Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-09. Show all posts
Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-09. Show all posts

Thursday, November 16, 2017

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-9

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-9
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது14-03-2022
ஸ்லோகம்-11
ஆனந்தா நாம தே லோகா - மகிழ்ச்சியற்ற உலகத்தையோ, சரீரத்தையோ அடைகின்றான் ( புழு, பூச்சி மற்றும் விலங்குகளாக பிறத்தல்)
தமஸ ஆவ்ருத: - அறியாமையால் மூடப்பட்டவனாக , ஆத்மஞானம் அடையும் வாய்ப்பே இல்லாமல் இருத்தல்
ஆவித்3வாம்ஸ: ஆவ்ருதோ4 - ஆத்மாவை அறியாதவர்கள், ஆத்மாவை அடையும் பாதையை அறியாதவர்கள், கீழான லோகத்தை அடைகிறார்கள்.
 
ஸ்லோகம்-12
இந்த மந்திரத்தின் விளக்கத்தை வித்யாரண்யர் அவர்கள் தனது பஞ்சதசி என்னும் நூலில் திருப்தி தீபம் என்னும் அத்யாயத்தில் 290 ஸ்லோகங்களில் எழுதியிருக்கிறார்..
புருஷ: - சாதகன்;
அயம் - அந்த பரமாத்மா;
அஸ்மி இதி - நானாக இருக்கிறேன்
ஆத்மானம் விஜானீயாத் சேதி3 - தன்னை அறிவானே என்றால்
கிமிச்ச2ன் கஸ்ய காமாய - எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக
ஶரீரம் அனுஸம்ஜ்வேரேத் - தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?
 
ஒருவன் தன்னை பரமாத்மாவாக என்று அறிந்துகொண்டால் அவன் எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?
 
சொல் விளக்கம்
1.   புருஷஹஜீவாத்மா / மனிதன் / சாதகன்
ஜீவன் என்ற சொல்லில் மூன்று தத்துவங்கள் உள்ளது. அவைகள்
1. கூடஸ்தன்மாறாத சைதன்யம்,
2. சிதாபாஸன்பிரதிபிம்ப சைதன்யம் (மாற்றத்திற்குட்பட்ட பொய்யான சைதன்யம்),
3. சூட்சும சரீரம்அந்தக்கரணம்
ஆகியவைகளாகும்.
 
கூடஸ்தனை ஏன் ஜீவனுடன் சேர்க்க வேண்டுமென்றால் சிதாபாசன் இருக்கும்போது அதற்கு ஆதாரமான கூடஸ்தனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்கூடஸ்தனை சேர்க்கவில்லை என்றால் மோட்சம் என்பது தன்னையே அழித்துக் கொள்கின்ற மாதிரி இருக்கும்இப்போது நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அதை சேர்த்துக் கொண்டால்தான் இரண்டும் அழிந்தாலும் கூடஸ்தன் இருந்து கொண்டிருக்கும்ஜீவன் முக்தி நிலைவரை ஜீவாத்மாவை புருஷன் என்று எடுத்துக் கொள்ளலாம்.
 
2.   சேத்: இங்கு இந்த சொல் ஆத்மாவை அதிக அறியும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் குறிக்கிறது
3.   ஆத்மானம்: தன்னை என்று பொருள்நான் என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
a.   வாச்யார்த்தம்: முக்கிய அர்த்தம், எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் அகங்காரம் அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம்.
b.   ஞானியின் அகங்காரம்: ஞானத்தை அடைந்தவனுக்கு நான் என்பது கூடஸ்தனை குறிக்கின்றது நன்றாக தெரியும்ஆனால் விவகாரம் செய்யும் போது அகங்காரத்தைத்தான் பயன்படுத்துவான். இவனது அகங்காரம் பொய்யாக கோபப்படுவது போன்றதுதான்சாதாரண மனிதர்களிடத்தில் இது காண்பது மிகவும் துர்லபம் (அரிது)
c.   ஞானி பயன்படுத்துவது: மகாவாக்கிய உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது நான் என்ற சொல்லுக்கு கூடஸ்தனைத்தான் எடுத்துக் கொள்வார்பிறகு தன்னுடைய நிதித்யாஸனத்தின் போதும் நான் என்பதை தன் ஆத்மாவாகத்தான் எடுத்துக் கொள்வார்.
4.   விஜானீயத்: நான் பிரம்மன் என்று அறிபவன் கூடஸ்தனா, சிதாபாஸனா, சூட்சும சரீரமா என்ற சந்தேகம் வரலாம்பிரம்மன் நான் என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லைசூட்சும சரீரமோ ஜடம் அதனால் அறிய முடியாது. எனவே சிதாபாசனோ அல்லது ஜீவனோதான் அறிபவன் என்று சொல்லலாம்அஹம் பிரம்மாஸ்மி என்று அறிபவன் சிதாபாசன்பிரதிபிம்பமானது நிஜமான பொருளை விட வேறொன்றா அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்று ஆராயும்போது எப்படி பிரதிபிம்ப சூரியன் முழுமையாக வேறொன்றுமல்ல, முழுமையாக ஒன்றேயும் அல்ல அதேபோல புத்தியில் பிரதிபிம்பிக்கும் சைதன்யமான சிதாபாசன்இவன் தன் மூலமான பிரம்மத்தில் அபிமானிக்கும் போது அறிபவனாகிறான்.
5.   அயம்: பிரம்மன் என்னிடத்தில் நன்றாக பிரகாசிக்கின்றது, பிரம்மமே என்னுடைய ஆத்மாதான். இந்த மாதிரி புரிந்து கொள்கிறான் இதுவே அபரோக்ஷ ஞானம் (அயம்இது அபரோக்ஷ வஸ்துஅருகில் இருக்கின்ற ஒரு பொருள்.
6.   கிமிச்சன்: அனுபவிக்கப்படும் பொருள் இல்லை அதனால் ஆசை இல்லைஇவன் எதை அடைய ஆசைப்படுவான்? இவனுக்கு ஆசைப்படும் விஷயங்கள், பொருட்கள் எதுவுமே இல்லை ஏனென்றால் எல்லாமும் மித்யாவாக தெரிவதால், அனுபவிக்க வேண்டிய பொருளோ, விஷயமோ இல்லைஜகத் மித்யா என்ற ஞானத்தினால் இவன் இவ்வாறு நினைக்கின்றான்.
7.   கஸ்ய காமாய:  யாருடைய பயனுக்காக இவன் துயரப்படுவான்? போக்த்ரு நிஷேதம்அனுபவிப்பவன் இல்லை என்று தீர்மானித்தல்இந்த அறிவு ஆத்மாவினுடைய அஸங்கத்தை அறிந்து கொள்வதனால் வருகிறதுநான் யாருடனும் சங்கம் வைத்து கொள்ள மாட்டேன் அனுபவிக்கப்படும் பொருளோடு உள்ள இந்திரியங்களின் சங்கத்தை விட்டு விடுவதால்நான் அஸங்கம், ஆத்மா அஸங்கம் என்ற அறிவால் அனுபவிப்பவன் இல்லாமல் போய் விடுகிறான்தன்னுடைய இன்பம் அனுபவிப்பதற்குத்தான் உலகம் படைக்கப்பட்டிருக்கிறது என்று அத்யாரோபம் செய்து பிறகு அதை நீக்கி விடுகிறது.
8.   சரீரம் அனுஸம்ஜ்வரேத்: ஸ்தூல சரீரம் எண்ணற்ற நோய்களால் தாக்கப்படுகிறதுசூட்சும சரீரத்தில் காம-க்ரோதங்களினால் அனுபவிக்கும் சம்சாரம், சம-தமாதிகளை அடையாத நிலையில் ஏற்படும் சம்சாரம்காரண சரீரம்- துக்கத்திற்கு விதையாக இருக்கிறது. நோயை நீக்க வேண்டுமென்றால் சரீரத்தைத்தான் நீக்க வேண்டும்சம்சாரம் போக வேண்டுமானால் மூன்று சரீரத்தையும் நீக்க வேண்டும்அதில் உள்ள அபிமானத்தை நீக்க வேண்டும்இப்படிபட்ட நிலையில் துயரம் நீங்கி மனநிறைவு வந்தடையும்.
 
வித்யாரண்யரின் விளக்கம்:
சம்சாரத்திலிருந்து மோக்ஷம வரை ஏழு படிகள் உள்ளதாக விளக்கியுள்ளார்அவைகள்
1.   அக்ஞானம் - அறியாமை
2.   ஆவரணம் - அக்ஞானத்தை வெளிப்படுத்துதல், இது எனது அறியாமை என்று தெரிந்து கொள்ளுதல்
3.   விக்க்ஷேபம்சோகரூபம்துயரப்படுதல்
4.   பரோக்ஷ ஞானம்
5.   அபரோக்ஷ ஞானம்
6.   சோகநிவிருத்தி
7.   திருப்திமனநிறைவு
பத்தாவது மனிதன் கதையில் இந்த ஏழு சொற்களின் விளக்கத்தைப் பொருத்தி காட்டுகிறார்.
1.   அக்ஞானம்பத்தாவது மனிதன் காணவில்லை
2.   ஆவரணம் எண்ணியவுடன் பத்தாவது மனிதன் இல்லையென்று அறிதல்
3.   விக்க்ஷேபம்பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்ற துயரம்
4.   பரோக்ஷ ஞானம்வேறொருவன் பத்தாவது மனிதன் இருக்கின்றான் என்று சொல்லும்போது அறிந்து கொள்வது
5.   அபரோக்ஷ ஞானம்- அவனை வரிசையில் நிற்க வைத்து எண்ணியவுடன், தான்தான் பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்கின்றான்.
6.   சோகநிவிருத்திமனதிலடைந்த சோகம் நீங்குதல்
7.   திருப்திஅதனால் மனநிறைவு அடைதல்
 
இதேபோல எல்லோரும் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றார்கள்இதே ஜீவன் நான் யார் என்று தெரியவில்லை என்று குழம்புகின்றான். இதுவே விக்ஷேபம். சம்சாரம் என்பது விக்ஷேபம், பரோக்ஷ ஞானத்தினால் நித்தியமான பிரம்ம இருக்கின்றது என்று அறிகின்றான்பிரம்மனாக நான் இருக்கின்றேன் என்ற ஞானம் அபரோக்ஷ ஞானம் அதனால் துயரங்கள் நீங்கி மனநிறைவை அடைகின்றான்இதில் முதல் மூன்று நிலைகள் சம்சாரத்தை விளக்குகின்றது4 & 5 நிலைகள் மோட்ச சாதனமாகவும், 6 & 7 மோட்ச பலனையும் விளக்குகிறது.
 
பரோக்ஷ ஞானம்உபநிஷத்தினுடைய உபதேசத்திலிருந்து கிடைக்கின்றதுபிரம்மத்தைப் பற்றி இருப்பை சொல்கின்ற வாக்கியத்திலிருந்து கிடைக்கிறது
அபரோக்ஷ ஞானம்மகா வாக்கியத்திலிருந்து இந்த அறிவை அடைகிறோம்
பதார்த்த ஞானம் : தத்வமஸி என்ற வாக்கியத்தில் உள்ள பதங்களின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளுதல்
லட்சியார்த்தம்த்வம்இரண்டு அர்த்தம்அனாத்மாவை நீக்கி புரிந்து கொள்வதுதத் பதத்தில் உலகத்தை நீக்கி அதற்கு ஆதாரமான பிரம்மத்தை எடுத்துக் கொள்ளுதல்
அஸிஇரண்டையும் ஐக்கியப்படுத்தி ஞானம் பெறுவது.
 
ஸ்லோகம்-13
அஸ்மின் ஸந்தேஹயே - இந்த உலகமானது அக்னியால், வாயுவால், நீரால், ப்ருதிவியால் துயரப்படுத்தப்படுகிறது.
க3ஹனம் - அனர்த்தத்தை கொடுக்கின்ற, விவேகத்திற்கு எதிராக இருக்கின்ற, துயரத்தை அடையும் நிலையிலுள்ள சரீரம்
ஆத்மா ப்ரவிஷ்ட - ஆத்மா இந்த சரீரத்தில் நுழைந்து தங்கியுள்ளது.
யஸ்ய - இந்த அதிகாரி
அனுவித்த: - கஷ்டமான இந்த உடலில் நுழைந்த ஆத்மாவுக்குள் இவன் நுழைந்து விட்டான். அதை அடைந்தும் விட்டான். ஞானத்தால் ஆத்மாவை அடைந்து விட்டான்.
ப்ரதிபு3த்3த4: - மனதில் எழும் எண்ணங்களுக்கு எல்லாம் ஆத்மாவே சாட்சியாக இருப்பதை அறிந்துள்ளான்இப்படிபட்ட சரீரத்திற்குள் இருக்கும் ஆத்மாவை இப்படியாக அறிந்து கொண்டவன்.
ஸ: விஶ்வக்ருத் - அவன் அனைத்தும் செய்து முடித்தவனாகிறான்
ஸ: ஸர்வஸ்ய கர்தா - இந்த ஞானியே பரமாத்மாவாகின்றான்அனைத்துக்கும் கர்த்தாவாகிய ஈஸ்வரனேதான் நான் என்ற நிலையை அடைகிறான்.
தஸ்ய லோக: -  அவனுடைய உலகம் பிரம்மமேதான்இந்த பொய்யான உலகம் அவனுடையதாக இருக்காதுஅவன் தன்னை பிரம்மாகவே நினக்கின்றான்.
ஸ உ லோக ஏவ - அவனே உலகம், அவனே அனைத்துமாக இருக்கின்றான்.
 
ஸ்லோகம்-14
மனித ஜென்மத்தின் உயர்வை இந்த மந்திரம் உரைக்கிறதுஞானி அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்ற மனநிறைவுடன் இருக்கின்றான்
இஹ ஏவ ஸந்த: - இந்த பிறவியில் இந்த சரீரத்தில் இருந்துக் கொண்டு
தத்3 வயம் அந்த பிரம்மத்தை நாங்கள்
அத2 வித்3ம:எப்படியோ அறிந்துகொண்டோம்
ந சேத்3 அவேதி3: ஒருவேளை நாங்கள் அறியாமல் இருந்திருந்தால்
மஹதி வினஷ்டி அதனால் அடையும் இழப்பு மிகப்பெரியது.
யே தத்3 விது3:யாரெல்லாம் இந்த ஆத்மாவை அறிகிறார்களோ
தே அம்ருதஸ்ய ப4வதி அவர்கள் மரணமற்ற நிலையை அடைவார்கள்
அத தத்ரே து:க2மேவ அபியந்தி அதை அறியாதவர்கள் துயரத்தைத்தான் அடைகின்றார்கள், சம்சார வலைக்குள்தான் இருப்பார்கள்; பிறவி சக்கரத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.
 
ஸ்லோகம்-15
யதா3 ஏகம ஆத்மானம் - எப்பொழுது இந்த ஆத்மாவை
தே3வம் அனுபஶ்யதி - ஈஸ்வரனாக அறிகின்றார்களோ குருவினுடைய துணைக்கொண்டும், பிரமானத்தின் மூலமாக வந்த ஞானம்
அஞ்ஜஸா - அபரோக்ஷமாக, நேரிடையாக சந்தேகமில்லாமல் அறிந்து
ஈஶானம் - ஈஸ்வரனாக இருக்கின்ற தேவன்
பூ4தப4வ்யஸ்ய - மூன்று காலத்திலும் அனுபவிக்கும் விஷயங்களை தருகின்ற ஈஸ்வரன்
ந ததோ விஜுகு3ப்ஸதே - இப்படிபட்ட ஈஸ்வரனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள விரும்பமாட்டான்அவரிடம் பயம் கொள்ள மாட்டான்அவர் தன்னிடமிருந்து வேறுபட்டவர் என்று நினைக்காததினால் இவ்வாறு இருக்கமாட்டான்.
ந ததோ விஜுகு3ப்ஸதே – யாரையும் நிந்திக்க மாட்டான், தன்னையும் நிந்திக்க மாட்டான்யாரையும் குறைக்கூறமாட்டான்யார் மீதும் வெறுப்புக் கொள்ளமாட்டான்.
 
ஸ்லோகம்-16
இதில் ஈஸ்வர ஸ்வரூபம் விளக்கப்படுகிறதுகாலத்தை வென்றவர்காலமே அவரின் ஆணைக்கு கட்டுபட்டு இருக்கிறதுஅவருக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறது.
யஸ்மாத்3 - எந்த ஈஸ்வரனுக்கு;
அவாம்க - கீழ்ப்பணிந்து, கட்டுப்பட்டு
ஸம்வஸ்தர: பரிவர்ததே - கால தத்துவம் செயல்பட்டு வருகின்றதோ, அவர்
ஜ்யோதிஷாம் ஜ்யோதி: - ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கின்றார்
அமுத்வம் - நித்தியமானவராக இருப்பவர்
தத்3 தேவா: - இப்படிபட்ட ஈஸ்வரனை தேவர்கள்
ஆயுஹோ உபாஸதே - ஆயுள் என்று உபாஸிக்கிறார்கள்.
ஈஸ்வரனை ஆயுள் கொடுப்பவர் என்று உபாஸனை செய்தால் நீண்டநாள் வாழலாம்.
 
ஸ்லோகம்-17
அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மா, நான் அதுவாக இருக்கிறேன்.
யஸ்மின்எந்த பிரம்மனிடத்தில்;
பிரதிஷ்டிதாதாங்கியிருப்பது; சார்ந்திருப்பது;
ஆகாஷஹஅந்த மாயா, அவ்யாக்ருதம்வெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சம்.
பஞ்ச, பஞ்ச ஜனாஹவெளித்தோற்றத்திற்கு வந்தவைகள், இது ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. அவைகள்,
1.   ஆதித்ய முதலிய ஜோதிகள்.
2.   பிராண தத்துவம்
3.   கண்
4.   ஸ்ரோத்ரம்
5.   மனம்
வித்துவான்இப்படி என்னை நான் அறிந்து காரணத்தினால்
அம்ருதஹ - நான் மரணமற்றவனாக இருக்கிறேன், நித்தியமான பிரம்மனாக இருக்கின்றேன்.
 
ஸ்லோகம்-18
தேயார்,
புராணம்அனந்தம், நித்தியம், ஸனாதனம்;
அக்ரியம்அநாதி,
நிசித்யுஹஎன்று பிரம்மத்தை நிச்சயம் செய்கிறார்களோ,
ஆதி-அந்தம் இல்லாத பிரம்மத்தை பிராணனுக்கு பிராணனாக, கண்ணுக்கு கண்ணாக, காதுக்கு காதாக, மனதுக்கு மனதாக யார் அறிகிறார்களோ அவர்கள் பிரம்மத்தை நிச்சயமாக உறுதியாக அடைந்தவைகளாகிறார்கள்இந்திரியங்கள், மனம் சுபாவமாக ஜடம், ஆனால் இவைகளிடத்தில் சேதனத்தன்மை இருப்பதைப் பார்க்கிறோம்எனவே இவைகள் செயலுக்கு இவைகளுக்கும் வேறாக ஒன்று இருப்பதை அறிய முடிகிறது. அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ளலாம், இதுவே இவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.
 
ஸ்லோகம்-19
ஆத்மஞானத்துக்கு பொதுவாக இருக்கின்ற கரணம் எது? \
ஜகத் மித்யா என்ற ஞானம் இல்லையென்றால் சம்சாரத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மனஸா ஏவ அனுத்ரஷ்டவ்யம்இந்த ஆத்மாவானது மனதால்தான் அறிய முடியும்
எனவே இதுதான் பொதுவாக கரணமாக இருக்கிறதுஆத்மஞானமும், அனாத்மா ஞானமும் மனதினாலேதான் அடைவதால் இது பொதுவாக இருக்கிறதுஇந்த மனதை தூய்மையாக்க வேண்டும்அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்திருக்க வேண்டும். சாஸ்திரம், குரு பிரமாணம் மூலம் ஆத்மாவை மனதினால்தான் அடைய முடியும்.
நேஹ நாநா அஸ்தி கிஞ்சனத்வைத (வேற்றுமைகள்) கொஞ்சமும் இல்லாமலிருக்கின்ற
இஹஇந்த பிரம்மனிடத்தில்
இந்த பிரம்மனிடத்தில் விதவிதமான வேற்றுமைகளை யார் பார்க்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து விடுதலையடைவதில்லைபிறப்பு-இறப்பு சுழலில் சிக்கிக் கொண்டு சம்சாரத்தை அனுபவிப்பார்கள்.
 
பிரத்யக்ஷ பிரமாணம் ஒரு பொருளினுடைய தோற்றத்தை மட்டும்தான் காட்டுகிறதுமனதுதான் இது சத்தியமா இல்லையா என்று தீர்மானிக்கும்பிரத்யக்ஷ பிரமாணம் இருப்பைக் காட்டுகிறதுசாஸ்திரம் அந்தப்பொருளின் சத்தியத்வத்தை  உபதேசிக்கிறது.

ஸ்லோகம்-20
ஏகதாஅத்வைத (இரண்டற்ற) தன்மையுடையதாக ஆத்மாவை அறிய வேண்டும்.
ஏவ அனுதிரஷ்டவ்யம்இதற்குள்ளும் வேற்றுமையில்லை
ஏதத் அப்ரமேயம்இதை அளவிடமுடியாது. குணங்களைத்தான் அளக்க முடியும். ஆத்மா குணங்களற்றதுஎந்தப்பிரமானத்தினாலும் அறிய முடியாது.
த்ருவம்என்றும் இருப்பது; நித்தியமானது
விரஜ:தூய்மையானது (ரஜஹஅசுத்தமானது) தர்மமும்-அதர்மமும் அற்றது.
பர: ஆகாஸாத்வெளித்தோற்றதிற்கு வராத மாயைக்கு அப்பாற்பட்டது.
அஜஹபிறப்பற்றது; மாற்றங்களற்றது.
மஹான்பரிணாம வளர்ச்சியற்றது.
த்ருவ:மரணமற்றது.
இப்படிப்பட்ட லட்சணங்களையுடையது என்று ஆத்மாவை அறிய வேண்டும்.
 
ஸ்லோகம்-21
தீரஹசத்துவகுண பிரதானமாக கொண்ட சாதகன்
தம் ஏவமுன்னால் சொல்லப்பட்ட அந்த ஆத்மாவை
விக்ஞாயசந்தேகமில்லாமல், தெளிவாக அறிந்து (சிரவணம், மனனம்)
ப்ரக்ஞாம் குர்வீதநிதித்யாஸனத்தில் ஈடுபட்டு உறுதியான ஞானத்தை அடைய வேண்டும்,
ப்ராஹமணன்பிரம்மத்தை அறிந்தவன்
ஜிக்ஞாஸாஞானத்தை அடைய வேண்டும் என்ற வேட்கையை
பரிஸமாப்திநிறைவேற்றி விட வேண்டும்,
குர்வீதஈடுபட வேண்டும்,
நிதித்தியாஸத்தினால் பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் நீங்கி விட வேண்டும். ஆத்மா வெளிப்பட்டுள்ள நிலையை அடைய வேண்டும்.
ந அனுத்யாயாதி பஹூஞ்சப்தான்மற்ற சாஸ்திரங்களை, த்வைதத்தை பற்றி பேசுகின்ற சாஸ்திரங்களை தியானித்துக்கொண்டோ, ஆழ்ந்து படித்துக்கொண்டோ இருக்கக்கூடாதுஅப்படி செய்து கொண்டிருந்தால் ஜகத் மித்யா என்ற அறிவு ஏற்படாதுமற்ற சாஸ்திரங்களை அளவாக படிக்கலாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்மற்ற சப்தங்களை கேட்பதை நிறுத்தி விட வேண்டும்,
வாசஷ் விக்லாபனம்(சிரமம்) – அப்படி செய்யாவிட்டால், உன்னுடைய வாக்கு இந்திரியத்திற்கு கஷ்டத்தைத்தான் கொடுத்து சோர்வை ஏற்படுத்தி விடும், காலமும் வீணாகி விடும்.
 
ஸ்லோகம்-22
இந்த மந்திரத்தில் 5 வகையான கருத்துக்கள் அடங்கியுள்ளது.
1.   ஜீவ-பிரம்ம ஐக்கியம்.
2.   ஈஸ்வரனுடைய, ஞானியுடைய பெருமை,
3.   சாதனங்கள்
4.   நிஷேதத்தின் மூலமாக பிரம்ம ஸ்வரூப விளக்கம்
5.   ஜீவன் முக்தி

சங்கரரின் அறிமுகம்
பந்தமும் அதற்குக் காரணமும், மோட்சமும் அதற்கு காரணமும் விளக்கப்பட்டுள்ளது.
பந்தத்திற்கு காரணம் அவித்யா இதுவே ஆசையை தூண்டிவிட்டு அதை அடையும் செயலிலும் ஈடுபடுத்துவதால் அதனால் விளையும் சுக-துக்கங்களை அனுபவிப்பதுதான் சம்சாரம் எனப்படும்மோட்சத்திற்கு காரணமாக இருப்பது ஜீவ-பிரம்ம ஐக்கிய அறிவும், ஜகத் மித்யா என்ற அறிவும்தான்.
 
விசாரம்:
முழு வேதமே ஜீவ-பிரம்ம ஐக்கியம் என்ற ஞானத்தை (மோட்சம்) அடைவதற்கு உருவாக்கப்பட்டது. விஜியுக்தஹஉருவாக்கப்பட்டது.
 
கேள்வி உபநிஷத் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்ஆனால் கர்ம காண்டம் அப்படி இல்லை.
பதில்    கர்ம காண்டத்தைப்பற்றி விளக்கும்போது அதன் உள்நோக்கத்தை பார்த்தால் மோட்சத்தை உபதேசிக்க வேண்டும் என்பதில்லைகர்ம காண்டம் ஒரு சாதனமாக பாதையாக சொல்லப்பட்டுள்ளதுமோட்சம் என்ற ஒன்றுதான் புருஷார்த்தம், மற்றதெல்லாம் இதை அடைவதற்கான படிகள்
 
மந்திர விளக்கம்:
ஸஹவாஅவனே;
ஏஷஇவன், பிரம்மமே இந்த ஜீவன்.
மஹான், அஜஹபூர்ணமானவன், பரிச்சேதமற்றவன் (தேச காலத்தால் வரையறுக்கப்-படாதவன்), பிறப்பு-இறப்பற்றவன், எந்தவிதமாற்றமுமடையாதவன்
ஆத்மாநித்தியமான, சத்ய வஸ்து
யோ அயம் விக்ஞானமயஇது சைதன்ய மயம்சைதன்ய ஸ்வரூபம்.
பிரானேஷு- இந்திரியங்களுக்கு அருகிலிருந்துக் கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது.
யஹ ஏஷ: அந்தக் ஹ்ருதயநம்முடைய சூட்சும சரீரத்திற்குள் எந்த ஆகாசம் இருக்கிறதோ அதனுள்ளே ஒடுங்கி உறங்குகின்றான்.
 
ஸர்வஸ்ய வஷிஎல்லாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
ஸர்வஸ்ய ஈஷனாஎல்லாவற்றையும் இவனே ஆள்பவன்.
ஸர்வஸ்ய அதிபதிஎல்லோரையும் விட சக்திமானாக, பலசாலியாக இருக்கிறான்.
ஸஹ ந ஸாதுநா கர்மனாஇப்படிபட்ட ஞானியானவன் புண்ணிய கர்மத்தினால் புதியதாக வேறெந்த பலனும் தேவையில்லைஇப்போது இவன் உயர்ந்த நிலையில் இருப்பதால்.
அஸாதுனா- பாவ கர்மத்தினர்;
கன்னியானகீழான நிலைக்கும் வருவதில்லை
மேலே கூறிய குணங்களனைத்தும் ஈஸ்வரனுக்கும், ஞானிக்கும் பொருந்தும்.
ஏஷ: சர்வேஸ்வரன்ஞானியும், ஈஸ்வரனும் ஸர்வம் சக்தியுடையவர்கள்
ஏஷ: பூதாதிபதிஅனைத்து பூதங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான், எல்லோருக்கும் இருப்பக் கொடுத்தவராகிறார் ஈஸ்வரன்.
பூதபாலஹஅனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்இவன் தன்னையும் துயரப்படுத்தப்படுத்தமாட்டான்; மற்றவர்களுக்கும் துயரத்தைக் கொடுக்கமாட்டான்ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பவர்.
ஏஷ ஸேது (பாலம், அணைக்கட்டு, வரப்பு ) – விதரனஹபாதுகாத்தல்
லோகானாம் அஸம்பேதாயஇந்த உலகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தத்தம் நியதிகளை பின்பற்றி வாழச்செய்வது,உலகம் சீராக இயங்குவதற்கு பாலமாக இருப்பவர்.
 
சாதன சதுஷ்ட சம்பத்தியை உபதேசிக்கும் மந்திரப்பகுதி.
ஸ்வதர்ம அனுஷ்டானம் (கர்மயோகம்) – கர்ம அனுஷ்டானம், கர்மத்தை சரியான பாவனையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.
பிராமணாஹாபிராமணர்கள், சான்றோர்கள், மனத்தூய்மையுடையவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
விவிதி3ஷந்திஅறிய ஆசைப்படுக்கின்றார்கள்.
தம் ஏதம்அந்த இந்தபரமாத்வான ஜீவாத்மாவை
ஆத்மாவை அறிய வேண்டும் என்ற ஆசை திடமாகும் போது நம்மை செயலுக்கு தூண்டி விடும். சாமான்யமக இருக்கின்ற ஆசையை விசேஷமானதாக உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு எது சாதனம்
வேதிதம்அறிய வேண்டும்;
இச்சாஆசை
 
இந்த ஆசையே அறிவதற்கு முக்கிய சாதனமாக இருக்கிறதுகுருவும் சாதனமாகின்றார். சாஸ்திரமும் சாதனமாகிறதுசூழ்நிலைகளும் சாதனமாகின்றதுஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசைய வளர்த்துக் கொள்ள உதவும் சாதனங்கள் வேத அனுவசனம், யக்ஞம், தானம், தபஹ.
வேத அனுவசனம் : பிரம்மாச்சர்ய ஆசிரமத்தில் உள்ளவர்களின்
ஸ்வதர்மம் : வேத சாஸ்திரத்தை படிக்க வேண்டும் (ஸ்வாத்யாயம்)
படிப்பது மாணவனது ஸ்வதர்மம்வேத சாஸ்திரத்தை குருவின் உபதேசம் மூலம் அறிந்து கொண்டு அந்த ஆசையை வளர்த்துக் கொள்ளுதல்தர்ம மீமாம்சம் என்று அறிந்து கொள்ளுதல்வேதத்தை படித்தல், ஓதுதல் வேதம் உரைக்கும் தர்மத்தை விசாரம் செய்தல்.
யக்ஞம், தானம்இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பிரம்மத்தை பூரணமாக அறிய வேண்டும் என்ற ஆசையா நிலைநிறுத்த வேண்டுமானால் யக்ஞம், தானம் செய்ய வேண்டும்.
வானபிரஸ்தாசிரமம்அவர்கள் தவத்தினால் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
கிரகஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு யக்ஞம், தானம் இவைகள் முக்கிய சாதனங்களாக இருக்கின்றது.
யக்ஞம்இஷ்டா, பூர்த்தம், தத்தம்.
இஷ்டா - வைதிக கர்மங்கள்யாகம், ஸ்மார்த்தம் (ஸ்மிருதியில் கூறப்பட்ட கர்மங்கள்), ஸ்ரௌத்தம் (ஸ்ருதியில் கூறப்பட்ட கர்மங்கள்).
பூர்த்தம்சமுதாய சேவை
தத்தம்மற்றவர்களுக்கு உதவி செய்தல் (அபயம் கொடுத்தல்)
யக்ஞமானது தேவயக்ஞம், ரிஷியக்ஞம், பித்ருயக்ஞம், மனிதயக்ஞம், விலங்குகளுக்கு செய்யும் யக்ஞம் என்று ஐந்து வகையாக உள்ளது.
தானம்தன்னிடம் இருக்கும் பொருளை பகிர்ந்து கொடுத்தல் (லோபம் நீங்கிவிடும்)
கர்மயோகப்படி வாழ்வது
இவைகள் யாவும் கிரகஸ்த ஆசிரமத்தினருடைய கடமைகள்.
 
வானபிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவர்களின் பிரதான கடமை தவம் செய்து கொண்டிருப்பது-தான்நம்மை அழிக்காது செய்யும் தவம்தவத்தின் முடிவில் சக்தி அதிகமாக வேண்டுமேயொழிய குறையக்கூடாதுஎளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் அதிக காலம் தவத்தில் ஈடுபட வேண்டும்இந்த கடமைகள் மூலம் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளவேண்டும். யக்ஞ, தானம், தவம் ஆகியவைகளை பின்பற்றினால், அவைகள் நம்மை நிதித்தியாஸனம் வரை கொண்டு செல்லும்.
 
ஏதம் ஏவ விதி3த்வாஇந்த ஆத்ம தத்துவ ஞானத்தை அறிந்தவன்
முனிஹி பவதிமுனிவனாக உயர்வடைகிறான்.
ந கர்மிசெயலில் செய்வதிலிருந்து அமைதியடைகின்றான்.
ஏதம் ஏவஇதை அறிய விரும்புபவர்கள்
லோகம்ஆத்ம தத்துவத்தை;
இச்சந்திஅதையே லட்சியமாக கொண்டவர்களாக,
ப்ரவ்ராஜினஹ தியாகத்திற்கு தயாராக இருப்பவர்கள்,
ப்ரவிரஜந்திசந்நியாஸ ஆசிரமத்திற்கு சென்று விடுவார்கள்.

சந்நியாசத்தை இரண்டு வகையாக அடைகின்றனர்.

1.   கிரம சந்நியாஸம்பிரம்மச்சர்யம் à இல்லறம் à வானபிரஸ்தம் à சந்நியாசம் என்ற படிகளின் வழியே அடைவது.
2.   அகிரம சந்நியாஸம்பிரம்மச்சர்யம் à இல்லறம் à சந்நியாசம் அல்லது பிரம்மச்சர்யம் à சந்நியாசம் என்று இருவகையாக சந்நியாசத்தை அடைவார்கள்
 
சந்நியாசம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள் 1. விவிதிஷா சந்நியாஸம், 2. வித்வத் சந்நியாஸம்.
விவிதிஷா சந்நியாசம்விவேகம், வைராக்கியம் போன்றவைகள் ஞானத்திற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்வது.
வித்வத் சந்நியாசம்சிரவண, மனனத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்வதுஇவர்கள் பிரதான கடமை நிதித்யாஸனம் செய்வதுதான்நிதித்யாஸனத்தை முடிந்து ஞானத்தை அடைந்தாலும் பிராரப்த கர்மத்தை கழிப்பதற்காக எடுத்துக் கொள்வது.
 
ஏதத்தஸ்ம வை பூர்வே விதிவாம்ஸஇதற்கு முன் வாழ்ந்த ஞானத்தில் ஆசை கொண்டவர்கள், உலகத்தின் நிலையற்றதன்மை தெரிந்து கொண்டவர்கள், உணர்ந்தவர்கள்.
பிரஜாம் எ காமயந்தேஇல்லறத்தை விரும்புவதில்லை,
கிம் ப்ரஜயா கரிஷ்யாமேஇவர்கள் ஆசையற்றவர்கள், இந்த பிரஜைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
யேஷாம் நோ அயம் ஆத்மானாம் லோக இதிநமக்கு இந்த ஆத்மாதான் லட்சியம், அதை அடைவதுதான் பரம லட்சியம் என்று நினைத்து சந்நியாச ஆசிரமத்திற்கு செல்கிறார்கள்அனாத்மா ஆசைகளான புத்திரன், சொத்து, உலகம் போன்றவைகளிலிருந்து விட்டு விலகி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்புத்திரன் மீதுள்ள ஆசையானது சொத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது, பிறகு உலகத்திலிருக்கின்ற இன்பத்தை தருகின்ற பொருட்களை அடைய வேண்டும் என்று செல்கிறது, இவ்வாறு சாத்தியத்தின் மீதுள்ள ஆசை, சாதனத்தின் மீதுள்ள ஆசை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
 
ஸஹ ஏவ ஆத்மா நேதி நேதிஅனைத்து அனாத்மாக்களும் நீக்கப்பட்டு, நீக்கமுடியாமல் மீதி இருப்பதுதான் ஆத்மாஇந்திரியங்களால் கிரகிக்கமுடியாதது, எதனோடும் ஒட்டாது, அழிக்க முடியாததாக இருப்பது.
 
ஞானியானவன் ப்ராரப்தம் இருக்கின்றவரை இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பான்இரண்டுவிதமான எண்ணங்கள் அவனை பாதிப்பதில்லைஇதனால் தூண்டப்பட்டு தேகத்தின் அபிமானத்தால் நான் பாவத்தை செய்தேன் என்கின்ற எண்ணமே வருவதில்லைநான் புண்ணியத்தை செய்தேன் என்றும் நினைப்பதில்லைஇவன் புண்ணிய-பாவங்களிலிருந்து விடுபட்டு இருக்கின்றான்இவனால் செய்யப்பட்டதும், செய்யப்படாததும் அவனை பாதிக்காது. சாஸ்திரம் விதித் த நித்ய கர்மங்களை செய்யாமல், செய்து கொண்டிருப்பதாலும் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதுபிரம்மவிதி அகர்ம சம்பந்திபிரம்மத்தை அடைந்தவனுக்கு எந்த கர்மத்தில்லும் சம்பந்தமில்லைகர்மபலனிலும் சம்பந்தமில்லை. எந்தவித குற்ற உணர்வும் இல்லாதிருப்பான்
ந தபத்கர்மபலன்கள் அவனை வாட்டுவதில்லை.
 
ஸ்லோகம்-23
ஏஷஹ மஹிமா இந்த பெருமையானது அவன் முக்தியுடன் இருப்பதேஇது ஆசையற்றது, அழிவில்லாதது, என்றும் நிலையாக இருப்பது.
ந வர்ததே கர்மனாஇந்த பெருமையானது செயலினால் மேலும் பெருகுவதில்லை, ஏனெனில் அவன் அடைந்திருப்பது மிகவும் உயர்ந்த நிலை அதற்கு மேலே ஒன்றும் இல்லை.
நே கனியான்அது செயல் செய்வதினாலும் குறைவதில்லைஅவன் அடைந்திருக்கின்ற நிலை ஜீவன் முக்தநிலை, அதுவே அவனது சுபாவமாகவே மாறியிருக்கிறதுஇதுவே ஒருவன் அடைய வேண்டிய செல்வம், தனது ஸ்வரூபத்திலிருப்பதுதான், அதுதான் நிலையானது.
தஸ்ய ஏவ மேற்கூறிய பெருமையுடையவன் முக்தன்
தம் விதித்வா -  இந்தப்பெருமையை உணர்ந்த நிலையானது நம்மை அந்த லட்சியத்தை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும்.
எஸிப்யதே கர்மணா பாபகேனஅவனும் பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மங்களிலிருந்து விடுபடுவான்.
 
சாதனப்பகுதி:
தஸ்மாத் ஏதம் விது3: எந்தக்காரணத்தால் இங்கு சொல்லப்பட்ட பெருமையை அடைய வேண்டுமோ அதை உணர்ந்து முமுக்ஷுயுடையவன் விவேகம், வையாக்கியம், முமுக்ஷுத்வத்தை அடைவான்.

சாந்தஹ -   மனக்கட்டுப்பாடு, அந்தக்கரண கட்டுப்பாடுஅந்தக்கரணத்தை அமைதிபடுத்த வேண்டும். சஞ்சலங்களை நீக்கி அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.

தாந்தஹ    பத்து இந்திரியங்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

உபரதஹ   தேவையற்ற செயல்களிலிருந்து விலகுதல், பொறுப்புக்களிலிருந்து விலகுதல், முறைப்படி சந்நியாஸம் எடுத்துக்கொள்ளுதல், ஸ்வதர்ம அனுஷ்டானம்.
திதிக்ஷா   இருமையை சகித்துக்கொள்ளுதல், இருமையினால் நாம் தாக்கப்படாதவனாக  இருத்தல், அதை ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளுதல்.
சமாஹித:   எடுத்துக் கொண்ட லட்சியத்தில் நிலையாக நிற்றல், அதில் பொருந்தி செயல்படுதல், இதற்கு தடையாக இருப்பவைகள் சோம்பல், உறக்கம், செய்வதறியாது இருத்தல் (மனோரதம்)
பூத்வா      இவ்விதமான இருப்பவனாக செயல்பட்டு
ஸ்ரத்தா வித்தாசிரத்தையுடையவனாக இருக்க வேண்டும்,. குரு, வேதாந்த வாக்கியங்களில் உள்ள நம்பிக்கை.
ஆத்மனி ஏவ ஆத்மானாம் பஷ்யதிதன்னுடைய ஸ்தூல, சூட்சும சரீரத்திற்குள்ளேதான் சைதன்ய ஸ்வரூபத்தை ஞானி பார்க்கின்றான்.
ஸர்வம் ஆத்மானம் பஷ்யதி: தன்னையே அனைத்துமாக பார்க்கின்றான்தன்னிலே அனைத்து ஜீவராசிகளையும் பார்க்கின்றான்
நைனம் பாப்மா ந தரதி ஆப்னோதி:. இந்த ஞானியை பாவ-புண்ணியங்கள் வந்தடையாது. இந்த ஞானியை பிராரப்தம், சஞ்சிதம் ஆகியவற்றில் உள்ள கர்மபலன்களான பாவ-புண்ணியங்கள் ஒன்றும் செய்யாத நிலையை அடைந்து விடும்இவன் அடைந்த ஞானத்தால் பாவ-புண்ணியத்தினால் விளையும் இன்ப-துன்பங்களை எரித்து விடுகின்றான்.
விபாபஹ: அனைத்து பாவங்களும் புண்ணியங்களும் சென்று விடுகின்றன.’
ஸர்வம் பாப்மான தரதி: அனைத்து பாவ-புண்ணியங்களையும் கடந்து விடுகின்றான். இங்கே பாப்மானம் என்ற சொல் பாவத்தையும், புண்ணியத்தையும் சேர்த்து கூறப்படுகின்றது.
விரஜஹ: அசுத்தத்திலிருந்து வெளி வந்தவன்; அறியாமையிலிருந்து வெளியே வந்தவனாக இருக்கின்றான்.
அவிசிகித்ஸஹ: அனத்து விதமான சந்தேகங்களும் நீங்கியவனாக இருக்கின்றான்.
 
இப்படிபட்ட லட்சணங்களை உடையவனாக இருப்பவன் பிரம்மனாக, முக்தனாக இருக்கின்றான்இதுதான் பிரஹ்மத்தின் ஸ்வரூபம்.
 
ஏனம் பிராபிதஹ அஸீத் என் உபதேசங்களின் பலனை நீ அடைந்து விட்டாய்அந்த பிரஹ்மத்தை அடைந்து விட்டாய் என்று ஜனகரை பார்த்து, யாக்ஞவல்கியர் கூறினார்.
 
ஜனகர், “பகவானே! சம்சாரியாக இருந்த நான் முக்தனாகி விட்டேன். இதற்கு கைமாறாக இந்த விதேஹ நாட்டையே தங்களுக்கு காணிக்கையாகி கொடுக்கிறேன். என்னையும் இந்த நாட்டுடன் தங்களுக்கு சேவை புரியும் சேவகனாக கொடுக்கிறேன்இவ்வாறு கூறியதின் மூலமாக அவர் ஞானத்தை அடைந்து விட்டார் என்று குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்லோகம்-24
ஸஹ வை ஏஷஹ : அந்த நிர்குண பிரம்மமே இந்த ஜீவாத்மா
மஹான் அஜஹ : பூரணமானது, பிறப்பற்றது
நானே பிரம்மன் என்பதை கிரகிக்க முடியவில்லையென்றால் சகுண பிரம்மத்தை தியானத்தை பரிந்துரை செய்யப்படுகிறது.
அனாதஹ: அந்த பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளுக்குள் இருந்து கொண்டு உணவை உட்கொண்டு இருக்கிறது
வஸ்தானஹ:  - கர்ம பலனை தருபவர் ஈஸ்வரன்தான் என்று தியானிக்க வேண்டும்.
ய ஏவம் வேத: -  யார் இவ்வாறு ஈஸ்வரனை உபாஸனை செய்கிறார்களோ
விந்ததே வஸீ - அவர்கள் செல்வம், பொருள், ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கப்பெறுவார்கள்.
வஸ யோக்யதாமனத்தூய்மையடைவார்கள்..
மோட்சத்தை லட்சியமாக கொண்டவர்கள் ஞானத்திற்கு தகுதியடைகிறார்கள்.
 
ஸ்லோகம்-25
இந்த மந்திரத்தில் பிரம்ம ஸ்வரூத்தைக் கூறி பிரம்மத்தை அடைதல், மோட்சத்தை அடைதல் என்ற இரண்டுமே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.
ஸஹ வை ஏஷஹ: அந்த பரமாத்மாவே இந்த ஜீவாத்மா
அஜரஹ:    மாற்றமில்லாதது;
அமரஹ:    மரணமற்றது,
அம்ருதஹ: என்றும் உள்ளது;
அபயஹ:   பயமற்றது
வர்ஜிதஹஇப்படிபட்ட ஆத்ம ஸ்வரூபம்தான் பிரம்மம்.
அபயம் வை பிரஹ்மா: சம்சாரமற்றது பிரம்மம், பயம்தான் தலையாய சம்சாரம்; பயமற்ற நிலையான ஸ்வரூபம்.
பகவான் எப்பொழுதும் ஐஸ்வர்யத்துடன் பயத்தையும் சேர்த்துக் கொடுப்பார்இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எந்த வகையான ஐஸ்வர்யத்தையும் அடைந்தாலும் அதனுடன் பயத்தையும் சேர்த்துதான் அடைகிறோம்.
ய ஏவன் வேத: யார் இந்த ஞானத்தை அடைகிறார்களோ
அபயம் வை பிரம்ம பவதி: அவர்கள் அபயமான பிரம்மத்தையே அடைகிறார்கள்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-5 :மைத்ரேயி ப்4ராமனம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------இந்தப்பகுதியானது மிகமுக்கியமானது எனவே ஏற்கனவே இது விளக்கப்பட்டாலும் மீண்டும் இந்தப் பகுதியில் விவரிக்கப்படுகிறதுஇதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.   நமக்கு சாத்தியம் போல் தெரிவதெல்லாம் பொய் என்று விளக்கப்படுகின்றது.
2.   சாத்திய தரிசனம்ஆத்மாதான் நாம், எனவே நம்மைத்தான் அடைய வேண்டும்.
3.   சாதனம்: ஆத்மாவை அறிவதற்கு உதவும் வழிகளான, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளைக் கொண்டு ஆத்மாவை அடையலாம்.
4.   மோட்ச ஸ்வரூப விளக்கம்
5.   ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பவர்
6.   ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது
7.   சிதாபாசத்தினுடைய ஸ்வரூப விளக்கம்
8.   சித் நித்யம், சிதாபாசன் வெறும் தோற்றம் (பிரதிபிம்பம்) என்று விளக்கப்பட்டு இருமை நீக்கப்படுகிறது
 
சந்நியாச விசாரத்தின் சாரம்.
*         சந்நியாசத்தை அந்தரங்க சாதனமாகும். இது ஆத்மாவிற்கு மிக அருகில் இருக்கின்ற சாதனம். இது ஞான நிஷ்டை அடைவதற்கும், ஞானத்தை அடைவதற்கும் உதவியாக இருக்கிறது.
*         கர்மயோக பகிரங்க சாதனமாகும். இது மனதை தூய்மையாக்கி ஞானத்தை அடைவதற்கு தகுதிப்படுத்துகிறது
*         மோட்சத்திற்கு ஞானமானது சாக்ஷாத் சாதனம், நேரிடையான சாதனம்
*         வேதங்கள் சில கர்மங்கள் விதித்துள்ளதுசந்நியாசத்தில் இவைகளை விடவேண்டிய நிலை வரும்போது குற்ற உணர்வு வரும் போது வேதமே இவ்வாறு சொல்லி இருப்பதால் நாம் அந்த உணர்வு அடைய தேவையில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.
 
விசாரம்:
கேள்வி: உயிரோடு இருக்கும்வரை அக்னிஹோத்ர யாகம் செய்து கொண்டிருக்க வேண்டும். இவன் இறந்து புதைக்கும்போது அவன் பயன்படுத்திய யாக பாத்திரங்கள் அந்த உடலோடு சேர்த்து புதைக்க வேண்டும்எனவே ஒரேயொரு ஆஸ்ரமம்தான் இருப்பதுபோல் தோன்றுகிறதுசந்நியாச ஆசிரமத்தை விட்டுவிடலாம்.
பதில்:   அவ்வாறு செய்ய முடியாதுசந்நியாச ஆசிரமத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் இரண்டும் சமமாக இருக்கட்டும்
கேள்வி: யாருக்கு கர்மம் செய்ய தகுதியில்லையோ அவர்கள் சந்நியாசத்திற்கு செல்லலாம்.
பதில்:   யார் மோட்சம் என்ற லட்சியத்தை அடைய உறுதி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த ஆசிரமம்கர்மத்தை விட்டுவிடுபவர்களுக்கு அல்ல, அதிக சாதனையை செய்ய வேண்டிய ஆசிரமம் இதுகர்மத்தை செய்ய தகுதியுடையவர்கள்தான் சந்நியாசி ஆகின்றான்கர்மகாண்டம் அவித்யாவில் ஆசை உடையவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறதுவைராக்கியம் வந்தவுடன் சந்நியாசத்தை எடுத்துக் கொள்ளலாம்சந்நியாசத்தையும், இல்லறத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாதுஇரண்டும் வெவ்வேறு தர்மத்தை பிரதானமாக உடையதுசந்நியாசம் யம பிரதானமானது, இல்லறம் நியம பிரதானமானது.
 
இரண்டு வகையான சந்நியாசம் இருக்கின்றதுஅவைகள் வித்வத் சந்நியாசம், விவிதிஷா சந்நியாசம்முதல் வகையானது அபரோக்ஷ ஞானமுடையவர்களுக்கு, அடுத்த வகையானது பரோக்ஷ ஞானமுடையவர்களுக்கு என்று கூறப்பட்டிருக்கிறது.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-6 : வம்ச ப்4ராமனம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில் மூன்று மந்திரங்கள் இருக்கிறதுஇவைகள் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களின் பெயர்களை கூறுகிறதுஇந்த பெயர்களை உச்சரிப்பதாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

----0000----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...