அத்தியாயம்-17
ஶ்ரத்தா த்ரய
விபாக யோகம்
ஸ்வாமி
குருபரானந்தாவின் உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது - 20-01-2022
अर्जुन उवाच ।
ये शस्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्तिताः ।
तेषां निष्टा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥ १७-१ ॥
அர்ஜுனன் கேட்கிறார்.
யே
ஶாஸ்த்ரவிதி4ம் – எவர்கள் சாஸ்திரம் உரைக்கும்
நெறியை
உத்ஸ்ருஜ்ய
யஜந்தே – அறியாமல் அல்லது
ஒதுக்கி விட்டு வாழ்ந்து கொண்டும்.
ஶ்ரத்த4யான்
விதா:- - ஆனால் சாஸ்திரத்தினிடத்தில்
சிரத்தையோடிருக்கின்றார்களோ.
தேஷாம் நிஷ்டா
து - அவர்களுடைய
நிலை எப்படியிருக்கும் கிருஷ்ணா!
இவர்கள் அடையும் கதி என்ன? நல்ல கதியை அடைவார்களா
அல்லது கீழான கதியை அடைவார்களா?
ஸத்த்வம் ஆஹோ
ரஜஸ்தமஹ – சத்துவ குணத்திலிருப்பார்களா அல்லது ரஜோ, தமோ குணத்திலிருப்பார்களா?
श्रीभगवानुवाच ।
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी जारसी चैव तामसी चेति तां शृणृ ॥ १७-२ ॥
ஶ்ரீபகவான் கூறுகிறார்..
விசாரம்: நாம் அடைந்த அறிவும், சிரத்தையும் ஒன்றொடொன்று
சேர்ந்து நம்மை வழிநடத்துகின்றன. அடைந்த
அறிவின் மீது நம்பிக்கையில்லை என்றால் அதன்படி நாம் நடக்கமாட்டோம். ஒருவனிடத்தில் இருக்கும் சிரத்தையை சாத்விகம், ராஜஸம்,
தாமஸம் என்று மூவகையாக பகவான் பிரிக்கிறார்.
சாத்விகமான சிரத்தையுடையவன் நற்கதி அடைகின்றான். மற்ற இரு குணங்களில் சிரத்தையுடையவர்கள் கீழான
கதியை அடைகிறார்கள். சாஸ்திர ஞானம்
இல்லாமிருந்தாலும் சாத்விக சிரத்தையுடையவர்கள் நற்கதி அடைவார்கள். சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து பூஜை செய்த
ஒரு சிவனடியார் அவரிடத்தில் உள்ள சாத்விக சிரத்தையால் சிவனருள் பெற்றதாக அறிவோம்.
ஸ்லோக விளக்கம்:
த்ரிவிதா4 ப4வதி
ஶ்ரத்தா3 - - சிரத்தையானது மூன்று வகையாக உள்ளது
ஸாத்த்விகி ராஜஸீ
ச ஏவ தாமஸீ - சாத்விகம், ராஜஸம், தாமஸம் அவைகளாகும்
ச இதிதாம் ஶ்ருணு
- மேலும் இவைகளை பற்றி நான் கூறுவதை
கேள்!
தேஹினாம் ஸ: - அந்த
சிரத்தை ஜீவர்களுடைய
ஸ்வபா4வஜா - சுபாவத்திலிருந்து
( மனதிலுள்ள பதிவுகளில் இருந்து ) தோன்றுகிறது.
சிரத்தையைப்
பற்றிய விசாரம்
லட்சணம் அறிவை அடைய உதவும் கருவியான பிரமாணத்தில்
வைக்கும் முழு நம்பிக்கை அடைந்த அறிவோடு
சேர்ந்திருக்கின்றது. சிரத்தையில்லாத அறிவு செயலுக்கு வராது.
அதை அறிவு என்றும் கூற முடியாது.
வேதாந்தம் உபதேசிக்கும் கருத்துக்களில் முழு நம்பிக்கை வைத்தால்தான் சரியான அறிவை அடைந்து அதில் நிலைபெறுவோம். அதுதான் அனுபவத்திற்கும் வரும். எண்ணங்கள்தான் சாத்விகமான சிரத்தை மூலம் அறிவாக
மாறுகின்றது. வேதாந்த வாக்கியங்களை
அப்படியே முழுமையாக நம்புவதும், அதை வேறெந்த பிரமாணத்தினாலும் உறுதிபடுத்த முயற்சி செய்யாமல் இருப்பதும், அதை அப்படியே எடுத்துக் கொள்வதே சிரத்தை என்று கூறப்படுகின்றது.
வேற்றுமைகள்: சாத்விகமான சிரத்தை,
ராஜஸமான சிரத்தை, தாமஸமான சிரத்தை என்று மூன்று வகையாக பிரித்துக் கூறுகிறார்
பகவான். நம்புவதற்கு
யோக்கியதையில்லாததையும் நம்புவது ராஜஸ, தாமஸ நம்பிக்கையென்று கூறுவர். சத்துவ குணத்திலிருப்பவன் வைக்கும் நம்பிக்கை
சாத்விக நம்பிக்கையாகும்
सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरूषो यो यच्छ्रद्धः स एव सः ॥ १७-३ ॥
பாரத - ஹே அர்ஜுனா!
ஸத்த்வ அனுரூபா - மனதிலிருக்கும்
பதிவுகள், ஸம்ஸ்காரங்கள், செயலின் விளைவுகள், அனுபவத்தின் விளைவுகள் இவைகளின்
அடிப்படையில்.
ஸர்வஸ்ய ஶ்ரத்தா
ப4வதி - எல்லா
மனிதர்களுக்கும் சிரத்தையானது உருவாகின்றது, அமைகின்றது.
அதன் புருஷ - இந்த மனிதர்கள்
ஶ்ரத்தாமய - சிரத்தையின்
மயமாகத்தான் இருக்கின்றார்கள்
யஹ யத்ஶ்ரத்தஹ - எவனொருவன் எந்த
சிரத்தையுடன் இருக்கின்றானோ
ஸ ஏவ ஸஹ - அவன்
அந்த சிரத்தையின் தன்மையோடு இருக்கின்றான்
நாம் எப்படிபட்ட சிரத்தை எதன் மீது
வைத்திருக்கின்றோமோ அதன் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கைமுறை
அமைந்திருக்கும். நாம் அடையும்
இன்ப-துன்பங்களும் சிரத்தையின் தன்மையை பொறுத்தே வருகின்றன. நாம் ஒருவருக்கு நல்லதை சொன்னால் அதை ஏற்றுக்
கொள்ளவில்லையென்றால் அது அவரிடத்து உள்ள ராஜஸ அல்லது தாமஸ சிரத்தையின் காரணமேயாகும்.
சிரத்தையின் பயன்கள்
ü சரியான பிரமாணத்தில் நம்மைக் கொண்டு சேர்க்கும். உதாரணமாக
உபநிஷத் என்கின்ற பிரமாணத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் அதனிடத்தில் சிரத்தையிருந்தால்தான் இந்த பிரமாணத்தை பயன்படுத்தி கொள்வோம். உபநிஷத்தை குருமுகமாகத்தான் கேட்க வேண்டும். உபதேசம் மூலம்தான் பிரம்ம ஞானத்தை அடைய
முடியும்.
ü மனதில் உள்ள
எண்ணங்கள் அறிவாக மாற வேண்டுமானால் அவைகள் மீது நம்பிக்கையிருக்க வேண்டும். குருவின் உபதேசம் அறிவாக மாற வேண்டும் என்றால்
அவர் மீதும், உபநிஷத் வாக்கியங்கள் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும்.
ü நம்மிடத்து உள்ள
வியாதி, துயரங்கள் நீங்க வேண்டுமென்றால் நமக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில்
நம்பிக்கையிருக்க வேண்டும். இந்த வியாதி
இந்த மருத்துவரின் சிகிச்சையல் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையும், நாம்
அனுபவிக்கும் இந்த கஷ்டம் இறைவனருளால் நீங்கிவிடும் என்ற நம்பிக்கைதான் அதிலிருந்து நாம் விடுபடுவதற்கு காரணமாக
இருக்கின்றது
ü சிரத்தையே
சந்நியாஸ வாழ்க்கைக்கு செல்வதற்கு மூலகாரணம். என்னை அடையும் முயற்சியில் என் மீது முழு நம்பிக்கையோடு செயல்பட்டால்
உன்னுடைய யோகக்ஷேமத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பகவான் உறுதியளிக்கின்றார்.
ü சிரத்தையுடன்
செய்யும் செயல்களுக்குத்தான் பலன் கிடைக்கும்
ü தர்மத்தை
அனுஷ்டிக்கும் விஷயத்தில் அறிவுபடி செயல்பட முடியாதபோது பெரியோர்களின் அறிவுரையில் வைத்திருக்கும் நம்பிக்கை உதவி புரியும்.
நாம் வாழ்கின்ற வாழ்க்கை முறையை வைத்து நாம்
எந்தவகையான சிரத்தையில் இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
यजन्ते सात्त्विका देवन्यक्षरक्षांसि राजसा ।
प्रेतान्भूतगणाम्श्चान्ये यजन्ते तामसा जनाः ॥ १७-४ ॥
சிரத்தையின் விளைவிலிருந்து அதன் காரணத்தை
கண்டுபிடிக்க வேண்டும். சிரத்தையின் அடிப்படையில்தான் நம்முடைய செயல்கள்
இருக்கும். இந்த ஸ்லோகத்தில் பகவான்
நம்முடைய இறைவழிப்பாட்டை வைத்தே நம்மிடம் இருக்கும் சிரத்தையின் தரத்தை
கண்டுபிடித்துவிடலாம் என்று கூறுகிறார். நாம் எந்த தேவதையை
வழிபடுகின்றோம், எந்த விதத்தில் வழிபடுகின்றோம். என்ன சங்கல்பத்தோடு எதற்காக
வழிபடுகிறோம் என்பதை வைத்தே நம்முடைய சிரத்தையின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஸாத்த்விகா
யஜந்தே தேவன் - சாத்விகமான நம்பிக்கையுடையவர்கள் தேவதைகளை
வழிபடுகிறார்கள்.
இந்த உலகத்தில் வெளிப்பட்டிருக்கின்ற
சக்திகளும், ஐஸ்வர்யங்களும் தேவதைகளாக கருதுகின்றோம். உதாரணமாக சூரியன், மழை,
பூமி போன்றவற்றையும், விஷ்ணு, சிவன், பிரம்மன் போன்றவர்களையும் தேவதைகளாக வழிபடுகிறோம். பஞ்ச பூதங்களையும் தேவதைகளாக வழிபடுகிறோம். இவைகளனைத்தும் ஈஸ்வரனுடைய வெளிப்பாடுகளாகும்.
ராஜஸா யக்ஷ
ரக்ஷான்ஸி - ராஜஸ
நம்பிக்கையுடையவர்கள், யக்ஷர்களை, ராட்சஸ தேவதைகளை வழிபடுகிறார்கள்.
தாமஸா ஜனா - தாமஸ
நம்பிக்கையுடையவர்கள்
ப்ரேதான்,
பூதகணானாம் ச அன்யே - ஆவிகள், பூதங்களை வழிபடுகிறார்கள்.
நாம் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோமோ அதை
வைத்து நாம் எந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
अशास्त्रविहितं धोरं तप्यन्ते ये तपो जनाः ।
दम्भाहंकरसंयुक्ताः कामरागबलन्विताः ॥१७-५ ॥
தாமஸ, ராஜஸ நம்பிக்கையுடைவர்கள் வழிபடும்
விதத்தை கூறுகிறார்..
அஶாஸ்த்ரவிஹிதம் - சாஸ்திரத்தினால் விதிக்கப்படாதபடி
கோ4ரம் - கொடியதாக
யே ஜனா தபோ
தப்யந்தே - எந்த
மனிதர்கள் தவம் செய்கின்றார்களோ
த4ம்பம், அஹங்கார
ஸம்யுக்தா - அவர்கள் டம்பத்துடனும்,
பகட்டுடனும், கர்வத்துடனும் உயர்வு மனப்பான்மையுடனும் செய்து கொண்டும்
காம ராக3
ப3ல அன்விதா - அனுபவிக்க
விரும்பிய பொருட்களின் மீது இருக்கின்ற போகப்பற்று, மற்றவற்றில் வலிமையான பற்று இவைகளுடன்
கூடியவர்களாக இருந்தால்
இத்தகையவர்கள் தாமஸ, ராஜஸ நம்பிக்கையுடைவர்களாவார்கள்.
உடல் வலிமை, செயலில் காட்டும் உறுதி இவைகளையும் ப3ல என்ற சொல்லுக்குப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம். தவம் என்பது பூஜை, புனஸ்காரம், ஹோமம் போன்றவைகளாகும். பலர் தன்னையும், மற்றவர்களையும் துன்புறுத்தும் வகையில் சாஸ்திரத்தின் விதிமுறைகளை மீறிய வகையில் வழிபடுகிறார்கள்.
कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।
मां चैवान्तःशरीरस्थं तान्विद्धयासुरनिश्चयान् ॥ १७-६ ॥
அசேதஸஹ - சரியான அறிவில்லாதவர்கள்
ஶரீரஸ்தம் - ஸ்தூல உடலுக்குள் இருக்கின்றன்
பூதக்ராமம் - புலன்கள், மனம் இவற்றுடன் கூடிய ஜீவாத்மாவை
கர்ஷயந்தஹ - துன்புறுத்துகிறார்கள்
மாம் ச ஏவ அந்த ஶரீரஸ்தம் - உள்ளத்தில் இருக்கின்ற பரமாத்மாவான என்னையே
துன்புறுத்துகிறார்கள்
தான் அஸுர நிஶ்சயான் வித்தி – அந்த அறிவிலிகளை
அசுரர்களாக, அசுர பண்புகளை உடையவர்களாக அறிந்து கொள்.
आगारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।
यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणृ ॥ १७-७ ॥
சிரத்தையில்லாதவன் என்பது ராஜஸ, தாமஸ
நம்பிக்கயுள்ளவர்களை குறிக்கின்றது.
நம்பிக்கை இழந்துவிட்டால் மனதால்
பாதிக்கப்படுவோம். சாத்விக நம்பிக்கையை
அடைய வேண்டும். ராஜஸ/தாமஸ நம்பிக்கையை
விட்டுவிட வேண்டும். சாத்விகமான மனதை அடைந்தாலே சாத்விக நம்பிக்கையை
அடைந்து விடலாம். புண்ணியம்தான்
இந்தவிதமான நம்பிக்கையை கொடுக்க முடியும்.
தானம், சேவை போன்ற குணங்கள் புண்ணியத்தைக் கொடுக்கும். சாத்விகமான நம்பிக்கை சரியான அறிவைக் கொடுக்கும். சரியான அறிவின் பலன் சரியான
பாவனையைக் குறிக்கும். சரியான பாவனையுடன் செய்யும் செயலின் விளைவுகள் புண்ணியத்தை
அடைவது.
த்ரிவிதோ3 பவதி - மூன்று விதமாக இருக்கின்றது. (சாத்விகம், ராஜஸம், தாமஸம்)
யக்ஞே தப: தா3னம் – இறைவழிபாடு, நம்முடைய கடமைகள், தவங்கள், தானம்
தேஷாம் பே4தம்
இமம் ஶ்ருணு – அவைகளுடைய இந்த வேற்றுமைகளை கேள்!
आयुःसत्त्वभलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।
रस्याः स्निग्धाः स्थिर ह्रद्या आहाराः सात्त्विकप्रियाः ॥
१७-८ ॥
ஆஹாரா: ஸாத்விக
ப்ரியா: சத்துவகுணத்தில் இருப்பவர்கள் விரும்பி
எடுத்துக் கொள்ளும் உணவுகள்
ஆயுஹு - வாழ்நாளை
வளர்க்க கூடியது,
ஸத்த்வம் - மனதிற்கு
இதமாக இருப்பது, உற்சாகத்தை வளர்க்கக்கூடியது
ப3லம் - உடலுக்கு சக்தியை கொடுக்கக்கூடியது
ஆரோக்ய - உடலுக்கு
ஆரோக்கியத்தை கொடுக்கின்ற
ஸுக - சாப்பிடும்போது
சுகத்தைக் கொடுக்கக் கூடியது
ப்ரீதி - சாப்பிட்ட
பிறகும் சுகமாக இருக்கக்கூடியது.
விவர்த4னா: - இத்தகைய குணங்களை வளர்க்கின்ற உணவுகளாக இருக்க
வேண்டும்.
ரஸ்யாஹா - மேலும் இனிப்புடன் இருக்க வேண்டும்.
ஸ்னிக்தா4: - உலராத உணவாக – எண்ணெயுடன் கூடியதாக இருக்க
வேண்டும்.
ஸ்திர - சக்தியை
கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும்.
வயிற்றில் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும்.
ஹ்ருத3யா – பார்ப்பதற்கும் நன்றாக இருக்க வேண்டும்,
சுவையும், மணமும் உடையதாக இருக்க வேண்டும்.
.
நாம் உண்ணும் உணவானது செரிக்கப்பட்ட பின் ஸ்தூலமானது கழிவாக வெளியே தள்ளப்படுகிறது. சூட்சுமமானது உடலை பராமரிக்கின்றது. அதி சூட்சுமமானது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது. சாத்விகமான உணவு முறையானது அளவுடன் சாப்பிடுதல், பாதி வயிறு சாப்பிடுதல் ஆகும். மேலும் கால் வயிறு நீரும், மீதி கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது.
कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः ।
आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः ॥ १७-९ ॥
அளவுக்கு மீறிய உணவுகள், கசப்பான உணவுகள்,
புளிப்பான, உப்பு அதிகமான, சூடான, காரமான, உலர்ந்த, வயிற்றை எரிக்க கூடிய உணவுகளை
தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க கூடாது. நம்மை அடிமை படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க
வேண்டும்.
அம்ல – புளிப்பு;
கட் – கசப்பு;
லவண – அதிக உப்பு;
உஷ்ண – சூடான;
தீக்ஷ – காரம்;
ரூக்ஷ – உலர்ந்த;
விதாஹ்ன – எரிக்கின்ற
இப்படிபட்ட உணவுகளை ரஜோ குணத்திலிருப்பவர்கள்
சாப்பிடுவார்கள்.
து:கஶோக ஆமய ப்ரதாஹா – இத்தகைய உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றுக்கு துன்பத்தையும் கொடுக்கும், உடலுக்கு நோயையும்
கொடுக்கும்.
यातयामं गतरसं पूति प्र्युषितं च यत् ।
उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ॥ १७-१० ॥
யாதயாமம். - தேவையான அளவு வேகாமல் சமைத்த உணவுப்
பொருட்கள்
க2தரஸம் - அதிகமாக வேகவைத்து
சமைக்கப்பட்ட உணவு வகைகள்
பூதி - துர்நாற்றத்துடன் கூடியதாக இருக்கும்
உணவு வகைகள்
பர்யுஷிதம் -
பழைய உணவு
உச்சிஷ்டம் - எச்சில்பட்ட உணவு, தீயவர்களிடம்
இருந்து பெறும் உணவு
அமேதயம் - மேலும் இறைவனுக்கு படைக்கக் கூடாத உணவு வகைகள்
போஜனம் தாமஸ
ப்ரியம் – இவைகளெல்லாம் தமோ
குணத்திலிருப்பவர்கள் உட்கொள்கின்ற உணவு வகைகளாக கருதப்படுகின்றது.
अफलाङिक्षभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥ १७-११ ॥
யக்ஞம் - இறை வழிபாடு,
யாகங்கள் செய்தல், நம்முடைய கடமைகளாகவும் இதற்கு பொருட்கொள்ளலாம்
விதி4த்ருஷ்டோ - சாஸ்திரப்படி இருக்க வேண்டும். சாஸ்திர விதிப்படி யாகங்கள் செய்ய வேண்டும்.
பலனோடு சொல்லப்பட்ட கர்மங்கள் அனைத்தும் காம்ய
கர்மங்கள். அன்றாடம் செய்ய வேண்டிய
கர்மங்கள், நித்திய கர்மங்கள் இவைகள் சாத்விக கர்மங்களாகும்.
அபலாகாங்க்ஷி- செய்யும் செயலின் பலனில் பற்றில்லாமல் இருத்தல், விளைவு எப்படியிருந்தாலும் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையோடு செய்யும்
மனநிலை
யஷ்தவ்யம் - கடன்பட்டவன்
போல் கடமைகளை செய்தாக வேண்டும்.
மஸமாதா4ய - மன ஒருமுகப்பாட்டோடு கடமையை செய்ய வேண்டும்.
ஸ ஸாத்த்விக: - பலனில் பற்றில்லாமல், சாஸ்திர நியதிப்படி செய்தேயாக
வேண்டும் என்ற மனப்பான்மையோடு, முழு மனதுடன் அந்த செயல்கள் செய்யப்பட்டால் அவைகள்
சாத்விகமானவையாகும்.
अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।
इज्यते भरतश्रेष्ट तं यज्ञं विद्धि राजसम् ॥ १७-१२ ॥
அபி4ஸந்தா4ய து
பலம் - பலன் நாம் எதிர்பார்த்தபடி இருக்க வேண்டும்
என்று எண்ணி செயலை செய்தல்
த3ம்பா4ர்தம் அபி - இகலோக பலனுக்காக,
புகழுக்காக செயல்களை செய்தல், சுயநலத்திற்காக செயல்களை செய்தல், தற்பெருமைக்காக
செயல்களை செய்தல்
ச ஏவ யத் - இத்தகைய
காரணங்களுக்காக
இத்யதே
ப4ரதஶ்ரேஷ்ட - செய்யப்பட்டால் , அர்ஜுனா!
தம் யக்ஞம்
வித்தி4 ராஜஸம் - இவர்களுடைய இந்திரியங்கள் ராஜஸமானது என்று
அறிந்து கொள்
நாம் செய்யும் செயல்கள் ஆடம்பரத்துடனும்,
சுயநலத்திற்காகவும், பலனில் பற்றோடும் செய்தால் அவைகள் ராஜஸ கர்மங்களாக அறிந்து
கொள்ள வேண்டும்.
विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥ १७-१३ ॥
விதி4ஹீனம் - சாஸ்திரத்தில்
குறிப்பிட்ட விதிகளை பின்பற்றாமல்
அஸ்ருஷ்டான்னம் - உணவை தானமளிக்காமல் யாகங்களை செய்பவர்கள்
ம்ந்த்ரஹீனம் - மந்திரங்களை
ஒழுங்காக உச்சரிக்காமல் செய்கின்ற யாகங்கள்
அதக்ஷிணம் - யாகங்களை செய்து
கொடுப்பவர்களுக்கு போதிய தட்சணைகளை கொடுக்காமல் செய்யப்படுகின்ற யாகங்கள்
ஶ்ரத்தா4
விரஹிதம், யக்ஞம் - நம்பிக்கையில்லாமல் செய்யும் யாகங்கள்,
பூஜைகள்
தாமஸம் பரிசக்ஷதே - தாமஸமான குணத்திலிருப்பவர்கள் செய்யும்
செயல்களின் தன்மைகள் இவ்வாறு இருக்கும்.
देवद्विजगुरुप्राज्ञपूज्नं शौचमारजवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥ १७-१४ ॥
இதில் உடலை பிரதானமாகக் கொண்டு செய்யப்படும்
தவத்தை கூறுகின்றார்.
நம்முடைய புலன்களை நம் வசத்துக்குள் வைத்துக்
கொள்வதே தவமாக கருதப்படுகிறது. துயரத்தை நாமாக எடுத்துக் கொண்டு அதை பொறுத்துக் கொள்வதே
தவமாகும். மற்றவர்கள் நம்மை திட்டினாலோ, துன்பத்தைக் கொடுத்தாலோ அதைப் பொறுத்துக்
கொள்ளுவதும் தவத்தின் லட்சணமாகும். நாம்
செய்கின்ற தவத்தினால் சக்தியை சக்தியை அடைய வேண்டுமேயொழிய பலவீனத்தை அடையக்கூடாது.
ச ஶரீரம் தப
உச்யதே - இவைகள் உடலின் மூலம் செய்யப்படும் தவங்கள்
தேவ த்3விஜ கு3ரு - நல்ல மனிதர்கள்,
சான்றோர்கள், நற்பண்புகளை உடையவர்கள், ஆசிரியரை, குருவை, பெற்றோர்
ப்ராக்ஞ - குருவாக இல்லாத
வேறு நல்ல ஆசாரியர்கள்
பூஜனம் - ஆகியோர்களை வணங்குதல், சேவை செய்தல்
இவைகளினால் பணிவு என்ற பண்பானது நம்மை
வந்தடைகின்றது.
ஶௌசம் - தூய்மையாக
வைத்திருத்தல் (உடல், ஆடைகள், சுற்றுப்புற சூழ்நிலைகள்)
ஆர்ஜவம் - மனம், சொல், செயல் இவைகள் மூன்றும்
ஒரேமாதிரி செயல்பட வேண்டும். செய்யப்போவதை சொல்லுதல், சொல்வதை செய்தல், செய்ய
வேண்டியதைச் செய்தல், செய்ய வேண்டாதவற்றை செய்யாமல் இருத்தல்
ப்ரஹ்மசர்யம் - உடலளவில் ஒழுக்கமாக இருத்தல்
அஹிம்ஸா - மற்ற உயிர்களை
உடலளவில் துன்புறுத்தாமல் இருத்தல்
ஶாரீரம் தப
உச்யதே - மேற்சொன்னவைகள்
உடலினால் செய்யப்படும் தவங்களாக சொல்லப்படுகிறது.
மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்களை
பயன்படுத்தக்கூடாது. தேவைக்கு அதிகமாக
எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. பாத யாத்திரை செல்லுதல், சோம்பேறித்தனமாக
இல்லாமலிருத்தல், உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல், எளிமையாக வாழ்தல் ஆகியவைகளும் தவமாக எடுத்துக் கொள்ளலாம்.
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
स्वाध्यायाभ्यसनं चैव वाङमयं तप उच्यते ॥ १७-१५ ॥
வாக்கினால்தான் அதிக புண்ணியத்தையும்,
பாவத்தையும் சேர்த்துக்கொள்கிறோம். பேச்சினால் செய்யப்படுகின்ற தவத்தை பற்றி இதில்
கூறப்பட்டிருக்கின்றது. மௌனம் மட்டுமே
தவமல்ல. அளவாக பேச வேண்டும், வாதம்
செய்வதை தவிர்க்க வேண்டும். இவைகளும் தவமாக கருத வேண்டும். மௌனமாக இருக்க
பழகிக் கொள்ள வேண்டும்.
அனுத்வேக3
கரம் வாக்யம் –
நமது வாயிலிருந்து வருகின்ற சொற்கள் மற்றவர்களுக்கு துயரத்தைக் கொடுக்காமல் இருக்க
வேண்டும்.
ஸத்யம் - உண்மையைப் பேசுதல், வாய்மை உரைத்தல்
யத்3 ப்ரமாண
மூலம் தத்3 ஸத்யம் - எந்த அறிவானது பிரமாணத்தின் மூலம் அடைந்திருக்கின்றோமோ அதுதான் ஸத்யம் (உண்மை)
ப்ரியம் - மென்மையான சொற்களுடன் பேச வேண்டும்.
ஹிதம் - நன்மை தரும்
சொற்களை பேச வேண்டும்.
ஸ்வாத்யாயம்
அப்4யஸனம் - சாஸ்திரங்களிலுள்ள
ஸ்லோகங்களை, மந்திரங்களை, இறைவனின் புகழ் பாடும் தோத்திரங்களை உச்சரித்துக்
கொண்டிருத்தல், பாராயணம்
வாங்மய தப உச்யதே - இவைகளெல்லாம் வாக்கினால், பேச்சினால்
செய்யப்படும் தவங்கள் என்று கூறப்படுகின்றது.
मनः प्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥ १७-१६ ॥
மன: ப்ரஸாத3: - மனதை அமைதியாக வைத்திருத்தல்
மன அமைதியை இழப்பதற்குக் காரணம் எதையும்
ஏற்றுக் கொள்ளாத மனநிலைதான்
உடலுக்கு வலி வந்தாலும், விரும்பாத சூழ்நிலைகள்
வந்தாலும் அவைகளை ஏற்றுக் கொண்டு பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க
வேண்டும். நமது கர்ம பலனால்தான்
இன்ப-துன்பத்தை அடைகிறோம். இதற்கு யாரும் பொறுப்பல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்ற தமிழ் முதுமொழி இதையையே உணர்த்துகின்றது.
பேசுவதற்கு முன்பு ஏன் பேச வேண்டும்? யாரிடம்
பேச வேண்டும்? எப்பொழுது பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எவ்வளவு பேச
வேண்டும்? எதை பேச வேண்டும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்திருக்க
வேண்டும்.
ஸௌம்யத்வம் –
மென்மையாகவும், பிறர் மனமறிந்தும், இடமறிந்தும் நடத்தல் ஆகியவை
எப்படி மனதால் அணுக வேண்டும் என்பதை குறிக்கின்றது. மற்றவர்கள் எந்த
மனநிலையோடு நம்மிடம் பேசினாலும், நாம் மென்மையாக பதிலளிக்க வேண்டும். மற்றவர்கள்
செய்யும் தவற்றை மன்னிக்கும் குணம் வேண்டும். அதை திருத்த வேண்டி இருந்தால்
அளவானதும், தாங்கக்கூடியாதானதுமான தண்டனையும் கொடுக்க வேண்டும். பிற உயிர்களிடத்தும் கருணையுடன் பழகும் பண்பை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மௌனம் - மனதினால்
மௌனமாக இருக்க வேண்டும். மனதிற்குள்
கற்பணையாக யாரிடமும் பேசிக் கொண்டிருக்க கூடாது.
நல்ல விஷயங்களை சிந்தித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கலாம், தியானத்தை
அதிக செய்ய வேண்டும்.
ஆத்ம வினிக்ரஹ – மனக்கட்டுப்பாடு, மனதிற்கு ஒரு
வேலையைக் கொடுத்து அதை மட்டும் செய்யுமாறு பழக்குதல், விஷயங்களிலிருந்து
நிவிருத்தி அடைதல், மனதுக்கு சஞ்சலத்தைக் கொடுக்க கூடிய விஷயங்களிலிருந்து நீங்கி
இருக்குமாறு பழக்கி வைத்தல்
பாவ ஸ்ம்ஶுத்தி4 – மனத்தூய்மை, நற்பண்புகளுடன்
இருத்தல், தீயபண்புகளை நீக்கி இருக்க வேண்டும்.
இதி ஏதத் தப
மானஅம் உச்யதே - இவைகளெல்லாம் மனதினால் செய்யப்படும் தவங்கள்
என்று சொல்லப்படுகிறது.
श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः ।
अफलाकाडिक्षभिर्युक्तैः सात्त्विकं परिचक्शते ॥१७-१७ ॥
ஶ்ரத்தயா பரயா – மேலான,
சாத்விகமான நம்பிக்கையுடன் செய்கின்ற தவங்கள், முழுவிருப்பத்துடன் செய்கின்ற
தவங்கள், மேலான பலனை கொடுக்கும் என்ற சாத்விகமான சிரத்தையுடன் செயல்கள் செய்தல்
யுக்தஹ - செய்கின்ற தவத்தில் மனம் பொருந்தியிருக்க வேண்டும், முழு ஈடுபாடு இருக்க
வேண்டும், முழுமையாக செய்ய வேண்டும்.
அபலாகாங்க்ஷிபி: - தவத்தினால்
அடையப்போகும் அவாந்தர பலனில் பற்றில்லாமல் இருக்க வேண்டும். முக்கிய பலன் மட்டும் அடையப்பட வேண்டும்.
நாம் செய்கின்ற தவத்தின்போது எதிர்பார்க்காத
சில சக்திகள் வரலாம். இவைகள்
மோட்சத்திற்கு தடையானவைகள் என்று ஒதுக்கி விட வேண்டும். தவத்தின் முடிவில் சக்தியை பெற வேண்டுமே தவிர
துன்பத்தை அனுபவிக்கக் கூடாது. பலவீனத்தை அடையக்கூடாது. தன்னையே அழித்தும் கொள்ளக்
கூடாது. நம் தவத்தினால் மற்றவர்களுக்கு
கஷ்டத்தைக் கொடுக்க கூடாது.
நரை: த்ரிவிதம் - மனிதர்களால் மூன்றுவிதமாக
தப்தம் தப - தவங்கள் செய்யப்படுகின்றது.
ஸாத்விகம்
பதிசக்ஷதே இவைகள்
சாத்விகமான தவங்கள் என்று கூறப்படுகின்றது.
सत्कारमानपुजार्थं तपो दम्भेन चैव यत् ।
क्रियते हदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥ १७-१८ ॥
அவாந்தர பலன்களுக்காக செய்யப்படும் தவங்கள்
ராஜஸமானது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஸத்காரம் - தன்னை புகழ்வார்கள் என்று
எதிர்ப்பார்த்தும்
மானம் - உயர்வாக
மதிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தும்
பூஜார்த4ம் - வணங்குவார்கள்
என்று எதிர்ப்பார்த்தும்
தம்பேன ச ஏவ - தற்பெருமைக்காகவும்
க்ரியதே இதி இஹ - செய்யப்படும் தவங்கள் அனைத்தும்
ராஜஸம் ப்ரோக்தம் - ராஜஸமானது என்று சொல்லப்படுகிறது
சலம் - அற்பமானது, துச்சமானது, கேவலமானது
அத்4ருவம் - இத்தவத்தினால் பலனை அடைவோம் என்று
நிச்சயமாக கூறமுடியாது
தவத்தையும் முழுமையாக செய்ய மாட்டார்கள், பலன்
அடைவோம் என்ற நிச்சயமும் கிடையாது
मूढग्राहेणात्मनो यत्पीडया क्रियते तपः ।
परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाह्रतम् ॥ १७-१९ ॥
யத் அத்மன: பீடயா
க்ரியதே தப: - எந்த
தவங்கள் தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில் செய்யப்படுகின்றதோ.
பரஸ்யோத்ஸாதனார்தம் - மற்றவர்களையும் அழிக்கக்கூடிய வகையில்
இருக்கின்றதோ
மூடக்ராஹேணா: - சில தவறான முறைகளை பயன்படுத்தி
செய்யப்படுகின்றதோ
தத் தாமஸம்
உதாஹ்ரதம் - இவைகள்
தாமஸமான தவங்கள் என்று கூறப்படுகின்றது.
दातव्यमिति यद्दानम् दीयतेऽनुपकारिणे ।
देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥ १७-२० ॥
பிறருடைய தேவையை அறிந்து மனமிரங்கி கொடுக்கும்
குணம் ஈகை. இது லோபத்தை நீக்கி விடும்.\
தாதவ்யம் - வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது போல கொடுத்துத்தான் ஆக வேண்டும்,
இதி தானம் - இதுவே தானம்
தீயதே அனுபகாரினே - தானம்
பெறுபவரிடமிருந்து எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் தானம் அளிக்க வேண்டும்
தேஶே காலே ச
பாத்ரே ச - சரியான இடத்தில், சரியான நேரத்தில் மேலும் சரியானவர்களுக்கு
தானம் அளிக்க வேண்டும்.
தத்3 தானம் - இவ்வாறு அளிக்கப்படுகின்ற தானமானது
ஸாத்த்விகம்
ஸ்ம்ருதம் - சாத்விகமானது என்று கூறப்படுகின்றது.
यत्तु प्रत्युपकरार्थं फलमुद्दिश्य वा पुनः।
दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतं ॥ १७-२१
யத்து
ப்ரத்யுபகரார்தம் நாம்
செய்கின்ற தானம் அதனால் திரும்பி ஏதாவது பலன் கிடைக்கும் என்று நினைத்து செய்கின்ற
தானம்
பலமுத்திஶ்ய வா
புன: .குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து செய்யும் தானம்
தீயதே ச
பரிக்லிஷ்டம் தானம்கொடுத்த பின்னர் அதைக் குறித்து
வருந்துதல்
தத் தானம் – இந்த வகையான
தானங்கள்
ராஜஸம் ஸ்ம்ருதம் – ராஜஸமான தானமாக கருதப்படுகின்றது.
अदेशकाले यद्दानमपत्रेभ्यश्च दीयते ।
असत्कृतमवज्ञातं तत्तामसमुदाह्रतम् ॥ १७-२२ ॥
असत्कृतमवज्ञातं तत्तामसमुदाह्रतम् ॥ १७-२२ ॥
சரியான தேச, காலம் இல்லாத போதும்,
தேவையில்லாதவர்களுக்கும், தகுதியற்றவர் களுக்கும் தானம் அளிப்பது தாமஸமானது
அஸக்ருதம் - மதிக்காமல் கொடுத்தல்
அவக்ஞாதம் - அவமானப்படுத்தி கொடுத்தல்
இந்த வகையான தானங்கள் தாமஸமானவைகளாக
சொல்லப்படுகிறது
ॐतत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥१७-२३ ॥
ஒம் தத் ஸத் இதி இவை மூன்றும் பகவானை
குறிக்கும் சொற்கள்
நிர்தேஶ: - பெயர்கள்
ப்ரஹ்மன: - பிரம்மத்தினுடையது, ஈஸ்வரனுடையது
த்ரிவித4:
ஸ்ம்ருத: - மூன்றும் கூறப்பட்டு வருகின்றது
நாம் செய்த செயல்கள் சாஸ்திர விதிப்படி
இல்லையென்றால், இந்த மூன்று சொற்களையும் கூறிவிட்டு அந்த செயலை முடித்து விட்டால்,
அதனால் அந்த செயலில் எந்த குறையுமிருக்காது.
ஆனால் தெரிந்தோ, கவனக்குறைவாக சாஸ்திர விதியை மீறிவிட்டு செய்யக்கூடாது.
ப்ராஹ்மணா தேன இந்த மூன்று
சொற்களையும் பிரம்ம தேவர் உச்சரித்து மனிதர்களையும்
வேதா ச, யக்ஞ ச –
வேதங்களையும், யாகங்களையும்
விஹிதா: புரா – ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் இவைகளை
தோற்றுவித்தார்.
तस्मादोमित्युदाह्रत्य यज्ञदानतपःक्रियाः ।
प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम् ॥ १७-२४ ॥
தஸ்மாத் - ஆகவே
ஓம்
இத்யுதாஹ்ருத்ய – ஓம்
என்ற சொல்லை உச்சாரணம் செய்து
ப்ரஹ்மவாதினாம் – வேதத்தை பின்பற்றுபவர்களுடைய,
சாஸ்திரத்தில் நம்பிக்கை உடையவர்கள் செய்கின்ற
விதா4னோக்தா – சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட
கர்மங்களான வேதங்கள், விதிகளுடன் கூறப்பட்ட செயல்கள்
யக்ஞம், தான,
தப:, க்ரியா வழிபாடு, தானம், ஜவம் போன்ற அனைத்து
செயல்களையும்
ப்ரவர்தந்தே
ஸத்தம் – எப்பொழுதும்
நடைபெற்று வருகின்றது.
ஓம் என்ற சொல்லை உச்சரித்து வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்களால் இறைவழிபாடு,
தானம், தவம் போன்ற அனைத்து செயல்களையும், சாஸ்திரம் விதிக்கப்பட்ட செயல்கள்
அனைத்தும் எப்பொழுது நடைபெற்று வருகின்றது.
तदित्यनभिसन्धाय फलं यज्ञतपःक्रियाः ।
दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्शकाङ्क्षिभिः ॥ १७-२५ ॥
த்த3 இதி - தத்3 என்ற சொல்லை உச்சரித்து
வேதத்தை பின்பற்றுவர்கள் அனைத்து சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மங்களை
செய்கின்றவர்கள்
பலம்
அனபி4ஸந்தா4ய - பலனை
தியாகம் செய்து, போகம் என்கின்ற பலனை எதிர்பார்க்காமல்
யக்ஞ, தப:
க்ரியா: - யாகங்கள்,
தவங்கள் போன்ற செயல்களும்
தான க்ரியாஶ்ச
விவிதா4: - விதவிதமான தானம்
போன்ற செயல்களும்
மோக்ஷ
காங்க்ஷிபி4: க்ரியந்தே - மோட்சத்தை
விரும்புபவர்களால் செய்யப்படுகின்றது
सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।
प्रशस्ते कर्मणि तथा सच्चाब्दः पार्थ युज्यते ॥ १७-२६ ।.
ஸத் என்ற
சொல்லுக்கு ஐந்து பொருட்கள் இருக்கின்றது. இந்த ஸ்லோகத்தில் ஸத் என்ற சொல்லுக்கு மூன்றுவித அர்த்தத்தை பகவான்
கூறியிருக்கிறார்.
பார்த2 - அர்ஜுனா!
ஸத்3 பா4வே - . இருத்தல் என்பது முதலாவது அர்த்தம்
உதாரணமாக
நான்
இருக்கின்றேன், அது இருக்கின்றது என்ற வாக்கியத்தில் உள்ள இருத்தல் என்ற சொல் நிர்குண பிரம்மத்தைக் குறிக்கின்றது.
இருத்தல்
என்ற சொல்லானது ஒன்றின் ஆதாரத்தைக் குறித்தால் அது பிரம்மன், நாம-ரூபத்தைக்
குறித்தால் அது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸாது4பா4வே - நன்மை,நல்லது. இது
இரண்டாவது அர்த்தம்
ஸத்
இத்யேத்தி ப்ரப்யுஜ்யதே - ஸத் என்ற சொல் மேற்கூறிய இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
ப்ரஶஸ்தே
கர்மணி - புண்ணிய கர்மங்கள் என்பது மூன்றாவது அர்த்தம்.
ததா2 ஸத் சாப்த: யுஜ்யதே - இவ்வாறு ஸத் என்ற சப்தமானது மூன்றுவிதமாக பயன்படுத்தப்படுகின்றது
यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते ।
कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ॥ १७-२७ ॥
இந்த ஸ்லோகத்தில் மேலும் இரண்டு அர்த்தங்கள் பகவான் கூறியிருக்கிறார்
யக்ஞே தபஸி தானே
ச – யாகம்
செய்வதிலும், தவம், தானம் செய்வதிலும்
ஸ்தி2தி - உறுதியாக இருத்தல், நல்ல
விஷயத்தில் உறுதியாக இருத்தல் என்பது நான்காவது அர்த்தமாகும்.
ச் உச்யதே - என்று சொல்லப்படுகிறது
கர்ம ச ஏவ
த்த3ர்தீயம் - இறைவனுக்காக
செய்கின்ற செயல்கள் கூட, கர்மயோகம்
ஸத் இத்யேவ
அபி4தீ4யதே - ஸத் என்றே சொல்லப்படுகிறது. இது ஐந்தாவது அர்த்தமாகும்.
अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
असदित्युच्यते पार्थ न च तत्प्रेप्य नो इह ॥ १७-२८ ॥
அஶ்ரத்த4யா ஹுதம் த3த்தம் தபஸ்தப்தம் –
சிரத்தையில்லாமல் யாகம் செய்தாலும், தவங்களை செய்தாலும்
யத் ச க்ருதம் – எது
செய்தாலும்
அஸத் இத்3 உச்யதே பார்த3 – அர்ஜுனா!,
அதனால் எந்தப் பலனும் கிடைக்காது
ந ச தத் ப்ரேப்ய ந இஹ – இறந்ததற்கு
பிறகும் நமக்கு எந்தப் பலனையும் கொடுக்காது, எந்தவிதத்திலும் பயன்படாது, இகலோகத்திலும் எந்தப்
பலனும் கிடைக்காது.
நாம் செய்கின்ற அனைத்து செயல்களையும்
நம்பிக்கையோடு செய்தால், அது பலனைக் கொடுக்கும்.
நாம் செய்கின்ற செயல்களில் சிறிது தவறு இருந்தாலும் ஓம் தத் ஸத் என்று கூறி
முடிப்பதுடன் எந்தக் குறையும் இல்லாமல் இனிதே முடியும்
----- oooOooo -----
தொகுப்புரை
01 சிரத்தையைப்
பற்றி அர்ஜுனனுடைய கேள்வி, சாஸ்திர ஞானம் இல்லாதவன் ஆனால் தர்மப்படி வாழ வேண்டும்
என்று நினைப்பவனின் கதி என்ன?
02-06 சிரத்தையைப் பற்றி விரிவாக பகவான்
பதிலளித்திருக்கிறார். ஒருவனுடைய வாழ்க்கை நிலையானது
அவன் கொண்டுள்ள சிரத்தையின் தரத்தைப் பொறுத்து அமைகின்றது. எல்லோரிடத்திலும் ஏதோ ஒரு வகையான சிரத்தை
இருந்தே தீரும். சிரத்தை மூன்று வகையாக இருப்பதாக
பகவான் கூறியிருக்கிறார். அவைகள் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்பதாகும். சாத்விக சிரத்தையுடையவன் நற்கதியை அடைவான்.
நம்முடைய மனதில் இருக்கும் ஸம்ஸ்காரங்களை பொறுத்தே சிரத்தையின் தரம் அமைகின்றது. சிரத்தையின் பலனையும் கூறியிருக்கிறார். எப்படிப்பட்ட சிரத்தை
நம்மிடம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் வழியையும் கூறியிருக்கிறார். எந்த தேவதையை எந்த விதத்தில், எதற்காக வழிபடுகிறோம்
என்பதை வைத்தே சிரத்தையின் வகையை கண்டுபிடித்து விடலாம். சாத்விக சிரத்தையை அடைவதற்கான வழியை
கூறியிருக்கிறார். அது சாத்விக மனதை அடைவதே ஆகும். யோக சூத்திரம் இதையே
லட்சியமாகக் கொண்டிருக்கிறது.
07 நான்கு தத்துவங்கள் ஆஹாரம், யாகம், தவம்,
தானம் இவைகளில் எப்படிபட்ட குணமுடையது என்பதையும் விளக்கி கூறியுள்ளார். இதன்
மூலம் சாத்விக சிரத்தையை அடையலாம்
08-10 மூன்று விதமான ஆகாரத்தை கூறியுள்ளார். சாஸ்திரம் நிஷேதம் செய்யாத உணவை அளவாக சாப்பிட
வேண்டும். சாத்விகமான உணவை உட்கொள்வதனால் சாத்விக மனதை அடையலாம்.
11-13 யாகத்தில் இந்த மூன்று வகையை விளக்கியுள்ளார்
14-19 தவத்தின் மூன்று வகையை விளக்கியுள்ளார். தவமானது உடல், மனம், சொல் இவைகள் மூலமாக
செய்யலாம். மனதை அமைதியாகவும்,
மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதே மானஸ தவம்
20-22 தானத்தில் உள்ள மூன்று வகையை கூறியுள்ளார்.
சரியான இடத்தில், சரியான காலத்தில், சரியானவர்களுக்கு கொடுப்பதே சாத்விக தானம்
எனப்படுகிறது. இவ்வாறு எல்லாவித
செய்லகளில் சாத்விக முறையை கடைப்பிடித்தால் சாத்விக மனதை அடைந்து விடலாம்.
23-27 ஓம் தத் ஸத் என்ற மூன்று வகையான பெயர்கள் இறைவனை
குறிப்பதாக கூறியுள்ளார். நாம் சரியான
பாவனையில் செயல்களை செய்துவிட்டு, செய்யும் முறையில் நியமத்தை சரியாக
கடைப்பிடித்திருக்கின்றோமோ என்ற சந்தேகம் வந்தால் ஓம் தத் ஸத் என்று இறைவனை
நினைத்து சொல்லி முடித்தோமானம் அது சாத்விகமான முறையில் செய்யப்பட்ட
செயலாகிவிடும்