Showing posts with label உத்தவ கீதை-05. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-05. Show all posts

Saturday, May 13, 2017

Uddhava Gita - Chapter-05

உத்தவ கீதை
அத்தியாயம்-5
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்

ஶ்ரீபகவான் உவாச
ப3த்3தோ4 முக்த இதி வ்யாக்2யா கு3ணதோ மே ந வஸ்துத: |
கு3ணஸ்ய மாயாமூலத்வான் ந மே மோக்ஷோ ந ப3ந்த4னம் || 1 ||

ப3த்3தோ4 முக்த இதி - நான் பந்தத்துடன் இருக்கிறேன். மோட்சத்தில் இருக்கிறேன் என்ற 
வ்யாக்2யா - நினைவானது, எண்ணமானது, அனுபவமானது
மே கு3ணதஹ ந வஸ்துத: - இறைவனாகிய என்னுடைய சத்துவ, ரஜஸ், தமஸ் குணத்தின் காரணமாக வந்திருக்கிறது. உண்மையிலே அவைகள் இல்லை.
கு3ணஸ்ய மாயாமூலத்வான் – முக்குணங்களுக்கு என்னுடைய மாயையே மூலமாக உள்ளது
ந மோக்ஷோ ந ப3ந்தனம் – பந்தமும், மோட்சமும் கிடையாது.
சத்துவம் மோட்சத்திற்கு காரணமாகவும், ரஜோ குணம் சம்சாரத்தின் வெளிப்பாடாகவும், தமோ குணம் சம்சாரத்திற்கு காரணமாகவும் இருக்கிறது. முக்குணங்கள் தனித்து இயங்க முடியாது. எனவே இது மித்யாவாக புரிந்து கொள்ளலாம்.

ஶோகமோஹௌ ஸுக2ம் து:க2ம் தே3ஹாபத்திஶ்ச மாயயா |
ஸ்வப்னோ யதா2த்மன: க்2யாதி: ஸம்ஸ்ருதிர் ந து வாஸ்தவீ || 2 ||
ஶோகமோஹௌ ஸுக2ம் து:க2ம் - மனதில் அனுபவிக்கும் துயரங்கள், மதிமயக்கம், இன்ப-துன்பங்கள்
தே3ஹ ஆபத்தி -  மீண்டும் மீண்டும் பிறத்தல், அதாவது பிறப்பு-இறப்பு
மாயயா – இவைகளெல்லாம் மித்யா, மாயையினால் உருவாகின்றது
யதா2 – எவ்விதம்
அவரவர்கள் மனதினால் தோற்றுவிக்கும் கனவுலக அனுபவங்கள் மித்யாவாக இருக்கின்றதோ அதுபோல விழிப்புலகில் மீண்டும் மீண்டும் பிறப்பதும் உண்மையல்ல.

வித்3யாவித்3யே மம தனூ வித்3த்4யுத்3த4வ ஶரீரிணாம் |
மோக்ஶபந்த4கரீ ஆத்3யே மாயயா மே வினிர்மிதே || 3 ||
அறியாமையினால் பந்தத்தில் இருக்கிறோம். அறிவினால் மோட்சத்தை அடைகின்றோம்.  ஈஸ்வரனாகிய என்னுடல் வித்யா ஸ்வரூபமாகவும், அவித்யா ஸ்வரூபமாகவும் இருக்கிறது என்று அறிந்து கொள் உத்தவா!. ஜீவர்களிடத்தில் இருக்கும் அறியாமையும், அறிவும் என்னுடைய சக்தியாக இருக்கின்றது. வித்யா என்ற சக்தி மோட்சத்தை கொடுக்கும்., அவித்யா சக்தியானது பந்தத்தில் வைத்திருக்கும்.  பிறக்கும்போது இரண்டும் கூடியவனாக இருக்கிறான். இவை என்னிடத்தில் உள்ள மாயையினால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏகஸ்யைவ மமாம்ஶஸ்ய ஜீவஸ்யைவ மஹாமதே |
ப3ந்தோ4Sஸ்யாவித்3யயானாதிர்வித்யயா ச ததே2தர: || 4 ||
ஏகஸ்ய ஏவ – ஒருவனாக மட்டும் இருக்கின்ற
மம அம்ஶஸ்ய – என்னுடைய அம்சமாக இருக்கின்ற (சூரியனுடைய பிரதிபிம்பம் அதனுடைய அம்சமாக இருப்பது போல)
ஜீவஸ்ய ஏவ – ஜீவனிடத்தில்தான் பந்தமும்,மோட்சமும் இருக்கிறது
மஹாமதே – ஹே உத்தவரே! (மதி மிக்கவரே)
பந்த3ஹ அஸ்ய அவித்3யா – அந்த ஜீவன் அறியாமையின் வசத்தில் இருக்கும் போது பந்தத்தில் இருக்கிறான்
வித்3யயா – வித்யாவினுடைய வசத்தில் இருக்கும் போது மோட்சத்தில் இருக்கிறான்
தத2 இதர அனாதி3 –  இவைகள் அனாதி காலத்திலிருந்து இருந்து கொண்டிருக்கிறது.

அத2 ப3த்3த4ஸ்ய முக்தஸ்ய வைலக்ஷண்யம் வதா3மி தே |
விருத்3த4 த4ர்மிணோஸ்தாத் ஸ்தி2தயோரேக த4ர்மிணி || 5 ||
அத2 - இனி
ப3த்3த4 முக்தஸ்ய வைலக்ஷண்யம் வதா3மி தே – உனக்கு பந்தப்பட்டவனுக்கும் முக்தியை அடைந்தவனுக்கும் இடையே உள்ள வேற்றுமையை கூறுகிறேன்
விருத்3த4 தா4ர்மிணோஸ்தாத் – வேறுபட்ட இரண்டு தர்மங்களுடன் இருப்பவர்கள்
ஏக த4ர்மிணி ஸ்தி2தயோ – ஒரே உடலில்தான் இருக்கிறார்கள்

ஸுபர்ணாவேதௌ ஸத்3ர்ஶௌ ஸகா2யௌ
        யத்3ர்ச்ச2யைதௌ க்ருதனீடௌ3 ச வ்ருக்ஷே |
ஏகஸ்தயோ: கா2த3தி பிப்பலான் ந மன்யோ
        நிரன்னோSபி ப3லேன பூ4யான் || 6 ||
சரீரம் என்ற மரத்தில் இன்னதென்று கூறமுடியாத ஏதோ ஒரு காரணத்தால் சந்தர்ப்ப வசத்தால் கூடு கட்டிக் கொண்டு ஒன்றாக வாழும் இரு பட்சிகளைப் போன்றவர்கள் ஜீவன் ஈஸ்வரன் ஆகிய இருவர் சமமானவர்கள், நட்புக்கொண்டவர்கள் அவைகளில் உடல் மரமாகவும், மனம் கூடாகவும் ஒப்பிட்டு ஜீவாத்மா (பக்தன்), பரமாத்மா(ஞானி-முக்தன்) இரண்டு பறவைகளுக்கு ஒப்பிடுகிறார். ஜீவாத்மா கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றது. ஒன்று பழங்களை உண்டும் கூட (கர்ம பலன்களை அனுபவித்தல்) பலம் குறைந்தே இருக்கின்றது  ஆனால் மற்றொன்று பழங்களை புசிக்காமலே இருந்தும் பலத்தோடு இருக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. உலக போகங்களை அனுபவிப்பவன், மனோ பலம் குறைந்து இருப்பான். அனுபவிக்காதவன் பலத்துடன் காணப்படுவான். பரமாத்வாவின் ஸ்வரூபமாக ஞானி உணர்ந்திருப்பதால், தன் சுபாவமாக நினைக்கிறேன்.

ஜீவாத்மாவிற்கு நான்கு அம்சங்கள் உண்டு. அவைகள் ஸ்தூல உடல், சூட்சும உடல் (மனம்), சிதாபாஸம் (மனதில் பிரதிபலிக்கும் ஆத்மா), மனதிலுள்ள உணர்வு தத்துவம், சைதன்ய ஸ்வரூபம் அல்லது சித் ஸ்வரூபம்

சிதாபாஸம் அகங்காரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதை நான் யாரென்று தன்னைக் கேட்கும் போது, நான் மனம் என்றும் சொல்லலாம். இந்த மனம் என்னை பிரதிபலிப்பதால் நான் மனம் அல்ல, சித் ஸ்வரூபம் என்று சொல்லலாம். தன்னை மனம் என்று நினைக்கும் போது சம்சாரியாக இருக்கின்றது.  இது ஒரு பறவைக்கு ஒப்பிடலாம். தன்னை சித் ஸ்வரூபமாக எண்ணும் போது முக்தனாக இருக்கிறது. இது இன்னொரு பறவைக்கு ஒப்பிடப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பறவைகள் இருக்காது, வெவ்வேறு காலத்தில் இருக்கின்றது.  இந்த இரண்டு பறவைகள் ஞானி, அக்ஞானி இருவருக்கும் ஒப்பிடலாம்.

இரண்டு பறவைகள் (முக்தன், சம்சாரி) உணர்வின் அடிப்படையில் ஒரே தன்மையுடையது. பிரிக்க முடியாதவைகள், கர்ம வசத்தினால் இந்த மரத்தில் கூடுகட்டிக் கொண்டு அவரவர்கள் கர்மபலன்களுக்கேற்ப உடல் என்ற மரத்தில் மனம் என்ற கூடு கட்டிக் கொண்டு அந்த மரத்தில் உள்ள பழங்களை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. மற்றொரு பறவை சாப்பிடாமல் இருந்த போதிலும் (சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற பறவையை விட) அதிக பலத்துடன் இருக்கிறது.. ஒரு பறவை கர்த்தா, போக்தாவாக இருந்து கொண்டு அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். சுக-துக்கங்களில் மூழ்கியிருக்கின்றான். வேறொரு பறவை (ஞானி) வைராக்கிய ஞான பலத்துடன் இருக்கிறான். எதையும் அனுபவமாக ஏற்றுக் கொள்ளமாட்டான்.

ஆத்மானமன்யம் ச ஸ வேத3 வித்3வானபிப்பலாதோ3 ந து பிப்பலாத3: |
யோSவித்3யயா யுக்த து நித்யப3த்3தோ4 வித்யாமயோ ய: ஸ து நித்யமுகத: || 7 ||

ந து பிப்பலாத3 – பழத்தை சாப்பிடும் பறவை இதை அறிவதில்லை
யஹ – எந்தவொரு ஜீவன்
அவித்3யயா யுக் – அறியாமையுடன் இருக்கின்றானோ
ஸ து நித்யபத்3த4ன் – அவன் எப்போதும் பந்தப்பட்டவனாக இருக்கிறான்
யஹ வித்யயா ஸாது நித்யமுக்தஹ – எந்தவொரு ஜீவன் அறிவுடன் இருக்கின்றானோ அவன் நிச்சயமாக முக்தனாக இருக்கிறான்

தே3ஹஸ்தோ2Sபி ந தே3ஹஸ்தோ2 வித்வான் ஸ்வப்னாத்3யதோ2த்தி2த: |
அதே3ஹஸ்தோ2Sபி தே3ஹஸ்த2: குமதி: ஸ்வப்னத்3ருக்யதா || 8 ||

தே3ஹஸ்த2 அபி ந தே3ஹஸ்த2ஹ வித்3வான் – அவன் உடலோடு இருந்தாலும் உடல் இல்லாதவன்.
பொதுவாக ஒவ்வொருவரும் அவரவர் உடலின் தர்மத்திற்கேற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஞானி எந்த சூழ்நிலையிலும் தன் அறிவிலிருந்து பிறழ மாட்டான். உடல் சக்தியுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனால் பாதிக்கப்படமாட்டான்.
வித்3வான் ஸ்வப்னாத் யதா2 உத்தி2தஹ – கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல இருப்பான் ஞானி
அதே3ஹஸ்த2ஹ அபி தே3ஹஸ்த: - இல்லாத தேகத்துடன் அபிமானம் வைத்து செயல்படுபவன் தேகத்தையுடையவனாக இருக்கிறான்
குமதி ஸ்வப்னத்3ருக்3யதா2 – அக்ஞானி கனவை கண்டு கொண்டிருப்பவன் போல இந்த நிலை இருக்கின்றது.

இந்த்3ரியைரிந்த்3ரியார்தே2ஷு கு3ணைரபி கு3ணேஷு ச |
க்3ருஹ்யமாணேஷ்வஹம் குர்யான் ந வித்3வான் யஸ்த்வ்விக்ரிய: || 9 ||

வித்3வான் அவிக்ரியஹ – ஞானியானவன் சஞ்சலமற்ற தெளிவான மனதுடையவன். புலன்கள் விஷயங்களோடு சம்பந்தம் வைக்கும்போது மனம் விகாரமடைகின்றது.  மேலும் மனம் சித்தத்திலுள்ள பழைய எண்ணங்களுடன் சம்பந்தம் வைக்கும் போதும் விகாரமடைகிறது
இந்த்3ரியைரிந்த்3ரியார்தே2ஷு கு3ணைரபி கு3ணேஷு ச – குணங்களாலான புலன்கள் மூலமாக அந்தந்த குணங்களால் புலன்களுக்குரிய விஷயங்களுடன், பொருட்களுடன்
க்3ருஹ்யமாணேஷு – சம்பந்தம் வைக்கும்போதும்
ந அஹம் குர்யான் – ஞானி  நான் எதுவும் செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பான்.

தைவாதீ4னே ஶரீரேSஸ்மின் கு3ணபா4வ்யேன கர்மணா |
வர்தமானோSபு3த4ஸ்தத்ர கர்தாஸ்மீதி நிப3த்4யதே || 10 ||

தை3வாதீ4னே – நம்முடைய பிராரப்தத்தை சார்ந்துள்ள
அஸ்மின் ஶரீரே – இந்த ஸ்தூல, சூட்சும உடலினால்
கர்மணா – செய்த கர்மத்தால் அடைந்த, கர்மத்தின் பலனாக அடைந்த
கு3ணபா4வ்யேன – குணங்களின் தூண்டுதலால் (செய்த செயலின் விளைவாக)  அடைந்த பலன்கள்
அபுத4 தத்ர – அக்ஞானி அந்த உடலால், மனதால் செய்யப்படும் செயல்களனைத்தும்
கர்தா இதி நிப3த்4யதே – நான்தான் இதை செய்கிறேன் என்ற அகங்காரம் கொள்கிறான்
வர்தமானஹ – அபிமானித்துக் கொண்டிருக்கின்றான்.

ஏவம் விரக்த: ஶயன ஆஸனாடனமஜ்ஜனே
        தர்ஶனஸ்பர்ஶனக்4ராண போ4ஜனஶ்ரவணதி3ஷு || 11 ||
ந ததா2 ப3த்4யதே வித்3வான்தத்ர தத்ராதயன்கு3ணான்
        ப்ரக்ருதிஸ்தோ2Sப்யஸம்ஸக்தோ யதா2 க2ம் ஸவிதானில: || 12 ||

இந்த மாதிரி பூரண வைராக்கியத்தை அடைந்த ஞானி தூங்குவது, உட்காருவது, சுற்றித்திரிவது, உடலை தூய்மைபடுத்துவது, பார்ப்பது, தொடுவது, முகர்வது, உண்பது, கேட்பது முதலான செயல்களைச் செய்வதாலும் அவைகளினால் பந்தப்படமாட்டான்.
தத்ர தத்ர ஆதா3யன் கு3ணான் – அந்தந்த புலன்களின் விஷயங்களோடு சேர்ந்து விவகாரம் செய்யும் போது அவன் பந்தப்படுவதில்லை
ப்ரக்ருதிஸ்த2ஹ – ஸ்தூல உடலிலிருந்து விவகாரம் செய்தாலும்
அஸம்ஸக்தோ – அதனோடு பற்றோடு சம்பந்தப்படுவதில்லை
யதா2 க2ம் ஸவிதானிலஹ – எவ்வாறு ஆகாயம், சூரியன், வாயு, செயல்படுகின்றதோ அதுபோல செயல்படுகின்றான்.  செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் எதனோடும் பந்தப்படுவதில்லை

வைஶாரத்3யேக்ஶயாஸங்க3 ஶிதய சி2ன்னஸம்ஶய: |
ப்ரதிபு3த்3த4 இவ ஸ்வப்னான் நானாவாத்3 வினிவர்ததே || 13 ||

ஞானியாவதற்கு முன் இறுதியாக செய்த சாதனங்களை இதில் கூறுகின்றார். 
வைஶாரத்3ய ஈக்ஷயா  - மிகவும் சரியான பார்வையோடு இந்த உலகத்தையும், இறைவனையும், தன்னையும் பார்க்கின்றான், அறிந்திருக்கின்றான்.
ஒன்றை சரியாக புரிந்து கொள்வதற்கு அதை சரியாக புரிய வைக்கக்கூடிய பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்.  ஞானி அடைந்த அறிவு குரு முகமாக வேதாந்தத்தை உபதேசமாக பெற்று அடைந்ததாகும்.  சிரவணத்தின் மூலமாக சரியான அறிவை அடைந்திருக்கின்றான்.
சி2ன்னஸம்ஶய – சந்தேகங்களை நீக்கியவன். இது மனனத்தின் சாதனம் மூலமாக சந்தேகங்களை அனைத்தையும் நீக்கிக் கொள்கிறான்
அஸங்க3 ஶிதயா - அடைந்த ஞானத்தை பற்றின்மை என்ற சாதனம் மூலமாக பலப்படுத்திக் கொள்கின்றான்.  இதுவே நிதித்யாஸனம் என்று அழைக்கப்படுகிறது.
ப்ரதிபு3த்3த4 இவ ஸ்வப்னான் – கனவிலிருந்து விழித்தவன் போல
நானாவாத்3 வினிவர்ததே – இருமையிலிருந்து விடுதலை அடைகின்றான்.
ஶிதயா-கூர்மையாக்குதல்,

யஸ்ய ஸ்யுர்விதஸங்கல்பா: ப்ராணேந்த்3ரியர்னனோதி4யாம் |
வ்ருத்தய: ஸ வினிர்முக்தோ தே3ஹஸ்தோ2Sபி ஹி தத்3கு3ணை: || 14 ||

ஞானியானவன் எந்த செயலாலும் பந்தப்படமாட்டார். செய்கின்ற எந்த செயலுக்குப் பின்னாலும் எந்தவிதமான சங்கல்பமும் இருக்காது. எனவே அதனால் பந்தப்படாமல் இருக்கிறார்.
யஸ்ய ஸ்யு: வீதஸங்கல்பா:  - யாரொருவன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்
ப்ராண – கர்மேந்திரியங்களால்,
இந்தி3ரிய – ஞானேந்திரியங்களால்,
மனோ தி4யாம் – மனதினால், புத்தியால்  
வ்ருத்தய: - செய்யப்படும் செயல்கள்
தே3ஹஸ்த2 அபி ஹி – தேகத்தில் இருந்த போதிலும்
தத்3கு3ணை: - தேகத்திலுள்ள குணங்களினால்
ஸஹ வினிர்முக்தோ – அவன் முக்தியை அடைந்தவன்

யஸ்யாத்மா ஹிம்ஸ்யதே ஹிம்ஸ்ரைர்யேன கிஞ்சித்3யத்3ருச்ச2யா |
அர்ச்யதே வா க்வசித்தத்ர ந வ்யதிக்ரியதே பு3த4: || 15 ||

யேன கிஞ்சித் யத்3ருச்ச2யா – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ( பிராரப்தத்தினால்)
யஸ்ய ஆத்மா – எந்த ஞானியுடைய உடலானது
ஹிம்ஸ்ரைஹி – மற்றவர்களால், சூழ்நிலைகளால்
ஹிம்ஸ்யதே – துன்பப்படுத்தப்பட்டாலும்
அர்ச்யதே வ க்வசித் – எப்பொழுதாவது போற்றப்பட்டாலோ
தத்ர ந வ்யதிக்ரியதே பு3த4ஹ – அவைகளால் மனதால் பாதிக்கப்படமாட்டான். அவைகளை பொருட்படுத்த மாட்டான்.

ந ஸ்துவீத ந நிந்தே3த குர்வத: ஸாத்4வஸாது4 வா |
வத3தோ கு3ணதோஷாப்4யாம் வர்ஜித: ஸமத்3ருங்முனி: || 16 ||

ஸாது3 குர்வதஹ வத3தே – நல்ல செயல்களை செய்பவர்களையும், பேசுபவர்களையும்
ந ஸ்துவீத – யாரையும் புகழ்ந்து பேசமாட்டான்
அஸாது3 குர்வதஹ வத3தஹ – தீய செயல்களை செய்பவர்களை, பேசுபவர்களை
ந நிந்தே3த – யாரையும் இகழ மாட்டான்
கு3ணதோ3ஶாப்4யாம் வர்ஜிதஹ – நல்லது-கெட்டது, தர்மம்-அதர்மம் இவைகளை கடந்தவனாக
ஸமத்3ருங்முனி: - ஞானி எல்லாவற்றிலும் சமநோக்குடன் இருப்பான்

குர்யான்ன வதே3த்கிஞ்சித் ந த்4யாயேத்ஸாத்4வஸாது4 வா |
ஆத்மாராமோSன்யா வ்ருத்தயா விசரேத் ஜட3வன் முனி: || 17 ||

ஸாது4 அஸாது4 வா – நல்லது கெட்டது
ந குர்யாத் ந வதேதி – எதையும் செய்யாமலும், எதையும் பேசாமலும்
கிஞ்சித் ந த்4யாயேத் – தியானம் எதுவும் செய்யாமலும்
ஆத்மாராமஹ – தன்னிடத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பான்
அனயா வ்ருத்த்யா – இப்படிபட்ட வாழ்க்கை முறையில்
விசரேத் ஜட3வன் முனி: - ஜடம் போல வாழ்ந்து கொண்டிருப்பான் ஞானி. மற்றவர்கள் பார்வைக்கு சாதாரணமாக தோன்றிக் கொண்டிருப்பான்.

விளக்கம்
பொதுவாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்று போக்தாவாக நிறைய பேர் இருக்கிறார்கள். வேறு சிலர் சாதகனாக இருக்கிறார்கள், மோட்சத்தை அடைவதற்கான சாதனங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெகு சிலரே ஞானியாக இருக்கிறார்கள். ஞானி சாதகனாக இருக்கும்போது செய்ய வேண்டியவைகளை செய்துமுடித்தவன். நற்குணங்கள் அவனது சுபாவமாக இருக்கும்.

ஶப்3த3ப்3ரஹ்மணி நிஷ்ணாதோ ந நிஷ்ணாயாத்பரே யதி3 |
ஶ்ரமஸ்தஸ்ய ஸ்ரமப2லோ ஹயதே4னுமிவ ரக்ஷத: || 18 ||

ஶப்3த3 ப்3ரஹ்மணி – சாஸ்திரனுடைய சப்தத்தில் மட்டும்
நிஷ்ணாதஹ – தேர்ச்சி பெற்றவன், பயிற்சி பெற்றுள்ளவன்
யதி3 பரே – ஒருவேளை மேலான பிரம்மத்தை (அ) சாஸ்திர சப்த அர்த்தத்தை அறிவதில் தேர்ச்சி அடையவில்லையென்றால்
ஶ்ரம தஸ்ய – அந்த சாதகனுதைய முயற்சியெல்லாம், உழைப்பெல்லாம்
ஶ்ரம ப2லஹ – வீணாகி விடும், பயனற்றதாகி விடும், வீணாகி போவதுதான் பலன்
அதே4னும் இவ ரக்ஷதஹ – இது பால் கொடுக்காத பசுமாட்டை பராமரிப்பது போல இருக்கிறது.

கா3ம் து3க்3த4தோ3ஹாமஸர்தீ ச பார்யாம் தே3ஹம் பராதீ3னமஸத்ப்ரஜாம் ச |
வித்தம் த்வதீர்தீ2க்ருதமங்க3 வாசம் ஹீனாம் மயா ரக்ஷதி து3:க2து2:கீ || 19 ||

கா3ம் து3க்3த4தோ3ஹாம – கறவை நின்ற பசு,
அஸதீம் ச பா4ர்யாம் – நம்பிக்கைத் துரோகமுள்ள மனைவி
தே3ஹம் பராதீ4னம் – பிறருக்காக ஊழியம் செய்து வாழ்வது, அடிமைபட்டு வாழ்ந்து கொண்டிருப்பது
அஸத் ப்ரஜாம் ச – நல்லொழுக்கமில்லாத மைந்தன்
வித்தம் து அதீர்தீ2க்ருதம் – தீயவழிகளில் செலவழிக்கப்படுகின்ற செல்வம்
அங்க3 – ஹே உத்தவா!
வாசம் ஹீனாம் மயா – இறைவனைப் பற்றி பேசாமலிருப்பவர்கள்
து3:க2து3:கி2 – இவைகளை உடையவர்கள் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்

யஸ்யாம் ந மே பாவனமங்க3 கர்ம ஸ்தி2த்யுத்3ப4வப்ராண நிரோத4மஸ்ய |
லீலாவதாரேப்ஸிதஜன்ம வா ஸ்யாத்3வந்த்4யாம் கி3ரம் தாம் பி3ப்4ருயான் ந தீ4ர: || 20 ||

தீரன், சாதகன் வெறும் சப்த3த்தை மட்டும் சுமந்து கொண்டிருக்கக்கூடாது. 
அங்க3 - உத்தவா
மே பா4வனம் கர்ம – என்னுடைய புனிதமான செயல்களின் பொருளை தெரிந்து கொள்ளாத
அஸ்ய - இந்த
ஸ்திதி உத்3ப4வ ப்ராண நிரோத – ஸ்ருஷ்டி, லய, பராமரிப்பு
இத்தகைய பேராற்றல் படைத்த பகவானைப் போற்றாத, பகவானுடைய அவதாரங்களை லீலா வினோதங்களை கூறாத உரைகள், வெறும் அர்த்தமற்ற சப்தத்தில் மட்டும் தேர்ச்சி பெற்று நின்றுவிடக் கூடாது

ஏவம் ஜிக்3ஞாஸயாபோஹய நானாத்வப்4ரமமாத்மனி |
உபாரமேத விரஜம் மனோ மய்யர்ப்ய ஸர்வேகே3 || 21 ||

இவ்விதம் வேதாந்த விசாரத்தின் (ஜிக்ஞாஸயா) ஈடுபட்டு (சிரவண, மனன, நிதித்யாஸனம்) ஆத்ம தத்துவத்தின் உதவியால், இது பலவாக இருக்கின்றது போன்ற மனமயக்கத்தை நீக்கி,
மனோ மயார்ப்ய ஸர்வகே3 – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற என்னிடத்தில் தூய்மையான மனதை நிலைநிறுத்தி ( இந்த மனது முழுமையாக தூய்மையாக இருக்க வேண்டும்)
உபாரமேத – அமைதியுடன் இருப்பாயாக. மற்ற எண்ணங்களிலிருந்து, செயல்களில் இருந்து விலகி உன்னிடத்தில் அமைதியாக இருப்பாயாக.

யத்3யனீஶோ த4ரயிதும் மனோ ப்3ரஹ்மணி நிஶ்சலம் |
மயி ஸர்வாணி கர்மாணி நிரபேக்ஷ: ஸமாசர || 22 ||

ஒருவேளை மனதை உறுதியாக பிரம்மத்தில் நிலைநிறுத்துவதற்கு முடியவில்லையென்றால், செய்கின்ற எல்லா செயல்களையும் அதனால் வரும் பலனை விட்டுவிட்டு எனக்காக நன்கு செய்து வர வேண்டு.ம்.

ஶ்ரத்3தா4லுர்மத்கதா2: ஶ்ருண்வன்ஸுப4த்3ரா லோகபாவனீ: |
கா3யன் அனுஸ்மரன் கர்ம ஜன்ம சாபி4னயன் முஹு: || 23 ||

ஶ்ரத்3தா4லு: - பகவான் மீது அன்பு செலுத்தியவனாக
மே கதா2 ஶ்ருண்வன் – இறைவனைப் பற்றிய மங்களமானவைகளும், மனிதர்களுடைய மனதை தூய்மைபடுத்துபவைகளுமான
ஸுப3த்3ரா – மங்களமானவைகளும்
லோகபாவனீ: - மனிதர்களுடைய மனதை தூய்மைபடுத்துபவைகளுமான
கா3யன் – இறைவனது பெருமைகளை பாட வேண்டும்.
அனுஸ்மரன் – அவைகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
முஹு: - அடிக்கடி
இறைவன் புரிந்து செயல்களையும், பிறப்பையும், அவருடைய கதைகளை நாடகமாக நடிக்க வேண்டும்.

மத3ர்த2 த4ர்மகாமார்தா2னாசரன்மத3பாஶ்ரய: |
லப4தே நிஶ்சலாம் பக்திம் மய்யுத்3த4வ ஸனாதனே || 24 ||

உத்தவரே! இவ்வாறு என் பொருட்டாகவே என்னையே புகலிடமாகக் கொண்டு தர்ம-அர்த்த-காம புருஷார்த்தங்களை செய்துவருபவர் என்றும் இருக்கின்ற பரமாத்வான என்னிடம் அசைக்க முடியாத பக்தியை பெறுகிறார்.

ஸத்ஸங்க3லப்3த்4யா ப4க்த்யா மயி மாம் ஸ உபாஸிதா |
ஸ வை மே தரிஶிதம் ஸத்3பி4ரஞ்ஜஸா விந்த3தே பத3ம் || 25 ||

விஷயத்தில் விருப்பம் உடையவர்களுடன் நட்பு உறவு வைத்துக் கொள்ளுதலே ஸத்ஸங்கம். நற்குணங்களை உடையவர்களிடத்தில் வைக்கும் உறவும் சத்சங்கம்தான், குருவிடம் வைக்கும் உறவும் ஸத்ஸங்கம்

ஶ்ரீஉத்3த4வ உவாச
ஸாது4ஸ்தவோத்தமஶ்லோக மத: கீத்3ருக்3வித4: ப்ரபோ4 |
ப4க்திஸ்த்வய்யுபயுஜ்யேத கீத்3ர்ஶீ ஸத்3பி4ராத்3ருதா || 26 ||

உத்தவர் கேட்டார்.
உத்தமஶ்லோக – நற்கீர்த்தி உடையவரே! பகவானே!
கீத்3ருக்3வித4: - எப்படிபட்ட குணங்களுடன் இருப்பான்
பக்தி த்வய உபயுஜ்யேத – உங்களிடத்தில் செலுத்தப்படுகின்ற பக்தியானது
ஸத்3பி4ராத்3ருதா – சான்றோர்களால அங்கீகரிக்கப்பட்ட அல்லது பின்பற்றப்பட்ட பக்தியானது
கீத்3ருஶீ – எந்த முறையில் இருக்கும்

ஏதன்மே புருஷாத்4யக்ஷ லோகாத்4யக்ஷ ஜக3த்ப்ரபோ4 |
ப்ரணதாயானுரக்தாய ப்ரபன்னாய ச கத்2யதாம் || 27 ||

புருஷாத்4யக்ஷ – எல்லா ஜீவர்களுக்கும் தலைவனாகவும்
லோகாத்4யக்ஷ – எல்லா லோகங்களுக்கும் தலைவனாகவும்
ஜக3த்ப்ரபோ4 – இந்த உலகத்துக்கும் தலைவனாகவும் இருக்கின்ற பகவானே!
ப்ரணதாய – உங்களை வணங்கி கொண்டிருக்கும்
அனுரக்தாய – உங்கள் மீது முழுமையான அன்பை வைத்திருக்கும்
ப்ரபன்னாய ச – மேலும் உங்களிடம் முழுமையாக சரணடைந்திருக்கும்
எதத்3 மே கத்2யதாம் – எனக்கு இந்த கேள்விக்கான பதிலை கூறுங்கள்

த்வம் ப்3ரஹ்ம பரமம் வ்யோம புருஷ: ப்ரக்ருதே: பர: |
அவதீர்னோSஸி ப4க3வன்ஸ்வேச்சோ2பாத்தப்ருத2க்3வபு: || 28 ||

நீங்களே அழியாத, மேலான பிரம்மமாக இருக்கிறீர்கள். பிரக்ருதியான இந்த படைப்புக்கும் மேலான புருஷனாக இருக்கிறீர்கள். இறைவா! நீங்கள் அவதாரம் எடுத்துள்ளீர்கள். உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் இந்த உடலை எடுத்துள்ளீர்கள்.

க்ருபாலுரக்ருதத்3ரோஹஸ்திதிக்ஷு: ஸர்வதே3ஹினாம் |
ஸத்யஸாரோSனவத்3யாத்மா ஸம: ஸர்வோபகாரக: || 29 ||

ஶ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்
இந்த ஸ்லோகத்தில் ஏழு பண்புகளை கூறியிருக்கிறார். இவைகளை நாம் கடும் முயற்சி செய்து அடைய வேண்டும்.
ஸர்வதேஹினாம் – எல்லா ஜீவராசிகளிடத்திலும் கீழே கூறப்பட்ட நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.
1.      க்ருபாலு – கருணையோடும், தயையோடும், பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் மனதை உடையவனாக இருத்தல், அதாவது அஹிம்சையை பின்பற்ற உதவும் குணம்
2.      அக்ருத் த்3ரோஹம் – நம்பிக்கை துரோகம் செய்யாது இருத்தல், நம்மிடம் பிறர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது. அதைக் காப்பாற்ற வேண்டும்.
3.      திதிக்ஷூ – சகிப்புத்தன்மையுடையவன்; பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவனாக இருத்தல், தனக்கு துயரம் வரும் போது இவ்வாறு இருக்க வேண்டும். தனக்கு வந்த துயரத்தை நீக்குவதற்கு முழு முயற்சியெடுக்க வேண்டும். அதில் வெற்றி கிடைக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். அதாவது நாம் எடுக்கும் நல்ல முயற்சிக்கு வரும் தடைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
4.      ஸத்யஸாரம் – உண்மையாக இருத்தல், உண்மையையே பேசுதல், சத்தியத்தை பலமாக கொண்டிருத்தல், வாய்மையில் நம்பிக்கை வைத்தல்
5.      அனவத்3யாத்மா – நற்குணங்களுடன் இருப்பவன்; பொறாமைப் போன்ற தீயகுணங்கள் எதுவும் இல்லாதவன், பண்பாடு உடையவன், மனிதநேயம் மிக்கவன்
6.      ஸமஹ – சமநோக்கு உடையவன்; எல்லா நிலைகளிலும் சமபுத்தி உடையவனாக இருத்தல், கர்ம பலன்களை அனுபவிக்கும்போதும், இருமைகளை அனுபவிக்கும் போதும் சமமாக இருத்தல், ஒரே மனநிலையில் இருத்தல்
7.      ஸர்வௌபகாரகஹ – எல்லோருக்கும் உதவி செய்பவன்

காமைரஹத்தீ4ர்தா3ந்தோ ம்ருது3: ஶுசிரகிஞ்சன: |
அனீஹோ மிதபு4க்ஶாந்த: ஸ்தி2ரோ மச்ச2ரணோ முனி: || 30 ||

8.      காமை: அஹத்தீ4: - பற்றற்ற மனதுடன் இருத்தல்; இன்பத்தைக் கொடுக்கும் பொருட்களில் என்னுடையது என்ற புத்தி இல்லாமல் இருத்தல்
9.      தா3ந்தஹ – புலன்களைக் கட்டுபடுத்தியவன்
10.   ம்ருது3: - மென்மையானவனாக இருத்தல் (வாக்கு, செயல், மனம்)
11.   ஶுசி – தூய்மையுடன் இருத்தல் (நம்மையும், சுற்றுபுறத்தையும், வீட்டையும், மனதையும் தூய்மையாக வைத்திருத்தல்)
12.   அகிஞ்சன – தேவைக்கு மேல் பொருட்களை சேர்த்து வைக்கக் கூடாது. பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்களிலும் “என்னுடையது” என்ற புத்தி இல்லாமல் இருத்தல்
13.   அனீஹ – செயல்களற்றவன், தனக்குள்ளே ஏதாவது செய்து கொண்டிருப்பான். தவம், ஜபம், உபாஸனம், சிரவணம், மன்னம், நிதித்யாஸனம் போன்ற சாதனங்களை செய்து கொண்டிருப்பான்
14.   மிதபு4க் – அளவுடன் உண்பவன்; ஆரோக்கியமானதை உண்பவன்
15.   ஸ்திரஹ – மனவுறுதியுடன் எடுத்துக் கொண்ட செயலை தொடர்ந்து அது முடியும் வரை செய்து கொண்டிருப்பவன்
16.   ஶாந்தஹ – மனக்கட்டுபாடுடையவன்; உணர்வுகளால் அதிகமாக தாக்கப்படாதவன், மனதை ஓரளவுக்கு ஒருமுகப்படுத்தும் திறனுடையவன்; மனதை தன் வசப்படுத்தியவன்; மனதில் விக்ஷேபமற்றவன்; தேவையற்ற விஷயங்களை சிந்திக்காமல் இருப்பவன்
17.   மத் சரணஹ – இறைவனிடத்தில் (என்னிடத்திலே) சரணைடைந்தவன். அவர் வகுத்து கொடுத்த தர்ம பாதையில் வழுவாது இருந்தால்தான், இந்த சரணாகதி பயனளிக்கும்.  எனவே தர்மத்தில் முழுசிரத்தை உடையவனாக இருப்பவன்
18.   முனி: - ஞானியாக இருப்பவன். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பான், வாக்கை கட்டுபடுத்தியவனாக இருப்பான்

அப்ரமத்தோ க3பீ4ராத்மா த்4ருதிமாஞ்ஜிதஷங்கு3ண: |
அமானீ மானத3: கல்போ மைத்ர: காருணிக: கவி: || 31 ||

19.   அப்ரமத்தஹ – எச்சரிக்கையுடன் இருப்பவன், கவனத்துடன் இருப்பவன்
20.   க3பீ4ராத்மா – கம்பீரமாக இருப்பவன்; நிமிர்ந்து நடப்பான்; நம்மை உயர்வாக நினைத்துக் கொள்ளுதல், சுயமரியாதையுள்ளவன். நம்மை உயர்வாகவும் நினைத்துக் கொள்ளக் கூடாது, தாழ்மையாகவும் நினைத்துக் கொள்ளக்கூடாது
21.   த்4ருதிமான் – உறுதியுடன் இருப்பான்; எடுத்துக் கொண்ட லட்சியத்தில், புரிந்து கொண்ட விஷயத்தில், அடைந்த அறிவில் உறுதியாக இருப்பான்
22.   ஜிதஷட்3குணஹ – ஆறுவகையான விஷயங்களை வென்றவன். 
        பசி-தாகம் இவைகளை கடந்தவன், இதனால அடையும் துயரங்களை வென்றவன்; 
        ஶோக-மோகம் இல்லாதவன்; 
        ஜரா-ம்ருத்யு – வயோதிகம்-மரணம் இதில் பயமற்றவனாக இருப்பவன்
பிராண மயம் – பசி-தாகத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியுடையவன்
மனோ மயம் – சோகம்- மனதை வருத்தமடைய செய்யும் உணர்வுகளை வென்றவன்
விக்ஞான மயம் – மோகம் – புத்தியில் எதையுமே சரியாக புரிந்து கொள்ளாததால் வரும் உணர்ச்சிகள்
அன்ன மயம் – ஜரா-ம்ருத்யு; வயோதிகமும், மரணத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனவுறுதி இல்லாதவன், மனப்பக்குவம் இல்லாதவன்
23.    அமானீ – மற்றவர்களிடமிருந்து மதிப்பையோ, பாராட்டையோ எதிர்ப்பார்க்காதவன்
24.    மானத3ஹ – மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன், மரியாதை கொடுப்பவன்
25.    கல்பஹ – திறமையானவன்; ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு தகுதியுடையவன்;; மற்றவர்களுக்கு நன்கு புரியும்படி உபதேசம் செய்பவன்
26.   மைத்ரஹ – எல்லா மனிதர்களிடத்திலும் நட்புடன் இருப்பவன்.  பணம், பதவி, புகழ், அறிவு இவைகளை அடைந்திருந்தாலும் அனைவரிடத்திலும் நட்புணர்வோடு இருப்பவன்
27.    காருணிகஹ – கருணையுடன் இருப்பவன்; ஸத்புருஷர்கள் செயல் செய்வதற்கு காரணமாக இருப்பது அவர்களின் மனதிலுள்ள கருணைதான்
28.   கவி: - ஞானத்தை உடையவன்; விதவிதமான சாஸ்திரங்களை கற்றறிந்த பண்டிதன், நுட்பமான விஷயங்களை கிரகித்துக் கொள்பவன்

ஆஞாயைவம் கு3ணாந்தோ3ஷான்மயாதி3ஷ்சானபி ஸ்வகான் |
த4ர்மான் ஸந்த்யஜ்ய ய: ஸர்வான்மாம் ப4ஜேத ஸ து ஸத்தம: || 32 ||

29. தியாகம் – மோட்சம் என்ற லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருப்பவைகளெல்லாம் நீக்க முயற்சி செய்தல். சிறிது சிறிதாக லௌகீக கடமைகளை விட்டுவிடுதல்
ஆக்ஞாய ஏவம் – நன்கு ஆராய்ந்து பார்த்து
கு3ணான் தோ3ஷான் – நல்லது-கெட்டது இவைகளை ( நம்மை பாதிக்கும் விஷயம் )
ஸ்வகான் த4ர்மான் – தன்னைச் சார்ந்துள்ள, தனக்குரிய கடமைகளை ( ஸ்வதர்மங்களை)
மயா ஆதி3ஶ்டான் அபி – இறைவனாகிய என்னால் வகுத்து கொடுக்கப்பட்ட கடமைகளாக இருந்தாலும்
மாம் பஜதே – என்னை நாடி வருவதற்காக, என்னை அடைவதற்காக
ஸந்த்யஜ்ய – அவைகளை சிறிது சிறிதாக விட்டு விடவேண்டும்
ஸஹ ஸத்தமஹ – அவன்தான் மிகவும் உத்தமமானவன், ஸத்புருஷர்களிலே மிகவும் உயர்ந்தவன்

ஞாத்வாஞாத்வாத2 யே வை மாம் யாவான்யஶ்சாஸ்மி யாத்3ருஶ: |
ப4ஜந்த்யனன்யபா4வேன தே மே ப4க்த தமா மதா: || 33 ||

30. பக்தி
ஞாத்வா, அக்ஞாத்வாத்2 – அறிந்தும், முழுமையாக அறியாமலும், முழுமையாக அறிந்தும்
யே மாம்  - எந்த சாதகர்கள் என்னை
யாவான் யாத்3ருஶ - என்ன மகிமை பொருந்தியவன்? எப்படிபட்டவன்
யஶ் ச அஸ்மி – நான் யார்?
இவைகளை தெரிந்து கொண்டோ, தெரியாமலோ
அனன்ய பா4வேன – வேறெதிலும் நாட்டமில்லாமல்
யே ப4ஜந்த்யா – யார் என்னை மட்டும் வழிபடுகின்றார்களோ
தே மே -  அவர்களை
பக்த தமா மதா – உயர்ந்த பக்தர்கள் என்பது என் கருத்து

ஞானியின் பக்தி
பகவானுடைய உண்மை ஸ்வரூபத்தை  முழுவதுமாக அறிந்தவர்கள். நானேதான் அந்த ஈஸ்வர ஸ்வரூபம் என்று புரிந்து கொண்டவர்கள். ஸத்-சித் ஆனந்த ஸ்வரூபமாக உள்ளார் என்று அறிந்து கொண்டவர்கள். பகவான் வரையறுக்க முடியாதவன் என்று அறிந்து கொண்டவன். தன்னிடத்திலிருந்து வேறுபடாதவனாக என்னை உணர்ந்துள்ளார்களோ அவனே மிகவும் மேலான பக்தன் என்பது என் கருத்து

மல்லிங்க3மத்3ப4க்தஜன தர்ஶனஸ்பர்ஶனார்சனம் |
பரிசர்யா ஸ்துதி: ப்ரஹ்வ கு3ணகர்மானுகீர்தனம் || 34 ||

பக்தியை அளக்க வேண்டுமென்றால் அதற்காக எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பதை வைத்து புரிந்து கொள்ளலாம்.  தியாகமும் செயலாகத்தான் வெளிப்படும்.  பக்தி இருந்தால்தான் கோயிலுக்கு செல்லமுடியும். வழக்கமாக கோயிலுக்கு சென்றால்தான் பக்தியும்  வளரும். பக்தியின் வெளிப்பாடுகளை இனி பகவான் கூறுகின்றார்

மத்3லிங்கம் தர்ஶன – என் உருவச்சிலையை தரிசித்தல்
மத்3ப3க்தஜன த3ர்ஶன – என்னுடைய பக்தர்களை தரிசித்தல்
ஸ்பர்ஶன்  - கடவுள் சிலைகளை அலங்கரித்தல், தொட்டு வணங்குதல்
அர்சனம் – அர்ச்சனை செய்தல், பகவானை ஸ்துதி செய்கின்ற ஸ்தோத்திரம் சொல்லுதல்
பரிசர்யா – இறைவனுக்காக சேவை செய்தல்
ஸ்துதி – பாராயணம், பகவானை போற்றி பாடுகின்ற தோத்திரங்களை சொல்லுதல்
ப்ரஹ்வ – விதவிதமான முறையில் பகவானை நமஸ்கரித்தல்
கு3ணகர்ம அனுகீர்தனம் – பகவானின் மேன்மையான குணங்களையும், அவதாரத்தின் போது செய்த செயல்களையும் புகழ்ந்து மீண்டும் மீண்டும் பாடுதல்

என்னை தரிசிப்பதும், என்னுடைய பக்தர்களை தரிசிப்பதும் ஒன்றேதான். அதுபோல என்னை எவ்வாறெல்லாம் ஸ்துதி செய்கிறார்களோ, அவ்வாறே பக்தர்களையும் ஸ்துதி செய்ய வேண்டும். அவர்களின் பாதத்தை தொட்டு வணங்க வேண்டும்.  சேவை செய்தல் போற்றி புகழ வேண்டும். அவர்களுடைய குணங்களை, பக்தி செய்யும் முறையை புகழ்ந்து பாடுதல்

மத்கதா2ஶ்ரவணே ஶ்ரத்3தா4 மத3னுத்4யானமுத்3த4வ |
ஸர்வலாபோ4பஹரணம் தா3ஸ்யோனாத்மனிவேத3னம் || 35 ||

உத்தவ – ஹே உத்தவா1
மத்கதா3ஶ்ரவணே ஶ்ரத்3தா4 – என்னைப் பற்றிய கதைகளை கேட்பதில் சிரத்தை
மத்3 அனுத்4யானம் – என்னையே எப்போதும் தியானித்துக் கொண்டிருத்தல்
ஸர்வலாப4 உபஹரணம் – தனக்கு கிடைப்பனவற்றையெல்லாம் பகவானுக்கு படைத்து விட்டு எடுத்துக் கொள்ளுதல்
தா3ஸ்யேன் ஆத்ம நிவேதனம் – உடலையும், மனதையும் அவருடைய சேவைக்காக அவரிடம் ஒப்படைத்தல்

மஜ்ஜன்மகர்மகத2னம் மம பர்வானுமோதனம் |
கீ3த தாண்ட3வ்வாதி3த்ர கோ3ஷ்டீ2பி4ர்த்3க்3ருஹோத்ஸவ: || 36 ||

என்னுடைய அவதாரத்தின் போது, செய்யப்பட்ட செயல்களைப் பேசிப்பேசி மகிழ்தல்
மம பர்வானுமோத3னம் – என்னுடைய அவதார பிறந்த தினத்தை கொண்டாடுதல்
கீ3த தாண்ட3வ வாதி3த்ர கோ3ஷ்டி – இசை-நாட்டியம், வாத்தியங்களைக் கொண்டும், கோஷ்டியாகவும், என் திருக்கோயில்களில் திருவிழா நடத்துதல், உற்சவத்தை கொண்டாடி மகிழ்தல்

யாத்ரா ப3லிவிதா4னம் ச ஸர்வ வார்ஷிகபர்வஸு |
வைதி3கி தாந்த்ரிகி தீ3க்ஷா மதீ3யவ்ரத்தா4ரணம் || 37 ||

புனித ஸ்தலங்களுக்கும், கோவில்களுக்கும், இறை அவதார நடந்த இடங்களுக்கும் யாத்திரை செய்தல், பற்பல பொருட்களைக் கொண்டு எனக்கு அர்ப்பனம் செய்து வழிபடுதல், வைதீக நியமப்படியோ, ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளபடியோ விரதங்களை அனுஷ்டிக்க வேண்டூம். எனக்காகவே அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும்

மார்சாஸ்தா2பனே ஶ்ரத்3தா4 ஸ்வத: ஸம்ஹத்ய சோத்3யம: |
உத்3யானோபவனாக்ரிட3 புரமந்தி3ரகர்மணி || 38 ||

என்னுடைய உருவச்சிலைகளை சிரத்தையுடன் நிறுவுதல், தன்னுடைய சொந்த முயற்சியாலோ, அல்லது மற்றவர்களின் ஒத்துழைப்புடனோ பொதுநல தொண்டுகளான பூங்கா, பூஞ்சோலை, விளையாட்டு மைதானம், நகர நிர்மாணம், கோவில் கட்டுதல் போன்றவைகளை நிறைவேற்றுவதில் பேரார்வம் காட்ட வேண்டும்

ஸம்மர்ஜனோபலோபாப்4யாம் ஸேகமண்ட3லவரதனை: |
க்3ருஹஶுஶ்ரூஷணம் மஹ்யம் தா3ஸவத்3யத3மாய்யா || 39 ||

நான் உறையும் திருக்கோயில்களை துடைப்பத்தால் பெருக்கி தூய்மைபடுத்துதல், வண்ணக்கோலங்களை போட்டு அழகு படுத்தலாம். இவ்வாறு மனவொருமுகப்பாடு இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்.

அமானித்வமத3ம்பி4த்வம் க்ருத்ஸ்யாபரிகீர்தனம் |
அபி தீபாவலோகம் மே நோபயுஞ்ஜ்யான் நிவேதி3தம் || 40 ||

அமானித்வம் – நான் பக்தன் என்ற கர்வம் கொள்ளக்கூடாது
அத3ம்பி4த்வம் – இறைவனுக்காக செய்யும் செயல்கள் யாருக்கும் வெளிக்காட்டாமல் செய்ய வேண்டும்.
க்ருதஸ்ய அபரிகீர்தனம் – தாம் செய்த நற்காரியங்களை வெளியே பறைசாற்றிக் கொண்டிருக்க கூடாது.
இறைவனுக்கு அர்பணிக்கப்பட்ட பொருட்கள் யாவும் புனிதத்தை அடைந்து விடுகின்றது. அவைகளை பிரசாதமாக கருத வேண்டும். எனக்கு ஆராதனை செய்து விட்ட தீபத்தை வேறெதற்கும் பயன்படுத்தக் கூடாது.

யத்3யதி3ஷ்டதமம் லோகே யச்சதிப்ரியமாத்மன: |
த த்தன்ன்னிவேத3யேன்மஹயம் ததா3னந்த்யாய கல்பதே || 41 ||

இந்த உலகத்தில் எவையெல்லாம் விரும்பப்படுகின்றதோ, எவைகள் உன்னால் அதிகமாக விரும்பப்டுகின்றதோ அவைகளைத்தான் எனக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும், படைத்து பூஜிக்க வேண்டும்.  இப்படிபட்ட தியாகம் மோட்சத்திற்கு தகுதிபடுத்துகின்றது.

ஸூர்யோSக்3னிர் ப்3ராஹ்மணா கா3வோ வைஷ்ணவ: க2ம் மரூஜ்ஜலம் |
பூ4ராத்மா ஸர்வபூ4தானி ப4த்3ர பூஜாபதா3னி மே || 42 ||

ஹே உத்தவா! என்னைப் பூஜிப்பதற்குரிய இடங்களானவைகள் சூரியன், அக்னி, பிராமணன், அந்தணன் (வேதம் சொல்லிய தர்மப்படி வாழ்பவன் ) பசு, பக்தர்கள், ஆகாசம், காற்று, தண்ணீர், நிலம், ஆத்மா மற்றும் எல்லா ஜீவராசிகள் ஆகியவைகளாகும்

ஸூர்யே து வித்3யயா த்ரய்யா ஹவிஷாக்3னௌ மாம் |
ஆதித்2யேன து விப்ராக்3ரயே கோ3ஷ்வங்க3 யவஸாதி3னா || 43 ||

உத்தவா! சூரியனை ஆலம்பனமாக கொண்டு மூன்று வேத மந்திரங்களைக் கொண்டு என்னை வழிபட வேண்டும்.  யாகங்களில் உண்டாக்கப்படும் அக்னியில் போடப்படும் ஆஹூதிகளை கொடுப்பதாலும், உத்தம பிராமணனுக்கு விருந்தளிப்பதன் மூலமாகவும், பச்சைப் பசுமையான புல்லை பசுவுக்குக் கொடுத்தும் என்னை பூஜிக்கலாம்.

வைஷ்ணவே ப3ந்து4ஸத்க்ருத்யா ஹ்ருதி3 கே2 த்4யான நிஷ்ட2யா |
வாயௌ முக்2யதி4யா தோயே த்34அவ்யைஸ்தோயபுர: ஸரை: || 44 ||

என் பக்தர்களை தன் உறவினரைப் போல அன்புடன் பாவிப்பதும், எப்போதும் மனம் என்ற ஆகாசத்தில் இறைவனான என்னை தியானம் செய்வதன் மூலமும், காற்றை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு முக்கிய பிராணன் என்ற கருத்துடனும், தண்ணீரால் இறைவனக்கு அர்ப்பணிக்கப்படும் பொருட்களை மந்திரங்களால் தூய்மைப்படுத்தி என்னை வழிபட வேண்டும்.

ஸ்த2ண்டி3லே மந்த்ரஹ்ருதயைர் போ4கை3ராத்மானமாத்மனி |
க்ஷேத்ரக்3ஞன் ஸர்வபூ4தேஷு ஸமத்வேன யஜேத மாம் || 45 ||

பூமியை சிலவிதமான மறைமந்திரங்களால் புனிதப்படுத்தியும், இந்த ஸ்தூல உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு தர்மத்தின் மூலம் இன்பத்தை கொடுப்பதன் மூலமும், எல்லா ஜீவராசிகளிடத்தும் சமமாக தங்கியிருக்கும் பரமாத்மாவை தியானிப்பதன் மூலமாகவும் என்னை வழிபடலாம்.

தி4ஷ்ண்யேஷ்வித்யேஷு மத்3ரூபம் ஶங்க2சக்ரக3தா3ம்பு3ஜை: |
யுக்தம் சதுர்பு4ஜம் ஶாந்தம் த்4யாயன்னர்சேத்ஸமாஹித: || 46 ||

இறைவனை வழிபடும் இடங்களில் என்னுடைய ஸ்வரூபமான சங்கு-சக்கரம்-கதை-தாமரை தாங்கிய நான்கு கைகளையுடையவரும், பேரமைதிக் கொண்டவருமானம் சாக்ஷாத் பகவான் என் எதிரில் தோன்றும் இந்த எல்லா பொருட்களிலும் இருக்கிறார் என்ற நிச்சயமான புத்தியுடன் பூஜிக்க வேண்டும்.

இஷ்டாபூர்தேன மாமேவம் யோ யஜேத ஸமாஹித: |
லப4தே மயி ஸ்த்3ப4க்திம் மத்ஸ்ம்ருதி: ஸாது4ஸேவயா || 47 ||

இவ்வாறு இறைவனான என்னை மன ஒருமுகப்பாடோடு வழிபடுகின்றார்களோ, யாகங்கள் மூலமாகவும், சமுதாய சேவையின் மூலமாகவும், கிணறு-குளம் தோண்டுதல், வழிப்பாதை, சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப்பணிகளை செய்வதன் மூலமாகவும் வழிபடுபவனுக்கு என்னிடத்தில் திடமான பக்தியை அடைகிறான், பிளவுபடாத பக்தியை அடைகின்றான். என்னைப் பற்றிய உண்மையான ஞானத்தை அடைகிறான்.  சாதுக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுதல், சேவை செய்தல், பெரியோர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலமாக மேலே சொன்ன சாத்தியத்தை அடையலாம்.

ப்ராயேண ப4க்தியோகே3ன ஸத்ஸங்கே3ன வினோத்3த4வ |
நோபாயோ வித்3யதே ஸம்யக்ப்ராயணம் ஹி ஸதாமஹம் || 48 ||

உத்தவா! பக்தியோகத்தின் மூலமாகவும், ஸத்ஸங்கத்தின் மூலமாகவும் இவைகளை தவிர சம்சாரக்கடலை கடப்பதற்கான வேறு வழிகள் இல்லை என்பது என்னுடைய கருத்து.  நான் சான்றோர்களுக்கு புகலிடமாக இருக்கின்றேன்.

அதை2தத்பரமம் கு3ஹ்யம் ஶ்ருண்வதோ யது3 நந்த3ன |
ஸுகோ3ப்யமபி வக்ஷ்யாமி த்வம் மே ப்4ருத்ய: ஸுஹ்ருத்ஸகா2 ||
49 ||

உத்தவா! இப்போது நான் உனக்கு மிகவும் ரகசியமானதும், மறைத்து வைக்கதக்கதாகவும் உள்ள ஒரு விஷயத்தை சொல்லப்போகிறேன். ஏனென்றால் நீ என்னுடைய சேவகன், என்னுடைய நன்மையை விரும்பும் நண்பன் அத்துடன் ஸத் விஷயங்களில் கேட்பதில் விருப்பம் உடையவனாகவும் இருக்கின்றாய்.

ஓம் தத் ஸத்

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...