ப்ரஶ்ண
உபநிஷத் – அத்தியாயம்-5
ஓங்கார தியானம்
ஸ்வாமி குருபரானந்தா உபதேச
விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 21/04/2022
www.poornalayam.org
முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.
ஸ்லோக்ஸ-01
அத2 ஹைனம் ஶௌப்3ய: ஸத்யகாம: பப்ரச்ச2- ஸ யோ
ஹ வை தத்3ப4க3வன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்
ஓங்காரமபி4த்4யாயீத கதம் ஸ தேன லோகம் ஜ்யதீதி || 1 ||
மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையை செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?
இத்தகையவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருந்தால் அவனால் ஞானயோகத்திற்கு செல்ல முடியாது.

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான். பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ? (அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.
ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான். ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.
ஸ்லோக்ஸ-02
தஸ்மை ஸ ஹோவாச |
ஏதத்3 வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோ3ங்கார: |
தஸ்மாத்3 வித்3வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரமன்வேதி || 2 ||
ஓம் என்பது சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது. இந்த ஓங்காரமானது பர பிரம்மத்தையும், அபரா பிரம்மத்தையும் குறிக்கின்றது. எனவே ஒருவன் இந்த ஆலம்பனத்தின் துணைக் கொண்டு மேலே சொன்ன இரண்டில் ஏதோ ஒன்றை அடைகின்றான்.
ஸ்லோக்ஸ-03
ஸ யத்3யேகமாத்ரம் அபி4த்4யாயீத ஸ தேனைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ
ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே தம்ருசோ மனுஷ்யலோகமுபனயந்தே ஸ தத்ர
தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பன்னோ மஹிமனமனுப4வதி || 3 ||
ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும். அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது
ஒருவன் அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான், அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான். பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான். அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது. இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான். பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது. இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான். மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.
ஸ்லோக்ஸ-04
யதி3 த்3விமாத்ரேன மனஸி ஸம்பத்3யதெ ஸோऽந்தரீக்ஷம் யஜுர்பி4ருர்ஜ்ஜயதே ஸோமலோகம் ஸ ஸோமலோகே விபூ4திமனுபூ4ய புனராவர்ததே || 4 ||
இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதால் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.
இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான். அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது. அதனால் சொர்க்கத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான். அவன் சொர்க்கலோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.
ஸ்லோக்ஸ-05
ய: புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண பரம்
புருஷமபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன |
யதா2 பாதோ3த3ரஸ்த்வசா வினிர்முச்யத ஏவம் ஹவை ஸ பாப்மனா
வினிர்முக்த: ஸ ஸாமபி4ருர்ன்னயதே ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத்
ஜீவக4னாத்ப்ராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே ததே3தௌ ஶ்லோகௌ
ப4வத: || 5 ||
இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது. முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும். பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான். இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.
யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ, மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான். எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.
ஜீவகனாத் ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.
ஈக்ஷதே இதுவரை கூறிய விஷயங்கள் இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.
ஸ்லோக்ஸ-06
திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்யஸக்தா அனவிப்ரயுக்தா: |
க்ரியாஸு பாஹ்யாப்4யந்தரமத்4யமஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஞ: || 6 ||
திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்ய: மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை
தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.
ப்ரயுக்தா: இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது
அன்யோன்ய ஸக்தா ஒன்றையொன்று
சேர்த்து வைத்தல். ஓங்காரத்தை தனித்தனியாக
பிரித்து உபாஸிக்கூடாது.
அனவிப்ரயுக்தா: சரியாக
பயன்படுத்தபட்டால்
ஞ ந கம்யத: இவ்வாறு ஓங்காரத்தை தியானம்
செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான்.
பிரம்மலோகத்தை அடைகிறான்.
ஸம்யக் க்ரியாஸு நன்றாக தியானம் செய்யும்போது.
பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு - ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்
ப்ரயுக்தாஸு
- அவன் வீழ்வதில்லை
ஸ்லோக்ஸ-07
ரிக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமாபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே |
தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்3வான் யத்தச்சா2ந்தம்
அஜரமம்ருதமப4யம் பரம் சதி || 7 ||
ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.
அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் ரிக்வேத தேவதைகளால் மனிதலோகத்தை அடைகின்றான். உகாரத்தை தியானிக்கும் சாதகன் யஜுர் வேத தேவதைகளால் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் சாமவேத தேவதைகளால் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.
சுருக்கம்

01-02 ஓங்கார
தியானத்தின் இரண்டு பரிமாணங்கள்
03-05 உயர்
பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும், பலன்களும்
06-07 மூன்று
வகை தியானங்களின் பலன்
----oo000oo----