இதில் 15 பகுதிகள் உள்ளது. அவற்றில் 11 பகுதிகள் உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது. முதல் பகுதி ஓம்கார உபாஸனை, பிறகு 10 பகுதிகள் ஹிரண்யகர்ப்பனைக் குறித்த உபாஸனைகள். ஒரு பகுதி நற்பண்புகள், தவம் இவற்றைப்பற்றி விளக்குகிறது மற்றவைகள் பிரார்த்தனைப்பற்றி பேசுகின்றது.
ஸ்ருதி விரோதாத் – உபநிஷத்
தெளிவாக நிஷ்கலம், நிர்விகாரம், அஜஹ அத்வைதம்
என்ற லட்சணங்களை கூறியிருப்பதற்கு விரோதமாக இருக்கின்றது.
த்வைதமானது ஸ்ருதியினால்
நிந்திக்கப்பட்டுள்ளது,
நிஷேதம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அத்வைதம் எங்கும்
நிஷேதம் செய்யப்படவில்லை. த்வைதத்தை சுபாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,
வேதத்தின் கர்ம காண்டம் த்வைதத்தை உபதேசிக்கவில்லை. அதை லட்சியமாக கொண்டு சில சாதனங்களை கூறியிருக்கிறது. இந்த இடத்தில் சத்யமா, மித்யாவா என்று பேசவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கம் – ஆகாசம்; சிதாகாசம் (என்றும் இருப்பது), பூதாகாசம் (பஞசபூதங்களில் உள்ள ஒரு பூதம்)
வேதஹ அயம் பிராமனஹ விதுஹு: இந்த ஒம்காரமே வேதமாக இருக்கின்றது என்று ரிஷிகள் அறிந்திருக்கின்றார்கள்.
பகுதி-2 : மூன்று பண்புகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில் மூன்று பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகள்,
பிரஜாபதியின் மகன்கள் தந்தையிடமே குருகுலவாசம் செய்தார்கள். அவர்கள் தேவர், மனிதன், அசுரர் என்ற மூன்று குணங்களை கொண்டவர்களாக எடுத்துக் கொள்ளலாம். குருகுல வாசம் முடிந்ததும் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினர். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உபதேசம் செய்ய ஆரம்பித்தார். முதலில் தேவ குணமுடையவனுக்கு ” द “ என்று உபதேசித்துவிட்டு புரிந்ததா என்று கேட்க, அவர்களும் எங்களுக்கு புரிந்தது என்று கூறினர். என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது தமத்தை பின்பற்ற வேண்டும் என்று உபதேசித்தீர்கள் என்று பதில் கூறினார்கள். குருவும் ஆமோதித்தார், இவர்கள் சத்துவ குணம் பிரதானமுடையவர்கள் ஆதலால் இந்த உபதேசம் இவர்களுக்கு பொருத்தமானது.
அடுத்ததாக மனித குணமுடையவர்களுக்கும் அதே அக்ஷரத்தை (” द “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ, அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தானம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற, நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.
அடுத்ததாக அசுர குணமுடையவர்களுக்கும் அதே அக்ஷரத்தை (” द “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ, அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தயாவுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற, நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.
இந்த உபதேசத்தைத்தான் இடியானது (தெய்வீக வாக்கு) द-द-द என்று சத்தத்துடன் இடித்துக் காட்டுகின்றது இதிலிருந்து நாம் தமத்துடன், தானத்தையும், தயவையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமம் என்பது இந்திரியகட்டுபாட்டையும், தானம் என்பது பகிர்ந்துண்டு வாழும் பண்பையும், தயை என்பது கருணை காட்டும் குணத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. இந்த மூன்றையும் மனிதன்தான் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும், ஏனென்றால் மனிதனிடத்தில்தான் இந்த மூன்று குணங்களும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும்.
பகுதி- 3 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-1
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹ்ருதயத்தை ஆலம்பனமாக வைத்துகொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும். நமது மனமானது மூன்று விதமாக செயல்படுகிறது. இந்திரியங்கள் மூலமாக வெளி விஷயங்களை கிரகிக்கிறது, அதன் மூலம் ஜீவனுக்கு அனுபவத்தை தருகிறது, வேறு உலகத்திற்கு செல்வதற்கும் உதவுகிறது. அப்படிப்பட்ட ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி- 4 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-2
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. சத்தியம் – மூர்த்த-அமூர்த்தமாக தியானித்தல்
2. மஹத் – மிகப்பெரியது என்று தியானித்தல்
3. யக்ஷம் – பூஜிக்கத்தகுந்தவன் என்று தியானித்தல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி- 5 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-3
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை சூரியனிலும், நமது வலது கண்ணிலும் வைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
பகுதி- 6: ஹிரண்யகர்ப்ப உபாசனை-4
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. மனோமயம்
2. பாஸதீய – பிரகாச ரூபமாக
3. ஸம்வஸ்ய ஈசானஹ
4. ஸர்வஸ்ய அதிபதி
5. ஸர்வஸ்ய பிராதாஸ்ய – எல்லாவற்றையும் ஆள்பவர்.
பகுதி- 7 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-5
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை மின்னலாக தியானித்தல். இப்படி தியானம் செய்வதால் நம்முடைய அறிவு பிரகாசமடையும்.
பகுதி- 8: ஹிரண்யகர்ப்ப உபாசனை-6
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை வேதரூபமாகவே தியானித்தல்
பகுதி- 9: ஹிரண்யகர்ப்ப உபாசனை-7
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை நம் வயிற்றிலிருக்கின்ற வைஸ்வாநரன் என்று அழைக்கப்படுகின்ற அக்னியாக தியானித்தல். இதனால் உடல் வலிமை, உணவு ஜீரணிக்கும் சக்தி பெருகும்.
பகுதி- 10 : உபாசகர்களின் கதி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்பவர்களின் கதியானது விவரிக்கப்படுகின்றது. இவர்கள் பிரம்மலோகத்திற்கு செல்யவார்கள். சில தேவதைகளை கடந்து செல்ல வேண்டும், அந்தந்த தேவதைகள் நமக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் துணைக் கொண்டு பிரம்மலோகம் அடையலாம்.
பகுதி- 11 : தவமாக பாவிக்க வேண்டியவை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி- 12 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-8
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை அன்னரூபமாகவே தியானித்தல், பிராணரூபமாகவும் தியானித்தல். இப்படி தியானம் செய்வதால் நல்ல உணவு கிடைக்கும், பிராணன் நன்கு வேலை செய்யும்.
பகுதி- 13 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-9
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை பிராணரூபமாக நான்கு விதமாக தியானித்தல். அவைகள்
பகுதி- 14 : ஹிரண்யகர்ப்ப உபாசனை-10
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை காயத்திரி மந்திரத்திலுள்ள பதங்களை வைத்துக்கொண்டு தியானித்தல்.
முடிவுற்றது