Showing posts with label முண்டக உபநிஷத்-3. Show all posts
Showing posts with label முண்டக உபநிஷத்-3. Show all posts

Thursday, February 15, 2018

முண்டக உபநிஷத் - அத்தியாயம் – 3

முண்டக உபநிஷத்
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது 18/04/2022
www.poornalayam.org
அத்தியாயம்–03 / பகுதி-1
 
ஸ்லோகம்-01
த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா
    ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |
பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||
 
ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பது இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்
 
த்3வா ஸுபர்ணா –அழகான இறக்கைகளுடைய இரண்டு பறவைகள்
ஸகா2யா – நண்பர்களை போல
ஸயுஜா – என்றும் சேர்ந்திருக்கின்றது
 
ஜீவாத்மா, பரமாத்வாவின் பிரதிபிம்பம் சிதாபாசமாக இருக்கிறது.  இவையிரண்டும் சேர்ந்தேயிருக்கும். ஜீவாத்மா பரமாத்வை சார்ந்திருப்பதால் அதை பரமாத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது. ஒரே சரீரத்தில் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருப்பதைப் போல ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றது. பிம்பம், பிரதிபிம்பம் போன்று சேர்ந்திருக்கின்றது.
 
ஸமானம் வ்ருக்ஷம் – ஒரே மரத்தில்
பரிஷஸ்வஜாதே – அமர்ந்துள்ளது
தயோ: அன்யஹ – அந்த இரண்டு பறவைகளில் ஒன்று
பிப்பலம் அத்தி – மரத்திலுள்ள பழங்களை
ஸ்வாது – மெய்மறந்து, அந்த சுவையில் மூழ்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது
இது ஜீவாத்மா கர்ம பலன்களை சுக-துக்கங்களாக அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை சுட்டிக் காட்டுகிறது
அன்யஹ அனன்யஹ – வேறொரு பறவை எதையும் சாப்பிடாமல்
அபிசாகஶீதி – பார்த்துக் கொண்டிருக்கிறது, சாட்சியாக மட்டும் இருக்கிறது. இது பரமாத்மாவை சுட்டிக் காட்டுகிறது
சம்சாரத்திற்கு காரணம் கர்த்தாகவும், போக்தாவாகவும் இருப்பதுதான் என்பது இதன் மூலம் தெரிகிறது.
 
ஸ்லோகம்-02
ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்3னோSனீஶயா ஶோசதி முஹ்யமான: |
ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யன்யமீஶமஸ்ய மஹிமானமிதி வீதஶோக: || 2 ||
 
ஸமானே வ்ருக்ஷே – இந்த சரீரத்தில்
புருஷ: - சம்சாரியான ஜீவாத்மா
நிமிக்3னஹ – சரீரம் நான் என்று எண்ணத்தில் மூழ்கி விட்டான்.
 
உடலை மரத்திற்கு ஒப்பிடுவதற்கு காரணம் இரண்டுமே மாற்றங்களையுடையது. பறவைகள் சாப்பிட ஏதாவது ஒரு மரத்தில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். அதேபோல ஜீவன் சம்சாரம் அனுபவிக்க சரீரம் ஆதாரமாக இருக்கிறது.
 
அனீஶயா ஶோசதி – துயரப்படுகிறான்; துயரத்திற்குள்ளாகின்றான்
நாம் அனுபவிக்கும் துயரங்களெல்லாம் வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் அனுபவிப்பதுதான். நாம் இதை தேர்ந்தெடுத்து அனுபவிப்பதில்லை
 
முஹ்யமான: - அவன் மோகத்துக்கு ஆட்பட்டுள்ளான்
மோகம் – எதைக் கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பது.
ஒரு பொருளுக்கு தகுந்த விலைக்கு மேலாக விலைக்கு வாங்க தயாராக இருப்பது,
தூரத்துக்கு பச்சை கண்ணுக்கு அழகு. எனவே இந்த உலகத்தை வேடிக்கை பார்க்க வேண்டும்.  தவிர அதை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது சோகத்தை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது போலாகும்..
 
யதா – எப்பொழுது
அன்யம் ஜுஷ்டம் ஈஷம் – வேறொரு பறவையை வணங்குவதற்குரிய மேலான ஈஸ்வரனாக,
அஸ்ய மஹிமானம் – என்னுடைய தன்மைதான் அந்த ஈஸ்வரன் என்றும் மற்றொரு பறவையை தான்தான் என்று
பஶ்யதி – பார்க்கின்றானோ, புரிந்து கொள்கின்றானோ
மஹிமானம் – அப்போது சம்சாரத்திலிருந்து விடுபட்டுவிடுவான்.
வீதஶோக இதி – அதனால், சோகத்திலிருந்து விடுபட்டு விடுவான்
 
ஸ்லோகம்-03
யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோனிம் |
ததா3 வித்3வான்புண்யபாபே விதூ4ய நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி || 3 ||
 
யதா3 பஶ்யஹ – எப்பொழுது பார்ப்பவன் (நித்ய-அநித்ய வஸ்துவை பார்ப்பவன்)
ருக்மவர்ணம் – ஞான ஸ்வரூபம் – தங்கத்தில் வர்ணம் போன்றது, சுய பிரகாசமாக இருக்கும் தன்மையை
ஜகத் கர்தாரம் ஈஶம் – ஜகத்தை உருவாக்கியவராக ஈஸ்வரனாக இருக்கின்றார்
ப்ரஹ்ம யோனிம் – அவரே நிர்குணமாகவும், மாயையோடு சேர்ந்து ஜகத்துக்கு காரணமாகவும் இருக்கின்றார்
பஶ்யதேஎன்று பார்க்கின்றானோ? அறிகின்றானோ
ததா3 – அப்பொழுது
வித்வான் – பிரம்ம தத்துவத்தை அறிந்தவனாகின்றான்
புண்யபாபே விதூ4ய – பாவ-புண்ணியத்தை நீக்கிவிட்டு
நிரஞ்ஜனஹ – தூய்மையடைந்தவனா
ஸாம்யம் – சமமான தன்மை, ஒன்றாக இருக்கின்ற தன்மை
உபைதி – அடைகின்றான்
பரமம் – மீண்டும் திரும்ப வராத ஞானநிலை
 
ஸ்லோகம்-04
ப்ராணோ ஹ்யேஷு ய: ஸர்வபூ4தைர்விபா4தி
    விஜானன்வித்3வான்ப3வதே நாதிவாதீ3 |
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவனேஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட: || 4 ||
 
ப்ராணஹ – பிராணனாக உள்ள பரபிரம்மன்
ஏஷஹ யஹ – நமக்கு அருகிலிருக்கின்ற இந்த பிரம்மன்
ஸர்வ பூதைஹி விபா4தி – எல்லா ஜீவராசிகளாக காட்சியளிக்கின்றது
விஜானஹ – என்பதை அறிந்து கொண்டவனாக
வித்3வான் – இருக்கின்ற ஞானியானவன்
நாதிவாதீ3 ப4வதி – பேசாதவனாக ஆகின்றான்
பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாததனால் அவன் இவ்வாறு பேசாதவனாக இருக்கின்றான். மௌனமாக இருப்பான், விவாதம் செய்ய மாட்டான்.
 
ஆத்ம க்ரீடஹ – தன்னிடத்திலேயே மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்
ஆத்மரதி – தன்னிடத்திலேயே நிறைவுடன் இருக்கின்றான்.
அவன் சுகத்திற்காக வெளிவிஷயங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெளிவிஷயங்களை மனதிலும் நினைத்துக் கொண்டிருப்பதுமில்லை.
 
க்ரியவான் – செயலை செய்பவன், தியானம், வைராக்கியமாக இருத்தல் போன்ற செயல்களை செய்பவன், ஆத்மரதி என்ற செயலை செய்பவன், உலக நன்மைக்காகவும் செயல்களை செய்து கொண்டிருப்பன்
ஏஷஹ – இந்த ஞானியானவன்
பிரஹ்மவிதா3ம் – பிரம்மத்தை அறிந்தவர்களுக்குள்
வரிஷ்டஹ – மிகமிக மேலானவன், ஞான நிஷ்டையை அடைந்தவன்
ஞானிகளுக்குள்ளே அடைந்த ஞானத்திலே ஏற்றத்தாழ்வு கிடையாது. ஞானம் அடைந்தவுடன் அது பலனைக் கொடுப்பதற்கு தடையாக இருப்பவைகளெல்லாம் நீங்கப்பெற்று அதில் நிஷ்டை அடைகின்றான்
 
ஸ்லோகம்-05
ஸத்யேன லப்4யஸ்தபஸா ஹ்யேஷ
    ஆத்மா ஸம்யத்4க்3ஞானேன ப்3ரஹ்மசர்யேண நித்யம் |
அந்த:ஶரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஶுப்4ரோ
    யம் பஶ்யந்தி யதய: க்ஷீணதோஷா:  || 5 ||
 
சில செயல்களிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய சாதனங்களை கூறுகிறது. அவைகள்,
1.சத்யம்,
2.தவம்,
3.ஸம்யக் ஞானம்,
4. பிரம்மச்சர்யம்
என்கின்ற நான்கு சாதனங்களாகும். இவைகளினால் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும். பொய் பேசுவதை விட்டால்தான் ஞானத்தை அடையும் தகுதியுடையவனாக இருக்கின்றான். மனதையும், இந்திரியங்களையும் ஒருமுகப்படுத்துவதுதான் மிகமேலான தவங்கள், சந்தேகமின்றி ஞானம் அடையும்வரை மனதை தூய்மையுடனும், சிரத்தையுடனும், கேட்டது போதும் என்று மனம் திருப்தி அடையும் வரை சிரவணம். பிரம்மச்சர்யம்
 
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மஞானமானது
சத்யேன – சத்யம என்ற சாதனத்தால்
லப்யதே – அடையக்கூடியது
தபஹ – தவத்தினாலும் அடையப்படுதல்
ஸம்யக் ஞானேன – சாஸ்திரத்தை கேட்டல் (சிரவணம்), சிரத்தையுடனும், மனம் ஒருமுகத்தோடு கேட்டல்
பிரம்மச்சர்யம் – ஒழுக்கமான வாழ்தல்
நித்யம் – இவைகள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் ஆத்ம ஞானத்தை அடைதல்
அந்த: ஶரீரே – சரீரத்தினுள் ( உடலுக்குள்ள மனதிலேயேதான் சிதாபாஸனாக ஆத்மா இருக்கிறது )
ஜ்யோதிர்மயஹ – ஞான ஸ்வரூபமாக இருக்கிறது
ஷூப்3ரஹ – எப்பொழுதும் தூய்மையானது
யதயஹ – இந்த ஞானத்தை அடைய முயற்சி செய்பவர்கள் இங்கு கூறப்பட்ட சாதனங்களை கடைபிடிக்கின்றவர்கள்
யம் பஷ்யந்தி – இந்த ஆத்மஸ்வரூபத்தை அறிகிறார்கள்
க்ஷீண தோ3ஷா – அந்தகரணத்திலுள்ள அசுத்தங்கள் நீங்கப்பெற்றவர்கள், அந்தகரண தூய்மையடைந்தவர்கள்
 
ஸ்லோகம்-06
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேன பந்தா2 விததோ தேவயான: |
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ||6||
 
ஸத்யம் ஏவ ஜயதே – சத்யம் மட்டும் வெல்கிறது
மூன்று காலத்திலும் மாறாது இருப்பது அதுவே சத்யம். இங்கு குறிப்பிடுவது விவகார ஸத்யம். இது ஒருபடியாக குறிப்பிடப்படுகிறது. சத்தியத்தை பின்பற்றுபவன் வெற்றி அடைவான்.
 
ந அந்ருதம் – பொய் என்றும் தோற்றுவிடும், வெற்றி பெறாது.
சத்யேன விததஹ – ஸத்யம் என்ற சாதனமானது பிரம்மலோகத்திற்கே அழைத்துக் செல்கின்றது.
தேவயானஹ பந்தா4ஹா – சுக்லகதி – பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லும் பாதை
ரிஷியஹ – உபாஸனை செய்கின்ற ரிஷிகள்
யேன அக்ரமந்த்ய – செல்லும் பாதையிலேதான்
ஆப்தகாமா – ஓரளவு ஆசையை நீக்கியவர்கள்
யத்ர – எந்த லோகத்தில்
ஸத்யஸ்ய – சத்தியம் என்ற சாதனையால்
பரமம் நிதானம் அஸ்ய – மேலான பிரம்மன் இருக்கின்றான்
லௌகீக வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான மனதுதான் முக்கியம்
 
ஸ்லோகம்-07
ப்3ருஹச்ச தத்3தி3வ்யமசிந்த்யரூபம் ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரம் விபா4தி |
தூராத்ஸுதூ3ரே ததி3ஹாந்திகே ச பஶ்யத்ஸ்விஹைவ நிஹிதம் குஹாயாம் ||7||
 
ப்3ருஹச்ச – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற ஸ்வரூபம்,பூரண ஸ்வரூபம்
த்வயம் – ஸ்வயம் பிரகாசம், ஸ்வயம் ஜ்யோதி, புலன்களால் அறியப்படாதது.
அசிந்த்யரூபம் – மனதினால் அறியமுடியாது, தர்க்கத்தினாலோ, அனுமானத்தினாலோ அறியமுடியாது, யுக்தியினாலும் அறிய முடியாது
ஸூக்ஷ்மாச்ச தத் ஸூக்ஷ்மதரம் – நுண்ணியத்தைக் காட்டிலும் நுண்ணியமானது
விபா4தி – விதவிதமான பிரமாணங்களுடன் காரியமாக இருக்கிறது. சூரிய, சந்திரன் இவைகளை பிரகாசிக்கின்றது.
தூராத்ஸுதூரே – அக்ஞானிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறது
தத் இஹ அந்திகே – ஆனால் அதுவே ஞானிகளுக்கு மிக அருகிலும் இருக்கிறது
ஆத்மா தூரத்திலும் இல்லை, அருகிலும் இல்லை. இது நானாக இருப்பதால் இவ்வாறு உபநிஷத் கூறுகிறது.
பஶ்யந்தி – ஜீவர்களிடத்தில்
இவ ஏஹ – இங்கேயே
கு3ஹா – புத்தியிலே ( மனதில் )
நிஹிதம் – வெளிப்படுகிறது. அறியப்படுகிறது.
 
ஸ்லோகம்-08
ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா
   நான்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா |
ஞானப்ரஸாதே3ன விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து
   தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாமான: || 8 ||
 
ந சக்ஷுஷா க்ருஹ்யதே – கண் என்ற இந்திரியத்தால் ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது
நாபி வாசா – வாக்கினாலும், இந்த பரம்பொருளை அறிந்து கொள்ள முடியாது. கர்மேந்திரியங்களாலும் இதை அறிந்து கொள்ள முடியாது
ந அன்யைஹி தே3வைஹி – மற்ற இந்திரியங்களாலும் அறிய முடியாது. மனதினாலும் அடையமுடியாது
பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறிய முடியாது. நேரிடையாக இதை விளக்க முடியாது. லட்சணையாகத்தான் விளக்க முடியும். அனுமானத்தாலும், சொல்லாலும் விளக்க முடியாது, அடைய முடியாது
ந தபஹ – தவத்தாலும் அடைய முடியாது
கர்மணா வா – கர்மங்களினாலும் அடைய முடியாது, அறிய முடியாது
ஞானப்ரஸாதே3ன – இங்கு ஞானம் என்பதற்கு புத்தி என்று அர்த்தம் கொள்ள வேண்டும், புத்தியுடைய பிரகாசத்தினால் அமைதியடைவதாலும், கருணையினால் புத்திக்கு ஆத்மாவை தெரிந்து கொள்ளும் சக்தி இயற்கையாக இருந்தாலும், வெளி விஷயங்களிலுள்ள ராக-துவேஷ என்ற தோஷத்தினல் பாதிக்கப்பட்டு ஆத்மாவை அறியும் சக்தி இழந்து விடுகிறது. (கலுமிஷம் – அழுக்கடைந்து விட்டது). புத்தி அசைவற்றதும், தூய்மையானதாகவும் இருந்தால்தான் ஆத்மாவை அறிய முடியும்.
புத்தியினுடைய காரியம் – நிச்சயம் செய்வது
மனதினுடைய செயல்கள்சந்தேகத்துடன் இருத்தல், அலைபாய்தல், உணர்ச்சிகளை உடையது
புத்தியுடைய தூய்மை புருஷார்த்த நிச்சயம், அப்படி நிச்சயம் செய்த புத்தியானது தூய்மையானதாகிறது.  நிச்சயித்த அந்தப்பாதையில் கவனம் சிதறாமல் லட்சியத்தை நோக்கி இருத்தல், அசைவற்ற இருத்தல்
விஶுத்3த4  ஸத்வம் – தூய்மையான மனதை அடைந்து விட்டவனாக சூட்சுமமான புத்தியால்தான் பிரம்மத்தை அறிய முடியும்.  ஏனென்றால் ஆத்ம தத்துவமும் சூட்சுமமாக இருப்பதால்
ததஹ – இந்த தகுதியை அடைந்ததற்கு பிறகு
தம் – அந்த ஆத்மாவை
பஶ்யதே – அறிகின்றான்
நிஷ்கலம் – பூரணமான, முழுமையான பிரம்ம தத்துவத்தை
த்4யாயமானஹ – விசாரம் செய்தவனாக இருப்பவன் அறிகின்றான்
 
ஸ்லோகம்-09
ஏஷோSணுராத்மா சேதஸா வேதி3தன்யோ
   யஸ்மின்ப்ரண: ப்ரஞ்சதா4 ஸம்விவேஶ |
ப்ராணைஶ்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
   யஸ்மின்விஶுத்3தே4 விப4வத்யேஷ ஆத்மா || 9 ||
 
ஏஷஹ – இந்த ஆத்ம ஸ்வரூபம்
அணுஹு ஆத்மா – மிக மிக சூட்சுமமானது, இப்படிபட்ட இந்த ஆத்மா
சேதஹ – புத்தியினால் , மனதினால்
வேதி3தன்யஹ – அறியப்படும் அருகதையை உடையது
யஸ்மின் – இந்த ஸ்தூல சரீரத்தில்
ப்ராணஹ – நம் பிராணனானது
பஞ்சதா – ஐந்துவிதமாக
ஸம்விவேஶ - பிரவேசித்தள்ளது
அப்படிபட்ட உடலில் இந்த மனமும் இருக்கின்றது. இந்த சைதன்யத்தினால்தான் அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிராணைஹ ஸர்வ ஸித்தம் ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளினுடைய மனங்களும் பிராணனுடன்
ஓதம் – ஆத்மாவால் இணக்கப்பட்டிருக்கிறது
யஸ்மின் விஶுத்தே4 – எந்த தூய்மையான மனதில்
ஏஷ ஆத்மா – இந்த ஆத்மா
விப4வதே – நன்கு தெளிவாக தெரிய வருகிறது
 
ஸ்லோகம்-10
யம் யம் லோகம் மனஸா ஸம்விபா4தி
    விஶுத்3த4ஸத்வ: காமயதே யாம்ஶ்ச காமான் |
தம் தம் லோகம் ஜயதே தாஶ்ச
    காமாம்ஸ்தஸ்மாதா3த்மக்ஞம் ஹ்யர்சய்த்3 பூ4திகாம: || 10 ||
 
விசுத்த ஸத்வ – ஞானியானவன்
யம் யம் லோகம் மனஸ ஸம்விபா4தி - எந்தெந்த லோகத்தை மனதினால் அடைய விரும்புகிறானோ
யாஶ்ச காமயதே – எந்த பொருளை அடைய விரும்புகின்றானோ
தம் தம் லோகம் ஜயதே – அந்தந்த லோகங்களை அடைகின்றான்
தஸ்மாத்3 – இந்த பெருமைகள் இருப்பதால்
ஆத்மக்3ஞம் – ஞானியை
பூ4த்காம அர்சயேத்3 – அனாத்மாவை விரும்புவர்கள் வணங்க வேண்டும்
இங்கு ஞானியை ஈஸ்வரனாகவே வர்ணிக்கப்படுகிறது
 ----oo000oo----
------------------------------------------------------------------------------------------------------------------------------
அத்தியாயம்–03 / பகுதி-2
 
ஸ்லோகம்-01
ஸ வேதை3தத்பரமம் ப்4ரஹ்ம தா4ம
        யத்ர விஶ்வம் நிஹிதம் பா4தி ஶுப்4ரம் |
உபாஸதே புருஷம் யே ஹ்யாகாமாஸ்தே
        ஶுக்ரமேதத3திவர்தந்தி தீ4ரா || 1 ||
 
யேஹி அகாமாஹ – யார் ஆசையற்றவர்களாக இருக்கிறார்களோ
புருஶம் உபாஸதே – ஞானியை வழிபட வேண்டும். உபாஸனை செய்ய வேண்டும். அவரிடம் சென்று மோட்சத்தை அடைவதற்கான உபதேசத்தை கேட்க வேண்டும்.  பணிவுடனும், சிரத்தையோடும் அவரை அணுக வேண்டும்.
ஏதத் பரம தா4ம ப்ரஹ்மம் – இந்த மேலான இருப்பிடமாக உள்ள பரபிரம்மத்தை
ஸஹ வேத – அந்த ஞானி அறிந்துள்ளான்
யத்ர – எந்த பிரம்மத்தை
விஶ்வம் நிஹிதம் – இந்த உலகம் சார்ந்திருக்கின்றதோ
ஶுப்4ரம் பா4தி – அந்த பிரம்மம் மிகத்தெளிவாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, ஞான ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.
தே தீ4ராஹா – ஞானியை குருவாக அடைந்த தீரர்கள்
ஶுக்ரம் – பிறப்பு-இறப்பை
அதிவர்தந்தே – கடந்து செல்கின்றார்கள்
 
ஸ்லோகம்-02
காமான்ய: காமயதே மன்யமான:
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |
பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||

ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பதை இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்

ஸ காமபி4ர்ஜாயதே தத்ர தத்ர |
பர்யாப்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்து
இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா: || 2 ||
 
முமுக்ஷூக்கள் ஆசைகளைத் துறக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும்.
யஹ – எவனொருவன்
காமான் மன்யமானஹ காமயதே – பார்த்த விஷயங்களையும், கேட்ட விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டு ஆசைப்படுகின்ற, விஷயங்களில் கிடைக்கும் சுகத்தை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற
ஸஹ – அவன்
காமபிஹி – ஆசைகளுடன், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களோடு
ஜாயதே – பிறக்கின்றான்
தத்ர தத்ர – அந்தந்த இடத்தில்
தர்ம-அதர்ம பிரவிருத்தி ஹேது – தர்மத்தையும், அதர்மத்தையும் செய்வதற்கு காரணமான ஆசையுடனும், விஷயத்துடனும் ஒருவன் பிறக்கின்றான்
பர்யாப்த காமஹ – எல்லா ஆசைகளையும் துறந்தவன், ஆசைகளனைத்தும் நீங்கிய  நிலையிலிருப்பவன்
க்ருதாத்மனஹ – தனக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்தவன். தன்னைப்பற்றி அறிய வேண்டியதை அறிந்து கொண்டவன். அதை அறிய செய்ய வேண்டியதெல்லாம் செய்தவன்
ஸர்வே காமாஹா – எல்லா ஆசைகளும்
இஹைவ – உயிருடன் இருக்கும்போது, இங்கேயே
ப்ரவிலீயதே – அழிந்து விடுகிறது
ஆசைகளைத் தியாகம் செய்வது சாதனம்.  ஞானம் அடைந்தவுடன் ஆசைகள் அழிந்து விடுகிறது பலனாகும்.  ஆசைகளை துறந்தாலும் அதன் வேர் இன்னும் இருந்துக் கொண்டு இருக்கும்.  ஆசையை துறந்தாலும் அதை தியாகம் செய்து இருக்கிறோம் என்ற நினைவு இருந்து கொண்டிருக்கும்.
 
ஸ்லோகம்-03
நாயமாத்மா ப்ரவசனேன லப்4யோ
    மேத4யா ந பஹூனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருஷுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ
    ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் || 3 ||
 
ஆத்மாவை அறிந்து கொள்வதை லட்சியமாக கொள்வது ஆத்மவரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.  ஈஸ்வரனின் அனுகிரகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.
 
ஆத்மவரணம் – ஆத்மாவை தேர்ந்தெடுத்தல்
அயம் ஆத்மா – இந்த ஆத்ம ஞானத்தை
ப்ரவசனம் – வேதத்தை ஓதுவதனால், பிரவசனத்தினால், வேத சாஸ்திரத்தை ஸ்வரத்துடன் அத்யயனம் செய்தாலும்
ந மேத4யா – மனதில் ஞாபகம் வைத்துக் கொள்கின்ற சக்தி, கிரந்தத்தின் அர்த்தத்தை  மனதில் வைத்துக் கொள்கின்ற சக்தி, உபநிஷத் மனப்பாடம் செய்தாலும்
ந பஹுனா ஶ்ருதேன – மீண்டும், மீண்டும் கேட்பதனாலும்.
ந லப்யதே – அடைய முடியாது
முமூக்ஷுத்வம் இல்லாமல் மேற்கூறியவைகள் பயனற்றது. ஆத்ம ஞானத்திற்கு அடைவதற்கு பயன்படாது.
 
யம் ஏவ ஏஷஹ வ்ருணுதே – யார் இந்த ஆத்மாவை மட்டும் லட்சியமாக கொள்கின்றானோ, தேர்ந்தெடுக்கின்றானோ,
தேன லப்யஹ – அவரால் அடையப்படும்
ஏஷஹ – இந்த ஆத்மா – (இதுதான் புருஷார்த்தமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்)
யம் ஏவ வ்ருணுதே – யாரை தேர்ந்தெடுக்கின்றதோ
தேன லப்யஹ – அவனால் அடையப்படுகிறது.
யார் ஆத்மாவை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களைத்தான் ஆத்மாவும் தேர்ந்தெடுக்கிறது..  ஆத்மா தேர்ந்தெடுத்ததில் ஈஸ்வரனின் அனுகிரகத்தை பெற்ற
தஸ்ய – அந்த அதிகாரிக்கு, அவனுக்கு
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மாவானது
ஸ்வாம் தனும் – தன்னுடைய ஸ்வரூபத்தை
விவ்ருணுதே – வெளிப்படுத்துகிறது, அறிய வைக்கிறது
 
ஸ்லோகம்-04
நாயமாத்மா ப3லஹீனேன லப்4யோ ந ச
    ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்கா3த் |
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்3வாம்ஸ்
    தஸ்யைஷ ஆத்மா விஶதே ப்ரஹ்மதா4ம || 4 ||
 
இதில் மூன்று சாதனங்கள் சொல்லப்படுகிறது. இவைகளை ஆத்மவரணத்துடன் செய்ய வேண்டும். அவைகள்,
1.  மனோபலம்,
2.  அப்பிரமாத (கவனமாக இருத்தல்),
3.  .வைராக்கியத்துடன் கூடிய ஞானம்
 
மனோபலம்:
இதை இரண்டு விதத்தில் அடையலாம். உடல் சக்தி, நல்ல ஆகாரம் தேவையற்றவைகளை சாப்பிடாமல் இருத்தல், அதேபோல மனதிற்கு நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டும். சத்யம், சம, தம இவைகளை கடைப்பிடித்து கொண்டிருந்தாலும், நற்பண்புகளை பின்பற்றுவதாலும் அடையப்படும். காம-க்ரோதம், பேராசை போன்ற தீய பண்புகளை உடைய மனிதர்களிடம் கோபப்படாமல் பரிதாபப்பட வேண்டும். ஆத்மஞான நிஷ்டை அடைந்ததும், மனோபலம் உறுதிப்படும். இந்த ஜகத் மித்யா என்று துறந்து விடமுடியும்.
அயம் ஆத்மா – இந்த ஆத்மாவானது
பலஹீன – மன பலமற்றவானல்,
ந லப்யஹ – அடைய முடியாது
 
கவனமாக இருத்தல்
விஷய ஸங்க நிமித்தி பிரமாதயா – நம்மை சுற்றியுள்ள பொருட்களில், விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனால் ஈர்க்கப்பட்டு திசைமாறி போய்விடுவோம். புகழ், பொருட்கள் இவைகளை சேர்ப்பதினால் நம் லட்சியத்திலிருந்து விலகிவிடுவோம்.
பிரமாதாத் – கவனக்குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்
அலிங்காத் தபஸ – வைராக்கியம் இல்லாத ஞானத்தினல் ஆத்மாவை அடைய முடியாது
 
யஹ வித்வான்ந்த முமூக்ஷுவானவன்
ஏதைஹி உபாயைஹி – மேலே சொன்ன மூன்று உபாயத்துடன்
யததே – முயற்சி செய்ய வேண்டும்
தஸ்ய ஏஷ ஆத்மா – இந்த அவனுடைய ஆத்மா
ப்ரஹ்ம தாமம் விஷதே – மேலான இருப்பிடமான பிரம்மத்தை சென்று அடைகிறது
 
ஸ்லோகம்-04
ஸம்ப்ராப்யைனம்ருஷயோ ஞானத்ருப்தா; க்ருதாத்மானோ வீதராகா3: ப்ரஶாந்தா: |
தே ஸர்வக3ம் ஸர்த: ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மான: ஸர்வமேவாவிஶந்தி || 5 ||
 
ஸம்ப்ராப்ய ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை முழுமையாக அடைந்
ரிஷயஹ – ரிஷிகள், ஞானிகள்
ஞானத்ருப்தாஹா- ஞானத்தினால் மனதிருப்தியை, மன நிறைவை அடைந்தவர்கள். மற்ற விஷயங்களை அறிவதால் ஆசைகள் ஏற்படும், ஆசை நிறைவேறாவிட்டால் கோபமும், வெறுப்பும் வரும், ஆத்ம ஞானம் மட்டும் இருக்கின்ற ஆசைகள் ஒழிந்துவிடும். மனதில் திருப்தி வந்துவிடும்.
க்ருதார்மானஹ – ஆத்மாவை பூரணமாக அறிய வேண்டியவற்றை செய்து பரமாத்மாவாக, பிரஹ்ம ஸ்வரூபமாக மாறிவிட்டார்கள்.
வித ராகாஹா ஆசை முதலிய தீய குணங்கள் அனைத்தும் அவனை விட்டு சென்றுவிட்டன.
ப்ரஶாந்தாஹா – இந்திரியங்களெல்லாம் அமைதியை அடைந்து விட்ட நிலையில் உள்ள
தே – அவர்கள்
ஸர்வகம் – எல்லா இடத்திலும் வியாபித்துள்ள ஆத்மாவை
ஸர்வதஹ ப்ராப்ய – முழுமையாக அடைந்து இருப்பவர்கள்
தீரா – தீரர்கள்
யுக்தாத்மான: - ஆத்மாவுடன் நன்கு பொருந்திய மனதுடையவர்களாக, மனவமைதியுடையவர்களாக
ஸர்வம் ஏவ ஆவிஷந்தி – அனைத்தையும் வியாபிக்கிறார்கள்
மரணத்திற்கு பிறகு பிரம்ம ஸ்வரூபமாக மாறிவிடுகிறார்கள். உயிரோடிருக்கும் போது உலகத்திலுள்ள அனைத்தும் நானென்று அபிமானத்துடன் இருப்பார்கள்
 
ஸ்லோகம்-06
வேதாந்தவிக்3ஞானஸுநிஷ்சிதார்தா2: ஸந்யாஸயோகா3த்3யதய: ஶுத்3த4ஸத்த்வா: |
தே ப்3ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே || 6 ||
 
யத் யஹ – இவ்வாறு முயற்சி செய்பவர்கள்
ஸந்யாஸ யோக – சந்நியாம் என்கின்ற சாதனம், ஞானயோகம் என்ற சாதனத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஶுத்3த4 ஸத்த்வாஹா – தூய்மையான மனம் அடைகிறார்கள். ராக-துவேஷம் நீங்கிய தூய்மை, எல்லா அசுத்தங்களையும் நீக்குகின்ற அறியாமை நீங்குதல், அதனால் அடையப்பட்ட ஞானத்தை, பரம்பொருளை
அனிஶ்சித – நிச்சயம் செய்யப்பட்டது
தே பராம்ருதஹ – அவர்கள் முக்தர்களாக மாறினார்கள். உயிரோடிருக்கும் போதே மரணமற்ற நிலையை அடைகிறார்கள். மேலான அம்ருதத்தை அடைந்தார்கள்.
பராந்தகாலே – கடைசிகாலத்தில், மரணமடைந்த நேரத்தில்
பிரம்மலோகேஷு – பிரம்மத்திலே
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்
 
ஸ்லோகம்-07
க3தா: கலா: பஞ்சதஶ ப்ரதிஷ்டா தே3வாஶ்ச ஸர்வே ப்ரதிதே3வதாஸு |
கர்மாணி விஞானமயஶ்ச ஆத்மா பரேSவ்யயே ஸர்வம் ஏகீப3வந்தி || 7 ||
 
சஞ்சித கர்மத்திலிருந்து வெளிவந்து செயல்பட்டு கொண்டிருப்பது பிராரப்த கர்மம், புதிதாக சேர்க்கப்பட்ட ஆகாமி கர்மபலனில் சேர்க்கப்படுகிறது..ஞானி விஷயத்தில் சஞ்சித கர்மமும், ஆகாமி கர்மங்களும் அழிந்துவிடுகின்றன. மரணமடையும்போது ஸ்தூல சரீரம்தான் அழிகிறது. அக்ஞானியின் சூட்சும சரீரம் வெளிப்படுகின்ற பிராரப்த கர்மத்திற்கேற்றவாறு வேறுடலை எடுக்கின்றது. ஞானியின் சூட்சும சரீரம் அந்தந்த சூட்சும பூதங்களில் கலந்து விடுகின்றது. அகங்காரம் அழிந்தவுடன் சஞ்சித, ஆகாமி கர்மங்கள் அழிந்து விடுகின்றது.
 
க3தா பஞ்சத3ஶா கலா: – கலந்து விடுகிறது பதினைந்து அம்சங்கள்
பிரதிஷ்டாஹா – அந்தந்த தேவதைகளை அடைந்து விடுகிறது.
ஸர்வே தேவா: - எல்லா இந்திரியங்களும்
ப்ரதிதேவதா3ஸு – அந்தந்த இந்திரிய தேவதைகளிடம் சென்று விடுகின்றது
கர்மாணி – சஞ்சித, ஆகாமி கர்மங்களும்
விக்ஞானமய ஆத்மா – சிதாபாசனும்
பர அவ்யயே – அழியாத பரம்பொருளிடத்தில்
ஸர்வே ஏகி ப4வந்தி – எல்லாமும் ஒன்றாக கலந்து விடுகின்றது
 
ஸ்லோகம்-08
யதா2 நத்4ய: ஸ்யந்தமானா: ஸமுத்3ரேSஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய |
ததா2 வித்3வான் நாமரூபாத்3விமுக்த: ப்ராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம் || 8 ||
 
விதவிதமான நதிகள் கடலில் கலந்து விட்டால் தங்களது பெயர்களை இழந்து கடலோடு ஒன்றாகி விடுகிறது
ஸ்யந்தமானா: - ஓடிக்கொண்டிருக்கும்
யதா2 நதியா – எப்படி நதிகளானது
ஸமுத்3ரே அஸ்தம் க3ச்ச2ந்தி – சமுத்திரத்தில் ஒன்றாகி
நாமரூபே விஹாயே – நாம ரூபத்தை இழந்து விடுகிறது
ததா2 வித்வான் – அவ்விதமே ஞானியானவன்
நாம ரூபாத் விமுக்த: – நாம ரூபத்திலிருந்து விடுதலையடைகிறான். இது ஜீவன் முக்தியை குறிக்கிறது. உடல் மீதுள்ள அபிமானத்தை தியாகம் செய்தவனாகிறான்.
பராத்பரம் – மாயைக் காட்டிலும் மேலான
த்வயம் புருஷம் உபைதி – சுய பிரகாசமான பிரம்மத்தை அடைகின்றான்
 
பானைகளை நாம ரூபங்களாக பார்க்கும்போது அதில் வேற்றுமைகளை பார்க்கிறோம்.  களிமண்ணை பார்க்கும் போது ஒன்றைத்தான் பார்க்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைத்தான் கவனிப்போம். அதனால் நாமரூபத்தை பார்க்கும்போது  அதிஷ்டமான களிமண்ணை மறந்து விடுகிறோம்.  பிறகு களிமண் என்ற பார்வையில் நமக்கு எல்லாமே ஒன்றுதான் என்று விளங்குகிறது. இது ஜீவன் முக்தியை குறிக்கிறது.  நாம ரூபத்திலிருந்து விடுதலையடையும் போது இறுதி காலத்தில் இதற்கு அதிஷ்டானமான பிரம்மத்தில் கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-09
ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்ரஹ்மைவ
    ப4வதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே ப4வதி |
தரதி ஶோகம் தரதி பாப்மானம் கு3ஹாக்3ரந்தி4ப்4யோ
    விமுக்தோSம்ருதோ ப4வதி || 9 ||
 
ஸஹ யஹ – எவனொருவன்
தத் பரமம் ப்ரஹ்ம வேத3 – அந்த மேலான பிரம்மத்தை அறிகின்றானோ
ப்ரஹ்ம ஏவ ப4வதி – அவன் பிரம்மனாகவே ஆகின்றான்
அறியாமைதான் நமக்கு பிரம்மத்திற்கு உள்ள இடைவெளி எனவே அறியாமை நீங்கினால் நாம் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவோம். நாம் ஏற்கனவே பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
 
ந அஸ்ய அப்ரஹ்ம வித்குலே ப4வதி – பிரம்மத்தை அறியாதவர்கள் இவன் பரம்பரையில் யாரும் இருக்கமாட்டார்கள்
தரதி ஶோகம் – சோகத்தை கடக்கின்றான், மானஸ சந்நியாஸம், மனவேதனைகள்
தரதி பாப்மானம் – பாவ-புண்ணியங்களை கடந்து செல்கின்றான்
கு3ஹ க்ரந்தி – மனதிலிருக்கின்ற முடிச்சுக்களை
விமுக்தஹ – அறுக்கப்பட்டு விடுதலை அடைகின்றான்
அம்ருதஹ – மரணமற்ற நிலையை அடைகின்றான்
 
ஸ்லோகம்-10
க்ரியாவந்த: ஶ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டா;
    ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ஶ்ரத்3த4யந்த: |
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்3யாம் வதே3த
    ஶிரோவ்ரதம் விதி4வத்3யைஸ்து சீர்ணம் || 10 ||
 
ததேதத் -  கீழ்கண்ட மந்திரம்
அப்3ரூதம் – யாருக்கு சொல்ல வேண்டும்
க்ரியாவந்தஹ – கர்மயோகத்தில் இருப்பவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
கர்மயோகத்தினால் மனம் தூய்மையடையும், இதனால் மனதிலுள்ள விருப்பு, வெறுப்புக்கள் நீங்கிவிடுகின்றது.  இதன் தொடர்ச்சியாக விவேக, வைராக்கியத்தை அடையச் செய்யும்
ஶ்ரோத்ரியஹ – வேத சாஸ்திரத்தை படித்தவர்கள், சாஸ்திரத்தில் சிரத்தை உடையவர்கள்
பிரஹ்மநிஷ்டா – சகுண பிரம்மத்தில் மனதை நிலைபெற்றிருப்பவர்கள்
ஈஸ்வரனிடம் பக்தியுடையவர்கள், உபாஸனை செய்தவர்கள். இதன் பலனாக சம, தமத்தை அடைந்திருப்பார்கள்
ஶ்ரத்3த4யந்தஹ – உபநிஷத் உபதேசத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்
இது நேரிடையாக ஞானத்தை கொடுக்கும் கருத்து என்று முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஏகர்ஷின் ஸ்வயம் ஜுஹ்வத -  ஏகர்ஷின் என்ற யாகத்தை செய்துள்ளவர்களுக்கு
ஷிரோவிரதம் – இது ஒருவிதமான விரதம், இதை
விதி4வத் சீர்ணம் – சரியாக செய்துள்ளவர்களுக்கு
தேஷாம் ப்3ரஹ்ம வித்யாம் – அவர்களுக்கு இந்த பிரம்ம வித்யாவை
வதே3த – உபதேசம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம்-10
ததே3தத்ஸத்யம்ருஷிரங்கிரா: புரோவாச நைதத3சீர்ணவ்ரதேSதீ4தே |
நம: பரமக்ரிஷிப்4யோ நம: பரமக்ருஷிப்4ய: || 11 ||
 
ததே3தத்ஸத்யம் – இதுவரை சொல்லப்பட்ட உபதேசங்கள் யாவும் உண்மையானது
அங்கிரஸஹ புரா உவாச – அங்கிரஸ் என்ற ரிஷியால் வெகு காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டது
ந அதீதஹ – தகுதியில்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம்
நமஹ பரம ரிஷிப்4யஹ – இந்த ஞான பரம்பரையில் வந்தவர்களுக்கு நமஸ்காரம் செய்யப்படுகிறது

----oo000oo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...