் || 14 ||
தாமரை இதழ் போன்ற கண்களுடன் கூடியது.
அழகிய புருவங்கள் கொண்டது. அழகான
மூக்கு, பற்கள், கன்னங்கள், இதழ்கள் இவைகளுடன் கூடியதாக இருக்கிறது. அழகான இரண்டு காதுகளை உடையதாக இருக்கிறது.
ப்ரீதிப்ரஹஸிதாபாங்க3மலகை
ரூபஶோபி4தம் |
லஸத்பங்கஜகிஞ்ஜல்க
து3கூலம் ம்ருஷ்டகுண்ட3லம் || 15 ||
புன்முறுவல், பிரியமான கடைக்கண் பார்வை கொண்டது. முன்னுச்சி ரோமங்களால்
அழகூட்டபட்டிருக்கிறது. தாமரை போன்ற
குஞ்சங்களுடன் விளங்குகின்ற பட்டாடையுடன் காட்சியளிக்கிறது. காதுகளில் அழகிய குண்டலங்கள் காணப்படுகிறது.
ஸ்புரத்கிரீடவலய ஹார நூபுரமேக2லம்
|
ஶங்க2சக்ரக3தா3பத்3ம
மாலாமண்யுத்தமர்த்3தி4மத் || 16 ||
ஒளிவீசும் கிரீடம், வளையல்கள், மாலை, கால் சதங்கை ஒட்டியாணம்
இவைகளுடன் கூடியது. கைகளில்
ஏந்தியிருக்கும் சங்கு, சக்கரம், கதை, தாமரை இவைகளுடன், கழுத்தில் போட்டிருக்கும்
மாலைகளுடன் சோபிக்கின்றது
ஸிம்ஹஸ்கந்த4த்விஷோ
பி3ப்4ரத்ஸௌப4க3க்3ரீவகௌஸ்துப4ம் |
ஶ்ரீயானபாயின்யா
க்ஷிப்த நிகஷாஶ்மோரஸோல்லஸத் || 17 ||
சிங்கம் போன்ற தோள்களின் காந்தியை தரிக்கின்றது. அழகிய கழுத்தில் கௌஸ்துப மணி அணிந்திருப்பது
ஒருபொழுதும் உங்களை விட்டுபிரியாத மகாலட்சுமி தேவியினால் மறைக்கப்பட்ட உரைகல்
போன்ற விசாலமான மார்புடன் விளங்குகிறது
பூர்ரேசகஸம்விக்4ன
வலிவல்கு3த3லோத3ரம் |
ப்ரதிஸங்க்ராமயத்3விஶ்வம்
நாப்4யாவர்தக3பீ4ரயா || 18 ||
மூச்சுவிடுவதால் அசைகின்ற மடிப்புகளால் ஆன அழகிய வயிற்றை உடையது. சுழிபோல் அழகான தொப்புளில் உலகத்தை பிரளய
காலத்தில் ஒடுக்குகின்றது
ஶ்யாம ஶ்ரோண்யதி4 ரோசிஷ்ணு
து3கூல ஸ்வர்ணமேக2லம் |
ஸமசார்வங்க்4ரிஜங்கோ4ரு
நிம்னஜானுஸுத3ர்ஶனம் || 19 ||
அழகிய இடுப்பில் விளங்கிக் கொண்டிருக்கும் பட்டாடை, தங்க ஒட்டியானம்
இவைகளுடன் கூடியது. அழகிய திருவடிகள்,
முழங்கால்கள், தொடைகள், கம்பீரமான முட்டிகள் இவைகளால் அழகாக காட்சியளிக்கின்றது.
பதா3 ஶரத்பத்3மபலாஶரோசிஷா
நக2த்3யுபி4ர்னோSந்தரக4ம்
விது4ன்வதா |
ப்ரத3ர்ஶய ஸ்வீயமபாஸ்தஸாத்4வஸம்
பத3ம் கு3ரோ
மார்ககுருஸ்தமோஜுஷாம் || 20 ||
இலையுதிர் காலத்து தாமரை இதழ் போன்ற மணத்தை உடையதும், நகங்களின்
காந்தியால் உள்ளே இருக்கும் அழுக்கை போக்கடிக்கின்றதும் ஆகிய திருவடியுடன்
கூடியதுமாகிய ரூபத்தை காண்பியுங்கள். ஓ குருவே~ எந்தவிதமான பயமுமற்ற தங்கள்
இருப்பிடத்தை காண்பியுங்கள் ஏனெனில்
அக்ஞானிகளான ஜீவர்களுக்கு நல்ல வழியை உபதேசிக்கும் ஞானகுரு அல்லவா தங்களுடைய
திருவடிகள்!
ஏதத்3 ரூபமனுத்4யேயம் ஆத்மஶுத்3தி4ம் அபீ4ப்ஸதாம் |
யத்3ப4க்தியோகோ3Sப4யத3:
ஸ்வத4ர்ம்ம் அனுதிஷ்ட2தாம் || 21 ||
மனத்தூய்மையை விரும்புபவர்களும் தங்கள் கடமையை செய்து
வருகின்றவர்களும் ஆகியவர்களால் இப்பேர்ப்பட்ட ஸ்வரூபம் தியானம் செய்யத்
தக்கது. ஏனெனில் பகவானிடம் பக்தி
செலுத்துதல் என்பது மோட்சம் வரையுள்ள பலனை அளிக்கவல்லது
ப4வான்ப4க்திமதா லப்4யோ து3ர்லப4: ஸர்வதேஹினாம் |
ஸ்வாராஜ்யஸ்யாப்யபி4மத ஏகாந்தேனாத்மவித்3 க3தி: || 22 ||
பக்தியில்லாத எல்லா ஜீவர்களாலும் அடையமுடியாத தாங்கள் பக்தனால் அடைய
முடிபவர். மோட்சமடைந்த ஞானிகளாலும் விரும்பத்தக்கவர். ஆத்மஞானிகளுக்கு உறுதியாக
அடைக்கலமளிப்பவர்
தம் து3ராராத்4யமாராத்4ய ஸதாமபி து3ராபயா |
ஏகாந்தப4க்த்யா கோ வாஞ்சே2த்பாத3மூலம் வினா ப3ஹி: || 23 ||
ஸாதுக்களாலும் கூட எளிதில் அடையமுடியாத சிறந்த பக்தியில்லாமல் வேறு
விதத்தில் திருப்தி செய்ய முடியாத அந்த பகவானை பூஜித்து அவரது திருவடி சேவையைத்
தவிர வேறு எந்தப்பொருளை யார் விரும்புவார்கள்.
யத்ர நிர்விஷ்டமரணம் க்ருதாந்தோ நாபி4மன்யதே |
விஶ்வம் வித்4வம்ஸயன்வீர்ய ஶௌர்யவிஸ்பூ2ர்ஜிதப்4ருவா || 24 ||
எந்த பகவானுடைய திருவடியில் அடைக்கலம் புகுந்தவனை வீரியம், மனோபலம்
இவற்றின் பெருமையால் உலகத்தை அழிக்கின்ற யமன் அணுகமாட்டானோ அத்தகைய திருவடிகளே
தியானம் செய்யத்தக்கது.
க்ஷணார்தே4னாபி துல்யே ந ஸ்வர்க3ம் ந அபுனார்ப4வம் |
ப4க3வத்ஸங்கி3 ஸங்க3ஸ்ய மர்த்யானாம் கிமுதாஶிஷ: || 25 ||
மனிதர்களுக்கு பக்தர்களின் சேர்க்கை அரைக்கணம் ஏற்பட்டாலும் கூட அதை
சொர்க்கத்திற்கு இணையாக கருதமாட்டார்கள், மோட்சத்தையும் இணையாக கருத மாட்டார்கள்.
இப்படி இருக்கும்போது மற்றவைகளைப் பற்றி கேட்பானேன்.
அதா2னகா4ங்க்4ரேஸ்தவ கீர்திதீர்த2யோ:
அந்தர்ப3ஹி:ஸ்னானவிதூ4தபாப்மனாம்
|
பூதேஷ்வனுக்ரோஶஸு ஸத்த்வஶீலினாம்
ஸ்யாத்ஸங்கமோSனுக்ரஹ
ஏஷ நஸ்தவ || 26 ||
ஆகையால் குற்றமற்ற திருவடிகளைக் கொண்ட தங்களுடைய புகழ், பாததீர்த்தம்
இவைகளில் உள்ளும், புறமும் ஸ்னானம் செய்து பாவங்கள் விலகியவர்களும் பிராணிகளிடம்
கருணை காட்டுதல் என்னும் நல்ல நடத்தை கொண்டவர்களும் ஆகிய இந்த சாதுக்களின்
சேர்க்கை எங்களுக்கு தங்கள் அனுக்ரஹமேயன்றி வேறல்ல.
ந யஸ்ய சித்தம் ப3ஹிரர்த2விப்4ரமம்
தமோகு3ஹாயாம் ச விஶுத்3த3மாவிஶத் |
யத்3ப4க்தியோகா3னுக்3ருஹீதமஞ்ஜஸா
முனிர்விசஷ்டே நநு தத்ர தே க3திம் || 27 ||
எந்த பகவத் பக்தி யோகத்தினால் அருள் பாலிக்கப்பட்ட எவனுடைய புனிதமான
மனது புறம்பான பொருள்களுடைய மனமயக்கத்தில் ஈடுபடவில்லையோ, அக்ஞானம் என்னும்
குகையில் நுழைவதில்லையோ, அத்தகைய நிலையில் தியானத்தில் பழகுகின்ற அந்த முனிவர்
தங்கள் ஸ்தானத்தை நேரில் காண்கிறான் அல்லவா!
யத்ரேத3ம் வ்யஜ்யதே விஶ்வம் விஶ்வஸ்மின்னவபா4தி யத் |
தத்த்வம் ப்3ரஹ்ம பரம் ஜ்யோதி: ஆகாஶமிவ விஸ்த்ருதம் || 28 ||
எந்த ஸ்வரூபத்தில் இந்த உலகமானது தோற்றமளிக்கிறதோ, எந்த ஸ்வரூபமானது
உலகில் விளங்குகிறதோ, அத்தகைய ஆகாயம் போல் எங்கும் பரவியதும் பரம்பொருளான,
ஜோதிஸ்வரூபமான பிரம்மன் தாங்களே.
யோ மாயயேத3ம் புருரூபயாஸ்ருஜத்3
பி3ப4ர்தி பூ4ய:
க்ஷபயத்யவிக்ரிய: |
யத்3பே4த3பு3த்3தி4: ஸதி3வாத்மது3:ஸ்த2யா
த்வமாத்மதந்த்ரம்
ப4கவன்ப்ரதீமஹி ||
பகவானே! ஒருவித மாறுதலும் அற்ற எந்த
பகவான் பலவித வடிவம் கொண்ட மாயையினால் இந்த உலகம் யாவையும் படைத்தாரோ, பாதுகாக்கிறாரோ
மீண்டும் தன்னிடத்திலேயே ஒடுக்குகிறாரோ, எந்த பகவானிடம் வேற்றுமை உணர்ச்சி
ஜீவராசிகளிடம் அமைந்துள்ள துஷ்டமாயையினால் உண்மையானது போல தோன்றுகிறதோ ஸ்வதந்திரமாக
உள்ள அந்த பகவானை தியானம் செய்வோமாக.
க்ரியாகலாபைரித3மேவ யக்3னி: ஸ்ரத்3தா4ன்விதா:
ஸாது4 யஜந்தி
ஸித்3த4யே |
பூ4தேந்த்3ரியாந்த:கரணோபலக்ஷிதம் வேதே3
ச தந்த்ரே
ச த ஏவ கோவிதா3: || 30 ||
வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் நிபுணர்களான அப்படிப்பட்ட கர்மயோகிகள்
மிதவும் சிரத்தையுடைவர்களாக பஞ்சபூதங்கள், இந்திரியங்கள், மனம் இவைகளுக்கு
சாக்ஷியான இந்த பரமாத்ம ஸ்வரூபவத்தையே காரியங்கள் வெற்றி அடைவதற்காக பலவிதமான
கர்மாக்களால் நன்கு பூஜிக்கிறார்கள்.
த்வமேக ஆத்3ய: புருஷ: ஸுப்தஶக்திஸ்தயா
ரஜ:ஸத்த்வதமோ
விபி4த்3யதே |
மஹானஹம் க2ம் மருதக்3னிவார்த4ரா:
ஸுரர்ஷயோ
பூ4தகணா இதம் யத: || 31 ||
தாங்கள் முதன்முதலில் செயலற்ற மாயாசக்தியுடன் கூடிய புருஷோத்தமனாக
இருந்தீர்கள். அந்த மாயாசக்தியினால்
ரஜஸ்,சத்துவ, தமஸ் என்ற முக்குணப் பிரிவு ஏற்படுகிறது. இந்தப் பிரிவின் மூலம் மஹத் தத்துவம், அகங்கார
தத்துவம் ஆகாயம், காற்று, அக்னி, ஜலம், பூமி, தேவர்கள், மனிதர்கள், ஸ்தூல பூதங்கள்
ஆகியவைகள் தோன்றின.
ஸ்ருஷ்டம் ஸ்வஶக்த்யேத3மனுப்ரவிஷ்டஶ்
சதுர்வித4ம்
புரமாத்மாம்ஶகேன |
அதோ2 விது3ஸ்தம் புருஷம் ஸந்தமந்த:
பு4ங்க்தே ஹ்ருஷீகைர்மது4
ஸாரக4ம் ய:||
தனது மாய சக்தியினால் படைக்கப்பட்ட இந்த நான்கு வகையாக உள்ள, கர்ப்பத்தில்
இருந்து தோன்றுவன, முட்டையிலிருந்து உண்டாவன, வியர்வையிலிருந்து தோன்றுவன,
விதையிலிருந்து பூமியை பிளந்து வளர்கின்ற தாவரங்கள், இவைகளின் சரீரங்களுக்குள்
தனது ஒரு அம்சமாகவே தானும் நுழைந்துள்ளார். அக்காரணத்தாலேயே உள்ளே இருக்கும்
ஜீவனை, அந்த பகவானாகவே உணர்கிறார்கள்.
இந்த ஜீவன்தான் இந்திரியங்களால், தேனாடையிலுள்ள தேனைப் போன்ற விஷய சுகத்தை
அனுபவிக்கிறான்
ஸ ஏஷ லோகானதிசண்ட3வேகோ3
விகர்ஶஸி த்வம் க2லு
காலயான: |
பூ4தானி பூதைரனுமேயதத்த்வோ
க4னாவலீர்வாயுரிவாவிஷஹய:
|| 33 ||
பெருங்காற்று மேகக்கூட்டங்களை விலக்குவது போல ஸ்தூல, சூட்சும
பூதங்களுக்கெல்லாம் காரணப்பொருளாக இருப்பவரும், மிகுந்த வேகம் கொண்டவரும்,
ஊழிக்காலம் என்னும் நிலையை அடிப்படையாகக் கொண்டவரும் ஆகிய அப்படிப்பட்ட தாங்கள்
அல்லவா உலகங்கள் அனைத்தையும், ஜீவராசிகள் அனைத்தையும் ஒடுக்கிக் கொள்கிறீர்கள்?
ப்ரமத்தமுச்சைரிதி க்ருத்யசிந்தயா
ப்ரவ்ருத்3த4லோப4ம்
விஷயேஷு லாலஸம் |
த்வமப்ரமத்த: ஸஹஸாபி4பத்யஸே
க்ஷுல்லோலிஹானோSஹிரிவாகு2மந்தக:
|| 34 ||
பசியினால் நாக்கைச் சப்புக் கொட்டுகின்ற பாம்பானது எலியை நோக்கிப்
பாய்வது போல மிகுந்த அஜாக்கிரதையுள்ளவனும், அதைச் செய்யவேண்டும், இதைச் செய்ய
வேண்டும், எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்றவாறு கவலையுடன் கூடிய பேராசை
மிகுந்தவனும், விஷய சுகங்களில் ஈடுபட்டவனுமாகிய ஜீவன் மேல் தாங்கள் மிகுந்த
ஜாக்கிரதையுடைய யமன் வடிவத்தில் திடீரென தாக்குகிறீர்கள்.
கஸ்த்வத்பதா3ப்3ஜம் விஜஹாதி பண்டி3தோ
யஸ்தேSவமானவ்யயம்மனகேதன:
|
விஶங்க்யாஸ்மத்3கு3ருரர்சதி ஸ்ம
யத்3வினோபபத்திம் மனவஶ்சதுர்த3ஶ || 35 ||
தங்களை அவமதிப்பதால் சிறுமைப்படுகின்ற உடலின் தன்மையையுடைய எந்தப்
பண்டிதன் தங்கள் திருவடித் தாமரையை, விட்டுவிடுவான் எந்தத்திருவடியை எங்கள் தந்தையாகிய பிரம்மதேவர்
சந்தேகமின்றி பூஜித்தாரோ, ஸ்வயாம்புவ முதலிய பதினான்கு மனுக்களும் ஒருவித
ஆக்ஷேபனையின்றி பூஜித்தார்களோ அந்த திருவடிகளை எவன் மறப்பான்
அத2 த்வமஸி நோ ப்3ரஹமன்பரமாத்மன்விபஶ்சிதாம் |
விஶ்வம் ருத்ரப4யத்4வஸ்தமகுதஶ்சித்3ப4யா க3தி: || 36 ||
ஆகையினால், ஓ ப்ரமாத்மாவே! உலகம் யாவும் பயங்கரச் சூழ்நிலைக்கு
உட்பட்டதென நன்கு அறிகின்ற எங்களுக்கு தாங்கள் பயமின்றி அடையத்தக்க அடைக்கலப்
பொருளாக, பரம்பொருளாக விளங்குகிறீர்கள்.
பலன்கள்:
- அரசகுமாரர்களே!
புனிதமானவர்களாய் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து கொண்டு பகவானிடம் மனதை செலுத்தி
இந்த கீதத்தை ஜபியுங்கள். உங்களுக்கு மங்களம் உண்டாகுக!
- எல்லா
பிராணிகளிடத்திலும் வீற்றிருப்பவரும் ஆத்மஸ்வரூபமானவருமான அந்த பகவானையே
துதிப்பவர்களாகவும், தியானம் செய்பவர்களாகவும் இடைவிடாது வழிபடுங்கள்
- யோகமார்க்கத்தை
கடைப்பிடித்து தியானம் செய்து கொண்டு முனிவர்கள் மேற்கொள்கின்ற விரதங்களை
கொண்டவர்களாய் மன ஒருமையுடன் எல்லோரும் ஊக்கத்துடன் இந்த கீதத்தை பயிற்சி
செய்யுங்கள்.
- மேலும்
பகவானிடம் பக்தி கொண்ட மனிதன் மன ஒருமுகத்துடன் நாள்தோறும் இடைவிடாது இந்த
கீதத்தை ஜபித்து விரைவில் மேன்மை அடைகிறான்
- இவ்வுலகில்
எல்லா மேன்மைகளுக்கும் அறிவானது மேன்மையாக விளங்குகிறது. ஞானம் என்னும் ஓடத்தை கருவியாகக் கொண்டவன்
எளிதில் தாண்ட முடியாத துயரக்கடலை சிரமமின்றி தாண்டிவிடுகிறான்.
- எவன் சிரத்தையுடன்கூட
என்னால் (சிவபெருமானால்) பாடப்பட்ட இந்த பகவானுடைய ஸ்தோத்திரம் ஜபிக்கிறானோ,
இவன் எளிதில் ஆராதிக்கமுடியாத பகவானை திருப்தி செய்கின்றான்.
- அந்த மனிதன்
எனது கீதத்தைப்பாடியதன் மூலம் மிகவும் திருப்தி அடைந்தவரும் மேன்மைகளை
எல்லாம் அளிக்கவல்லவரும் இவரிடமிருந்து வேண்டியதெல்லாம் ஸ்திரமாக, உறுதியாகப்
பெறுகிறான்.
- எந்த மனிதன்
காலையில் எழுந்து கைகூப்பிக்கொண்டு ஊக்கமுடன் இந்த கீதத்தை கேட்பானோ, கேட்கச்
செய்வானோ, அவன் கர்மபந்தங்களிலிருந்து, உலக கட்டுக்களிலிருந்து விடுபடுகிறான்
- அரசகுமாரர்களே!
என்னால் கூறப்பட்ட இந்த பரம புருஷனான பகவானுடைய துதியை மன ஒருமையுடன்
ஜபித்துக் கொண்டு சிறந்த தவம் புரியுங்கள் அதன் மூலம் முடிவில் மன
விருப்பத்தை அடைவீர்கள்.
ஓம் தத்
ஸத்