சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது
– 17-03-2022
(பிரஜாபதி வித்யா - தகர
வித்யா)
காண்டம்-1
இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம் உள்ளது, அதை ஆகாசம் என்று
குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது
இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக
சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில்
ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக
உபாசிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது
உபதேசிக்கப்படுகிறது. இந்த தியானத்தை விடாமுயற்சியுடன்
செய்து ஞானயோக அதிகாரத்துவத்தை வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக
உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க
சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம்,
இல்லையென்றால் “கிரமமுக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று
பிறகு மோட்சம் அடையலாம்.
பிரம்மம்
வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது
அதுதான் இதயம். அதற்குள்ளே சிறிய ஆகாசம்
இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும்,
அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது. அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள்
ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.
காண்டம்-2
இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு
தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?
ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது. ஆகாசம் பிளவுபடாதது. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேபோலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசமும். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.
உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?
உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும்
வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு
எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவைகள்
1. பாவமற்றது
2. வயதற்றது
3. மரணமற்றது
4. துயரமற்றது
5. பசியற்றது
6. தாகமற்றது
7. நிறைவேறுகின்ற ஆசை
8. நிறைவேறுகின்ற சங்கல்பம்
ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாகுவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் செய்வோம். அதாவது இதை செய்ய வேண்டும், அதை
செய்ய வேண்டும் என்று நினைப்பதாகும். ஆனால் அதில் ஒரு சிலதான்
ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே
நிறைவேறுகிறது. இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான்
இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து
விடலாம். இப்படி தியானத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்
இந்த உலகத்தில் நாம் அடையும் அனைத்தும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிறான். ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.
யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.
சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை. ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.
காண்டம்-3
ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:
நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.
இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை. மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராததற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடப்பட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.
அன்ருத அபிதானம் - வெளி விஷயங்களை அடைவதில் ஆசை,
ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)
ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவனுடைய அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனுடைய புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.
ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)
ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.
ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ - அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய - இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு
பரம் ஜோதிஹி - ஞான ஸ்வரூபமாக
உபஸம்பத்ய - தன்னை தானாகவே உணர்ந்து
ஸ்வேனரூபேன - தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே
அபினிஸ்வத்யதே - விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)
அஸரீர தயாதிஷ்டதி - உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.
சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்
சத்யம் - உண்மை பேசுதல்
சத்யம் - எல்லா காலத்திலும் இருப்பது - நிர்குண பிரம்மம்
சத்யம் - ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்
இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக, நித்தியமானதாக இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.
சத்யம் - ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.
இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.
காண்டம்-4
அபஹதபாப்மா - பாபமற்றவர்; ஸேது - பாலம், குளம், வரப்பு
ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்த சொல்லுக்கு நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.
இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.
இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர்.
சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள். ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்
இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.
காண்டம்-5
பிரம்மசர்ய சாதனையின் பெருமை
· குருவுக்கு சேவை செய்தல்
· வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
· குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
· எளிமையான வாழ்க்கை வாழ்தல்
· சிற்றின்பத்தை துறத்தல்
இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்
யக்ஞம் - இறைவனை வழிபடுதல்
இஷ்டம் - பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்
ஸத்ராயண - ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.
மௌனம் - இதனால் அடையும் பலன்
அநாஸகாயனம் - உபவாசம்
அரண்யாயனம் - வனத்தில் வாழ்தல்
இந்த ஆறு சாதனங்களின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்
பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை தரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது. யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான நகரத்தில் வசிக்கலாம்.
காண்டம்-6
சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.
நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது. சூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவிதமான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான். அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்காகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.
நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

காண்டம்-7 (பிரஜாபதி வித்யா)
·
ஞானி என்பவர் யார்?
·
எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?
·
ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?
·
எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?
·
ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?
ஸ்லோகம்-1
மூன்றுவிதமான
கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
1. ஆத்ம ஸ்வரூபம்
2. ஞானத்தை அடையும் வழி
3. ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்
ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.
அபஹதபாப்மா ஆத்மா காரண சரீரமற்றது
விஜரஹ ஸ்தூல சரீரமற்றது
விம்ருத்யு மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது
விஷோகஹ துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது
விஜிதாத்ய பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது
அபிபாக தாகமுமில்லை.
எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.
இந்த ஆத்மாவானது
மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக
பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள்
கூறப்பட்டுள்ளன. அவைகள்
1. அன்வேஷனம் – ஞானத்3வார பிராப்தம்
இச்சேத் - அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக
சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும்
அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் சாதனங்கள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய
முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும்.
பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.
2. விஜிக்ஞாஸிதவ்ய - தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய
வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் - தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள்
இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை
அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா
ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.
ஸ்லோகம்-2
வித்யா க்ரகணம், வித்யா சம்பிரதானம்,
விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்
எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும்
என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும்
தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம்
சென்று அடைந்தார்கள்.
இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.
இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.
பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்
கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாசம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.
கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.
குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.
சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார்.
கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?
பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

காண்டம்-8
தவறாக ஆத்மாவை
புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய
வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர்
நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார்.
பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள்
என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம்,
எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு
திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல்
இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில்
உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான்
ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து
விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.
குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.
அனுபலப்4யா - சரியாக புரிந்து கொள்ளாமல்
ப்ரோவாசா - உபதேசம் செய்தல்
பரிசர்ய - காக்கப்படவேண்டும்
இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.
விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.
இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.
காண்டம்-9
ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.
குண ஆதானம் - நற்குணத்தை சேர்க்கிறோம்
தோஷ அபனயனம் - குறைகளை நீக்குதல்
தோஷ தரிசனம் - குறையைக் கண்டு கொண்டால்
நிஷேதம் ஹேது - அதை நீக்கி விடுவோம்.
ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.
மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்கக்கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.
குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.
ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

இந்திரனின்
விசாரங்கள்:
இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.
தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.
தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)
தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.
நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.
இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.
குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.
காண்டம்-10
எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது.
குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.
தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் - நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன், ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.
தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞ்சபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞ்ச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.
இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.
ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.
குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.
காண்டம்-11
எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.
காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மகாவாக்கியமாகும்.
இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.
அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”
இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.
உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.
காண்டம்-12
சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.
இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது ஆகியவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.
சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்கியம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொரு க்ஷணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்
ஆத்ம-சரீர சம்பந்தம்:
இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம்
மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது.
இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற
சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று அர்த்தங்களை சங்ராச்சாரியார்
கூறியிருக்கிறார்.
1. ஆத்மாவின்
போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது
எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக
விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாச
ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.
2. ஜீவ ரூபமாக இந்த
உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.
3. ஆத்மாவிடமிருந்து
தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு.
சரீர அபிமான பலன்:
சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.
தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.
நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

இந்த
விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.
கேள்வி-1
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?
பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள்
1.சம்சாரப்பிரியம்,
2.ஞானியின்பிரியம்.
சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.
கேள்வி-2
ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?
குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.
வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.
அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.
ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.
விஸ்வன் - வியாக்ருத புருஷ - வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்
ப்ராக்ஞன் - அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்மம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.
அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.
ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது,
இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு முழுப்பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
[ஸ்வ-விலக்ஷணம் - தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]
இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்(ஆத்மா). இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.
கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிகிறது ஆத்மா. நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா...
ஆத்மா - நிர்விகாரவேதா - மாற்றமடையாமல் அறிபவன்
மனது - சவிகாரவேதா - மாற்றமடைந்து அறிபவன்.
யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.
பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.
காண்டம்-13 (பிரார்த்தனை)
ஒளிப்பொருந்திய
பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து
விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான
பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல
விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும்,
களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும்
நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை
போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள்
எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம
முக்தி அடைய வேண்டும்.
காண்டம்-14
இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.
ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரண்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.
கேள்வி-1
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?
பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள்
1.சம்சாரப்பிரியம்,
2.ஞானியின்பிரியம்.
சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.
கேள்வி-2
ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?
குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.
வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.
அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.
ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.
விஸ்வன் - வியாக்ருத புருஷ - வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்
ப்ராக்ஞன் - அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்மம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.
அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.
ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது,
இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு முழுப்பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
[ஸ்வ-விலக்ஷணம் - தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]
இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்(ஆத்மா). இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.
கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிகிறது ஆத்மா. நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா...
ஆத்மா - நிர்விகாரவேதா - மாற்றமடையாமல் அறிபவன்
மனது - சவிகாரவேதா - மாற்றமடைந்து அறிபவன்.
யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.
பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.
காண்டம்-13 (பிரார்த்தனை)
காண்டம்-14
இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.
ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரண்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.
காண்டம்-15
பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி - விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.
1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்
2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய
சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்
3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும்
நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.
4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம
சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க
வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற
குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.
5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து
விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு,
புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து
கொண்டிருக்க வேண்டும்.
6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல்
இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த
ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டப்படுத்தக் கூடாது.
ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த
பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
ஓம் தத் ஸத்