Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-07. Show all posts
Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-07. Show all posts

Thursday, November 16, 2017

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-7

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-7
அத்யாயம்-4
இந்த அத்தியாயம் ஆறு பகுதிகளைக் கொண்டதுமுதல் பகுதியில் உபாஸனையைப் பற்றியும், சில பண்புகளும் விளக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐந்து பகுதிகளும் பிரம்ம வித்யாவை போதிக்கிறது.
 
இதில் ஜனகர் என்கின்ற பேரரசர் ஞானத்தை பெறுவதற்கு தகுதியை அடைந்துள்ளவர், யாக்ஞவல்கியரிடமிருந்து பிரம்ம ஞானத்தை பெறுவதாக அமைந்துள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-1 : ஷடாச்சார்ய பிராமனம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்லோகம்-1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்அப்போது யாக்ஞவல்கியர் அந்த அரசவைக்கு வந்தார்ஜனகர் அவரை வரவேற்று எது உங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது? பசுக்களை தானம் பெற வந்தீர்களா அல்லது சூட்சுமமான விஷயங்களை விசாரம் செய்வதற்கா!! என்று கேட்டார்அவர் அதற்கு இரண்டுக்குமேதான் என்று பதிலளித்தார்.
 
ஸ்லோகம்-2
எதை மற்ற ஆசிரியர்களிடமிருந்து உபதேசமாக பெற்றீர்களோ அதை எனக்கு கூறுவாயாக என்று யாக்ஞவல்கியர் கேட்டார்ஜனகர் கூறலானார்ஜித்வான் என்ற ஆசிரியரிடமிருந்து கற்றவை, எப்படி வாக் (அக்னி) தேவதையை உபாஸனை செய்ய வேண்டும். இதைக் கேட்ட யாக்ஞவல்கியர், “நம்மை சுத்தப்படுத்தும் மூன்று விதமான ஆதாரங்களான தாய், தந்தை, குரு உடையவர்களிடமிருந்து வரும் உபதேசங்கள் பிரமானத்திற்கு முரணாக இருக்காது, உண்மையானதாக இருக்கும்.
 

மாத்ருமான் (தாய்) – இவரிடமிருந்து பெற வேண்டிய அன்பை முழுமையாக பெற்றவர்கள்.

தாயிடத்தில் அடையும் தூய்மைஅபிநிவேஷம்பிறந்த குழந்தைக்கு அன்பும், ஆதரவையும் கொடுத்து அரவணைத்து வளர்க்க வேண்டும். இதன் மூலம் உடல்பலத்தையும் மன பலத்தையும் பெறுவோம்இவ்வாறு வளர்ந்த குழந்தைகளால்தான் அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். குழந்தைகள் தாயை தெய்வமாக பாவிக்கும், அவள்தான் எல்லாமே என்று நினைக்கும்.

 

பித்ருமான் (தந்தை) – இவரிடமிருந்து பெற வேண்டிய பலனை அடைந்தவர்கள், இவர் குழந்தையை கல்வி கற்க ஆசிரியரிடம் அறிமுகப்படுத்துகிறார். நல்லொழுக்கமும், பண்பும் வளர்வதற்கு உதவி புரிபவர்.
 
ஆசார்யவான் (குரு) – ஆசாரியடமிருந்து பெற வேண்டிய அறிவையும், பண்பையும் முழுமையாக பெற்றவர்கள். இவர் விதவிதமான சாஸ்திரங்களை அறிந்தவர், நம்மை ஆசாரத்தில்(ஒழுக்கத்தில்) நிலை நிறுத்துபவர் தானும் அதுபோல் வாழ்ந்து வருபவர்.
 
இவ்வாறு இந்த மூன்று பேர்களிடமிருந்து அடைய வேண்டியதை முழுமையாக அடைய பெற்றவர்களின் உபதேசங்கள்தான் முழு பலனை தரும்.
*         நாம் எதை அனுபவித்திருக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.
*         நமக்கு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுக்கும் உரிமையிருக்கிறது
*         ஈஸ்வரனிடமிருந்து இதுவரை நமக்கு கிடைக்காததையெல்லாம் பெறலாம்.
 
ஜனகர் மேலும் அவர் பெற்ற வாக் உபதேசத்தை விவரித்தார்வாக் என்ற தத்துவத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும்அக்னியை பிரம்மமாக தியானிக்க வேண்டும் என்று அந்த குருவிடம் உபதேசம் பெற்றேன்யாக்ஞவல்கியர் இதை அங்கீகரித்தார்வாக்கைப் பற்றி இவ்வளவுதான் கூறினாராவாக் எங்கே தங்கியிருக்கிறது (ஆயதனம்), இதற்கு ஆதாரமாக இருப்பது எது? இவைகளையெல்லாம் பற்றி கூறினாரா? என்று கேட்க, ஜனகர் இல்லை என்று பதிலளித்தார்அப்படியென்றால் நீ வாக்கைப்பற்றி நாலில் ஒரு பங்குதான் அறிந்திருக்கிறாய் இப்படி உபாஸிப்பதனால் ஒரு பயனும் கிடைக்காதுஎனவே நீ நான்கையும் சேர்த்து தியானிக்க வேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறினார்ஜனகர் மீதி மூன்றையும் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார்
 
வாக்கின் இருப்பிடம் வாக் என்ற இந்திரியம்தான், அதற்கு ஆதாரமாக இருப்பது ஆகாசம் இதை பிரக்ஞா (ஞானம், அறிவு) என்ற பெயரால் உபாஸிக்க வேண்டும். இந்த பெயர் வரக்காரணம் ஞானமானது வாக் இந்திரியத்தின் அடிப்படையில்தான் கிடைக்கிறதுநாம் யார், எவ்வளவு திறமையுடையவன் என்பது நம் பேச்சிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்வாக்கினால் அடையும் பலன்கள்:
1.   எல்லா உறவுகளையும் அடைதல்
2.   அனைத்து வேதங்களையும் அறிதல்
3.   சாஸ்திர ஞானத்தை அடைதல்
4.   இதிகாச, புராணங்களைப் பற்றிய அறிவை அடைதல்
 
இந்த வாக்கை பிரக்ஞா என்று தியானித்தால் நம்முடைய பேச்சுத் திறமை வளரும்எப்படி பேசுவது, எந்த நேரத்தில் எதை பேசுவது போன்ற நுணுக்கங்களையெல்லாம் அடையப் பெறலாம்இதனால் வாக்கானது நம்மை மீறி போகாது, நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்துயரத்தை கொண்டு வராது, பகைமையையும் ஏற்படுத்தாது. இகலோக, பரலோக பலன்களையும் அடையலாம், வாழும் போது தேவனாகவும், இறந்த பிறகு அந்த தேவதையுடன் ஒன்றாக கலந்து விடுவோம்எனவே இவன் எது சொன்னாலும் அது பலிக்கும்இதை கேட்ட ஜனகர் மகிழ்ந்து இந்த உபதேசத்தை பெற்றதற்காக உங்களுக்கு ஆயிரம் பசுக்களையும், காளைகளையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்று கூறினார்யாக்ஞவல்கியர் அதை வாங்க மறுத்து, “உபதேசத்தை முழுமையாக முடிக்காமல் எதையும் வாங்காதே என்று என் தந்தை கூறியிருக்கிறார், நானும் அதை பின்பற்றி வருகிறேன்என்று கூறினார்.
 
ஸ்லோகம்-3 லிருந்து 12 வரை
ஆசிரியர்
இருப்பிடம்
தேவதை
பெயர்

பிரதிஷ்டா

குறிப்பு

உதங்கா
பிராணன்
வாயு
பிரியம்
ஆகாசம்
பிரியமாக தியானிக்க வேண்டும்
பர்கு
கண்கள்
சூரியன்
சத்யம்
ஆகாசம்
பிரியமாக தியானிக்க வேண்டும்
பரத்வாஜ
காது
திசைகள்
அனந்தம்
ஆகாசம்
பிரியமாக தியானிக்க வேண்டும்
சத்யகாம
மனம்
சந்திரன்
ஆனந்தம்
ஆகாசம்
மனதை சந்திரனாக தியானித்தல்
ஸாகல்ய
இதயம்
பிரஜாபதி
ஸ்திதி
ஆகாசம்
இதயத்தை தியானித்தல்
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-2 : கூர்ச (कुर्च) பிராமனம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்லோகம்-1
ஜனகர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று குருவை அணுகினார் பிறகு அவரை வணங்கி  எனக்கு உபதேசம் (शाधी) செய்யுங்கள் என்று வேண்டினார். குருவானவர்ஞானத்தையும், ஞான சாதனத்தையும் கொடுக்க வேண்டும்என்ற சங்கரர் கூற்றுபடி யாக்ஞவல்கியர் தன்னை குருவாக அணுகிய ஜனகருக்கு உபதேசத்தை ஆரம்பித்தார்.

நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு தேவையான வாகனத்தை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்அதேபோல மோக்ஷத்தை அடைய வேண்டுமானால் சில சாதனங்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்ஜனகரை உத்தம சிஷ்யனாக, ஞான சாதனத்தைக் கடைபிடிக்கிறார் என்று அங்கீகரித்ததுடன், அவர் ஞான உபதேசத்திற்கு தகுதியானவர் என்றும் சொல்கிறார்நீ உபாஸனைகளை மேற்கொண்டவனாகவும், அதன் பலனாய் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு அமைதியாக இருக்கிறாய்நல்லொழுக்கத்துடனும், சித்தஸுத்தியுடையவனாகவும் இருக்கிறாய், செல்வந்தனாக இருந்தபோதிலும் இவ்வாறாக இருக்கிறாய்வேத சாஸ்திரத்தை படித்தவனாகவும் தேவதைகளை சரியானபடி உபாஸனை செய்கின்றவனாக இருக்கிறாய். இவ்வாறாக ஜனகருடைய தகுதியை அங்கீகரித்தார். இப்படிபட்ட குணங்களை உடைய நீ மரணத்திற்குப்பிறகு எங்கு செல்வாய் என்று தெரியுமா?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார்ஜனகர் தனக்கு தெரியாது என்றும், தான் எப்படிபட்டவனாக மாறுவேன் என்றும் தெரியவில்லை என்று பதில் கூறினார்அதற்கு குருவானவர்நான் அதைக் குறித்து உனக்கு உபதேசம் செய்யப்போகிறேன், நீ  எங்கு செல்வாய் என்று கூறுகிறேன். நான் கொடுக்கும் ஞானத்தால் நீ எப்படிப்பட்ட நிலையை அடைவாய் என்றும் உபதேசிக்கிறேன் என்று மேலும் கூறினார்ஜனகரும் அதைச் உபதேசியுங்கள் பகவானே என்று பணிவுடன் வேண்டினார்.

ஸ்லோகம்-2
இந்த மந்திரத்தில் விஸ்வன் அறிமுகப்படுத்தப்படுகிறான்சமஷ்டி, வியஷ்டி ஐக்கியமும் விளக்கப்படுகிறது. விராட் என்றழைக்கப்படுகின்ற வைஷ்வானரனிடமிருந்து பிரியாத விஸ்வனுக்கு இந்தஹ (इन्धः) என்று பெயர். இந்த சொல்லுக்கு  எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம்எந்தவொரு அறிவு தத்துவம் விராட் ஸ்தூல உலகங்களனைத்தும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அவனேதான் நம் வலது கண்ணில் அமர்ந்திருக்கின்றான்தேவர்களெல்லாம் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லைஇந்த உலகத்திலுள்ள சில நியதிகளையும் மறைத்து வைத்திருப்பார்கள்வைஸ்வானரன் தன்னை மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றான்இந்திரன் என்று பெயரை மாற்றி வெளிப்படுத்தி கொண்டு பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்தேவர்களெல்லாம் தன்னை பரோக்ஷமாக இருப்பதையே விரும்புகிறார்கள்தன்னை நேரிடையாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.
 
ஸ்லோகம்-3
விஸ்வன் விராட்டை அனுபவிக்கின்றான், ஜீவன் இந்த உலகத்தை அனுபவிக்கிறான் என்றால் ஈஸ்வரனையே அனுபவிக்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்தைஜஸனும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றாக எடுத்துக் கொண்டு சில கருத்துக்கல் சொல்லப்பட்டிருக்கிறது.
1.   தைஜஸனுடைய இருப்பிடம்இதயத்தினுள் இருக்கின்ற ஆகாசம்
2.   தைஜஸனுடைய உணவுநாம் உட்கொள்ளும் உணவினுடைய அதி சூட்சுமமான பகுதி
3.   தைஜஸனை மூடியிருப்பதுநமது இதயம்
4.   தைஜஸன் சஞசரிக்கின்ற இடம்ஹிதா என்று அழைக்கப்படுகின்ற நாடி,
 
இந்த நாடியானது இதயத்தின் மேல் பகுதியிலிருந்து உடம்பின் பல பகுதிகளுக்கு செல்கிறதுஇதன் விட்டம் நம் தலைமுடியின் விட்டத்தின் ஆயிரத்தில் ஒரு பங்காகும். ஜீவனை சுகமாக வைத்திருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கிறதுஅவன் நாடிக்குள் செல்லும் போது அனுபவிக்கும் உலகம் ஸம்ஸ்காரங்களை பொறுத்து அமைகிறதுஸ்தூல சரீரத்திற்கு வேறான ஒன்றை அனுபவிக்கின்றான், அதாவது தைஜஸன் ஹிரண்யகர்ப்பனை அனுபவிக்கின்றான்.

ஸ்லோகம்-4- பிராஞ்ச (प्राञ्च्) விசாரம் பிராஞ்சகாரண ஸ்வரூபம்
ஹிரண்யகர்ப்பனின் எல்லா அங்கங்களும் காரணத்தில் லயம் அடைந்துள்ளதுசூட்சும சரீர அங்கங்கள் காரணத்தில் ஒடுங்கி விடுகின்றதுஒவ்வொரு அங்கங்களும் அந்தந்த இடங்களில் ஒடுங்கி விடுகின்றதுஒவ்வொரு திசையிலும் உள்ள பிராணனாது தன்னுடைய காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றதுகிழக்கிலுள்ள பிராணனாது கிழக்கிலுள்ள காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றதுஇவ்வாறு எல்லா திசைகளிலும் உள்ள பிராணனன்களானது அந்தந்த திசைகளின் காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. இந்த மூன்று உபாதிகளும் நீக்கப்பட்டு ஸ்ருஷ்டிக்கு ஆதாரமாக இருப்பதைத்தான் நாம் ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டுமயாருமேயில்லாத நிலையில் நான் மட்டும் எஞ்சியிருப்பதுதான் ஆத்மாஇது எந்தப் பிரமானத்தின் மூலமாகவும் கிரகிக்க முடியாதுயாராலும் அழிக்க முடியாதது, என்றும் அழியாதது எதனோடும் சேர்வதுமில்லை அதேபோல எதுவும் இதனோடு சேர முடியாதது. இது எந்தவிதமான மாற்றமுமடையாதது. இவ்வாறாக உபதேசித்த பின்னர் ஜனகரை பார்த்து, அரசே நீங்கள் இப்போது பயமற்றவராக உயர்ந்து விட்டீர்கள், என்னுடைய உபதேசத்தை நன்கு புரிந்து கொண்டீர்கள், அப்படி புரிந்து கொள்ளும் போதே அபயத்தை அடைந்து விட்டீர்கள்பிரம்மத்திற்கு இன்னொரு பெயர் அபயம். நம் மனதினுடைய தர்மம் பயந்து கொண்டிருத்தல், இந்த தர்மமுமற்ற பிரம்மத்தை அடைந்து விட்டாய்பிரம்ம ஞானத்தின் பலனாக மோக்ஷத்தையும் அடைந்துள்ளாய்பயம் என்பது சம்சாரத்தின் பெரிய விஷயம். ஜனகர் குருவை பார்த்து குருவான் அபயத்தை அடைந்தேன். பகவானே உங்கள் உபதேசம் என்னை அபயத்தை அடையச் செய்துவிட்டதுஉங்களுக்கு என்னுடைய நமஸ்காரம், இதற்கு பரிசாக இந்த நாட்டையும், என்னையும் உங்களுக்கு தருகிறேன். என்று கூறினார்நாம் எதை அதிகமாக விரும்புகிறோமோ, எதை அதிகமாக மதிக்கிறோமோ அதைத்தான் பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும்குருவிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக இதைக் கூறலாம்நமக்கு பயன்படாத பொருளை பரிசாக கொடுக்க நினைப்பது நாம் பெற்ற உபதேசத்தின் பலனை அடையவில்லை என்பதை குறிக்கும்.
 
குறிப்புக்கள்:
  • பிரம்மத்தை உபதேசிப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கருணையின் காரணமாக செய்ய வேண்டும்.
  • ஞானத்தை அடைந்த பலனால் வரும் தியாகம், எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் இருப்பார்கள்.
  • ஜனகர் தம் நாட்டை தானமாகக் கொடுப்பது அவரடைந்த ஞானப்பலனை காட்டுகிறது.
  • தன்னையே கொடுத்தல் என்பது, தன் அகங்காரத்தை ஒழித்த நிலையைக் காட்டுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  பகுதி-3 : ஸ்வயம் ஜோதி (स्वयँ ज्योति)  ப்4ராமனம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகவுரை
ஆத்மா ஸ்வயம் ஜோதி என்பதுதான் மையக் கருத்துஜோதி என்பது சுய பிரகாச சைதன்யம்எங்கிருந்தும், எதனிடமிருந்தும் ஆத்மாவுக்கு சைதன்யம் ஸ்வரூபம் வரவில்லை, தானே அறிவு ஸ்வருபமாக இருக்கிறது.
 
அவஸ்தா த்ரய விசாரத்தின் மூலம் தர்க்க ரீதியாக ஆத்மாவானது விளக்கப்படுகிறதுஎட்டுவித ஸ்வரூபங்கள் மூலம் இது விளக்கப்படுகிறது.
  1. சரீர வியதிரிகம்  - ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறானது
  2. சுத்தத்வம்        - தூய்மையானது, உடலானது அசுத்தமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது
  3. ஸ்வயம்ஜோதி   தானே ஒளிர்வது
  4. அலுப்தசக்திமத்வம்நிலையான சக்தி ஸ்வரூபம், வந்துபோகும் சக்தி, நிலையற்ற சக்தி
  5. அஸங்கத்வம்      - எதனோடும் சம்பந்தப்படாதது
  6. நிரஸிதய ஆனந்த  அளவிட முடியாத ஆனந்த ஸ்வரூபம்
  7. அத்வைத்வம்      இரண்டற்றது
  8. த்ருஷ்டி அலோபம்சைதன்யம் என்றும் தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்கும்
முதல் ஐந்து தத்துவங்களையும் கனவு நிலையில் நிரூபிக்கப்படுகிறது, கடைசி மூன்று தத்துவங்கள் ஆழ்ந்த உறக்கத்தை கொண்டு நிரூபிக்கப்படுகிறது.
 
ஸ்லோகம்-1
ஜனகரை யாக்ஞவல்கியர் மீண்டும் பார்க்க சென்றார் அப்போது நான் இன்றைக்கு ஒன்றும் பேசப்போவதில்லை என்று கூறினார். ஒரு சமயம் அவர் ஜனகரின் அக்னிஹோத்ர அறிவை வியந்து பாராட்டி ஒரு வரத்தை கொடுத்தார் அதை நினைவுப்படுத்திய ஜனகர் நான் சில கேள்விகளை கேட்க போகிறேன் அதை வரமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்அவரும் அதை ஏற்றுக் கொண்டு அனுமதித்தார்ஜனகர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
 
ஸ்லோகம்-2
இந்த ஜீவாத்மா எந்த ஜோதியினால் செயல்படுகிறான்ஜீவாத்மா செயல்படுவதற்கு ஜோதியாக இருப்பது எதுஎன்ற கேள்வியை ஜனகர் கேட்டார்அதற்கு சூரியனுடைய ஜோதியினால்தான் நாம் செயல்படுகிறோம்.
 
இந்த ஸரீரம் விவகாரத்திற்கு யோக்யதை அல்ல, ஆனால் தேகத்தின் விவகாரம் நடப்பதை பார்க்கிறோம்இதற்கு ஜோதியாக இருப்பது எதுஇந்த கேள்வியானது மூன்று வகையில் விசாரம் செய்யப்படுகிறது. அவைகள்:
  1. எது நம்முடைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அதே சமயம் சரீரத்திற்கு வேறுபட்டும் இருக்கிறது
  2. சரீரத்திற்குள்ளே அந்த ஜோதி இருக்கின்றது
  3. சில சமயம் இந்த உடல் ஜோதியை பயன்படுத்துகிறது, அது சில சமயம் இல்லாமலும் செயல்படுகிறது.
மூன்றாவது விகல்பம் சரியாக இருக்காது ஏனென்றால் ஜோதி இப்படி இருந்தால் எந்த விவகாரமும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்ல முடியாதுஜோதி இருக்கும்போதும், இல்லாத போதும் விவகாரம் நடக்கலாம்.
 
இரண்டாவது விகல்பமும் சரியாக இருக்காது ஏனென்றால் சரீரத்தின் ஒரு அங்கமாக இருந்தால் சரீரமே ஆத்மாவாக இருக்கும் அதனால் அழிவிருக்காதுஆனால் இயற்கையில் இந்த சரீரம் அழியும் தன்மையுடையது
 
முதல் விகல்பம்தான் சரியானதுசரீரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றினால்தான் இது செயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்
 
ஜனகரே இதை தர்க்க ரீதியாக சிந்தித்து  அறியக்கூடிய தகுதியுடையவராக இருந்தாலும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார் என்றால் இந்த தர்க்கம் வெகு சூட்சுமமாக இருக்கிறது இதை குருவின் துணைக் கொண்டுதான் அறிய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.
 
எந்தவொரு உடலிலிருந்து விவகாரம் நடக்கிறதோ அந்த விவகாரமானது அதனிடமிருந்து வேறுபட்ட ஜோதியினால் சாத்தியமாகிறதுஒரு ஜட வஸ்து நகர்வதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறான ஒன்றின் உதவியால்தான் முடியும்யாக்ஞவல்கியர் சூரியன்தான் ஜோதியாக இருக்கிறது என்று பதில் கூறினார்சூரியன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.
 
ஸ்லோகம்-3
சூரியன் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்அதற்கு யாக்ஞவல்கியர் சந்திரன் ஜோதியாக இருக்கும்சந்திரன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.
 
ஸ்லோகம்-4
சூரியனும், சந்திரனும் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்அதற்கு யாக்ஞவல்கியர் அக்னிதான் ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,
 
ஸ்லோகம்-5
சூரியனும், சந்திரனும், அக்னியும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்அதற்கு யாக்ஞவல்கியர் வாக்கானது (சப்தம்) ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார், இதன் உதவியால்தான் ஜீவன் செயல்பட முடிகிறதுவாக் என்ற சொல்லுக்கு எல்லா இந்திரிய விஷயங்களையும் சேர்த்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்கள்தான் இந்திரியங்களை செயல்பட வைக்கிறதுஒருவன் தன் கையையே பார்க்க முடியாத இருட்டாக இருந்தாலும் சப்தம் வரும் திசை நோக்கி போகிறோம், தடைகளை அறிந்து விலகி செல்கிறோம்.
 
ஸ்லோகம்-6
சூரியனும், சந்திரனும், அக்னியும், வாக்கும், இந்திரிய விஷயங்களும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்அதற்கு யாக்ஞவல்கியர் ஆத்மாதான் ஜோதியாக இருக்கும் என்று சொன்னார். ஆத்மா என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.
 
விசாரம்-1:
இந்த நான்கும் இல்லாத போது எந்த விவகாரம் நடக்கிறது என்று கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் கனவில்தான் நடக்க முடியும்கனவில் இந்த நான்கும் இல்லை ஆனால் விவகாரம் நடந்து கொண்டிருக்கும்விழிப்பு நிலையில் யாருமே இல்லாத இடத்தில் இந்த நான்கும் இல்லாத நிலையில் கற்பனையான நிலையில் நடக்கும் விவகாரங்களுக்கு உதவும் ஜோதி எதுசமாதி, தியானத்தில் இருக்கும்போதும் விவகாரங்கள் நடப்பதற்கு ஜோதியாக இருப்பது எது?
 
சங்கரரின் விளக்கம்:
எந்தவொரு விவகாரமும் செய்வதற்கு உதவியாக இருப்பது இந்த உடல், இந்திரியங்களை தவிர்த்து வேறொன்றாக இருக்கிறது. கனவிலும் வேறொன்றினால்தான் விவகாரம் செய்ய முடியும்இங்கு ஐந்து விதமான ஸ்வரூபங்களை கூறுகின்றார்.
1.      காரிய-காரண வியதிரிக்தம்காரிய காரண அவபாஸகம்காரியமானது இந்த ஸ்தூல உடல், காரணமாக இருப்பது சூட்சும உலகமும், மனமும் தான். அவபாஸகம்ஒளிர்விப்பது; வியதிரிக்தம் - வேறானதுஉடலுக்கும் மனதுக்கும் வேறானதாக இருந்து கொண்டு ஆனால் அவைகளை பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
2.      ஸ்வயம் ஜோதி இந்த ஆத்மா வேறெதைக்கொண்டும் விளக்க முடியாது, தானே விளங்கிக் கொண்டிருப்பது
3.      அந்தஸ்தம் உடலுக்கும் மனதிற்கும் வேறுபட்டதாக இருந்தாலும் அதற்குள்ளே இருப்பதுநமக்குள்ளே இருந்து கொண்டு உடலையும் மனதையும் பிரகாசப்படுத்தி கொண்டிருப்பது.
4.      அப்பிரமேயம் எந்தக் கரணங்களாலும் கிரகிக்க முடியாதது
5.      அபௌதிகம் எந்தப் பூதங்களினாலும் உருவாக்கப்பட்டதில்லை.
 
விசாரம்-2
கேள்வி: ஆத்மாவுக்கு சொன்ன ஸ்வரூபங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஜடமான ஸ்தூல சரீரத்தை இயக்குவதற்கு அறிவுள்ள ஏதோ ஒன்று இருக்க வேண்டும் இந்த அனுமானத்தை பயன்படுத்தி அறிவை அடைகிறோம்இந்த சரீரமே சேதனமாக இருக்கிறது என்று அனுபவம் சொல்கிறதுஅதாவது என் பிரதியக்ஷ பிரமானத்தை வைத்து பார்த்தால் உங்களுடைய அனுமானங்களை வைத்து சொல்கின்ற உடலுக்கு வேறான ஒரு அறிவு ஸ்வரூபம் கிடையாதுஉடலானது உணர்வு மயமாக இருப்பதால் வேறொன்று தேவையில்லை.

 

        இரண்டாவது உதவி பெறுவது, உதவி செய்வது இந்த இரண்டும் ஒரே நிலையில்தான் இருக்க முடியும்எனவே சமான ஸத்தால்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும். அப்படியிருக்கும்போது எப்படி இந்த உடலுக்கு வேறான ஆத்மா உதவி செய்ய முடியும்?
 
பதில்   உன்னுடைய கருத்துப்படி ஸ்தூல உடம்புதான் ஆத்மா என்று வைத்துக்கொண்டால் மரணம் என்பது சம்பவிக்காதுஇந்த உடலே சேதனம் என்றால் அதற்கு அழிவே கிடையாதுஇது பிரதியக்ஷ பிரமானம்தான்ஏதோ ஒன்று உடலில் இருந்தால்தான் அது உயிர் வாழும், அது சென்றுவிட்டால் இந்த உடல் ஜடமாகி பின்பு அழிந்து விடுகிறது. மரணமடைந்தவுடன் அவன் உணர்வுடன் இருப்பான்இதிலிருந்து தெரிவது இயற்கையாகவே உணர்வு என்பதே கிடையாதுஉடலே உணர்வு ரூபமாக இருந்தால் கனவு என்ற அனுபவமே இருக்காதுஉண்மையில் கனவு நிலையில் உணர்வுடன் இருக்கிறான்ஸ்தூல உடம்பு ஜடமாக படுத்துக் கொண்டிருக்கிறதுஇதிலிருந்து உடலுக்கு வேறாக உள்ள ஒன்றுதான் விவகாரத்திற்கு உதவ முடியும்
 
         இரண்டாவது காரணமான சமான ஸத்தில்தான் விவகாரம் நடக்க முடியும்இந்த ஹேது சில சமயங்களில் அது மாதிரி இருக்காதுஉதாரணமாக தீயை வளர்ப்பதற்கு அதற்கு வேறான நெய்பெட்ரோல் போன்றவைகள்தான் பயன்படுகிறது.   கண்ணாடியில் தெரியும் நம் முகம் பொய்யானது, ஆனால் நம் முகத்திலுள்ள குறைகளிருந்தால் அந்த உண்மையை காட்டும்இவைகள் வெவ்வேறு ஸத்தாவான இரண்டு வஸ்துக்கள்இதிலிருந்து இந்த உடல் உணர்வு ஸ்வரூபமுடையதல்ல என்பது நிரூபிக்கப்படுகிறது.
 
கேள்வி இந்தியங்களை ஆத்மா என்று எடுத்துக் கொள்ளலாமே?
பதில்   கனவில் எந்த இந்திரியமும் பயன்படவில்லை ஆனாலும் கனவில் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்வுடன் இருக்கிறோம்.
கேள்வி ஜனகர் கேட்ட கேள்விக்கு நேரிடையாக ஆத்மா என்று சொல்லியிருக்கலாமே?
பதில்   இந்த தேடல் செயல்பட ஒரு ஜோதி தேவை அது உடலுக்கு வேறான ஒன்று என்பதை சிஷ்யன் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து முதலில் சூரியனிலிருந்து ஆரம்பித்து பிறகு கடைசியில் ஆத்மாதான் என்று முடித்தார்எந்தவொரு தேக விவகாரமும் அதற்கு வேறான ஒன்றால் நடக்க முடியும். இந்த விஷயத்தை சிஷ்யன் முதலில் உணரவேண்டும். சரீர வியதிரிக்த அனுமானம் சூரியனிடமிருந்து ஆரம்பித்து ஆத்மாவில் வந்து முடிவடைகிறது.
 
ஸ்லோகம்-7
ஆத்மாவினுடைய ஸ்வரூபம் என்ன? அதன் தன்மை என்ன? என்பதை விளக்குகிறது. அது புருஷனாக இருக்கிறதுபுருஷ: எந்த ஒன்று பூரணமாக இருந்து கொண்டு எதனாலும் விளக்கப்படாமல் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் ஆத்மாமனதை ஜடமென்று யூகத்தால்தான் அறிந்து கொள்ள முடியும்
யோSயம் ஜ்யோதி புருஷ: இந்த ஜோதி புருஷன்.
விக்ஞானமய: - இருக்கின்ற எண்ணங்களைக் கொண்டு தீர்மானிக்கும் கரணம் புத்தி
புத்தியினால்தான் அறிவை அடைய முடியும்.  அதில் பிரதிபலிக்கும் ஆத்மாவினால்தான் இந்த புத்திக்கு அறிவைக் கொடுக்கும் சக்தியை அடைந்திருக்கிறது. அதுவே சிதாபாசன் என்று அழைக்கப்படுகிறதுசிதாபாசனை அடையாளமாகக் கொண்டு அறியப்படுவது ஆத்மாஇது ஆத்மாவை புரிந்து கொள்ள உதவுகிறதுஇந்த உபாதியை எடுத்துக் கொண்டு விசாரம் செய்து இதை உறுதி செய்ய வேண்டும்புத்தியாகவும் அதில் பிரதிபலித்து கொண்டிருக்கின்ற சிதாபாசனாகவும் ஆத்மா வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.
 
प्रानेष आत्मा स्थितः பிராணன்களுக்குள் ஆத்மா இருக்கின்றது. இங்கே பிராணன்கள் என்று குறிப்பிடுவது ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்.
 
மரங்களுக்கிடையே உள்ள பாறை என்பது அவைகளுக்கு அருகில் உள்ள பாறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்ஆத்மா பிராணன்களுக்குள் இந்திரியங்களுக்கு அருகில் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து ஆத்மா இவைகளுக்கு வேறானதாக இருப்பதை அறியலாம்அதுதான் இவைகள் செயல்படுவதற்கு ஆதாரமாக (ஜோதியாக) இருந்து கொண்டிருக்கிறது.
 
ஹ்ருதயந்த: - புத்தியில் இருக்கின்ற எண்ணங்களுக்கு அப்பாற்பட்டுள்ளது.
ஸ: ஸமான: ஸனுபௌ4 லோகாவனுஸம்சரதி: - இதே ஆத்மாதான் சம்சாரியாக செயல்படுகிறது. அன்யோன்ய அத்யாஸத்தினால் நமக்கு இவ்வாறாக நினைக்கத்தோன்றுகிறது.
: அந்த ஆத்மா
ஸ: ஸமானஸன் புத்தியுடன் அத்யாஸத்தால் ஒன்றாகியதற்குப்பிறகு
உபௌ4 லோகாவ்இரண்டு லோகங்களுக்கிடையே (இகலோகம், பரலோகம்)
அனுஸம்சரதி: - புண்ணிய, பாவ பலன்களினால் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
த்4யாயதி இவ - தியானிக்கின்றான்; மனனம், நிதித்யாஸனம் செய்கின்றான்.
லேலாயதி இவஅங்கும் இங்கும் அலைபவன்
இந்த இரண்டு சொற்களால் (த்யாயதி இவ, லேலாயதி இவ) ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
 
इवஎன்ற சொல் பயன்படுத்த வேண்டுமென்றால், அனுபவத்தில் இருக்க வேண்டும்ஆனால் ஆராயும் போது அது இருக்கக்கூடாது.  “மித்யாஎன்ற சொல் அனுபவத்தில் இருக்கிறது ஆனால் ஆராய்ந்து பார்க்கும் போது அதன் இல்லாமை தெரிய வரும்ஜீவனாகிய நாம் செய்யும் விவகாரங்களை இரண்டாக பிரிக்கிறோம் அவைகள் ஞான விவகாரம், கர்ம விவகாரம்ஞான விவகாரத்திற்கு காரணமாக இருப்பது மூன்று விஷயங்கள் அவைகள் பிரமாதா(அறிபவன்), பிரமானம் (அறிய உதவும் கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்) இந்த மூன்றும் இருந்தால்தான் ஞான விவகார நடைபெறும்இதை திரிபுடீ என்றும் அழைப்பர். த்ரிபுடீ என்பது மூன்று விஷயங்கள் ஒன்றையொன்று பிரிக்க முடியாததாக இருப்பது.
 
ஸ: த்4யாயதி ஞான விவகாரத்துடன் கூடியவன், எல்லாவித அறிவு சம்பந்தமான விவகாரத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்.
ஸ: லேலாயதி எல்லாவிதமான கர்ம விவகாரம்;
கரணம் - கர்மேந்திரியங்கள்,
கர்த்தா - இந்திரியங்கள்
கர்மம் - எதைச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள்
ஜகத்தானது அதற்கேற்ற சூழ்நிலைகளை கொடுக்கிறது.
 
நான் ஞான விவகாரம் செய்வது போல் இருக்கிறது, கர்ம விவகாரம் செய்வது போல் இருக்கிறது ஆனால் உண்மையில் நான் ஒரு விவகாரமும் செய்வதில்லை சரீரம்தான் இதை செய்கிறது.
 
ஒருவன் ஸ்தூல சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டுவிட்டு சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவில் சஞ்சரிக்கின்றான்எனவே சரீரங்கள்தான் விவகாரங்களை செய்கிறதுஆத்மா அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது
 
ம்ருத்யோ ரூபானிம்ருத்யோ என்பது அக்ஞானத்தை குறிக்கிறது, ரூபானி என்பது சுட்டிக்காட்டுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்நம்முடைய ஸ்தூல சரீரம் அக்ஞானத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஒருவருடைய பேச்சு, செயல்கள் அவருடைய அக்ஞானத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
 
சங்கரரின் விளக்கம்:
புத்தமதக் கொள்கை:
நாம் பார்க்கும் உலகம் சத்யம், இதை பிரத்யக்ஷ பிரமாணம் மூலம் அறியலாம். அனுமானத்தின் மூலமும் அறியலாம்ஷணிகவாதிகள் சூன்யவாத கொ:ள்கையுடையவர்கள், இவர்களது கொள்கை இந்த உலகம் அஸத், உண்மையல்ல என்பதுதான்இதில் மூன்று பிரிவுகள்நம்முடைய அறிவில் ஒவ்வொரு க்ஷணமும் எண்ணங்கள் தோன்றி மறையும் அதுவே ஆத்மா அதுவே சத்யம். ஒவ்வொரு எண்ணமும் நான் என்று நினைப்பதால்தான் அது கொடுக்கும் இன்ப-துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறதுஅந்த எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்தால் அதன் விளைவிலிருந்து பாதிக்காமல் இருக்கலாம்.
 
கேள்வி: புத்தமத கொள்கை: ஷணிக விக்ஞானம்தான் ஆத்மா, அதற்கு மேல் ஒன்றும் கிடைப்பதுஅனுமானம் நம்முடைய புத்தி என்பது தன்னையும் மற்ற பொருட்களையும் விளக்குகின்றதுஏனென்றால் அது என்றுமே பிரகாசமாக இருப்பதால்தான் உணர்வுடன் இருப்பதால்தான்புத்தி தீபத்தைப்போல. புத்தி பானைப் போல் ஜடம் என்றால் அதை எனக்கு காட்டு என்று கேட்கிறான்.
பதில்   தீபம் தன்னையே விளக்கவில்லைஅதற்கு கர்ம-கர்த்ரு விரோதம் என்ற தோஷத்தின்படி அது அதையையே விளக்க முடியாதுஅறிபவன், அறியப்படும் பொருள் இரண்டுமே ஒன்றாக இருக்க முடியாது.
 
         எப்பொழுது ஒன்று செய்கிறது என்று சொல்ல முடியும் என்றால், அது எப்போதாவது அந்த செயலை செய்யாமல் இருந்திருக்க வேண்டும்எனவே தீபம் தன்னைத்தானே விளக்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் முன்பு அது தன்னையே விளக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்எனவே புத்தி தன்னைத்தானே விளக்கிக் கொள்ள முடியாது.
 

         இந்த தீபம் கண்ணை சார்ந்திருக்கிறதுஎனவே உன்னுடைய உதாரணம் தவறு.      புத்தியை பிரகாசபடுத்துவது ஆத்மா, அதுதான் நித்ய ஜோதிநாம் ஆத்மாவை விளக்க வேறொன்றும் தேவையில்லைஅது தன்னையே விளக்கவில்லை என்று சொல்லவில்லை.

 
கேள்வி நாங்கள் இதை எற்றுக்கொள்ளமாட்டோம். ஷணிக விக்ஞானம்தான் சரியானதுதோன்றி மறைந்து கொண்டிருக்கும் பிரவாகம்தான் பரம்பொருள், அறிவுதான் பிரவாக ஸ்வரூபம்.
பதில்   இப்படி இருந்தால் எந்த விவகாரமும் ஒழுங்காக நடக்காது. சாதனம், சாத்தியம் என்பதே இருக்காதுகாரண-காரியமே இருக்காதுஉதாரணமாக கனவில் நடக்கும் விவகாரங்கள் எதுவுமே ஒழுங்காக இருக்காது, தொடர்ச்சியாக இருக்காதுஎது எப்படி வேண்டுமானாலும் திடீரென்று மறையும், தோன்றும்,உருமாறும்ப்ரத்யபிக்ஞா அஸம்பவாத்பிரத்யபிக்ஞாவே நடக்காது
         பிரத்யக்ஷம்முதன் முறையாக பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம்
         ஸ்மிருதி   - வீட்டிற்கு சென்று நினைப்பது
         பிரத்யபிக்ஞாமீண்டும் பார்க்கும் அந்த அனுபவம், இவரை ஏற்கனவே எனக்கு தெரியும் என்று அடையாளம் கண்டு கொள்ளுதல் இவைகள் ஒரு பொருளினுடைய தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
          விருத்தி ஞானம் ஸத்யமென்றால், வஸ்துவிடமும் ஸத்யமாக, தொடர்ந்து இருக்கின்றது. ஆகவே உன்னுடைய க்ஷணிக விக்ஞானப்படி மனதில் தோன்றும் எண்ணங்களும் மித்யாதான்.
 
கேள்வி பிரத்யபிக்ஞா என்பதே கிடையாதுஏற்கனவே பார்த்தப் பொருளையே பார்க்கும் போது உனக்கு அப்படி தோன்றுகிறதுஉண்மையில் நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நீ பார்க்கும் போது நேரத்தில் தோன்றும் தோற்றம்ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்கு தொடர்ச்சியாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
பதில்   ஸா த்3ருஷ்டம் என்பது உன்னுடைய இந்த கருத்து உன்னுடைய கொள்கைக்கே விரோதமாக இருப்பதால் இது நிராகரிக்கப்படுகிறதுஉன்னுடைய கையில் வைத்திருக்கும் பொருள் யாருடையது? என்று ஒருவன் கேட்க அதற்கு அவன் என்னுடையது என்று சொல்கிறான்என்னுடையது என்கின்ற விவகாரம் நடக்காதுஏனென்றால் உன்னுடைய கொள்கைப்படி ஒவ்வொரு க்ஷணத்தில் விஷயம் தோன்றி மறைகிறதுஎன்னுடையது என்பதில் உன்னுடைய விருத்தி வேறாக இருக்கிறது, பொருள் வேறாக இருக்கிறது. எனவே இதுவும் உன்னுடைய கொள்கைக்கு வேறாகிறது.
 
                    நீ எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்க முடியாது. க்ஷணத்தில் தோன்றி மறைவதால், பெயர் கொடுத்தாலும் அது மறைந்து விடுகிறது.
 
                    க்ருத நாசம் தோஷம்: கர்ம செய்தவன் அழிந்து விடுகிறான் அதன் பலனை வேறொருவன் அனுபவிக்கின்ற நிலை ஏற்படும்.
 
                    விக்ஞானம் சத்யமென்றால், விதவிதமான விஷயங்கள் இருக்கிறதே? அவன் சொல்கிறான், விஷயங்கள் எல்லாம் விக்ஞானத்திற்கு அடைமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்இதனால் விருத்த அம்ச தோஷம் வந்துவிடும்இரண்டு விருத்தமான குணங்கள் ஒரே விஷயத்தில் இருக்க முடியாது. மென்மையான, கடினமான பாறை என்று சொல்ல முடியாது.
 
                    இந்த அடைமொழிகள் எல்லாம், விக்ஞானத்திற்கு அசுத்தியாக உள்ளதுக்ஷணிக விக்ஞானம் சத்யம். இப்படி சொல்வதால் உன்னை அறியாமல் அசுத்தி என்ற வேறொன்றை ஒத்துக் கொள்வது போல இருக்கிறது. இந்த அசுத்திதான் அதன் தன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மோக்ஷம் என்பதே அடையவே முடியாதுஅசுத்தியை நீக்கவே முடியாதுஎனவே உன்னுடைய கருத்துப்படி மோட்சம் என்பதை அடையவே முடியாது

ஸ்லோகம்-8
ஆத்மா வருகிறது, போகிறது என்பதெல்லாம் உண்மையில் கிடையாதுஜென்ம லக்ஷணம், மரண லக்ஷணம், சரீரத்தின் ஸ்வரூபம் என்ன?
 
1.   காரிய-காரணாத்மகம்சரீரம் காரிய ஸ்வரூபமாகவும், காரண ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஒரிடத்தில் இருந்து செயல்படுவதற்கு சரீரம் உதவுகிறதுசெயல்படுவதற்கு உதவியாக இருப்பதும், செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் இருக்கும் இடமாகவும் சரீரம் இருக்கிறது.
2.   தர்ம-அதர்ம ஆஸ்ரயம்பாவ-புண்ணியங்களுக்கு உறைவிடமாக இருக்கிறது
3.   தர்ம-அதர்ம ஜனகம்பாவ-புண்ணியத்தை தோற்றுவிக்கிறது, உற்பத்தி செய்கிறது
4.   சரீரம்தான் இகலோக, பரலோகத்திற்கு சென்று வருகிறது
5.   எப்பொழுது ஒரு பொருள் மீது நாம் அபிமானம் வைக்கிறோமோ அப்பொழுதே அது பிறந்து விடுகிறது
6.   எந்த நேரத்தில் ஒரு பொருளின் மீது பற்றுவிட்டு போகிறதோ அது அப்போதே மரணத்தை அடைந்து விடுகிறது.
 
மந்திரவிளக்கம்:
ஸ: வைஅந்த
அயம் புருஷ: இந்த புருஷன் செயலற்றவன், எதனோடும் ஒட்டாதவன்
ஜாயமான: - பிறக்கின்றான்,
ஶரீரம் அபி4ஸம்பத்3யமான: - சரீரத்தில் அபிமானம் வைக்கிறான்
பாப்மபி4: - பாவ-புண்ணியங்களுடன், தர்ம-அதர்மங்களுடன்பாவ-புண்ணியங்களை தாங்கிக் கொண்டிருக்கின்ற மனம், புத்தி, இந்திரியங்களுடன்
ஸம்ஸ்ருஜ்யதே - சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
ஸ: உத்க்ராமன் - சரீரத்திலிருந்து அபிமானத்தை விடுதல்.
ம்ரியமான மரணமடைதல்,
பாப்மன: விஜஹாதி - பாவ-புண்ணியங்கள் விட்டு விலகுகிறது.
பிறத்தல், இறத்தல் என்ற நிலை இருப்பதால் தேகம், மனம் போன்றவைகள் ஆத்மாவின் சுபாவமல்லகாரணம் சம்யோக, வியோக என்பதாக இருக்கிறத.
 
ஸ்லோகம்-9
இதில் ஸ்வப்ன அவஸ்தை விளக்கப்படுகிறது
·         ஆத்மா ஸ்வயம் ஜோதி
·         பரலோக அஸ்தித்வம்நமக்கு மறுபிறவி இருப்பதை உறுதி செய்கிறது
·         ஆத்மாவுக்கு சரீரத்தோடு சம்பந்தம் வைக்கும்போதுதான் சம்சாரம்ஆனால் உண்மையில் அதற்கு சம்சாரமில்லை.
·         நாம் அனுபவிக்கக்கூடிய அவஸ்தைகளுடைய இருப்பிடம் மனதுதான்அவஸ்தைகளுடைய சாட்சியாக இருப்பது ஆத்மா.
மறுஜென்மம் உண்டு என்பதை கனவு நிலையை வைத்து உறுதி செய்யப்படுகிரது.
 
கனவு நிலை-1: நான் ஸ்தூல சரீரத்திலிருந்து வேறுபட்டவன்
கனவு நிலை-2: கனவில் காண்பதெல்லாம் மித்யா என்ற அறிதல், உறுதி செய்தல்
 
இங்கு ஜீவனுக்கு இரண்டு உலகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனஒன்று இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் இந்த லோகம் இரண்டாவது பரலோகம். இது முற்பிறவியில் இருந்த லோகம் அல்லது மறு பிறவியில் இருக்கப்போகும் லோகம்நாம் குழந்தையாக இருக்கும்போது முதல் மூன்று கண்ணுக்கு பார்க்கும் சக்தி கிடையாதுகுழந்தை திடீரென்று அழும், சிரிக்கும்இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்மத்தின் அனுபவங்கள், வாசனைகள், விஷயங்கள் கனவில் வருவதால். குழந்தைக்கு இகலோக அனுபவம் கிடையாதுபிறகு மரணமடைவதற்கு முன் இந்த ஜென்மத்தில் தோன்றிய ஸம்ஸ்காரங்களைத்தான் கனவில் அனுபவிப்பான். மரண படுக்கையில் இருக்கும்போது இகலோக எல்லா இந்திரியங்களும் சக்திகளை இழந்து விட்டிருக்கும், இகலோக ஸம்ஸ்காரங்கள் செயல்படாது. அடுத்த ஜென்மம் பற்றிய விஷயம் ஆரம்பமாகி விடும்அவர்களுடைய கனவில் வரப்போகும் ஜென்மத்தின் ஸம்ஸ்காரங்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவான்ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் கனவு வராது  குழந்தை பூர்வ ஜென்ம ஸம்ஸ்காரங்களையும், மரண நிலையில் வரப்போகும் ஜென்மத்தில் ஸம்ஸ்காரங்களையும் அனுபவிக்கிறோம். எனவே கனவு நிலை என்பது நம்முடைய மறு ஜென்மம் இருப்பதை நிரூபிக்கிறது
 
மந்திரவிளக்கம்:
ஜீவனுக்கு இரண்டு இடங்கள் அனுபவிப்பதற்கு இருக்கிறதுஅவைகள் இகலோகம்-இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் உலகம், பரலோகம்-முற்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் அனுபவிக்கப்போகும் உலகம்.
சந்த்யம் த்ருதீயம் ஸ்வப்ன ஸ்தானம்இந்த கனவு நிலையில் இருந்து கொண்டு இரண்டு உலகங்களை அனுபவிக்கின்றான். குழந்தையாக இருக்கும்போது முற்பிறவி லோகத்தையும், மரணதறுவாயிலிருக்கும்போது பரலோகத்தையும் அனுபவிக்கின்றான்.
தஸ்மின் ஸந்த்யே ஸ்தானே- இந்த இடைவெளியில் கனவு நிலையில்
திஷ்டன் ஏதே உபே ஸ்தானே பஷ்யதி: - இந்த இடைவெளியில் ( முற்பிறவி உலக விஷயங்கள் அனுபவிக்கும் உலகம், அடுத்த பிறவி உலகத்தை அனுபவிக்கும்) இப்போது இருந்து கொண்டே இந்த் இரண்டு உலகங்களையும் அனுபவிக்கின்றான்
 
எதன் அடிப்படையில் இந்த ஜீவனுக்கு அடுத்த ஜென்மம்.
அத4 யதா4 ஆக்3ரம அயம் - நம்மிடத்தே வெளிப்படுகின்ற பாவ-புண்ணியங்களை பொறுத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறதுஇது சஞ்சித கர்மத்திலிருந்து வெளிப்படுகிறதுஅங்கிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அந்த பிராரப்தத்தை அனுபவிக்கின்றான்.
ஆக்கிரமஹ à தர்ம-அதர்ம அல்லது பாவ-புண்ணியங்கள்
இவன் எப்படிப்பட்ட பாவ-புண்ணியத்தை சஞ்சிதகர்மத்திலிருந்து எடுக்கிறானோ அதன் அடிப்படையில் சுக-துக்கங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்கிறான்இதிலிருந்து மறுபிறவி உறுதி செய்யப்படுகிறது.
 
ஆத்மா ஸ்வயம் ஜோதி விசாரம்:
விழிப்பு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. அதனால் மனம் இந்திரியங்கள், உலகம் இவைகளை பிரகாசிக்கிறதுஇந்த நிலையில் சைதன்யம், மனம் என்ற இரண்டு ஜோதிகள் இருக்கின்றனநம்முடைய அனுபவத்தில்தான் எல்லாவற்றையும் அறிகிறோம்மனம் உறங்கியதும் உலகம் கிடையாது. இந்த நிலையில் சைதன்யம் என்பது ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுஇதை புரிந்து கொள்ள மனமே தடையாக இருக்கிறதுஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றுமே இல்லை. அந்த நிலையில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றும் நமக்கு தெரியவில்லைகனவு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறதுஆனால் மனம் அது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறதுவிழிப்பு நிலையில் உடலையும், உலகையும் விளக்கிக் கொண்டிருக்கின்ற மனம் கனவு நிலையில் வெறும் அனுபவிக்கப்படும் பொருளாக மட்டும் இருக்கின்றதுஇந்த நிலையில் வாசனாமயமாக மனமானது பரிணாமத்தை அடைந்து, அதுவே கரணமாக மாறியிருக்கிறதுபார்ப்பவனாகவும் பார்க்கப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறதுஇதைப்பார்க்கும் பொருள் எதுஅதை யார் விளக்குகிறது? மனதிற்கும் வேறாக அதை பிரகாசிக்கக்கூடிய ஒன்று இருக்க வேண்டும்எனவே கனவில் ஆத்மா தானாக ஒளிர்ந்து கொண்டு மனதையும் விளக்குகின்றதுஇவ்விதம் ஆத்மா ஸ்வயம் ஜோதி என்று சந்தேகமில்லாமல் விளங்குகின்ரதுகனவு நிலை இதை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
 
கேள்வி மனமே ஸ்வயம் ஜோதியாக எண் இருக்கக்கூடாது?
பதில்   இதை ஏற்றுக் கொண்டால் ஐந்து வகையான குறைகள் தெரிய வரும்மனதை ஜடமாக பார்க்கும் வாய்ப்பே நமக்கு கிடைக்கவில்லை அதனால்தான் மனதை ஜடமாக எற்றுக் கொள்ள முடியவில்லை.
1.   அநித்யத்துவ பிரசங்கம்: மனம் விகாரமடையும் (மாற்றம்) என்ற தன்மையுடன் இருக்கிறதுஎது விகாரத்துடன் கூடியுள்ளதோ அதற்கு அழிவும் இருக்கிறது. இப்படி மனமானது அநித்யமாக இருப்பதால் சைதன்யமே இல்லாததாகி விடும் எனவே மனதை ஸ்வயம் ஜோதி என்று சொல்ல முடியாது.  .
2.   மனஸஹ அஸம்பவாதி: மனதிற்கு லய அவஸ்தை சம்பவிக்கிறது
3.   மனம் என்ற சூட்சும ஸரீரம் எந்தவொரு அறிவை அடைய வேண்டுமென்றாலும் மனதில் எண்ணங்கள் வரவேண்டும். அந்த எண்ணங்களாக மனமே மாறி, அறிவை அடைகின்றோம்  அப்படி எண்ணங்கள்  வரவில்லையென்றால் அறிவு கிடைக்காது. மனதால் இதை அறிகிறேன் என்பதை அறிய செய்ய முடியாது வேறொன்றுதான் அதை செய்ய முடியும்ஒரே கணத்தில் மனம் உலகத்தை விளக்கும்போது அதை வேறொன்று விளக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது அது என்றும் சாட்சியாக இருக்கும் ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.
4.   ஸ்ருதி விரோதாத்: ஸ்ருதி மனம் ஜடம் என்று கூறியிருக்கிறதுபஞ்ச சூட்சும பூதங்களிலிருந்து உருவாகியதுதான் மனம் என்பதால் அது ஜடம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
5.   அநிர்மோக்ஷம் பிரசங்கஹ: மோக்ஷம் என்ற ஒன்றே இருக்க முடியாது.   சம்சாரியாக விகாரத்துடனிருக்கும் மனதை ஏற்கனவே அடைந்து விட்டோம். எனவே மோக்ஷம் என்பது சம்பவிக்காது
மேற்கூறிய கருத்துக்களிலிருந்து மனமானது ஸ்வயம் ஜோதியாக இருக்க முடியாது என்று நிரூபணமாகிறது.

மனமே சாட்சி சைதன்யத்துக்கு பார்க்கப்படும் விஷயமாகவும், கரணமாகவும், பார்ப்பவன் என்ற மூன்று நிலைகளாக மாறி நமக்கு கனவு அனுபவம் ஏற்படுகிறது.
ஸஹ யத்ர ப்ரச்வமிதி -  ஜீவன் எப்பொழுது கனவை அனுபவிக்கின்றானோ;
அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதஹஸ்தூல சரீர அபிமானியாக இருக்கிற விஸ்வனே அனைத்தும் உடையவனாக (ஸர்வாவதஹ) இருக்கிறான்ஐந்து தத்துவங்களை உடையவனாக இருக்கிறான். இந்த ஐந்தும் இருந்தால்தான் ஜாக்ரத் அவஸ்தையில் உலகத்தை அனுபவிக்க முடியும்அவைகள் ஸ்தூல சரீரம், கரணம், கரண தேவதா, விஷயம், வாஸனா (பார்த்த்து, செய்தது பதிவாகியிருக்கும் நினைவகம்)
மாத்ராம் அபாதாய தைஜஸன் வாசனையை மட்டும் எடுத்துக் கொண்டு,
ஸ்வயம் விஹிதிய - ஸ்தூல சரீரத்தை தியாகம் செய்து விட்டு
ஸ்வயம் நிர்மாய –   தானே ஒரு உலகத்தை உருவாக்கி
ஸ்வேன பாஸா –    விருத்தி ரூபமாக அனைத்தும் உருவாகி
ஸ்வேன ஜோதிஷாசாட்சி சைதன்யத்தின் ஜோதியினால்
ப்ரஸ்வமிதி –        அவன் கனவை காண்கின்றான்.
அத்ர அயம் புருஷ   இந்த ஸ்வப்ன அவஸ்தையில், இந்த சாட்சியானது
ஸ்வயம் ஜோதி பவதி சுய ஜோதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
 
ஸ்லோகம்-10
ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யா என்று விளக்குதல்.
கயிற்றில் தோன்றும் பாம்பும் வாஸனையிலிருந்து வந்த விருத்தி கனவில் பிரபஞ்சமாக உருவாகிறது
 
கேள்வி: கனவு பிரபஞ்சம், விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான். எனவே ஜாக்ரத் அவஸ்தை எவ்வளவு சத்தியமோ அதே அளவு சத்தியம்தான் கனவும்காரணம் விழிப்பு நிலையில் எப்படி அனுபவிக்கிறோமோ அதே மாதிரிதான் கனவு நிலையிலும் கர்த்தா, கரணம், விஷயம் என்று இருக்கிறதுஎனவே கனவு மித்யா என்று எப்படி சொல்வாய்?
பதில்   கனவில் பார்ப்பதெல்லாம் வானையிலிருந்து உருவாக்கப்பட்டவை, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதில்லை.
 
மந்திரவிளக்கம்:
தத்ர: அங்கு (கனவு நிலையில்)
ந ரதஹரதங்கள் கிடையாது.
ந ரதயோஹரதத்தை ஒட்டும் குதிரைகள் கிடையாது;
ந பந்தானஹபாதைகள் கிடையாது
நாம் பார்க்கும் இவைகள் உண்மையில் இல்லை எனவே மித்யா என்பது நிரூபணமாகிறது. ஆனால் இவைகளெல்லாம் வானையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ந தத்ர ஆனந்தாஹா, முதஹ, பிரமுதஹபிரியம், மோதம், பிரமோதம் என்ற மூன்று நிலைகளும் கனவில் இல்லைந்த விஷயத்தின் காரியமான ஆனந்தம் கிடையாதுவிஷய நிமித்த சுகமும் கிடையாதுஇவையும் வானையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறதுகனவில் பார்க்கும் பொருட்களும் பொய்யானது அதிலிருந்து அனுபவிக்கும் சுகமும், துக்கமும் பொய்யானதுஇவைகள் வானையிலிருந்துதான் தோன்றியுள்ளது. அதுபோல கனவில் பார்க்கும் குளம், குட்டை, ஆறு, ஏரி இவைகளெல்லாம் உண்மையில் தோற்றுவிக்கப்படவில்லைஇவைகளையெல்லாம் உருவாக்குபவன் கனவு காண்பவன்தான்இந்த ஜீவாத்மாதான் கர்த்தாவாக இருக்கின்றான்விழிப்பு நிலையிலுள்ள வஸ்துவிற்கு கர்த்தா ஈஸ்வரன்.
 
ஸ்லோகம்-11
இந்த விஷயத்தை விளக்கும் ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹிரண்யமயஹ; புருஷஹ; ஏக ஹம்ஸஹஇவைகள் ஆத்மாவின் ஸ்வரூபங்கள்
ஹிரண்யமயஹசைதன்ய ஜோதி ஸ்வபாவஹசைதன்யத்தை ஜோதியாக, ஸ்வரூபமாக கொண்டது.
புருஷஹ: காரியம்-கரணாதி ஸர்வம் பூரயதி இதி புருஷஹஆத்மா என்ற தத்துவம் நம்முடைய சரீரத்தை முழுவதுமாக வியாபித்திருக்கிறது.
ஏகஹம்ஷஹ: உண்மையில் நிலையாக இருந்து கொண்டு, சிதாபாஸ ரூபமாக தன்னை மாற்றிக் கொண்டு ஒரு லோகத்திலிருந்து இன்னொரு லோகத்திற்கும், சரீரத்திற்குள்ளே ஒரு அவஸ்தையிலிருந்து வேறொரு அவஸ்தைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறது
ஸ்வப்னே வாஸனா மாத்ர லோகேன பாவனயாகனவு மயமான உலகத்தை உருவாக்கி அதில் அபிமானிக்கும் போது
ஸாரீரம் அபிப்ரஹதியாஸ்தூல சரீரத்தை, செயலற்றதாக, ஜடமாக மாற்றி
அஸுப்தஹநிர்குண ஆத்மா, சாட்சி சைதன்யம், எப்பொழுதும் உறங்காதவன்
அலுப்த த்ருக்இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
ஸுப்தான்வாஸனா பிரபஞ்சத்தை
அபிசாகஸீதிசாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது; எந்தவித செயலும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
தைஜஸன் உருவான பின் விஸ்வன் உறங்கி விட்டான் அவனையும், அவன் உருவாக்கிய கனவு உலகத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது ஆத்மா.
புனஹ: விழிப்பு நிலை வாசனை செயல்பட ஆரம்பிக்கும்போது சரீரம் தன்னுடைய இந்திரியங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வருகின்றான்.
 
ஸ்லோகம்-12
பிராணேன ரக்ஷன் அஹம் குலாயம்ஐந்து பிராணன் மூலமாக இந்த ஸ்தூல சரீரமானது பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்தூல சரீரமானது பூமியோடு கலந்து உறங்கப்போகிறது.
பஹவுகுலாயாத்- இந்த சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டு வெளியே சென்று
சரித்வாகனவுலகை அனுபவித்துக் கொண்டு
சஹ ஈயதே யத்ர காமம்எப்படிப்பட்ட ஆசையானது மனதிற்குள் திடமாக இருக்கிறதோ, அதுவே எண்ணங்களாக வெளிபட்டு அதை கனவில் அடைகிறான்.
 
ஸ்லோகம்-13
இந்த மந்திரத்தில் கனவு வாசனையிலிருந்துதான் வெளிப்படுகிறது என்று கூறப்படுகிறது.  எந்த வாசனை வெளிப்படும் என்றால் நமது கர்மவினை, திடமான ஆசை இவைகளின் அடிப்படையில்தான் கனவு நிலையிலும் நாம் பிராரப்த கர்மத்தை அனுபவித்து கழிக்கிறோம்.
ஸ்வனாந்தகனவு அவஸ்தையில்;
உச்சா அவச்சாம்மேலான, கீழான,
ஈயமானஅடைந்து,
தேஹ பஹுனி ரூபானிநமக்குள் இருக்கும் சைதன்ய ஸ்வரூபம் பலவிதமான தோற்றங்களை, வாஸனைகளின் அடிப்படையில் உருவாக்குகிறது.
கனவுக்கு உபாதானகாரணம் கர்மவினை, நிமித்தக் காரணம் வானை அதிஷ்டான காரணமாக இருந்து கொண்டிருப்பது சைதன்ய ஸ்வரூபம்கனவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
உத ஏவஇவையெல்லாம் மித்யாவான பொருட்களை
சஹ மோதமானே- இவைகளையெல்லாம் அனுபவித்து இன்புறுகிறான்
ஜக்வித் உதே ஏவமகிழ்ந்து கொண்டு
பயானி பஷ்யன்பயத்தைக் கொடுக்கின்ற, துயரத்தைக் கொடுக்கின்ற காட்சிகளை உருவாக்குகிறான்
 
ஸ்லோகம்-14
அஸ்ய - இந்த ஜீவன்கள்;
ஆராமம்கனவில் உருவாக்கிய பொய்யான உலகத்தை
பஷ்யந்திஅதுதான் உண்மையென்று பார்த்து கொண்டிருப்பார்கள்
தம் ந பஷ்யதி கஷ்சனயாரும் உண்மையை பார்ப்பதில்லை
தம் ஆயதம் ந போத்யேத்ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களை அவசரமாக எழுப்பிடக் கூடாது.
இதி ஆஹுஹுமருத்துவர்கள் இவ்வாறு எச்சரிப்பார்கள்
துர் விஷ்ஜம்இவ்வாறு எழுப்பியவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கடினம்.
யம் ஏஷ ந பிரதிபத்யதேஇந்திரியங்கள் தத்தம் நிலையிலிருந்து கனவுலகிற்கு சென்றிருக்கும். ஒடுங்கிய நிலக்கு சென்றிருக்கும், ஸம்ஸ்காரங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும்திடீரென்று எழுப்பினால் இந்திரியங்கள் அதனது கோளகத்திற்கு வந்து சேர வேண்டும், ஸம்ஸ்காரங்களும் ஒடுங்கிய நிலைக்கு செல்ல வேண்டும். இது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதோகலு அஹுஹுஅய்யய்யோ இப்படி கூறுகிறார்கள் அக்ஞானிகள்
ஜாகரிட்தேஷ ஏவ அஸ்ய ஏஷ இதி  - கனவும், ஜாக்ரத் அவஸ்தையின் ஒரு அங்கமாக இருக்கிறது.
யானி ஹ்யேவ ஜாக்ரத் பஷ்யதிஅதை இவன் விழிப்பு நிலையில் எதை பார்க்கிறானோ
தானி சுப்த இதிஅதைத் தான் கனவிலும் காண்கிறான்அதனால் கனவு விழிப்பு நிலையின் ஒரு அங்கமாக இருக்கிறது
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜ்யோதிர் பவதிகனவு நிலையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருக்கின்றான்.
ஜனகர் இதுவரை பெற்ற உபதேசத்திற்காக மேலும் ஆயிரம் பசுக்களை குரு காணிக்கையாக தருகிறேன் என்று கூறி மோட்சத்தை பற்றி மேலும் விளக்குங்கள் என்று வேண்டினார்ஜனகருக்கு இன்னும் முழுமையாக நிர்குண பிரம்மத்தை புரிந்து கொள்ளாததால் மீண்டும் அதையே உபதேசிக்கமாறு கேட்கிறார்.
 
ஸ்லோகம்-15
ஆத்மா அஸங்கம்தான் என்று நிலை நாட்டப்படுகிறதுகர்மத்திலிருந்தும் அஸங்கம், அனாத்மாவிலுருந்தும் சம்பந்தமற்றவன்.
·         கரணங்கள் இல்லையென்றால் கர்மம் பண்ண முடியாது
·         கர்மம் செய்து விட்டால் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
கனவில் ஒருவன் ஏதோ ஒரு பாவ காரியம் பண்ணியிருக்கின்றான்அதன் பலனை அனுபவிக்க வேண்டும் ஆனால் விழித்தவுடன் அவன் அதற்கான பலனை அனுபவிக்கமாட்டான்கர்மம் பண்ணியது தைஜஸன் அவன் மறைந்த பிறகு விஸ்வன் அனுபவிக்க வேண்டியதில்லை. எனவே ஆத்மா மூன்று நிலையிலும் இருக்கிறான் ஆனால் எந்த கர்மத்திற்கும் சம்பந்தம் இல்லைஇதனால் ம்ருத்யூ ரூபங்களில் மட்டும் தாண்டி செல்லவில்லை, ம்ருத்யூவையும் கடந்து செல்கின்றான்.
 
மந்திரவிளக்கம்:
ஸ: வை ஏஷா - அவனே ஆத்மா. அவன் என்பது விஸ்வனாகவோ, தைஜஸனாகவோ, பிராக்ஞனாகவோ இருக்கலாம்.
எதஸ்மின் ஸம்ப்ரஸாத்3: - இந்த சூழ்நிலை உறக்கத்தில் தற்காலிகமாக சம்சாரத்தை கடந்து விடுகிறான்.
ப்ரஸாதம் : அமைதியாக இருத்தல்;
ஸ்ம்ப்ரஸாதம்: முழுமையாக மகிழ்ச்சியாக அமைதியாக இருத்தல்.
ரத்வ சரித்வா, த்3ருஷ்டவா ஏவ புண்யம் ச பாபம் ச - கனவு நிலையில் மகிழ்ச்சியாக அங்குமிங்குமாக அலைகிறான், புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிக்கின்றான். அதாவது சுக-துக்கத்தை அனுபவிக்கின்றான்
புன: - மீண்டும்,
ப்ரதின்யாயம் - போன வழியில் கனவு-ஆழ்நிலை உறக்கத்திருந்து திரும்பி வருகின்றான்;
ப்ரதியோனி ஆத்3ரவதி - கனவு நிலைக்கு வந்து விடுகின்றான்
ஸ்வப்னாய ஏவ - கனவை அனுபவிப்பதற்கு
ஸ: தத்ர - எது இவ்வாறு இங்கும் அங்கும் சென்று வரும்போது
யத் கிம்சித் பஷ்யதி - எதையெல்லாம் பார்க்கின்றானே, அனுபவிக்கின்றானோ
அனன்வா கதஸ்தேன ப4வதி - அவன் பார்க்கப்படும் பொருட்களால் தாக்கப்படாதவன், பாதிக்கப்படாதவன்
அஸங்க3 ஹ அயம் புருஷ இதி - அவனுடைய ஸ்வப்னமே அஸங்கமாக இருக்கிறது
நான் யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நிலையில் வந்து விட்டால், நாம் யாராலும் தாக்கப்படாமல் இருப்போம்.
ஏவம் ஏவ ஏதத்3 - இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு மோட்சத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
 
ஸ்லோகம்-16
சுக-துக்கங்களை ஸ்வப்னத்தில் அனுபவித்து விட்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகின்றான்இந்த விஸ்வன் விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்க்கின்றானோ அதனால் தாக்கப்படவில்லை ஏனென்றால் அவன் அஸங்கமாக இருக்கின்றான்.
ஏவம் ஏவ ஏதத்3 - இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு மோக்ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்
 
ஸ்லோகம்-17
இவன் விழிப்பு நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மீண்டும் கனவு நிலக்கு சென்று விடுகிறான்இதனால் அஸங்கத்வம் நிரூபிக்கப்படுகிறதுவிழிப்பு நிலையில் அனுபவிக்கப்படும் எந்தப்பொருளும் எனக்கும் சம்பந்தமில்லை என்று புரிந்து கொண்டோமேயானால் இதனால் பாதிக்கப்படாமலிருப்போம். கனவு நிலைக்கு செல்லும்போது நாம் விழிப்பு நிலையில் அனுபவித்ததையெல்லாம் விட்டுவிட்டு செல்கின்றோம்.  எனவே நாம் எந்தப் பொருளின் காரணமாக பாதிக்கப்பட்டோமானால் அதனோடு சம்பந்தம் வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,
 
ஸ்லோகம்-18
எப்படி பெரிய மீனானது நதியின் இரண்டு கரைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறதோ அதே போல இந்த ஜீவன் இந்த இரண்டு அவஸ்தைகளுகும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
அனுஸம்சரதிசென்று வந்து கொண்டிருக்கின்றான் ;
அயம் புருஷ:இந்த புருஷன்;
ஸ்வப்ன: அந்தம்கனவு நிலை ;
பு3பா4ந்தம்விழிப்பு நிலை
இந்த இரு அவஸ்தைகளிலும் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்
 
ஸ்லோகம்-19 – 30 முகவுரை
1.   சம்சார உபாதி நிமித்தஹஉபாதியின் மூலம்தான் சம்சாரம்நீரானது உஷ்ணமாக அனுபவிக்கும்போது நெருப்பினால்தான் அது சூடாக இருக்கிறது. ஜாக்ரத், ஸ்வப்ன நிலையில் ஸ்தூல, சூட்சும சரீரம் என்ற உபாதி இருப்பதனால்தான் நாம் சம்சாரத்தை அனுபவிக்கிறோம்ஆழ்நிலை உறக்கத்தில் உபாதிகள் இல்லாததால் சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.
2.   சம்சாரம் சம்பந்தம் நிமித்தம்: சம்சாரம் என்பது வேறொன்றினிடத்தில் சம்பந்தம் வைக்கும் பொழுது ஏற்படுவதுசம்சாரம் அகங்கார நிமித்தத்தினால் வருவதுஆழ்நிலை உறக்கத்தில் எந்த சம்பந்தமும் இல்லாததால் சம்சாரம் இல்லை
3.   ஆத்மனஹ அஹங்கத்வம்: ஆத்மா அஸங்க ஸ்வரூபம் என்பது இந்த ஆழ்நிலை உறக்கத்தில் அறிந்து கொள்ளலாம்பொருட்களின் மீது வைக்கும் சம்பந்தம் நமது சுபாவமல்ல.
4.   அனாத்மாவான ஸ்தூல, சூட்சும சரீரமும் ஆத்மாவின் ஸ்வரூபமல்லநான் என்ற ஸ்வரூபமல்லநம்முடைய அனுபவம் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் இருக்கிறது. இந்தக் கருத்து ஆழ்நிலை உறக்கத்தில் சரியாக இருக்கும்இவையிரண்டும் நமது சுபாவமாக இருந்தால் நமக்கு களைப்போ, சலிப்போ வரக்கூடாதுஆனால் நாம் இந்த சரீரங்களால் களைப்பு, சலிப்பு ஏற்படுகிறதுநான் இவையிரண்டு சரீரங்கள் ஸ்வரூபமாக இருப்பதால் நமக்கு களைப்போ சலிப்போ இருக்கக்கூடாதுஆனால் உண்மையில் அப்படியில்லைஅதனால் நாம் அடிக்கடி உறங்கச் செல்கின்றோம்.
5.   ஆழ்நிலை உறக்கத்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்-19
தத்3யதா2 அஸ்மின் ஆகாஶேஎவ்விதம் இந்த ஆகாயத்தில்
ஶ்யேன -  பெரிய உடல் கொண்ட கழுகு, வேகமாக பறக்கக்கூடிய கழுகு
ஸுபர்ணோ - சிறிய உடல், மெதுவாக பறக்கக்கூடிய பறவை
விபரிப்த்யவிதவிதமான திசைகளில் பறந்து கொண்டு
ஶ்ராந்த: -  களைப்பு ஏற்படுகிறது
ஸம்ஹத்ய: பக்ஷோஇறகுகளை சுருக்கிக் கொண்டு
ஸம்லயாய த்4ரியதே - கூட்டை நோக்கி ஓய்வெடுக்க சென்றது
ஏவம் ஏவ - அது போல;
அயம் புருஷ:ஜீவனாகிய நாம்
ஏதஸ்மா அந்தாய தா4வதிஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.
நாம் ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளில் ஏற்பட்ட கஷ்ட-நஷ்டங்களால் அடைந்த களைப்பினால் நம்முடைய கூடாக வர்ணிக்கப்படும் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
யத்ர: ஸுப்தோஎந்த நிலையில் ஆழ்நிலை உறக்கத்தில்
ந கஞ்சன காம் காமயதே - எந்தப் பொருளுக்கும் ஆசைப்படாத நிலை
ந ஸ்வப்னேம் ப்ஶ்யதி - எந்தக் கனவும் காண்பதில்லை.
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் கழுகுக்கு களைப்பு ஏற்பட்டால் அது ஓய்வெடுக்க தன் கூட்டிற்கு செல்வது போல, ஜீவனாகிய நாம் விழிப்பு நிலையிலும், கனவிலும் உடலாலும், மனதாலும், இந்திரியங்களாலும் செய்த செயல்களினால் ஏற்படுக் களைப்பை போக்க நமது கூடாகிய ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
 
ஸ்லோகம்-20
ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் நம்முடைய அவித்யா நமது சுபாவமா, இல்லையா? எந்தவிதமான சம்பந்தம்? என்று விளக்கப்படுகிறது.
 
அவித்யாவுக்கு எதிராக வித்யா இருப்பதால், அது வந்தவுடன் அவித்யா சென்று விடும்எனவே எது நம்மிடமிருந்து நீக்க முடியுமோ அது நம்முடைய சுபாவமல்லஸ்தூல, சூட்சும சரீரத்தை நீக்கி ஆழ்நிலை உறக்கத்திற்கு போக முடிவது போல, அவித்யாவை நீக்கி ஆத்ம ஞானம் அடையலாம்.
 
ஒவ்வொரு ஜீவர்களிடம் ஹிதா என்ற பெயருடைய நாடி இருக்கிறதுஇது தலைமுடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டமுடையது அதன் வழியாகத்தான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறான்இதனால் களைப்பு நீங்கி இதமாக இருக்கிறான். அந்த நாடிக்குள் விதவிதமான ரஸங்கள் இருக்கின்றதுநம்முடைய வாஸனைகள் அந்த நாடிக்குள்தான் இருக்கின்றதுஅப்படி போகும்போது நாடிக்குள் இருக்கும் வானைகளிலிருந்து பிராரப்த கர்ம பலன்படி சிலவற்றை எடுத்துக் கொண்டு கனவுக்கு செல்கின்றான்இவன் பார்ப்பவைகளெல்லாம் வெறும் தோற்றமே அது இவனிடத்தில் இருக்கும் அவித்யாவினால்தான் இந்த கனவு தோற்றங்கள் உருவாகின்றனஇவனுக்கு அனைத்தும் நான் என்று உணரும் ஞானம் வரும்போது அவனிடத்திலிருந்து அவித்யா நீங்கி ஆனந்தமயமான மோட்சத்தை அடைகிறான்ஆகவே ஆத்மாவுக்கும் அவித்யாவுக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை.
 
மந்திரவிளக்கம்:
ஸ்தூல உடம்பில் ஹிதா என்ற நாடி செல்கிறது. வெண்மையான, நீலமான, சிவப்பான, பச்சையான இப்படிப்பட்ட வர்ணங்களையுடைய ரஸங்கள் நாடியில் இருக்கின்றது.
அத2 யத்ர: ஏனம் க்4னந்தி ஏவ - யாரோ கொல்ல வருகிறார்கள்
ஜினந்தி ஏவ, ஹஸ்தி ஏவ, விச்சா2ய ஏவ க3ர்தம் ஏவ பததி - அடிமையாக இருப்பது போல, யானை துரத்துவது போல, குழியில் விழுவது போல பாவ-கர்ம வசத்தினால் கனவில் அனுபவிக்கிறோம்.
யதே3வ ஜாக்3ரத்3 ப4யம் பஶ்யதிஜாக்ரத் அவஸ்தையில் எப்படி பயந்து கொண்டு சில விஷயங்களை அனுபவிக்கிறோமோ அதே போல கனவிலும் பயந்து கொண்டு சிலவற்றை அனுபவிக்கிறான்கனவில் தேவர்களைப் போலவும், ராஜாவை போலவும், கடவுளாகவும் நினத்துக் கொண்டு இதுதான் என் உலகம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றான்.
 
இவ்விதமான ஞானத்தினால் அவித்யாவானது நீக்கப்படுகிறது
அஹம் அஸ்மி இதம் ஸர்வஹநானே பார்க்கப்படும் அனைத்துமாக இருக்கிறேன் என்று ஒருவன் எப்பொழுது அறிகின்றானோ அப்பொழுதே அவன் அவித்யா நீங்கப்பெற்று முக்தனாகிறான். 
ஸஹ அஸ்ய பரமோ லோகஹஇந்த ஞானிக்கு அவன் அடைந்த இந்த நிலையானது மிகவும் மேலானது
 
----0000----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...