Showing posts with label மாண்டூக்ய உபநிஷத்-02. Show all posts
Showing posts with label மாண்டூக்ய உபநிஷத்-02. Show all posts

Friday, November 10, 2017

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-2

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-2
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது 05/04/2022
 
கௌடபாதரின் விளக்கம்:
மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களை கௌடபாதர் விளக்கி கூறியிருக்கின்றார்.  மூன்று ஸ்லோகங்களின் விளக்கம் ஐந்து ஸ்லோகங்களில் விளக்கியிருக்கின்றார்.
 
ஆத்மாவின் அபிமானம் ஸ்தூல சரீரத்தில் இருக்கும்போது அதற்கு விஸ்வன் என்றும் வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவனாக இருப்பவர்(பஹூ பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகின்றார்.  எங்கும் வியாபித்திருப்பவர் விராட் (விபுஹூ).   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்திருக்கும் போது ஆத்மாவை தைஜஸன் என்று அழைக்கப்படுகிறார்.  இவர்  மனதிற்குள் உள்ள சூட்சுமமான விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவர். ஜாக்ரத்-ஸ்வப்னம் இவற்றில் வருகின்ற ஞானங்கள் அனைத்தும் ஒன்றாக குவிந்து இருப்பதை கன-பிரக்ஞன் என்றும் கூறுகிறார்.
 
இவ்வாறு பிராக்ஞன் எல்லாவிதமான பொருட்களுக்கு நிர்விசேஷமாக இருந்து கொண்டு இருப்பவன்.   இந்த மூன்றும் ஒன்றுதான் ஆனால் மூன்றாக கருதப்படுகின்றது பிரித்து பேசப்பட்டிருக்கின்றது.  விவேகிகள் இவ்வாறு உபதேசம் செய்வதற்காக பிரித்து இருக்கின்றார்கள்.
 
காரிகை-1
ஏக ஏவ த்ரிதா ஸ்ம்ருதஹ (விசாரம்)
கேள்வி மூன்று அனுபவங்களை அனுபவிக்கின்ற என்னை எப்படி ஒருவன் என்று கூற முடியும்?
பதில்      ஒரே மீன் இரண்டு குளத்தில் தாவிதாவி இருப்பதைப் போலஅருகருகே இருக்கும் இரண்டு குளத்தில் ஒரு சமயத்தில் ஒரு குளத்திலிருக்கும்பிறகு அருகே உள்ள வேறொரு குளத்திற்கு தாவி அதிலேயும் இருப்பதை போலஒருவனேதான் இந்த மூன்று அனுபவங்களையும் அனுபவிக்கின்றான் என்பதை புரிந்து கொள்ளலாம்.  இந்த அனுபவங்கள் வரிசையாக இருப்பதனாலும் இது சாத்தியமாகின்றது.  ஒரு ஜீவன் மூன்று அவஸ்தைகளை சேர்ந்து அனுபவிப்பதில்லை.  அதனாலும் ஒருவனேதான் இந்த மூன்று நிலைகளையும் கிரமமாக அனுபவிக்கின்றான்.  பறவைகள் ஆகாசத்திலே கொஞ்சநேரம் பறந்து விட்டு களைத்த பிறகு தன் கூட்டிற்கு வந்து ஓய்வு எடுக்கின்றது.  அதைப்போல ஜீவன் ஜாக்ரத் அவஸ்தையில் விஷயங்களை அனுபவித்து விட்டுஆழ்நிலை உறக்கத்திற்கு சென்று ஓய்வெடுக்கின்றான்.  எனவே ஒருவனேதான் மூன்று நிலைகளிலும் விஷயங்களை மாறி மாறி அனுபவிக்கின்றான் என்று நிரூபிக்கப்படுகின்றது  இதிலிருந்து ஜீவன் ஒருவனாக மட்டும் இருக்கின்றான் அதேசமயம் மூன்று நிலைகளிலும் வேறுபட்டவனாகவும் இருக்கின்றான்.   அவஸ்தைகள் வந்து செல்வதால் அதிலிருந்து வேறுபட்டவன் என்று சங்கரர் கூறுகின்றார்.
 
இதைத் தவிர வேறு இரண்டு கருத்துக்களையும் சங்கரர் கூறுகின்றார்அவைகள்
1.  சுத்தமானவனாக இருக்கின்றான்,  
2.  அஸங்கமாக இருக்கின்றான்
என்பதாகும்.
 
சுத்தமானவன்
அவஸ்தையில் அனுபவிக்கின்ற விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான் உதாரணமாக கனவில் ஏதாவது ஒரு பாவத்தை செய்தால் அவன் விழிப்பு நிலைக்கு வரும் போது அந்த பாவ பலனை அனுபவிக்க மாட்டான்.  அதேப்போல விழிப்பு நிலை அனுபவத்தால் கனவு நிலையில் பாதிக்கமாட்டான்.  விழிப்பு நிலையில் உள்ள பணக்காரனின் செல்வங்கள் கனவுலகில் பயன்படாது.  இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது அந்தந்த அவஸ்தையில் அனுபவிக்கும் தர்ம-அதர்மங்கள் அந்தந்த அவஸ்தையை சேர்ந்ததுஎனவே அசுத்தங்கள் அவஸ்தையை சார்ந்ததுஅனுபவிப்பனாக உள்ள ஜீவனை சார்ந்ததல்லஆகவே அவன் சுத்தமானவன்.
 
அஸங்கத்வம்
மூன்று அவஸ்தைகளிலும் இருக்கின்ற ஆத்மாவுக்கு எந்தவிதமான ஒட்டுதலும் இல்லை.   கயிற்றில் தெரியும் பாம்பிலிருந்து கயிறானது எந்த சங்கமும் இல்லாதது  ஏனென்றால் பாம்பானது அதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதே போல மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதால் இது அஸங்கம் என்று புரிந்து கொள்ளலாம்.  ஆத்மா பார்ப்பவனாக மட்டும் இருப்பதால் பார்க்கப்படும் பொருட்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது.
 
காரிகை-2
இதில் இரண்டு விதமாக விளக்கப்படுகின்றது.
1. மூன்று அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன்தான் என்று நிலை நாட்டப்படுகின்றது.  இங்கு ஜாக்ரத் அவஸ்தையிலே விஸ்வனையும் தைஜஸனையும் பிராக்ஞனையும் பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.  இந்திரியங்கள் வழியாக வெளி விஷயத்தை அனுபவிக்கும்போது அது விஸ்வன் என்று அறிந்திருக்கின்றோம்மூன்று விதமாக தெரிகின்ற ஜீவனுக்கு இருப்பிடம் ஸ்தூல சரீரத்தில் இருக்கின்றது.  விழிப்பு நிலையில் உள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம்நம் மனதிலுள்ள சித்தம் வாஸனாமயமான மனம்தான் தைஜஸனின் இருப்பிடம்,, மனதினுடைய இருப்பிடம் ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம்தான் அதுவே பிராக்ஞனின் இருப்பிடம்.  வலது கண் வழியாக உலகத்தை அனுபவிக்கும்போது விஸ்வனாக இருக்கின்றான்பார்த்தப்பொருளை பற்றி மனதில் நினைத்துப்பார்க்கும்போது தைஜஸனாக இருக்கின்றான்.  தியானகாலத்தில் மனம் அமைதியாக வைத்திருக்கும்போது பிராக்ஞனாக இருக்கின்றான்  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது மூன்று அவஸ்தைகளிலும் ஒருவன்தான் என்பதாகும்.
2. வியஷ்டி-சமஷ்டி ஐக்கியத்தை புரிந்து கொள்ளாதபோது இதைக்குறித்து உபாஸனை செய்ய வேண்டும்.  அவ்வாறு விஸ்வனையும்விராட்டையும் ஒன்று என்று புரிந்து கொள்ள முடியாவிட்டால் வலது கண்ணில் விராட்டை தியானிக்க வேண்டும்தைஜஸன் ஹிரண்யகர்ப்பன் ஐக்கியத்தை மனதில் ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.  அதே போன்று பிராக்ஞன் – அந்தர்யாமி ஐக்கியத்தை ஹ்ருதயத்தை ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.
 
தர்ஷண சக்ஷூ முகம் விஸ்வஹ - திறந்த நிலையிலுள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம்.  இங்கு கண்ணை மட்டும் சொல்லப்படுவதற்கு காரணம் அதிகமான ஞானம் கண் மூலமாகத்தான் அடைகின்றோம்.  பொதுவாக ஞானேந்திரியங்களின் வழியாக அறிவை அடைகின்றோம்.  வலதுகண் அதிக சக்தியை உடையது.
மனஸி அந்தஸ்து தைஜஸ: - ஆழ்ந்த மனதுக்குள்ளே இருக்கின்ற வாஸனாமய சித்தம்தான் தைஜஸனுடைய இருப்பிடம்.
ஆகாஷே ச ஹ்ருதி பிராக்ஞஹ: - நமது ஸ்தூல ஹ்ருதயத்திற்குள்ளே இருக்கின்ற ஆகாசம்தான் பிராக்ஞனுடைய இருப்பிடம்.
த்ரிதா தேஷே வ்யவஸ்திதஹ இவ்வாறு நம் தேகத்தில் மூன்று இடத்தில் மூன்று பேரும் அமர்ந்திருக்கின்றனர்.
 
இந்த விளக்கத்திலிருந்து ஒருவன்தான் அந்தந்த அவஸ்தைகளை அனுபவிக்கும்போது அதற்குரிய பெயரில் அழைக்கப்படுகின்றான் என்பதை அறிய முடிகிறது.
 
காரிகை-3
விஸ்வனும்தைஜஸனும்கர்த்தாகவும்போக்தாவாகவும் இருக்கின்றார்கள்பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
விஸ்வஹி ஸ்தூல புக் நித்யம் - விஸ்வன் எப்பொழுதும் ஸ்தூல பிரபஞ்சத்தையே அனுபவிப்பான்.
தைஜஸ பிரவிவிக்த புக் - தைஜஸன் சூட்சும பிரபஞ்சத்தையே அனுபவிக்கின்றான்.
பிராக்ஞன் ஆனந்தத்தை மட்டும் அனுபவிக்கின்றான்.  அனுபவிக்கப்படும் நிலை மூன்று விதமாக இருக்கின்றதை அறிந்து கொள்ள வேண்டும்.
 
காரிகை-4
மூன்று விதமான சுகமானது பேசப்படுகின்றது.  விஸ்வனுக்கு ஸ்தூல பிரபஞ்சமானது சுக-துக்கத்தை கொடுக்கின்றது.  சூட்சும பிரபஞ்சமானது தைஜஸனுக்கு சுகதுக்கத்தைக் கொடுக்கின்றது.  ஆனந்தமானது பிராக்ஞனுக்கு திருப்தியை கொடுக்கின்றதுஇவ்விதத்தில் சுகமானது மூன்று விதத்தில் அறிந்து கொள்ளுங்கள்
 
காரிகை-5
1.   போக்தாவானவன் மூன்றாக இருந்தாலும் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஒன்றுதான்.
2.   இந்த மூன்று அவஸ்தைகளை மட்டும் தெரிந்து கொள்வதால் அடையும் பலன்.
 
த்ரிஷு தா4மஸு யத்போ4ஜ்யம் ப்ரகீர்திதஹ - மூன்று அவஸ்தைகளில் எந்த விஷயங்கள் அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றதோ, அவைகள்  அனைத்தும் ஒன்றுதான் என்று உபநிஷத்தினால சொல்லப்படுகின்றது.  ஸ்தூலசூட்சும விஷயங்களிலிருந்தும் ஆனந்தம்  அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றது)
 
யஹ போக்தா -  யாரொருவன் மூன்று நிலைகளிலும் போக்தாவாக இருக்கின்றான்
வேத ஏதத் உபயம் யஸ்து – இவ்வாறு இந்த இரண்டையும் அறிகின்றானோஅதாவது அனுபவிக்கப்படும் பொருள் வேறுஅனுபவிப்பவன் வேறு என்று யார் அறிகின்றானோ
ஸஹ புஞ்ஜானஹ ந லிப்யதே – அவன் மூன்று அவஸ்தைகளினால் எந்தப்பாதிப்பும் அடைய மாட்டான்அவனுக்கு ஓரளவு மன அமைதியுடன் இருப்பான்.  இது வேதாந்த சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு உதவி செய்யும்.
 
காரிகை-6
ஈஸ்வரன் இதில் நன்கு விளக்கப்படுகின்றது.  யோனி என்பது உபாதான காரணத்தையும் சர்வக்ஞன் சர்வேஸ்வரன் என்பது நிமித்த காரணத்தையும்காரியமாக ஜகத்தையும் விளக்குகின்றது.
 
·   காரணத்திலிருந்து காரியம் தோன்றுகிறது
·   காரியத்திற்கு முன் காரணம் இருந்தது.
·   காரியம் தோன்றுவதற்கு முன் அது காரணத்தில் இருந்ததாஇல்லையா என்ற விசாரம் செய்யப்படுகின்றதுயோக சாஸ்திரமும்ஸாங்கிய சாஸ்திரமும் காரியமானது காரணத்தில் இருந்தது என்ற ஸத்காரிய வாதம்பரிணாம வாதம் மூலம் உறுதிபடுத்துகின்றார்கள் நையாயவைசேஸிக வாதிகள் காரியமானது காரணத்தில் இல்லை என்று அஸத் காரியவாதம்ஆரம்பவாதம் மூலம் உறுதியாக கூறுகிறார்கள்
 
காரியமானது காரணத்திலிருந்து கொண்டு பிறகு வெளித்தோற்றத்திற்கு வருகின்றது.   காரணத்தில் காரியமானது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது.
 
ப்ரபவ ஸர்வபாவானாம் ஸதாம் இதி வினிஸ்சய:
அனைத்து விஷயங்களின்விஷயிகளின் தோற்றம் முதலில் இருந்து கொண்டுதான் பிறகு தோன்றியிருக்கின்றது.  இது சாஸ்திரத்தினால் தெளிவாக நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது போக்தாவும் தோன்றியுள்ளதுபோஜ்யமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  ஈஸ்வரனுடைய மாயா தத்துவத்திலிருந்து தோன்றியுள்ளதுபிரம்ம தத்துவத்திலிருந்து அறிவு தத்துவமாக இருக்கின்ற ஜீவன்கள் தோன்றியிருக்கின்றது.
 
ஸர்வம் ஜனயதி ப்ராணஹ – அனைத்து ஜடபிரபஞ்சங்களை தோற்றுவிக்கின்றார் மாயையை பிரதானமாக கொண்டவர் ஈஸ்வரன்.  அவர் தன்னிடத்திலுள்ள ஜட அம்சத்தையே உலகமாக படைத்திருக்கின்றார்.  இந்த கருத்து ஈஸாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற உபநிஷத் வாக்கியம் குறிக்கின்றது.
சேதோம் ஸூன்புருஷ ப்ருதக் – சைதன்ய பிரதானமான ஈஸ்வரனை புருஷன் என்று குறிப்பிடுகின்றார்.  சிதாபாசனுடன் கூடிய ஜீவர்களை தோற்றுவிக்கின்றார்.  ஈஸ்வரன் சைதன்ய அம்சத்தைக் கொண்டு ஜீவர்களை தோற்றுவித்தார்.  இவ்வாறு ஜட தத்துவம்அறிவு தத்துவம் என்ற தனித்தனியாக படைத்திருக்கின்றார்.
 
காரிகை-7
அன்யே மன்யந்தே - சிலர் நினைக்கின்றார்கள்.
ஸ்ருஷ்டி சிந்தகாஹா - ஸ்ருஷ்டியை பற்றி சிந்தித்து முடிவுக்கு வர விரும்புபவர்கள்,
விபூதிம் ப்ரஸவம் – ஸ்ருஷ்டியை ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யமாக நினைக்கின்றார்கள்.   ஈஸ்வரன் தன்னுடைய பெருமையைசக்தியை வெளிப்படுத்துவதற்காக ஸ்ருஷ்டியை தோற்றுவித்தார்.  இந்தக் கருத்தையுடையவர்கள் அவர் வெறும் நிமித்தக்காரணம் என்று நம்புகின்றவர்கள்
அன்யே ஸ்ருஷ்டி விகல்பிதா - சிலரால் இந்த ஸ்ருஷ்டியை இவ்வாறு மனதினால் சிந்திக்கின்றார்கள்.
ஸ்வப்ன மாயா ஸ ரூபே இதி - கனவில் வரும் மாயை தோற்றங்கள் போல இந்திரஜால வித்தையில் தோன்றுபவைகள் என்று கூறுகின்றார்கள்இந்த உலகம் இருக்கின்றது விவகாரத்திற்காக மட்டும் இதனை வியவகார ஸ்ருஷ்டி என்றும் கூறுவர் கனவுலகமானது   நான் பார்ப்பதினால் அது இருப்பதாக தோன்றுகின்றது.  இதையே பிராதிபாஸிக பிரபஞ்சம் என்று கூறுவர் த்ருஷ்டி ஸ்ருஷ்டி என்றும் அழைப்பர்.
 
காரிகை-8
இச்சா மாத்திரம் ப்ரபோ ஸ்ருஷ்டி – பகவானுடைய விருப்பத்தினால்தான் இந்த ஸ்ருஷ்டி தோன்றியது
இதி ஸ்ருஷ்டௌ வினிஸ்சிதா – இந்த ஸ்ருஷ்டி விஷயத்தில் இவ்வாறு சிலர் நிச்சயமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
கால் சிந்தகா – காலத்தை கணிப்பவர்கள்ஜோதிடத்தில் முக்கியம் கொடுப்பவர்கள்காலம் தான் இந்த ஸ்ருஷ்டியை தோற்றுவித்திருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
காலாதி ப்ரஸுதிம் பூதானாம் மன்யந்தே – காலத்திலிருந்துதான் எல்லா ஜீவராசிகளும் தோன்றியிருக்கின்றது என்று கருதுகின்றார்கள்.
 
காரிகை-9
போகார்தம் ஸ்ருஷ்டிஹி அன்யே – சிலர் போகத்திற்காக ஸ்ருஷ்டி தோற்றுவிக்கப்பட்டது.
க்ரீடா சிந்தகா – சிலர் விளையாட்டிற்காக படைத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.
ஆப்த காமஸ்ய – எல்லா ஆசைகளும் அடையப்பட்டுவிட்டது அல்லது ஒரு ஆசையும் இல்லாத நிலை.
கா ஸப்ருஹா – எதற்கு ஆசை வரும்எப்படி ஆசை வரும்போகமும் தேவைப்பட்டது
தேவஸ்ய – ஈஸ்வரனுக்கு
அயம் – இந்த ஸ்ருஷ்டியானது
ஸ்வபாவஹ மாயா நிர்மிதா – அநாதியான மாயாயிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது.
 
ஸ்லோகம் – 7
ஏற்கனவே தெரிந்ததை திரும்பவும் சொல்வதை அனுவாதம் என்று கூறப்படுகின்றது.   என்னைப்பற்றித்தான் சாஸ்திரம் எனக்கு தெரிந்ததைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறது.   இந்த மந்திரத்தில் என்னைப்பற்றி எனக்குத் தெரியாததையும் சொல்கின்றது.  இதில் ஆத்மாவின் நான்காவது பாதத்தை சொல்கிறது.  இதை பிரமான வாக்கியம் என்றும் கூறலாம்.  நமக்கு தெரியாததை உபதேசிக்கும் வாக்கியத்திற்கு பிரமான வாக்கியம் என்று பெயர்.  இந்த நான்காவது பகுதியை நேரிடையாக விளக்க முடியாத காரணத்தினால் வேறு விதமாக உபதேசிக்கின்றது.  நான்காவது பாதத்திற்கு துரியம் என்று பெயர்அதுவும் நான்தான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
துரியம் என்றால் என்ன?
முதலில் துரியம் என்பது எவைகளெல்லாம் இல்லை என்று பார்க்கப்படுகின்றது.  எந்தவிதமான உபாதிகளுக்கும் சம்பந்தம் இல்லாதது துரியன்.  இங்கு உபாதி என்பது சரீரத்தைக் குறிக்கின்றது.   எந்த அவஸ்தகளையும் அனுபவிக்காதவன் துரியன்.  சமாதி அவஸ்தையில் இருப்பதும் துரியமல்ல.  சமாதி என்பது தியானத்தின் பலனாக வருவது தான்.  ஜாக்ரத் அவஸ்தையில்தான் சமாதியை அடைய முடியும்.  சமாதி நிலையில் எல்லா விஷயங்களும் மனதில் ஒடுங்கி அமைதியுடன் இருக்கின்றது.  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையை முயற்சி செய்து ஜாக்ரத் அவஸ்தையில் அடைவதுதான் சமாதி.
 
தங்க வளையலும்தங்கமும் ஒன்று என்று சொல்லும்போது வளையல் அழிந்தாலும் தங்கம் இருக்கும்.  அதே சமயம் இரண்டும் வெவ்வேறு என்று சொல்லும்போது இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது இந்த இரண்டில் ஒன்று சத்யமாகவும்இன்னொன்று மித்யாவாகவும் இருக்கின்றது.  எனவே இந்த இரண்டில் ஒற்றுமையையும் சொல்ல முடியாது வேற்றுமையையும் சொல்ல முடியாது.  சத்யமான தங்கத்துடன் ஒரு நாம-ரூபத்தை ஏற்றி வைக்கும்போது ஒரு தோற்றம் உருவாகின்றது.  வளையலில் சத்யமும்மித்யாவும் கலந்து இருக்கின்றது.   இதில் உள்ள மித்யாவான நாம-ரூபத்தை மனதளவில் நீக்கினால் தங்கம் தெரிகின்றது.  எனவே தங்கம் வளையலுக்கு ஆதாரமாகவும் ஆனால் வளையலுக்கு அப்பாற்பட்டும் இருக்கின்றது.
 
துரியம் என்பதை சைதன்யம் என்று எடுத்துக்கொண்டால் விஸ்வன்தைஜஸன்பிராக்ஞன் என்பது துரியம் + நாமரூபங்கள்.   நாம-ரூபத்தை சார்ந்தில்லாமல் இருக்கும் சைதனயம்தான் துரியம்.  இது மூன்று உடல்களுக்கும் ஆதாரமாகவும்மூன்று அவஸ்தைகளுக்குள்ளும் இருக்கின்றது. ஆனால் அதற்கப்பாற்பட்டும் இருக்கின்றது.  ஜாக்ரத் பிரபஞ்சம் இல்லாத விஸ்வன் துரியம்கனவு பிரபஞ்சம் இல்லாத தைஜஸன் துரியம்தான்,  காரண பிரபஞ்சம் இல்லாத பிராக்ஞன் துரியனும் ஒன்றுதான்.  இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யாவெறும் நாம-ரூபங்கள் மட்டும்தான் என்று அறியப்படுகின்றது.  துரியம் என்பது ஞான ஸ்வரூபம்சித் ஸ்வரூபம்.
 
துரியம் + ஸ்தூல சரீரம் =  விஸ்வன் -  ஸ்தூல சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + சூட்சும சரீரம் =  தைஜஸன் -  சூட்சும சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + காரன சரீரம் =   பிராக்ஞன் -  காரண சரீரம் என்கின்ற நாம-ரூபம்
 
விஸ்வனிடத்தில் உள்ள உபாதியான ஸ்தூல சரீரத்தை நீக்கி விட்டால் துரியம் மட்டும்தான் இருக்கும்.  தைஜஸனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும்அதேபோல பிராக்ஞனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும்.
 
எப்படி இந்த உபாதிகள் நீக்கப்படுகின்றன?
எப்படி இந்த உபாதிகள் வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  நாம-ரூபங்கள் துரியத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது வெறும் தோற்றமாகத்தான் இருக்கின்றது என்ற அறிவே நாம-ரூபங்களை நீக்கி விடுகின்றது.  வெறும் துரியம் மட்டும்தான் இருக்கும் இதுதான் துரியத்தை அடையும் வழிஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் அதற்கு ஆதாரமாக இருப்பதை ஒன்றும் செய்ய முடியாது.  எனவே துரியம் எல்லா நிலைகளிலும் ஒன்றாக இருக்கின்றதுஎந்த அவஸ்தைகளோடும்சரீரங்களோடும் ஒட்டாமல் இருக்கின்றது.
 
துரியம் என்ற ஆத்மாவிடம் நாம-ரூபங்கள் இல்லாமல் எப்படி புரிந்து கொள்வது?  புரிந்து கொள்ள மூன்று அவஸ்தகளுக்குப்பாற்பட்டு வேறொரு அவஸ்தை தேவையா?  வேறொரு அவஸ்தை தேவையில்லைஒரு அவஸ்தை மட்டும் போதும் அதைப் புரிந்துக் கொள்ளலாம்.
 
ஆழ்ந்த உறக்கத்திலும் கனவிலும் நம்மால் துரியனை புரிந்து கொள்ள முடியாது நாம் விஸ்வனாக இருந்து கொண்டுதான் துரியனை புரிந்து கொள்ள முடியும் விஸ்வனாக இருந்து கொண்டுதான் நாம் விஸ்வனும் அல்லதைஜஸனும் அல்ல பிராக்ஞனும் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவை சாஸ்திரம்குரு மூலம்தான் அடைய முடியும்.  நீ விஸ்வன் அல்ல துரியம் மட்டும்தான் என்று நாம-ரூபங்களை நீக்கி உபதேசிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு சாஸ்திரம் துணைக்கொண்டுதான் குருமுகமாக துரியத்தை புரிந்து கொள்ள முடியும்.
 
சாஸ்திரம் இருவிதத்தில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கின்றதுஅவைகள்
1.        விதிமுகம் – நேரிடையாக உபதேசித்தல் அதாவது தத் த்வம் அஸி – நீ பிரம்மனாக இருக்கின்றாய்,      
2.        நிஷேதமுகம் – நேரிடையாக சொல்லாமல் ஆத்மாவை தவிர மற்ற அனைத்தையும் நீக்கி புரிய வைக்கின்றது.  நீ வெளி விஷயத்தை பார்ப்பவன் அல்ல என்று நீக்குகின்றது இல்லாததை இருப்பது போல் நினைத்துக் கொண்டிருப்பதைத்தான் நீக்குகின்றது.  இதன் உபகருத்து அவைகளுக்கு அதிஷ்டானமாக இருப்பதைக் காட்டுவதற்கு இந்த முறையை உபதேசிக்கிறது.
 
மந்திர விளக்கம்:-
ந பஹிஷ் ப்ரக்ஞம் – துரியம் என்பது வெளி விஷயங்களை அனுபவிப்பவனும் அல்ல பார்ப்பவனும் அல்ல.  அதாவது வெளிவிஷயங்களைப் பார்க்கும் அறிவாக இல்லைவிஸ்வன் அல்ல.  துரியம் விஸ்வனுக்குள்ளும் இருக்கின்றது.  ஆனால் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் இருக்கின்ற ஆத்மாவை துரியமாக விளக்க உபநிஷத் விரும்புகின்றது.  இந்த வார்த்தையின் தாத்பர்யம் என்ன என்று பார்க்க வேண்டும் விஸ்வன் – மூன்று சரீரங்களை உபாதியாகக் கொண்ட ஆத்மாவைத்தான் குறிக்கின்றது.   விஸ்வன் இல்லை என்ற வாக்கியம் மூன்று சரீரங்களான உபாதிகள் இல்லை என்று சொல்ல விரும்புகின்றது உபாதிகளை நீக்குவதற்கு காரணம்அவைகள் தோன்றி மறையும் தன்மையுடையதாக இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் என்றும் மாறாமல் இருக்கும் சைதன்யத்தை நீக்க முடியாது.
 
ந அந்த பிரக்ஞம்     துரியம் என்பது உள்முகமாக இருக்கின்ற மனதிற்குள் விஷயங்களை அனுபவிப்பனும் அல்ல.
ந உபயத பிரக்ஞம்    துரியம் என்பது விழிப்பு நிலையில் அனுபவிக்கும் கனவு விஷயங்களும் அல்ல.
ந ப்ரக்ஞான கனம்    துரியம் என்பது ப்ராக்ஞனும் அல்ல.
ந ப்ரக்ஞம் ந ஸர்வத ப்ரக்ஞம் – மூன்று அவஸ்தைகளையும்ஒரே நேரத்தில் அனுபவிப்பவனும் அல்ல சமஷ்டி ப்ரக்ஞம் விராட்ஹிரண்யகர்ப்பன் இவர்களும் துரியம் அல்ல.
ந அப்ரக்ஞம்        துரியம் வெறும் ஜடமல்லஅறிவற்றதல்லஅது அறிவுஸ்வரூபம் துரியம் என்பது அறிபவனும் அல்லஅறியப்படும் பொருளும் அல்லஜடமும் அல்ல.  அது அறிவு ஸ்வரூபம்.
அதிருஷ்டம்        அனுபவிக்கப்படுவது அல்லபார்க்கப்படுவதல்லஇந்த சொல் ஐந்து ஞானேந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதாகவும்கிரகிக்க முடியாததாகவும் இருக்கின்றது.  அதாவது குணங்களற்றது.
அவ்யவஹார்யம்  விவகாரத்திற்கு அப்பாற்பட்டது ( ஹானம்உபாதான ரஹிதம் ).  விவகாரம்செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஹானம் என்றால் தவிர்த்தல்நீக்குதல்விலக்குதல்.  உபாதானம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல்சேர்த்தல்.  நாம் செய்யும் செயல்கள் இந்த இரண்டு வகையாகத்தான் இருக்கும்.
அக்ராஹ்யம்       கர்மேந்திரியங்களினால் கிரகிக்கப்படாதது.
அலக்ஷணம்      அனுமானத்தினால் அறிய முடியாதது
அசிந்தியம்         எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டதுஎண்ணங்களினால் அறிய முடியாததுமனதிலிருக்கும் உணர்வுகள் அல்ல.
அவ்யபதேஷ்யம்   வாக்கினால் விளக்க முடியாதது.  சப்த பிரமானத்தினாலும் விளக்க முடியாது.
ஏகாத்ம பிரத்யயஸாரம் - ஆத்மா ஒன்றுதான் என்ற எண்ணம்.
ப்ரத்யயஹ         மனதில் தோன்றும் எண்ணங்கள்.
எண்ணங்களே நான் இது என்று இருவகையாக இருக்கின்றது.  அவைகள்
1.        அஹம் ப்ரத்யயம் - என்னைப்பற்றி நினைக்கும் போது நான் என்ற எண்ணங்கள் .   
2.        இதம் ப்ரத்யயம்   - வெளி விஷயங்களைப் பற்றிய எண்ணங்கள்
எவ்வளவு அஹம் ப்ரத்யயம் வந்தாலும் நான் என்ற ஒன்றுதான் இருக்கும்.
ஸாரம் 
1. அதிஷ்டானம்ஆதாரம்மூலம் – நான் என்ற எண்ணத்திற்கு ஆதாரமாக இருப்பது துரியம்.  2. பிரமானம் – ஏகாத்ம ப்ரத்யயமே துரியத்தை அறிவதற்கு பிரமானமாக இருக்கின்றது.
 
ப்ரபஞ்சோபஷமம்:
ப்ரபஞ்சம் – இந்த உலகம்
உபஸ்ஸமம் – இல்லாமைநிவிர்த்தி (அபாவம்).  
துரியம் என்பது உலகம் இல்லாத இடத்தில் இருப்பது இது உலகம் மித்யா என்று புரிய வைக்கின்றது.  துரியத்தில் உலகம் என்பதே இல்லைஎப்படி கயிறானது பாம்பாக இல்லாமல் இருக்கின்றதோ அதுபோல இந்த துரியத்தில் இந்த பிரபஞ்சமில்லைஇந்த சொல்லின் அர்த்தம் இந்த பிரபஞ்சத்தையே நீக்கி விடுகின்றது.
 
சாஸ்திரம் இரண்டு தவறுகளை இருப்பதாக கூறுகின்றதுஅவைகள் ஸோபாதிக பிரமா நிருபாதீக ப்ரமா ஆகும்.
ஸோபாதிக ப்ரமா – ஸ்படிகத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள சிவப்பு மலரின் நிறம் ஸ்படிகத்தில் பிரதிபலிப்பதால் அது சிவப்பாக இருப்பது போல காட்சியளிக்கின்றது.   இயற்கையில் ஸ்படிகம் தூய்மையாக இருந்து கொண்டு சிவப்பாக காட்சியளிக்கின்றது.  இந்த பிரமைக்கு ஸோபாதிக ப்ரமா என்று பெயர்இங்கு மலருக்கு உபாதி என்றும்ஸ்படிகத்தை உபஹிதம் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த உதாரணத்தில் ஸ்படிகம்மலரும் உண்மை ஸ்படிகத்தில் தோன்று மலரின் நிறம் பொய்யானதுஸ்படிகம் பிரம்மத்திற்கு உதாரணமாகவும்,  பிரபஞ்சம் மலருக்கு உதாரணமாக எடுத்துக்கொண்டால் இரண்டும் ஸத்யமாக இருக்கின்றது ஆனால் பிரபஞ்சத்தின் குணங்கள் பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ரது.  எனவே இந்த குணங்களை நீக்கி இரண்டையும் தனித்தனியாக ஸத்யமாக புரிந்து கொள்வதுதான் தாத்பர்யம்.
 
நிருபாதிக ப்ரமா – கடலின் நிறம் நீலமாக தெரிகின்றது.  ஆனால் உண்மையில் அது நிறமற்றது  உண்மையில் ஆகாசத்தின் நிறத்தை இது பிரதிபலிப்பதால் இவ்வாறாக தெரிகின்றது.  நிறமற்ற ஆகாசத்தில் தெரியும் நீலவானமும் பொய் இந்த பிரபஞ்சம் என்கின்ற உபாதியே பொய் என்று இந்த உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.  பிரம்மத்தில் தெரிவதாக அறியப்படும் பிரபஞ்சத்தின் குணங்களும் பொய்பிரபஞ்சமும் பொய் என்று புரிந்து கொள்ளலாம்.   உண்மையாக இல்லை ஆனால் பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை வேறொன்றிற்கு தருவதாக புரிந்து கொண்டால் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
 
வேறொரு உதாரணம் கனவு பிரபஞ்சம்.  இதில் நான் என்பது உபஹிதம்கனவு பிரபஞ்சம் என்பது உபாதி.  கனவுலகை அனுபவிப்பதால் இந்த ஆத்மாவை தைஜசன் என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு கனவு பிரபஞ்சம் பொய்யானது ஆனால் இது பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றது.  இந்த தவறுக்கு நிருபாதிக ப்ரமா என்று பெயர்.  இந்த தவறை வைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.  இதிலிருந்து மூன்று பிரபஞ்சங்களும் இல்லாமல் இருப்பது ஆத்மாவாகும். பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யாவாகும்.  இது இருப்பதாக தெரிந்து கொண்டு இருக்கின்றது இருப்பதைத்தான் இல்லை என்று சொல்ல முடியும் இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.
 
ஶாந்தம்    - அமைதி ஸ்வரூபம், துரியத்தின் ஸ்வரூப லக்ஷணம்
ஸிவம்     - ஆனந்தம், மங்கலம், துயரமற்ற நிலை
அத்வைதம் - இரண்டற்றது, இருமைகளற்றது. 
ஸ்ருஷ்டி காலத்திலும் பிரளய காலத்திலும், த்வைதமாக தெரிந்து கொண்டிருந்தாலும் அது இருமைகளற்றதாக இருக்கின்றது.  அறியாமை என்ற இருளினால், மோகத்தினால் பார்க்கப்படும் எல்லாம் மறைக்கப்படுவதனால் வருவது உறக்கம்.  ஞானத்தினால் மறைக்கப்படாமல் பார்க்கப்படுவது ஆத்மா அதுவே துரியம்.

 

சதுர்தம் மன்யந்தே   நான்காவது பாதமாக சொல்லப்பட்ட ஆத்மா போல கருதப்படுகின்றது என்று சொல்வதனால் அது இல்லை என்று மறைமுகமாக கூறப்படுகின்றது.
ஸஹ ஆத்மா         இதுவரை சொன்னதுதான் ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஸஹ விக்ஞேயஹ   இதைத்தான் அறிந்து கொள்ளக்கூடியது.  ஆத்மாவை மேற்கூறியவாறு அறிந்து கொள்ள வேண்டும்.
விக்ஞேயஹ          இப்படிபட்ட ஆத்மா அடைவதுதான் பரம ப்ருஷார்த்தம்.  இதுதான் நம்மால் அடையப்பட வேண்டிய பரம லட்சியமாகும்.
 
காரிகை-10
துரிய ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தை இங்கே கூறுகின்றார்.  ஆத்மா துயரமில்லாதது. துரியத்திடம் துக்கமும் இலை,  துயரத்தினுடைய விதையும் இல்லை.
 
நிவ்ருதே ஸர்வ துக்கானாம் – துரியனிடத்தில் விஸ்வன்தைஜஸன்பிராக்ஞன் அனுபவிக்கும் அனைத்து துயரங்களும் நீங்குகிறது.
ஈஷானஹ பிரபு – துயரங்களை நீக்குவதில் தலைவனாக இருக்கின்றது என்று கூறுகிறார்.
 

துரியத்தை அறிந்து கொண்டால் அது சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது,  அறியவில்லை என்றால் அதுவே துயரத்திற்கு காரணமாக இருக்கின்றது.

 
அவ்யயஹ – அழிவற்றது – தன்னிடத்திருந்து வருவதுவெளியிலிருந்து வருவது என்ற இந்த இரண்டு நிலைகளிலும் அழிவை அடையாதது.  அவயவங்கள் இல்லாததால் உள்ளிருந்து அழிவு இல்லை.  பிரபஞ்சம் மித்யா என்பதால் வெளியிலிருந்தும் அழிவு ஏற்படாது.
அத்வைத ஸர்வபா4வானாம் – பலவிதமான உள்ள அனைத்துக்குள்ளும்  ( விஸ்வன் தைஜஸன்,  பிராக்ஞன் ஒன்றாக இருக்கின்றது.  பல ஆபரணங்களில் தங்கம் என்பது ஒன்றாக இருக்கின்றது போல இருக்கின்றது..
தேவ – அறிவு ஸ்வரூபம் – ஏகாத்ம ப்ரத்யயத்வாத்
துர்யஹ – துரியம்நான்காவது பாதமான இது மேற்கூறிய தன்மைகளை உடையதாக இருக்கின்றது.
விபு4 – விதவிதமாக எதிலிருந்து தோன்றியதோ அதை இவ்வாறு அழைக்கப்படுகின்றது விஸ்வன்தைஜசன்பிராக்ஞன் தோன்றியதை எடுத்துக் கொள்ள வேண்டும். (-ம்விதவிதமான ஆபரணங்களுக்கு விபுவாக இருப்பது தங்கம் இது அனைத்திலும் வியாபித்து இருக்கின்றது.
ஸ்ம்ருத – இவ்விதம் துரியத்தின் லட்சணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
 
காரிகை-11
துரிய தத்துவத்தை நிச்சயம் செய்ய விசாரம் செய்யப்படுகின்றது.  இந்த மந்திரத்தில் காரணம் என்பது அறியாமையையும்காரியம் என்பது அத்யாஸத்தையும் குறிப்பிடுகின்றது.  எந்த இடத்திலெல்லாம் காரியம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரணம் இருந்தே தீர வேண்டும்.  எங்கேயெல்லாம் காரணம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரியம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.  அதேபோல எங்கேயெல்லாம் அறியாமை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அத்யாஸம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கே எல்லாம் அத்யாஸம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அறியாமையும் இருக்கும்.
 
பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் இருக்கின்றது.  விஸ்வன்,  தைஜஸனிடத்தில் இரண்டும் இருக்கின்றது.  அந்த விஸ்வனும், தைஜஸனும் காரியத்தினாலும், காரணத்தினாலும் பந்தப்பட்டவர்களாக சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  காரியம்-அனாத்மா அத்யாஸம், காரணம் துரியனை பற்றிய அறியாமை.  பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் தான் இருக்கின்றது.  எந்த அனாத்மாவையும் ஏற்றி வைக்கவில்லை.  துரியத்திடம் இந்த இரண்டும் இல்லை.
 
காரிகை-12
பிராக்ஞனாக இருக்கும் போது பிரபஞ்சத்தையும் அறிவதில்லை.  தன்னையும் அறிவதில்லை.   மற்ற இரண்டு அவஸ்தைகளிலும் இரண்டையும் அறிகின்றான்.
பிராக்ஞன் ந ஆத்மானாம் ஸம்வேத்தி – தன்னை அறியவில்லை
பிராக்ஞன் ந ப்ராஞ்ஶ்ச – மற்ற பொருட்களையும் அறியவில்லை.
ந ஸத்யம் – சத்தியமான துரியத்தையும் அறியவில்லை
ந அபி அந்ருதம் – இந்த பொய்யான ஜகத்தையும் அறியவில்லை
ச கிஞ்சன ஸம்வேத்தி – எதையும் அறிவதில்லை.
இவைகள் அனைத்தும் அறியாமல் இருக்கும்படி பிராக்ஞன் அறியாமையினால் பிணைக்கப்பட்டிருக்கின்றான்
 
தத் துரியம் ஸர்வ த்3ருக் ஸதா – அந்த துரியம் எப்பொழுதும் எல்லாவற்றையும் அறிகின்றான்.
ஸர்வ த்3ருக் – அனைத்தையும் பார்ப்பவன்அக்ஞானத்தையும் பிரகாசப்படுத்துகின்றான்.
ஸதா ஸர்வம் ச் த்ருக் ச – அது அனைத்துமாக இருக்கின்றதுஅதுவே அறிபவனாகவும் இருக்கின்றது.   இதுவே அனைத்துமாக இருப்பதால் அதைத்தவிர வேறெதுவும் இல்லாததால் அதை எதுவும் பந்தப்படுத்துவதில்லை
 
காரிகை-13
உப4யோ – இருவருக்கும் உள்ள
துல்யம் – ஒற்றுமை
அத்வைத கிரகணம் – இருமையை அனுபவிக்காமலிருத்தல்
ப்ராக்ஞ துர்ய யஹ – அவைகள் பிராக்ஞன்துரியன்
இவைகளுக்குமிடையே உள்ள வேற்றுமை
பீஜநித்ராயுத பிராக்ஞ – பிராக்ஞன் ஆத்ம அக்ஞான உறக்கத்துடன் கூடியவன்
பீஜ நித்ரா – வித விதமான இருமைகளுக்கு காரணமாக இருக்கின்ற ஆழ்ந்த உறக்கம்
ஸா ச துரியே ந வித்யதே – பீஜ ரூபமான அக்ஞானம் துரியனிடத்தில் கிடையாது;
துரியம் என்பது ஆத்ம தத்துவம் அல்லது ஞானியை குறிக்கும்.
 
காரிகை-14
காரியம் – ஜாக்ரத்; ஸ்வப்னம் 
காரணம் – நித்3ரா 
அத்யௌ – முதலிரண்டு
ஸ்வப்ன நித்ராயுதாவாத்யௌ – விஸ்வனும் தைஜஸனும் கனவு விழிப்புநிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பிராக்ஞ து அஸவப்னம் நித்ரா – பிராக்ஞனிட்த்தில் ஸ்வப்னமும்,  ஜாக்ரத்தும் கிடையாது உறக்கத்தில் மட்டும் இருக்கின்றான்.
ந நித்ராம் நைவ ச ஸ்வப்னம் துரியே – துரியம் ஸ்வப்னத்தையும்உறக்கத்தையும் உடையவனாக இல்லை.
நிஶ்சிதா ந பஷ்யந்தி -  ஆத்ம ஞானத்தை அடைந்தவர்கள் தன்னிடத்தில் அவைகளை நிச்சயமாக பார்ப்பதில்லை.                   -
 
காரிகை-15
அன்யதா க்ருஹ்ணத ஸ்வப்னஹ – துரியத்தை தவறாக புரிந்து கொண்டவனுக்கு கனவு தோன்றுகின்றது.  கயிற்றை பார்த்தல் க்ரஹணம்கயிற்றில் பாம்பை பார்த்தல் அன்யதா க்ருஹணம்கயிற்றையே பார்க்காதிருத்தல் – அக்ரஹணம்.  துரியத்தை புரிந்து கொள்ளாமல்துரியமாக வேறொன்றை புரிந்து கொள்ளுதலே அன்யதா க்ரஹணம்இந்த நிலையில் கனவு தோன்றுகின்றது.
 
நித்ரா தத்வம் அஜானதஹ – துரியத்தை கிரகிக்காதவனுக்குபிராக்ஞனுக்கு உறக்கம் தோன்றுகின்றதுபிராக்ஞன் துரியத்தையும் புரிந்து கொள்ளவில்லைஅதன் மீது எதையும் அத்யாஸம் செய்யாத நிலைதான் உறக்கம்.
 
விபர்யாஸே தயோ க்ஷீணே – அந்த இருவரிடத்திலும் உள்ள தவறானது நீங்கும்போது
துரியம் பத3மஶ்னுதே துரீயம் அடையப்படுகிறது.
இருவர் என்பது ஸவப்னம் (விஸ்வன்தைஜஸன்), பிராக்ஞன்விஸ்வதைஜஸனிடத்தில் அன்யதா க்ரஹணம்அக்ரஹணம் என்கின்ற இரண்டு தவறுகள் நடக்கின்றதுபிராக்ஞனிடத்தில் அக்ரஹணம் மட்டும் தான் இருக்கிறது.
 
காரிகை-16
இதில் துரிய பிராப்தி விளக்கப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளிலும் ஜீவன் உறங்கிக் கொண்டு இருக்கின்றான்அறியாமையுடன் இருக்கின்றான்எப்பொழுதும் ஜீவன் மாயையினால் உறங்கிக் கொண்டு இருக்கின்றான் அதாவது ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் சம்சாரத்தில் இருக்கின்றான்.  அனாதி என்ற சொல் பிரம்மத்தை குறிக்கும்போது தோற்றமில்லாதது என்று பொருள்படும்மாயையை குறிக்கும்போது அது முதலில் தோன்றிய காலத்தை குறிக்கும்.
இந்த ஜீவன் எப்பொழுது விழித்துக் கொள்கின்றானோகுரு-சாஸ்திரத்தின் துணைக் கொண்டு அக்ஞானம் நீங்கப்பெற்று ஞானத்தை அடைகின்றானோ அப்பொழுது அவன் பிறப்பற்றதும் அக்ஞானத்தை நீக்குவதும், பிரபஞ்சங்கள் மித்யா என்று அறியவைப்பதுமான என்றும் ஒன்றாக இருக்கும் அத்வைதத்தை அறிகின்றான்.
 
காரிகை-17
பிரபஞ்சோ யதிவித்4யேத – ஒருவேளை பிரபஞ்சம் இருந்திருந்தால்
நிவர்தேத ந ஸம்ஶய:அது சந்தேகமில்லாமல் போயிருக்கும்
மாயாமாத்ரமிதம் த்வைதம் – மாயா ஜாலத்தினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதாக இந்த பிரபஞ்சம் இருக்கின்றது.  மாயாஜாலம் என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் வித்தையாகும்.  இந்த பிரபஞ்சம் வெறும் தோற்றம் அது உண்மையில் இல்லை.  ஆனால் அத்வைதம் உண்மையில் இறுதியாக இருக்கின்றது.
 
காரியம் இரண்டு விதமாக இருக்கின்றது.
1.  காரண அதீத காரியம் - காரணத்தை சார்ந்திருப்பது – தயிர் காரியம்அது பாலை சார்ந்திருக்கின்றது
2.  கல்பித காரியம் – கயிற்றில் தெரியும் பாம்பு காரியமாக இருக்கின்றதுஇது நமது மனதினால் மட்டும் கற்பணை செய்யப்பட்ட பொய்யான காரியம்.  
பிரம்ம-ஜகத் காரண-காரியம் இரண்டாவது வகையை சார்ந்தது.
                            
காரிகை-18
ஜீவன் பிரம்மத்தின் மீது ஜகத்தை ஏற்றி வைக்கும் தவறை செய்யலாம் ஆனால் வேதம் இந்த தவறை செய்யாதுஇருந்த போதிலும் கர்ம காண்டத்தில் உள்ள மந்திரங்களில் விதவிதமான த்வைதங்கள் பேசப்பட்டிருக்கின்றது.  எனவே சாஸ்திரம் எவ்வாறு இந்த தவறை செய்ய முடியும் குரு-சிஷ்யன் என்று எப்படி இருமையை உபதேசிக்கின்றது?  என்று கேள்வி எழுகின்றது.
 
அதற்கு பதிலானது சாஸ்திரம் தெரிந்தே இந்த இருமைகளை உபதேசிக்கின்றதுஉண்மையை புரிய வைப்பதற்காக முதலில் இருமையை ஏற்றுக்கொள்கிறது இதை அத்யாரோபம் என்று அழைப்பர்.  பிறகு அபவாதம் என்ற முறையில் ஏற்றி வைத்ததெல்லாம் நீக்கிவிடும்.   இருமையை தெரியாமல் பார்ப்பது அத்யாஸம்தெரிந்தே பார்ப்பது அத்யாரோபம்.   அத்யாரோபத்தை பிறகு அபவாதம் மூலம் நீக்கப்பட்டு உண்மையை எடுத்துக் காட்டும்.
 
யதிகேனசித் கல்பிதஹ விகல்பத வினிவர்தேதஒருவேளை யாராவது இந்த இருமைகளை கற்பணை செய்திருந்தால் அவைகள் சென்றிருக்கலாம்
உபதேஶாதயம் வாதோ ஞாதே த்வைதம் வ வித்யதே - சாஸ்திரம் உண்மை அறிவை புரிய வைப்பதற்காகவும்உணர்த்துவதற்காகவும் முதலில் இருமைகளை பற்றி பேசுகின்றது.   உண்மையை உணர்ந்தபின் அவைகள் இல்லை என்பது அறியப்பட்டுவிடும்.
 
----ooo000ooo----
                                

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...