Showing posts with label ப்ரஶ்ண உபநிஷத்-00. Show all posts
Showing posts with label ப்ரஶ்ண உபநிஷத்-00. Show all posts

Friday, July 8, 2016

Prashna Upanishad - ப்ரஶ்ண உபநிஷத்

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-01
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது 20/04/2022
www.poornalayam.org

முகவுரை

சாஸ்திரம் மூன்று படிகளில் ஒரு விஷயத்தை நமக்கு போதிக்கும். அவைகள்  

1.        உத்தேஸஹ - சாஸ்திரம் எதைக் கூற விரும்புகிறதோ அதை முதலில் தெளிவாக எடுத்து உரைக்கும்

2.        லட்சணம் - எதைக் கூறியதோ அதற்கு லக்ஷணத்தை சொல்லும்

3.        பரீக்ஷா - இந்த லக்ஷணம் இந்த அறிவுடன் பொருந்துகின்றதா என்று விசாரம் செய்யும்

ஆகியவைகளாகும்.

 

·   வேதாந்த சாஸ்திரத்தின் உத்தேசம் பிரஹ்ம சத்யம், ஜகத் மித்யா

·   பிரம்மத்தின் சத்யம், ஜகத்தின் மித்யா இவைகளின் லட்சணங்களை கூறுதல்

·   இவைகளை விசாரம் செய்து உறுதியான அறிவை அடைதல்

 

ஜகத் லட்சணம்   எவையெல்லாம் அனுபவிக்கப்படும் விஷயங்களாக இருக்கின்றதோ அவைகள் யாவும் ஜகத்தின் லட்சணம்.

 

மித்யா: இது ஒருவிதமான இருப்பை குறிக்கின்றது..  உ-ம் கானல் நீர்.

மித்யா லட்சணம்:

1.        அனிர்வாக்யத்வம் மித்யாத்வம்

       வாக்யம்      – வாக்கால் விளக்கப்படுவது

       நிர்வாக்யம்   – நிச்சயமாக விளக்கப்படுவது

       அநிர்வாக்யம் – வாக்கினால் நிச்சயமாக சொல்லமுடியாத தன்மை

 

ஸதஸத் அனதிகணத்வரூப அநிர்வாக்யத்வம் மித்யாத்வம்

   ஸதஸத் – ஸத் + அஸத்

   அனதிகரணம் – ஆதாரமற்றது

   ஸத்திற்கும் அஸத்திற்கும் ஆதாரமற்றதாக இருக்கும் ரூபம். எது இருக்கின்றது என்றும், இல்லையென்றும் கூறமுடியாதோ அதுதான் மித்யா. (உ-ம்) கயிற்றில் தோன்றும் பாம்பு. இதில் பாம்புக்கு மித்யாவாக இருக்கும் தன்மை இருக்கிறது.  இந்த பாம்பை ஸத் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. எனவே பாம்பு இருத்தலுக்கு ஆதாரமாக சொல்ல முடியாது. மேலும் இல்லாமைக்கு பாம்பு அதிகரணமாக சொல்ல முடியாது.  காரணம் அது நமக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.. எனவே பாம்பை அஸத் என்றும் சொல்ல முடியாது. எந்த ஒன்றை இருக்கின்றது என்றோ இல்லையென்றோ கூறமுடியாதோ அதுவே அனிர்வாக்யம் (மித்யா). இந்த லட்சணம் கயிற்றில் தோன்றிய பாம்புக்கு பொருந்துகிறது.

 

   இந்த உதாரணத்தை ஜகத்திற்கு பொருத்தி பார்க்க வேண்டும். ஜகத் இருக்கின்றது என்றோ இல்லையென்றோ சொல்ல முடியாது. ஆழ்நிலை உறக்கத்திலும், கனவு நிலையிலும் ஜகத் நீக்கப்படுகின்றது.  எந்த ஒன்றானது தொடர்ந்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அப்படிப்பட்ட தன்மையுடைய எதுவுமே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

பரிக்ஷா

பூ.ப-1     பிரம்மத்தை வாக்கால் விளக்க முடியாது என்று சொல்வதால், அதுவும் மித்யா என்றாகி விடுகிறதே!!

பூ.ப-2  இந்த லக்ஷணம் சூன்யத்திற்கும் பொருந்துகிறது, அஸத்திற்கும் பொருந்துகிறதே!  எனவே மித்யா என்ற சொல்லின் விளக்கம் தவறு.

 

பிரம்மன் அனிர்வாக்யம்தான், இருந்தாலும் இந்த லக்ஷணம் பிரம்மத்திற்கு செல்லாது ஏனென்றல் மித்யா ஸத்தும் அல்ல அஸத்தும் அல்ல, இப்படிபட்டதை வாக்கால் விளக்க முடியாது.

 

பதில்-1     பிரம்மம் எந்தக் குணமுமில்லாத நிர்குணமாக இருப்பதால் மித்யாவின் லக்ஷணம் பொருந்தாது.  எனவே எந்த லக்ஷணமும் சொல்ல முடியாமல் இருக்கும் அனிர்வாக்யத்வம், சப்தத்தால் விளக்கமுடியாத அனிர்வாக்யத்வம் பிரம்மத்தின் லக்ஷணம்.

பதில்-2  மித்யாவின் லக்ஷணம் அஸத்துக்கு செல்கின்றதே என்று கேட்டால், எது இருக்கிறதோ அதனிடத்தில்தான் விளக்க வேண்டியதாகிறது.  எது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறதோ அதைத்தான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.  எனவே அஸத்திற்கு லக்ஷணம் பொருந்தாது.

 

மித்யாவின் 2வது லக்ஷணம்

·         யத் நிஷியத்தே தத்3 மித்யா – எது நீக்கப்படுகிறதோ அது மித்யா.

·         எந்த இடத்தில் நிஷேதம் பண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? எது இருப்பது போல் தோன்றுகிறதோ அப்போதுதான் அது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

 

ஜகத் பரிக்ஷா

பார்த்து கொண்டிருக்கும் இந்த உலகம் இல்லை என்று சொல்வது உண்மையா? பொய்யா? சத்தியமா (அ) மித்யாவா?

·         பொய் என்று சொன்னால் ஜகத் இருப்பது உண்மையாகி விடும். 

·         உண்மை என்று சொன்னால் ஜகத் மித்யா என்பது உறுதியாகும். இப்படி சொல்வதால் இரண்டு சத்தியங்கள் இருப்பதான நிலை ஏற்பட்டுவிடும். அதாவது பிரம்மன் சத்யம், ஜகத் சத்யம். எனவே த்வைதம் வந்துவிடும்.

 

நிஷேதம் – அதிகரண ரூபம்.

இது பாம்பு அல்ல – இது கயிறு

நிஷேதம் என்பதன் தாத்பர்யம் இருக்கின்றதை தெரியப்படுத்துகிறது.  ஆதாரத்தை குறிக்கின்றது.  எனவே இரண்டு சத்தியம் வருவதில்லை.

 

மித்யாவின் 3வது லக்ஷணம்

ஞான நிவர்த்யத்வம் மித்யாத்வம் – அடைந்த அறிவால் எது சென்று விடுமோ அதுவே மித்யா.  கயிற்றில் தெரிந்துக் கொண்டிருக்கும் பாம்பானது அது கயிறு என்ற அறிவினால்தான் மறைந்துவிடும்.  அக்ஞானத்தில் தோன்றுவது தான் ஞானத்தால் நீங்கும்.  கர்மத்தால் தோன்றுவது கர்மத்தால்தான் நீங்கும்.

 

பரிக்ஷா

பூ.ப    கர்மத்தினாலேயும் நான் மித்யாவை நீக்குவேன்.  பானை மித்யா என்று சொல்கிறாய், நான் அதை உடைக்கின்ற செயலால் நீக்கி விடுவேன்.  பிறகு எப்படி ஞானத்தில்தான் போகும் என்று சொல்கிறாய்?

பதில்  பானைகள் உடைவது மீண்டும் காரணத்தில் லயமடைந்து விடுகின்றது.  ஆத்யந்தக நாசம் – காரணமும் , காரியமும் நாசமடைதல், கர்மத்தால் காரண நாசத்தை ஏற்படுத்த முடியாது, மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியும். ஞானம் ஒன்றில்தான் ஆத்யந்தக நாசம் ஏற்படுத்த முடியும்.  பானையை ஒரு பொருளாக பார்த்தால் அது மித்யா.  அதன் நாம-ரூபம் மித்யாவல்ல அது சத்யம்.

 

எனவே பிரம்மன்தான் சத்யம், அதன் மீது தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யா என்று உறுதியாகின்றது.

 

சாந்தி பாடம்

ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா: |

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3ர்

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3: |

ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டனேமி:

ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

 

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:

நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

 

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:

நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

 

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா:

தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். ( யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறதுஇது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். ( வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

 

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:

எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

 

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:

போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

 

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3:

அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாகஎங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

 

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:

கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல எங்களுக்கும் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் இருக்கட்டும்.

 

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
கருட, இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
 
அத்தியாயம்-01
ஸ்லோகம்-01
ஓம் ஸுகேஶா ச பா4ரத்வாஜ: ஶைப்3யஶ்ச ஸத்யகாம: ஸௌர்யாயணீ
ச கார்க்3ய: கௌஸல்யஶ்சாஶ்ர்வலாயனோ பா4ர்க3வொ வைத3ர்பி4: கப3ந்தீ4
காத்யாயனஸ்தே ஹைதே ப்3ரஹ்மபரா ப்3ரஹ்மநிஷ்டா: பரம்
ப்3ரஹ்மான்வேஶமாணா ஐஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷதீதி தே ஹ
ஸமித்பாணயோ ப4க3வந்தம் பிப்பலாத3முபஸன்னா: || 1 ||

 

ஸுகேஷ பாரத்வாஜ்                 முதல் சிஷ்யர்

ஶைப்யஹ, சத்யகாம                இரண்டாவது சிஷயர்

ஸௌர்யாயணி, கார்க்ய              மூன்றாவது சிஷ்யர்

கௌஸல்ய, ஆஸ்வாலாயன         நான்காவது சிஷ்யர்

பார்கவ, வைதர்பி                    ஐந்தாவது சிஷ்யர்

கபந்தீ, காத்யாயன்                   ஆறாவது சிஷ்யர்

ஹேதே – இவர்கள்

ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)

ப்ரஹ்ம நிஷ்டா  – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்

பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: - நிர்குண பிரம்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலிரண்டின் மூலமாக வேதாந்த உபதேசத்திற்கு தகுதி உடையவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

 

ஏஷ ஹ வை             - இவரே

தத் ஸர்வம்              - அனைத்தையும்

வக்ஷயதி                 - சொல்வார்

இதி                      - என்று கூறிக் கொண்டு

ஸமித் பாணி             - கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு

பகவன் தம் பிப்பலாதம்  - பகவான் பிப்பலாத குருவை

உபஸன்னாஹ           - அணுகினார்கள்

 

ஸ்லோகம்-02

தான்ஹ ஸ ரிஷிருவாச பூ4ய ஈவ தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா

ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத2 யதா2காமம் ப்ரஶ்னாம் ப்ருச்ச2த 
    யதி2 விக்ஞாஸ்யாம: ஸர்வம் ஹ வோ வக்ஷயாம இதி || 2 ||

 

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்

பூய ஏவ தபஸா –                இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)

பிரம்மச்சர்யேன  -               பிரம்மசர்ய விரதத்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)

ஶ்ரத்தயா -                      சிரத்தையுடனும்

ஸம்வத்ஸரம் –                     ஒரு வருடம்

ஸம்வத்ஸ்யத ­ -                உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

 

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.  இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

 

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத      உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.

யதி விஞாஸ்யாம –                  எங்களுக்கு தெரிந்தால்

ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி   எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்கிறோம்.

 

இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது.  அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.

 

ஸ்லோகம்-03

அத2கப3ந்தீ4 கத்யாயன உபேத்ய பப்ரச்ச2 |

ப4க3வன் குதே ஹ வ இமா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 3 ||

 

அத – ஒரு வருடத்திற்கு பிறகு கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்

உபேத்ய ப்ப்ரச்ச    அணுகி கேட்டார்

பகவன் குதே ஹ  பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து

இமாஹா ப்ரஜா:   இந்த உயிரினங்கள்

ப்ரஜாயந்த இதி    தோன்றியுள்ளன என்று கேட்டார்.

 

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.  அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

 

ஸ்லோகம்-04

தஸ்னௌ ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி:

        தபோ  தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிது2னமுத்பாத3யதே |

ரயிம் ச ப்ரணம் சேத்யேதௌ மே ப3ஹுதா4: கரிஷ்யத இதி || 4 ||

 

தஸ்மை ஸ உவாச              கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.

ப்ரஜாபதி                          எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்

ப்ரஜாகாம:                        உயிரினங்களை படைக்க விரும்பினார்.

ஸ தப அதப்யத               அவர் தவத்தை மேற்கொண்டார்

ஸ தப: தபத்வா               தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.

ஸ மிதுனமுத்பாதயதே        இருமைகள் உற்பத்தியானது.

ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ   ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.

ஏதௌ மே பஹூதா            இந்த இரண்டும் எனக்கு பலவிதமான

ப்ரஜா கரிஷ்யத இதி             உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

 

ஸ்லோகம்-05

ஆதி3த்யோ ஹ வை ப்ராணௌ ரயிரேவ சந்த்3ரமா ரயிர்வா ஏதத்

        ஸர்வம் யன்முர்தம் சாமூர்தம் தஸ்மான்முர்திரேவ ரயி: || 5 ||

 

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள் (இன்ப-துன்பம்0, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ அங்கேதான் துவேஷம் இருக்கும்).  இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள்,  பிராணன் என்பது அனுபவிப்பவர் இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.  இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின.  எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.  (உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள். இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

 

ஆதித்ய ப்ராணௌ      சூரியனே பிராணன் ( சக்தி)

சந்த்3ரம ரயி ரேவ      சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.

ரயி வை ஏதத்          ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்

மூர்த்தம், அமூர்த்தம்    உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது

தஸ்மாத் மூர்த்தி ரயி    ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

 

காரண பார்வையில் இரண்டும் ஒன்று,  காரிய பார்வையில் இரண்டும் வேறானது ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

 

ஸ்லோகம்-06

அதா2தி3த்ய உத3யன்யத்ப்ராசீம் தி3ஶம் ப்ரவிஶதி தேன

        ப்ராச்யான் ப்ராணான் ர்அஶ்மிஷு ஸன்னித4த்தே |

யத்த3க்ஷிணாம் யத் ப்ரதீசீம் யது3தீ3சீம் யத3தோ4

        யத3ந்தரா திஶோ யத் ஸர்ம்ம் ப்ரகாஶயதி தேன ஸர்வான் || 6 ||

 

எல்லாவற்றையும் வேற்றுமை பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.  ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.  ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி சென்று விடும்.

 

அத ஆதித்ய உதயன்         பிறகு சூரியன் உதித்தது

யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி   கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.

தேன ப்ராச்யான் ப்ராணான்  அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை

ரஶ்மிஷு ஸன்னித்த்தே       தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.

யத் தக்ஷிணாம்                தெற்கு திசையில் ஒளிவீசும் போது

யத் ப்ரதீசீம்                     மேற்கு திசையில் ஒளிவீசும் போது

யத் உதீசீம்                   வடக்கு திசையில் ஒளிவீசும் போது

யத் அதஹ                     கீழே ஒளிவீசும் போது

யத் ஊர்த்வம்                   மேலே ஒளிவீசும் போது

யத் அந்தரா ச                  உட்பகுதிகளில் ஒளிவீசும் போது

ஸர்வம் ப்ரகாஶயதி           அனைத்தையும் ஒளிர செய்கிறது

தேன – அதனால்

ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே -  எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

 

ஸ்லோகம்-07

ஸ ஏஷ வைஶ்வானரோ விஶ்வரூப: ப்ராணோ க்3னிரூத3யதே |

ததே3தத்3த3சாÅப்4யுக்தம் || 7 ||

 

ஸஹ ஏவ வைஶ்வானரஹ -  ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார். வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.

விஶ்வரூபஹ  - எல்லாமுமாக இருக்கின்றார் -  பிரபஞ்சமாக இருக்கின்றார்.

ப்ராணோ அக்னி உதயதே - அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.

தத் ஏதத் ரிசா அப்யுக்தம்-  அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

 

ஸ்லோகம்-08

விஶ்வரூபம் ஹரிணம் ஜாதவேத3ஸம்

பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் |

ஸஹஸ்ர ரஸ்மி: ஶததா4 வர்தமான:

ப்ராண: ப்ரஜானாமுத3யத3யத்யேஶ ஸூர்ய: || 8 ||

 

விஶ்வரூபம்         அனைத்துமாக இருப்பவர்

ஹரிணம்            ஒளிக்கதிர்கள் நிறைந்தவர், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.

ஜாதவேதஸம்        அனைத்தையும் அறிந்தவர்

பராயணம்           ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.

ஜ்யோதிஹி         ஒளிமயமானவர்

ஏகம்                ஒருவரே

தபந்தம்               வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.

சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.

 

ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ -   ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.

ப்ராணா: ப்ரஜானாம்     எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.

ஏஷ ஸூர்யஹ உதயதி  இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

 

ஸ்லோகம்-09

ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதி: தஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச |

தத்3யே ஹ வை ததி3ஷ்டாபூர்தே க்ருதமித்யுபஸ்தே |

தே சாந்த்3ரமஸமேவ லோகமபி4ஜயந்தே |

த ஏவ புனராவர்தந்தே |

தஸ்மாதே3த ரிஷய: ப்ரஜாகாம தக்ஷிணம் ப்ரதிபத்3யந்தே |

ஏஷ ஹ வை ரயிர்ய: பித்ருயாண: || 9 ||

 

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.  உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

 

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார்.  காலமே பிரஜாபதி.  அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.  அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும்.  மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

 

இஷ்டம்:     அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல், சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும்  உணவளித்தல்

பூர்த்தம்     சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்

தத்தம்       பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல், அஹிம்சையை கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களுக்கு வெகுமதி அளிப்பது

 

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.  ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

 

ஸ்லோகம்-10

அதோ2த்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா

        வித்3யயாத்மானமன்விஷ்யாதி3த்யமப்4ஜயந்தே |

ஏத்த்3வை ப்ராணானாமாயதனமேதத்3ம்ருதமப4யமேதத்

        பராயணமேதஸ்மான்ன புனராவர்த்தந்தே

இத்யேஷு நிரோத3ஸ்த தே3ஷ ஶ்லோக: || 10 ||

 

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்  வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரமமுக்தி அடையலாம்.  பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.

அத                                மேலும்

தபஸா                            தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)

ப்ரஹ்மசர்யேண                  பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,

ஶ்ரத்தயா                         செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்

வித்யயா                          தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்

ஆத்மானம் அன்விஷ்ய          ஆதித்ய பகவானை நாடி

ஆதித்யம் அபிஜாயந்தே         ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள்.  உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்

ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்

அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்

ஏதஸ்மாத்         இந்த லோகத்திலிருந்து

புனராவர்த்தந்தே   மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை

இதி ஏஷ நிரோத   இந்தப் பாதையிக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது

த்தேஷு ஶ்லோகஹ -  இதுபற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

 

ஸ்லோகம்-11

பஞ்சபாத3ம் பிதரம் த்3வாத3ஶாக்ருதிம் தி3வ ஆஹு: பரெ அர்தே4 புரீஷிணம் |

அதே2மே அன்ய உ பரெ விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷட3அ ஆஹுர்ர்பிதமிதி || 11 ||

 

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.

பஞ்சபாத3ம்  - ஐந்து பாதங்களை உடையது.  இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.  அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).

பிதரம்  - தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)

த்3வாத3ஶ ஆக்ருதிம்          பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது

அர்தே4 பரம் தி3வே ஆஹு   மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.

அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது), ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்

இதி அன்யே இமே பரே         என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக

ஆஹு:                            சொல்கிறார்கள்.  

 

ஸ்லோகம்-12

மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி: ஶுக்ல: ப்ரணஸ்தஸ்மதேத ரிஷய: ஶுக்ல இஷ்டம் குர்வந்தீதர இதரஸ்மின் || 12 ||

 

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும், சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது. ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

 

ஸ்லோகம்-13

அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி: ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே தி3வா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்3யத்3ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே || 13 ||

 

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி). யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

 

ஸ்லோகம்-14

அன்னம் வை ப்ரஜாபதிஸ்த தோ ஹ வை

  தத்3ரேதஸ்தஸ்மாதி3மா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 14 ||

 

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார்.  உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

                                                              

ஸ்லோகம்-15

தத்3யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரஜம் சரந்தி தே மிது2னமுத்பாத3யந்தே |

தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்3ரஹ்மசர்யயம்

        யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் || 15 ||

 

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள், இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

 

ஸ்லோகம்-16

தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ

        ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாய சேதி || 16 ||

 

இவ்வாறு ஒழுக்கநெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.  குறைகாண்கின்ற புத்தியையுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.  நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால்தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

----oo000oo----

அத்தியாயம்-02
பிராண உபாஸனையின் மகிமை

முகவுரை
அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா   = அக்ஷரத்தை, பிரம்மத்தை அறிய உதவும் வித்யா
 
ஹிரண்யகர்ப்ப உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது.  சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது
 
ஸ்லோகம்-01
அத2 ஹைனம் பா4ர்க4வோ வைதா3ர்பி4: பப்ரச்ச2 |
ப4கவன் கத்யேவ தே3வா: ப்ரஜாம் விதா4ரயந்தே ?
கதர ஏதத்ப்ரகாஶயந்தே ?
க: புனரேஷாம் வரிஷ்ட இதி || 1 ||
அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார். பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் இயங்கச் செய்கிறது

கதரஹ – அந்த தத்துவங்களில்

ஏதத் -    யார் யார் தன்னுடைய

ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? சக்தியை இயங்க செய்கின்றன?

கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட - இவைகளில் எது முக்கியமான தத்துவம்

·   24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

·   எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.

·   இவைகளுள் பிராணன்தான் மிக முக்கியமான தத்துவம்

 
ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச ஆகாஶோ ஹ வா ஏஷ தே3வோ
        வாயுரக்னிராப: ப்ருதி2வி வாங்மனஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச |
தே ப்ரகாஶ்யாபி4வத3ந்தி வயமேத த்3வாணமவஷ்டப்4ய விதா4ராம: || 2 ||
குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.  ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்-படுகின்றது.  ஐந்து கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன. நாங்கள்தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.

ஸ்லோகம்-03
தான் வரிஷ்ட: ப்ராண உவாச |
மா மோஹமாபத்3யத2 அஹமேவைதத்பஞ்சதா4த்மானம்
        ப்ரவிப4ஜ்யைதத்3 பாணமவஷ்டப்4ய
விதா4ரயாமீதிதேÅஶ்ரத்3த4தா4னா ப4பூ4வு: || 3 ||
முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.  நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.  இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.
 

ஸ்லோகம்-04

ஸோÅபி4மானாதூ3ர்த்3வமுத்க்ரமத் இவ தஸ்மினுத்க்ராமத்யதே2தரே ஸர்வ

ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வம் ஏவ ப்ரதிஷ்ட2ந்தே |

தத்3யதா2 மக்ஷிகா மது4கர ராஜானமுத்ரமந்தம் ஸர்வா ஏவோத்க்ரமந்தே

தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வா ஏவ ப்ரதிஷ்ட2ந்த ஏவம் வாங்மனஶ்சக்ஷு:

ஶ்ரோத்ரம் ச தே ப்ரதீதா: ப்ராணம் ஸ்துன்வந்தி || 4 ||

 

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.  அது வெளியேறியதும் மற்ற புலன்கள்  அனைத்தும் செயல் இழந்துவிட்டன.  அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின.  எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.  பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

 

ஸ்லோகம்-05

ஏஷோÅக்னிஸ்தபத்யேஶ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மக4வானேஷ வாயு: |

ஏஷ ப்ருதி3வீரயைர்தே3வ: ஸத3ஸச்சாம்ருதம் ச யத் || 5 ||

 

பிராணனின் பெருமையை புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,

·         எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன. ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.

·         தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன. பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும். இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.

·         பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.

·         பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

 

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.  இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.  இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது. இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

 

ஸ்லோகம்-06

அரா இவ ரத2னாபௌ4 ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட2தம் |

ரிசோ யஜூம்ஷி ஸாமானி யக்ஞ: க்ஷத்ரம் ப்ரஹ்ம ச || 6 ||

 

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது.  எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

 

ஸ்லோகம்-07

ப்ரஜாபதிஶ்சரஸி க3ர்பே4 த்வமேவ ப்ரதிஜாயஸே |

துப்4யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா ப3லிம் ஹரந்தி ய:

ப்ராணௌ: ப்ரதிதிஷ்ட2ஸி || 7 ||

 

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே, உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

 

ஸ்லோகம்-08

தேவானாமஸி வஹ்னிதம: பித்ரூணாம் ப்ரத2மா ஸ்வதா4 |

ரிஷீணாம் சரிதம் ஸத்யமத2ர்வாங்கி3ரஸாமஸி || 8 ||

 

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருக்களுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள். அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

 

ஸ்லோகம்-09

இந்த்3ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோ ஸிÅபரிரக்ஷிதா |

த்வம~ண்திரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி: || 9 ||

 

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும் தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

 

ஸ்லோகம்-10

யதா3 த்வமபி4வர்ஶஸ்யதே2மா: ப்ராண தே ப்ரஜா: |

ஆனந்தரூபாஸ்திஷ்ட2ந்தி காமாயான்னம் ப4விஷ்யதீதி || 10 ||

 

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள்.  எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன. 
 
ஸ்லோகம்-11
வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விஶ்வஸ்ய ஸத்பதி: |
வயமாத்3யஸ்ய தா3தார: பிதா த்வம் மாதரிஶ்வன: || 11 ||
 
பிராணனே!  நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும் உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.  நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம்.  நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.
 
ஸ்லோகம்-12
யா தே தனூர்வாசி ப்ரதிஷ்டி2தா யா ஶ்ரோத்ரே யா ச சக்ஷஷி |
யா ச மனஸி ஸந்ததா ஶிவாம் தாம் குரு மோத்க்ரமீ: || 12 ||
 
எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும், மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.  இவைகள் அனைத்தும் அமைதியாகவும், நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.
 
ஸ்லோகம்-13
ப்ராணஸ்யேத3ம் வஶே ஸர்வம் த்ரிதி3வே யத் ப்ரதிஷ்டி2தம் |
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஶ்ரீஶ்ச ப்ரக்ஞாம் விதே4ஹி ந இதி || 13 ||
 
மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக! செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

----oo000oo----

அத்தியாயம்-03
பிராண சக்தியின் செயல்கள்


முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.
 
ஸ்லோகம்-01
அத2 ஹைனம் கௌஸல்யஶ்சாஶ்சலாயன: பப்ரச்ச2 |
ப4க3வன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயத்யஸ்மின் ஶரீரே?
ஆத்மானம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ரதிஷ்டதே?
கேனோத்க்ரமதே ?
கத2ம் பாஹ்யமபி4த4த்தே?
கத2ம் அத்4யாத்ம்மிதி || 1 ||
 
கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:
  1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
  2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
  3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
  4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது? ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
  5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
  6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?
ஸ்லோகம்-02
தஸ்மை ஸ கோ3வாசாதிப்ரஶ்னான் ப்ருச்ச2ஸி
        ப்ரஹ்மிஷ்டோÅஸீதி தஸ்மாத்தேÅஹம் ப்3ரவீமி ||| 2 ||
 
நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ- சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.
 
ஸ்லோகம்-03
ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே |
யதை2ஷா புருஷே சா2யைதஸ்மின் ஏததா3ததம் மனோக்ருதேன || 3 ||
 
ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது.  இதற்கு ஆத்மாவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.
 
பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.  ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,  ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
 
பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.  அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.  ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.
 
 
ஸ்லோகம்-04
யதா2 ஸம்ராடே3வ வினியுங்க்தே |
ஏதான் க்3ராமானேதான் க்3ராமான் அதி4தி3ஷ்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத2க்ப்ருத2கே3வ
ஸன்னித4த்தே || 4 ||
 
எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து விட்டு, அவர்களிடம் இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.
 
ஸ்லோகம்-05
பாயூபஸ்தே3 பானம் சக்ஷு: ஶ்ரோத்ரே முக2னாஸிகாப்4யாம்
        ப்ராண: ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்4யே து ஸமான: |
ஏஷ ஹ்யேதத்3து4தமன்னம் ஸமம் நயதி தஸ்மாதே3தா:
ஸப்தார்விஷோ ப4வந்தி || 5 ||
 
அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது.  கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.  சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால் அவர் இருப்பிடம் நாபியாகும். இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.  பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.
 
இந்த ஏழு ஜுவாலைகள் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள் ஒரு வாய் ஆகும்.  வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும்.  இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால் உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.
 
ஸ்லோகம்-06
இதி3 ஹ்யேஷ ஆத்மா |
அத்ரைததே3கஶதம் நாடீ3னாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்3வாஸப்ததி: ப்ரதிஶாகா2னடீஸஹஸ்ராணி ப3வந்த்யாஸு வ்யானஶ்சரதி3 || 6 ||
 
இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.  உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.  இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும். 
 
இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும்  100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன.  இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.
 
ஸ்லோகம்-07
அதை2கயோர்த்4வ உதா3ன: புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபா4ப்4யாமேவ மனுஷ்யலோகம் || 7 ||
 
உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது.  உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து விஷங்களை வெளியே தள்ளுகிறது.  மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது
 
மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.  புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.  பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.
 
ஸ்லோகம்-08
ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய: ப்ராண உத3யத்யேஷ
ஹ்யேனம் சாக்ஷுஷம் ப்ராணமனுக்3ருஹ்ணான: |
ப்ருதி2வ்யாம் யா தே2வதா ஸௌஷா புருஷஸ்ய
        ஆபானமவஷ்டப்4யாந்தரா யதா2காஶ: ஸ ஸமானோ வாயுவ்யார்ன: || 8 ||
 
சூரியனே வெளியே உள்ள பிராணன். இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது. இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது. வாயுவானது வியானன் - இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது
 
ஸ்லோகம்-09
தேஜோ ஹ வா உதா3னஸ்தஸ்மாத்3 உபஶாந்த தேஜா:
        புனர்ப4வமிந்த்3ரியைர்மனஸி ஸம்பத்3யமானை: || 9 ||
 
உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.  இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான். உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.
 
ஸ்லோகம்-10
யச்சித் தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: |
ஸஹாத்மனா யதா2 ஸங்கல்பிதம் லோகம் நயதி || 10 ||
 
மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றனோ அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான்.  மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.  மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும்.  இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.  அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.
 
ஸ்லோகம்-11
ய ஏவம் வித்3வான் ப்ராணம் வேத3 |
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 11 ||
 
எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.  இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.
 
ஸ்லோகம்-10
உத்பத்திமாயதிம் ஸ்தா2னம் விபு4த்வம் சைவ யஞ்சதா4 |
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விக்ஞாயாம்ருதமஶ்னுதே |
விக்ஞாயாம்ருதமஶ்னுத இதி || 12 ||
 
பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள், உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.
 
சுருக்கம்
01-02  பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?
03     பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?
04-10  பிராணனின் செயல்பாடுகள்
11-12  பிராணனை உணர்வதனால் அடையும் பலன்
----oo000oo----

அத்தியாயம்-4
மனிதனின் மூன்று நிலைகள்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்-01

அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |

ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?

கான்யஸ்மின் ஜாக்3ரதி?

கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?

கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?

கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||

 

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:
·   பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
·   எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
·   கனவை பார்ப்பது யார்?
·   ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
·   இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

ஸ்வபந்தி               – தூங்குகின்றன

ஜாத்ரதி                  – விழித்திருக்கிறது

பஶ்யதி                  - பார்க்கிறான்

ஸம்ப்ரதிஷ்டிதா      – ஆதாரமாக இருக்கிறது

 

 

ஸ்லோகம்-02

தஸ்மை ஸ ஹோவாச |

யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:

ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |

தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ

        தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |

தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி

        ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3

        நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||

 

கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.  அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.  அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.  அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

 

ஸ்லோகம்-03

ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |

கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ

        யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||

 

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும், சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,  காரண  சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகிறான்.  மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

 

எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன. இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன.  பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.  மனமே எஜமானனாக இருக்கிறது.  இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.  பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும், வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா), உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது.  மனம் எஜமானனாக கற்பனை செய்யப்படுகிறது.  ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

 

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.  இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாசம் எடுக்கும் போது, மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

 

ஸ்லோகத்தின் பொருள்:

இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது.  கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.  கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.

 

ஸ்லோகம்-04

யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |

மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:

        ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||

 

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது. மனமே எஜமானனாக இருக்கின்றது.  யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.  ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றது.  பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

 

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மை நிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.  இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான்.  காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால், அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.  ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.

 

ஸ்லோகம்-05

அன்னைஶ தே3வ: ஸ்வப்னே மஹிமானமனுப4வதி |

யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி

தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்

சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச

ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||

 

கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?

நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது.  கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது.  நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது.  மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.  எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான்.  விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.  எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.  இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.  எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

 

ஸ்லோகம்-06

ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்

ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||

 

சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?

விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.  நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.  மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.

 

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது.  அதனால் கனவை காண முடியாது.  அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.  அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.  அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.  கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.  கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.  அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைப்படைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

 

ஸ்லோக பொருள்:

எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது  மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான்.  ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

 

ஸ்லோகம்-07

ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி

ஏவம் ஹ  வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||

 

இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?

பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.  ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.  உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.  இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

 

ஸ்லோகம்-08

ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச

வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ

ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்

சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச

க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்

சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச

வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||

 

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.  இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

 

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும், ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.  கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல், தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம், கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும், மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும், நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும், ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

 

ஸ்லோகம்-09

ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா

        போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |

ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||

 

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம், அதாவது நமக்கு புறத்தே உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.  ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

 

ஜீவனைப் பற்றிய விசாரம் த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஈசனைப்  பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்

 

த்ருக்-த்ருஷய விவேகம்

பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை  அறிவோம்.  இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.  தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது.  எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.  கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம்.  இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம்.  இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

 

மனதுடன் சேர்ந்த சிதாபாசம்தான் ஜீவன்.  ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.  நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.  எது உண்மை என்று பிரித்துணர வேண்டும்.  எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவமானதாக இருக்கின்றதோ அதையே ஆத்மாவாக புரிந்து கொள்ள  வேண்டும்.  ஆத்மா நிர்விகார த்ரஷ்டா, சிதாபாசன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது. (உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸ்லோக விளக்கம்:

இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.  இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

 

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன். இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.  நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.

 

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,  எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன். இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம். ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோகம்-10

பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்

அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:

ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||

 

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.  சிதாபாசத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.

ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு

தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது

அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )

அலோஹிதம் -  தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.

ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.

வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ

ஸஹ ஸர்வஞஹ -  இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான். 

 

நம்முடைய புத்தி எப்பொழுதும் அதை தெரிந்து கொள்ள வேண்டும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால்,  புத்தி அமைதி அடைகின்றது. பிறகு அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.

 

ஸர்வோ ப4வதி -  இவனே அனைத்துமாகின்றான்.  அனைத்து ஜீவராசிகளிலும் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி மேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோகம்-11

விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி

ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய

ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||

 

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாcaத்துடன் இருக்கும் ஜீவன்) பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான், அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

 

சுருக்கம்:
01     மூன்று நிலைகள் எவையென்று கூறப்படுகிறது
04-06  கனவு நிலை, தூக்க நிலை இவைகள் விளக்கப்படுகிறது
07-09  ஆத்மாவைப் பற்றிய விளக்கம்
10-11  ஆத்மாவின் பெருமையை கூறுகின்றது
----oo000oo----

அத்தியாயம்-5
ஓங்கார தியானம்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோக்ஸ-01

அத2 ஹைனம் ஶௌப்3ய: ஸத்யகாம: பப்ரச்ச2- ஸ யோ

ஹ வை தத்3ப4க3வன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்

ஓங்காரமபி4த்4யாயீத கதம் ஸ தேன லோகம் ஜ்யதீதி || 1 ||

 

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையை செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?

இத்தகையவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருந்தால் அவனால் ஞானயோகத்திற்கு செல்ல முடியாது.

 

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.  பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ? (அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

 

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.  ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

 

ஸ்லோக்ஸ-02

தஸ்மை ஸ ஹோவாச |

ஏதத்3 வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோ3ங்கார: |

தஸ்மாத்3 வித்3வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரமன்வேதி || 2 ||

 

ஓம் என்பது சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த ஓங்காரமானது பர பிரம்மத்தையும், அபரா பிரம்மத்தையும் குறிக்கின்றது. எனவே ஒருவன் இந்த ஆலம்பனத்தின் துணைக் கொண்டு மேலே சொன்ன இரண்டில் ஏதோ ஒன்றை அடைகின்றான்.

 

ஸ்லோக்ஸ-03

ஸ யத்3யேகமாத்ரம் அபி4த்4யாயீத ஸ தேனைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ

ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே தம்ருசோ மனுஷ்யலோகமுபனயந்தே ஸ தத்ர

தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பன்னோ மஹிமனமனுப4வதி || 3 ||

 

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.  அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

 

ஒருவன் அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான், அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான்.  பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.  அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.  இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான்.  பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.  இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான்.  மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

 

ஸ்லோக்ஸ-04

யதி3 த்3விமாத்ரேன மனஸி ஸம்பத்3யதெ ஸோந்தரீக்ஷம் யஜுர்பி4ருர்ஜ்ஜயதே ஸோமலோகம் ஸ ஸோமலோகே விபூ4திமனுபூ4ய புனராவர்ததே || 4 ||

 

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதால் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

 

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.  அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது. அதனால் சொர்க்கத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.  அவன் சொர்க்கலோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

 

ஸ்லோக்ஸ-05

ய: புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண பரம்

        புருஷமபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன |

யதா2 பாதோ3த3ரஸ்த்வசா வினிர்முச்யத ஏவம் ஹவை ஸ பாப்மனா

        வினிர்முக்த: ஸ ஸாமபி4ருர்ன்னயதே ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத்

        ஜீவக4னாத்ப்ராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே ததே3தௌ ஶ்லோகௌ

        ப4வத: || 5 ||

 

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.  முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்.  பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.  இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

 

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ, மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.  எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.

ஜீவகனாத்    ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.

ஈக்ஷதே    இதுவரை கூறிய விஷயங்கள் இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோக்ஸ-06

திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்யஸக்தா அனவிப்ரயுக்தா: |

க்ரியாஸு பாஹ்யாப்4யந்தரமத்4யமஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஞ: || 6 ||

 

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்ய: மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.

ப்ரயுக்தா:                          இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது

அன்யோன்ய ஸக்தா              ஒன்றையொன்று சேர்த்து வைத்தல்.  ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.

அனவிப்ரயுக்தா:               சரியாக பயன்படுத்தபட்டால்

ஞ ந கம்யத: ­                  இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான்.  பிரம்மலோகத்தை அடைகிறான்.

ஸம்யக் க்ரியாஸு             நன்றாக தியானம் செய்யும்போது.

பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு - ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்

ப்ரயுக்தாஸு - அவன் வீழ்வதில்லை

 

ஸ்லோக்ஸ-07

ரிக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமாபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே |

தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்3வான் யத்தச்சா2ந்தம்

        அஜரமம்ருதமப4யம் பரம் சதி || 7 ||

 

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

 

அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் ரிக்வேத தேவதைகளால் மனிதலோகத்தை அடைகின்றான்.  உகாரத்தை தியானிக்கும் சாதகன் யஜுர் வேத தேவதைகளால் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் சாமவேத தேவதைகளால் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

 

சுருக்கம்
01-02  ஓங்கார தியானத்தின் இரண்டு பரிமாணங்கள்
03-05  உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும், பலன்களும்
06-07  மூன்று வகை தியானங்களின் பலன்
----oo000oo----

அத்தியாயம்-6
ஆத்மாவின் பெருமை
முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் ஸுகேஶா பா4ரத்3வாஜ: பப்ரச்ச2 |
பகவன் ஹிரண்யனாப4: கௌஸல்யோ ராஜயுத்ரௌ
        மாமுபெத்யைதம் ப்ரஶ்னமப்ருச்ச2தஷோடஶகலம்
        பாரத்3வாஜ புருஷம் வேத்த2:?
ஹமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத
யத்3யாஹமிமமவேதிஷம் கத2ம் தெ நாவக்ஷ்யாமிதி |
ஸமூலோ வா ஏஷ வரிஶுஷ்யதி யோÅந்ருதம்பி4வத3தி |
தஸ்மான்னார்ஹாம்யந்ருதம் வக்தும் |
ஸ தூஷ்ர்ணீம் ரத2மாருஹ்ய ப்ரவவ்ராஜ |
தம் த்வா ப்ருச்சா2மி க்வாஸௌ புருஷ இதி || 1 ||

பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா என்ற சிஷ்யர் குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம், “பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.  அதற்கு நான்,  எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.  இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.  “அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.
 
ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச |
இஹைவாந்த: ஶரீரே ஸோம்ய ஸ புருஷோ யஸ்மின்னேதா:
        ஷோடஶகலா: ப்ரப4வந்தீதீ || 2 ||

அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்:  “இனியவனே! அந்த நபர் ஆத்மா.  ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது. அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது.  நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.  நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான்.  இதுதான் மிகவும் கடினம்.  அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,  இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.  எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவமானது உபதேசிக்கப்படுகின்றது. அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்கப்படுகின்றது.
 
ஸ்லோகம்-03
ஸ ஈக்ஶாம்சக்ரே |
கஸ்மித்தஷ்முத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மின்
        வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி || 3 ||
இதில் பிரம்மன்  பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.
 
அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் தேவைப்படுமோ அதை சிந்தித்தார். இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.
 
ஸ்லோகம்-04
ஸ ப்ராணமஸ்ருஜத |
ப்ராணாச்ச்2ரத்3தா4ம் க2ம் வாயுர்ஜ்யோதிராப: ப்ருதி2வீ~ண்த்3ரியம் மன: |
அன்னமன்னத்3வீர்யம் தபோ மந்த்ரா: கர்மலோகா: லோகேஷு ச நாம ச || 4 ||
முதலில் பிராணனை தோற்றுவித்தார்.  பிறகு சிரத்தையையும் அதையடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறகு ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம், வேதமந்திரங்கள், செயல்கள், கர்மபலன்கள், தோன்றிய எல்லாவற்றிற்கும் உள்ள பெயர் ஆகியவைகளும் படைக்கப்பட்டன
 
சிரத்தையானது அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது. தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல், இதனால் மனமானது தூய்மை அடைகின்றது. வேதமந்திரங்களானது இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம், கர்மபலன்கள் எனப்து செய்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்.
யோகேஷு நாம -  ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.
 
ஸ்லோகம்-05
ஸ யதேமா நத்ய: ஸ்யந்த3மான: ஸமுத்3ராயணா: ஸமுத்3ரம்
        ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யதே தாஸாம் நாமரூபே ஸமுத்3ர
        இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டரிமா: ஷோடஶகலா:
        புருஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்4யதே தாஸாம்
        நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோÅகலோÅம்ருதோ
        ப4வதீத தே3ஷ ஶ்லோக: || 5 ||

பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்ததும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன. இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி, அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.  நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்ததும் கடல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்களும், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும் பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது. அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.
இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன். இவனே சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.
நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது.  அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வெளிதோற்றத்திற்கு வராதது என்பதாகும்.
பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.  அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.  பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.  இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு அடுத்து வரும் ரிக் மந்திரங்களில் கூறப்படுகின்றது.
 
ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 கலா யஸ்மின் ப்ரதீஷ்டிதா: |
தம் வேத்3யம் புருஷம் வேத3 யதா2 மா வோ ம்ருத்யு: பரிவ்யதா2 இதி || 6 ||
சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளதோ அதை  யோக்யமானது என்று யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.  தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.
 
ஸ்லோகம்-07
தான் ஹோவாச ஏதாவதே3வாஹமேதத் பரம் ப்ரஹ்ம வேத3 |
நாத: பரமஸ்தீதி || 7 ||
பரபிரம்மத்தைப்பற்றி இதுவரை என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும். இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.  இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்
 
ஸ்லோகம்-08
தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா
யோÅஸ்மாகமவித்யாயா: பரம் பாரம் தாரயஸீதி |
நம: பரமரிஷிப்4யோ நம: பரமரிஷிப்4ய: || 8 ||
சிஷ்யர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். அறியாமைக் கடலில் மேலான மறுகரைக்கு எங்களை கூட்டிச் சென்றவர் தாங்களே என்று கூறினார்கள். உங்களுக்கும் உங்களைப் போன்ற  குரு-சிஷ்ய பரம்பரையில் வந்த ரிஷிகளுக்கும் எங்களது நமஸ்காரங்கள்.
ஓம் தத் ஸத்

 

 

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...