- பிரம்மம் எதையாவது அறிந்து அனைத்துமாக ஆனதா அல்லது எதையும் அறியாமல் எப்படி இருக்கிறது?
- பின்னர் பிரம்மம் தன்னை அறிந்து அனைத்துமாக ஆனது, அல்லது எதையாவது அறிந்து அப்படியானதா?
1. நித்தியமான பிரம்மன் எப்படி அறியாமைக்குரிய விஷயமானது?
2. அறியாமைக்குரிய ஆஸ்ரயமாக எப்படி வரும்?
1.
ரிஷிகளிடம் கடன்பட்டுள்ளோம், இதை அவர்கள் வகுத்துக் கொடுத்த
சாஸ்திரங்களை படிப்பது மூலம் தீர்த்து விடலாம்.
2.
தேவர்களுக்கு கடன்பட்டுள்ளோம் – இதை யாகங்கள்,
பூஜைகள் முதலியவைகளால் அடைத்து விடலாம்..
3.
பித்ருகளுக்கு கடன்பட்டுள்ளோம். – இதை குழந்தைகள்
பெறுவதன் மூலம் அடைக்கப்படுகிறது.
பதில்-3: யார் வைராக்கியத்தை அடைந்திருக்கிறார்களோ
அவர்கள் இந்த கடனிலிருந்து விடுபடுவார்கள். அவர்கள் எந்த ஆசிரமத்தை சேர்ந்தவர்களாயினும் இது பொருந்தும்.
ஒரு
விலங்கு குறைந்துப்போனாலே மனிதன் வருத்தப்படுவான், இன்னும் பல விலங்குகள் குறைந்தால்
என்ன சொல்வது?
1. சாஸ்திரத்தில் உள்ள கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளுதல்2. புரிந்ததை வாக்கின் வழியே வெளிப்பட வேண்டும்.3. உடலளவில் செயல்படுத்துவது. இதற்கு கர்மம் அல்லது தர்மம் என்று பெயர்.
1. வேதத்தை ஓதாமல் இருந்தால் அதனால் நமக்கு எந்த பலனும் கிடையாது. உச்சரிக்காத வேதம் பலனற்றதாக இருக்கும்.2. ஆரம்பிக்காத கர்மம் நமக்கு எந்த பலனும் கொடுக்காது.
· ஆத்மாவை பிரகாச ஸ்வரூபமாக அறிய வேண்டும்.· ஆத்மா அனைத்தையும் வியாபித்து எல்லா பொருட்களையும் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த பொருட்களில் உள்ள தோஷம் இதை பாதிக்காது.
· தியாகம் செய்யும் போது – தேவர்களுக்கு போக்யமாகி விடுகிறோம்.· வேத சாஸ்திரம் படிக்கும்போது ரிஷிகள் நம்மை அனுபவிக்கின்றார்கள்· விருந்தினர்களை உபசரிக்கும்போது அவர்கள் நம்மை நன்றாக அனுபவிப்பார்கள்.· பறவை, விலங்கு, புழுபூச்சிகளும் நம்மை அனுபவிக்கின்றது.
அத2 வித்தம் மே ஸ்யாத் - எனக்கு நிறைய செல்வம் வேண்டும்
அத2 கர்ம குர்வீயேதி – கர்மத்தை செய்ய வேண்டும்.
1. சாதாரண அன்னம் – எதையெல்லாம் நாம் சாதாரணமாக இயற்கையிலிருந்து வருபவைகளை உட்கொள்கிறோமோ அவையெல்லாம் சாதாரண அன்னம்.
2. தேவர்களுக்கு கொடுக்கும் அன்னம்
3. தேவதைகளிடமிருந்து நமக்கு தேவையான அல்லது நம் ஆசைகளை நிறைவேறுவதற்காக அளிக்கப்படும் பொருட்கள்
4. பால்
5. மனம்
6. வாக்கு
7. பிராணன்
1. அத்யாத்மம்: ஜீவனிடமிருக்கின்ற மனம், வாக்கு, பிராணன்2. அதிபூதம்: இந்த ஜகத் – ஹிரண்யகர்ப்பனாகவும், விராட்டாகவும் இருக்கும்3. அதிதெய்வம்: பிரஜாபதி – தேவதைகளின் சேர்க்கையாக இருக்கின்ற பொருட்களை அனுபவிக்கிறோம்.
1. சாதன பிரபஞ்சம் – விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள், சப்தான்னத்தில் முதல் நான்கு சாதனங்களாகின்றது.2. சாத்ய பிரபஞ்சம் – ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட கர்மப்பலன்கள். சப்தான்னத்தில் கூறபட்ட மனம்-மனிதலோகம், வாக்கு-பித்ருலோகம், பிராணன்-தேவலோகம்.3. அவ்யாக்ருதம் பிரபஞ்சம் – மாயா4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவனை கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல். ஒவ்வொரு ஜீவனும் தனக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொள்கிறான்.5. ஜீவனுடைய போக்த்ருத்வம் – ஜீவன் போக்தாவாகவுமிருக்கிறான். செய்த செயல்களின் விளைவை அனுபவிக்கின்றான்.6. நாம-ரூப-கர்ம – ஸ்ருஷ்டியை இவ்விதமாக ஏற்றுக்கொள்ளுதல்7. ஸரீரம் – ஸரீரம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுதல் ஆனால் உண்மையில் இதுவும் மித்யாதான்8. சம்சாரம் – ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கும் நிலை.
நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டியவைகள்
: ஸ்லோகங்கள் - 1.4.7 to 1.4.10