கைவல்ய உபநிஷத்
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 19-03-2022
www.poornalayam.org
முகவுரை
வேதாந்தம்
என்பது வேத
+ அந்தம் என்று பிரித்து, வேதத்தின் இறுதி பாகம்
என்று அர்த்தம் கொள்ளலாம். இது ஞானத்தை கொடுக்ககூடியது.
ஒரு பிரமாணத்தின் மூலம் அறிந்ததை வேறொரு பிரமாணத்தால் அறியவும்
முடியாது, நீக்கவும் முடியாது. இது கொடுக்கின்ற
ஞானம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம். ஈஸ்வரனின் ஸ்வரூபமும், ஜீவனின் ஸ்வரூபமும் ஒன்றேதான் என்று விளக்குகிறது.
ஆறுவிதமான
குறிப்புக்களை,
அடையாளங்களை வைத்து உபநிஷத்தின் மையக்கருத்தை (தாத்பர்யம்) கண்டுபிடித்து விடலாம், உறுதி செய்து விடலாம். அவைகள்
1. உபகிரம, உபசம்ஹாரம் – துவக்கம், முடிவு. சாஸ்திரத்தின் துவக்கமும், முடிவும் அது சொல்ல வருகின்ற மையக்கருத்தை தெரிவிக்கும், துவக்கம் என்பது உபதேசம் துவங்கும் இடம், முடியும் இடம் நாம் பார்க்க வேண்டும்.
2. அப்யாஸஹ:- மீண்டும், மீண்டும் கூறுதல். எந்தக் கருத்து திரும்ப திரும்ப சொல்லப்படுகிறதோ, அதுவே அது கூற விரும்பும் மையக்கருத்து என்று புரிந்து கொள்ளலாம்.
3. அபூர்வதா – புதிய அறிவு. உபநிஷத்தினால் மட்டும் அறியக்கூடிய கருத்துதான் அது கூற விரும்பும் மையக்கருத்து.
4. பிரயோஜனம்: உபநிஷத்தை படிப்பதால் அடையும் பலனை கொண்டு அதன் மையக்கருத்தை என்று புரிந்து கொள்ளலாம்.
5. அர்த்தவாதம்: எந்த அறிவை உபநிஷத் புகழ்கின்றதோ அதுதான் மையக்கருத்தாக இருக்கும். எதை நிந்தனை செய்கின்றதோ அது மையக்கருத்தல்ல என்று புரிந்து கொள்ளலாம்.
6. உபபத்தி: யுக்திபூர்வமான விளக்கத்தை சொல்கின்ற கருத்து.
நாம்
உபநிஷத்தை படிப்பதற்கு முன்னர் கீழ்கண்ட மூன்று விதமான கருத்துக்களை வைத்து உறுதி செய்த
பிறகு அதை படித்தால்,
குழப்பம் இல்லாமல் ஞானத்தை அடையலாம்.
1. ஆத்ம ஞானம் மோட்சத்தை அடைவதற்கு உதவி புரியம் சாதனம்
2. இந்த ஞானத்தை உபநிஷத் மூலம்தான் அடைய முடியும்.
3. உபநிஷத் கொடுக்கின்ற ஞானம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்.
உபநிஷத் என்றால் ரகசியம் என்ற அர்த்தமும் உண்டு. பிரம்ம வித்யா எல்லாவற்றைக் காட்டிலும் மேலானது, உயர்வானது எனவே ரகசியம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மோட்சத்தை கைவல்யம் என்று இந்த உபநிஷத் அழைப்பதால் இதற்கு கைவல்ய உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மம் ஒன்றாக இருப்பதை குறிப்பதற்கும் கைவல்யம் என்றும் பொருள் கொள்ளலாம். இருமையிலிருந்துதான் பயம் வருகின்றது. நான் ஒருவன்தான் எங்கும் வியாபித்திருக்கிறேன் என்று உணரும் நிலையை கைவல்யம் என்றும் கூறப்படுகிறது.
சாந்தி பாடம்
ப4த்3ரம் கர்ணிபி4: ஸ்ருணுயாம தேவா: |
ப4த்3ரம் பஶ்யேமக்ஷிபி4ர்யஜத்ரா: |
ஶ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாங்ஸஸ்தனுபி4: வ்யஶேம தேவஹிதம் யதா3யு: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா: |
ஸ்வஸ்தி ந: பூருஷா விஶ்வவேதா3: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
ப4த்3ரம் கர்ணிபி4: ஸ்ருணுயாம தேவா: |
நாங்கள் தெய்வீகமான விஷயங்ளையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும். இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.
ப4த்3ரம் பஶ்யேமக்ஷிபி4ர்யஜத்ரா: |
தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது. இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது. நாங்கள் மோக்ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும், மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும். பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.
ஶ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாங்ஸஸ்தனுபி4: வ்யஶேம தேவஹிதம் யதா3யு: |
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான உடலுறுப்புகளைக் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா: |
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வவேதா3: |
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும். ஈஸ்வரனை சூரியனாக ஆவாஹனம் செய்து அவனுடைய அருளை அனுபவிப்போம். இந்த அருளால் நமக்கு என்ன கிடைக்கும்? ஈஸ்வரன் அனைத்தையும் அறிந்தவராக இருப்பதால், நாம் அறிவை அடைந்திடுவோம். அந்த ஈஸ்வரனை புரிந்துகொள்ளும் வகையில் நம்முடைய புத்தியானது பிரகாசமாக வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
தர்க்ஷ்ய என்கின்ற கருடன் எங்களுக்கு நல்லது செய்யட்டும். கருடன் எந்த தடையும் இல்லாமல் ஆகாயத்தில் பறப்பது போல, நாமும் தடையின்றி ஈஸ்வரனுடைய அருளைப் பெறுவோம்.
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
பிரஹஸ்பதி நமக்கு நன்மை செய்யட்டும். பிரஹஸ்பதி இந்திரனின் ஆசிரியர். அவர் புத்தியின் அதிபதி. வாக்பதி என்பது அவரது மற்றொரு பெயர். இந்த ஆசாரியரின் அருள் நம்மோடு இருக்கட்டும்.
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
ஆதிதைவகம், ஆதிபௌதிகம் மற்றும் அத்யாத்மிகா என்கின்ற மூன்று வகையான தடைகள் உள்ளன..
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும். ஈஸ்வரனை சூரியனாக ஆவாஹனம் செய்து அவனுடைய அருளை அனுபவிப்போம். இந்த அருளால் நமக்கு என்ன கிடைக்கும்? ஈஸ்வரன் அனைத்தையும் அறிந்தவராக இருப்பதால், நாம் அறிவை அடைந்திடுவோம். அந்த ஈஸ்வரனை புரிந்துகொள்ளும் வகையில் நம்முடைய புத்தியானது பிரகாசமாக வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
தர்க்ஷ்ய என்கின்ற கருடன் எங்களுக்கு நல்லது செய்யட்டும். கருடன் எந்த தடையும் இல்லாமல் ஆகாயத்தில் பறப்பது போல, நாமும் தடையின்றி ஈஸ்வரனுடைய அருளைப் பெறுவோம்.
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
பிரஹஸ்பதி நமக்கு நன்மை செய்யட்டும். பிரஹஸ்பதி இந்திரனின் ஆசிரியர். அவர் புத்தியின் அதிபதி. வாக்பதி என்பது அவரது மற்றொரு பெயர். இந்த ஆசாரியரின் அருள் நம்மோடு இருக்கட்டும்.
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
ஓம் என்பது இறைவனின் நாமம். "ஓ!
ஆண்டவரே, அமைதி நிலவட்டும்”. இங்கு
பேசப்படும் அமைதி என்பது தடைகளில் இருந்து விடுபடுவது. தடைகளில் இருந்து
விடுபடட்டும். தடைகள் வரலாம், ஆனால் அவை எழும்பினாலும் அவை
தீர்க்கப்படும், மேலும் நம் முயற்சியைத் தொந்தரவு செய்யாது.
ஆதிதைவகம், ஆதிபௌதிகம் மற்றும் அத்யாத்மிகா என்கின்ற மூன்று வகையான தடைகள் உள்ளன..
ஆதிதைவகம் என்பது ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத
காரணிகளை மையமாகக் கொண்டவை. கனமழை, மின்னல், நிலநடுக்கம்
போன்ற இயற்கை நிகழ்வுகளின் வடிவத்தில், ஒருவரின்
முயற்சியை தொடர இடையூறு விளைவிக்கிறது.
ஆதிபௌதிக தடைகள் சக மனிதர்களிடமிருந்தும் பிற வாழ்க்கை
வடிவங்களிலிருந்தும் எழுகின்றன. இவை நம்மால் உடனடியாக கட்டுப்படுத்த முடியாத
வெளிப்புற சக்திகள்.
அத்யாத்மிகா என்கின்ற தடை என்பது ஒருவரின் உடல்-மனம்-உணர்வு தொகுப்பை மையமாகக் கொண்டது. நம்முடைய உடலுக்கும், மனதுக்கும்
வருகின்ற நோய்களும்கூட பெரிய தடையாக
இருக்கும். இது நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல
மனதையும் பராமரிக்கும் பிரார்த்தனை.
எனவே, நன்னால்
கட்டுப்படுத்த முடியாத அல்லது உடனடியாக கட்டுப்படுத்த முடியாத சக்திகளிடமிருந்து
எந்தத் தடையும் இருக்கக்கூடாது.
சாந்தியை மூன்று முறை அழைப்பது இந்த
மூன்று வகையான தடைகளைத் தீர்ப்பதற்காகவே தவிர, மூன்று
வகையான சாந்தியை வேண்டிக்கொள்வதற்காக அல்ல.
சாந்தி என்ற சொல்லுக்கு நிவர்த்தி, சுதந்திரம் என்றும் பொருள். பிராரப்த-கர்மாவின்
காரணமாக யாராவது துன்பப்படும்போது, கடந்தகால கர்மாவின் பாதகமான விளைவை
நடுநிலையாக்கும் பிராயச்சித்த கர்மாவின் மூலம் நாம் முயற்சி செய்கிறோம். இது
சாந்தி-கர்மா என்று அழைக்கப்படுகிறது.
இது ஒரு சடங்கு அல்லது பிரார்த்தனையாக இருக்கலாம்.
பிரார்த்தனை என்பது ஒரு சாந்தி-கர்மா, தடைகளைத் தடுக்கும் ஒரு
செயலாகும்.
ஸ்லோகம்-1
ஆஷ்வலாயன்
என்ற சிஷ்யர் கேட்கும் கேள்வியாக இந்த மந்திரம் அமைந்திருக்கிறது.
அத: பிறகு,
சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்த பிறகு,
ஆஷ்வலாயன்
என்பவர் பகவான் பிரம்மாவை பணிவுடனும், சிரத்தையுடனும் அணுகி
வரிஷ்டாம் : மேலான,
உயர்ந்த அறிவான
பிரம்ம
வித்யாம் அதீஹி
– பிரம்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினார்.
உயர்ந்த
அறிவு என்று சொல்வதற்கு காரணம் அதனால் அடையப்படும் விஷயமும் மிக உயர்ந்ததாக இருக்கிறது.
ஸதா3 - எப்பொழுதும்
ஸத்3பி4: - மேலானவர்களால், சத்புருஷர்களால், சான்றோர்களால்
ஸேவ்யமானாம் - தேடப்படுகின்ற, நாடுகின்ற
இந்த அறிவானது
நிகூ3தா3ம் - கிடைத்தற்கரியது, மிகவும்
ரகசியமானது
ஸத்3பி4: - மேலானவர்களால், சத்புருஷர்களால், சான்றோர்களால்
இந்த
வித்யாவின் பலனையும் கூறுகிறார்.
ய்யா – அந்த அறிவினால்
அசிராத் – அப்பொழுதே,
அறிவை அடைந்த அந்தக்கணமே
ஸர்வ
பாபம்
– எல்லா பாவ-புண்ணியங்களும், அக்ஞானமும்
வ்யபோஹ்ய – நீங்கி
பராத்பரம் – மேலானவற்றுக்கெல்லாம்
மேலான பிரம்மத்தை, மாயையை காட்டிலும் மேலான
புருஷம் – பரம்பொருளை
யாதி
வித்வான்
– இந்த ஞானத்தை அடைந்தவன் அடைகின்றான்.
ஸ்லோகம்-2
தஸ்மை – அவருக்கு (சிஷ்யனுக்கு)
ஸஹ
பிதாமஹன் உவாச
– குருவான பிரம்மதேவன் உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
பிரம்மத்தை
அடைவதற்கான வழியை சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரத்தாபக்தித்4யானயோகாதவேஹி – சிரத்தை,
பக்தி, தியானம் ஆகியவற்றின் உதவியால் அந்த பிரம்மத்தை
தெரிந்து கொள்ள வேண்டும்.
தஸ்மை – அவருக்கு (சிஷ்யனுக்கு)
இங்கே
இவை மூன்றும் சாஸ்திரத்தின் மேலுள்ள நம்பிக்கையும் அதனால் அதை பிரமாணமாக வைத்துக் கொண்டு பிரம்ம வித்யாவை குருமுகமாக கேட்டல்
என்ற சிரவணம் என்ற சாதனத்தையும், பக்தி என்பது மனமானது முழுமையாக இதில் ஈடுபடுதல்
இது மனனத்தை குறிக்கிறது. தியானம் என்பது நிதித்யாஸனத்தை குறிக்கிறது.
பிறகு எவைகளெல்லாம் பிரம்மத்தை அடைவதற்கு பயன்படாது, சாதனங்களாக இருக்காது என்று விவரிக்கப்படுகிறது.
ஸ்லோகம்-3
பரேன நாகம் – சொர்க்கத்தைக் காட்டிலும் மேலான
விப்ராஜதே – அதையேதான் அடைகிறார்கள்.
மோட்சத்தை அடையும் சாதனத்தை படிப்படியாக சொல்லப்படுகிறது. மோட்ச லட்சணமும் கூறுப்படுகிறது.
வேதாந்த விக்ஞானம் – வேதாந்தத்திலிருந்து பெறும் அறிவிலிருந்து
ஸ்லோகம்-4
தே பிரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே:-
இவர்கள் இறந்த பிறகு பிரம்ம ஸ்வரூபத்தில் ஐக்கியமாகி விடுவார்கள், ஒன்றாகி விடுவார்கள்.
ஸ்லோகம்-5
இதில்
நிதித்யாஸனம் செய்வதற்கான நிபந்தனைகள் சொல்லப்படுகிறது.
விவிக்த
தேஷே
– தனிமையான, ஆள் அரவமில்லாத, தூய்மையான இடமாக இருக்க வேண்டும்.
· அமரும் இடம் ஸம்ஸ்காரத்தினால் தூய்மை செய்யப்பட்டதாகவும், குப்பைக்கூளங்கள் இல்லாமல் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
· அமரும் இடம் சமமாகவும், பயமற்றதாகவும் இருக்க வேண்டும்.
· நாம் அமரும் நிலை நமக்கு சௌகரியமாகவும் இருக்க வேண்டும்.
ஷுசிஹி – தூய்மையான
சூழ்நிலை, உடலைத் தூய்மையாக இருக்க வேண்டும்.
ஸம, சிர,
திரிவ சரீரம் – தலை, கழுத்து,
உடல்பாகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமர வேண்டும்,
அத்யாஸ்ரம் – சந்நியாசி
– எல்லா ஆசிரமங்களை விட மேலானதாக சந்நியாச ஆசிரமம் சொல்லப்படுகிறது. சந்நியாசம் என்பது யாருடனும் சம்பந்தமில்லாத
நிலையில் இருக்க வேண்டும்.
தியானத்தில்
அமரும்போது நான் யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நினைவோடு இருக்க வேண்டும்.
சகலேந்திரியானி
நிருத்3ய
– எல்லா இந்திரியங்களையும் கட்டுபடுத்திய நிலையில் இருக்க வேண்டும்.
பக்தியா – பக்தி
என்ற பாவனையுடன் குருவை மானசீகமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம்-6
நிதித்யாஸனத்தில்
என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
சாஸ்திரம்
மூலம் பெற்ற அறிவினால் பயனடைய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த தியான முறை. இதை எப்படி செய்ய வேண்டும்,
எந்த இடத்தில் அமர்ந்து செய்ய வேண்டும், அந்த நேரத்தில்
மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லம் இதில் விவரிக்கப்படுகிறது.
விரஜம் – ரஜோ குணத்திலிருந்து விடுதலையடைய வேண்டும். சத்துவ குணத்திற்கு மனதை கொண்டு செல்ல வேண்டும்.
பிரஹ்ம
லக்ஷணங்கள்:
1. விஸத்த4ம் – தூய்மையானது, அசுத்தங்கள் எல்லாம் மனதைத்தான் சார்ந்தது, சரீரத்தை சார்ந்த்து. நான் மனமும் அல்ல, உடலும் அல்ல என்ற உணர்வுடன் இருத்தல்
2. விசோகம் – நான் துயரமற்றவன். துயரம் என்பதை அனுபவிப்பது மனமும், சரீரம்தான் நானல்ல என்ற நிலை.
3. அசிந்தியம் – சிந்தனைக்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றேன். நான் ஞான ஸ்வரூபமாகவே இருக்கிறேன். எல்லாமும் என் சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகள்.
4. அவ்யக்தம் – வெளித்தோற்றத்திற்கு வராதது. நான் இந்திரியங்கள் மூலம் அனுபவிக்கப்படுபவன் அல்ல.
5. அனந்த ரூபம் – நான் எண்ணிக்கையிலடங்காத ரூபங்களாக இருக்கிறேன்.
6. சிவம் – மங்கலம், பாவங்களை போக்குபவர் சிவன். நான் மங்கல ஸ்வரூபமாக இருக்கிறேன்.
7. ப்ரசாந்தம் – நான் முழுமையான அமைதி ஸ்வரூபமானவன்
8. அம்ருதம் – நான் மரணமற்றவன்
9. பிரஹ்மயோனி – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கின்றேன். நான் ஆதியும், அந்தமும் அற்றவன்
10. ஏகம் – நான் ஒன்றாக இருக்கின்றேன்.
11. விபும் – நான் விதவிதமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றேன்.
12. சிதானந்தம் – ஞான ஸ்வரூபமாக இருக்கின்றேன்.
13. ஆனந்தம் – வரையறுக்கப்படாதவனாக, பூரணமாக இருக்கின்றேன்.
14. அரூபம் – உருவமற்றவனாக இருக்கின்றேன்.
15. அற்புதம் – ஆச்சரியமானவன் – தன்னையே ஆச்சரியமாக பார்த்து ஆனந்தமடைவது
ஸ்லோகம்-7
இதில் சகுண பிரம்மத்தை தியானிப்பது பற்றி விளக்கபடுகிறது.
ஸ்லோகம்-8
இதில் சகுண பிரம்மம் எல்லாமாக இருக்கின்றது என்பது விளக்கப்படுகிறது.
ஸஹ பிரம்மா – பிரம்மனாக இருக்கின்றார், சிவபெருமானாகவும், இந்திரனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கின்றார்.
ஸ்லோகம்-9
தேச, காலம் இவைகளுக்கு அப்பாற்பட்டது பிரம்மம். இதை ஞானத்தால் மட்டும்தான் அடைய முடியும்.
ஸ்லோகம்-10
ஆத்மஞானம், ஞானப்பலன் என்ற இரு கருத்துக்கள் விளக்கப்படுகிறது. தியானத்தில் அமர்ந்து இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சிந்திக்க வேண்டும்.
ஸ்லோகம்-11
இதிலிருந்து 14வது ஸ்லோகம் வரை சிரவணம் பற்றி கூறப்படுகிறது.
ஸ்லோகம்-12
எப்படி விசாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
சரீரம் – உடல், ஆஸ்தாய – மீது அபிமானம் கொண்டு
சர்வம் கரோதி – எல்லா விவகாரங்களையும் செய்கின்றோம்
ஸ்லோகம்-13
ஸ்வமாயயா – மாய சக்தியினால்
ஸ்லோகம்-14
மூன்று அவஸ்தைகளையும் ஆராய்வதால் அடையும் பலன் இதில் விவரிக்கப்படுகிறது. இதுவொரு மகாவாக்கிய மந்திரம். நாம் ஒரு பொருளை அனுபவிக்கிறோம் என்றால், நாம் அந்த பொருளிலிருந்து வேற்பட்டிருக்கிறோம் என்பது நியதி. இதேப்போல மூன்று நிலைகளிலும் நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்.
நான் என்ற ஒருவன் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருக்கின்றேன். (பிரத்யபிக்ஞா) இந்த மூன்று நிலை அனுபவங்களும் நமக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எனவே மாறாமல் ஸ்வரூபமாக நானிருக்கின்றேன். இந்த மூன்று நிலைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றது. எது மாறாமல் இருக்குமோ அது நித்யம்; எவையெல்லாம் வந்து போகின்றதோ அவைகள் அநித்யம், நிலையற்றவைகள், அழியக்கூடியது. இதிலிருந்து நான் என்றும் இருக்கின்றவன் ஸத் ஸ்வரூபமானவன், இந்த அனுபவங்களையெல்லாம் அனுபவிப்பதால் அறிவு ஸ்வரூபமானவன், அனுபவிக்கும் பொருட்கள் எல்லாம் ஜடம். இந்த மூன்று அவஸ்தைகளும் உனக்குள் இருக்கின்றது, அனுபவங்கள் எல்லாம் வந்து போவது என்று உபநிஷத் கூறுகின்றது.
விசாரம்:
இந்த உலகம் தோன்றுவதற்கு காரணம் ஈஸ்வரன். அவர் இரண்டு ஸ்வரூபமானவர். இரண்டு தத்துவங்களை உடையவர். அவைகள மாயா, பிரம்ம (சத்யம், நித்யம், ஞானம்) எந்த ஜீவன் மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்கின்றானோ அவனிடத்திலேதான் மூன்று அவஸ்தைகளும் ஒடுங்குகின்றது. ஜீவனின் உண்மையான ஸ்வரூபமும் இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற பிரம்ம ஸ்வரூபமும் ஒன்றேதான்.
ஸ்லோகம்-15
யே தஸ்மாத் – இதனிடமிருந்து – இந்த ஜீவனிடமிருந்து
ஸ்லோகம்-16 – மகாவாக்கியம்
யத் பரம்பிரம்ம – எது பூரண ஸ்வரூபமாக இருக்கின்றதோ
ஸ்லோகம்-17 – மகாவாக்கியம்
விழிப்பு, கனவு, சுஷூப்தி என்கின்ற இந்த மூன்று நிலைகளிலும் எந்த தத்துவம் பிரபஞ்சத்தை பிரகாசிக்கின்றதோ, அந்தந்த நிலைகளில் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் தத்துவமே பிரம்மம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நான் என்று அறிந்து கொள்வதால் எல்லாவித பந்தங்களிலிருந்து முழுமையாக விடுதலையடைவோம் (ப்ரமுச்யதே).
பிரம்மனிடமிருந்து வேறுபடாத இந்த ஜீவனிடமிருந்துதான் எல்லாவிதமான அவஸ்தைகளும் தோன்றுகிறது.
கனவுலக சிருஷ்டிகள் விழித்ததும் எப்படி என்னிடமே லயமடைகின்றதோ அதேமாதிரி விழிப்பு நிலை சிருஷ்டிகளும் என்னிடமே அழிவிற்குப்பின் லயமடைகிறது.
எது மூன்று அவஸ்தைகளுக்கும் ஆதாரமாகவும், வரையறுக்கப்படாததாகவும், பிளவுபடாததாகவும், மூன்று அவஸ்தகளும் லயமடைவதற்கு இடமாகவும் இருக்கின்றதோ அதுவே ஆத்மாவாகும். இந்த மூன்று அவஸ்தகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நிலை துரியம்.
ஸ்லோகம்-18 - நிதித்யாஸனம்
இந்த மந்திரத்தில் உள்ளதை பற்றி தியானித்து அறிவை அடைந்து அதில் நிலைப்பெற்றிட வேண்டும்.
ஸ்லோகம்-19
மயி
ஏவ – என்னிடத்திலிருந்துதான்
ஸகலம்
ஜாதம்
– அனைத்தும் தோன்றியது
மயி
ஸர்வம் ப்ரதிஷ்டிதம்
– என்னிடத்தில்தான் அனைத்தும் சார்ந்திருக்கின்றது
மயி
ஸர்வம் லயம் யாதி
– அனைத்தும் என்னிடத்திலேதான் ஒடுங்குகிறது
தத்3 ப்ரஹ்ம
அத்வயம் அஸ்மி அஹம் – இரண்டற்ற பூரணமாக நான் இருக்கின்றேன்.
ஸ்லோகம்-20
அணோஹ
அணியான்
– அணுவைக் காட்டிலும் அணுவாக இருக்கின்றேன். சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றேன்.
தத்3வத் மஹான்
அஹம்
– பெரியதைக்காட்டிலும் பெரியதாக இருக்கின்றேன்.
விசித்ரம்
விஸ்வம் அஹம்
– இந்த விதவிதமான உலகமாக இருக்கின்றேன்.
புராதனோஹம் – நான் என்றும்
இருப்பவன்
புருஷ: அஹம் – பூரணமாக
இருப்பவன் நான்
ஈஷஹ
அஹம்
– நான் எல்லாவற்றையும் ஆள்பவனாக இருக்கின்றேன்
ஹிரண்மய
அஹம்
– ஞான ஸ்வரூபமாக, சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றேன்
ஷிவரூபம்
அஸ்மி
– ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றேன்.
ஸ்லோகம்-21
அசிந்தயம்
சக்தி
– அளவுக்கதிகமான சக்தியுடையவன்
அபாணிபாதம்
அஸம்
– எனக்கு கர்மேந்திரியங்கள் கிடையாது
அசக்ஷுஹு – கண்கள்
இல்லாமல் இருந்தாலும்
பஷ்யாமி – நான் பார்க்கின்றேன்
அகர்ணஹ
ஸ்ருனோதி
– காது கிடையாது ஆனால் நன்றாக கேட்கின்றேன்.
இது
இந்திரியங்களும் என்னைச் சார்ந்திருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. நான் தொடர்ந்து
இருக்கின்றேன். இந்திரியங்கள்
வந்து செல்வதால் அவைகள் மித்யா.
விவிக்தரூபஹ – விதவிதமான
ரூபத்தில் இருந்து கொண்டு
விஜானாமி – நான் அனைத்தையும்
அறிகின்றேன்.
மமவேத்தா – என்னை
அறிகின்றவன்
ந
ச அஸ்தி
– யாரும் இல்லை
ஸதா
சித் அஹம்
– எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாகவே இருக்கின்றேன்.
ஸ்லோகம்-22
அனைகைஹி
வேதைஹி
– எல்லா வேதங்களின் மூலமாக
அஹம்
ஏவ வித்யஹ
– நான்தான் அறியப்படுபவனாக இருக்கிறேன்.
வேதந்தக்ருத்
அஹமேவ
– நானேதான் வேதாந்தத்தை உபதேசித்தவன்
வேதவித்
அஹம் ஏவ
– வேதத்தை அறிபவனும் நானே
ந
புண்ய பாபே மம நாஸ்தி
– புண்ணியமும் பாவமும் எனக்கு கிடையாது.
மம
நாஷ நாஸ்தி
– எனக்கு அழிவு என்பதும் கிடையாது.
ந
ஜென்ம நாஸ்தி
– பிறப்பே கிடையாது
ந
தேஹ,
புத்தி, இந்திரிய அஸ்தி – ஸ்தூல
உடல், இந்திரியங்கள், புத்தி இவைகளும் கிடையாது
ந
பூமி அஸ்தி - இந்த நிலமும் நானல்ல
ந
ஆப அஸ்தி
– இந்த நீரும் நானல்ல
ந
ச வன்னிஹி
– நெருப்பும் நானல்ல
ந
ச அனிலஹ
– வாயுவும் நானல்ல
ந
ச அம்பரம்
– ஆகாசமும் நானல்ல.
ஸ்லோகம்-23
ஏவம் – இவ்விதம்
(குரு உபதேசித்த விதம் , சிஷ்யன் புரிந்து கொண்டபடி)
ப்ரமாத்மாரூபம் – பரமாத்மாவினுடைய
தன்மையை இவ்விதம் புரிந்து கொண்டு, பரமாத்மாவையே அடைகின்றான்.
குஹாஷயம் – புத்தியில்
சாட்சியாக இருந்து கொண்டு
நிஷ்கலம் – பிளவுபடாத
அத்விதீயம் – இரண்டற்ற
சமஸ்த
சாக்ஷி
– அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்ற
ஸத்-அஸத் விஹீனம் – காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டதும்.
மாயைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் வேறுபட்டதுமான.
ப்ரயாதி
சுத்தம் ப்ரமாத்மரூபம்
– தூய்மையான பரமாத்ம ஸ்வரூபத்தை அடைகின்றான்.
ஸ்லோகம்-24
யஹ – எவனொருவன்
ஷதருத்ரீயம்
அதீயதே
– ஸ்ரீருத்ரத்தை ஒதுகின்றவன்
ஸஹ
அக்னி பூதஹ
– அவன் நெருப்பினால் தூய்மையாக்கபட்டவனாகின்றான்.
சுராபானாதி
பூதா பவதி
– மது அருந்தியதால் அடைந்த பாவத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.
ப்ரஹ்மஹத்யாத் – பிராமணனை
கொன்ற பாவத்திலிருந்தும் விடுதலையடைகின்றான்
க்ருதயாத்
அக்ருத்யாத பூதோ பவதி
– செய்யக்கூடாததை செய்து, செய்ய வேண்டியதை செய்யாமல்
வரும் பாவத்திலிருந்தும் விடுதலை.
தஸ்மாத்
அவிமுக்தாம் ஆஸ்ரிதஹ
– இவ்வாறு ஸ்ரீருத்ரத்தை ஓதியதால் சிவபெருமானை சார்ந்தவனாகின்றான்.
அத்யாஸ்ரம் – சந்நியாசி,
ஸர்வதா
ஜபேத்
– எப்பொழுதும் ஜபம் செய்ய வேண்டும், ஒருமுறையாவது
சொல்ல வேண்டும்.,
ஸ்லோகம்-25
அனேன – இவ்விதம்
தன்னை தூய்மைபடுத்தி கொண்ட காரணத்தால்
ஞானம்
ஆப்னோதி
– ஞானத்தை அடைகின்றான்
ஸம்சார
அர்ணவ நாஷனம்
– சம்சாரமெனும் கடலை கடந்துவிடுகின்றான்
தஸ்மாத் – ஆகவே
ஏவம் – இவ்விதம், இந்த உபநிஷத்தில் சொல்லியதை
ஏவம் – இவ்விதம், இந்த உபநிஷத்தில் சொல்லியதை
ஏனம் – இந்த ஆத்ம
தத்துவத்தை அறிந்து
கைவல்யம்
பலம் அஸ்னுத
– மோட்சம் என்ற பலனை அடைகின்றான்.
கைவல்யம் – அதுவாக
மட்டுமே இருக்கின்ற நிலை.