Showing posts with label சைதன்ய சிஷ்டாகம். Show all posts
Showing posts with label சைதன்ய சிஷ்டாகம். Show all posts

Monday, May 2, 2016

சைதன்ய சிக்‌ஷாஷ்டகம்

शिक्षाष्टकम्  - சைதன்ய சிக்ஷாஷ்டகம்
ப்ரேமோத்பாவித ஹர்ஷேர்ஷோத்வேகதன்யார்த்திமிஸ்2ரிதம் |
லபிதம் கௌரசந்த்ரஸ்ய பாக்யவத்பிர் நிஷேவ்யதே ||

ஸ்ரீ கௌராங்க மஹாப்ரபுவின் ப்ரேமரஸமான ஹர்ஷம், பொறுமை, உத்வேகம், தைன்யம், ஆர்த்தி முதலிய பாவங்கள் கலந்த ப்ரலாபங்களைக் கேட்டவர்கள் பாக்யவான்களேயாவர்.
चेतोदर्पणमार्जनं भव-महादावाग्नि निर्वापणम् श्रेयःकैरवचन्द्रिकावितरणं
विद्यावधूजीवनम् 
आनंदाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनम् सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसंकीर्तनम् ॥१॥

சித்தரூபமான கண்ணாடியின் அழுக்கைக் களைவதும், ஸம்சார ரூபமான கொடிய தாவாக்னியை நீக்குவதும், பிராணிகளுக்கு மங்களமளிக்கும் கைரவ சந்திரிகையை விதரணம் செய்வதும், வித்யரூபமான மணமக்களுக்கு ஜீவஸ்ரூபமும், ஆனந்த ரூபமான அகக்கடலைப் பொங்கச் செய்வதுமான அந்த ஸ்ரீக்ருஷ்ண ஸங்கீர்த்தனத்திற்கு வெற்றியுண்டாகட்டும்.

Let Sri Krishna sankirtana be ultimately victorious which cleanses dust off mind, extinguishes the formidable fire of repeated birth and death, glorious like rays of the moon, gives life to knowledge, increases the ocean of bliss, has every word sweet like nectar and makes everybody holy.
ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

नाम्नामकारि बहुधा निज सर्व शक्तिस्तत्रार्पिता नियमितः स्मरणे न कालः।
एतादृशी तव कृपा भगवन्ममापि दुर्दैवमीदृशमिहाजनि नानुरागः॥२॥

O Lord, you have filled your many names with all your power and which can be remembered any time. O God, you are so kind to do it but I am so unfortunate that I don't love your beautiful names.

பிராணவல்லப! உனது கிருபையில் ஒன்றும் குறையில்லைஎனது துர்பாக்கியத்திலும் சிறிதும் ஐயமில்லை பிரியதம! நந்த நந்தனன், வ்ரஜசந்திரன், முரளி மனோஹரன், ராதாரமணன் என்றெல்லாம் காதுக்கினிய எவ்வளவு நாமங்கள் இருக்கின்றன உனக்கு. உனது சக்தி முழுவதையும் உனது நாமங்களுக்கு ஸமானமாக வழங்கியிருக்கிறாயே! இவைகளை உச்சரித்தாலே உன்னை எளிதில் அடைந்து விடலாமேவைதிக க்ரியைகளைப்போல் இவைகளுக்கு ஏதாவது கால, தேச நியமங்களை ஏற்படுத்தியிருந்தாலவது கடைப்பிடிப்பது கடினம் என்று பயமேற்படலாம்ஆனால் இதிலோ யாதொரு நியமமும் இல்லை. ஸ்த்ரீ, புருஷன், பிரமாணன், சூத்ரன் என்று யாராக இருந்தாலும் சுத்தம்-அசுத்தம் என்னும் எண்ணம் இன்றி எல்லா நிலைகளிலும், எல்லா நேரங்களிலும், எவ்விடத்திலும் அந்த மதுராதி மதுரமான நாமங்களை கீர்த்தனம் செய்ய முடியும். ஹே ஸ்வாமி! ஜீவன்களிடம் உனக்கு இவ்வளவு அபார கிருபையிருந்தும் எனது துர்பாக்கியம் வலிவாக உள்ளதே! உன்னுடைய இந்த இனிய நாமாக்களிடம் உண்மையான ஹ்ருதய பூர்வமான அனுராகம் உதிக்கவில்லையே! இதற்கு நான் என்ன செய்வேன்

ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना।
अमानिना मानदेन कीर्तनीयः सदा हरिः ॥३॥
Assuming ourselves smaller than straw, being more tolerant than trees, devoid of pride and respecting others, we should always sing in the praise of Sri Hari.
ஹரிநாம ஸங்கீர்த்தனம் செய்பவன் எப்படி இருக்க வேண்டும், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறார்.
பாகவதனாக விரும்புபவன் முதலில் இரண்டு குருக்களை அனுஸரிக்க வேண்டும். ஒன்று புல், இரண்டாவது மரம்புல்லிடமிருந்து வினயத்தை தீக்ஷையாகவும், மரத்திடமிருந்து சகிப்புத்தன்மையை தீக்ஷையாக பெறவேண்டும்.
முதல் குருவான புல் அனைவரது காலடியிலும்தான் கிடக்கிறதுதயாளுவான யாராவது அதைத் தூக்கி ஆகாசத்தில் வைத்தாலும் மீண்டும் முன்போலவே பூமிக்கே வந்து விடுகிறது. அது கனவிலும் யார் தலை மீதும் ஏற முயலாது
அடுத்த குருவான மரமானது பரோபகார மயமாகவே இருக்கின்றதுஅது சிறிதும் பேதபாவமின்றி அனைவரிடமும் சம புத்தியோடு சேவை செய்கிறதுயார் வேண்டும்னாலும் இதன் இனிய குளிர்ந்த நிழலில் இளைப்பாறலாம், அதன் கிளைகளை வெட்டுபவனுக்கும் நிழல் தருகின்றதுநீரூற்றி வளர்ப்பவனுக்கும் நிழலைத் தருகிறதுஅதற்கு சத்ரு, மித்ரன் என்ற பேதம் எதுவும் இல்லை, அனைவரும் ஒன்றுதான்அதனருகில் யார் சென்றாலும் பூக்களின் நறுமணத்தை அனுபவிக்கலாம். அதிலிருந்து பழங்களை பறிக்கலாம்கல்லை எறிந்து பழங்களை பெற முயற்சிபவனுக்கும் சிறிதும் கோபம் கொள்ளாமல் பழத்தை கொடுக்கின்றதுதன்னை அடித்தவனிடமும் அன்பையே காட்டுகின்றதுதீய குணமுள்ளவர்களும் அதன் நிழலில் அமர்ந்து இளைப்பாறுகின்றனர். பிறகு அதன் கிளைகளையே வெட்டினாலும் சிறிதும் எதிர்ப்பின்றி தனது சரீரத்தை வெட்டி கொடுத்து அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்கின்றதுஅந்த குருவிடமிருந்து பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொள்ள வேண்டும்,
சுய கௌரவம் என்பது கானல் நீர் போன்றது அதை தேடி அலைபவன் தாகமெடுத்த மான் கானல் நீரை அருந்த இங்கும் அங்கும் அலைந்து துடித்து பிராணனை விடுவது போல துன்ப்படுகிறான்கௌரவத்திற்கு எல்லையே கிடையாது, எவ்வளவு தூரம் சென்றாலும் பாலைவனத்துக் கானல் நீர் விலகிச் சென்று கொண்டேயிருக்கும். எனவே வைஷ்ணவர்கள் ஒரு போதும் கௌரவத்திற்கு ஆசைப்படக்கூடாது. ஆனால மற்றவர்களுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்து கொண்டேயிருக்க வேண்டும்ஸம்மான சம்பத்து உடையவன் பரம் உதார குணத்தோடு இருகரங்களாலும் வாரி வழங்கு உன்னிடம் கௌரவத்தை எதிர்ப்பார்ப்பவருக்கு மதிப்பளிக்க தவறாதேஉனது இந்த உதாரகுணத்தால் ஸர்வாந்த்ர்யாமியான ஸ்வாமி பெரிதும் உகந்து மகிழ்வடைவான்அனைவரிடமும் பிரியனான ஸ்வாமியையே காண்பாயாக! அனைவரையும் அவனது திருவுருவாகக் கருதி வினயத்தோடு நமஸ்கரிபாயாகஇவ்வாறு இருந்து கொண்டே இந்த இனிய நாமங்களைக் கீர்த்தனம் செய்ய முடியும்

ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே !
ஹே நாத நாராயண வாஸுதேவ !

न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये।
मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुकी त्वयि॥४॥

O Lord of the universe, I do not desire money, followers, women or poems. O God, I wish to have causeless devotion for you in my all future births.

உலகில் எல்லா சுகங்களுக்கும் காரணம் பணம்தான் செல்வமுள்ளவனுக்கு எந்தக் குறையும் இல்லைசெல்வந்தனிடம் குணவான்களும், பண்டிதர்களும் தாங்களாவே வந்து விடுகின்றனர். செல்வத்தைக் காட்டிலும் சக்தியுடையது ஜன ஸம்பத்துஎவனது ஆணைக்காக பத்து பேர் உள்ளனரோ, எவனுடைய சொல்லுக்காக அனேகர் உயிரையும் விடத்தயங்காரோ அவன் செல்வந்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்அந்த ஜன சக்தியை காட்டிலும் ஆகர்ஷமானது அழகிய பெண்அவளால் உலகில் யாரைத்தான் கவர முடியாது? தபஸ்விகளும் அழகிகளினால் கவரப்பட்டு தவத்தை எல்லாம் இழந்திருக்கிறார்கள்அவளைக் காட்டிலும் சிறந்தது கவிதை. கவிதா காமினியால் வரிக்கப் பட்டவனுடைய மனதிற்கு மூவுலகச்செல்வமும் துச்சமேஅவன் பரம ஏழையாக இருந்தாலும் சக்கரவர்த்தியேஆனால் கிருஷ்ணா! எனக்கு தனம், ஜனம், அழகான பெண், கவிதை இவை எதிலும் ஆசையில்லை, உனக்கு வேண்டுவதுதான் என்னவென்று நீ கேட்பாயானால், ஜகதேசா, எனது கர்ம வினைகள் களையுமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கவில்லை, எனது பிராரப்த த்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்றும் நான் எதிர்பார்க்கவில்லைஎத்தனை கோடி பிறவி எடுத்தாலும் எனக்கு அக்கறையில்லைஆனால் பிரியமானவனே! உனது நினைவு என் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்க வேண்டும்உனது பொற்றாமரை மலரடி என் இதய பொய்கையில் எப்பொழுதும் மலர்ந்து பிரகாசித்து கொண்டிருக்க வேண்டும்.

உன்னிடம் எனக்கு அஹைதுகமான பக்தி நிலைத்திருக்க வேண்டும். நான் எப்பொழுதும் உன்னுடைய திருநாமத்தை கூவிக்கொண்டேயிருப்பேன்.
ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

अयि नन्दतनुज किंकरं पतितं मां विषमे भवाम्बुधौ।
कृपया तव पादपंकजस्थितधूलिसदृशं विचिन्तय॥५॥
O son of Nand, consider me as your eternal servant,  bound in this ocean of birth and death, please show your mercy accepting me as a dust-particle in your lotus feet

இவ்வுலகம் ஒரு பெருங்கடலே நீ ஏன் என்னை இதில் எறிந்துவிட்டாய்? ஹே நாதா! இதற்காக நான் ஒன்றும் குறை கூறவில்லை. நான் எனது கர்மங்களால் ஆட்டுவிக்கப்பட்டுதான் இதில் அலைகிறேன்அடிக்கடி மூழ்கி விடினும் உனது பரம் கருணையால் மீண்டும் நீந்தத் தொடங்கிவிடுகிறேன்இந்த எல்லையில்லாக் கடலின் ஆழத்தைப்பற்றி எனக்கொன்றும் தெரியாதுஆனால் எனது ப்ரபுவே! நான் இதில் அலைக்கழிக்கப்பட்டு களைத்து விட்டேன்சிற்சில சமயம் உப்புத்தண்ணீர் வாயில் புகுந்து நெஞ்சை என்னவோ செய்கிறது, சில சமயம் காதில் புகுந்து விடுகிறது, உப்புத் தண்ணீர் கண்களில் புகுந்து எரிச்சலெடுக்கிறதுசில சமயம் நீர் மூக்கில் புகுந்து விடுகிறதுஎனது ஒப்பற்ற படகோட்டியே! கோமள இதயத்தை உடையவனே! உனது வேலைக்காரனாக, சேவகனாக எனக்கு ஒரு மூலையில் சிறிது இடம் கொடு, இடைச்சிறுவனான உனது சபலத்திற்குக் கேட்க வேண்டுமா! என்னிடம் படகும் இல்லையே, உனக்கு எப்படி இந்த அகண்டமான கடலில் அமர இடமளிப்பேன் என்று நீ கேட்கலாம் என்னருமை ரஸிகேந்த்ரா! உன்னை நான் கேலி செய்யவில்லை. உனக்கு நினைவூட்டுகிறேன், நீரிலிருந்தாலும் மூழ்காத இடம் ஒன்று உன்னிடமுண்டே, அதில் மூழ்கிக் கொண்டு இருந்த அனேகருக்கு நீ அபயமளித்து அமர்த்தியுள்ளாயேஉனது சேவடிகளைத் தவிர வேறு புகலிடமுண்டா? இந்த கலங்களில் நூற்றுக்கணக்கான தூசுகள் ஜலத்திலிருந்து நீரில் மூழ்காமலிருக்கின்றனவே! நந்தகுமாரா! அந்த தூசியில் ஒன்றாக என்னையும் அமர்த்திக் கொள்என்னையும் அந்த பாவனமான பத்மங்களில் ரேணுவாக அமரச் செய்ய மாட்டாயா? அங்கு அமர்ந்து கொண்டு நான் மெல்ல மெல்ல திருவடி அசையும் ஆடலோடு சேர்ந்து குதித்துக் கொண்டு இனிய ஸ்வரத்தோடு இவ்வாறு பாடிக்கொண்டே இருப்பேன்.

ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

नयनं गलदश्रुधारया वदनं गदगदरुद्धया गिरा।
पुलकैर्निचितं वपुः कदा तव नामग्रहणे भविष्यति॥६॥
O Lord, when will the tears of my eyes fill my face on taking your name, when will my voice choke up and when will the hair of my body stand erect on reciting your name?

ப்ராணநாதா! கண்ணீர்த் துளிகளுக்கிடையே காணப்படும் சின்னஞ்சிறு வெண் மாளிகைகளே உனது உறைவிடமாக நான் கேள்விப்படுகிறேன்நீ எப்போதும் அதிலேயே வாஸம் செய்கிறாய்இந்த விஷயம் உண்மையானால் ப்ரபோ! நான் நாமம் சொல்வது வீணேஎன் கண்களிலோ நீர் பெருகவில்லை. நீயோ உள்ளேயே ஒளிந்து அமர்ந்து கொண்டிருக்கிறாய். வாய்பேச்செல்லாம் வெறும் வாசாலம்தன்அனேகமாக உனக்கு மௌனிகளிடமே பிரியமிருக்கும்ஆனால் தயாளுவே! நான் எப்படி மௌனமாக இருப்பேன்? நாக்கு தானாகவே புலம்பிக் கொண்டிருக்கிறதுநாவை அடக்கிவிடு, நெஞ்சை அடைத்துவிடு. ஒரு சப்தமும் தெளிவாக வரவேண்டாம். ஆலஸ்யத்தில் அனைத்தும் சிதைந்து விடுகின்றனஉனது சரீரத்தில் ரோமங்கள் எதற்கு என்று நீ கேட்டு விடலாம்பிரிய! இவைகளில் மின்னோட்டம் இல்லைஉனது விரகமென்னும் மின் சஞ்சாரத்தை இவைகளி நிரப்பிவிடுஇதனால் உனது நாமத்தைக் கேட்டவுடனேயே இவை குத்திட்டு நிற்கட்டும். ஸ்வாமீ! தேகத்தின் ஆலஸ்யத்தை நீக்கிவிடுஇவை துடிக்கும்படியான சக்தியை ஏற்படுத்துஉனது திருநாமத்தைக் கேட்டவுடனே கண்களில் கண்ணீர் பெருக வேண்டும்குரல் தழுதழுக்க வேண்டும்சரீரத்தில் மயிர்கூச்செறிய வேண்டும்பிரியதம! உனது நாம கீர்த்தனத்தில் நானும் இத்தகைய நிலையினையடைய முடியுமா?

ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितम्
शून्यायितं जगत् सर्वं गोविन्द विरहेण मे॥७॥
O Krishna, in your separation, a moment looks like ages. Tears are flowing from my eyes like torrents of rain and all this world seems meaningless.

ப்ரபோ! ஆயுள் அல்பமானது என்கின்றனர் மக்கள்ஆனால் ப்ரிய! எனக்கோ நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறாய். என்னை அமரனாக்கிவிட்டு நீ எங்கோ ஒளிந்து கொண்டு விட்டாயே! கள்வா! சற்று என் நிலையைப் பாராயாஉன்னைக் காணாது நான் பாடும் பாட்டை காணாயோ? ஒரு கணம் என்னும் இந்த கண்ணிமைப்பு நேரம் எனக்கு ஒரு பெரும் யுகமாகத் தோன்றுகிறதே! இதற்குக் காரணம் உனது விரஹமே நான்கு மாதங்களெ மழைக்காலமென்கின்றனர் மக்கள் எனக்கோ ஆண்டு முழுவதும் கார்காலமே! என் கண்களினின்றும் கண்ணீர் வெள்ளம் இடைவிடாது பெருகிக் கொண்டே இருக்கிறதுநீயோ கண்ணுக்கெட்டாது கண்ணாமூச்சி காட்டுகிறாய்உலகில் எவ்வளவோ பொருட்கள், எத்தனையோ காட்சிகள், எத்தனையோ காட்சிகள் எனக்கோ எல்லாம் சூன்யமாகவே காண்கின்றனஉன்னைகாணாத உலக முழுவதும் வெறுமையாகவே காண்கிறேன்கண்ணில் உன் வண்ணம் நிறைந்தபின் காண்பவை அனைத்தும் நீயன்றி காணப்பட வேறு என்ன இருக்கின்றதுஎன்னை இப்படித் தவிக்கச் செய்து எங்கு சென்றாய்? நான் அல்லும் பகலும் அழுது அரற்றி இப்படியே கூவிக் கொண்டிருக்கின்றேன்.

ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

आश्लिष्य वा पादरतां पिनष्टु मामदर्शनान्मर्महतां करोतु वा।
यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु  स एव नापरः॥८॥

Whether He embraces me as a devotee of His feet or not, whether he appears before me or not, whether He accepts me as his own or not, the naughty Sri Krishna is my Lord and no one else.

ப்ரியஸகி! வீண்பேச்சுக்கள் ஏன்? நீ ஏன் அவனது குணங்களை எனக்குக் கூறுகிறாய்அவன் தயாஸாகரனாயினும், வஞ்சகனாயினும், ப்ரேமியாயினும், கொடியனாயினும், ரஸிகனாயினும், ஜாரசிரோமணியாயினும் நானோ அவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டேன்எனது மேனியை அவனுக்கே அர்ப்பணித்து விட்டேன். அவன் ஆதரவோடு கட்டியணைத்தாலும், விரஹத்தால் துடிக்கச் செய்தாலும் என்ன செய்ய இருக்கின்றது நடக்க வேண்டியது நடந்து விட்டதுஇனி எண்ணுவதால் ஆவதொன்றுமில்லைஅவன் எனது ஸ்வாமியாகி விட்டான்இனி அன்னியன் யாரும் என்னை ஏறெடுத்தும் பார்க்க முடியாதுப்ரேமியின் உரிமைப் பொருளை அவன் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தட்டும், அதைப் பற்றி கேட்க நாம் யார்அவனது அனந்தமான இனிய நாமங்கள் உள்ளனஅழுது கொண்டே அவைகளைக் கீர்த்தனம் செய்வோமாக!

ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ !

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!


A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...