Showing posts with label தைத்தரீய உபநிஷத்-03. Show all posts
Showing posts with label தைத்தரீய உபநிஷத்-03. Show all posts

Wednesday, July 22, 2015

தைத்திரீய உபநிஷத் - அத்தியாயம்-3

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-03
பிருகுவல்லி
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம் 
திருத்தம் செய்யப்பட்டது  27/04/2022
அனுவாகம்-01
ப்4ருகு3ர்வை வாருனி: | வருணம் பிதரமுபஸஸார | அதீ4ஹி ப4வதி ப்3ரஹ்மேதி |
தஸ்மா ஏதத்ப்ரோவாச | அன்னம் ப்ராணம் சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாசமிதி |
தம் ஹோவாச | யதோ வா இமானி பூ4தானி ஜாயந்தே |
யேன ஜாதானி ஜீவந்தி | தத்3விஜிக்3ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி |
ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||
 
வருணரின் மகனான வாருணி என்கின்ற ப்ருகு ரிஷி, தந்தையாகிய வருணரை அணுகினார். இறைவா, எனக்கு பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று கேட்டார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வேதாந்தம் படிப்பதற்கு குரு மிகவும் அவசியம், ஞானத்தின் பெருமையும் உணர்த்தப்படுகின்றது, தவத்தில் சிறந்த ரிஷியான இவரே ஞானத்தை அடைவதற்கு விரும்பினார் என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். சில சாதனங்களை இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்தந்தையையே குருவாக பாவித்து, அவரை இறைவா என்று அழைத்தது அவரிடம் உள்ள பணிவை காட்டுகின்றது.
 
ப்ருகுவுக்கு சில தத்துவங்களை உபதேசித்தார்ஜீவாத்மாவை அடைய சில வழிகளை உபதேசித்தார், த்வம் பதத்தை அறிந்து கொள்ள சில உபாயங்களை உபதேசித்தார். அவைகள் அன்னமயகோசம், பிராணமயகோசம், கண், காது, மனம், வாக்கு (மனோமயகோசம்).  எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றியுள்ளதோ, எதனால் இவைகள் வாழ்கின்றனவோ, எதனிடத்தில் இறந்ததும் சென்றடைகின்றனவோ அதை தெளிவாக அறிய முயற்சிப்பாயாக, அதுவே பிரம்மன் என்ற் கூறினார்.
 
இவ்விதம் கேட்டபிறகு ப்ருகு தவத்தை மேற்கொண்டார். தவத்தை செய்துவிட்டு மீண்டும் குருவை அடைந்தார்.
 
விசாரம்:
·   அவரே ரிஷியாக இருப்பதால் இதை தவம் செய்துதான் அறிந்து கொள்ள முடியும் என்று அறிந்திருக்கின்றார்எதை அடைய வேண்டுமென்றாலும் தவம் செய்து முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் தியாகங்களையும் தவத்தில் சேர்க்கலாம்எனவே அவர் தவத்தை மேற்கொண்டார்.

·   தவம் என்றால் என்னஒவ்வொரு ஆசிரமத்திலும் அவரவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்மங்கள் சொல்லப்பட்டிருகின்றதுஇவைகளையே தவம் என்று அழைக்கப்படுகின்றது.

·   பிரம்மச்சர்ய ஆஸ்ரமம்ஸ்வாத்யாயம்சாஸ்திரங்களை படித்தல்

·   கிருஹாஸ்ரமம்தானம் செய்வதுதான் தவம்.

·   வானப்ரஸ்தாசிரமம்விரதம் இருப்பதைக்காட்டிலும் பெரிய தவம் வேறெதுவும் இல்லை.

·   சந்நியாசம்மனம், இந்திரியங்கள் கட்டுப்பாடு மேலான தவம்.

 
இந்த கதையில் ப்ருகு ரிஷி இந்திரியங்கள் மனம் இவைகளைக் கட்டுபடுத்தும் தவத்தில் ஈடுபட்டார். மீண்டும், மீண்டும் சிந்தித்தார், விசாரத்தில் ஈடுபட்டார்.
 
அனுவாகம்-02
அன்னம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
அன்னாத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
அன்னேன ஜாதானி ஜீவந்தி |
அன்னம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய  | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||
 
அன்னம்தான் பிரம்மனென்று முடிவு செய்தார். இங்கே அன்னம் என்பதை விராட் தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்..  இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை அவர் குறிபிட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும்உணவிலிருந்துதான் இந்த ஜீவராசிகளின் சரீரங்கள் தோன்றுகின்றனஉணவினால் தோன்றி வாழ்கின்றனஉணவிடத்தில் இறுதியாக லயத்தை அடைகின்றன. இவ்விதமாக பிரம்மத்தை அன்னமாக கருதினார். பிறகு அதையே மீண்டும் விசாரம் செய்து அன்னத்திற்கு இந்த பிரம்ம ஸ்வரூப லக்ஷணம் பொருந்தவில்லை என்று உணர்ந்தார்அன்னமானது மாற்றத்தை அடைவதை உணர்ந்தார். இது வரையறுக்குட்பட்டது ஆகவே இது பிரம்மனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார், மீண்டும் தந்தையான குருவை அடைந்தார்பகவானே, மீண்டும் பிரம்மனை உபதேசிப்பீர்களாக என்று வேண்டினார். அவரும் தவத்தை செய்து தெரிந்து கொள்தவமே பிரம்மத்தை அடைய உதவும் சாதனம் என்று உணர்த்தினார். இங்கே தவம் என்ற சொல் மனக்கட்டுப்பாட்டை குறிக்கின்றது, வெளியே செல்கின்ற மனதை உட்புறமாக திருப்ப வேண்டும்ப்ருகு தவத்தை மேற்கொண்டார்.
 
அனுவாகம்-03
ப்ராணோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ப்ராணத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ப்ராணேன ஜாதானி ஜீவந்தி |
ப்ராணம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||
 
பிராணனே (சூட்சும சரீர அபிமானி ஹிரண்யகர்ப்பன்) பிரம்மன் என்று முடிவுக்கு வந்தார். பிராணனிலிருந்து ஜீவராசிகள் தோன்றுகின்றனபிராணனினால் வாழ்கின்றன, இறுதியில் பிராணனை அடைகின்றன. என்ற ஸ்வரூப லட்சணை விசாரம் செய்தார்இந்த லட்சணம் பிராணனில் பொருந்தவில்லை எனவே இது பிரம்மன் அல்ல என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் தந்தையை அணுகினார். மீண்டும் உபதேசம் செய்யுமாறு கேட்க, அவரும் மீண்டும் தவம் செய்து அறிந்து கொள் என்பதையே அவரும் சொல்லியனுப்பினார்.
 
அனுவாகம்-04
மனோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
மனஸோ ஹ்யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
மனஸா ஜாதானி ஜீவந்தி |
மன: ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||
 
மனமே பிரம்மன் முடிவுக்கு வந்தார். பிரம்ம தடஸ்த லட்சணத்தை பொருத்திப் பார்த்து இதுவல்ல என்ற முடிவுக்கு வந்தார்மீண்டும் விசாரம் செய்து இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார்.
 
அனுவாகம்-05
விக்3ஞானம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
விக்3ஞானத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
விக்3ஞானேன ஜாதானி ஜீவந்தி |
விக்3ஞானம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||
 
விக்ஞானமயமே பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். இவ்வாறு மீண்டும் உபநிஷத் சொல்வதற்குக் காரணம், தவத்தின் பெருமையை எடுத்துரைப்பதற்கு இந்த முறையில் உபதேசிக்கபடுகின்றது. இதேபோல ஆனந்தமயத்தை தவத்தின் மூலம் பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் இது போக்தாவாக இருப்பதால் இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார். போக்தாவும் விகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் பிரம்மனல்ல என்று தெரிந்து கொண்டார்.
 
அனுவாகம்-06
ஆனந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ஆனந்தா3த்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ஆனந்தே3ன ஜாதானி ஜீவந்தி |
ஆனந்த3ம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
ஸைஷா பா4ர்க3வி வாருணீ வித்3யா |
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா |
ஸ ஏவம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னதோ3 4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன |
மஹான்கீர்த்யா |
 
ஆனந்தமே பிரம்மன் என்று புரிந்துக் கொண்டார்இந்த ஜீவராசிகள் ஆனந்தத்திலிருந்து தோன்றினஅதிலேயே வாழ்கின்றனஇறுதியில் அதிலேயே லயமடைகின்றது, ஒடுங்குகின்றதுஇவ்விதம் ப்ருகு புரிந்து கொண்டார்இந்த ப்ரஹ்மஞானம் ப்ருகு என்பவரால் புரிந்து கொள்ளப்பட்டதுவருணரால் உபதேசிக்கபட்டதுமனிதனின் ஹ்ருதயத்தில் உள்ள மேலான ஆகாசத்தில் இருக்கின்ற பிரஹ்மத்தினிடத்தில் பிரம்ம வித்யாவானது அறிந்தவுடன் முடிவடைகின்றதுயாரொருவன் ப்ருகு புரிந்து கொண்டதைப்போல அறிகின்றார்களோ அவர்கள் ப்ரம்மனிடத்தில் நிலைபெறு-கின்றார்கள், தன்னிடத்திலே நிலைபெறுகின்றார்கள்அவனுக்கு நல்ல உணவு வேண்டிய அளவு கிடைக்கும். உணவை நன்கு உட்கொள்ளும் சக்தியுடையவனாகவும் இருக்கின்றான்மேன்மையை அடைகின்றான்நல்ல சந்ததிகளினாலும், சிஷ்யர்களாலும் பெருமையடைவான். செல்வங்களை உடையவனாகவும், தேஜஸ் உடையவனாகவும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.
 
அனுவாகம்-07
அன்னம் ந நிந்த்3யாத் | தத்3 வ்ரதம் | ப்ராணே வா  அன்னம் |
ஶரீரமன்னாத3ம் | ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டிதம் |
ஶரீரே ப்ராண: ப்ரதிஷ்டித: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |
 
அக்ஞானிகளுக்கான உபாஸனையும், சில நல்ல பண்புகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. உணவை அவமதிக்கக்கூடாதுஅதை விரதமாக பின்பற்ற வேண்டும்அன்னம் என்பது விராட் ஸ்வரூபம், ஸமஷ்டி ஸ்தூல சரீரத்தையுடைய ஈஸ்வரன்அன்னத்தின் உதவியால்தான் அன்னமயகோசம் இருக்கின்றதுஇந்த கோசம் பிரம்மத்தை அடைவதற்கு ஒரு படியாக இருக்கின்றது.
 
உபாஸனை:
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எந்தவொரு தத்துவமும் சுதந்திரமாக இருக்க முடியாதுஉதாரணமாக சரீரமானது பிராணனை சார்ந்திருக்கின்றது, அதேபோல பிராணனானது சரீரத்தை சார்ந்திருக்கின்றது என்று தியானிக்க வேண்டும்,.  இந்த உலகத்தின் மித்யாத்வம் உணராதவர்களுக்கு இந்த ஞானம் பயன்படுகின்றதுஇந்த தியானத்தின் மூலம் இந்த பிரபஞ்சம் மித்யா என்று உணர்ந்து கொள்வான்எது ஒன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யாவின் லக்ஷணம். இந்த நிலை அடைந்ததும் வேதாந்தம் புரிய ஆரம்பிக்கும்இது நிஷ்காம உபாஸகன் அடையும் பலன்காம்ய உபாஸகனுக்கு வேறு வகையான பலன்கள் கிடைக்கின்றதுநல்ல உணவு கிடைக்கும், உணவு உட்கொள்ளும் சக்தி கிடைக்கும், தேஜஸ், புகழ் கிடைக்கும்.
 
அன்ன-அன்னாத உபாஸனை:
அன்னம்எது சாப்பிடப்படுகின்றதோஉணவு
அன்னாதஎது சாப்பிடுகின்றதோசாப்பிடுபவர்,
இதில் இரண்டு தத்துவங்கள் எடுத்துக்கொண்டு விளக்கப்படுகின்றது. அவைகள் சரீரம்-பிராணன்.
 
பிராணன் என்பது அன்னம், சரீரம் அன்னாதம், உடலானது பிராணனை சாப்பிடுகின்றது, இதற்கு பொருள் சரீரம் பிராணனை சார்ந்திருக்கின்றதுபிராணனை தனக்குள்ளே வைத்திருப்பதால் சரீரம் ஒரு பாத்திரமாக இருக்கின்றது, பிராணன் அதில் வைக்கப்படும் பொருளாக இருக்கின்றது.
 
சரீரம் என்பது அன்னம், பிராணன் அன்னாதம், பிராணன் உடலை சாப்பிடுகின்றது, பிராணன் உடலை சார்ந்திருக்கின்றது. இதில் பிராணன் ஒடுக்குபவராகவும், சரீரம் ஒடுங்குகின்ற பொருளாகவும், இருக்கின்றதுஇதனால் பிராணமயகோசம் அன்னமய கோசத்தை நீக்கி விடுகின்றது.
 
ஒரு பொருள் இருக்கும்போதும், இல்லாதபோதும் நம்முடைய மனமானது எந்த பாதிப்பும் அடையாமலிருந்தால் அந்தப்பொருளின் மித்யாத்வத்தை உணர்ந்துள்ளோம் என்று அறிந்து கொள்ளலாம்.
 
பிரதிஷ்டாபிரதிஷ்டித உபாஸனை:
பிராணத்தினால் சரீரம் தாங்கப்படுகின்றது. பிராணனானது உடலுக்கு உயிரூட்டுகின்றது. எனவே இது பிரதிஷ்டா, சரீரம் உயிரை அடைவதால் அது பிரதிஷ்டிதம்.
 
சரீரத்தினால் பிராணன் தாங்கப்படுகின்றதுசரீரமானது பிராணன் இருப்பதற்கு பாத்திரமாக இருப்பதால் அது பிரதிஷ்டா, பிராணனானது சரீரத்திற்குள்ளே இருப்பதால் அது பிரதிஷ்டிதம்.
 
இவ்விதம் சரீர ரூபமாக இருக்கின்ற அன்னம், பிராண ரூபமாக இருக்கின்ற அன்னத்தினால் தாங்கப்படுகின்றது. யார் இந்த அன்னம் அன்னத்தை சார்ந்திருக்கின்றது என்பதை அறிகின்றார்களோ, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். நிஷ்காமமாக இந்த உபாஸனை செய்தால் இந்த ஜகத் மித்யா என்ற அறிவை அடையலாம். காம்யமாக செய்பவர்களுக்கு அதிகமான உணவு கிடைக்கும், அதை சாப்பிடும் சக்தியும் கிடைக்கும்நல்ல சந்ததிகளாலும், செல்வங்களாலும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.
 
அனுவாகம்-08
அன்னம் ந பரிசக்ஷீத | தத்3 வ்ரதம் | ஆபோ வா அன்னம் |
ஜ்யோதிரன்னாத3ம் | அப்ஸ ஜ்யோதி: ப்ரதிஷ்டிதம் |
ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டிதா: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |
 
உணவை வீணாக்கக்கூடாது அதை ஒரு விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது. நெருப்பானது அன்னாதமாக (சாப்பிடுபவராக) இருக்கின்றதுபிரளய காலத்தில் நீரானது நெருப்பினால் விழுங்கப்படுகின்றதுநெருப்பானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது, நீரானது அன்னாதமாக ( சாப்பிடுபவராக ) தியானிக்கபடுகின்றதுவயிற்றில் பசி எடுக்கும்போது தோன்றும் நெருப்பானது நீரினால் அமைதிப்படுத்தபடுகின்றது. நீரினால் நெருப்பானது கட்டுப்படுத்தப்படுகின்றது. அப்போது நீர் பிரதிஷ்டாவாகவும் (கட்டுபடுத்துபவர்), நெருப்பு பிரதிஷ்டிதமாகவும் ( கட்டுப்படுத்தபடுவதால்) இருக்கின்றது. நெருப்பினால் நீர் கட்டுபடுத்தப்படுகின்றது. இதில் நெருப்பானது பிரதிஷ்டாகவும், நீரானது பிரதிஷ்டிதமாகவும் இருக்கின்றது.
 
இவ்வாறு தியானம் செய்வதால் முன் அனுவாகத்தில் சொல்லப்பட்ட பலன்களையே அடைவார்கள்.
 
அனுவாகம்-09
அன்னம் ப3ஹு குர்வீத | தத்3 வ்ரதம் | ப்ருதி2வீ வா அன்னம் |
ஆகாஶோÅன்னாத: | ப்ருதி2வ்யாமாகாஶ: ப்ரதிஷ்டித: |
ஆகாஶே ப்ருதி2வீ ப்ரதிதிஷ்டதா |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |
 
உணவுப் பொருட்களை அதிகமாக சேகரித்து, அதிகமாக சமைக்க வேண்டும்.
இங்கு நிலமும், ஆகாசமும் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
 
நிலம்   அன்னம்    ஒடுங்குபவர் - பிரளய காலத்தில் நிலம் ஆகாசத்தில்
ஆகாசம்அன்னாதம்ஒடுக்குபவர்  ஒடுங்குகின்றது
ஆகாசம்அன்னம்   - ஒடுங்குபவர் - வயிற்றுக்குள் இருக்கும் ஆகாசம்
நிலம்   அன்னாதம்  ஒடுக்குபவர்நிலத்தினால் தாங்கப்படுகின்றது
 
நிலம்     பிரதிஷ்டா   - தாங்குபவர்
ஆகாசம்   பிரதிஷ்டிதம் - தாங்கப்படுவது
நிலம்     பிரதிஷ்டிதம் - காரியம்
ஆகாசம்   பிரதிஷ்டா    - காரணம்
 
இப்படி தியானிப்பதால் அனுவாகம்-7 ல் கூறப்பட்ட பலன்களையே அடைவர்.
 
அனுவாகம்-10.1
ந கஞ்சன வஸதௌ ப்ரஜ்யார்சக்ஷீத | தத்3 வ்ரதம் |
தஸ்மாத்3யய கயா ச வித்4யா ப3ஹ்வன்னம் ப்ராப்னுயாத் |
அராத்4யஸ்மா அன்னமித்யாசக்ஷதே | ஏதத்3வை முக2தோÅன்னம் ராத்3த4ம் |
மத்4யதோÅஸ்மா அன்னம் ராத்4யதே | ஏதத்3வா அந்ததோÅன்னம்ராத்3த4ம் |
அந்ததோÅஸ்மா அன்னம்ராத்4யதே | ய ஏவம் வேத3 ||
 
ஒருவர் நம்மிடம் இருப்பிடம் நாடி வந்தால் நாம் மறுக்காமல் அவருக்கு உதவ வேண்டும். இதை விரதமாக கொள்ள வேண்டும், அவருக்கும் தங்க இடமும், சாப்பிட உணவும் கொடுக்க வேண்டும்ஆகவே ஏதாவது ஒரு விதத்தில் தர்மப்படி அதிகமான உணவை சேகரிக்க வேண்டும்இவருக்கு உணவு தயாராக உள்ளது என்று இல்லறத்தோர் கூறுகிறார்கள்உயர்ந்த வித்த்தில் உணவை தயாரித்து கொடுத்தால் அவனுக்கும் உயர்ந்த வித்த்தில் உணவானது கிடைக்கின்றதுஇடைநிலை தரத்தில் தயாரித்து கொடுத்தோமானல் அதே தரத்தில்தான் உணவும் திரும்ப கிடைக்கும். ஒருவேளை மோசமாக உணவை தயாரித்து கொடுத்தோமானால் நமக்கும் மோசமான உணவே கிடைக்கும். இங்கு உணவு ஒரு உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளதுஇந்த கருத்தை எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்யார் இந்த உண்மையை அறிந்து அவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் புண்ணியத்தை அடைகின்றார்கள்.
 
இந்த உலகத்திற்கு நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதை இந்த உலகம் நமக்கு திருப்பிக் கொடுக்கும். எப்படி கொடுத்தோமோ அப்படியே திருப்பி கொடுக்கும். உணவைக் கொடுத்தால் நமக்கு உணவு கிடைக்கும், அன்பைக் கொடுத்தால் நமக்கும் அன்பு கிடைக்கும்.
 
அனுவாகம்-10.2 - பிரஹ்ம உபாஸனம்
க்ஷேம இதி வாசி | யோகஷேம இதி பிராணாபானயோ: |
கர்மேதி ஹஸ்தயோ: | 3திரிதி பத3யோ: |
விமுக்திரிதி பாயோ | இதி மானுஷீ: ஸமாக்3ஞா |
அத2 தை3வீ: | த்ருப்திரிதி வ்ருஷ்டௌ |
3லமிதி வித்3யுத | யஸ இதி  பஶுஷு |
ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு |
ப்ரஜாபதிரம்ருதமனந்த3 இத்யுபஸ்தே2 |
ஸர்வமித்யாகாஶே ||
 
மாயையுடன் கூடிய பிரம்மன் சகுணபிரம்மன் என்றும், ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றதுஉபாஸனை வரும் இடத்தில் பிரம்மன் என்பதை ஈஸ்வரன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
நம்முடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது. இந்த சக்திகள் என்னைச் சார்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவையனைத்தும் ஈஸ்வரனுடைய சக்தி என்று தியானிக்க வேண்டும்.
 
1. க்ஷேம இதி வாசி: நம்முடைய வாக்கில் தூய்மை ரூபமாக ஈஸ்வரன் இருக்கின்றார் என்று தியானிக்க வேண்டும்ஒரு மனிதனுடைய உயர்வும், தாழ்வும் அவனுடைய சொல்லில்தான் இருக்கின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

2. யோகஷேம இதி பிராண-அபானயே: பிராணன்அபானன் இவைகளில் யோகஷேமமாக இருப்பதாக தியானிக்க வேண்டும். யோகம் என்பது பொருள் ஈட்டுதல், ஷேமம் என்பது சேர்த்தை பாதுகாத்தல்

3. நமது இரண்டு கைகளில் செயல் வடிவமாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்.

4. நமது இரண்டு கால்களில் நடக்கின்ற சக்தியாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்,

5. மலத்தை வெளியே தள்ளும் இந்திரியத்தில் வெளித்தள்ளும் சக்தியாக தியானிக்க வேண்டும்,

6. கருவாயில் உற்பத்தி செய்யும் சக்தியாகவும், அம்ருதமாகவும், சந்ததி உருவாகுவதற்கு காரணமாகவும், சரீர ஆனந்தத்தை தருகின்ற சக்தியாகவும் தியானிக்க வேண்டும்.

 
இவ்விதம் மனிதர்களுடைய உறுப்புக்கள் சம்பந்தமான உபாஸனைகள் சொல்லப்பட்டு உள்ளது.
 
அனுவாகம்-10.3
தத்ப்ரதிஷ்டித்யுபாஸீத | ப்ரதிஷ்டாவான் ப4வதி |
தன்மஹ இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்மன் இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்னம் இத்யுபாஸீத | நம்யந்தேÅஸ்மை காமா: |
தத்3ப்3ரஹ்மேத்யுபாஸீத | ப்3ரஹ்மவான் ப4வதி |
தத்3 ப்3ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத |
பர்யேணம் ம்ரியந்தே த்3விஷந்த: ஸபத்னா: |
பரி யேÅப்ரியா ப்4ராத்ருவ்யா: ||
 
பிரம்மனை மழையில் திருப்தியாகவும், மின்னலில் சக்தியாகவும், செல்வத்தில் புகழாகவும், நட்சத்திரங்களில் (சூரியன், சந்திரன் இரண்டும் நட்சத்திரங்களுடன் சேர்த்து பார்க்க வேண்டும்) ஒளிவடிவமாக இருக்கின்றதாகவும், ஆகாசத்தில் பிரம்மத்தை அனைத்துமாக இருக்கின்றதாகவும் தியானிக்க வேண்டும்.
 
நாம் எதை, எப்படி உபாஸிக்கின்றோமோ அது சம்பந்தமான பலனை அடைவோம். யாரோடு உறவு வைத்திருக்கின்றாயோ, யாராக உயர விரும்புகின்றாயோ அவராக நாம் மாறுவோம்இது இயற்கையின் விதி.
 
*   ஆகாசத்திலிருந்து வேறுபடாத பிரம்மன் (ஈஸ்வரன்) அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றார் என்று தியானித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான எல்லாமும் கிடைக்கும், எல்லாவிதத்திலும் உதவி கிடைக்கும்.

*   பிரம்மத்தை மேன்மையானதாக உபாஸித்தால் மகானாக உயர்கின்றான்

*   பிரம்மத்தை சிந்திக்கும் சக்தியாக உபாஸித்தால் சிந்திக்கும் திறனுடையவனாகின்றான்

*   பிரம்மத்தை வணங்கத்தக்கதாக தியானிப்பதாலும், வசீகரிக்கும் தன்மையுடையதாக தியானித்தாலும் ஆசைப்படும் பொருட்கள் யாவும் வந்தடையும்

*   மிகவும் பெரியதாக தியானித்தால் உயர்ந்த நிலைக்கு செல்கின்றான்

*   அழிக்கக்கூடிய சக்தியாக தியானித்தால், தன்னை அழிக்க நினைக்கும் பகைவர்கள் அழிந்து போவார்கள்

 
மேற்கூறிய தியானங்களை நிஷ்காமமாக செய்தால் இந்த உலகம் மித்யா என்று புரிந்து கொள்ளப்படும்
 
அனுவாகம்-10.4
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவதி3த்யே | ஸ ஏக: |
ஸ ய ஏவம்வித் | அஸ்மால்லோகாத்ப்ரேத்ய |
ஏதமன்னமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் மனோமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ரம்ய ||

எந்தவொரு. ஆனந்தம் மனிதனிடத்தில் இருக்கின்றதோ அதுவும், ஹிரண்யகர்ப்-பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றேயாகும்யார் இவ்வாறு அறிகின்றார்களோ அவர்களுக்கு வெளியே உள்ள பொருட்களிலிருந்து பற்றை விட்டுவிட்டு ஒவ்வொரு கோசத்திலிருக்கும் அபிமானத்தை நீக்கி விடுவான்இந்த அன்னமயம்தான் ஆத்மா என்ற அபிமானத்தை விட்டு, பிராணமயத்திலிருந்தும் இந்த அபிமானத்தை விட்டு, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமயத்திலிருந்தும் அபிமான்ங்களை விட்டுவிடுவான்.
 
அனுவாகம்-10.5 -  ( மோட்ச பலன்ஜீவன்முக்த நிலை )
இமாம்ல்லோகான்காமான்னி காமரூப்யனுஸஞ்ச்ன் |
ஏதத்ஸாஸ் கா3யன்னஸ்தே | ஹா(3) வு ஹா(3) வு |
அஷ்மன்னமஹமன்னமஹமன்னம் |
அஷ்மன்னதோ3Å(3)மன்னதோ3(3)ஹமன்னத3: |
அஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருத் |
அஷ்மஸ்மி ப்ரத2மஜா ரிதா(3)ஸ்ய |
பூர்வம் தேவேப்4யோÅம்ருதஸ்ய நா(3)பா4யி |
யோ மா த3தா3தி ஸ இதே3வ மா(3)வா: |
அஷ்மன்னமன்னமத3ந்தமா(3)த்3மி |
அஹம் விஶ்வம் பு4வனமப்4யப4வா(3)ம் |
ஸுவர்னஜ்யோதீ: | ய ஏவம் வேத3: | இத்யுபநிஷத் ||

ஜீவன் முக்தன் இந்த உலகத்தில் திரிந்து கொண்டும், உலவிக் கொண்டும் இருக்கின்றான்விருப்பப்படி உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றான்ஏதோ ஒரு பாடலை இசையுடன் பாடிக் கொண்டிருக்கின்றான்.
·   நாம் சாப்பிடும் உணவு அந்தக்கரணத்தைப் பாதிக்கின்றதுஞானிக்கு இந்த நிலை கிடையாதுஉணவு விஷயத்தில் அவனுக்கு எந்த நியமமும், நிஷேதமும் கிடையாது

·   ஞானியானவன் உலகமே நான் என்ற பாவனையில் இருப்பவன்எனவே நானே எல்லா உருவமாக இருக்கின்றேன் என்று கருதுவான்தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வான். பிராரப்தத்தின் செயலை ஏற்றுக் கொள்வான்.

·   பிரம்மத்தை பாடிக் கொண்டும், உபதேசித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்

·   இந்த உலகத்தை அவன் ஆச்சரியமாக பார்க்கின்றான்நடக்க முடியாத விஷயத்தை பார்த்து ஆச்சரியத்தை அடைவது போல இருக்கும் அவனது பார்வைஇந்த உலகில் நான் ஒருவன் மட்டும்தான் இருக்கின்றேன். நானே உணவாகவும், உணவை உட்கொள்பவனாகவும் இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பான்.

·   நானே சாப்பிடும் பொருளாக இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்

·   நானே உணவை சாப்பிடுபவனாகவும் இருக்கின்றேன் என்றூ ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்.

·   நானே இந்த இரண்டையும் சேர்த்து வைக்கின்றேன் என்றும் எண்ணிக் கொள்வான்

 
இது ஞானியிடத்திலுள்ள ஸர்வாத்ம பாவத்தை குறிக்கின்றது என்று சங்கரர் கூறுகின்றார்.
 
உலகத்திற்கு நானே ஹிரண்யகர்ப்பனாக இருக்கின்றேன். தேவர்களுக்கு முன் தோன்றிய விராட் ஸ்வரூபமாகவும் இருக்கின்றேன். அம்ருதத்தின் மையமாக இருக்கின்றேன்பிரம்மத்தை அடைய விரும்பும் முமுக்ஷுக்களுக்கு ஆதாரமாக இருக்கின்றேன். உணவு ரூபமாக இருக்கின்ற என்னை யார் கொடுக்கின்றார்களோ அவர்களை நான்  காப்பாற்றுகின்றேன்.அவர்கள் உணவு தொடர்ந்து கிடைக்கப்பெற்று வாழ்வார்கள்..  அன்னரூபமான என்னை பகிர்ந்து உண்ணாதவர்கள் அழிந்து விடுவார்கள். சூரியனின் ஒளியைப் போல நான் அனைத்துலகத்தையும் வியாபிக்கின்றேன்ஞானியானவன் எப்பொழுதும் முழு மனநிறைவுடன் இருக்கின்றான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
யார் இவ்விதம் அறிகின்றானோ அவன் முக்தியடைந்தவனாக கருதப்படுகின்றான்இத்துடன் உபநிஷத் உபதேசம் முடிவடைகின்றது.

பிருகுவல்லி முடிவுற்றது
ஓம் தத் ஸத்


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...