Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-08. Show all posts
Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-08. Show all posts

Thursday, November 16, 2017

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-8

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-8
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
திருத்தம் செய்யப்பட்டது12-03-2022
ஸ்லோகம்-21
ஆழ்நிலை உறக்கம் என்பது ஒரு காலவரையறைக்குட்பட்டதுமோட்சம் என்பது ஞான நிஷ்டைக்கு பிறகு காலவரையறைக்குட்பட்டு அனுபவிக்கும் விஷயம் இல்லை. இந்நிலையில் அக்ஞானம் உண்டுமோட்சம் ஜாக்ரத் நிலையில் அனுபவிப்பது, அக்ஞான நீங்கி ஞானத்துடன் இருக்கும் நிலைஉறக்கம் என்பது ஞானிக்கும், அக்ஞானிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும்ஆழ்நிலை உறக்கத்தில் சம்சார விதை இருக்கும்மோட்சத்தில் சம்சாரமும் இல்லை அதன் விதையும் இல்லை.
 
இந்த மந்திரம் மோட்ச லக்ஷணத்திற்கு பொருந்தும்ஆழ்நிலை உறக்கத்தை மோட்சத்திற்கு உதாரணமாக கொடுக்கலாம் ஆனால் அதுவே மோட்சமாகாதுஒன்பது லட்சணைகள் இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதுமோட்சத்தை அடைந்த பிறகு எப்படி இருப்போம் என்பதையும் விளக்குகிறது.
 
தத்3வா அஸ்யஇந்த ஞான நிலையில் ஞானிக்கும், சுஷுப்தி நிலையில் பிராக்ஞனுக்கும் கீழே குறிப்பிட்ட லக்ஷணைகளுடன் இருப்பான்.
 
அதிச்ச2ந்த3:காமத்தை கடந்தவன்; ஆசையிலிருந்து விடுபட்டவன்
ஞானிக்கும் ஆசை வரும் ஆனால் அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாதுஅதனால் இவன் பாதிக்கப்படுவதில்லை, துயரமோ, மகிழ்ச்சியோ ஏற்படுத்தாது.
 
இதை எப்படி நிதித்யாஸனம் செய்வது என்றால், நான் இப்போது இந்த லட்சணத்தில் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும். தியானத்தில் ஒவ்வொரு லட்சணமாக நான் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்,
 
அபஹதபாப்மா பாவத்திலிருந்து விடுதலையடைந்தவன்பாவத்தின் விளைவு துயரம்ஆழ்நிலை உறக்கத்தில் ஒருவனுக்கு துயரம் இல்லைஎனவே பாவ-புண்ணியம் என்ற கர்ம பலனை அனுபவிக்காமல் இருக்கிறான்முக்தனும் என்றென்றும் மனநிறைவுடன் துயரம் எதுவும் இல்லாமல் இருக்கிறான்பாவ-புண்ணியங்கள் மொத்தமாக இவனை விட்டு சென்று விட்டது
 
தியானமுறை: நான் எல்லா பாவங்களிலிருந்து விடுபட்டவன் என்று தியானிக்க வேண்டும்
அப4யம் ரூபம் - நான் பயமற்ற ஸ்வரூபமாக இருக்கிறேன்நமக்கு வேறாக உள்ள ஒன்று என்னை தாக்கி விடும், அழித்து விடும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும்ஞானி அனைத்துமே நானாக இருக்கிறேன் என்ற அறிவால் பயம் முற்றிலுமாக நீங்கியவனாக இருக்கிறான், அந்த உணர்வேயில்லாதவனாக இருக்கிறான்.
 
விசேஷ ஞான அபாவாத்தனிப்பட்ட ஞானம் இல்லை, விதவிதமான ஞானங்களும் இல்லைவிழிப்பு நிலையில் ஒவ்வொரு க்ஷணம் விதவிதமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், கனவு நிலையிலும் இதே மாதிரித்தான்ஆழ்நிலை உறக்கத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான அனுபவம்அவித்யாவின் ஒரே மாதிரியான விருத்தியைத்தான் அனுபவிக்கிறோம்விசேஷ ஞானம் இந்த நிலையில் இல்லைஜாக்ரத் நிலையில் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும்போது, அந்த காலத்தில் அதைத்தவிர வேறெதையும் நினைப்பதில்லை. உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றையும் மறந்த நிலையில் அனுபவிப்பான்.
 
மோட்சம்: ஞானி எல்லா வேற்றுமைகளுக்கும் ஒரு பரமாத்வை ஆதாரமாக பார்க்கிறான்எல்லா பானைகளை பார்க்கும்போது ஆதாரமாக உள்ள களிமண்ணை மட்டும் பார்ப்பது போல எல்லா வேற்றுமைகளிலும் நாம ரூபங்களினால் பாதிக்கப்படாமல் அவைகளை நீக்கி விட்டு அவைகளுக்கு ஆதாரமாக உள்ள பிரம்மத்தின் மீது இருக்கிறதுசமதிருஷ்டி, சர்வாத்மபாவம்ஞானிக்கு சுபாவமாக இருக்கிறது.
சைதன்ய ஸ்வரூபம்: ஞானி சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றான்  ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திலும் சேதனமாக இருக்கின்றான், ஞானத்துடன் இருக்கின்றான் சைதன்யம் அவித்யை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதுசாமான்ய ஞானத்துடன் இருக்கின்றான்ஞானிக்கு அனைத்துமே பிரம்ம ஸ்வரூபம் என்ற சாமான்ய ஞானமாக இருக்கின்றதுசைதன்யம் அனைத்துமே மித்யா என்று விளக்கிக் கொண்டிருக்கின்றது.
ஆப்த காமம் அனைத்து ஆசைகளும் அடையப்பட்டு விட்டதுஆழ்நிலை உறக்கத்தில் உள்ளவர்களுக்கும் அனைத்து ஆசைகளும் அடையப்பட்டது போன்ற நிலை. ஞானிகளுக்கு எல்லா விஷயங்களும் நீக்கப்பட்டு விட்ட நிலையில் இருப்பான்
ஆத்ம காமம் எல்லா பொருட்களும் ஆத்மாவாகி விட்டதுஎப்பொழுது அடைய நினைக்கிற பொருட்களெல்லாம் வேறாக இருக்கிறதோ அது வரையில் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கும்ஆனால் அவைகள் எல்லாம் நானேதான் என்று நினைக்கும் போது ஆசைகளே வராது.
அகாமம் ரூபம் காமத்துக்கு ஆதாரமாக இல்லாதது, ஆசைக்கு இருப்பிடமாக இல்லாததுஆசை எப்போதும் மனதைத்தான் சார்ந்திருக்கிறது.
ஶோகாந்தரம்சோகம் முற்றிலும் இல்லாதது, மனதில் காரணமில்லாமல் ஏற்படும் துன்பம், துயரம், வெற்றிடம் ஆகியவைகளால் பாதிக்கப்படாமல் இருத்தல்
 
ஸ்லோகம்-22
அத்ர: பிதா அபிதா ப4வதி, மாதா அமாதா ப4வதி
ஆழ்நிலை உறக்கத்தில் / முக்தி நிலையில் தந்தையாக இருந்தும் அப்படி இருப்பதில்லை, தாயாக இருந்தும் அப்படி இருப்பதில்லை. எந்த உறவுமற்று இருத்தல், நான் தனியானவன் என்ற மனப்பான்மை ஒழிந்து எல்லாமே நான் என்ற பாவம். வியக்தி அபிமானம், ஜீவ-ஜீவ சம்பந்த நிமித்தமாக சம்சாரத்தை அனுபவிக்கிறோம்ஞானிக்கு தன் தாய், தந்தையாக இருந்து செய்யும் கடமைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் அதனால் பாவ-புண்ணியங்கள் வந்து சேராதுஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவனுக்கு எந்த உறவுகளும் அவனுக்கில்லை.
 
லோகா: அலோகா: - கர்மபல பூதம்கர்மத்தின் பலனாக கிடைத்த லோகத்திலுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்கிறார்கள்பெரிய செல்வந்தனும், ஏழையும் தூங்கியவுடன் ஒரே அனுபவம்தான் இருக்கும். ஞானி எல்லா சூழ்நிலைகளிலும் ஒரெ மாதிரியாகத்தான் இருப்பான்எந்த சூழ்நிலையும் அவனுக்கு எந்தப் பாதிப்பும் கொடுக்க முடியாதுபிராரப்த கர்மத்தினால் அடைந்த சூழ்நிலைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்.
 
தே3வா: அதே3வா:தேவர்கள் நமக்கு அனுக்கிரகம் செய்பவர்கள் அவர்களும் நமக்கு உறக்கத்தில் அனுகிரகம் செய்வதில்லைஞானிக்கு எந்த தேவதைகளுடைய அனுக்கிரகமும் தேவையில்லைஎந்தவித பிரார்த்தனையும் செய்வதில்லை, எந்த கர்மமும் செய்வதில்லை, தேவதைகளுக்கு ஆஹுதிகளும் கொடுப்பதில்லைதேவதைகளின் உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டான்.
 
வேதா3: அவேதா3: அக்ஞானிக்கு உறக்கத்தில் வேதமானது அப்பிரமாதாவாக இருக்கிறது.   ஞானி வேதமானது எப்பொழுதும் அப்பிரமாதாவாக இருக்கிறான்.
 
ஆழ்நிலை உறக்கமானது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்ஞானிக்கும், ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவர்களும் தந்தை என்ற உறவின் மீதுள்ள அபிமானம் துறக்கப்படுகிறதுபிதா என்ற அபிமானம் இல்லாததால், குற்ற உணர்வும், கர்த்ருத்வம் கிடையாதுபித்ரு சம்பந்த சம்சாரங்கள் கிடையாதுஒவ்வொரு உறவுமுறைக்கு சில கடமைகள் அதனால் அடையும் சுக-துக்கங்கள் இருக்கிறதுஇவைகளின் மீதுள்ள அபிமானமற்றவன் ஞானி, ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவன் அறியாமையால் அவ்யக்தத்தில் இருப்பான்.
 
லோகஹ: கர்மபலன், சூழ்நிலையில் இருத்தல்
தேவாஹ: சக்தியை கொடுக்கும் தேவர்களின் சக்தி இழக்கப்படுகிறது
வேதா: வேதங்களின் சப்த பிரமானத்திற்கு பிரமாதாவாக இல்லாத நிலை
 
அத்ர: மேலும்
ஸ்தேன: அஸ்தேன: ப4வதி - திருடன் திருடனாக இருப்பதில்லை
ப்4ரூணஹ அப்4ரூணஹ ப4வதி - கொலைகாரன் கொலைகாரனாக இருப்பதில்லை
சண்டால அசாண்டால: ப4வதி - சண்டாளன் சண்டாளனாக இருப்பதில்லை
பௌல்கஸ அபௌல்கஸ: - பண்பாடற்றவன், கொடூரமானவன் அது மாதிரி இருப்பதில்லை
ஶ்ருமண: அஶ்ருமா: ப4வதி - சந்நியாசி சந்நியாசியாக இருப்பதில்லை
தாபஸ: அதாபஸ: ப4வதி - தவம் செய்து கொண்டிருப்பவன் அதை செய்யாமல் இருத்தல்
 
இவைகளெல்லாம் செய்யும் கர்மத்தை பொறுத்து அமைந்துள்ள குணங்கள்கர்ம நிமித்தமான அபிமானங்கள் எல்லாம் சென்று விடுகின்றனஞானி தவம் செய்யும் போது நான் தபஸ்வி என்ற அபிமானமற்று இருப்பான்சந்நியாசியாக கர்மம் செய்து கொண்டிருக்கும்போது சந்நியாசி என்ற அபிமானமற்றிருப்பான்ஞானி என்பவன்தான் ஞானி என்று தெரியாத நிலையில் இருப்பான்.  (குழந்தைகளின் செய்கைகள் மகிழ்ச்சி தருவதற்கு காரணம், தான் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்று அபிமானம் கொள்ளாமல் இருப்பதனால்தான்.
அனன்வாக3தம் - ஒட்டிக்கொள்ளாது ;
அன்வாக3தம் - ஒட்டிக்கொள்ளுதல்
அனன்வாக3தம் புண்யேன: அனன்வாக3தம் பாபேன: பாவ புண்ணியத்தினால் தீண்டப்படாதவனாகிறான்.
புண்ணியத்திலிருந்து விடுதலையடைதல் ஒருவருனுடைய புருஷார்த்தமாகும். புண்ணியம் மனத்தூய்மையைக் கொடுக்கும். சுகமும், மனநிறைவும் அடைந்த ஞானிக்கு புண்ணியம் தேவையில்லை, அதன் பலனையும் அனுபவிப்பதில்லைஅவன் ஞானத்தாலே என்றும் மனநிறைவுடனும், சுகமாகவும் இருக்கின்றான். இவனுக்கு சஞ்சித கர்மத்திலுள்ள பாவங்களும்ஆகாம கர்மத்தில் உள்ள பாவங்களும் அழிந்து விடுகின்றனபிராரப்தத்தில் அனுபவிக்கும் பாவங்களாலும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்பிராரப்தம் பலனை கொடுக்கும் சக்தியை இழந்துவிடுகிறதுஇவன் உடலுக்கு வரும் இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்ஆழ்நிலை உறக்கத்திலிருப்பவனுக்கும் இந்த இரண்டும் தொடுவதில்லை
 
தீர்ணோ ததா3 ஸர்வான் ஶோகான் ஹ்ருதயஸ்ய ப4வதி - இந்த நிலையில், ஆசையின் விளைவாக வரும் எல்லா துன்பங்களிலிருந்தும் கடந்தவனாக இருக்கிறான்.
 
நிதித்யாஸனம் செய்ய வேண்டிய கருத்துக்கள்:
  • நமக்கு எந்த உறவிலிருந்து துன்பம் வருகின்றதோ அதிலிருந்து அபிமானத்தை நீக்கி விட வேண்டும்
  • நம்மிடையே இருக்கும் தீய குணங்களையும் உதாசீனப்படுத்த வேண்டும்
  • பாவ-புண்ணியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்க வேண்டும்
  • இதயத்திலுள்ள ஆசைகளையும், இன்ப-துன்பங்களையும் கடந்தவன் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.
விசாரம்:
கேள்வி ஆசைகளும், துயரங்களும் ஆத்மாவை சார்ந்திருக்கின்றனவா?.
         இதயத்தை சார்ந்திருக்கும் ஆசைகளெல்லாம் போய் விடுகிறதா 
         திரவ்ய ஆஸ்ரயஹ குணஹஎல்லா உணர்வுகளும் குணத்தை சார்ந்து இருக்கிறதுமனமானது அவைகளை வெளிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
         ஆஸ்ரயம்ஆத்மாகரணம்மனம், சூட்சுமசரீரம்.
பதில்   ஆத்மாவை பற்றி தெரியாதவர்களுக்காக இங்கு ஸ்ருதஸ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
         ஆஸ்ரயமும், கரணமும்அந்தக்கரணம் (மனம், சித்தம், புத்தி)
         சித்தம்: எண்ணங்களின் நினைவகம்கர்மபலன்கள் பதிவாகி இருக்கும் இடம்
         மனம்: சித்தத்திலிருந்து எண்ணத்தையோ, கர்மபலனையோ எடுத்துக் கொண்டு ஸ்தூல உடம்பை அனுபவிக்க வைக்கிறது.

 

         ஆத்ம த்ருக் ஸ்வரூபம்; த்ருஷ்ய ஸ்வரூபம் அல்ல.

         எல்லா சுக-துக்கங்களும், ஸம்ஸ்காரங்களும், காம-க்ரோதாதிகள் சூட்சும சரீரத்தை சார்ந்திருக்கின்றனஎனவே சூட்சும சரீரம் உறங்கும்போது சம்சாரம் இல்லாத நிலை, அதுவும் உறங்குகின்றதுஇது விழிக்கும்போது அக்ஞானி சம்சாரத்தை அனுபவிக்கின்றான். ஞானி விழிப்பு நிலையிலே சம்சாரத்தை நீக்குகிறான்இது அடைந்த ஞானத்தின் பலனாக விளைகின்றது.

 

ஸ்லோகம்-23-30
மந்திரம் 23லிருந்து 30வரை ஒரே மாதிரியாகத்தான் இருப்பதால் ஒரு மந்திரம்-23 மட்டும் விளக்கப்படுகிறதுமற்றதெல்லாம் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.
 
சாராம்சம்: ஏற்கனவே அறிந்த கருத்துக்கள் வேறுவிதமாக உபதேசிக்கப்படுகிறது.
சுஷுப்தி அவஸ்தா விசாரம்: இந்த நிலையில் உபதேசிக்கப்படும் கருத்துக்கள்
·         ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்: இந்த நிலையில் நாம் ஜடமாக இருக்கின்றோம்.
·         ஆத்மா நித்ய ஸ்வரூபம்: ஆத்மா வந்து போகின்ற மாதிரியாக எண்ணம் தோன்றலாம்
·         நிர்விகார ஸ்வரூபம்: நித்யமான பொருள் மாற்றமடையாததாகத்தான் இருக்கும்
·         ஏகம்: இது ஒன்றுதான்
·         அத்வைதம்: இரண்டற்றதுஇது ஒன்றுதான், தனக்கு நிகராக வேறொன்றில்லாமலும் இருக்கின்றது
·         பாவ-அபாவ சாக்ஷிஇருக்கும் பொருளையும், இல்லாமையையும் காட்டுகிறது. கண் எப்படி வெளிச்சத்தையும் இருட்டையும் காண்பிப்பது போல
 
ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்
தத்ர: - அங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) ;
ந பஶ்யதி ஆத்மா எதையும் பார்ப்பதில்லை என்று
யத்3வைநினைப்பது தவறு ;
பஶ்யந்திஅங்கு பார்த்துக் கொண்டுதான், அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு, விழித்து கொண்டு;
வ பஶ்யதிபார்க்காமலும் இருக்கிறது.
சுஷுப்தியில் அது பார்த்துக் கொண்டுமிருக்கிறது, பார்க்காமலும் இருக்கிறது.
தே பஶ்யனபார்த்துக் கொண்டிருப்பது எப்படி? (உறக்கத்தில்) அதனுடைய ஸ்வரூபத்தின் திருஷ்டிப்படி
 
த்3ருஷ்டி: - ஸ்வரூப சைதன்யத்திற்கு
த்3ரஷ்ட: - பார்ப்பவனுடைய, அனுபவிப்பனுடைய
நஹி விபரிலோப:தன்மை மாறுதலடைவதில்லைஅறிபவனுடைய அறிவுக்கும் எந்த மாற்றமும் இல்லை, ஜடமாவதில்லை, அழிந்து விடுவதுமில்லை.
 
ஆகவே ஆத்மா பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்காரணம்
தன்னுடைய ஸ்வரூபமே அழியாததாக இருப்பதால் அது நாசத்தை அடையாத ஸ்வரூபமாக இருக்கிறது.

கேள்வி எப்படி பார்க்காமலும் இருக்கிறது?
பதில்   சாமான்ய சைதன்யம் இருக்கிறது; விசேஷ சைதன்யமாக இல்லைஅது விதவிதமான பொருட்களை பார்க்காமல் இருக்கிறதுவிழிப்பு நிலையில் கண் மூடிக் கொண்டால், ஒன்றுமே தெரியவில்லை என்பது விசேஷமானவற்றை பார்க்கவில்லை, சாமான்ய இருப்பைத்தான் பார்க்கிறோம்.

 

         விசேஷ தரிசனம் பெற மூன்று விஷயங்கள் தேவை. அவைகள்,
1.   த்வீதயம்: பிரமாதா என்ற ஒருவன், சிதாபாசன் இரண்டாவது சைதன்யம் ஒடுங்கிய நிலையில் இருக்கிறது
2.   அனயது: கண், காது போன்ற இந்திரியங்களும் கிடையாதுஇது பிரமானம்
3.   விபக்தம்: பிரமேயம். அறியப்படுகின்ற பொருட்களும் கிடையாது
         இவைகள் இருந்தால்தான் அவன் பார்க்க முடியும், இல்லாமல் எப்படி பார்க்க முடியும்
 
இதேப் போன்று கேட்டல் (24), தொட்டுணர்தல் (25), நுகர்தல் (26), பேசுதல் (27), அறிதல்(28), சுவைத்தல்(29),சிந்தித்தல்(30), ஆகிய செயல்களை மேலே கூறிய கருத்துக்களோடு சேர்த்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-31
இதில் ஜாக்ரத-ஸ்வப்ன அவஸ்தை விசாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதுசம்சாரத்தை விளக்க ஜாக்ரத் அவஸ்தை எடுத்துக் கொள்ளப்படுகிறதுத்வைதத்தினுடைய மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் த்வதம் வெளிப்படாமல் இருக்கிறது ஆகவே அது வெளிப்படும் விழிப்பு நிலையும்,, கனவு நிலையும்  எடுத்துக் கொள்ளப்படுகிறது
ஏவ என்ற சொல் கொடுக்கும்போலஎன்ற அர்த்தம் மித்யாவை குறிக்கிறது.  “போலஎன்பது  அனுபவத்தில் இருப்பது ஆனால் அறிவுக்கு இல்லாதது
 
கேள்வி ஆத்மா என்ற சைதன்ய ஸ்வரூபம் விசேஷமானதா அல்லது சாமான்யமானதா? விசேஷமானதென்றால் ஆழ்ந்த உறக்கநிலையே வராது. சாமான்யமென்றால் விழிப்புநிலையிலும், கனவுநிலையிலும் விளக்க முடியாதுஎனவே ஆத்மா விசேஷ, சவிசேஷ சைதன்யமாக இருக்கலாமல்லவாஆத்மா நிர்விசேஷமாக இருப்பதால் விழிப்புநிலை, கனவுநிலை எப்படி தோன்றுகிறது?
பதில்   இரண்டு ஸ்வரூபம் ஒரு பொருளுக்கு இருக்கலாம் அவையிரண்டும் ஒத்துப்போனால்இங்கு உன்னால் இரண்டு விருத்தமான தன்மையை ஸ்வரூபமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இது நடக்காது, கற்பிக்க முடியாது.
கேள்வி ஆனால் அனுபவத்தில் அப்படி இருப்பதாக தெரிகிறது?
பதில்   இரண்டு விருத்தமான தர்மங்கள் ஒரெ பொருளில் காணலாம்அவைகள் ஒன்று சத்யமாகவும் மற்றொன்று மித்யாகவும் இருக்கும்.  த்வைதம் இருக்கின்ற இடத்தில்தான் மித்யா என்ற குறிக்கும் சொல் ஏவ(போல) என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறதுசாமான்ய சைதன்யத்தை சத்யமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
எத்ரவிழிப்புநிலையில், கனவுநிலையில்
அன்யத இவ ஸ்யாத் - ஆத்மாவுக்கு வேறாக ஒன்று (பிரமாதா, பிரமானம், பிரமேயம்) இப்படி ஒரு கற்பனையாக தோன்றுகிறதோ, பொய்யான விஷயங்கள் தோன்றுகிறதோ
தத்ர - அந்த வேளையில்
அன்ய: - பிரமாதா என்ற ஒருவன் ஆத்மாவுக்கு வேறாக
அன்யதி - தனக்கு வேறாக இருக்கலாம்.
கண்கள் என்ற பிரமாணத்தினால் அறியப்படும் பொருள் தோன்றிவிட்டால் அவன் அனுபவிக்கின்றான். இதேமாதிரி கேட்டல், சுவைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை அனுபவிக்கின்றான். ஆத்மா உண்மையில் நிர்விசேஷம் மற்றதெல்லாம் மித்யா.
        
ஸ்லோகம்-32
இந்த மந்திரத்தில் ஆத்மாவின் ஸ்வரூபம், மோட்சத்தின் ஸ்வரூபம் கூறப்படுகிறதுஆனந்தத்தின் ஸ்வரூபம் அறிமுகப்படுத்தபடுகிறதுஆத்மாவானது அனைத்து விதமான வேற்றுமைகளுமற்றதாக இருக்கிறது. இதை அறிந்தவன் அனைத்து செல்வங்களையும் அடைந்தவனாகிறான்.
 
ஸலின: - (நீர்) – நீரைப்போல தூய்மையானது. ஒரு பொருளினிடத்தில் தனக்கு வேறாக ஒன்று வந்து சேரும்போதுதான் அசுத்தத்தை அடைகின்றது.  ஆத்மாவுக்கு (விஜாதீய பேதம்) முரணாக, வேறாக ஒன்றும் இல்லைஎனவே அது என்றும் தூய்மையானதுபொதுவாக அந்தக்கரணத்தோடு சம்பந்தம் ஏற்பட்டு அதனால்தான் அசுத்தம் வரும்அந்தக்கரணத்திற்கு ஆத்மாவுக்கு நிகராக இல்லாததால் அதனால் அசுத்தபடுத்த முடியாது.
ஏக: - ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ஒவ்வொரு ஆத்மா இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளக்கூடாதுஎவ்வளவு அந்தகரணங்கள் இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான். ஆகாசம் குட ஆகாசம், ஜலாகாசம், மஹா ஆகாசம் என்று பலவாக அறியப்பட்டாலும், ஆகாசம் என்பது ஒன்றுதான் அதுபோலதான் ஆத்மாவும் இருக்கிறது.
த்3ரஷ்டா: - அந்தக்கரணத்தின் மூலம் இந்த பார்ப்பவன்
அத்3ரஷ்டா: - தன்னுடைய ஸ்வரூபத்தில் எந்த மாற்றமும் அடைவதில்லை, எதையும் பார்ப்பதில்லை
அத்3வைத: - இந்த ஆத்மா இரண்டற்றதாக இருக்கிறதுஅது ஒன்றாவும் இருக்கிறது அதேசமயத்தில் தனக்குள்ளே எந்த வேற்றுமைகளும் இல்லாமலும் இருக்கிறதுஇதுவரை சொல்லப்பட்டது ஆத்மாவின் ஸ்வரூபம்.
 
ஏஷ: ப்3ரஹ்ம லோக: - ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாக இருத்தலே மோட்சமாகும்பிரம்மனாக இருத்தலே மோட்சம்
யாக்ஞவல்கியர் இவ்விதம் ஜனகருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.
அனுஶானம் - உபதேசம் செய்தல்
 
ஏஷ: அஸ்ய பரமாக3தி: - ஒருவனுடைய இறுதி லட்சியமானது மோட்சத்தை அடைவதுதான்.
ஏஷ: அஸ்ய பரமாம்ஸபத: - இதுதான் ஒருவன் அடையக்கூடிய இறுதியான மிகமேலான செல்வம், மற்ற செல்வங்களெல்லாம் காலவரையறைக்குட்பட்டது, அழியக்கூடியதுஇதுதான் அழிவில்லாத சுகத்தை கொடுக்க க்கூடியது.
ஏஷ: அஸ்ய பரமாலோக: - இதுதான் ஒருவன் அடையக்கூடிய மிக மேலான இடம்
ஏஷ: அஸ்ய பரமானந்த3: - இதுதான் ஒருவன் அடையக்கூடிய பரமானந்தம்இதற்கு மேலானது வேறெதுவும் கிடையாதுவேறொருவன் சுகமாக இருக்கிறான் என்று பார்க்கும்போதுதான் பொறாமை என்பதே வருகிறதுஇந்த பரமானந்தத்தை அடைந்தவனுக்கு மற்றனைத்து ஆனந்தமும் ஒரு துளிதான் அதனால் இவனுக்கு பொறாமை என்பது வரவே வராது.
ஏதஸ்ய ஏவ ஆனந்த3ஸ்ய - மோட்சத்திலிருக்கின்ற ஆனந்தமானது
அன்யானி பூ4தானி - ஞானியை தவிர்த்து மற்ற ஜீவராசிகள்
மாத்ராம் உபஜீவந்தி - அதில் ஒரு சிறு துளியைத்தான் அனுபவிக்கிறார்கள்.
 
ஸ்லோகம்-33 – ஆனந்தத்தைப் பற்றிய விசாரம்
பூர்வமீமாஸிகளின் சித்தாந்தம்:
1.       பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்: நாம் ஒரு விஷயத்தினால் இந்திரியங்கள் மூலமாக அனுபவிக்கும் ஆனந்தம் விஷயானந்தம்விஷயானந்தம் பிரம்மானந்தத்திற்கு வேறானதும் அல்லஏனென்றால் அது பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்.
2.      இந்த விஷயானந்தம் வேற்றுமைகளுடன் (தாரதம்யத்துடன்) கூடியதுஏற்றத்தாழ்வுகளை உடையதுஆனந்தத்தின் அளவு வேறுபாடுடையது.
3.      இது எதன் நிமித்தமாக வருகின்றதுமேலோட்டமாக பார்க்கும்போது விஷயமே நிமித்தமாக இருக்கிறது ஆனால் விஷயம் சூட்சுமமாக ஆக சுகமும் அதிகமாகிறது. நம்முடைய உபாதிகள் (இந்திரியங்கள்) உண்மையான காரணமாக இருக்கிறதுஒரே விஷயம் ஒருவனுக்கு இன்பத்தை கொடுக்கும் மற்றொருவனுக்கு துன்பத்தை கொடுக்கும்இதற்கு நம்முடைய இந்திரியங்களிடத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுதான் உண்மையான காரணமாகும்.  இசையை மனிதன் ரசிக்கின்றான், நாய்கள் அனுபவிப்பதில்லைவிருத்தியானது சூட்சுமாகும் போது ஆனந்தமும் அதிகமாகின்றது.   அவரவர்களிடையே ஏற்படும் விருத்தியைப் பொறுத்துத்தான் ஆனந்தத்தின் அளவும் இருக்கின்றது.
 
எண்ணங்களுக்கு தடை வரும்போது ஆனந்தத்தின் அளவு குறைகின்றதுஎப்படி விருத்தியை சூட்சுமபடுத்தி ஆனந்தத்தை அதிகரிக்க செய்வது?
எந்த விஷயத்தில் ஆனந்தத்தை அடைகிறாயோ அந்த விஷயத்தில் வைராக்கியம் வந்துவிட்டால் அதைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை அடையலாம்காரணம் அந்தப் பொருள் நிமித்தமாக ஆசை வந்து அடையும்போது சுகத்தை அனுபவிக்கிறோம். அந்தப் பொருள் மீது வைராக்கியம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்போம்ஒரு விஷயத்தில் உள்ள ஆனந்தமானது எதையாவது இழக்க வைத்து விடும்போகத்தை விக்ஷேபத்துடன் (எதிர்ப்பார்ப்புடன்) அனுபவிப்போம்இங்கு விருத்தியானது அதி சூட்சுமமாகி விடுகிறது எனவே ஆனந்தமும் அதிகரிக்கிறதுவைராக்கியம் விவேகம் மூலமாக வந்தால்தான் அது நிரந்தரமாக இருக்கும்.
 
அகாம ஹத:  - ஆசையினால் தாக்கப்படாமல் இருத்தல்,
ஸ்ரோத்ரியம்: - சாஸ்திர விசாரம் செய்து அதன் மூலம் விவேகத்தை அடைந்திருத்தல்
அவ்ருஜின:    - பாவமற்றிருத்தல்
இந்த மூன்றும் உடையவன் அதிக அளவு ஆனந்தத்தை அடைகிறான்.
  • பிரதிபிம்ப ஆனந்தத்தை அனுபவிக்கும்போது அதற்கு பிம்பமாக இருப்பது பிரம்மானந்த ஸ்வரூபம் என்று அறிந்துகொள்ள வேண்டும்..
  • வைராக்கியம் பிரதிபிம்ப ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
விவேகமும் தவமும், சேர்ந்திருந்தால்தான் வைராக்கியத்தை அடைய முடியும்.
 
மந்திர விளக்கம்:
: ய: மனுஷ்யாணாம் ராத்3த4: ஸம்ருத்3தோ4
எந்த மனிதன் போகத்திற்கு தேவையான எல்லா அவயவங்கள் உடையவனாகவும், அனைவருக்கும் அதிபதியாகவும் இருப்பவனாகவும், மனிதனால் அனுபவிக்கப்படுகின்ற அனைத்து இன்பங்களை கொடுக்கக்கூடிய பொருட்களை உடையவனாகவும் இருக்கும் நிலைதான் மனிதன் அனுபவிக்கும் அதிகபட்ச இன்பம்பித்ருலோகத்தில் இருப்பவர்கள் மனிதலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள். கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள் பித்ருலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்கர்மத்தினால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கந்தர்வலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்பிறப்பால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கர்மதேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்யாரொருவன் ஸ்ரோத்ரியம் (சாஸ்திரங்களை கற்றவன்), அகாமஹத் (ஆசைகளற்றவன்), அவ்ருஜின: (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரஜாபதி லோகத்தை அடைவான். இது விராட் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்யாரொருவன் ஸ்ரோத்ரியம் (சாஸ்திரங்களை கற்றவன்), அகாமஹத் (ஆசைகளற்றவன்), அவ்ருஜின: (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரம்ம லோகத்தை அடைவான். இது ஹிரண்யகர்ப்பன் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
 
பிரதிபிம்ப ஆனந்தத்தை வைத்து பிம்பானந்த ஸ்வரூபத்தை அறிந்துக்கொள்ள வேண்டும்ஆனந்தத்தை நாடுதல் சம்சாரம், அதன் ஸ்வரூபமே நாந்தான் என்று அறிந்து கொள்வது மோட்சம்சாஸ்திர ஞானத்தின் மூலம் வைராக்யத்தை அடைய வேண்டும்வைராக்யத்தின் மூலம் பிரதிபிம்பானந்தத்தின் அளவு அதிகமாகி தவத்தின் மூலம் பாவத்தையெல்லாம் நீக்கி பிம்பானந்தத்தை அடைய வேண்டும்ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.
 
ஆத்மஞானத்தை அடைவதனால் என்ன பலன்?
ஏஷ: ஏவ பரம் ஆனந்த3: - பிரம்மன் என்கின்ற பிரம்ம ஸ்வரூபம் மிகவும் மேலான, உயர்வான, முழுமையான ஆனந்தமுடையதுஇது ஏற்றத்தாழ்வற்ற ஆனந்தம்இவ்விதம் யாக்ஞவல்கியர் ஜனக மன்னருக்கு விளக்கினார். மேலும் எனக்கு விளக்குங்கள் என்று ஜனகர் கேட்டுக்கொண்டார்அவருக்கு ஜனகரின் வேண்டுகோள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்ததுஅறிவாளியான ஜனகர் என்னிடத்திலிருந்து எல்லாம் அறிவை முழுமையாக அறிந்துக் கொள்ள விரும்புகிறார்.
 
ஸ்லோகம்-34
வைராக்யத்தை அடைவதற்காக மரண வர்ணனை, சம்சார வர்ணனை கூறப்படுகிறது.
சுஷுப்தி அவஸ்தை மோட்சத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறதுஜாக்ரத்-கனவு சம்சாரத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறதுஎந்த ஒரு அவஸ்தையிலும் நிலையாக இருப்பதில்லைஅதில் அவனுக்கு சோர்வு, சலிப்பு ஏற்படுகிறதுஏனென்றால் கனவுகள் முழுமையாக, நிபந்தனையற்றதாக இருப்பதில்லைஉண்மையான ஸ்வரூபமல்லஒரே அவஸ்தையில் தொடர்ந்து இருக்க முடியவில்லைஎனவே அது சம்சாரத்தை குறிக்கிறது.
 
ஸ்லோகம்-35
கிராமங்களில் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரத்தை வெளி சுற்றில், பட்டையான இரும்பு  அடிக்கப்பட்டிருக்கும்இதனால் இந்த வண்டி மிகவும் சப்தம் போட்டுக்கொண்டு செல்கிறதோ.
அதேபோல இந்த ஜீவன் இறக்கும்போது வித விதமாக புலம்பிக்கொண்டே, சத்தம் போட்டுக்கொண்டே செல்கின்றான்மிகவும் வேதனையோடு துடிக்கின்றான அதன்பிறகு இறக்கின்றான்இந்த சரீரத்தில் இருக்கின்ற ஜீவாத்மா ஈஸ்வரனால்(பிராக்ஞேன ஆத்மனா) ஸ்வயம் ஜோதியாக இருக்கின்ற ஆத்மாவை அதிஷ்டானமாக கொண்ட இந்த ஜீவாத்மாவை அழைத்துச் செல்கிறார்.
 
உத்ஸர்ஜன: - வித விதமாக புலம்பிக்கொண்டே
ஊர்த்4வாச்சா2ஸி - எப்பொழுது உதானன் தயாராகிறதோ
உதா3ணன் - உதாணன் உயிரோடிருக்கும்போது உதவி செய்து கொண்டிருப்பது, இறக்கும்போது எல்லா இந்திரியங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற உதவி செய்யும்
 
ஸ்லோகம்-36
·         எப்பொழுது உதானன் தயாராகிறது?
·         எதனால் தயாராகிறது?
·         எப்படி ஒருவன் இறக்கின்றான்ஏன் உதானன் வெளியே செல்கிறது?
·         எதற்காக ஜீவன் இறக்கின்றான்?
 
எப்பொழுது இந்த ஸ்தூல சரீரம் எல்லா சக்திகளையும் இழந்து பலவீனமாகிறதோ வயோதிகத்தினாலும், நோயினாலும் உடல் இளைத்து, சக்தியற்றதாகி விடும்போது நம்முடைய சூட்சும சரீரமானது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்குகிறது அதுவே மரணம்.  எப்படி பழுத்த பழமோ, காய்ந்த இலைகளோ மரத்தை விட்டு தானே விழுந்து விடுவது போல ஜீவாத்மா இந்த ஸ்தூல உடலை விட்டு வெளியே செல்கிறதுபிறகு மீண்டும் வேறொரு சரீரத்தை எடுக்கிறது.
 
ஸ்லோகம்-37
ஒருவன் பிறக்கும்போது எப்படி வரவேற்கப்படுகிறான்?
எவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ராஜா பயணம் செய்யும் போது, அங்கே இருப்பவர்கள் அவருக்காக எல்லா வசதிகளையும் செய்து விட்டு அவர் நன்கு வறவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அது மாதிரி மற்ற ஜீவராசிகள் புதிய ஜீவாத்மாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்பாவ புண்ணியங்களின்படி பிறக்கப்போகும் இடம், சூழ்நிலைகளை தயாரானவுடன் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 
ஸ்லோகம்-38
ராஜா தாம் தங்கியிருந்த இடத்திலிருந்து அரண்மனைக்கு செல்லும்போது அவர் வரும்போது வரவேற்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள், அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்து அனுப்புகிறார்கள்அதுபோல இறக்கப்போகும் உடலிலுள்ள பிராணன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உதாணனுடன் வெளியே செல்ல தயாராக உள்ளது.
 
பகுதி தொகுப்பு
இந்த உடலுக்கு ஜோதியாக இருப்பது எதுஇந்த ஜீவனுடைய விவகாரத்திற்கு காரணம் எது? இந்த ஜீவன் ஜடமாக இருப்பதால், அதனால் சுயமாக எதுவும் செய்ய முடியாதுஜடமான பொருட்கள் வேறொன்றை சார்ந்துதான் விவகாரம் செய்ய முடியும்பானை நகர்கிறது என்றால் அதை நகர்த்துவதற்கு ஏதோ ஒன்று காரணாமாக இருக்க வேண்டும்அது போல இந்த உடலுக்கு ஜோதியாக சூரியன் என்று ஆரம்பித்து பின் சந்திரன், அக்னி, சப்தம் இறுதியில் ஆத்மாதான் என்று பதிலளிக்கிறார்.
 
ஆத்மா உடலுக்கப்பாலும் இருந்து கொண்டு பிரகாசிக்கிறதுஉள்ளேயும் இருந்து கொண்டும் பிரகாசிக்கிறதுஇதன் ஸ்வரூபம் ஸ்வயம் ஜோதிதானாக பிரகாசித்துக் கொண்டும் மற்றவற்றால் விளக்க முடியாததாகவும் இருக்கிறதுஇது அப்பிரமேயம்எந்தப் பிரமாணத்தினாலும் நேரிடையாக விளக்க முடியாதுஇது அபௌதிகம்பூதங்களால் உருவானதில்லை.
 
ஆத்மாவின் ஸ்வரூபம் என்ன?
அது சைதன்ய ஸ்வரூபம், சேதனமாக இருப்பது ஆத்மாஇந்த ஆத்மா எப்படி தன்னை வெளிப்படுகிறது, இவ்வாறு வெளிப்படுத்துகின்ற ஆத்மா தன்னை புத்தியில் பிரதிபலிக்க செய்து சிதாபாசனாக செயல்படுகிறது.
 
தியாயதி இவ, லேலாயதி இவ
ஞான விவகாரம்சூட்சும சரீரம்; கர்ம விவகாரம்- இந்திரியங்களின் உதவியோடு செய்வது
இவைகளை ஆத்மா செய்வதில்லைபொதுவாக நாம்நான் என்று சூட்சும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் நினைப்பதால், இந்த கர்ம, ஞான விவகாரங்களை நான் செய்கிறேன் என்று நினைக்கிறோம் அதனால் சஞ்சலம், துக்கம் அடைகிறோம்.
 
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது இவன் பிறக்கின்றான். பிறகு இந்திரியங்களின் சம்பந்தத்தால் பாவ-புண்ணியங்களை சம்பாதிக்கின்றான்ஒரு பொருளை தியாகம் செய்யும் போது அந்தப்பொருள் இறந்ததற்கு சமமாகிறதுஅதேமாதிரி ஒரு பொருளின்மீது ஆசை வைக்கும்போது அந்த பொருள் பிறப்பதற்கு சமமாகிறது
 
தர்ம-அதர்மங்களின் இருப்பிடமாக இருப்பது சரீரம்கனவு பிறவிகளை உறுதிப்படுத்துகிறது.
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜோதிகனவு நிலையில் இந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருப்பதை உணரலாம்ஜாக்ரத் அவஸ்தையில் ஆத்மாவும், மனமும் அறியும் ஜோதியாக இருக்கிறதுஆழ்நிலை உறக்கத்தில் எதுவும் நடக்காததால் அங்கே ஆத்மா உணரமுடியாமல் இருக்கிறதுகனவுகள் மனதினுடைய விகாரங்கள், மனம் பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது. இதைப்பார்ப்பவனாக ஆத்மா இருக்கிறது என்பதை அறியலாம்.
 
கனவு வாஸனாமயம், ஜாக்ரத் நிலையின் தொடர்ச்சியல்ல, உருவாக்குவதும் உபாதான காரணமாகவும் இருப்பது வாஸனைகள், நிமித்த காரணம் கர்மபலன்.
 
ஹிரண்மயஹ புருஷஹ (கரணங்களை வியாபித்துள்ளவன்) ஏக அம்ஸஹ சிதாபாச ரூபமாக இருக்கின்ற ஒருவன் சைதன்ய ஸ்வரூபம்எல்லோரும் பொய்யைதான் நாடுகிறார்கள்மீன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று வருவது போன்ற சம்பந்தத்தை உடையது ஆத்மா ஒரு அவஸ்தையிலிருந்து மறு அவஸ்தைக்கு சென்று வருவதுசுஷுப்தி அவஸ்தையில் அனுபவிப்பது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக கருதலாம்.
 
ஒருவன் தந்தையாகவும் இருக்கின்றான், ஆனால் தந்தையாக இல்லாமலும் இருக்கின்றான், தாயாகவும் இருக்கின்றாள், இல்லாமலும் இருக்கின்றாள்பாவத்தாலும் புண்ணியத்தாலும் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்.

விழிப்புநிலையில் பார்க்கும் பொருட்களெல்லாம் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமை பார்க்கும்போதுதான் த்வைதம் வந்து விடுகிறது. பிரதிபிம்பானந்தத்தை கொண்டு பிம்பானந்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அத்தியாய  தொகுப்புரை
குணவாதம்: பிரத்யக்ஷ பிரமாணத்தில் வராததுஅனுபவத்திற்கு எதிரானது
பூதார்த்தவாதம்: இந்திரன் கையில் வஜ்ராயுதம் என்ற வாக்கியத்தில் வஜ்ராயுதம் இருந்ததா இல்லையா என்று முடிவு செய்ய முடியாதது, நிரூபிக்க முடியாது ஆனால் ஏற்றுக் கொள்கிறோம்.
 
புருஷவித பிரமாணம்:  ஒருவன் அடையும் மேலான பதவி ஹிரண்யகர்ப்பன் என்ற பதவிதான்உலகத்தில் உள்ள எந்தப்பொருளும் பயத்தைப் போக்காது. எதை அடைந்தாலும் தன்னிறைவுடன் இருக்க முடியாதுமந்திரங்கள் 7லிருந்து 10வரை வேதாந்தத்தை விளக்குகிறதுசம்சாரம் வரையறுக்கப்பட்டது, வித்யா சூத்திரம், பிரம்மத்தை ஆத்மா என்று விளக்கப்பட்டிருக்கிறது. ப்ரவேஸ ஸ்ருதி விசாரம் செய்யப்பட்டிருக்கிறதுசரீரத்திற்குள் சென்றவர் யார்? பரமாத்வாவா அல்லது ஜீவாத்மாவா என்று விசாரம் செய்தல்இறுதியில் பரமாத்மாதான் என்று நிரூபிக்கப்படுகிறதுபிரவேசம் என்பதற்கு இருக்கிறது என்பதுதான் தாத்பர்யம்ஆத்மா இத்யேவ உபாஸீதயார் சொல்லியும் நாம் எந்தக் காரியமும் செய்வதில்லை. நாம் எதை செய்ய வேண்டுமென்று நினைக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம்நாம் ஆத்மாவைத்தான் உண்மையாக நேசிப்பதால் அதை அடைவதைத்தான் லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிரம்மன் அனைத்துமாக இருக்கிறதுஅது தன்னையே தெரிந்து கொண்ட அதிகாரித்வம் பேசப்பட்டது. விக்ன அபாவம் விசாரம் செய்யப்பட்டதுயாரும் நாம் ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்க முடியாது. ஆனால் நம் கர்மபலன்கள்தான் தடைகளைக் கொடுக்க முடியும். அவித்யா சூத்திரம் பற்றிய விளக்கம்.
 
பகுதி-5- சப்தான்ன பிராமனம்:
இதில் ஜீவன் கர்த்தவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றான் என்று விளக்கப்பட்டது. சாதன-சாத்தியமும் விளக்க்கப்பட்டிருக்கிறதுபுத்திரனால் பித்ருலோகமும், கர்மத்தால் பிரம்மலோகமும், ஞானத்தால் மோட்சமும் அடையலாம் என்று கூறப்பட்டிருக்கிறதுஜீவனுடைய போக்த்ருத்வம்- ஜீவன் அனுபவிப்பவன், செயலின் விளைவை அனுபவிப்பவன்ஸ்ருஷ்டியை நாம-ரூப-கர்ம என்று மூன்று விதமாக ஏற்றுக் கொள்ளுதல்சம்சாரத்தில் ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கின்றான்நாம் இந்த உலகத்தை அனுபவிக்கும்போது போக்தா, இந்த உலகம் நம்மை அனுபவிக்கும்போது போக்யமாகவும் இருக்கிறோம்.
 
சம்பந்தபாஷ்ய விசாரம்:  கர்ம காண்டமும், ஞானகாண்டமும் பிரமாணமேகர்மகாண்டம்-சாதனம், ஞான காண்டம்சாத்தியம்; கர்மமே மோட்சத்தை கொடுக்காது.
 
பகுதி-1 அஸ்வ ப்ராமனம்: சத்திரியன் அஸ்வமேத யாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம்பிராமணன் இந்த யாகத்தை தியானம் செய்து அதே சொர்க்கத்தை அடையலாம். குதிரையை ஆலம்பனமாக வைத்து இந்த பிரபஞ்சத்தை பார்த்து தியானித்தல்இதன் மூலம் சித்தஸுத்தி அடையலாம்உபாஸனை-அத்யாரோபம்; சாதனம்-பிரபஞ்சம்
 
பகுதி-2 அக்னி பிராமனம்: அக்னியை ஆலம்பனமாக வைத்து, விராட் தத்துவத்தை உபாஸனை செய்தல்ஸ்ருஷ்டிக்கு முன்பு காரணம் இருந்ததா, காரியம் இருந்ததா என்ற கேள்விக்கு காரணமும் இருந்தது, காரியமும் இருந்தது என்று நிரூபித்தல்.

பகுதி-3 உத்கீத பிராமனம்: பிராண உபாஸனை விளக்கப்பட்டது. இதனுடைய சுத்த ஸ்வரூபம் விளக்கப்பட்டதுஇந்திரியங்கள் நல்லது, கெட்டதை இரண்டையும் அனுபவிக்கும். பிராணன் எப்பொழுதுமே தூய்மையாக இருக்கிறது.

பாஷ்ய விசாரம்: விதி வாக்கியமும், நிஷேத வாக்கியமும், வேத வாக்கியமும் பிரமாணம்வேதத்தில் உள்ள சில வாக்கியங்கள் அர்த்தவதமாக எடுத்துக் கொள்ளலாம். அனுவாதம் என்பது தெரிந்ததை சொல்லுதலாகும்.
 
பகுதி-6 உக்தம் பிராமனம்: அனைத்து நாமங்களுக்கும் சாமான்யமான சப்தமாக எடுத்துக் கொண்டு வாக் என்று அழைக்கப்படுகிறதுஅதுதான் உபாதான கரணமாக இருக்கிறதுஅதில் விதவிதமான சப்தங்கள் ஏற்றி வைக்கப்படுகிறதுஇவையனைத்தும் நாமத்தில் ஒடுக்கப்படுகிறதுசாமான்யமான ரூபம் சத்யம், விதவிதமான ரூபங்கள் மித்யாசரீரம் சாமான்யம்இதிலிருந்து தோன்றும் கர்மங்கள் அனைத்துக்கும் ஆதாரம் சரீரம்இந்த மூன்றையும் சரீரத்தில் ஒடுக்கி, சரீரத்தை நீக்கிவிட்டால் உலகத்தையும் நீக்குவது போல் ஆகும்நாம-ரூபம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழிந்துவிடும். அதனால் இவைகளும் மித்யா
 
அத்யாரோபம்-ஏற்றி வைத்தல்; அபவாதம்-நீக்குதல்
அத்யாரோபம்அனாத்மாவை ஏற்றுக்கொள்ளுதல்; திருஷ்ய பிரபஞ்சம் நாம் பார்த்து அனுபவிக்கும் அனாத்மா அஸத்.
அபவாதம்ஏற்றுக்கொண்ட அனாத்மாவை நீக்குதல். எனவே இதை ஸத் என்றும் கூற முடியாது.
அனாத்மா ஸத்தும் அல்ல; அஸத்தும் அல்ல; எனவே மித்யா என்று உணரலாம்.
எட்டு விதமாக உலகத்தின் மீது அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
1.      சாதன பிரபஞ்சம்: சிலவற்றை சாதனமாக பயன்படுத்தி வேறொன்றை அடைகின்றோம். விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள் சாதனமாக, கர்மரூபமாக கூறப்பட்டுள்ளதுசப்தான்னத்தில் இருக்கும் முதல் நான்கும் சாதனங்களாக இருக்கின்றன.
2.      சாத்தியபரபஞ்சம்: ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட பலன்கள் எல்லாமே சாத்திய பிரபஞ்சம்மனிதலோகம், பித்ருலோகம், தேவலோகம், சாத்தியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
3.      அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா)- மேலே சொன்ன இரண்டு அத்யாரோபங்களுக்கு காரணமாக இருப்பது.
4.      ஜீவனுடைய கர்த்ருத்வம்ஜீவன் கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல்.. இப்படி ஏற்றுக் கொண்டால்தான் கர்ம காண்டமே பயன்படும்ஜீவ ஸ்ருஷ்டியும் இருக்கிறது
 
பகுதி-4 : சாரீரக (सारीरगः) பிராமனம்
ஜீவாத்மாவினுடைய தன்மையை விளக்கும் பிராமனம்ஜீவன் மேற்கொள்ள வேண்டிய சாதனங்களைக் கூறி ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் விளக்கப்படுகிறது.  ஜீவன் எந்தவிதத்தில் சம்சாரியாக இருக்கிறான் என்பதையும், பிரம்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலையையும் விளக்குகிறது
 
ஸ்லோகம்-1 (மரண அவஸ்தையில் உள்ளவனின் நிலை)
ஸ: -  ஜீவாத்மா ;
யத்ர - மரணத்தறுவாயில்
அப3ல்யம் ந்யேத்ய - அனைத்து பலத்தையும் இழந்து,  
ஸம்மோஹம் இவ ந்யேதி - புத்தியில் எதுவும் செயல்படாத நிலையை அடைந்து
அத2 ஏனம் ஏதே ப்ரணா: - இந்நிலையில் இந்திரியங்கள் காரண சரீரத்தை நோக்கி செல்கின்றன.
ஸமப்4யாத3தா3ன: - அந்தந்த இந்திரியங்கள் தத்தம் ஸ்தானத்திலிருந்து விலகி
ஹ்ருத3யம் ஏவ அந்த - காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
ஸ யத்ர ஏஷ சாக்ஷு: புருஷ - இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவதையானது
பராட் பர்யாவர்ததே - வந்த வழியே திரும்பி சென்று விடுகின்றது.
அத2 ரூபாஞானே - பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறது.
 
ஸ்லோகம்-2  
ஜீவாத்மாவில் உள்ள இந்திரியங்கள் காரண சரீரத்தில் ஒடுங்கி அந்தந்த தேவதைகளுடன் ஐக்கியமாகின்றதுபார்க்கும் சக்தியானது காரண சரீரத்தில் ஒடுங்குவதால் மற்றவர்களை இவனால் பார்க்க முடியவில்லை, வாசனைகளை நுகர முடியவில்லைசுவைப்பதில்லை, பேச முடியவில்லை, கேட்கும் சக்தியை இழந்து விடுகிறான், வலியை உணரும் சக்தியையும், தொட்டுணரும் சக்தியையும், சிந்திக்கும் திறனும் இழந்து விடுகிறான்
 
அக்ஞானியுடைய ஜீவன் ஸ்தூல சரீரத்திலிருந்து எப்படி வெளியேறுகிறது?
ஜீவன் வெளியேறுகின்ற அந்த நாடி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்அதன் வழியே சென்று பிறகு உடலிலிருந்து வெளியேறுகிறதுகண் வழியாகவோ, தலை உச்சியின் வழியாகவோ, சரீரத்திலிருக்கும் ஒன்பது துவாரங்களிலிருந்து ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாகவோ வெளியேறுகின்றதுஇப்படி வெளியேறும்போது பிராணனனுடன் எல்லா இந்திரியங்களும் தொடர்ந்து செல்கின்றனஇந்த ஜீவன் வெளியே செல்லும்போது வேறெந்த ஞானமும் இல்லை. உடலிலிருந்து வெளியே செல்லும் நிலை மட்டும்தான் தெரிகின்றதுஇந்த ஜீவனைத் தொடர்ந்து செல்பவைகள் அவன் செய்த பாவ-புண்ணியங்கள், ஸம்ஸ்காரங்கள் (வாஸனைகள்) ஆகியவைகளாகும்.
 
ஸ்லோகம்-3  
ஜீவன் சரீரத்தை விடும் போது, வேறொரு சரீரத்தைப் பிடித்துக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுகின்றான்.  எப்படி ஒரு புழுவானது ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு போகும் போது அந்த இலையை பிடித்த பிறகுதான் முந்தைய இலையிலிருந்து தன் கால்களை எடுக்கும்இந்த ஸ்தூல சரீரத்தை விடுவதற்கு முன் வாஸனாமய சரீரத்தை பற்றிக் கொண்டுதான் இதை விட்டு விடுகின்றான்.
 
ஸ்லோகம்-4  
ஜீவனுக்கு இந்த சரீரம் பழையதாகி விட்டதால் புதிய சரீரம் எடுக்கும் அவசியம் ஏற்படுகிறதுஎப்படி தங்கநகை விற்கும் வியாபாரி பழைய நகைகளை எடுத்துக் கொண்டு புதிய நகைகளை கொடுக்கிறானோ அது போல ஜீவன் எந்த உலகத்திற்கு செல்கின்றானோ அதற்கேற்ற ஒரு சரீரத்தை அடைகிறான்இந்த சரீரத்தை ஜடமாக்கி விட்டு, பித்ரு லோகம், கந்தர்வ லோகம், தேவலோகம், பிரஜாபதிலோகம், பிரம்மலோகம் இதைப்போன்ற எந்த லோகத்திற்கு செல்கின்றானோ அந்த லோகத்திற்கேற்ற சரீரத்தை அடைகிறான்.
 
ஸ்லோகம்-5  
இந்த ஜீவாத்மா ஸ்வயம் பிரகாசமாகவும், நமக்கு மிக அருகில் இருக்கின்ற தத்துவமாகவும்  இருக்கின்றது அதுவே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறதுஇந்த சமஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்ற தத்துவம். இந்த ஜீவாத்மா அவித்யாவால் சம்சாரத்தை அனுபவிக்கின்றான்இந்த சம்சார அவஸ்தைதான் இதில் விளக்கப்படுகிறதுஅந்தந்த உபாதியில் அபிமானம் வைக்கும் போது அதற்கு தகுந்த சம்சாரத்தை அனுபவிக்கிறான்புத்தியில் அபிமானிக்கும்போது விக்ஞானமய சம்சாரத்தையும், மனோமய கோசத்தில் அபிமானிக்கும்போது சுக-துக்கங்களை, பிராணனில் அபிமானிக்கும்போது அதுவாகவே மாறி உணவின் மீது பற்று போன்றவைகளை, கண்ணில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், கேட்கும் திறனில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், ஸ்தூல சரீரத்தில் அபிமானிக்கும் போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.
 
நீர் பிரதான, வாயு பிரதான,ஆகாசப்பிரதான, தேஜோ பிரதான, அதேஜோமய (பிசாசாக இருத்தல்), காம-மய, அகாம-மய, க்ரோதமய-அக்ரோதமய, தர்மமய-அதர்மமய இப்படி எல்லாமுமாக இருந்து சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான். இவன் எப்படிபட்ட செயலை செய்கின்றானோ, எப்படிபட்ட நடத்தையுடையவனாக இருக்கின்றானோ அப்படிபட்டவனாக இருக்கின்றான்நல்லதை செய்பவன் நல்லவனாக இருக்கின்றான், அதர்மமான செயல்களை செய்பவன் கெட்டவனாகின்றான்புண்ணியத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதை அடைகின்றான்பாவத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதையே அடைகின்றான்எப்படிபட்ட ஆசையுடையவனாக இருக்கிறானோ அப்படிப்பட்டவனாகவே இருக்கின்றான். நமக்குள்ளே இருக்கிற ஆசைகளின் அடிப்படையில்தான் நம்முடைய செயல்கள் வெளிப்படுகின்றனஒருவனுக்கு எப்படிப்பட்ட ஆசையானது ஆழ்மனதில் இருக்கின்றதோ அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் உறுதியடையும், அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வான். அந்த ஆசையை அடையக் கூடிய செயலை செய்கின்றான். இவன் எந்தக் கர்மத்தை செய்கின்றானோ அதன் பலனை அனுபவிக்கின்றான். எனவே தர்மப்படி வாழ்ந்தால் புண்ணியத்தை அடைந்து அதன்மூலம் சித்தஸுத்தி அடைந்து அதைத் தொடர்ந்து மோட்சத்தையடைவான்அதர்மப்படி வாழ்ந்தால் சம்சாரத்தில்தான் இருந்து துன்பத்தை அனுபவிப்போம்
 
ஸ்லோகம்-6  
எந்தப்பொருள் மீது அளவற்ற ஆசையுடன் இந்த சூட்சுமசரீரம் இருக்கிறதோ அதே பொருட்கள் உள்ள சுழ்நிலையில்தான் அடுத்த பிறவியில் பிறக்கின்றான்இந்த ஜீவன் செய்கின்ற அனைத்து செயலகளினுடைய பலனை அனுபவித்துவிட்டு அந்த லோகத்திலிருந்து மீண்டும் திரும்புகின்றான். இதே லோகத்திற்கு வந்து கர்மத்தை தொடர்கின்றான்இவையெல்லாம் யார் ஆசையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த கதி.
 
இனி முக்திக்கு வருபவனைப்பற்றிய விளக்கம்:
அகாமன - மனதிலிருக்கும் ஆசைகளால் செயலில் ஈடுபடாது இருப்பவன்
நிஷ்காமன - மனதிலிருக்கின்ற வாஸனையான ஆசைகளை நீங்கிவிட்டவன்
ஆப்தகாமன - நிறைவேறிய ஆசையை உடையவன்
இப்படிபட்ட ஜீவனுடைய சூட்சும சரீரம் எந்தப்பயணத்தையும் மேற்கொள்வதில்லைபிரம்மனாக வாழ்ந்து (ब्रह्म एवसन्) கொண்டு ப்ராரப்தம் முடிந்தவுடன் பிரம்மத்தை அடைகிறான் (ब्रह्म अप्येति)
ஆத்மா காமஹ - ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையுடையவன் முதலில் ஆத்ம காமனாக இருக்க வேண்டும்அனாத்மா காமனாக இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கி ஆத்மாவைத்தான் அடைய வேண்டும் என்ற லட்சியமாக கொள்ள வேண்டும். இதைத்தான் முமுக்ஷுத்வம், ஜிக்னாஸு என்று கூறுவர்அநித்ய வஸ்து மீது இருக்கின்ற காமம்  அனாத்மா காமம்அனாத்மாவான பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அது அடையாதது போல்தான்  ஏனென்றால் அது அழியும் தன்மையுடையதுநித்தியமான பொருளை அடைந்தால்தான் அவன் ஆப்தகாமனாக மாறுகின்றான்.   இவன் ஆத்மாவை அடைந்து விட்டான். தன்னையடைந்து விட்டான்மனதிலிருக்கின்ற வாசனையாக இருக்கின்ற ஆசைகள் நீங்கிய நிலையை உடையவன்தான் நிஷ்காமன்எந்த ஸம்ஸ்காரத்திற்கும் சம்சாரத்தை கொடுக்கும் அளவுக்கு சக்தியற்ற நிலையில் உள்ளவன்தான் நிஷ்காமன்அனாத்மா ஆசைகளெல்லாம் வறுக்கப்பட்ட விதைப்போன்று எரிக்கப்பட்டுவிட்டது. நமக்குள் இருக்கும் பல ஆசைகளுக்கு நம்மை செயல்படுத்தும் அளவுக்கு சக்தி இருக்காதுஇவன் எந்தச் செயல் செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான், பாவபுண்ணியங்களும் வந்து சேராதுஆசைகள் எல்லாம் பொய்யாகிவிட்டிருக்கும்ஆசை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் அதனால் பதிக்கப்படாமல் இருப்பான்நிதித்யாஸனத்தால் உள்ளிருக்கும் வாசனைகளெல்லாம் சக்தியற்றதாகி விடும்எனவே அனாத்மாவிலிருக்கும் ஆசைகளை நீக்கிவிட்டு ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையை அடைய வேண்டும்ஆத்ம ஞானத்தை அடைந்தவனுக்கு எதையும் செய்ய வேண்டியதில்லை என்று சாஸ்திரமும் அங்கீகாரம் கொடுத்து விடுகிறது.

சங்கரர் விசாரம்:
கேள்வி: கர்ம காண்டத்தை இவன் விடமுடியாது, நித்திய கர்மத்தை செய்ய வேண்டாம், இல்லையென்றால் பிரத்யஹாரம் பாவம் வந்து விடும்.
பதில்   யாருக்கு பிராப்தி-பரிகாரம்- இதை அடைய வேண்டும், இதை விட வேண்டும் என்ற இந்த இரண்டு ஆசைகளும் இல்லையோ அவன் எந்த கர்மமும் செய்ய வேண்டியதில்லைஞானிக்கு இந்த இரண்டு ஆசைகளும் இல்லைமேலும் அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதால் அவன் எந்தக் கர்மமும் செய்ய தேவை இல்லை.
கேள்வி ஒரு தேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு செல்வது போல இந்த லோகத்தில் இருக்கும் வரை மோட்சம் இல்லை, வேறு உலகத்துக்கு செல்வதுதான் மோட்சம். வேதத்தில் க்ருஷ்ணகதி, சுக்லகதி என்ற விதவிதமான கதிகள் விளக்கப்பட்டிருக்கின்றதுபிரம்மத்தை அடைகின்றான் என்ற வாக்கியம் வேறொரு இடத்தை அடைதல் என்றுதான் பொருள் கொடுக்கிறது.
பதில்   இது ஸ்ருதி விரோதாத்ஸ்ருதியின் கருத்துக்கு எதிரானதுஅப்யேதி என்ற சொல்லின் முன்னால் சொல்லப்பட்ட வாக்கியத்தில் ஞானிகளுக்கு இந்த கதிகள் கிடையாது என்று வேதமே சொல்லியிருக்கிறதுஆகவே மோட்சத்தை எங்கு வேண்டுமானாலும் அடையலாம்.
கேள்வி ஜீவ பாவத்திலிருந்து பிரம்ம பாவத்திற்கு மாறுவதே மோட்சம்உதாரணமாக புழுவானது பட்டாம்பூச்சியாக மாறுவது போலவிசேஷமான கர்மத்தாலும், உபாஸனையாலும் பிரம்ம நிலைக்கு மாறுவது.
பதில்   இதனால் மோட்சமானது கர்மத்தின் பலனாகி மாறிவிடும்ஞானத்தால் மட்டும்தான் மோட்சத்தை அடையும் நிலை ஏற்படாதுஎது கர்மத்தால் அடையப்படுகிறதோ அது அழிந்துவிடும் எனவே மோட்சமானது அநித்தியமானது என்றாகிவிடும்இல்லாத ஒன்றை அடைவதற்கு கர்மம் தேவை. ஆனால் என்றும் நித்தியமாக இருக்கின்ற பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும்இந்த உபாஸனைகள் கர்மங்கள் எல்லாம் சித்தத்தின் தூய்மைக்கு பயன்படும்பாவந்திர பத்தி மனதுக்குத்தான் பொருந்தும் ஆத்மாவுக்கல்ல.
கேள்வி பிரம்மம் என்பது எப்பொழுதும் இருக்கிறதென்றால் நெருப்பை ஏதாவது ஒரு செயலால் வெளிக்கொண்டு வருவதுபோல் கர்மத்தினாலும், தியானத்தினாலும் ஏன் வெளிப்படக்கூடாது
பதில்   கர்மத்தினால் நெருப்பை தோற்றுவிக்கவில்லைஅது இருப்பதை வெளிக்காட்டுகிறதுசரியான உதாரணம் வெளிச்சம் இருட்டில் இருக்கும் பொருளை காட்டிக் கொடுக்கும்.
கேள்வி பந்தநிவிருத்தி மோட்சம் என்றால், மோட்சம் என்பது அபாவ ரூபம் அதாவது துயரம், பந்தம் இல்லாமை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
பதில்   பிரம்மனாக இருத்தல் என்றுதான் உபநிஷத் கூறுகின்றதுமோட்சம் என்பது பாவரூபம், அதாவது பிரம்ம ஸ்வரூபமாக ஆனந்த ஸ்வரூபமாக இருத்தல்
கேள்வி நாம் விஷயானந்தத்தை அனுபவிக்கிறோம் இதற்கு வேறான ஒரு புதிய ஆனந்த அனுபவம் மோட்சம்.
பதில்   புதிய ஆனந்தம் தோன்றுகிறதா அல்லது ஏற்கனவே இருக்கிறதா? தோன்றுவது எல்லாம் அழியக்கூடியது/
கேள்வி ஆனந்த ஸ்வருபமாயுள்ள பிரம்மானந்தம் அதர்மத்தினால் மறைக்கப்பட்டிருக்கிறதுஇதை நீக்கினால் பிரம்மானந்தத்தை அடையலாம்.
பதில்    நீ சொல்வது பிரதிபிம்ப ஆனந்தத்திற்கு சரியாக இருக்கும் ஆனால் பிம்பானந்தம் என்றும் நம்மிடத்திலிருப்பது எனவே அது புதிய அனுபவம் இல்லை. இது நமது சுபாவமாக இருப்பதால் உன்னுடைய கருத்து சரியில்லைஅவித்யையினுடைய காம-க்ரோதிகள் நீங்கி இவன் பிரம்மனாகி இருப்பது, பிராரப்தம் கர்ம நீங்கியவுடன் பிரம்மமாகவே மாறி விடுகின்றான், கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-
காம நிவிருத்தி (ஆசைகளை விடுதல்), அம்ருதத்வ பாவம் (மரணமற்ற நிலை) பிரம்ம பிராப்தி (பிரம்மத்தை அடைதல்). சரீரத்தில் நான் என்கின்ற ஆத்ம புத்தியை விடுதல்
யதா3 - அறிவானது எப்பொழுது பழுத்து விட்டதோ, முதிர்ந்த நிலையில்
ஸர்வே காமா: - எல்லா ஆசைகளும்
ப்ரமுச்யந்தே - தன்னிடத்திலிருந்து நீங்கி விடுகிறதோ, ஆசைக்கு காரணமாக உள்ளதும் நீங்கி இருத்தல்.
யே அஸ்ய ஹ்ருதி3 ஸ்ரிதா: - மனதைச் சார்ந்திருக்கும் ஆசைகள் இகலோக, பரலோக ஆசைகள், பார்க்கும் பொருட்களின் மீதுள்ள ஆசை, காதில் கேட்ட பொருட்களின் மீதுள்ள ஆசை, நம்மை கர்மத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசைகள் வாஸனை ஸ்வரூபமாக இருப்பவைகள் புத்திரன், வித்தம், லோகம் இவைகளிலுள்ள ஆசைகள் எல்லா அனாத்மாக்களும் ஆசைகள்தான். இவைகளெல்லாம் நம்மை விட்டு சென்று விட்டால்.
அத2 மர்த்ய: - பிறகு மரணத்திற்குட்பட்டவன்
அம்ருத: ப4வதி - மரணமற்றவனாகிறான், அழிவற்றவனாக இருக்கிறேன் என்று
அத யத்ர ப்ரஹ்ம ஸமஶ்னுத: இதி - இங்கேயே, இப்பொழுதே பிரம்மத்தை அடைகின்றான்.
தத்3யதா2 அஹினில்வயனி - எவ்விதம் பாம்பின் தோல் சட்டை
வல்மீக - எறும்பு புற்றின் மீது
ம்ருதா - உணர்வற்ற ஜடமான பாம்புசட்டை
ப்ரதியஸ்தா ஸயீத இதி2 - பாம்பால் உரித்துபோடப்பட்டு இருக்கின்றதோ
ஏவம் ஏதம் இதம் ஶரீரம் - அதுபோல ஞானிக்கு இந்த சரீரம் இருக்கின்றது.
நகமும் தலைமுடியும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு அது கீழே விழுந்து விட்டால் அருவெறுப்பை தருபவைகளாக இருக்கும்.
அத2 அயம் அஸரீர: அம்ருத: ப்ராண: - ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
ப்3ரஹ்ம ஏவ தேஜ: ஏவ - அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது
வைதே3ஹ - தேகத்தின் மீது அபிமானமற்றவன்.
 
நம் மனதிலிருக்கும் ஆசைகளனைத்தும் நீங்கி விட்டால் மரணமற்ற நிலையை அடைந்து விடலாம் அதனால் பிரம்மத்தை அடைந்து விடலாம்இந்த நிலையில் உடம்பானது, உதிர்ந்து விட்ட பாம்பு சட்டையை போல போன்று ஜடமாக தோன்றும்ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான். அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.
 
ஸ்லோகம்-8 – ஞானமார்க ஸ்துதிமோட்சத்திற்கான வழியின் பெருமை
வித்வத் அனுபவ பிரமானம்- ஞானியடைந்த அனுபவமே பிரமாம்
ஞானியின் கூற்றுஎனக்கு யாருக்கும் கிடைக்காத பாதையில் பயணம் செய்வது.
அணு: பந்தா2 மாம் ஸ்ப்ருஷ்டோ - சூட்சுமமான ( இதுதான் சரியான பாதையென்று புரிந்து கொள்வதே கடினமானதாக இருப்பது ) மோட்சப் பாதை என்னை வந்தடைந்தது.
விதத: பந்தா2 - இந்த பாதை வெகுதூரம் செல்லும், நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய பாதை அதிகமான காலம், பொறுமை, முயற்சி தேவைப்படுகின்ற பாதை
புராண: - குரு-சிஷ்ய பரம்பரையாக வந்த ஞானம்.
அனுவித்த: மயா - இந்தப்பாதையில் பயணம் செய்தால் அடையும் பலனானது என்னால் அடையப்பட்டுவிட்டது
தேன தீ4ரா: அபியந்தி ப்3ரஹ்மவித்3 - இந்த பாதையில் யாரெல்லாம் பயணம் செய்கின்றார்களோ அவர்கள் பிரம்மத்தை அறிந்தவர்களாக ஆகிறார்கள்.
ஸ்வர்க3 லோகம் அபியந்தி - சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள்
இத: ஊர்த்4வக் விமுக்தா: ப4வந்தி - அவர்கள் சரீரத்தை விட்டபிறகு விதேக முக்தனாகிறார்கள்.
 
ஸ்லோகம்-9 – ஞானமார்க ஸ்துதிமோட்சத்திற்கான வழியின் பெருமை
இந்த மோட்ச மார்க்கத்தில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றது.
தஸ்மின் - இந்த மோட்ச மார்க்கத்தில் இப்படிபட்ட
சு2க்லம் - வெண்மையான நாடியின் வழியாக பயணம் செய்து
பிங்க3லம் - சாம்பல் வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
நீலம் - நீல வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
ஹரிதம் - பச்சை வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
லோஹிதம் - சிவப்பு வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
அந்தந்த தேவதையை அடைந்து பிறகு மோட்சத்தை அடைகிறார்கள் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏஷ பந்தா2 இந்தப்பாதையானது
ப்3ரஹ்மணா ஹானுவித்த: - தகுதியுடையவர்களுக்குத்தான் (சித்தஸுத்தி உடையவர்களுக்குத்தான்) புலப்படும்
தேன ஐதி புண்யக்ருத - இந்த மார்க்கத்தில் வருபவர்கள் முதலில் கர்மயோகத்தினால் புண்ணியத்தை அடைகிறார்கள், தர்மத்தை கடைப்பிடித்து உயர்வடைகிறார்கள். இதுதான் முதல்படி
தைஜஸன் -    ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான, ஒளி பொருந்திய மனதை அடைகிறார்கள். இது இரண்டாவது படி.
ப்3ரஹ்மவித்  - ஞானயோகத்தின் மூலமாக மூன்றாவதுப்படியான ஞானத்தை அடைகிறான்.
ஐதி          - இறுதியாக பிரம்மத்தை அடைகிறான்பாதையின் முடிவை அடைகின்றான்.
 
ஸ்லோகம்-10
மோட்சத்தை  அடைய வேண்டும் என்று நினைத்து தவறான பாதையில் செல்வோரிகளின் நிலைய விவரிக்கிறது.
 
யாரெல்லாம் அவித்யை வழியாக (அவித்ய உபாஸதே) செல்கின்றார்களோ அவர்கள் அடர்ந்த இருளைத்தான் அடைகிறார்கள். மோட்சம் அடையும் என்று நினைத்து தவறான அறிவை அடைந்தவர்கள் இதைவிட மோசமான இருளை அடைகிறார்கள்யாரெல்லாம் காம்ய கர்மத்தில் ஈடுபட்டு எந்த லோகத்தை அடைந்தாலும் அங்கே குறைவான சுகத்தைத்தான் அடைவார்கள்அதனால் வைராக்கியம் அடையும் வாய்ப்பு அதிகம். உபாஸனையில் கிடைக்கும் பலனில் அதிக சுகம் கிடைக்கும் ஆனால் வைராக்கியத்தை அடையும் வாய்ப்பு குறைவு.
 
இந்த மந்திரத்தில் உள்ள அவித்யா என்ற சொல் காம்ய கர்மம், தியானம் செய்தல் போன்றவற்றை குறிக்கிறதுவித்யா என்ற சொல் அபரா வித்யா அதாவது மோட்சத்தை அடையும் அறிவைத் தவிர மற்ற அறிவை அடைவது என்று பொருள் கொள்ள வேண்டும்அடர்ந்த இருள் என்பது கீழ்மையான பிறவியை அடைந்து துன்பத்தை அடைதல், ஆத்ம ஞானத்தை அடைய முடியாத நிலையை அடைதல்.
 
----0000----

 

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...