அத்தியாயம்-20
சத்ஸங்கத்தின் மகிமை, தேவை
ஸ்வாமி குருபரானந்தாவின்
உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது-24-02-2022
முகவுரை
சத்ஸங்கத்தின்
மகிமையையும், தேவையையும் இந்த அத்தியாயத்தில் பகவான் விளக்கிருக்கிறார். சத்ஸங்கம்
நம் லட்சியத்தை அடைவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஸ்ரீபகவான் உவாச
மல்லக்ஷணமிமம்காயம்
லப்3த்4வா மத்3த4ர்ம ஆஸ்தி2த: |
ஆனந்தம்
பரமாத்மானமாத்மஸ்த2ம் ஸமுபைதி மாம் || 1 |
மல்லக்ஷணம் இமம் காயம்
– இந்த மனித உடல் என்னை அடைவதற்கு உதவியாகவும், சாதனமாகவும் இருக்கக்கூடியது.
மத்3 த4ர்ம ஆஸ்தி2தஹ –
என்னை அடைவதற்கான சாதனத்தில் ஈடுபட்டுக்கொண்டு, (தர்மம் என்ற சொல்லுக்கு பகவானை
அடைவதற்கான சாதனங்கள் என்று பொருட்கொள்ள வேண்டும்.)
மாம் ஸமுபைதி- என்னை
முழுமையாக அடைகின்றான், என்னிடமிருந்து வேறுபடாதவனாக, நானாகவே உயர்வடைகிறான்.
ஆனந்தம் பரமாத்மானம்
ஆத்மஸ்த2ம் லப்த்வா – ஆத்ம ஸ்வரூபமாக இருக்கின்ற அந்த பரமாத்மாவை அடைந்து ஆனந்தமாக
இருக்கின்றான்.
ஆனந்த ஸ்வரூபமாக உள்ள
பரமாத்மாவாக இருக்கின்ற ஆத்மாவை, என்னை அடைகின்றான்.
கு3ணமய்யா ஜீவயோன்யா
விமுக்தோ ஞானநிஷ்ட2யா |
கு3ணேஷு மாயாமாத்ரேஷு
த்3ருஶ்யமானேஷ்வ வஸ்துத: || 2 || ***
குணமய்யா ஜீவயோன்யா –
ஜீவனுக்கு உபாதியாக உள்ள ஸ்தூல உடல் குணங்களால் தூண்டப்பட்டு செய்த செயல்களின் விளைவாக
கிடைத்தது. இந்த மனித உடலின் துணைக் கொண்டு
ஞான நிஷ்டயா –
ஞானயோகம் என்கின்ற சாதனத்தின் மூலம், ஞானத்தை அடைவதற்கு தன்னை ஈடுபடுத்திக்
கொண்டவன்
விமுக்தஹ –
இதிலிருந்து விடுதலையடைகின்றான். சரீரத்தின் மீது அபிமானம் இல்லாமல் இருப்பான்.
சரீர நிமித்தமான சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து விடுவான்.
குணேஷு – மூன்று
சரீரங்களுக்குள்
மாயா மாத்ரேஷு –
மாயையாக, பொய்யாக மட்டும்
அவஸ்துத – பொய்யாக
திருஷ்யமானேஷ்வ – நாம்
அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, பார்த்துக் கொண்டு இருக்கும்போது
வர்த்தமானஹ அபி புமான்
– இவைகளோடு அவன் இருந்து கொண்டிருந்தாலும் கூட
ந யுஜ்யதே – அவன்
சம்பந்தப்படுவதில்லை
அவஸ்துபிஹி குணைஹி –
சரீரத்தினுடைய தன்மைகளால், பொய்யான தன்மையால் மனம் பாதிக்கப்படுவதில்லை.
ஸங்க3ம் ந
குர்யாத3ஸதாம் ஶிஶ்னோத3ரத்ருதாம் க்வசித் |
தஸ்யானுக3ஸ்தமஸ்யந்தே4
பதத்யந்தா4னுகா3ந்த4வத் || 3 ||
ஸங்கம் ந
குர்யாத்ஸதாம் – அஸத் புருஷர்களிடத்தில் சங்கம் வைக்கக்கூடாது. அதர்மமாக வாழும்
தீயவர்கள் கூட்டத்தோடு சேரக்கூடாது. ஸத் புருஷர்களான சாதுக்கள் கூட்டத்தோடு இருக்க
வேண்டும். காம்ய கர்மத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர்களுடைய உறவு வைக்கக்கூடாது.
கர்மத்தால் பலனை அடையும் வழியில் இருப்பவர்களை அஸத் புருஷர்கள் என்று
அழைக்கப்படுகிறார்கள்
ஶிஶ்ன உதர த்ருதாம்
– சுவையான உணவை உட்கொண்டாலும், உடலை நன்கு அலங்கார படுத்திக்கொண்டாலும் அவைகளில் திருப்தி
அடையாதவர்களே அஸத் புருஷர்களை பின்பற்றுவார்கள், அடர்ந்த இருளான அறியாமையில்,
மோகத்தில் விழுந்து விடுகின்றார்கள்.
பார்வையற்றவனை பார்வையற்றவன் பின்பற்றுவது போல இது இருக்கின்றது.
ஐல: ஸம்ராடிமாம்
கா3தா2மகா3யத ப்3ருஹச்ச்2ரவா: |
உர்வஶீவிரஹான்முஹயான்னிர்விண்ண:
ஶோகஸம்யமே || 4 ||
முன்னொரு காலத்தில் புகழ்
பெற்ற ப்ருரவாஸ் என்கின்ற மகாராஜா என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தான் வாழ்ந்த
வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். சோகத்தின் முடிவில் வைராக்கியத்தை இவர் அடைந்தார்.
வைராக்கியத்தை அடைந்தவராக இருந்த போது அவர் பேசியதை பகவான் கூறுகிறார், ஒருநாள் அவனுடன் வாழ்ந்து கொண்டு வந்த ஊர்வசியானவள்
அவனை விட்டு நீங்கி விடுகின்றாள். அவரிடம் உள்ள புண்ணியங்கள் தீர்ந்தவுடன் இந்த
நிலை அவருக்கு ஏற்பட்டது.
த்யக்த்வத்மானம்
வ்ரயந்தீம் தாம் நக்ன உமத்தவன் ந்ருப: |
விலபன்ன்ன்வகா3ஜ்ஜாயே
கோ4ரே திஷ்டே2தி விக்லவ: || 5 ||
ஊர்வசி தன்னை விட்டு
சென்றபோது, ஒரு பைத்தியத்தின் மனநிலையை அடைந்தது மட்டுமல்லாமல், துயரத்துடனே அவளை பின்
தொடர்ந்து சென்றார். அன்பிற்குரியவளே! என்னை துன்புறுத்தும் அரக்கியே! என்று
அழைத்துக் கொண்டே பின்னால் சென்றார்.
காமானத்ருப்தோऽனுஜுஷன்க்ஷுல்லகான்வர்ஷயாமினீ:
|
ந வேத3
யாந்தீர்னாயாந்தீருர்வஶ்யாக்ருஷ்டசேதன: || 6 ||
சிற்றின்பங்களை
அனுபவித்துக் கொண்டிருந்தாலும், நிறையாத மனதை உடையவராக இருந்தார். இரவும் பகலும் பலவருடங்களாக வந்து போவதையும்
அறியாமல் ஊர்வசியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு போகத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தார். ஊர்வசியினிடத்து அனுபவிக்கும் இன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்.
ஐல உவாச
அஹோ மே மோஹவிஸ்தார:
காமகஶ்மலசேதஸ: |
தே3வ்யா
க்3ருஹீதகண்ட2ஸ்ய நாயு:க2ண்டா3 இமே ஸ்ம்ருதா: || 7 ||
புரூருவஸ் கூறினார்.
அய்யகோ! காமத்தால்
கலங்கிய மனதையுடைய என்னுடைய மோகத்தின் பெருக்கு இத்தன்மையானதென்று சொல்லமுடியாததாக
இருக்கிறது. ஊர்வசியால் தழுவப்பட்ட கழுத்தை உடைய என்னுடைய இந்த இரவு பகலென்ற
ஆயுட்காலம் என்னால் உணரப்படவில்லையே
நாஹம்
வேதா3பி4நிர்முக்த: ஸூர்யோ வாப்4யுதி3தோऽமுயா
|
மூஷிதோ வர்ஷபூகா3னாம்
ப3தாஹானி க3தான்யுத || 8 ||
அதுவுமல்லாமல் இவளால்
ஏமற்றப்பட்ட நான் பல வருடங்களின் நாட்கள் சென்றதையாவது, சூரியன் உதித்ததையாவது,
மறைந்ததையாவது அறியவில்லையே! என்ன கஷ்டம்!
அஹோ மே ஆத்மஸம்மோஹோ
யேனாத்மா யோஷிதாம் க்ருத: |
க்ரீடா3ம்ருக3ஶ்சக்ரவர்தீ
நரதே3வஶிகா2மணி: || 9 ||
எந்த மோகத்தால்
அரசர்களுக்குள் சிறந்தவனும், சக்கரவர்த்தியுமான நான் பெண்களுக்கு விளையாட்டுக்
கருவியாகச் மாறிவிட்டேனோ, அந்த என்னுடைய மனதிலுண்டான மோகமானது ஆச்சரியமானது.
ஸபரிச்ச2த3மாத்மானம்
ஹித்வா த்ருணமிவெஶ்வரம் |
யாந்தீ ஸ்த்ரியம்
சான்வக3மம் நக்3ன உன்மத்தவத்ருத3ன் || 10 ||
ராஜ்ஜியம்
முதலியவற்றுடன் கூடினவனும் சக்கரவர்த்தியுமான என்னை ஒரு புல்லைப் போல விட்டுவிட்டு
போகின்ற பெண்ணை பித்தன் போல இடுப்பில் ஆடை அவிழ்ந்த்தைக் கூட அறியாதவனாய்
அழுதுகொண்டே பின்தொடர்ந்து சென்றேனே!
குதஸ்தஸ்யானுபா4வ:
ஸ்யாதேஜ ஈஶத்வமேவ வா |
யோ ன்வக3ச்ச2ம்
ஸ்த்ரியம் யாந்தீம் க2ரவத்பாத3தாடி3த: || 11 ||
பெண்கழுதையால்
பின்கால்களினால் உதைக்கப்பட்ட ஆண்கழுதைப் போல ஓடிப்போகிற ஒரு பெண்ணை எந்த நான் பின்தொடர்ந்தேனோ
அந்த எனக்கு பெருந்தன்மையும் பலமும், ஐஸ்வரியமும் எங்கிருந்து உண்டாகும்?
கிம் வித்3யயா கிம்
தபஸா கிம் த்யாகே3ன ஶ்ருதேன வா |
கிம் விவிக்தேன மௌனேன
ஸ்த்ரீபி4ர்யஸ்ய மனோ ஹ்ருதம் || 12 ||
எவனுடைய மனம்
பெண்களால் கவரப்பட்டதோ அவனுக்கு கற்ற கல்வியால் என்ன பயன் செய்த தவத்தினால் என்ன
பலன்? சாஸ்திர அறிவினால் என்ன பலன்? ஏகாந்த சேவையினால் என்ன பலன்? மௌனமாக
இருந்தாலும் என்ன பலன்?
ஸ்வார்த2ஸ்யாகோவித3ம்
தி4ங்மாம் மூர்கே2ம் பண்டி3தமானினம் |
யோऽஹமீஶ்வரதாம்
ப்ராப்ய ஸ்த்ரீபி4ர்கோ3க2ரவஜ்ஜித: || 13 ||
சக்கரவர்த்தியாக
இருந்தும் கூட காளைமாடு போலவும், ஆண்கழுதை போலவும் பெண்களால் ஜெயிக்கப்பட்டேனோ
என்னை அந்த பயனை அறியாதவனும், மூடனுமாக இருக்கின்றேன் ஆனால் பண்டிதன் என்று
நினைத்துக் கொண்டிருக்கின்ற என்னை கொல்ல வேண்டும்.
ஸேவதோ வர்ஷபூகா3ன்மே
உர்வஶ்யா அத4ராஸவம் |
ந த்ருப்யத்யாத்மபூ4:
காமோ வஹினராஹுதிபி4ர்யதா2 || 14 ||
ஊர்வசியின் அதரமாகிற
மதுவை பல ஆண்டுகள் அருந்திக் கொண்டிருந்த என்னுடைய மனதில் திரும்பதிரும்ப
உண்டாகிக் கொண்டிருந்த காமமானது யாக குண்டத்தில் போடப்பட்ட ஆகுதிகளால்
கொழுந்துவிட்டு எரிகின்ற அக்னிபோல திருப்தி அடையவில்லை.
பும்ஶ்சல்யாபஹ்ருதம்
சித்தம் கோன்வன்யோ மோசிதும் ப்ரபு4: |
ஆத்மாராமேஶ்வரம்ருதே
ப4க3வந்தமதோ4க்ஷஜம் || 15 ||
ஆத்மாவிலேயே
ரமிக்கின்ற யோகிகளுக்கும் ஈஸ்வரனும், இந்திரிய ஞானத்திற்கு விஷயமில்லாதவருமான
பகவானைத் தவிர வேறு யார்தான் விபசாரியால் கவரப்பட்ட மனதை விடுவிக்க முடியும்?
போ3தி4தஸ்யாபி தே3வ்யா
மே ஸூக்தவாக்யேன து3ர்மதே: |
மனோக3தோ மஹாமோஹோ
நாபயாத்யதிதாத்மன: || 16 ||
ஊர்வசியின்
அறிவுரையால் அறிவு ஊட்டபட்டவனாக இருந்தும் கூட மனதை வெற்றி கொள்ளாதவனும், அதனால்
துர்புத்தி உடையவனுமான என்னுடைய மனதில் இருக்கும் மோகமானது விலகவில்லை
கிமேதயா நோ பக்ருதம்
ரஜ்ஜ்வா வா ஸர்பசேதஸ: |
த்ரஷ்டு:
ஸ்வரூபாவிது3ஷோ யோऽஹம் யத3ஜிதேந்த்ரிய: || 17 ||
கயிற்றின் ஸ்வரூபத்தை
அறியாதவனும், அதில் பாம்பு என்று எண்ணிக்கொண்டு இருக்கும் ஒருவனுக்கு கயிற்றால் உதவி
செய்ய முடியாதோ அதேபோல இவளால் காமியான நமக்கு என்ன அபகாரம் செய்யப்பட்டது?
ஏனென்றால் இப்படி இருக்கும் நான்தான் புலன்களை வெற்றி கொள்ளாததால் தண்டனைக்குரியவன்
க்வாயம் மலீமஸ: காயோ
தௌர்க3ந்த்4யாத்3யாத்மகோ ஶுசி: |
க்வ கு3ணா:
ஸௌமனஸ்யாத்3யா ஹயத்4யாஸோऽவித்3ய யா க்ருத: || 18 ||
மிகவும் அழுக்கடைந்ததும்,
துர்நாற்றம் முதலியவற்றையே ஸ்வரூபமாக உடையதும், அசுத்தமானதுமான இந்த உடல் எங்கே
மலர்களிலிருந்து வீசுகின்ற நறுமணம், மென்மை முதலிய குணங்கள் எங்கே? இது அறியாமையினால் செய்யப்பட்ட அத்யாஸமல்லவா?
பித்ரோ: கிம் ஸ்வம் நு
பா4யாயா: ஸ்வாமினோऽக்3னே: ஶ்வக்3ருத்4ரயோ: |
கிமாத்மன: கிம்
ஸுஹ்ருதா3மிதி யோ நாவஸீயதே || 19 ||
தஸ்மின்கலேவரே மேத்4யே
துச்ச2நிஷ்டே2 விஷஜ்ஜதே |
அஹோ ஸுப4த்3ரம் ஸுனஸம்
ஸுஸ்மிதம் ச முக2ம் ஸ்த்ரிய: || 20 ||
இந்த சரீரமானது உண்டு
பண்ணப்படுவதனால் அது தாய், தந்தைக்கு சொந்தமானதா?
அல்லது சுகத்தைக் கொடுப்பதால் மனைவிக்கு சொந்தமானதா அந்திம் காலத்தில்
ஹோமம் செய்யப்படுவதனால் அக்னிக்கு சொந்தமானதா? ஆகாரமாக பவிப்பதால் நாய்க்கும்,
கழுகுக்கும் சொந்தமானதா? சரீரம் செய்த பாவ,புண்ணியங்களை அனுபவிப்பதால்
ஜீவாத்மாவுக்கு சொந்தமானதா? உபகாரம் செய்வதால் நண்பர்களுக்கு சொந்தமானதா? என்று
தீர்மானிக்கப்படவில்லையோ, மேலும் மிக அசுத்தமானதும், கிருமியாகவோ, அமேத்தியமாகவோ,
சாம்பலாகவோ, முடிவடைகின்றதும், பிரியமாக ஸ்வீகரிக்கப்பட்டதுமான அந்த சரீரத்தில்
பெண்ணின் முகம் அழகாகவும், நல்ல மூக்குள்ளதாகவும், நல்ல சிரிப்புள்ளதாகவும்
இருக்கின்றது என்று அதில் பற்றுதலடைகின்றன.
த்வங்மாம்ஸரூதி4ரஸ்னாயு
மேதோ3மஜ்ஜஸ்தி2ஸம்ஹதௌ |
விண்மூத்ரபூயே ரமதாம்
க்ருமீணாம் கியத3ந்தரம் || 21 ||
தோல், மாமிசம்,
ரத்தம், நரம்புகள், மாமிசக்கொழுப்பு இவைகளின் கூட்டமாகிற சரீரத்தில் ரமிக்கின்ற
மனிதர்களுக்கு மலம்,மூத்திரம், ரத்தம் இவைகளில் ரமிக்கின்ற புழுக்களுக்கும் என்ன
வேற்றுமை
அத2பி நோபஸஜ்ஜேத
ஸ்த்ரீஷு ஸ்த்ரைணேஷு சார்த2வித் |
விஷயேந்த்3ரியஸம்யோகா3ன்மன:
க்ஷுப்4யதி நான்யதா2 || 22 ||
விஷயங்களுடையவும்,
புலன்களின் சேர்க்கையால்தான் மனமானது கலக்கம் அடைகின்றது. இல்லாவிடில் கலங்குவதில்லை. ஆகையால் விவேகியானவன் பெண்களிடத்திலும்,
பெண்களிடத்தில் நட்புடையவர்களிடத்திலும் ஒருபொழுதும் சேரக் கூடாது.
அத்3ருஷ்டாஶ்ருதாத்3பா4வான்ன
பா4வ உபஜாயதே |
அஸம்ப்ரயுஞ்ஜத:
ப்ராணான்ஶாம்யதி ஸ்திமிதம் மன: || 23 ||
முன்
பார்க்கப்படாததும், கேட்கப்படாததுமான பதார்த்தத்திலிருந்து மனக்கலக்கமானது உண்டாவதில்லை. இந்திரியங்களை விஷயங்களை அனுபவிக்க செய்யாதவனுடைய
மனமானது அசைவற்றதாக ஒடுங்கியிருக்கிறது
தஸ்மாத்ஸங்கோ3 ந
கர்தவ்ய: ஸ்த்ரீஷு ஸ்த்ரைணேஷு சேந்த்3ரியை: |
விது3ஷாம் சாப்யவிஸ்ரப்3த4:
ஷட்வர்க3: கிமு மாத்3ருஶாம் || 24 ||
காமம், குரோதம் முதலிய
ஆறு தீய குணங்களானது விவேகிகளுக்கும் கூட நம்பத்தக்கதன்று. அப்படியிருக்க
என்போன்றவர்கள் விஷயத்தில் சொல்லவும் வேண்டுமோ?
ஆகையால் பெண்களிடத்திலும், பெண்களிடத்தில் நட்புடையவர்கள் இடத்திலும்
புலன்களைக் கொண்டு உறவு கொள்ளக் கூடாது.
ஶ்ரீப4கவானுவாச
ஏவம்
ப்ரகா3யந்ந்ருபதே3வதேவ: ஸ ஊர்வஶீலோகமதோ2 விஹாய |
ஆத்மானமாத்மன்யவக3ம்ய
மாம் வை உபாரமஜ்ஞானவிதூ4தமோஹ: || 26 ||
ஸ்ரீபகவான்
கூறுகிறார்.
இறுதியில் ஞானத்தினால்
மோகத்திலிருந்து விடுதலை அடைந்தார். இவ்விதம் புலம்பிய இந்த ராஜா,
தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கிக் கொண்டிருந்த நிலையில் ஊர்வசியையும்,
உலகத்தையும் மனதிலிருந்து விலக்கி விட்டார்.
அவர் வைராக்கியத்தை அடைந்து அதன் பிறகு மோட்சத்தை அடைந்தார். ஞானத்தினால்
மோகத்தை விலக்கியவராக முழுமனநிறைவை அடைந்தார்.
ததோ
து3:ஸங்க3முத்ஸ்ருஜ்ய ஸத்ஸு ஸஜ்ஜேத பு3த்3தி4மான் |
ஸந்த ஏவாஸ்ய
சி2ந்தந்தி மனொவ்யாஸங்க3முக்திபி4: || 26 ||
ஸத் புருஷர்களான
தர்மவான்கள், நற்பண்புகளை உடையவர்கள், நல்ல தவங்களை செய்து கொண்டிருப்பவர்கள்,
ஞானத்துடன் கூடியவர்கள் இத்தகையவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதனால் அவர்களிடம்
உள்ள நற்குணங்கள் நமக்கும் வந்துவிடும். நல்ல புத்தகங்கள்கூட நமக்கு நற்குணங்கள்
வளர்த்துக் கொள்ள உதவும். சத்ஸங்கம்
சாதன-சதுஷ்டயத்தை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். துஷ் சங்கத்திலிருந்து
நம்மைக் காப்பாற்றும். நமக்கு சமமானவர்களோடு சேர்ந்திருந்தால் ஒருவருக்கொருவர்
உதவி செய்து கொள்ள முடியும். ஆகவே துஷ்சங்கத்தை விட்டுவிட்டு அறிவுடையவர்களோடு தன்னை
இணைத்துக் கொள்ள வேண்டும்.
உக்திபிஹி – ஸத் புருஷர்களின்
உபதேச சொற்கள்
மனோ வ்யாஸங்கம் –
மனதிலுள்ள தவறான எண்ணங்களை
சி2ந்த3ந்தி –
நீக்குவதற்கு, அழிப்பதற்கு உதவுபுரியும்.
ஸந்தோ னபேக்ஷா
மச்சித்தா: ப்ரஶாந்தா: ஸமத3ர்ஶின: |
நிர்மமா நிரஹங்காரா
நிர்த்3வந்த்3வா நிஷ்பரிக்3ரஹா: || 27 ||
ஸந்தஹ – ஸத்
புருஷர்கள் என்பவர்கள்
அனபேக்ஷா – மனதளவில்
யாரையும் சார்ந்திருக்காதவர்கள்
மத் சித்தாஹா –
என்னிடத்தில் மனதை செலுத்தியவர்கள், பக்தி கொண்டவர்கள்
ப்ரஶாந்தாஹா –
அமைதியான மனதை உடையவர்கள்
ஸமதர்ஶினஹ – சமநோக்கு
உடையவர்கள், வேற்றுமைகளுக்குள் பொதுத்தன்மையை பார்ப்பவர்கள்.
நிர்மமாஹா –
தன்னிடத்திலுள்ள பெருமைகள் அனைத்தும் ஈஸ்வரனுடையது என்ற அறிவுள்ளவன், ஆனால் தன்னுடையது
என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்
நிரஹங்காரா –
அக்ஞானியுடன் உள்ள உத்தமன் தன்னுடைய அகங்காரத்தை இறைவனிடன் சரணடைய வைத்திருப்பான்.
ஞானியோ நான் சாட்சியாக மட்டும் இருக்கின்றேன் என்றிருப்பான்
நிர்த்3வந்த்வாஹா –
இருமைகளை ஒன்றாக பாவிப்பவன்.
இன்ப-துன்பம், குளிர்-வெப்பம் போன்ற இருமைகளில் ஒரே நிலையில் இருப்பவன்.
இரண்டு எதிர்மறையான அனுபவங்களையும் சமமாக நோக்குபவன்
நிஷ்பரிக்3ரஹா – எந்த
உறவும், எந்த உடைமையும் இல்லாதவன், எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ளாதவன். தேவைக்கு
மேல் எதையும் வைத்துக் கொள்ளாதவன்
தேஷு நித்யம் மஹாபா4க3
மஹாபா4கே3ஷு மத்கதா2: |
ஸம்ப4வந்தி ஹி தா
ந்ரூணாம் ஜுஷதாம் ப்ரபுனந்த்யக4ம் || 28 ||
மஹாபா4க3 – உத்தவா!
பாக்கியசாலியே! உத்தமனே! சத்புருஷனே!
தேஷு மஹாபாகேஷு – அந்த
ஸத்புருஷர்களிடத்தில்
நித்யம் –எப்பொழுதும்
மத் கதா2ஹா ஸம்ப4வ –
என்னைப்பற்றிய விசாரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். பகவானைப்பற்றிய விஷயங்களையே
பேசிக்கொண்டிருப்பார்கள்
ஹி – உண்மையில்
தாஹா – அந்தமாதிரியான
பேச்சுக்கள், விசாரங்கள்
ஜுஷதாம் – பக்தர்களான
ந்ருணாம் – மனிதர்களின்
ப்ரபுனந்த்யக4ம் –
பாவத்தை நீக்கி அவர்களை புனிதப்படுத்தும்.
தா யே ஶ்ருண்வந்தி
கா3யந்தி ஹயனுமோத3ந்தி சாத்3ருதா: |
மத்பரா:
ஶ்ரத்33தா4னஶ்ச ப4க்திம் விந்தந்தி தே மயி || 29 ||
தா: – பகவானைப்
பற்றிய விசாரங்கள், தத்துவங்கள், புராணங்கள் இவைகளை
யே – எவர்கள்
ஶ்ருண்வந்தி –
கேட்பதிலும்
கா3யந்தி – இறைவனின்
புகழை, நாமத்தை பாடுவது, ஸ்லோகங்கள், ஸ்தோத்திரம் இவைகளை சொல்வது இவைகளை
ஹி அனுமோதந்தி – ஆழ்
மனதில் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்
ச ஆத்ருதா: - மேலும்
பகவான் மீது அன்பையும், நம்பிக்கையையும், மரியாதையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
மத் பராஹா – என்னை அடைவதேயே
இறுதி லட்சியமாக, பரம் புருஷார்த்தமாக வைக்க வேண்டும்.
ஶ்ரத்தானாஶ்ச – குரு,
சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும், குரு உபதேசத்திலும், சாஸ்திர
வாக்கியத்திலும், உபதேசத்திலும் நம்பிக்கை கொண்டவனாகவும் இருக்கின்ற
பக்திம் விந்தந்தி தே
மயி – அவர்கள் என்னிடத்தில் பக்தியை அடைகின்றார்கள், அன்பு கொண்டவர்களாக
உயர்வடைவார்கள்
ப4க்திம் லப்3த4வத: ஸாதோ4:
கிமன்யத3வஶிஷ்யதே |
மய்யனந்தகு3ணே
ப்ரஹ்மண்யானந்தா3னுப4வாத்மனி || 30 ||
இந்த அளவுக்கு பக்தியை
அடைந்தவனுக்கு வேறெதுவும் அடைய தேவையில்லை. இந்த உலகத்திலிருக்கும் எதற்கும்
பயப்பட தேவையில்லை. இவன் மோகத்தின்
வசப்பட்டிருக்க மாட்டான்.
பக்திம் லப்தவதஹ ஸாது –
பக்தியை அடைந்த அந்த சாதகனுக்கு
கிம் அன்யத் அவஶிஷ்யதஹ
– வேறென்ன அடைவதற்கு இருக்கின்றது?
மயி அனந்த குணே –
விஶ்வரூபமான எல்லையற்ற குணங்களை உடைய
பிரஹ்மண – பிரம்மனாக
என்னை
ஆனந்த அனுபவ ஆத்மனி –
ஆனந்த, சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற நிருகுணத்தை அடைகின்றான்.
யதோ2பஶ்ரயாமாணஸ்ய
ப4க3வந்தம் விபா4வஸும் |
ஶீதம் ப4யம் தமோऽப்யேதி
ஸாதூ4ன்ஸம்ஸேவதஸ்ததா2 || 31 ||
யதா - எப்பொழுது
ப4க3வந்தம் விபாவஸும் –
அக்னிதேவன்
உபாஶ்ரயமாணஸ்ய –துணையை
நாடும்போது
ஶீதம், பயம தமஹ –
குளிர், பயம், இருள் இவைகள்
அப்யேதி –
நீங்குகின்றது
ததா – அதுபோல
ஸாது ஸம்ஸேவ –
ஸத்புருஷர்களோடு நட்புறவு கொள்ளும்போது அறியாமையும், பயமும், சம்சார பயங்களும்
நீங்கிவிடும்
ஜாட்யம் –
மந்தபுத்தியையும் நீக்கி உற்சாகத்தை கொடுக்கும்
நிமஜ்ஜ்யோன்மஜ்ஜதாம்
கோ4ரே ப4வாப்3தௌ4 பரமாயணம் |
ஸந்தோ ப்3ரஹ்மவித3:
ஶாந்தா னௌர்த்3ருடே4வாப்ஸு மஜ்ஜதாம் || 32 ||
அப்ஶு – நீரில்
மஜ்ஜதாம் – மூழ்கிக்
கொண்டிருப்பவனுக்கு
த்3ருடா4 நௌ இவ –
உறுதியான படகு போல
கோ3ரே ப4வ அப்தௌ4 –
கடினமான சம்சார கடலில்
நிமஜ்ஜியோன்மஜ்ஜதாம் –
மூழ்கி கொண்டிருப்பவனுக்கு
ப்3ரஹ்மவித3ஹ –
பிரம்மத்தை அறிந்தவர்கள்
ஶாந்தஹ – மன அமைதியை
அடைந்தவர்கள்
ஸந்தஹ – இத்தகைய ஸத்
புருஷர்கள்
பரமாயணம் – உதவியாக
இருப்பார்கள்
அன்னம் ஹி ப்ராணினாம்
ப்ராண ஆர்தானாம் ஶரணம் த்வஹம் |
த4ர்மோ வித்தம்
ந்ருணாம் ப்ரேத்ய ஸந்தோऽர்வாக்3பி4ப்4யதோऽரணம் || 33 ||
அன்னம் ஹி ப்ராணினாம்
ப்ராண – ஜீவராசிகளுக்கு பிராணனாக இருப்பது உணவு
ஆர்தானாம் ஶரணம்
த்வஹம் – துயரத்தில் இருப்பவனுக்கு ஈஸ்வரனாகிய நானே புகலிடமாக இருக்கிறேன். துயரத்தில்
இருப்பவர்கள் என்னை சரணடைகிறார்கள்.
தர்மோ வித்தம்
ந்ருணாம் ப்ரேத்ய – மனிதர்கள் இறந்தபிறகும் இருக்கும் செல்வம், தர்மத்தினால்
அடைந்த புண்ணியங்கள்
ஸந்தஹ –
ஸத்புருஷர்களுடனான உறவு
அர்வாக்3 – ஆன்மீக
வீழ்ச்சி அடைவோம் என்று
பி3ப்4யதஹ – பயந்து
கொண்டிருப்பவனை
அரணம் -
பாதுகாப்பார்கள்
ஸந்தோ தி3ஶந்தி சக்ஷூம்ஸி
ப3ஹிரர்: ஸமுத்தி2த: |
தெ3வதா பாந்த்4வா: ஸந்த:
ஸந்த: ஆத்மாஹமேவ ச || 34 ||
பஹி அர்க: சக்ஷூம்ஸி –
உதித்த சூரியன் வெளிக்கண்ணை திறந்துவிடுகிறது
ஸந்தோ திஶந்தி –
ஸத்புருஷர்கள் அகக்கண்ணை திறந்து விடுவார்கள்
ஸந்தா தேவதா – ஸத்
புருஷர்கள்தான் தேவதைகளாக இருப்பார்கள்
ஸந்தஹ பா3ந்த்4வா: - இவர்களே
உண்மையான உறவினர்கள்
ஸந்தஹ ஆத்மா அஹமேவ ச –
ஸத்புருஷர்களாக நானேதான் இருப்பேன்
வைதஸெனஸ்ததோ ப்யேவமுர்வஶ்யா
லோகநிஷ்ப்ருஹ: |
முக்தஸங்கோ3 மஹீமேதாமாத்மாராமஶ்ச்சார
ஹ || 35
இவ்விதம் சிந்தித்து
ஊர்வசி லோகத்தில் வைராக்கியத்தை அடைந்து முற்றிலும் பற்றை விட்டவராக இந்த பூமியில்
வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னிடத்திலே மகிழ்ந்து கொண்டிருப்பவராக சஞ்சரித்துக்
கொண்டிருந்தார். ஒரு முக்தனாக, ஞானியாக
வாழ்ந்து கொண்டிருந்தார்
ஓம்
தத் ஸத்