விக்ஞானேன ஸ்பந்தமானே வை – சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது
ந ஆபாஸஹ அன்யதோ பு4வஹ – இந்த ஜகத் வேறிடத்திலிருந்து வந்து தோன்றி கொண்டிருக்கவில்லை.
ந ததா அனயத்ர நிஸ்பந்தாத் – சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த ஜகத்தும் வேறிடத்திற்கு செல்வதில்லை
ந விக்ஞானம் விஸா2ந்தி தே – இந்த ஜகத் சைதன்யத்திற்குள்ளும் செல்லவில்லை.
மோட்சம்
அடைந்ததும், பிரம்மத்தை சரியாக
புரிந்து கொண்டதும் இந்த ஜகத் தோன்றி கொண்டுதான் இருக்கும், வேறெங்கும் செல்லாது. பிரம்மத்திற்கு உள்ளேயும்
செல்லாது. சூரியன் உதயத்தையும், நீலவானத்தையும் பார்க்கின்றோம். இந்த இரண்டு தோற்றமும்
உண்மையானது இல்லை என்ற அறிவுடன் அதை பார்த்து கொண்டிருக்கின்றோம். அது போல
ஜகத்தின் மித்யாத்வத்தை புரிந்து கொண்டவுடன் அது தோன்றி கொண்டிருந்தாலும் அது
நமக்கு வெறும் காட்சிதான்.
காரிகை-52
ந நிர்கதாத் தே விக்ஞானாத் – இந்த உலகத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
த்ரவியத்வ அபா4வாத் யோகதஹ – இவைகளுக்கு பொருளாக இருக்கும் தன்மை இல்லாத காரணத்தினால்
ஜகத் மித்யா என்று கூறுவதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகின்றது. அவைகள்
காரிகை-53
ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு காரணமாகலாம். பொருளுக்கும் நாம-ரூபங்களுக்கும் காரண-காரிய சம்பந்தம் சொல்ல முடியாது. பல பொருட்கள் அவயங்கள் ஒன்று சேர்ந்து புதிய பொருளாக வடிவெடுக்கலாம். இதில் காரண-காரிய பாவத்தை சொல்லி விடலாம்.
அன்யத் த்ரவியம் அன்யத் த்ரவ்யஸ்ய ஸ்யாத் ச ஏவ ஹி – ஒரு பொருள் வேறொரு பொருளுக்கு காரிய-காரணமாக இருக்கலாம்.
தர்மானாம் த்ரவியத்வம் ந உப்பத்யதே – ஜீவர்களுக்கு ஒரு அவயமாக இருக்கும் தன்மை சம்பவிக்காது, கிடையாது
அன்யாவஹ ந உபபத்யதே – சைதன்யத்திற்கு வேறாக இருக்கும் தன்மையும் கிடையாது
எனவே சைதன்யம் மட்டும்தான் ஸத்யம், இந்த ஜகத் வெறும் காட்சிப்பொருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
காரிகை-54
ஏவம் ந சித்தஜா தர்மா – ஜீவர்கள், பிரபஞ்சம் இவைகள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
சித்தம் வா அபி ந தர்மஜம் – பிரபஞ்சத்திலிருந்து சைதன்யமும் தோன்றவில்லை
ஏவம் ஹேதுபல அஜாதி பிரவிஸ2ந்தி மணீஷிணஹ – இவ்விதம் காரணமும் காரியமும் தோன்றவில்லை என்று ஞானிகள் நிச்சயித்திருக்கின்றார்கள்
காரிகை-55
யாவத் ஹேதுபல ஆவேஸ2ஹ – எதுவரை புத்தியில் இருக்கின்ற காரண-காரிய விஷயத்தினுடைய உறுதியான எண்ணம் இருக்கின்றதோ
தாவத் ஹேதுபல உத்பவஹ – அதுவரை காரிய-காரண பா4வம் இருந்து கொண்டு இருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2ஹ – இந்த காரண காரிய உறுதியான எண்ணம் நம் புத்தியிலிருந்து நீங்கும்போது
நாஸ்தி ஹேதுபல உத்பவ – காரண-காரிய தோற்றமானது இருக்காது
காரிகை-56
யாவத் ஹேதுபல ஆவேஸ2ஹ – எதுவரை காரண-காரிய பா4வம் இருக்கின்றதோ
தாவத் ஸம்சார ஆயதஹ – அதுவரை சம்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2ஹ – காரண காரிய புத்தியானது நீங்கும்போது
ஸம்சாரம் ந பிரபத்யதே – சம்சாரத்தை நீங்கியவனாக இருப்பான்.
ஶாஶ்வதம் நாஸ்தி தேன வை – அதனால் இவைகள் நிலையாக இருப்பதில்லை
ஸத்பாவேன ஹி அஜம் ஸர்வம் – அனைத்தும் பிரம்மஸ்வரூபமாக பார்த்தால் அவைகள் பிறக்காதவைகள்’
இந்த உலகத்தை நாம
ரூபமாக பார்த்தால் அவைகள் நிலையாக இருப்பதில்லை.
நாம ரூபங்கள் சார்ந்திருக்கும் காரணமாக இருத்தல் என்ற நிலையில் ஸத்
ஸ்வரூபமாக பார்த்தால் அதற்கு அழிவில்லை.
காரிகை-58
யே தர்மாஹா இதி ஜாயந்தே – எந்த அனாத்மாக்கள் இவ்விதம் மேலே சொல்லியபடி அறியாமையினால் தோன்றியுள்ளனவோ
தே தத்வத் ந ஜாயந்தே – அவைகள் உண்மையாக தோன்றவில்லை
தேஷாம் ஜனம் மாயை உபமம் – இவைகள் தோற்றத்திற்கு மாயாஜாலம்தான் காரணம்
ஸா ச மாயா ந வித்யதே – அந்த மாயை உண்மையிலே இல்லாதது
காரிகை-59
யதா மாயாமயாதி பீஜாதி ஜாயதே – எவ்விதம் மாயமான விதை தோன்றியதோ
தன்மய அங்ரே – அதிலிருந்து மாயமான தளிராக வெளிவந்தது
நா அசௌ நித்யா – அது நிலையானதல்ல
ந சோச்சேதி – அதை அழிக்க முடியாது
தத்வத் தர்மேஷு – அதுபோல எல்லா அனாத்மாக்களிலும்
யோஜனா – இந்த உதாரணத்தை ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள்
காரிகை-60
அனிர்வசனீயம் – வாயால் விளக்கமுடியாது, வாக்கால் விளக்க முடியாது
அபிதா – சொல்லுதல்
ஶாஶ்வதம் – என்றுமுள்ளது;
அஶா2ஶ்வதம் – நிலையற்றது, அழிவற்றது
ந அஜேஷு ஸர்வ தர்மேஷு – பிறக்காத அனைத்து பொருட்களிடத்தில் அவைகள் பயனற்றவை என்று விளக்க முடியாது
பிறக்கவேயில்லாத அனைத்து தத்துவங்களுக்கும் நிலையான, நிலையற்றவை என்று சொல்லுதல் தேவையற்றது. பிரம்மன், அஸத், மித்யா இவைகள் பிறக்கவேயில்லை எனவே அவைகள் நிலையானவையா, நிலையற்றவையா என்று சொல்ல தேவையில்லை.
யத்ர வர்ணா: ந வர்தந்தே – எந்த இடத்தில் சொற்கள், எழுத்துக்கள் செயல்படாமல் போகின்றதோ
தத்ர விவேகஹ ந உச்யதே – அந்த இடத்தில் வேறுபடுத்துதல் சம்பவிக்காது
எங்கேயெல்லாம் சொற்கள் பயன்படாமல் போகின்றதோ அங்கேயெல்லாம் எந்த லட்சணமும் சொல்ல முடியாது, பிரித்து பார்த்தல் என்ற செயலே நடைபெறாது.
காரிகை-61
சித்தம் சலதி மாயயா – மனதினால் பொய்யாக தோற்றுவிக்கபட்டதும், நித்ரா என்ற மாயா சக்தியினால்
யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்விதம் கனவில் தோன்றுகின்ற இருமைகள்
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் – அவ்விதம் விழிப்பு நிலையில் பொய்யாக காட்சியளிக்கின்ற இருமைகள்
சித்தம் சலதி மாயயா – ஸமஷ்டி மனதினால் மாயையின் துணைக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.
எனவே இதிலிருந்து பிரம்மன் அத்வைதம் என்று அறிந்து கொள்ள முடியும்
காரிகை-62
அத்வயம் ச த்3வயாபாஸம் – இரண்டற்றதை இருமைகளாக
சித்தம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனமானது கனவை தோற்றுவிக்கின்றது, இதில் நமக்கு சந்தேகமில்லை.
ததா அத்வயம் சித்தம் – அதுபோல இரண்டற்ற சமஷ்டி மனமானது
த்3வயாபாஸம் ந ஸம்ஶ்யஹ – இங்கேயிருக்கின்ற இருமைகளானது தோற்றுவிக்கப்பட்டது, இதிலும் சந்தேகமில்லை
காரிகை-63
கனவில் பார்ப்பவைகள் மனதிற்கு வேறாக இல்லை. அதுபோல மனமானது பார்ப்பவனிடம் இருந்து வேறாக இல்லை.
ஸ்வப்னே த்3ருக் – கனவை பார்ப்பவனிடத்தில் இருக்கும் மனம்.
கனவில் பார்க்கும் பொருட்களனைத்தும் மனதிற்கு வேறாக இல்லை. நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்களே கனவு விஷயங்களாக தெரிகின்றது. எனவே கனவு விஷயங்கள் அனைத்தும் மனதில் ஒடுங்குகின்றது. அந்த மனம் சைதன்யத்திற்குள் ஒடுங்குகின்றது.
ஸ்வப்னே த்ருக் – கனவை பார்க்கின்ற சைதன்யம்
ஸ்வப்னே பிரசரன் – அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொண்டு
திக்ஷு வை தஸ2ஸு ஸ்திதான் – பத்து திசைகளிலும் இருக்கின்ற
அண்டஜான், ஸ்வேதஜான் – முடையிலிருந்து பிறந்தவைகள், வியர்வையிலிருந்து பிறந்தவைகள்
வா அபி ஜீவான் ஸதா பஷ்யதி – இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.
காரிகை-64
கனவை பார்ப்பவனுடைய மனதினால் பார்க்கப்படுகின்ற அனைத்து பொருட்களைக் காட்டிலும் மனம் வேறாக இல்லை. அதுபோல கனவை பார்ப்பவனால் பார்க்கப்படுகின்றது. இந்த கனவை பார்ப்பவனுடைய மனமானது மனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. மனதை பார்க்கும் போது அதிலிருந்து விடுபடுகின்றோம். சப்தத்திலிருந்து விடுதலையடைய அதையே கவனிக்க வேண்டும், இந்த நிலையில் அந்த சப்தம் நம்மை தொந்தரவு செய்யாது.
காரிகை-65
ஜாக்ரத் நிலையில் பார்க்கும் விஷயங்களனைத்தும் ஈஸ்வரனுடைய மனம்தான் தோற்றுவித்திருக்கிறது. விழிப்பு நிலையில் இருந்து கொண்டு அந்த நிலையை பார்ப்பவனான விஸ்வன். பத்து திசைகளிலும் இருக்கின்ற முடையிலிருந்து பிறந்தவைகள், வியர்வையிலிருந்து பிறந்தவைகள் இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.
காரிகை-66
ஜாக்ரத் அவஸ்தையில் மனதால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் அதைப் பார்க்கின்ற மனதிற்கு வேறானதல்ல. அதுபோல அந்த மனதை பார்க்கின்ற சைதன்யத்திற்கு வேறானதாக மனம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
காரிகை-67
மனதையும் அதனால் பார்க்கப்படும் விஷயங்களுடைய தன்மையை கிடையாது. வெளியே இருக்கும் பானை நம் மனதில் இருக்கும் பானை விருத்தியை சார்ந்திருக்கின்றது. அதே சமயம் பானை விருத்தியும், ஜட பானையை சார்ந்து இருக்கின்றது. த்ருஶ்யமும், விருத்தியும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. திருஶ்யமும், சித்தமும், வெளியே இருக்கின்ற விஷயங்களும், மனதில் இருக்கின்ற எண்ணங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது. அவைகள் இருக்கின்றதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லப்படுகின்றது. இவைகளிரண்டிற்கும் எந்தவித குணங்களும் கிடையாது.
பிரம்மத்தை நேரிடையாக விளக்கமுடியாது, அதேபோல சூன்யத்தையும் விளக்க தேவை இல்லை. இருத்தல், இல்லாமை என்ற லட்சணத்தைக் கொண்ட மித்யாவையும் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஒன்றின் அறிவால் மற்றொன்று அறியப்படுகின்றது. விஷயத்தை அறிய விருத்தி தேவைப்படுகின்றது. அதுபோல விருத்தியை அறிய விஷயம் தேவைப்படுகிறது.
காரிகை-68
எவ்வாறு கனவில் தோன்றும் மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிறகு கனவு முடிந்ததும் மறைந்தும் விடுகின்றார்கள். அதேபோல விழிப்பு நிலையிலுள்ள மனிதர்களும் பிறக்கின்றார்கள், பிறகு இறக்கின்றார்கள். கனவு மனிதர்கள் எப்படி பொய்யோ, அப்படியே விழிப்புநிலை மனிதர்களும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.
காரிகை-69 & 70
காரிகை-71
எந்த ஜீவனும் பிறப்பதில்லை அவனுக்கு பிறப்பதற்கு காரணம் இல்லை. இதுதான் உத்தமமான உண்மை. இந்த உலகத்தில் எதுவும் தோன்றவில்லை. ஜகத்தே தோன்றவில்லை, பிரம்மனிடத்திலிருந்து எதுவுமே தோன்றவில்லை
காரிகை-72
சைதன்யமே போக்தாவாகவும், போக்கியமாகவும் இருக்கின்றது. சிதாபாஸமாக உள்ள வஸ்து போக்தா, சிதாபாஸம் இல்லாத வஸ்து போக்கியம், அனுபவிக்கப்படும் பொருள்.
சைதன்யத்தை தவறாக புரிந்து கொண்டால்தான் இந்த இருமைகள் தெரிந்து கொண்டிருக்கும். இது அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருட்கள் என்று தோன்றி கொண்டிருக்கும். சைதன்யம் என்றும் எந்த விஷயமுமற்றதாக இருக்கின்றது. அதனால் இது எதனோடும் சங்கமற்றது என்று சொல்லப்படுகின்றது.
காரிகை-73
யஹ அஸ்தி – எந்த இருமைகள் இருக்கின்றதோ ( சாஸ்திரம், குரு, சிஷ்யன் )
கல்பித ஸம்வ்ருத்யா – அவைகள் கற்பனை செய்யப்பட்டு, உபதேசம் செய்வதற்காக இருக்கின்றது
பரமார்தேன நாஸ்த்யசௌ – அந்த இருமைகள் பாரமார்த்திக த்ருஷ்டியில் இல்லை
பரதந்திர அபி ஸம்வ்ருத்யா ஸ்யாத்– மற்ற அக்ஞானிகளின் கொள்கை அடிப்படையில் இருமைகள் இருக்கின்றது
நாஸ்தி பரமார்த்தஹ – ஆனால் உண்மையில் இல்லை, பாரமார்த்திக த்ருஷ்டியின் அடிப்படையில் இல்லை.
காரிகை-74
அஜஹ கல்பிதா ஸம்வ்ருத்யா- ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் கற்பனையான லக்ஷணம், உபதேசம் செய்வதற்காகவும், ஆத்மாவை தவறாக புரிந்து கொண்டிருக்கின்ற அறிவை நீக்குவதற்காகத்தான் இவ்வாறு கூறப்படுகிறது. ஆகவே பிறப்பற்றது என்பது ஆத்மாவின் ஸ்வரூபமல்ல.
பரமார்தேன ந அபி அஜஹ – உண்மையில் ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் தவறு
பரதந்திர - மற்ற மதத்தை சார்ந்தவர்கள்
அபிநிஷ்பத்ய ஸம்வ்ருத்யா – அடைந்த பொய்யான முடிவினால், கருத்துப்படி
ஸஹ து ஜாயதே – ஆத்மா பிறக்கின்றது.
காரிகை-75
அபூத அபிநிவேஶஹ அஸ்தி – ஆசை உச்சநிலைக்கு சென்று விடும் நிலைக்கு அவிநிவேஶம் என்று பொருள். இந்த அபிநிவேஶம் இல்லாததான த்வைதத்தில் உறுதியாக அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்படுதல், இருத்தல்
த்வயம் த த்ர ந வித்யதே - ஆத்மாவிடத்தில் இருமை கிடையாது.
த்3வயாபா4வம் ஸஹ புத்தவா ஏவ – இருமையினால் இல்லாமையை ஒருவன் அறிந்துதான்
நிர்நிமித்தஹ ந ஜாயதே – ( சம்சாரம் பிறப்பதற்கு காரணம் இல்லாததால் ), எந்த தேவையும் இல்லாமல் இருப்பதால் அவன் பிறப்பதில்லை
காரிகை-76
நிர்நிமித்தம் என்ற சொல்லின் பொருள் விளக்கப்படுகின்றது.
யதா3 ந ஹேதுன் லப4தே – ஒருவன் எப்பொழுது காரணங்களை பார்க்கவில்லையோ
உத்தம, அத4ம, மத்4யமான் – புண்ணிய, பாவ இவைகளின் சேர்க்கை
ஒருவன் எப்பொழுது காரணங்களையும், பாவ-புண்ணியங்களையும் பார்க்கவில்லையோ,
காரிகை-77
ஹேது அபாவம் விளக்கப்படுகின்றது. ஆத்மாவிடம் காரணம் இல்லாத தன்மை வந்து போவதா அல்லது அதன் ஸ்வரூபமா என்று கேட்டால் அது இல்லை என்று உணர்ந்து விட்டால் திரும்பவும் வராது. ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே காரணமற்றது. வாழ்க்கையில் எது அடைந்தாலும் அதை மீண்டும் இழந்துவிடலாம். ஆனால் ஆத்மாவை அடைந்துவிட்டால் அதை இழக்க மாட்டோம்.
அநிமித்தஸ்ய சித்தஸ்ய – பிறப்பற்ற சைதன்யத்திற்கு, காரணமற்ற தன்மையுதைய ஆத்மாவுக்கு
யா அனுபத்தி – எந்தவொன்றிற்கு தோன்றாத தன்மை, எதையும் தோற்றுவிக்காத தன்மை
ஸமா அத்வயா – என்றுமுடையது, நிலையானது, எப்பொழுதும் இருப்பது, பூரணமானது
அஜாதஸ்ய ஏவ ஸர்வஸ்ய – பிறக்காமலிருக்கின்றதும், அனைத்துமாகவும் தெரிந்து கொண்டிருக்கின்றதும்
தத் சித்தம் த்ருஶ்யம் ஹி யதஹ – சைதன்யத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்ட இவைகள் அனைத்தும் காரணமற்ற சைதன்யம்தான்.
காரிகை-78
புத்வா அநிமித்ததாம் ஸத்யாம் – காரணமில்லாத தன்மையை உண்மையானது என்று அறிந்து
ஹேதுன் ப்ருதக் ந ஆப்னுவன் – எந்தவொரு காரணத்தையும் பிரம்மத்திற்கு வேறாக பார்க்காமலிருந்தால்
பதம் அஶ்னுதே – அந்த நிலையையே அடைகின்றான்.
வீத ஶோகம் – சோகத்திலிருந்து விடுதலையை அடைகின்றான்
ததா அகாமம் அபயம் - அதேபோல ஆசையற்ற, பயமற்ற நிலையை அடைகின்றான்.
காரிகை-79
அபூத அபிநிவேஶாத் – இல்லாத விஷயத்தில் உச்சநிலை ஆசையானது
தத் ஸத்ருஶே ப்ரவர்ததே – நம்முடைய மனம் எதை பார்க்கின்றதோ அதை அடைய செயலில் ஈடுபடுகின்றது
வஸ்து அபாவம் – பொருட்கள் எதுவும் இல்லை
பு3த்3வா ஏவ – அறிந்து கொண்ட பின்புதான்
நிஸங்கம் – விடுபட்டவனாக, அபிநிவேஶத்திலிருந்து விடுபட்டவனாக
வினிவர்ததே – இருமையிலிருந்து திரும்பி விடுகின்றான்.
காரிகை-80
அபயத்தை அடைந்தவனின் நிலை, யாருக்கு இந்த நிலை கிடைக்கின்றது, பிரம்ம ஸ்வரூபம் இவைகள் இதில் விளக்கப்படுகின்றது
ததா – அப்போது, ஞான நிஷ்ட நிலையில்
ஸ்திதி, நிஸ்சல – அவனுடைய மனம் சஞ்சலமில்லாமல் இருக்கும். எதனாலும் பாதிக்கப்படாத மனமாக இருக்கும்.
நிவ்ருத்தஸ்ய அப்ரவ்ருத்தஸ்ய – எல்லாவற்றிலிருந்து, எல்லா பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டவனாக இருக்கும். இது ஜீவன்முக்தி நிலையாகும். எதிலும் மனம் செல்லாமல் இருக்கும் நிலையை உடையவன். இவன் நிவிருத்தி, ப்ரவிருத்தி இவைகளைக் கடந்த நிலையில் இருக்கின்றான். சாதாரண அவஸ்தையில் நிவிருத்தியில் இருக்கின்ற ப்ரவ்ருத்திகளை விட்டுவிட்டவன்
ஸஹ விஷய ஹி புத்தானாம் – ஞானத்தை அடைந்தவர்களுக்கு இந்த நிலைதான் விஷயமாக இருக்கும்.
தத் ஸாம்யம் அஜம் அத்வயம் – அந்த பிரம்மமானது சமமாகவும், என்றும் ஒரே நிலையிலும், பிறப்பற்றதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது.
காரிகை-81
இந்த ஆத்மா பிறப்பற்றது, ஸ்தூல சரீரமற்றது, காரண சரீரமற்றது, சூட்சும சரீரமற்றது, கனவுகளற்றது, தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது, என்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது. இவையெல்லாம் அதனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றது.
காரிகை-82
பிரம்மமானது எப்பொழுதும் மிக எளிதில் மறைக்கப்பட்டுவிடும், பிரம்மத்தை மறைத்திருக்கும் திரையை நீக்குவது மிகவும் கடினம். இது கயிற்றை பாம்பினால் மறைக்கப்படுவது போல பிரம்மத்தின் மீது இந்த பிரபஞ்சம் தோன்றிக்கொண்டு மறைத்துக் கொண்டிருக்கின்றது. ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் ஆசையுடன் சத்தியமாக கிரகிக்கும்போது, உணரும் போது பிரம்மம் மறைக்கப்படுகின்றது. அத்யாஸம்தான் அதிஷ்டானத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் பிராரப்த வசத்தினாலும் அடைந்த ஞானத்திலிருந்து விலகி சம்சாரத்தில் விழுந்து விடலாம்.
காரிகை-83
இந்த பிரம்மமானது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாது, சாஸ்திரத்தை நன்கு படித்த பண்டிதர்களுக்கும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இது இருக்கின்றதென்று சிலரும், இல்லையென்று பலரும் கூறுகின்றார்கள். இருப்பது சரீரம்தான், ஜடமான வஸ்துக்குள் அது இல்லவே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது அசைவது போலவும் இருக்கின்றது, அசையாதது போலவும் இருக்கின்றது. இவ்வாறு குழந்தைகளுக்கு பொம்மைகளை மறைத்து வைத்திருப்பது போல பிரம்மமானது மறைக்கப்பட்டிருக்கின்றது.
காரிகை-84
மேற்கூறிய கருத்துக்களை பிடித்துக் கொள்வதினால் எப்பொழுதும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆத்ம தத்துவம் இப்படிபட்ட கருத்துக்களோடு சம்பந்தபடாமல் இருக்கின்றது. இப்படி எவரால் பார்க்கப்படுகின்றதோ, அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவராக இருக்கிறார்.
காரிகை-85
ப்ராப்ய ஸர்வக்ஞதாம் க்ருத்ஸ்னாம் – அனைத்தையும் முழுமையாக அறிகின்ற தன்மையை அடைந்தவன், சந்தேகமில்லாமல் பிரம்ம ஞானத்தை அடைந்தவனாகின்றான்.
ப்ராஹ்மண்யம் – பிரம்மனாக இருக்கின்ற தன்மை, பிரஹ்ம ஞான நிஷ்டை அடைந்த நிலை
பதம் அத்3வயம் – இந்த நிலையே இரண்டற்றது, அதை அடைந்து
அனாபன்னம் ஆதி மத்ய அந்தம் – துவக்கம், இடைநிலை, முடிவு இவைகளுக்கு அப்பாற்பட்ட பிரஹ்ம நிலை.
கிம் அதஹ பரம் ஈஹதே - இந்த ஞானநிஷ்டை அடைந்த பிறகு எதனைக் கண்டு ஆசைப் படுவான், எந்த செயலை செய்ய தூண்டப்படுவான், அவனுக்கு செயல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காரிகை-86****
விப்ராணம் ஏஷ வினயஹ, ஶமஹ தமஹ – ஞானநிஷ்டர்களிடம் பணிவு இருக்கும், பிரம்மனிடத்தில் ஒடுங்கியிருத்தல், பிரம்மனாகவே இருத்தல், முழுமையான மன அமைதி இருக்கும், புலன்களும் அவன் வசத்தில் இருக்கும்.
ப்ரக்ருதஹ உச்யதே – இவைகள் அவர்களுக்கு சுபாவமாகி இருக்கும்.
ப்ரக்ருதி தாந்தத்வாத் – இயற்கையாகவே ஒடுங்கியிருக்கின்ற காரணத்தினால்
ஏவம் வித்வாஞ்ஶமம் வ்ரஜேத் – இவ்வாறு முழுமையான மனநிறைவை, அமைதியை ஞானி அடைந்து விட்டான்.
காரிகை-87
ஸ்வஸ்து ஸோபலம்பம் – வியாவகார பொருட்களும், அனுபவத்துடன் கூடிய விஷயங்களும்
த்3வயம் லௌகிகம் இஷ்யதே – ஜாக்ரத் அவஸ்தை என்று கருதப்படுகிறது
அவஸ்து ஸோலம்பம் – பொருட்கள் இல்லை ஆனால் அனுபவம் மட்டும் இருக்கின்ற
ஶுத்தம் லௌகிகம் இஸ்யதே – ஸ்வப்ன அவஸ்தை என்று கூறப்படுகிறது
காரிகை-88
லோகாத்தரம் – ஆழ்ந்த உறக்க நிலை
அவஸ்து – பொருட்கள் கிடையாது
அனுபலம்பம் ச – அனுபவமும் கிடையாது; பொருட்களை அனுபவிக்கும் நிலையும் இல்லை,
ஞானம் – மனோ விருத்தி ஞானம்; மூன்று நிலையை அனுபவிப்பவன் (பிரமாதா)
ஞேயம் – இவர்கள் அனுபவிக்கும் விஷயங்கள் (பிரமேயம்)
விக்ஞேயம் – இந்த அவஸ்தைகளுக்குள்ளும் பொதுவாக இருக்கின்ற துரீயம். இதுவே அறியத்தக்கது; அறியப்படவேண்டியது.
பூத்தைஹி ஸதா – என்று ஞானிகளால் எப்பொழுதும்
ப்ரகீர்த்தம் – பேசப்படுகின்றது.
காரிகை-89
ஞானே ச த்ரிவிதே4 ஞேயே – முன்றுவிதமான ஞானங்களும், மூன்றுவிதமான அறியப்படும் பொருட்களும்
மூன்று அவஸ்தைகளிலும் தனித்தனியாக மூன்றுவிதமன அறிவு வருகின்றது; ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவித்தேன் என்ற அறிவு ஏற்படுகின்றது. மூன்று அவஸ்தைகளில் உள்ள பொருட்கள் மூன்றுவிதமான அறியப்படும் பொருட்கள் கனவு, ஜாக்ரத் அவஸ்தையில் பொருட்கள், ஆழ்ந்த உறக்கத்தில் அக்ஞானமும், ஆனந்தமும் இருக்கின்றன.
க்ரமேன விதி3தே – முறையாக அறியப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளும் தனித்தனியாக அனுபவிக்கப்படுகின்றது. ஆனால் மூன்று நிலைகளிலும் தொடர்ந்து இருப்பது துரீயம் என்றழைக்கப்படும் ஆத்ம தத்துவம். இதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மஹாதி4யஹ – மேலான அறிவுடையவனுக்கு
ஸ்வயம் – அவன் தானாக
ஸர்வக்ஞதா ப4வதி – அனைத்துமாக இருக்கின்ற நிலையை அடைகின்றான்; எல்லாவற்றையும் அறியக்கூடிய நிலையை அடைகின்றான்
ஸர்வத்ர இஹ – இங்கேயே இப்போதே அந்த நிலையை அடைகின்றான்
காரிகை-90
மோட்சத்தை அடைய விரும்புபவன் முதலில் நீக்க வேண்டியதை நீக்கிட வேண்டும். அறியத்தக்கதையும் அறிந்திட வேண்டும், அடையத்தக்கதையும் அடைந்திட வேண்டும், விலக்கத்தக்கதுமான விஷயங்களை விலக்கிட வேண்டும்
இந்த நான்கில் மூன்று மித்யா, அறியத்தக்கதான பிரம்மன் ஒன்றுதான் சத்யம் இதை அடைவதற்கு மற்ற மூன்றும் சாதனமாக இருந்து பின் சென்று விடுகின்றது.
காரிகை-91
சுபாவமாக அனைத்து ஜீவர்களும் பிறப்பற்றவர்கள், என்றுமுள்ளவர்கள் என்று அறிய வேண்டும், ஆகாசத்தைப்போல ஸ்வருபத்திலே தூய்மையாக இருக்கின்றார்கள். இருமைகள் என்பது இவர்களிடையே கிடையாது. கால, தேசம், வஸ்து ஆகியவைகளில் எந்த விதத்திலும், வேற்றுமையற்றவர்கள்.
காரிகை-92
ஸர்வே தர்மா ப்ரக்ருதியா ஏவ ஆதிபுத்தா4 – எல்லா ஜீவர்களுக்கும் இயற்கையிலே எப்பொழுதும் பிரம்மன் அறியப்பட்டதாகவே இருக்கின்றது
நிஸ்சிதாஹா – இவ்வாறு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வயம் ப்ரகாசமாகவே இருக்கின்றது
யஸ்ய ஏவம் பவதி க்ஷாந்தி – இவ்வாறு அறிந்து கொண்டால் மன அமைதி ஏற்படும், மன நிறைவை அடைந்து விடுவான்.
ஸஹ அம்ருதத்வாய கல்பதே – அவன் மரணமற்ற பெருவாழ்வுக்கு தகுதி அடைகின்றான்
காரிகை-93
ஸர்வே த4ர்மாஹா – அனைத்து ஜீவர்களும்
ஆதி ஸா2ந்தாஹா – எப்பொழுதும் பூரண ஆனந்த ரூபமாக இருப்பவர்கள், முழுமையான மனநிறைவுடன் இருப்பவர்கள். இது அடையப்படுவதில்லை அறியப்படுவது.
அனுபன்னாஹா – பிறப்பற்றவர்களாக
ப்ரக்ருதயா – இயற்கையிலே, சுபாவமாக
ஸுநிர்வ்ருதா – சம்சாரமற்றவர்கள், எதனோடும் சம்பந்தப்படாதவர்கள், என்றென்றும் தன்னிடத்திலே இருப்பவர்கள்
ஸமாபின்னஹ – தனக்குள்ளே எந்த வேறுபாடுமற்றவர்கள்
அஜம் – பிறப்பற்றவர்கள்
ஸாம்யம், விஶாரதம் – எந்தவித வேறுபாடும் அற்றதாகவும், தூய்மையாகவும் இருக்கின்றார்கள்.
இந்த தன்மைகள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்தையே குறிக்கின்றது.
காரிகை-94
வைஶாரத்யம் ந அஸ்தி – தூய்மை கிடையாது
பேதே விசரதாம் ஸதா – எப்பொழுதும் வேற்றுமையை காண்பவர்களுக்கு, இருமையை உணர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மனத்தூய்மை என்பதே இருக்காது.
பே4தநிம்னாஹா – பொய்யான வேற்றுமையில் மூழ்கியிருப்பவர்கள்; ஸ்ருஷ்டியில் மூழ்கி இருப்பவர்கள்
ப்ருதக்வாதா- வேற்றுமைகள் உண்மையென்று திடமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள்
தஸ்மாத் தே க்ருபணாஹா ஸ்ம்ருதாஹா– இப்படி அவர்கள் இருப்பதனால் பரிதாபத்திற்கு உரியவர்களாக கருதப்படுகிறார்கள்.
காரிகை-95
அஜே ஸாம்யே து – பிறப்பற்ற, பேதமற்ற தத்துவத்தில்
யே கேசித் ஸு நிஸ்சிதாஹா பவிஷ்யந்தி – எந்த சிலர் அதை திடமாக உறுதி செய்தவர்களாக இருக்கின்றார்களோ
தே ஹி லோகே மஹாஞானாஹா – அவர்கள் இந்த உலகத்திலிருக்கும் மேலான ஞானத்தை உடையவர்களாகவும், மகான்களாகவும் இருக்கின்றார்கள்
தத் லோக; ந காஹதே – இதை உலகம் புரிந்து கொள்வதில்லை
ஞானிகளால் அறியப்பட்ட ஆத்ம தத்துவத்தை, ஞானிகளின் வாழ்க்கை முறையையும் உலகம் புரிந்து கொள்ளாது.
காரிகை-96
அஜேஷூ தர்மேஷு – பிறப்பற்ற ஜீவர்களிட்த்தில் இருக்கின்ற ஞானம், அறிவு ஸ்வரூபம்
அஜம் – பிறப்பற்றது;
யதோ ந க்ரமதே ஞானம் – எந்த காரணத்தால் ஞானம் எதனோடும் சம்பந்தம் வைப்பதில்லையோ, அதனால்
அஸங்கம் தேன கீர்த்திம் – இந்த அறிவு எதனோடும் சம்பந்தப்பட்டதில்லை கூறப்படுகின்றது.
காரிகை-97
ஆத்மா அஸங்கம் என்பதை அத்வைதத்தில் மட்டும்தான் நிலை நாட்ட முடியும்.
அணுமாத்ரே அபி வைத4ர்மே – அணுவை விட சிறிய வேற்றுமை தோன்றினாலும்
அவிபஸ்2சதி – அக்ஞானிகளுக்கு
அஸங்கதா ஸதா நாஸ்தி – எப்பொழுதும் ஆத்மா அஸங்கமற்றது என்பது கிடையாது
கிமுதா ஆவரணச்யுதிஹி – எப்படி அறியாமை அழியும், மறைந்து விடும்.
காரிகை-98
ஸர்வே தர்மாஹா – அனைத்து ஜீவர்கள் உண்மையில்
அலப்3தா4 ஆவரணா – அறியாமையால் மறைக்கப்படாதவர்கள்
ப்ரக்ருதி நிர்மலாஹா – சுபாவமாகவே தூய்மை ஸ்வரூபமானவர்கள்
ஆதௌ பு3த்தாஹா – ஆரம்பித்தலே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்
ததா முக்தா – அதுபோல ஜீவர்கள் என்றுமே முக்தியடைந்தவர்கள்தான்
புத்யந்த இதி நாயகா – ஞானிகள் விவகாரத்தில் நாங்கள் அறிகின்றோம்.
காரிகை-99
தாயினஹ – மேன்மைக்குரிய, பூஜைக்குரிய, எங்கும் வியாபித்துள்ள
புத்தஸ்ய ஞானம் – வணக்கத்துக்குரிய ஞானிகளினுடைய ஞானம்
தர்மேஷு – எந்த பொருட்களிடத்தும்
ந ஹி க்ரமதே – சம்பந்தபடுவதில்லை
ததா ஸர்வே தர்மாஹா – அதுபோலவே அனைத்து ஜீவர்களும்
ஏதத் ஞானம் – இந்த ஆத்ம தத்துவம்
புத்தேன ந பா4ஷிதம் – புத்தியினால் விளக்கப்படவில்லை
காரிகை-100
துர்தர்ஷம் – புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது
அதிகம்பீரம் - மிக கம்பீரமாக இருப்பது எனவே இதில் நுழைவதற்கு மிக கடினம்
அஜம் ஸாம்யம் - பிறப்பற்றது, பேதமற்றது
விஶாரதம் - பரிசுத்தமானது
புத்3த்4வா பத3ம் - இந்த தத்துவத்தை அறிந்து
அனானாத்வம் - வேற்றுமைகளற்ற, இருமைகளற்ற, அத்வைதம்
நமஸ்குர்மோ யதா பலம் - இப்படிபட்ட ஆத்ம தத்துவத்தை வணங்குகிறோம்.
எதை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அதனுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்,
எவர்களை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அவர்களுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்.
இந்த உபநிஷத்தில் ஆகம, ப்ரபஞ்சோஸம, வைதத்யம், அத்வைதம் என்று அழைக்கப்படுகின்ற நான்கு பிரகரணங்கள் உள்ளன.
அமனீபாவம் – நிதித்யாஸனம்,
அஸ்பர்ஸயோகம் – ஞானயோகம் – இது எதனோடும் சம்பந்தப்படாத நிலைக்கு நம்மை வைத்து கொள்ளுதல்