Showing posts with label ஶ்ரீமத் பாகவதம்-கபிலரின் தியானமுறை. Show all posts
Showing posts with label ஶ்ரீமத் பாகவதம்-கபிலரின் தியானமுறை. Show all posts

Saturday, July 1, 2017

பகவான் கபிலரின் தியானமுறை, பக்தியோக உபதேசம் - ஶ்ரீமத் பாகவத புராணம்

பகவான் கபிலரின் தியானமுறை, பக்தியோக உபதேசம்

தியானமுறை
Ø      சுத்தமான இடத்தில் ஆசனத்தை வைத்து அதில் ஸ்திரமாக, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பழக வேண்டும்.
Ø      பிறகு பிராணாயாமத்தை பயிற்சி செய்ய வேண்டும்
Ø      பிராணாயாமத்தின் மூலம் பிராணனை வெற்றிக் கொண்ட சாதகனின் மனமும் விரைவில் ஒருமுகப்படும்.  சஞ்சலமற்று அசையாது ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியும்
Ø      இந்த நிலையில் பகவானின் உருவத்தை தியானிக்க வேண்டும்.  பார்வை மூக்கின் நுனியில் பார்க்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் மூக்கின் நுனியை பார்க்க தேவையில்லை.
Ø      மனம் எவ்வளவு நேரம்  வரை பகவானை மட்டும் தியானிக்கின்றதோ அதுவரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்
Ø      பகவானின் முழு உருவம் மனதில் நிலைபெற்றவுடன் ஒவ்வொரு அங்கமாக தியானிக்க வேண்டும். அவருடைய சரணாரவிந்தத்தை நீண்ட காலம் தியானம் செய்ய வேண்டும்.
Ø      பிறகு முழங்காலகளையும், தொடைகளையும், இடுப்புப்பகுதியையும், நாபியையும், மார்பையும், கழுத்தையும், நான்கு கைகளையும், சங்கு, சக்கரத்தையும், வைஜயந்தி மாலையையும், கௌஸ்துப மணியையும், கன்னங்களையும், உயர்ந்த மூக்கையும், கண்களையும், முழு முகத்தையும் ஒவ்வொன்றாக தியானிக்க வேண்டும்.
Ø     கடைக்கண் பார்வையை வெகு காலம் தியானிக்க வேண்டும்.
Ø     அவரது மந்தகாச சிரிப்பை அவரிடத்திலே அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடையவனாய் தியானிக்க வேண்டும்.

பக்தி யோகம்
Ø       என்னுடைய குணங்களைக் கேட்ட உடனேயே கடலில் கலக்கும் நதியைப்போல பலனில் விருப்பமில்லாமலும், பிளவுபடாத பக்தியுடனும் செலுத்துகின்ற பக்தியே நிர்குண பக்தியாகும். அஹைதுகீ – பலனில் விருப்பமில்லாமல் செலுத்தும் பக்தி; அவ்யவஹிதா – பிளவுபடாத பக்தி அதாவது நான் வேறு பகவான் வேறல்ல என்று செலுத்தும் பக்தி
Ø      இந்த நிர்குண பக்தர்கள் எனக்கு சேவை செய்யும் பாக்கியத்தைத் தவிர வேறெதையும் விரும்புவதில்லை. என்னுடன் ஐக்கியமாவதையும் கூட விரும்ப மாட்டார்கள்
Ø      பக்தியோகம் என்ற பெயருடைய அந்த நிர்குண பக்தியோகமே மோட்சம் என்று கூறப்படுகிறது.  அந்த பக்தியோகத்தால் முக்குணங்களின் காரியமான சம்சாரத்திலிருந்து நீங்கி பிரம்மத்தை அடைவதற்கு  தகுதி பெறுகிறான்
Ø     ஒருவன் ஸர்வபாவத்துடன், ஈஸ்வரன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்ற மனநிலையுடன், பரமேஸ்வரனின் பாதாரவிந்தகளையும், அவர் குணங்களையும், விபூதிகளையும் மிகச் சிரத்தையுடன் சேவிக்க வேண்டும்.
Ø     வாசுதேவ பகவானிடத்தில் செலுத்தப்பட்ட பக்தியோகமானது சீக்கிரமாகவே விவேக, வைராக்கியத்தைக் கொடுத்து பிரம்ம ஞானத்தை அடையச் செய்கின்றது



A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...