Showing posts with label ஆத்ம தத்துவ உபதேசம். Show all posts
Showing posts with label ஆத்ம தத்துவ உபதேசம். Show all posts

Thursday, June 15, 2017

ஜீவாத்மாவின் ஆத்ம தத்துவ உபதேசம் - ஶ்ரீமத் பாகவத புராணம்

ஜீவாத்மாவின் ஆத்ம தத்துவ உபதேசம் - ஶ்ரீமத் பாகவத புராணம்

v  சப்தம் முதலிய விஷயங்களும், நாட்டிலுள்ள அனைத்து செல்வங்களும், நிலமும், அரசும், சேனைகளும், கருவூலமும், வேலைக்காரர்களும், மந்திரிகளும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் ஆகிய இவைகளனைத்துமே நிலையற்றவைகள்.
v  இவைகளனைத்தும் துயரத்தையும், மனமயக்கத்தையும், பயத்தையும் கொடுக்க கூடியவைகள்.  ஆகாயத்தில் தோன்றி மறைகின்ற மேக கூட்டங்களால் தோற்றுவிக்கப்பட்டு, பிறகு அழிந்து போகின்ற உருவங்கள் போன்றவைகள்.  கனவில் காணும் காட்சிகள் போலவும், இந்திரஜால வித்தையை போலவும், மனதில் கற்பணை செய்யப்படுகின்ற காட்சிகளை போல இருக்கின்றவைகள்.
v  உண்மையிலே இல்லாத பொருளானது அனுபவிக்கப்பட்டு பின்பு இல்லாது போய்விடும் போது வரும் துயரங்கள் மனதினுடைய எண்ணங்கள்தான், கற்பணைகள்தான். பாவ-புண்ணிய கர்மங்களால் பல பொருட்களை அனுபவிக்கும் மனிதனுக்கு அந்த பாவ-புண்ணிய கர்மங்கள் மனதாலேயே ஏற்படுத்தப்படுகின்றன.
v  ஆதிபௌதிக, ஆதிதைவீக, அத்யாத்மிக ஸ்வரூபங்கொண்ட இந்த உடல்தான் நான் என்று நினைக்கும் ஜீவனுக்கு பலவிதமான கஷ்ட-நஷ்டங்கள், துன்பத்தை கொடுப்பதாக சொல்லப்படுகிறது
v  ஆதலால் கவனமான மனதால் ஆத்மாவின் உண்மையை ஆராய்ந்து வேற்றுமைகளாகத் தோன்றும் உலகில் நிலையானப் பொருட்கள் என்ற நம்பிக்கையை விட்டுவிட்டு மன அமைதியுடன் இருப்பாயாக.
v  கர்மாக்களால் தேவதை, மனிதர்கள், மிருகங்கள் போன்ற பிறவிகளில் சுற்றியடிக்கப்படுகின்ற ஜீவாத்மாவுக்கு யார் எந்த பிறவியில் தாயாகவும், தந்தையாகவும் இருப்பார்கள், இருந்தார்கள் என்று தெரியாது
v  ஜீவனுக்குள் இருக்கும் ஆத்மா மாறுதலில்லாமல் நித்யமானவன், சூட்சுமமானவன், ஸ்தூல உடலைக் காட்டிலும் வேறானவன்.  இந்த ஜீவன் பிறக்கும் சரீரம் முதலிய எல்லாவற்றிற்கும் ஆதாரமானவன். சுயப்பிரகாசமக உள்ள ஜீவன் தன் மாயாசக்தியின் முக்குணங்களைக் கொண்டு தன்னையே உலகமாக படைக்கிறான்.
v  இவனுக்கு யாருமே பிரியமுடையவனும் இல்லை, பிரியமில்லாதவனுமில்லை.  தன்னைச் சார்ந்தவன், தன்னைச் சாராதவன் அல்ல. எல்லா செயல்களையும் சாட்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருப்பான்

v  சுக-துக்கத்தை அனுபவிப்பதில்லை. கர்ம பலன்களையும் அனுபவிப்பதுமில்லை. காரண-காரியத்தை சாட்சியாக மட்டும் பார்ப்பவன். இவன் போக்தாவும் அல்ல.

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...