அமிர்தபிந்து உபநிஷத்
பொதுவான முகவுரை
எல்லா தத்துவவாதிகளுக்கும் மனம் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. தங்களிடத்தில் உள்ள விஷயங்களையும் அவைகள் எப்படி காட்சியளிக்கும் என்பதைக் கண்டறிய முற்படும்போது, இறுதியில் அவர்களது ஊகங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களுக்கு மனதைத்தான் நாட வேண்டியிருக்கிறது. ஆனால் மனதின் முலம் பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் அது செயல்படும் வரம்புகளுடன்தான் பயன்படுத்தமுடியும். அறியப்பட்ட அனைத்தும் மனம் எப்படி அவைகளை உணர்கிறதோ அதன்பாதிப்புடன்தான் இருக்கும். ஆதலால் மனோதத்துவ நிபுணர்கள் பார்க்கின்ற பொருட்கள் நமக்கு காட்சியளிக்கின்ற மாதிரித்தான் இருக்கும் என்ற விஷயத்தில் சந்தேகமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உள்ளுணர்வாக அவற்றை நம்புவதற்கு வழிவகுத்தாலும், தங்களுக்குள் உள்ள விஷயங்கள் சிந்திக்க முடியாதவை மற்றும் அறிய முடியாதவை என்று முடிவு செய்கிறார்கள். வேறுசில மனோதத்துவவாதிகள் இதற்கு எதிரான கருத்துக்களை உடையவர்களாக இருக்கிறார்கள். எது அறியப்பட்டதாக இருக்கிறதோ அல்லது கற்பனை செய்யக்கூடியவைகளாக இருக்கிறதோ அவைகள் மட்டும்தான் இருப்பதாகக் கூறலாம். ஆதலால்; அறியப்படாதது மற்றும் அறிய முடியாதது மற்றும் நினைத்துப் பார்க்க முடியாதது எதுவாக இருந்தாலும் அதை ஒருபோதும் சொல்லவோ அல்லது இருப்பதாக நினைக்கவோ முடியாது.
மூன்றாவது நிலையும் சாத்தியமாகும். மனம் ஒரு சார்புடையதாகவும், வரம்புகளுக்குட்பட்டதாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும் மனதை அதன் அனைத்து வரம்புகள் மற்றும் குறைபாடுகளிலிருந்து விலக்கி, அதை முற்றிலும் ஏதாவது ஒருப்பக்கச்சார்பற்றதாகவும் ஆக்குவது சாத்தியம் என்றால், அவைகளில் உள்ளவை என்ன என்பதை அறியவும் முடியும். இந்த நிலையின் உண்மைத்தன்மையை நிலைநாட்டுவது பிரம்மாவாதிகளின் தனிப்பெருமையாகும். பழங்காலத்திலிருந்தே, அவர்கள் தனக்குள்ளேயே பூரணமான ஆத்மாவை அறியலாம் என்ற கருத்தின் சாத்தியத்தை கூறிவருகின்றனர். பிரம்மவாதிகளைத் தவிர வேறுசிலரும் பூரணமானது என்ற பெயரின் கீழ் தனக்குள்ளே உள்ள ஒன்றைப் பற்றி பேசியுள்ளனர். ஆனால் இவர்களின் கருத்துக்கள் முழுயூகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. பிரம்மவாதிகள் தனக்குள்ளே உள்ள விஷயங்களை அந்த உறுதியுடன் கூறுகின்றனர். அது உடனடியாக அல்லது உள்ளுணர்வு அறிதலால் உருவாக்கப்படும் நம்பிக்கையால் தோன்றி வளர்க்கப்படுகிறது.
வேதாந்தத்தின் முழு உபதேசமானது பிரம்மம் என்றால் என்ன அல்லது எது பிரம்மம் இல்லை என்பதை விளக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேதாந்தத்தின் உபதேசமானது பரம்பரம்பரையாக ஆச்சார்யார்களின் தனிப்பட்ட அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனோதத்துவவாதத்தின் விரிவான போக்கின் மூலம் பிரம்மனின் தன்மையை தர்க்கரீதியாக நிறுவவும் அதேவேளையில் வேதாந்தம் மனதை தூய்மைப்படுத்தும் செயல்முறையை விவரமாக கூறியிருக்கிறது. மனதின் அசுத்தங்களான உலக மற்றும் பரலோக இன்பங்களில் பற்றையும், அவைகளை அடைய வேண்டும் என்கின்ற தீராத ஆசைகளையும் நீக்கி தூய்மைப்படுத்துவதால் அதன் அலைபாயும் தன்மையை இழந்து நிலையானதாக மாறுகிறது. மனம் முழுமையான ஒருமுகப்பாட்டை அடைந்தவுடன், அது தனது இயல்பான அலைபாயும் தன்மையை இழக்கிறது மற்றும் பிரம்மனுடன் ஒன்றாகிறது. பிரம்ம சாக்ஷாத்காரத்தை அடையாமல் தன்னுள்ளேயிருக்கின்ற ஆத்மாவைப் பற்றிய முழுமையான நம்பிக்கையை உருவாக்க முடியாது.
மனோதத்துவத்தை மதத்தோடு இணைத்துப் பார்க்காவிட்டால் அது பயனற்றதாகவிடும். உண்மையில் இந்த மனோதத்துவம் மதத்தின் உயிர்நாடியாக இருக்கிறது. பிரம்மவாதிகளின் மனோதத்துவ முடிவானது அவர்களது மதபக்தியின் அடித்தளத்தை உருவாக்குகிறது. எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் பக்தனின் பாதையானது இந்த அடித்தளத்தையொட்டிதான் இயங்குகிறது. அவர்களது மனம் கடவுள், ஆத்மா மற்றும் பிரபஞ்சத்தின் தன்மையை உருவாக்கும் திறன் கொண்டது. அந்த நிலைக்கு உயர முடியாத ஒருவருக்கு, தெய்வீகத்தைப் பற்றிய சுருக்கமான சிந்தனையின் போக்கை பரிந்துரைக்க முடியாது. எனவே மகான்களின் எழுத்துக்களில் பக்தியின் பன்முக மற்றும் வெளிப்படையான வேறுபட்ட பாதைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பிரம்மவாதியின் மனோதத்துவ தத்துவம், அறிவொளி பெற்ற ஞானிகளின் நேரடி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மையிலிருந்து அதன் தனித்துவமான மத முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஞானிகள் பிரம்மம் பூரணமானது என்றும் அதன் பேரின்பம் அதனுடைய இயல்பானதாக இருப்பதால், ஆனந்தம் என்றென்றும் நிலையாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. வேதாந்தம் உபதேசிக்கின்ற பிரம்மம் எப்பொழுதும் பூரணமானது. மனோதத்துவவாதிகள் மிகவும் கஷ்டப்பட்டு தனது புத்தியை பயன்படுத்தி இதை அறிந்து கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள். ஒழுக்கவாதி தனது செயல்களால் இதை அறிவதற்கு முயற்சி செய்கிறார். தெய்வீக பேரின்பமானது தீவிர மதபக்தன் தனது முழு இருப்புடன் கடவுள் மீது பிரத்யேக பக்தியுடன் மூலம் வாழ்க்கையில் உணர விரும்புகிறான்.
பிரம்மவாதியின் இறையியல், உபநிஷத்தில் பொதிந்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த உபநிஷத் வேதத்தின் இறுதியில் வருவதால் இதை வேதாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. எத்தனை உபநிஷத்துக்கள் இருக்கிறது என்பதை சரியாக சொல்வது கடினம். ஒவ்வொரு சாகாவிற்கும் ஒருஉபநிஷத் இருப்பதாக பாரம்பரியமாக சொல்லப்படுகிறது. 1180 சாகாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சாகாவிற்கும் ஒருஉபநிஷத் என்று வைத்துக்கொண்டால் 1180 உபநிஷத்துக்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான சாகாக்கள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுவதால் அவற்றுடன் இணைந்த உபநிஷத்துக்களும் அழிந்திருக்கலாம். ஆயினம்கூட இப்போது 130 அல்லது அதற்கு மேற்பட்ட உபநிஷத்துக்கள் இருக்கின்றன. இந்த 130 உபநிஷத்துக்களில் 10 உபநிஷத்துக்கு மட்டுமே ஸ்ரீசங்கராச்சாரியாரால் முழுமையாக விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது.
உபநிஷத் என்ற சொல் உப(அருகில்), நி(நிறைய) மற்றும் ஷத்(செல்தல், அழிதல்) என்கின்ற மூன்று சொற்களிலிருந்து வந்திருக்கிறது. இந்த வார்த்தையின் அர்த்தம் பிரம்ம-வித்யா, ஆன்மீக அறிவு என்று அவர் விளக்குகிறார். இது சாதகர்களை பிரம்மனுக்கு மிக அருகில் கொண்டு சென்று துன்பத்திற்கு விதையான அவித்யாவை எரிப்பதன் மூலம் சம்சாரத்தை நீக்கிவிடுகிறது.
அமிர்தபிந்து உபநிஷத் போன்ற சிறிய உபநிஷத்துக்களின் பல தனித்துவமான அம்சங்களில் இரண்டை இங்கே குறிப்பிடலாம். அவைகள்,
- உபதேசத்தின் மிக விரிவான அமைப்பானது, பாரம்பரையாக உபதேசிக்கப்படுகின்ற மற்ற உபநிஷத்துக்களின் மையக்கருத்தை உணர்ந்து கொள்ள உதவி செய்கின்றது
- பல்வேறு மதப்பிரிவை சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் ஈஸ்வரனை ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் சிவன், நாராயணன், கணபதி, கிருஷ்ணன், ராமர், தேவி மற்றும் பலவாக கருதுகிறார்கள். இதுவே அவர்கள் கடைப்பிடிக்கின்ற வெளிப்புற நடைமுறைகள் மற்றும் சடங்குகளை செய்வதற்கான வழிமுறைகளை கூறுகிறது.
அமிர்தபிந்து உபநிஷத் அதர்வன வேதத்தைச் சேர்ந்தது. இது பிரம்மத்தை உணர்ந்துக் கொள்வதற்காக விளக்கமான தியானமுறையை உபதேசிக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது பண்பைப் பொறுத்தவரை அமிர்தபிந்து உபநிஷத் எந்தவொரு மதப்பிரிவின் சார்பாகவும் உபதேசிக்கவில்லை. இந்த உபநிஷத்தின் இறுதி ஸ்லோகத்தில் வருகின்ற வாசுதேவா என்கின்ற சொல் சிலமதப்பிரிவு புராணங்களில், ஆகமங்களில் பயன்படுத்தப்பட்டதைப் போல பயன்படுத்தவில்லை.
மனதின் உண்மையான தன்மையானது மாண்டூக்ய உபநிஷத்; காரிகையில் ஸ்ரீகௌடபாதாவால் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டிக்கிறது. அதை உபநிஷத் விளக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த உபநிஷத்தும் எல்லா உபநிஷத்துக்கள் உபதேசிக்கின்ற பிரம்மத்தைத்தான் மையக்கருத்தாக கொண்டிருக்கிறது. இந்த மையக்கருத்து எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டாலும், வாழ்க்கையின் இறுதி நோக்கமும், உண்மையும் அனைவருக்கும் ஒன்றுதான். பிரம்மவித்யா வெவ்வேறு நிலையிலுள்ள சாதகர்களுக்கு வெவ்வேறு பாதைகளை சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு பாதையும் பரிந்துரைக்கப்பட்டவர்களின் அறிவுசார், தார்மீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்றது.
எவருடைய மனதை முற்பிறவிகளின் பயிற்சியின் மூலம் நன்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறாரோ, அவர் தன்னையும் பிரம்மத்தையும் ஐக்கியப்படுத்துவதையும், மற்ற எல்லாவற்றின் அமானுஷ்யத் தன்மையையும் உபதேசிக்கின்ற வேதாந்தத்தின் உபதேசத்தை முதன்முதலாகக் கேட்கும்போதே உணர்ந்து கொள்வார். அத்தகைய மகாத்மா பிரம்மனின் எல்லையற்ற பேரின்பத்தில் திளைக்கின்ற வாழ்வின் உயர்ந்த லட்சியத்தை அடைந்துவிடுவார். மற்றவர்கள் ஸ்ருதியால் வழிகாட்டப்பட்ட பல்வேறு பாதைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதன்படி நடக்கவேண்டும். இவையனைத்திலும் அடையப்பட வேண்டிய ஒரே குறிக்கோள் மனதில் பரிபூரண தூய்மையும் மற்றும் உறுதியுமாகும். அதை அடைந்தவுடன் பிரம்மன் அதன் உண்மையான தன்மையை மனதில் பிரதிபலிக்கும். ஸ்ருதிக் காட்டுகின்ற சில பாதைகளை இனி பார்க்கலாம்.
- நிர்குண பிரம்மத்தைப் பற்றிய சிந்தனை: ஆத்மாவின் உண்மைத்தன்மையையும், மற்றவற்றின் உண்மையற்ற தன்மையையும் அறிவார்ந்த முறையில் நம்புபவர் இந்த பாதையில் நுழைவதற்கு தகுதியானவர். இந்த பாதையில் பயணிக்க விரும்புகின்ற சாதகர்களுக்கு ஒரு எச்சரிக்கை அடிக்கடி கொடுக்கப்படுகிறது. நிர்குண பிரம்மன் எந்தவித குணங்களுமற்றது; சத்-சித்-ஆனந்தமாக இருக்கிறது; பேரின்பமயமானது; உணர்வுமயமானது என்பதைப் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையை அடைவதற்கு சாதகர்கள் உபாதியால் வரையறுக்கப்பட்ட தன்னுடைய தனிப்பட்ட உணர்வை அகற்றி, மித்யா என்ற உறுதியான எண்ணத்தோடு பிரம்மத்தின் தன்மைகளை தனதாக உணர வேண்டும். அந்த நிலையில் உறுதியுடன் நிலையாக இருக்க வேண்டும்.
- சகுண பிரம்மத்தைப் பற்றிய சிந்தனை: பிரம்மன் இந்த உலகத்திற்கு ஆதாரமாகவும், அதனுடைய தோற்றத்திற்கும் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த உலகத்தை முழுவதுமாக வியாபித்துக்கொண்டும், உலகத்திற்கு தலைவனாகவும் இருக்கிறது.
- தனக்கும் வேறாக உள்ள சகுண பிரம்மத்தைப்பற்றிய சிந்தனை: பிரம்மன் பக்தனிலிருந்து வேறுபட்டவராகக் கருதப்பட்டு, எல்லையற்ற அறிவு, சக்தி, அன்பு, புகழ் மற்றும் பலவற்றின் பண்புகளைக் கொண்டவர். எப்பொழுதும் பலவழிகளில் தியானித்து வழிபட்டாலும் தன்னில் ஒன்றே ஒன்றான அந்த தெய்வீக ஜீவன், அனைவருக்கும் தன்னை அணுகும் விதத்தில் ஒரேமாதிரித்தான் அருளை வழங்குகிறார்.
- குறியீட்டு சிந்தனை: தானே பிரம்மன் என்று தியானிக்க முடியாதவர்கள் பிரம்மத்தை ஏதாவது ஒன்றை ஆலம்பனமாகக் கொண்டு தியானிக்கலாம். ஓம் என்ற சொல்லையோ, இஷ்ட உருவத்தையோ ஆலம்பனமாக கொள்ளலாம்.
- பலனில் பற்றில்லாமல் வைதீக கர்மங்களைச் செய்து கொண்டிருத்தல்: உலகப் பொருட்களின் மீதுள்ள பற்றதலால் மனதை ஆலம்பனத்தில் நிலைநிறத்தி தியானிக்க முடியாதவர்கள், வாழ்வில் தன் நிலைக்குரிய அனைத்துக் கடமைகளையும் தன்னலமின்றி செய்து, இடைவேளையில் இறைவனைத் தியானித்து, புனிதநூல்களை ஓதுவதில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். நாளடைவில் மனத்தூய்மை அடையப்பெற்று தியானப் பாதையில் நுழையத் தயாராகிவிடுவார்கள்.
மேற்கூறியவைகள் நிவிருத்தி மார்க்கம் அல்லது சம்சாரவிடுதலைப் பாதையின் வெவ்வேறு நிலைகளாகும். சாதகர்கள் ஏதாவதுவொரு நிலையிலிருந்து ஆன்மீக பாதையில் பயணிக்க ஆரம்பிக்கலாம். தன்னலமற்ற முழு மனவொருமுகத்தோடு முயற்சி செய்து இறுதி லட்சியத்தை அடைந்திட வேண்டும்.
சாந்தி பாடம்
ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தேவா:
ப4த்3ரம் பஸ்யேமக்ஷபி4ர்யஜத்ரா:
ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாங்க்3ஸஸ்தனுபி4: வ்யஶேம தேவஹிதம் யதா3யு:
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வவேதா3:
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தேவா: நாங்கள் தெய்வீகமான விஷயங்ளையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும்.
ப4த்3ரம் பஸ்யேமக்ஷபி4ர்யஜத்ரா: தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும்.
ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாங்க்3ஸஸ்தனுபி4: வ்யஸேம தேவஹிதம் யதா3யு:
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான உடலுறுப்புகளைக் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வவேதா3: அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: தார்க்ஷ்ய என்கின்ற கருடன் எங்களுக்கு நல்லது செய்யட்டும். கருடன் எந்த தடையும் இல்லாமல் ஆகாயத்தில் பறப்பது போல, நாமும் தடையின்றி ஈஸ்வரனுடைய அருளைப் பெறுவோம்.
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து - ஆசாரியார் பிரஹஸ்பதி நமக்கு நன்மை செய்யட்டும்.
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
ஓம் என்பது இறைவனின் நாமம். 'இறைவா! அமைதி நிலவட்டும்.
உபநிஷத் முகவுரை:
அதர்வண வேதத்தில் காணப்படும் 5 பிந்து உபநிஷத்துக்களில் அமிர்தபிந்து உபநிஷத்தும் ஒன்று. நாதபிந்து, பிரம்மபிந்து, தேஜோபிந்து மற்றும் தியானபிந்து ஆகியவைகள் மற்ற நான்கு உபநிஷத்துக்களாகும். ஐந்தும் கைவல்ய உபநிஷத்தைப் போலவே சிறு உபநிஷத்துக்களாகக் கருதப்படுகின்றன. சிறிய உபநிஷத்துக்கள் பெரிய உபநிஷத்துக்களின் கருப்பொருள்களை விரிவாகக் கூறுகின்றன.
ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தேவா:
ப4த்3ரம் பஸ்யேமக்ஷபி4ர்யஜத்ரா:
ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாங்க்3ஸஸ்தனுபி4: வ்யஶேம தேவஹிதம் யதா3யு:
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வவேதா3:
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தேவா: நாங்கள் தெய்வீகமான விஷயங்ளையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும்.
ப4த்3ரம் பஸ்யேமக்ஷபி4ர்யஜத்ரா: தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும்.
ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாங்க்3ஸஸ்தனுபி4: வ்யஸேம தேவஹிதம் யதா3யு:
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான உடலுறுப்புகளைக் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வவேதா3: அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: தார்க்ஷ்ய என்கின்ற கருடன் எங்களுக்கு நல்லது செய்யட்டும். கருடன் எந்த தடையும் இல்லாமல் ஆகாயத்தில் பறப்பது போல, நாமும் தடையின்றி ஈஸ்வரனுடைய அருளைப் பெறுவோம்.
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து - ஆசாரியார் பிரஹஸ்பதி நமக்கு நன்மை செய்யட்டும்.
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
ஓம் என்பது இறைவனின் நாமம். 'இறைவா! அமைதி நிலவட்டும்.
உபநிஷத் முகவுரை:
அதர்வண வேதத்தில் காணப்படும் 5 பிந்து உபநிஷத்துக்களில் அமிர்தபிந்து உபநிஷத்தும் ஒன்று. நாதபிந்து, பிரம்மபிந்து, தேஜோபிந்து மற்றும் தியானபிந்து ஆகியவைகள் மற்ற நான்கு உபநிஷத்துக்களாகும். ஐந்தும் கைவல்ய உபநிஷத்தைப் போலவே சிறு உபநிஷத்துக்களாகக் கருதப்படுகின்றன. சிறிய உபநிஷத்துக்கள் பெரிய உபநிஷத்துக்களின் கருப்பொருள்களை விரிவாகக் கூறுகின்றன.
இந்த உபநிஷத் அமிர்தபிந்து மற்றும் பிரம்மபிந்து என்ற இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அமிர்தபிந்து என்பது இந்த உபநிஷத்தில் உள்ள ஸ்லோகத்தின் ஒவ்வொரு ஸ்வரமும் அமிர்தத்தின் துளியைப் போன்றது என்று பொருட்படுத்தலாம். பிரம்மபிந்து என்பதை பிரம்மத்தை உபதேசிக்கின்ற சிறிய படைப்பு என்று பொருட்படுத்தலாம். இந்த உபநிஷத்தின் முக்கிய நோக்கம் பிரம்ம சாக்ஷாத்காரத்தை எவ்வாறு அடைவது என்பதை தெளிவாக உபதேசிப்பதாகும். பிரம்ம சாக்ஷாத்காரம் என்பது ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றே என்ற உள்ளுணர்வு அங்கீகாரத்தைக் குறிக்கிறது.
அனைத்து உபநிஷத்துக்களின் முடிவான மையக்கருத்தை இவ்வாறு சுருக்கமாக கூறலாம். ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உணர்வதால் சம்சாரத்திலிருந்து விடுதலை அடையலாம், நிலையான ஆனந்தத்தை அடையலாம். இந்த பிரம்மஞானத்தை உபநிஷத்துக்களின் உபதேசத்தை விசாரம் செய்வதன் மூலம் அடைந்திடலாம். அதைத் தொடர்ந்து ஒரு அமைதியான, நீண்ட, ஆழ்ந்த விசாரம் மற்றும் சிந்தனையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மனதின் உதவி தேவைப்படுகிறது. மனம், காட்டு யானையைப் போல கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமானது. எனவே இந்த உபநிஷத்தில் மனதைப் பற்றிய விசாரம் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தூய்மையான, தூய்மையற்ற மனம்.
ஸ்லோகம்-01
மனோ ஹி த3விவித4ம் ப்ரோக்தம் ஸுத்3த4ம் சாஸுத்3த4மேவ ச |
அஸுத்3த4ம் காமஸங்கல்பம் ஸுத்3த4ம் காமவிவர்ஜிதம் || 1 ||
மனோ ஹி த3விவித4ம் ப்ரோக்தம் மனம் இரண்டுவகையாக இருப்பதாகக் கூறப்படுகிறது
ஸுத்3த4ம் ச அஸுத்3த4ம் ஏவ ச தூய்மையானது மற்றும் தூய்மையற்றது
அஸுத்3த4ம் காமஸங்கல்பம் தூய்மையற்ற மனம் ஆசைகளுடன் கூடியது
ஸுத்3த4ம் காமவிவர்ஜிதம் தூய்மையான மனம் ஆசைகளற்றது
மனம் தூய்மையானது மற்றும் தூய்மையற்றது என்று இரண்டுவகையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தூய்மையற்ற மனம் எதையாவது அடைய வேண்டும் என்ற ஆசைக் கொண்டதாக இருக்கும். தூய்மையான மனம் எல்லா ஆசைகளும் நீங்கியதாக இருக்கும்.
இயற்கையான குணத்திலிருந்து விடுபட்ட மனம் ஆசைகளற்றதாக இருக்கும். ஆசைகளற்றது என்றால் மனம் இல்லாத இடத்தில் நாம் இருப்பது என்பதாகும். இவ்வாறு இரண்டு வகை என்ற சொல்லப்படுகின்ற மனம் உண்மையில் ஒன்றுதான். ஓன்று நாம் நம் மனதில் இருக்கிறோம், அல்லது நாம் ‘மனதில் இல்லை’ என்று நமக்கு இது புரிய வைக்கிறது.
அதாவது நாம் உள்ளுணர்வாக வாழ்கிறோம் அல்லது புத்திசாலித்தனமாக வாழ்கிறோம். அதுவே இரண்டு வகையான மனதுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தவறான எண்ணங்களே அழுக்கான மனதுக்குக் காரணம். சிந்தனையை சரி செய்வதற்கு, நமது புத்திசாலித்தனத்தை நம் மனதில் உள்ள ஒவ்வொரு சிந்தனை செயல்முறைக்கும் பயன்படுத்த வேண்டும். நம் மனதின் வழிகளை உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலம் நாம் அதைப் புரிந்துகொண்டு அதன் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.
தண்ணீரைத் தொட்டால் நனைகிறோமா, நெருப்புடன் விளையாடினால் எரிகிறோமா என்று யாரும் விவாதிப்பதில்லை. மனமும் அப்படித்தான். அமைதியின்மை அதன் இயல்பின் ஒரு பகுதியாகும். மனம்; அதன் அமைதியற்ற இயல்புடன் நம்மை மகிழ்ச்சியின் உச்சங்களுக்கோ அல்லது துக்கத்தின் பள்ளத்தாக்குகளுக்கோ நம்மை அழைத்துச் செல்கிறது.
ஆசைதான் கோபம், பேராசை, பொறாமை, ஏக்கம், ஆவேசம், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகுதல் ஆகிய எல்லா நிலைகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. அதனால்தான் இது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் தூய்மையற்ற சுமையாகக் கருதப்படுகிறது.
அறியாமையால் ஆசைகள் எழுகின்றன. ஆசை பின்னர் சங்கல்பம் அல்லது கற்பனை மூலம் தூண்டப்படுகிறது, அதாவது அந்த ஆசைகள் எவ்வளவு இனிமையானதாக இருக்கும் என்ற கற்பனையான எண்ணங்களால் மகிழ்விக்கிறது. பின்னர் அந்த ஆசைகளை நிறைவேற்ற பல்வேறு செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.
நாம் மனதிலிருந்து விடுபட்டால்தான் ஆசையற்றவர்களாக இருக்க முடியும். இந்த ஸ்லோகத்தில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படும் உண்மை இதுதான்.
ஆசை இல்லாத தூய்மையான மனம் அதற்கு நேர்மாறானது. இது பக்தி, சேவை, தொண்டு, கடவுளுக்கான ஏக்கம், தியானம் மற்றும் தெய்வீகத்திற்கு முழுமையான சரணடைதல் ஆகியவற்றின் சங்கிலியைத் தொடங்குகிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஆசையில் மூழ்கிய மனதே துக்கமானது மற்றும் தூய்மையற்றது. மேலும் ஆசையற்ற மனம் மகிழ்ச்சியாகவும் தூய்மையாகவும் இருக்கும்.
மனதை அந்தக்கரணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலவகையான மாற்றங்களுக்குட்பட்டதாகவே இருக்கின்றது. இந்த மாற்றங்களை விருத்தி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக தூய்மையற்றதாக இருக்கின்ற மனதை தர்மப்படி வாழ்வதனாலும், நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலும், மகான்களின் உபதேசங்களை படிப்பதாலும், நல்லோருடைய நட்பினாலும் மற்றும் கர்மயோகப்படி செயல்களைச் செய்வதாலும் தூய்மையாக்கிக் கொள்ளலாம். பிரம்மசாரிகள் கர்மயோகப்படி வாழ்தல், தியானம், உபாசனைகள் மூலமாக தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். மனம் போகப்பொருட்களின் மீது ஆசைக் கொண்டிருப்பதால் அழுக்கடைந்த நிலையில் இருக்கும். ஆசைகளிலிருந்த விடுதலை அடைந்து விட்டால் மனம் தூய்மை அடைந்துவிடும். சில நேரங்களில் முழுமையாக தூய்மையாகவும் இருக்காது, முழுமையாக அழுக்கடைந்தும் இருக்காது. சிலநேரங்களில் சோர்வாகவும், செயல்படாமலும் இருக்கும்.
மனமே பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணம்:
மனம் தூய்மையாக இருப்பதனால் என்ன நன்மையை அடைகிறோம், அசுத்தமாக இருப்பதனால் என்ன தீமையை அடைகிறோம். இந்த கேள்விக்கான விடையாக இரண்டாவது ஸ்லோகம் விடையளிக்கிறது.
ஸ்லோகம்-02
மன: ஏவ மனுஷ்யாணாம் காரணம் ப3ந்த4மோக்ஷயோ: |
ப3ந்தா4ய விஷயாஸக்தம் முக்த்யை நிர்விஷயம் ஸ்ம்ருதம் || 2 ||
மன: ஏவ மனுஷ்யாணாம் மனிதர்களுக்கு மனம் மட்டும்தான்
காரணம் ப3ந்த4 மோக்ஷயோ: பந்தத்திற்கும் மோட்சத்திற்கு காரணமாக இருக்கிறது.
ப3ந்தா4ய விஷயாஸக்தம் போகப்பொருட்களில், விஷயங்களில் உள்ள பற்றுதான் பந்தத்திற்கும்,
முக்த்யை நிர்விஷயம் ஸ்ம்ருதம் அவற்றிலிருந்து விடுபட்ட நிலைதான் முக்திக்கும் காரணமாக இருக்கிறது.
காரணம் ப3ந்த4 மோக்ஷயோ: பந்தத்திற்கும் மோட்சத்திற்கு காரணமாக இருக்கிறது.
ப3ந்தா4ய விஷயாஸக்தம் போகப்பொருட்களில், விஷயங்களில் உள்ள பற்றுதான் பந்தத்திற்கும்,
முக்த்யை நிர்விஷயம் ஸ்ம்ருதம் அவற்றிலிருந்து விடுபட்ட நிலைதான் முக்திக்கும் காரணமாக இருக்கிறது.
மனமே மனிதர்களின் பந்தத்திற்கும், சம்சார விடுதலைக்கும் காரணமாக இருக்கிறது. புலனுகர் போகப்பொருட்களின் மீது ஆசைக் கொள்ளும் மனம் பந்தத்திற்கும், அவைகளை நாடாத மனம் முக்;திக்கும் காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
விலங்குகள் உள்ளுணர்வால் வாழ்கின்றன. அவைகளுக்கு நல்லது கெட்டது என்று எதுவும் கிடையாது. அப்படிச் சிந்திக்கும் திறன் அவைகளிடம் இல்லை. மனிதப் பிறவியில்தான் நல்லது கெட்டது என்ற எண்ணம் மனதில் தோன்றும். மனிதர்களில் மட்டுமே ஒளி மற்றும் இருளின் பேதம் மிகவும் தெளிவாகக் தெரிகிறது. மனிதப் பிறவியில் தான் ஒருவன் தர்மமான செயல்களால் புண்ணியமும், அதர்மமான செயல்களின் மூலம் பாவங்களும் அடைய முடிகிறது.
இந்த இரண்டு நிலைகளும் மனதை நெறிபடுத்தல் மற்றும் வளர்ச்சியின் விளைவாக இருப்பதால், இரண்டு வகையான செயல்களிலிருந்து விளைகின்ற பந்தம் மற்றும் மோட்சம் நிலைகளுக்கு மனமே காரணம் என்று கூறப்படுகிறது. புண்ணியம் ஒருவனை பந்தத்திலிருந்து விடுவிக்கிறது; பாவம் ஒருவனின் பந்தத்தை கூட்டுகிறது.
பந்தம் என்பது புலன் பொருள்களுடன் இணைந்த மனதின் இறுதி நிலை. போகப்பொருட்கள் மீது ஆசைகள் நிறைந்த மனதையே ஸ்லோகம்1-ல் தூய்மையற்ற மனம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆசையில் மூழ்கிய மனம் நம்மை மேலும் மேலும் துக்கமான உலக வாழ்வின் ஆழமான குழிக்குள் அழைத்துச் செல்கிறது, அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற ஒரு வகையான சிறையாக இருக்கிறது.
மோட்ச நிலை என்பது பொருள்களின் மீது ஆசை இல்லாத மனமே ஆசையற்ற மனமாகும். மேலும் ஸ்லோகம்1-ல் இதையே தூய்மையான மனம் என்று கூறப்பட்டிருக்கிறது. தூய்மையான, ஆசைகளற்ற மனம் நம்மை ஆத்மாவை நோக்கி அழைத்துச் செல்கிறது. இது மேற்கூறிய பந்தப்பாதையின் எதிர் திசையாகும். பந்தத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே பாதை இதுதான்.
பற்றுதல் என்பது ஒரு மனப்பசையாகும், இது மனதை புலனுகர் போகப் பொருள்களில் ஒட்ட வைக்கிறது. மனதை அது விரும்பும் பொருட்களைப் பற்றிய எண்ணங்களைத் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது, இறுதியில் அந்த எண்ணம் மிகவும் வலுவடையும் வரை அதைத் திருப்திப்படுத்த அது நம்மைத் தூண்டுகிறது.
இந்த வழியில், ஆரம்பத்திலிருந்தே, இந்த அழகான உபநிஷத் நம் வாழ்வில் இரண்டு ஏற்படுகின்ற முக்கிய தாக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது:
அந்தக்கரணமே மனிதர்களின் பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணமாக இருக்கிறது. பந்தம் என்பது நான், என்னுடையது என்ற அகங்காரத்தினாலும், அதன் விளைவுகளாலும் ஏற்படுகிறது. தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்து கொள்வதே பந்த நிவிருத்தி, மோட்ச நிலையாகும். மனம் புலனுகர் போகப் பொருட்களான உணவு, மதுபானம், உடலின்பங்கள் போன்றவற்றில் ஆழ்ந்த ஆசையுடன் ஈடுபடும்போது பந்தத்தை ஏற்படுத்துகிறது. இவைகளிலிருந்து முற்றிலும் விடுபட்ட மனமே பந்தப்படாத தூய்மையானதாக இருக்கும். இந்த நிலையே மோட்ச பாதைக்கு அழைத்துச்செல்லும். அன்வய-வியதிரேக விதிப்படி தூய்மையான மனமே மோட்சத்தை அடைவதற்கு வழிவகுக்கும் என்று சான்றோர்களும் கூறுகிறார்கள்.
மனதை போகப்பொருட்களை நாடாமல் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்திருக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதாவது புலனுகர் போகப்பொருட்களை நாடாமல் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும். ஞானயோக சாதகர்களாகிய நாம், தூய்மையான மனதை அடைவதில் உண்மையில் ஆர்வமாக உள்ளோம். அதைத்தான் அடுத்த ஸ்லோகம் எடுத்துக் காட்டுகிறது.
ஸ்லோகம்-03
யதோ நிர்விஷயஸ்யாஸ்ய மனஸோ முக்திரிஷ்யதே |
அதோ நிர்விஷயம் நித்யம் மன: கார்யம் முமுக்ஷுணா || 3 ||’
யதோ நிர்விஷயஸ்ய அஸ்ய புலன்களை போகப்பொருட்களின் மீதுள்ள ஆசையிலிருந்து விடுபட்ட நிலையில்
மனஸோ முக்தி: இஷ்யதே மனம் அமைதியடைகிறது.
அதோ நிர்விஷயம் நித்யம் அதனால் எப்போதும் புலன்களின் பிடியிலிருந்து விடுபடுதல் அவசியமாகிறது.
மன: கார்யம் முமுக்ஷுணா ஆத்மாவை உணர்வதில் பற்றுள்ள சாதகன் இந்த நிலையை அடையும் பயிற்சி செய்ய வேண்டும்.
மனஸோ முக்தி: இஷ்யதே மனம் அமைதியடைகிறது.
அதோ நிர்விஷயம் நித்யம் அதனால் எப்போதும் புலன்களின் பிடியிலிருந்து விடுபடுதல் அவசியமாகிறது.
மன: கார்யம் முமுக்ஷுணா ஆத்மாவை உணர்வதில் பற்றுள்ள சாதகன் இந்த நிலையை அடையும் பயிற்சி செய்ய வேண்டும்.
சாதகர்களின் மனதைப் பயிற்றுவித்தல்:
அமிர்தபிந்து உபநிஷதம் மனதை ஆசையிலிருந்து விடுவிப்பது மிகவும் கடினமான வேலை என்று ஏற்றுக்கொள்கிறது. மனதுக்கும் அதன் ஆசைகளுக்கும் நம்மை அடிமைப்படுத்தும் தற்போதைய போக்குகளை முறியடிக்க அதிக முயற்சி தேவை. அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் நம் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அது நம்மை புலன்களின் பிடியில் இருந்து விடுவித்து, கடவுளை நோக்கிய நேரடி பாதைக்கு நம்மை தயார்படுத்தும்.
அந்த நேரடிப் பாதை என்ன?
இந்த உபநிஷத் கொஞ்சம் மிதமான அணுகுமுறையை எடுத்துக் கொள்கிறது, மேலும் ஆசையிலிருந்து வெளியே வர போராடும் ஒரு மனிதனின் பொதுவான விஷயத்தை நோக்கமாகக் கொண்டது.
நம் மனதில் எழுகின்ற ஆசைகளின் பெருக்கத்தை எதிர்க்க, ஆசை என்கின்ற மாசுபடாமல் இயன்றவரை தூய்மையாக வைத்துக் கொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதுதான் நமக்கு முன்னால் உள்ள பணி.
மனதின் நிலை உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை குணப்படுத்த வேதாந்தாவின் மந்திர மருந்து ஆசையின்மையாகும். இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நமது பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கவும் உறுதியளிக்கிறது.
போகப்பொருட்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து விடுபட்ட மனமே அமைதியை அடைகிறது. இந்த நிலையான அமைதியை அடைய விரும்புபவன் தன் மனதை புலன்களிலிருந்து விடுவிப்பதைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
நம்முடைய மனம் இயல்பாகவே வெளிவிஷயங்களை நாடி செல்லுமாறு படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் எதையாவது அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகளை வளர்த்துக் கொண்டு அதை அடைவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆசைபட்டதை அடைந்ததும் மனம் திருப்தி அடையாது. வேறொன்றை நாடி செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆசை நிறைவேறாவிட்டால் கோபம், ஆத்திரம் போன்ற தீய குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு மேலும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். மனதில் எப்பொழுதும் ஆசைகள் இருப்பதால் நம்மை பந்தத்தில்தான் வைத்திருக்கும். பந்தம் துயரத்தைத்தான் கொடுக்கும். மனநிறைவின்மையோடுத்தான் இருப்போம். இந்த உலகத்தில் எந்தவொன்றும் நமக்கு மனநிறைவைக் கொடுக்காது. இன்பம் தருகின்ற பொருட்களே துன்பத்தையும் கொடுக்கும் என்ற அறியாமையினால் நாம் இன்பம் தருவதாக நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை நாடிச் செல்கிறோம். இந்த உண்மையைப் புரிந்துக் கொண்டு போகப்பொருட்கள், சுகம் தருவதாக நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் ஆகியவற்ளை அடைய துடிக்கும் மனதை திருப்பி ஆத்ம சிந்தனையில் ஈடுபடுத்த வேண்டும். இதனால் மனம் வைராக்கியத்தை அடைந்து என்றென்றம் நிறைவுடன் இருக்கும். இந்த நிலை ஞானயோக சாதகனை மோட்சத்தை அடைவதற்கு உதவி செய்யும்.
மனநிறைவு மோட்சத்திற்கு கொண்டு செல்லும்:
மனதை நெறிபடுத்துவதால் அடைகின்ற பலனை இந்த ஸ்லோகம் கூறுகிறது.
ஸ்லோகம்-04
நிரஸ்த விஷயாஸங்கம் ஸன்னிருத்4த3ம் மனோ ஹ்ருதி3 |
யதா3SSயாத்யாத்மனோ பா4வம் ததா3 தத்பரமம் பத3ம் - || 4 ||
நிரஸ்த விஷயாஸங்கம் போகப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட்டு
ஸன்னிருத்4த3ம் மன: ஹ்ருதி3 மனம் தனது இருப்பிடமான இதயத்தில் சஞ்சலமற்று அமைதியாக இருக்கிறதோ
யதா3 ஆயாதி ஆத்மன: பா4வம் அப்போது அது ஆத்மாவை பிரதிபலிக்கும் தன்மையை அடைகிறது
ததா3 தத்பரமம் பத3ம் அதுவே உன்னதமான நிலையாகும்.
எப்பொழுது மனம் போகப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட்டு தனது இருப்பிடமான இதயத்தில் சஞ்சலமற்று அமைதியாக இருக்கிறதோ அப்போது அது ஆத்மாவை பிரதிபலிக்கும் தன்மையை அடைகிறது. அதுவே உன்னதமான நிலையாகும்.
முந்தைய ஸ்லோகத்தின் இரண்டாம் பாதியில் கற்பிக்கப்பட்டது இங்கே மீண்டும் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுகிறது. பற்றற்ற தன்மை மனதை விடுவித்து, வெளிமுகமாக இல்லாமல், உள்முகமாக இருக்க பயிற்சி அளிக்கிறது என்பதை கடந்த ஸ்லோகத்தில் கற்றுக்கொண்டோம்.
இவ்வாறு வெளிப்புறப் பொருள்களின் பிடியிலிருந்து விடுபடும் மனம் எந்தவிதமான கவனச்சிதறல்கள் இல்லாமல் தியானத்தில் ஈடுபடுவதற்கும், ஆத்மவிசாரம் செய்வதற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நிலையே அந்தர்முக சாதனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற மனதினால் அடைகின்ற பலன் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. புலன் இன்பத்தைத் தியாகம் செய்வதால் என்ன பலன்? பலன் இரண்டு நிலைகளில் வருகிறது:
- ஒருவன் ஆத்மாவாக தன்னை உணர்கிறான். இதன் மூலம், வெளிப்புற சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத நிலையை மனம் அடைகிறது. இந்த நிலை உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்தப்பட்ட சமநிலை, அமைதி, உறுதிப்பாடு மற்றும் வலிமை ஆகியவைகளை குறிக்கின்றன. உலகத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளால் இவன் இனி அலைக்கழிக்கப்படுவதில்லை.
- மேற்கூறிய மனநிலையை அடைந்ததும்; இரண்டாவது பலன் வந்தடைகிறது. அவன் தனது உண்மையான இயல்பின் துணையுடன் தனக்குள்ளேயே வாழத் தொடங்குகிறான். மனம் முழுவதுமாக அதன் இருப்பிடமான இதயத்தில் அமைதியாக, தூய்மையாக அடங்கி இருக்கும்போது, நான் பிரம்மன் என்ற உணர்வை அடைகிறது. மனதை இவ்வாறு சஞ்சலமற்று அமைதியாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதன் விளைவாக பிரம்மஞானத்தை அடைய முடிகிறது. இதைவிட அடைவதற்கு உயர்ந்தவொன்று வேறெதுவும். இந்த அறிவை அடைவதால் நம்மால் அடைய வேண்டியது எதுவுமில்லை.
இந்த நிலைப் பற்றிய கூடுதல் விவரங்களுடன் அடுத்த ஸ்லோகம் இதிலிருந்து தொடர்கிறது. .
.
ஸ்ரீகௌடபாதாச்சாரியாரின் மனோ-நிரோத விளக்கவுரை.
இது தொடர்பாக, ஸ்ரீகௌடபாதாச்சாரியாரின் மாண்டூக்ய உபநிஷத்தின்; ஒரு பகுதியான அத்வைத-ப்ரகரண விளக்கவுரையில் உள்ள ஆத்மாவின் உண்மையான இருப்பை அறிவதற்கு வழிவகுக்கும் மனப்பக்குவத்தை அடைவதற்கான செயல்முறை பற்றிய கருத்து மிகவும் உதவிகரமாக இருக்கும். உண்மையான செயல்முறையை விவரிக்கும் முன், அவர் அனுபவத்திலிருந்து பகுத்தறிவதன் மூலம், ஸ்ருதியின் உபதேசமான ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது என்று நிலைநாட்டியிருக்கிறார். இதிலிருந்து மனதுக்கு தனியே எந்த இருப்பும் கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீகௌடபாதாச்சாரியாரின் மனோ-நிரோத விளக்கவுரை.
இது தொடர்பாக, ஸ்ரீகௌடபாதாச்சாரியாரின் மாண்டூக்ய உபநிஷத்தின்; ஒரு பகுதியான அத்வைத-ப்ரகரண விளக்கவுரையில் உள்ள ஆத்மாவின் உண்மையான இருப்பை அறிவதற்கு வழிவகுக்கும் மனப்பக்குவத்தை அடைவதற்கான செயல்முறை பற்றிய கருத்து மிகவும் உதவிகரமாக இருக்கும். உண்மையான செயல்முறையை விவரிக்கும் முன், அவர் அனுபவத்திலிருந்து பகுத்தறிவதன் மூலம், ஸ்ருதியின் உபதேசமான ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது என்று நிலைநாட்டியிருக்கிறார். இதிலிருந்து மனதுக்கு தனியே எந்த இருப்பும் கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஸத்திலிருந்து இருமையின் வெளிப்பாடு:
இந்த முடிவைக் கருத்தில் கொண்டு ஆச்சாரியார் ஒரு ஸத் அல்லது பூரணமான ஒன்றிலிருந்து இரட்டை பிரபஞ்சத்தின் வெளிப்பாட்டை நிலைநாட்ட தொடர்கிறார்.
எவ்வாறு கனவில் தோன்றுகின்ற இருமை தோற்றங்களை மனமானது பொய்யாக தோற்றுவிக்கின்றதோ, அவ்வாறு விழிப்புநிலையிலும் இருமை தோற்றங்களை மனமானது பொய்யாக காட்டிக்கொண்டிருக்கின்றது. இங்கே சமஷ்டி மனதை எடுத்துக் கொள்ள வேண்டும். (காரிகை-29)
இவ்வாறு சொல்லும்போது மனம் என்றவொன்று தனியாக இருக்கிறது என்று தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உண்மையில் பிரம்மமே மனதாக காட்சியளிக்கிறது. கயிற்றில் எப்படி பாம்பு பொய்யாக தோன்றுகிறதோ, அப்படி மனம் பொய்யாக காட்சியளிக்கிறது. உண்மையில் அதற்கென்று தனியிருப்பு கிடையாது. மனம் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கிறது. பிரம்மத்தை உணர்ந்து கொண்டால் மனம் என்பது மித்யா என்று உணர்ந்துவிடுவோம்.
மனம் ஒன்றுதான் ஆனால் கனவில் பலவிதமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது. இதில் சந்தேகமில்லை. அதேப்போன்று விழிப்பு நிலையில் ஒன்றான மனமானது பலவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது, இதிலும் சந்தேகமில்லை. (காரிகை-30)
இருமை என்பது மனதைத் தவிர வேறொன்றுமில்லை:
மனம் மட்டுமே தன்னையே உலகமாகவும், உலகத்திலுள்ள அனைத்துப் படைப்புக்களாகவும் வேறுபடுத்திக் கொள்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம். அதற்கான பதிலாக காரிகை-31 இருக்கிறது.
இந்த இருமைகளான ஜகத்தும், அனைத்து படைப்புக்களும், அசைந்து கொண்டும், அசையாமலும் இருக்கின்ற அனைத்துமாகவும், மனம் இல்லாத தன்மையை அடையும் போது நம்மால் அனுபவிக்கப்படுவதில்லை, அறியப்படுவதில்லை. இந்த நிலையே சம்சாரம் நீங்கிய நிலையாகும். (காரிகை-31)
மனம் சமாதி மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கப்படவில்லை என்றாலும், அது தன்னளவுக்கு உண்மையானது மற்றும் எப்போதும் இருக்கின்ற தன்மை உடையது என்பதால் அந்த நிலைகளிலும் மனம் இருக்கிறது என்று பூர்வபக்ஷி கேள்வி கேட்கிறான். அதற்கான பதில் காரிகை-32ல் கூறப்பட்டுள்ளது.
ஆத்மாவே உண்மையானது, நிலையானது மற்றவைகள் எல்லாம் மித்யா என்ற அறிவினால் எப்போது மனமானது சங்கல்பத்தை மேற்கொள்ளாமல் இருக்கின்றதோ, அப்போது மனமற்ற நிலையை அடைகின்றது. அமைதியுடன் இருக்கின்றது. விஷயமாக எதையும் எடுத்துக் கொள்ளாத போது தன்னுடன் சம்பந்தப்படுத்தி கொள்ளாத போது மனமும் எதையும் கிரகிக்காத நிலையை அடைகின்றது. புலன்கள் விஷயங்களுடன் சம்பந்தப்பட்டாலும் மனம் சம்பந்தப்படாத நிலையில் இருக்கும்.(காரிகை-32)
அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் பொருள் என்று பிளவுபடாத ஆத்மஞானம் அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடாதது என்றும் பிரம்மத்தை அறியக்கூடிய பொருளாக கொண்ட ஆத்மஞானம் பிறப்பற்றதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது என்றும், பிறவாத பிரம்மத்தை, பிறவாத ஆத்மஞானத்தால் அடைகின்றான், என்றும் பிரம்மத்தை அடைந்தவர்கள் கூறுகிறார்கள்.(காரிகை-33)
ஒழுங்குபடுத்தப்பட்ட மனதினுடைய தன்மையை, ஆத்மஞானத்தை அடைந்த மனதினுடைய தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தில் வேறுவிதமான தன்மையுடையது மனம். ஞானநிஷ்டை அடைந்தவர்களின் மனமானது ஆழ்ந்த உறக்கத்திலிருக்கின்ற மனதிற்கு சமமானதல்ல.(காரிகை-34)
இவ்வாறு ஆத்மா மட்டுமே உண்மையானது மற்றவையனைத்தும் மித்யா என்ற விவேகம் மனதை ஆட்கொள்ளும் போது, அது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு அனைத்து சிந்தனைப் பொருட்களும் இல்லாததால் எல்லாவிதமான கற்பனைகளிலிருந்தும் விடுபடுகிறது. இந்த நிலையில் மனம் ஆத்மாவில் லயமடைகிறது. இந்தவிதமான மனம் ஞானிகளால் மட்டும்தான் அறியப்படுகிறது. இதையே வித்வத்-பிரத்லயக்ஷம் என்று கூறுவர்.
பூர்வ பக்ஷி ஆழ்ந்த உறக்கம் மற்றும் பக்குவப்படுத்தப்பட்ட நிலைகளில் மனம் அறிவை அடையும் ஆற்றல் இல்லாத நிலையில் இருப்பது ஒரே மாதிரியாக இருக்கிறது. மனம் பக்குவப்படுத்தப்பட்ட நிலையில், அதன் நடவடிக்கை ஆழ் உறக்கத்தில் உள்ளதை போலவே உணர்வுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். எனவே மனப்பக்குவம் அடைந்த நிலையில் ஞானி உணரக்கூடிய எதுவும் இல்லை.
பதில்: மனம் பக்குவமடைந்த நிலையில் உள்ள அதனுடைய நடத்தை, ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள மனதின் நடத்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
இரண்டுக்கும் இடையே எந்த வகையில் வேறுபாடு உள்ளது?
ஆழந்த உறக்கநிலையில் மனமானது அவித்யாவால் மூடப்பட்டும், வாசனைகளுடன் கூடியதாகவும் இருக்கிறது. இதுவே பல தீய விளைவுகளுக்கு வழிவகுக்கும் அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக உள்ளது. மனப்பக்குவப்பட்ட நிலையில் அவித்யா மற்றும் பல தீய விளைவுகளுக்கு வழிவகுக்கும் செயல்பாட்டின் அனைத்து விதைகளும் ஆத்மஞானத்தினால் எரிக்கப்படுகின்றன. இவ்வாறு நெறிப்படுத்தபட்ட மனநிலை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள மனநிலை காட்டிலும் வேறுபட்டிருக்கிறது.
கௌடபாதர் சுஷுப்திக்கும் சமாதிக்கும் உள்ள வேறுபாட்டை பின்வருமாறு விவரிக்கிறார்.
ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது ஒடுங்கியிருக்கிறது, அறியாமை என்ற இருளினால் மூடப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் ஒடுக்கப்பட்ட மனமானது உறங்கவில்லை. ஞானியின் இந்த மனமே பயமற்ற பிரம்மன்தான். ஞானம் என்கின்ற ஒளி வியாபித்து இருக்கின்றது. (காரிகை-35)
பிரம்மன் பிறப்பற்றது; உறக்கமற்றது; கனவுகளில்லாதது; விக்ஷேபமில்லாதது. இது நாம ரூபமுடைய ஜகத்துமல்ல. எப்பொழுதும் ஒளிவீசுகின்ற தத்துவம் அனைத்தையம் அறிந்தது, அனைத்துமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும், தனக்கு வேறாக எதுவும் இல்லாதது. ஞானநிஷ்டை அடைந்தவனுக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. (காரிகை-35)
பதஞ்சலி தன்னடைய யோக சூத்திரத்தில் ஐந்துவகையான பெரும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணமான தடைகளைப் பட்டியலிட்டு விவாதித்துள்ளார். அவைகள்,
- அவித்யா - இரண்டற்றதும், சம்சாரத்திலிருந்து விடுவிப்பதும், அபயத்தை தருவதும், ஆனந்தஸ்வரூபமானதுமான பிரம்மத்தை அறியாமல் இருக்கும் நிலை.
- அஸ்மிதா(அகங்காரம்) - மற்றவர்களை விட உங்கள் மேன்மையில் பெருமிதம் கொள்ளும் உணர்வு, தன்னுடைய சொந்த முக்கியத்துவத்தின் மிகைப்படுத்தப்பட்ட கருத்து.
- பேராசை - இன்பம் தருவதாக நினைத்துக் கொண்டிருக்கின்ற போகப் பொருட்களை அடையவேண்டும் என்கின்ற தீராத ஆசை.
- வெறுப்பு - உலகத்தைப் பற்றிய ஒருவரின் கருத்து இந்த குணத்தால் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. விருப்பு, வெறுப்புக்கள் ஒருவரின் முந்தைய அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன. இந்த விருப்பத்தேர்வுகள் தவறான முடிவை எடுப்பதற்கு வழிவகுக்கும். அது இறுதியில் பிரம்மத்தை அடைகின்ற திறனை பாதிக்கலாம்.
- அபினிவேஸம்(வாழ்வதில் விருப்பம்) - மரணபயம் மற்றும் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் உயிரோடிருக்க வேண்டும் என்ற ஆசை.
யோக சூத்திரங்களின்படி அபினிவேஸம் போன்ற தடைகளை கடக்க நான்கு நிலைகள் உள்ளன.
- உதரம் - செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலை
- விச்சின்ன - பிரிக்கப்பட்ட நிலை
- தனு - தணிந்த நிலை
- பர்சுப்த - செயலற்ற நிலை.
பூ.பக்ஷி - பிரம்மன் ஸ்ருதி அல்லது குருவால் கற்பிக்கப்படுவதற்கு முன்ப அது உணரப்படாதது என்றும், கற்பித்த பிறகு, அது உணரப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரம்மம் புலன்கள் மற்றும் உணர்தலுக்கு உட்பட்டதாக இருக்கிறது.
பதில் அப்படி இல்லை; ஏனென்றால் உணர்தல், உணராதது ஆகிய இரண்டும் பகல், இரவு போன்றது. உண்மையில் இரவும் இல்லை பகலும் இல்லை. இவையிரண்டும் வெறும் கற்பனையாகும். சூரியன் மறைவது உதிப்பது என்பதும் மாயையின் எண்ணத்தில் பிறந்தவையாகும். அதேபோல பிரம்ம விஷயத்தில் உணர்வது, உணராதது என்பதெல்லாம் உபாதியின் காரணமாக தோன்றுகின்ற கற்பனையாகும். பிரம்மம் தானே என்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
மேலும் அவித்யா அல்லது அறியாமை இயல்புடைய தமஸ்தான் பிரம்மன் நமக்கு எப்போதும் பிரகாசமாக இல்லாததற்கு காரணமாகும். பிரம்மத்தின் நிலைபாட்டில் தமஸுடன் எந்த தொடர்பும் இருக்க முடியாது. மேலும் பிரம்மம் என்பது நித்தியமான, எப்போதும் பிரகாசிக்கும் உணர்வாகும். இதே காரணத்தினால் பிரம்மன் அனைத்துமாகவும், அனைத்துமறிந்ததாகவும் இருக்கிறது.
மனத்தூய்மையை அடைந்து, அதனால் பிரம்ம நிலையை அடைந்த ஞானிக்கு எந்த செயலும் செய்யத் தேவையில்லை. நிர்குண பிரம்மத்தை அடைந்தவன் முறையான வழிபாடு செய்ய வேண்டும் நியதியில்லை. ஆத்மாவை உணராதவர் மட்டுமே சமாதி மற்றும் பிற வழிபாட்டு முறைகளை செய்து கொண்டு வரவேண்டும். இதன் மூலம் தனக்கு வெளியே இருப்பதாக இறைவனை அணுக வேண்டும். பிரம்மம் என்றும் இருப்பதாகவும், தூய்மையாகவும், உணர்வுமயமாகவும், எதையும் சாராததாக இருப்பதாலும், அந்த பிரம்மத்தை அடைந்து, ஜீவன்முக்தியடைந்த ஞானிக்கு எதுவும செய்ய வேண்டியதில்லை.
மனத்தூய்மையுடன் இருக்கும் ஞானியே பிரம்மனாக இருத்தல். ஆச்சாரியார் ஞானியின் லட்சணத்தைப் பற்றி விவரிக்கிறார்.
ஞானநிஷ்டை அடைந்த ஜீவன்முக்தன் (ஞானி) எதிலும் அபிமானமற்றவனாக இருப்பதால் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. புலன்கள், வாக்கு கரணம், அந்தக்கரணம் போன்றவைகள் இல்லாதவன். எப்பொழுதும் முழுமையான அமைதி வடிவுடையவன். எப்பொழுதும் ஒளி வீசிக் கொண்டிருப்பவன், அறிவு ஸ்வரூபமாக இருப்பவன். ஜீவனும், ஜீவனுடைய உபாதிகளும் எதில் வேற்றுமையின்றி கலந்திருக்கின்றதோ அதுவே பிரம்மநிலை. ஞானி மாற்றங்களெதுவும் இல்லாதவன், பயமற்ற நிலையில் இருப்பவன்.(காரிகை-37)
ஞானிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதுவுமில்லை. அது ஏனென்று இதில் விளக்கப்படுகிறது. நம்முடைய செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது எதையாவது அடைதல், சேர்த்துக் கொள்ளுதல், எடுத்துக்கொள்ளுதல், இரண்டாவது விலக்குதல், நீக்குதல் ஆகியவைகளாகும். இந்த இரண்டில் ஒன்றில்தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும் அடங்கி இருக்கின்றது. நம்முடைய அபிமானம் இந்திரியங்கள், அந்தக்கரணத்தில் இருக்கும்வரை நம்மை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். ஞானிக்கு இவைகளிடத்தில் உள்ள அபிமானம் நீங்கப்பெற்றவனாக இருக்கின்றான். பிரம்மனாகவே இருக்கின்றான். எனவே செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாத நிலையில் இருக்கிறான். பிரம்மனிடத்தில் எதையும் சேர்க்கத் தேவையில்லை, நீக்கவும் தேவையில்லை. எனவே பிரம்மனாகவே இருக்கும் அவன் செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாதவனாக இருக்கின்றான்.(காரிகை-38)
ஞானியை எதனோடும் சம்பந்தப்படுத்தும் சக்தி எதற்கும் கிடையாது. அவன் எங்கிருந்தாலும் எதனோடும் சம்பந்தப்படாமல் அஸங்கனாக இருப்பான். எல்லா யோகிகளும், ஞானயோக சாதகர்களும் இந்த ஞானத்தை அடைந்து நிலை பெறுவது மிகவும் கடினம். ஆத்மஞானத்தின் சம்பந்தமற்ற நிலையைக் கண்டு யோகிகள் பயப்படுகிறார்கள். பயமற்ற நிலையை தருகின்ற ஞானத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். பயமற்ற பிரம்மனிடத்தில் பயத்தை பார்க்கின்றார்கள்.(காரிகை-39)
ஞானப்பலனை அடைவதற்கு மனக்கட்டுப்பாடு மிகமிக அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் இதை அடைவதற்கு வேறுமார்க்கமும் இல்லை. மனத்தூய்மை, நுண்ணியமனம், மனவொருமுகப்பாடு இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கின்ற மனதினால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும். ஆத்ம ஞானத்தை அடைவதும், அதில் நிலைபெறுவதும் மனதினுடைய கட்டுப்பாட்டைச் சார்ந்திருக்கின்றது. இது எல்லா சாதகர்களுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது. பயமற்ற நிலை, துயரமற்ற நிலை, அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்கும் நிலை மற்றும் நிலையான மனவமைதி ஆகியவைகள் அனைத்தும் மனோநிக்ரஹத்தினால் அடையப்படுகின்ற பலன்களாகும்.(காரிகை-40)
மனோநிக்ரஹத்தை அடைய முக்கிய நிபந்தனை சொல்லப்படுகின்றது. விடாமுயற்சியினால் இதை அடைய முடியும். இந்த முயற்சியில் அடையும் பலன் இறுதியில்தான் கிடைக்கும். எனவே மனம் தளராமல் இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து பலன் அடையும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். எவ்விதம் கடலலைகள் தன்னுடைய முட்டைகளை எடுத்துச் சென்றுவிட்டதாக நினைத்த ஒருபறவை தன்னுடைய அலகால் துளித்துளியாக கடல்நீரை கொண்டுவந்து நிலத்தில் விட்டு கடல்நீரை வற்றச் செய்து முட்டைகளை எடுக்க முயற்சியில் மனம் தளராமல் இடைவிடாது செய்ததோ அதுபோல இடைவிடாத முயற்சியினால் மனக்கட்டுப்பாட்டை அடைய முடியும். (காரிகை-41)
மனதை கட்டுப்படுத்தும் முயற்சிக்கும், தியானத்திற்கும் தடையாக வருபவைகளை நீக்குவதை நாம் விடாமல் செய்துக் கொண்டிருக்க வேண்டும், யோக சாஸ்திரத்தில் நான்கு வகையான தடைகள் கூறப்பட்டிருக்கிறது. அவைகள்,
1. விக்ஷேபம்
2. லயம்
3. கஷாயம்
4. ரஸாஸ்வாதஹ
ஆகியவைகளாகும். இந்த காரிகையில் விக்ஷேபம், லயம் என்கின்ற இரண்டு தடைகளை மட்டும் கூறப்பட்டிருக்கிறது.
விக்ஷேபம்: மன சஞ்சலம் - நாம் எதை மறக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுதான் திரும்ப, திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கும். இரண்டு விதத்தில் இந்த விக்ஷேபம் வரும். அவைகள் காமக்ருதஹ, போகக்ருதஹ ஆகியவைகளாகும்.
- காமக்ருதஹ - காமத்தினால் வரும் விக்ஷேபம். ஒரு பொருளை அனுபவிப்பதற்கு முன்னாலே அதன்மீது இருக்கம் ஆசை மனதை அலைகழிக்கும்.
- போகக்ருதஹ - நாம் அனுபவித்ததையே சிந்தித்துக் கொண்டிருத்தல். வாசனா ரூபமாக இருந்து கொண்டு மனதை அலைகழிக்கும்.
இதில் விக்ஷேபம் என்ற தடையை நீக்குவதற்கான வழி சொல்லப்படுகிறது. வைராக்கியமும், ஞானமும் வழிகளாக சொல்லப்படுகின்றது. உலகத்திலுள்ள பொருட்களின் மீதுள்ள பற்று மற்றவர்களிடமிருந்து எதையாவது எதிர்ப்பார்த்தல் ஆகியவைகளிலிருந்து வைராக்கியம் அடைய வேண்டும். இதை எப்படி அடைய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
உலகத்திலுள்ள அனைத்தும் துயரத்தைக் கொடுக்கக்கூடியது என்பதை திரும்ப, திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும். இன்று சுகத்தைக் கொடுக்கக்கூடிய பொருளே வேறொரு காலத்தில் துக்கத்தைக் கொடுக்கலாம். எனவே எந்த பொருளுக்கும் நிரந்தரமாக சுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது என்பதை தொpந்துக் கொள்ளலாம்.
இதேப்போன்று பொருட்களின் நிலையற்ற தன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். சுகத்தைக்கொடுக்கின்ற பொருட்களுக்கு அடிமையாகி விடுவோம். நம்முடைய சுதந்திரத்தை பறித்துவிடும். எவ்வளவு அனுபவிக்கின்றோமோ அதேயளவு துயரத்தையும் அனுபவிக்க நேரிடும். ஆசைப்படுகின்ற விஷயத்திலிருந்தும், அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும், ஆசையினால் தூண்டப்பட்டு அனுபவிக்க நினைக்கும் விஷயத்திலிருந்தும் நம்மை நீக்கி கொள்ள வேண்டும். எந்தப் பொருள் மீது நமக்கு பற்றில்லையோ அதிலிருந்து நமக்கு எந்த துயரமும் வராது. வைராக்கியத்தை அடைந்தாலும் மனது விக்ஷேபத்தை அடையலாம். இதை நீக்குவதற்கு ஞான அப்யாஸத்தினால் பார்க்கும் எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம், பிரம்ம ஸ்பரூபம் என்று நினைத்துப் பழக வேண்டும். இதனால் பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை உண்மையானது என்று பார்க்கமாட்டோம்.(காரிகை-43)
உறக்கம்:
மனம் உறக்கத்தை நாடிச் செல்லும் போது அதை தடுக்க வேண்டும். மேலும் போதிய உறக்கம் இல்லாத நிலையிலும், அதிக அளவு சாப்பிட்டுவிட்டும், உண்ட உணவு செரிக்காத நிலையிலும், அதிகமாக உழைத்துவிட்ட பிறகும் மற்றும் விருப்பமில்லாமலும் தியானத்தை மேற்கொள்ளக்கூடாது.
மனமானது வாஸனா ரூபமாக இருக்கும் ராக-துவேஷத்துடன் சம்பந்தப்பட்டு ஒருவிதமான மந்த நிலைக்கு வந்திருக்கும்போது விக்ஷபமும், லயமும் இருக்காது ஆனால் எதையும் செய்ய விருப்பமில்லாமல் மந்தமாக இருக்கும். எதனால் மனம் இப்படி இருக்கிறது என்றும் நம்மால் அறிய முடியாது. இந்த நிலையையே கஷாயம் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையையே சமாதி, சரியான தியானம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் இந்த நிலையில் நாம் எதையும் செய்யாமல் மந்தமாக இருப்பதால் இவ்வாறு நினைக்க தோன்றும்.
இந்த நிலையிலிருந்து வெளிவர முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனமானது அதுவாக வெளிவரும் வரை பொறுமையாக இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும். இந்த தடைகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியடைந்தால் அந்த நிலையில் உறுதியாக இருக்கும்வரை வைத்து பழக வேண்டும்.(காரிகை-44)
ரஸா ஆஸ்வாதஹ:
நான்காவது தடையான ரஸா ஆஸ்வாதஹ ( சுகத்தை அனுபவித்தல்). தியானத்தில் கிடைக்கும் சுகத்தையே அனுபவிப்பதையே தடையாக கூறப்படுகின்றது. இந்த தடையை மேற்கூறிய தடைகளிலிருந்தும் விடுபட்டவனால்தான் அனுபவிக்க நேரிடும். தியானத்தின் போது வருகின்ற தடைகளையெல்லாம் நீக்கிய ஒருவனுக்கு நான் பிரம்மன் என்ற அறிவோடு அமைதியாக இருப்பான். இந்த நிலையில் மனம் ஒருமுகப்பட்டு இருக்கும். இதுவே மனதிற்கு அமைதியை, சுகத்தை, ஆனந்தத்தை கொடுக்கும். இந்த சுகத்தையே ரஸம் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதை மனது அனுபவிக்க ஆரம்பித்து விட்டால் அதுவே தியானத்திற்கு தடையாக இருக்கும.
தியான நேரத்தில் வரும் சுகத்தை அனுபவிக்கக்கூடாது. விவேகத்தினால், அறிவின் துணைக்கொண்டு இந்த சுகமும் நிலையற்றது, தற்காலிகமானது என்ற அறிவுடன் அந்த சுகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். அமைதியை அடைந்து அசைவற்றிருக்கும் மனமானது வெளியே சென்றால், சஞ்சலமடைந்தால் விடாமுயற்சியுடன், சரியான முயற்சியுடன் மீண்டும் ஒருமுகப்படுத்த வேண்டும். (காரிகை-45)
இதில் மனதில் அமைதியான ஸ்வரூபம் சொல்லப்படுகின்றது. எப்பொழுது மனமானது உறங்கவில்லையோ, லயம் என்ற தடையற்ற நிலையில் இருக்கும்போது, கஷாய தடையும் நீங்கி இருக்கும் நிலையில் எந்தவித சஞ்சலமில்லாமல் இருக்கும் நிலையில், அமைதியான சுகத்தையும் அனுபவிக்காத நிலையில் இருக்கும்போது அசைவற்று இருக்கின்ற மனம், ( தீபத்தின் சுடர் காற்றில்லாத இடத்தில் எவ்வாறு அசைவற்று இருக்குமோ அதுபோல இருக்கும் மனன ;) எந்த விஷயத்தோடும் சம்பந்தப்படாமல் இருக்கும். அப்பொழுது அந்த மனமானது பிரம்ம ரூபமாக இருக்கின்றது.(காரிகை-46)
தன்னிடத்திலே இருத்தல் என்ற நிலையில் அனுபவிக்கும் சுகமே மேலானது. இந்த நிலையானது அமைதியானது, துயரமற்றது, அனைத்து துயரங்களும் சென்றுவிட்ட நிலையாகும். இதுவே மோட்ச நிலையாகும். இந்த சுகத்தை வாயால் சொல்ல முடியாது. அதை அனுபவிப்பவர்களால் தான் உணர முடியும். பிறவாத பிரம்ம சுகமானது இந்த நிலை. பிறப்பற்றதும், அறியத்தக்கதுமான பரம்பொருளுடன் வேறுபடாத நிலை. அறிவுமாகவும், அனைத்துமாகவும் உள்ள பரம்பொருளாகவே இருக்கும் நிலை என்று பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் விவரிக்கின்றார்கள். (காரிகை-47)
இத்துடன் ஸ்ரீகௌடபாதாச்சாரியாரின் மனோ-நிரோத விசாரம் முடிவடைகிறது. இனி உபநிஷத் உபதேசம் தொடர்கிறது.
ஸ்லோகம்-05
தாவதே3வ நிரோத்3த4வ்யம் யாவத் ஹ்ருதி3 க3தம் க்ஷயம் |
ஏதஜ்ஞானம் ச த்4யானம் ச ஸேஷோ நியாயஸ்ச விஸ்தர: || 5 ||
யாவத் ஹ்ருதி3 க3தம் க்ஷயம் எதுவரை மனம் இதயத்தில் அமைதியாக இருக்கிறதோ
தாவதே3வ நிரோத்3த4வ்யம் அதுவரை மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
ஏதத்3 ஞானம் ச த்4யானம் ச இதுவே அறிவு, இதுவே தியானம்
ஸேஷ: நியாய: ச விஸ்தர: மற்ற அனைத்தும் வெறும் தர்க்கம், வார்த்தைகளின் விளையாட்டு.
மனம் தனது இருப்பிடமான இதயத்தில் அமைதியாக இருக்கும்வரைதான் மனதைக் கட்டுப்படுத்துதல், நெறிபடுத்துதல், பக்குவப்படுத்துதல் ஆகியவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இதுவே தியானத்தின் பலனான ஞானத்தையும், முக்தியை அடையவும் ஏற்ற மனநிலையாகும். மற்றவைகளெல்லாம் மிகவும் தர்க்கரீதியான மற்றும் வாய்மொழியான விளக்கங்களாகும்.
மனதின் இந்த நிலைதான் ஆத்ம தியானம் செய்வதற்கேற்ற நிலையாகும். கவனச்சிதறல்கள் இல்லாமல் மனம் ஒருமுகத்தோடு இந்த தியானத்தை செய்ய முடியும். அதனால் அடைந்த பிரம்மஞானத்தில் நிலைபெறும் நிலையை அடைந்திடுவோம். இந்த மனநிலையை அடையாமல் தொடர்ந்து சாஸ்திரங்களைப் படிப்பவன் நல்ல புலமையைப் பெறலாம். ஆனால் அடைய நினைக்கும் இறுதி லட்சியமான மோட்சத்தை அடைய முடியாது. எனவே புத்திசாலி மனிதன் மிதமான அளவு புத்தகத்திலிருந்து கற்றலில் திருப்தி அடைய வேண்டும். மனதின் கட்டுப்பாடு மற்றும் அதன் செயல்முறை பற்றிய அறிவைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் உண்மையான மகிழ்ச்சிக் கிடையாது. மேலும் தொண்டு, வழிபாடு, துறவு, சந்நியாசம், புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை, வேதம் கற்றல் இவையனைத்தும் மனவமைதி இல்லாத மனிதனுக்கு பயனற்றவை. எனவே எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் மனக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். மனதை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவர் தனது எல்லா குறிக்கோள்களையும் இங்கேயும், மறுமையிலும் அடைய முடியும். அது இல்லாமல் மனிதனின் இறுதி லட்சியமாக மோட்சத்தை அடையவே முடியாது.
முந்தைய ஸ்லோகத்தின் அறிவுரையை சுருக்கமாக நினைவு கூர்ந்தால், மனதிற்கு உள்நோக்கித் திரும்புவதற்கும், தன்னால் முடிந்தவரை தன் கவனத்தை தன் மீது செலுத்துவதற்குமான சாதனம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
இந்த நடைமுறையில், நாம் உடனடியாக வெற்றி பெற முடியாது. பயிற்சி முழுமை பெற அதிக நேரமாகலாம். இந்த முயற்சியில் ஈடுபடும்போது மனதை வெளிப்புறமாக ஓடவிடாமல் கட்டுப்படுத்தும் சுய ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம்.
எண்ணங்களின் தொல்லை குறைய குறைய படிப்படியாக ஆத்மாவில் கவனம் செலுத்தும் காலம் அதிகரிக்கிறது. இறுதியில் மனம் இதய மையத்தில் நிலைபெறுகின்ற நேரம் வருகிறது. இதைத்தான் நாம் அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எல்லா எண்ணங்களும் மறைந்து, ஒருவன் தன்னில் இடையூறின்றி நிலைத்திருக்கக்கூடிய தருணம் அது. இந்த கட்டத்தில்தான், முயற்சி முழுமையாக பலனளிக்கும். இந்த கட்டத்தில் ஆத்மாவில் நிலைத்திருப்பது தடையற்றது. எனவே மனதைக் கட்டுப்படுத்த முயற்சி தேவையில்லை. முழு செயல்முறையும் சிரமமின்றி மாறும். இலக்கு நெருங்கி வருவதை இது உணர்த்துகிறது. மனம் தன்னை மகிழ்விப்பதற்கு ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்துள்ளது.
ஏற்கனவே மன அமைதியை அடைந்தவர்கள், இந்த செயல்முறையை அதிகமாக வாய்மொழியாக மற்றவர்களிடம் பேசுவதில் கவனமாக இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இந்த செயல்முறையை பற்றி மீது அதிக விவாதம் செய்வதன் மூலம் ஒருவர் எளிதில் தான் செல்கின்ற பாதையில் முன்னேற முடியாமல் சிக்கிக் கொள்ளலாம்.
மனக்கட்டுப்பாட்டின் மூலம் உயர்ந்த லட்சியத்தை அடையலாம். மனதை முழுமையாக கட்டுப்படுத்தினால், மனிதனின் உன்னதமான லட்சியம் எப்படி அடையப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஸ்லோகம்-06
நைவ சிந்த்யம் ந சாசிந்த்யம் ந சிந்த்யம் சிந்த்யமேவ தத் |
பக்ஷபாதவினிர்முக்தம் ப்3ரஹ்ம ஸம்பத்3யதே ததா3 ’|| 6 ||
ந ஏவ சிந்த்யம் ந ச அசிந்த்யம் சாதகமாக நினைக்கக்கூடாது அல்லது வெறுப்புடன் தவிர்க்கப்படக்கூடாது.
ந சிந்த்யம் சிந்த்யமேவ தத் ஒரு பொருளாக நினைக்காமல், யதார்த்தமாக சிந்திக்க வேண்டும்.
பக்ஷபாதவினிர்முக்தம் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாத இத்தகைய
சிந்தனை,
ப்3ரஹ்ம ஸம்பத்3யதே ததா3 ஒருவரை சரியான நேரத்தில் பிரம்மத்தை அடைய
வழிநடத்துகிறது.
சிந்தியம் என்ற சொல் ஸ்லோகத்தின் முதல் பாதியில் நான்கு முறை வருகிறது.
ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு அர்த்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது!
சிந்தியம் 1: சாதகமான விஷயங்களைச் சிந்தித்தல்.
சிந்தியம் 2: சாதகமற்ற விஷயங்களைச் சிந்தித்தல்.
சிந்தியம் 3: ஒரு பொருளாகச் சிந்திப்பது
சிந்தியம் 4: ஒரு பொருளாக நினைக்காமல் இருப்பது, அதாவது தன்னைப் பற்றிய தூய சிந்தனை.
மனதை, கவனமாக ஆராயும் பார்க்கும்போது, எந்த நேரத்திலும் அது எண்ணங்களின் தொகுதியாகக் காணப்படுவது தெரிகிறது. மனதைத் தூண்டும் வழக்கமான சிந்தனை முறைகளில் கவனம் செலுத்தக்கூடாது. வழக்கமான சிந்தனையில், விருப்பு வெறுப்புகள், தனக்குச் சாதகமான அல்லது பாதகமான விஷயங்களால் மனம் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. அது எதை விரும்புகிறது அல்லது எதைத் தவிர்க்க விரும்புகிறது என்பதைப் பற்றி சிந்திக்கிறது. இந்த இரண்டு சிந்தனை முறைகளும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நாம் சிந்தனையிலிருந்து முற்றிலும் விலகி நம் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
சிந்தனை எப்போதும் ஒரு பொருளுடன் தொடர்புடையது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எல்லாவற்றையும் ஒரு பொருளாக நினைக்கிறோம். தியானம் என்ற செயல் ஒரு சிந்தனை செயல்முறை அல்ல, அது எல்லா எண்ணங்களிலிருந்தும் விடுபட்ட நிலை! எனவே, தியானம் என்பது சிந்தனை செய்வதல்ல, சிந்தனையை விட்டுவிட்டு, எண்ணங்களின் சாட்சியாக இருப்பதாகும்.
மேலே உள்ள ஸ்லோகம் இந்த செயல்முறையைதான் விருப்பங்கள் மற்றும் வெறுப்புகளின் செல்வாக்கு அல்லது வெறுமனே பாரபட்சம் என்று விவரிக்கிறது. பாரபட்சம் நம் நினைவகத்தில் சேமிக்கப்பட்டு, செயல்;பாட்டிற்குள் நுழையும் போது, அது கணிக்க முடியாத மாற்றங்களை அமைக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாக நமது எண்ணங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடிய சிந்தனை சூழலாகும். பாரபட்சம் என்பது ஆழ்ந்த ஈகோ அடிப்படையிலானது. இது கணிக்க முடியாத இயல்புடையது. மனதில் உள்ள எண்ணங்கள் எந்த வழியில் மாறப் போகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே மகான்கள் நம்மை அனைத்து பாரபட்சங்களிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
மாறும் சிந்தனைச் சூழலை நிலையான சிந்தனைச் சூழலாக மாற்ற வேண்டும். மனதின் நிலைத்தன்மை என்பது தன்னைப் பற்றிய சரியான சிந்தனையைச் செய்யக்கூடிய முதல் கட்டமாகும், இது இறுதியில் பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கிறது.
இப்போது அடைந்திருக்கும் இந்த மிக உயர்ந்த நிலையை மனதிற்கு ஏற்ற ஒரு வெளிப்புற விஷயமாக நினைக்க முடியாது. அது விரும்பத்தகாத வெளிப்புற பொருளாகவும், சிந்தனையில் தவிர்க்கப்பட வேண்டியதில்லை. அதை எந்த வார்த்தைகளாலும் விளக்க முடியாது; மேலும் இந்த சம்சாரத்தில் மூழ்கியிருக்கும் போது, யாரும் அதை நினைக்க முடியாது. அழியாத உணர்வுமயம் என்று மட்டுமே நினைக்க முடியும். எந்தவொரு புலனின்பத்தை அனுபவித்தைப் போல அதை உணர முடியாது. ஆயினும்கூட, இது நித்தியமான நிகரற்ற சுய-ஒளிமயமான பேரின்பத்தைத் தவிர வேறு எதுவுமில்லை, இது சிந்திக்கத் தகுந்தது. இது உண்மைப்பொருள், அறிவுமயமானது மற்றும் எல்லையற்ற பேரின்பம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. நிரோத நிலையில் மனம் அனைத்து செயல்களிலிருந்தும் விடுபடும்போது, அது பிரம்மத்தை உணர்கிறது, பிரம்மானந்தத்தை பிரதிபலிக்கும் நிலையை அடைந்துவிடுகிறது. எல்லா உயிரினங்களிலும் ஒரே மாதிரியாகிறது. நட்பு அல்லது பகையால் ஏற்படும் அனைத்து ஆசைகளிலிருந்தும் மனம் விடுபடும்போது, மனிதன் தாமதமின்றி பிரம்மனாகிறான்.
எப்பொழுதும் எதையாவது தொடர்ந்து சிந்திக்க வேண்டும், மேலும் எதையாவது தொடர்ந்து சிந்திக்காமல் தவிர்க்க வேண்டும் என்ற நிலையில் மனம் எப்படி சிந்திக்க முடியாத நிலையை அடைய முடியும்?
சிந்திக்க முடியாததை நினைக்க வேண்டியதில்லை. அல்லது சிந்திக்கக்கூடியவை சிந்தனையில் தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல. பின்னர் அனைத்து ஒருதலைப்பட்சத்திலிருந்தும் விடுபட்டால் அதுவே பிரம்ம நிலையாகிறது.
யதார்த்தம் சிந்தனைக்கு எட்டாதது. சிந்திக்க எதுவும் இல்லை, எதையும் மறக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், புலன்களின் வெளிப்புறப் பொருட்களுக்கு உண்மையான இருப்பு இல்லை என்று மனம் மட்டுமே நினைக்கும். உண்மையான சிந்தனையிலிருந்தும், உண்மையற்றதை மறப்பதிலிருந்தும், ஒருதலைப்பட்சத்தில் இருந்து விடுபடும்போதும் மனம் பிரம்மமாகிறது.
பிரணவத்தின் மூலம் மனதைக் கட்டுப்படுத்துதல்:
ஸ்ருதி எந்தெந்தக் கட்டுப்பாட்டை செயல்படுத்த வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஸ்லோகம்-07
ஸ்வரேண ஸந்த4யேத் யோக3ம் அஸ்வரம் பா4வயேத்பரம் |
அஸ்வரேணானுபா4வேன பா4வோ வாளுபா4வ இஷ்யதே || 7 ||
ஸ்வரேண ஸந்த4யேத் யோக3ம் ஓம் என்ற சப்தத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்
அஸ்வரம் பா4வயேத் பரம் பின்னர் அந்த சப்தத்திற்கு அப்பாற்பட்ட அசப்தத்தை தியானிக்க வேண்டும்.
அஸ்வரேண அனுபா4வேன இவ்வாறு அசப்தத்தை தியானிப்பதன் மூலம்
பா4வ: வா அபா4வ இஷ்யதே எது உண்மை மற்றும் எது உண்மையற்றது என்பது தெரிய வரும்
மனதில் இருந்து வெளியிலுள்ள பொருட்களைப் பற்றிய எண்ணத்தை அகற்றுவதில் நாம் வெற்றி பெற்றாலும், சிந்தனையின் உட்புற அம்சத்தை அகற்றுவதில் பெரும் சிக்கல் உள்ளது. முந்தைய நிலையில், எதிரி என்பது நமக்கு வெளியே நிற்கின்ற பொருட்கள். அதனால் அதை அகற்றுவது கடினம் அல்ல. பிந்தைய நிலையில், எதிரி நமக்குள் ஈகோவாக இருக்கிறது.
யாருக்கும், தங்களின் ஈகோவை நீக்குவதுதான் மிகக் கடினமான செயல்களில் ஒன்றாகும். பார்ப்பதற்கு இது எளிமையானதாகத் தெரிந்தாலும்,; ஈகோவை நீக்குவது நடைமுறையில் நம்பமுடியாத அளவிற்கு கடினம். இந்த உலகில் ஈகோ இல்லாமல் இருக்கின்ற மகான்கள் மிக மிகக் குறைவு என்பதை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்.
கடவுளை தேடுவதில் தீவிரமாகும்போது, நாம் நமது ஈகோவை நேருக்கு நேர் சந்திக்கும் நிலைக்கு வருகிறோம், அங்கு “அஹம் விருத்தி” அல்லது நான், என்னுடையது என்ற உணர்வை மாற்றுவதற்கான சிக்கலைச் சமாளிக்க வேண்டும்.
‘அஹம் விருத்தி’ என்பதற்குப் பதிலாக 'பிரம்மகார விருத்தி”, அதாவது பிரம்மனின் எண்ணம் என்பது நேரடியான வழியாக இருப்பினும், நாம் அதை முயற்சி செய்வதற்கு முன் ஒரு இடைநிலைப்படி அவசியமாகிறது. அதற்கு ஓம்கார உபாசனை என்று பெயர்.
ஓம்கார உபாசனை என்பது ஓம் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறுவது, அதை உரக்கச் செய்வதன் மூலம் ஒலியில் மனம் கவனம் செலுத்துகிறது. மனதை அமைதிப்படுத்த உபநிஷத்துக்களில் பரிந்துரைக்கப்பட்ட மிகச் சிறந்த நுட்பம் இதுவாகும். இது புறநிலை சிந்தனையை மட்டுமல்ல, “நான்” என்ற அகநிலை சிந்தனையையும் நீக்குகிறது.
ஓம் என்ற பிரணவ சப்தத்தில் கவனம் செலுத்தி தியானிக்க வேண்டும். பிறகு ஓம் என்ற சப்தத்தில் கவனம் செலுத்தாமல் அசப்தத்தை தியானிக்க வேண்டும். இறுதியாக ஓம் என்ற தியானத்தின் பிந்தைய வடிவத்தை உணர்ந்து கொள்ளும் போது இல்லாதது இருப்பது போல உணரப்படுகிறது.
ஓம் என்பது பிரம்மனின் ஒலிக் குறியீடாகும். இந்த புரிதலுடன் மீண்டும் மீண்டும் செய்யும்போது, அது மிகவும் திறம்பட செயல்படுகிறது. ஓம் திரும்பத் திரும்பச் சொல்வது நம்மை ஒலியிலிருந்து ஒலியின் துணைக்கு அழைத்துச் செல்கிறது, அதாவது அமைதிக்கு அழைத்துச் செல்கிறது. மௌனம் ஒலிக்கு எதிரானது அல்ல, அது மிகவும் ஆதரவானது. அனைத்து ஒலிகளும் மௌனத்தில் எழுகின்றன. ஒலிகள் நீக்கப்படும்போது, நமக்கு அமைதியே மிஞ்சும். இந்த உறவு பிரம்மத்தினுடனான நமது சொந்த உறவைக் குறிக்கிறது.
ஒலிக்கும் மௌனத்துக்கும் உள்ள தொடர்பு புரிய ஆரம்பிக்கிறது. இது ஒலி உணர்வுக்கு மட்டுமே பொருந்தும். விண்வெளியில் ஒலிகள் எழுகின்றன. ஒலிகள் நீக்கப்பட்டால், நமக்கு விண்வெளி மட்டுமே இருக்கும். மற்ற புலன்களையும் அவ்வாறே பார்க்க முடியும். உதாரணமாக, பார்வையின் உணர்வை ஆராயலாம்.
எல்லாப் பார்வைக்கும் ஒளி தேவை. வெளிச்சம் நீக்கப்படும்போது நமக்கு இருள்தான் மிஞ்சுகிறது. சுவையைப் பார்க்கும்போது இதேபோன்ற சூழ்நிலையை நாம் காண்கிறோம். எல்லா சுவைகளுக்கும் நீரின் ஊடகம் தேவைப்படுகிறது, ஆனால் தண்ணீரே சுவையற்றது; அது சுவையை நாவிற்கு மட்டுமே கொண்டு செல்கிறது. இந்த வழியில், புலன்களின் பொருள்களிலிருந்து எவ்வாறு விலகிச் செல்வது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
இப்போது, அகங்காரத்தின் உட்பொருளை அகற்றுவதற்கு மேலே உள்ள விதியைப் பயன்படுத்துவோம். நாம் தியானத்திற்கு அமர்ந்திருக்கும்போது, ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பது இதை அடைய எளிதான வழியாகும். ஓம்கார உபாசனை அகங்கார உலகத்திற்கும் இறுதி இலக்கான பிரம்மத்திற்குமிடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. ஓம் உபாசனாவின் முன்னேற்றமானது வெளியே மற்றும் உள்ளே உள்ள அனைத்துப் பொருட்களும் அகற்றப்படும்போது மனம் அமைதியடைகிறது.
ஸ்ருதி மற்றும் ஆச்சாரியரின் அறிவுறுத்தல்படி ஓம் என்ற பிரணவத்தை தியானிப்பதன் மூலம், மனக்கட்டுப்பாட்டை அடைய வேண்டும். இந்த மனநிலை “நான் பிரம்மன்” என்ற அறிவில் உச்சத்தை அடைய உதவிபுரிகின்ற சாதகமான நிலையாகும். பிரணவத்தில் உறுதியாக மனம் நிலைநிறுத்தப்பட்டால், பிறகு அந்த ஒலிக்கு அப்பாற்பட்ட பிரணவத்தை தியானிக்க வேண்டும், அதாவது, ஒலியின் உதவியின்றி வெறும் அசப்தத்தை தியானிக்க வேண்டும். ஒலியின் உதவியின்றி செய்கின்ற தியானம் 'நான் பிரம்மன்' என்ற உள்ளுணர்வின் வடிவில் உச்சநிலையை அடையும் போது, அவித்யா மற்றும் அதன் அனைத்து விளைவுகளும் இல்லாத நிலையில், அனைத்து வரம்புகளிலிருந்தும் விடுபட்ட பிரம்மத்தின் சாராம்சம் காணப்படுகிறது. பிரம்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பூரணமாக உணர்ந்து நானே பிரம்மன் என்ற ஞானத்தை அடைவோம்.
கட்டுப்படுத்தப்பட்ட மனநிலையே பிரம்மநிலை:
மனம் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அது சூன்யமாக மாற்றப்படுவதில்லை. மனத்தால் கருதப்படும் பொருளின் குறிப்பிட்ட வடிவமே அதை பிரம்மனிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆனால், மனம் வரையறுக்கப்படாத ஆத்ம சிந்தனையில் ஈடுபடும் போது, அனைத்து வடிவங்களிலிருந்தும் விலகிய உருவமற்ற தூய பிரம்மத்தின் இருப்பு வெளிப்படுகிறது. ஒரு பொருளின் உண்மையான இயல்பு அது புலன்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் இல்லை. அதன் குறிப்பிட்ட வடிவங்கள் அனைத்தும் மித்யாவாகும் போது மனதில் வெளிப்படுவது பிரம்மமேயன்றி வேறில்லை. அதன்படி, ஸ்ருதி இந்த நிலையை இவ்வாறு விவரிக்கிறது:
ஸ்லோகம்-08 - பிரம்மனை அடையாளம் காணும் பண்புகள்
ததே3வ நிஷ்கலம் ப்3ரஹ்ம நிர்விகல்பம் நிரஞ்ஜனம் |
தத்3 ப்3ரஹ்மாஹமிதி ஞாத்வா ப்3ரஹ்ம ஸம்பத்3யதே த்4ருவம் || 8 ||
நிர்விகல்பம் நிரஞ்ஜனம் வேறுபாடுகள் அற்றது, கறைகளற்றது
ததே3வ நிஷ்கலம் ப்3ரஹ்ம அதுவே பாகங்கள் இல்லாத பிரம்மம்
தத்3 ப்3ரஹ்ம அஹம் இதி ஞாத்வா அந்த பிரம்மன் நானே என்று தெரிந்துகொண்டால்
ப்3ரஹ்ம ஸம்பத்3யதே த்4ருவம் அவன் நித்தியமான பிரம்மத்தை அடைகிறான்.
நிஷ்கலம் - உறுப்புகளற்றது.
நிர்விகல்பம் - வேறுபாடுகளற்றது.
நிரஞ்சனம் - கறைகளற்றது.
பிரம்மகார விருத்தியைப் பயன்படுத்தி நாம் விசாரம் செய்யும்போது, உண்மையான பிரம்மமானது மூன்று பண்புகளால் அடையாளம் காணப்படுகிறது. இவைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தேடுபவரின் பணி, அவரது மனதில் எழும் எண்ணங்களை வேறுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களாக இந்த மூன்று அளவுகோல்களைப் பயன்படுத்தி, பொய்யிலிருந்து உண்மைக்கு தனது அடையாளத்தை மாற்றுவதாகும். மனதில் எப்போதும் ஒரேயொரு பொருள்தான் இருக்க வேண்டும். மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி முற்றிலும் இல்லாத எண்ணங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் கடினம்.
எண்ணங்களில் மூன்று போக்குகள்:
மனதின் இயல்பானது எந்தவொன்றையும் பல பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியாக பார்த்து அறிவையடைகின்ற போக்காகும். புத்தி இயல்பிலேயே எதையும் பகுத்தறிகின்ற தன்மையுடையது. இது பகுப்பாய்வு செய்வதன் மூலம்தான்; ஒன்றிலிருந்து வேறொன்றிற்கு முன்னோக்கி செல்கிறது. இவ்வாறு பொருட்களை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம்தான் மனம் அவற்றைப் பற்றிய அறிவைப் பெறுகிறது.
பல்வேறு விஷயங்களுக்கிடையில் வேறுபாடுகளைக் காணும் உள்ளமைந்த போக்கு நம் மனதிலும் உள்ளது. ஒன்று மற்றொன்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிய விரும்புகிறது. அதன்பிறகு, அவற்றின் வேறுபாடுகள் வரையறுக்கப்படும் வகையில் விஷயங்களைப் பெயரிடுகிறது. இது இந்த வேறுபாடுகளுக்கு உண்மைக் தன்மையை அளிக்கிறது..
தியானத்தின் போது ஒரு சாதகர் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று, ஆத்மாவை பொருட்படுத்தும் போக்காகும். ஆத்மாவில் கவனம் செலுத்த மனம் முயற்சி செய்யும்போது, ஆத்மாவை உணரும் பொருளாக கற்பனை செய்வது முதல் நிலையாகும்.
இந்த ஸ்லாகம் ஆத்மாவை அடைய ஆசைப்படுபவருக்கு வழிகாட்டுகிறது. மேற்கூறிய போக்கை தவிர்க்க. ஆத்மா அனைத்து வேறுபாடுகளிலிருந்தும் விடுபட்டது மற்றும் பாகங்கள் இல்லாதது என்பதை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.
உபநிஷத்துக்கள் நம் மனதின் இந்த போக்கை நமக்கு உணர்த்துவதற்காக சிறப்பாக உபதேசிக்கின்றன. இந்த ஸ்லோகங்களில், ஆத்மா என்பது நமது இயல்பான உணர்வுக்கு முரணாகத் தோன்றும் சொற்களால் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆத்மாவானது ”பெரியதை விட பெரியது” மற்றும் ”சிறியதை விட சிறியது” என்று கூறியிருக்கிறது.
இன்னுமொரு போக்கு என்னவென்றால், ஆத்மாவைக் கறைபடிந்ததாகக் கருதுவது, உண்மையில் அகங்காரத்திற்குச் சொந்தமானதெல்லாம் ஆத்மாவுக்குச் சொந்தமானதாகத் தோன்றும் சில குணங்கள் உள்ளன. உபநிஷத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விளக்கங்கள் மற்றும் உருவகங்களை தியானிப்பதன் மூலம் இந்த தவறான எண்ணங்கள் அனைத்தையும் போக்கலாம். உதாரணமாக, ஆத்மா ஆகாசத்துடன் ஒப்பிடப்படுகிறது. காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய நான்கு பூதங்களின் இருப்பு அல்லது இல்லாமையால் ஆகாசம் கறையற்றதாகவும், பாதிக்கப்படாமலும் உள்ளது.
இந்த ஸ்லோகத்திலுள்ள கடைசி இரண்டு வரிகளும் சாதகன் தனது தியானப் பயிற்சியில் அடைய வேண்டிய இலக்கை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. 'நான் பிரம்மன்” என்றவொரு எண்ணத்தின் மூலம் இந்த முயற்சிகள் அனைத்தும் செய்யப்படுகின்றன.
நானே அந்த பிரம்மன் என்று உணர்ந்தவன் மாற்றத்தையடையாத பிரம்மமாகவே இருக்கிறான்.
ஸ்லோகம்-09
நிர்விகல்பமனந்தம் ச ஹேதுத்3ருஷ்டாந்தவர்ஜிதம் |
அப்ரமேயமனாதி3ம் ச யஜ்ஞாத்வா முச்யதே பு3த4: || 9 ||
நிர்விகல்பமனந்தம் ச - பிளவுபடாதது, எல்லையற்றது
ஹேது த்3ருஷ்டாந்த வர்ஜிதம் தர்க்கத்திற்கும், ஒப்பிடுவதற்கும் தாண்டியிருப்பது
அப்ரமேயம் அனாதி3ம் ச அளவிடமுடியாதது; தொடக்கம்-முடிவற்றது
யத்3 ஞாத்வா முச்யதே பு3த4 இவ்வாறு பிரம்மத்தை உணர்ந்தவன் ஞானியாவான்.
பிரம்மனின் ஆறு குணாதிசயங்கள் இந்த ஸ்லோகத்தில் நமக்குத் தரப்பட்டுள்ளன, அதில் நிர்விகல்பம் என்ற முதல் குணம் ஏற்கனவே முந்தைய ஸ்லோகங்களில்; விவரிக்கப்பட்டுள்ளது. ஐந்து புதிய குணாதிசயங்கள் அனைத்தும் ஆத்மாவை உணர நம் மனம் எடுக்கும் முயற்சிக்கு உதவி செய்யக்கூடியவைகளாகும.:
இதிலும் முந்தைய ஸ்லோகத்திலும் கூறப்பட்டுள்ள குணங்கள் உலக விஷயங்களை பிரிந்துக் கொள்ள உதவுகின்ற அறிவின் அளவுகோல்களைப் பயன்படுத்தி புரிந்து கொள்ள முடியாதவைகளாகும். பிரம்மக்கடலின் ஆழத்தை அளக்கும் கருவி நம்மிடத்தில் இல்லை! அதுதான் இந்தப் பகுதியில் வரும் முக்கிய விஷயம்.
ஆத்மாவை உணர இன்னும் ஐந்து முயற்சிகள்:
அனந்தம்(முடிவில்லாதது), மற்றும் அனாதி(தொடக்கமற்றது) என்கின்ற இந்த இரண்டு குணாதிசயங்களும் காலத்திற்கு அப்பாற்பட்ட பிரம்மத்தை குறிக்கிறது. ஒன்று தொடக்கமற்றது மற்றும் முடிவில்லாதது என்றால், அதை அளவிடுவதற்கு அதற்கு எதிராக ஒரு கால அளவும் இருக்க முடியாது என்று தெரிகிறது.
தர்க்கம் மற்றும் ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்டது என்கின்ற இந்த பண்புகள் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட பிரம்மத்தை குறிக்கிறது. ஒன்றுக்கு காரணமும் இல்லை, விளைவும் இல்லை என்றால், அதை எப்படி தர்க்கத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்? ஒரு விஷயத்தின் காரணம் தர்க்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.
அதேபோல, ஒன்று இரண்டற்றது என்றால், அதை எதனுடன் ஒப்பிட முடியும்? நாம் ஒரு உருவகத்தைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அது எப்போதும் ஒரு உருவகமாகவே இருக்கும், உண்மையான விஷயமாக இருக்காது. பிரம்மனுக்கு எப்போதும் சரியான உருவகம் இருக்க முடியாது.
அளவிட முடியாதது என்கின்ற இந்தப் பண்பு ஆகாசத்திற்கு அப்பாற்பட்ட பிரம்மத்தைக் குறிக்கிறது. எதையும் அளக்க ஒரே வழி அதற்கு வெளியே நிற்பதுதான். ஆனால் அந்த விஷயம் எல்லாவற்றிலும் வியாபித்திருந்தால், அதை அளப்பதற்காக அதற்கு வெளியே எப்படி நிற்க முடியும்? அளக்கும் கருவியே பிரம்மனின் அங்கமாக இருக்;கிறது!
இதுவரை பிரம்மனை அடையாளம் காண உதவும் எட்டு குணாதிசயங்களைக் கற்றுக் கொண்டோம். பிரம்மம் என்பது காலம், இடம், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை அறிந்து கொண்டோம். உலகப் பொருட்களின் அளவுகோல்களின்படி பிரம்மம் அளவிட முடியாதது. இவ்வாறாக நமது விசாரத்தைத் தொடர்வது நம்மை பிராமணனிடத்துக் கொண்டு செல்லும். மேலும் பிரம்மத்தை அறிவதன் மூலம் நாம் சம்சாரத்திலிருந்து விடுதலை பெறுகிறோம்.
பிரம்மத்தை அடைய முயற்சிக்கும் சாதகர்கள் இறுதியாக புரிந்துக் கொள்வது, பிரம்மம் என்பது இரண்டற்றது என்பதாகும். இந்த சூட்சுமமான பிரம்மத்தை மிக நுட்பமான மற்றும் தூய்மையான மனதைக் கொண்ட ஞானியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மேகமூட்டமான புத்தியால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நமது வரையறுக்கப்பட்ட மனம் நிச்சயமாக அதை அளவிடும் கருவி அல்ல.
இது அடுத்த ஏழு ஸ்லோகங்களில்(10-16) உள்ள கருத்துக்கள் பிரம்மத்தைப் பற்றிய பின்வரும் விளக்கத்திற்கு நம்மைக் கொண்டுவருகிறது.
பிரம்மம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது, வரையறுக்கப்படாதது, எல்லா தர்க்கங்களுக்கும், ஒப்புமைகளுக்கும் அப்பாற்பட்டது. எல்லா ஆதாரங்களுக்கும் மற்றும் காரணங்களுக்கும் அப்பாற்பட்டது. இதை உணர்ந்த சாதகன் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவான், முக்தி அடைவான்.
இது இடம் மற்றும் காலத்தால் வரையறுக்கப்படாதது. மேலும் மற்றெந்த விஷயங்களாலும் வரையறுக்கப்படாதது. அதைப் பற்றி; ஊகிக்கவும் முடியாது. சுருக்கமாக, இது அறிவை அடைய உதவுகின்ற எந்த கருவிகளாலும் அணுக முடியாது. ஆனால், பிரம்மத்தை உணர்ந்து முக்தி பெற்ற ஞானி மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி அவர் பிரம்மனை நன்கு அறிந்தவர். ஆத்மா அறியப்பட்டு, மனம் ஒடுங்கி போனால், மனதற்ற யோகிக்கு இவ்வாறு விவரிக்கப்பட்ட பிரம்மன் சுயமாக வெளிப்படுகிறது.
ஆத்மா என்றும் மாறாதது:
இப்போது பின்வரும் கேள்வி எழலாம். மனம் பிறப்பு மற்றும் இறப்புக்கு உட்பட்டது என்றும், அனைவரின் மீதும் பற்றற்ற மற்றும் உதாசீனனாக இருக்கும் ஆத்மா உண்மையில் மனதின் பண்புகளால் பாதிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டால், ஆத்மாவும் அந்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு ஸ்ருதி பதிலளிக்கிறது:
ஸ்லோகம்-10
ந நிரோதோ4 ந சோத்பத்தி: ந ப3த்3தோ4 ந ச ஸாத4க: |
ந முமுக்ஷுர் ந வை முக்த: இத்யேஷா பரமார்த2தா || 10 ||
ந நிரோத4: ந ச உத்பத்தி: அழிப்பவன் இல்லை; படைப்பவனும் இல்லை
ந ப3த்3த4: ந ச ஸாத4க: பந்தப்பட்டவனும் இல்லை; செயல்படுவனும் இல்லை
ந முமுக்ஷு: ந வை முக்த: ஆத்மஞான இச்சை உடையவனும் அல்ல; முக்தியை அடைந்தவனும் அல்ல.
இத்யேஷா பரமார்த2தா இவ்வாறு உணர்வதே உயர்ந்த நிலையாகும்.
நான் எதையும் அழிப்பவனுமல்ல, உருவாக்குபவனுமல்ல; எதற்கும் கட்டுப்பட்டவனுமல்ல, ஞானயோக சாதகனுமல்ல, சம்சாரத்திலிருந்து விடுதலையை தேடுபவனல்ல, முக்தியை அடைந்தவனுமல்ல என்று இவ்வாறு உணர்வதே உண்மையான உயர்ந்த நிலையாகும்.
இந்த ஸ்லோகத்தில் இருந்து நாம் பார்ப்பது, ஒரு வேதாந்த மாணவர் இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து அறிவுபூர்வமாக உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவைகள்:
1) முழுமையான நிலைப்பாடு: பரமார்த்திக சத்யம் அல்லது ஆத்மாவை உணர்ந்த நபரின் நிலைப்பாடு என்று அழைக்கப்படுகிறது; மற்றும்
2) விவகார நிலைப்பாடு: வியாவஹாரிக சத்யம் அல்லது சாதாரண மனிதனின் நிலைப்பாடு, அல்லது உலக நிலைப்பாடு என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக உள்ளன. ஆன்மீகத்தைப் பற்றிய பெரும்பாலான குழப்பங்கள் அல்லது தவறான புரிதல்களுக்கு இதுதான் காரணம். ஒரு குறிப்பிட்ட கருத்து எந்த நிலைப்பாட்டில் இருந்து சொல்லப்படுகிறது என்பதை அறிவது எப்போதும் முக்கியம். மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சியும் கீழே இருந்து பார்க்கும் காட்சியும் மிகவும் வித்தியாசமானது. வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் வெளிப்படையாக விஷயங்களை வெவ்வேறுவிதமாக பார்ப்பார்கள்.
இந்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் முரண்பட்ட கருத்துக்களுக்கு ஒரு உதாரணம் பந்தப்பட்டிருத்தல் மற்றும் சம்சார விடுதலை பற்றியது. அக்ஞான பார்வையில், இவை மனிதனுக்கு உண்மையான பிரச்சனைகள் என்பதை நாம் காண்கிறோம். ஆனால் பாரமார்த்திக பார்வையில், அவைகள் உண்மையில் கிடையாது. ஏனென்றால் அவைகள் உடலையும் மனதையும் மட்டுமே பற்றியது, மேலும் இவை பாரமார்த்திக பார்வையிலிருந்து பார்க்கும்போது உண்மையற்றவை என்று புரிந்து கொள்ளலாம்.
இந்தக் இரண்டு கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டால்தான் இது போன்ற ஸ்லோகங்களின் கருத்தை நாம் உணர முடியும்.
- இந்த அனைத்து படைப்புக்களின் தோற்றமும், அழிவும் உண்மையில் பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே இது 'உண்மையற்றது”.
- உயர்ந்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது பந்தமெதுவும் இல்லை. ஆத்மா எதனோடும் பந்தப்படாதது. ஒருவர் ஏற்கனவே ஆத்மாவுடன் ஐக்கியம் அடைந்து விட்டால், அவர் செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
- சம்சாரம் என்றவொன்று இல்லாத இடத்தில் ஆத்மாவை தேடுபவர்களும் இருக்கமாட்டார்கள். அதிலிருந்து விடுதலை பெற வேண்டியவர்களும் இருக்க மாட்டார்கள்.
இவைகள், அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றன. அக்ஞானத்திலிருந்து, அந்த உயர்ந்த உண்மை நிலையான ஆத்மஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
ஆத்மா மூன்ற நிலைகளையும் கடந்தது.
கேள்வி - ஆத்மா ஜாக்ரத், ஸ்வப்னா மற்றும் சுஷுப்தி ஆகிய நிலைகளை கடந்து செல்கிறது. மாற்றத்திற்கு உட்படாமல் இந்த மூன்று நிலைகளை எந்த ஒரு உயிரினமும் கடந்து செல்ல முடியாது என்பதால், மரணம் போன்றவை எப்படி இருக்காது?
இதற்கு ஸ்ருதி பதிலளிக்கிறது:
ஸ்லோகம்-11
ஏக ஏவாத்மா மந்தவ்யோ ஜாக்3ரத்ஸ்வப்னஸுஷுப்திஷு |
ஸ்தா2னத்ரயவ்யதீதஸ்ய புனர்ஜன்ம ந வித்3யதே ||11||
ஏக ஏவ ஆத்மா மந்தவ்யோ ஆத்மா என்ற ஒன்று மட்டும்தான் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும்.
ஜாக்3ரத் ஸ்வப்ன ஸுஷுப்திஷு விழிப்புநிலை, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம்
ஸ்தா2ன த்ரய வ்யதீதஸ்ய என்கின்ற மூன்று நிலைகளுக்கு கடந்தவனுக்கு
புனர்ஜன்ம ந வித்3யதே பிறப்பு-இறப்பு என்பதே கிடையாது.
ஆத்மா விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஆத்மா மட்டும்தான் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும். இந்த மூன்று நிலைகளைக் கடந்தவனுக்கு பிறப்பு-இறப்பே கிடையாது.
மூன்று நிலைகளில் அடைகின்ற அனுபவமானது ஞானயோக சாதகனுக்கு மிகவும் இன்றியமையாதது. அவற்றைப் விசாரம்; செய்வதன் மூலம், ஆத்மா மட்டுமே உண்மையானதாகவும், மூன்று நிலைகளிலும் இருப்பதாகவும் தெரிய வரும்.
மூன்று நிலைகளில் ஆத்மாவின் நிலை:
விசாரத்தில் பயன்படுத்தப்படும் முறையானது அன்வய-வியதிரேகம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது “இருத்தல் மற்றும் இல்லாமை முறை”. ஒரு பொருளின் இருப்பானது மற்றொரு பொருளின் இருத்தல் அல்லது இல்லாமையால் நிரூபிக்கப்படுகிறது.
முதலாவதாக, இந்த மூன்று நிலைகளுக்குள் என்ன இருக்கிறது மற்றும் என்ன இல்லை என்பதைப் பார்ப்போம். அதிலிருந்து, மூன்று நிலைகளிலும் ஆத்மாவின் இருப்பை நாம் யூகிக்க முடியும். பிறகு அன்வய-வியதிரேக தர்க்கத்தைப் பயன்படுத்தலாம்.
ஆழ்ந்த உறக்கத்தில், நம் உடல், மனம், உலகம், மற்றும் விஷயங்கள் போன்ற எதுவும் இல்லாததை நினைவுக் கூறமுடிவதால் அறியாமை இருக்க வேண்டும். ஆனாலும் நாம் நன்கு உறங்கினோம்; என்பதை அறிவோம், எனவே சாட்சி-ஆத்மாவும் இருக்க வேண்டும்.
கனவில் புலன்கள் இல்லை, ஆனால் கனவைப் பார்க்கிறோம், அதனால் மனம் இருக்கிறது என்று கருதுகிறோம். நினைவாற்றல் மட்டுமே கனவுகளுக்கான ஆதாரம், எனவே நினைவகம் தேவை. புத்தி கனவில் தேவையற்றது, அதாவது அந்த நிலையில் செயல்படவில்லை. ஈகோ உணர்வுக்கும் இது பொருந்தும்.
விழித்திருக்கும் நிலையில், இந்த அனைத்து திறன்களும் உள்ளன. அகங்காரம் விழிப்பு நிலையில் மட்டுமே இருப்பதால், இதுவே தனிமனிதனாக நம்மை அறியும் நிலை. பாவ புண்ணியங்களை நாம் சேர்த்துக் கொள்கின்ற ஒரே நிலையும் இதுவேயாகும். எனவே நாம் சம்சாரத்தில் சிக்கிக்கொள்ள அல்லது அதிலிருந்து விடுதலை பெறக்கூடிய ஒரே நிலை இதுதான்.
எனவே மூன்று நிலைகளையும் அனுபவிப்பது ஒருவரே என்று அறிகிறோம். எனவே, ஆத்மா மூன்று நிலைகளிலும்; சாட்சியாக இருக்க வேண்டும் என்று நாம் அனுமானிக்க முடியும், ஏனென்றால் நாம் ஒரு நிலையில் இருக்கும்போது, மற்ற இரண்டும் இல்லை.
இந்த ஆத்மாவின் இருப்பை எந்த நேரத்திலும் நாம் நேரடியாக அறியாததால், மூன்று நிலைகளிலும் அறியாமை இருக்கிறது.
மேலே உள்ள விசாரத்திலிருந்து, ஆத்மாவை உணர்ந்திருத்தல் என்பது மற்றொரு நிலையாக இருக்க வேண்டும், பொதுவாக இது 'நான்காவது” நிலை என்று கூறப்படுகிறது, இந்த நிலையில் அறியாமை இல்லை, மேலும் நாம் சாட்சி-ஆத்மாவைப் பற்றி உணர்வுபூர்வமாக அறிந்திருக்கிறோம். எல்லா நிலைகளிலும் சாட்சி-ஆத்மா மட்டுமே உள்ளது. எனவே, அதுவே நமது உண்மையான ஆத்மா. உடல்-மனம்-புத்தி போன்றவை அல்ல, ஆத்மா என்று நாம் அறிந்தால், நாம் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறோம்.
உபாதிகளின் காரணமாக ஆத்மா வித்தியாசமாகத் தோன்றுகிறது.
ஒருவரே எப்படி பலவாக தோன்ற முடியும் என்ற கேட்கத் தோன்றும். அதற்கு இந்த ஸ்ருதி பதிலளிக்கிறது.
ஸ்லோகம்-12
ஏக ஏவ ஹி பூ4தாத்மா பூ4தே பூ4தே வ்யவஸ்தி2த: |
ஏகதா4 ப3ஹுதா4 சைவ த்3ருஷ்யதே ஜலசந்த்3ரவத் ||12||
ஏக ஏவ ஹி பூ4தாத்மா எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆத்மா ஒன்றேதான்
பூ4தே பூ4தே வ்யவஸ்தி2த: ஒவ்வொரு உயிர்களிடத்தில் உள்ள ஆத்மா
ஏகதா4 ப3ஹுதா4 ச ஏவ ஒன்றாக இருப்பது பலவாக இருப்பது போல் தோன்றவது
த்3ருஷ்யதே ஜலசந்த்3ரவத ஒரே நிலவு பல நீர்நிலைகளில் பிரதிபிம்பமாக பலவாக தோன்றுவது போலிருக்கிறது.
ஒவ்வொருவருக்குள்ளும் பல ஆத்மாக்கள் உள்ளன என்ற குழப்பத்திற்கு முக்கியமான காரணம் மனிதனிடம் இருக்கும் அகங்கார உணர்வுதான். இந்த குழப்பம் 'பிரதிபிம்ப வாத” ஒப்புமையைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்றப்படுகிறது. இது ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குவதற்கு வேதங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான உதாரணமாகும.
பிரதிபிம்ப மாதிரி:
மூலத்திலிருந்து நேரடியாக வரும் ஒளிக்கற்றை (சந்திரன், இந்த விஷயத்தில்) ஆத்மாவைக் குறிக்கிறது. பிரதிபலிப்பு ஊடகம் என்பது ஒவ்வொரு நபரின் உபாதிகளையும் (உடல், மனம் மற்றும் புத்தி) குறிக்கிறது. பிரதிபலித்த பிம்பம் ஜீவா அல்லது தனிப்பட்ட ஆத்மாவைக் குறிக்கிறது.
ஒரே ஒரு சந்திரன் பல நீர் பரப்புகளில் (உபாதிகள் அல்லது உயிரினங்கள்) பிரதிபலித்த பிம்பங்களாக பலவாக தோன்றும். பிரதிபலிக்கின்ற பிம்பங்கள் பிரதிபலிக்கும் உபாதியின் தெளிவு மற்றும் அமைதியைப் பொறுத்து தரத்தில் மாறுபடும். மிகவும் கலங்களான நீரிலும், அலைபாய்கின்ற நீரிலும் சந்திரனின் மோசமான உருவத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் அமைதியான நீர்பரப்பில் அதை கிட்டத்தட்ட முழுமையாக பிரதிபலிக்கிறது. அதேபோல ராஜஸ, தாமச உபாதிகளில் ஆத்மா தவறாக உணரப்படுகின்றது. சாத்விக உபாதிகளில் ஆத்மா நன்றாக பிரதிபலிக்கின்றது. இந்த நிலையில் நாம் பரமானந்தத்தை அனுபவிக்கின்றோம்.
ஞானி, தனது உபாதிகளுடன் எந்த உறவும் இல்லாதவர். எனவே அவரது உபாதிகளுக்கு வருகின்ற இன்ப-துன்பங்கள் அவரைப் பாதிக்காது. அவர் பிரம்மனிலிருந்து வேறுபட்டவர் அல்ல, ஏனெனில் அவருடைய உபாதிகள் அமைதி அடைந்திருப்பதால் பிரதிபலிக்கின்ற ஆத்மாவும் முழுமையாக இருக்கின்றது.
இதிலிருந்து புரிந்து கொள்வது, எவ்வாறு சந்திரன் ஒன்றாக இருந்தாலும் எல்லா நீர்நிலைகளிலும் பலவாக தோன்றுகிறதோ அவ்வாறு ஆத்மா ஒன்றாக இருந்தாலும், அது எல்லா உயிர்களிலும் இருப்பதாக தோன்றுகிறது என்பதாகும்.
ஆத்மாவை ஆகாசத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தல்
பரமாத்மாவின் உண்மையான தன்மையின் விளக்கம் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம்-13
க4டஸம்வ்ருதமாகாஶம் நீயமானே க4டே யதா2 |
க4டோ நீயேத நாகாஶ: ததா2 ஜீவோ நபோ4பம: || 13 ||
க4ட ஸம்வ்ருதம் ஆகாஶம் பானைக்குள்ளே இருக்கின்ற ஆகாசம்
நீயமானே க4டே யதா2 பானையின் அசைவு இருக்கும்போது
க4டோ நீயேத ந ஆகாஶ: பானை மட்டுமே நகர்கின்றது. ஆகாசம் அல்ல
ததா2 ஜீவோ நபோ4பம: அதேபோல ஜீவாத்மாவை பானை ஆகாசத்துடன் ஒப்பிடுகிறார்கள்.
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பானையை நகர்த்தும் போது பானைதான் நகர்கிறது அதிலிருக்கும் ஆகாசமல்ல. ஆகாசத்தை ஒத்திருக்கும் ஆத்மாவும் அப்படித்தான்.
இந்த இரண்டு ஸ்லோகங்களிலும், வேதங்களில் பொதுவான மற்றொரு ஒப்புமை பயன்படுத்தப்படுகிறது. இது ”அவச்சேத மாதிரி” என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதிரியில் ஆத்மாவின் அடையாளமாக ‘ஆகாசம்’ பயன்படுத்தப்படுகிறது. ஆகாசம் பானையால் பாதிக்கப்படாதது.
இந்த ஒப்புமை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:
இந்த உபநிஷத்தில், நகர்தல் என்பது ஒப்புமையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜீவனுடன் ஒப்பிடப்படும் திடமான பானையால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆகாசம். பானையை நகர்த்தும்போது அந்த ஆகாசம் இருந்த இடத்திலேயே இருக்கும். ஜீவனுக்கு என்ன நேர்ந்தாலும் ஆத்மா அசையாமல் இருக்கும் என்பது இந்த ஒப்புமையின் நோக்கம். உபாதிகளுடன் ஆத்மா நகராது என்பது ஒப்பீடு. ஆத்மா ஒன்றே, அனைத்தையும் வியாபித்துள்ளது. உடலுக்கும் மனதுக்கும் என்ன நடந்தாலும், ஆத்மா பாதிக்கப்படாது. இந்த எடுத்துக்காட்டில் இந்த உண்மை தெளிவாகிறது.
ஆத்மா ஆகாசத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
ஜீவன் எல்லா வகையிலும் ஆகாசத்தைப் போன்று இருப்பதல்ல.
ஸ்லோகம்-14
க4டவத் விவிதா4காரம் பி4த்3யமானம் புன: புன: |
தத் ப4க்3னம் ந ச ஜானாதி ஸ ஜானாதி ச நித்யஶ: || 14 ||
க4டவத் விவிதா4காரம் பல்வேறு வடிவங்களுடைய பானைகள்
பி4த்3யமானம் புன: புன: திரும்ப, திரும்ப உடைக்கப்படுகின்றன.
தத் ப4க்3னம் ந ச ஜானாதி பானைகள் உடைந்தால், அதை ஆகாசம் அறியாது
ஸ ஜானாதி ச நித்யஶ: ஆனால் ஆத்மா எப்போதும் அறியக்கூடியது.
பல்வேறு வடிவங்களையுடைய பானைகள் உடைக்கப்படும் போது அவைகளிலுள்ள ஆகாசத்திற்கு உடைக்கப்படுவது தெரியாது. ஆனால் ஜீவனின் உபாதிகளான மூன்று சரீரங்கள் அழிவதை ஆத்மா முழுமையாக அறிந்திருக்கும்.
பாரம்பரிய விளக்கத்தில், பானை உடைந்தால், பானை ஆகாசம் மற்ற ஆகாசத்துடன் இணைகிறது. இந்த ஸ்லோகத்தில், மீண்டும் மீண்டும் ஏற்படும் இறப்பு நிகழ்வு மனிதனின் மறுபிறப்புடன் ஒப்பிடப்படுகிறது. இப்போது உணர்வு ஒப்புமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகாசம் உணர்வற்றதாக இருப்பதால் பானை உடைந்தாலும், இருந்தாலும் அதற்கொன்றும் தெரியாது.
இருப்பினும், இந்த ஒப்புமையின் பயன்பாட்டில், ஆகாசம் ஆத்மாவுடன் நேர்மாறாக உள்ளது. ஜீவனுக்கு நடக்கும் அனைத்தும் ஆத்மாவுக்கு எப்போதும் தெரியும். அது அறியாதது எதுவுமில்லை. எனவே, இந்த உவமையை அறிவதற்குப் பயன்படுத்த முடியாது என்பதைக் காணலாம். ஆத்மா உணர்வு பூர்வமானது மற்றும் அனைத்தையும் அறிந்தது. ஆனால் ஆகாசம் ஜடமாக இருப்பதால் அதனால் எதையும் அறிய முடியாதது.
இந்த உணர்வு ஆத்மாவை நன்கு புரிந்துக் கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது. ஆத்மா பானையால் முற்றிலும் பாதிக்கப்படாதது மற்றும் அதன் இருப்பு அல்லது இல்லாதது உட்பட அதற்கு என்ன நடந்தாலும். ஆத்மாவைப் பொறுத்த வரையில் பானை எப்பொழுதும் இல்லாததாகவே இருக்கும், ஆனால் அது எப்பொழுதும் அறியப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டதாகவே இருக்கும்.
இந்த உபநிஷத் நகர்தல் மற்றும் உணர்வை இந்த வழியில் அவச்சேத மாதிரியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த மாதிரியிலிருந்து வெளிப்படும் ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், பௌதிக உடல் என்பது நம் மனதில் ”நான் இந்த உடல்” என்ற எண்ணமாக மட்டுமே உள்ளது மற்றும் ஆத்மாவின் அறிவால் மாயை அழிக்கப்படும் வரை முடிவில்லாமல் அதை ஆத்மா என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது.
ஜீவாத்மா எப்படி பிரம்மத்தை ஒத்திருக்கிறது.
ஆத்மா ஒன்று அல்லது பலவாக இருக்கலாம். ஆத்மா ஒன்று மட்டுமே என்றால், அது பிரம்மத்திலிருந்து வேறுபட்டிருக்க முடியாது. ஜீவாத்மா ஒவ்வொன்றும் ஒன்றாகவும், மற்றொன்றைப் போலவே அதை இயல்புடையாதாகவும் இருக்க முடியாது. இந்த சந்தேகத்திற்கு ஸ்ருதியில் பிரம்மம் இவ்வாறு விவாpக்கப்பட்டுள்ளது.
"பிரம்மனே ஈஸ்வரன், எல்லா உயிர்களிலும் மறைந்துள்ளார்; எங்கும் வியாபித்திருக்கிறார். எல்லா உயிர்களுக்குள்ளும் உள்ள ஈஸ்வரன், அனைத்து செயல்களையும் கவனித்துக் கொண்டும், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவர், சாட்சி ஸ்வரூபமானவர்; ஒன்றானவர்; நிர்குணமானவர்; உணர்வுமயமானவர்”, என்று ஸ்வேதாஸ்வதாரம். - உபநிஷத்(VI, 11)ல் கூறப்பட்டுள்ளது.
பிரம்மன் பல ஜீவாத்மாக்களுடன் ஒத்திருந்தாலும், எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் ஜீவாத்மாவில் பன்மைத்தன்மை இருக்க முடியாது.
உண்மையில், பிரம்மத்திலிருந்து வேறுபட்ட ஒரு ஜீவாத்மா கூட இல்லை. எப்படி பல இருக்க முடியும்?
ஜீவாத்மாக்களிடையே வெளிப்படையான வேறுபாடுகள் இருப்பது, ஜீவாத்மாவோடு சேர்ந்துள்ள உபாதிகளில் காணப்படும் வேறுபாடுகளால் மட்டுமே. இந்த உபாதிகளில் இருந்து, அதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஆத்மாவை நீக்கிவிட்டால், உபாதிகளே மித்யாவாகிவிடும்.
இந்த ஒற்றுமையை பானை மற்றும் ஆகாசம் உதாரண விளக்கத்திலிருந்து காணலாம். உபாதிகள் இல்லாத பிரம்மன் மஹாகாசத்திற்கும்; உடலில் உள்ள ஜீவாத்மா பானைக்குள் உள்ள ஆகாசத்திற்கும் ஒத்திருக்கும் போது. பானையில் உள்ள ஆகாசத்தை மகாகாசத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
பிரம்மத்திற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையே உள்ள உறவு:
இந்த பானை, ஆகாச உதாரணம் ஜீவ-பிரம்ம உறவைப் பற்றிய பல உண்மைகளைக் குறிப்பிட உதவுகிறது.
- பானை என்ற உபாதியை நீக்கிவிட்டு அதற்குள்ளே உள்ள ஆகாசத்தைப் பார்க்கும் போது அது பானைக்கு வெளியே இருப்பதாக உணரப்படுகின்ற மகாகாசத்தோடு கலந்துவிடுகிறது. அதேபோல ஜீவனை அதனுடைய உபாதிகளை நீக்கிவிட்டு பார்த்தால் அது பிரம்மத்தோடு ஒன்றாகிவிடும். இது சம்சார விடுதலை என்பது அறிவோடு இணைந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
- பானை புகை, தூசிகளோடு கூடியதாக இருந்தாலும், அதற்குள் இருக்கின்ற ஆகாசம் இவைகளால் பாதிக்கப்படாததாக இருக்கும். அதேபோல ஜீவனின் உபாதி இன்ப-துன்பங்களால் பாதிக்கப்பட்டாலும் அதற்குள் இருக்கின்ற ஆத்மா இவைகளால் பாதிக்கப்படுவதில்லை.
- பானை விதவிதமாக இருந்தாலும், வெவ்வேறு அளவுடையதாக இருந்தாலும் அதற்குள் இருக்கின்ற ஆகாசம் மாற்றமடையாமல் இருக்கிறது. அதேபோல ஜீவர்கள் விதவிதமான தோற்றத்திலும், வெவ்வேறான பெயருடையதாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கின்ற ஆத்மா ஒன்றாகவே இருக்கிறது.
- பானைக்குள் இருக்கின்ற ஆகாசம் மகாகாசத்தின் ஒரு பகுதியாகவோ, உருமாற்றமடைந்த மகாகாசம் என்று கூறமுடியாது. அதேபோல் ஜீவாத்மா பிரம்மத்தின் ஒரு பகுதியோ அல்லது மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகவோ இருக்கமுடியாது.
- குழந்தைகளுக்கு ஆகாசம் அழுக்கு படிந்ததைப் போலத் தோன்றுவது போல, அக்ஞானிகளுக்கு ஆத்மா வரையறுக்கப்பட்டதாக, பாவங்களால் பாதிக்கப்பட்டதாக தோன்றுகிறது.
- ஒரு பொருள் இருக்கும் போது அல்லது அழிக்கப்படும் போது அதனுள்ளிருக்கும் ஆகாசம் எந்த மாற்றத்தையும் அடையாது அதேபோல ஒரு உடல் செல்லும்போது அல்லது வரும்போது, உள்ளிருக்கும் ஆத்மா எந்த மாற்றத்தையும் அடையாது. அதன்படி, எந்த ஜீவாத்மா பிரம்மத்துடன் ஒன்றாக இருந்தாலும் அல்லது உபாதிகளால் வேறுபட்டது போலிருந்தாலும், பிறக்கவோ அல்லது இறக்கவோ இல்லை; ஏனெனில், பிறப்பும் இறப்பும் உடலுக்கு மட்டுமே உரியது. எனவே, ஜீவன் பிறக்கிறது, இறக்கிறது என்று சொல்வது அர்த்தமற்றது. ஜீவர்கள், கனவில் காணப்படுவது அல்லது வித்தைக்காரனின் கலையால் (மாயா அல்லது இந்திரஜாலா) தோற்றுவிக்கப்படுவது அல்லது ஒரு செயற்கை சிலையில் வசிப்பதாக கற்பனை செய்வது போல, உண்மையில் எந்த ஜீவனும் அவற்றில் பிறந்து இறக்கவில்லை.; எனவே, இந்த ஜீவர்கள் அனைவரும் பிறப்பு மற்றும் இறப்பு இல்லாதவர்கள். மேலும் அவர்கள் பிறப்பதாகவும் இறப்பதாகவும் கூறப்படுவது மாயையால் மட்டுமே. இதனால் ஜீவனுக்கு பிறப்போ அல்லது வேறு எந்த மாற்றமோ ஏற்படுவதில்லை. மறுபுறம், இந்த மாற்றங்களுக்கு உள்ளான மனம் மட்டுமே அவை ஆத்மாவுடன் தொடர்புடையதாகத் தோன்றும். ஜீவாத்மாக்கள் மனத்துடன் தொடர்பு கொண்டு, மனத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போதுதான், அவை தங்களுக்குள் மாறாதவையாக இருந்தாலும் பிறப்பதாகத் தோன்றும்.
மாயா மற்றும் அதன் செயல்.
ஒரு வார்த்தையே சில சமயங்களில் தொடர்புடைய உண்மைத்தன்மை இல்லாமல் ஒரு சிந்தனையை உருவாக்குகிறது. உதாரணமாக, ”ஒரு மனிதனுக்கு ஒரு கொம்பு உள்ளது”. ஒரு வித்தைக்காரன் காற்றில் ஒரு நகரத்தை உருவாக்கி காண்பிப்பதுப் போல மாயையும் அதே விளைவை உருவாக்குகிறது. எனவே, இந்த முழு உலகமும் இருமை பற்றிய எண்ணம் மாயாவால் எழுகிறது. உண்மையில், ஆத்மாவைத் தவிர மற்ற அனைத்தும் உண்மையற்றவை.
இந்த மாயை கூட உண்மையானது அல்ல. 'மாயை' என்ற பெயரில் மட்டும் இருப்பது போல, மாயை உண்மையல்ல. உண்மையான இருப்பு இருக்கலாம் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. உலகமும் உண்மையற்றது, பெயரில் மட்டுமே உள்ளது., ஆத்மா தன்னுடைய இருப்புக்கு எதையும் சார்ந்து இல்லை. ஆத்மா சுயம்பிரகாசம் அல்லது சுய உணர்வு. எப்படி விளக்கு தானே ஒளிர்ந்து தன்னைப் பிரகாசப்படுத்திக் கொள்கிறதோ அதுபோல ஆத்மா தன்னைத் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மேலும் எல்லாவற்றிலிருந்தும் தனித்திருக்கிறது.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது: ஆத்மா அனைத்தையும் அறிந்ததாக இருந்தால், அது அடிப்படையில் பேரின்பம் என்பதை எப்போதும் அறிந்திருக்கவில்லையா? பதில் பின்வருமாறு:
ஸ்லோகம்-15
ஶப்3த3மாயாவ்ருதோ நைவ தமஸா யாதி புஷ்கரே|
பி4ன்னே தமஸி சைகத்வமேக ஏவானுபஶ்யதி || 15 ||
ஶப்3த3மாயாவ்ருதோ ந ஏவ வார்த்தைகளின் மாயையால் மறைக்கப்பட்டிருக்கும்
தமஸா யாதி புஷ்கரே அறியாமையால் ஒருபோதும் பிரம்மத்தை அறியவே முடியாது
பி4ன்னே தமஸி ச ஆனால் அறியாமை நீங்கப்பெற்றபின்
ஏகத்வம் ஏக ஏவ அனுபஶ்யதி ஒன்றாக மட்டும் இருக்கின்ற பிரம்மத்தை மட்டும் பார்க்கப்படுகிறது.
வார்த்தைகளின் மாயையால் மறைக்கப்பட்டிருக்கும் அறியாமையால் ஒருபோதும் பிரம்மத்தை அறியவே முடியாது. ஆனால் அறியாமை நீங்கப்பெற்றபின் ஒன்றாக மட்டும் இருக்கின்ற பிரம்மத்தை மட்டும் பார்க்கப்படுகிறது.
ஆத்மா இருக்கிறதா இல்லையா? என்பதுதான் பலரது மனதில் எழும் கேள்வி.
அறியாமையின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது இது ஒரு புரியாத புதிராகவே இருக்கும். அறியாமை நீங்கும் வரை இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காது. பல தத்துவக் கருத்துக்களின் மூலம்; நாம் முயற்சி செய்து தேடலாம். ஆனால் அறியாமை நீங்கும் வரை நாம் மாயையின் வசத்தில்தான் இருப்போம். அறியாமை பற்றி மேலும் மேலும் அறிவைப் பெற முயற்சிப்பது வீணான முயற்சி. அது நமக்கு எப்படி உதவப் போகிறது? வெளிச்சத்தின் மூலம் இருள் நீங்குவது போல, ஆத்மஞானம் என்கின்ற வெளிச்சத்தின் மூலம் அறியாமை என்று இருள் அழிக்கப்படுகிறது. பிரம்மஞானத்தை அடைவதே இதற்கு தீர்வாகும்.
மாயை என்பது வெறும் வார்த்தை, மித்யாவாகும். இது சக்தி வாய்ந்தது, மற்றும் சாத்தியமற்றதைக் கூட அடையும் திறன் கொண்டது, மேலும் புலன்களால் நம்மைச் சுற்றி நாம் உணரும் முழு பிரபஞ்சத்திற்கும் இதுவே காரணம், கூர்ந்து ஆராயாத போது மிக நன்றாகவே தெரிகிறது. இந்த மாயையினால் மறைக்கப்பட்டவன் தானே பேரின்ப ஸ்வரூபமான ஆத்மா என்ற அறிவை இழக்கிறான்.
பானை தண்ணீரில் ஆழமாக மூழ்கும்போது அது உண்மையில் இருப்பதை விட மிகச் சிறியதாகத் தெரிவது போல ஜீவன் உண்மையில் எல்லையற்ற பிரம்மத்தை ஒத்திருந்தாலும், தன்னை ஒரு வரையறுக்கப்பட்ட உயிரினமாகவே பார்க்கிறான்.
இந்த மாயையால் ஏற்படும் அறியாமையின் காரணமாக, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் தன்னுடைய புனிதமான ஆனந்தமான ஸ்வரூபத்தை அடையாளம் காண முடியாது. மனிதனுக்கு கண்கள் இருந்தாலும், அனைத்தையும் அறிகின்ற திறனிருந்தாலும், அடர்ந்த இருளால் சூழப்பட்டிருக்கும்போது, தனக்கு மிக அருகில் அமைந்துள்ள இடத்தையோ அல்லது பொருளையோ அடைய முடியாது. இந்த அறியாமை இருளை ஞானம் என்கின்ற ஒளியால் போக்கும் போது, பிரம்மனுடனான உண்மையான அகங்காரத்தின் ஐக்கியத்தை உணர்ந்திட முடியும். பிறகு உடனடியாக பார்ப்பவன், பார்க்கப்படுவது போன்ற அனைத்து வேறுபாடுகளும் நீங்கப் பெற்று, ஜீவன் சுயமாக ஒளிரும் ஆத்மாவாகத் தன்னை உணர்ந்து கொள்கிறான்.
ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை உணர்வதற்கான சாதனம்.
இப்போது ஸ்ருதி ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை அடைய உதவும் சாதனத்தைக் கூறுகின்றது.
ஸ்லோகம்-16
ஶப்3தா3க்ஷரம் பரம் ப்3ரஹ்ம தஸ்மின் க்ஷீணே யத3க்ஷரம் |
தத்3 வித்;3வானக்ஷரம் த்4யாயேத்3யதீ3ச்சே2ச்சாந்திமாத்மனஹ || 16 ||
ஶப்3த3 அக்ஷரம் பரம் ப்3ரஹ்ம ஓம் என்ற ஒலி பரபிரம்மத்தைக் குறிக்கிறது.
தஸ்மின் க்ஷீணே யத்3 அக்ஷரம் அந்த சப்தம் அசப்தமாகும்போது பிரம்மம் வெளிப்படுகிறது.
யதி3 இச்சே2த் ஸாந்திம் ஆத்மனஹ ஒருவன் பிரம்மத்தின் நிலையான மேலான அமைதியை விரும்புகின்ற
தத்3 வித்;3வான் அக்ஷரம் த்4யாயேத3 அந்த புத்திசாலியே இந்த சப்தத்தை தியானிப்பான்.
'ஓம்” என்ற சப்தம் அழியாத பிரம்மனுக்கு சரியான குறியீடாகும். பிரம்மனுக்கு இதுவரை அறியப்பட்ட சிறந்த குறியீடான “ஓம்” உட்பட மற்ற அனைத்தும் மாறுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. ஓம் என்ற ஒலியும் இறுதியில் பிரம்மத்தின் உச்சத்தை அடையும் போது கரைந்து போக வேண்டும். மந்திரம் சத்தமாகத் தொடங்குகிறது, பின்னர் அது ஒரு கிசுகிசுப்பில் செய்யப்படுகிறது, இறுதியாக, அது மனதளவில் செய்யப்படுகிறது. அதன்பிறகு, ஒலி குறியீடு முற்றிலும் கரைந்து, பிரம்மம் மட்டுமே எஞ்சியுள்ளது. பிரம்மம் மாறாதது.
சமஸ்கிருதத்தில் உள்ள எழுத்துக்கள் அக்ஷரா-மாலா அல்லது எழுத்துக்களின் மாலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு எழுத்தும் அக்ஷரா எனப்படும். அக்ஷரா என்றால் அழியாதது என்றும் பொருள். எழுத்துக்கள் சொற்களாகவும், சொற்கள் வாக்கியங்களாகவும், வாக்கியங்கள் மொழியாகவும் அமைகின்றன. இலக்கியம், வரலாறு, அறிவியல் என அனைத்து அறிவும் மொழி வடிவில் உள்ளது. கணினியின் பைனரி மொழி அல்லது சூத்திரங்களின் கணித மொழி போன்ற பல்வேறு அறிவுத் துறைகள் அவற்றின் சொந்த குறிப்பிட்ட மொழிகளைக் கொண்டிருக்கலாம். அவை அனைத்தும் எழுத்துக்களால் ஆனவை. மொழியின் மூலம் அறிவு உலகில் நுழைவதற்கு நாம் எழுத்துக்களைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். வார்த்தைகள், அவற்றின் அர்த்தங்கள், வாக்கியங்கள் மற்றும் மொழிகள் மாறுகின்றன, ஆனால் எழுத்துக்களின் வடிவங்கள் அப்படியே இருக்கும். எனவே அவை பிரம்மனைப் போன்று அழிவற்றவை என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வாறாக 7வது ஸ்லோகத்தில் படித்த ஓம் உபாசனாவை மீண்டும்; நினைவுபடுத்திக் கொள்வோம். ஓசையும் எழுத்தும் பரபிரம்மத்தின் குறியீடுகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிரம்மன் என்பது இறுதியான தேடலாகும். பயணத்தின் ஒரு கட்டத்தில் சின்னங்களை விட்டுவிட வேண்டும். ஓம் சப்தத்தின் முடிவு அசப்தமாகும். இதுவே க்ஷீணே என்பதன் அர்த்தமாகும்.
ஸ்லோகம்-17
த்3வே வித்3யே வேதி3தவ்யே து ஶப்3த3ப்3ரஹ்ம பரம் ச யத் |
ஶப்3த3;ப்3ரஹ்மணி நிஷ்ணாத: பரம் ப்3ரஹ்மாதி4க3ச்ச2தி || 17 ||
த்3வே வித்3யே வேதி3தவ்யே து உண்மையில், இரண்டு வகையான அறிவை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஶப்3த3ப்3ரஹ்ம பரம் ச யத் ஒன்று பிரம்மம் என்ற சொல் குறிக்கின்ற பொருளைப் பற்றிய அறிவு மற்றொன்று பரபிரம்மத்தினுடைய அறிவாகும்.
ஶப்3த3;ப்3ரஹ்மணி நிஷ்ணாத: பிரம்மம் என்ற சொல் குறிக்கின்ற பொருளைப் பற்றிய அறிவை அடைந்தவன்
பரம் ப்3ரஹ்மாதி4க3ச்ச2தி அவன் இறுதியில் அவனை அறியாமலே மேலான அந்தப் பரபிரம்மத்தைப் பற்றிய அறிவை அடைவதற்கு முயற்சி செய்வான்.
பராவித்யா, அபராவித்யா என்ற இருவகையான அறிவு இருக்கின்றது. சப்த பிரம்மன் என்பது அபராவித்யா. பிரம்மத்தைத் தவிர மற்றவற்றை அடைய உதவி புரிகின்ற தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் அபராவித்யாவாகும். பிரம்மத்தை அடைவதற்கு உதவி செய்கின்ற அனைத்தும் பராவித்யாவாகும். முண்டக உபநிஷத் கருத்துப்படி, மேலான அறிவான பிரம்மத்தை அடைவதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கு அபராவித்யா அடிப்படையாக இருக்கின்றது என்று கருதப்படுகிறது. எனவே அபாராவித்யாவை குறைவாக மதிக்காமல், கீழாக எண்ணாமல் அந்த அறிவை மேலான பரபிரம்மத்தை அடையவேண்டும் என்ற நம்பிக்கையோடு வேத சாஸ்திரம் உபதேசிக்கின்றதை வாழ்க்கையில் கடைப்பிடித்து மனத்தூய்மையையும், நற்குணங்களையும் அடைந்திட வேண்டும். உலகத்திலுள்ள போகப்பொருட்களின் நிலையாமையையும், வரையறுக்கப்பட்ட தன்மையையும் உணர்ந்துக் கொண்டு நிலையான, வரையறுக்கப்படாத பிரம்மத்தைப் பற்றிய அறிவை அடைந்திட வேண்டும் என்ற போராவலை வளர்த்துக் கொள்ளவேண்டும். அபராவித்யா என்பது கர்மகாண்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற கர்மங்களையும், உபாசனைகளையும் குறிக்கின்றது. இவைகள் சாதகனுக்கு மனத்தூய்மையைக் கொடுத்து ஞானயோக பாதைக்கு செல்வதற்க உதவி புரிகின்றது. ஒருவன் அபராவித்யாவில் உள்ள குறைகளை நன்குணர்ந்ததும், மேலான அறிவை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கு எடுத்துச் செல்லும்.
ஸ்லோகம்-18
க்3ரந்த2மப்4யஸ்ய மேதா4வீ ஞானவிக்3ஞாயனயதத்பர: |
பலாலமிவ தா3ன்யார்தி2 தயஜேத்3 க்3ரந்த2மஷேஷத: || 18 ||
க்3ரந்த2மப்4யஸ்ய மேதா4வீ - வேத சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்த சாதகன்
ஞானவிக்3ஞாயனயதத்பர: அறிவு மற்றும் ஞானத்தைப் பெறுவதற்கான நோக்கம்
பலாலமிவ தா3ன்யார்தி2 நெல்லை அடைந்தவன் அதிலுள்ள உமியை நீக்கி அரிசியை எடுத்துக் கொள்வது போல
தயஜேத்3 க்3ரந்த2மஷேஷத: ஞானத்தை அடைந்தவுடன் அனைத்து வேத சாஸ்திரங்களையும் ஒதுக்கிவிட வேண்டும். .
ஆத்மஞானம் என்பது கல்விப் படிப்பு அல்ல. இது தியானத்தின் மூலம் ஒருவர் அடைகின்ற உண்மையான அனுபவம். அதுதான் நேரடி அனுபவம் அல்லது பிரம்மத்தைப் பற்றிய அபரோக்ஷ ஞானத்தைப் பெறுவதற்கான ஒரே வழி. அதைத்; தவிர உள்ள மற்ற அறிவை துறக்க வேண்டும் என்பார்கள். அடைந்த ஞானத்தில் நிலைபெறும் நிலையை அடையும்போது, இந்த பரந்த அறிவாற்றல் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். தியானத்தின் போது வெளிப்புற சிந்தனைகளனைத்தும் கைவிடும்போது இது தினமும் நிகழ்கிறது. இது வேத புத்தகங்களை தூக்கி எறிவதை அர்த்தப்படுத்துவதில்லை, மாறாக அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேடலின் நடைமுறை அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.
போல்வால்ட் என்ற விளையாட்டில் ஒருவர் நீண்ட கம்பத்துடன் ஓடுகிறார். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர் அதை தரையில் துளைத்து, மறுமுனையில் ஒட்டிக்கொண்டு, கம்பத்தை தனது ஆதரவாகக் கொண்டு மேலே குதிக்கிறார். அவர் மிக உயர்ந்த நிலையை அடைந்ததும், அவர் கம்பத்தை கைவிட்டு, கிடைமட்ட கம்பைத் தாண்டி தன்னைத் தானே தூக்கி எறிய வேண்டும். கம்பத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அந்த வீரரை உயரமான இடத்திற்கு கொண்டு செல்ல அதன் நோக்கத்தை நிறைவேற்றிய கம்பம், அதன் பிறகு அப்புறப்படுத்தப்பட்டது. ஒருவர் பெற்ற வேதம் மற்றும் உலக அறிவைப் பற்றிய அனைத்து ஆய்வுகளிலும் போல்வால்ட் கம்பம் போன்றது. ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை நம்மை மேலும் மேலும் மேலும் உயர்த்துவது அவசியம். தேவையான உயரத்தை அடைந்ததும் கம்பை விட்டுவிடுவது போல ஞானத்தை அடைந்ததும் சாஸ்திரங்களை ஒதுக்கிவிட வேண்டும். மற்றொரு உதாரணம், அறுவடை செய்த பிறகு பெரும்பாலான நேரங்களில் உமி தேவைப்படுகிறது. இந்த உமி அரிசியைப் பாதுகாக்கிறது. கடைசி கட்டத்தில் தான், அரிசியை உமியில் இருந்து பிரித்து சாப்பிட முடியும். உமியை உடைத்து அரிசியை அடைந்தவுடன், அதற்கு மேல் பயன் இல்லாததால் உமி அப்புறப்படுத்தப்படுகிறது. அதேபோல ஞானத்தை அடைந்ததும் சாஸ்திரங்களை ஒதுக்கிவிட வேண்டும். அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.
ஸ்லோகம்-19 (உயர்ந்த ஞானத்திற்கு தயார்செய்தல்)
க3வாமனேகவர்ணானாம் க்ஷீரஸ்யாப்யேகவர்ணதா |
க்ஷீரவத்பஷ்யதே ஞானம் லிங்கி3னஸ்து க3வாம் யதா2 || 19 ||
க3வாம் அனேக வர்ணானாம் பசுக்கள் பல வர்ணங்களில் இருந்தாலும்
க்ஷீரஸ்ய அபி ஏக வர்ணதா அவைகள் கொடுக்கின்ற பால் ஒரே நிறத்தில்தான் இருக்கும்.
க்ஷீரவத்பஷ்யதே ஞானம் ஞானி பிரம்மஞானத்தை பால் போலவும்
லிங்கி3னஹ அஸ்து க3வாம் யதா2 ஞானத்தைக் கொடுக்கின்ற பலவிதமான வேதசாஸ்திரங்களை பசுக்களாகவும் பார்க்கிறான்.
அடுத்த ஸ்லோகத்தில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது. ஆத்மா வெவ்வேறு உடல்களில் இருந்தாலும் அது ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உடல்கள் வெவ்வேறு மனிதர்களில் விதவிதமாக நடந்து கொள்கின்றன. எல்லா உயிரினங்களிலும், தூய்மையான மனதாலும், தீவிர விசாரத்தின் மூலமும், இடைவிடாத ஆத்மதியானத்தினால் மட்டுமே அறியப்படக்கூடிய ஒரு ஆத்மா மட்டுமே உள்ளது.
இந்த கருத்து இன்னொரு விதத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பசு மேய்ப்பவர்கள் கவனமாக ஆராய்ந்து பசுவின் பாலை உட்கொள்வதைப் போல, ஞானமுள்ள மனிதன் கவனமாக ஆராய்ந்து வேதங்களிலிருந்து ஞானத்தைப் பெறுகிறான்.
தியானம் அவசியம்.
இந்த நோக்கத்திற்காக, மனமானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும், மேலும் நமது தேடலின் பொருளான ஆத்மாவை அடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்:
ஸ்லோகம்-20
க்4ருதமிவ பயஸி நிகூ3ட4ம் பூ4தே ச வஸதி விக்;3ஞானம் |
ஸததம் மனஸி மந்த2யிதவ்யம் மனோ மந்தா2னபூதேன || 20 ||
க்4ருதமிவ பயஸி நிகூ3ட4ம் பாலில் வெண்ணெய் மறைந்திருப்பது போல
பூ4தே ச வஸதி விக்3ஞானம் ஒவ்வொரு உயிரினத்திலும் உணர்வும் பேரின்பமும் உள்ள ஆத்மா மறைந்துள்ளது.
மனோ மந்தா2னபூதேன பாலை கடையும் மத்தைப் போல மனதைத் தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுத்தி
ஸததம் மனஸி மந்த2யிதவ்யம் ஆத்மாவை உணர்வதற்கு ஒருவர் தொடர்ந்து தியானிக்க வேண்டும்.
ஆத்மாவானது நமது மன உணர்விலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. அது மனதில் இருக்கிறது, ஆனால் மனதில் உள்ள அசுத்தங்களால் அதை பார்க்க முடியவில்லை. இது பாலில் மறைந்திருக்கின்ற வெண்ணெய் போன்றது; பாலில் வெண்ணெயைப் பார்க்க முடியாது, ஆனால் அது இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆத்மாவை பொறுத்தவரை, அது இருக்கிறது என்று நம்புவதற்கு நாம் வேதத்தில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மனதைக் அதை அடைவதற்கு ஈடுபடுத்த எண்ணுவோம்.
ஆத்மஞானத்தை அடைவது என்பது கடின உழைப்பு. ஆத்மஞானத்தை அடைவதற்கு மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். மனதில் தீவிர ஆத்மஇச்சை இருக்க வேண்டும். மனத்தூய்மையை கர்மயோகத்தின் மூலமாக அடைந்திட வேண்டும். குரு உபதேசித்த ஆத்மவித்யாவை சிரவண, மனன. நிதித்யாசன என்கின்ற சாதனங்களின் மூலமாகக் கடையவேண்டும். ஆத்மா என்கின்ற வெண்ணெயை வெளியே கொண்டு வருவதற்கு அது செய்யப்பட வேண்டும். ஞானத்தை அடையும்; வரை நெடுங்காலமாக உழைக்க வேண்டும். அது வரும்போது, பால் கடைகின்ற செயல்பாட்டில் வெண்ணெய் திடீரெனத் தோன்றுவது போல் திடீரென்று ஆத்மஞானத்தை அடைவோம்.
உணர்வும் பேரின்பமும் உள்ள ஆத்மா, உடலில் மறைந்துள்ளது. மனமே, நீ எப்போதும் ஆத்மாவையே தியானம் செய். இந்த உருவகத்தில், தயிர் அனைத்து உயிரினங்களையும் குறிக்கிறது, மேலும் மனம் தயிரைக் கடைகின்ற குச்சியாகவும், கயிறானது, 'நான் பிரம்மன்' என்ற கருத்தை குறிக்கிறது; மற்றும் வெண்ணெய், ஆத்மாவாகவும், வெண்ணெய் பிரித்தெடுத்தல் மோட்சத்தையும் குறிக்கிறது, இது சம்சாரக் கடலில் இருந்து ஜீவனை கரையேற்றுகிறது.
ஸ்லோகம்-21
ஞானநேத்ரம் ஸமாதா4ய சோத்3த4ரேத்3வஹ்னிவத்பரம் |
நிஷ்கலம் நிஸ்சலம் ஶாந்தம் தத்3ப்3ரஹ்மாஹமிதி ஸம்ருதம் || 21 ||
ஞானநேத்ரம் ஸமாதா4ய அறிவு என்கின்ற கயிற்றை பிடித்து அரணி கட்டையை கடைவதன் மூலம்
ச உத்3த4ரேத்3 வஹ்னிவத் பரம் ஒருவன் பிரம்மம் என்கின்ற நெருப்பை வெளிக்கொண்டு வருவதைப் போன்று
நிஷ்கலம் நிஸ்சலம் ஶாந்தம் உறுப்புகளற்ற, மாறாத, அமைதியான
தத்3 ப்3ரஹ்ம அஹம் இதி ஸம்ருதம் அந்த பிரம்மமே நான் என்று சிந்திக்க வேண்டும்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் பிரம்மத்தை அடையும் முயற்சியில் இருப்பவரை அதை உணர்தலின் உச்சத்திற்கு கொண்வு செல்வதற்கு தன்னைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஸ்லோகத்தில் அரணிக் கட்டையைத் விடாமல் கடைவதன் மூலம் அடைகின்ற நெருப்பை உவமையாக கூறப்பட்டிருக்கிறது.
இரண்டு மரத்துண்டுகளுக்கு இடையே உராய்வு ஏற்படுவதே இது பயன்படுத்தும் முறையானது மரத்தின் கீழ் பகுதி அரை வட்டக் கிண்ணம் போல வடிவமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மரத்தின் மேல் பகுதி, கீழ் கிண்ணத்தில் பொருந்தக் கூடிய அரை வட்ட பந்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் துண்டு ஒரு கடைகின்ற கம்பியாக செயல்படுகிறது. இரண்டு மரத் துண்டுகளுக்கு இடையே பெரும் உராய்வு ஏற்படுகிறது. மேல் தடியைத் திருப்புவதற்காக, மேல் மரத்தின் உருளை சுழலைச் சுற்றி ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது, அதன் கீழ் முனையில் பந்து வடிவத்தைக் கொண்டுள்ளது. கம்பியைத் திருப்புவதற்கும், கீழ் மரத்துடன் உராய்வு ஏற்படுவதற்கும் கயிறு இழுக்கப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, ஒரு தீப்பொறி உருவாகிறது. தீப்பொறி கீழ் கிண்ணத்தில் வைக்கப்படும் பருத்தியின் ஒரு பகுதியை தீப்பிடிக்கச் செய்கிறது. அந்த நெருப்பு கவனமாகப் பராமரிக்கப்பட்டு, ஒரு தீ குண்டத்திற்கு மாற்றப்படுகிறது, அங்கு அது வளர்க்கப்பட்டு வலுவான நெருப்பாக எரிக்கப்படுகிறது.
ஆரணியின் கீழ்மரம் ஈகோ; ஆரணியின் மேல்மரம் ஓம் மந்திரம் அல்லது சாதனத்தின் நிலையான பயிற்சி ஆகும். கடைகின்ற தடி என்பது புத்தி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தி கடைகின்ற செயல்முறை சுய அறிவாகும். அகந்தையை எரித்து சமாதி அனுபவத்தைத் தரும் பிரம்மகார விருத்திதான் உராய்கின்ற நெருப்பாகும்.
ஸ்லோகம்-22
ஸர்வபூ4தாதி4வாஸம் யத்3பூ4தேஷு ச வஸத்யபி |
ஸர்வானுக்3ராஹகத்வேன தத3ஸ்ம்யஹம் வாஸுதேவ: |
தத3ஸ்ம்யஹம் வாஸுதேவ: இதி || 22 ||
ஸர்வபூ4தாதி4வாஸம் யத்3 எல்லா உயிர்களுக்கும் உறைவிடமாக இருப்பவர்,
பூ4தேஷு ச வஸத் அபி மேலும் எல்லா உயிர்களிலும் வாழ்பவர்
ஸர்வ அனுக்3ராஹக த்வேன அனைத்திலும் ஒரு கருணையுள்ள பிரசன்னமாக
தத்3 அஸ்மி அஹம் வாஸுதேவ அந்த வாசுதேவனே நான்
தத்3 அஸ்மி அஹம் வாஸுதேவ இதி அந்த வாசுதேவனே நான்
எல்லா உயிர்களிலும் பிரம்மத்தைக் காணும் அனுபவமே உணர்தலின் இறுதிச் சோதனையாகும். ஞானயோக சாதகன் வியஷ்டி என்கின்ற தனிநபர் மட்டத்திலிருந்து, சமஷ்டி என்கின்ற மொத்த மட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்தத் தொடங்குகிறான். இது தன்னைப் பற்றிய உண்மை ஸ்வரூபத்தின் மிகப் பொpய முன்னேற்றம். இதுதான் தான் யார் என்ற உண்மையை உணர்ந்ததிற்கான சான்றாகும். ஞானியால் எல்லா உயிர்களிலும் தன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த மனநிலையே சர்வாத்ம பாவம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இதுவே மனிதகுலத்திற்கு உபநிஷத்துக்கள் உபதேசிக்கின்ற மாபெரும் குறிக்கோள் ஆகும். அதுவே தேடுபவர்களை இறுதிவரை வேதாந்தத்தின் பக்கம் திரும்பச் செய்கிறது.
எல்லா உயிரினங்களுடனும் ஒற்றுமையை உணரும் இந்த தெய்வீக சர்வாத்ம பாவத்தைப் பெறும்போது, நம் வாழ்க்கையில் வெறுப்பேயிருக்காது. சாதி, மதம், தேசியம் போன்ற அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி உயர்கிறோம். அதிக வேறுபாடுகள் அதிக வெறித்தனத்தைக் குறிக்கின்றன; குறைவான வேறுபாடுகள் அதிக அன்பு, அதிக இரக்கம், அதிக சகிப்புத்தன்மை மற்றும் அதிக மரியாதையைக் குறிக்கின்றன.
ஒருவர் தனது அகங்காரத்தை நீக்கிவிடுவதன் மூலம் அனைத்து உயிரினங்களையும் தானாகவே கருதுகின்ற மனநிலையை அடைந்திடுவார்.
ஓம் தத் ஸத்
--oo000oo—
--------------------------------------------------------------------------------------------------------------------
Reference:
1. Amritabandu Upanishad – The drop of immortality – Reflections by Swamy Gurubakthananda.
2. Amritabandu Upanishad - A.Mahadeva Sastri, B.A.,-1898