Showing posts with label கடோ உபநிஷத்-1. Show all posts
Showing posts with label கடோ உபநிஷத்-1. Show all posts

Saturday, December 27, 2014

கடோ உபநிஷத் - பாகம்-1

கடோ உபநிஷத்
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்
www.poornalaya.org
முகவுரை
நம்முடைய செயல்களின் மூலம் நாம் இரண்டு வகையான பொருட்களை அடைகின்றோம்அவைகள் நிலையான பொருட்கள் (நித்ய வஸ்து), நிலையற்ற பொருட்கள் (அநித்ய வஸ்து).  இவைகளின் விளக்கத்தை கீழே காண்போம்.
 
அநித்ய வஸ்து :     நிலையற்ற பொருளின் லக்ஷணம் இது முதலில் இல்லாமல் இருந்து, பிறகு இருப்புக்கு வந்து, அதற்கப்புறம் இல்லாமல் போவதுஇது மூன்று காலங்களிலும் இல்லாதது ( துச்சம் ). இவைகளை முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம்இதை கர்ம சாதனம் என்றும் கூறுவர்நம்முடைய உடல்கூட கர்மபலனத்தினால்தான் அடைந்திருக்கின்றோம். எனவே இந்த உடலும் நிலையற்றதாக இருக்கின்றதுஉணவையும், இருக்குமிடத்தையும் நாம் முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம் இவைகள் அநித்யம் என்று தெரிந்தும் இவைகளிலிருந்து நித்யமான சுகம் கிடைக்கும் என்று நினைக்கின்றோம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எவைகளெல்லாம் அடையப்பெறுகின்றதோ அவைகளெல்லாம் அழிவுக்குட்பட்டது, நிலையற்றது என்ற உண்மைதான்.
 
நித்ய வஸ்து:          நிலையானது, எப்பொழுதும் இருப்பது, இதை செயல் மூலம் அடைய முடியாததால் இது கர்ம சாதனமல்லமேலும் இதை அடைய வேண்டிய அவசியமும் இல்லைஇதன் இருப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இதை ஞான சாதனம் என்று அழைக்கப்படுகிறதுஅநித்ய வஸ்தை அடைந்தாலும் அது அடையாததற்கு சமமானதேஆனால் இதை அறிந்து கொண்டாலே முழு மன நிறைவை கொடுக்கக்கூடியதுதர்மப்படி வாழ்பவனுக்கு இதை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் தானாகவே ஏற்படுகின்றதுஇதை அறிய வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்களை முமுக்ஷூ ( ) ஜிக்னாஸூ என்று கூறுவர்.
 
                                       இதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகின்றதுஎந்த அறிவும் தானாக ஏற்படாது அந்த அறிவை அடைய உதவும் ஒரு கரணம் ( கருவி ) தேவைப்படுகின்றதுஅறிவை அடைபவனை பிரமாதா என்று கூறுவர்எந்தப்பொருளைப் பற்றிய அறிவை அடைய விரும்புகின்றோமோ அந்தப் பொருளுக்கு பிரமேயம் என்று பெயர்அடையும் அறிவுக்கு பிரமா என்று பெயர்சாஸ்திரம் ஆறு வகையான பிரமாணங்கள் இருப்பதாக கூறுகின்றது  அவைகள் 1. பிரத்யக்ஷ பிரமாணம் ( முதன்மையான பிரமாணம் ), 2. அனுமான பிரமாணம் ( யூகம் ), 3. அர்த்தாபத்தி பிரமாணம், 4. உபமான பிரமாணம், 5. அனுபலப்தி பிரமாணம், 6. சப்த பிரமாணம் ஆகியவைகளாகும்.
 
ப்ரத்யக்ஷம்:            இதை ஜேஷ்ட பிரமாணம் என்றும் அழைப்பர்ஐந்து ஞானேந்திரியங்கள் மூலமாக நேரிடையாக ஒன்றைப்பற்றி அறிந்துக் கொள்ளும் முறைக்கு ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று கூறப்படுகின்றது.  (-ம்) கண்கள் ஒரு பொருளின் வர்ணத்தை தெரிந்துக் கொள்வதற்கு பிரத்யக்ஷ பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.
 
அனுமானம்             பிரத்யக்ஷ பிரமாண மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்போம்அதை ஆதாரமாக ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்வது. உதாரணமாக எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கின்றது என்ற அறிவை அடைவதுஇவ்வாறு யூகத்தின் மூலமாக அறிவை அடைவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.
 
அர்த்தாபத்தி           காலையில் எழுந்து நீரினால நனைந்த தெருவை பார்க்கும் போது நேற்று இரவு மழை பெய்திருக்கின்றது என்று யூகித்து அறியும் முறைக்கு அர்த்தாபத்தி என்று பெயர்.
 

உபமானம்                ஒன்றைப்போல இன்னொன்று இருக்கின்றது என்று அறியும் முறையை இவ்வாறு அழைப்பர்உதாரணமாக வீட்டில் உள்ள எருமை மாடு போல காட்டெருமை இருக்கும் என்று கூறுவது.

 
அனுபலப்தி              நாமிருக்கும் அறையில் பூனை இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம்இது நாம் ஒன்றை நன்கு ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவை குறிக்கின்றது.
 
சப்த பிரமாணம்    இது இரண்டு வகையாக இருக்கின்றதுஅவைகள் லௌகீக பிரமாணம், வைதீக பிரமாணம்படித்தோ அல்லது மற்றவர்களின் வார்த்தைகள் மூலமாக ஒன்றை பற்றி தெரிந்து கொள்வதுலௌகீக பிரமாணத்தின் மூலமாக ஒன்றை பற்றி அடையும் அறிவை வேறொரு பிரமாணம் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் வேதத்தின் மூலமாக அடையும் அறிவை வேறொன்றின் மூலமாக உறுதி செய்ய முடியாது. அதை அப்படியே முழுமையாக நம்ப வேண்டும்
 
நித்ய வஸ்துவை வேத பிரமாணத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்வேதமானது இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றதுஅவைகள் கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகும். கர்மத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டிருப்பது கர்ம காண்டம், ஞானத்தை ஸாதனமாக கொண்டிருப்பது ஞான காண்டம்.
 
கடோ உபநிஷத் கிருஷ்ண-யஜூர் வேதத்தில் இருக்கின்றதுயஜூர் வேதம் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது. 1. சுக்ல பகுதி, 2. கிருஷ்ண பகுதிசுக்ல பகுதியில் ஈஸாவாஸ்ய உபநிஷத்தும், ப்ருஹதாரண்ய உபநிஷத்தும் இருக்கின்றதுகிருஷ்ண பகுதியில் கடோ உபநிஷத்தும், தைத்திரீய உபநிஷத்தும் இருக்கின்றதுகடோ உபநிஷத் கட் என்ற முனிவரால் எழுதப்பட்டிருப்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
 
உபநிஷத்வார்த்தை விளக்கம்:-
உபநிஷத் = உப + நி + ஷத் என்று பிரிக்கலாம்.
உபஅருகில் (குரு-சாஸ்திரத்தின் அருகில் செல்லுதல்)
நி  - அமர்தல்கீழே அமர்தல்இது பணிவைக் குறிக்கின்றது.
ஷத்நாசம்இந்த வித்யாவானது சம்சாரத்தை நீக்கி விடுகின்றது. சுக-துக்கத்தை நீக்கி விடுகின்றது.
 
சாந்தி பாடம்
சாந்திஇடையூறுகள் நீக்குதல்விக்ன நிவிருத்தி
பாடம்மீண்டும் மீண்டும் கூறுதல்பிரார்த்தனை செய்தல்
உபநிஷத் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் இந்த பிரார்த்தனையை செய்கின்றார்கள்.
 
ஸஹ நாவவது |
ஸஹ நா பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்வினாவதீ4த2மஸ்து மா வித்3விஷாவஹை |
ஓம் ஶாந்தி, ஶாந்தி, ஶாந்தி ||
 
ஸஹசேர்ந்துநௌஎங்கள் இருவரையும்அவது- காப்பாற்றட்டும்.
ஸஹ = + = அவன் (ஈஸ்வரன்) + நிச்சயமாக
நௌ அவதுஎங்களிருவரையும் (குரு, சிஷ்யன்) காப்பாற்றட்டும்.
ஸஹ நௌ பு4னக்துஅவன் நிச்சயமாக எங்களிருவரையும் காப்பாற்றட்டும்.
ஸஹ வீர்யங் கரவாவஹைநாங்களிருவரும் சேர்ந்து தேவையான முயற்சி செய்வோமாக.
தேஜஸ்வி + நௌ + அதீதம் + அஸ்து எங்களிருவருக்கும் வேதாந்த பாடமானது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும்.
மா வித்விஷாவஹைநாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமலிருப்போமாக.
 
விசாரம்:-
காப்பாற்று : எதிலிருந்து, யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்அவரவர்கள் எதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றார்களோ அதிலிருந்துதான் காப்பாற்றப்படுவார்கள்இங்கு சிஷ்யர்கள் தங்களுடைய அறியாமையை போக்கி ஞானத்தை அடைய வந்திருக்கின்றார்கள்எனவே இந்த இடத்தில் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுத்து காப்பாற்று என்று பொருட்கொள்ள வேண்டும்ஞானத்தில் பலனை கொடுத்து காப்பாற்று, அடைந்த ஞானத்தில் நிலைத்தி நிற்க காப்பாற்று.
 
குரு செய்ய வேண்டிய முயற்சி
·   குருவானவர் தான் எப்படி தன்னுடைய குருவிடமிருந்து கற்றாரோ அதேமாதிரி கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி
·   சிஷ்யனுடைய மனநிலை, மனப்பக்குவம் இவைகளை புரிந்து கொண்டு உபதேசிக்க வேண்டிய முயற்சி.  
·   சிஷ்யன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுக்கும் முயற்சி,
·   சிஷ்யன் தெளிவில்லாமல் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டிய முயற்சி,
·   கிரமமாக உபதேசம் செய்ய வேண்டிய முயற்சி
 
சிஷ்யன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி:
·   சொல்வதை புரிந்து கொள்ளும் முயற்சி,
·   குரு-சாஸ்திர சிரத்தையுடன் இருக்க வேண்டிய முயற்சி
·   மன ஒருமுகப்பாட்டுடன் பாடத்தை கவனிக்க எடுக்க வேண்டிய முயற்சி
·   நிலைத்து நிற்க காப்பாற்று.
 
எங்களுடைய படிப்பானது ஒளிப்பொருந்தியதாக இருக்கட்டும்நாங்கள் கேட்கும் உபதேசம் எங்களுக்கு நன்கு புரியவும் வேண்டும், மறக்காமலும் இருக்க வேண்டும். எங்களிருவருக்குள் வெறுப்பு உண்டாகமலிருக்கட்டும்.
 
ஸ்லோகம்-1
உஶன்ஹ வை வாஜஸ்ரவஸ: ஸர்வவேத3ஸ த3தௌ3 |
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ||
முன்னொரு காலத்தில் அன்னத்தை தானமாக கொடுத்து புகழடைந்தவரின் மகன் வாஜஸ்ரவ என்பவர் கர்ம பலனை அடைய விரும்பி செய்கின்ற யாகத்தில் எல்லா பொருட்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நசிகேதன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.
 
ஸ்லோகம்-2
தம் குமாரம் ஸந்தம் தக்ஷீணாஸூ நியமனாஸு ஸ்ரத்3தா4விவேஶ ஸௌ மன்யத ||
அவன் சிறு வயதுடைய குமாரனாக இருந்த போதிலும் சிரத்தையுடன் இருந்தான்தன் தந்தை தட்சணையை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவன் சிந்திக்கலானான்.
 
ஸ்லோகம்-3
பீதோத3கா ஜக்3க4த்ருணா து3க்3த4தோ3ஹா நிரிந்த்3ரியா |
அனந்தா3 நாம தே3 லோகாஸ்தான்ஸ க4ச்ச2தி தா த33த் ||
இனிமேல் நீர் குடிக்கும் சக்தியில்லாத நிலையில் உள்ளதுமான, புல்லை மேய்ந்து முடித்த நிலையிலுள்ளதுமான. பால் கொடுக்கும் சக்தியை இழந்த நிலையிலுள்ள, கன்று ஈனும் சக்தியை இழந்த நிலையிலுள்ள இப்படிபட்ட பசுவை தானமாக கொடுப்பதன் மூலம்
அநந்தா (சுகமற்ற) என்ற பெயருடைய உலகத்தை தந்தை அடைந்து விடுவார் என்று எண்ணினான்..
 
ஸ்லோகம்-4
: ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸிதி |
த்விதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா த3தா3மிதி ||
இவ்வாறு சிந்தித்து விட்டு நசிகேதன் தன் தந்தையை பார்த்து, “என்னை யாருக்கு தானமாக கொடுக்கப்போகிறீர்கள் என்று மூன்று முறை கேட்டான்”  பொறுமையிழந்த அவர் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கின்றேன் என்று கோபத்துடன் கூறினார்.
 
ஸ்லோகம்-5
பஹூனாமேமி ப்ரத4மோ பஹூனாமேமி மத்யம: |
கிம் ஸ்வித்3யமஸ்ய கர்தவ்யம் யன்மயாத்3ய கரிஷ்யதி ||
பலருக்கும் நான் உத்தமமான சிஷ்யனாக இருந்திருக்கின்றேன், சிலருக்கும் இடைநிலைப்பட்டவனாக இருந்திருக்கின்றேன். ஆனால் எதிலேயும் நான் கடைநிலையில் இல்லையே, பிறகு எதனால என்னை யமனுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்எமனுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் செய்ய வேண்டியதில்லையே!
என்னை கொடுப்பதன் மூலம் எதை அடையப்போகின்றார்நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.
 
ஸ்லோகம்-6
அனுபஶ்ய யதா2 பூர்வம் ப்ரதிபஶ்ய ததா2பரே |
ஸஸ்யமிவ மர்த்ய: பச்யதே ஸஸ்யமிவஜாயத் புன: ||
நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைத்து பாருங்கள் இப்பொழுது இருக்கின்ற சான்றோர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையும் சிந்தித்து பாருங்கள்மனிதர்கள், தாவரங்கள் அழிகின்றன, மீண்டும் தாவரங்களாகவே பிறக்கின்றார்கள்தன் தந்தையின் வாக்கு பொய்யாக்க் கூடாது என்று நசிகேதன் தந்தைக்கு உணர்த்துகின்றான்உங்கள் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும்ஆகவே தங்கள் வாக்குப்படி நான் எமலோகம் செல்கின்றேன்.
 
ஸ்லோகம்-7
வைஶ்வனர: ப்ரவிஶத்யதிதி2ர்ப்3ரஹ்மணோ க்3ருஹான் |
தஸ்யைதா ஶாந்திம் குர்வந்தி ஹர் வைவஸ்வதோத3கம் ||
யமதர்ம ராஜா, நெருப்பைப் போல பிராமண விருந்தினர் நம் வீட்டை அடைந்திருக்கின்றார். அவருக்கு மனிதர்கள் இப்படிபட்ட உபசாரத்தை செய்கின்றார்கள்எனவே அவரை உபசரிக்க  நீரைக் கொண்டு வாருங்கள் என்று அங்கிருந்தவர்கள் அவரிடம் கூறினர்.
 
ஸ்லோகம்-8
ஆஶாப்ரதீஞே ஸங்க3தம் ஸூந்ருதாம் சேஷ்டாபூர்தே புத்ரபஶூம்ஶ்ச |
ஏதத்3வ்ருங்க்தே புரூஷஸ்யால்பமேத3ஸோ ய்ஸ்யானஶ்னன்வஸதி
ப்3ரஹ்மணோ க்3ருஹே ||
பிராமண விருந்தினரை சரியாக உபசரிக்காவிட்டால் ஏற்படும் நஷ்டங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது.
 
எவருடைய வீட்டில் ஒரு பிராமண விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இருக்கின்றானோ அந்த அறிவற்ற மனிதனுடைய அனைத்து விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஸத்ஸங்கத்தினால் வந்த புண்ணியத்தையும் நல்ல சொற்களால் தேடிய புண்ணியத்தையும், யாகத்தாலும், சேவையாலும் அடைந்த புண்ணியத்தையும், மக்கட்செல்வத்தையும், பசுக்களையும் அந்த பிராமணன் அழிக்கின்றான்.
 
விருந்தோம்பலின் பெருமையை யமதேவரிடம் அங்கிருந்தோர் கூறுகிறார்கள், விருந்தினரை சரியாக உபசரிக்க விட்டால் என்ன இழப்பு ஏற்படும் என்று இங்கு கூறப்படுகின்றதுவிருந்தினராக வந்தவனே புண்ணியங்கள் அனைத்தையும் அழித்து விடுவான் என்று கூறப்படுகின்றது.
 
ஸ்லோகம்-9
திஸ்ரோ ராத்ரீர்யத3வாத்ஸீர்க்3ருஹே மேனஶ்னன்ப்3ரஹ்மன்னாதிதி2ர்தமஸ்ய: |
நமஸ்தேஸ்து ப்3ரஹ்மன்ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீன்வரான்வ்ருணீஷ்வ ||
 
ஓ பிராமணனே, போற்றத்தக்க விருந்தினராக உணவு உட்கொள்ளாமல் என்னுடைய வீட்டில் மூன்று இரவுகள் வசித்த காரணத்திற்காக முதலில் உனக்கு என்னுடைய வணக்கம் உரித்தாகுகபிராமணனே எனக்கு மங்கலம் இருக்கட்டும், எந்த குறையும் என்னை வந்து சேராமல் இருக்கட்டும்உணவின்றி மூன்று இரவுகள் எனக்காக காத்திருந்ததற்காக மூன்று வரங்களை கொடுக்கிறேன் அவைகளை கேட்பாயாக. என்று எமதர்மக் நசிகேதனை பார்த்து கூறினார்.
 
ஸ்லோகம்-10
ஶாந்தஸங்கல்ப: ஸுமனா யதா2 ஸ்யத்3வீதமன்யுர்கௌ3தமோ மாபி4 ம்ருத்யோ |
த்வத்ப்ரஸ்ருஷ்டம் மாபி4வதே3த்ப்ரதீத ஏதத்ரயாணாம் ப்ரத2மம் வரம் வ்ருணே ||
யமதேவரே, என் தந்தை கௌதமர் கவலையற்ற மனதையுடையவராகவும், கோபமற்றவராகவும் என்னிடத்தில் அன்பான மனதை உடையவராகவும் எவ்விதம் ஆவாரோ அவ்விதம் அருள்வீராக. உங்களால் திருப்பி அனுப்பப்படும் என்னை அடையாளம் கண்டுகொண்டவராக என்னிடத்தில் பேச வேண்டும்இதை மூன்று வரங்களுக்குள் முதல் வரமாக தேர்ந்தெடுக்கின்றேன்.
 
ஸ்லோகம்-11
யதா2 புரஸ்தாத்3ப4விதா2 ப்ரதீத ஔத்3யாலகிர்ருணிர்மத்ப்ரஸ்ருஷ்ட |
ஸுக2ம் ராத்ரீ: ஶயிதா வீதமன்யு: த்வாம் த3த்3ருஶிவான் ம்ருத்யுமுகா2த் ப்ரமுக்தம் ||
எமதர்ம ராசாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன்னைக்கண்டு உன் நினைவு பெற்றவராக முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார்ஆருணியின் மகனான உத்தாலகர் என்னால் திருப்பி அனுப்பப்பட்ட உன் மீது கோபமற்றவராக இரவில் சுகமாக உறங்குவார்.
 
ஸ்லோகம்-12
ஸ்வர்கே3 லோகே ந ப4யம் கிஞ்சனாஸ்தி ந தத்ர த்வம் ந ஜரயா பி3பே4தி |
உபே4 தீர்த்வாஶனாயபிபஸே ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
சுவர்க்க லோகத்தில் பயம் சிறிதும் கூட இருக்காதுஅங்கே நீங்கள் (மனிதர்கள்) இல்லை வயோதிக பயமும் கிடையாதுபசி-தாகம் என்ற இந்த இரண்டும் இருப்பதே தெரியாமல் மக்கள் சோகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
 
ஸ்லோகம்-13
ஸ த்வமக்3னிம்ஸ்வர்க்3யமத்3யேஷி ம்ருத்யோ ப்ரப்3ரூஹி த்வம்ஸ்ரத்3த3னாய மஹயம் |
ஸ்வர்க3லோகா அம்ருதத்வம் ப4ஜந்தே ஏதத்3 த்3விதீயேன வ்ருணே வரேண ||
எமதர்ம ராஜா சொர்க்கத்தில் இருப்பவர்கள் நீண்ட காலம் இன்புற்று இருக்கின்றனர் அந்த சொர்க்கத்தை அடைய உதவும் யாகத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள், அதை சாஸ்திரத்தில் சிரத்தையுடைய எனக்கு சொல்லுங்கள்இது என்னுடைய இரண்டாவது வரமாக இருக்கட்டும்.
 
ஸ்லோகம்-14
ப்ர தே ப்3ரவீமி தது3 மே நிபோ3த4 ஸ்வர்க்3யமக்3னிம் நசிகேத: ப்ரஜானன் |
அனந்தலோகப்திமதோ2 ப்ரதிஷ்டாம் வித்2தி4 த்வமேதம் நிஹிதம் குஹாயாம் ||
நசிகேதனே, நான் இதை ஞாபகப்படுத்திக் கொண்டு பிறகு சொர்க்கத்தை அடைய உதவும் இந்த யாகத்தை செய்யும் முறையை உனக்கு தெளிவாக கூறுகிறேன். அதை என்னிடமிருந்து கவனமாக கேட்டு தெரிந்து கொள்இந்த யாகமானது நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியதும், எண்ணற்ற உலகங்களை அடைவதற்கான சாதனமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமானதாகவும் மேலும் உபாஸகர்களின் மனதிலும் இருப்பதாகவும் நீ அறிவாயாக.
 
எமதர்மர் உபாஸனையை சேர்த்தே இந்த யாகத்தை செய்யும் முறையை உபதேசித்தார்இங்கே உபாஸன தேவதையாக ஸ்தூல பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கும் தேவதை (விராட்).  இந்த பிரபஞ்சமே விராட்டின் சரீரம்அதற்கு ஆலம்பனமாக சொர்க்க காம இஷ்டா யாகத்தில் உள்ள அக்னியை கொள்ள வேண்டும்ஆலம்பனமே தேவதையாக நினைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
சமுத்திரம்சமஷ்டிஅலைகள்வியஷ்டி
சமஷ்டிவியஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும்.
பிரதிஷ்டாவிராட் தேவதையை குறிக்கின்றது, அதற்கு ஆலம்பனமாக இருக்கும் அக்னியை குறிக்கின்றார்.
 
ஸ்லோகம்-15
லோகாதி3மக்3னிம் தமுவாச தஸ்யௌ யா இஷ்டகா யாவதீர்வா யதா2 வா |
ஸ சாபி தத்ப்ரத்யவத3த்3யதௌ2க்த2மதா2ஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட: ||
அந்த யாகத்தை செய்யும் முறையை நசிகேதனுக்கு கூறினார்எப்படிபட்ட செங்கற்கள் எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் போன்ற விவரங்களை விளக்கினார்அவற்றை உன்னிப்பாக கேட்டு அவனும் அவர் கூறியபடி திருப்பி கூறினான்.
அதை கேட்ட எமதர்மராஜா மீண்டும் மனதிருப்தியுடன் பேசினார்.
 
ஸ்லோகம்-16
தமப்3ரவீத்ப்ரீயமாணோ மஹாத்மா வரம் தவைஹாத்3யா பூ4ய: |
தவைவ நாம்தா ப4விதாயமக்3னி: ஸ்ருங்காம் வேமாமனேகரூபாம் க்3ருஹான் ||
மகிழ்ச்சியடைந்த எமதர்ம ராஜா மீண்டும் நசிகேதனை பார்த்து இதற்காக இன்னொரு வரமும் இங்கேயே இப்போதே தருகின்றேன் கேட்டு பெற்றுக்கொள் என்று கூறினார்இனிமேல் இந்த யாகமானது உன்னுடைய பெயரிலே அழைக்கப்படும் என்று கூறிவிட்டு பல்வேறு வடிவங்களையுடைய மிக சிறப்பான மாலையை பரிசாக பெற்றுக் கொள் என்று கூறினார்.
 
ஸ்லோகம்-17
த்ரிணசிகேதஸ்த்ரிபி4ரேத்ய ஸந்தி4ம் த்ரிகர்மக்ருத்தரதி ஜன்ம்ம்ருத்யூ |
ப்3ரஹ்மஜக்3ஞம் தே3வமீட3யம் விதி3த்வா நிசாய்யேமாம் ஶாந்திமத்யந்தமேதி ||
இந்த யாகத்தை மூன்று முறை செய்தவன் (இதிலிருந்து இந்த யாகத்தை மூன்று முறை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்,) மூவர்களுடன் (தாய், தந்தை, ஆசிரியர்) நல்ல சம்பந்தத்தை அடைந்தவன். அதாவது தாயிடமிருந்து அன்பையும், தந்தையிடமிருந்து ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், குருவிடமிருந்து அறிவையும், அன்பையும் அடைந்திருக்க வேண்டும்மூன்று கர்மத்தை செய்தவன். யாகம், இறைவழிபாடு, சாஸ்திரத்தை படித்தல், தானம் செய்தல் ஆகிய மூன்று கர்மங்களையும் செய்தவன் தற்காலிகமாக பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.
 
சூட்சும பிரபஞ்சமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றிய, எல்லாமும் அறிகின்ற, அக்னியாக இருக்கின்ற விராட் ஸ்வரூபத்தை குறிக்கின்றது. ப்ரஹ்ம என்ற சொல் சூட்சுமமான பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பதைக் குறிக்கின்றதுஅந்த ஈஸ்வரனை குறிக்கின்றதுஅவரே எல்லாவற்றையும் அறிபவர்ஒவ்வொரு சரீரத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருப்பவர். வணங்கத்தக்கவராகிய அந்த ஈஸ்வரனை உபாஸனை தேவதையாக வைத்து தியானம் செய்பவன் இங்கேயே நிலையான சாந்தியை அடைகின்றான்சுவர்க்க லோகத்தில் மேலான அமைதியை அடைகின்றான்.
 
ஸ்லோகம்-18
த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத்3விதி3த்வா ய ஏவ வித்3வம்ஸ்ரிசனுதே நாசிகேதம் |
ஸ ஸ்ருத்யுபாஶான் புரத: ப்ரணௌ த்3ய ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
.யார் மும்முறை நாசிகேத யாகத்தை செய்திருக்கின்றார்களோ. இந்த மூன்றையும் இவ்வாறு முறையாக அறிந்த எந்த வித்வான் நான் கூறியபடி இந்த நாசிகேத யாகத்தை செய்கின்றானோ
அவன் மரணத்தினுடைய பிடியிலிருந்து உடல் விடும் முன்பே வென்று சோகத்தை கடந்தவனாக சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பான்இதை உபாஸனையாக செய்தால் பிரஹ்மலோகத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான்.
 
ஸ்லோகம்-19
ஏஷ தேத்3னிர்நசிகேத: ஸ்வர்க்3யோ யமவ்ருணீதா2 த்3விதீயேன வரேண |
ஏதமக்3னிம் தவைவ ப்ரவஞ்யந்தி ஜனாஸஸ்த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருனீஷ்வ ||
நசிகேதா! எந்த வரத்தை இரண்டாவதாக கேட்டாயோ அதாவது சுவர்க்கத்தை அடைகின்ற யாகத்தை உனக்கு கூறிவிட்டேன். இந்த யாகமானது உன்னுடைய பெயராலே இனி மக்கள் அழைப்பார்கள். இனி நசிகேதா, மூன்றாவது வரத்தை கேட்பாயாக.
 
ஸ்லோகம்-20
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே |
ஏதத்3வித்3யாமனுஶிஷ்தஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்த்ருதீய: ||
எமதர்மராஜா இந்த உலகில் இறந்த மனிதர்களை பற்றி இப்படிபட்ட ஒரு சந்தேகம் இருக்கின்றதுஅவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றார்கள் என்று சிலர் கூறுகின்றார்கள். இல்லையென்றும் சிலர் கூறுகின்றார்கள்இதை நான் தங்களிடமிருந்து அறிய வேண்டும்.
இதுவே வரங்களுக்குள் மூன்றாவதாக வரமாகும்.
 
ஸ்லோகம்-21
தேவைரத்ராபி விசிகித்ஸிஜம் புரா ந ஹி ஸுவிக்3ஞேயமணுரேஷ த3ர்ம: |
அன்யம் வரம் நசிகேதே வ்ருணிஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம் ||
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதி நசிகேதனுக்கு இருக்கின்றதா என்று சோதனை செய்ய நினைத்து இவ்வாறு கூறுகின்றார்நசிகேதனுக்கு முமுக்ஷூத்வம், வைராக்கியம் இருக்கின்றதா என்று சோதிக்கவும் விரும்புவது இந்த ஸ்லோகத்தில் தெரிகின்றது.
 
இந்த விஷயத்தில் தேவர்களும்கூட முன்பே சந்தேகம் அடைந்தார்கள்இது எளியதாக அடையக்கூடியதல்லஇந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய அறிவானது மிகவும் சூட்சுமமானது. எனவே வேறு ஏதாவது வரத்தை தேர்ந்தெடு. இதனை எனக்காக விட்டுவிடு. என்னை நிர்பந்தப்படுத்தாதே என்று எமதர்மராஜா நசிகேதனிடம் கூறினார்.
 
ஸ்லோகம்-22
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச ம்ருத்யௌ யன்ன ஸுவிஞேயமாத்தா2 |
வக்தா சாஸ்ய த்வாத்3ருக்3ன்யோ ந லப்4யோ நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஸ்சித் ||
இந்த ஆத்ம விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளதோஅதை நீங்களும் அறிந்து கொள்வது சுலபமல்ல என்று சொல்கிறீர்கள். எனவே இதற்கு வேறெந்த வரமும் சமமாகாதுஇந்த ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதற்கு உங்களைத் தவிர வேறொருவர் எனக்கு கிடைக்க மாட்டார்
 
ஸ்லோகம்-23
ஶதாயுஷ: புத்ரபௌத்ரான்வ்ருணிஷ்வ ப3ஹுன்பஶூன்ஹஸ்திஹிரராயமஶ்வான் |
பூ4மர்மஹதா3யதனம் வ்ருணிஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஶரதோ3 யாவதி3ச்ச2ஸி ||
நூறு வருடம் ஆயுளுள்ள புத்திரனையும், பௌத்திரனையும் கேள்நிறைய பசுக்கள் போன்ற செல்வத்தைக் கேள்தங்கம், யானைகள், குதிரைகள் இவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்இந்த பூமியில் பெரிய ராஜ்ஜியத்தை கேள்எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வரை வாழ்ந்து கொள். இவ்வாறாக பலவித போகப் பொருட்களை கொடுப்பதாக கூறுகிறார் எமதர்மராஜா.
 
ஸ்லோகம்-24
ஏதத்துல்யம் யதி3 மன்யஸே வரம் வ்ருணீஷ்வ வித்தம் சிரஞ்ஜீவிகாம் ச |
மஹபூமௌ நஸிகேதஸ்த்வமேதி4 காமானாம் த்வா காமபா4ஜம் கரோமி ||
இதுவரை கொடுப்பதாக கூறியவற்றிற்கு இணையாக வேறு ஏதாவது இருக்கின்றது என்று நீ கருதினால் அதையும் கேள்நிறைய செல்வங்கள், இந்த பூமியின் பெரும் பகுதியை அடைவாய்இந்த பூமிக்கே அரசனாகவும் இருக்கலாம். நீ எவையெல்லாம் விரும்புகின்றாயோ அவையெல்லாம் தடையில்லாமல் அனுபவிப்பவனாக உனக்கு வரம் தருகின்றேன்
 
ஸ்லோகம்-25
யே யே காம து3ர்லபா4 மர்த்யலோகே ஸர்வன்காமான்ஶ்ச2ந்த3த: ப்ரார்த2யஸ்வ |
இமா ராமா: ஸரதா2: ஸ்தூர்யா ந ஹீத்3ருஶா ல்ம்ப4னீயா மனுஷ்யை: |
அபி4ர்மத்ப்ரத்தாபி4: பரிசாரயஸ்வ நசிகேதோ மரனம் மானுப்ராக்3ஞீ: ||
எந்த வகையான போக இந்த உலகத்தில் அடைவதற்கு கடினமோ அவைகளையெல்லாம் விருப்பம் போல அனுபவிப்பாயாகஇந்த தேவ லோகத்தில் உள்ள பெண்கள் ரதத்துடன் இசைக்கருவிகளையும் உடையவர்கள்இவர்களை மனிதர்களால் அடைய முடியாதுஅவர்களை உனக்கு பணிவிடை செய்ய கொடுக்கின்றேன் பெற்றுக்கொள்ஆனால் மரணத்தைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்காதே.
 
ஸ்லோகம்-26
ஶ்வோபா4வா மர்த்யஸ்ய யத3ந்தகைதத்ஸ்ர்வேந்த்3ரியணாம் ஜரயந்தி தேஜ: |
அபி ஸர்வம் ஜீவிதமஸ்பமேவ தவைவ வாஹஸ்தவ ந்ருத்யகீ3தே ||
நசிகேதன் மூன்று காரணங்களினால் எமதர்மர் கொடுக்கும் எல்லாவற்றையும் நிராகரித்து விடுகின்றான்நீங்கள் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவைகளில் உள்ள சுக-துக்கங்களை நான் நன்கு அறிவேன். இவைகள் 1. நிலையற்றவை, 2. என்னை பலவீனப்படுத்திவிடும், 3. மனநிறைவைக் கொடுக்காது.
 
இவைகள் இன்று இருப்பது போல் நாளை இருக்குமா என்று நிர்ணயித்து கூற முடியாத நிலையற்றவைகள்நிலையற்ற பொருட்களை அனுபவிப்பதனால் அதற்கு அடிமையாகி விவேகத்தை இழந்து விடுவோம், அனுபவிக்க அவைகள் இல்லாத போது துயரத்தை அடைவோம்மனிதர்களின் இறப்புக்கு காரணமான எமதர்ம ராஜா, இந்திரிங்களின் சக்தியை இந்த நிலையற்ற பொருட்களை கொஞ்ச கொஞ்சமாக இழக்க செய்து விடும்அதிக சுகம் உடல் பலத்தை குறைத்து விடும், மனமும் சக்தியை இழந்து விடும், அலைபாய்ந்து கொண்டே இருக்கும்புத்தியையும் சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்க செய்து விடும்நீங்கள் எவ்வளவு ஆயுளைக் கொடுத்தாலும் அவைகள் உண்மையில் சிறியதுதான்உங்களுடைய வாகனங்கள், குதிரைகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கட்டும்.
 
ஸ்லோகம்-27
ந வித்தேன தர்பணீயோ மனுஷ்யோ லப்ஸ்யாமகே3 வித்தமத்ரீக்ஷ்ம சேத்த்வா |
வீவிஷ்யாமோ யாவதீ3ஶிஷ்யஸி த்வம் வரஸ்த மே வர்ணீய: ஸ ஏவ ||
எந்தப்பொருளும் ஒருவனுடைய மனதை திருப்தி படுத்த முடியாதுசெல்வங்கள் மனிதனை திருப்திபடுத்த முடியாதுஉங்களை பார்த்ததினாலேயே எல்லா செல்வங்களையும் அடைந்ததற்கு ஈடாகும்நீங்கள் எவ்வளவு காலம் வரை வாழ்வீர்களோ அதுவரைதான் நாங்கள் வாழ முடியும்எனவே எனக்கு வேண்டிய வரம் நான் கேட்ட ஆத்ம தத்துவம்தான்.
 
ஸ்லோகம்-28
அஜீர்யதமம்ருதானாமுபேத்ய ஜீர்யன்மர்த்ய: க்வத4:ஸ்த2: ப்ரஜானன் |
அபி4த்4யாயன்வர்ணரதிப்ரமோதா3னதிதீ3ர்கே4 ஜீவிதே கோ ரமேத ||
அழிவுக்குட்படாத, மரணமற்ற உங்களை நான் அடைந்திருக்கின்றேன்.  அழியக்கூடிய மனிதன்பூலோகத்தில் வாழ்கின்ற நான் இவைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொண்டேன்ஆடல் பாடல் போன்றவற்றிலிருந்து வரும் இன்பங்கள், நீண்ட கால வாழ்க்கை இவற்றில் யார் சுகத்தை அனுபவிப்பார்கள்.
 
ஸ்லோகம்-29
யஸ்மின்னித3ம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ யத்ஸாம்பராயே மஹதி ப்3ரூஹி நஸ்தத் |
யோயம் வரோ கூ3ட4மனுப்ரவிஷ்டோ நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே ||
ஓ எமதர்ம ராஜா! எந்த ஆத்ம தத்துவ விஷயத்தில் மனிதர்கள் இவ்விதத்தில் சந்தேகப்படுகின்றார்களோ, பரலோக விஷயத்தில் மோட்சப் பலனுடையதாக எது இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள். எந்த வரமானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை விட வேறொரு வரத்தை நசிகேதன் கேட்கவில்லை.
 
 
இரண்டாம் பாகம்

ஸ்லோகம்-01 – ஆத்ம ஞானத்தின் பெருமைப் பேசப்படுகிறது
அன்யச்சே2யோன்யுது3தைவ ப்ரேயஸ்தே உபே4 நானார்தே2 புருஶம் ஸினீத: |
தயோஜ் ஶ்ரேய ஆத3தா3னஸ்ய ஸாது4 ப4வதி ஹியதேர்தா2த்3ய உ ப்ரேயோ வ்ருணிதே ||
ஸ்ரேயஸ்மேலானது, அடையத்தக்கது ( இது மோக்ஷத்தை குறிக்கின்றது)
ப்ரேயஸ் –  உலக விஷயங்களிலிருந்து அடையும் இன்பத்தை குறிக்கின்றது
இவையிரண்டும் மனிதனால் அடையக்கூடிய சாத்தியங்கள்சம்சாரம் என்பது மானஸதாபம் அதாவது காம, க்ரோதாதிகளுடன் கூடியது. இவைகளை விட்டுவிடுதல் மோட்சத்தைக் குறிக்கின்றதுமேலும் தன்னிடத்திலே இன்பத்தை காணும் தன்மை உடையது, பூரண மனநிறைவை அடைந்துள்ள நிலையை குறிக்கின்றது.
 
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை ஸ்ரேயஸ்பாதை என்றும், ப்ரேயஸுக்கு செல்லும் பாதைக்கு ப்ரேயஸ்பாதை என்றும் கூறுவதுண்டுஒருவன் இதிலிரண்டிலொன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்கர்மத்தினால் அடைவது ப்ரேயஸ், ஞானத்தினால் அடைவது ஸ்ரேயஸ்.
 
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, ப்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, இவையிரண்டும் வெவ்வேறு பலனை கொடுக்கக்கூடியதுஇவற்றுள் ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பவனுக்கு முக்தி கிடைக்கின்றது, முழு மனநிறைவை கிடைக்கின்றதுஇதை விடுத்து ப்ரேயஸை எவனொருவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவன் மோட்சத்தை அடைவதிலிருந்து விலகி விடுகின்றான்மோட்சத்திற்கு செல்லும் பாதையிலிருந்து விலகி விடுகின்றான்சம்சாரம் என்கின்ற பந்தத்தில் வீழ்ந்து விடுகின்றான்.
 
ஸ்லோகம்-02
ஶ்ரேயஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமேதஸ்தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீ4ர: |
ஶ்ரேயோ ஹி தீ4ரோபி4 ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயோ மந்தோ3 யோக3க்ஷேமாத்3 வ்ருணீதே ||
ஸ்ரேயஸும், ப்ரேயஸும் மனிதனை அணுகுகின்றன. விவேகமுள்ளவன் ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்மூடன் ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்அறிவாளி இவையிரண்டையும் ஆழ்ந்து சிந்தித்து பாகுபடுத்துகின்றான்சுயமாக சிந்தித்து ஆராயும் புத்தியில்லாதவனுக்கு சாஸ்திரம் பயன்படாதுகுருடனுக்கு நிலை கண்ணாடியால் எப்படி பயனில்லையோ அது போல வேதாந்த சாஸ்திரம் பயன்படாதுவிவேகமற்ற மூடன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்அறிவுடையவன் ப்ரேயஸை விட்டுவிட்டு ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான். 
[ யோக ஷேமம்யோகம் என்பது இதுவரையில் அடையாததை அடைவது, ஷேமம் என்பது அடைந்ததை பாதுகாத்தல் ]
 
ஸ்லோகம்-03
ஸ த்வம் ப்ரியான்ப்ரியரூபாம்ஶ்ச காமானபி3த்3யாயன்னசகேதோத்யஸ்ராக்ஷி: |
நைதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி ப3ஹகோ3 மனுஷ்யா: ||
நசிகேதா, நீ இன்பத்தை கொடுக்கின்ற, இன்பத்தின் வடிவமாக இருக்கின்ற, ஆசையை தூண்டுகின்ற பொருட்களை நன்றாக சிந்தித்து அதிலுள்ள குறைகளை நன்கு உணர்ந்து அவைகளை தியாகம் செய்து விட்டாய்ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாய்இந்த விலை மதிப்பில்லாத மாலையையும் ஏற்றுக்கொள்ளவில்லைஇந்த விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் மூழ்கி விடுகின்றார்கள், மூழ்கி இருக்கின்றார்கள்.
 
ஸ்லோகம்-04
தூ3ரமேதே விபரீதே விஷூசீ அவித்3யா யா ச வித்3யேதி ஞாதா |
வித்3யாபீ4ப்ஸினம் நசிகேதஸம் மன்யே ந த்வா காமா ப3ஹவோலோலுபந்த ||
இவையிரண்டும் வேறுபட்டவை, வெவ்வேறு இலக்கை நோக்கி செல்லும் இரு பாதைகள். எது அறியாமை ( சம்சாரத்தில் இருத்தல்) எது ஆத்ம ஞானம் என்று அறியப்படுகிறதோ இவைகள்தான் ஒருவனை அந்தந்த இலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு அழைத்து செல்கின்றதுஸ்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சி அதாவது குருவை அடைந்து வேதாந்த சாஸ்திரத்தை படித்தல் (சிரவணம்), மனனம், நிதித்யாஸனம் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி முக்தி அடைதல்ப்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை செயலில் ஈடுபடுதல்ஆனால் ஞானத்தை அடைவதற்கு உதவும் பண்புகளை அடைவதற்கு செய்யும் செயல்கள் அனைத்தும் ஸ்ரேயஸ் பாதைக்கு கொண்டு செல்லும்கர்மத்தை அவித்யா என்று கூறக் காரணம் கர்த்தா என்ற புத்தி எப்பொழுதும் இந்த சரீரத்தில் இருந்து கொண்டிருக்கின்றதுஞானத்தை விரும்புபவனாக இருக்கும் உன்னை பலவித ஆசைகளும் சலனப்படுத்தவில்லை என்று கருதுகின்றேன்.
 
ஸ்லோகம்-05
அவித்3யாயாமந்தரே வர்த்மானா: ஸ்வயம் தீ4ரா: பண்டி3தம்மன்யமானா: |
த3ந்த்4ரம்யமாணா: பரியந்தி மூடா4 அந்தேனைவ நீயமானா யதா2ந்தா4: ||
சரீரமே நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை அறியாமைக்குள் இருப்பவனாக கூறப்படுகின்றதுஇவர்கள் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கின்றார்கள்ஆனால் தன்னை அறிவுடையவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்இவ்வாறு நானே அறிவாளி, பண்டிதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழான நிலையை அடைகிறார்கள், சம்சாரத்திலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்மூப்பு, மரணம், நோய் என்ற துன்பத்தில் சிக்கி துன்புறுகின்றார்கள்இவர்களின் நிலை குருடனால் வழிநடத்தி செல்லப்படும் குருடர்களின் நிலைக்கு சமமாக இருக்கின்றது.
 
ஸ்லோகம்-06
ந ஸாம்பராய: ப்ரதிபா4தி பா3லம் ப்ரமாத்3யந்தம் வித்தமோகே3ன மூட4ம் |
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானி புன: புனர்வஶாமாபத்3யதே மே ||
ஆத்ம ஞானம் என்ற ஒன்று இருப்பதை அறியாமல் இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள், அறியாமையிலுள்ளவர்கள் இவர்கள் வேத கர்மங்களை கடைப்பிடித்து வாழ்தல், தர்மநெறிப்படி வாழ்தல் ஆகிய சாதனங்களை அறியாமல் இருக்கின்றார்கள்கவனமின்மையுடனும், மூடர்களாகவும் இருக்கின்றார்கள்மேலும் பணத்தாசையினால் அறிவிழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இதுதான் உலகம், வாழ்க்கையென்ற அறியாமையிலும் இருக்கின்றார்கள். இதைத்தவிர வேறெதுவும் இல்லை என்ற கர்வத்துடனும் இருக்கின்றார்கள்இவர்கள் மீண்டும் மீண்டும் என்(எமதர்மர்) வசத்திற்கே வருகின்றார்கள்.
 
ஸ்லோகம்-07
ஶ்ர்வணாயாபி ப3ஹுபி4ர்யோ ந லப்4ய: ஶ்ருண்வந்தோÅபி ப3ஹகோ3 யம் ந வித்4யு: |
ஆஶ்சர்யோ வக்தா குஶலோÅஸ்ய லப்3தா4ஶ்சர்யோ ஞாதா குஶலானுஶிஷ்ட: ||
மனிதரில் பலருக்கு ஆத்ம தத்துவத்தை பற்றி கேட்பதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. குருவை அடைந்து வேதாந்தத்தை கேட்பவர்களில் பலருக்கும் அதை புரிந்து கொள்ள முடியவில்லைஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருவானவர் ஆச்சரியமானவர், அபூர்வமானவர். ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருமார்களும் மிகக்குறைவாகவே இருக்கின்றனர்.  ஆத்ம ஞானத்தை அடைந்தவனும் மிகக்குறைவுசாமர்த்தியமான, தகுதியான குருமூலம் உபதேசம் பெறுபவர்களும் மிகக்குறைவு.
 
ஸ்லோகம்-08
ந நரேணாவரேணா ப்ரோக்த ஏஷ ஸுவிக்3ஞேயோ ப3ஹுதா4 சிந்த்யமான: |
அனன்யப்ரோக்தே க3திரன்ன நாஸ்த்யணீயான்ஹ்யதர்க்யமணூப்ரமாணாத் ||
தகுதியற்ற ஆசிரியர்களால் இந்த ஆத்ம ஞானத்தை உபதேசிக்கப்பட்டால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியாது. ஆத்மாவை பற்றி பலவிதமான கருத்துக்கள், சிந்தனைகள் இருப்பதால், இவைகளையெல்லாம் நீக்கி சரியான அறிவை புகட்ட தகுதியான ஆசிரியரால்தான் முடியும்இவர் எதை உபதேசம் செய்கின்றாரோ அதன்வழி வாழ்ந்து கொண்டிருப்பவர்ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றிருப்பவர்., முறைப்படி உபதேசம் பெற்று ஞானத்தை அடைந்தவராக இருப்பவர்இப்படிபட்ட குருவிடம் படிப்பவன் ஆத்ம் ஞானத்தை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வான்சம்சார கதியிலிருந்து விடுபடுவான்இவன் வேறெதையும் அடையத்தேவையில்லைஇவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆத்மா என்பது அணுவைக்காட்டிலும் மிக மிக சூட்சுமமானது,, இதை தர்க்கத்தினாலும், வாதத்தினாலும், புத்தியினாலும் அடைய முடியாது.
 
ஸ்லோகம்-09
நைஷா தர்கேண மதிராபனேயா ப்ரோக்தான்யேனைவ ஸுஞானாய ப்ரேஷ்ட |
யாம் த்வமாப: ஸத்யத்4ருதிர்னதாஸி த்வாத்3ருங்னோ பூ4யான்னசிகேத: ப்ரஷ்டா ||
இந்த ஆத்ம ஞானமானது தர்க்கத்தினாலும், வாதத்தினாலும் அடைய முடியாதுநம் புத்திக்கு அப்பாற்பட்ட நம்மை காட்டிலும் வேறான தகுதியான ஒருவரால் உபதேசிக்கப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும்என் அன்பிற்குரியவனே! எந்த ஆத்ம ஞானத்தை அடையப்போகின்றாயோ சத்யமான அதை அறியும் விஷயத்தில் நீ மிகவும் உறுதியாக இருக்கின்றாய்.
 
ஏன் இந்த அறிவை தர்க்கத்தினால் அடைய முடியாது என்றால் புத்தியின் துணைக்கொண்டு யூகத்தினால் சில அறிவை அடைய முடியும்உதாரணமாக மலையில் தெரியும் புகையைப் பார்த்தே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகின்றோம்இந்திரியங்களின் துணையில்லாமல் மனதைக் கொண்டு அடையும் ஞானத்திற்கு அனுமான ஞானம்நேரிடையாக அடையும் அறிவுக்கு பிரதியக்ஷ ஞானம்நம் அனுபவத்திற்கும் வராததை வைத்து அனுமானம் செய்ய முடியாதுஆத்மா நம் அனுபவத்திற்கு வராதது, அதாவது பிரத்யக்ஷ ஞானத்திற்கு வரவே வராது எனவே அதை அனுமானத்தினால் அடைய முடியாது. ஆத்மாவை இல்லையென்றும் நிரூபிக்க முடியாதுஎன்போன்ற குருவுக்கு உன் போன்ற சிஷ்யர்கள் கிடைக்கட்டும்.
 
ஸ்லோகம்-10
ஜானாம்யதம் ஶேவத்4ட்ரித்யனித்யம் ந ஹ்யத்4ருவை: ப்ராப்யதே ஹி த்4ருவம் தத் |
ததோ மயா நசிகேதாஶ்சிதோÅக்னிரனித்யைர்த்3ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம் ||
கர்ம பலன்கள் நிலையற்றவை, அநித்யமானது என்றும், நிலையற்றவைகளைக் கொண்டு நிலையானதை அடைய முடியாது என்றுm நான் அறிவேன்ஆனாலும் என்னால் நசிகேத யாகம் செய்யப்பட்டது, அதன் பலனாக இந்த பதவியும் கிடைத்தது, நீண்ட காலம் வாழக்கூடிய நிலையையும் அடைந்தேன்.
 
ஸ்லோகம்-11
காமஸ்யாப்திம் ஜக3த்: ப்ரதிஷ்டாம் க்ரதோரானந்த்யமப4யஸ்ய பாரம் |
ஸ்தோமமஹது3ருகா3யம் ப்ரதிஷ்டாம் த்3ருஷ்ட்வா த்4ருத்யா தீ4ரோ நசிகேதோÅத்யஸ்ராக்ஷி ||
இந்த தேவலோகம் ஆசைகளின் எல்லையாக இருக்கின்றது. இந்த பூலோகத்திற்கே ஆதாரமாக இருக்கின்ற உலகம், உபாஸனையில் அடையக்கூடிய முடிவான பலன் இந்த உலகம், பயமற்ற நிலையின் எல்லையாக இருக்கின்றது இந்த உலகம், பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கின்றது, பெருமைக்குரிய அனிமா போன்ற ஐஸ்வர்யங்களை உடைய உலகம், அதிகமாக வியாபிக்கப்பட்டிருக்கின்ற உலகம்அதிக ஆயுளைக் கொடுக்கும் உலகம்இப்படிபட்ட பெருமைகளை உடைய இந்த உலகத்தை நன்கு அறிந்தும் அதிலுள்ள குறைகளை, நிலையற்ற தன்மையையும் அறிந்து புத்திசாலியான நீ மனவுறுதியுடன் வேண்டாம் என்று துறந்து விட்டாய், மறுத்து விட்டாய்.
 
ஸ்லோகம்-12
தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மனுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் புராணம் |
அத்4யாத்மயோகா3தி4க4மேன தேவம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி ||
இந்த ஸ்லோகத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றதுஅவைகள்
1. ஆத்மாவின் லக்ஷணம்,
2. அதை அடையும் வழி ( எதைக்கொண்டு அதை அறிந்து கொள்ள முடியும்)
3. ஆத்மாவை அடைவதால் வருகின்ற பலன்.
 
இது அனுபவிக்கப்படுகின்ற ஒன்றாக இல்லாததால் அதை அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாதுஇதற்கு குணங்களும் கிடையாததால் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது எனவே அறிந்து கொள்வது மிகக்கடினமாக இருக்கின்றது. இது மிகவும் ரகசியமாகவும், மறைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றதுபுத்தியில் பிரதிபலிக்கும் இந்த ஆத்மாவை சிதாபாசம் என்று கூறப்படுகின்றது, இதுவே ஆத்மாவை மறைத்து கொண்டிருக்கின்றது. வெள்ளைத்திரையில் பார்க்கும் காட்சியானது எப்படி அந்த திரையையே மறைத்துக் கொண்டிருக்கின்றதோ அதே போன்று புத்தியில் தோன்றும் அறிவானது உண்மையான அறிவை மறைத்துக் கொண்டிருக்கின்றதுஇது புத்தியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. குகையில் எப்படி எப்பொழுதும் இருட்டு இருக்கின்றதோ அதுபோல புத்தியில் எப்பொழுதும் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதன் துணைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய வேண்டும். இது சம்சாரத்தினுள்ளே இருக்கின்றது, துயரத்திற்குள்ளே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றதுஎப்பொழுதும் மாறாமல் இருக்கின்றது.
அத்4யாத்மயோக3:       அனாத்மாவிலிருந்து ஆத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புதல்அதாவது நாம ரூபத்திலிருந்து அவைகளுக்கு ஆதாரமான பரம்பொருளை நோக்கி மனதை செலுத்துதல்.

அதிக3மன                      குருமூலம் சாஸ்திரத்தை படிப்பதன் மூலம்,  ஆத்மாவை அறிந்துஉணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைந்து
அதில் நிலைப்பெற்று சுக-துக்கங்களை கடந்து விடுகின்றான்.

 
ஸ்லோகம்-13
ஏதச்ச்2ருத்வா ஸம்பரிக்3ருஹ்ய மர்த்ய: ப்ரவ்ருஹ்ய த4ர்ம்யமணுமேதமாப்ய |
ஸ மோத3தே மோத3னீயம் ஹி லப்3த்4வா விவ்ருதம் ஸத்3ம நசிகேதஸம் மன்யே ||
ஆத்ம தத்துவத்தை கேட்டு (சிரவணம்), சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டு (மனனம்),  மனிதனானவன்  அனாத்மாலிருந்து ஆத்மாவை நன்றாக புரிந்து கொண்டு எப்பொழுதும் கவனம் முழுவதும் ஆத்மாவிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (நிதித்யாஸனம்).  ஆத்ம ஸ்வரூபம் மிக சூட்சுமமானது அதை அடைந்தவன் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றான்சுகத்தின் காரணத்தை அடைந்து விட்டவனாக இருக்கின்றான்ஆனந்தம் நிறைந்த ஆத்மாவை அடைந்தவனுக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகின்றேன்.
 
ஸ்லோகம்-14
அன்யத்ர த4ர்மாத3ன்யத்ராத4ர்மத3ன்யத்ரஸ்மாத்க்ருதாக்ருதாத் |
அன்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத்3 ||
தர்மத்தைக் காட்டிலும் வேறானதும், அதர்மத்திற்கும் வேறானதாகவும் உள்ளதுஅதாவது இருமைக்கும் அப்பாற்பட்டதாக உள்ள ஒன்றை இது சுட்டிக்காட்டுகின்றதுஇது காரண-காரியத்திலிருந்தும் வேறாக உள்ளதுஉலகத்திலுள்ள எல்லா பொருட்களும் காரண காரியமாகவும் இருக்கின்றது. (-ம்) தந்தைமகன்பேரன்கடந்த காலத்திலிருந்தும், வருங்காலத்திலிருந்தும் வேறானதாகவும் உள்ளதுஇவ்வாறு எந்த ஒன்று உள்ளதோ அல்லது நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ அதை எனக்கு கூறுவீர்களாக.
 
ஸ்லோகம்-15
ஸர்வே தே3வா யத்பத3மாமனந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி |
யதி3ச்ச2ந்தி ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத் ||
எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தைப் பற்றி உபதேசிக்கின்றதோ, அதை இறுதியாக அடைய வேண்டும் என்று கூறுகின்றதோ, எல்லா தவங்களும் எதை அடைவதற்காக கூறப்பட்டிருக்கின்றதோ, எந்தவொன்றை அடைய விரும்பி பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கின்றார்களோ அந்த லட்சியத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்அந்த பதம் ஓம் என்பதுதான்.
 
ஸ்லோகம்-16
ஏதத்3த்4யேவாக்ஷரம் ப்3ரஹ்ம ஏதத்3த்3யேவாக்ஷரம் பரம் |
ஏதத்3த்4யேவாக்ஷரம் ஞாத்வா யோ யதி3ச்ச2தி தஸ்ய தத் ||
ஓம் என்ற சொல் மாயையுடன் கூடிய ஈஸ்வரனையும் (சகுண பிரஹ்மன்), குணங்களற்றதாக உள்ள பிரஹ்மத்தையும் (நிர்குண பிரஹ்மன்) என்ற இரண்டையும் குறிக்கின்றதுசப்த ரூபமாக இருக்கும் ஓம் சகுண பிரம்மத்தையும், ஓங்காரத்தை விசாரம் செய்யும்போது நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றதுஇந்த சகுண பிரஹ்மத்தை குறிக்கின்ற ஓங்காரத்தை தியானிப்பவன் எதை விரும்புகின்றானோ அதை அடைகின்றான்இந்த ஒங்காரத்தை பரம்பொருளாக விசாரம் செய்து அறிந்தவன் அதை அடைகின்றான்

ஸ்லோகம்-17
ஏதத்3லம்ப3னம் ஶ்ரேஷ்டமேததா3ல்ம்ப3னம் பரம் |
ஏதத்3லம்ப3னம் ஞாத்வா ப்3ரஹ்மலோகே மஹீயதே ||
எதை வைத்துக் கொண்டு இந்திரியங்களுக்கப்பாற்பட்ட தேவதைகளை தியானிக்கின்றோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்இது இருவகையாக இருக்கின்றது.
1. பிரதிமா ஆலம்பனம்குறிப்பிட்ட உருவத்துடன் கூடியது, சிவபெருமான், முருகர்
2. ப்ரதீகம் ஆலம்பனம்குறிப்பிட்ட உருவமில்லாதது. (.ம்) ஓம் என்ற சொல்
நாம் ஒங்காரத்தை தியானிக்கும் போது நமது மனம் ஒம் என்ற சப்தத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.  இந்த ஓங்காரம் பரபிரம்மத்தையும், சகுண பிரம்மத்தையும் குறிப்பதனால்தான் இதை தியானம் செய்தவன் இறந்த பிறகு பிரம்ம லோகத்திற்கு சென்று சிறப்புடன் இருக்கின்றான்இதை பரம்பொருளாக விசாரம் செய்து அடையும் அறிவினால் பிரம்மத்தையே அடைவன், அதன் ஸ்வரூபமாகவே தன்னை உணர்ந்து கொள்வான்.
 
ஸ்லோகம்-18 (ஆத்ம தத்துவ விளக்கம் 18-22)
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சின்னாயம் குதஶ்சின்ன ப3பு4வ கஶ்சித் |
அஜோ நித்ய: ஶாஶ்வதோÅயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே ||
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லைஎதனிடமிருந்தும் தோன்றவில்லை, எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லைஇதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லைஇது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது, பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.
 
ஸ்லோகம்-19
ஹந்தா சேன்மன்யதே ஜந்தும் ஹதஶ்சேன்மன்யதே ஹதம் |
அபௌ4 தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ||
இது எந்தவிதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லைகொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பதும் அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கப்படுவதுமில்லை, அழிவதுமில்லை.
 
ஸ்லோகம்-20
அணோரணியான்மஹதோ மஹீயானத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ கு3ஹாயாம் |
தமக்ரது: பஶ்யதி வீதஶோகோ தா4து: ப்ரஸாதான்மஹிமானமாத்மன: ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
1. ஆத்மாவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்,
2. ஆத்மாவை புரிந்து கொள்கின்ற இடம்,
3. எப்படிபட்டவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது
4. ஆத்மாவை அடைவதால் அடையும் பலன்.
 
ஆத்ம லக்ஷணம்: இது அணுவைக்காட்டிலும் அணுவானது, சிறியதைக் காட்டிலும் சிறியதுபெரியதைக் காட்டிலும் பெரியதுஇந்த கருத்து ஆத்மா பார்க்கப்படும் பொருளல்ல என்று உணர்த்துகின்றதுஇந்த லக்ஷணம் அனாத்மா விஷயங்களை நீக்கி விடுகின்றதுகுணங்களால் வரையறுக்கப்படாததுஇதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்எந்த ஒன்றையும் கால, தேச வஸ்து இவைகளால் வரையறுக்கப்படலாம். ஆனால் ஆத்மா இவைகளால் வரையறுக்கப்பட முடியாது.
 
ஆத்மாவானது எங்கும் இருக்கின்றது ஆனால் அதை புரிந்து கொள்கின்ற இடம் நம்முடைய புத்திதான். நாம் பார்க்கும் உயிரினங்களின் மனதிற்குள் அமர்ந்திருக்கின்றது, வெளிப்படுகின்றது.
 
இந்த ஆத்மாவை, ஆசையற்றவன் (சுகத்தை நாடும் ஆசைகள் இல்லாதவன்) தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே அறிகின்றான்..  நம்முடைய இந்திரியங்களின் அமைதியினால் ஆத்மாவை அடைகின்றான்ஈஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் ஆத்மாவை அடைகின்றான்.
 
ஆத்மாவை அடைந்தவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான், துயரத்திலிருந்து விடுதலை அடைகின்றான்இந்த நிலை ஜீவன் முக்தியை குறிக்கின்றது.
 
ஸ்லோகம்-21
அஸீனோ தூ3ரம் வ்ரஜதி ஶயனோ யாதி ஸர்வத: |
கஸ்தம் மதா3மத3ம் தேவம் மத3ன்யோ ஞதுமர்ஹதி ||
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவானது அனாத்மாவான இந்த சரீரத்தோடு இணைந்து இருக்கின்றதுஇதனால் ஜடமான நம் உடலும், மற்ற உறுப்புக்களும் செயல்படுகின்றனஆத்ம தத்துவத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்அதை தனியே பார்த்தல், உடலோடு சேர்ந்து பார்த்தல். ஆத்மா தன்னளவில் செயலற்று இருக்கின்றதுஆனால் அனாத்மாவுடன் சேரும்போது செயல்படுவதுபோல் இருக்கின்றதுஉதாரணமாக பானையானது ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது அதிலிருக்கும் ஆகாசமும் செல்வது போல் தோன்றுகின்றதுஆனால் ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதால் அது நகர்வதில்லை.
ஆத்மாவானது அமர்ந்து கொண்டே வெகுதூரம் செல்கின்றது. அதாவது அது தன்னளவில் அசையாமல் இருக்கின்றது, ஆனால் உடலோடு, மனதோடு சேர்ந்து பார்க்கும்போது அதுவும் வெகுதூரம் செல்வது போல் தோன்றுகிறது. உறங்கிக்கொண்டே வெகு தூரம் செல்கின்றதுஇதையும் உபாதிகளுடன் சேர்ந்து பார்க்கும்போது இதுமாதிரி தோன்றும்ஆனந்தமாகவும் அதற்கப்பாற்கப்பட்டதாகவும் இருக்கின்ற இந்த ஆத்மாவை என்னைத் தவிர வேறு யார் அறிய தகுந்தவர்.
 
ஸ்லோகம்-22
அஶரீரம் ஶரீரேஷ்வனவஸ்தே2ஷ்வவஸ்தி2தம் |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
இது உடலற்றது, உடலுக்குள்ளே இருந்து கொண்டு உடலற்றதாக இருக்கின்றதுஅழியக்கூடியதில் அழியாததாக இருக்கின்றதுமிகப்பெரியது, மேலானது, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, எங்கும் வியாபித்திருக்கின்றதுஇந்த ஆத்மாவை இவ்வாறாக உணர்ந்திருக்கும் சான்றோர்கள் துயரப்படுவதில்லை.
 
ஸ்லோகம்-23
நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
இதில் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் இரண்டு சாதனங்களை கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்
1. ஈஸ்வரன் அனுக்கிரகம்,
2. முமுக்ஷுத்வம் (மோக்ஷ இச்சா).
 
வேத பாராயணத்தால் மட்டும், வேதத்தை உச்சரிப்பதால் மட்டும் இதை அடைய முடியாது. வேதத்தில் படித்ததை நினைவில் வைத்திருந்தாலும் அதை அடைய முடியாதுஅதை பலமுறை கேட்பதாலும் பயனில்லைஆத்மா எந்த மனிதனை தேர்ந்தெடுக்கின்றதோ அவனால் மட்டும்தான் அடைய முடியும்அவர்களுக்கு ஆத்மா தன்னுடைய ஸ்வரூபத்தை விளக்கி காட்டுகின்றது, உணர வைக்கின்றதுஇங்கே ஆத்மா என்பதை மாயையுடன் கூடிய ஆத்மாவை (ஈஸ்வரனை) எடுத்துக் கொள்ள வேண்டும்ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.
 
ஸ்லோகம்-24
நாவிரதோ து3ஶ்சரிதான்னஶாந்தோ நாஸ்மாஹித: |
நாஶாந்தமானஸோ வாபி ப்ரஞனேனௌனமாப்னுயாத ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு விதமான சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது
அதர்மமான வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விலக்கி கொள்ளாதவன், புலன்களில் அமைதியில்லாதவன், புலனடக்கம் இல்லாதவன், எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனத்தை வைக்காதவன், மன ஒருமுகப்பாடு இல்லாதவன், மன அமைதியை அடையாதவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களால் ஞானம் வந்தாலும் அதில் நிலைபெற முடியாது. எனவே இவர்களால் ஆத்மாவை அடைய முடியாது
 
ஸ்லோகம்-25
யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷேத்ரம் சோபே4 ப4வத ஓத3ன: |
ம்ருத்யுர்யஸ்யோபஸேசனம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: ||
ஆத்மாவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதுபிரளய காலத்தில் அனைத்தும் அதற்குள் ஒடுங்கி விடுகின்றதுஇந்த அகில பிரபஞ்சமே ஆத்மாவுக்கு உணவாக இருக்கின்றதுமரணத்தை ஊறுகாயாக பயன்படுத்தி உணவை உட்கொள்கின்றதுபிறகு அதையையும் சாப்பிட்டு விடுகின்றது.

ஆத்மாவிற்கு பிராமணர்களும், சத்திரியர்களும் சாப்பிடும் அன்னமாகின்றதுஇது இந்த பிரபஞ்சமே சாப்பிடும் உணவாகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்மரணம் இதற்கு ஊறுகாய் போன்று இருக்கின்றதுஇவ்விதமாக எங்கு இந்த ஆத்மா இருக்கிறது என்று யார் அறிவார்.

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...