பஞ்சதசி
அத்தியாயம்-8
கூடஸ்த தீபம்
ஆகாசத்திலுள்ள சூரியனின் ஒளி சுவரில் பிரகாசிக்கிறது. நிலைக் கண்ணாடியில் பிரதிபிம்பிக்கின்ற சூரியனின் ஒளியும்
சுவரில் பிரகாசிக்கிறது. அதுபோல கூடஸ்தனால் ஸ்தூல சரீரமானது பிரகாசப்படுத்துகின்றது.
அதே சமயம் சூட்சும சரீரத்தில் பிரதிபிம்பிக்கின்ற சிதாபாஸனும் சரீரத்தை பிரகாசப்படுத்தி
கொண்டிருக்கிறது.
பல நிலைக்கண்ணாடிகளிலிருந்து பிரதிபிம்பிக்கின்ற சூரிய
ஒளியானது சுவரில் தெரிகின்றது. இந்த
பிரதிபிம்ப சூரிய ஒளிகளுக்கு இடையே ஆகாச சூரிய ஒளியும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைக் கண்ணாடிகளை எடுத்துவிட்டால் அதில் பிரதிபலித்த சூரிய ஒளி
சுவரில் இருக்காது. இருந்தாலும் ஆகாச சூரிய ஒளி அப்படியேதான்
பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அதேபோலவே சிதாபாஸனோடு கூடிய பல அறிவு எண்ணங்களிடையே
உள்ள இடைவெளிகளையும் கூட அறிவு எண்ணங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கூடஸ்தனை சிதாபாஸத்திடம்
இருந்து பிரித்தறிய வேண்டும்.
வெளியேயுள்ள பொருட்களை சிதாபாஸன் அறியப்பட்டதாக மாற்றுகிறது. பானை என்ற ஒரு உருவத்தையுடைய எண்ணத்தில்
இருக்கின்ற சிதாபாஸமானது பானையை மட்டும் பிரகாசிக்கிறது. பானை
அறியப்பட்டு இருக்கிறது என்பது பிரம்ம சைதன்யத்தினால் பிரகாசிக்கப்படுகிறது.
இந்தப் பானை புத்தி விருத்தி ஏற்படுவதற்கு முன்னால்
அறியப்படவில்லை என்று பிரம்ம சைதன்யத்தினாலேயே அறியப்பட்டது. சிதாபாஸன் உதவியால் புத்தியில் அந்த
எண்ணம் தோன்றிய பிறகு அறியப்பட்டு விட்டது என்று பிரகாசப்படுத்தப்படுகிறது.
சிதாபாஸனுடைய உதவியால் இது பானை என்று அறியமுடியும். இதுதான் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
மரக்குச்சியின் ஒரு முனையில் பொருத்தப்பட்ட இரும்பிலான
கூர்மையான இரும்புத்துண்டு போல ஒவ்வொரு எண்ணத்திற்குள் சிதாபாஸன் இருந்து அறியப்பட
விரும்பும் பொருளை வியாபித்து வருகின்ற எண்ணம்தான் அறிவு. அக்ஞானம் என்பது ஜடத்தன்மை.
இந்த ஞானம், அக்ஞானம் என்ற இரண்டினால் வியாபிக்கப்பட்ட
குடமானது அறியப்பட்டது, அறியப்படவில்லை என்று இரண்டு விதமாக சொல்லப்படுகிறது.
அறியாத பானையை அறியப்படாததாக பிரம்ம சைதன்யம் விளக்குகிறது. அதேபோல அறியப்பட்டதாக பிரம்ம சைதன்யமே
ஏன் சொல்வதாக இருக்கக் கூடாது? அறியப்பட்ட பானையாக சிதாபாஸன்
ஏற்படுத்திக் கொடுத்த உடனேயே சிதாபாஸன் செயல் முடிந்து விட்டது.
சிதாபாஸன் இல்லாமலே புத்தியினால் மட்டும் அறியப்படுகிறது
என்ற எண்ணத்தை உண்டாக்கலாம் என்று சந்தேகப்படும் போது புத்தி ஜடம் என்பதை நினைத்துப்
பார்க்க வேண்டும். சிதாபாஸன் இல்லாத புத்தியினால்
அறியப்படும் தன்மை ஏற்படவே ஏற்படாது. ஜடத்தன்மையுடைய புத்திக்கும்,
மாறுதலை அடையும் களிமண் முதலிய ஜடப்பொருட்களுக்கும் வித்தியாசம் இல்லை.
அதனால் புத்தியால் அறியப்படுகிறது என்ற எண்ணத்தை உற்பத்தி செய்ய முடியாது.
பானை களிமண்ணால் வியாபிக்கப்பட்டதனால் அறியப்பட்டுவிட்டது
என்று எங்கேயும் சொல்வது கிடையாது. அதேபோல ஜடமான புத்தியினால் மட்டும் வியாபிக்கப்பட்ட பானை அறியப்பட்டது என்ற
தன்மையும் ஏற்படாது.
ஆகவே தனிப்பட்ட புத்திக்கு அறியப்படும் தன்மையை உண்டு
பண்ணும் சாமார்த்தியம் இல்லாததால் பானையானது சிதாபாஸ ரூபமான பலன் ஏற்படுவதுதான் அறியப்பட்ட
தன்மை என்பது. பிரமாண விருத்தி ஏற்படுவதற்கு
முன்னாலேயே இருப்பதால் பிரம்ம சைதன்யம் பலனாகாது.
வெளியிலுள்ள வஸ்துக்கள் அறியப்படும்போது எந்த சைதன்யம்
பிரமாண பலனாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறதோ அந்த சைதன்யம்தான் வேதாந்த சாஸ்திரத்தில்
உபநிஷத் வாக்கிய ரூபமான பிரமாணத்தினால் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
சங்கரரின் உபதேச சாஹஸ்ரியில் பிரம்ம சைதன்யத்திற்கும்
சிதாபாஸத்திற்கும் இடையே உள்ள வேறுபடும் தன்மை விசேஷமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே தோன்றிய சிதாபாஸன் பானையை அறியப்பட்டது
என்ற தன்மையை உண்டாக்குகிறது. அறியப்பட்ட பானையானது மீண்டும்
பிரம்ம சைதன்யத்தின் உதவியால் பிரகாசப்படுத்தப்படுகிறது. பானை
அறியப்படவில்லை என்று உணர்த்துகின்றதோ, அதுபோல அறியப்பட்டது என்பதையும் உணர்த்துகின்றது.
அந்தக்கரணத்தில் உள்ள எண்ணங்கள், சிதாபாஸன், குடம் இவை மூன்றும் சேர்ந்த கூட்டமானது பிரம்ம சைதன்யத்தினால் பிரகாசப்படுத்தப்படுகிறது.
சிதாபாஸனால் பானையை மட்டும் வியாபிப்பதனால் அதை ஒன்றுதான் பிரகாசிக்கும்.
சிதாபாஸனுடைய உதவியினால் இது பானை என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் பிரம்ம சைதன்யத்தின் உதவியினால்தான் இது பானையென்ற
அறிவு ஏற்படுகிறது.
எவ்விதம் சிதாபாஸனையும், பிரம்ம சைதன்யத்தையும் தேகத்திற்கு
வெளியே பிரித்து அறியப்பட்டதோ அவ்விதம் சிதாபாஸனையும், கூடஸ்தனையும்
உடலுக்குள்ளே பிரித்து அறியப்பட வேண்டும்.
அகம் விருத்தி என்பது அகங்காரம், சூட்சும சரீரத்தை நான் என்று நினைக்க
வைக்கின்ற எண்ணங்கள், மனதிலெழும் உணர்ச்சிகள் ஆகும். ஆசை, கோபம், பொறாமை முதலிய உணர்ச்சிகளை
சிதாபாஸன் வியாபித்துக் கொண்டிருக்கிறான். சூடேற்றிய இரும்பில்
அக்னி எப்படி வியாபித்துக் கொண்டிருக்கின்றதோ அதுபோல சிதாபாஸன் வியாபித்துக் கொண்டிருக்கிறார்.
சூடுபடுத்திய இரும்புத்துண்டானது தன்னை மட்டும்தான்
பிரகாசித்துக் கொண்டு இருக்கும். வேறொன்றையும்
ஒருகாலும் பிரகாசிக்காது. அதுபோல சிதாபாஸனோடு கூடிய எண்ணங்கள்
தன்னை மட்டும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
எல்லா எண்ணங்களும் வரிசையாக விட்டுவிட்டு எழுகின்றன. எல்லா எண்ணங்களும் நல்ல தூக்கம், மூர்ச்சை,
சமாதி என்ற நிலைகளில் ஒடுங்கி விடுகின்றன. ஒரு
எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் நடுவில் சிறிது இடைவெளியிருக்கும், அப்போது
எந்த எண்ணங்களும் இருக்காது. எல்லா எண்ணங்களுக்குமிடையே உள்ள
இடைவெளியில் அவைகளின் இல்லாமையையும் எதனால் பிரகாசிக்கின்றனவோ, மாற்றமடையாத எதனால் விளங்குகின்றதோ அதுவே சிதாபாஸன் என்று சொல்லப்படுகிறது.
எவ்விதம் பானையில் இரண்டு விதமான சைதன்யம் இருந்ததோ
அதைப்போலவே உள்ளேயுள்ள விருத்திகளிலும் இரண்டு சைதன்யங்கள் பார்க்கப்பட்டது. அதனால் அந்த எண்ணங்களுக்கு இடையே
உள்ள இடைவெளியை எண்ணங்கள் அதிகமான தெளிவுடன் பிரகாசிக்கிறது.
வெளியேயுள்ள பானை விஷயத்தில் அறியப்பட்ட தன்மை, அறியப்படாத தன்மை இருப்பது போல உள்ளேயிருக்கும்
எந்த எண்ணங்களின் விஷயத்தில் கிடையாது. ஏனென்றால் ஒருவன் தன்னைத்தானே
அறிய முடியாதது. அதுபோல எண்ணங்களே எண்ணங்களை பிரகாசிக்க முடியாது.
அதனால் அறியப்பட்ட தன்மை என்பது ஏற்பட முடியாத. இந்த எண்ணங்களினால் அறியாமை நீங்கி விடுவதால் அறியப்படாத தன்மையும் ஏற்பட முடியாது.
அவைகள் என்றும் சிதாபாஸனோடு கூடியதாக இருப்பதால் இரண்டு தன்மையும் கிடையாது.
இரட்டித்த பிரதிபிம்ப சைதன்யத்தில் சிதாபாஸன் தோற்றமும், அழிவும் அனுபவிக்கப்படுவதனால் அது
மாறாத கூடஸ்த சைதன்யமாக இருக்க முடியாது. அதுவே சிதாபாஸனாகும்.
வேறொன்று மாற்றமடைகின்ற சுபாவம் இல்லாததாக இருக்கின்றது. அது கூடஸ்தன் என்று அழைக்கப்படுகிறது.
அந்தக்கரணம், அதனுடைய எண்ணங்கள் இவைகளுக்கு சாட்சி
என்பது போன்ற எல்லாவிடங்களிலும் பலவிதமாக முன்பிருந்த ஆச்சார்யர்களால் கூடஸ்தன் நிச்சயிக்கப்படுகிறது.
முகம், முகத்தின் பிரதிபிம்பம், பிரதிபிம்பம் சார்ந்திருக்கும்
நிலைக்கண்ணாடி எப்படியோ
அப்படியே ஆத்மா, சிதாபாஸன், அது சார்ந்திருக்கும்
அந்தக்கரணம் என்பது சாஸ்திரத்தினாலும், யுக்தியினாலும் அறியப்படுகிறது
என்று சங்கரரின் உபதேச சாஹஸ்ரியில் சிதாபாஸன் வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.
ஜீவனின் சூட்சும சரீரம் என்பது கூடஸ்தன், சிதாபாஸன், அந்தக்கரணம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான். ஜீவன் என்பவன்
புத்தியினால் வரையறுக்கப்பட்ட கூடஸ்தன் ஆவான். இந்த ஜீவன் ஒரு
உலகத்திலிருந்து வேறொரு உலகத்திற்கு செல்லுதல், திரும்பி வருதல்
ஆகியவற்றை செய்ய முடியும். பானையிலுள்ள ஆகாசம் எப்படி வெவ்வேறு
இடங்களுக்கு சென்று வர முடிகிறதோ அதுபோல கூடஸ்தனும் வேறு உலகங்களுக்கு சென்றுவர முடியும்.
எனவே சிதாபாஸனை அறிமுகப்படுத்துவதனால் என்ன பயன்?
கூடஸ்தன் வரையறுக்கப்படுவதால் மட்டும் ஜீவனாக மாறிவிட
முடியாது. ஜீவன் தன்மையை அடையாது வரையறுக்கப்பட்டதனாலேயே
ஜீவனாக ஆகிவிடலாமென்றால் குடம், சுவர் முதலியவைகளால் வரையறுக்கப்பட்டு
இருக்கின்றவற்றிற்கு ஜீவத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் அப்படி
காண்பதில்லை.
புத்தி நன்கு தூய்மையாக, சூட்சுமமாக இருப்பதனால் சுவர் மாதிரி
அல்ல என்று சொன்னால், வரையறுக்கின்ற விஷயத்தில் சூட்சுமமாக இருப்பதனால்
என்ன பயன்?
மரத்தாலான அளவு பாத்திரத்தினாலும் தங்கத்தினாலான அளவு
பாத்திரத்தினாலும் அரிசியை போன்ற தானியங்களை அளந்து விற்பவனுக்கு அளந்து கொடுக்கும்
அளவில் எந்த வேறுபாடும் இருக்காது. அளவு வேறுபடாமல் போனாலும், வெண்கல அளவுப் பாத்திரத்தில்
பிரதிபிம்பம் சிறப்பான அம்சம் என்றால் அப்போது புத்தியிலும் ஆபாஸன் உண்டென்று ஒத்துக்கொள்ள
வேண்டியதாக இருக்கிறது.
முகத்தினுடைய சிறிய அம்சம்தான் ஆபாஸம், பிரதிபிம்பமும் அதேமாதிரிதான்.
பிம்பத்தினுடைய தன்மையெதுவும் இல்லாமிருந்தாலும் பிரதிபிம்பமானது அதுபோல
காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பிம்பமான கூடஸ்தனுடைய தன்மையில்லாத
ஒட்டுதலோடும், மாறிக் கொண்டும் இருக்கின்ற பிரதிபிம்பத்திற்கு
சிதாபாஸனுக்கு கூடஸ்தனைப் போன்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று அறிவுடையவர்கள்
அறிந்து இருக்கிறார்கள்.
புத்தி இருக்கும்வரை சிதாபாஸன் இருக்கும் எனவே புத்தியிலிருந்து
வேறுபட்டதாக இல்லை. இவ்விதம் சிந்தித்தால் அது
தவறானது. ஏனென்றால் புத்தியானது தேகத்தோடுதான் இருக்கும் ஆனால்
சிதாபாஸன் தேகத்திலிருந்து
வேறுபட்டதாக இருக்கிறது.
ஸ்தூல சரீரம் இறந்தபோதிலும் புத்தியிருக்கின்றது என்று
சாஸ்திரத்தை பிரமாணமாகக் கொண்டு கூறப்பட்டால் புத்திக்கு வேறாக சிதாபாஸன் இருக்கின்றதாக
சிதாபாஸன் பிரவேசத்தை சொல்கின்ற வேதவாக்கியங்களில் கூறப்பட்டிருக்கிறது. சூட்சும சரீரத்தில் பிரதிபிம்பிக்கின்ற
ஆத்மாதான் சிதாபாஸன் அதைதான் ஆத்மபிரவேசம் என்ற விளக்கப்படுகிறது. புத்தியுடன் கூடிய ஆத்மாதான் பிரவேசம் செய்தது என்று கூறினால் அது சரியல்ல
ஐதரேய உபநிஷத்தில் புத்திக்கு வேறாக உள்ள ஆத்மாதான் பிரவேசம் செய்ய வேண்டும் என்று
சங்கல்பித்துக் கொண்டு பிரவேசித்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்திரியங்களுடன் கூடிய ஸ்தூல, சூட்சம சரீரங்கள் தோற்றுவித்த பிறகு
நான் இல்லாமல் இந்த ஜடமான சரீரங்கள் எப்படி உணர்வுடன் இருக்க முடியும் என்று சொல்லிக்
கொண்டு உச்சந்தலையை பிளந்து கொண்டு பிரவேசித்ததனால் ஜீவன் சம்சாரத்தை அனுபவிக்கிறான்.
சம்சாரியாக செயல்படுகிறான்.
எதனோடும் ஒட்டாதவன், சங்கமற்றவன் ஆத்மா எப்படி பிரவேசித்தது?
என்று கேட்டால் கூடஸ்தனுக்கு ஸ்ரூஷ்டிதான் எப்படி செய்ய முடிந்திருக்கும்? ஸ்ருஷ்டிக்கும், பிரவேசத்திற்கும் மாயையினால்தான் செய்ய
முடிந்திருக்கும். இரண்டின் அறிவும் சமமாகத்தான் இருக்கும்.
இந்த சிதாபாஸன் சூட்சுமமான பூதங்களை நிமித்தமாகக்
கொண்டு தோன்றி அவைகளுடன் சேர்ந்து அழிந்து விடுகின்றான் என்று வெகுத் தெளிவாக யாக்ஞவல்கியர்
மைத்ரேயிக்கு சொல்லியிருக்கிறார். இது பிருஹதாரண்ய
உபநிஷத்தில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஆத்மா அழிவற்றது என்ற கூறியதிலிருந்து கூடஸ்தன்
மற்றவைகளில் இருந்து பிரிக்கப்பட்டு சொல்லப்படுகிறான். சரீரங்களுடன் சம்பந்தப்படாதவன் என்று
இவ்வாறு கூடஸ்தனுடைய அஸங்கத் தன்மையும் சொல்லப்பட்டு இருக்கிறது.
சிதாபாஸன் இல்லாத ஸ்தூல சரீரம் இறந்துவிடும் ஆனால்
சிதாபாஸன் இறப்பதில்லை என்று இவ்வாறு கூறுகின்ற இடத்தில் மோட்சம் என்பது தாத்பர்யமில்லை. ஒரு லோகத்தில் இருந்து வேறு உலகத்திற்கு
போவதற்காக சொல்லப்பட்டு இருக்கிறது.
ஒரு வாக்கியத்தில் உள்ள இரண்டு சொற்கள் ஒரே பொருளுடன்
ஐக்கியமானால் அது ஐக்கிய ஸாமானாதிகரணம். (உ-ம்) 5 வயதில் பார்த்த அவனே
20 வயதில் இருக்கின்ற இவன். நாம் அறியாமையினால்
கயிற்றில் பார்க்கும் பாம்பு என்ற வாக்கியத்தில் கயிறு, பாம்பு
இரண்டு வெவ்வேறு சொற்களாக இருந்தாலும் இரண்டும் ஐக்கியமாவது பாதா4ஸாமானாதிகரணம் ஆகும். இதில் பொய்யான பாம்பு நீக்கப்பட்டு
கயிறுடன் ஐக்கியப்படுத்தப்பட்டது.
சிதாபாஸன் அழியக்கூடியவனாக இருந்தால், நான் பிரம்மன், அழிவில்லாதவன் என்று அறிய முடியாது என்ற சந்தேகம் வந்தால் பா3தா4 ரூபமான ஸாமானாதிகரணத்தினால் இது சம்பவிக்கும்.
இரண்டு வஸ்துக்களுக்கு ஒரே வஸ்துவில் அன்வயிக்கும் தன்மையிருக்கும்.
எதை கம்பமென்று நினைத்தாயோ அது மனிதனாவான். மனிதன் என்ற அறிவினால் கம்பமானது
நீக்கப்பட்டு விடுவதுபோல நான் பிரம்மன் என்ற அறிவினால் எல்லாவிதமான அகங்கார,
மமகார கர்த்தா என்கின்ற அறிவானது நீக்கப்பட்டு விடுகிறது.
நைஷ்கர்ம்ய சித்தி என்ற நூலில் சுரேஷ்வராச்சாரியார்
அவர்களால் மிகத் தெளிவாக இவ்விதம் விளக்கப்படுகிறது. ஆகவே ஸாமானாதிகரண்ய வார்த்தைகளுக்கு பா3தா4(நீக்க விடுதல்) என்ற தத்துவமானது
இருக்கட்டும். ஜீவனும், பிரம்மனும் சமமாக
இருந்தாலும் ஜீவனை நீக்கி ஐக்கியம் சொல்வது சாpயானதே.
எல்லாம் பிரம்மனே என்பதில் ஜகத்துடன் ஸாமானாதிகரண்யம்
செய்யப்பட்டது போல (இறுதியில் ஜகத்திற்கு ஆதாரம்
பிரம்மனே என்று விளக்கி பிறகு ஜகத் நீக்கப்பட்டு பிரம்மன் மட்டும் இருப்பதுபோல)
அதுபோல நான் பிரம்மன் என்று கூறும்போது ஜீவனும் நீக்கப்பட்டு பிரம்மன்
மட்டுமே இருக்கின்றார்.
மகாவாக்கியத்தில் இருக்கின்ற சாமானாதிகரண்யத்தில்
இருக்கும் பாதை4 என்ற தன்மையை விவரணத்தில் முயற்சி
செய்து நிராகரித்திருப்பது ஜீவன் என்ற சொல்லுக்கு
முக்கிய அர்த்தமான கூடஸ்தனுடைய தன்மையை சொல்லும் உத்தேசத்துடன் செய்திருக்கின்றார்.
“நீ” என்ற சொல்லானது “நான்” என்ற சொல்லை விசாரம் செய்து ஆத்மாவை அனாத்மாவிலிருந்து
பிரித்து அறியப்படுகிறது. அதுவே கூடஸ்தன். இந்த கூடஸ்தனுக்கு பிரம்ம தன்மை இருப்பதாக கூறுவதற்காக விவரணத்திலும் மேலும்
மற்ற இடங்களிலும் ஆசார்யர்களாலும்; கூறப்படுகிறது.
இங்கே “த்வம்” பத விசாரம் செய்யப்படுகிறது. “நான்” என்ற சொல் விசாரம் செய்யப்பட்டிருக்கிறது.
தேக, இந்திரியங்கள் முதலியவைகளுடன் கூடிய பொய்யான
சிதாபாஸன் ஆதாரமாக சைதன்யம் இருக்கிறது. அந்த சைதன்யமே இந்த கூடஸ்தன்
என்பது சொல்ல விரும்புகின்ற கருத்தாகும்.
பொய்யான அனைத்து ஜகத்திற்கும் எந்தவொன்று ஆதாரமாக
சொல்லப்பட்டு இருக்கின்றதோ அதுவே உபநிஷத்தில் பிரம்ம சப்தத்திற்கு அர்த்தமாக கூறப்பட்டிருக்கிறது. எந்த சைதன்யத்தினிடத்தில் ஜகத்தானது
ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றதோ அந்த ஜகத்தில் இருக்கின்ற ஒரு சிறிய அம்சமான ஜீவனிடத்தில்
சிதாபாஸன் ஏற்றி வைக்கப்படுவதில் ஒன்றும் கிடையாது.
ஜகத்தினுடைய ஒரு சிறிய அம்சமான ஜீவன் இவைகளை ஏற்றி
வைக்கப்பட்டு இருக்கின்ற வேற்றுமையின் அடிப்படையில் அது, நீ இவைகள் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.
உண்மையில் சைதன்யமானது ஒன்றாகத்தான் இருக்கின்றது. புத்தியினுடைய தர்மங்களாகிற நான் செய்கிறேன், நான் அனுபவிக்கிறேன்
போன்றவைகளையும் பிரகாசித்துக் கொண்டிருத்தல் சைதன்யத்தின் ஸ்வரூபத்தையும், வைத்துக் கொண்டு தெளிவாக நமக்கு விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே சிதாபாஸன் பொய்யானதாக இருக்கின்றது.
இந்த உலகத்திலுள்ள எதனாலும் துயரத்தை அடைவதில்லை. நம் மனதில் உள்ள மோகம்தான் துயரத்திற்கு
காரணம் இதுவே சம்சாரம். புத்தி என்பது எது? இந்த சிதாபாஸன் யார்? இங்கு ஆத்மாதான் யார்? ஜகத் எப்படி தோன்றியது? இப்படிபட்ட விஷயங்களை தீர்மானமாக
அறியாததனால் மோகம் ஏற்படுகிறது. இதுதான் சம்சாரம் என்று கருதப்படுகிறது.
நான் யார்? என்ற விசாரத்தில் இந்த மூன்றையும் நன்கு
ஆராய்ந்து தெளிந்த அறிவு பெறும் போது நம்மிடத்திலிருக்கும் சம்சாரத்திற்கு காரணமாக
இருக்கின்ற மோகம் சென்று விடுகிறது.
புத்தி போன்றவைகளுடைய ஸ்வரூபத்தை யார் மிகத் தெளிவாக
பிரித்தறிந்து கொள்கின்றானோ அவன்தான் தத்துவமறிந்தவன். சம்சாரத்தில் இருந்து விடுபட்டவனாகின்றான்.
முக்தனாகின்றான். இவ்விதம் உபநிஷத்துக்களில் நிச்சயம்
செய்யப்பட்டுள்ளது.
மனதில் எழுகின்ற எண்ணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவன்,
தோன்றுகின்ற எண்ணங்கள் முன்பு இல்லாமையையும் பார்த்துக் கொண்டிருப்பவன்,
எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
அதுபோல அறியாமையையும் பார்த்துக் கொண்டிருப்பவன் சாட்சி ஸ்வரூபமாக இருக்கின்ற
கூடஸ்தன், அறியாமை என்னிடத்தில் இருக்கிறது என்று சிதாபாஸனுடன்
கூடிய அறியாமை என்ற வஸ்துவிற்கும் கூடஸ்தன் சாட்சியாக இருக்கின்றது.
அஸத்தானவற்றிற்கு (ஜகத்) ஆதாரமாக இருப்பதனால் கூடஸ்தன் சத்யமாகின்றது. அனைத்து ஜடமானவற்றையும் பிரகாசப்படுத்துவதனால் கூடஸ்தன் சித் ஸ்வரூபமானது,
சேதன ஸ்வரூபமானது. எப்பொழுதும் விருப்பததிற்கு
விஷயமாக இருப்பதால் ஆனந்த ஸ்வரூபம். எல்லோரும் எப்போதும் ஆனந்தத்தைத்தான்
விரும்புகிறார்கள். தன்னைத்தான் உண்மையாக விரும்பி கொண்டிருப்பார்கள்.
நம்மை விரும்புவதற்கு எந்த விதமான நிபந்தனையும் கிடையாது. எனவே விருப்பத்திற்கு விஷயமாக இருக்கின்ற கூடஸ்தன் ஆனந்த ஸ்வரூபம்.
உலகத்திலுள்ள அனைத்து பொருட்களையும் பிரகாசப்படுத்துகின்ற காரணத்தினால்
அவைகள் அனைத்திலும் வியாபிக்கின்றது. எனவே இது பூரணமானது என்று
அறிந்து கொள்ளலாம். சிவன் என்ற பெயருடையது இந்த கூடஸ்தன்.
இவ்வாறு சிவபுராணத்தில் கூடஸ்தன் விளக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் சைவ புராணங்களில் கூடஸ்தனை நன்கு பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஜீவன், ஈஸ்வரன்,
ஜகத் போன்ற வேற்றுமைகள் இல்லாமல், தனித்து சுத்தமாக, தானாகவே பிரகாசித்துக் கொண்டிருப்பவர்
கூடஸ்தன்.
மாயையானது பொய்யாக ஜீவனையும், ஈஸ்வரனையும் தோற்றுவித்து இருக்கிறது
என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவனும், ஈஸ்வரனும் மித்யாதான். ஜடமான ஜகத்தைப் போலவே ஜீவனும்,
ஈஸ்வரனும் மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட போதிலும் சைதன்ய பிரகாசத்துடன்
இருக்கிறார்கள். இரண்டுமே கண்ணாடி குடம் போல பிரகாசத்துடன் தூய்மையுடன்
இருக்கிறார்கள்.
அன்னத்திலிருந்து தோன்றிய மனமானது அதே அன்னத்திலிருந்து
தோன்றிய தேகத்தை விட எப்படி தூய்மையாக இருக்கின்றதோ, அவ்விதமே ஜீவன், ஈஸ்வரன் இருவரும்
மாயையிலிருந்து தோன்றிய போதிலும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் தூய்மையாக இருக்கும்
தன்மையயை அடைந்து இருக்கிறார்கள்.
சைதன்யத் தன்மையுடனேயே பிரகாசிப்பதனால் சைதன்ய ஸ்வரூபமாக
இருப்பது சாத்தியம்தான். எல்லாவற்றையும் பொய்யாக தோற்றுவிக்கும்
சக்தியுடையதாக இருக்கும் மாயைக்கு செய்யமுடியாதது எதுவும் கிடையாது.
நம்முடைய உறக்கத்தில் கனவுலகத்தில் சேதனர்களாக ஜீவனையும், ஈஸ்வரனையும் தோற்றுவிக்கின்றோம்.
அப்படியிருக்கும் போது மகாமாயை இவர்கள் இருவரையும் தோற்றுவிக்கிறது என்ற
இந்த விஷயத்தில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
ஈஸ்வரனிடத்தில் ஸர்வக்ஞ தன்மை முதலான தன்மைகள் மாயை
கற்பித்து காட்டுகிறது. ஈஸ்வரனையே கற்பிக்கின்ற மாயைக்கு
அவரிடத்தில் தர்மங்களை கற்பிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? தூணில் திருடனைப் பார்க்கும்போது அவன் பயமுறுத்துவது போல் தோன்றச் செய்வது
பெரிய காரியமில்லை. அப்படியே ஈஸ்வரனை கற்பிக்கும்போது அவரிடம்
ஸர்வக்ஞத்வம், ஸர்வசக்தி முதலான குணங்களையும் மாயை ஸ்ருஷ்டி செய்து
விடுகிறது.
கூடஸ்தன் விஷயத்திலும் மாயையினால் கற்பிக்கப்பட்டது
என்ற சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனென்றால்
கூடஸ்தன் மாயையினால் ஏற்பட்டது என்பதற்கு எவ்வித பிரமாணமும் கிடையாது. வேதாந்தம் ஸ்ருஷ்டிக்கப்படாத நித்தியமான வஸ்து என்பதையே கூறுகின்றன.
இந்த கூடஸ்தனுடைய சத்யமாக இருக்கும் தன்மையை எல்லா
உபநிஷத்துக்களும் பறைசாற்றுகின்றன. கூடஸ்தனுடைய சத்யத்வம் என்ற விஷயத்தில் எதிர்மாறாக வேறொன்றும் உபதேசிப்பதில்லை.
கூடஸ்தனுக்கு நிகராக வேறெந்த ஒன்றையும் உபதேசிப்பதில்லை. ஏற்றுக்கொள்வதில்லை. பூரண ஸ்வரூபமான தன்மையை இது நிச்சயிக்கிறது.
மாயையானது ஜீவனையும், ஈஸ்வரனையும் பொய்யாக தோற்றுவித்தது
என்று வேதாந்தத்தில் சொல்லியிருப்பது எடுத்துக் காட்டப்பட்டது.
ஈஸ்வரன் ஜகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் என்ற நினைத்தார்
என்பது முதல் ஜீவனாக சரீரத்தில் பிரவேசித்தார் என்பதுவரை ஸ்ருஷ்டி ஈஸ்வரனால் செய்யப்பட்டதாகின்றது. ஜாக்ரத் முதல் மோட்சம் உட்பட உள்ள
சம்சாரம் ஜீவனால் கற்பிக்கப்பட்டது.
கூடஸ்தன் எப்பொழுதுமே சங்கமற்றவனாக இருக்கின்றான். அவனுக்கு ஜீவ-ஈஸ்வர செயல்களினால் எந்தவொரு மாற்றமும் அடைவதில்லை. இவ்விதம்
மனதுக்குள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். மனதில் விசாரம்
செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஸ்ருஷ்டி எதுவும் கிடையாது, தோன்றவுமில்லை. பிரளயமும் கிடையாது, அழிவும் கிடையாது. பந்தப்பட்டவனும் கிடையாது. சாதகனும் கிடையாது.
பந்த நிவிருத்திக்காக முயற்சி செய்பவனுமில்லை. மோட்சத்தை நாடுபவனும் கிடையாது. நான் முக்தனும் இல்லை.
இதுதான் இறுதியான உண்மையான நிலை. இவ்வாறு ஒரு ஜீவன்
உணர்ந்து கொள்ள வேண்டும்.
வாக்குக்கும், மனதுக்கும் எட்டாத அந்த தத்துவத்தை உணர்த்துவதற்காக வேதாந்தம் எப்பொழுதும்
ஜீவனையோ, ஈஸ்வரனையோ, ஜகத்தையோ எடுத்துக்
கொண்டு உபதேசிக்கிறது. ஏன் பலவிதமாக உபதேசிக்கின்றது என்றால்
கேட்பவர்களுக்கு எவ்விதம் சொன்னால் மனதில் பதியுமோ அப்படியே சொல்ல வேண்டி இருப்பதால்
இவ்வாறு உபதேசமுறை இருக்கிறது.
உபதேசத்தை எந்தெந்த விதத்தில் எடுத்துச் சொன்னால்
மனிதர்களுக்கு அறிவு ஏற்படுமோ, தனக்குள்ளே உள்ள ஆத்ம தத்துவத்தை பற்றிய ஞானம் ஏற்படுமோ
அந்தந்த உபதேசமுறைதான் நல்லதாகும். என்று சுரேஸ்வர ஆச்சாசியாரால் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ருதி சொல்ல விரும்புகின்ற மையக்கருத்து முழுவதையும்
அறிந்து கொள்ளாமல் அறிவற்றவன் பிரமிக்கிறான், குழம்பி இருக்கிறான். விவேகி முழுமையும் அறிந்து கொண்டு
ஆனந்த கடலில் மிதந்து கொண்டிருக்கிறான்.
இந்த மாயை என்கின்ற மேகமானது உலகமாகிற மழையை பொழிந்து
கொண்டிருக்கட்டும். அதனால் சைதன்யமான ஆகாசத்திற்கு
எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. எவ்வித லாபமும் கிடையாது என்பதுதான்
உண்மையான நிலை.
இந்த கூடஸ்த தீபத்தை யாரொருவர் இடைவிடாமல் சிந்தித்துக்
கொண்டு இருக்கின்றாரோ அவர் தானும் எப்பொழுதும் கூடஸ்த ஸ்வரூபமாகவே பிரகாசிப்பார்கள். சம்சாரத்திலிருந்து விடுதலை அடைந்து
ஆனந்தமாக இருப்பார்கள்.
----------ooo000ooo--------------