ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-6
அத்தியாயம்-03
திருத்தம் செய்யப்பட்டது – 10-03-2022
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-8: அக்ஷரம் (अक्ष्रम्) பிராமனம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்லோகம்-1
வணக்கத்துக்குரிய பிரமாணர்களே யாக்ஞவல்கியரிடம் நான் இரண்டு கேள்வியை கேட்கப்-போகிறேன். அவர் பதில் சொல்லிவிட்டால், யாராலும் அவரை வெல்ல முடியாது. அந்த பிராமணர்கள் அனுமதி அளித்தார்கள்.
ஸ்லோகம்-2
கார்கி, யாக்ஞவல்கியரை பார்த்து, “நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். காசி, விதேஹ நாட்டை சேர்ந்த வீர்ர்கள் வில்லில் எடுத்து அதில் இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு வில்லை வைத்து பகைவர்களை பயந்தோட செய்வார்கள். அதேபோல இரண்டு கேள்விகளை உன்னிடம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள். அவரும் நீ கேள் என்று கூறினார்.

ஸ்லோகம்-3
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது (எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு, என்றும் இருக்கப்போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.
ஸ்லோகம்-4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது. யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள்.
ஸ்லோகம்-6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் தத்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?
ஸ்லோகம்-8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பிறகு இந்த அக்ஷரத்தின் லக்ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.
ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்ஷரம்தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை; அநஹ – மிகச்சிறியதுமில்லை; அக்ரஸ்வம் – குட்டையுமல்ல; அதீர்கம் – உயரமானதுமில்லை. மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது; எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது. இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல, பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்), அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
அகந்தம் – வாசணையற்றது,
வாசணையை அறியும் இந்திரியங்களற்றது.
அசக்ஷும் – கண்களால்
எதையும் கிரகிக்க முடியாது, கண்கள் இல்லாதது
கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும்
இல்லாதது இவ்வாறாக இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதேஸம் – விருத்தி
ரூப ஞான ரஹிதம் – எண்ண விருத்திக்கள் இல்லை
அவாத் அமனஹ – அந்தக்கரணமற்றது
அபிராணன் – பிராணன்
இல்லாதது, சூட்சும சரீரமற்றது.
அமுகம் – நுழைவாயில்
கிடையாது.
அமாத்திரம் – எதைக்
கொண்டும் அளக்க முடியாது, எடையற்றது
அனந்தரம் – முடிவற்றது.
அபாக்யம் – உள்ளே,
வெளியே என்பதெல்லாம் கிடையாது
இவ்வாறு
எல்லவற்றையும் நீக்கியப்பிறகு எஞ்சியிருக்கிறதுதான் பிரம்மம்.
தத்- அந்த பிரம்மன்,
கிஞ்சன – எதையுமே,
ந
அஸ்னாதே
– சாப்பிடாது,
கஷ்சன – எதுவும்
தத் – அந்த பிரம்மத்தை
ந
அஸ்னாதே
– சாப்பிடாது.
இது அகர்த்தாவாகவும், அபோக்தாவாகவும் இருக்கிறது. இது எந்த செயலையும் செய்யாது, அதனால் எந்த பலனையும் அனுபவிக்காது. இது போக்யாவும் அல்ல. அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை, அனுபவிப்பனாகவும் இல்லை. போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்
அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும் செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான். சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது (எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு, என்றும் இருக்கப்போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.
ஸ்லோகம்-4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது. யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள்.
ஸ்லோகம்-6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் தத்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?
ஸ்லோகம்-8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பிறகு இந்த அக்ஷரத்தின் லக்ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.
ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்ஷரம்தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை; அநஹ – மிகச்சிறியதுமில்லை; அக்ரஸ்வம் – குட்டையுமல்ல; அதீர்கம் – உயரமானதுமில்லை. மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது; எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது. இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல, பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்), அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
தத்- அந்த பிரம்மன்,
இது அகர்த்தாவாகவும், அபோக்தாவாகவும் இருக்கிறது. இது எந்த செயலையும் செய்யாது, அதனால் எந்த பலனையும் அனுபவிக்காது. இது போக்யாவும் அல்ல. அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை, அனுபவிப்பனாகவும் இல்லை. போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்
அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும் செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான். சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.
ஸ்லோகம்-9
ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறது இந்த மந்திரம்; பிரம்மமானது ஜகத்துக்கு உபாதன காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. நிமித்தக் காரணம் சைதன்யமுடையது, உபாதான காரணம் ஜடமாக இருப்பது. இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் சீராக இயங்குகிறது. அக்ஷரம் என்ற தத்துவத்திடம் காரணம் என்ற தன்மையை ஏற்றி வைத்ததால் அது ஈஸ்வரனாகிறது.
இந்த ஈஸ்வரனுடைய ஆணையினால் (प्रशासने) சூரியனும், சந்திரனும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பூமியும், அந்த சுவர்க்க லோகமும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து பாயும் நதிகள், மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. எல்லா திசைகளிலிருந்து பாயும் நதிகள் அனைத்தும் அவனது ஆணையால் ஒடுகின்றன.

யார்
தானம் செய்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் புகழ்வார்கள். தானத்திற்கு
இரண்டு பலன் அவைகள் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, பிறகு
அதனால் அடையும் புண்ணியப்பலன். இதையெல்லாம் ஈஸ்வரனால் கிடைக்கிறது. தேவர்களும் கூட யாகம் செய்கின்ற மனிதர்களைச்
சார்ந்து வாழ்கிறார்கள். பித்ருக்களும் நாம் செய்யும் சிரார்தத்தைச்
சார்ந்திருக்கிறார்கள்.
ஸ்லோகம்-10
இதில்
பிரம்ம ஞானத்தின் பெருமை,
மனித ஜென்மத்தின் பெருமையும், காலத்தின் பெருமையும்
விளக்கப்பட்டிருக்கிறது. பிரம்மஞானத்தை விட்டு விட்டு வேறெதுவும் செய்தாலும் அது வீணாக போய்விடும். “ஹே கார்கி, இங்கு விளக்கப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற அக்ஷரத்தை அறிந்து
கொள்ளாமல் இந்த உலகத்தில் யாகங்கள் செய்கின்றனர், தவத்தை செய்கின்றனர்
அதுவும் பல்லாயிரம் வருடங்களாக செய்கின்றார்கள் இதற்கு கிடைக்கின்ற பலன் ஒரு எல்லைக்குள்தான்
இருக்கும். இது மோட்ச
பலனைக் கொடுக்காது. தவத்தினால் பாவங்கள் நீங்கும், புண்ணியம் அதிகமாகலாம் அதனால் அதிக சுகத்தை அடையலாம் ஆனால் செய்த தவத்தின்
பலன் முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்து விட வேண்டியதுதான். ஆத்மஞானம் அகங்காரத்தை நீக்கி விடுவதால்
மனதால் ஏற்படும் தடைகளை நீக்கும், அடைந்த ஞானத்தை நிலைநிறுத்துவதற்கு
உதவியாக இருக்கும், அதாவது ஞானநிஷ்டைக்கு உதவி புரியும்.
எல்லா செல்வங்களும் ஞானம் இல்லையென்றால் அகங்காரத்தைத்தான் அதிகரிக்கும்,
யாரொருவன் இந்த அக்ஷரத்தை அறிந்து கொள்ளாமல், இந்த உலகத்திலிருந்து,
சரீரத்திலிருந்து வெளியேறுகிறானோ, அவன் பரிதாபத்துக்குரியவன்,
தோல்வியடைந்தவன் (க்ருபணன்) என்றும், அதை அறிந்து வெளியேறுபவன் பிராமணன் என்றும்
அழைக்கப்படுவான். இவன்
பிரம்மனாகவே மாறியவன், முக்தியை அடைந்தவன், தன்னை அடைந்தவன். இந்த மனித சரீரத்தால் அடைய வேண்டியது பிரம்ம ஞானம் இதைத்தான் லக்ஷியமாக கொள்ள
வேண்டும். இந்த ஞானத்தை அடைவது மனிதனாக பிறந்ததின் சரியான பலனை
அடைந்தது போன்றது.
ஸ்லோகம்-11 – அக்ஷரத்தின்
லக்ஷணம்
இந்த
அக்ஷரமானது கண்ணால் பார்க்க முடியாது அதனால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது. இதை கேட்க முடியாது, அதனால்தான் கேட்க முடிகிறது.
இதை சிந்திக்க முடியாது ஆனால் அதனால்தான் சிந்திக்க முடிகிறது;
இதை அறிய முடியாது ஆனால் அதனால்தான் எல்லாவற்றையும் அறிய முடிகிறது,
இதற்கு வேறாக ஒன்றை பார்க்க முடியாது. இந்த அக்ஷரத்தில்
ஆகாசமானது சேர்க்கப்படுகிறது, இந்த ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது அக்ஷரம்.
ஸ்லோகம்-12
கார்கி பிராமணர்களை பார்த்து, “மதிப்பிற்குரிய பிராமணர்களே யாக்ஞவல்கியர் சரியாக பதிலளித்து விட்டார், எனவே நமக்கு உகந்தது எதுவென்றால் அவர்க்கு நமஸ்காரம் செய்து விட்டு விலகிவிட வேண்டும். உங்களில் யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது”, என்று கூறிவிட்டு அமைதியானாள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-9:
அக்ஷரம் (अक्ष्रम्)
பிராமனம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்லோகம்-1 லிருந்து 9 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்பனுடைய
பெருமை:
இவரே
விதவிதமான தேவதைகளாக வெளிப்பட்டிருக்கிறார். இதுதான் இவருடைய தன்மை.
நிவித் – வேதம்
பேசுகின்ற தேவதைகள் எண்ணிக்கையை பற்றி பேசுவது
சத்ரம் – ரிக் வேதத்தில்
ஸ்தோத்ரங்கள் உள்ள பகுதிக்கு இந்த பெயர்.
ஸ்லோகம்-10 லிருந்து 17 வரை சாரம்
மட்டும்
ஹிரண்யகர்ப்ப
உபாஸனைகள்:
இரண்டு
விதமான உபாஸனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டவித ஹிரண்யகர்ப்பனை உபாஸனை
செய்தல். நாம் பார்க்கும்
காட்சிகள், நம் மனதை பாதிக்கிறது, உணர்வுகளை
பாதிக்கிறது. நமக்கு
எது உண்மையென்றால் பார்த்த சம்பவம் இல்லை அதனால் அடைந்த மன பாதிப்புதான். இதே மாதிரி உபாஸனையின் மூலம்,
நம் மனதை தூய்மைபடுத்தலாம், அமைதியடையலாம்,
விசாலமடையலாம். உபாஸனை கற்பனைதான் ஆனால் அடையும் பலன் நிச்சயம்.
1. ஸாரீர புருஷ – ஹிரண்யகர்ப்பன் நம் சரீரத்தில் வெளிப்படுதல், நான்கு தத்துவங்களை சேர்த்து பார்த்தல்
a.
ஆயுதனம் – வெளிப்படுகின்ற இடம்
– பிருத்வி
b.
லோகஹ – அவருடைய லோகம்; அதன் மூலம் பார்க்கிறார் – அக்னி
c.
ஜோதிஹி – எந்தக்கருவியின் மூலமாக சிந்திக்கின்றான்
– மனம்
d.
தேவதா – வெளிப்படக் காரணம் – அன்னம்
ஸ்லோகம்-18 லிருந்து 24 வரை சாரம் மட்டும்
ஸ்லோகம்-25
மனதிற்கு ஆதாரம் என்ன? அது இருக்கும் இடம் ஸ்தூல சரீரம். மனம், சரீரம், பிராணன் ஒன்றையொன்றை சார்ந்திருக்கிறது. மனம் உடலில் இல்லையென்றால் சரீரம் ஜடமாகி விடும், நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகிவிடும். மனதை இந்த உலகை அனுபவிக்க வேண்டுமானால், இந்த தேடல் தேவைப்படுகிறது. பிராணன் செயல்பட உடலிருக்க வேண்டும்.
ஸ்லோகம்-26
1.
இந்த உடல் எதனால் தாக்கப்படுகிறது? ஐந்து பிராணன்கள்தான் இந்த உடலை காப்பாற்றிக்
கொண்டிருக்கிறது.
2.
நேதி,
நேதி என்று ஆத்ம தத்துவத்தை விளக்கப்பட்டிருக்கிறது
3.
இந்த ஆத்மா அழிக்கப்படுவத்தில்ல, எதையும்
அழிக்காது.
க்ருஹ்யம் – கிரகிக்கப்படுவது; அக்ருஹ்யதே – கிரகிக்கபடாதது,
பிரம்மனுடைய இருப்பை அறிவது எவ்வாறு?
ஸ்லோகம்-27
யாக்ஞவல்கியர் அங்குள்ள பிராமணர்களை பார்த்து, “உங்களில் யாராவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்கலாம்” என்று அழைத்தார். யாரும் முன்வராததால், தானே ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
ஸ்லோகம்-28
மரத்தையும், ஜீவனையும் ஒப்பிட்டு விவரிக்கிறார்.
மனிதர்கள்
அக்ஞானிகள்,
ஞானிகள் என்று இருவகையாக பிரித்தால் செல்வத்தை தானம் போன்ற கர்மத்தை
செய்கின்றவர்களுக்கு பிரம்மன் பலன் தரும் இருப்பிடமாக இருக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கேற்ற பலன்களை
இது வழங்குகிறது. செல்வத்தை
தியாகம் செய்பவர்களுக்கு நிர்குண பிரம்மன் ஆதாரமாக இருக்கும். ஆசையை விடுபவர்களுக்கு இதுவ கதியாக,
ஆதாரமாக இருக்கிறது.
சங்கரரின் விசாரம்:
ஆனந்தம் என்ற வார்த்தை இன்பத்தை அனுபவிக்கும் விஷயத்தைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்தில் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாக கூறப்படுகிறது. பிரம்மத்தின் லக்ஷணமாக இந்த ஆனந்தம் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரம்மானந்தமானது:
இங்கு
எதனால் அனுபவிக்க முடியாத இன்பம் என்று சந்தேகம் வருகிறது என்றால் வேதத்தில் கூறப்பட்டுள்ள
வார்த்தைகளை வைத்தே இந்த சந்தேகம் எழுகிறது. பிரம்மத்தை யாரும் அனுபவிக்க முடியாததாக இருக்கிறது என்று வேதம் உரைக்கிறது
கேள்வி பிரம்மனிடம் இருக்கும் ஆனந்தம் அனுபவிக்க முடியும். ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
- கர்ம, கர்த்திரு விரோதம் – அனுபவிப்பவனும்,
அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. எனவே பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
- அக்ஞானியும் பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாது ஏனென்றால் அவன்
பிரம்மத்தையே அறியவில்லை,
அடையவில்லை
- ஞானி பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான். முக்தன் பிரம்மத்திற்கு வேறுபடாதவன் என்றால் அவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது எனெனில் இவனே பிரம்மனாக இருத்தலால். அவன் வேறுபட்டவன் என்றால் பிரம்மத்தை அடையவில்லை, அறியவில்லை என்றாகி விடும்.
ஜீவன்
முக்தனாக இருக்கும்போது வேண்டுமானால் பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம், ஏனெனில்
இந்த சரீரத்தை வைத்துக் கொண்டு வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இறந்த பிறகு விதேஹ முக்தியில் எந்த
உபாதியும் இல்லாததால் இவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. பிரம்மானந்தத்தை அனுபவிப்பது தான்
மோக்ஷம் என்றால். விதேஹ
முக்தியில் அவனால் அனுபவிக்கவே முடியாது.
பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை நாம் அடைகின்றோம். பிரம்மம் நம்மிடத்திலே இருக்கிறது. எனவே இதை அடைந்தால் பிரம்மமாகவே ஆகிவிடுவோம். பிரம்மத்தை அறிவதால் நமக்கு மனநிறைவும், சுகமும், இன்பமும் கொடுக்கிறது. அது அனுபவத்திற்கு வருகிறது.
தொகுப்புரை:
முதல்
மூன்று பகுதிகள் உபாஸனையாகளையும், சில பண்புகளையும் விளக்குகிறது.
கடைசி
ஆறு பகுதிகள்
– வேதாந்த விசாரமும், பிரம்ம வித்யாவையும் விளக்குகிறது.
பகுதி-1
சில
உபாஸனைகள்,
சில பண்புகள். ஜீவன் மரணத்தின் பிடியில் இருக்கிறான். இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயம். ஸ்வாபாவிக உபாஸனை, நம் விருப்பப்படி செய்யும் செயல்கள். நம்முடைய கரணங்களை அந்தந்த தேவதைகளோடு
ஒப்பிட்டு தியானம் செய்வதால் அவைகள் தூய்மையடைகிறது அதன் மூலம் சித்தஸுத்தியை அடைகிறோம். சம்பத் உபாஸனை – சிறிய தியானத்தின் ஒன்றில் பெரிய தியானத்தின் பலனை அடையலாம்.
பகுதி-2
இரண்டு
விதமான ம்ருத்யு அறிமுகப்படுத்தப்பட்டது. அவைகள் கிரகம், அதிகிரகம். கிரகம்
என்பதற்கு நம்மை பிடித்துக் கொள்ளுதல் என்று பொருள், அதிகிரகம்
என்பதற்கு கிரகத்தை தன் வசத்தின் வைத்துக் கொள்வது என்று பொருள். ஜீவன் இந்த இரண்டின் வசத்தில் இருக்கின்றான். நாம் இந்திரியத்தின் வசத்தில் இருக்கின்றோம். விஷயங்கள் இந்திரியங்களை தன் வசத்தில்
வைத்திருக்கிறது
மிருத்யுவுக்கு ம்ருத்யு இருக்கிறதா என்றால் இருக்கிறது அதுதான் ஆத்மஞானம். நெருப்பு மிருத்யு என்றால் அதை அணைக்கும் நீர் அதனுடைய ம்ருத்யு. ஞானியின் இறப்பிற்கு பின் என்ன நிலையை அடைகின்றான். ஸ்தூல, சூட்சும சரீரங்கள் அந்தந்த ஸ்தூல,சூட்சும சரீரங்களுடன் கலந்து விடுகிறது. ஆனால் அவரது பெயர் மட்டும் பலகாலம் நிலைத்து இருக்கும். அக்ஞானி இறந்த பின் தேவதைகளுடன் ஒடுங்கி மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பு அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது.

பகுதி-3
ஹிரண்யகர்ப்பலோகம்
வரை அனாத்மாதான்,
சம்சாரம்தான். கர்மபல விசாரம் செய்யப்பட்டது.
புண்ணியத்தினால் மோட்சத்தை அடையமுடியாது. எனவே பாவத்தையும் விட்டுவிட வேண்டும்,
புண்ணியத்தையும் விட்டுவிட வேண்டும். அறியாமையால் அனுபவிக்கும் துயரங்களை
போக்க அறிவைத்தான் அடைய வேண்டும். கர்மங்கள் சாதனமாக இருக்க முடியாது.
பகுதி-4
எது
சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரம்மமோ அதை உபதேசம் செய்யுங்கள். அதுவே உன்னுடைய ஆத்மாதான். அது எந்தவித பிரமாணமில்லாமல் தானே
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இருக்கிறேன் இன்பதற்கு எந்த பிரமாணமும் தேவையில்லை. அதுபோல ஆத்மாவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. திருஷ்டி, திரஷ்டா
என்ற சொற்களின் பொருள் விளக்கம் சொல்லப்பட்டது. திரஷ்டா – சவிகார
உலகம், நிர்விகார ஆத்மா. மனம் இந்த உலகத்தை அனுபவிக்கிறது;
ஆத்மாவுக்கு இது திரஷ்டாவாக இருக்கிறது ஆனால் இதை பார்க்க முடியாது
பகுதி-4
பகுதி-5
பாண்டித்யம்-பாலயம்,
மௌனம்-அமௌனம், ஆத்மஸ்வரூபம்-ஆத்மா ஆகியவைகள் துயரமற்ற ஸ்வரூபம்
என்று விளக்கப்பட்டது.. பசி,தாகம், சோகம், மோகம், ஜரா, ம்ருத்யு, இப்படிபட்ட துயரங்களற்றது ஆத்மா. இரண்டு சாதனங்கள் கூறப்பட்டது
அவைகள் ஞானம், சந்நியாசம். ஞானம் அடைவதுதான் உண்மையான லட்சியம். இந்த ஞானத்தை அடைய உதவி செய்வது சந்நியாசம். ஞான நிஷ்டைக்கு சந்நியாசம் உதவி செய்யும். சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளை பயன்படுத்தி ஞான நிஷ்டையடைய
சந்நியாசம் உபயோகப்படுகிறது. அனாத்மா இச்சா, ஆத்மா இச்சா. புத்திரன்,
செல்வம், உலகம் இவைகளின் மீதுள்ள ஆசையை விட்டொழிய
வேண்டும், சாத்திய இச்சையை விட வேண்டும், பிறகுதான் சாதன இச்சையை விட வேண்டும்.
பாண்டித்யம் – சிரவணத்தை முழுமையாக முடித்து விட்டு ஞான பலத்துடன் இருக்க வேண்டும். குழந்தையைப் போல் இருக்க வேண்டும். தன்னைப்பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆத்ம ஞானத்தை மனனம் என்ற சாதனத்தின் துணைக் கொண்டு அடைந்த ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும். பிறகு நிதித்யாஸத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைய வேண்டும், அப்போதுதான் பிரம்மனாகிறான். ஜீவன் முக்தன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது, அவன் எப்படியிருக்கிறானோ அதுதன் அவனுடைய லட்சணம். இது நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருக்கும்
பகுதி-6 :அனைத்துக்கும் சத்யமாக இருப்பது, அதி சூட்சுமமாக இருப்பது
பகுதி-7 : அந்தர்யாமி பிராமனத்தில் விராட்டுக்கு ஆந்தரமாக
இருப்பது,
ஹிரண்யகர்ப்ப தத்துவம். எல்லா தேவதைகளும், பூதங்களும்
நம் உடலில் உள்ள சூட்சும சரீரத்தை குறிக்கிறது
பகுதி-8 அக்ஷர பிரமானம்: அந்தர்யாமிக்கும்
ஆதாரமாக இருப்பது ஆகாசம்-ஈஸ்வரன். அக்ஷர ஸ்வரூபத்தை, அனாத்மாக்கள் அனைத்தையும் நீக்கி விளக்கப்படுகிறது
பகுதி-9 ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள், மகிமைகள் விளக்கப்பட்டது. மரத்தையும், மனிதனையும் ஒப்பிட்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டது. பிரம்மானந்தத்தின் பலனை அனுபவிக்கிறோம்; ஸ்வரூபானந்தம் அனுபவிக்க முடியாது காரணம் அதுவாக அவன் இருப்பதால்.
----0000----