Showing posts with label மாண்டூக்ய உபநிஷத்-05. Show all posts
Showing posts with label மாண்டூக்ய உபநிஷத்-05. Show all posts

Saturday, November 11, 2017

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-5

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-5
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது09/04/2022
www.poornalayam.org
அத்தியாயம்- 3 (அத்வைத பிரகரணம்)
முகவுரை
ஆத்மா காரணமாகவும் இல்லை என்று கூறுகிறார்.
 
காரிகை-1
இருமையை விலக்குதல். உபாஸகன், உபாஸக தேவதை(பிரம்மன்) என்கின்ற இந்த த்வைதம் நீக்கப்படுகின்றதுஉபாஸனையின் பலன் மனம் ஒருமுகப்படுத்தப்படும்சித்த ஏகாக்ரகத்திற்காக இந்த த்வைதத்தை நிந்தனை செய்யவில்லைஇது மோட்சத்தை அடைவதற்கு ஒரு படியாக கருதப்படுகின்றது.
 
பூ.பக்ஷம் பரம்பொருள் இரண்டு தன்மைகளுடன் இருக்கின்றது.  1. காரண ரூபம், பிறப்பற்றது (அஜம்), 2. இதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பரம்பொருளே பிரபஞ்சமாக பரிணாமத்துடன் இருக்கிறது. பிறப்புடைய பரம்பொருள் இப்போது தோன்றிய பிரம்ம ஸ்வரூபத்துக்குள் இருக்கின்றனஇதுவே சம்சாரம் இதிலிருந்து விடுபட்டு அஜாத பிரம்மத்தை அடைய வேண்டும்அதற்காக அந்த பிரம்மத்தை உபாஸனை செய்து அதை அடைய வேண்டும்இதுதான் மோட்சம்என்னுடைய உண்மையான ஸ்வரூபம் அஜாத பிரம்மம். அதை அடைய உபாஸனை மூலம் ஜாத பிரம்மத்திலிருந்து விடுபட வேண்டும். ஒருவன் எதை குறித்து தியானிக்கின்றானோ அந்த ஸ்வரூபமாக மாறி விடுகின்றான்மீமாம்ஸயில் இது ஏற்றுக் கொள்ளபட்ட நியாயம்.
 
உபாஸான ஆஸ்ரிதோ த4ர்மஹஉபாஸகர்கள் உபாஸனையை சார்ந்திருக்கின்றான், உபாஸனையை சாதனமாக எடுத்துக்கொண்டவன், பரம புருஷார்த்த்த்தை அடைவதற்கான சாதனமாக உபாஸனை செய்பவர்கள்.
ஜாதே பிரஹ்மணி வர்த்தேபிறந்த பிரம்மனிடத்தில் இருக்கின்றான். தோன்றிய இந்த உலகமாக இருக்கின்ற பிரம்மத்திடம் அபிமானமுடையவனாக இருக்கின்றான்.
ப்ராக் உத்பத்தேஹேஇந்த தோன்றுவதற்கு முன்பு
ஸர்வம் அஜம்அனைத்தும் பிறப்பற்றதாக இருந்தது, பிறவாத பிரம்மனாக இருந்தது.
நான் உபாஸனையில் மூலமாக பிறவாத பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் த்வைத புத்தியுடன் இருக்கின்றார்கள்.
தேன- ஆகவே; இப்படிபட்ட பொய்யான அறிவை கொண்டிருக்கும்
அஸௌஇந்த உபாஸகன்
க்ருபணஹ ஸ்ம்ருதபரிதாபத்திற்குரியவனாக கருதப்படுகின்றான்.
கார்பண்யம்பரிதாபத்துக்குரிய தன்மையுடன் இருப்பது, மனநிறைவின்மையுடன் இருப்பது
 
காரிகை-2
அதஹஆகவே, என்ன காரணத்தினால் தோன்றிய இந்த உலகத்தின் மீது அபிமானத்துடன் இருப்பவன், பரிதாபத்துக்குரியவனாக இருக்கின்றான் என்பதை
வக்ஷ்யாமிநான் சொல்லப்போகிறேன்.
அகார்பண்யம்பிரம்மம் கார்பண்யமற்றது, சம்சாரமற்றது
அஜாதிபிறப்பற்றது
ஸமதாம் கதம்பூரணமாக இருப்பது, நிர்குண ஸ்வரூபமாக இருப்பது.
 
அஜாதியின் விசாரம்:
பிரம்மன் பிறப்பற்றது என்று நிலை நாட்டப்படுகின்றதுஅஜாத வாதம் இங்கு பயன்படுத்தப்படுகிறதுபிரம்மன் அத்வைதம் என்றூ நிரூபிப்பதற்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றது என்று நிலை நாட்ட வேண்டும். அவைகள்,
1. அகாரணம் பிரஹ்மபிரம்மத்திற்கு காரணம் எதுவும் இல்லை, அது தானாகவே இருக்கின்றது, எதிலிருந்தும் தோன்றவில்லைஎந்த பிரம்மத்திற்கு பிறப்பில்லையோ அதற்கு அஜாதி என்று பெயர்.
2. எந்த பிரம்மனிடமிருந்து எதுவும் தோன்றவில்லையோ அது அஜாதி என்றழைக்கப்படும்.
 
பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று நிரூபித்து விட்டால் இந்த த்வைதம் நீங்கி பிரஹ்மன் அத்வைதம் என்று உறுதியாகி விடும்அதுதான் இந்த அத்யாயத்தில் செய்யப்படுகின்றதுபிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லையென்றால் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதன் இருப்பு இல்லையென்றும் அனுபவம் இருந்து கொண்டுதான் இருக்கின்றதுஸ்ருஷ்டியின் இருப்பை நீக்கினால் அதை எப்படி அனுபவிக்க முடியும்கயிற்றில் தோன்றும் பாம்பு இருக்கின்றது, அதையும் அனுபவிக்கின்றோம்உண்மையில் பாம்பு இல்லை, அதேபோல ஸ்ருஷ்டியும் இல்லை ஆனால் அனுபவிக்கின்றோம். இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.
 
யதா கிஞ்சித் ந ஜாயதேஎவ்விதத்தில் எதுவும் தோன்றவில்லையோ அது விளக்கப்படுகின்றது.
ஜாயமானம்தோன்றியது போல தெரிந்து கொண்டிருக்கும் அனைத்தும்
ஸமந்ததஹநம்மை சுற்றி எல்லாவிடத்திலும்
நம்மை சுற்றி எல்லாவிடத்திலும் தோன்றியது போல தெரிந்துக் கொண்டிருக்கும் அனைத்தும் எவ்விதத்திலும் தோன்றவில்லை என்பதை விளக்கப்படுகின்றது.
 
காரிகை-3
தோன்றியது போல் காட்சியளித்துக் கொண்டிருப்பதை, போக்த்ரு பிரபஞ்சம் என்றும், போக்யம் ப்ரபஞ்சம் என்றும் இரண்டாக பிரிக்கப்படுகின்றதுஜீவன் போக்த்ருவாகவும், உலகம் போக்யமாக இருக்கின்றது.
பக்ஷம்ஜீவன்
சாத்தியம்தோன்றவில்லை
ஹேதுபிரம்மத்திடமிருந்து வேறாக இல்லாத காரணத்தினால்
த்ருஷ்டாந்தம்ஆகாசம். இது ஒன்றுதான்இதற்கு சிறியது, பெரியது என்ற குணங்கள் கிடையாது. விதவிதமான சிறியதும், பெரியதுமான பானைகள் இருக்கின்றனஎல்லா பானைகளுக்குள்ளும் ஆகாசம் இருந்தாலும் அதனுடைய கொள்ளளவு வைத்து சிறிய ஆகாசம், பெரிய ஆகாசம் என்று தோன்றுகிறதுபானை தோன்றியதும்தான் அது சிறியதாகவும், பெரியதாகவும் நம் அனுபவத்திற்கு வருகின்றதுஆனால் உண்மையில் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது. பானைகளுக்கு வெளியே இருக்கும் ஆகாசம் மகாகாசம் என்று அழைக்கப்படுகின்றது.
முழுமையான ஒன்றாக இருக்கும் ஆகாசம்  – பிரம்மன்
                                பானைகள்  – ஜீவன்
           பானைக்குள் இருக்கும் ஆகாசம்  – ஜீவனுக்குள் இருக்கும் ஆத்மா.

பானைக்குள் ஆகாசம் எப்படி தோன்றியதோ அதுபோல ஜீவன் தோன்றிய போது அதற்குள் பிரம்ம சைதன்யம் இருப்பதாக தோன்றுகிறது.

 
ஆகாஶ கடாகாஶை இவ உதிதஹ – மகாகாசமானது பானைக்குள் இருக்கின்ற ஆகாசமாக தோன்றியது போல் இருக்கின்றது.
ஆத்மா ஹி ஜீவைஹிபரமாத்மாவானது ஜீவர்களுக்குள் தோன்றியது போல் இருக்கின்றது.
க3டாத்வத்     பானைகளைப்போல் ஆகாசம் காட்சியளிக்கின்றது.
சங்கா4தைஹிஸ்தூல சூட்சும சரீரங்களாக பரமாத்மா காட்சியளிக்கின்றது.
ஜாதாவ்        பிறப்பைப்பற்றிய விஷயத்தில்
ஏதத் நிதர்ஶனம்இதுதான் உதாரணத்தில் விளக்குகின்றது
 
இங்கு பானைகள் ஜீவர்களையும், ஆகாசமானது பரமாத்வையும் குறிக்கின்றதுபானைதான் தோன்றியுள்ளது ஆகாசமல்ல அதுபோல ஜீவர்கள்தான் தோன்றியிருக்கின்றார்கள் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
நம் உடலை உலகமாக எடுத்துக் கொண்டு அது இல்லை என்று நிரூபித்துவிட்டால் இந்த உலகமும் இல்லை என்று நிரூபணமாகி விடும்இதற்கு முதலில் பானை தோன்றவில்லை என்று நிரூபிக்க வேண்டும்காரணம் + நாமரூபம் = காரியம் என்ற நியதி இருக்கின்றதுகாரணம் காரியத்திற்கு வேறாக இல்லைகாரியத்தை ஒரு பொருளாக கருதமுடியாது. களிமண்ணில் சில பானைகள் செய்யப்பட்டுள்ளனஇவைகளனைத்திலும் களிமண்தான் இருக்கின்றது, ஆனால் அதனுடன் நாம, ரூபங்கள் வந்துள்ளது.
 
ஆத்மா தன்னுடைய மாயா சக்தியினால் ஆகாசத்தை தோற்றுவித்ததுஸ்ருஷ்டி கிரமப்படி ஆகாசம் முதலில் தோன்றியது எனவே இது கடைசியில் தோன்றிய ஜடமான ப்ருதிவிக்கு காரணமாக இருக்கின்றது. இதிலிருந்து காரியமான ப்ருதிவி இல்லை அதனால் ஜடமான களிமண்ணும் இங்கு கிடையாது என்று நிரூபணமாகின்றது. ப்ருதிவி ஆகாசத்திலிருந்து வேறாக இல்லாததால், ஆகாசமே பானையாக காட்சியளிக்கின்றதுஇதைப்போல பரமாத்மாவிலிருந்துதான் மாயையின் சக்தியினால் இந்த சரீரங்கள் தோன்றியுள்ளது  உண்மையில் சரீரங்களும் கிடையாது, ஆத்மாவே இவ்வாறு காட்சி அளிக்கின்றது. நாம-ரூபமே மாயை என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆத்மாதான் ஜகத்தாக காட்சியளிக்கின்றது.
 
காரிகை-4
ஜீவன் இறப்பதில்லை என்பதுதான் இதில் சொல்லப்படுகின்றது.
4டாதிஷு ப்ரலீனேஷுபானை போன்ற உபாதிகள் அழிவை அடையும்போது
கடகாஶ ஆதயஹ      – பானைக்குள் இருக்கின்ற ஆகாசம்
யதா ஆகாஶே          – மகாகாசத்திற்குள்
ஸம்ப்ரலீயந்தே         – எப்படி அவைகள் ஒன்றாகி விடுகின்றதோ
தத்வத்                  – இதை போல
ஜீவா இஹா ஆத்மனி   – ஜீவர்கள் இந்த பரமாத்மாவிடம் ஒடுங்குகின்றார்கள்
சரீரங்கள் அழியும் போது அதற்குள் இருக்கின்ற ஆத்மா பரமாத்வோடு ஒன்றாகி விடுகின்றதுஇதிலிருந்து ஜீவன் தோன்றவுமில்லை, அழியவுமில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
 
காரிகை-5
பரமாத்மாவே எல்லா ஜீவர்களிடம் இருக்கின்றார். ஆனாலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் விதவிதமான அனுபவங்கள் இருக்கின்றதே? என்ற சந்தேகம் எழுகின்றதுவெவ்வேறு இடங்கள், விதவிதமாக அனுபவிக்கின்றோமா?. உதாரணமாக அசுத்தமான பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும், சுத்தமாக இருக்கும் பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும் இருப்பதாகவும் காண்கின்றோம்இது உபாதிகளின் குணத்தை ஆகாசத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றதுஅதேபோல சரீரத்தில்தான் சுக-துக்கங்கள் இருக்கின்றது, ஆத்மாவுக்கு கிடையாது.
 
யதா ஏகாஸ்மின் கடாகாஶே – எவ்வாறு ஒன்றாக இருக்கின்ற பானைக்குள் இருக்கும் ஆகாசம்
ரஜஸ் தூமாதிபிஹி – அழுக்கும், புகைகள் போன்றவை உள்ள பானைக்குள்
யுதேசம்பந்தப்பட்டிருந்தாலும்
ந ஸர்வே ஸம்ப்ரயுஜயந்தேஎல்லா ஆகாசத்திலும் இதே சம்பந்தம் இருக்கும் என்று சொல்ல மாட்டோம்ஏனென்றால் அழுக்கு, புகை இவைகளெல்லாம் பானையை சேர்ந்ததுஎனவே அவைகளுக்கும் ஆகாசத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதை போல
தத்வத்இதுபோல,
ஜீவாஜீவர்களின்
ஸுகாதிவிசுக-துக்கங்கள் ஜீவனைச் சேர்ந்தது
ஜீவர்களிடத்தில் உள்ள சுக-துக்கங்களை ஆத்மா பிரகாசப்படுத்துகின்றதுஆனால் எந்தவித சம்பந்தம் இல்லாததாகவும் இருக்கின்றது.
 
காரிகை-6
பூ.பக்ஷம்  அனுமான பிரமானத்தின் மூலமாக ஜீவர்களிடையே பேதம் இருக்கின்றது என்று நிரூபிக்க முடியும்..  பக்ஷம்ஜீவன்; ஸாத்யம்ஜீவன்ஈஸ்வரன் வெவ்வேறானவர்கள்..  ஹேதுவேறுபாட்டை உடைய ( ரூப, காரிய ஸமாக்யா வஸாத், நாம்-ரூப-கர்ம பேதா4த் ) இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள வேறுபாடு பெயர், உருவம், குணங்கள் பயன்பாடு இவைகளினால் வேறுபட்டிருப்பதால் அவைகள் வெவ்வேறு என்று கூறமுடிகின்றது. அதேபோல இரண்டு ஜீவர்களை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்றும் வெவ்வேறாக இருப்பதைப் பார்க்க முடிகின்றதுஎனவே அவர்களுகிடையே வேறுபாடு தெரிகின்றதுஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே இந்த மூன்று வேறுபாடுகளும் தெரிகின்றது. எனவே இருவரும் வெவ்வேறானவர்கள், அத்வைதம் என்பதே கிடையாது.
பதில்     ஆகாசம் அது எங்கு இருக்கின்றதோ அதற்கேற்ற பெயரோடு அழைக்கப்படுகின்றதுஉதாரணமாக பானக்குள் இருக்கும் ஆகாசம், அறைக்குள் இருக்கும் ஆகாசம் இவைகளுக்குள் பெயர்கள் வேறுபட்டிருந்தாலும் அது ஆகாசம் என்ற ஒன்றைத்தான் குறிக்கின்றதுவிதவிதமான  அளவுடன் கூடிய பானைகளுக்குள் இருக்கும் ஆகாசமானது சிறிய, பெரிய ஆகாசம் என்று வெவ்வேறு குணங்களையுடையது போல் தோன்றுகின்றதுஇருந்தாலும் ஆகாசம் ஒன்றாகத்தான் இருக்கின்றது. என்று ஏற்றுக்கொள்கின்றோம்அதேபோன்று படிக்கும் அறையிலுள்ள ஆகாசம், படுக்கையறையிலுள்ள ஆகாசம் என்று விதவிதமான பயன்பாடுடைய ஆகாசமாக இருந்தாலும், ஆகாசம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்கிறோம்இதிலிருந்து நாம-ரூப-கர்ம வேறுபாடுகள் இருந்தாலும் ஆகாசம் ஒன்றாக இருக்கின்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால், பூர்வபக்ஷியினுடைய உதாரணம் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டதுஅதனுடைய உபாதிகளின் வேறுபாடு ஆகாசத்திற்கு வந்து விட்டதுஇதேபோல ஜீவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவைகள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல, அவைகள் சரீரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், அவைகள்  ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுஇந்த நியதியை ஜீவ-ஈஸ்வரனக்குமிடையே ஒப்பிட்டு பார்த்தால் வேறுபாடில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
 
ரூப காரிய ஸமாக்யாஸ்ச     ஆகாசத்திற்கு உருவம், குணங்கள், செயல்கள், பயன்பாடு, பெயர் ஆகியவைகள்
பி4த்யந்தே தத்ர தத்ர வை     அந்தந்த இடத்திற்கேற்ப வேறுபாடுடன் இருக்கின்றது
ஆகாஶஸ்ய ந பேதஹ         ஆகாசத்தினிடத்தில் இந்த வேறுபாடுகள் இல்லை.
த த்வத் ஜீவேஷூ நிர்ணயஹ  அதுபோல ஜீவர்கள் விஷயத்தில் இதை நிச்சயம் பண்ண வேண்டும்.
ஜீவர்களிடத்தே உள்ள வேறுபாடுகள் அந்தந்த உடலையும், மனதையும் சேர்ந்ததுஅதற்குள் இருக்கும் ஆத்மாவுக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாதுஇது ஜீவ-ஈஸ்வரன் இருவருக்கும் இடையேயும் ஒப்பிட்டு பார்த்து அபேத புத்தியை அடைய வேண்டும்.
 
காரிகை-7
பூ.பக்ஷம்  பரமாத்மா ஜீவாத்மாவின் பிறப்பிற்கு காரணமாக இருக்கின்றது
பதில்     காரண-கார்ய சம்பந்தம், அவயவ-அவயவி சம்பந்தம்இருபொருட்களுக்குமிடையே உள்ள சம்பந்தம் இவ்வாறு இரண்டு விதமாக இருக்கின்றதுஸ்தூல உடல் காரணம், அன்னம் காரணம், காரணத்திலிருந்து சில மாற்றங்களுடன் உருவாகுவது காரியம்அவயவம்உறுப்புக்கள், அவயவிஉறுப்புக்களை உடையவன். இங்கே அவயவி மனித உடல்; அவயவம்கை-கால்கள் போன்ற உறுப்புக்கள்.
 
கடாகஶ ந ஆகாஶஸ்ய – பானைக்குள் இருக்கின்ற ஆகாசமும், வெளியே உள்ள மகாகாசமும்
ந விகார அவயவஹ யதா – எப்படி அதனுடைய விகாரமும் இல்லை, அவயவமும் இல்லையோ
ததா – அதுபோல
நைவாத்மனஹ ஜீவா ந விகார அவயவஹ ஸதா – ஜீவாத்மா, பரமாத்மாவினுடைய மாற்றமும் இல்லை, உறுப்பும் அல்ல. ஸ்ருஷ்டி தோன்றிக் கொண்டிருந்தாலும், பிரளய காலத்திலும் எந்தவிதமான வேற்றுமைகளும் இல்லை.
எனவே ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமுமில்லைஅவைகள் இரண்டும் ஒன்றே என்ற காரணத்தினால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
காரிகை-8
அறியாமையினால் சரீரத்தின் தன்மைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றோம். அறியாமைக்கு காரணம் சொல்ல முடியாதுஎனவே அதை அநாதி என்று கூறப்படுகின்றது. அநாதி என்றால் அதனுடைய தோற்றத்தை சொல்ல முடியாது. ஆனால் ஞானம் வந்தவுடன் அது சென்று விடும், மீண்டும் வராது.
 
யதா ககணம் மலைஹி மலினம்எவ்வாறு ஆகாசம் அசுத்தங்களுடன் சேர்ந்து அசுத்தமாக தோன்றுகின்றது
பாலானாம்சிறுவர்களுக்கு, அறியாமையில் உள்ளவர்களுக்கு,அறிவு வளர்ச்சியற்றவர்களுக்கு
ஆத்மா அபி மலினஹ மலைஹிஅசுத்தங்களுடன் சேர்ந்து ஆத்மாவும் அசுத்தமாக தோன்றுகிறது
அபுத்தானம்அறியாமையிலுள்ளவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது.
 
காரிகை-9
மரணே சம்ப4வே ச ஏவமரண விஷயத்திலும், பிறக்கின்ற விஷயத்திலும் ஆகாசத்தை  துணை கொண்டு மரணமும் இல்லை, பிறப்பும் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கதி ஆகமன அபிசெல்லுதல், திரும்பி வருதல் விஷயத்திலும் கூட இதே மாதிரி இல்லையென்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ ஸரீரேஷு ஸ்திதௌஎல்லா உடல்களுக்குள்ளும் ஆத்மா இருக்கின்றது என்பதையும் இதேமாதிரி புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகாஶேன அவிலக்ஷணஆகாச உதாரணத்தில் எப்படி இருக்கின்றதோ அதேபோல ஆத்மா விஷயத்திலும் வேறுபடுவதில்லை.
 
இப்படி இருக்கும்போது ஆகாசம்தான் பரமாத்மாவாக தோன்றுகின்றது என்று சந்தேகம் வரும். இவையிரண்டுக்கும் இடையே வேற்றுமைகள் உண்டு. அவைகள்,
1. ஆகாசம் ஜடமானது, பரமாத்மா அறிவு ஸ்வரூபமானது,
2. பரமாத்மாவிலிருந்துதான் ஆகாசம் தோன்றியது.
3. ஆகாசத்திற்கு சப்தம் என்ற குணம் இருக்கின்றது, பரமாத்மா நிர்குணமானது,
4. பரமாத்மா சஜாதீய, விஜாதீய, ஸ்வகத பேதம் என்ற மூன்று விதமான வேற்றுமைகளும் அற்றது
இதிலிருந்து ஆகாசம் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
 
காரிகை-10
இதில் சரீரமும் தோன்றவில்லை என்று கூறப்பட்டிருக்கின்றதுஇங்கு சரீரம் என்பதை ஜகத்தாக எடுத்துக் கொள்ளலாம்சூட்சுமமான ஆகாசமே ஸ்தூலமான பானையாக மாறியிருக்கின்றது. எனவே பானை என்று ஒன்று இல்லைவிஸ்வனாக இருக்கின்ற நாம் நித்திரை என்ற சக்தியின் துணைக் கொண்டு கனவுலக பிரபஞ்சத்தை படைக்கின்றோம். வெவ்வேறு பொருட்களையும் படைக்கின்றோம், அனுபவிக்கின்றோம்உண்மையில் கனவில் தோன்றும் உடல்களும், உலகமும் மித்யா என்று உணர்ந்துள்ளோம்இதேபோன்றுதான் இந்த ஸ்தூல பிரபஞ்சமும், உடல்களும் உண்மையில் இல்லை.
 
ஸர்வே ஸங்காதா ஸ்வப்னவத்உடல்கள் எல்லாம் கனவில் தோன்றும் உடல்களைப்போல
ஆத்மா மாயா விஸர்ஜிதாஆத்மாவில் இருக்கின்ற மாயையினால் தோற்றுவிக்கப்பட்டது, கற்பனை செய்யப்பட்டுள்ளது.
 
கேள்வி உடல் பொய்யென்று சொல்லிவிட்டால், பிரம்ம, விஷ்ணு, சிவன், தேவதைகளின் உடல்களும் பொய்யானதா? அவர்களின் உடல்கள் உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும்.
பதில்    எந்த உடலாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாமே மித்யாதான்தேவதைகளின் உடல்கள் பூஜிக்க தகுந்ததாக இருந்தாலும் அவைகளும் மித்யாதான்.
 
ஆதி4க்யேபூஜைக்குரிய உடல்களாக இருந்தாலும்
ஸர்வ ஸாம்யே வாமற்ற அனைத்து சாதாரண உடல்களாக இருந்தாலும்
ந உபபத்தி ஹி வித்யதேஅவைகள் சத்யமா, மித்யாவா என்று உறுதி செய்வதற்கு உடலின் சிறப்பு தன்மை காரணமாக இல்லை.
 
காரிகை-11
ரஸாதய ஹி யே கோஶா – அன்னமய கோசத்திலிருந்து ஆரம்பித்து மீதியுள்ள நான்கு கோசங்களும்
வ்யாக்யாதா தைத்திரியகேதைத்திரிய உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது
தேஷாம் ஆத்மாஇந்த ஐந்து கோசங்களுக்குள்ளும் இருக்கும்
ஜீவாஹ பரஹஜீவாத்மாவே பரமாத்மா என்று விளக்கப்பட்டுள்ளது.
கம் யதா4 ஸம்ப்ரகாஶிதஹஎப்படி ஆகாசத்தை வைத்து விளக்கபட்டதோ அதேமாதிரி விளக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால ஜீவன் தோன்றவில்லை என்று நிலை நாட்டப்பட்டுள்ளது.
 
காரிகை-12
இதில் ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராஹ்மன பகுதியில் கூறப்பட்ட வாக்கியத்தை மேற்கோள் காட்டி ஜீவன் பிறக்கவில்லை என்று நிலை நாட்டுகின்றார்.

படைக்கப்பட்ட அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எவைகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றதோ அவைகளனைத்தும் மித்யா என்று கூறப்பட்டிருக்கின்றதுஇதன் அடிப்படையில் படைக்கப்பட்ட அனைத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
·   இந்த ஜகத்தானது ஜீவர்களுக்கு போக்யமாக இருக்கின்றது என்று கூறுகின்றதுஇப்படிபட்ட உலகம் தோன்றுவதற்கு காரணம் ஜீவர்கள்தான்ஆகவே உலகம் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது
·   இந்த உலகத்திற்கு எல்லா ஜீவராசிகளும் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது என்று கூறி உலகத்தை காரணமாக காட்டுகின்றது
·   ஸ்ருஷ்டி மூன்றாக பிரிக்கப்பட்டது. 1. அதிபூதம்ஸ்தூல சரீரங்கள், 2. அதிதெய்வம்தேவதைகள், 3. அத்யாத்மம்சரீரத்திலுள்ள இந்திரியங்கள் (-ம் 1. சூரியன், 2. சூரிய தேவதை, 3. கண்)
·   ஜீவனும் ஜகத்தும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவனும் தேவதைகளும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவர்களும் தமக்குள் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கின்றார்கள்
·   இவ்வாறு அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா.
 
த்வையோ த்வையோ மதுக்ஞானேபிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராமனத்தில் இரண்டிரண்டாக ஸ்ருஷ்டியை எடுத்துக்கொண்டு அவைகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று கூறியுள்ளது.
பரம் ப்ரஹ்ம ப்ரகாஶிதம்பரமாத்மாவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமஷ்டி, வியஷ்டி இரண்டுமே ஒரே பிரம்மமாக இருக்கின்றதுஎனவே ஜீவன் தோன்றவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
ப்ருதிவ்யாம் உதரேவெளியே தெரிகின்ற மகாகாசத்திலும், வயிற்றுக்குள் இருக்கின்ற ஆகாசமும்
யதா ஆகாஶஹ ப்ரகாஶிதஹ  - எப்படி ஆகாசம் ஒன்று என்று விளக்கப்பட்டதோ அவ்வாறே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
காரிகை-13
ஆறுவிதமான குறிப்புக்களைக் கொண்டு உபநிஷத்தின் மையக்கருத்தை நிச்சயிக்கலாம். அவைகள்
1.   ஆரம்பத்திலும், முடிவிலும் சொல்லப்படும் கருத்து
2.   திரும்ப திரும்ப கூறும் விஷயம்
3.   பலனை தருவதாக கூறப்படும் விஷயம்
4.   அனுபவத்திற்கு விரோதமாக இருக்கும் கருத்து
5.   அந்த கருத்தை புகழ்ந்திருக்க வேண்டும்
6.   அந்த கருத்து மட்டும் குறிப்பாக, விசேஷமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்
 
ஜீவாத்மனோஜீவனுக்கும், பிரம்மத்திற்கும்
அனன்யத்வம்ஒன்றாக இருக்கும் தன்மை
அபேதேனமகாவாக்கியங்களால் ( வேறாக இல்லாத தன்மை )
ப்ரஶஸ்யதேபுகழப்பட்டிருக்கின்றது
யச்ச நானாத்வம் நிந்தயதேஎந்த காரணத்தினால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நிந்தனை செய்யப்பட்டிருக்கின்றதோ
த த் ஏவம் ஹி ஸமஞ்ஜஸம்அந்த காரணத்தினால் இந்த உபதேசமானது, அத்வைதமானது சரியானது.
 
காரிகை-14
உபநிஷத்தில் அத்வைதம்தான் மையக்கருத்து என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக இந்த காரிகை அமைந்திருக்கின்றது.
 
முதலில் கேட்ட வாக்கியத்தில் முக்கியமானது அதற்கடுத்த வாக்கியத்தைப் பொறுத்து அமைகின்றது. உதாரணமாக சிங்கம் போல் இருக்கின்றான்.. அவன் மிகவும் தைரியசாலிஇந்த வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தின் பொருள்படி முதல் வாக்கியத்தில் கூறப்பட்ட சிங்கம் என்ற சொல் இரண்டாவது வாக்கியத்தில் கூறப்பட்டவனை குறிக்கின்றது.
 
ஜீவாத்மனோ ப்ருதக்த்வம்ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமிடையே உள்ள வேற்றுமைகள்
ப்ராக்4 உத்பத்தே ப்ரகீர்திதம்அறிவை கொடுக்கின்ற ஞானகாண்டத்திற்கு முன்னே காட்டப்பட்டது, உபதேசிக்கப்பட்டது.
தத் கௌனம்அந்த வேற்றுமையானது முக்கியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
பவிஷ்யத் வ்ருத்த்யாவரப்போகின்ற ஒன்றின் அடிப்படையில்
முக்யத்வம் ந ஹி யுஜ்யதே - அந்த வேற்றுமைகள் உள்ள வாக்கியத்திற்கு முக்கியத்துவம் கிடையாது
 
காரிகை-15 ***
பூ.பக்ஷி ஸ்ருஷ்டி இருக்கின்ற காலத்தில் த்வைதம் இருக்கட்டும், பிரளய காலத்தில் அத்வைதம்தான் இருக்கின்றதுஸ்ருஷ்டி முக்கியமில்லையென்றால் எதற்கு உபநிஷத் அதைப்பற்றி பேசுகின்றது.
பதில்    எல்லா உபநிஷத்துகளிலும் ஸ்ருஷ்டியை ஒரே மாதிரியாக சொல்லவில்லை. ஏனென்றால் அது முக்கியமானதாக கருதவில்லை.
 
ம்ருத்லோக விஸ்புலிங்காத்யை- களிமண், உலோகம், தீப்பொறிகள் இவைகளை உதாரணமாக கொண்டு
யா ஸ்ருஷ்டி அன்யதா ச உதி3தாஎந்த ஸ்ருஷ்டியானது விதவிதமாக, வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டதோ, உபதேசிக்கப்பட்டதோ
யஹ உபாய அவதாராயஇவைகள் உபாயத்திற்காக ஐக்கிய புத்தியை நிச்சயம் செய்வதற்காக, அத்வைதத்தை உறுதிபடுத்துவதற்கான வழி இவைகள்
பேதஹ கதஞ்சன நாஸ்திவேற்றுமைகள் எந்தவிதத்திலும் இல்லை.
 
பூ.பக்ஷி இந்த ஸ்ருஷ்டி எப்படி அத்வைத நிச்சயத்திற்கு மார்க்கமாக எடுத்துக் கொள்ள முடியும்?
பதில்    ஸ்ருஷ்டியை விளக்கினால்தான் அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியும்விதவிதமான ஸ்ருஷ்டிகள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் தோன்றியுள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்பிறகு தோன்றியவைகள் எல்லாமே அந்த ஒன்றுதான் என்று கூறினால் அந்த ஒன்றுதான் ஸத்யம் என்றும், ஸ்ருஷ்டி மித்யா என்று நன்றாக புரிந்து கொள்ள முடியும்ஸ்ருஷ்டியானது அதன் மித்யாத்வத்தை புரிய வைப்பதற்காகவும், காரண-காரிய ஐக்கிய ஞானத்தை புரிய வைப்பதற்காகவும் உபதேசிக்கப்படுகின்றது.
 
காரிகை-16
பூ.பக்ஷி வேதம் உபாஸனையை உபதேசிப்பதால் த்வைதத்தை தானே உபதேசிக்கின்றது?
பதில்    மோட்சத்தை அடைய விரும்பும் ஸாதகர்களை மூன்று விதமாக பிரிக்கப்படுகின்றதுஅவைகள் 1. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், 2. இடைநிலையில் உள்ளவர்கள், 3. உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் இவர்களின் அடிப்படையில் உபநிஷத் விதவிதமாக உபதேசிக்கின்றது.
 
ஆஸ்ரமாஹ த்ரிவிதாஹாஸாதகர்கள் (மோட்சத்தை அடைய முயற்சிப்பவர்கள்0 மூன்று விதமாக இருக்கின்றார்கள்.
ஹீன மத்யம் உத்க்ருஷ்ட த்ருஷ்டயஹஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை
ஹீன த்ருஷ்டி        – சகுண பிரம்மத்தை உபாஸிப்பவர்கள் (ஜகத் மித்யா என்று உணராதவர்கள்)
மத்யம் த்ருஷ்டி       – காரண பிரம்மனைஈஸ்வரனை உபாஸிப்பவர்கள்
உத்க்ருஷ்ட த்ருஷ்டி   – நிர்குண பிரம்மத்தை நிதித்யாஸனம் செய்பவர்கள்
 
·   ஆரம்ப நிலை சாதகர்களுக்கு உபாஸனைகளை விதவிதமாக கூறியிருப்பது,, அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காகத்தான். இந்த த்வைத உபாஸனைகளை தெரிந்தே உபதேசிக்கின்றது
·   இடைநிலை சாதகன்காரண பிரம்மனை (ஈஸ்வரனை) உபாஸிப்பவர்கள்இவர்களுக்கு காரியங்கள் மித்யா என்றும் இவைகளுக்கு காரணம் ஈஸ்வரன் என்று உபாஸிப்பவர்கள்
·   உயர்நிலை சாதகன்ஜகத் மித்யா என்று தெளிவாக உணர்ந்தவன்அடைந்த பிரம்ம ஞானத்தையே நிலைத்து நிற்பதற்கு நிதித்யாஸனம் என்ற உபாஸனை செய்பவன்.
 
தத3க்தம் அனுகம்பயா இயம் உபாஸனா உபதிஷ்டா - இந்த அதிகாரிகளுக்கு கருணையினால் இந்த உபாஸனை கர்மங்களையும் உபதேசிக்கப்பட்டது
 
காரிகை-17
சம்சாரத்தை நீக்காத எந்த உபதேசமும் சரியானதல்ல. த்வைதிகளிடம் சம்சாரம் இருப்பதால் அவர்கள் சாஸ்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
 
ஸ்வஸித்தா4ந்த வ்யவஸ்தாஸுத்வைதிகளின் முடிவான கருத்தின் அடிப்படையில் அவர்கள் கொண்டுள்ள சாஸ்திர அறிவு சாஸ்திரத்தை புரிந்து கொண்டுள்ள முறையான விஷயத்தில்
த்வைதினஹ த்ருடம் நிஸ்சிதாஇருமைதான் ஸத்யம் என்ற கொள்கையுடையவர்கள், அதில் திடமான முடிவையுடையவர்களாக இருக்கின்றார்கள். (நிஸ்சிதாஅபிநிவேஷம் – [ முரட்டு பிடிவாதத்துடன் இருப்பவர்கள் ]
பரஸ்பரம் விருத்4யந்தேஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கின்றார்கள்
நைஹி அயம் ந விருத்4யதேத்வைதிகளுடன் அத்வைதிகள் பகைமை கொள்வதில்லை.
 
காரிகை-18
அத்வைதிகள் ஏன் த்வைதிகளிடன் பகைமை கொள்வதில்லை, வெறுப்பதில்லை என்பதை இந்த காரிகையில் விளக்குகின்றார்.
·   த்வைதத்தை ஒரு படியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம், சாத்தியமாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அத்வைதத்திற்கு செல்லும் படியில் நிற்கின்ற காரணத்தினால் அவர்களை வெறுப்பதில்லை.
·   அத்வைதத்தில் எல்லாமே மித்யா என்ற அறிவு திடமாக இருப்பதால் அவனுக்கு யாருமே விரோதிகள் இல்லைஅத்வைதமும் மித்யா என்று நினைக்கின்றார்கள். நான் அத்வைதி என்றும் நினைப்பதில்லை.
·   அத்வைதியினிடத்தில் ராக-துவேஷம் என்பது கிடையாது அதனாலும் த்வைதிகள் மீது வெறுப்பு கொள்வதில்லை.
·   த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியமாக இருக்கின்றதுஇது கௌடபாதரின் கருத்து.
 
அத்வைதம் பரமார்த்தஹஅத்வைதம்தான் மூலகாரணம், அதிஷ்டானம்
த்வைத த த்பே4த உச்யதேத்வைதமானது அத்வைதத்தினுடைய காரியம்தான், மாற்றம்தான் என்று சொல்லப்படுகின்றது
தேஷாம் உப4யதாம் த்வைதம்த்வைதிகளுக்கு இரண்டு விதத்திலும் த்வைதம்தான் ஸத்யமாக இருக்கின்றதுஇரண்டு விதம் என்பது படியாகவும், முடிவாகவும் இருக்கின்றது.
தேன அயம் ந விருத்4யதேஇந்த காரணத்தினால் அத்வைதிகள் அவர்களிடம் விரோதம் கொள்வதில்லை.
 
காரிகை-19
ஏதத் அஜம் மாயயா பித்3யதேபிறப்பற்ற இந்த அத்வைத தத்துவம், மாயையினால் இரண்டாக தெரிகின்றது.
ந அன்யதா கதஞ்சனஇதை தவிர்த்து வேறெந்த விதத்திலும் வேறுபடுவதில்லை.
தத்வதஹ பித்4யமானே ஹிஉண்மையாகவே வேறுபட்டிருந்தால்
அம்ருதம் மர்த்யதாம் வ்ரஜேத்மரணமற்ற பிரம்மன் மரணமடையும் நிலையை அடைந்து விடும்.
 
காரிகை-20
அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்
அஜாத அம்ருத பா4பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்
மர்த்யதாம் கதம் ஏஷ்யத்எப்படி மரணத்தை அடையும்?
 
பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.
 
காரிகை-21
அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.
 
ந பவதி அம்ருதம் மர்தியம்  அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது
மர்த்யம் அம்ருதம் த்தா4     அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.
ப்ரக்ருதே அன்யதா பா4வஹஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது
கதஞ்சித் ந ப4விஷ்யதி       எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.
 
காரிகை-22
1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹமோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
2. ப்ரதிக்ஞா ஹானிமுதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்
யஸ்யஇந்த கருத்துப்படி
ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹஇயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.
கச்சதி மர்த்யதாம்மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.
தஸ்யஇப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )
க்ருதகேன அம்ருதஹமரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்
கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதிஎப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.
இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.
 
காரிகை-23
உபநிஷத்தில் விதவிதமான ஸ்ருஷ்டியை பற்றி பேசப்பட்டிருக்கின்றதுஆனால் அந்த இடத்திலேயே ஏன் அவைகள் மித்யா என்று சொல்லவில்லை?
அந்த இடத்திலேயே ஸத்யம் என்றும் சொல்லவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்ஆகவே ஸ்ருஷ்டியை பற்றி பேசும் வாக்கியங்களை மித்யா என்றும் சொல்லவில்லை, ஸத்யம் என்றும் சொல்லவில்லைஎனவே அந்த வாக்கியங்களை நன்கு விசாரம் செய்துதான் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.
 
ஸ்ருஜ்யமானே ஸ்ருதி ஸமாஹாபடைப்பைப் பற்றி பேசும் வாக்கியங்களில் உபநிஷத் சமமாகவே இருக்கின்றது.
பூததஹ வா ஆபூததஹஸத்யமாக இருக்கின்றதா, பொய்யாக இருக்கின்றதா என்ற விஷயத்தில்
யத்எப்படிபட்ட படைப்பு
யுக்தியுக்தம் நிஸ்சிதம்யுக்திக்கு பொருந்தியதாக எதை நிச்சயம் செய்திருக்கின்றதோ
தத் பவதி ந இதரதஅதுதான் சரியானதாக இருக்கின்றது, மற்றவைகள் அல்ல.
 
காரிகை-24
நேஹ நாநாஇதி ஆம்நாயாத் – “நேஹ நாநாஎன்று ஒரு உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நேஹ நாநாஇந்த ஆத்ம விஷயத்தில் எந்த வேற்றுமையும் இல்லைஜகத் இல்லை என்று புரிய வைக்கின்றது.
இந்திர மாயாபிஹிஇந்த வாக்கியாம் பிருஹதாரண்ய உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் இந்த ஜகத்தானது இந்திர ஜாலத்தில் தோன்றுகின்ற பொருட்கள் போல மாயையினால் பிரம்மமானது பொய்யாக பலவிதமான ரூபங்களாக காட்சியளிக்கின்றது
அஜாயமானஹ பஹூதாஎன்று புருஷ ஸுக்தம் உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றதுபிரம்மன் பிறக்காமல் இருந்து கொண்டு விதவிதமாக தோன்றி கொண்டிருக்கின்றது.
மாயயா ஜாயதே து ஸஹஇந்த பிரபஞ்சமானது பொய்யாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
 
உபநிஷத்தில் ஆரம்பத்தில் ஸ்ருஷ்டியை சொல்வதை அத்யாரோபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவைகளை அபவாதம் செய்து நீக்கிவிடும்.
 
காரிகை-25
இதில் உபநிஷத் காரண-காரிய நிஷேதம் செய்வதை மேற்கோள்காட்டி விளக்கப்படுகின்றதுகாரண-காரிய நிஷேதம் ஸ்ருஷ்டியை நீக்குகின்றது.
 
ஈஸா உ.நி- 12-14 மந்திரங்களை எடுத்துக் கொள்ளப்படுகின்றதுஅதில் ஸம்பூதி உபாஸனம் (ஹிரண்யகர்ப்ப உபாஸனம்), அஸம்பூதி உபாஸனை (வெளித்தோற்றத்திற்கு வராத தத்துவத்தை உபாஸித்தல்) சொல்லப்படுகின்றது.
 
ஸம்பூதேஹிரண்யகர்ப்பனை
அபவாதாத்நீக்கிய காரணத்தால், உண்மையான பொருளல்ல என்று
ஸம்பவபடைக்கப்பட்டது, காரியமானது
ப்ரதிஷித்4யதேநீக்கப்படுகின்றது
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது தோன்றியவைகளெல்லாம் உபநிஷத்தால் நீக்கப்பட்டிருக்கின்றது.
 
ப்ருஹதாரண்யஹ உ.நி 3.9.28
கோன்வேனம் ஜனயேத்
கஹ ஏனம் ஜனயேத்யார்தான் இந்த ஆத்மாவை தோற்றுவிப்பார்கள்.
இதி காரணம் ப்ரதிஷித்யதேஇவ்வாறு காரணமும் நீக்கப்படுகின்றது.
 
காரிகை-26
ப்ரு.உநி - 3.9.26 மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது.
ஸ ஏஷ நேதி நேதி இதுவல்ல
பிரபஞ்சம்மூர்த்த-அமூர்த்தம் என்று அறிமுகப்படுத்தி பிறகு அவைகள் இல்லை என்று ஒவ்வொன்றாக நீக்குகின்றது. அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா, சரீரத்திற்குள் இருக்கின்ற ஆத்மா இதுவல்ல இதுவல்ல என்று நிஷேதம் செய்கின்றது.
வ்யாக்யாதம் ஸர்வம் நிஹ்ன்னுதேமுன்னே விவரிக்கபட்ட அனைத்தும் நீக்குகின்றது (நேதி, நேதி என்று சொல்வதன் மூலம் )
யத: - என்ற காரணத்தினால் இவ்வாறு நீக்குகின்றதோ அதனால் அனைத்தும் மித்யா, உண்மையல்ல.
ஹேதுனா அக்ராஹ்ய பாவேன எந்த காரணத்தால் விட்டுவிடுதல் என்ற நோக்கத்துடன்
எவையெல்லாம் அறிமுகப்படுத்தினோமோ அவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நிஷேதம் செய்கின்றது.
அஜம் ப்ராகஶதே – பிறப்பற்ற ஆத்மாதான் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
 
காரிகை-27
ஸத ஹிஸத் வஸ்துவிடமிருந்து; ஸத் ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மனிடமிருந்து
மாயயா ஜன்ம யுஜ்யதேபொய்யாக தோன்றுதல் என்பது சரியானது
பிரம்மத்திடமிருந்து பொய்யாக ஸ்ருஷ்டி வந்தது என்பது சரியானதாக இருக்கும்இது நிமித்த காரணம்
ந து தத்வதஹஉண்மையாகவே பிறப்பு என்பது தவறானது.
 
இன்னொரு பொருள்: பிரம்மத்தினுடைய தோற்றம் பொய்யானது என்பது சரியாகும், உண்மையாக தோன்றியது என்பது தவறானது.
 
## பொய்யான இந்த ஸ்ருஷ்டியிலிருந்து ஸத் ஸ்வரூபமான பிரம்மம் காட்டிக் கொடுக்கப்படுகின்றது ##
 
யஸ்ய த்த்வதஹ ஜாயதே, தஸ்ய ஜாதம் ஹி ஜாயதே - எவருடைய கருத்துப்படி உண்மையாக தோன்றியுள்ளதோ அந்த கருத்துப்படி தோன்றியதே தோன்றுகின்றது.
 
1. பிறவாத பிரம்மத்திடமிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக்கொண்டால் இதில் வியாகாத தோஷம் இருக்கின்றதுகண் தெரிகின்ற ஒருவன் நான் குருடன் என்று சொல்வது போல பிறவாத என்பது இல்லாத ஒன்றிலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்?
2. பிறந்த ஒன்றிலிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக் கொண்டால் இதிலும் ஒரு குறை இருக்கின்றதுஅனவஸ்தா தோஷம் முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிடமிருந்து முட்டை வந்ததா என்பது போல எதிலிருந்து பிறந்தது என்று கேட்டால் அது வேறொன்றிலிருந்து பிறந்தது என்று இப்படியே போய்க்கொண்டிருக்கும் எனவே இது சரியான கருத்தல்லஇதிலிருந்து தோன்றி கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யாவாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக புரிந்து கொள்ள முடியும்.
 
காரிகை-28
பொய் கூட உண்மையிலிருந்துதான் வரமுடியும்பொய்யிலிருந்து பொய் வர முடியாதுபொய்யாக காட்சியளிக்கும் இந்த ஜகத் உண்மையான பிரம்மத்தை காட்டிக் கொடுத்து கொண்டிருக்கின்றது.
 
அஸதஹ மாயயா ஜன்ம தத்வதஹ ஜன்ம ந ஏவ யுஜ்யதேஇல்லாமையிலிருந்து பொய்யான தோற்றமும், உண்மையான தோற்றமும் உருவாகும் என்பது இருக்க முடியாது
வந்த்4யா புத்ர ந த்த்வேன, மாய யா வா அபி ந ஜாயதேமலடியின் மகன் உண்மையாகவோ, பொய்யாகவோ பிறப்பதில்லை.
 
காரிகை-29
கனவில் தோன்றும் பிரபஞ்சம் எப்படியோ அதேபோல விழிப்புநிலை பிரபஞ்சம் பொய்யானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
யதா ஸ்வப்னே த்வயாபாஸம்எவ்வாறு கனவில் தோன்றும் இருமை தோற்றங்கள்
ஸ்பந்ததே மாய யா மனஹமனமானது பொய்யாக இவைகளை தோற்றுவிக்கின்றது
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் ஸ்பந்த்தே மாய்யா மனஹஅவ்வாறு விழிப்பு நிலையில், இருமை தோற்றங்களை மனமானது பொய்யாக காட்டிக் கொண்டிருக்கின்றது. இங்கே சமஷ்டி மனதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
காரிகை-30
அத்வயம் ச மனஹ த்வயாபாஸம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹமனம் ஒன்றுதான் ஆனால் கனவில் பலவிதமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது, இதில் சந்தேகமில்லை.
ததாஅவ்வாறு
ஜாக்ரத் அத்வயம் ச த்வயாபாஸம் ச ஸம்ஶயஹவிழிப்பு நிலையில் ஒன்றான மனமானது பலவிதமாக  காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது, இதிலும் சந்தேகமில்லை.
 
இத்துடன் அஜாதவாதம் முடிவடைகிறதுஇனி வரப்போகின்ற காரிகைகளில் நிதித்யாசனம் என்ற சாதனத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது
 
நிதித்யாசன விசாரம்:-
நம் மனதில் அனுபவிக்கும் நிறைவின்மையே சம்சாரம் எனப்படும். இந்த நிறைவின்மையின் வெளிப்பாடு விதவிதமான தீய உணர்ச்சிகளான காம, க்ரோதம் போன்றவைகள்தான். பகவான் கிருஷ்ணர் தன்னிடத்திலே திருப்தியுடையவன்தான் ஸ்திதப்ரக்ஞன் என்று கீதையில் கூறி இருக்கின்றார்.
 
நம்முடைய இந்த மனநிறைவின்மைக்கு காரணமாக இருப்பது எதுயோகிகள் இந்த உலகமே காரணமாக இருக்கின்றது என்று கூறுகின்றனர்இருமையை பார்த்து கொண்டிருக்கும் போதுதான் மனநிறைவின்மையை அனுபவிக்கின்றோம். உலகத்தை மறந்தால் துயரங்கள் சென்று விடுகின்றது. கனவு பிரபஞ்சமும், ஜாக்ரத் பிரபஞ்சமும் தான் துயரத்திற்கு காரணங்கள்இந்த உலகத்தை நம்மால் நீக்க முடியாது ஆனால் மனதை உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் மன அமைதியடையலாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்தார்கள். சித்த விருத்தி நிரோதஹமனோநாசம் மோட்சக் காரணம் என்று முடிவுக்கு வந்தார்கள்.
 
வேதாந்திகள் இந்த உலகம் துக்கம் ஸ்வரூபமுடையதல்ல ஏனென்றால் ஜீவன் முக்தனும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றான் அவனுக்கு சுக-துக்கங்களை கொடுப்பதில்லைஎனவே சுக-துக்கங்கள் ஜகத்தின் ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ளலாம்யோகிகள் மனமே துக்க ஸ்வரூபம் என்று கூறுகிறார்கள். அதே மனதில்தான் சுகத்தையும் அனுபவிக்கின்றோம்எனவே மனமே சம்சார ஸ்வரூபமல்லஞானிக்கும் இந்த மனம் இருக்கின்றது அது நிறைவுடன் இருக்கின்றதுஇதிலிருந்து மனம் துக்க ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
வேதாந்தியின் சித்தாந்தம்:-
ஜகத்தும், மனமும் நமக்கு துயரத்தை கொடுத்து கொண்டிருக்கின்றதுபிறக்கும் போது இந்த மனம் ஆத்மதத்துவத்தை அறியாமல் இருக்கின்றதுஇந்த ஜகத்தைப்பற்றிய அறியாமையுடன் இருக்கின்றதுநம்மைப்பற்றிய அறியாமையோடு பிறந்திருக்கின்றோம்பிரம்ம ஞானம் இல்லாத காரணத்தால் சரீரத்தையும், சரீரங்கள் அனைத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இப்படிபட்ட மனதுடன் ஜகத்தோடு சம்பந்தம் வைக்கும்போது சம்சாரத்தை அனுபவிக்க நேரிடுகின்றது.
 
ஈஸ்வர ஸ்ருஷ்டி இந்த ஜகத். அதே போன்று ஜீவர்களும் ஸ்ருஷ்டியை செய்திருக்கின்றார்கள்ஈஸ்வர ஸ்ருஷ்டியான மனிதனை ஜீவர்கள் தந்தையாகவும், மகனாகவும், சகோதரனாகவும் ஸ்ருஷ்டித்திருக்கிறார்கள். ஈஸ்வர ஸ்ருஷ்டி நமக்கு துயரத்தை கொடுக்காதுஆனால் ஜீவ ஸ்ருஷ்டிகள்தான் துயரத்தை கொடுக்கின்றது. இந்த ஜீவ ஸ்ருஷ்டியை உருவாக்கியது நம்முடைய மனம்தான்இந்த உலகத்தின் மீது அறியாமையோடு அத்யாஸம் செய்து துயரத்திற்கு காரணமாக இருப்பது மனம். எனவே மனதிலிருக்கும் அறியாமையையும், அத்யாஸத்தையும் நீக்கினாலே போதும். இத்துடன் மனதிலிருக்கும் ஸம்ஸ்காரத்தையும் நாசம் செய்ய வேண்டும். அப்போதுதான் மனம் என்றும் நிறைவுடன் இருக்கும்.
 
சம்சாரம் என்பது மனநிறைவின்மையும், பயமும்தான். த்வைத ரூபமாக இருக்கும் ஜகத்தான் இதற்கு காரணம். இருமையை நீக்கினால் சம்சாரம் தானாக சென்று விடும்இருமையாக தோன்றிக் கொண்டிருக்கும் ஜகத்தை அனுபவிப்பது மனம்தான்மனதை நாசம் செய்தால்தான் த்வைத ஜகத்தை நீக்க முடியும், சம்சாரமும் நீக்கப்படும்  இது சரியான கருத்தல்லமனதின் ஸ்வரூபம் சம்சாரம் அல்லஆனால் காலம் காலமாக சம்சாரத்தை மனம் அனுபவித்துக் கொண்டு வருவதால் அவை அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றதுஅறியாமையுடனும், அத்யாஸத்துடனும் இருக்கின்ற மனம் பார்க்கின்ற உலகத்திற்கு ராக-துவேஷம், பயம் போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கின்றதுஆனால் அறியாமையும் அத்யாஸமும் நீங்கப்பெற்ற மனம் ஜகத்தினால் எந்த சம்சாரத்தையும் அனுபவிப்பதில்லை. இங்கே மனம் அழியவில்லை ஆனால் அத்யாஸமும், அறியாமையும் நீங்கி விடுகின்றது.
 
காரிகை-31
மனோத்ருஷ்யம்மனதினால் பார்க்கப்படுவது
இதம் த்வைதம்இந்த இருமைகளான ஜகத்தும் அனைத்து படைப்புக்களும்
யத் கிஞ்சித் ஸசராசரம்எவைகளெல்லாம், அசைந்து கொண்டும், அசையாமலும் இருக்கின்றதோஅவைகளைனைத்தும்
மனஸஹ ஹி அமனீபா4வேமனதினுடைய நாசம் ஏற்படும் போது
த்வைதம் ந ஏவ உபலப்யதேஇருமைகள் அனுபவிக்கப்படுதில்லை, அறியப்படுவதில்லை, சம்சாரம் நீங்கப்பெறும்
** அமனீபா4மனம் இல்லாத தன்மையை அடையும் போது
 
காரிகை-32
இதில் அமனீபா4மனமற்ற நிலையை விளக்கப்படுகின்றது. மூன்று விதத்தில் மனமற்ற நிலை ஏற்படுகின்றது. அவைகள்,
1. ஆழ்ந்த உறக்கத்தில்,
2. நிர்விகல்ப சமாதியில்,
3. பா4த ரூப அபா4வஹஇந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதினால் அடையப்படுவதுவைராக்கியத்தினாலும், விவேகத்தினாலும் ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்,
 
த்வைத ரூபமான இந்த உலகத்தினுடைய ஸ்வரூபம் பார்க்கப்படுதல் ( அறிவுடனும், சம்பந்தத்துடனும்), விஷயத்வம்பச்சிளங்குழந்தைக்கு இந்த உலகம் வெறும் பார்க்கப்படுவதாக மட்டும் இருக்கின்றதுநமக்கு வேண்டாதவர் கண்ணில்பட்டால் அவர் விஷயமாக இருக்கின்றார். மூன்றாவதாக ஸத்யத்வமாகவும் இருக்கின்றதுஅதாவது இந்த உலகம் நிலையானது, எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற தன்மையுடையது. இப்படிபட்ட உலகத்தை அறியாமையில் இருக்கின்ற மனம் அனுபவிக்கின்றதுஞானத்துடன் கூடிய மனதிற்கு வெறும் த்ருஷ்யமாக மட்டும்தான் இருக்கும்எனவே ஜகத் நாசம் என்பது அதிலுள்ள விஷயத்வமும், சத்யத்வமும் நாசம் அடைவதைதான் குறிக்கின்றதுஇதனால் அதனோடு சம்பந்தபட்ட மனமும் இல்லாத நிலையை அடைகின்றதுஉலகத்திலுள்ள எதுவுமே எனக்கு சுகத்தையோ, துக்கத்தையோ கொடுக்காது என்ற உறுதியான அறிவைக் கொடுக்கின்றது ஆத்ம ஞானம்இது வெறும் தோற்றம்தான், சத்யமல்ல என்று நினைத்துக் கொண்டிருக்க வைக்கும்.
 
த்ருஷ்யத்வம் என்பது ஐம்புலன்களுக்கு ஜகத் அனுபவமாக இருப்பதுகானல் நீரின் தன்மை தெரியாத போது மூன்று விதமாக தெரிந்தவுடன் வெறும் த்ருஷ்யத்வம்தான் இருக்கும். அதேபோல இந்த ஜகத்தை வெறும் தோற்றம் என்று த்ருஷ்யத்துடன் பார்க்கப்படுவதே மனமற்ற நிலையாகும். இதுவே அமனீபாவம் என்றும், த்வைத அபாவத் என்று அழைக்கப்படுகின்றது.
 
ஆத்ம ஸத்யம்ஆத்மாவே உண்மையானது, நிலையானது, மற்றவைகள் எல்லாம் மித்யா
அனுபோதேனஎன்ற அறிவினால் (சாஸ்திரம்-குரு மூலமாக அடைந்த அறிவினால்)
யதாஎப்பொழுது மனமானது
ச ஸங்கல்பயதேசங்கல்பத்தை மேற்கொள்ளாமல் இருக்கின்றதோ
ததா3 அமனஸ்தாம்அப்போது மனமற்ற நிலையை அடைகின்றது, அமைதியுடன் இருக்கின்றது.
க்ராஹ்ய அபா4வேவிஷயமாக எதையும் எடுத்துக்கொள்ளாத போது, தன்னுடன்  சம்பந்தப்படுத்தி கொள்ளாத போது,
தத்3 அக்ரஹம்மனமும் கிரகிக்காத நிலையை அடைகின்றது. புலன்கள் விஷயங்களுடன் சம்பந்தப்பட்டாலும், மனம் சம்பந்தப்படாத நிலையில் இருக்கும்.
 
காரிகை-33
இதில் ஆத்மஞான நிலையையும், மூன்றுவிதமான த்வைதம் இல்லாத நிலையும் விளக்கப்படுகின்றது.
அகல்பகம்பிளவுபடாத ( அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் பொருள்0
அஜம் ஞானம்பிறப்பற்ற ஆத்மஞானம்
ஞேய அபின்னம்அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடாதது,
பிரஹ்மஞேயம் அஜம், நித்யம்பரம் பொருளை அறியக்கூடிய பொருளாக கொண்ட ஆத்மஞானம்  பிறப்பற்றதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது,
அஜேன அஜம்பிறவாத பிரம்மத்தை, பிறவாத ஆத்மஞானத்தால்
விபுத்யதேஅடைகின்றான், அறிகின்றான்
ப்ரசக்ஷதே – என்று கூறுகிறார்கள்.  பிரம்மத்தை அடைந்தவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்
 
துரிய ஆத்மாவில் இந்த மூன்றும் (விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன்) ஒன்றாக இருக்கின்றதுஇதைத்தவிர மற்ற அறிவில் இந்த மூன்றும் தனித்தனியாக இருக்கும்.
 
காரிகை-34
நிக்ருஹீதஸ்ய மனஸஹஒழுங்குபடுத்தப்பட்ட மனதையுடைய
நிர்விகல்பஸ்ய தீ4மதஹஆத்ம ஞானத்தை அடைந்த மனதையுடைய
ஸஹ ப்ரசாரஹ விக்ஞேயதன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸுஷுப்தெ அன்யஹஆழ்ந்த உறக்கத்தில் வேறுவிதமான தன்மை உடையது மனம்
ந தத் ஸமஹஞானநிஷ்டையுடையவனின் மனம், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனதிற்கு இணையானதல்ல.
 
ப்ரசாரஹ என்ற சொல்லின் விளக்கம்:
ஆத்ம ஞானம் அடைந்த மனம் எப்படியிருக்கும் என்பதை விசாரம் செய்யப்படுகின்றதுகாரில் இருக்கும்  பின்னால் வரும் வண்டிகளை பார்க்க உதவும் கண்ணாடியை 1. பின்பக்கம் வரும் வண்டிகளை பார்க்கவும், 2. ஒரு பொருளாக பார்ப்பதற்கு, 3. தன்னுருவையே பார்ப்பதற்கு என்று  மூன்று வகையாக பயன்படுத்துகின்றோம்இதேபோல மனமும் மூன்று நிலைகளாக செயல்படுகின்றது. அவைகள்
1. பிற விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும்
2. தியானத்தின்போது ஒரு பொருளாகவும்
3. அக்ஞானத்தின் போது மனமே நாமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்.
 
இந்த மூன்று நிலைகளிலும் மனமானது இன்ப-துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஆத்ம ஞானியின் மனம் செயலற்றதாஇருக்கும். ஏனென்றால் அவன் தன்னை பிரம்மனாகவே உணர்ந்திருக்கின்றான், அவனுக்கு தன்னுடைய மனதுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவனாக இருக்கின்றான்.
 
காரிகை-35
லீயதே ஹி ஸுஷுப்தே தத்ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது ஒடுங்கியிருக்கின்றது, உறங்கிக் கொண்டிருக்கின்றது
நிக்ருஹீதம் ந லீயதேஞானத்தினால் ஒடுக்கப்பட்ட மனமானது உறங்கவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் மனம் அறியாமை என்ற இருளினால் மூடப்பட்டிருக்கின்றது, பிரம்மத்தினிடம் இருந்து கொண்டிருக்கும்
ததேவ நிர்பயம் ப்ரஹ்மஞானியின் இந்த மனமே பயமற்ற பிரம்மன்தான்பிரம்மத்தை அறிந்தவன், உணர்ந்தவன் பிரம்மனாகவே இருக்கின்றான்.
ஸமந்ததஹ ஞான ஆலோகம்ஞான என்கின்ற ஒளி வியாபித்து இருக்கின்றது
 
காரிகை-36
அஜம்பிறப்பற்றது ( நான் பிறப்பற்றவன் ) – ஸ்தூல சரீரம் அற்றவன்
அநித்ரம்உறக்கமற்றது ( நான் உறக்கமற்றவன் ) – அறியாமை நீங்கப் பெற்றது
அஸ்வப்னம்கனவுகளில்லாதது,
அவித்யா காரிய ரஹிதம்விக்க்ஷேபமில்லாதவன்
அநாமகம் அரூபகம்இந்த நாம ரூபமுடைய ஜகத்தும் இல்லை
ஸக்ருத்விபாதம்எப்பொழுதும் ஒளிவீசுகின்ற தத்துவம்
ஸர்வக்ஞம்அனைத்தையும் அறிந்தவன், அனைத்துமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. தனக்கு வேறாக எதுவும் இல்லாதது.
ந உபசார கத2ஞ்சனஞான நிஷ்டை அடைந்தவனுக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.
 
காரிகை-37
இதில் ஞானியினுடைய லக்ஷணம் கூறப்படுகின்றது
ஸர்வ அபிலாபவிகதஹஇந்திரியங்கள் எதுவும் இல்லாதது.  
அபிலாபஹவாக்கு கரணம்;
விகதஹஇல்லாதது.
அக்ஞானிக்கு எல்லா இந்திரியங்களிடம் அபிமானம் வைத்திருப்பதால் அதற்கு வரும் இன்ப-துன்பங்கள் அவனை பாதிக்கின்றதுஞான நிஷ்டை அடைந்த ஜீவன் முக்தன் எதிலும் அபிமானமற்றவனாக இருப்பதால் எதனாலும் பாதிப்பதில்லை.
ஸர்வ சிந்தா ஸமுத்தி2தஹஅந்தக்கரணமும் இல்லாதவனாக இருக்கின்றான்.
ஸுப்ரஶாந்தஹஎப்பொழுதும் முழுமையான அமைதி வடிவுடையவன்
ஸக்ருத் ஜோதிஹிஎப்பொழுதும் ஒளி வீசிக்கொண்டிருப்பவன்அறிவு ஸ்வரூபமாக இருப்பவன்
ஸமாதி4ஹிஜீவனும், ஜீவனுடைய உபாதிகளும் எதில் வேற்றுமையின்றி கலந்திருக்கின்றதோ அதுவே பிரஹ்ம நிலை
அசலஹமாற்றமற்றவன்; மாற்றங்கள் எதுவுமில்லாதவன்
அபயஹபயமற்றவன்
 
காரிகை-38
ஞானிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதுவுமில்லை. அது ஏனென்று இதில் விளக்கப்படுகின்றதுநம்முடைய செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றதுமுதலாவது எதையாவது அடைதல், சேர்த்து கொள்ளுதல், எடுத்துக் கொள்ளூதல், இரண்டாவது விலக்குதல், நீக்குதல்இந்த இரண்டில் ஒன்றில்தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும் அடங்கி இருக்கின்றதுநம்முடைய அபிமானம் இந்திரியங்கள், அந்தக்கரணத்தில் இருக்கும்வரை நம்மை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். ஞானிக்கு இவைகளிடத்தில் உள்ள அபிமானம் நீங்கப்பெற்றவனாக இருக்கின்றான்பிரம்மனாகவே இருக்கின்றான்எனவே செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாத நிலையில் இருப்பான்பிரம்மனிடத்தில் எதையும் சேர்க்கவும் தேவையில்லை, நீக்கவும் தேவையில்லைஎனவே பிரம்மனாகவே இருக்கும் அவன் செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாதவனாக இருக்கின்றான்.
 
க்ரஹ ந த்த்ர ந உத்ஸர்கஹஅந்த பிரம்மனிட்த்தில் எதையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாதுஅதனால் பிரம்மனாக தன்னை உணர்ந்த ஞானிக்கு செயல்கள் எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
சந்தா யத்ர ந வித்யதேமனம் அதிலுள்ள எண்ணங்கள் எதுவும் பிரம்மனிடத்தில் இல்லை
ஆத்ம ஸம்ஸ்தம் த்தா ஞானம்பிரம்ம ஞான நிஷ்டையில் இருக்கும் ஞானியின் அறிவு ஆத்மவிடத்திலே, தன்னிடத்திலே ஒடுங்கியிருக்கும்.
அஜாதி ஸமதாம் கதம்பிறப்பற்ற நிலையை அடைந்து விட்டான்.
 
காரிகை-39
அஸ்பர்ஶயோகஹ வை நாமஆத்ம ஞானத்திற்கு, பிரம்மத்திற்கு அஸ்பர்ஶயோகம் என்று பெயரிடப்படுகின்றது
யோகஹஆத்ம ஞானம், ஜீவனை பிரம்மனாக ஐக்கியப்படுத்தும் ஞானம்
அஸ்பர்ஶ - சம்பந்தமற்து,
அஸங்கஹஎதனோடும் ஒட்டாதது
ஞானியை எதனோடும் சம்பந்தப்படுத்தும் சக்தி எதற்கும் கிடையாது. அவன் எங்கிருந்தாலும் எதனோடும் சம்பந்தப்படாமல் அஸங்கனாக இருப்பான்பாரிவிராஜன் என்கின்ற சந்நியாஸி மூன்று இரவுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்க கூடாது. இது சந்நியாஸியாக இருப்பவனுக்கு இருக்கின்ற முக்கியமான நியமம்இது ஞான நிஷ்டையடைந்த பிறகு இந்த நியமம் அவனுக்கு கிடையாது.
துர்தர்ஶஹ மிகவும் கடினம்
ஸர்வயோகிபிஹிஎல்லா யோகிகளும், சாதகர்களும் இந்த ஞானத்தை அடைந்து நிலை பெறுவது
யோகினோ பிப்யதி அஸ்மாத்இந்த ஆத்ம ஞானத்தின் சம்பந்தமற்ற நிலையை கண்டு யோகிகள் பயப்படுகிறார்கள்
அபயே பயதர்ஶினஹபயமற்ற நிலையை தரும் ஞானத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள். பயமற்ற பிரம்மனிடத்தில் பயத்தை பார்க்கின்றார்கள்.
 
காரிகை-40
ஞானப்பலனை அடைவதற்கு மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.  மேலும் இத அடைவதற்கு வேறு மார்க்கம் இல்லை.
மனோ நிக்ரஹம்மனத்தூய்மை, நுண்ணியமனம், மன ஒருமுகப்பாடு இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் மனதினால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்
மனஸஹ நிக்ரஹ ஆயத்தம்மனதினுடைய கட்டுப்பாட்டை சார்ந்திருக்கின்றது ஆத்ம ஞானமும் அதில் நிலை பெறுவதும்
ஸர்வயோகினாம்எல்லா ஸாதகர்களுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது.
 
ஞானத்தின் பலன்கள்:
அபயம்பயமற்ற நிலை
துக்க க்ஷயம்துயரமற்ற நிலை
ப்ரபோ34ஸ்திதப்ரக்ஞன்அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்கும் நிலை
அபி அக்ஷய ஶாந்தஹ ஏவ சமேலும் என்றும் அழியாத மன அமைதியும் கூட இவைகள் அனைத்தும் மனோநிக்ரஹத்தினால் அடையப்படுகின்ற பலன்கள்.
 
காரிகை-41
மனோ நிக்ரஹத்தை அடைய முக்கிய நிபந்தனை சொல்லப்படுகின்றதுவிடாமுயற்சியினால்  இதை அடைய முடியும்இந்த முயற்சியில் அடையும் பலன் இறுதியில்தான் கிடைக்கும்எனவே மனம் தளராமல் இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து பலன் அடையும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.
 
யத்வத் உத்தே உத்ஸேகஎவ்விதம் கடல் நீரை வற்றிபோக செய்ய முயற்சி செய்கின்றதோ
குஶ அக்ரேன ஏக பிந்துகாசிறிய புல்லினுடைய நுனியில் ஒரு துளி கடல் நீரை கொண்டு வந்து நிலத்தில் விட்டு, கடல் நீரை வற்ற வைக்கும் முயற்சியை
பவேத் அபரிகே2தஹஇடைவிடாத முயற்சி செய்யப்பட்டதோ
த த்வத்அதுபோல இடைவிடாத முயற்சியினால்
மனஸஹ நிக்ரஹ பவேத்மனக்கட்டுப்பாட்டை அடைய முடியும்
 
காரிகை-42
மனதை கட்டுபடுத்தும் முயற்சிக்கு, தியானத்திற்கு தடையாக வருபவைகளை நீக்குவதைத்தான் நாம் விடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்யோக சாஸ்திரத்தில் நான்கு வகையான தடைகள் கூறப்பட்டிருக்கின்றதுஅவைகள்
1. விக்ஷேபம்,
1. லயம்,
2. கஷாயம்,
3. ரஸாஸ்வாதஹ.
இந்த காரிகையில் இரண்டு தடைகளை பற்றி கூறுகின்றது.
1. விக்ஷேபம் - மன சஞ்சலம்நாம் எதை மறக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுதான் திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கும்இரண்டு விதத்தில் இந்த விக்ஷேபம் வரும். அவைகள்
              i.   காமக்ருதஹ - காமத்தினால் வரும் விக்ஷேபம்ஒரு பொருளை அனுபவிப்பதற்கு முன்னாலே அதன் மீது இருக்கும் ஆசை மனதை அலைகழிக்கும்
             ii.   போக க்ருதஹநாம் அனுபவித்ததையே சிந்தித்து கொண்டிருத்தல், வாஸனா ரூபமாக இருந்து கொண்டு மனதை அலைகழிக்கும்.
உபாயேன நிக்ருணீயாத் விக்ஷிப்தம் காம போ4கயோசொல்ல போகின்ற விஷயத்தை சரியான முயற்சியுடன் செய்து காமத்தினாலும், போகத்தினாலும் விக்ஷேபம் அடைந்த மனதை கட்டுபடுத்தி அமைதியடைய செய்ய வேண்டும்.
2. லயம்: சோம்பல், உறக்கம், விருப்பமற்ற நிலை
ஸுப்ரஸன்னம் லயேசோம்பலினாலும், உறக்கத்தினாலும் மனம் அமைதியடைந்து விடும். இதையும் விடாமுயற்சியுடன் சரியான வழியில் முயற்சி செய்து நீக்க வேண்டும்.
யதா காமோ லயஸ்ததா2எவ்விதம் ஆசையானது நமக்கு துயரத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அவ்விதமும் லயம் துயரத்திற்கு காரணமாகின்றது.

 

காரிகை-43
இதில் விக்ஷேபம் என்ற தடையை நீக்குவதற்கான வழி சொல்லப்படுகிறது. வைராக்கியமும்,  ஞானமும் வழிகளாக சொல்லப்படுகின்றது. உலகத்திலுள்ள பொருட்களின் மீதுள்ள பற்று, மற்றவர்களிடமிருந்து, எதையாவது எதிர்ப்பார்த்தல் ஆகியவைகளிலிருந்து வைராக்கியம் அடைய வேண்டும். இதை எப்படி அடைய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
 
துக்கம் ஸர்வம்உலகத்திலுள்ள அனைத்தும் துயரமானது, துயரத்தைக் கொடுக்கக்கூடியது
அனுஸ்ம்ருத்யஇதை திரும்ப திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்று சுகத்தைக் கொடுக்க கூடிய பொருள் வேறொரு காலத்தில் துயரத்தை கொடுப்பதாக இருக்கும் என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்இதிலிருந்து எந்த பொருளுக்கும் நிரந்தரமாக சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்
காம போ4கா4த நிவர்தயேத்ஆசைகளை அனுபவிப்பதிலிருந்து நம்மை விலக்கி கொள்ள வேண்டும்
இதேப்போன்று பொருட்களின் நிலையற்ற தன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும்சுகத்தைக் கொடுக்கின்ற பொருட்களுக்கு அடிமையாகி விடுவோம், நம்முடைய சுதந்திரத்தை பறித்து விடும். எவ்வளவு அனுபவிக்கின்றோமோ அதேயளவு துயரத்தையும் அனுபவிக்க நேரிடும்.
 
காம-போகாத் விசாரம்
காமம்       ஆசைபட்ட விஷயத்திலிருந்தும்
போ4கா3த்    அனுபவிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும்
காம போகாத்ஆசையினால் தூண்டபட்டு அனுபவிக்க நினைக்கும் விஷயத்திலிருந்தும் நம்மை நீக்கி கொள்ள வேண்டும்.
எந்தப்பொருள் மீது நமக்கு பற்றில்லையோ அதிலிருந்து நமக்கு எந்த துயரமும் வராதுவைராக்கியத்தை அடைந்தாலும் மனது விக்ஷேபத்தை அடையலாம்இதை நீக்குவதற்கு ஞான அப்யாஸத்தினால் பார்க்கும் எல்லாமே ஈஸ்வரம் ஸ்வரூபம், பிரஹ்ம ஸ்வரூபம் என்று நினைத்து பழக வேண்டும்.
அஜம் ஸர்வம்அனைத்தும் பிறப்பற்ற பிரஹ்ம ஸ்வரூபமே என்று
அனுஸ்ம்ருத்யமீண்டும், மீண்டும் நினைத்து பார்க்க பழக வேண்டும்
ஜாதம் ந ஏவ பஷ்யதிபொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை அவன் நிலையென்று பார்ப்பதில்லை, ஏனென்றால் அது ஈஸ்வர ஸ்வரூபமாக அவனுக்கு தெரிந்து கொண்டிருக்கும்.
 
காரிகை-44
லயே ஸம்போ4தயே சித்தம்மனதை உறக்கம் வரும் நேரத்தில் எழுப்ப வேண்டும். தியானம் செய்யும் போது நான்கு தடைகள் வரும். அவைகள் நித்ரா சேஷஹ, அஜீரம், பஹூஅஸனம், ஸ்ரமஹ.
1.   நித்ரா சேஷஹதேவையான அளவு உறக்கத்தை இல்லாமல் தியானத்தை செய்தல்
2.   அஜீரம்உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் இந்த நிலை
3.   பஹூ அஸனம்அதிக அளவு சாப்பிட்டாலும் இந்த நிலை
4.   ஸ்ரமஹஅதிகமாக உழைத்து விட்டும் தியானம் செய்யக்கூடாது
சங்கரரின் 5வது காரணம்விருப்பமின்றி தியானம் செய்ய அமரும் போதும் தடை வரும்
விக்ஷிப்தம் ஶமயேத் புனஹ – மீண்டும் மனது விக்ஷேபத்தை அடைந்தால் அதை மேற்கூறியவாறு ஒழுங்குபடுத்த வேண்டும்.
 
மனமானது எப்பொழுதும் இரண்டு நிலைகளில் இருந்து கொண்டிருக்கும். அவைகள்
1. விருப்பு-வெறுப்புக்களுடன் வாஸனா ரூபமாக ஸம்ஸ்காரமாக இருந்து கொண்டு இருக்கும்
2. நாமிருக்கும் சூழ்நிலைகளுக்கேற்றவாறும் இருக்கும்
 
மனமானது வாஸனா ரூபமாக இருக்கும் ராக-துவேஷத்துடன் சம்பந்தப்பட்டு ஒருவிதமான மந்த நிலைக்கு வந்திருக்கும்போது விக்ஷேபமும், லயமும் இருக்காது ஆனால் எதையும் செய்ய விருப்பமில்லாமல் மந்தமாக இருக்கும்எதனால் மனம் இப்படி இருக்கிறது என்றும் நம்மால் அறிய முடியாது. இந்த நிலையையே கஷாயம் என்று கூறப்படுகின்றது. இது மூன்றாவது தடையாக இருக்கிறது
 
ராக பிரதிபந்தம்வாஸனா ரூபமாக இருந்து கொண்டிருக்கும் ராக-துவேஷங்களின் பிடியில் மனம் கட்டுண்டு இருக்கும் நிலை.
ஸகஷாயம்மனதானது கஷாயம் என்ற நிலையில் இருக்கும் போது
விஜானீயாத்அந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

·   இந்த நிலையையே சமாதி, சரியான தியானம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாதுஏனென்றால் இந்த நிலையில் நாம் எதையும் செய்யாமல் மந்தமாக இருப்பதால் இவ்வாறு நினைக்க தோன்றும்.

·   இந்த நிலையிலிருந்து வெளிவர முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனமானது அதுவாக வெளிவரும் வரை பொறுமையாக இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.
ஸமப்ராப்தம் ந சாலயேத்இந்த மூன்று தடைகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியடைந்தால் அந்த நிலையில் உறுதியாக இருக்கும்வரை வைத்து பழக வேண்டும்.
 
காரிகை-45
நான்காவது தடையான ரஸா ஆஸ்வாதஹ ( சுகத்தை அனுபவித்தல்). தியானத்தில் கிடைக்கும் சுகத்தையே அனுபவிப்பதையே தடையாக கூறப்படுகின்றதுஇந்த தடையை மேற்கூறிய மூன்று தடைகளிலிருந்தும் விடுபட்டவனால்தான் அனுபவிக்க நேரிடும்தியானத்தில் மூன்று தடைகளை நீக்கிய ஒருவனுக்கு நான் பிரம்மன் என்ற அறிவோடு அமைதியாக இருப்பான்இந்த நிலையில் மனம் ஒருமுகப்பட்டு இருக்கும்இதுவே மனதிற்கு அமைதியை, சுகத்தை, ஆனந்தத்தை கொடுக்கும்இந்த சுகத்தையே ரஸம் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதை மனது அனுபவிக்க ஆரம்பித்து விட்டால் அதுவே தியானத்திற்கு தடையாக இருக்கும்.
 
நானே ஆனந்த ஸ்வரூபம், நான் ஆனந்தத்துடன் இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை என்ற ஞானத்துடன் தியானத்திலே இருக்கும். மனம் ஒருமுகப்பட்டு ஆனந்தம் ஏற்படும் போது அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் ஸ்வரூபமான நிலையிலிருந்து போக்தாவாக மாறி விடுகின்றோம்தியானத்தின் குறிக்கோளை அடையும் முற்சியில் இருந்து விலகி விடுகின்றோம்.
 
ந ஆஸ்வாதயேத் ஸுகம் தத்ர  - தியான நேரத்தில் வரும் சுகத்தை அனுபவிக்க கூடாது.
நிஸங்கஹ பவேத்அந்த சுகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ப்ரக்ஞயாவிவேகத்தினால், அறிவின் துணைக் கொண்டு இந்த சுகமும் நிலையற்றது, தற்காலிகமானது என்ற அறிவுடன்
 
இத்துடன் தியானத்திற்கு வரும் தடைகளையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் சொல்லி முடித்து விட்டார்.
 
நிஸ்சலம் நிஸ்சரத் சித்தம்அமைதியை அடைந்து அசைவற்றிருக்கும் மனமானது வெளியே சென்றால், சஞ்சலமடைந்தால்
ப்ரயத்தனதஹவிடாமுயற்சியுடன், சரியான முயற்சியுடன்
ஏகி குர்யாத்மீண்டும் ஒருமுகப்படுத்த வேண்டும்.
 
காரிகை-46
இதில் மனதில் அமைதியான ஸ்வரூபம் சொல்லப்படுகின்றது.
யத ந லீயதே சித்தம்எப்பொழுது மனமானது உறங்கவில்லையோ, லயம் என்ற தடையற்ற நிலையில் இருக்கும்போது, கஷாய தடையும் நீங்கி இருக்கும் நிலையில்
ந விக்ஷிப்யதே புனஹஎந்தவித சஞ்சலமில்லாமல் இருக்கும் நிலையில், அமைதியான சுகத்தையும் அனுபவிக்காத நிலையில் இருக்கும்போது
அனிங்கனம்அசைவற்று இருக்கின்ற மனம், ( தீபத்தின் சுடர் காற்றில்லாத இடத்தில் எவ்வாறு அசைவற்று இருக்குமோ அதுபோல இருக்கும் மனது )
அனாபாஸம்எந்த விஷயத்தோடும் சம்பந்தப்படாமல் இருக்கும்
ததா தத் - அப்பொழுது அந்த மனமானது
நிஷ்பன்னம் பிரஹ்மபிரம்ம ரூபமாக இருக்கின்றது
 
காரிகை-47
இதில் நிதித்யாஸன சாதனத்தையும், அதில் வெற்றியடைந்த சாதகன் எப்படி இருப்பான் என்றும் கூறப்படுகின்றது
உத்தமம் சுகம்மேலான சுகம், பேரின்பம்
ஸ்வஸ்தம்தன்னிடத்திலே இருத்தல் (இந்த நிலையில் அனுபவிக்கும் சுகமே மேலானது)
ஶாந்தம் – அமைதி, துயரமற்ற நிலை, அனைத்து துயரங்களும் சென்றுவிட்ட நிலை
ஸ நிர்வாணம்மோக்ஷ ஸ்வருபமானது, மோட்ச நிலை
அகத்யம் வாயால் சொல்ல முடியாத சுகத்தை அனுபவித்தல், இந்த சுகத்தை அனுபவிப்பவர்களால்தான் உணர முடியும்.
அஜம்பிறவாத பிரஹ்ம சுகமானது இந்த நிலை
அஜேன ஞேயன அபின்னம்பிறப்பற்றதும், அறியத்தக்கதுமான பரம்பொருளுடன் வேறுபடாத நிலை
ஸர்வக்ஞம் (ஸர்வம் ச ஞம் ச )அறிவுமாகவும், அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை
பரிசக்ஷதேபிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.
 
காரிகை-48
ஏதத் தது உத்தமம் ஸத்யம்இதுவரையில் விளக்கப்பட்ட பிரம்மமானது மேலான ஸத்யமாக இருக்கின்றது
கஸ்சித் ஜீவஹ ந ஜாயதே- எந்தவொரு ஜீவனும் பிறக்கவில்லை
ஸம்பவஹ அஸ்ய ந வித்யதேஇந்த ஜீவனுக்கு காரணம் இல்லை
யத்ர கிஞ்சித் ந ஜாயதேஎதனிடத்தில் எதுவும் பிறக்கவில்லையோ அதுதான் உத்தமமான ஸத்யம்
பிரம்மன் எதற்கும் உபாதான, நிமித்த காரணமாக இல்லை, அதேபோல அதற்கு எதுவும் உபாதான, நிமித்த காரணமாகவும் இல்லை.
 
நிதித்யாஸனம்:
·         அமனீபாவஹமனதை மனமற்றதாக மாற்றுதல், இதனால் சம்சாரம் விலகிவிடும்
·         ஞானத்தினால் அமனீபாவம்இந்த மனமற்ற தன்மையை ஆத்மஞானத்தினால்தான் அடைய முடியும்
·         உறக்கம், சமாதி இவைகளுக்கும், அமனீபாவத்திற்கும் உள்ள வேற்றுமை
·         ஞானியின் ஸ்வருபமும், பிரம்மத்தினுடைய ஸ்வரூபமும் ஒன்றே
·         ஞானத்தை அடைந்த நிலைபெற்ற ஞானிக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை
·         அஸ்பர்ஷ யோகஹ என்ற பெயரால் பிரம்மம் அழைக்கப்பட்டது
·         விடாமுயற்சி தேவை, நான்கு தடைகளும் அதை நீக்கும் வழிகளையும் விளக்கப்பட்டது
·         மோட்சத்தை அடைந்த ஞானியின் மனநிலை
----oo000oo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...