மீமாம்ஸ என்கின்ற பூஜ்ய விசாரமானது வணங்கத்தக்கதும், போற்றுதலுக்கு உரியதான மேன்மையான விசாரம். வேதத்தை ஜெய்ம்னி மகரிஷியும், .வியாஸ பகவானும் விசாரம் செய்துள்ளார்கள். ஜெய்மினி வேதத்தின் முதல் பாகத்தை எடுத்துக் கொண்டு விசாரம் செய்துள்ளார். அதற்கு பூர்வமீமாம்ஸம் என்று பெயர். அதை பின்பற்றுபவர்கள் பூர்வமீமாம்ஸகர்கள் என்று கூறுவர். வியாஸ பகவான் வேதத்தின் இறுதிபகுதியான வேதாந்தத்தை விசாரம் செய்துள்ளார். வேதாந்தம் என்பதை உபநிஷத் என்றும் அழைப்பர். இதற்கு உத்தரமீமாம்ஸ என்ற பெயரும் பிரம்மசூத்திரம் என்ற பெயரும் உண்டு. உபநிஷத்திலுள்ள வாக்கியங்களுக்கு அர்த்தத்தை நிர்ணயம் செய்துள்ளார். உபநிஷத் கருத்துக்களுக்கு முரண்பாடாக உள்ள மற்ற மதங்களின் கருத்தை நிராகாரம் செய்துள்ளார். நான் மூன்று காரணங்களினால் இந்த விசாரம் செய்கின்றேன் என்று கூறியுள்ளார். அவைகள்.
2. இந்த அறிவினால் மோட்சம் என்று பலன் கிடைப்பதாலும்
3. இந்த அறிவையும், மோட்ச பலனையும் நாடும் சாதகர்களுக்காகவும்
- பூர்வமீமாம்ஸையில்
விதவிதமான கர்மங்கள், யாகங்கள் கூறப்படுகின்றது.
ஏதாவது ஒரு தேவதையைக் குறித்தும், பலனுக்காகவும் யாகங்கள்
செய்வதால் ஈஸ்வரனைப்பற்றி ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது.
- தியாகம், உபாஸனை, யாகங்கள்
மூலமாக சொர்க்கத்திற்கும்,பிரம்ம லோகத்திற்கும் செல்வதே
மோட்சத்தை அடைவதாகும்
- இவைகளை நாடும் சாதகர்கள் எங்களிடத்தில்தான் இருக்கிறார்கள்
- ஈஸ்வரன்
என்ற சொல்லில் இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. அவரோடு மாயை சேர்ந்திருக்கின்றது.
இந்த ஈஸ்வர தத்துவம் விசாரம் செய்யப்படுவதில்லை.
ஈஸ்வர நிர்குண ஸ்வரூபம், ஜீவனின்
ஸ்வரூபம் உபநிஷத்தில்தான் பேசப்பட்டிருக்கிறது. எனவே இதை விசாரம் செய்கின்றேன்.
- சொர்க்கம், பிரம்மலோகம் இறுதி லட்சியமல்ல,
இவைகளுக்கு அப்பால் அடைய வேண்டியது ஒன்று இருக்கிறது. பிரம்மத்தை
அடைதலே மோட்சமாகும். பரம்பொருள் ஸ்வரூபமே
நான் என்ற அறிவை அடைவதே பிரம்மத்தை அடைவதாகும்.
அதனால் சம்சாரம் முழுவதுமாக நீங்கிவிடும்.
ஆகவே உபநிஷத்துக்கு விளக்கம் எழுத வேண்டியதாக இருக்கிறது. ஜீவனும், ஈஸ்வரனும்
ஒன்றுதான் என்ற அறிவை அடைந்தவுடன் மனநிறைவை அடைகிறான். துயரங்களிலிருந்து விடுபடுகிறான்.
- இந்த பயனை அடைவதில் ஆசையுள்ளவர்களும் இருக்கிறார்கள்.
இந்த உபநிஷத் ஶுக்ல யஜுர் வேதத்தில் அமைந்துள்ளது. உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்ற அர்த்தமாகின்றது.
உப – மிக அருகில் இருக்கின்றது;
ஓம் பூர்ணமத3 பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே |
பூர்ணம் அத3:: - ஈஸ்வரன் வரையறுக்கப்படாத பூரண ஸ்வரூபமாக இருக்கிறார்
பூர்ணஸ்ய – பூரணமான ஜீவனுடைய
விசாரம்
பூரணம் என்றால் வரையறுக்கப்படாதது. கால,தேச,வஸ்து, குணம் இவைகளால் வரையறுக்கப்படாதது. பூரணம் என்ற சொல் பிரம்மனையும் குறிக்கும். எனவே பிரம்மன் மட்டும்தான் இருக்கிறது என்று குறிப்பிடப்படுகின்றது. மற்றவைகள் எல்லாம் மித்யா, அபூரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஈஸ்வரன், ஜீவன், ஜகத் என்கின்ற மூன்று தத்துவங்கள் தோன்றுகிறது. இவைகளின் உண்மையான ஸ்வரூபம் சாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
பூரணமான பிரம்மத்திற்கு பொய்யான “காரணம்” என்ற தன்மையை தற்காலிகமாக கொடுக்கிறது. காரண பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது. இதையே ஈஸ்வரன் என்றும் கூறப்படுகிறது. பிரம்மன் + காரணம் = ஈஸ்வரன். இதிலிருந்து பூரணத்திலிருந்து வந்த ஈஸ்வரன் பூரணமானவர். பூரணத்திற்கு காரியம் என்ற தன்மையும் கொடுக்கப்படுகிறது. எனவே பூரணம் + காரியம் = ஜீவன் என்ற சமன்பாடு கிடைக்கின்றது. காரணத்திலிருந்து வரும் காரியத்திற்கு காரணத்தின் தன்மை நிச்சயமாக இருப்பதைப்போல, பூரணமான ஈஸ்வரனிடமிருந்து வந்த காரியமான ஜீவன் பூரணமானவனே என்று அறிந்து கொள்ளலாம். கடலிலிருந்து அலைகள் தோன்றின என்ற வாக்கியத்தில் அலைகள் வெறும் நாம-ரூபம்தான். இரண்டிலும் பொதுவக இருப்பது நீர்தான். நாம-ரூபத்திற்கு வேறொரு பெயர் உபாதி. அலைகளில் உள்ள நீரை நீக்கிவிட்டால் அலைகள் இருக்காது. நாம-ரூபத்துடன் கூடிய ஜீவனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை எடுத்து விட்டால் பூரணம் மட்டும் இருக்கும். நாம-ரூபம் வெறும் தோற்றம் பொய் என்று சொன்னால் காரணம் பொய்யாகிவிடும். எனவே காரியமும், காரணமும் நீங்கி விட்டதால் எஞ்சியிருப்பது பிரம்மன், பூரணம் மட்டும்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.
ஈஶா வாஸ்யம் இத3ம் ஸர்வம் யத்கிஞ்ச ஜக3த்யாக் ஜக3த் |
இத3ம் ஸர்வம் – நம்முடைய அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தும்
களிமண்ணால் பானைகள் வியாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தில் களிமண் பானைகளுக்கு உபாதான காரணமாக இருப்பதைக் காணலாம். ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது உபாதான காரணம் என்று கூறுவர். நிமித்த காரணம் ஸ்ருஷ்டிக்கு மாத்திரம் காரணமாக இருப்பது. குயவன் பானை உற்பத்தி செய்வதற்கு நிமித்த காரணமாக இருக்கிறன். ஈஸ்வரனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அவர் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
களிமண் பானையை வியாபித்திருக்கிறது என்பது களிமண்ணே வெறும் நாம-ரூபமாக இருக்கும் போது அதற்கு பானை என்று கூறுகிறோம். உண்மையில் பானை என்ற ஒன்றுமில்லை. அதேபோல இந்த ஜகத்தை ஈஸ்வரன் வியாபித்திருக்கிறார் என்றால் அவரேதான் நாம-ரூபங்களாக காட்சியளிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். பூரண ஸ்வரூபமான பரமாத்மா நாம-ரூபங்களாக தோன்றும்போது அவரே பரமேஸ்வரனாக உலகமாக காட்சியளிக்கின்றார்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புக்களையும் ஈஸ்வரன் என்ற அறிவைக் கொண்டு மறைத்துவிட வேண்டும் என்று சங்கரர் வலியுறுத்துகிறார். பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜகத் வெறும் நாம-ரூபங்கள்தான் என்ற அறிவுடன் பார்க்கும் போது ஜகத் மறைந்து பரமேஸ்வரன் தெரிவார். நாம-ரூபத்தில் திருஷ்டியை வைத்தால் உபாதானம் தெரியாது. அதை மறைத்து விட்டால் உபாதானத்தை உணர முடியும். கண் வழியே பார்க்கின்ற அனைத்துமே ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, மனதால் பார்ப்பவைகள் அனைத்தும் ஜீவன் ஸ்ருஷ்டி. நாம் மனதிலுள்ள ராக-துவேஷங்களினால் நாம் ஒரு உலகத்தையே படைத்து அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
மனிதனிடம் இருக்கும் ஆசைகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகள் மகன், சொத்து, உலகம் அதாவது தன்னுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இவைகளை துறப்பதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள். தியாகம் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதுதான் இதை தியாகம் செய்தல் இங்கு குறிப்பிடப்படுகிறது. நம்மிடம் இருக்கும் செல்வம், பொருட்கள் மீது ஆசைக் கொள்ளாதே. மற்றவர்கள் பொருட்கள் மீது ஏன் ஆசைப்படக்கூடாது என்ற கேள்வி வரும்போது இவ்வாறு எண்ணிப்பார்த்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாமும் ஈஸ்வரனுடையதாக இருக்கும் போது நானே ஈஸ்வரன் என்ற அறிவுடன் பார்க்கும்போது உலகிலுள்ள அனைத்துப் பொருட்கள் என்னுடையதாக நினைத்துக் கொள்வோம். இதுவே ஈஸ்வர திருஷ்டி. அனைத்தும் மித்யா என்ற அறிவுடன் இருத்தல்.
குர்வன்ன ஏவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தம் ஸமா: |
குர்வன் ஏவ இஹ – நாம் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது
ஜிஜீவிஷேத் – வாழ்வதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.
அஸுர்யா நாம தே லோகா அந்தே4ன தமஸாவ்ருதா: |
அஸுர்யா நாம – அஸுர்யா என்ற பெயருடைய
யே தே ஆத்மனஹ – எந்த மனிதர்கள் ஆத்மாவான தன்னை அழித்துக் கொள்கின்றார்களோ
ஆத்மாவை அழித்து கொள்வது என்பது அனாத்மாவை அதன் மீது ஏற்றி வைத்துக் கொள்வது என்று பொருட் கொள்ள வேண்டும். இதனால் சம்சாரத்தில் சிக்கி தவிப்பதையே ஆத்மாவை அழித்துக் கொள்பவர்கள், தன்னையே அழித்துக் கொள்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அனேஜத்3 ஏகம் மனஸோ ஜவீயோ நைனத்3தே3வா ஆப்னுவன்பூர்வமர்ஷத் |
அக்ஞானிகள் உண்மையான வஸ்துவின் மேல் அனாத்மா வஸ்துவை பார்த்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் உபநிஷத் இந்த முறையை கையாண்டு உபதேசிக்கிறது. எனவே முதலில் ஜீவனின் பார்வையை, அவஸ்துவை இருப்பதாக ஏற்றுக் கொண்டு பிறகு அதனுடைய மித்யா தன்மையை உபதேசிக்கிறது. அதன் மூலம் அவனிடத்தில் உள்ள அறியாமையை நீக்கி ஆத்ம தத்துவமானது விளக்கப்படும்போது நன்கு புரிந்து விடுகிறது. பிரம்மனான ஆத்மாவின் மீது நம்முடைய மூன்று சரீரங்களும் ஏற்றி வைக்கப்படுகிறது. அறியாமையில் இருப்பவர்கள் இந்த மூன்று சரீரங்களைத்தான் நான் என்று சுபாவமாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
தத்3- அந்த ஆத்மா
ஏனத் – இந்த ஆத்ம தத்துவத்தை
ந ஆபுனுவன் – அடைய முடியாது, அறிந்துக் கொள்ள முடியாது. இது புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அவைகளால் கிரகிக்க முடியாது
ஈஸ்வரனே ஹிரண்யகர்ப்பனாக தோன்றி அனைத்து செயல்களையும் விதவிதமான தேவதைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றார். தானே விதவிதமான தேவதைகளாக தோன்றி கொண்டுமிருக்கிறார்.
தத்3 ஏஜதி தன் நைஜதி தத்3 தூ3ரே தத்3வந்திகே |
இதில் ஆத்மாவை உபாதியுடனும், உபாதியை நீக்கியும் பார்க்கப்படுகிற்து
தத3 தூ3ரே – மிகவும் தொலைவில் இருக்கிறது
பத்தாவது மனிதனான தன்னை தேடுபவனுக்கு மிக தொலைவில் இருக்கிறது. அவனே தான்தான் அவன் என்று அறிந்தபிறகு மிகவும் அருகில் இருக்கின்றான். இதிலிருந்து அவன் தொலைவிலும் கிடையாது, அருகிலும் கிடையாது. ஏனென்றால் அவனே பத்தாவது மனிதானாக இருக்கின்றான். அதுபோல ஆத்மாவையும் புரிந்து கொள்ளலாம்.
தத்3 அந்தரஸ்ய ஸர்வஸ்ய – இது அனைத்திற்கும் உள்ளேயும் இருக்கிறது. அதே சமயம் அனைத்திற்கும் வெளியேயும் இருக்கிறது.
யஸ்து ஸர்வாணி பூ4தான்ய ஆத்மன்ய ஏவானுபஶ்யதி |
யஹ து – யாரொருவன்
யஸ்மின் ஸர்வாணி பூதான்ய ஆத்மைவாபூ4த்3 விஜானத: |
யஸ்மின் – எப்பொழுது, எந்தக் காலத்திலும்
ஆட்சேப முறையில் சொல்லுதல் கருத்து அதன் இருப்பை ஆழமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஞானமானது அவ்வளவு சுலபமாக மனதில் பதியாது. எனவே எந்த நேரத்தில் இந்த அறிவு மனதில் இருக்கிறதோ அந்த நேரத்தில் கோபமும், மோகமும் இருக்காது. எந்த ஞானியிடத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தில் தானாகவே இருப்பதாக அறிவுடன் இருக்கின்றானோ அவனிடத்தில் சோகமும், மோகமும் இல்லை.
மோகம் – ஆத்ம ஆவரண லட்சணம், ஆத்மாவை மறைக்கும் நிலை
ஸ பர்யகா3ச சு2க்ரம் அகாயம்
ஸஹ – மேற்சொன்ன ஆத்மதத்துவம்
ஶுத்தம் – தூய்மையானது, காரண சரீரமற்றது.
அபாபவித்3த4ம் - பாவ-புண்ணியங்களற்றது, தர்ம-அதர்மங்கள் இல்லாதது
அந்த4ம் தம: ப்ரவிஶந்தி யேSவித்3யாம் உபாஸதே |
கர்மங்கள் என்று சொல்வது வைதீக கர்மங்கள். உபாஸனா வேதத்தில் சொல்லப்பட்ட வைதீக தியானங்கள். கர்மத்தின் பலனில் ஆசைப்பட்டு செய்வது சகாம கர்மங்கள், இவைகளை செய்வதால் பித்ரு லோகத்தை அடையலாம். கர்மம் செய்பவர்களின் மனம் பரபரப்பாகவே இருக்கும். உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செயல்களையும், மனதால் செய்யப்படும் தியானம், போன்றவற்றையும் ஆசைவசப்பட்டு செய்வதால் அதன் பலனாக போகத்தை அனுபவிக்கிறான். அசுவமேத யாகத்தை செய்வதால் சொர்க்க லோகத்தை அடைகிறார்கள். இதே யாகத்தை பிராமணன் உபாஸனையாக செய்தாலும் அதே பலனை அடைகிறான்.
ஸமுச்சயஹ – சேர்த்தல் – கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்பவன் அடையும் பலன் பிரம்மலோகத்தை அடைவது கர்மத்தை நிஷ்காமமாக செய்தால் மனத்தூய்மை அடையலாம். நிஷ்காம உபாஸனையின் பலனாக அடைவது மன ஓருமுகப்பாடு.
அன்யத்3 ஏவாஹுர் வித்3ய்யான் யத்3 ஆஹுர் அவித்3ய்யா |
அன்யத்3 ஏவ ஆஹு வித்யயா - .உபாஸனை செய்வதினால் ஒரு வகையான பலன் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்
வித்யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
யாரொருவன் தியானத்தையும், கர்மாவையும் ஒன்று சேர்ந்து செய்யக்கூடியவை என்று புரிந்து கொள்கின்றானோ அவன் செயல் செய்வதனாலேயே மரணத்தையும் வென்று தியானத்தினாலேயே அழிவற்ற நிலையை அடைகின்றான். இங்கே ம்ருத்யு என்ற சொல்லானது நமக்கு இயல்பாகவே எந்த செயல்களை செய்ய விரும்பி செய்கின்றோமோ அதைக் குறிக்கிறது. இதையே ஸ்வாபீக கர்மம் என்றும் கூறப்படுகிறது. நமக்கு என்ன செயல் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது. இந்த கர்மத்தின் பலனாக சுபாவமாக செய்யும் நிலையிலிருந்து விடுபட்டு சாஸ்திர தர்மப்படி இயல்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். உபாஸனையின் மூலம் தேவதையை தியானித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்வரூபமாகவே உயர்ந்து விடுகின்றான். இதையே அம்ருதம் என்று கூறப்படுகிறது.
அந்தம் தம: ப்ரவிஶந்தி யேSஸம்பூ4திம் உபாஸதே |
எது தோன்றியுள்ளதோ அதை ஸம்பூதி என்று பொருட் கொள்ள வேண்டும்.. எது வெளித்தோற்றத்திற்கு வராமல் இருக்கிறதோ அதை அஸம்பூதி என்று பொருட்கொள்ள வேண்டும். இங்கே ஸம்பூதி உபாஸனம் என்பது ஹிரண்யகர்ப்ப உபாஸனம் என்று பொருட் கொள்ள வேண்டும். அஸம்பூதி என்பதை ப்ரகிருதி உபாஸனம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
யார் பிரகிருதியை மட்டும் உபாஸிக்கிறார்களோ அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள். யார் ஹிரண்யகர்ப்ப உபாஸனையில் மட்டும் பற்று உள்ளவர்களாக அதை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மேற்சொன்ன இருளை காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்
அன்யத்3 ஏவாஹு: ஸம்ப4வாத்3 அன்யத்3 ஆஹுர் அஸம்ப4வாத் |
ஸம்பூதி உபாஸனையை செய்வதால் ஒருவகையான பலன் கிடைக்கின்றது. அஸம்பூதி உபாஸனை செய்வதால் வேறுவகையான பலன் கிடைக்கின்றது. இது கற்றறிந்தவர்கள் எங்களுக்கு கூறியதையே நாங்கள் கேட்டிருக்கிறோம். இவ்விதம் எங்களுக்கு யார் சொன்னார்களொ அந்த தீரர்களுடைய வார்த்தையை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
ஸம்பூதி உபாஸனையின் பலன் – அஷ்டமகா சித்திகளை அடைவது
ஸம்பூ4திம் ச வினாஶம் ச யஸ் தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
யார் பிரகிருதி உபாஸனையையும், ஹிரண்யகர்ப்ப உபாஸனையும் சேர்த்து செய்கின்றானோ, அனுஷ்டிக்கின்றானோ அவர் ஹிரண்யகர்ப்ப உபாஸனையின் பலனாக மரணத்தை தாண்டி, பிரகிருதி உபாஸனையின் பலனாக பிரகிருதியுடன் லயமாகின்ற அடைகின்றார்.
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் |
இந்த பிரார்த்தனை உபாஸனை செய்பவர்களால் செய்யப்படுகிறது. நல்ல உலகத்தை அடைய வேண்டும் என்பதற்காக செய்வது. முமூக்ஷூவின் பிரார்த்தனையாகவும் இவைகளை விசாரம் செய்தால் அவன் மோட்சத்தை அடைவதற்காக செய்கின்றான் என்று புரியும்.
முமூக்ஷுவின் பிரார்த்தனை
உலகத்தில் இருக்கின்ற புலனுகர் போகப் பொருட்களால் பரபிரம்மத்தினுடைய உண்மையான இருத்தல் மறைத்திருக்கின்றது. மாயையின் சக்தியால் மனதை கவர்ந்திழுக்கும்படி தோன்றியிருக்கின்ற பொருட்களின் மாயையில் விழுந்து விடாமல் என்னை பாதுகாப்பீர்களாக. நற்பண்புகளை பின்பற்றி கொண்டிருக்கும் முமுஷுவான என்னிடத்திலிருந்து மாயையை நீக்கி விடுவீர்களாக.
ஸத்யஸ்ய முக2ம் – ஹிரணயகர்ப்பனுடைய லோகத்தின் வாயில், பிரம்மத்தை அடைவதற்கான நுழைவாசல்
பூஷன்ன ஏகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய
வ்யூஹ ரஶ்மீன் ஸமூஹ தேஜ: |
யோSஸாவ் அஸௌ புருஷ: ஸோSஹம் அஸ்மி || 16 ||
உபாஸகனின் பிரார்த்தனை ( கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்து கொண்டிருப்பவர்கள், பிரம்மலோகத்தை அடைவதற்காக உபாஸனை செய்பவர்கள் )
உலகத்தில் மனதை கவர்ந்திழுக்கும் பொருட்களை நீக்கிக் கொள். மோட்சத்தை அறிய வேண்டும். அந்த ஆதித்ய மண்டலத்திலிருக்கின்ற பிரம்ம தத்துவம் நானாக இருக்கிறேன் என்ற அறிவை உடையவனாக இருக்கிறேன்
வாயுர் அனிலம் அம்ருதம் அதே2த3ம் ப4ஸ்மாந்தம் ஶரீரம் |
அக்னிதேவனை குறித்து, மனதிடமே பிரார்த்தனை. இப்பொழுது இறக்கும் தறுவாயில் இருக்கும் எனக்கு பிராணனானது.
அக்3னே நய ஸுபதா2 ராயே அஸ்மான் விஶ்வானி தே3வ வயுனானி வித்3வான் |
ஓ அக்னிபகவானே எங்களை நற்கதியை அடையக் கூடிய நல்ல மார்க்கத்தில் அழைத்து செல்ல வேண்டும். திரும்பி வராத உலகமான பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
ராயே – செய்த கர்மபலன்களின் போகத்திற்காக
தொகுப்புரை
01-08 வேதாந்த கருத்துக்கள் உடையது
01-01:
இதில் வேதாந்தத்தின் மையக்கருத்து கூறப்பட்டுள்ளது. இந்த
உலகத்தில் உள்ள படைக்கப்பட்ட அனைத்திலும் ஈஸ்வரனே வியாபித்திருக்கிறார். இந்த
உலகத்திற்கு அவரே உபாதான காரணமாக இருக்கிறார். இந்த உலகத்தை ஈஸ்வரனைக் கொண்டு மூடி
விடவேண்டும். இருமையை நீக்கி அனைத்திலும் ஈஸ்வர ஸ்வரூபத்தையே பார்க்க வேண்டும்.
இந்த அறிவை தியாகத்தினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தியாகம் என்பது அகங்காரம்,
மமகாரம் இவைகளை நீக்கிவிடுவதையே குறிக்கின்றது. யாருடைய பொருளையும் அபகரிக்க கூடாது.
02-02 மேற்சொன்ன அறிவை அடைய தகுதியில்லாதவர்களுக்கு
மனதிலுள்ள ராக, துவேஷங்கள் தடையாக இருந்தால் கர்மயோகத்தை
செய்து தகுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
சாஸ்திர விதித்த கடமைகளை செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இப்படி வாழ்வதால்
கர்மத்தால் பந்தப்படாமல் ராக, துவேஷங்கள் நீங்கி எது உண்மை
எது பொய் என்று பிரித்தறியும் அறிவை அடைவோம்.
மேற்சொன்ன அறிவை அடைய தகுதிப்படுத்தும்
03-03 அறியாமையில் உள்ளவர்களை நிந்தனை
செய்கின்றது. இத்தகையவர்கள் தன்னைத்தானே
கொலை செய்வது போன்ற நிலைக்கு சமானமாகும் என்று கூறுகிறது
04-05 ஆத்ம தத்துவத்தை அத்யாரோப அபவாதம் முறையில்
உபதேசிக்கின்றது. இருப்பதை, அனுபவித்துக் கொண்டிருப்பதால்
அவைகளை முதலில் ஏற்றுக் கொண்டு பிறகு அவைகள் மித்யா என்று நீக்கி பிரம்ம ஞானத்தை
உபதேசிக்கிறது. பிரம்மத்தின் லட்சணங்களான அசைவற்றது, வேகமாக
செயல்படக் கூடியது போன்றவற்றை எடுத்துக் கூறி பிரம்மத்தின் துணைக் கொண்டுதான்
பிரபஞ்சம் செயல்படுகின்றது என்பதையும் விவரித்துள்ளது
06-07 இதில் பிரம்ம ஞானத்தினுடைய லட்சணங்களும்,
பலனும் கூறப்பட்டுள்ளது. யார் எல்லா ஜீவராசிகளையும்
தன்னிடத்திலேயும், அவைகளில் தன்னையும் பார்ப்பதே ஞானபலன்
லட்சணம். எந்த காலத்தில் இந்த அறிவு
நிலைபெறுகின்றதோ அப்போதே அவனிடத்திலிருந்து மோகமும், சோகமும்
விடைபெற்று சென்றுவிடும்