Showing posts with label கடோ உபநிஷத்-2. Show all posts
Showing posts with label கடோ உபநிஷத்-2. Show all posts

Saturday, December 27, 2014

கடோ உபநிஷத் - பாகம்-2

இரண்டாவது அத்தியாயம்முதல் வல்லி
முகவுரை:-
இந்த அத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதுஅவைகள்
1. ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்,
2. அதை அடைய சில சாதனங்கள்,
3. ஆத்ம ஞானத்தினால் அடையும் பலன்கள்.
ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பற்றி புதிய முறையில் விளக்கப்படுகின்றதுஅவஸ்தாத்ரயம் (சரீராத்ரயம் ) விசாரமும் செய்யப்படுகின்றதுஆத்ம பலனை வெவ்வேறு வகையாக கூறப்பட்டுள்ளது.
 
ஸ்லோகம்-01
பராஞ்சி கா2னி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்த்ஸ்மத்பராங் பஶ்யதி நாந்தராத்மன |
கஶ்சித்3தீ4ர: ப்ரத்யகா3த்மானமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ன: ||
நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றதுபகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்இந்திரியங்களை பயன்படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாதுஅவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாதுஇவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றதுயாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான்இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன் மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன், மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..
 
ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.
1. ஆப்னோதி இதி ஆத்மாஎது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
2. ஆத4த்தேஎது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
3. அத்3திஎது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
4. அத்தேமூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா
 
ஸ்லோகம்-02
பராச: காமனனுயந்தி பா3லாஸ்தே ம்ருத்யோர்யந்தி வித்தஸ்ய பாஶாம் |
அத2 தீ4ரா அம்ருதத்வம் விதி3த்வா த்4ருவமுத்4ருவேஷ்விஹ ந ப்ரார்த2யந்தே ||
குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள், வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள்அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள், சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள்  இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்வயதாக ஆக இந்திரியங்களின் சக்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும் எனவே மனதுயரத்தை அடைவார்கள்ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற, கால ஸ்வரூபியாக இருக்கின்ற நிலையான மனநிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.
 
ஸ்லோகம்-03
யேன ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ன்ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2னான் |
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிஶிஷ்யதே ஏஜத்3வை தத் ||
த்ருக் த்ருஷ்ய விவேகம்பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றதுஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றதுஎந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றதுஅதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது
 
எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ, இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றதுபிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லைஇதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றதுஇப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம்இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
 
த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்லஇந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.  (-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது, அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றதுஇந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும், அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்லநம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம். நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன்எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள் வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றதுதோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது. புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றதுஇதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது
 
இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றதுஇந்த உடலை நான் அனுபவிக்கின்றேன், இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன்பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும். நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றதுஎனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்
 
அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வதுஇந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம். வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்கக்கூடாது ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம், ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம்ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றதுநாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்அதேபோல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.
 
ஸ்லோகம்-04
ஸ்வப்னாந்தம் ஜாக3ரிதாந்தம் சோபௌ4 யேனானுபஶ்யதி |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றதுநாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம். அவைகள்
1.   விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
2.   கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
3.   ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.
 
ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றதுஇவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாதுகனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்புநிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது, அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்புநிலையில் பயன்படாதுஇதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்புநிலை பிரபஞ்சமும், கனவுநிலை பிரபஞ்சமும்தான், தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது
 
நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.
 
கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள் இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும், பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.
 
ஸ்லோகம்-05
ய இமம் மத்4வத3ம் வேத3 ஆத்மானம் ஜீவமந்திகாத் |
ஈஶானம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத் ||
இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றதுஇரண்டு தத்துவங்களின் சேர்க்கைதான் ஈஸ்வரன் என்று அறிந்துள்ளோம்களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாவற்றிலும் களிமண் என்ற ஒன்றே இருப்பது போல ஈஸ்வரன் என்ற விஷயத்தில் ஸத்யமான ( என்றும் இருப்பது ) பிரம்மம் என்ற ஒன்றுதான் மித்யாவாக தோன்றி கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கின்றதுநாம ரூபங்களாக இருக்கும் இந்த பிரபஞ்சமே மித்யா, பொய்யான தோற்றம் என்று கூறப்படுகின்றதுவெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சமே மாயா என்றும், அதுவே காரண பிரபஞ்சம் என்றும் அழைக்கபடுகின்றதுஇந்த பிரம்மமானது காரண பிரபஞ்சத்தோடு சேரும்போது அது ஈஸ்வரன் என்று கூறப்படுகின்றதுஅதேபோன்று ஜீவனிடம் என்றும் இருப்பது ஆத்மாதான், அதுவே காரண சரீரத்தோடு சேர்ந்திருப்பதால் ஜீவன் என்று அழைக்கப்படுகின்றது.
 
பிரம்மம் + காரண பிரபஞ்சம் = ஈஸ்வரன்.
ஆத்மா   + காரண பிரபஞ்சம் = ஜீவன்
பொய்யான காரண பிரபஞ்சமும்காரண சரீரமும் நீக்கினால் பிரம்மமும், ஆத்மாவும் ஒன்றாகி விடுகின்றது.
 
ஸத்      – மூன்று காலத்திலும் இருப்பது
சித்       – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம்பூரணமாக இருப்பது
இதுதான் பிரம்மத்தின் லக்ஷணம், இது அநாதி, அதேப்போன்று மாயாவும் அநாதி. இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றதுமூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.
1.       மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர். மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
2.      மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றதுசூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியதுஇதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றதுஇப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
3.      சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியதுசூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.
 
இதேபோன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்
1.      ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றதுகாரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர். இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்ஆழ்ந்த உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
2.      காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறதுஇந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
3.     ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.
 
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று  பெயர்ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.
 
·         சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
·         சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
·         சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.
 
மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ).  இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.
.
ந விஜுகுப்ஸதேபலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும்?  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது, எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காதுஅழியாத பொருட்களை காப்பாற்றத் தேவையில்லைஇந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன், அதை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன், அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன், நான் அழியாதவன் அதனால் என்னைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்கயவனாக இருந்து கொண்டிருப்பேன்ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாதுஇந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிடத்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லைநானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.
 
ஸ்லோகம்-06
ய: பூர்வம் தபஸோ ஜாத்மத்3ப4ய: பூர்வமஜாயத |
கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்தந்தம் யோ பூ4தேபி4ர்வ்யபஶ்யத ஏதத்3வை ||
அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்குஇந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது
 
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் இவைகளின் ஒன்றுசேர்ந்த தொகுப்பையே சூட்சும சரீரம் என்று அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்
 
ஸ்லோகம்-07
யா ப்ரணேன ஸம்ப4வத்யதி3திர்தே3வதாமயீ |
கு3ஹாம் ப்ரவிஶ்ய தி2ஷ்டந்தீம் யா பூ4தேபி4ர்வ்யஜாயத ஏதத்3வை ||
யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றதுஇவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.
 
ஸ்லோகம்-08
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா3 க3ர்ப4 இவ ஸுப்4ருதோ க3ர்பி4ணீபி4: |
தே3வே தி3வ ஈட3யோ ஜாக்3ருவத்3பி4ர்ஹவிஷ்மத்3பி4ர்மனுஷ்யேபி4ரக்3னி: ஏதத்3வை ||
அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது. அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது. அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.
 
ஸ்லோகம்-09
யதஶ்சேதே3தி ஸூயோÅஸ்தம் யத்ர ச க3ச்ச2தி |
தம் தே3வா: ஸர்வேர்பிதாஸ்தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை தத் ||
இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்) சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ  எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லைஅந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்மம் என்று தெரிந்து கொள்
 
ஸ்லோகம்-10
யதேவேஹ தத3முத்ர யத3முத்ர தத3ன்விஹ |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமப்னோதி ய இஹ நானேவபஶ்யதி ||
இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது. எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.
 
எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்தது போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது. சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான். நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது. ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றதுஅலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும். அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.
 
மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சார சுழலிலேயே இருக்கின்றான், பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.
 
ஸ்லோகம்-11
மனஸைவேத3மாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யும் க3ச்ச2தி ய இஹ நானேவ பஶ்யதி ||
இந்த உலகம் சத்யம் என்ற எண்ணத்தை நீக்கி பிரம்மம் ஒன்றுதான் சத்யம் என்று அறிந்திட வேண்டும்இதில் ஈஸ்வரனுக்கு இந்த உலகத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை நீக்குகின்றது.
 
நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாதுஇந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லைஉலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்லவும் தேவையில்லைஇல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று  சொல்வது போல இருக்கிறது.  தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது. பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். நான் மட்டும்தான் இருக்கின்றேன் என்ற உணர்வை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.
 
சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று கூறப்பட்டிருக்கின்றதுஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்படுகின்றதுஇந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.
 
சாதாரண அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை  முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாசம்) விருத்தியை வியாபிக்கும்போது நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.
 
ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல-வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும். உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும், பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும்அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும். ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும், வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றதுஅதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாசத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.
 
ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும், மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள். இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும்இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
 
ஸ்லோகம்-12
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ மத்4ய ஆத்மனி தி2ஷ்டதி |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத்3 ||
இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தைத்தான் கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடப்படுகிறதுஇதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றதுஇந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளதுஇப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.
 
இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றதுஇந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை, பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.
 
ஸ்லோகம்-13
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக: |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ஸ இவாத்3ய ஸ உ ஶ்வ: ஏதத்3வை தத்3 ||
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது. இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது. நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம், ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாதுஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது  எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றார், நாளையும் இருப்பார். என்றும் இருப்பதும், எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.
 
ஸ்லோகம்-13
யதோ2த3கம் து3ர்கே3 வ்ருஷ்டம் பர்வதேஷு விதா4வதி |
ஏவம் த4ர்மான்ப்ருத3க் பஶ்யம்ஸ்தானேவானுவிதா4வதி ||
இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றதுமழை மலை உச்சியில் பொழியும் போது நீரானது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.
 
ஸ்லோகம்-14
யதோ2த3கம் ஶுத்3தே4 ஶுத3த4மாஸிக்தம் தாத்3ருகே3வ ப4வதி |
ஏவம் முனேர்விஜானத ஆத்மா ப4வதி கௌ3தம ||

எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி இருக்கின்றதோ அதுபோல  இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்) ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.

 
இரண்டாவது அத்தியாயம்முதலாவது வல்லி முடிவுற்றது.

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...