ஸ்ரீக்ருஷ்ண சைதன்ய சரிதாவளி
மனிதப்பிறவி
மட்டும்தான் அவனுக்கு தனது ஸத் ஸ்வரூபத்தை திரும்பவும் அடைய வழி வகுக்கிறது. மானிடப்பிறவி தவிர மற்றவையெல்லாம்
போக ஜன்மமே. மானிடப்பிறவியில்
மனிதன் தன் கர்மங்களிலிருந்து விடுபட்டு பிறப்பற்ற நிலையை எய்த முடியும். கர்ம வாஸனைகளே பிறப்புக்குக் காரணம்.
அதை ஒழித்து விட்டால் பகவத் தரிசனம் கிடைக்கிறது. பகவத் தரிசனத்துக்குரிய மூன்று தர்மங்களாவன:
1.
அநித்யமானவைகளை நித்யமானதாக கருதும் அறியாமையென்ற
இதயத்திற்குள் இருக்கும் முடிச்சுக்கள் அவிழ வேண்டும்.
2.
சந்தேகங்களே அறியாமைக்கு காரணம். ஐயங்களே அழிவைக் கொடுக்கும். மெய்பொருளை உணரும்போது எல்லா சந்தேகங்களும்
தானே அகன்று விடும். ஜீவன்களை பிறப்பு, இறப்பு என்ற துக்கத்திற்கு உள்ளாக்கும் கர்மபந்தம் இறைவனது சாக்ஷாத்காரம் அடைந்தவுடனே
தானே விலகி விடும். பிறகு
சம்சாரத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
3.
தியாகம்தான் ஜீவனின் பரம புருஷார்த்தம், தியாகம்தான்
ஸ்ருஷ்டியின் முதல் தர்மம். எல்லா பிராணிகளுக்கும் முக்கியமான, முதன்மையான உத்தேசம்
தியாக குணம்தான். இந்த உலக விஷயங்களை எப்போது முடியுமோ அப்போதே
தியாகம் செய்துவிட வேண்டும்.
பர்த்ருஹரி
என்ற மஹானின் ஸ்லோகம்:
யாவத் ஸ்வஸ்தமிதம் கலேவரக்ருஹம்
யாவச்ச தூரே ஜரா
யாவச்சேந்த்ரிய சக்தி ரப்திஹதா
யாவத்க்ஷயோ நாயுஷ: |
ஆத்மஶ்ரேயஸி தாவதேவ
விதுஷா கார்ய:
ப்ரயத்நாத் மஹாத்
ப்ரோத்தீப்தே பவனே ச கூப கன நம்
ப்ரத்யுத்யம கீத்ருச: ||
இந்த
உடல் அழகுடனும்,
ஆரோக்கியத்துடனும் இருக்கும்வரை வார்திக்யம் வெகு தூரத்தில் கை கட்டிக்
கொண்டு உனது வரவை எதிர்நோக்கி இருக்கும்.
ஆகவே உனது புலன்கள் சக்தியுள்ளவைகளாகவும் உடல் நன்றாக இருக்கும்போதே
ஆத்மாவிற்கு நலம் தேடிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இல்லாவிடில் தீ பிடித்த பின்பு கிணறு
வெட்டும் முயற்சி போலாகும். வீட்டில் தீ பிடித்த பிறகு கிணறு வெட்டும் முயற்சி எவ்வளவு முட்டாள்தனம்,
அகம்பாவமே
பந்தத்திற்கு காரணம்,
மனதில்தான் மமதை ஏற்படுகிறது. மனதிலிருந்து மமத்வத்தை
நீக்கிவிடுபவன் நித்யமுக்தனாகிறான். அவனுக்கு தன்னுடையது பிறருடையது
என்ற பேதமில்லை. அனேக
உருவங்களில் எங்கும் ஒரே ஆத்மாவையே காண்கின்றான். உலகனைத்தையும் படைத்து அனைவரது பாதுகாப்பிற்கும்
முன்னதாகவே ஏற்பாடு செய்துவிட்ட இறைவனை மறந்து நானே கர்த்தாவாக எண்ணிக் கொள்வது அறியாமையின்
விளைவு. மனிதன் நிமித்த மாத்திரமே.
ப்ரியான் ந ஸம்பவேத் துக்கம் அப்ரியாததிகம் பயம் |
தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே நமஸ்தேஷாம் மஹாத்மனாம் ||
விரும்பிய
பொருளை அடையும்போது இன்பமும், விரும்பத்தகாத பொருட்களை அடைவதினால் துன்பமும்
அடையாதவர்களும், சுக-துக்கங்களில் ஸமபுத்தி உடையவர்களும்,
புலன்களை வென்றவர்களுமான மகான்கள் தன்யர்கள். அவர்களது
சரணங்களில் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
கலியுகத்தில்
பகவானை அடைவதற்கு சுலபமான,
உயர்ந்த உபாயம் பகவான் நாம ஸ்மரணத்தாலேயே அடையலாம். எல்லா சாதனங்களையும் விட்டு விட்டு
ஹரி நாமத்தையே ஆதாரமாக கொள்ள வேண்டும்.
மிகவும் ரகசியமானதும், ஸாரமானதும் ஆன சாதனம், மூல மந்திரமான
ஹரே
ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே
க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||
இதை
இடைவிடாது ஜபம் செய்ய வேண்டும்.
தர்மம்
பஜஸ்வ ஸததம் த்யஜ லோகதர்மான்
ஸேவஸ்வ ஸாதுபுருஷான் ஜஹி காமத்ருஷ்ணாம்
|
அன்யஸ்ய
தோஷகுண சிந்தன மாஶு முக்த்வா
ஸேவாகதாரஸமஹோ நிதராம் பிபத்வம்
||
தர்மத்தை
செய். விஷய வாசனை நிறைந்த லோக தர்மத்தை
விட்டு விடு. நிரந்தரமாக
ஸாதுக்களின் ஸங்கத்தில் இரு. இதயத்திலிருந்து போக இச்சைகளை அறவே ஒழித்து விடு.. மற்றவர்களின் குறை-நிறைகளைப் பற்றிச்
சிந்திப்பதை ஒரேயடியாக விட்டுவிடு.
ஹரிசேவை செய்து கொண்டு இடைவிடாது ஹரிகதையாகிய அம்ருதத்தை அருந்திக்கொண்டிரு.
இதுதான் மனிதர்களின் கடமை.
வீராஷ்டகத்தில்
உள்ள ஸ்லோகங்கள்:
ராஜத்கிரீடமணி தீதிதி தீபிதாஶமுத்யத்
ப்ருஹச்பதிகவி ப்ரதிமே வஹந்தம் |
த்வே குண்டலேSங்க ரஹிதேந்து
சமான வக்த்ரம் ராமம் ஜகத்ரயகுரும்
ஸததம் பஜாமி ||
ஒளிமயமான
மகுடத்தில் பிரகாசிக்கும் மணிகளின் காந்தியால் திசைகளையெல்லாம் பிரகாசிக்க செய்பவனும், ப்ரஹஸ்பதி,
சுக்ராச்சாரியர் இவர்களைப் போன்ற இரு குண்டலங்களை செவிகளில் அணிந்திருப்பவனும்,
களங்கமற்ற சந்திரனைப் போன்ற குளிர்ச்சியானவனே! சுகமயமான திருமுக மண்டலத்தையுடையவனும், மூன்றுலோக குருவுமான
ஸ்ரீராமசந்திரனை பக்தியுடன் வழிபடுகின்றேன்.
உத்யத்விபாகர
மரீசி விரோசிதாப்ஜநேத்ரம் ஸுபிம்ப
தஶனச்சதசாரு நாஸம் |
ஸுப்ராம்ஶுரஶ்மிபரி நிர்ஜித சாரு ஹாஸம் ராமம் ஜகத்ரயகுரும் ஸததம்
பஜாமி
||
சூரியகிரணம்பட்டு
அன்றலர்ந்த செந்தாமரை போன்ற ஆனந்த வாரிதியான அழகிய கண்களையுடையவனும், கொவ்வைப்பழம்
போன்ற மனோகரமான இனிய செவ்விதழையுடையவனும், அழகிய நாசியையுடையவனும்,
மனதைக் கொள்ளையிடும் புன்னகையோடு கூடிய முகத்தால் சந்திர கிரணங்களை வெட்கமுறச்
செய்பவனும், மூன்றுலோக குருவுமான ஸ்ரீராகவனின் திவ்ய ஸ்ரீசரணடிகளை
நமஸ்கரித்து வணங்குகின்றேன்.
க்வாஹம்
தரித்ர:
பாபியான் க்வ க்ருஷ்ண: ஸ்ரீநிகேதன: |
ப்ருமம்
பந்துரிதி ஸ்மாஹம் பாஹுப்யாம் ப்ரிரம்பித: || - ஸ்ரீமத் பாகவதம்
இவை
சுதாமனின் வார்த்தை.
சுதாமா பகவானின் தயாள குணத்தையும், ஒப்பற்ற காருண்யத்தையும்
எண்ணிக் கூறுகிறார்.
சுலோகத்தின்
பொருள்: பகவானின் க்ருபையை என்னவென்பது! ஸதா பாப கர்மங்களிலேயே
உழலும் தரித்திர பிராம்மணனாகிய நான் எங்கே ! ஸம்பூர்ண ஐஸ்வர்யத்திற்கு
அதிபதியும், புண்ணியங்களுக்கெல்லாம் ஆஶ்ரயமான ஸ்ரீகிருஷ்ணன் எங்கே
! இருந்தாலும் என்னை தனது இருகரம் நீட்டி ஆலிங்கனம் செய்து கொண்டானே.
இதில் எனது புருஷார்த்தம் ஒன்றுமில்லை. இதற்கு காரணம் பரம கிருபாளுவான ஸ்ரீக்ருஷ்ணனின்
அஹைதுமான க்ருபையேயாகும்.
பகவான்
நாமம் எல்லாவிதமான சுகங்களையும் அளிக்கவல்லது. இதில் அதிகாரி பேதமில்லை, எல்லா வர்ணத்தவரும்,
எல்லா ஜாதியினரும், எக்குலத்தவரும், ஆண், பெண் அனைவரும் பகவான் நாமத்தின் உதவியோடு பகவானின்
பாத கமலங்களை அடையலாம். தேசம், காலம், ஸ்தானம்,
பாத்ரம், விதி முதலிய எந்த நியமும் கிடையாது. எல்லா தேசங்களிலும், எல்லா சமயத்திலும், எல்லா இடங்களிலும், சுத்தம்-அசுத்தம் எந்த நிலையிலும், பகவன் நாம ஜபம் செய்யலாம்.
பகவன் நாம ஜபம் செய்பவன் எப்படிபட்டவனாக இருந்தாலும் பகவன்நாமத்தைப்
பாதிக்காது. நாமஜபம் அனைவருக்கும் எந்த நிலையிலும் நன்மையே அளிக்கவல்லது.
ஆயினும், பகவன்
நாமத்திற்கு பத்து பெரிய தீங்குகள் நேரிடலாம். அவையாவன:-
- சத்புருஷர்களை நிந்திப்பது
- பகவன் நாமத்தில் பேத பாவம்
- குருவிற்கு அபசாரம்
- சாஸ்திர நிந்தை
- பகவான் நாமத்தில் அர்த்தவாதம்
- நாம பலத்தின் தைரியத்தோடு பாவகாரியங்களில்
ஈடுபடுதல்
- தர்மம், விரதம், ஜபம் இவைகளை பகவான் நாமத்தோடு ஒப்பிடுதல்
- பகவான் நாமத்தை கேட்க விரும்பாதவனுக்கு உபதேசம்
செய்தல்
- நாம மஹாத்மியம் கேட்டும் நாமத்திடம் பிரேமை
இல்லாமை
- அகங்கார, மமகாரங்கள் இருப்பதும்,
விஷயபோகங்களில் மூழ்கியிருப்பதும்
போன்றவைகளாகும்.
பூர்வ
ஜன்மங்களின் சுபகர்மங்களாலும், மகான்களின் சத்சங்கத்தாலும், பகவானுடைய கிருபையாலும் பகவான் நாமத்தில் நிஷ்டை கைகூடியவர்கள் இந்த பத்து
தீங்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும், பகவத் பஜனத்தில்
மற்றவர்களை நிந்திப்பதும், பக்தர்களிடம் த்வேஷம் கொள்வதும் மகாபாவம்,
பெருந்தவறு.
பக்தர்கள்
தன்னை புல்லினும் கீழாகவும், மரத்தைவிட அதிக சகிப்புத் தன்மையோடும் இருக்க
வேண்டும். ஒருபோதும்
தனது மதிப்பை விரும்பாது, ஆனால் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மதிப்பும்,
மரியாதையும் அளிக்க வேண்டும். இவ்வாறு இருந்து
கொண்டு நிரந்தரமும் பகவான் நாமங்களையே சிந்தனம் செய்து கொண்டும், உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும்
மேலாக மிக அதிகமாக பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். யாரிடமும்
கடுஞ்சொல் கூறக்கூடாது, கல்லால் அடிப்பவனுக்கும் நன்மை செய்ய
வேண்டும். ஜனக்கூட்டத்திலிருந்து
விலகி தனியாக யாரிடமும் எதையும் யாசிக்காமல் அமானியாகவும், பொறுமையுடனும்
இருந்து கொண்டு நிரந்தரம் பகவத் சிந்தனையோடு இருக்க வேண்டும்,.
ஹரேர்
நாம் ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் |
க்லௌ
நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிரன்யதா ||
பக்தியில்லாத
ஜபம், தவம், பூஜை, பாடம், யக்ஞம், தானம், அனுஷ்டானம்,
முதலிய எந்த நற்காரியங்கள் செய்தாலும் அனைத்தும் வியர்த்தம்தான்(
வீண்தான் )
ந
ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ |
ந
ஸ்வாத்யாயஸ்தபஸ் த்யாகோ யதா பக்திர்ம்மோர்ஜிதா ||
ஹரி
ஹரயே நம:
க்ருஷ்ண யாதவாய நம |
கோபால
கோவிந்த ராம ஸ்ரீமதுஸுதன ||
பூ.ப:
ஸ்ருதியின் முக்கியமான கருத்து நிர்க்குண நிராகாரமான
அத்விதீய ப்ரஹ்மத்தை சித்தாந்தம் செய்வதேயாகும். ஶாரீரக பாஷ்யத்தில் அந்த
நாமரூபமற்ற நிர்குண ப்ரஹ்மமே ப்ரதி பாதனம் செய்யப்படுகிறது.
ப்ரபு:
நிர்குண நிராகார ப்ரஹ்ம லட்சணத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால்
சகுண சாகாரமான ரூபத்தை ஒரேயடியாக நிராகரித்து உபேக்ஷை செய்யும் பாஷ்யகாரர்களின் கொள்கையை
என்னால் ஏற்க முடியாது. இது ஒருதலைபட்சமான சித்தாந்தமாகி விட்டது. பகவானது சகுணம்,
நிர்குணம், சாகாரம், நிராகாரம்
இரண்டு ரூபங்களுமே முக்கியமும் மதிப்பிற்புக்கும்
உரியதுமாகும்.
ஏகமேவாத்விதீயம் ( ப்ரஹ்மம்
ஒன்றேவாக இருக்கிறது)
தேஹ நானாஸ்தி கிஞ்சன ( பலவாக
தோன்றுவதெல்லாம் ஒன்றுமில்லை )
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் ( காணப்படுவதெல்லாம்
ப்ரஹ்மம் என்று கூறும் ஸ்ருதியே பின்வரூமாறு கூறுகிறது )
அபாணிபாதோ ஜீவனோ க்ருஹீதா
பஶ்யத்யசக்ஷு ஸ ஶ்ருணோத்ய காண: |
ஸ வேத்தி வேத்யம் ந ச தஸ்ய
வேத்தாதமாஹுரக்ரியம் புருஷம் மஹாந்தம் ||
அதற்கு ப்ராக்ருதமான கை, கால் இல்லை.
ஆனால் அது நடக்கிறது, கொடுக்கிறது. கண் இல்லாவிடினும் பார்க்கிறது. காது இல்லாவிடினும் சப்தங்களை கேட்கிறது. அது அறிய வேண்டிய அனைத்தையும் தெளிவாக
அறிந்து கொள்கிறது. ஆனால் அதை யாரும் அறிவதில்லை. அதுதான் ஆதி மஹாபுருஷன் என்று கூறப்படுகிறது.
பஹுஸ்யாம், ‘ஸ ஜக்ஷத’
முதலிய ஸ்ருதிகள் ப்ரத்யக்ஷமாக பகவானின் ஸகுண ஸாகார ரூபத்தை வர்ணிக்கின்றன. மேலும் அவரது திவ்ய லீலைகளையும் கர்மங்களையும்
கூட வர்ணிக்கின்றன. அவரை
கௌணம் என்று கூறிவிட்டு விடுவது வெறும் புத்திவாதத்திற்கே எடுத்துக் காட்டாகும். பாஷ்யகாரரான சங்கரர் புத்தியைக் கூர்மைப்படுத்தும்
அபிப்ராயத்துடனே இத்தகைய வியாக்யானம் செய்திருப்பார் என்று நான் எண்ணுகின்றேன். சிந்தனையை பிரதானமாக கருதுபவர்களுக்கு
இதைவிட அதிகமாக விசாரம் செய்துவிட முடியாது. ஆனால் ஹ்ருதய பிரதானமான சரளமான பாவுக
பக்தர்களுக்கு இந்த இழுபறி வியாக்யானத்தால் சந்தோஷம் ஏற்படாது.
ஆறு சாஸ்திரங்களையும் பதிணென்
புராணங்களையும் ஐந்தாவது வேதமான மகாபாரதத்தையும் இயற்றிய பின்னும் கூட வியாச பகவான்
சாந்தி அடையவில்லை. பூர்ண சாந்தியை அடைவதற்காக ஸமஸ்த
வேத சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீமத் பாகவதத்தை வெளியிட்டு அமைதியடைந்தார். அதே வியாச பகவான் ஸ்ரீமத் பாகவதத்தில்
அஹோபாக்ய மஹோபாக்யம் நந்தகோப
வ்ரஜௌகஸாம் |
யன்மித்ரம் பரமானந்தம் பூர்ணம்
ப்ரஹ்ம ஸனாதனம் ||
இவ்விதம் பூர்ண
பிரஹ்மமான பரமானந்தமய ஸனாதன பரம்பொருளை மித்ரனாகப் பெற்ற வ்ரஜவாஸிகளின் பாக்யத்திற்கு
ஈடு இணையேது!
என்று கூறும் வியாஸர் பிரஹ்மத்தின் நிர்குண நிராகார ரூபமே யதார்த்தமானது,
மற்றதெல்லாம் வெறும் கற்பணை, பொய் என்று சொல்வாரா?
அஹம் பிரஹ்மாஸ்மி, நானே பிரஹ்மம்,
என்று அபேத பாவத்தோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த அவரது திருவாக்கினின்று
தனிமையில் கங்கா நதிக்கரையில், கண்களில் நீர்பெருக தானாகவெ வெளிப்பட்ட
வேகம் நிறைந்த மொழிகளையும் கவனிக்க வேண்டும். எவ்வளவு கருணாமயமாக
பகவானிடம் பிரார்த்தனை செய்கிறார் என்பதைப் பாருங்கள்:
ஸத்யபி பேதா பகமேநாத தவாஹம் ந
மாமகீனஸ்த்வம் |
ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: ||
ஹே நாத! உனக்கும்
ஜகத்திற்கும் பேதமில்லாதிருக்கலாம்! ஆயினும் ஸ்வாமி! நான் உன்னுடையவன், நீ என்னுடையவனன்று. கடலுக்கும் அலைகளுக்கும் பேதமில்லாத போதிலும் உலகம் சமுத்திரத்தின் அலைகள்
என்று அழைக்கிறதே தவிர, அலைகளின் சமுத்திரம் என்று சொல்வதில்லை. யாருடைய பார்வையில் உலகம் மித்யையோ,
நான், ஜன்மம், மரணம், போன்ற
அனைத்தும் வெறும் கற்பணையாக இருக்கின்றதோ அவரேதான் இப்படி சொல்லியிருக்கிறார். இவையனைத்தும் அவரது அறிவு தந்த சொற்கள்,
அவரது ஸரஸமான நிஷ்கபடமான சுத்தமான ஹ்ருதயத்தில் இருந்து வெடித்துக் கொண்டு
வெளிவரும் வார்த்தைகளைப் பார்த்தால் உண்மை விளங்குகிறது. எனவே தான் வியாஸ பகவான்:
”ஆத்மாராமாச்ச முனயோ நிர்க்ரந்தா
அப்யுருக்ரமே |
குர்வந்த்யஹைதுகீம் பக்திம் இத்தம்
பூதகுணோ ஹரி “
என்று கூறியிருக்கின்றார்.
ஸம்ஸாரகூபே பதிதோ
ஹ்யகாதே மோஹாந்த பூர்ணே விஷயாதி ஸக்த |
கராவலம்பம் மமதேஹி
நாத கோவிந்த தாமோதர மாதவேதி ||
ஹே கோவிந்தா! மாதவா!
தாமோதரா! இந்த சம்சாரமென்னும் ஆழ்கடலில் மூழ்கிக்
கொண்டிருக்கும் விஷயா ஸக்தனான, அதமனான என்னை கைக்கொடுத்துக் காப்பாற்றுங்கள். தங்களை சரணடைகின்றேன்.
சுஷ்கம் பர்யுஷிதம்
வாபி நீதம் வா தூரதேஸ2த:
ப்ராப்தி மாத்ரேண போக்தவ்யம்
நாத்ர காலவிசாரனா |
நதேஸ2 நியமஸ்தத்ர
நகால நியமஸ்ததா
ப்ராப்த மன்னம் த்ருதம் ஶிஷ்டைர்
போக்தவ்யம் ஹரிரப்ரவீத் ||
மஹாப்ரஸாதம் காய்ந்திருந்தாலும், கெட்டிருந்தாலும்
வெகுதூரத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தாலும் கிடைத்தவுடனேயே உட்கொண்டு விடவேண்டும்.
கால விசாரமும் வேண்டாம், மஹாபிரசாதத்திற்கு தேசகால
நியமம் கிடையாது. எங்கு எந்த சமயத்தில் பிரசாதம் கிடைத்தாலும்
உடனேயே உட்கொண்டு விட வேண்டும். இவ்வாறு சாக்ஷாத் பகவான் தன்
திருமுகத்தாலேயே கூறி இருக்கின்றார்.
இந்தக் கலிகாலத்தில்
ஹரிநாம ஸ்மரணத்தைக் காட்டிலும் எளிய இனிய சாதனம் இருக்க முடியாது. தற்காலத்திற்கு பகவான் நாம
சங்கீர்த்தனமே ஸர்வோத்தமமான சாதனமாகும்.
பூ.ப: பகவான் நாமத்திற்கு நியமம் இருக்கின்றதா?
ப்ரபு:
பகவன்
நாமத்திற்கு எந்த நியமுமில்லை. எப்பொழுது நேரம் கிடைத்தாலும் எங்கிருந்தாலும்
என்ன நிலையிருந்தாலும், பகவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க
வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கைப்படி பகவன் நாம ஜபம் செய். உனக்கு மிகவும் பிரியமான பகவானின்
ரூபத்தை தியானம் செய். பகவன் நாம கீர்த்தனம் செய்.
பகவானின் கல்யாண குணங்களைப் பாடு. பகவானின் லீலைகளைப் பரஸ்பரம் சொல்,
கேள். சாராம்சம் என்னவென்றால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் சரீரம்,
பிராணன், மனம், புலன்கள்
இவைகளை பகவத் விஷயமாகவே வைத்திருக்க முயற்சி செய்..
சித்தத்தை வெளி விஷயங்களில் செல்லவிடாதே. பகவானின் திருவுருவம் நம் கண்ணிலிருந்து
மறையும்போது மேல் நோக்கிய பார்வையில் அந்த மனமோஹனமான மூர்த்தியை தியானம் செய்ய வேண்டும்.
வைராக்ய வித்யா நிசபக்தியோக ஶிக்ஷார்த்தமேக: புருஷ:
புராண: |
ஸ்ரீக்ருஷ்ண சைதன்ய ஶரீரதாரி க்ருபம்புதிர்யஸ்நமஹம் ப்ரபத்யே ||
காலான்நஷ்டம் பக்தியோகம் நிஜம் ய: ப்ராதுஷ்கர்தும்
க்ருஷ்ண சைதன்ய நாமா |
ஆவிர்பூதஸ்தஸ்ய பாதாரவிந்தே காடம் காடம் லீயதாம் நித்தப்ருங்க ||
எந்த
தியாக ஸாகரனான புராண புருஷன் தனது ஞானம், வைராக்கியம், பக்தியோகம் இவற்றை சிக்ஷிப்பதற்காக ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர் என்னும் பெயரில்
சரீரம் தரித்து ப்ரகடனமானானோ அந்த ப்ருஷனை சரணடைவோம். காலத்தின்
கொடுமையால் நஷ்டமடைந்த பக்தியோகத்தை மீண்டும் பிரசாரம் செய்யும் பொருட்டு அவனியில்
அவதரித்த ஸ்ரீக்ருஷ்ண சைதன்யரின் சரண கமலங்களில் மனமென்னும் வண்டு மதிமயங்கி கிடக்கட்டும்.
மஹாப்ரபு – ராமானந்த ராய் உரையாடல்
பிரபு: இந்த உலகில் மனிதனின் முக்கிய
கடமை என்னவென்று சொல்லுங்கள். ஸாத்திய--ஸாதன தத்துவத்தை எடுத்து சொல்லுங்கள்.
ராய் : ஸ்வே
ஸ்வே கர்மண்யபிரத: ஸம்சித்தி லபதே நர: |
அவரவர் தம் தம் வர்ணாசிரமத்திற்கு ஏற்றபடி தர்மங்களை
செய்து வந்தாலே மனிதன் பரம ஸித்தியை அடையமுடியும்.
எனவே யார் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்களோ அந்த வர்ணத்திற்குரிய
கர்மங்களின் மூலமே விஷ்ணு பகவானை ஆராதிக்கமுடியும். பகவானை மகிழ்விப்பதற்கு வர்ணாசிரம
தர்மத்தை காட்டிலும் எளிய இனிய உபாயம் வேறு இல்லை.
பிரபு : விஷய போகங்களில்
மூழ்கியுள்ளவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம் என்னும் மூன்று வித புருஷார்த்தங்களோடு கூடிய தர்மம் விதிக்கப்படுகிறது. தன்னிச்சையாக விஷய போகங்களில் ஈடுபட்டு
விட்டால் பதிதனாகி விடுவான் என்பதற்காகவே தர்மம் என்ற அணை தேவைப்படுகிறது. தர்மத்தின்படி ஒருவன் நடந்தால் அவன் சுவர்க்க லோகம் செல்வான். ஆனால் அதுவும் நிலையற்றது, புண்ணியம் தீர்ந்து போனால்
மீண்டும் கீழே விழுந்து விடுவான். எனவே வீழ்ச்சியில்லாத வேறு உபாயம் சொல்லுங்கள்.
ராய்: இதற்கு கர்மங்களில் அபிமானம் வைக்காமல் இருப்பதே உபாயமாகும்.
நிஷ்காமமாக கர்மங்களைச் செய்ய வேண்டும், சகாம கர்மங்கள்தான் பலனை அளிக்கக்
கூடியவை. ஆனால் பகவானின்
ப்ரீதிக்காக கர்மங்களைச் செய்தால் அவை எந்தவிதமான பலனையும் ஏற்படுத்தாது.
ப்ரபு: நிஷ்காம பாவத்தோடு கர்மங்களைச் செய்தால் அவைகள் மூவுலக
சுகங்களையும் விட உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. அவற்றின்
மூலம் ஆத்மசுத்திதான் ஏற்படும். அவை முக்திக்கு பிரதான காரணமாக
இல்லாமல் மறைமுகமான காரணமாகவே உள்ளன.
அவற்றின் பலன் ஞானமாக இல்லாமல் ஆத்ம சுத்தியாகவே உள்ளன.
ராய்: யோகின: குர்வந்தி
ஸங்கம் த்யக்த்வாத்ம ஶுத்தயே ! எல்லாவிதமான கர்மங்களையும்
தியாகம் செய்துவிட்டு நிரந்தரமாக பகவத் பஜனமே செய்து கொண்டிருக்க வேண்டும். உண்மையில் கர்மங்கள் எப்படிச் செய்தாலும்
அவற்றினால் மூன்றுவித தாபங்களினின்றும் விடுதலை கிடையாது. எனவே தாபங்களால் தவிக்கும் பிராணிகளுக்கு
ஸர்வதர்மங்களையும் பரித்யாகம் செய்துவிட்டு, பகவானின் பாதபத்மங்களில்
சரணாகதி செய்வதே, மனிதனின் முக்கிய கடமையாக நான் கருதுகிறேன்.
பகவானும் கீதையில் எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் உன்னை எல்லா பந்தங்களிலிருந்தும்
விடுவிக்கிறேன் என்று உபதேசிக்கிறார்.
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ: |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா
ஶுச:
||
ப்ரபு: சரணாகதி தர்மம் ஸர்வ ஸ்ரேஷ்டமானதே. ஆனால் இது சம்சார தாபங்களால் தவிக்கும்
சாதகர்களுக்கே உரியது. தாபங்களையே இல்லாமல் செய்ய விரும்புவர்களுக்கும், இதைக்காட்டிலும்
உயர்ந்த நிலையடைந்த, சம்சார தாபங்கள் என்னவென்றே அறியாதவர்களுமாகிய
சாதகர்களுக்கும் வேறு உபாயம் சொல்லுங்கள்.
ராய்: சம பாவத்தோடு இருந்து கொண்டு ஸத்-அஸத் இவற்றின் விசாரணையோடு நிரந்தர பகவத் பக்தி செய்வதே மனிதனின் முக்கிய கடமையாகக்
கருதுகிறேன்.
ப்ரபு: உண்மையான ஆனந்தத்தை விரும்புபவனுக்கு
இருவிதப் பொருளைப்பற்றி எப்படி எண்ண முடியும்? இருமை எண்ணங்கள்தானே
பயத்திற்கு காரணம். ஸத்-அஸத்தைப் பற்றிய
விசாரம் உத்தமமானதே. ஆனால் அதில் ஸரசம் இல்லை. சரஸமான வேறு உபாயம் சொல்லுங்கள்.
ராய்: பகவானிடம் விசுத்தமான பக்தியே ஸர்வ
ஸ்ரேஷ்டமானது. மனிதனின் முக்கிய கடமை அதுவே. இதையே பிரம்மதேவர் ஸ்ரீமத் பாகவதத்தில்
பகவானை துதித்துப் பின்வருமாறு கூறுகிறார்.
ஞானே
ப்ரயாஸமுதபாஸ்ய நமந்த ஏவ
ஜீவந்தி ஸன்முகரிதாம் பவதீயவார்த்தாம்
|
ஸ்தானே
ஸ்திதா:
ச்ருதிகதாம் தனுவாங்கமனோபி:
யே ப்ராயஸோருஜித ஜிதோSப்யஸி தைஸ்த்ரிலோக்யாம் ||
ஹே! அஜிதனே
எந்த மனிதன் ஞானத்திற்காக சிறிதும் பிரயத்தனம் செய்யாமல் சாது மகான்களில் சங்கங்களில்
மட்டுமே இருந்துகொண்டு அவர்களது திருவாக்கால் உனது கல்யாண குணங்களைக் கேட்டுக் கொண்டும்,
மனம், சொல், செயல்,
அனைத்தாலும் உன்னை நமஸ்கரித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்களோ அவர்களே
மூன்று உலகிலும் உன்னை அடைய கூடியவர்கள்
ப்ரபு: மனிதனின் பரம் புருஷார்த்தமும் ஸர்வ
ஸ்ரேஷ்டமான தர்மமும் பகவான் மதுசூதனனிடம் அஹைதுகமான பக்தி செய்வதேயாகும். எனவே இதை நான் ஒத்துக் கொள்கிறேன். பக்தி எப்படி செய்வது என்பதையும்
சொல்லுங்கள்.
ராய்: பிரேமையோடு பக்தி செய்வதாலேயே இஷ்ட
சித்தி ஏற்படும் என்று நான் கருதுகிறேன்.
பகவான் ப்ரேமமயமானவன், ப்ரேமையே அவனது ஸ்வரூபம். அவன் ரஸராஜன். எனவே ரஸ சமுத்திரத்தில் மூழ்கித்
திளைக்க வேண்டும். ஏனெனில்,
க்ருஷ்ண
பக்தி ரஸ பாவிதா:
மதி: க்ரீயதாம் யதி குதோSபிலப்யதே |
தத்ர
லௌல்யமபி மூல்யகேவலம் ஜன்மகோடி ஸுக்ருதைர் ந லப்4யதே
||
மனிதன் க்ருஷ்ண பக்தி ரஸத்தில்
ஊறிய மனதை எப்படியாவது பெற்றேயாக வேண்டும். அதை அடைய விலையேது அதனிடம் பேராசையும், லோபமும், ஹ்ருதயத்தில் எப்பொழுதும் அதே இச்சையும் இருக்க
வேண்டும். அதை மனிதன்
கோடி ஜன்மங்களின் ஸுஹ்ருதத்தினாலும் அடைந்து விட முடியாது.
ப்ரபு: பகவானிடம் எந்தவிதமான சம்பந்தத்தோடு
அந்த ரஸத்தை அனுபவிக்கலாம் என்பதையும் சொல்லுங்கள்.
ராய்: பகவானிடம் தாஸ்ய பாவம் சிறந்த சம்பந்தமாக
நான் கருதுகிறேன். ஏனெனில்
தாஸ்ய பாவமின்றி பிரேமை ஏற்படாது. சாந்தம், ஸக்யம், வாத்ஸல்யம்,
மாதுர்யம் இந்த ரஸங்கள அனைத்திலும் தாஸ்யபாவம் ஒளிந்து கொண்டிருக்கின்றது.
சமயம் வரும்போது அது வெளிப்படுகின்றது. நந்தருக்கு பகவானிடம் வாத்ஸல்ய பாவம். அவர் கூறுகிறார், “மனஸோ வ்ருத்தயோ ந: ஸ்யு: க்ருஷ்ண
பாதாம் புஜாஶ்ரயா; (ஹே! க்ருஷ்ணா எங்கள்
மனது எப்போதும் ஸ்ரீக்ருஷ்ண பாதங்களிலேயே இருக்கட்டும்) புத்திரனைப்போல்
நட்புள்ள தந்தையின் தாஸ்ய பாவம் துக்க காலத்தில் தானே வெளிப்படுகிறது. பலராமனது தாஸ்ய பாவம் “ப்ராயோ மாயஸ்துமே பர்துர் நான்யா மேSபி விமோ ஹினீ
“ என்று கூறும்போது வெளிப்படுகிறது. ஸ்ரீராதாதேவிக்கு பகவானிடம் காந்தாபாவம்.
அவள் ஸ்வச்சந்த கதியுடையவள். ஆனால் ராஸ லீலையின் போது பகவான் திடீரென்று
அந்தர்தானமாகி விடவே அவளது தாஸ்ய பாவம் கிளர்ந்தெழுகிறது. அவள் அழுது கொண்டே, “தாஸ்யாஸ்தே க்ருபணாயா மே ஸகே தர்ஶய ஸந்நிதம்” என்று
கூறுகிறாள். எனவே தாஸ்ய பாவமே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.
ப்ரபு: ஆனால் தாஸ்ய பாவத்திலும் அவசியம் சிறிது
ஸங்கோஜம் இருக்கிறது. சேவகனுக்கு எப்போதும் தன் ஸ்வாமியின் ஐஸ்வர்யம், பெருமை,
கௌரவம் இவற்றில் தியானம் இருக்கிறது. எனவே நிர்பயமாக ஆனந்த ரஸத்தை அனுபவிப்பதில்
சிறிது தடை ஏற்படுகிறது. எனவே சங்கோஜமே சிறிதுமில்லாத சம்பந்தமாக
சொல்லுங்கள்.
ராய்: நான் ஸக்ய சம்பந்தத்தை மிகச் சிரேஷ்டமாக
கருதுகிறேன். தோழனது
பிரேமையால் ஐஸ்வர்யம், தனம், மானம்,
கௌரவம் எதைப்பற்றிய லக்ஷியமும் இல்லை. இடைச்சிறுவர்கள் பகவானிடம் கோபித்தனர்,
மாடு கன்றுகளை ஓட்டிவரச் செய்தனர். அவர்களுக்கு விஸ்வநாதனான பகவான் வாசுதேவனிடம்
எந்த சங்கோஜமும் இல்லை. எனவே யதார்த்தமான ரஸம் ஸக்ய பிரேமையிலே உள்ளது.
ப்ரபு: ஆனால், இது அனைவராலும்
அடையத்தக்கதன்று. இதில்
மற்றவரின் பிரேமையும் தேவைப்படுகின்றது.
அக்ஞானவசமாக நமக்கு பிரேமியிடம் உள்ள பிரேமை நம்மிடம் நமது ப்ரேமிக்கு
இல்லை என்னும் ப்ரமை ஏற்பட்டுவிட்டால் ஸ்வபாவமாகவே நமது பிரேமையில் சிறிது விரிசல்
ஏற்பட்டுவிடும். எனவே
நிரபேக்ஷமான எந்த நிலையிலும் ஒரே மாதிரியான ரஸத்தோடு கூடிய ப்ரேம சம்பந்தத்தை கூறுங்கள்.
ராய்: ப்ரபோ! இந்த விஷயம்
வாத்ஸல்ய ப்ரேமையில் இல்லை. குழந்தை ப்ரியமாக இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் பெற்றோருக்கு அதனிடம் உள்ள உறவு என்றும் நிலைத்து இருக்கிறதல்லவா?
எனவேதான் வியாஸ பகவான்:-
நேமம்
விரிஞ்சோ ந பவோ ந ஸ்ரீரப்யங்க ஸம்ஶ்ரயா ||
ப்ரஸாதம்
லேபிரே கோபி யத்தத் ப்ராப விமுக்திதாத் ||
ப்ரேம தாதாவான ஸ்ரீஹரிக்கு யசோதையிடம்
ஏற்பட்ட க்ருபையானது பிரம்மன், சிவன் மற்றும் பகவானின் திருமார்பிலேயே
வசிக்கும் ஸ்ரீதேவியினிடமும் ஏற்படவில்லை. எனவே வாத்ஸல்ய பாவமே
ஸர்வோத்மமானது.
ப்ரபு: இதிலும் பூர்ணமான நிர்பயத்வம் எனக்கு
தோன்றவில்லை. அதில் சிறியவன், பெரியவன்
என்ற சில அம்சங்களில் வேற்றுமை உள்ளது.
ஆகவே இவை அனைத்தையும் கடந்த ஒப்பற்ற வேறு பாவத்தை சொல்லுங்கள்.
ராய்: ப்ரபோ! காந்தா
பாவம், இதில்தான் ரஸங்களனைத்தும் முடிவடைகின்றன.
ப்ரபு: இதையும் விட உயர்ந்த பாவத்தை அறிவீர்களாயின்
அதை சொல்லுங்கள்.
ராய்: இதற்கு மேலும் எனக்கு ஒன்றும் தெரியாது
என்று கூறினார்
ப்ரபு: காந்தா
ஸ்னேகத்தையும் விட சிறந்த உபாயத்தை க்ருபை கூர்ந்து சொல்லுங்கள்.
ராய்: பிரபுவின்
பாதகமலங்களைப் பற்றிக் கொண்டு கூறலானார்.
அனயாரதிதோ
நூனம் பகவான் ஹரிரீஶ்வா: |
யன்னோ
விஹாய கோவிந்த:
ப்ரீதோ யாமநயத்ரஹ: ||
ராஸத்தின் இடையில் பகவான் திடீரென்று
மறைந்துவிட்டபோது, கோபிகள் ஸ்ரீமதி ராதாதேவியின் பாக்கியத்தை
பாராட்டி “நிச்சயமாக இவள்தான் பகவான் ஸ்ரீஹரியை ஆராதித்தவள். ஏனெனில் இவளது ப்ரேமைக்கு முன் பகவான்
அனைத்தையும் துறந்து விட்டு அவளுடன் தனியாகச் சென்று விட்டான் என்று கூறுகின்றனர். அவ்வளவுதான் ப்ரபு, இதைவிட ஸ்பஷ்டமாக சொல்ல முடியாது.
ஏனெனில் இது பரமரஹஸ்யம், வியாஸபகவானும்
இதை மிகமிக ரஹஸ்யமாக கருதி வெளியிடாது விட்டிருக்கிறார். ஸங்கேதத்தால்
மட்டுமே சிறிது குறிப்பாக காட்டியுள்ளார்.
இதைவிட என்னால் மேலே ஒன்றும் சொல்ல முடியாது.
ப்ரபு: நீங்கள் இப்போது அவ்விருவரது விலாஸத்தின்
பூர்ண மஹிமையையும் சொல்லுங்கள்.
ராய்: தன் இனிய குரலில் பின்வரும் ஸ்லோகத்தைப்
பாடினார்:
வாசா ஸூசித ஶர்வரீ ரதிகலா ப்ராகல்பயா
ராதிகாம்
வ்ரீடாகுஞ்சித லோசனாம்
விரசயன்னக்ரே ஸகீனாமஸௌ |
தத்வக்ஷோருஹ சித்ரகேளி மகரீ பாண்டித்ய
பாரன்கத:
கைஶோரம் ஸவலீகரோதி கலயன்
குஞ்ஜே விஹாரம் ஹரி ||
இதுவே ராஸவிலாஸத்தின் பராகாஷ்டை.
இதைக்கேட்டு
ப்ரபு எல்லையில்லா மகிழ்ச்சியோடு ராயை ஆலிங்கனம் செய்து கொள்ள இருவரும் ப்ரேமோன்மத்தர்களாக
பூமியில் விழுந்தனர்.
ப்ரபு: தங்களது அளவு கடந்த
க்ருபையால் பரமஸாத்ய தத்துவத்தை அறிந்து கொண்டேன்.
இனி அதை எப்படி அடைவது என்று சொல்லுங்கள். சாதனத்தை அறியாமல் சாத்திய ஞானம் மட்டும் அறிவது உபயோகமற்றது (வ்யர்த்தமே). எனவே இந்த மஹாபாவத்தை எப்படிப் பெறுவது
என்ற உபாயத்தை சொல்லுங்கள்.
ராய்: ப்ரபோ!
தாங்கள் சர்வ சமத்தர், சம்சார சேற்றில் அழுந்திக்
கிடக்கும் பரம லௌகினான நான் சாத்ய-சாதன தத்துவங்களை எப்படி அறிவேன்? ஆனால் நீங்கள் உங்கள் பாவங்களையெல்லாம்
என் மூலம் வெளிப்படுத்த விரும்பினால், தங்கள் விருப்பத்திற்கு
மாறாக யாரால் என்ன செய்து விட முடியும். எனவே எனது இதயத்தில்
என்ன ப்ரேரணை செய்கிறீர்களோ அதையே சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ப்ரபோ! ஸ்ரீராதிகாதேவியின் ப்ரேமை சாமான்யமானதன்று.
சம்சார சுகங்களையே ஆனந்த அனுபவமாக கொண்டவர்கள் இதைக் கேட்கவும் அருகதை
அற்றவர்கள். ஆகவேதான் இது பரம ரஹஸ்யமாக சொல்லப்படுகிறது. இதை ஸ்ரீவ்ரஜத்தின் கோபிகைகளே அறிய
முடியும். அவர்கள் இந்திரிய
சுகங்களில் பற்று உடையவர்கள் அல்ல.
அவர்களுக்கு ஸ்ரீராதா தேவியினுடன் ரிருஞ்சத்தில் விளையாடும் ஸ்ரீக்ருஷ்ணனின்
ப்ரேம லீலையே அத்யந்தப் பிரியமானது.
தனக்காக அவர்கள் எதையும் விரும்புவதில்லை. அவர்களது பூரண இச்சை, சம்பூர்ண பாவங்கள் எல்லா செயல்கள், மனம், சொல், அனைத்தும் அந்த ப்ரியை, ப்ரியனின்
ப்ரேம விஹாரத்தின் பொருட்டேயாகும்.
அந்த அனிர்வசனீயமான ரஸத்தை பருக விரும்புபவர்கள் தங்கள் பாவங்களையெல்லாம்
இவ்விதம் தியாகமயமாக தன்னலமற்றதாகச் செய்து கொள்ள வேண்டும். கோபீ பாவத்தை அடையாது யாரும் அந்த
ஆனந்த ரஸத்தைப் பருக முடியாது. கோபிகைகளின் ப்ரேமை சம்சாரிகமானது அன்று. அது விசுத்தமானது, நிர்மலமானது, வாஸனார ஹிதமானது. இச்சைகளற்றது. கோபிகைகளின் விசுத்த ப்ரேமைக்குத்தான்
ப்ரேம காமம். இதையே உத்தவர் போன்ற பரம் பாகவதர்களும் நிரந்தரம்
விரும்புகின்றனர்.
ப்ரேமைவ
கோபராமாணாம் காம இத்யகமத் ப்ரதாம் |
இத்யுத்தவாதயோப்யேதம்
வாஞ்சந்தி பகவத்ப்ரியா: ||
யாராவது ஜபம், தவம், வேதாத்யயனம், யக்ஞம்,
யாகம் இவற்றின் மூலமே அந்த ரஸவாரிதியில் பிரவேசிக்க அதிகாரியாகிவிடலாம்
என்று விரும்பினால் அது அவர்களது தவறான எண்ணமாகும். அந்த அம்ருத ரூபமான மஹாஸாகரத்தின்
அருகில் நெருங்க பக்தியொன்றே ஏகமாத்ர ஸாதனமாகும். இதையே வியாஸ
பகவான்
நாயம்
ஸுகாபோ பகவான் தேஹினாம் கோபிகாஸுத: |
ஞானினாம்
சாத்மபூதானாம் யதா பக்திமதாமிஹ ||
நந்தநந்தனான பகவான் வாசுதேவன் எவ்விதம்
பக்தர்களுக்கு பக்தியால் எளிதில் கிடைத்து விடுகிறானோ, அப்படி
தேஹாபிமானிகளுக்கும், கர்மகாண்டிகளுக்கும், ஞானாபிமானிகளுக்கும் கிடைப்பதில்லை என்று கூறுகிறார். எனவேதான் கோபிகளின் ப்ரேமை ஸர்வோத்தமாக கூறப்படுகிறது.
யதபி
ஜஸோதா நந்த அரு க்வலாபால ஸப் தயை |
பையா
ரஸகூம் சாகிகே கோபீபயீம் அனன்ய ||
கோபிகைகளின் ப்ரேமைக்கு இணையேது,
ராஸ லீலையின் ஸாக்ஷாத் ஸ்ரீக்ருஷ்ணனின் புஜங்களை ஆஶ்ரயமாக கொண்டு தன்யர்களான
கோபிகளின் பாத தூளியின்றி யாரும் ப்ரேமைக்கு அதிகாரியாக முடியாது.
ப்ரபு: எனக்கு வித்யைகள் அனைத்திலும் மிகச்
சிறந்ததான பராவித்யையைச் சொல்லுங்கள். எதைக் காட்டிலும் உயர்ந்த
வித்யையே வேறு ஏதுமில்லையோ அதைச் சொல்லுங்கள்
ராய்: ப்ரபோ!,
ஸ்ரீகிருஷ்ண பக்தியைக் காட்டிலும் ஸர்வோத்தமமான வித்யா வேறு இருக்க முடியுமா? அதற்காகப் பாடுபடுவதே ஸார்த்தமானது,
மற்றவைகள் அனைத்து வ்யர்த்தமே.
ப்ரபு: ஸர்வ ஸ்ரேஷ்டமான
கீர்த்தியாக எதைச் சொல்லலாம்?
ராய்: ஸ்ரீக்ருஷ்ணன்
சம்பந்தமாக உலகில் அறிமுகமாவதே ஸர்வோத்தமமான கீர்த்தியாகும்.
ப்ரபு: நன்று. எதற்கு முன் எல்லாவித சம்பத்துக்களும்
துச்சமாக கருதத்தக்கவையோ அத்தகைய ஸ்ரேஷ்டமான செல்வம் எது?
ராய்: ஸ்ரீநிகுஞ்ஜ
விஹாரி ராதா வல்லபனின் அவிரளமான பக்தி யாருடைய இதயத்தில் உள்ளதோ அவனே ஸர்வஸ்ரேஷ்டமான
சம்பத்தை அடைந்துள்ளான். அவனுக்கு ஈடான புருஷன் மூவுலகிலும் இருக்க
முடியாது.
ப்ரபு: எல்லா
துக்கங்களிலும் மிக கொடிய துக்கம் எது
ராய்: எந்த க்ஷணம்
இதயத்தில் ஸ்ரீஹரியின் ஸ்மரணம் இல்லையோ, எப்போது விஷய போக எண்ணங்கள்
எழுகின்றனவோ அதுவே கொடிய துக்கமாகும்.
இதைத் தவிர பகவத் பக்தர்களின் வியோகமும் ஒரு கொடிய துக்கம். யாருடைய செயல்களனைத்தும் ஸ்ரீக்ருஷ்ணனின்
ப்ரேம ப்ராப்திக்காக உள்ளனவோ, யார் இடைவிடாது ஸ்ரீக்ருஷ்ணனின்
மதுரமான நாமங்களை உச்சரித்து கொண்டு இருக்கின்றானோ, ஸ்ரீக்ருஷ்ணனை
அடைய துடித்துக் கொண்டிருக்கின்றானோ அவனே ஸர்வ ஸ்ரேஷ்டமன முக்த புருஷன்
ப்ரபு: தாங்கள் எந்த கானத்தை மிக சிறந்த கானமாக
கருதுகிறீர்கள்
ராய்: ஸ்ரீக்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே!
ஹே நாத நாராயண வாஸுதேவ!
ப்ரபு: தங்களுக்கு பக்தி, முக்தி இரண்டில் எது விருப்பம்
ராய்: நான் அமுதக்
கடலில் விழுந்து அமுதமாகவே ஆகிவிட விரும்பவில்லை, நான் அதனருகில்
அமர்ந்து கொண்டு அதன் மாதுர்யத்தை பருகுவதையே ஸர்வ ஸ்ரேஷ்டமாக கருதுகிறேன்.
ப்ரபு: ஸர்வஸ்ரேஷ்டமான பகவத் பக்தன் அண்ட சராசரங்களனைத்திலும்,
பிராணிகள் அனைத்திலும் பகவானையே காண்கிறான். அவனது
பார்வையில் பகவானை தவிர வேறு வஸ்துவே இல்லை.
ஸர்வபூதேஷு
ய:
பஶ்யேத் பகவத் பா2வமாத்மன: |
பூதானி
பகவத்யாத்மன்யேஷ பாகவதோத்தம: ||
நிஷ்கிஞ்சனஸ்ய
பகவத் பஜனோன் முகஸ்ய
பாரம் பரம் ஜிகமிஷோர் பவஸாகரஸ்ய
|
ஸந்தர்ஶனம்
விஷயினாமத யோஷிதாஞ்ச
ஹா ஹந்த ஹந்த விஷபக்ஷண தோSப்யஸாது ||
பகவத் பஜனத்தில் ஆவலோடு நிஷ்கிஞ்சனர்களாக
இந்த கடத்தற்கரிய சம்சார கடலை முழுமையாகத் தாண்ட விரும்புபவர்களும் இவ்விதம் பகவானை
நோக்கிச் செல்பவர்களாகின் பக்தர்களுக்கு விஷய போகங்களில் சிக்கிக் கிடக்கும் மக்களையும்,
ஸ்த்ரீகளையும் தரிசிப்பது விஷத்தை உண்பதைக் காட்டிலும் கொடியது.
ஆகாராதபி
பேதவ்யம் ஸ்த்ரீணாம் விஷயினாமபி |
யதாSஹேர்மனஸ:
க்ஷோபஸ்ததா தஸ்யாக்ருதேரபி ||
தியாகிகள் ஸ்த்ரீகளின்,
விஷயிகளின் உருவத்தைக் கண்டுகூட பயப்பட வேண்டும். ஏனெனில் எப்படி பாம்பை நினைத்தால்கூட
மனதில் கலக்கம் ஏற்படுகிறதோ அதுபோல் அவர்களுடைய உருவம் கூட கலக்கத்தை ஏற்படுத்தும். அவர்களோடு சம்பாஷிப்பதோ, பழக்கம் வைத்துக் கொள்வதோ எப்படி சாத்யம்
ஸ்ரீபாகவத்தில் பகவான் கூறுகிறார்-
“சம சித்தமடைந்து விட்டவர்களும், புத்தியைக் கடந்தவர்களுமாகிய
ஏகாந்த பக்தர்களான ஸாதுக்களின் குண தோஷங்களை ஆராயக் கூடாது. அவர்களுக்கென்று குணமோ, தோஷமோ இல்லை. ஆனால் மற்றவர்கள் அறியாமையினால் அவர்கள் செயலை மேற்கொள்ளக்கூடாது. அவர்கள் உபதேசப்படி செல்ல வேண்டும். பகவான் பரமசிவன் ஆலகால விஷத்தை உண்டதைப்போல்
யாராவது மூர்க்கத்தனமாக அதையே செய்தால் நாசமே அடைவான்.
மஹாபுருஷர்களின் வாழ்க்கையில் சில
இடங்களில் தர்மத்தைக் கடந்த செயல்கள் காணப்படுகின்றன. இதன் காரணமென்ன இதற்கு மிகச் சரியாக
பதில் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுடைய அந்த செயல்களை அனுகரணம் செய்யாதே என்று சாஸ்திரம் கட்டளையிடுகிறது. ப்ரும்மானந்த பெருநிலையை அடைந்துவிட்ட
ரிஷிகள் தங்கள் சிஷ்யர்களிடம் மிகத் தெளிவாக கூறுகின்றனர்.
” யான்யஸ்மாகம் ஸுசரிதானிதானி தானித்வயோபாஸ்யானி நோ இதராணி “
எங்களது நற்செயல்களையே நீங்கள் பின்பற்ற வேண்டும். எங்கள்
வாழ்க்கையில் நிஷித்தமான செயல்கள் காணப்பட்டால் அவைகளை ஒருபோதும் நீங்கள் அனுசரிக்கக்
கூடாது. ஈஸ்வரனுடைய, மஹான்களுடைய செயல்களை
நிந்திக்கவும் கூடாது. மகரிஷிகள், மகான்களின் செயல்களை ஆராய்வதும், நிந்திப்பதும் பாவமென்று சொல்லியிருக்கின்றனர்.
மஹாப்ரபு – ப்ரகாசனந்தர் உரையாடல்:
ப்ரகா: பிக்ஷான்னத்தில் வாழ்ந்து
கொண்டு ஸதா வேதாந்த சிந்தனம் செய்து கொண்டிருப்பதே சந்நியாசியின் முக்கிய தர்மமாகும். யுக்தியாலும், சாஸ்திர பிரமாணத்தினாலும் ஆப்த புருஷர்களின் வாக்கியங்கள் மூலமாகவும் ஸத்யம்
போல் தோன்றும், இந்த ஜகத்தின் நிலையற்ற சாரமற்ற தன்மையை சிந்தித்துக்
கொண்டிருக்க வேண்டும், நீ வேதாந்த சிந்தனையை விட்டு ஏன் ஹரி நாமஸ்மரணம்
செய்து கொண்டிருக்கிறாய்
ப்ரபு: எனது குருதேவர் எனக்கு இப்படித்தான் உபதேசித்திருக்கிறார். அவர் என்னை வேதாந்த சாஸ்திரத்திற்கு
அனாதிகாரியாக கருதி இந்த மந்திரத்தை உபதேசித் துள்ளார். இதையே
ஜபம் செய்யும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். கலியுகத்தில் இதை தவிர
வேறு எளிய சாதனமில்லை என்று கூறியிருக்கிறார்.
ஹரேர்நாம ஹரேர்நாம ஹரேர்நாமைவ கேவலம் |
க்லௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிரன்யதா |
என்று கூறி நாம உபதேசம் செய்தார். எனவே நான் அல்லும் பகலும் இதையே ஜபம்
செய்யத் தொடங்கினேன். நிரந்தர ஜபத்தினாலோ அல்லது இதே தியானத்தினாலோ
எனக்கு பித்து பிடித்தது போலாகி விட்டது, வீடு, வாசல் ஒன்றும் பிடிக்கவில்லை, கண்களினின்றும் தானாகவே
கண்ணீர் பெருகலாயிற்று. அப்போது நான் பயந்து கொண்டு குருதேவரிடம் , “ஸ்வாமி!
எனக்கு என்ன மந்திரமளித்து விட்டீர், இதனால் நான்
பைத்தியமாகிவிட்டேனே” என்று கேட்டேன். அப்போது
அவர் இது சுபலக்ஷணம் ஜபத்தை தொடர்ந்து செய்து கொண்டிரு என்று கூறினார்.
ப்ரகா: ஹரி நாமஸ்மரணம் மிகவும் உத்தமமானதுதான். ஆனால் நீ ஏன் பிரஹ்ம சூத்திரங்களை அலட்சியம் செய்கின்றாய்? வேதாந்த தரிசனத்தை ஏன் ஏற்பதில்லை?
ப்ரபு: பகவன் வ்யாஸ பகவானின் பிரம்ம சூத்திரங்களை ஏற்காத, வேதாந்தங்களில் நம்பிக்கையுள்ள ஆஸ்திக புருஷனுண்டா?
ப்ரகா: வேதாந்த சூத்திரங்களில் நிர்குண பிரம்மத்தை ப்ரதிபாதனம்
செய்கின்றன. உபாஸனையின்
மூலம் நிர்விசேஷ பிரம்ம சிந்தனம் செய்வதை விட்டு ஆட்டத்திலும் பாட்டத்திலும் ஆழ்ந்திருப்பதுதான்
வேதாந்த ஸூத்ரங்களை மதிப்பதற்கு அடையாளமா?
ப்ரபு: பிரம்ம சூத்திரங்களில் வியாஸபகவான் நிர்குண பிரம்மத்தை
மட்டும் ப்ரதிபாதனம் செய்திருக்கிறார் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
இதில் சகுண பிரம்ம வர்ணனத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டிருக்கும் என்பதே
என் முடிவு.
ப்ரகா: நீ சொல்வது சாஸ்திரத்திற்கு புறம்பாக உள்ளது. ப்ரஹ்ம சூத்திரத்தில் ஒவ்வொரு சூத்திரத்திலும்
நிர்குண, நிராகர ப்ரம்மமே ஸித்தம் செய்யப்படுகின்றது.
பகவான் சங்கராச்சாரியாரும் விஸ்தாரமாக இதை தனது பாஷ்யத்தில் வர்ணித்திருக்கிறார். நீ சாரீரக பாஷ்யம் படித்ததில்லையா?
அல்லது சங்கராச்சார்யரையே ஒத்துக் கொள்ள மாட்டாயா
ப்ரபு: ஜகத்குருவான சங்கராச்சார்யரை மறுப்பவருண்டோ? அவரே புகழ் வாய்ந்த சங்கர சம்பிரதாயங்களுக்கெல்லாம்
ஆதிகுருவும், லோக பூஜ்யவருமல்லவா? அவரது திருவடிகளில் எனக்கு பூரண சிரத்தை
உண்டு.
ப்ரகா: அவரது பாஷ்யத்திற்கு விரோதமாகப் பேசுவது அவரை மறுப்பது
போலதானே ஆகும். வியாச
பகவானின் உண்மையான பாவங்களை ஸ்ரீசங்கரரே உணர்ந்திருக்கின்றார். அவர் பாஷ்யம் முழுவதும் அதே நிர்குண,
நிர்விசேஷ, உபாதி ரஹிதமான அகண்டமான தத்துவத்தையே வர்ணித்திருக்கிறார்.
ஜகத் மித்யாகவும், ஜீவனுக்கும், ப்ரம்மனுக்கும் பேதமே இல்லாமலும் இருக்கையில் எப்படி துதிப்பது? வினயமும், பிரார்த்தனையும் யாருக்கு? எல்லாம் நித்யமான சுத்தமான முக்தியடைந்த
ப்ரம்ம ஸ்வரூபமல்லவா? ப்ரம்மத்தை தவிர வேறொன்றுமில்லை.
இருப்பதாக தோன்றுவதெல்லாம் கனவில் காணும் பொருட்கள் போல் மித்யாவே
ப்ரபு: வியாஸபகவான் ப்ரம்ம சூத்திரங்களுக்குத்தானே பாஷ்யம்
செய்திருக்கிறார். அவர்
பாஷ்யத்தை செய்த பிறகே அவர் சாந்தியடைந்து அது முதல் எழுதுவதையே விட்டுவிட்டார். ஸ்ரீமத்பாகவதமே பிரம்மசூத்திரங்களுக்கு
நிர்விவாதமான பாஷ்யமாகும். இது வியாஸ பகவானின் கடைசி க்ரந்தம். இதில் சொல்லப்படுவதே எல்லாவற்றைக்-காட்டிலும்
மதிக்கத்தக்கது.
ஸர்வவேதாந்த ஸாரம் ஹி
ஸ்ரீபாகவத்தமிஷ்யதே |
தத் ரஸாம்ருத த்ருப்தஸ்ய நான்யத்ர ஸ்யாத்ரதி: க்வசித்
||
தாங்கள் சகல சாஸ்திரங்களுமறிந்தவர், சரியாக
சொல்லுங்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் நிர்விசேஷ ப்ரம்மத்திற்கு பிரதான்யமளிக்கப்பட்டதா
அல்லது ஸாக்ஷாத் ஸ்ரீக்ருஷ்ண சந்திரனை ஸவிசேஷ பூர்ணபிரம்மமாக, பரமாத்வாக கூறப்பட்டுள்ளதா?
ப்ரகா: ஆமாம் வியாஸ பகவான் ஸ்ரீமத் பாகவதத்தை சகல சாஸ்திரங்களின்
ஸாரமாக ஆக்கினார் என்பதென்னவோ உண்மைதான். ஸ்ரீநாரதரின் உபதேசப்படி
அவர் பகவானின் லீலைகளை வர்ணனம் செய்து பரம சாந்தியும் அடைந்தார். ஆத்மாராமர்களான முனிவர்களையும் கூட
க்ரந்த ஆரம்பத்தில் பகவத் பக்தி செய்து கொண்டு இருக்கும்படி சங்கேதம் செய்து அதன் காரணம்
கூறுகிறார்.
ஆத்மா ரமாஶ்சமுனயோ நிர்க்ரந்தா
அப்யுருக்ரமே |
குர்வன் த்யஹைதுகீம் பக்திமித்தம்
பூதகுணோ ஹரி: ||
அக்ஞானமற்றவர்களும், ஆத்மாராமர்களான
முனிவர்களும் பகவானின் திவ்ய குணங்களால் அவரிடம் அஹைதுகமான பக்தி செய்கின்றனர். இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பகவான் சங்கராச்சாரியர் முற்றிலும்
சகுண பிரம்மத்தை கௌணமாகக் கூறி நிர்விசேஷ பிரம்மத்தையே பரஸாத்யமாக ஏற்கிறார்.
இது ஏன்? இதுவே எனது சந்தேகம்.
ப்ரபு: சங்கரபகவான் ஸ்ரீமத் பாகவதத்தினிடம் சிறந்த சிரத்தையுள்ளவர். ஸ்ரீமத்பாகவதம் வியாஸபகவான் மூலம்
ப்ரகடனம் செய்யப்பட்டது. அதன் ப்ரதிபாத்யமானவன் சகுணமான,
சச்சிதானந்த ஸ்வரூபமான ஸ்ரீக்ருஷ்ணனே என்பதை அறிவார், இருந்தும் கூட அவர் தனது பாஷ்யத்திலே நிர்குண பிரம்மத்தையே ப்ரதானமாக கூறி
அதையே முடிவான லக்ஷியமாக குறிப்பிட்டுள்ளார். இதுவே அவரது மஹத்வம், மஹாபுருஷர்-களைத் தவிர வேறு யாராலும் இத்தகைய துணிச்சலான செயலை செய்ய முடியாது. அவர் உலக நன்மைக்காகவே அப்படிச் செய்தார்.
ப்ரகா: ஸூத்ரங்களின் அர்த்தத்தை அனர்த்தம் செய்வதால் உலகிற்கு
என்ன நன்மை?
ப்ரபு: அர்த்தமாவது, அனர்த்தமாவது,
இவையெல்லாம் புத்திவிகாரங்களே. உண்மையான பொருளை
எங்காவது சப்தங்களின் மூலம் தெளிவாக காணச் செய்ய முடியுமா? உண்மையான பொருள் அனுபவத்தால் அடைய
வேண்டியது. எந்த பதத்திற்கு
எந்த அர்த்தம் செய்தாலும் எல்லாம் சரியே.
அர்த்தம் செய்வதில் புத்தி சாதுர்யம் தவிர வேறு என்ன இருக்கிறது. அர்த்தம் செய்வது வ்யாக்யானம் செய்வது,
பாஷ்யம் புத்தகங்கள் இயற்றுவது இவையெல்லாம் லௌகிக புத்தியின் வேலைகளே
இதனால் மட்டும் முக்தி கிடைக்குமா? ஜனரஞ்ஜகம் மட்டுமே செய்ய முடியும்.
ப்ரகா: சரி, என்ன நினைத்து உலகை ஒரேயடியாக
தூக்கி எறிந்துவிட்டு நிர்குண பிரம்மத்தையே பரமஸாத்ய தத்துவமாக கொண்டார்?
ப்ரபு: சந்தேகமோ, தர்க்கபுத்தியோ
ஏற்படுவது அக்ஞானம் அல்லது பூர்வ ஜென்மங்களில் செய்த பாவத்தின் பயனாகும். ஈஸ்வரனின் இருப்பில் எந்தவிதமான ஐயமும்
எழாத அந்த மஹாபாக்கியவான்கள் தன்யர்கள், அவர்கள் ஈஸ்வரனை ஸர்வ
சக்தனாகவும், சர்வாந்தர்யாமியாகவும், சராசரங்கள்
அனைத்திற்கு சாக்ஷியாகவும் மதித்து அவரையே தியானம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு படிப்பதோ, எழுதுவதோ, பேசுவதோ தியான உபாஸனை செய்வதோ எதுவும் அவசியமில்லை. எவன் எப்போதும் எங்கும் பகவானையே
கண்டு அனைத்திலும் பகவத் பக்தியோடு விவகாரங்கள் செய்கிறானோ அவன் ஒரு நாளும் வழிதவறிச்
செல்லமாட்டான். புத்தக
மூட்டை சுமப்பது அக்ஞான அடையாளம்தான். யாருக்கு பகவான் ஸர்வ அந்தர்யாமி
என்பதில் நம்பிக்கையில்லையோ, யாருடைய மனதில் பல விதமான ஐயங்கள்
எழுகின்றனவோ, அவர்களுக்காகவேதான் சாஸ்திரங்கள் இருக்கின்றன. சாஸ்திரங்கள் படிப்பதன் பலன் தர்க்கங்களுக்கு
அப்பாற் பட்டவனாக, சிரத்தையுடையவனாக ஆவதுதான், ஒருவன் எத்தகைய தார்க்கீகனோ அவனுக்கு அத்தகைய சாஸ்திரமே தேவைப்படுகிறது.
மனிதர்களில் இருவகையுண்டு. ஒன்று
ஹ்ருதய ப்ரதானர், மற்றொன்று அறிவு ப்ரதானர். ஹ்ருதய ப்ரதானமானவர்கள் குறைவாகவும்,
அறிவு ப்ரதானமானவர்கள் அதிகமாகவும் உள்ளனர். அறிவு ப்ரதானமானவர்கள் தர்க்கம் செய்யாமல்
எதையும் ஒத்துக்கொள்வதில்லை. எப்படி விஷத்திற்கு விஷமே மருந்தோ அவ்வாறே தர்க்க புத்தியுள்ளவர்களைத் தர்க்கத்தினாலேயே
வெல்ல வேண்டும். தர்க்கம்
செய்து புத்தியை, இனி இதற்கு மேல் செல்ல புத்திக்கு சக்தி இல்லை
என்னும் அளவுக்கு கூர்மையாக்கி சூக்ஷும விஷயத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தர்க்கத்தினால் ஸ்தூல புத்தி சூக்ஷும்மாகிவிடுகிறது.
சூக்ஷ்ம புத்தி பாரமார்த்திகத்தின் பக்கம் செல்ல முடியும். பகவான் சங்கரர் தர்க்கம், புத்தி இவற்றின் மூலம் பகவத்
தத்துவத்தை இந்த எல்லைவரை வர்ணனம் செய்திருக்கிறார் அதற்கு மேல் எப்படிபட்ட தார்க்கீகனும்
செல்ல முடியாது. உண்மையில்
சங்கர பகவான் தர்க்கத்தை முடித்து விட்டார். வேதாந்த ஸ்ரவணம், படனம் இவற்றின் ப்ரயோஜனமானது தர்க்கபுத்தியுள்ளவர்கள் இவற்றின் மூலம் தங்கள்
புத்தியை சூக்ஷ்மமாக்கி, சுத்தமாக்கி பாரமார்த்திக பாதையில் செலுத்துவதேயாகும்.
ஸதா தர்க்கங்களிலேயே மூழ்கி கிடப்பது லட்சியமல்ல. ஏனெனில் பரமார்த்த மார்க்கம் தர்க்காதீனமானதாகும்.
அக்ஞானத்திற்கும் சிரத்தைக்கும் மலைக்கும்
மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. அக்ஞானிக்கு
தர்க்கம் எழாது. ஆனால்
அவனுக்கு உண்மையான சிரத்தை ஏற்படும் வரை அவன் பரமார்த்தத்தில் செல்ல முடியாது. ஹ்ருதயத்தில் சிரத்தையுள்ளவன் ஒரு
நாளும் அக்ஞானியாக இருக்க முடியாது.
ஏனெனில் விசாரங்களின் முடிவாகவே உண்மையான சிரத்தை தோன்றுகிறது. தர்க்கமும் ஐயமும் எழுவது பூர்வ ஜென்மங்களின்
பாவ-புண்ணியத்தின் அடிப்படையில் அவ்வாறே தர்க்கம் எழும்போது அவற்றை சோம்பேறியைப் போலும்,
அக்ஞானியைப் போலும் மறைப்பதும் பாவமாகும். அப்படிப்பட்ட சோம்பேறி பாரமார்த்திகனாக
ஆகவே முடியாது. உண்மையான
சிரத்தையுள்ளவனாக இல்லாமல், சிரத்தையுள்ளவன் போல் நடிக்கிறான். வேஷக்காரனிடமிருந்து பகவான் வெகுதூரத்திலிருக்கிறார்.
ஹ்ருதய ப்ரதானமான, ஸரஸமான,
பாவுகர்களின் மனதில் ஐயம் எழவே எழாது. அவர்களோ எப்போதும் ப்ரியதமனின் குணகானத்தையே
கேட்க விரும்புகின்றனர். அவர்களுக்கு ஸகுணத்தையோ, நிர்குணத்தையோ பற்றிய ஸித்தியால்
பிரயோஜனம் ஒன்றுமில்லை. பக்தி செய்து கொண்டேயிரு. ஸகுணமோ, நிர்குணமோ எப்படி இருந்தாலும் அது தானாகவே வெளிப்பட்டுவிடும். அவனுக்கு ஸ்ரீக்ருஷ்ணனின் சரணாவிந்தங்களே
சத்யமானவை, ஜகத் ஸத்யமானால் என்ன? மித்யாவானால்
என்ன? இதனால அவனுக்கொன்றும்
பயனில்லை.
ஸ்ரீக்ருஷ்ண சரணாம்போஜம் ஸத்யமேவ
விஜானதாம் |
ஜகத் ஸத்யமஸத்யம் வா நேதரேதி
மதிர் மம ||
ப்ரகா: அப்படியானல் புரிந்து கொள்வது ஒன்றும், ஸித்தம் செய்வது ஒன்றும் ஆகி முரணாகி விடுகிறது. சங்கர பகவான் மூன்று காலத்திலும்
இந்த ஜகத்தை சத்யமாக கருதவில்லை. அவரோ இதைக் வாக்குக்கெட்டாத ப்ரம்மத்தின் ஒரு மாயைத் தோற்றமாக கருதுகிறார். இப்படிபட்ட கொள்கையை உடைய அவர் எப்படி
ஸகுண உபாஸனை செய்யும்படி கூறுவார்?
ப்ரபு: சொல்வது என்ன? அவரே செய்திருக்கிறார். ஹ்ருதயத்தின் ஓட்டத்தை யாராலும் தடுக்க
முடியுமா? ”ஜகத்மித்யை”,
“நாமே பிரம்மம்” இவை அறிவு வாதங்கள் அவரது ஹ்ருதயத்திடம்
கேளுங்கள் அவரே கூறுகிறார்:
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீனஸ்த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசன
ஸமுத்ரோ ந தாரங்க: ||
ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும்
பேதமே இல்லாதிருக்கலாம் ஆயினும் ஹே நாத நான் உன்னுடையவன். ஆனால் நீ என்னுடையவனில்லை. கடலின் அலைகளே அன்றி அலைகளின் கடல்
என்று ஒருவரும் கூறுவதில்லையே வாழ்நாள் முழுவதும் ஜீவப்ரம்ம ஐக்கியத்தை ஸித்தம் செய்த
அந்த மஹாபுருஷரின் வாக்கியம் இது
ப்ரகா: இது ஆச்சார்யரின் வினோதம். எப்படி இங்கு கற்பணையாக ஜகத் தோன்றுகிறதோ அதேபோல இந்த வார்த்தையும் சாதாரண
நடைமுறைக்காகவே. உண்மையில்
ஜகத்தே இல்லாதபோது வினயமேது? பிரார்த்தனையேது? எப்போதும் தன்னை பிரம்மமாகவே கருதிக் கொண்டிருக்க அப்யாஸம் செய்து கொண்டிருக்க
வேண்டும்.
ப்ரபு: தாங்கள் இப்படி சொல்வதும் சரிதான். ஆனால் நான் மீண்டும் அதையே வலியுத்துகிறேன்.
இது உலகில் சலிப்படைந்த புத்தியை ஏமாற்றும் வார்த்தை. உண்மையான சாந்தி ஹ்ருதயத்தின் மலர்ச்சியாலேயே
ஏற்படும். எல்லா தர்மங்களையும்
மறந்து ஏகாந்தத்தில் பகவான் சங்கராச்சார்யரைப் போல் இவ்வாறு தீனனாக பிரார்த்தனை செய்வதாலேயே
உண்மையான சாந்தியை அடைய முடியும். ஆச்சார்யர் தனது பிரஸித்தமான ஷட்பதியில் பகவானிடம் பிரார்த்திக்கிறார்.
மத்ஸ்யாதிபிரவதாரை ரவதார்வதா ஸதா வஸிதாம் |
பரமேஶ்வர பரிபால்யோ பவதா பவதாபபீதோSஹம்
||
உலகை முக்காலத்திலும் ஸத்யமாகக் கொள்ளாத சங்கரபகவான்
கூறுகிறார்.
“ தாங்கள் மத்ஸ்யம் முதலான அவதாரங்கள் செய்து ஸதா பூமியை பரிபாலனம் செய்து
கொண்டிருக்கிறீர். ஹே ப்ரபோ! ஸம்சாரதாபங்களால்
எரிக்கப்பட்ட நான் உம்மை சரணடைகிறேன், என்னை காப்பாற்றுங்கள்”.
இதுதான் ஹ்ருதயத்தின் உண்மையான குரல்.
ப்ரகா: யதார்தத்தில் இந்த ஜகத் அஸத்யம்தான் ஜீவனேதான் ப்ரஹ்மன். ஆனால் அதை ஏற்காது அஸத்யமான ஜகத்தையே
ஸத்யமாக கருதுபவர்களுக்காக பகவான் சங்கரர் வியவஹார உலகின் இருப்பைக் கூறியதுபோல் இதுவும்
பாவஹாரிகமான பிரார்த்தனையே. முக்தியே ஜீவனின் இறுதி லக்ஷியம்.
ப்ரமை நீங்கியவுடனேயே அக்ஞானம் நசிக்கிறது. அக்ஞானம் நசித்தவுடன் ஜீவன் ப்ரஹ்ம
ஸ்வரூபமாகி விடுகிறது. ஆவதென்ன? ஜீவன் தனது உண்மையான ஸ்வரூபத்தை உணர்ந்து கொள்கிறது.
ப்ரபு: நான் மீண்டும் கூறுகிறேன். இது ஹ்ருதயபூர்வமான வார்த்தை இல்லை. எண்ணங்களின் மாறுபட்ட ஸ்வரூபம்.
ஸ்வாமி! ப்ரேமையே ப்ரம்மத்தின் உண்மையான ஸ்வரூபம். ப்ரேமையை அடைவதே ஜீவனின் இறுதி லக்ஷியம். இது சொல்லுக்கு அப்பாற்பட்டது. இதை வாக்கினால் பாட முடியாது. ஹ்ருதயத்திற்கு உரியது. இதைச் சொல்ல முடியாது. அனுபவிக்க முடியும். இதை ஸித்தம் செய்ய முடியாது. ஸ்வயம் ஸித்தமானது. இதை யாரும் ஸாதனங்களின் மூலம் அடைந்து
விட முடியாது. பகவத் க்ருபையினாலேயே அடைய முடியும். நான் மறுபடியும் கூறுகிறேன்.
சங்கரபகவான் பகுத்தறிவுவாதிகளின் புத்தியை சூட்சுமமாக்கு-வதற்கு சாரீரக பாஷ்யத்தை இயற்றினார். அவரது ஹ்ருதயம் பகவத் ப்ரேமைக்கு
முன்னால் முக்தியைக் கூட துச்சமாக மதிக்கிறது. அவரே கூறுகிறார்:
காம்யோபாஸனயார்த்தயந்த்யனுதினம் கிஞ்சித்
பலம் ஸ்வேப்ஸிதம்
கேசித் ஸ்வர்கமதாபவர்கமபரே யோகாதி யக்ஞாதி யக்ஞாதிபி: |
அஸ்மாகம் யதுநந்தனாங்க்ரியுகளத்யானாவதானார்த்தினாம்
கிம் லோகேன தமேன கிம் ந்ருபதினா ஸ்வர்காபவர்கைஶ்ச கிம் ||
அனேக மக்கள் தினமும் அனேக விருப்பங்களோடு உபாஸனை
விருப்பங்களோடு உபாஸனை செய்து வேண்டிய பயனை விரும்புகிறார்கள். சிலர் யக்ஞயாகாதிகள் மூலம் சுவர்க்கத்தை
அடைய விரும்புகின்றனர். மற்றும் சிலர் யோகங்களால் முக்தியை பிரார்த்திக்கின்றனர். ஆனால் நாங்கள் நந்த நந்தனான ஸ்ரீக்ருஷ்ணனின்
பாதாரவிந்த தியானத்திலேயே தன் மயத்தோடு மூழ்கியிருக்க விரும்புகிறோம். உத்தமலோகங்களால் நமக்காவதென்ன? ராஜாவாவதினாலோ, ஸ்வர்க்கத்தினாலோ மோக்ஷத்தினாலும்தான் நாமடைய வேண்டியதென்ன? நமக்கு எப்போதும் அந்த செந்தாமரை
மலரடிகளின் தியானம் நிலை பெற்றிருந்தாலே போதும்.
ப்ரதாஸ்திஷ்ட தலே தலே விடபினாம் க்ராமேஷு
பிக்ஷாமட
ஸ்வச்சந்தம் பிபயாமுனம் ஜலமலம் சீராணி கந்தாம் குரு |
ஸம்மானம் அலயாதிகோரகரளம் நீசாபமானம் ஸுதாம்
ஸ்ரீராதா முரளீதரௌ பஜ ஸகே ப்ருந்தாவனம் மா த்யஜ ||
சகோதரா! நீ எப்படி வாழ வேண்டுமென்று
சொல்கிறேன் கேள். ஸ்ரீவனத்தின்
புண்ணிய பூமியில் ஏதாவதொரு மரத்தடியில் விழுந்துகிட, பசியெடுத்தால்
அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களில் சென்று பிக்ஷை எடுத்து சாப்பிடு, யாராவது மரியாதையோடு போஜனம் அளித்தாலோ,
கௌரவமளித்தாலோ அதை விஷமாக கருது. எந்த முட்டாள்களாவது
உன்னை பரிகசித்தாலோ அவமதித்தாலோ அதை அம்ருதமாக கருது. குடிப்பதற்கு சுத்தமான நீலநிறமான
இனிய யமுனாஜலம் இருக்கிறது. போர்த்திக்கொள்ள தெருவில் கிடக்கும்
கந்தல் துணிகளே போதுமானவை. இதைவிட அதிகம் ஒன்றும் சேர்த்து வைத்துக்கொள்ள
வேண்டாம். ஸ்ரீராதாரமணனான
ஸ்ரீமுரளிதரனை தியானம் செய், ப்ருந்தாவனத்தை விட்டு எங்கும் செல்லாதே.
ஜீவன்களின் பரமபுருஷார்த்தம் ஸ்ரீக்ருஷ்ண ப்ரேமையை
அடைவதே என்றுதான் கருதுகிறேன். பகவானின்
சரணங்களில் ப்ரீதி ஏற்படுவதே எல்லா சாதனங்களுக்கும் முடிவான பலனாகும். இந்த ஒரு உத்தேசத்தைப் பூர்த்தி செய்து
கொள்ளவே எல்லா காரியங்களும் செய்ய வேண்டும்,
ஸஜாதீயம், விஜாதீயம் என்னும் இருவகை
உண்டு. ஜீவன் பகவானின்
அம்சம், அதை ஸஜாதீயமான பகவானின் பக்கம் கொண்டு சென்றால் ஆனந்தம்
ஏற்படும். மாறாக விஜாதீயமான
ஸம்சார விஷயங்களில் சிக்க வைத்தால் அது எப்போதும் துக்கமாகவே இருக்கும். எனவே அனன்ய பாவத்துடன் அந்த ப்ரபுவையே சரணமடைவது நலம். இதுவே ப்ரேம ப்ராப்திக்கு ஸர்வோத்தமமான
உபாயமாகும்.
ப்ரகா: பகவத் சரணங்களில் பிரேமை எப்படி ஏற்படும்?
த்விதீயாத் வை பயம் பவதி என்பது சாஸ்த்ர சித்தாந்தம். இதன் பொருள் என்ன? சேவ்ய-சேவக பாவம் உள்ள வரை இருமை உண்டு. இருமைபயத்திற்குக்
காரணமெனில் பின் எந்த பாவத்தில் சரணமடைவேன்?
ப்ரபு: இருமைகளில் எப்போதும் பயமே இருக்கிறது என்பது வாஸ்தவமான
விஷயமே. அத்வைத பாவமின்றி
சாந்தியில்லை. ஆனால்
சிந்தித்து பாருங்கள். அம்சத்திலும்-அம்சியிலும், ஸேவ்ய-ஸேவகனிடமும், ஸகாக்களிடமும், பிதா-புத்ரனிடமும், பதி-பத்தினியிடமும்
என்ன த்வைத பாவம் இருக்கிறது? த்வைத பாவமிருந்தால் அங்கு ப்ரேமை
ஏது. ஒன்றாகும்போதுதானே
அன்பு ஏற்படுகிறது. யாரை
நாம் நம்முடையவர் என்று ஸ்வீகரித்துக் கொண்டு விடுகிறோமோ. அவர்
எப்படி அன்னியராவார்? ரகசியமான விஷயம் சொல்ல நேரும்போது அருகில்
இருப்பவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை விவகாரத்திலே காண்கிறோம். அப்போதே கேட்பவன் இங்கு அன்னியர்
(இரண்டாமவர்) யாருமில்லை, தைரியமாக சொல் என்கின்றான்.
எல்லாம் நம்மவரே என்கிறான். எனவே தன்னுடையதென்று நிலையான பின்
பயம் ஏன் பிறகு இரு மடங்கு
ஆனந்தமேயல்லவா சம்பந்தம்
ஐந்து விதமாக ஏற்பட முடியும். அம்ஶ-அம்ஶி சம்பந்தம், ஸ்வாமி-ஸேவக ஸம்பந்தம், ஸகா-ஸக்ய ஸம்பந்தம்,
பிதா-புத்ர, பதி-பத்தினி ஆகிய சம்பந்தங்கள். இதே கிரமப்படி சாந்த, தாஸ்ய, ஸக்ய,
வாத்ஸல்ய, காந்த பாவமென ஐந்து பாவங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் பகவானுடன் ஏதாவதொரு சம்பந்தம்
நிலைபெற்றாலும் பிறகு அவர் அன்னியராக இருக்கமாட்டார் நம்முடையவராகி விடுவார். சாந்த பாவத்தில் ஐஶ்வர்ய பாவனை இருப்பதால்
சிறிது த்வைத அம்சம் மீதமிருக்கிறது.
தாஸ்ய பாவத்தில் நிரந்தர ஸேவக புத்தியால் சாந்த பாவத்தைக் காட்டிலும் சற்று
த்வைத பாவம் குறைகிறது. ஸக்யத்தில் தாஸ்ய
பாவத்தை விட இன்னும் சற்று குறைகிறது.
ஆனால் ஸக்ய பாவத்திலும் சிறிதளவு த்வைத பாவம் இருக்கவே செய்கிறது.
ஸகா தன் ஸகாவிடமும், அவனும் தன்னிடம்
ஸ்நேகம் வைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவே செய்கிறான். ஸக்யத்தைக் காட்டிலும் வாத்ஸல்ய பாவத்தில்
த்வைதம் மிகக் குறைவு. ஏனெனில் ஒரு நல்ல பிதா தனக்கும் புத்திரனுக்குமிடையில் எந்த
பேதமும் காணமாட்டான். புத்ரன் பிதாவின் ஆத்மாவே தான் ஆனாலும் கூட த்வைத பாவம்
முற்றிலும் அழிந்து விடவில்லை
லாலனை-பாலனை மிக சூக்ஷ்மமான
த்வைதாம்ஸம் இருக்கவே செய்கிறது. காந்தா
பாவத்தில் த்வைதம் பெயருக்கு கூட இல்லை பத்தினி தனது மனதை மட்டுமன்றி
ஹ்ருதயத்தையும், சரீரத்தையும் கூட பதியுடன் இணைத்து ஒன்றிவிடுகிறாள். அவளது எண்ணம்
செயல்கள் அனைத்தும் பதியின் சுகத்திற்கு மட்டுமே செயல்படுகின்றன. அவளுக்கு நான் என்னும் தனித் தன்மையே இல்லை
அங்கு அத்வைத பூரண பாவமே உள்ளது. பத்தினி
தனக்காக சுகம் வேண்டுவதில்லை. தன்
சுகத்தில் அவள் மகிழ்வது கிடையாது. தனது
ப்ரியதமனின் மகிழ்ச்சியே அவளது மகிழ்ச்சி. அன்பன் இன்பமடைந்தால் இவளும்
இன்புறுவாள். இந்நிலையில் ப்ரியனுக்கு
எதிராக இவள் எப்படிச் செயல்படுவாள்?
இதற்கு மதுரபாவம் என்று பெயர். இதுவே ஸர்வஶ்ரேஷ்டமான பாவம். பகவான் யாரை இந்த பாவத்தில் ஸ்வீகரித்துக்
கொள்கிறானோ அவரே இந்த பாவத்தில் தீக்ஷிதராக முடியும். யோக யாகத்தினாலோ ஜபதபத்தினாலோ யாராவது இந்த
பாவத்தில் தீக்ஷிதராக தங்களை அதிகாரியாக எண்ணிக் கொண்டிருந்தால் இதுவே அவர்களது அனாதிகாரித்வத்திற்குச்
சரியென்று தான் கூற முடியும்.
மஹாப்ரபு – ரூபர் உரையாடல்:
ரூபர்: பக்தி மார்க்கத்தை நோக்கி செல்ல விரும்பும்
ஸாதகன் காமினி, காஞ்சனம், கீர்த்தி, ஸ்வரூபம், ப்ரதிஷ்டை, செல்வம்,
புத்ரன், குடும்பம், ப்ரிய வஸ்துக்கள் இவைகளை த்யாகம் செய்துவிட்டு தனது பாதையிலே
தீவிரமாக முன் செல்ல வேண்டும். என்று உணர்ந்து கொண்டேன். இப்போது நான் ஸாதன
தத்துவத்தை புரிந்து கொள்ள விரும்புகிறேன்.
ப்ரபு:
சாஸ்திரங்களில் ஜீவனின் ஸ்வரூபம் மிக மிக
ஸூக்ஷமமாக இருப்பதாக விவரிக்கிறது.
முக்தன் மிக ஶ்ரேஷ்டமானவன், அவனை காட்டிலும் ஶ்ரீக்ருஷ்ண பக்தன் உயர்ந்தவன். யாருடைய ஹ்ருதயத்தில் உண்மையான க்ருஷ்ண பக்தி
இருக்கிறதோ அவனைவிட ஶ்ரேஷ்டமானவன் இருக்க முடியாது. ஶ்ரேஷ்ட தன்மையில் பராகாஷ்டை இதுதான். ஶ்ரீமத் பாகவதத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.
முக்தானாமபி ஸித்தானாம்
நாராயண பாராயண: |
ஸுதுர்லப: ப்ரஶாந்தாத்மா
கோதிஷ்வபி மஹாமுனே ||
உலகில் முயற்சி செய்தால்
எதையும் அடையலாம். ஆனால் ஶ்ரீக்ருஷ்ண
பக்தியை அடைவது அத்யந்த துர்லபமானது.
பக்தியைப் பெறுவதற்கு ஒரே உபாயம்தான் உள்ளது. எல்லா இடத்திலும் எந்த நிலையிலும் ஸதாகாலமும்
ஶ்ரீஹரியின் நாமங்களையே ஸங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஶ்ரவணமும்,
கீர்த்தனமும் தான் ப்ரபு ப்ராப்திக்கு முக்கிய உபாயம்.
எல்லா உபாயங்களையும்
ஆஶ்ரயங்களையும் தியாகம் செய்துவிட்டு ஶ்ரீஹரியை ஶ்ரணடைய வேண்டும். எல்லா
தர்மங்களையும் தியாகம் செய்துவிட்டு அவரையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டும்,
ஸ்மரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
நான் உனக்கு பகவத் க்ருபைக்கும், அஹைதுகமான பக்திக்கும் ஒரு தெளிவான
அடையாளம் கூறுகிறேன். அதிலிருந்தே எப்படி
பக்தி செய்ய வேண்டுமென்று நீ தெரிந்து கொண்டுவிடுவாய். ஶ்ரீமத் பாகவத்தில் பகவான் கபிலர்,
கூறுகிறார்:-
மத்குண ஶ்ருதி மாத்ரேண மயிஸர்வ குஹாஶயே |
மனோகதிரவிச்சின்னா யதாகங்காம்பஸோSம்புதௌ ||
ப்ராணிகளின் ஹ்ருதயரூபமான
குகையில் வசிக்கும் ஸர்வாந்தர்யாமியான, ஈஸ்வரனான எனது குணங்களைக் கேட்ட
மாத்திரத்தில் எந்தவித தடையுமின்றி கங்கா ப்ரவாஹம் ஸமுத்திரத்தை நோக்கி
ஓடுவதைப்போல், மனதின் வேகம் என்னை நோக்கி ப்ரவஹித்தால் அவனுக்கு ஏகாந்த பக்தி
அல்லது அஹைதுக பக்தி கிட்டி விட்டது என்று உணரலாம். அதை அடைந்த பிறகு ஶ்ரீக்ருஶ்ணன் தூரத்தில்
இருக்க மாட்டான். அவன் ஓடிவந்து பக்தனை தழுவிக் கொள்வான். இதுதான் அவனது பக்தவாத்ஸல்யம்.
ஆரம்பத்தில் ஸாதன பக்தி
ஏற்படுகிறது. ஸாதன பக்தியிலிருந்து ரதி
பக்தியும் அதிலிருந்து சுத்த பக்தியில் அல்லது ப்ரேமரூப பக்தியும் ஏற்படுகிறது.
ரதி பக்தி ஐந்து விதமாக சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவைகள், சாந்திரதி, தாஸ்யரதி, ஸக்யரதி,
வாத்ஸல்யரதி, மதுரதி.
சாந்தரஸ உபாஸகர்களுக்கு
உதாரணமாக ஶ்ரீஸுகரையும், ஜனகரையும் கொள்ளலாம்.
தாஸ்யரஸ உபாஸகர்கள் உத்தவர் போன்ற பக்தர்கள். ஶ்ரீவனத்தின் இடைச் சிறுவர்களும், அர்ஜுனன்
ஆகியோர் ஸக்ய ரதிக்கு உதாரணமானவர்கள்.
நந்தர், தேவகி, வஸுதேவர் முதலியவர்கள் வாத்ஸல்ய ரதி உபாஸகர்கள். மதுரரஸ உபாஸனையில் ருக்மணி முதலிய
ஆயிரக்கணக்கான ராணிகளும், லக்ஷ்மி முதலியவர்களும் உதாரணமாக இருந்தபோதிலும்
ஶ்ரீவனத்தின் கோபிகைகளே ஸர்வ ஶ்ரேஷ்டமாகக் கருதப்படுகின்றனர்.
சாந்த ரஸத்தில் தன்னைச்
சிறியவனாக மதிக்கும் பாவம் உள்ளது.
தாஸ்யத்தில் தன்னை எளியவனாகக் கருதி பலவிதங்களில் தனது ஸ்வாமிக்கு சேவை
செய்யும் இச்சை காணப்படுகிறது. ஸக்யரதி
உபாஸகன் தன்னை சிறியவனாக மதித்து
சேவையும் செய்கிறான். ஆனால்
உபாஸ்யனின் முன்னிலையில் ஸங்கோஜம் இல்லாமல் பழகுகிறான். அவன் சாந்த, தாஸ்ய
உபாஸகர்களைப் போல பயந்து கொண்டே இருக்க மாட்டான்.
வாத்ஸல்யரஸ உபாஸனை செய்பவர்கள் தனது ப்ரியனை ஶ்ரேஷ்டமாகவே
கருதுகின்றனர். வெளிக்கு காட்டிக்
கொள்வதில்லை. சேவையும் செய்கின்றனர். ஸங்கோஜமில்லாமலும்
இருக்கின்றனர். ஆனால், அவர்களிடம் இந்த
மூன்று உபாஸகர்களைக் காட்டிலும் தனது சேவ்யனிடம் ஒரு ஸ்வபாவமான மத்வமும்
இருக்கிறது. இதுவே இந்த ரஸத்தில் உள்ள
விசேஷம்.
காந்தபாவத்தில்
(மதுரபாவத்தில்) இந்த ஐந்து விஷயங்களும் இருக்கின்றன. தனது ஸ்வாமியை பெரியவனாகவும்
மதிக்கின்றனர். சேவை செய்யும் ஆவலும்
கட்டுக்கு அடங்காதிருக்கிறது. ப்ரியனிடம்
எந்தவித ஸங்கோஜமும் இல்லை. அளவிட முடியாத
உரிமையும் இருக்கிறது. ஸரீரம் மற்றும்
செயல்களனைத்தும் ப்ரியனுக்-காகவே ஸமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே இந்த காந்த பாவமே ஸர்வ ஶ்ரேஷ்டமானது. இத்தகைய உபாஸகன் கோடியில் ஒருவனை கூட
காண்பதரிது.
சாந்த, ஸக்ய முதலிய
உபாஸகர்களே துர்லபமாக இருக்கையிலே மதுரபாவ உபாஸகர்களைப் பற்றி சொல்ல என்ன
இருக்கிறது? நான் இப்போது பக்தி
தத்துவத்தைச் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்.
அத ஸ்வஸ்தாய தேவாய நித்யாய
ஹ்ருதபாப்மனென் |
த்யக்த க்ரமாதபாகாய சைதன்ய
ஜ்யோதிஷே நம: ||
எப்போதும் தன்னிலேயே
நிலைபெற்றிருப்பவரும், நித்யரும், பாபங்களை அழிப்பவரும், விதி நிஷேதங்களைக்
கடந்தவருமாகிய ஜ்யோதி ஸ்வரூபமான ஶ்ரீசைதன்ய மஹாப்ரபுவை நமஸ்கரிப்போம்.
மஹாப்ரபு – ஸனாதனர் உரையாடல்:
ஸனாதனர்:
ப்ரபோ! ஸாதனஹீனனும், பாரமார்த்திகப்பாதையை அறியாதவனும், விஷய போகங்களில்
மூழ்கி இருக்கும் ஸம்ஸாரிகளைச் சார்ந்திருப்பவனுமான பரமார்த்த சம்பந்தமாக எதுவும் கேட்க
அறியாதவன். எனவே தாங்களே எங்களது
அறியாமையைப் போக்கி மானிடத்தன்மையை அருளுங்கள். நாம் யார்? நமது கடமை என்ன
பகவானுடன் நமக்கு என்ன சம்பந்தம்? பகவானது ஸ்வரூபம் என்ன? இந்த விஷயங்களையெல்லாம்
எனக்கு விரிவாக அறிவுறுத்துங்கள்.
மஹாப்ரபு:
ஸனாதனா! உன்னிடம் பகவத் க்ருபை உள்ளது. நீ
என்ன கேட்க விரும்புகிறாயோ கேள்.
ஸனாதனர்:
ப்ரபு! ஜீவன்களில் இந்த வேறுபாடுகள்
காணப்படுவது ஏன்? என்று அறிய விரும்புகிறேன்.
மஹாப்ரபு:
சனக, சனந்தர்கள் ஆகியோர் முக்தர்கள். இவர்கள் உலகில் இருந்தாலும் உலகம் இவர்களைக்
கட்டுப்படுத்தாது. இவர்கள் இடைவிடாது
ஶ்ரீக்ருஷ்ண ஸங்கீர்த்தனத்தில் மூழ்கியிருக்கின்றனர். மனு, ப்ரஜாபதி, இந்திரன், சப்தரிஷிகள் அனைவரும்
நித்ய ஜீவன்கள். சிஷ்யனின் பொருட்டு இவர்கள்
எப்போதும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த அநித்யமான நீர் மேல் குமிழ்
போன்ற உலக போகங்களை விட்டு பகவானின் ஶ்ரீசரணங்களைப் பற்றிக் கொள்ள விரும்புவர்கள்
முமுக்ஷு ஜீவன்கள். அனேகமாக பாரமார்த்திக
பாதையில் செல்லும் யாத்ரீகர்கள் அனைவரும் இவர்களுடனேயே எண்ணப்படுவர். இவர்களைத் தவிர சுபாவப்படியே பிறப்பதும்,
இறப்பதுமாக செய்ய வேண்டியது என்னவென்ற விவேகமற்றவர்கள் பத்த ஜீவன்கள்
எனப்படுவர். விஷயங்களில் கட்டுண்ட
அக்ஞானிகள், மிருகங்கள், பட்சிகள் முதலிய ஜீவன்கள் அனைத்தும் இந்த ரகத்தைச்
சேர்ந்தவை இவர்கள் ஸாதனமோ, பஜனமோ செய்ய
முடியாது. இவர்களுக்காகவே புனரபி, ஜனனம், புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே ஶயனம்
என்று சொல்லப்படுகிறது.
சாஸ்திரங்களில் ஜீவன்களுக்கு என்பத்தி
நான்கு லட்சம் யோனிகளின் பிறவி கூறப்படுகிறது.
பகவானின் சரணங்களைப் பிரிந்து பிராணிகள் இந்தப் பலவித ஜீவராசிகளாக பிறந்து
சுற்றிக் கொண்டிருக்கின்றன. சிறிது காலமாக பகவானின் பிரிவால் இதன் நோக்கு
வெளிப்புறமாகிவிட்டது. பகவானின் தேவமாயை
அதைப் பல பல பிறவிகளிலும் சுழற்றிக் கொண்டிருக்கிறது.
ஸனாதனர்:
இந்த மாயையினின்றும் எப்படி விடுபட முடியும்? ஜீவன் அடிமைப்பட்டு உழல்கையில்
அவனைக் கரையேற்ற உபாயமே கிடையாதா?
மஹாப்ரபு:
உண்டு.
ஒரே உபாயம் இருக்கிறது. மாயையே
விட்டு மாயா அதிபதியை சரணடைய வேண்டும், இதனால் மாயை அவனை விட்டு
விடுகிறது.
ஸனாதனர்:
ப்ரபு! மாயாதிபதியை எப்படி சரணடைவது?
மஹாப்ரபு:
இதற்கு க்ருபைதான் மிக முக்கியமானது. சாஸ்திர க்ருபை, குரு க்ருபை, பரமார்த்த க்ருபை
இந்த மூன்று க்ருபைகளே முக்கியமானவை. இந்த மூன்று க்ருபைகளில் ஏதாவது ஓன்று
கிடைத்துவிட்டாலும் மனிதன் ஸம்ஸார பந்தத்தினின்றும் விடுபட்டு பகவானை நோக்கிச்
செல்ல முடியும்.
ஸனாதனர்::
ஜீவனுக்கு நிலையான அமைதி எங்கு கிடைக்கும்?
மஹாப்ரபு:
பகவானின் ஶ்ரீபாதாரவிந்தங்களை
அடைந்தாலொழிய எங்கும் சாந்தி ஏற்பட முடியாது.
ஸனாதனர்:
ப்ரபோ! இந்தப் பிறவி சுழலிலிருந்து விடுதலை
பெற உபாயம் உள்ளதா?
மஹாப்ரபு:
ஶ்ரீக்ருஷ்ணன் இந்த சக்கரத்திற்கு
அப்பாற்பட்டவன். அவருக்கு உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், என்னும் எந்த வேலையும்
கிடையாது. இதை ப்ரும்மா, விஶ்ணு, சிவன்
இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே ஸர்வ ஸ்வ ஆத்ம நிவேதனம் செய்து அனன்யமாக அவரை சரணடைந்தால் இந்த
சக்கரத்தினின்றும் விடுபடமுடியும்.
ஸனாதனர்:
எனக்கு உபாயத்தைச் சொல்லுங்கள்.
மஹாப்ரபு:
பகவான் தவத்தினாலோ, ஜபத்தினாலோ, யோக யக்ஞத்தினாலோ,
பாடம், பூஜைகளாலோ, திருப்தி அடைவதில்லை. பகவானை மகிழ்விக்க ஒரே ஸாதனம் அனன்யமாக
அவரிடம் பக்தி செய்வதுதான். ப்ரேம
பக்தியின்றி எவரும் அவரை அடைய முடியாது. அவர் எவனைத் தன்னுடையவனாக வரித்துக்
கொள்கிறாரோ அவனைத் தனது கோபி அல்லது ஸகியாக்கி தனது லீலையில் சேர்த்துக் கொண்டு
விடுகிறார். அனன்யமாக தீனமாக, நிராஶ்ரயனாக
எல்லா புருஷார்த்தங்களையும் தியாகம் செய்துவிட்டு அவனொருவன் மட்டுமே கதியாக,
ஆஶ்ரயமாகக் கொள்ளும் போதுதான் அவனை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.
ஸனாதனர்:
ப்ரபோ! அனன்யத்வத்தை அடைவது எப்படி?
ஹ்ருதயத்தில் பக்தி பயிர் எப்போது, எப்படி தோன்றும்?
மஹாப்ரபு: அனன்யத்வத்தை அடைய ஸர்வோத்தம்மான ஒரே
உபாயமுள்ளது. பரமஹம்ஸ சிரோமணியான ஜடபரதர் ராஜாரஹூகணனிடம்
கூறுகிறார்:
ரஹூகணைதத் தபஸா நயாதி நசேஜ்யயா
நிர்வபணாத் க்ருஹாத்வா |
நச்சந்தஸா நைவ ஜலாக்னிஸூர்யை: வினா
மஹத்பாதரஜேSபிஷேகம்
அரசே! ரஸூகணா! மஹாத்மாக்களின் சரண
தூளியில் புரண்டாலன்றி பகவத் க்ருபையை தவத்தினாலோ, யக்ஞத்தினாலோ, தானத்தினாலோ,
வீடு வாசலைத் துறப்பதினாலோ, வேத பாராயணத்தினாலோ, வருணன், அக்னி, ஸூர்யன் இவர்களை
ஸேவிப்பதினாலோ பெற முடியாது. பகவத் க்ருபையை அடைய ஒரே ஸாதனம் பக்தி சிரத்தையோடு
பரம பாகவதர்களான ஸாது மஹாத்மாக்களின் சரண தூளியை தரிப்பதுதான் ஸாதுசேவையை செய்யாது
பகவத் க்ருபையை பெற விரும்புவது படகோ, கப்பலோ இன்றி கடலை கைகளால் நீந்திக் கடக்க
விரும்புவதற்கு ஒப்பாகும்.
பகவான் அர்ஜுனனுக்கு பகவத் கீதையில்
தானே இவ்வாறு உபதேசித்து இருக்கிறார். ஹே
அர்ஜுனா! நீ நிலந்தோயப்பணிந்து ஸேவிப்பதாலும் நிஷ்கபத பாவத்துடன் கேட்பதாலும் அந்த
ஞானத்தை அறிவாய். தத்வதர்ஶிகளான
மஹாத்மாக்கள் உனக்கு அந்த ஞானத்தை உபதேஸம் செய்வார்கள்.
எவனுடைய ஹிருதயத்தில் தேவதை, அந்தணன்,
பெரியோர், பகவத் பக்தர்கள் இவர்களிடம் ஸிரத்தையுள்ளதோ, அவனே உபதேசத்திற்கு
அதிகாரியாவான். இவைகளில்
சிரத்தையில்லாதவன் பாரமார்த்திகப் பாதையில் அடியெடுத்து வைக்கவும் முடியாது.
அப்படியிருக்க ஸ்வாமியின் க்ருபைக்கு எப்படிப் பாத்திரமாவான். எல்லா ஜீவன்களுக்கு பரம புருஷார்த்தம் ஶ்ரீக்ருஷ்ண ப்ரேமையை அடைவதுதான். பரம ஆராத்யன் அந்த ஶ்ரீநந்த நந்தனும் பிருந்தாவன
சந்திரனுமான ஶ்ரீக்ருஷ்ண சந்திரன்தான்.
ஆஶ்ரயத்தைத் துறந்து அனன்ய பாவத்துடன் வ்ரஜ ஸுந்தரிகளான கோபிகளைப்போல் சம்சார
பந்தங்களைத் திலாஞ்ஜலி செய்து பதிபாவத்துடன் பகவான் ஶ்ரீக்ருஷ்ணனை ஆராதிப்பதே
உத்தமமான உபாஸன முறை. பாராயணம் செய்ய வேண்டிய சாஸ்திரங்களுள் ஶ்ரீமத் பாகவதமே
ஸர்வோத்தமமான சாஸ்திரம். ஏனெனில்
ஶ்ரீவியாஸ பகவான் இதை எல்லா புராணங்களுக்கும் முடிவில், தயிர் கடைந்து அதன் ஸாரமான
வெண்ணையை எடுப்பது போல் ஸர்வ சாஸ்த்ரங்களின் ஸாரமாக அமைத்துள்ளார். இதுவே மங்களகரமான மார்க்கம். இதை நீ எனது மதத்தின்
ஸாரமாக கொள்வாயாக. இதைவிட அதிகமாக வேறு யாரேனும் எதையேனும் வலியுறுத்தினால் அதை நீ
அஸாரமாக உணர்ந்து கொள்வாயாக
ஆராத்யோ பகவான் வ்ரஜேஶதனய: த்தாம
ப்ருந்தாவனம்
ரம்யா
காசிதுபாஸனா வ்ரஜவதூவர்கேண யா கல்பிதா |
ஶ்ரீமத் பாகவதம் ப்ரமாணமமலம் ப்ரேமா
புமர்த்தோமஹான்
ஶ்ரீசைதன்ய
மஹாப்ரபோர்மதமிதம் தத்ராக்ரஹோ நாபர ||
எனது இந்த ஞானத்தை ஹ்ருதயத்தில்
தரிப்பாயாக. ஸாது மஹாத்மாக்களிடமும்,
பகவத் பக்தர்களிடமும் திடமான அனுராகம் வைப்பாயாக.
அவர்கள் எப்படி இருந்தாலும் ஒருபோதும் மறந்தும் அவர்களை நிந்திக்காதே.
அனைவரையும் ஈஶ்வர புத்தியோடு மிகுந்த வினயத்தோடு நமஸ்கரிப்பாயாக, நீ மங்களம்
அடைவாயாக, நான் உன்னை ஹ்ருதயபூர்வமாக வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன். எனது இந்த பாவனமான, விமலமான, சாஸ்த்ர சம்மதமான
ஞானத்தை நீ விஸ்தாரமாக பக்தி க்ரந்தங்களில் வர்ணிப்பாயாக. மங்கள ஸ்வரூபமான பகவான்
உனக்கு மங்களம் செய்யட்டும்.. நான் சகல சாஸ்திரங்களுக்கும்
ஸாரமாக கருதுவது இதுதான். எப்போதும்,
எங்கும், எக்காலமும் பகவான் நாராயணனையே தியானம் செய்ய வேண்டும், இதைக் கண்டிக்கும்
ஆஸ்திக புருஷர்களிலிருந்தால் என்னெதிரில் வரட்டும்.
ஸகல
சாஸ்த்ர வேதஸாரமானது ஶ்ரீக்ருஷ்ணகீர்த்தனம், நாம ஸ்மரணமுமேயாகும். உலகில் ஸுகத்திற்கு ஸர்வ ஶ்ரேஷ்டமான ஸாதனம்
இதுவே நாம ஸ்மரணத்தினால் தான் ப்ரேமையை அடைய முடியும். எப்படி நாம ஸ்மரணம் செய்ய வேண்டும் என்பதே
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
ப்ரேமையை
அடைய வேண்டியவன் முதலில் ஸாதுஸங்கம் செய்ய வேண்டும். பஜனம், கீர்த்தனம்,
ஸத்ஸங்கம், பகவத்லீலாஸ்மரணம். இவையே முக்கிய தர்மங்களாகும். இந்த தர்மங்களை
கடைப்பிடிக்க வேண்டும். ஸம்சாரிகளிடம்
விசேஷமான சம்பந்தம் வைத்துக் கொள்வதோ, அவர்களிடம் பலவகை பேச்சுக்கள் பேசுவதோ, மற்றவர்களை
நிந்திப்பதோ, தூஷிப்பதோ கூடாது. இவைகளை
ரிஷிகள் லோக தர்மம் என்று கூறியிருக்கின்றனர்.
எப்போதும் இந்த விஷயங்களிலிருந்து தப்பிக்க வேண்டும். மற்றவர்களின் குணதோஷங்களைச் சொல்வதை முற்றிலும்
விட்டு விட வேண்டும்.
தோஷங்களின்
பரம அணுக்கள் மிகமிக சூட்சுமமானவை. அவை ஹ்ருதயத்தில் பிரவேசிகாத வரையில்
மற்றவர்களை ‘நிந்திக்க முடியாது. இவைகள்
அதிகரித்து உனது இதயத்தின் பவித்ரம், எளிமை, நன்னடத்தை, ஞானத்தில் விருப்பு முதலிய
ஸத்விருத்திகளை அழுத்தி அங்கு அக்ஞானம் மோஹம் இவற்றின் ஸாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து
விடும். எனவே அதோஷ தர்ஶியாக இருப்பதே
பக்தர்களின் முக்கியமான வேலையாகும், பகவத் பக்தர்களான மஹாத்மாக்களும்,, பக்தர்களான
சாதுக்களுக்கும் எப்போதும் சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும்.. மான ப்ரதிஷ்டை, விஷய போக இச்சை இவைகள் காமம்
எனப்படும். பகவானின் லீலைகள் ஶ்ரவணம்
செய்து கொண்டும், பகவத் குணங்களை கீர்த்தனம் செய்து கொண்டும் இருப்பதே
பாரமார்த்திகத்தை நாடுபவர்களின் முக்கிய வேலையாகும். இந்த செயல்களில் உள்ளவனுக்கு ஒரு போதும் ஸம்ஸார
மோஹம் ஏற்படாது. நான் சுருக்கமாக உனக்கு பக்தர்களின் முக்கியமான செயல்களைக்
கூறுகிறேன்.
1.
கிராம்ய கதையை ஒருபோதும் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்பதால் சித்தத்தில் அந்த விஷயங்களே இருப்பதால்
சித்தம் பஜனத்தில் லயிக்காது.
2.
கிராம்ய கதைகளை சொல்லவும் கூடாது. விஷயவாஸனை உள்ளவர்களைப் பற்றி பேசினால் சித்தம்
விஷயமயமாகி விடுகிறது
3.
சிறந்த ருசியுள்ள பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அத்தகைய பதார்த்தங்களால் விஷயலோபம்
அதிகரிக்கிறது.
4.
நல்ல ப்ரகாசமான மிகவும் ஸ்வச்சமான வஸ்த்ரம்
அணியக்கூடாது. அப்படி அணிந்தால், அணிவதால் வாழ்க்கையில் செயற்கைத் தன்மை,
போலித்தன்மை வந்துவிடும். அதனால் சித்தம்
வெளிமுகமாக சென்றுவிடும்,
5.
எப்போதும் அபிமானமின்றி பழக வேண்டும்,
இதயத்தில் அபிமானம் வந்த உடனேயே ஸாதனங்கள் அனைத்தும் நஷ்டமாகி விடுகின்றன.
6.
மற்றவர்களுக்கு எப்போதும் கௌரவமளித்துக்
கொண்டிருக்க வேண்டும், மற்றவர்களுக்கு
கௌரவம் அளிப்பதால் ஆத்ம ஸம்மானம் ஏற்படுகிறது. இதுவே ஸர்வ ஶ்ரேஷ்டமான ஸம்மானமாகும். இதற்கு முன் மற்ற ஸம்மானம் அனைத்தும் மிகமிக
துச்சமானவை.
7.
எப்போதும், எங்கும், எந்த நிலையிலும் பகவான்
நாமங்களை ஜபம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்,
நாம ஜபத்தினால் ஶ்ரீக்ருஷ்ணனின் சரணங்களில் ப்ரீதி உதிக்கிறது.
8.
சுத்தமான ஶ்ரேஷ்டமான பாவத்துடன் ஶ்ரீபகவானை
பூஜித்துக்கொண்டிருக்க வேண்டும். மானஸீ
பூஜையே ஸர்வ ஶ்ரேஷ்டமான பூஜையாகும்.
மேலே
கூறப்பட்ட தர்மங்களை கடைபிடிக்கும் பகதர்களாலேயே பகவத் ப்ரேமையை அடைய முடியும்.
சம்சாரிகளின்
அன்னத்தைச் சாப்பிடுவதால் ரஜோகுணபாவங்கள் அதிகரிக்கின்றன. விஷயாஸக்தி உள்ளவர்களின் அன்னத்தில் ஆசைகளின்
பரமாணுக்கள் உள்ளன. சம்ஸாரிகள் எதையும்
எதிர்பார்க்காமல் தனது மாப்பிள்ளைக்கு கூட உணவிட மாட்டார்கள். காமத்தோடு கூடிய பரமாணுக்களால் புத்தி மலினமாகி
விடுகிறது. மலினமான புத்தியோடு ஶ்ரீக்ருஷ்ண கீர்த்தனம் செய்ய முடியாது. எனவே
சம்ஸாரிகளான செல்வந்தர்களின் அன்னத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன்
எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவனிடம் எவ்வளவு ஸத் குணங்கள் இருந்தாலும், அவன்
எவ்வளவு அழகனாயிருந்தாலும், அவனிடம் பொறுமை இல்லையானால் மக்களின் மூலம் கூறப்படும்
கொடிய மொழிகளைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி இல்லாதவனானால் அவனது ரூபம், குணம்,
ஞானம் அனைத்தும் வீணே!
அர்ச்சாயாமேவ ஹரயே பூஜாம் ய: ச்ரத்தயேஹதே: |
ந தத்பக்தேஷு சான்யேஷு ஸ பக்த: ப்ராக்ருத; ஸ்ம்ருத: ||
ஶ்ரீவிக்ரஹங்களை
மட்டும் சிரத்தையுடன் பூஜித்துக் கொண்டு, பகவத் பக்தர்களையும் ஸாதுக்களையும்
பூஜிக்காமல் உபேக்ஷை செய்பவன் சாஸ்திரங்களால் ப்ராக்ருத பக்தன் என்று கூறப்படுகிறான்.
சாஸ்திரங்கள்
பக்தர்களை உத்தமன்,
மத்திமன், ப்ராக்ருதன் என்று மூன்று விதமாக கூறுகின்றன. எவன் தனது இஷ்ட தெய்வத்தை ஸர்வ
வியாபகனாக உணர்ந்து பிராணிகள் அனைத்திடமும் சிரத்தை கொள்கிறானோ, எல்லா வஸ்துக்களிடமும் இஷ்டத்தோடு மதிப்பு வைக்கிறானோ அவன் ஸர்வோத்தமனான பக்தன். எவன் தனது இஷ்டதெய்வத்திடம்
ப்ரீதியும், தன்னைப்போன்ற இஷ்டபந்துக்களிடம் சிரத்தையும், ஸாதனைகளற்றவர்களிடம்
க்ருபையும், த்வேஷிகளிடமும் அன்னிய மதத்தினரிடமும் உபேக்ஷையும் வைக்கிறானோ, அவன்
மத்தி பக்தன். எவன் தனது இஷ்ட தெய்வத்திடம்
மட்டும் அன்போடு பூஜை செய்து கொண்டு பகவத் பக்தர்களையும், மற்றவர்களையும் உதாஸீனம்
செய்கிறானோ அவன் ப்ராக்ருத பக்தன்.
ப்ராக்ருத பக்தன் கெட்டவன் அல்ல ஏனெனில் பக்தியில் ஆரம்பமே உண்மையில்
இதுதான். ப்ராக்ருத பக்தன் ஆகாமல்
உத்தமனாகவோ, மத்திமனாகவோ எப்படி ஆக முடியும்?
ஒம் தத் ஸத்
ஸ்ரீக்ருஷ்ண சைதன்ய சரிதாவளி