பகவான் ஶ்ரீகிருஷ்ண
சைதன்யரின் உபதேச துளிகள்:
v உலக
விஷயங்களை எப்பொழுது முடியுமோ அப்போதே தியாகம் செய்து விட வேண்டும்.
v புலன்களும்,
உடலும் நன்றாக இருக்கும்போதே ஆத்மாவிற்கு நலம் தேடிக் கொள்ள வேண்டும்.
v அகம்பாவமே
பந்தத்திற்கு காரணம், மனதிலிருக்கும் மமகாரத்தை நீக்கியவன் முக்தன்
v உலகத்தையும்
படைத்து அனைவரது பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்து விட்ட இறைவனை மறந்து தன்னை
கர்த்தாவாக, செயல் செய்பவனாக எண்ணிக் கொள்வது அறியாமையின் விளைவு.
v இருமைகளில்
சம புத்தியும் புலன்களையும், மனதையும் தன் வசப்படுத்துவதும் முக்கியமானவை.
v கலியுகத்தில்
பகவானை அடைவதற்கு மிக சுலபமான உபாயம் மூலமந்திரமான ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே
ஹரே, ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே, இதை இடைவிடாது ஜபம் செய்ய
வேண்டும்.
v தர்மத்துடன்
வாழ்தல், வாஸனை நிறைந்த லோக தர்மத்தை விட்டு விடுதல், ஸத்ஸங்கத்தில் இருத்தல், போக
இச்சைகளை மனதிலிருந்து அழித்தல், மற்றவர்களின் குறை-நிறைகளை பார்க்காமல் இருத்தல்,
ஹரிசேவை செய்து கொண்டிருத்தல், அவன் கதையை கேட்டுக் கொண்டிருத்தல் இவைகளே மனிதனின்
கடமைகளாகும்
v நாம ஜபம்
அனைவருக்கும் எல்லா நிலையிலும், நன்மையை அளிக்கவல்லது.
v பக்தர்கள்
தவிர்க்க வேண்டிய பத்து விஷயங்கள்:
·
ஸத்புருஷர்களை நிந்திப்பது
·
பகவான் நாமத்தில் பேதபாவம்
·
பகவான் நாமத்தில் அர்த்தவாதம்
·
குருவுக்கு அபசாரம்
·
சாஸ்திர நிந்தை
·
நாம பலத்தின் தைரியத்தில் பாவ காரியங்களை செய்தல்
·
தர்மம், விரதம், ஜபம் இவைகளை நாமத்தோடு ஒப்பிடுதல்
·
விருப்பம் இல்லாதவனுக்கு உபதேசித்தல்
·
நாம மாஹத்மியம் கேட்டும் பிரேமை இல்லாமை
·
அகங்காரம், மமகாரம் இவைகளோடு இருத்தல், விஷய போகங்களில்
மூழ்கியிருத்தல்
v பக்தர்கள்
தன்னை புல்லினும் கீழாகவும், மரத்தை விட அதிக சகிப்புத் தன்மையுடனும் இருக்க
வேண்டும்.
v மற்றவர்களுக்கு
மதிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும்.
v எப்பொழுதும்
பகவான் நாமங்களையே சிந்தனை செய்துக் கொண்டும், உச்சரித்துக் கொண்டும் இருக்க
வேண்டும்.
v பொறுமையுடனும்,
யாரிடமும் கடுஞ்சொல் கூறாமலும், தனிமையில் இருந்து கொண்டும், யாரிடமும் எதையும்
யாசிக்காமல் பகவத் சிந்தனையோடு இருக்க வேண்டும்,
v பக்தர்கள்
விஷய போகங்களையும், ஸ்திரீகளை தரிசிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
v பூர்வ
ஜன்மங்களின் சுபகர்மங்களாலும், மகான்களின் ஸத்ஸங்கத்-தாலும், பகவானுடைய
கிருபையாலும்தான் பகவான் நாமத்தில் நிஷ்டை கைகூடும்.
v பக்தியில்லாமல்
ஜபம், தவம், பூஜை, யக்ஞம், தானம், அனுஷ்டானம் முதலிய எந்த நற்காரியங்கள்
செய்தாலும் அனைத்தும் வியர்த்தம்தான்
v கலிகாலத்தில்
ஹரிநாம ஸ்மரணத்தைக் காட்டிலும் எளிய, இனிய ஸாதனம் இருக்க முடியாது. தற்காலத்திற்கு பகவான் நாம சங்கீர்த்தனமே
ஸர்வோத்தமமான ஸாதனமாகும்
v எவ்வளவு
தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் சரீரம், பிராணன், மனம் புலன்கள் அனைத்தையும் பகவத்
விஷயமாகவே வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
v மனிதன்
கிருஷ்ண பக்தி ரஸத்தில் ஊறிய மனதை எப்படியாவது பெற்றேயாக வேண்டும். இதயத்தில் எப்பொழுதும் இந்த இச்சை இருந்து
கொண்டிருக்க வேண்டும்.
v கோபிகளின்
பாவத்தை அடையாது யாரும் இந்த ஆனந்த ரஸத்தை பருக முடியாது
v கோபிகைகளின்
அன்பானது சம்சாரிகமானதன்று. அது
விசுத்தமானது, நிர்மலமானது, இச்சைகளற்றது.
v பக்தி
செய்து கொண்டேயிரு, ஸகுணமோ, நிர்குணமோ எப்படி இருந்தாலும் அது தானாகவே
வெளிப்பட்டுவிடும். ஶ்ரீகிருஷ்ண பகவானின்
சரணாவிந்தங்களே சத்தியமானவை. ஜகத்
சத்யமானால் என்ன? மித்யாவானல் என்ன? பக்தனுக்கு அதனால் ஒன்றுமில்லை.
v பிரேமையே
பிரம்மத்தின் உண்மையான ஸ்வரூபம், பிரேமையை அடைவதே ஜீவனின் இறுதி லட்சியம். இது
சொல்லுக்கு அப்பாற்பட்டது, வாக்கினால் பாட முடியாது. இதயத்திற்கு உரியது, சொல்ல முடியாது அனுபவிக்க
முடியும். ஸித்தம் செய்ய முடியாது, அதுவே
ஸ்வயம் ஸித்தமாக இருக்கிறது. பகவத்
கிருபையினாலே அடைய முடியும்.
v ஶ்ரீகிருஷ்ண
பகவானின் பாதாரவிந்த தியானத்திலே தன்மயத்தோடு மூழ்கியிருக்க விரும்ப
வேண்டும். எப்போதும் அவனது செந்தாமரை
மலரடிகளில் தியானம் நிலைபெற்றிருந்தாலே போதும்.
v ஜீவனின்
பரம புருஷார்த்தம் ஶ்ரீகிருஷ்ண பிரேமையை அடைவதே.
அவனது சரணங்களிலே ப்ரீதி ஏற்படுவதே எல்லா ஸாதனங்களுக்கும் முடிவான
பலனாகும். இதை அடையவே நாம் முயற்சிக்க வேண்டும்.
v ஸர்வஶ்ரேஷ்டமான பாவம் மதுரபாவம்.
பகவான் யாரை இந்த பாவத்தில் ஸ்வீகரித்துக் கொள்கிறானோ அவரே இந்த பாவத்தில்
தீக்ஷிதராக முடியும்
v உலகில் முயற்சி செய்தால் எதையும் அடையலாம். ஆனால் ஶ்ரீகிருஷ்ண பக்தியை அடைவது மிகவும்
அரிது. பக்தியை பெறுவதற்கு ஒரே உபாயம்தான்
உள்ளது. அது எல்லா இடத்திலும், எல்லா
நிலையிலும், எப்பொழுதும் ஶ்ரீஹரியின் நாமங்களையே சங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்க
வேண்டும் சிரவணமும், கீர்த்தனமும்தான்
பகவான் பிராப்திக்கு முக்கியமான உபாயமாகும்
v பகவத் கிருபைக்கும், அஹைதுகமான பக்திக்கும் ஒரு தெளிவான அடையாளம்,
பிராணிகளின் இதயக்குகையில் வசிக்கும் ஸர்வ அந்தர்மியான ஈஸ்வரனான ஶ்ரீகிருஷ்ணரின்
குணங்களை கேட்ட மாத்திரத்தில், எந்தவித தடையுமின்றி கங்கா பிரவாகம் கடலை நோக்கி
ஓடுவதைப்போல மனமானது வேகத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தால் அந்த பக்தனுக்கு ஏகாந்த பக்தி
அல்லது அஹைதுக பக்தி கிடைத்துவிட்டது என்று உணர்ந்து கொள்ளலாம். இந்த நிலையை அடைந்த பிறகு பகவான் ஶ்ரீகிருஷ்ணன்
தூரத்தில் இருக்க மாட்டான், ஓடிவந்து பக்தனை தழுவிக்கொள்வான். இதுதான் அவனது பக்தவாத்ஸல்யம்.
v ஆரம்பத்தில்
ஸாதனா பக்தி ஏற்படுகின்றது. இதிலிருந்து ரதி பக்தியும், பிறகு பிரேமரூப பக்தியும்
ஏற்படுகின்றது. ரதிபக்தியானது ஐந்து விதமாக இருக்கின்றது. அவைகள் ஸாந்திரதி, தாஸ்யரதி, ஸக்யரதி,
வாத்ஸல்யரதி, மதுர-ரதி (காந்தா ரதி) ஆகியவைகளாகும். இதில் மதுர பாவமே ஸர்வ
ஶ்ரேஷ்டமானது
v மாயையிலிருந்து
விடுபட, மாயாதிபதியான பகவானை சரணடைய வேண்டும்.
v இதற்கு
கிருபைதான் மிக முக்கியமானது. சாஸ்திர க்ருபை, குரு கிருபை, பரமார்த்த கிருபை
இவைகளில் ஏதாவது ஒரு கிருபை கிடைத்தாலே மனிதன் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு
பகவானை நோக்கி செல்ல முடியும்.
v ஜீவனுக்கு
நிலையான அமைதி பகவானின் ஶ்ரீபாதார-விந்தங்களை அடைந்தால்தான் கிடைக்குமே தவிர
வேறெதனாலும் கிடைக்காது
v பிறவி சக்கரத்திலிருந்து
விடுபடுவதற்கு ஸர்வ ஸ்வ ஆத்ம நிவேதனம் செய்து பகவானிடம் அனன்யமாக சரணடைய வேண்டும்.
v பகழ்வானை
மகிழ்விக்க ஒரே ஸாதனம் அனன்யமாக அவரிடம் பக்தி செலுத்துவதுதான். பிரேம பக்தியின்றி எவரும் அவரை அடைய
முடியாது. அவர் யாரைத் தன்னுடையவனாக
வரித்துக் கொள்கிறாரோ அவரை தனது கோபி அல்லது ஸகியாக்கி தனது லீலையில் சேர்த்துக்
கொண்டு விடுவார்.
v அனன்யமாக,
தீனமாக, நிராஶ்ரயனாக, எல்லா புருஷார்த்தங்களையும் தியாகம் செய்துவிட்டு பகவானை
மட்டுமே கதியாக, ஆஶ்ரயமாகக் கொள்ளும்போதுதான் அவரை நோக்கி அடியெடுத்து வைக்க
முடியும்.
v அனன்யத்வத்தை
அடைவது எப்படி, இதயத்தில் பக்தி பயிர் எப்போது, எப்படி தோன்றும்? பகவத் கிருபையை
அடைய ஒரே ஸாதனம் ஸாது மகாத்மாக்களின் சரண தூளியை தரிப்பதுதான். ஸாது சேவை செய்யாமல் பகவத் கிருபையை பெற
முடியாது.
v எல்லா
ஜீவன்களுக்கும் பரம புருஷார்த்தம் ஶ்ரீகிருஷ்ண பிரேமையை அடைவதுதான்.
v கோபிகளைப்
போல் சம்சார பந்தங்களை துறந்து பதிபாவத்துடன் பகவான் ஶ்ரீகிருஷ்ணனை ஆராதிக்க
வேண்டும். இதுவே உத்தமமான உபாஸன முறை.
v ஶ்ரீமத்பாகவதமே
பாராயணம் செய்ய வேண்டிய ஸர்வோத்தமமான சாஸ்திரம்.
v அனைவரையும்
ஈஸ்வர புத்தியோடு மிகுந்த வினயத்தோடு நமஸ்கரிக்க வேண்டும்.
v சகல சாஸ்திரங்களுடைய
ஸாரமாக இருப்பது எப்போதும், எங்கும், எக்காலத்திலும், எல்லா நிலைகளிலும் பகவான்
நாராயணனை தியானம் செய்ய வேண்டும்.
v நாம
ஸ்மரணம் செய்வது எப்படி?
·
முதலில் ஸாது ஸங்கத்தில் இருக்க வேண்டும்.
·
பஜனை, கீர்த்தனம், ஸத்ஸங்கம், பகவத்லீலாஸ்மரணம் ஆகிய முக்கிய தர்மங்களை
கடைப்பிடிக்க வேண்டும்.
·
சம்சாரிகளுடன் விசேஷமாக சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுடன் பேசவும் கூடாது.
·
மற்றவர்களை நிந்திப்பதோ, துவேஷிப்பதோ கூடாது.
·
மற்றவர்களுதைய குண-தோஷங்களை கூறுவதை முற்றிலும் விட்டுவிட வேண்டும்.
v தோஷங்களின்
பரம அணுக்கள் மிகமிக சூட்சுமமானவை. அவைகள்
இதயத்தில் பிரவேசிக்காத வரையில் மற்றவர்களை நிந்திக்க முடியாது.
v பகவான்
லீலைகளை சிரவணம் செய்து கொண்டும், பகவத் குணங்களை கீர்த்தனம் செய்து கொண்டும்
இருப்பதே பாரமார்த்தி-கத்தை நாடுபவர்களின் முக்கிய கடமையாகும்.
v பக்தர்கள்
கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான செயல்கள்:
·
கிராம்ய கதையை ஒருபோதும் கேட்கவும் கூடாது, சொல்லவும் கூடாது.
·
ருசியுள்ள பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது
·
பிரகாசமானதும், பளிச்சென்று இருக்கும் ஆடைகளை அணியக் கூடாது
·
எப்போதும், எதன்மீதும் அபிமானமின்றி பழக வேண்டும். இதனால் ஆத்ம ஸம்மானம் ஏற்படுகின்றது.
·
எப்போதும், எங்கும், எந்த நிலையிலும் பகவான் நாமங்களை ஜபம் செய்து
கொண்டேயிருக்க வேண்டும். நாம ஜபத்த்தினால்
ஶ்ரீகிருஷ்ண சரணங்களில் ப்ரீதி உண்டாகின்றது.
·
சுத்தமான, ஶ்ரேஷ்டமான பாவத்துடன் ஶ்ரீபகவானை பூஜித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மானஸ பூஜையே ஶ்ரேஷ்டமான பூஜையாகும்.
·
மேலே கூறப்பட்ட தர்மங்களைக் கடைப்பிடிக்கும் பக்தர்களால் மட்டும்தான் பகவத்
பிரேமையை அடைய முடியும்.
v சம்சாரியான
செல்வந்தர்களின் அன்னத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்
v பொறுமை இல்லையென்றால்
அடைந்த நற்குணங்களாலும், ஞானத்தினாலும் எந்தப் பயனும் கிடைக்காது.
v பகவானை மட்டும்
பூஜித்துக் கொண்டு மற்ற பக்தர்களையும், ஸாதுக்களையும் பூஜிக்காமல் அலட்சியம் செய்பவனை
ப்ராக்ருத பக்தன் என்று அழைக்கப்படுகிறான்.
v எவனொருவன்
தனது இஷ்ட தெய்வத்தை ஸர்வ வியாபகமாக உணர்ந்து பிராணிகள் அனைத்திடமும் சிரத்தை கொள்கிறானோ,
எல்லா வஸ்துக்களிடமும் இஷ்டத்தோடு மதிப்பு வைக்கின்றானோ அவனே ஸர்வோத்தமமான பக்தன்.
v இஷ்ட தெய்வத்திடம்
ப்ரீதியும், தன்னைப்போன்ற இஷ்ட பந்துக்களிடம் சிரத்தையும், ஸாதனைகளற்றவர்களிடம் கிருபையும்,
விரோதிகளயும், அந்நிய மதத்தினரையும் அலட்சியத்துடன் நடத்துகின்றானோ அப்படிபட்டவன் மத்திம
பக்தன்.
v இஷ்ட தெய்வத்தை
அன்போடு பூஜை செய்து கொண்டு, பகவத் பக்தர்களையும், மற்றவர்களையும் அலட்சியம் செய்கிறானோ
அப்படிபட்டவன் ப்ராக்ருத பக்தன்
v ப்ராக்ருத
பக்தன் கெட்டவன் அல்ல. ஏனெனில் பக்தியின் ஆரம்பமே
இதுதான். இந்த நிலையில் இருந்துதான் மத்திம, உத்தம பக்தி நிலைக்கு செல்ல முடியும்.
ஓம் தத் ஸத்