பணி செய்யும் இடத்தில் இருக்க வேண்டிய மனநிலை
1.
ஒவ்வொரு நாளும்,
இறைவழிபாடோடு தொடங்க வேண்டும்.
2.
சக ஊழியர்களிடம்
அளவாக பேசுதல்
3.
தேவையில்லாமல்
யாரிடமும் பேசக் கூடாது.
4.
மற்றவர்களைப்
பற்றி பேசும் பேச்சில் உதாசீனமாக இருக்க வேண்டும்
5.
மற்றவர்கள்
வேலைத்திறமை, தகுதி இதைப் பற்றியெல்லாம் யோசிக்க கூடாது
6.
மற்றவர்கள்
இப்படி வேலை செய்தால் பலன் தரும் என்று அவர்களின் கடமைகளில் நம் மனதை செலுத்தக்
கூடாது
7.
எல்லோரையும்
ஈஸ்வர ஸ்வரூபமாகவே பாவித்தல்
8.
முதலாளியின்
ஆணையை ஏற்று, அதன் தன்மையை ஆராயாமல் அப்படியே செய்ய வேண்டும்.
9.
செய்யும்
வேலையில் விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும்
10.
செய்கின்ற வேலையினால்
அடையும் பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டும்
11.
கொடுக்கப்பட்ட
வேலையை முழுகவனம் செலுத்தி, திறம்பட,
குறித்த நேரத்தில் செய்து முடித்ததும் அதை பயன்படுத்தினார்களா இல்லையா என்று
கவனிக்க தேவையில்லை.
12.
நாம் உண்மையாக
செய்து முடித்த வேலை பலன் தராமல் போனால் அதற்காக கவலைப்பட தேவையில்லை, குற்ற
உணர்வுபடவும் கூடாது.
13.
வேலை செய்யும்
சூழ்நிலையை இறைவன் நமக்கு கொடுத்துள்ள இடமாக பாவிக்க வேண்டும்.
14.
கடமையை செய்தும்,
கிடைக்க வேண்டிய பலன் வராமல் போனால் அதற்காக வருந்தாமல், இறைவன் கொடுப்பார் என்று
எண்ணி அந்த எண்ணத்தை அப்போதே விட்டு விட வேண்டும்.