Showing posts with label உத்தவ கீதை-04. Show all posts
Showing posts with label உத்தவ கீதை-04. Show all posts

Monday, January 25, 2021

Uddhava Gita - Chapter-04

 

அத்தியாயம்-04

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஸ்வாமி குருபரானந்தாவின் உபதேச விளக்கம்

திருத்தம் செய்யப்பட்டது-19-02-2022


ஶ்ரீபகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |

வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1 ||

 

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து. வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும். உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும். இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழுநம்பிக்கையை குறிக்கின்றது

ஸமாசரேத் – நன்கு செய்வாயாக

அகாமாத்மா – நிஷ்காமபாவம்

வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

 

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |

கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2 ||

 

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்

விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக

உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் வெளிப்பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள் என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு  அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

 

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |

நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3 ||

 

மனோரத2 – பகற்கனவு

உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும் இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில் கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள்தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள்தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது, பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஸுப்தஸ்ய விஷயாலோகஹ - தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்

த்4யாயதோ வா மனோரதஹ    - விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்

நானாத்மகத்வாத்3  - மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;

விபலஹ                       - பொய்யானவை

ததா3                                - அவ்விதம்

கு3ணைஹி‘                - இந்திரியங்களால்

பேதாத்மதீஹி            - பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல,  உண்மையானதல்ல

 

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |

ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4 ||

 

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும். உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். 

ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ     பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன்  அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன்

ப்ரவ்ருத்தம் கர்ம -  நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்

த்யஜேத் - விட்டுவிடுதுறந்துவிட்டு

நிவிருத்தம் கர்ம ஸேவேத - ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனைஜபம்தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.


சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.

மத்பரஹ  -  அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் -  வேதத்தில்கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே

 

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |

மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5 ||


யமஹ                     -  விலக்குதல்

நியமஹ                -  பின்பற்றுதல்

நியமம்                    - தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்

க்ரியாயோகம்    -  தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்

யமம்                         அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்


யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்கா வேண்டும்.

ஶாந்தம்                          - மனவமைதி அடைந்தவரும்,

மத்3 அபி4க்3ஞம்      - என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்

மத்3 ஆத்மகம்           - என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி

உபாஸீத்                        - சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3:  |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

 

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.
1.        அமானி    -    கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2.        அமத்ஸரஹ -  பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு  ஒப்பிட்ட பார்ப்பதால் வருகின்றது . தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது

3.        த3தஹ  -   திறமையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன். எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4.        நிர்மமஹ  -   மமகாரம் இல்லாதிருப்பவன்

5.        த்3ருட4ஸௌஹ்ருத3: - எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6.        அஸத்வரஹ   -   நிதானமாக செயல்படுபவன்; அவசர அவசரமாக எதையும் செய்யாதவன்

7.        அர்த2ஜிக்3ஞாஸு - வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8.        அனஸூயு:   -     எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9.        அமோக4வாக்  -   பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்

 

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |

உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

 

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது. இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும். தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

 

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |

யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

 

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றும், அது எதைக் குறிக்கின்றது என்றும் விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப்பொருளையும், உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும். அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும். ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது. இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.
 
பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார். அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும். ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம். கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம்.  இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ  - வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா                - பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக்         - தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை, அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

 

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

 

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும். மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது. வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது. எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

 

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |

அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

 

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால் இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.
நிரோத4ம்    – அணைந்து விடுதல்
உத்பத்தி     – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு          - சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ       - மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம்   - விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
அந்த:பிரவிஷ்ட -  எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை 
ஆத4த்த        எடுத்து கொள்கிறது, ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலான ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

 

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |

ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

 

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின்  துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ -    சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ -    யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா   -  ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

 

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |

ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

 

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)

ஆத்மஸ்தம் - இந்த உடலுக்குள் இருக்கின்ற

கேவலம்     - இரண்டற்றதான
ஆத்மானம்    - ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம  - புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம்           - அழியாத, மேலான
ஏதத்3  வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3     -  நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம்   -  இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

 

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

 

 

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |

தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

 

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் -  அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ  - குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி - மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் -  அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம்   -  குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி - ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ  - இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் அடைவதாகும்

 

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |

கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

 

இதில் ஆத்மஞானத்தின் பலன் கூறப்படுகின்றது
வைஶாரதீ –    திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி -   மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறான அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: -  எப்படி அக்னி
யதா3த்மம் –  அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் - எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

 

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |

நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

 

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: - இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 - பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் - தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக -  இந்த உலகம்
கால -   காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம - கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் - இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

 

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |

தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

 

மன்யஸே - இவ்வாறு நீ கருதினால்

ஸர்வபா3வானாம் - நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்

யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 -  பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது (ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறிக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம். இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.
தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் -    நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: -  எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே  -   இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

 

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |

காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

 

அங்க3  - இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி    இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் - எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ   காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத்     - எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

 

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |

போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

 

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவர்களாக இருக்கிறார்கள். அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவர்களாக இருக்கிறார்கள். துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம். எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம். இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

 

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |

ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||


இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது. அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறிதளவு கூட காணப்படவில்லை. அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்கப்படுகிறார்கள் என்பதும் இல்லை. அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

 

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S

தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

 
ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

 

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |

ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

 
மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும். எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்க முடியும்.

 

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |

ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

 

ஶ்ருதம் ச   - சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 - நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4  - போட்டி
அஸூய  - பொறாமை
அத்ய   - அழிவுக்குட்பட்டதாக இருத்தல் 
அவ்யயை: - தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் - போன்ற குறைகளுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் -  பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும். நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது. சுகம்  கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம்   விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது                

 

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.


அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |

தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

 

அந்தராயை – தடைகள்

ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை  அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

 

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |

பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

 

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான். அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

 

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |

க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

 

ஹ்ருத்3யவேஷத்3ருக்   - மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்

ஸ்வபுண்ய உபசிதே  - அவனுடைய புண்ணியத்திற்கேற்ப      

ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்

தே3வீனாம் மத்4யே விஹரன் -  தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்

க3ந்த4ர்வ உபகீ3யதே - கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

 

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |

க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

 

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான். அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

 

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |

க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

 

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான். புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

 

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |

காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |

நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

 

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ   - தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)

லுப்3த4ஹ    - பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்

ஸ்த்ரைணஹ  - உடலின்பத்திலே ஆசையுள்ளவன்

பூதவிஹிம்ஸக:ஹ - எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

 

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன், இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை, அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

 

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |

ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

 

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

 

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |

தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

 

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும் உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள். அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

 

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |

ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

 

கு3ணாஹா   - உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)

ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.

கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.

ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ    - இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன

அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே  - அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

 

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு. மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம். மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம். நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

 

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன:  |

நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

 

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள். பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன.  எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

 

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |

ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

 

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல் குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும். பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும். எவர்கள் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

 

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |

இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

 

குணமாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள். காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும் பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

 

உத்3த4வ உவாச:

கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |

கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

 

உத்தவர்  கேட்கிறார்:

விபோ4  - பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி    உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும் அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?  மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

 

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |

கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

 

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்? எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்? கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

 

 

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி  ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |

நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

 

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள். கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே! ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

 

----ooOOOoo----

மூதுரை

மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையா...