Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-03. Show all posts
Showing posts with label ப்ருஹதாரண்ய உபநிஷத்-03. Show all posts

Wednesday, November 15, 2017

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-3

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-03
அத்தியாயம்-02
அபவாத பிரதானம்
திருத்தம் செய்யப்பட்டது06-03-2022

சங்கரரின் முகவுரை
ஆத்மாவை தேடுதல், அறிதல், அடைதல் எல்லாமே ஒன்றேதான். உண்மையிலேயே நாம் நாடிக் கொண்டிருப்பது ஆத்மாவைத்தான்ஆனால் அதை அறியாமல் இருக்கிறோம்எதை நான் நிபந்தனையின்றி விரும்புகின்றேனோ அதுதான் ஆத்மாஆத்மாதான் அடைய வேண்டிய லட்சியம், அதை எப்படி அடைவது என்பதைப்பற்றியும், சம்சாரமும் விளக்கப்பட வேண்டியது, சம்சாரத்திலிருந்து விடுபட என்ன வழி என்பதைப் பற்றியும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-1 : அஜாதசத்ரு ப்4ராமனம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்லோகம்-1
அஜாத சத்ரு பகைவனே இல்லாதவன்யாரையுமே பகைவனாக நினைக்காதவன்.
த்ருப்தஹகர்வம்;
அனுசானவேதங்களை பயின்றவர்.
காஷ்யம்காசியை ஆள்பவர்;
ப்ரவாணிஉபதேசிக்கிறேன்.
தத்மநாங்கள் கொடுக்கிறோம்.
வாசிசொல்லுக்கே,
தாவந்தீதிசொல்கிறார்கள்.

கர்கா குடும்பத்தைச் சேர்ந்த கர்வமுடைய பாலாகி என்ற பெயருடைய வேதங்களை பயின்ற ஒருவர் இருந்தார். அவர் காசியை ஆண்டுக்கொண்டிருந்த மன்னன் அஜாதசத்ருவிடம், 'நான் பிரம்மனைப் பற்றி உங்களுக்கு உபதேசிக்கிறேன்" என்று கூறினார்.. அரசன் அஜாதசத்ரு சொன்னார், “இந்தப் உபதேசத்திற்காக நான் உனக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன்”, என்று கூறினார். மக்கள் உண்மையில் "ஜனகா, ஜனகா" என்று சொல்கிறார்கள்.
 
ஸ்லோகம்-2-13
பாலாகியின் உபதேசம்:
ஒரு தேவதையை அறிமுகப்படுத்தி அதன் மீது ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய உபதேசிக்கிறார். ஆதித்யதேவனை ஆலம்பனமாக அறிமுகப்படுத்தி சில குணங்களைக் கூறி தியானம் செய்ய சொல்கிறார்ராஜா அஜாதசத்ரு இதற்கும் மேலே சில குணங்கள் எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.
 
ஸ்லோகம்-14
ஏதாவன் - இவ்வளவுதானா,
ஏதாவத் இதி - இவ்வளவுதான்
ந விதி3தேம்அறிந்து கொள்ளவில்லை ,
த்வா - உங்களை ,
உபயானீஅணுகுகிறேன்
 
அஜாதசத்ரு பாலாகியிடம் இவ்வளவுதானா? என்று கேட்க அவரும் இவ்வளவுதான் என் உபதேசம் என்ற கூறினார்இவ்வளவுதான் அறிந்து கொண்டேன் என்றால் நீ பிரம்மத்தை பூரணமாக அறியவில்லை என்று ராஜா அஜாதசத்ரு கூறினார்பாலாகி தலை குனிந்து தான் சிஷ்யனாக உங்களை அணுகுகிறேன்எனக்கு நிர்குண பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று வேண்டினார்.
 
ஸ்லோகம்-15
அஜாதசத்ரு இவ்விதம் கூறுகின்றார், இது தலைகீழாக இருக்கிறது, பிராமணன் சத்திரியனிடம் பிரம்ம உபதேசம் செய்யுங்கள் என்று அணுகுவதுஇருந்தாலும் உனக்கு தெளிவாக உபதேசிக்கிறேன் என்ற ராஜா உறுதி கூறினார். ராஜா, பாலாகியின் தோளில் கை போட்டு எழுந்தார்இருவரும் உறங்கிக்கொண்டிருந்த மனிதனிடம் சென்று அடைந்தார்கள்அவனை பிராணனுடைய பல பெயர்களை கூறி அழைத்தார்கள்அப்பொழுதும் அவன் எழுந்திருக்கவில்லைஆகையால் அவனை உலுக்கி எழுப்பினார்கள்அவன் எழுந்து விட்டான்இதிலிருந்து ஸ்தூல சரீரமும், பிராணனும் அறிவு ஸ்வரூபம் இல்லை என்று தெரிகின்றது.

சங்கரரின் விளக்கவுரை
சேதன (அறிவு) தத்துவம் எப்பொழுதுமே அறிபவனாக இருக்கின்றதுஅசேதன (ஜடம்) தத்துவம் எப்பொழுதுமே அறியப்படுவதாக இருக்கிறதுஆனால்  இவையிரண்டும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறதுஇதைப் பிரித்துப் பார்த்து அறியத்தான் இந்த விசாரம்.
 
அறிவு ஸ்வரூபமாக இருப்பது அறிபவன், ஜடமாக இருப்பது அறியப்படும் பொருளாக இருக்கிறது
 
கேள்வி-1: குருவானவர் நிர்குண பிரம்மத்தை உபதேசிப்பதற்கு தூங்கி கொண்டிருப்பவனை உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி உபதேசிக்க முடியும்.
பதில்-1: ஆழ்ந்த உறக்கம் ஞானத்தை கொடுக்காது, அதை ஆராய்ந்து பார்த்தால்தான் ஞானம் அடைய முடியும்எனவே இங்கே அனுபவத்தை ஆராய்வதற்காகத்தான் தூங்கும் மனிதனை உதாரணமாக எடுத்துக் கொண்டார்அக்னிக்கு விஷயமான பெட்ரோல், நெய் இவைகளை ஊற்றினால் அது அனுபவிக்க ஆரம்பித்து விடும்அப்படி போக்தாவாக இல்லாவிட்டால் அது அக்னி இல்லை என்று உறுதியடையலாம்அதுபோல சப்தம் கேட்டவுடன் பிராணன் சேதனமாக இருந்தால் பதிலளித்திருக்கும். ஆனால் அமைதியாக இருப்பதால் அது அசேதனம் என்று உறுதியாகிறது.
 
கேள்வி-2: நாம் அழைத்த போதிலும் அது பிராணனை அடையவில்லையென்றால் அது எப்படி பதிலளிக்கும்?
பதில்-2: பிராணன் தேவதை என்று கர்மகாண்டத்தில் ஏற்றுக்கொண்டு, யாகத்தின் போது சத்தமாகவோ அல்லது மனத்துக்குள்ளே சொன்னாலே அது பிராணனை அடையும் என்று நம்பி செய்வதைப் போல இங்கே எப்படி கூப்பிட்டிருந்தாலும் அது பிராணனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்
 
கேள்வி-3: சரி இவ்வாறு அழைத்தும் பிராணன் பதிலளிக்காததால் ஜீவனில் சேதனம் என்று எதுவுமே இல்லையென்றுதானே தோன்றுகிறது.
பதில்-3: உடலிலுள்ள சேதனம் எல்லா அங்கங்களிலும் வியாபித்திருக்கிறது, அபிமானம் வைத்திருக்கிறதுஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் காரணத்தில் லயம் அடைந்து விட்டதால் அது பதிலளிக்காது.
 
Ø  பல பொருட்களை சேர்த்து உருவாக்கிய வண்டியை அதை உருவாக்கியவர்கள் அனுபவிப்பதில்லை, அதை வாங்கியவர்தான் அனுபவிக்கிறார்அதுபோல பல அங்கங்கள் சேர்ந்து உருவாகியிருக்கும் இந்த ஜீவனில் ஒரு அங்கமான பிராணன் போக்தாவாக இருக்க முடியாது.
Ø  இங்கு பிராணனுக்கு மேலான ஒன்றை உபதேசிக்க இருப்பதால் பிராணனை ஆத்மா என்று உபதேசிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
Ø  இப்பொழுது ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறான்அவனுடைய ஸ்வரூபம் பற்றி உபதேசம் செய்வதற்காக இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்.
 
ஸ்லோகம்-16
ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் என்ன?
இந்த மாதிரி தூங்கிக்கொண்டிருக்கின்ற விக்ஞானமய புருஷன்; புத்தியுடைய மனிதன்,
எங்கு இவன் அந்த நேரத்தில் இருக்கின்றான்? அதாவது தூங்கும்போது ஒருவன் எங்கிருக்கிறான்? எங்கு இருந்து இவன் திரும்பி வருகிறான்? என்று அஜாதசத்ரு கேட்டார்
சிஷ்யர், பாலாகிக்கு தெரியவில்லை.
 
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஆத்ம ஸ்வரூபத்திற்கு சென்றிருந்தான். பிரம்ம ஸ்வரூபத்திலிருந்து வருகிறான்.
 
கேள்வி-1: ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா தன் ஸ்வரூபத்திலிருந்து வேறெங்காவது சென்று திரும்பி வந்ததா?
பதில்-1: ஒருவேளை ஆத்மா வேறெங்காவது சென்று வந்தால், இது உண்மையாகி விடும்ஆத்மா வேறெங்கும் செல்லவில்லையென்றால் சென்று வருதல் என்ற விவகாரம் உண்மையற்றதாக இருக்கும்கற்பனையாகத்தான் இருக்க முடியும்ஆத்மா வேறெங்கும் செல்வதில்லை, வருவதுமில்லைஆகவே ஆத்மா எப்பொழுதும் தன் ஸ்வரூபத்திலேயே இருக்கிறதுஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் தன் ஸ்வரூபத்தில் இருந்தால் அதன் தன்மை என்ன?
அதிகரணம்இருக்குமிடம், அபாதனம்இடத்திலிருந்து வரும் இடம்.
விக்ஞானமய புருஷஹவிக்ஞானமயகோசம்.
சைதன்யமயசைதன்யத்தினுடைய விகாரம்சைதன்யத்துக்கு விகாரம் கிடையாதுசைதன்யமய என்பதற்கு பிரம்மத்தின் உறுப்பாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாதுசரியான பொருள் புத்தியையுடைய ஜீவன்.
 
ஸ்லோகம்-17
விழிப்பு நிலையில் நாம் கர்த்தாவாக, போக்தாவாகவும் இருக்கிறோம்ஆனால் அது நம்முடைய ஸ்வரூபமல்ல. ஏனென்றால் கனவில் நாம் இரண்டுமில்லாத நிலையில் இருப்பதால் அதுதான் சுபாவ ஸ்வரூப நிலைஎந்த வித குணமுமில்லாத சைதன்யத்துடன் ஒடுங்கியிருக்கிறான்மோட்சத்திற்கு ஒரு உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.  ஏனென்றால் அந்த நிலையில் சம்சாரம் இல்லைஆனால் அக்ஞானம் இருக்கிறதுஎனவே அது மோட்சம் என்று எடுத்துக் கொள்ள முடியாதுபுத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மா-சிதாபாஸனாக நாம், நான் என்று எடுத்துக் கொள்கிறோம்.
 
ஸ்வம் அபி இதி3நாம் நம்மிடத்திலேயே இருத்தல்; க்ருஹீதம்ஒடுங்குதல்
ததா3 - அப்பொழுது ,
தேஷாம் ப்ராணானம் எல்லா இந்திரியங்களின்
விக்ஞானேனசிதாபாஸத்துடன்
அந்தஹம்- மனதில்,  
ஆகாஶா பரமாத்மா,
தஸ்மின் சே2த் அந்த இடத்தில் ஒடுங்குகிறான்.
 
எப்பொழுது ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களிலிருந்து விலகி, சிதாபாஸத்துடன் நிர்குண சைதன்யத்துடன் லயமாகி விடுகின்றானோ, அப்பொழுது  இந்த ஜீவனின் மூக்கினுடைய செயல்பாடுகள், நாக்கினுடைய செயல்பாடுகள், வாயினுடைய செயல்பாடுகள் ஆகிய எல்லா இந்திரியங்களின் செயல்பாடுகளும் ஆத்மாவில் ஒடுங்கி விடுவதால் எந்த விவகாரமும் நடக்காமல் இருக்கிறதுஎல்லா இந்திரியங்களும் சிதாபாஸத்தில் ஒடுங்கி பிறகு இதயத்தில் உள்ள பரமாத்வாவுடன் லயம் அடைகிறது.
 
ஸ்லோகம்-18
நிக3ச்ச2தி  - அடைகின்றான்
உச்ச2வயம் - மேலான, கீழான,
ஜானபதா3ன் - வேலையாட்கள்
ஜன்பதே3 – நாட்டில்,
பரிவதத் – உலாவருகின்றான்
 
நாம் அனுபவிக்கும் சம்சாரம் வந்து போகிற விஷயம், இந்திரியங்களோடு அபிமானமில்லாத போது சம்சாரம் இல்லைஎனவே சம்சாரத்திற்கு ஸ்வரூப சம்பந்தம் இல்லைவிழிப்பு நிலையில்தான் சம்சாரத்தை அனுபவிக்கிறோம்ஆழ்ந்த உறக்கத்தில் இந்த சம்சாரத்தை அனுபவிப்பதில்லைகாரணம் இந்திரியங்களோடு சம்பந்தமில்லை.
 
கேள்வி-1: கனவு நிலையிலும் இந்திரியங்களுடன் தொடர்பில்லை ஆனாலும் ஸ்வப்ன பிரபஞ்சத்தை உருவாக்கி சம்சாரத்தை அனுபவிக்கிறான்எனவே சம்சரத்திற்கு காரணம் இந்திரியங்களோடு உள்ள சம்பந்தம் என்பதில்லை அது உனது ஸ்வரூபம்தான்.
பதில்-1: விழிப்பு ஸம்ஸ்காரங்கள்தான், கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணமாகிறதுஆகவே கனவு என்பது விழிப்பு நிலையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் உருவாக்கிய உலகத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் இந்த ஸ்ம்ஸ்காரங்களில் இருந்து விடுதலையடைகிறோம்.
 
கனவு எப்படி வருகிறது? (சாஸ்திர விளக்கம்)
மனம் நாடிகளின் வழியாகத்தான் கனவுலகில் சஞ்சரிக்கிறதுமனதின் இருப்பிடம் இதயம், இதிலிருந்துதான் பல நாடிகள் செல்கிறதுமனமானது நாடிகள் வழியே கண், காது போன்ற இந்திரியங்களை அடைகிறதுபிறகு இந்த உலகத்தை அனுபவிக்கிறதுகனவு நேரத்தில் அந்தக்கரணம் நாடிகள் வழியே சென்று கோளகத்தை அடைகின்றதுநம்முடைய ஸம்ஸ்காரத்திற்கேற்ப கர்ம வசத்தினால் எதோ ஒரு வாசனையுடன் தொடர்பு கொண்டு நாடிகளுக்குள்ளே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அந்த பிரபஞ்சத்தை ஜீவன் அனுபவிக்கிறான்அவனுக்கு தைஜஸன் என்று பெயர்கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணம் கர்ம வினை காரணமாக ஏதாவது ஒரு ஸம்ஸ்காரத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
மந்திர விளக்கம்:
ஒருவன் எப்பொழுது கனவு நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் அவன் தன்னுடைய கர்ம பலனைத்தான் அனுபவிக்கிறான்கனவை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் கர்ம பலனை அனுபவிக்கிறோம்கனவுப் பிரபஞ்சமும் மித்யா என்று இந்த மந்திரம் உணர்த்துகிறதுகனவில் மகாராஜாவாக இருப்பது போல, பெரிய பண்டிதனாக இருப்பது போல, மேலான, கீழான பிறவியை அடைந்து, மகாராஜா நகர்வலம் வரும்போது எந்தவித தடையும் இல்லாமல் படைகளுடன் அனுபவிக்கிறாரோ அதுமாதிரி ஜீவனும் தன்னுடைய வாஸனையால் ஒரு தனி உலகத்தை படைத்துக் கொண்டு தன் விருப்பப்படி தன்னுடைய உடலில் உலா வருகின்றான்ஆகவே சம்சாரம் என்பது அனாத்மாவை அபிமானிக்கும் போதுதான் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
 
ஸ்லோகம்-19
அத2 - அதுவே
யதா3 ஸுஷுப்தோ ப4வதி எப்பொழுது உறங்கிக்கோண்டு இருக்கின்றானோ,     
ந கஸ்யசன வேத3 - எதையும் அறியவில்லை.
தபி4 அதே நாடி வழியே திரும்பி
புரீததிஇதய ஆகாசத்துக்குள் உறங்குகின்றான்.

நம் உடலில் 101 பிரதான நாடிகளும், 72,000 நாடிகளும் இருக்கின்றன. இதற்கு ஹிதர என்று பெயர். இவைகளனைத்தும் இதயத்திலிருந்து உடல் முழுவதும் வியாபித்து செல்கின்றதுஇந்த நாடிகள் வழியே சென்று இதயத்திற்குள் ஒடுங்கி விடுகின்றான் ஜீவன். அதே நாடி வழியே திரும்பி இதய ஆகசத்துக்குள் உறங்குகின்றான்குழந்தையாக இருந்தாலும், மகாராஜாவாக இருந்தாலும், பெரிய பண்டிதனாக இருந்தாலும், எல்லோருமே ஆனந்தத்தின்  எல்லையை அடைந்து உறங்குகின்றார்கள். இதுதான் உறக்கத்தைப்பற்றிய விசாரம்ஜீவனில் ஏற்படும் சம்பந்தத்தால் சம்சாரம் ஏற்படுகிறதுமுதலிரண்டு அவஸ்தைகளிலும் சம்பந்தம் இருக்கிறதுஎனவே சம்பந்தம் நித்யமாக இருப்பதால் சம்சாரமும் நித்யமாக இருப்பதுபோல் தோன்றுகிறதுஆனால் ஆழ்நிலை உறக்கத்தில் எந்தவித சம்பந்தம் இல்லை.
 
ஸ்லோகம்-20
இந்த மந்திரத்தில் பிரம்ம லட்சணம் விளக்கப்படுகிறதுஉபநிஷத் இதை முக்கியமானது, ரகசியமானது என்று கூறுகிறது.
1.   பிரம்மன் ஜகத்துக்கும், ஜீவனுக்கும் உபாதான காரணமாக இருக்கிறது.
2.   எந்தவொரு சைதன்யம் நம்முடைய ஒரு சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதோ அதுவே இந்த உலகத்துக்கே ஆதாரமாக இருக்கிறது.
3.   பிரம்மஆத்ம ஐக்கியத்தை குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
4.   பிரம்மத்தின் புதிய லட்சணம் – (ஜகத் மித்யா, பிரம்ம சத்யம், பிரம்ம அத்வைதம்)
5.   ஜீவன் எங்கிருந்து வருகின்றான்
 
மந்திர விளக்கம்:
சிலந்தி பூச்சி அதன் வலையை அதுவே பின்னிக்கொண்டு அதன் மீது ஊர்ந்து சென்று, வந்து கொண்டிருக்கின்றது. நெருப்பிலிருந்து சிறிய சிறிய தீப்பொறிகள் தோன்றுகின்றனவோசேதனமான சிலந்தி ஜடமான வலைக்கு உபாதான காரணமாக இருக்கிறது, அதாவது யாருடைய உதவியுமில்லாமல் தன் வலையை தானே உருவாக்கிக் கொள்கிறது. அதுபோல பிரம்மன் யாருடைய உதவியுமில்லாமல் ஜகத் உருவாகுவதற்கு உபாதான காரணமாக இருக்கின்றதுஅதுவே நிமித்த காரணமுமாகவும் இருக்கின்றதுபிரம்மன் ஜீவன் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறதுநெருப்பிலிருந்து தோன்றும் தீப்பொறி ஸ்வரூபத்தில் ஒன்றாக இருக்கிறது ஆனால் உருவத்தில் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. பிரம்மத்திலிருந்து தோன்றும் ஜீவனும் ஒரே ஸ்வரூபத்தை உடையதுஇதனால் எந்தவித மாற்றமுடையாமல் பிரம்மன் இருந்துக் கொண்டு ஜீவனை தோற்றுவிக்கிறது.
 
ஏவம் ஏவஇவ்விதமாகவே, உதாரணத்தைப் போல
அஸ்மாத் ஆத்மனஹஇந்த உடலுக்கு ஆதாரமாக உள்ள ஆத்மாவிடம் இருந்தே
ஸர்வே பிராணாஹஎல்லா பிராணன்களும், ஜீவராசிகளுடைய எல்லா இந்திரியங்களும்
ஸர்வே லோகாஹஎல்லா லோகங்களும்,- அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உலகத்தை
ஸர்வே தேவாஹஎல்லா தேவர்களூம்இந்த உலகத்தினுடைய நியதியை கண்காணிப்பவர்கள்.
ஸர்வானி பூதானிஎல்லாய் உயிரினங்களும் தோன்றியுள்ளன.
இதனால் பிரம்மன் என்று சொல்ல வேண்டிய இடங்களில் ஆத்மா என்ற சொல்லை உபயோகித்திருப்பதால் இரண்டும் ஒன்றே என்று குறிப்பால் உணர்த்துகிறது.
தஸ்யபிரம்மத்தினுடைய,
உபநிஷத்ரகசியமான பெயர்.
ஸத்யஸ்ய ஸத்யம்சத்தியத்தினுடைய சத்யம்
 
இது மிகவும் சூட்சுமமாக இருப்பதால் இதை ரகசியம் என்று கூறுவதற்கு காரணமாகிறது. இதை புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினம்இது புனிதமான பெயர் என்றும் கூறலாம்இந்தப் பெயரை தகுதியானவருக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும். ”ஸ்த்யஸ்யஎன்ற சொல்லில் உள்ள சத்யமானது பிராணனை குறிக்கும்.
பிராண ஏவ ஸத்யம் - பிராணனுடைய சத்யம், உலகத்தினுடைய சத்யம் என்று இதை பொருள் கொள்ள வேண்டும்.
தேஷாம் ஏவ ஸத்யம்பிராணன்களுக்கு பிரம்மன் ஸத்யம்
உலகத்தை எப்படி சத்தியம் என்றூ கூறமுடியும் என்றால் சத்தியம் என்ற சொல்லை இரண்டாக  பிரித்தால் உருவத்துடன் கூடியது, உருவமில்லாதது அல்லது வியாவகாரிக ஸத்யம் என்றும் இதைக் கூறலாம்.
<<வியாவஹாரிக சத்தியத்திற்கு பாரமார்த்திக சத்யமாக இருப்பது>>

சங்கரரின் விளக்கவுரை (ஸத்யஸ்ய ஸத்யம்)
கேள்வி-1: இரண்டு கேள்விகளையும் ஒரு கேள்வியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்? எங்கிருக்கிறானோ அங்கிருந்துதான் வரவேண்டும். எனவே இரண்டாவது கேள்விக்கு அவசியமில்லை.
பதில்-1: குதஹ: எங்கிருந்து, எதனால் என்று இரண்டு பொருள் உள்ளதுஅபாதானத்தை நீக்கி நிமித்தத்தை எடுத்துக்கொண்டால் நீ கேட்ட கேள்வி சரி. எனவே எதன் காரணமாக திரும்பி வருகிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி-2: பதிலைப் பார்க்கும் போது நிமித்தக்காரண அடிப்படையில் இல்லைஉபாதான அடிப்படையில்தான் இருக்கிறது.
பதில்-2: முதல் கேள்வியில் ஆதாரம், ஆதேயம் என்ற சந்தேகம் வந்து விடும். இந்த சந்தேகத்தை நீக்கி அத்வைதத்தை நிலைநாட்ட இந்த இரண்டாவது பதிலும் தேவை.
 
சங்கரரின் விளக்கம்
விளக்கம் ஏன் தேவை? எங்கு சந்தேகம் இருக்கிறதோ அங்கே விசாரம் செய்யலாம்பிரயோஜனம் இருக்க வேண்டிய இடத்தில் விசாரம் செய்யலாம்இந்த இரண்டுமே இல்லை. பிறகு ஏன் விளக்கம் தேவை என்று சங்கரர் விளக்குகிறார்.
 
தஸ்ய உபநிஷத்அவனுடைய ரகசியம் என்பது ஜீவனுடையதா, பிரம்மத்தினுடையதா? என்ற சந்தேகம் வரலாம்தஸ்யஜீவனுடைய லட்ச்ணமாக இருந்தால் சம்சாரத்தைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். தஸ்யபிரம்மத்தின் லட்சணமாக இருந்தால் அதன் ஞானத்தைத்தான் அடைவோம்.
 
ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்றால் மகாவாக்கியமே தவறாகி விடுகிறதுஜீவன் அசம்சாரியென்றால் சாஸ்திர உபதேசம் அனர்த்தமாகி விடும்ஜீவனும், பிரம்மனும் ஒன்றென்றால் பிறகு சாஸ்திர உபதேசம் தேவையற்றதாகி விடும்.
 
கேள்வி: குருவானவர் உறங்கிக்கொண்டிருந்தவனிடம் சென்று பிரம்மத்தை உபதேசிக்க அணுகினார்ஆகவே ஜீவாத்மாவைத்தான் குறிக்கிறது. இங்கு ஜீவனைப்பற்றித்தான் விசாரிக்கின்றோம். “தஸ்யஎன்பது ஜீவனைத்தான் குறிக்கிறதுநம்மால் அறியப்பட வேண்டியது ஜீவனைத்தான்ஆத்மாவை இத்யவே உபாஸீதே என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறதுஇப்படி பல இடங்களில் ஆத்மாவைத்தான் அறிய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. ஈஸ்வரன் ஒருவர் இருந்தால்தானே அவரை தஸ்ய என்ற சொல்லால் குறிக்க முடியும்.
பதில்: ஜீவாத்மாதான் என்று நீ சொல்கிறாய், இதை சம்சாரி என்று ஓரிடத்திலும், அசம்சாரி என்று வேறிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதுஜீவனில் இரண்டு அவஸ்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்அசம்சாரியாக இருக்கிறது ஜீவனிலிருந்துதான் ஜகத் வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமே.
 
கேள்வி: இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளதக்கதல்லஇரண்டு விபரீதமான தர்மத்துடன் ஒரு பொருள் இருக்க முடியாதுதடஸ்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்வேன், ஜீவனிடமிருந்து வேறான தடஸ்த ஈஸ்வரன் மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கதுஇந்த பிரகரணம் பிரம்மத்தைப்பற்றித்தான் விளக்கப்படுகிறது.  15வது ஸ்லோகத்தில்பிரம்மத்தே வர்ஷியதே இதிஎன்பதிலிருந்து பிரம்மத்தை உபதேசிக்கிறேன் என்ற குருவின் பதிலிலிருந்து, பிரம்மம்தான் விசாரம் செய்யப்படுகிறது.
 
ஜீவன் வேறு, ஈஸ்வரன் வேறு, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈஸ்வரனிடம் தங்குகிறான்எனவே அவன் அந்த நிலையிலே ஈஸ்வரனிடத்தில் தங்குவதாலேயே, நாம் ஜீவனை அறிவது ஈஸ்வரனை விசாரிப்பதிலிருந்துதான்வேறு சில இடங்களில் ஈஸ்வரனைப்பற்றியும் பேசப்படுகிறதுஅந்த ஈஸ்வரனும் அறியப்பட வேண்டியதுதான் என்று சாஸ்திரம் சொல்லியிருப்பதால், ஆத்மாவையும் அறிய வேண்டும், ஈஸ்வரனையும் அறிய வேண்டும்எல்லா இடத்திலும் ஜீவ-ஈஸ்வரனை வேறுபடுத்தி பேசியிருக்கிறது. “அஹம் பிரஹ்மஸ்மிஎன்பதெல்லாம் உபாஸனைக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
பதில்: பிரவேச ஸ்ருதிவசாத்பிரவேச ஸ்ருதியின் அடிப்படையில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம்தான் உண்மைஜீவனிடமிருந்து வேறுபடாத ஈஸ்வரனைதான்தஸ்யஎன்ற சொல் குறிக்கிறதுஇந்த உலகத்துக்கே ஆதாரமாக உள்ள ஈஸ்வரன்தான் ஜீவனுக்குள் சென்றிருக்கிறார்ஆத்மா என்ற சொல் பிரம்மனிடமிருந்து வேறுபடாத ஒன்றுஈஸ்வரனாக இருக்கும்போது ஜீவன் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குகிறான் என்பது தவறு.
 
கேள்வி- ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் என்று சொன்னால் அதில் இரண்டு தோஷம் உள்ளதுஜீவன் சம்சாரி, ஈஸ்வரன் அசம்சாரிஎனவே இந்த ஐக்கியம் இருவரும் சம்சாரியாக இருப்பார்கள்முதல் கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கும்இரண்டாவது கருத்தை ஏற்றுக்கொண்டால் சாஸ்திரமும் தேவையில்லை என்றாகி விடும்.
 
பேதாபதிவாதி    à விருத்திகார மதம்உருவாக்கியவர் பர்த்துரு பிரவஞ்சம்.
விசிஷ்டாவைதம் à பேதமும், அபேதமும் சேர்ந்திருப்பதால் இந்தப் பெயர்ஈஸ்வரன் ஒருவர்தான்.

ஜீவனை சம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதுஈஸ்வரன் அசம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதுஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் சொல்லியிருக்கிறதுஈஸ்வரன் ஜீவனுக்குள் செல்லும்போது விகாரமடைந்து சென்றிருக்கிறார்இப்படி புரிந்து கொண்டால் ஜீவனை ஈஸ்வரனிடமிருந்து வேறாக இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடலாம்இந்த பேத, அபேத லட்சணத்தால் எல்லா வேத வாக்கியங்களும் சரியாக பொருந்தி வரும்.
 
கேள்வி-1: பல பரமாத்மாக்கள் இருக்கிறார்கள் அதில் சில பரமாத்மா ஜீவாத்மாவாக இருக்கிறதுமற்றவைகள் பரமாத்மாவாகவே இருக்கிறதுஉதாரணமாக பல விதைகளில் சில விதைகள் விதைகளாகவே இருக்கிறது, மற்றவைகள் விதைக்கப்பட்டு மரமாகி விடுகிறது.
பதில்:  உபநிஷத் பல பரமாத்வாக்களை பற்றி பேசவில்லைஜீவர்களை பலவாக சொல்லியிருக்கிறதுஆகவே இது தவறு.
 
கேள்வி-2: ஒரு பரமாத்மா முழுமையாக ஜீவனாக மாறியிருக்கிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பாலையும் தயிராக மாற்றுவது போல.
பதில்-2:  பரமாத்மா ஜீவாத்மாவாக மாறிவிட்டால், பரமாத்வே கிடையாதுஎனவே பரமாத்வை அடைய முடியாதுஈஸ்வரன் இல்லாத நிலையில் மோட்சம் என்பது கிடையாது.
 
கேள்வி-3:  ஏகதேச விகாரஹ- ஒரு பகுதியில் மட்டும் விகாரம் நடந்திருக்கிறதுபரமாத்மவுடன் ஒரு பகுதி ஜீவாத்மாவாக மாறியிருக்கிறதுஉதாரணமாக பூமியில் சில பகுதிகள் பாலைவனம், மலைகள், விளை நிலங்கள், விதவிதமாக இருப்பது போல ஈஸ்வரன் ஜீவாத்மாவாக விதவிதமான மாற்றங்களுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.
பதில்-3:  அங்கங்கள் என்று சொன்னால், அதற்கு வரும் நாசமெல்லாம் அது எதனோடு சேர்ந்திருக்கிறதோ அதற்கும் நாசமேற்படும்ஜீவர்கள் ஈஸ்வரனின் அவயவங்கள் என்று கூறினால், ஜீவர்களில் சம்சார குணம், ஈஸ்வரனையும் சம்சாரியாக்கி விடும்எனவே சம்சாரியை நாம் ஏன் அடைய வேண்டும் அது நம்முடைய லட்சியமல்லஏற்கனவே நாம்தான் சம்சாரியாக இருக்கிறோம்.
 
எந்த வாக்கியத்திற்கு பலன் கிடைக்கிறதோ, புருஷார்த்தமாக வைக்க முடியுமோ அதைத்தான் மகாவாக்கியம் என்று கூறமுடியும்ஈஸ்வரனை முக்தனாக வைத்து அசம்சாரியாக வைத்திருந்தால்தான் ஜீவர்களும் அந்த நிலையை அடைவதற்கு லட்சியமாக வைத்து கொள்ள முடியும்பிரம்மத்தை புரிந்து கொள்வதற்கு எந்த உபமானமும் கிடையாதுஅப்படி கூறப்பட்டிருந்தால் அதை பிரமாணமாக எடுத்துக்கொள்ளாமல் அதைப்புரிந்து கொள்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்உபநிஷத்தில் த்வைதத்தை, பேதத்தை நிந்தித்திருப்பதாலும் ஏற்கனவே ஜீவன் நான் சம்சாரி என்று நன்றாக தெரியும்எனவே அசம்சாரியைப்பற்றித்தான் சொல்ல வேண்டும்பேதம்-அபேதம் என்றூ வாதம் சரியாக இல்லைஜீவனும் பிரம்மனும் பக்கத்திலே இருக்கிறதென்றால் அது ஒன்றையொன்று ஒட்டாததாக இருக்க வேண்டும், ஜீவன் மித்யாவாக இருப்பதால் அவனால் பிரம்மத்தை தொடமுடியாது.
 
பூர்வபக்ஷம்:
ஜீவ-பிரம்மத்திற்கிடையே நான்கு தோஷங்கள் இருக்கின்றன.
1)   ஸ்வார்த்த விரோதம்உபநிஷத் முரண்பாடாக பேசுகிறது
2)   கர்மகாண்ட அபிரமாணம்கர்ம காண்டம் பிரமாணம் என்ற தகுதியை இழந்து விடும்.
3)   பிரத்யக்ஷ விரோதம்அனுபவத்திலே விரோதம்
4)   அனுமான விரோதம்அனுமானத்திலேயே விரோதம்.
 
கேள்வி: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக நன்கு வர்ணித்திருக்கிறதுஜீவனுக்கு பல சாதனைகளை சொல்லியிருக்கிறதுசில இடங்களில் ஜீவன் முக்தன், பிரம்மன் என்று ஐக்கியப்படுத்துகிறது.
பதில்:   உபநிஷத் ஜீவனை சம்சாரியாக சொல்கிறது அது உபதேசமல்ல அனுவாதம்ஆனால் எதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ அதுதான் உபதேசம் (பிரமாணம்).
 
கேள்வி: ஞான காண்டத்தில் உபநிஷத் எல்லாவற்றையும் நிஷேதம் செய்கிறதுபிரமாணத்தால் அறிய முடியாதது பிரம்மம்கர்ம காண்டம் ஜகத்தைத்தான் விஷயமாக வைத்திருக்கிறது. அதை நீக்கி விட்டால் கர்ம காண்டம் அபிரமாணமாக் கருதப்படும்; காரணம் கர்மகாண்டம் நிர்விஷயமாகிவிடுகிறது.  ஜீவனை அகர்த்தா, அபோக்தா என்று சொல்கிறாய், கர்ம காண்டம் கர்மத்தை செய் என்று சொல்கிறது, இப்படி செய் என்று கர்த்தாவிடம்தான் சொல்ல முடியும்ஆனால் அகர்த்தாவிடம் கர்மத்தை கொடுத்து விடுகிறதுஇரண்டாவது காரணம் பிரமாஜனகத்வாத்கர்ம காண்டமே நமக்கு மோகத்தை கொடுத்து விடுகிறதுஎனவே கர்ம காண்டம் பிரமாணமல்ல என்ற நிலை உருவாகி விடும்.
பதில்:   கர்ம காண்டம் நிர்விஷயமல்ல, விஷயமிருக்கிறது. இந்த ஜகத்தான் விஷயம். இது சாதனை, இது சாத்தியம் என்ற ஞானத்தைக் கொடுக்கிறதுஇந்த சாத்தியத்திற்கு இந்த சாதனம் என்று கூறுகிறது.       இஷ்ட பிராப்தி, அனிஷ்ட நிவிருத்தி (இஷ்டமில்லாததை நீக்குவது).  இதற்கு கர்ம காண்டம் சாதனங்களைக் கொடுக்கிறது அதன் பலனையும் சொல்கிறது.
 
கேள்வி: சாதனை, சாத்தியம் மித்யா என்று தெரிந்து விட்டால், கர்ம காண்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள், அப்பொழுது இது பிரயோஜனமில்லாததாகி விடும்.
பதில்:   கர்ம காண்டம் சாதனா, சாத்தியம், அஸத்வம், ஸத்யத்வம் இரண்டுமே பேசவில்லைகர்ம காண்டம் விஷயம் வேறு, ஞான காண்டம் விஷயம் வேறுஅதனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கக்கூடாதுகர்ம காண்டம் அக்ஞானிக்கு பிரமாணம்; ஞானிக்கு பிரமாணமல்லகர்ம காண்டம் ஞானிக்கு பிரயோஜனமில்லைஅதனால் அபிரமாணமாக இருக்கிறது.. பிரமாணமாக இருந்தால் பிரயோஜனத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லைகர்மகாண்டம் எல்லோருக்கும் பிரமாணம்தான்.
 
கேள்வி: நம்மை செயலில் ஈடுபடுத்துவது யார்? தூண்டுவது யார்?
பதில்:   நம்மிடத்தேயுள்ள ராக, துவேஷம்தான் நம்மை செயலை செய்யத் தூண்டுகிறதுவெளி விஷயங்களில் பற்றுடையவனை சாஸ்திரத்திற்கும் கூட அதை நீக்கும் சக்தி கிடையாது. சாஸ்திரத்தில் பற்றில்லாத ஒருவனை மீண்டும் பற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ள முடியாதுஅது இருப்பதைக் காட்டி கொடுக்கும், ஆனால் தூண்டி விட்டு செயலில் ஈடுபடுத்தாதுஅவரவர் புத்திக்கேற்றவாறு சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுகிறான்அது கர்மகாண்டமாக இருக்கலாம், அல்லது ஞான காண்டமாக இருக்கலாம்,

நம்முடைய அனுபவத்தினால் பேதத்தை நிலை நாட்ட முடியாது. அனுபவத்தில் ஆகாசம் பலவாக இருக்கிறதுஆனால் ஆகாசம் ஒன்றுதான் என்ற அறிவுடன் இருக்கிறோம்.
 
கேள்வி: பொருட்கள் விதவிதமான குணங்களுடன் இருக்கிறதுஎனவே விதவிதமான ஆதாரம் இருக்க முடியும் அல்லவா?
பதில்:   வித விதமான சப்தங்களுக்கு ஆகாசம் ஒன்றுதான் ஆதாரமாக இருக்கிறதுஅதே போல விதவிதமான தர்மங்களுக்கு பிரம்மன் ஒன்றுதான் ஆதாரம்ஆத்மா பிரத்யக்ஷத்துக்கு அப்பால் உள்ளதால், ஆத்மா அப்ரத்யக்ஷம்அனுபவத்திற்கு விஷயமாகாதுஎனவே ஆத்மாவை பிரத்யக்ஷத்துடன் சேர்க்கவேக்கூடாது.
 
கேள்வி: ஆத்மா பிளவுபட்டதாக இருக்கிறதுஆத்மா ஒன்றுதான் என்றால் எல்லோரும் ஒரே அனுபவம்தான் வரவேண்டும்ஆனால் அப்படியில்லையே.
பதில்:   பிரத்யக்ஷ பிரமாணம் இருந்தால்தான் அனுமானம் பயன்படுத்த வேண்டும்உன்னுடைய ஸ்தூல சரீரம் அனுமானத்தை சொல்கிறதா? ஆத்மா அனுமானம் செய்கிறதா? யாரும் இந்த அனுமானத்தை செய்ய முடியாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-2 : பிராண ப்4ராமனம் (சிஷு ப்4ராமனம்)
       --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பகுதியில் சத்தியத்தினுடைய சத்யம் என்பது மேலும் விளக்கப்பட்டுள்ளதுபஞ்ச பிராண தத்துவத்தின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
வெளியிலிருக்கும் காற்றுக்கு வாயு என்று பெயர், உடலுக்குள் சென்று வரும் போது அதையே பிராணன்கள் என்று ஐந்து விதமாக அழைக்கப்படுகிறது.
v  இந்திரியங்களையும் பிராணன் என்றும் அழைக்கப்படுகிறது
v  சில இடங்களில் ஸ்தூல உடலும், உலகமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது.
v  சூட்சும சரீரமாக பிராணன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்கூறியபடி பிராணனின் உண்மையான பொருளைத் தவிர வேறு விதமாகவும் பிராணன் அழைக்கப்படுகிறது.
v  பிராணனுடைய பெருமையைப் பற்றி பேசப்படுகிறதுஇவ்வாறு பெருமையாக கூறினாலும் இது மித்யாதான்.
v  நம்முடைய மனம் ஸத்தியத்தின் ஸத்யம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், இதற்கு தடையாக இருப்பது நம்முடைய இந்திரியங்கள், ஏனென்றால் இந்திரியங்கள் ராக துவேஷங்களால் பலமாக ஆட்கொள்ளப்பட்டு இவ்வாறு தடையாக இருக்கிறதுமனதை சஞ்சலபட வைத்து அதை சக்தியற்றதாக மாற்றி விடுகிறதுஎனவே இங்கு ஒரு விதமான உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறதுஇதன் மூலம் இந்திரியத்தை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த கருத்துக்களெல்லாம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
 
சங்கரரின் முகவுரை
பிராணன் வியாவஹாரிக சத்யமாக இருக்கிறதுஇப்படி சொல்வது இது தனக்கு வேறாக உள்ள பாரமார்த்திக சத்யத்திலிருந்து சத்யத்தை எடுத்துக் கொண்டு த்யமாக தோன்றுகிறதுஇங்கு பிராணனை இந்த ஜகத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தானாக இருத்தல் என்ற சக்தியற்று வேறொன்றின் மூலம் இருத்தலை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கிறதுஇந்த ஜகத் எதனிடமிருந்து தோன்றி, எது இருப்பதால் தானும் இருந்து கொண்டு பிறகு அதனிடமே ஒடுங்குவதால் அந்த பிரம்மம்தான் த்யம். சத்யம் என்ற சொல்லுக்கு யோக்யதையான பிரம்மத்தை விட்டு ஏன் பிராண தத்துவத்தை த்யம் என்று கூறுகின்றது என்பதை இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த உலகம் மூர்த்தம், அமூர்த்தம் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது
ஸத்யம்=ஸத் + த்யத் = உருவம் + உருவமற்றது
பிராணனும் மூர்த்த-அமூர்த்தமாக இருக்கிறதுஎனவே பிராணன் த்யம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மந்திர விளக்கம்
பிராணனுக்கு ரகசியமான பெயர்சிஷூகன்றுக்குட்டியை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதுஇவையிரண்டும் ராக-துவேஷமற்றது, வெளி விஷயங்களில் பற்றில்லாதது, தூய்மையானது. இதைத் தியானம் பண்ணுவதால் மனமும் சுத்தமாகிறது. இந்திரிய ஜித் என்ற பெயருடைய இந்த உபாஸனை:.
1.   ஆதானம்இளைப்பாற தங்குமிடம்பிராணனுக்கு இது சரீரமாக இருக்கிறது.
2.   பிரத்யாதானம்வசிக்குமிடம்பிராணனுக்கு நம்முடைய தலை
3.   ஸ்தான்கம்பம்பிராணனுக்கு கம்பம்சக்தி
4.   தாம்கயிறுபிராணனுக்கு கயிறுஉணவு
இவ்வாறு பிராணனை தியானித்தால் எல்லோரையும் பிராணனாக நினைக்கும் மனப்பான்மை வந்து விடும்.

ஸ்லோகம்:2
எல்லா தேவதைகளும் பிராணனை தியானிக்கிறார்கள், கண்ணை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானிக்கிறார்கள்ருத்ரதேவன் கண்ணிலுள்ள சிவப்பு நிற கோட்டை ஆலம்பமனமாக எடுத்துக் கொள்கிறார்கள், வருணபகவான் கண்ணீரை எடுத்துக் கொள்கிறார். சூரியபகவான் கருமையத்தை தியானிக்கிறார்கள்.
 
ஸ்லோகம்:3
இந்திரியமாக பிராணனை வைத்து தியானிக்கிப்படுகிறதுஇப்படி செய்வதால் இந்திரியங்களும் தூய்மையடைகிறதுஇதனால் இந்திரியங்கள் நம்முடைய மேன்மைக்கு காரணமாகிறது. இரண்டு கண்கள், இரண்டு மூக்குதுவாரங்கள், இரண்டு காது துவாரங்கள், வாய் ஒன்று இவை ஏழும் சப்த ரிஷிகள் என்று குறிக்கப்படுகிறது. எது அறிகின்றதோ அவைகள் ரிஷிகளாகும்எட்டாவதாக வாக்கானது எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஸ்லோகம்:4
ஏழு ரிஷிகளின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கிறது.
2 காதுகள்கோதம, பரத்நாஜன்
2 கண்கள்விஸ்வாமித்ரர், ஜமதர்னி
2 மூக்கு துவாரங்கள்வசிஷ்டர், காஷ்யப்பர்
1 வாய்அதமி

இவ்வாறு பிராணன தியானித்து இந்திரியங்களை சுத்தப்படுத்தி அதன் மூலம் சித்தசுத்தி அடையலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-3 : மூர்த்த-அமூர்த்த ப்4ராமனம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகவுரை:
பிராண தத்துவத்தின் விளக்கம்: நிஷேதத்தின் மூலம் பிராண தத்துவம் மித்யா என்று சொல்லி, பிரம்மம் ஒன்றே என்று நிரூபிக்கப்படுகிறது
பிரபஞ்சம்-மூர்த்தம் (உருவமுடையது), அமூர்த்தம் (உருவமற்றது) என்று பிரிக்கப்படுகிறது
மூர்த்தம்சமஷ்டி, வியஷ்டிஅமூர்த்தம்சமஷ்டி, வியஷ்டி
 
அதிதெய்வம்: சமஷ்டி மூர்த்தம்- பிருத்வி, நீர், நெருப்பு; வியஷ்டி அமூர்த்தம்- வாயு, ஆகாசம்
அத்யாத்மம்: சமஷ்டி மூர்த்தம்- ஸ்தூல சரீரம்; வியஷ்டி அமூர்த்தம்- சூட்சும சரீரம்.
 
சங்கரரின் அறிமுகம்:-
சத்தியத்தினிடத்தில் உள்ள சத்யமான பிராணன்(ஜகத்) சேதனமா, அசேதனமா என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது திருஷ்யமாக இருப்பதால் அசேதனம் என்று தீர்மானித்துவிடலாம்ஸ்வரூபம் காரணமா, காரியமா என்றால் இது காரண ஸ்வரூபமல்ல இதன் தோற்றம் பேசப்பட்டதால் இது காரியம் என்று தெரிகிறது. எது காரியமோ அது மித்யாஆகவே இங்கு ஸத்யஸ்ய என்ற சொல் மித்யாவை குறிக்கிறதுமித்யாவாக இருப்பதால் ஏன் ஸத்யம் என்று சொல்லப்படுகிறதுமித்யா என்பது புரிந்து கொள்ள வேண்டிய வாக்கியம். அதை புரிய வைக்க வேண்டுமென்றால் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறதுஆகவே ஸத்தியஸ்ய ஸத்யம் என்பது சரியான வார்த்தைதான்பிரபஞ்சமற்ற, சம்சாரமற்ற ஒன்று அது பிரம்மம் என்று புரிய வைக்க வேண்டும்.
 
ஸ்லோகம்:1
பிரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள் இருக்கிறது. இது இரண்டு ரூபமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளதுஅது மூர்த்தமாகவும், அமூர்த்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளதுபிரம்மத்தை சுட்டிக் காட்டுவதற்கு இரண்டு விஷயங்களாக மூர்த்தா, அமூர்த்தா பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூர்த்தம்    – மர்தியா    - அழியக்கூடியது. (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம்  – அம்ருதம்  – அழியாதது அல்லது நீண்ட காலம் இருப்பது (சூட்சும சரீரம்)
மூர்த்தம்    – ஸ்திதம்   – வரையறுக்கபட்டது – (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம்  - யத்த      - வரையறுக்கபடாதது – (சூட்சும சரீரம்)
மூர்த்தம்    – ஸத்       – பிரத்யக்ஷ கோசரம்இந்திரியங்களால் பார்க்க முடிவது 
அமூர்த்தம்  - த்யத      - இந்திரியங்களால் பார்க்க முடியாதது
 
ஸ்லோகம்:2
அதிதெய்வமான மூர்த்தம் எது, வாயுவுக்கும் ஆகாசத்துக்கும் வேறாக உள்ளது எதுவோ (நீர், நிலம், நெருப்பு) அதுதான் மூர்த்தம்இது மர்த்தயம், இது ஸித்தம், இது சத் என்று குறிக்கப்படுகிறதுசூரியனுடைய சரீரம்தான் மூர்த்தமாக கூறப்படுகிறது.
 
ஸ்லோகம்:3
வாயுவும், ஆகாசமும் அமூர்த்தம், இது அம்ருதம், த்யத், யத்இதற்கு சாரமாக இருப்பது சூரிய மண்டல தேவதையின் சூட்சும சரீரம். இது அதிதெய்வதம்.
 
ஸ்லோகம்:4
அத்யாத்ம மூர்த்தம், அமூர்த்தம்ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம்இந்த ஸ்தூல சரீரம்தான் மூர்த்தம், பிராணன், ஆகாசத்துக்கு வேறாக உள்ளவைகள் மூர்த்தம்இதை மர்த்யம், ஸித்தம், ஸத் என்ற சொல்லபடுகின்றது, இதற்கு நம் கண் சாரமாக இருக்கிறது.
 
ஸ்லோகம்:5
அமூர்த்தமானது ஆகாசம், பிராணன் போன்ற சூட்சும சரீரத்தைக் குறிக்கிறதுஇது அம்ருதம், யத், த்யத் என்று குறிக்கப்படுகிறதுசூட்சும சரீரமே சாரமாக இருக்கிறது.
 
ஸ்லோகம்:6
நம்முடைய சூட்சும சரீரத்தில் ஸம்ஸ்காரங்களே வாசனைகளாக இருக்கிறதுஅதையும் அமூர்த்தத்தில் சேர்க்கப்பட்டிகிறதுஅதையும் நீக்க வேண்டும்
 
நிஷேத வாக்கியம்- பிரம்மம் மூர்த்த-அமூர்த்தம் இல்லை என்று நீக்குதல்.
வாசனா க்ஷயம்நமக்குள்ளிருக்கும் வாசனா சக்தியினால் நாம் பெற்ற அறிவு நமக்கு பயன்படாதுவாசனைகள் சாத்வீகம், ராஜஸ, தாமஸ குணங்களை உடையதுதவத்தினால் ராஜஸ, தாமஸ வாசனைகளை அடக்கி வைத்து சாத்வீக மனதையடைகிறோம்அப்பொழுதும் கூட சில வாசனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
 
எவ்வளவு பலமான வாசனை என்று எப்படி அறியமுடியும்
நம் முயற்சியினாலே வாசனையை அடக்க முடிந்தால் அது பலவீனமான வாசனையாகும்எந்த வாசனைகள் செயலுக்கு தள்ளூகிறதோ அது பலமான வாசனை. இந்த பலமான வாசனைகளை அறிவு இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற வாசனைகளை நிதித்யாஸனம் மூலமாக அமைதிபடுத்த வேண்டும்இதன் மூலம் எல்லா வாசனைகளும் மித்யா என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்மனதில் எந்த விருத்திகள் (எண்ணங்கள்) வந்தாலும் இவைகளுக்கெல்லாம் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகள் மனதை சார்ந்தது என்னைச் சார்ந்தது அல்ல என்ற நிலைக்கு வரவேண்டும்மனதில் வாசனைகள் இருக்கும் ஆனால் அவைகளை நிஷேதம் செய்யப்பட்டிருக்க வேண்டும்
 
புருஷஸ்யசூட்சும சரீரத்தினுடய விதவிதமான வாசனைகள் பிரம்மத்தை வெவ்வேறு விதமாக ஒப்பிடுகிறதுஎப்படி மஞ்சள் வர்ணத்தில் நனைத்த துணியானது மஞ்சள் நிறமாக காணப்படும்இதில் துணியானது சூட்சும சரீரமாகவும், மஞ்சள் நிறமானது வாசனைகளை குறிக்கிறது. வெளிர் மஞ்சள் கம்பளியும், மிகச் சிவப்பான பூச்சியும், நெருப்பின் ஜூவாலையும், தாமரையின் நிறமும், மின்னலைப் போன்ற ஹிரண்யகர்ப்பனின் சூட்சும சரீரத்தில் உள்ள வாசனைகள் போல் கலந்து இருக்கின்றனஉபாஸகர்கள் ஞான நிஷ்டையை தொடராதவர்கள் இவர்களுக்கு எல்லாவித செல்வங்களும் ஒரு நொடியில் கிடைக்கும்.
 
பாஷ்ய விசாரம்:
புருஷஸ்ய ரூபம்சூட்சும சரீரத்தில் உள்ள உபாஸனை.
சூட்சும சரீரத்தை நீக்கும் போது வாசனைகளும் சேர்ந்து நிஷேதம் செய்யப்படுகிறதுகானல் நீரை நிஷேதம் செய்தாலும் அது இருந்துக் கொண்டுதான் இருக்கும்அதுபோல் வாசனை நிஷேதம் செய்தாலும் அது இருந்து கொண்டிருக்கும்.
 
கேள்வி: புருஷஸ்ய ரூபம் ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
வாசனைகள் எல்லாம் ஆத்மாவின் ஸ்வரூபங்கள் வெறும் வாசனா மயமான பிரபஞ்சமாக இருக்கிறதுஅதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம்அது க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. கனவில் தெரியும் விஷயங்கள் மனதில் இருப்பது போல், விழிப்பு நிலையிலும் தெரியும் விஷயமல்ல, மனதிலுள்ள எண்ணங்கள்தான்இல்லை, இல்லை என்பது வெளியே தெரியும் விஷயங்கள் இல்லையென்று சொல்லுகிறது.
பதில்: உன்னுடைய கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கிறதுஸ்ருதி நிலையான சைதன்யத்தை சொல்லுகிறது, தோன்றி மறைவது ஆத்மாவென்றால் அது நம்முடைய லட்சியமாக இருக்காதுஆத்மா க்ஷணிகம் என்றால் அது நாம் அடைய வேண்டிய புருஷார்த்தமாக இருக்காதுவிஷயம் இல்லாமல் விருத்தி எழும்பாது. ஒவ்வொரு எண்ணத்துக்கும் பின்னால் ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்.
 
கேள்வி: புருஷஸ்ய ரூபம் ஆத்மாவினுடைய குணம்ஆத்மாவினுடைய குணமாக இருப்பது இந்த வாசனைகள்தான்.
பதில்: ஆத்மா நிர்குணம் என்று ஸ்ருதி சொல்வதற்கு எதிராக இருக்கிறதுகுணம் அழிந்தால் அதைச்சார்ந்துள்ள பொருளும் அழிந்து விடும்வாசனைக்கு கெடுதி வந்தால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் ஆத்மா அப்படிப்பட்டதல்ல.
 
கேள்வி: வாசனைகள் மனதைச் சார்ந்தது ஆத்மாவை அல்லஆனால் ஆத்மாவும், மனமும் சமமாக ஸத்தாவாக இருக்கிறது.
பதில்: அத்வைத தத்துவத்திற்கு எதிராக இருக்கிறதுஆத்மாவுக்கு இணையாக வேறொன்று இருந்தால், ஆத்மா எங்கும் வியாபித்திருக்கும் என்ற ஸ்ருதியின் வாக்கியத்துக்கு எதிராக இருக்கும்.
 
கேள்வி: புருஷஸ்ய ரூபம்ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபம்பரமாத்மா என்பது வேறு.
பதில்: ஜீவாத்மாவுக்கும் பரம்மத்மாவுக்குள்ள வேற்றுமையில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதாஉடலின் ஒரு உறுப்பு என்ற சம்பந்தமா அல்லது இரண்டு வெவ்வேறாக இருந்து சம்பந்தம் இருக்கிறதாஇந்தக் கருத்து மகாவாக்கிரத்திற்கு விரோதமாக இருக்கிறது. எனவே ஏற்றுக் கொள்ள முடியாது.
 
தர்மத்தின் துணைக்கொண்டு ராஜஸ, தாமஸ வாசனைகளை நீக்க வேண்டும்பிறகு ஞானத்தின் துணைக்கொண்டு சாத்வீக வாஸனைகளை பலவீனப்படுத்த வேண்டும்.
 
அத2 - பிறகுஅத்ரோபத்திற்கு பிறகு (அனந்தரம்) முதல் சத்யத்தை விளக்கிய பிறகு,
அத3: - ஆகவே இரண்டாவது ஸத்யம் விளக்கப்பட வேண்டியதனால், பிரம்மத்தை அதன் ஸ்வரூபத்தை விளக்குவதற்காக;
ஆதே3உபதேசம் செய்ய வேண்டும்.
நேதி நேதி + இதி - பிரம்மத்தை உபதேசிக்கின்ற வாக்கியம்இந்த வாக்கியம்தான் பிரம்மத்தை நன்கு விளக்கக்கூடியதாக இருக்கிறதுஇதற்கு மேலாக பிரம்மத்தை உபதேசிக்க முடியாது.
யே தஸ்மாத் - நேதிஎன்கின்ற சொல்லை காட்டிலும்,
அன்யபரம் நஹி அஸ்தி - வேறு நல்ல உபதேசம் கிடையாது.
அதஆகவே
நாமதேயம் - - ஸத்யஸ்ய ஸத்யம்என்பது பிரம்மத்தை குறிக்கின்ற உயர்வான சொல்லாகும்ஸத்யமாக உள்ள பிராணனுக்கும் ஸத்யமாக உள்ளது.
 
நேதி நேதி விளக்கம்:
இல்லை,
இதிஎன்ற வினைச்சொல்லோடு சேரும்போது அப்படியே இருக்கும்பெயர் சொல்லோடு சேரும்போது இதுஎன்பதுஇவ்விதம் என்று மாறுகின்றது, இந்த மந்திரத்தில்இதுஎன்று அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது
ந இதிந இத3ம் அஸ்தி இது இல்லை.

விளக்கம்-1
இரண்டு க்கும், இரண்டு इति க்கும் ஒரே அர்த்தம்
इतिத்ருஷ்யம் (பார்க்கப்படுவது) – சிதாபாசம்சைதன்யத்துக்கு விஷயமாக இருக்கின்ற  எல்லா ஜடமான அனாத்மாக்களாக இருப்பதுபார்க்கப்படும் பொருட்கள் எல்லாம் இல்லை என்று இரண்டு முறை சொல்லப்படுகிறதுஇப்படி தெரிந்தே இரண்டு முறை பயன்படுத்தி இருப்பதனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறதுஉதாரணமாக அவர் இந்த வட்டத்தில் உள்ள வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். இதற்கு அவர் எல்லா வீட்டிற்கும் சென்று ஓட்டுக் கேட்டார் என்று அர்த்தமாகிறதுஅதேபோல இங்கே எல்லா அனாத்மாக்களையும் எடுத்துக்கொண்டு நிஷேதம் செய்ய வேண்டும்.

விளக்கம்-2
முதல் इति மூர்த்த பிரபஞ்சம், இரண்டாவது इति அமூர்த்த பிரபஞ்சத்தை குறிப்பதாக எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியம் மூர்த்தத்தையும், அமூர்த்தத்தையும் நிஷேதம் செய்வதாக பொருள் கொள்ளலாம்.
 
விளக்கம்-3
முதல் इति ஜீவனுடைய உபாதி, இரண்டாவது इति ஈஸ்வரனுடைய உபாதியாக எடுத்துக் கொண்டால், இந்த வாக்கியம் ஜீவனுடைய உபாதியையும், ஈஸ்வரனுடைய உபாதியையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.
 
விளக்கம்-4
முதல் इति காரிய பிரபஞ்சம், இரண்டாவது इति காரண பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால், காரிய பிரபஞ்சமாக இருக்கின்ற இந்த உலகமானது காரண அவஸ்தையிலிருந்து (மாயையிலிருந்து) வெளித்தோற்றத்துக்கு வந்துள்ள நாம-ரூபங்களே. இதையையும், காரண பிரபஞ்சமான மாயையையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.
 
விளக்கம்-முதல் इति வியஷ்டி (அத்யாத்மம்), இரண்டாவது इति சமஷ்டி (அதிதெய்வம்)
விளக்கம்-6  முதல் इति சரீர நிஷேதம், இரண்டாவது इति ஜகத் நிஷேதம்
அனாத்மா à சேதனத்துடன் சம்பந்தபட்ட அனாத்மா, ஸ்தூல, சூட்சும சரீரம், ஜடமாக இருக்கும் இந்த ஜகத். இந்த இரண்டையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விசாரம்
நேதி, நேதி என்ற லட்சணமே சரியானது, மேலானதுஇதைத்தவிர வேறெதுவும் பிரம்மத்தை விளக்க முடியாது.
 
கேள்வி: இந்த சொல் இல்லாமையை போதிக்கிறதா?
பதில்: இது இல்லாமையை சொல்லவில்லை. இல்லாமையிலிருந்து ஒரு பிரயோஜனமும் அடைய முடியாது (அபாவஸ்ய அக்ருத்யாவாத்).  இது நீக்குதல் என்ற பொருளைத்தான் குறிக்கிறதுநாம் ஒன்றை நீக்குகிறோம் என்றால் வேறு ஏதோ ஒன்றை ஆதாரமாக கொண்டுதான் செய்ய முடியும்ஆதாரம் இல்லாமல் எந்த தவறும் நடக்காதுஉதாரணமாக கயிற்றில் பாம்பை பார்ப்பதற்கு கயிறு ஆதாரமாக இருந்தால்தான் பாம்பானது தோன்ற முடியும்இது ஒரு நியதிஇதில் எது தவறாக பார்க்கப்படுகிறதோ அது நீக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து நேதிஎன்ற சொல் எதையோ நீக்குகிறது அதற்கு பிரம்மமே ஆதாரம் என்று புரிந்து கொள்ளலாம்அப்படி இந்த ஜகத்தானது பிரம்மத்தின் மீது இருந்துக் கொண்டு, தான் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சொல்லில் உள்ள இதி என்ற சொல் குறிக்கின்ற இந்த ஜகத்தை நீக்கினால் மீதி இருப்பது பிரம்மம்தான் என்று உணர்த்துகிறது.  பூரணமான பிரம்மன் ஒன்றாகத்தான் இருக்க முடியும்இதற்கு வேறாக ஒன்று உண்டு என்று சொன்னால் பிரம்மம் பூரணமாக இருக்க முடியாது. எனவே ஜகத்தை இல்லை என்று புரிந்து கொண்டால் பிரம்மத்தை அறிந்து கொண்டது போலாகும்
 
கேள்வி: நேதி எப்படி மித்யாவை நிலை நாட்டுகிறது?
பதில்: இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாதுஏனென்றால் அது மாதிரி ஒரு நிலை ஏற்படாது. உதாரணமாக மேசை மீது புத்தகம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையே ஏற்படாதுமேசை மீது புத்தகம் இல்லை என்பதை நிரூபிக்க தேவையில்லைமேசை மீது செயற்கை மலர் இருக்கிறது, அதை நாம் மலரில்லை என்று சொல்லலாம் அதை நிரூபிக்கவும் முடியும்அதற்கு இது இயற்கையான மலரை போன்று தோற்றமளிக்கிறது என்ற உண்மையை சொல்லி அடைந்த தவறான அறிவை நீக்கினால் போதும்மலர் பார்வைக்கு தெரிவதால் அதை நிஷேதம் செய்ய வேண்டியிருக்கிறது.
 
எது நீக்கப்படுகிறதோ அதற்கு இரண்டு நிலைகள் இருக்க வேண்டும்.
1. ஸ்வரூபமாக இருக்க கூடாது,
2. இருக்கிற மாதிரி தோன்ற வேண்டும்.
நம்முடைய அனுபவத்தில் உலகம் தோன்றி கொண்டிருக்கிறதுஎனவே நாம் ஸ்ருதி பிரமாணத்தை எடுத்துக் கொண்டு இந்த உலகத்தை நீக்கி பிரம்மத்தை உணர வேண்டும்இதற்கு ஸ்ருதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்
 
மித்யா விஷயத்தில்தான் நேதி என்ற சொல்லை பயன்படுத்த முடியும், மற்ற விஷயங்களில் பயன்படுத்தினால் இரண்டு விதமான குற்றம் வந்து விடும்இல்லாததை இல்லை என்று சொல்ல தேவையில்லை, இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.

நிஷேதம் மூலமாக உபதேசம் செய்வதுதான் சிறந்த வழியாகும்நேரிடையாகவும் உபதேசம் செய்யலாம்இதை விதிமுக உபதேசம் என்று கூறுவர்நிஷேதம் மூலமாகத்தான் ஜகத்தின் மித்யாத்வம் உணர்த்தப்படுகிறதுபிரம்மத்தை விதிமுகமாக விளக்க முடியாதுஏனெனில் பிரம்மத்திற்கு குணமும் இல்லை, சப்தங்களாலும் விளக்க முடியாதுஅதிஷ்டான-அத்யாஸ சம்பந்தம் மூலமாகத்தான் உபநிஷத் நேரிடையாக விளக்குகிறது.  மற்றெல்லா இடங்களிலும் நிஷேத முறையில்தான் விளக்கப்பட்டிருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி-4 : மைத்ரேயி  ப்4ராமனம்
(பிரம்ம வித்யா, சந்நியாச விசாரம், பிரம்ம ஞானத்திற்கான சாதனங்கள்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சங்கரருடைய பொது அறிமுக விசாரம்
ஆத்மாவை அறிதல்அறிதல் என்றால் அறிவை அடைய வேண்டும்எதைப்பற்றிய அறிவு என்றால் ஆத்மாவை பற்றிய அறிவை அடைதல், அதன் பலன் மோட்சத்தை அடைதல்.
 
ஆத்மாவை ஏன் நாட வேண்டும் என்றால் நாம் உண்மையிலே விரும்புவது ஆத்மாவைத்தான் அதாவது நம்மைத்தான்நாம் விரும்புவதுதான் சாத்தியமாக இருக்கமுடியும்.  எனவே ஆத்மாவை அறிய வேண்டும்ஆத்மாவை அறிதல் என்பது ஆத்மாவை அடைதலாகும். இது  அனைத்தையும் அடைவதை போன்றதாகும்இந்த ஆத்ம ஞானத்தை எப்படி அடைவது என்பதைப் பற்றி இந்த பகுதியில் கூறப்படுகிறதுஇதில் வேறெதாவது நிபந்தனைகள் இருக்கிறதா என்றால் அது சந்நியாசம் எடுத்துக்கொண்டு சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்அந்த சந்நியாசத்தைப் பற்றிய விளக்கத்தையும் இந்தப்பகுதியில் பேசப்படுகிறது.
 
அவித்யா சூத்திரத்தில் விஷயமாக இருப்பது ஆத்மா அக்ஞானம், வேதம், ஞானம்வேற்றுமைகள் அறிவதே அவித்யாவின் விஷயம்இந்த உலகத்தைப் பற்றிய அறிவே அவித்யாகர்மத்தினால் அடையப்படுவதுதான் இந்த உலகம், இதுவே சம்சாரம், அவித்யாவின் பலன் சம்சாரம்சம்சாரம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள்,
1.   உத்க்ருஷ்ட சம்சாரம்இன்பத்தை கொடுக்கும் உலகங்கள் காலத்தால் வரையறைக்கப்பட்டது, ஞான கர்மத்தால் இந்த சம்சாரத்தை அடைகிறார்கள்
2.   நிகிருஷ்ட சம்சாரம்: நாம் இயற்கையாக செயல்பட்டால், சுபாவமாக செய்தால், அசாஸ்திரீய கர்மங்களினால் வரும் பலன்களை வேண்டாம் என்ற வைராக்கியம் வருகிறதோ அது அவரை பிரம்மவித்யாவிற்கு தகுதியை கொடுக்கிறதுஆத்மாவைப்பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்க வேண்டும். அனாத்மாவைப் பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்கக்கூடாது. இந்த நிலைதான் வைராக்கியம் என்று அறிந்து கொள்ளலாம்.
 
சந்நியாச விசாரம்:
சந்நியாசம் சிரவத்துக்கு ஒரு அங்கம் என்ற எந்த அடிப்படையில் சொல்கிறார்கிரகஸ்தாசிரமம்: வைதீக கர்மம்தர்ம-அதர்ம ஞானத்தை கடைப்பிடிக்க வேண்டிய ஆசிரமம்முழு நேர கர்மத்தில் ஈடுபடுவது, பணம் சம்பாதித்தல், குடும்பத்தை பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்றவைஆசிரமத்தில் உள்ள கர்மங்கள் காலத்திற்கேற்றவாறு மாறி வருகின்றனஸ்தானமும், கடமையும் சேர்ந்து போக முடியாத நிலை இப்பொழுது இருக்கிறது.
 
சந்நியாசம் என்ற ஆசிரமத்திற்கு சென்று அங்கு கடைப்பிடிக்க வேண்டிய சாதனங்களைத்தான் மோட்சம் அடைய எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் பின்பற்ற வேண்டும்சந்நியாசத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சாதனங்களை இல்லறத்திலிருக்கின்றவர்கள் பின்பற்றினாலும் அதனுடைய பலன்களை அடையலாம்சந்நியாசத்தினால் மோட்சம் அடையலாம் என்று எங்கும் சொல்லப்படவில்லைமோட்சத்திற்கு ஆத்மஞானம்தான் அவசியம்ஜீவன் முக்தன் நிலையை அடைந்ததும் அவன் எந்த ஆசிரமத்தையும் சேர்ந்தவனல்ல, அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.
 
யாக்ஞவல்கியர் இல்லறத்திலிருந்தே ஞானத்தை அடைந்தவர், ஞான நிஷ்டைக்காக சந்நியாசத்திற்கு செல்கிறார்ஜனக ராஜா ஞான நிஷ்டையை இல்லறத்திலிருந்தே அடைந்தவர்.
 
பிரம்மஞானத்திற்கு சரியான, நேரிடையான சாதனம் சிரவணம்சந்நியாசத்தின் ஒரு அங்கமாக சிரவணம் இருக்கிறதுநோய் குணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து சரியாக செயல்பட உணவுக்கட்டுபாடு என்ற அங்கம் இருப்பதைப்போல இந்த சிரவணத்தை சாதன சதுஷ்டயத்துடன் பின்பற்றினால் மோட்சம் அடைய உதவியாக இருக்கும்ஞானம் மோட்சத்தைக் கொடுக்கும், அந்த ஞானத்துக்கு சாதனை சிரவணம்அந்த சிரவணத்துக்கு சம, தம, வைராக்கியம் போன்றவைகள் உதவியாக இருக்கும்.
 
கேள்வி: கர்மம் ஏன் சாதனையாக இருக்கக்கூடாது? ஞானம் மட்டும்தான் இருக்க வேண்டும்?
பதில்:
Ø  கர்மத்துக்கு பலன் ஏற்கனவே உபநிஷத்தில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறதுமோட்சம் என்பது கர்மத்தின் சாத்தியமாக சொல்லப்படவில்லைகர்மத்தின் பலன் அதிகபட்சமாக பிரம்மலோகம் வரை செல்லலாம்இவ்வாறாக கர்ம பலன் நிச்சயபட்டிருக்கும்போது எப்படி இந்த கேள்வி கேட்கிறாய்?
Ø  கர்மம் எதிலிருந்து உற்பத்தியாகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், அது அவித்யாவில் இருந்துதான் ஆரம்பமாகும்எனவே அவித்யாவிலிருந்து தோன்றிய கர்மம் அதன் பலன் அவித்யாவை தாண்டிச் செல்லாது.
Ø  கர்மம் ஒரு கட்டத்தில் தடையாகவே இருக்கும்விசாரத்தின் பலனாக அடையும் ஞானத்தை கர்மம் செய்து அடைவேன் என்று முயற்சிப்பது அதை அடைய விடாமல் தடுக்கிறது (பிரதிகூலம்) கர்மம் அனாத்மாவில் அபிமானத்தை வைக்கிறதுகர்மத்தின் மூலம் சித்தசத்தியடைந்து, விசாரம் என்கின்ற சாதனையை பின்பற்றுகிறோம்அப்போது கர்மத்தை விட்டுவிட வேண்டும். சந்நியாசம் என்பது கர்மத்திலும் அதன் பலனிலும் இருக்கும் பற்றை விடுவது
 
கேள்வி: ஏன் இரண்டையும் ( கர்மத்தையும், ஞானத்தையும் ) வைத்துக் கொள்ளக்கூடாது?
பதில்: அது முடியாது.
 
கேள்வி: யாராலும் ஆசையை விட முடியாதுவைராக்கியம் என்பது யாரிடமும் ஏற்படாது. எனவே உலக இன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு, அதே சமயத்தில் மோட்சத்தையும் அடையலாமே?
பதில்: பிருஹதாரண்ய உபநிஷத் படிக்காததினால் இவ்வாறு கேட்கிறாய்ஒருவனால் எல்லாவிதமான ஆசைகளையும் துறக்க முடியும் என்று உறுதி செய்கிறது.
Ø      அனுபவத்தில் இந்த மாதிரி ஆசையை துறந்து வைராக்யத்துடன் இருப்பவர்களை காண்கின்றோம்சாத்வீக எண்ணங்களுடன் இந்த மாதிரி இருக்க முடியும்
Ø      ஸ்ருதி பிரமாணம்இந்த ஸமுச்சயத்தை ஏற்றுக் கொள்வதில்லைவைராக்கியம் வந்தவுடன் கர்மத்தை விட்டு விடலாம் என்று சொல்கிறது.
Ø      ஸ்மிருதி பிரமாணம்வியாசர் எழுதிய நூலில் வேதம் சொல்கின்ற கர்மத்தை, வைராக்கியம் வந்தவுடன் விட்டுவிடு என்று கூறப்பட்டிருக்கிறது
Ø      யுக்தி பிரமாணம்தர்க்க பிரமாணம்அவித்யாவினால் கர்மத்தை செய்து கொண்டிருக்கிறோம்அத்யாஸமும், அக்ஞானமும் நீங்கிய நிலை ஞானம் அடைதல், அவித்யா நம்மை விட்டு சென்றால் கர்மத்தையும் விட்டுவிடலாம். கர்ம ஸ்வரூபம் வேறு, ஞான ஸ்வரூபம் வேறு.
Ø      ஸ்ருதி லிங்காத்ஸ்ருதியில் சொல்லப்பட்ட கதையிலிருந்து நாம் ஏதாவது ஒன்றை அனுமானம் செய்யலாம்இதற்கு ஸ்ருதி லிங்கம் என்று பெயர்இந்தக் கதையில் யாக்ஞவல்கியர் வீட்டை விட்டு போக எண்ணியவர், கர்மத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறார்இதனால் கர்மம் மோட்சத்திற்கு தேவையில்லை என்று தெரிகிறது.    எல்லாமே நான் என்று நினைப்பவன் மோட்சத்தை அடைகிறான்எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் நடக்காதுகர்மம் வேண்டும் என்றால் அனாத்மாவில் அபிமானம் இருக்க வேண்டும்மனம் தூய்மையடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.இந்த ஸமுச்சயம் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று சம ஸமுச்சயம் மற்றொன்று கிரம ஸமுச்சயம்சம ஸமுச்சயம் என்பது ஒரே நேரத்தில் இரண்டையும் செய்தல்கிரம ஸமுச்சயம் என்பது படிப்படியாக கர்மத்திலிருந்து விசாரத்திற்கு வருதல், அதாவது சித்தஸுத்தி அடையும் வரை கர்மம், அதற்கு பிறகு கர்மத்தை விட்டுவிட வேண்டும், விசாரத்திற்கு செல்ல வேண்டும்.

 

ஸ்லோகம்:1
உத்யாஸ்யன்வாஉயர்ந்த நிலையான சந்நியாச ஆசிரமத்திற்கு செல்லப் போகிறேன்.
அரே அஹம் அஸ்மாத் ஸ்தானாத்3இந்த இல்லறத்திலிருந்து
தே அன்யா காத்யாயனி அந்தம்உன்னிடத்திலிருந்தும், காத்யாயனியிட த்திலிருந்தும் இந்த கணவன் என்ற உறவை முடித்துக் கொள்ளப்போகிறேன். அதற்கு முன் என்னுடைய சொத்துக்களை இரண்டு பேருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கிறேன். என்று கூறினார்.
 
ஒருவன் சந்நியாசத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தாய், தந்தை, மனைவி மற்றும் புத்திரர்கள் இவர்களிடம் அனுமதி பெற வேண்டும். தம் சுயநலத்திற்காக அனுமதிக் கொடுக்கவில்லயென்றால் சொல்லாமல் சென்று விடலாம்இல்லறத்திலிருந்தும் ஞானத்தை அடையலாம்ஆனால் அதன் பலனை ஞான நிஷ்டையின் மூலம்தான் அடைய முடியம் அதற்காகத்தான் யாக்ஞவல்கியர் சந்நியாசத்திற்கு செல்கிறார்.
 
ஸ்லோகம்:2
மைத்ரேயி யாக்ஞவல்கியரை பார்த்து, “இந்த செல்வம் நிறைந்த உலகம் முழுவதும் எனக்கு கிடைப்பதாக இருந்தால், அதனால் எனக்கு மனநிறைவும், மரணமற்ற நிலையையும் அடைய முடியுமா?” என்று கேட்டாள்அதற்கு முடியாது என்று அவர் பதிலளித்தார்அதிக செல்வங்களையுடையவன் வாழ்க்கை எப்படி இருக்குமோ, அவ்வாறுதான் உன்னுடைய அந்த வாழ்க்கையும் இருக்கும்செல்வத்தில அம்ருதத்துவத்தை அடையலாம் என்ற நம்பிக்கையை வைத்திருக்காதே என்று மேலும் கூறினார்அதற்கான வாய்ப்பே கிடையாது என்று உறுதியாக கூறினார்.
 
விசாரம்: செல்வத்தால் மோட்சத்தை அடையும் வாய்ப்பு கிடையாது:
v  செல்வத்தால் போக்யத்தை வாங்கலாம்இன்பம் தரும் பொருட்கள் வாங்கலாம்பொருட்கள் மட்டும் இருந்தால் போதாது, அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கக்கூடிய கரணமும் இருக்க வேண்டும்.
v  செல்வம் செயலில் ஈடுபட வைக்கிறதுஇந்த செயலின் பலந்தான் நம்மை போக்தாவாக மாற்றும்இந்த நிலையில் பாவ-புண்ணியத்தை செலவழித்து போகத்தை அனுபவிக்கலாம்.
v  செல்வமானது நமது குணத்தையோ, ஸம்ஸ்காரத்தையோ மாற்றாது.
v  செல்வமானது சம்சாரியாகத்தான் நம்மை வைத்திருக்கும்.

எவனொருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேட்கையுடன் இருக்கிறானோ அவனே போக்தாஎந்த மனம் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அது நிறைவான மனதிலிருந்து உருவாகுவதில்லை, குறையுள்ள மனதிலிருந்துதான் வருகிறதுகுறை இருக்கிற இட த்திலிருந்துதான் ஆசைகள் வளர்கின்றதுபோக்தாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே சம்சாரியாகத்தான் வைத்திருக்கும்மனதில் இருக்கின்ற அடிப்படை குறைகளான பயம், நிறைவின்மை போன்றவைகள் பணத்தால் நீக்க முடியாதுநமது மனம் பூரணமான வஸ்துவிடம் அபிமானம் வைத்தால்தான் மனநிறைவை அடைவோம்.
 
ஸ்லோகம்:3
மைத்ரேயி, ‘எந்த செல்வத்தால் நான் மோட்சத்தை, அம்ருதத்தை அடைய முடியாதோ அதை நான் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன். எனவே எந்த ஒன்றை அறிந்தால் அதனால் மோட்சத்தை அடைய முடியுமோ அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்என்று யாக்ஞவல்கியரிடம் கேட்டாள்.
 
விசாரம்:
எந்த அறிவினால் இந்த செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறீர்களெ அதை உபதேசம் செய்யுங்கள். ஒன்றை வேண்டாம் என்று விலக்க முடிவதற்கு காரணம் அதை விட உயர்ந்த மேலான ஒன்றை அடையப்போவதால்தான்ஒன்றை விடும்போது, அதை விட மேலான வேறொன்றை அடையும் போதுதான் அதை விட முடியும். எந்த ஒரு அறிவினால் அனைத்தையும் துறந்து விட்டு செல்கிறீர்களோ அந்த அறிவை யாசிக்கிறாள் மைத்ரேயிஇந்த கேள்வியை பார்க்கும்போது அவள் வேதாந்த உபதேசத்திற்கு தகுதியானவள் என்று உறுதிபடுத்தப்படுகிறதுநம் லட்சியத்திற்கு எது சரியான சாதனம் என்று அறிந்து கொள்ள வேண்டும்அவளது விவேகமும், வைராக்கியமும் அவள் கேட்ட இந்த இரண்டு கேள்விகளில் வெளிப்படையாகத் தெரிகிறதுஅதே சமயம் அறிவை அடைய வேண்டும் என்ற உறுதியும் அவளிடத்தில் இருப்பதும் தெரிகிறது.  இது முமுக்ஷுத்வத்தை குறிக்கிறது.
 
ஸ்லோகம்:4
யாக்ஞவல்கியர் அவளைப் பார்த்து, “பிரயமானவளே! இதுவரை என்னிடம் பிரியமாகவே இருந்தாய், இப்போதும் எனக்கு பிரியமானதையே கேட்கிறாய்இங்கு வந்து அமர்ந்து கொள்உனக்கு அந்த தத்துவத்தை, உண்மையை விளக்கப் போகின்றேன். என்னுடைய உபதேசத்தை நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.
 
விசாரம்:
குருவானவர் சிஷ்யனை ஏற்றுக் கொள்ள வேண்டும்வேதாந்தத்தை கேட்கும் போது சிஷ்யன் சிரத்தையோடு கேட்க வேண்டும்குருவும் சிரத்தையோடு கற்றுக் கொடுக்க வேண்டும்இங்கே மைத்ரேயி சிரத்தையுடன் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்டாள். அவரும் அன்புடன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டாள்.

---0000---

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...