Showing posts with label பகவத் கீதை-18. Show all posts
Showing posts with label பகவத் கீதை-18. Show all posts

Friday, October 14, 2016

Srimad Bhagavath Gita - Chapter-18

அத்தியாயம்-18
மோட்ச சந்நியா யோகம்
ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது - 15-01-2022
முகவுரை
மனதிலுள்ள துயரங்களை நீக்குவதுதான் பகவத் கீதையின் லட்சியமாகும். நம்மைப் பற்றிய சரியான அறிவை அடைவதன் மூலம் இந்த மனநிலையை அடையலாம். நான் என்ற சொல்லின் சரியான பொருளை அறிவதே ஆத்மஞானம். ஆத்மஞானத்தை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய தகுதியையும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு மனத்தூய்மையும் ஒரு தகுதியாக கூறப்படுகிறது. மனத்தூய்மை கர்மயோகத்தின் மூலம் அடையலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அத்தியாயமானது முழு கீதையின் சாரமாகவும் இருக்கின்றது. முதலில் கர்மயோகத்தின் சாராம்சமும் சில பண்புகளையும் கூறியிருக்கிறார். பிறகு ஞானயோகத்தின் சாதனமான நிதித்யாசனத்தைப் பற்றியும் கூறியிருக்கிறார். ஆத்மஞானத்தின் பெருமையையும் கூறியிருக்கிறார்.

சந்நியாச வாழ்க்கை முறை
இது ஒருவகையான ஆசிரமத்தை குறிக்கின்றது. அதாவது ஒருவிதமான வாழ்க்கைமுறை என்பதைதான் முழுமையாக குறிக்கின்றது.
1. உறவுகளையெல்லாம் துறந்து செல்வது. என்னைச் சார்ந்து யாரும் இல்லை,    நானும் யாரையும் சார்ந்தில்லை என்ற நிலையில் இருப்பது
2. தனக்கென்று எந்த சொத்தும், செல்வமும், பொருட்களும் இல்லாது இருத்தல்
3. உழைப்பின்றி சாப்பிடக்கூடாது. இது திருட்டுக்கு சமமாக கருதப்படுகிறது.

சந்நியாசத்தை ஏன் சாஸ்திர விதிப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
வேதம் சொல்கின்றபடி கடமையை செய்யாமல் இருந்தால் பாவம் (ப்ரத்யஹார தோஷம்) வந்தடையும். பிரம்மச்சரிய ஆசிரமத்தில் படிக்காமல் இருந்தால் அமைதியின்மை என்கின்ற தோஷம் அடைவோம். ஆனால் வேதத்தின் அனுமதியுடன் கடமையை செய்யாமல் இருந்தால் நமக்கு எந்த தோஷமும் வராது. சமுதாயமும் சந்நியாசியிடம் எந்த பொறுப்பையும் கொடுக்காது. அவன் சும்மா இருக்கின்றான் என்றும் நிந்திக்காது.

சந்நியாச ஆசிரமத்தில் அடைய வேண்டிய லட்சியம் என்ன?
இந்த ஆசிரமத்தில் காலம் அதிகமாக நம்மிடத்தில் இருக்கும். இந்த காலத்தை மனதைப் பண்படுத்துவதற்கும்,  அமைதி படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும். உலகத்தில் போகம் கொடுக்கும் பொருட்கள் மீது வைராக்கியம் கொஞ்ச கொஞ்சமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆத்ம-அனாத்க விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாத்விகமான உணவு பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டு சாஸ்திரம் படித்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு விவிதிஷா சந்நியாசம் என்று பெயர். அதாவது ஞானத்தை அடைவதற்கான தகுதிகளை அடைவதற்கு எடுத்துக் கொண்டிருக்கின்ற சந்நியாசி என்று அழைக்கப்படுவர்.

விவேக, வைராக்கியம் நன்றாக அடைந்திருக்கும் பிரம்மச்சாரி அல்லது இல்லறத்தில் இருப்பவன் அல்லது வானபிரஸ்த ஆசிரமத்தில் இருப்பவன் அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்காக எடுத்துக் கொள்கின்ற சந்நியாசத்தை வித்3வத் சந்நியாசம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்லோகம்-01
மஹாபாஹோ - நீண்ட கைகளையுடைய கிருஷ்ண பகவானே!
ஸன்யாஸஸ்ய தத்த்வமிச்சாமி வேதி3தும் : சந்நியாசம் என்பதன் உண்மையான பொருளை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
த்யாக3த்வ ச -  மேலும் தியாகம் என்ற சொல்லினுடைய உண்மையான பொருளையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஹ்ருஷீகேஷ(ह्रषीकेश) - இந்திhpயங்களுக்கு தலைவனாக இருப்பவரே!
கேஷினிஷூதன - கேசி என்ற அரக்கனை வீழ்த்தியவரே!
ப்ருதக் - தனித்தனியாக இவற்றை கூறுங்கள்.
சந்நியாஸம் -: ஸம+நி+அஸ : நன்கு நிச்சயமாக தூக்கியெறிதல், விட்டுவிடுதல்
தியாகம் - விட்டுவிடுதல், துறத்தல்

ஸ்லோகம்-02
श्रीभववानुवाच ।
काम्यानांकर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणा  ॥ 18-2
ஸ்ரீபகவான் கூறுகிறார்:
சந்நியாசம் என்பது சில கடமைகளை அல்லது அனைத்து கர்மங்களையும் முழுமையாக துறத்தல் என்பதாகும். தியாகம் என்பது கர்மத்தை செய்து அதனால் வருகின்ற பலனை மனதளவில் துறத்தலை குறிக்கிறது.
 
காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் - ஆசையினால் தூண்டப்பட்டு செய்யப்படுகின்ற செயல்கள்,  நிஷித்த கர்மங்கள், பிராயசித்த கர்மங்கள் ஆகியவைகளை துறப்பதே
ஸந்யாஸம் கவய: விது3: - சந்நியாசம் என்று கற்றறிந்தவர்களான ரிஷிகள், முனிவர்கள் சொல்கிறார்கள்.

இன்பம் தரும் பொருட்களை அடைவதற்காக ஆசையினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்களை துறப்பதே சந்நியாசம் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள். சுகத்திற்காக மட்டும் செய்யப்படும் செயல்கள் காம்யகர்மம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸர்வகர்ம பலதியாகம் - எல்லா செயல்களினால் வரும் பலன்களை விட்டுவிடுதல், காம்ய கர்மத்தில் எந்த பலன் கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் துறந்து விடுதல்
விசக்ஷணா - பெரியோர்கள், ரிஷிகள்
ப்ராஹு -  தியாகம் என்று அழைக்கிறார்கள்.

ஸ்லோகம்-03
त्व्याज्यं दोषवदित्येके कर्म प्राहर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥ 18-3
கர்ம த்வயாஜ்யம் -  எல்லா கடமைகளையும், செயல்களையும் (நித்ய, நைமித்திக3, காம்ய, நிஷித்த, பிராயசித்த) விட்டுவிடுதலே சந்நியாசம்
ஏகே மனீஷிண: - சில சான்றோர்கள், அறிவாளிகள்.
தோஷவதி இதி - குறைகளுடன் இவைகள் இருப்பதாக
ப்ராஹு: - கூறுகிறார்கள்.
உடலை பாதுகாக்க செய்கின்ற செயல்களை இங்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
யக்ஞ தான தப: கர்ம - யாகம், தானம், தவம் போன்ற கடமைகளை
ந த்யாஜ்யம் இத் ச அபரே - துறக்கக்கூடாது என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
 
·         தியாகம், சந்நியாசம் இவைகளுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை என்பது பகவானுடைய கருத்தாகும். அவ்வாறுதான் இதில் பயன்படுத்தியிருக்கிறார்.
·         கர்மத்தையும் அதன் பலனையும் துறந்து சந்நியாச ஆசிரமத்தல் இருப்பவர்களை சந்நியாசி என்றும், மற்ற ஆசிரமத்தில் உள்ளவர்களை தியாகி என்றும் அழைக்கலாம்
·         ஸ்வரூப பேதமில்லை, விட்டுவிடுதல் என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது.
·         பலன் பேதமுமில்லை இரண்டும் ஒரேவிதமான பலனைத்தான் கொடுக்கும்.
 
ஸ்லோகம்-04
निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्यघ्र त्रिविधः सम्प्रकीर्तितः ॥ 18-4
4ரதஸத்தம் - ஹேஅர்ஜுனா!
தத்ர த்யாகே3 - இந்த சந்நியாசம் அல்லது தியாகம் என்ற விஷயத்தில்
மே நிஷ்சயம் ஸ்ருணு - என்னுடைய நிச்சயமாக கருத்தை கேள்.
புருஷ வ்யக4 - புலியைப் போன்ற வீரமுடையவனே!
த்யாகஹ த்hpவித4: ஸம்பரகீர்ததித: -  தியாகமானது மூன்றுவிதமாக விளக்கப்பட்டுள்ளது.
 
ஸ்லோகம்-05
यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावननि मनीषिणाम् ॥ 18-5
யக்ஞ, தான, தப கர்ம ந த்யாஜ்யம் -  யாகம், தானம், தவம் போன்ற செயல்களை தியாகம் செய்யக்கூடாது. நம்முடைய அன்றாட கடமைகளை விட்டுவிடக்கூடாது.
கார்யம் ஏவ தத் -  அவைகளை செய்தாக வேண்டும்.
யக்ஞோ தானம் தபஸ்ச ஏவ - யாகம், தானம், தவம் போன்ற செயல்கள் கூட
மனீஷணாம் பாவனி - மனிதர்களை தூய்மைப்படுத்தும் சாதனங்களாக இருக்கின்றன.
 
ஸ்லோகம்-06
एतान्यपि तु कर्माणि सङ्गं त्यत्तवा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं  मतमुत्तमम् ॥ 18-6
·   அகிம்சையை முழுவதுமாக கடைப்பிடிக்க முடியும் என்ற மனநிலையே தூய்மையான மனம் என்று அறிந்து கொள்ளலாம்.
·   மித்யாசர பிரசங்கம் என்பது செயலளவில் துறந்துவிட்டு மனதளவில் துறக்காது இருக்கும் நிலையில் உள்ளவனை குறிக்கிறது.
ஏதானி அபி து கர்மாணி -  நமது கடமைகள, கர்மங்கள் அனைத்துனடைய
ஸங்கம் த்யத்த்வா பலானி ச - சங்கத்தையும், பலனையும் துறக்க வேண்டும்
கர்தவ்யானீதி மே நிஸ்சிதம் மதம் உத்தமம் - இவ்விதம் கடமைகளை செய்வதுதான் நல்லது என்பது என்னுடைய நிச்சயமான, மேலான கருத்தாகும்.
 
நாம் கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றோம். எப்படிபட்ட கர்த்தவாக இருக்க வேண்டும். எப்படிபட்ட போக்தாவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
1.       செய்ய வேண்டிய செயல்களில் பற்று(ஸங்கம்), வெறுப்பு இருக்கக்கூடாது.
2.       பயபக்தியுடனும் முழுஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்
3.       செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கடமையை செய்வதனால் உhpமையும் வரும். ஆனால் அதையும் துறந்துவிட வேண்டும்.
 
ஸ்லோகம்-07
नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥ 18-7
நியதஸ்ய கர்மணஹ           - செய்யவேண்டிய செயல்களை, கடமைகளை
ஸன்யாஸ: ந உபபத்யதே       - துறந்து விடுவது உகந்ததல்ல
மோஹாத்தஸ்ய பரித்யாக3     - மோக வசத்தினால் துறந்துவிட்டால்
தாமஸ: பரிகீர்தித: -  அது தாமஸமான சந்நியாசம் என்று சொல்லப்படுகிறது.
 
ஸ்லோகம்-08
दुःखमित्येव यत्कर्म कायल्लेशभयात्त्यजेत् ।
स कृत्वा रजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥ 18-8
கடமைகளை தெரிந்தே விட்டுவிடுவது ராஜஸ சந்நியாசமாகும். இது எனக்கு துன்பத்தைக் கொடுக்கும், கஷ்டமாக இருக்கும் என்று செய்யாமல் விட்டுவிடுவது ராஜஸ சந்நியாசமாகும். இப்படி விட்டுவிடுவதனால் அவர்கள் எந்தவிதமான பலனும் அடையமாட்டார்கள். சுகத்திலிருந்து சுகத்தை அடைய முடியாது என் சமஸ்கிருத பழமொழிப்படி கஷ்டத்திலிருந்துதான் சுகத்தை அடைய முடியும் என்று தெரிந்து கொள்வாயாக.
 
கவனக்குறைவு, சோம்பல் காரணமாக தன்னுடைய கடமைகளை துறந்துவிடுதல் தாமஸமாகும். மோகம் என்பது செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாது என்பதையும் சரியாக புரிந்து கொள்ளாதிருக்கும் மனநிலையாகும். நாம் செய்கின்ற கடமைகள் நம்மை தூய்மைபடுத்தும் என்று தவறாக புரிந்து கொண்டிருப்பதும் மோகத்தினால் அடைகின்ற மற்றொரு நிலையாகும்.
 
து:க2மித்யேவ யத் கர்ம - எந்த செயல்கள் செய்தால் துன்பம் வரும்
காயல்லேஸப4யாத் த்யஜேத் - உடலுக்கு கஷ்டம் வரும் என்ற பயத்தினாலும் அந்த செயல்களைத் துறக்கிறார்கள்.
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் - அவர்கள் ராஜஸமான தியாகத்தை செய்தால்கூட
ந ஏவ த்யாகபலம் லபே4த் - அதனால் பலனை அடையவே மாட்டார்கள்.
 
ஸ்லோகம்-09
कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥ 18-9
ஹே அர்ஜுனா!
நியதம் யத் கர்ம         - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எந்த கர்மம்
கார்யம் இதி ஏவ        - கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று கருதி
ஸங்கம் ப2லம் ச        - அந்த கர்மங்களில் உள்ள பற்றையும், பலனையும்
த்யக்த்வா க்ரியதே       ­- துறந்து செய்யப்படுகின்றதோ
ஸ ஏவ ஸாத்த்விக த்யாக3: - அதுவே சாத்விகமான தியாகம் என்று
மத:   -  என்னால் கருதப்படுகிறது.
 
நம்மால் எந்த அளவுக்கு ஒன்றை துறக்க முடியுமோ, அதை தகுதியுடன் துறக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்த்துவிட்டு பிறகு விட்டுவிட வேண்டும். விடுவதற்கு முன்பு அவைகள் இல்லாமல் என்னால் இருக்கமுடியும் என்று மனவுறுதி வந்த பிறகுதான் விட வேண்டும். சாத்விகமான சந்நியாசத்திற்கு அதிக பலனுண்டு.
 
ஸ்லோகம்-10
न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमविष्टो मेधावी छिन्नसंशयः ॥ 18-10
அகுஸலம் கர்ம -  எந்த மனிதன் பந்தப்படுத்துகின்ற, கஷ்டத்தைக் கொடுக்கின்ற, நன்மை பயக்காத கர்மத்தை
ந த்3வேஷ்டி -  வெறுப்பதில்லையோ
குஸலே -  நன்மை பயக்கும், கஷ்டத்தை,துயரத்தை கொடுக்காத கர்மத்தில்
ந அனுஷஜ்ஜதே -  பற்றுக் கொள்வதில்லையோ, இத்தகையவன்
ஸத்த்வ ஸமாவிஷ்ட: - சாத்விக மனதுடன் பொருந்தியவன்,  ஆத்ம விஷயத்தை சிந்திக்கும் மனதையுடையவன்
த்யாகீ3 - சத்துவ குணத்திலிருந்து விடப்படுகின்ற தியாகத்தை செய்தவர்கள்.
மேதா4வீ - ஆத்மஞானத்தை அடைந்தவன், (பொதுவாக கேட்டதை நன்கு புhpந்து கொண்டு அதை மனதில் நிலையாக வைத்திருப்பவன்)
இந்த தியாகம் ஆத்மஞானத்தை அடைவதற்கான நேரடி சாதனத்தை கொடுத்து விடும். மோட்சத்தை அடையும வரை நமக்கு உதவி செய்யும்.
சி2ன்னஸம்ய: -  அனைத்து சந்தேகங்களும் நீங்கப்பெற்ற மனநிலையை அடைகிறான்.
பிறகு நிதித்யாஸனத்தின் மூலமாக இறுதியில் ஞானநிஷ்iயை அடைந்து விடுவான். இந்த நிலையை அடைந்தவன் விருப்பு-வெறுப்ற்ற நிலையை அடைகின்றான். பிறகு அது அவனது ஸ்வரூபமாகவே இருக்கும்.
 
ஸ்லோகம்-11
न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥ 18-11
தேஹப்4ருதா - அறியாமையில் இருப்பவர்களால் தேகத்தை ஆத்மா என்று நினைப்பவர்களால், உடல் மீது பற்று உள்ளவர்களால்
அஸேஷத: கர்மாணி - அனைத்து கடமைகளையும் செயல்களையும்
த்யக்தும் ந ஹி ஸக்யம் - தியாகம் செய்ய இயலாது. விட்டுவிட முடியாது
யஹ அஸ்து கர்மபல த்யாகி3 - யார் கர்மபலனை தியாகம் செய்கிறார்களோ
ஸஹ த்யாகீ இதி அபி தீ4யதே -  அவன் தியாகி என்று அழைக்கப்படுகிறான்
 
ஸ்லோகம்-12
अनिश्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥ 18-12
அனிஷ்டமிஷ்டம்  - விரும்புகின்ற பலன்கள், விரும்பாத பலன்கள்
விரும்பாத பலன்கள் அடைந்தால் விரும்பத்தகாத துயரத்தை கொடுக்கின்ற உலகத்தை அடைகிறார்கள். விரும்பதக்க பலன்களை அடைந்தால் சுகத்தை தரக்கூடிய உலகத்தை அடைகிறார்கள்.
மிஶ்ரம்  - பாவ-புண்ணியங்கள்
த்ரிவிதம் கர்மண: ப2லம் - இவ்விதம் மூன்று வகையாக இருக்கின்ற கர்மபலன்கள்
ப்ரேத்ய - மரணத்திற்கு பிறகு
அத்யாகினாம் ப4வதி - தியாகம் செய்யாதவர்களுக்கு, அக்ஞானிகளுக்கு கிடைக்கிறது.
ந து ஸன்யாஸினாம் க்வசித் - ஞானநிஷ்டை அடைந்திருக்கும் ஜீவன் முக்தர்களுக்கு கண்டிப்பாக இப்படிபட்ட பலன்கள் கிடைக்காது. பிறப்பு-இறப்பற்ற விதேக முக்தியை அடைகிறார்கள்.

ஸ்லோகம்-13
पञ्जैतानि महाबाहो कारणानि निबोध मे ।
साङ्ख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥ 18-13
மஹாபா3ஹோ - நீண்ட கைகளையுடைய அர்ஜுனா!
ஸர்வ கர்மாணாம் ஸித்34யே -  அனைத்து செயல்களும் தோன்றுவதற்கான
பஞ்சஏதானி காரணானி - ஐந்து காரணங்களை
மே நிபோத4: -  என்னிடத்திலிருந்து அறிந்து கொள்.
ஸாங்க்யே க்ருதாந்தே- இவைகள் உபநிஷத்தில்
ப்ரோக்தானி - உபதேசிக்கப்பட்டுள்ளது.
ஸாங்க்யம் - ஸம்யக் அஸ்மின் க்யாயதே - ஆத்ம தத்துவம் எதில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதோ அதுவே சாங்கியமாகும்.
 
ஸ்லோகம்-14
अधिष्टानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥ 18-14
க்ருதாந்தி - கர்மத்தைப்பற்றிய விஷயங்கள் முடிந்த பிறது கடைசியாக எது உபதேசிக்கப்படுகிறதோ அதுவே வேதாந்தம் அல்லது உபநிஷத் அல்லது ஆத்மஞானம் என்று அறிந்து கொள். இந்த அறிவை அடைந்து விட்டால் கர்மங்கள் செய்யத் தேவையில்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்துவிடுவோம்..
 
இதில் ஐந்து காரணங்களை பகவான் கூறியிருக்கிறார். நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்களுக்கு இவைகள்தான் காரணம்.
1. அதிஷ்டானம் - ஸ்தூல உடலானது போகத்தின் இருப்பிடமாக ஆயதனமாக இருக்கிறது. கர்த்தாவாகவும், போக்தாவாகவும் செயல்படுவதற்கு இருப்பிடமாக இருக்கிறது. இது அன்னமய கோசத்தைக் குறிக்கிறது.
2. விவிதாஸ்ஸ்ச ப்ருதக் சேஷடா:  ஐந்தவிதமாக செயல்படுகின்ற பிராணன்களின் சக்தியை  குறிக்கின்றது. இது பிராணமய கோசம்.
3. கரணம் ச ப்ருத2க் வித4ம் - விதவிதமான கரணங்களான ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனம் மற்றும் சித்தம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது மனோமய கோசமாகும்.
4. கர்த்தா - விக்ஞான கோசம். (புத்தி, அகங்காரம்). நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஸ்தூல, சூட்சும உடல்களே காரணமாக இருக்கிறது.
5. தை3வம் ச அத்ச பஞ்சமம் - ஈஸ்வரனே ஐந்தாவது காரணமாக இருக்கின்றார். ஜகத்திற்கு காரணமாக இருப்பவரும், கர்மபலனைக் கொடுப்பவருமான ஈஸ்வரனே ஐந்தாவது காரணமாக இருக்கிறார்.
 
ஸ்லோகம்-15
शरीरवाङमनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥ 18-15
ஸ்ஸரீர வாக் மனோபி4: - ஸ்தூல சரீரத்திலிருந்து, வாக்கிலிருந்து, மனதிலிருந்து
ந்யாய்யம் வா - நியாயமானதாகவோ, தர்மத்திற்குட்பட்டதாகவோ
விபரீதம் வா - அநியாயமானதாகவோ, அதர்மத்திற்குட்பட்டதாகவோ
யத் கர்ம ப்ராரப்4தே நர - மனிதன் எந்த செயலை செய்கின்றானோ
ஏதே பஞ்சதஸ்ய ஹேத்வ: - அவைகள் ஐந்துவகையாக செய்வதற்கு காரணமாக இருக்கின்றது.
 
எல்லா செயல்களுக்கும் சாமான்ய காரணம்,  விசேஷ காரணம் என்று இரண்டு வகையான காரணங்கள் இருக்கிறது. தெய்வம் சாமான்ய காரணமாகவும், மற்ற நான்கும் விசேஷ காரணமாகவும் இருக்கின்றது.
 
ஸ்லோகம்-16
तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
प्श्यत्यकृतबुद्धित्वान्न स प्श्यति दुर्मतिः ॥ 18-16~
தத்ர ஏவம் ஸதி - இது இவ்விதம் இருக்கும்போது, நம்மிடமிருந்து தோன்றுகின்ற அனைத்து செயல்களுக்கு இந்த ஐந்து காரணங்கள் இருக்கும் போது
கேவலம் ஆத்மானம் - எதனோடும் சம்பந்தப்படாத ஆத்மாவை
கர்தாரம் - கர்த்தாவாக செயல்படுவதாக
அக்ருத புத்தி4த்வாத் - செயல்படாத புத்தியினால்
யஹ பஶ்யதி – எவனொருவன் பார்க்கின்றானோ
ந ஸஹ பஶ்யதி - அவன் பார்த்தும் பார்க்காதவனாக இருக்கின்றான்
துர்மதி: - அத்தகையவன் அறிவற்றவன், கெட்ட புத்தியையுடையவன், விபரீத அறிவுடையவன், அறியாமையும், அத்யாசமும் கூடிய புத்தியை உடையவன்.
 
ஸ்லோகம்-17
यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वाऽपि स इमांल्लोकान्न हन्ति न निबध्यते ॥ 18-17
சுமதி3 -  நல்ல அறிவுடையவர்கள், சரியான அறிவை உடையவர்கள்.
யஸ்ய -  யாருக்கு சரியான அறிவு இருக்கிறதோ
ந அஹம் க்ருத: - அகங்காரம் இல்லாமல் இருக்கிறார்களோ,  நான் கர்த்தாவல்ல என்று நினைக்கிறார்களோ
புத்திர் யஸ்ய ந லிப்யதே - யாருடைய புத்தியானது பாதிக்கப்படாமலிருக்கிறதோ, யாருக்கு துயரம் எதுவுமில்லையோ, யாருக்கு அகங்காரம் இல்லையோ, யாருடைய மனமானது துயரமடைவதில்லையோ, நான் ஏன் இதைச் செய்தேன், நான் ஏன் இதைச் செய்யவில்லை என்று யார் துயரமடைவதில்லையோ அவனே மனதால், புத்தியால் பாதிக்கப்படாதவனாவான்.
ஹத்வா அபி ஸ இமான் லோகான் - இந்த உலகத்தை அவன் அழித்துவிட்டாலும்
ந ஹந்தி - அவன் அழிப்பவனல்ல
ந நிப3த்4யதே - அவனிடம் எந்த குற்ற உணர்வும் இருக்காது. கொலை செய்ததினால் வரும் பலனையும் அடையமாட்டான்.
 
ஸ்லோகம்-18
ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥ 18-18
செயல்களை இருவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் ஞான செயல்கள், கர்ம செயல்கள் ஆகியவைகளாகும். ஆத்ம அறிவை அடைவதற்கு செய்யப்படும் செயல்களை ஞான-செயல்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்னே செய்கின்ற செயல்களனைத்தும் கர்ம செயல்களாகும். எந்தவொரு செயலை செய்ய வேண்டுமானாலும் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையான தகுதி கர்ம செயல்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் ஞான செயல்களை செய்வதற்கு அறிபவன்(பரிக்ஞாதா), அறியப்படும் பொருள்(ஞேயம்;), மனநிலை(ஞானம்) ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது.
 
பரிக்ஞாதா - பிரமாதா - அறிபவன்
ஞேயம்   - பிரமேயம் - அறியப்படும் பொருள்
ஞானம் - மனதிலிருக்கின்ற எண்ணம்
இதி த்ரிவித4ஹ -  இந்த மூன்றும்
த்ரிவிதா4 கர்மசோத3னா - ஞான கர்மம் செய்வதற்கு காரணமாக இருக்கின்றது.
இவை மூன்றும் சரியாக வேலை செய்தால்தான் சரியான அறிவை அடையமுடியும்.
கர்ம ஸங்க்3ரஹ - கர்மத்திற்கு ஆதாரமாக, கர்மத்தை சார்ந்து இருப்பதற்கு கீழே கூறியுள்ள மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.
கர்த்தா - செயல் செய்பவன்
கர்ம - செயல்
கரணம் - செயல் செய்ய உதவும் கருவி, (கர்மேந்திhpயங்கள், ஞானேந்திhpயங்கள்)
 
ஸ்லோகம்-19
ज्ञानं कर्म च कर्ताच त्रिधैव गुणभोदहः ।
प्रोच्यते गुणसङ्ख्याने यथावच्छृणु तान्यपि ॥ 18-19
ஞானம் – அறிவு மூன்று விதமாகவும்,
கர்ம - உடலிலிருந்து வெளிப்படும் செயல்கள் மூன்று விதமாகவும்
கர்த்தா - செயல்படுபவன் மூன்றுவிதமாகவும்
த்ரிவித3 ஏவ - மூன்றுவிதமான
குணபே4த3தஹ - குணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது என்று
குணஸங்க்யானே - கபிலர் என்பவர் எழுதிய சாங்கியம் என்ற சாஸ்திரத்தில்
ப்ரோச்யதே - சொல்லபபட்டுள்ளது.
தான்யபி - அவற்றையும் என்னிடமிருந்து
யதாவத் ஸ்ருணு - அந்த விதத்திலேயே மிகத்தெளிவாக கேட்பாயாக.
 
ஸ்லோகம்-20
सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥ 18-20
அத்வைத ஞானம் என்பது சாத்விக ஞானம். பல ஆத்மாக்கள் என்ற அறிவு ராஜசமான அறிவு, உடலே ஆத்மா என்று எண்ணுகின்ற அறிவ தாமசமானது.
ஏகம் யேன - ஒன்றேயென்று எந்தவொரு அறிவினால் ஒருவன்
ஸர்வ பூதேஷு - எல்லா ஜீவர்களிடத்திலும்
பா4வம் ஏகம் - பரமாத்மாவை ஒன்றேயாகவும்
அவ்யயம் - அழியாததாகவும், மாற்றமடையாததாகவும், தேய்வடையாததாகவும்
விப4க்தேஷு - வரையறுக்கப்பட்டவைகளுள் (ஸ்தூல சரீரம்)
அவிப3க்தம் - வரையறுக்கப்படாததாகவும் (ஆத்மா)
ஈக்ஷதே – பார்க்கின்றானோ
தத் ஞானம் - அந்த அறிவை
ஸாத்த்விகம் வித்3தி4 – சாத்விகமான அறிவு என்று அறிந்து கொள்.
 
ஸ்லோகம்-21
पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावन्पृथग्विधान् ।
वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥ 18-21
யத் ஞானம் - எந்தவொரு அறிவானது
ப்ருதக்3விதா4ன் - வேற்றுமைகளோடு கூடிய ஜீவர்கள்
ஸர்வஷு பூதேஷு - உயிரினங்கள் அனைத்தும்
து நானா பா4வான் - பலவிதமான ஆத்மாக்களாக
ப்ருதக்வேன - வேறாகவே
வேத்3தி4 - அறிகின்றதோ
தத் ஞானம் வித்3தி4 ராஜஸம் - அந்த அறிவு ராஜசமான அறிவென்று அறிந்து கொள்வாயாக.
 
ஸ்லோகம்-22
यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाह्रतं ॥ 18-22
ஏகஸ்மின் கார்யே - ஜீவர்களது உடல் ஒன்றையே
க்ருத்ஸ்னவத் - அனைத்தும் என்றும், முழுமையானது என்றும் எண்ணி
ஸக்தம் - அதில் அதிகமான பற்றுடன் இருப்பது
து யத் - அந்தவொரு அறிவானது
அஹைதுகம் - தர்க்கத்திற்கு முரணானதுமானது, யுக்திக்கு பொருந்தாதது
அதத்த்வார்தவத3 - உண்மைப்பொருளை உடல்மீது அத்யாசம் செய்வது
அல்பம் ச - அற்பமானது. ஆகவே
தத்3 தாமஸம் உதா3ஹ்ருதம் - இது தாமசமான அறிவு என்று கூறப்படுகிறது..
ஸ்தூல உடல்தான் அனைத்தும் என்று தீவிர பற்றுடன் இருக்கின்ற அறிவானது யுக்திக்கு பொருந்தாது. அது அற்பமானது, தாமசமானது என்று கூறப்படுகிறது.
 
ஸ்லோகம்-23
नियतं शाङ्गरहितमरागद्वेशतः कृतम् ।
अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥ 18-23
கர்மயோகமாக செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் சாத்விக செயல்களாகும். இந்த ஸ்லோகம் கர்மயோகத்தின் லட்சணத்தை கூறுவதாக இருக்கிறது.
 
நியதம் கர்ம - நம்மால் செய்ய வேண்டிய கடமைகள்
ஸங்க ரஹிதம் - நான்தான் செய்கின்ற அபிமானம் இல்லாமல்,  நான் இறைவனுடைய கருவியாக இருந்து கொண்டு செயல்படுகிறேன் என்று பாவித்து
அராக த்வேஸ்ஸத: - விருப்பு வெறுப்பின்றி
அப2ல ப்ரேப்ஸு ந - பலனில் பற்றில்லாமல் இறைவனின் பிரசாத புத்தியுடன்
யத் கர்ம க்ருதம் - எந்த செயல்கள் செய்யப்படுகின்றதோ
தத்3 ஸாத்த்விகம் உச்யதே - அத்தகைய செயல்கள் சாத்விகமானது என்று கூறப்படுகின்றது.
 
ஸ்லோகம்-24
यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः ।
क्रियते बहुलायासं तद्राजसमुदाह्रतम् ॥ 18-24
ஆசையினால் தூண்டப்பட்டு செய்யப்படுகின்ற செயல்கள், தவறான பாவனையுடன் செய்யப்படும் செயல்கள் ராஜசமானது. அளவுக்கு மீறியதும் அதர்மமாக செய்யப்படும் செயல்களும் ராஜசமானது.

து யத் கர்ம - ஆனால் எந்த செயல்
காமேப்ஸுனா - இன்பத்தை அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன்
ஸ அஹம் காரேண - நான்தான் செய்கின்றேன் என்ற அகங்காரத்துடன்
வா புன: - அல்லது தொடர்ந்து
பஹுலாயாஸம் க்ரியதே - தன்னையே வருத்திக்கொண்டும்,  தன்னுடைய உடல்நலத்தைக் கெடுத்து கொள்ளும் அளவுக்கு கடுமையாக உழைத்து செய்யக்கூடிய
தத்3 - அந்த செயல்கள்
ராஜஸம் உதாஹ்ருதம் - ராஜஸமானது என்று கூறப்படுகிறது.
மற்றவர்களின் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கின்ற செயல்களும் ராஜசமானது.
 
ஸ்லோகம்-25
अनुबन्धं क्षयं हिम्सामनपेक्ष्य च पौरुषम् ।
मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥ 18-25
யத் கர்ம - எந்த செயல்கள்
மோஹாத் ஆரப்4யதே - மோக வசத்தினால், அறியாமையினால், மனமயக்கத்தினால் தவறான முடிவெடுத்து தொடங்கப்படுகின்றதோ
அனுப3ந்தம் - விளைவையும்
க்ஷயம் - இழப்பையும், கஷ்டத்தையும்
ஹிம்ஸாம் - துன்பத்தையும்
ச பௌருஷம் - தகுதியையும்
அனபேக்ஷய - ஆராய்ந்து பார்க்காமல் செய்யப்படுகின்றதோ
தத்3 - அந்த செயல்கள்
தாமஸம் உச்யதே - தாமசமான செயல்கள் என்று சொல்லப்படுகிறது.
 
ஸ்லோகம்-26
म्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहममन्वितः ।
सिद्धयसिद्धयोर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥ 18-26
முக்த ஸங்கஹ - செயலிலும் அதன் பலனிலும் பற்றற்றவனாகவும், கடமைகளில் விருப்பு, வெறுப்பற்றவனாகவும்
அனஹம்வாதீ - நான் என்ற அகங்காரம் இல்லாதவன், கர்வமற்றவன், தன்னிடத்தில் இருக்கும் நற்பண்புகளையும், திறமைகளையும் பறைச் சாற்றிக் கொள்ளாதவனாகவும்
த்4ருதி உத்ஸாஹம் அமன்விதஹ - உறுதியும், உற்சாகமும் உடையவனாகவும், தடைகள் எவ்வளவு வந்தாலும் சோர்வடையாமல், மனம் தளராத உறுதியுடனும், முழுமனதுடனும், உற்சாகத்துடனும் செயல்களை செய்பவனாகவும்
ஸித்3தி4, அஸித்3தி4யோ நிர்விகாரஹ - வெற்றி, தோல்விகளினால் மனம் பாதிக்கப்படாதவனாகவும், மன சஞ்சலப்படாதவனாகவும்
கர்தா - செயல்களை செய்பவன்
ஸாத்த்விக உச்யதே - சாத்விகமானவன் என்று சொல்லப்படுகிறது.
 
ஸ்லோகம்-27
रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥ 18-27
ராகீ3 - பற்றுடன் இருப்பவன், விஷய போகத்தை அனுபவிக்க வேண்டுமென்று கருதுபவன்
கர்மபல ப்ரேப்ஸு - செயலின் பலனை விரும்புபவன்
லுப்3த4ஹ - லோபத்துடன் இருப்பவன்; தன்னிடத்திலிருக்கின்ற பொருளைப் பகிர்ந்து கொள்ளாதவன்; மற்றவர்களுடைய பொருட்களில் ஆசைப்படுபவன்
ஹிம்ஸாத்மக: - மற்றவர்களை துன்புறுத்தும் குணத்தையுடையவன்
அஶுசி:  - மனதுக்கு உள்ளேயும், வெளியேயும் தூய்மையற்றவன்
ஹர்ஷஶோகான்வித: - செயலின் விளைவில் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் பாதிக்கப்படுபவன்
கர்தா - இத்தகையவன்
ராஜஸ பரிகீர்த்தஹ - ராஜஸமானவன் என்று அழைக்கப்படுகிறான்
 
ஸ்லோகம்-28
अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैष्कृतिकोऽलसः ।
विषादी दीर्धसूत्री च कर्ता तामस उच्यते ॥ 18-28
அயுக்தஹ - மனம், சொல், வாக்கு இவைகளில் சஞ்சலத்துடன் இருப்பவன்; ஸ்திரமற்றவன்;  சொல்வதொன்று, செய்வதொன்று என்று செயல்படுபவன்
ப்ராக்ருத: - அறிவற்றவன்; குழந்தைத்தனமாக செயல்படுபவன்; என்ன தோன்றுகிறதோ அதை செய்பவன், அதை பேசுபவன்
ஸ்தப்3த4: - பணிவற்றவன்; வளைந்து கொடுக்காமல் நடந்து கொள்பவன்; பெரியோர்களை, சாஸ்திரங்களை மதிக்காதவன்
ஶட2 - வஞ்சகமுடையவன்; தம்மிடத்திருக்கும் திறமையை மறைத்துக் கொள்பவன்
நைஷ்க்ருதிகஹ - பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்; நல்லவன் போல் நடித்து திட்டமிட்டு பிறருடைய வாழ்க்கையை நாசம் செய்பவன்
விஷாதீ - எப்பொழுதுமே கவலைபட்டுக் கொண்டிருப்பவன்; மனதிருப்தி அற்றவன்
அலஸஹ - சோம்பேறியாக இருப்பவன்
தீ3ர்க3ஸூத்ரோ - தாமதமாக செயல் செய்பவன்; காலத்தை வீணாக்கி செயல்படுபவன்; காலத்தை வீணாக செலவழிப்பவன்
கர்தா தாமஸ உச்யதே – இவ்வாறு செயல்படுபவனை தாமஸன் என்று சொல்லப்படுகிறது.
 
ஸ்லோகம்-29
बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
प्रोच्यमानमशेषेण पृथाक्त्वेन धनञ्जय ॥ 18-29
தனஞ்ஜய - அர்ஜுனா!
புத்3தே4ஹ பே4தம் - புத்தியில் இருக்கின்ற வேற்றுமை
த்ருதேஹ ச ஏவ - உறுதியில் இருக்கின்ற வேற்றுமையையும்
குண த்ரிவித4ம் ஸ்ருணு - குணத்தின் அடிப்படையில் மூன்றுவிதமாக இருப்பதைக் கேட்பாயாக!
அஶேஷேண - முழுமையாகவும்
ப்ருதா2க்த்வேன - தெளிவாகவும்
ப்ரோச்யமானம் - கூறப்போவதைக் கேள்
 
ஸ்லோகம்-30
प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥ 18-30
இங்கு புத்தியான்து ஆத்ம தத்துவத்தை தவிர மற்றவற்றில் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறுகிறார்.
பார்த2 - ஹே அர்ஜுனா!
ப்ரவ்ருத்திம் ச - கர்ம மார்க்கத்தையும், செயல்படும் விதத்தையும்
நிவ்ருத்திம் ச - சந்நியாச மார்க்கத்தையும், தியாகம் செய்வதை பற்றியும்
கார்ய அகார்யம் - செய்ய தகுந்ததையும், செய்யக்கூடாததையும் அறிந்திருத்தல்; சுய-தர்மத்தையும், பர தர்மத்தையும் தெரிந்து வைத்திருத்தல்
ப4ய அப4யே - பயத்தைப்பற்றியும், அபயத்தைப் பற்றியும் நன்கு அறிந்திருத்தல்; எதைக்கண்டு பயப்பட வேண்டும், எதைக் கண்டு பயப்படக்கூடாது என்பதை நன்கு அறிந்திருத்தல் ஆகியவைகளே சாத்விகமான புத்தியாகும்.
சாத்விக புத்தி  - எல்லா சூழ்நிலைகளையும்; மனிதர்களையும், சொற்களையும், விஷயங்களையும் சரியாக புரிந்து கொள்கின்ற புத்தி
ப3ந்த4ம், மோக்ஷம் - எது பந்தம், எது மோட்சம் என்பதைப் பற்றிய சரியான அறிவு. இதைப்போன்று எந்தப் பொருட்கள் நன்மையைத் தரக்கூடியது, எந்த மனிதர்கள் நமக்கு நன்மையைத் தரக்கூடியவர்கள் என்பதை சரியாக அறிந்து வைத்திருத்தல்
யா வேத்தி - இவையெல்லாம் எது அறிகிறதோ
ஸா புத்தி ஸாத்விகீ - அதுவே சாத்விகமான புத்தியாகும்

ஸ்லோகம்-31
यया धर्ममधर्मं च कार्यं चाकर्यमेव च ।
अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥ 18-31
பார்த2  - ஹே பார்த்தா!
எந்த புத்தியானது விஷயங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றதோ அது ராஜஸமானது. தெளிவில்லாமை, உறுதியான சந்தேகத்தையுடையது ஆகியவைகள் ராஜஸமாகும்.
யயா தர்மம் ச அதர்மம் ச - தர்மத்தையும், அதர்மத்தையும்
கார்யம் ச அகார்யம் - செய்யத் தகுந்த காரியத்தையும், செய்யத்தகாத காரியத்தையும் கூட
அயதா2வதி - உள்ளபடியின்றி, நிச்சயமின்றி, சந்தேகத்துடனும்
ப்ரஜானாதி – அறிகின்றதோ
ஸ புத்3தி4 ராஜஸீ - அந்த வகையான புத்தியானது ராஜஸமானது
 
ஸ்லோகம்-32
अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥ 18-32
பார்த2  - ஹே பார்த்தா
அதர்மம் தர்மம் இதி ­- அதர்மத்தை தர்மமென்று
தமஸா ஆவ்ருதா - தமோ குணத்தால் மறைக்கப்பட்டு
யா மன்யதே - எந்த புத்தி நினைக்கின்றதோ
ஸர்வார்தா2ன் விபரீதாம் ச - எல்லாப் பொருட்களையும், சூழ்நிலைகளையும் உண்மையான தன்மை அறியாமல் தவறாக; மாறுபட்டவையாக நினைக்கின்றதோ
ஸா தாமஸீ - அத்தகைய புத்தி தாமசமானது.
 
ஸ்லோகம்-33
धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥ 18-33
பார்த2 யயா - ஹே பார்த்தா! எந்த
மன:ப்ராண இந்திரிக்ரியா: - மனம்,  பிராணன்,  புலன்கள் இவைகளினுடைய செயல்களை
யோகே3ன - முழு மனவொருமுகப்பாட்டுடன்,
அவ்யபி4சாரிண்யா - எந்த தடையும் இல்லாமல் இடைவிடாமல்
த்3ருத்யா தா4ரயதே - உறுதியானது தொடர்ந்து கொண்டிருக்கின்றாதோ
ஸா த்ருதி ஸாத்விகீ - அந்த உறுதியே சாத்விகமானதாகும்.
சாத்விகமான சாதனத்தை பின்பற்றும்போது இருக்கின்ற உறுதியே சாத்விக உறுதியாகும்.
 
ஸ்லோகம்-34
यया तु धर्मकामर्थान्धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलकाङ्क्षी धृतिः साल् पार्थ राजसी ॥ 18-34
பார்த2 யயா து த்4ருத்யா - ஹே பார்த்தா! ஆனால் எந்த உறுதியினால்
தர்ம காம அர்தா2ன்      - வாழ்க்கையில் அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவைகளை
தா4ரயதே - அடைய வேண்டும் என்ற உறுதி
ப்ரஸங்கே3ன - மிகுந்த பற்றோடு
ப2ல காங்க்ஷி - அடைய வேண்டும் என்ற உறுதி
ஸா த்4ருதி ராஜஸீ - இத்தகைய உறுதியானது ராஜஸமானதாகும்.
 
ஸ்லோகம்-35
यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी ॥ 18-35
பார்த2 யயா - ஹே பார்த்தா! எந்த உறுதியினால்
து3ர்மேதா4 - தீய புத்திக் கொண்டவன்
ஸ்வப்னம்  - அதிகமான உறக்கம், கற்பனை செய்வது
ப4யம்       - பயந்து கொண்டே இருத்தல்
ஶோகம்    - அடைந்த துயரத்தையே நினைத்துக் கொண்டிருத்தல்
விஷாத3ம் - மனக்குழப்பத்துடன் இருத்தல்
மத3மேவ   - சாஸ்தரத்திற்கு விரோதமான இன்பத்தை, பொருட்களை அடைதல்,
              அதர்மமான வழியில் செல்வத்தை சேர்த்தல்
ந விமுஞ்சதி - இவைகளையெல்லாம் விடாமல் உறுதியுடன் பற்றிக்கொண்டு
               இருக்கின்ற நிலை
ஸா தாமஸீ - இவைகளனைத்தும் தாமஸமானது.

 

ஸ்லோகம்-36
सुखं त्विदानीं त्रिविधं शृणृ मे भरतर्षभ ।
अभ्यासाद्रमते यत्र दुःखान्तं निगच्छति ॥ 18-36
கர்மத்தினால் வரும் சுகங்களும் மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஒரு சாதனத்தை பின்பற்றி அடைகின்ற பலன்களும் மூன்றாக பிhpக்கலாம்.
ப4ரதர்ஷப4 - ஹே அர்ஜுனா!
இதானிம் த்ரிவிதம் ஸுக2ம் -  மூன்றுவிதமான சுகத்தை
ஶ்ருணு மே - என்னிடமிருந்து கேள்.
யத்ர - எந்த விஷயத்தில்
அப்4யாஸாத் ரமதே - தொடர்ந்து செய்கின்ற முயற்சியால் இன்பத்தை அடைகிறான்
து:கா2ன்தம் நிக3ச்ச2தி  - துன்பத்தின் முடிவை அடைகிறான்.
ஒரு செயலை மீண்டும்,மீண்டும் தொடர்ந்து செய்து பழகிவிட்டால் அதிலிருந்து சுகத்தை அனுபவிக்கலாம். உதாரணமாக ஜபம் செய்வது முதலில் நமக்கு கஷ்டமாக இருக்கும். அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தோமானால் அதிலேயே சுகத்தை அனுபவிக்கலாம்.
 
ஸ்லோகம்-37
यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥ 18-37
யத்3 -  எந்தவிதமான சுகம்
அக்3ரே விஷமிவ - செயலின் தொடக்கத்தில் விஷத்தைப் போல கஷ்டமாக தோன்றினாலும்
பரிணாம அம்ருதோபமம் - முடிவில் அம்ருதத்தைப் போல சுகத்தைக் கொடுக்கும்.
தத் ஸுக2ம் ஸாத்த்விகம்  - அந்த சுகமானது சாத்விகமான சுகமாகும்.
ஆத்ம புத்3தி4 ப்ரஸாத3ஜம் - இந்த சுகம் ஒருவனுடைய புத்தியின் அமைதி, மனதின் தூய்மை இவைகளின் விளைவாக தோன்றுகிறது.
ப்ரோக்தம் - என்று கூறப்படுகிறது.
ஆத்ம புத்3தி4 ப்ரயாத3ஜம் - பரமாத்மாவை பற்றிய அறிவை அடைந்ததன் விளைவாக வருகின்ற சுகமும் சாத்விகமாகும்.
இந்த சுகம் நமக்குள்ளே அடையப்படுகின்ற சுகமாக இருப்பதனால். அவை நம்மையே சார்ந்திருக்கும்.
 
ஸ்லோகம்-38
विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥ 18-38
விஷய இந்த்3ரிய ஸம்யோகாத் - விஷயங்களும், புலன்களும் சேர்வதால்
யத்3 அக்3ரே அம்ருத உபமம் - எந்த சுகம் ஆரம்பத்தில் அம்ருதத்தை போலிருக்கிறதோ
பரிணாமே விஷமிவ - முடிவில் விஷத்தைப் போன்று துன்பத்தைக் கொடுக்கும்
தத்3 ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் - அந்த சுகமானது ராஜஸமானது என்று கூறப்படுகிறது.
ராஜஸ சுகத்தை அனுபவிப்பதினால் உடலின் சக்தி குறைந்து விடும். புலன்களின் சக்தியும் குறைந்து கொண்டே போகும். பிறகு முழுவதும் இழந்து விடுவோம், விவேக சக்தியும் இழந்து விடுவோம், ஞாபக சக்தியும் குறைந்து விடும், செல்வமும் சென்றுவிடும், உற்சாகமும் சென்றுவிடும். வாழ்க்கையை குறித்து பயமும், வெறுப்பும் வந்துவிடும்
 
ஸ்லோகம்-39
यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाह्रतम् ॥ 18-39
யத்3 அக்ரே அனுபந்தே4 - எந்தவொரு சுகமானது முதலிலும் முடிவிலும்
ஆத்மன மோஹனம் - மனதை மயக்கத்தை அடையச் செய்கிறதோ
நித்ரா, ஆலஸ்ய, பிரமாத3 உத்தம் - அதிக உறக்கம், சோம்பல், கவனக்குறைவு இவற்றிலிருந்து தோன்றுகின்ற சுகம்
தத்3 தாமஸம் உதா3ஹ்ருதம் - இவைகள் தாமஸமானது என்று கூறப்படுகிறது.
 
ஸ்லோகம்-40
न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणै ॥ 18-40
ப்ருதிவ்யாம் வா தி3வி - இந்த பூமியிலோ அல்லது மற்ற லோகத்திலோ
தேவேஷு - தேவதைகளிலும், தேவர்களிடத்திலும்
வா புன: - அல்லது இவற்றை தவிர வேறிடத்திலோ
ப்ரக்ருதி ஜை:  - ப்ரகிருதியிலிருந்து, மாயையிலிருந்து தோன்றிய
ஸத்தவம் - எந்தவொரு பொருட்களோ அல்லது உயிர்களோ
த்ரிபி4 குணை - இந்த மூன்று குணங்களிலிருந்து
முக்தம் ந அஸ்தி - விடுபட்டதாக எதுவும் இல்லை.
 
ஸ்லோகம்-41
ब्राह्मणक्शत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥ 18-41
பரந்தப  - எதிரிகளை வாட்டுகின்ற சக்தியுடைய அர்ஜுனா!
1. சத்துவகுண பிரதானமாகவும் பிறகு ரஜோ, தமோ என்ற வரிசையில் குணங்களை உடையவர்கள் பிராமணர்கள்
2. ரஜோ குணம் பிரதானமாகவும் பிறகு சத்துவம், தமோ என்ற வரிசையில் குணங்களை உடையவர்கள் சத்திரியர்கள்
3. ரஜோ குணம் பிரதானமாகவும் தமோ, சத்துவம் என்ற வரிசையில் குணங்களை உடையவர்கள் வைசியர்கள்
4. தமோ குணம் பிராதானமாகவும் ரஜோ, சத்துவ குணங்களை உடையவர்கள் சூத்திரர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
ப்ராஹ்மண க்ஷத்ரிய விஶாம் ஶூத்ராணாம்  - பிராமண, சத்திரி, வைசிய, சூத்திரன் என்கின்ற நான்கு விதமான வர்ணத்தை சார்ந்தவர்களிடமிருந்து
கர்மாணி - தோன்றுகின்ற செயல்கள்
ஸ்வபா4வ ப்ரப4வை குணை: - குணங்களின் அடிப்படையில்தான் இருக்கும்.
இந்த குணங்கள் அவர்கள் மனதிலுள்ள சம்ஸ்காரங்களிலிருந்தும் (வாசனைகளில் இருந்தும்) உண்டாகுகின்றன.
ப்ரவிப4க்தானி - பிரிக்கப்படுகின்றன.
 
ஸ்லோகம்-42
शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥ 18-42
ம: த3ம, தப: - மனவடக்கம், புலனடக்கம், எளிமையான வாழ்க்கை
ஶௌசம், க்ஷாந்தி - அக-புற தூய்மை, பொறுமை, மன்னித்தல்
ஆர்ஜவம் ஏவ ச - மேலும் மனம், உடல், சொல் இவற்றில் நேர்மையும்
ஞானம், விக்ஞானம் - சாஸ்திரத்தை படித்தல், மனனம் செய்தல், அதன் பொருளை அறிந்து கொள்ளுதல்
ஆஸ்திக்யம் - கர்மத்தின் விளைவாக வரும் கண்ணுக்கு தெரியாத பாவ-புண்ணியங்களை அடைவோம் என்பதில் நம்பிக்கை உடையவர்கள், கர்ம பலனிலும் ஈஸ்வரனிடத்திலும் நம்பிக்கையுடையவர்கள்
ப3ரஹ்ம கர்ம ஸ்வபா4வஜம் - பிராமணர்களுக்குரிய இயல்பான செயல்களாகும்.
 
ஸ்லோகம்-43
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्चरभावश्च क्षात्रं कर्म स्वभावजं ॥ 18-43
ஶௌர்யம் - சூரத்தனமும், வீரத்தனமும் (உடலளவில் இருக்கின்ற தைரியம்)
தேஸஹ, த்3ருதி - மனோதைரியம், மனவுறுதியும் உடையவர்கள்
தா3க்ஷயம் - கஷ்டமான நேரத்தில் உடனடியாக செயல்புரிபவர்கள்
யுத்3தே4 ச அப்யபலாயனம் - போரில் பயந்து புறங்காட்டாமல் இருத்தல்
தா3னம் - கொடைத்தன்மையும்
ஈஶ்வரபாவம் - ஆளும் தன்மையும், தலைமைத் தாங்கும் சக்தியும்
க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா4வஜம்  - சத்திரயர்களுக்குரிய இயல்பான செயல்களாகும்.
 
ஸ்லோகம்-44
कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥ 18-44
க்ருஷி கௌரக்ஷய வாணிஜ்யம் - உழவு செய்தலும், பசுக்களை காப்பதும், வாணிபம் செய்தலும்
வைஶ்யகர்ம ஸ்வபாவஜம் - இவைகள் வைசியர்களின் இயல்பான செயல்களாகும்
பரிசர்யாத்மகம் - அனைவருக்கும் சேவை செய்தல், வேலை செய்தல்
கர்ம ஶூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் - சூத்திரர்களின் இயல்பான செயல்களாகும்.
 
ஸ்லோகம்-45
स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥ 18-45
ஸ்வே ஸ்வே நர - அவரவர்களுடைய அந்தஸ்து, ஆசிரம, வர்ணத்தை சேர்ந்த மனிதன்
கர்மணி அபிரத: - செயல்களில் முழுமனதுடன் ஈடுபட்டிருந்தால்
ஸம்ஸித்3தி4ம் லப4தே - மனத்தூய்மையை அடைகிறான்.
ஸ்வகர்மனிரதஹ - தன்னுடைய இயல்பான செயலில் ஈடுபட்டிருப்பவன்
யதா3 - எப்படி செயல்களைச் செய்து
ஸித்3தி4ம் விந்த3தே - மனத்தூய்மையை அடைகின்றான் என்ற
தத்3 ஸ்ருணு - அந்த முறையை என்னிடமிருந்து கேள்.
 
ஸ்லோகம்-46
यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥ 18-46
யுத: ப்ரவ்ருத்தி பூ4தானாம் - எவரிடமிருந்து ஜீவராசிகள தோன்றியதோ
யேன ஸர்வமித3ம் ததம்  - எந்த ஈஸ்வரனால் உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டு இருக்கிறதோ லயமடைகின்றதோ
தம் அர்சயம் - அவரை பூஜை செய்தல், வழிபடுதல்
ஸ்வகர்மணா - தன்னுடைய கடமையை வழிபாடாகக் கொண்டிருப்பவன்
ஸித்3தி4ம் விந்த3தி மானவ: - மனத்தூய்மையை அடைகிறான்.
 
ஸ்லோகம்-47
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्टितात् ।
स्वभावनियतं कर्म कृर्वन्नाप्नोति किल्बिषम् ॥18-47
பரத4ர்மாத் ஸ்வனுஷ்டிதாத்: - மற்றவர் தர்மத்தை நன்கு செய்வதைவிட
ஸ்வத4ர்மா விகு3ண: - நம்முடைய கடமைகளை சரியாக செய்ய முடியவில்லையென்றாலும், அதுவே
ஸ்ரேயான் - சிறந்ததாகும்.
ஸ்வபா4வ நியதம் கர்ம - நமது இயல்பான செயல்களை
குர்வன் - செய்யும் போது
கில்மிஷம் ந ஆப்னோதி - செய்பவனுக்கு பாவம் வருவதில்லை.
 
ஸ்லோகம்-48
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥ 18-48
கௌந்தேய - ஹே அர்ஜுனா!
ஸஹஜம் கர்ம - தனக்குரிய இயல்பான கடமைகளில்
ஸ தோ3ஷம் அபி- ஏதாவது குறைகளிருந்தாலும் கூட
ந த்யஜேத் - அவைகளை விட்டுவிடக்கூடாது.
ஹி ஸர்வாராம்பா4 - ஏனெனில் எல்லா செயல்களும் ஏதோ ஒரு வகையில்
தோ3ஷேண ஆவ்ருதா - ஏதாவது ஒரு குறையினால் சூழப்பட்டுள்ளது.
தூ4மேன அக்னி இவ - எப்படி நெருப்பும், புகையும் சேர்ந்து இருக்கின்றதோ அதுபோல செயல்களும் குறைகளும் சேர்ந்திருக்கலாம்.
 
ஸ்லோகம்-49
असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥ 18-49
ஸர்வத்ர அஸக்த புத்தி - எல்லாவற்றிலும் பற்றற்ற நிலையோடு
ஜிதாத்மா - மனதை அடக்கியவன்; மனதை வசப்படுத்தியவன்
விக3தஸ்ப்ருஹ - மனதளவில் எதன்மீதும் ஆசையில்லாதவன் (நாம் அடையாத பொருட்களின் மீது பற்றற்று இருக்கவேண்டும்.)
ஸன்யாஸேன அதிகச்ச2தி  - சந்நியாசத்தினால்; ஞானயோகத்தினால்
'நானே ஆத்மாஎன்ற ஞானத்தை அடைந்தவன்.
பரமாம் - மிகவும் மேலான.
நைஷ்கர்ம்ய ஸித்தி4ம் - நிஷ்கர்ம - செயலெதுவும் இல்லாத நிலையை அடைகிறான்;
 
ஆத்மா எப்போதும் செயலற்று இருக்கும். அனாத்மாதான் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். எனவே ஆத்மஞானத்தை அடைந்தவன் எப்போதும் செயலெதுவும் செய்யாத நிலையில் இருந்து கொண்டிருப்பான்.
 
ஸ்லோகம்-50
सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
समासेनैव कौन्तेय निष्टा ज्ञानस्य या परा । 18-50
கௌந்தேய - ஹே அர்ஜுனா!
ஸித்தி4ம் ப்ராப்தஹ - மனத்தூய்மையை அடைந்தவன்
தா2 ப்ரஹ்ம ஆப்னோதி - எந்தவிதத்தில் பிரம்மத்தை அடைகின்றானோ
ததா2 - அந்த முறையை
ஸமாஸேன ஏவ- சுருக்கமாகவே
நிபோ3த4 - என்னிடமிருந்து அறிந்து கொள்.
யா - பிரம்மத்தை அடைவதே
ஞானஸ்ய பரா நிஷ்டா - ஆத்மஞானத்தின் மேலான பலன்.

ஸ்லோகம்-51
बुद्धया विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥ 18-51
புத்த4ய விஶுத்3த4யா யுக்தஹ - ஆத்மாவை நிச்சயம் செய்துவிட்ட தெளிவான புத்தியுடன்சிரவண, மனன சாதனங்களின் மூலம் அறியாமையையும், சந்தேகத்தையும் நீங்கப் பெற்று ஆத்ம ஞானத்தை தெளிவாக அடைந்த பிறகு
த்4ருத்ய ஆத்மானம் நியம்ய ச - சாத்விகமான உறுதியுடன் மனதை நெறிபடுத்து
ஶப்3தா3தீன் விஷயாம் த்யக்த்வா - சப்தம் போன்ற புலன்களின் விஷயத்தை துறந்துவிடுவாழ்க்கைக்கு தேவையற்ற விஷயங்களில் புலன்களை செல்லவிடாமல் தடுத்தி நிறுத்த வேண்டும். இதுவே த3ம என்று அழைக்கப்படுகிறது.
ராகத்3வேஷ வ்யுதஸ்ய ச - விருப்பு, வெறுப்புக்களை முற்றிலும் மனதாலும் நீக்கிய நிலையை உடைய வைராக்கியத்தை அடைந்துவிடு.

ஸ்லோகம்-52
विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥ 18-52
விவிக்தஸேவி - மனிதர்களோடு விலகி தனிமையிலிருக்க வேண்டும்
க்3ராம்யகதா - ஊர்வம்புகளை பேசக்கூடாது, தேவையில்லாத விஷயங்களை கேட்கக்கூடாது
லக்3வாஶீ  - அளவோடு உணவருந்த வேண்டும். சோம்பலும், உறக்கமும் வராத அளவுக்கு; எளிதில் செரிக்கக்கூடிய உணவாக இருக்க வேண்டும்.
யத் வாக், காய, மானஸ: - சொல், உடல், மனம் இவைகளை நெறிப்படுத்த வேண்டும்.
தியானம் என்ற சாதனத்தை பயன்படுத்தி மனவொருமுகப்பாட்டை அடைய வேண்டும். ஆத்ம சிந்தனையோடே எப்பொழுதும் இருக்க வேண்டும்.
வைராக்யம் ஸமுபாஶ்ரித: - திடமான வைராக்கியத்தை அடைந்தவனாகவும் இருக்க வேண்டும்.

ஸ்லோகம்-53
अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥ 18-53
அஹங்காரம் - ஆத்மாவல்லாத விஷயத்தில் நான் என்ற அபிமானம், சாத்விக மனதை அடைந்துவிட்டேன் என்ற கர்வம்
ப3லம் - வலிமையாக செயல்படுபவைகளான ஆசை, கோபம் போன்றவற்றில் உள்ள உறுதி
த3ர்பம் - செல்வம், புகழ், அறிவு போன்றவற்றில் உள்ள கர்வத்தையும்,
காமம் க்ரோத4ம் - புலனுகர் போகப் பொருட்களில், மனிதர்கள் மீது வைக்கும் ஆசையும், கோபத்தையும்
பரிக்3ரஹம் - தன்னிடத்திருக்கும் செல்வங்கள் எதுவும் தனக்கு சொந்தமானது என்ற எண்ணமில்லாதவனாக இருக்க வேண்டும். அவற்றை பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் தன்னுடையது என்ற எண்ணமில்லாமல், எல்லாமே ஈஸ்வரனுடையது என்ற பாவத்தையும்
நிர்மமஹ - என்னுடையது என்ற எண்ணம்
விமுச்ய - மேற்கூறிய அனைத்தையும் விட்டுவிட்டு
ஶாந்தஹ - மனதை அமைதியுடனும், நிறைவுடனும் இருப்பவன்
ப்3ரஹ்ம பூ4யாய கல்பதே - பிரம்ம ஸ்வரூபமாகவே இருப்பதற்கான தகுதியை அடைகிறான்.

ஸ்லோகம்-54
ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥ 18-54
ப்3ரஹ்மபூ4த:  - பிரம்ம ஸ்வரூபத்தில் ஒன்றியவன்
ப்ரஸன்னாத்மா - அமைதியான மனதுடன் இருப்பான்
ஶோசதி ந காங்க்ஷதி - துயரத்தை அனுபவிப்பதில்லை, எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் இல்லாமலிருப்பான், மகிழ்ச்சியுடன் இருப்பான்.
ஸம: ஸர்வேஷு பூ4தேஷு  - எல்லா ஜீவராசிகளிடத்திலும் சமநோக்கு உடையவனாக இருப்பான்.
மத்ப4க்திம் லப4தே பராம் - என்னுடைய மேலான பக்தியை பெறுகிறான்.
இதிலிருந்து பக்தியானது சாதனமாகவும், சாத்தியமாகவும் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

ஸ்லோகம்-55
भक्त्या मामभिजानाति यावन्यश्चास्मि तत्त्वतः ।
ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥ 18-55
ப்4க்த்யா  - பக்தியின் மூலமாக
மாம் அபி4ஜானாதி - என்னை அறிகின்றான், என் ஸ்வரூபத்தை அறிகின்றான் பிறகு என்னையே அடைகின்றான்.
யாவான் அஸ்மிநான் எத்தகைய தன்மையுடன் கூடியவன்,  எப்படி இருக்கின்றேன் (சகுண பிரம்ம ஸ்வரூபத்தை குறிக்கின்றது)
யா ச  - நான் யார் என்றும் (என்னுடைய நிர்குண பிரம்ம ஸ்வரூபத்தை)
தத்த்வத: - உண்மையில் உள்ளது உள்ளபடியே அறிகின்றான்.
ததஹ மாம் தத்த்வதஹ ஞாத்வா- என்னை உள்ளது உள்ளபடியே
விஶதே தத்3 அனந்தரம் - அறிந்த அக்கணமே என்னோடு ஐக்கியமாகிவிடுகின்றான்.

குறிப்பு:
மேற்சொல்லப்பட்ட கருத்திலிருந்து சாதனா பக்தியை பாவனை பக்தி என்றும், செயல் பக்தி என்றும் இரண்டாக பிரிக்கலாம். செயல் பக்தி என்பது உபாசனை, ஜபம், நாம சங்கீர்த்தனம், கல்யாண குணங்களைக் கேட்டல், பாடுதல் போன்றவையாகும். பாவனா பக்தி என்பது பகவானின் உபதேசங்களைக் கேட்பது, அதில் நிலைப்பெறுவது. இதனால் சாத்விக பக்தியை அடைகிறான்.
 
கோவிலுக்கு செல்பவன், பூஜை செய்பவன், இறைவனுக்கு சேவை செய்பவனும் பக்தன்தான். வேதாந்த விசாரம் செய்பவனும் பக்தன்தான். பக்தியானது ஞானநிஷ்டை அடையும்வரை தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டும். விசாரம் என்பதே பகவானை வழிபடுவதற்கு ஒப்பாகும்.

ஸ்லோகம்-56
सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥ 18-56
ஸர்வகர்மான் அபி ஸதா3 குர்வான் - எப்பொழுதும் எல்லா செயல்களையும் செய்து கொண்டிருப்பினும்
மத்வ்யபாஶ்ரய: - என்னையே புகலிடமாக கொண்ட கர்மயோகி,  என்னையே  உறுதியாக சார்ந்திருப்பான்
மத் ப்ரஸாதாத் அவாப்னோதி - எனது அருளால், அனுக்கிரகத்தினால் என்னையே அடைகிறான்.
ஶாஶ்வதம் பத3ம் அவ்யயம் - என்றுமுள்ளதும்; மாறாமலிருக்கின்றதுமான; தேய்வடையாததுமான பரம பதத்தை அடைகிறான்.

ஸ்லோகம்-57
चेतसा सर्वकर्माणि सयि सन्नस्य मत्परः ।
बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव ॥ 18-57
சேதஸா - மனப்பூர்வமாக விவேக புத்தியுடனும் உணர்வினாலும்
ஸர்வகர்மாணி - எல்லா செயல்களையும்
மயி ஸன்னஸ்ய - என்னிடம்(இறைவனிடம்) அர்ப்பணம் செய்து
மத்பரஹ - என்னை அடைவதே லட்சியமாக கொண்டு மேலும்
புத்3தி4யோகம் உபாஶ்ரித்ய - கர்மயோகத்தை கடைப்பிடித்துக் கொண்டும்,
ஸததம் மச்சித்த: ப4வ - எப்போதும் என்னையே மனதில் நினைத்துக் கொண்டவனாகவும் இருப்பாயாக.

ஸ்லோகம்-58
मच्चित्तः सर्वदुर्गाणि सत्प्रसादत्तरिष्यसि ।
अथ चेत्त्वमहंकारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥ 18-58
மச்சித்தஹ - என்னையே நினைத்துக் கொண்டவனாக இருந்தால்
ஸர்வதுர்காணி - எல்லாவிதமான தடைகளையும் (மனதில் இருக்கின்ற அறியாமையும், ஆசைகளையும்)
மத்ப்ராஸதா3த் - எனதருளால்
தரிஷ்யஸி - எளிதாக கடந்தவிடுவாய்
அத2- மேலும்
அஹங்காரன் - அகங்காரத்தின் காரணமாக என்னுடைய சொற்களை
ந ஶ்ரோஷ்யஸி ­- கேட்காவிட்டால்
சேத் த்வம் வினங்க்ஷ்யஸி - நீ துயரத்தைத்தான் அனுபவிப்பாய்.

ஸ்லோகம்-59
यदहंकारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्तवां नियोक्ष्यति ॥ 18-59
யத3 அஹங்காரம் ஆஶ்ரித்ய - எந்த அகங்காரத்தின் வசப்பட்டு
ந யோத்ஸ்ய இதி மன்யஸே - நான் யுத்தம் செய்யமாட்டேன் என்று நினைத்த
தே ஏஷ வ்யவஸாய மித்2யா - உன்னுடைய இந்த முடிவு பொய்யானது
ப்ரகிருதி த்வாம் நியோக்ஷ்யதி - உன்னுடைய இயல்பான குணமே உன்னை வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்தும்.

ஸ்லோகம்-60
स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।
कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोपि तत् ॥ 18-62
இதில் பகவான் பொதுவான இயற்கையின் நியதியை கூறுகிறார். ஒவ்வொருவரும் தன்னிடத்தில் இயல்பாக இருக்கின்ற குணத்தின் அடிப்படையில்தான் செயல்படுவார்கள். நாம் இயல்பாக தர்மப்படி இருந்தால் அதையொட்டிதான் செயல்படுவோம். அதர்மத்தோடிருந்தால் முயற்சி செய்து தர்மத்தோடு வாழும் வகையில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

கௌந்தேய - ஹே அர்ஜுனா!
ஸ்வபாவஜேன ஸ்வேன கர்மணா - இயல்பாகவுள்ள உன்னுடைய கர்ம வினையினால்
நிபத்3த4ஹ - கட்டப்பட்டு
யத் மோஹாதி - எந்த செயலை மோக வசத்தினால்
கர்தும் ந இச்சஸி - செய்ய விரும்பவில்லையோ
தத் அபி கரிஷ்யஸி - அதையும் கூட செய்யப்போகிறாய்.
நம் அறிவு ஒன்றை செய்யக்கூடாது என்று தடுத்தாலும் சுபாவமான குணத்தினால் அதை செய்யும்படி நேர்ந்துவிடும்.

ஸ்லோகம்-61
ईश्वरः सर्वभूतानां ह्रद्देशेऽर्जुन तिष्टति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥ 18-61
அர்ஜுன - ஹே அர்ஜுனா!
ஸர்வபூதானாம் - எல்லா ஜுவராசிகளின்
ஹ்ருத்தேஶே திஷ்டதி ஈஶ்வர:- இதயத்தில் ஈஸ்வரன் வீற்றிருக்கிறார்.
யந்த்ராருடானி மாயயா - தம்முடைய மாயா என்ற சக்தியினால் இயந்திரத்தை போல
ப்ராமயன் ஸர்வபூதானி - எல்லா உயிரினங்களையும் சுழலச் செய்து கொண்டு இருக்கிறார்.

எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் இருந்து கொண்டு மாயையின் உதவியால் இயந்திரத்தைப் போல அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஜீவனும் செய்கின்ற செயல்களுக்கேற்ப பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்லோகம்-62
तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं ॥ 18-62
பா4ரத - ஹே அர்ஜீனா!
தம் ஈவ ஶரணம் ஸர்வ பா4வேன க3ச்ச2 - அந்த ஈஸ்வரனையே எல்லாவிதத்திலும் முழுமனதுடன் தஞ்சம் அடைவாயாக!
நாம் போக்தாவாக இருக்கும்போது கிடைத்ததை முழமனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே, இறைவனையே சரணாகதி அடைதலாகும்.
தத் ப்ரஸாதா3த் - அந்த ஈஸ்வரனின் அருளால்
பராம் ஶாந்திம் - மேலான மன அமைதியையும், மனநிறைவையும்
ஶாஶ்வதம் ஸ்தா2னம் ப்ராப்யஸி - நிலையான பரமபதத்தை அடைவாய்.

ஸ்லோகம்-63
इति ते ज्ञानमाख्यातं गुह्याद्गुह्यतरं मया ।
विमृश्यैतदसोषेण यथेच्छसि तथा कुरु ॥ 18-63
இதி தே - இவ்வாறு உனக்கு
மயா ஞான ஆக்2யாதம் - என்னால் கீதா சாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது
கு3ஹ்யாத்3 கு3ஹ்யதரம் - இது ரகசியங்களைக் காட்டிலும் ரகசியமானது. இந்த உபதேசத்தை புரிந்து கொள்வது மிகக் கடினம். இது மிகவும் உயர்ந்தது.
ஏதத் விம்ருஶ்ய அஸோஷேன - இந்த உபதேசத்தை நன்கு முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு
யதா2 இச்சஸி ததா2 குரு - எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய்.
ஒருவருடைய மனப்பக்குவத்திற்கேற்ப அவனுக்கு சுதந்திரம் கொடுக்கலாம். பொறுப்பு உணர்ச்சியோடு இருப்பவனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கலாம். கீதா சாஸ்திரம் என்பது விதி சாஸ்திரம் அல்ல. இதில் கூறப்பட்டவைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் பின்பற்றினால் மேலான பலனை அடையலாம்.

ஸ்லோகம்-64
सर्वगुह्यतमं भूयः शृणृ मे परमं वच ।
इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥ 18-64
ஸர்வகு3ஹ்யதமம் - எல்லா வகையிலும் மிகவும் ரகசியமானதுமான
மே பரமம் வசஹ பூய ஶ்ருணு - என்னுடைய மேலான உபதேசத்தை மீண்டும் கேட்பாயாக.
இஷ்டஹஅஸி த்3ருடம் மே - எனக்கு நீ மிகப்பிரியமானவனாக இருக்கிறாய்.
ததஹ தே ஹிதம் இதி - ஆகையால் உன்னுடைய நன்மைக்காக இதை மீண்டும்
வக்ஷ்யாமி - நான் கூறுகிறேன்.

ஸ்லோகம்-65
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्क्रुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥ 18-65
வேதம் கொடுக்கும் அறிவானது இரண்டாக இருக்கிறது. அவைகள் 1. தர்மத்தைப் பற்றியது, 2. பரமாத்மாவை பற்றியதாகும். முதல் அறிவைப்பற்றிய சாராம்சம் இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். இரண்டாவது அறிவை அடுத்த ஸ்லோகத்தில் கூறியிருக்கின்றார். கர்மத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினால் மனத்தூய்மையை அடையலாம் என்பதையும் சுருக்கமாக இதில் கூறியிருக்கிறார்.
ஹேஅர்ஜீனா! நீ
மத்யாஜீ - எனக்காக அனைத்து செயல்களையும் செய்வாயாக. செயல்களின் பலனில் பற்றில்லாமல் இருப்பாயாக. பலனை எனது பிரசாதமாக கருதுவாயாக.
மன்மனஹ ப4வ - என்னிடமே மனதை செலுத்தியவனாக இரு. என்னை அடைவதே இறுதி லட்சியமாக கொண்டிருப்பாயாக.
மத்பக்தஹ - என் மீது பக்தி கொண்டிருப்பாயாக. பக்தியோகத்தை கடைப்பிடிப்பாயாக.
மாம் நமஸ்க்ரு - என்னையே வணங்க வேண்டும். என்னிடத்தில் சரணடைந்து விடு. அதனால் உன்னுடைய அகங்காரம் சென்றுவிடும்.
மாம் ஏவ ஏஷ்யஸி - இப்படி செய்வதால் நீ என்னையே அடைவாய்.
ஸத்யம் தே ப்ரதிஜானே - சத்தியமாக உனக்கு நான் வாக்குறுதி கொடுக்கிறேன்
ப்ரியஹ அஸி மே - ஏனெனில் நீ எனக்கு பிரியமானவனாக இருக்கிறாய்.

ஸ்லோகம்-66
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्ष्ययिष्यामि मा शुचः ॥ 18-66
கீதாபோசத்தை பின்பற்றி அறிவை அடைந்துவிட்டால் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்துவிடலாம். இதில் ஞானயோகம், ஞானப்பலன் ஆகியவற்றை கூறுகிறார்.
ஞானயோகம் - வேதாந்த சிரவணம், மனனம், நிதித்யாசனம் ஆகியவைகள் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான சாதனங்களாக இருக்கிறது. இந்த அறிவை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். ஆத்மவிசாரம் செய்ய வேண்டும். மனத்தூய்மை அடைந்தால்தான் விசாரத்தினால் அறிவை அடைய முடியும்.
 
ஸர்வத4ர்மான் - செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும்
பரித்யஜ்ய - என்னிடம் அர்ப்பணம் செய்துவிடு.
(இது அதர்மத்தை முழுமையாக விட்டுவிட்டு தர்மப்படி வாழ்பவனுக்குத்தான் பொருந்தும்.; மனத்தூய்மை அடைந்தவனுக்குத்தான் இந்த உபதேசம் பொருந்தும்).
மாம் ஏகம் - அத்வைதமாக, நிர்குணமாக இருக்கின்ற என்னையே
ஶரணம் வ்ரஜ - சரணடைவாயாக! ஆத்ம ஞானத்தினால் அகங்காரத்தை விட்டுவிடுவாயாக.
 
மனத்தூய்மை அடைவதற்கு என்னென்ன செயல்களை மேற்கொண்டாயோ அவைகள் அனைத்தையும் ஆத்மஞானத்திற்கு பிறகு விட்டுவிடுவாயாக என்று பகவான் கூறுகிறார். பிறகு ஞானயோக சாதனங்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய செயல்களில் ஈடுபடுவாயாக. அதன்மூலம் நிர்குண ஸ்வரூபமான என்னை சரணடைவாயாக. ஞானத்தினால் அகங்காரத்தை விட்டுவிடுவாயாக. பிரம்மன் ஒன்றுதான் என்ற அறிவை அடைந்து அகங்காரத்தை அழித்துவிடு.
 
அஹம் த்வா ஸர்வ - நான் உன்னை எல்லா
பாபேப்4ய பாவ-புண்ணியங்களிலிருந்தும்
மோக்ஷயிஷ்யாமி - விடுவிப்பேன்
மா ஶுச - ஆகவே வருத்தப்படாதே! துயரப்படாதே!
 
பாவ-புண்ணியங்கள்(பாபேப்4ய) நம்மை சம்சாரத்திலேயே வைத்திருக்கும். பாவம் துன்பத்தையும், புண்ணியம் இன்பத்தையும் கொடுத்துத்தான் தீரும். எனவே அதற்கேற்ற உடலும், உலகத்தையும் கொடுத்து இதை நிறைவேற்றும். பாவம் அறியாமையையும் கொடுத்து, இந்த உடலை நான் அபிமானிப்பதற்கு காரணமாக இருக்கிறது. இதையே மோகம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பாவம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் இருப்பதால் பகவான் அனைத்து பாவங்களில் இருந்தும் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
 
ஸ்லோகம்-67
इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ 18-67
இதம் தே    - உனக்கு கூறப்பட்ட இந்த உபதேசம்
அதபஸ்காய - தவம் செய்யாதவர்களுக்கு, தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு
ந வாச்யம் - கூறக்கூடாது
அப4க்தாய ச ந - குரு, சாஸ்திரம், இறைவன் ஆகியோர்களிடம் பக்தி இல்லாதவனுக்கு
கதா3சன ந வாச்யம் - ஒருபோதும் சொல்லக்கூடாது
ந ச ஶுஶ்ருஷவே - கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது
யஹ மாம் அப்4யஸூயதி - எவனொருவன் என்னிடம் குறை காண்கின்றானோ, என் மீது சிரத்தையில்லாமல் இருக்கிறானோ அத்தகையவனுக்கும் சொல்லக்கூடாது.
 
ஸ்லோகம்-68
य इदं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
बक्तिं मयि परां ख्रुत्वा मामेवैष्यत्यसंशयः ॥ 18-68
யஹ - யாரொருவன்
இமம் பரமம் குஹ்யம் - இந்த மிக மேலானதும், ரகசியமானதுமான கீதா சாஸ்திரத்தை
மத்3ப4க்தேஷு அபி4தா4ஸ்யதி - என்னுடைய பக்தர்களுக்கு சொல்வானோ
மயி பராம் பக்திம் க்ருத்வா - அவர்கள் என்னிடம் உயர்ந்த, அன்புமிகுந்த பக்தியுடையவர்களாவர்
ஸஹ மாம் ஏவ ஏஷ்யதி - அவன் என்னையே அடைகிறான்
அஸம்ஶயஹ - இதில் சந்தேகமில்லை
 
ஸ்லோகம்-69
न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
भविता न च मे तस्माद्न्यः प्रियतरो भुवि ॥ 18-69
ச பு4வி தஸ்மாத் - அப்படியே இந்த பூமியில் அவனைக்காட்டிலும்
மே ப்ரியதர அன்ய ந ப4விதா - எனக்கு மிக ப்ரியமான வேறொருவன் இருக்கப் போவதில்லை.
மனுஷ்யேஷு - மனிதர்களுக்குள்
மே ப்ரியக்ருதம் - எனக்கு பிரியமான காரியத்தை செய்கின்றவன்
தஸ்மாத் - அவனைக்காட்டிலும்
கஶ்சித் ச ந       - வேறு யாருமில்லை
ச பு4வி தஸ்மாத் - அப்படியே இந்த பூமியில் அவனைக்காட்டிலும்
மே ப்ரியதர அன்ய ந ப4விதா - எனக்கு மிகவும் பிரியமான வேறொருவன் இருக்கப்போவதில்லை.
 
ஸ்லோகம்-70
अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः । 
ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥ 18-70
இறைவழிபாட்டிலே மிகவும் உயர்ந்தது இந்த கீதாபோசத்தை கேட்பது என்று பகவான் கூறுகிறார். நான்கு வகையான ஜபம் சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகள்
1. பகவான் நாமத்தை சத்தமாக உச்சரித்து வழிபடுவது
2. நமக்கு மட்டும் கேட்பது போல சொல்லிக் கொண்டிருப்பது
3. மனதிலே உச்சரித்தல்
4. பகவானுடைய உபதேசத்தை காது வழியே கேட்டு அறிவை அடைதல்
ஆகியவைகளாகும். இதில் நான்காவது வகையான ஜபமே மிகமிக உயர்ந்ததாக பகவான் சொல்கிறார்.
 
இமம் தா4ம்யம் ஸம்வாதம் ஆவயோ - இந்த மேலான தர்மம் நிறைந்த எங்கள் இருவருடைய உரையாடலை
அத்4யேஷ்யதே - யார் யார் கேட்கின்றார்களோ
தேன - அவர்களால்
ஞானயக்ஞேன - ஞான வேள்வியினால்
அஹம் இஷ்ட ஸயாம் - நான் பூஜிக்கப்பட்டவனாகின்றேன்.
இதி மே மதி: - இது என்னுடைய கருத்தாகும்
 
ஸ்லோகம்-71
श्रद्धावाननसूयश्च शृनृयादपि यो नरः ।
सोऽपि मुक्तः शुभांल्लोकान्प्राप्नुयातुण्यकर्मणाम् ॥ 18-71
யஹ நர - எந்த மனிதன்
ஶ்ரத்3;தா4வான் - முழுநம்பிக்கையுடனும் ( குரு, சாஸ்திரம்)
அனுஸூயஶ்ச - குறை காணதவனாகவும் (உபதேசத்தில்)
ஶ்ருணயாத்3 அபி - இந்த கீதா சாஸ்திரத்தை கேட்கின்றானோ
ஸஹ அபி - அவனும் கூட
முக்த: - பாவங்களிலிருந்து விடுதலை அடைந்து
புண்ய கர்மணாம் - புண்ணியங்களால் அடையப்படுகின்ற
ஶுபா4ன் லோகான் - சிறந்த புண்ணிய உலகங்களை; சுகத்தைக் கொடுக்கின்ற உலகங்களை
ப்ராப்னுயாத் - அடைவான்
 
ஸ்லோகம்-72
कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसम्मोहः प्रनष्टस्ते धनञ्जय ॥ 18-72
பார்த2 - ஹே அர்ஜுனா!
ஏதத் - இந்த உபதேசம்
த்வயா ஏகாக்3ரேண சேதஸா - உன்னால் ஒருமுகப்பட்ட மனதோடு
கச்சித3 ஸ்ருதம் - கேட்கப்பட்டதா?
தனஞ்ஜய - தனஞ்ஜயா!
தே அக்ஞான ஸம்மோஹம் - அறியாமையினால் உண்டான உன்னுடைய மோகமானது
கச்சித்3 ப்ரனஷ்டஹ - அழிந்து விட்டதா?
 
ஸ்லோகம்-73
अर्जुन उवाच ।
नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥ 18-73
அர்ஜுனன் கூறுகிறான்:
நஷ்டோ மோஹ - என்னுடைய மோகம் அழந்தது.
ஸ்ம்ருதி லப்3தா4 - அறிவும் அடையப்பட்டுவிட்டது
அச்யுத - அச்சுத பகவானே!
த்வத் ப்ரஸாதாத்3 - உங்களுடைய அருளால், உபதேசத்தினால்
ஸ்தி2தஹ அஸ்மி - உங்களுடைய கட்டளையில் உறுதியாக இருக்கிறேன்.
க3தஸந்தே3ஹ: - சந்தேகமற்றவனாக இருக்கிறேன்.
தவ வசனம் - உங்கள் ஆணையை
கரிஷ்யே - நிறைவேற்றுவேன். என்னுடைய கடமையை செய்ய உறுதியாக இருக்கிறேன்.
 
என்னுடைய மோகம் மற்றும் தர்ம-அதர்ம, ஆத்ம-அனாத்ம விஷயத்தில் உள்ள சந்தேகங்கள் அனைத்தும் நீங்கிவிட்டன. ஞானத்தையும் அடைந்துவிட்டேன். பகவானே! உங்களுடைய அனுக்கிரகத்தால், அருளால் இவைகளெல்லாம் நடந்து விட்டது. இப்பொழுது நான் உறுதியாகவும், சந்தேகமற்றவனாகவும் இருக்கிறேன். ஆகையால் உங்கள் ஆணையை நிறைவேற்றுவேன் என்று அர்ச்சுனன் கூறினான்.
 
ஸ்லோகம்-74
सञ्जय उवाच ।
इत्यहं वासुदेवस्य पार्थस्य चमहात्मनः ।
संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥ 18-74
சஞ்சயன் கூறுகிறார்:
அஹம் இதி வாஸுதேவஸ்ய - இவ்வாறு நான் பகவான் வாசுதேவருக்கும்
ரோமஹர்ஷணம் - உடல் புல்லரிக்கச் செய்கின்ற
இமம் ஸம்வாதம் - இந்த உரையாடலை
அஶ்ரௌஷம் - கேட்டேன்.
மஹாத்மனஹ பார்த2ஸ்ய - மகாத்மாவான அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
அத்3பு4தம் - அற்புதமான, உட்பொருள் கொண்ட இதுவரை அறியாத கருத்துக்கள்; அறிவை அடைய உதவுகின்ற
ரோமஹர்ஷணம் - உடல் புல்லரிக்கச் செய்கின்ற
இமம் ஸம்வாதம் - இந்த உரையாடலை
அஶ்ரௌஷம் ­- கேட்டேன்
 
ஸ்லோகம்-75
व्यासप्रसादच्छ्रुतवानेतद्गुह्यमहं परम् ।
योगं योगेश्चरार्कृष्णात्साक्षात्कथायतः स्वयम् ॥ 18-75
ஸ்ரீவியாச பகவானால் கொடுக்கப்பட்ட தெய்வீகப் பார்வை கொண்டு உயர்ந்ததும், ரகசியதுமான உரையாடலை கேட்டேன். இதனால் அடையும் பலன் மிகவும் உயர்ந்தது, புரிந்து கொள்வதற்கு கடினமானதாகவும் இருக்கின்றது. இந்த கீதா சாஸ்திரத்தை சாட்சாத யோகேஶ்ரரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடமிருந்து நேரிடையாகக் கேட்டேன். யோகேஶ்வரன் என்பது மாயைக்கு அதிபதியாக இருப்பவர் என்று பொருள்.
 
ஸ்லோகம்-76
रजन्संस्मृर्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।
केशवार्जुनयोः पुणयं ह्र्ष्यामि च मुहुर्मुहुः ॥ 18-76
அரசே! ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ஜீனனுக்கும் இடையே நடந்த இந்த ரகசியமானதும், நன்மையைத் தரக்கூடியதுமான அற்புதமான உரையாடலை நினைத்து, நினைத்து மீண்டும், மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
 
ஸ்லோகம்-77   
तच्च संस्मृत्य संसमृत्य रूपमत्यद्भुतं हरेः ।
विस्मयो मे महान् राजन्ह्रष्यामि च पुनः पुनः ॥ 18-77
மனதிலுள்ள ராக-துவேஷங்களை நீக்கி இந்த உலகத்தை ஈஸ்வரனாக பார்ப்பதே விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. அரசே! பாவங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய பகவான் ஸ்ரீஹரியின் மிகவும் அற்புதமான, அழகான திருவுருவத்தையும் நினைத்து, நினைத்து என்னுடைய மனதில் பெருவியப்பு உண்டாகியது. மேலும் நான் மீண்டும், மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
 
ஸ்லோகம்-78
यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥ 18-78
அரசே! யாருடைய மனதில் யோகேஶ்வரரான ஸ்ரீகிருஷ்ண பகவானும், காண்டீபம் ஏந்திய அர்ஜுனனும் இருக்கிறார்களோ அவ்விடத்தில் மகாலட்சுமியும், வெற்றியும், ஐஸ்வர்யமும் நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என்னுடைய கருத்தாகும். பகவத் கீதை பாராயணமாக செய்தால் அதை செய்தவனுக்கு செல்வமும், புகழும் கிடைக்கின்றது. பொருள் புரிந்து பாராயணம் செய்பவர்களுக்கு அறிவு செல்வமானது கிடைக்கின்றது. வெற்றி என்பது மனதையும், புலன்களையும், தீய பண்புகளையும் அடக்கி தன் வசத்துக்குள் வைத்திருப்பதை குறிக்கின்றது. பூதி என்பது மனநிறைவை குறிக்கின்றது. அவர்களிடத்தில் தர்மம் நிலைத்திருக்கும்.
 
தொகுப்புரை
01-01 சந்நியாசத்திற்கும், தியாகத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்குமாறு அர்ஜுனன் கேட்டான்.
02-12 பகவானின் பதிலானது இந்த ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆசைவயப்பட்டு செய்யப்படும் செயல்களை மட்டும் துறத்தல் தியாகம் என்றும், அனைத்து கர்மத்தையும் துறத்தல் சந்நியாசம் என்றும், செயலின் விளைவை பகவானின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வதும் தியாகம் என்று கூறுகிறார்கள். ஆனால் பகவானை பொறுத்தமட்டும் இரண்டுமே ஒரே பொருளைத்தான் குறிக்கிறது. நம்முடைய கடமைகைளை மனபக்குவம் இல்லாமல் துறக்கக்கூடாது. சந்நியாசத்தை சாத்விக சந்நியாசம், ராஜஸ சந்நியாசம், தாமஸ சந்நியாசம் என்று மூன்றுவிதமாக பகவான் பிரிக்கிறார். எந்தக் குணத்திலிருந்து துறக்கின்றோமோ அந்த வகையான சந்நியாசமாகிறது. ஞானி அடைகின்ற பலன்களையும், கர்மி அடைகின்ற பலன்களையும் விவரித்திருக்கிறார்.
13-17 ஞானயோகத்தின் சாராம்சத்தை கூறியிருக்கிறார். ஆத்மா அகர்த்தா, அபோக்தாவாக இருக்கின்றது. நான் ஆத்மா என்ற நிலையில் உள்ள ஞானியும் அகர்த்தா, அபோக்தாவாகத்தான் இருக்கிறார்.
18-40 ஞானம், கர்மம், கர்த்தா, புத்தி, உறுதி, சுகம் ஆகியவைகளை சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்றுவிதமாக பிரித்து விளக்கி கூறியுள்ளார். சாத்விக கர்மம் என்பது கர்மயோகம். இதை செய்பவன் சாத்விக கர்த்தா. மனவுறுதி நல்ல விஷயத்தில் இருந்தால் அது சாத்விகமானது.
41-44 வர்ணத்தை குணத்தின் அடிப்படையில் பிரித்து கூறினார்.
45-48 கர்மயோகத்தின் சுருக்கத்தை கூறியிருக்கிறார். நம் கடமையை செய்வதுதான் உத்தமமானது என்றும் கூறுகிறார்.
49-54 ஞானயோகத்தின் சாராம்சத்தையும், நிதித்யாசனத்தையும் கூறியுள்ளார்.
55-62 பக்தியை பற்றியும் கூறியிருக்கிறார். பக்தியே சாத்திய பக்தி, சாதனா பக்தி என்று இரண்டு வகையாக பிரிக்கிறார். நீ கடமையிலிருந்து விலகினால் உன்னையறியாமலே அதற்குள் வந்து விடுவாய் என்றும் எச்சரித்துள்ளார்.
63-66 முழு சாஸ்திரத்தின் சுருக்கத்தை கூறியிருக்கிறார்.
67-72 கீதா சாஸ்திரத்தை யாருக்கு சொல்ல வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.
73   அர்ஜுனன் தான் அடைந்த மனநிறைவை வர்ணிக்கிறான்
74-78 சஞ்சயனின் முடிவுரை.

ஓம் தத் ஸத்
 

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...