Showing posts with label பஞ்சதசி-05. Show all posts
Showing posts with label பஞ்சதசி-05. Show all posts

Sunday, July 21, 2019

Pancadasi Chapter-5 -Rev-01

பஞ்சதசி
அத்தியாயம்-5
மஹாவாக்கிய விவேகம்
 
ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபம் பிரக்ஞானம் என்ற அழைக்கப்படுகிறது. நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களிலும் அறிவு என்ற ஒன்றும், நாம-ரூபம் என்கின்ற விஷய அம்சமும் இருக்கிறது. இந்த நாம ரூபங்கள் தோன்றி பின்பு மறையக் கூடியது. பிரமாணங்கள் ஞானத்திற்கும், நாம-ரூபத்திற்கும் காரணமாக இருக்கிறதுஅடைந்த அறிவில் மாற்றம் ஏற்படுவதில்லை, தோன்றி அழிவதில்லை. அறிவானது விஷயத்திற்கு இருத்தல் என்பதை கொடுக்கிறது. அனைத்து விருத்திகளுக்கும் உபாதான காரணமாக இருக்கிறது. இதுவே பிரக்ஞானம் என்று கூறப்படுகிறது.
 
எந்த சாமான்ய அறிவால்,; சாட்சி சைதன்யத்தினால் இந்த உருவங்கள் பார்க்கப்படுகின்றதோ, இந்த சப்தங்கள் கேட்கப்படுகின்றதோ, வாசனையானது நுகரப்படுகின்றதோ வார்த்தைகளானது பேசப்படுகின்றதோ, மற்ற இந்திரியங்களால் அடையப்படுகின்ற விஷயங்களானது அனுபவிக்கப்படுகின்றதோ, இனிப்புள்ளவைகள், இனிப்பற்றவைகளை உணரப்படுகின்றதோ, அவைகள் எல்லாம் எந்த பிரமாணங்களினால் அறியப்படுகின்றதோ அந்த ஒன்றே பிரக்ஞானம் என்று சொல்லப்படுகிறது.
 
நான்முக பிரம்மாவிடத்திலும், தேவேந்திரன் முதலிய தேவர்களிடத்திலும், மனிதன், குதிரை, மாடு முதலிய எல்லா ஜீவராசிகளிடத்திலும் இருக்கும் ஒரே சைதன்யம் பிரம்மம் எனப்படும். ஆகவே என்னிடத்திலும் இருக்கும் பிரக்ஞானமும் அந்த பிரம்மமேதான்.
 
முழுமையானதும் எங்கும் நிறைந்த பரமாத்மா ஞானத்திற்கு தகுதியுடையவனின் உடலில் எல்லா எண்ணங்களுக்கும் சாட்சியாக, அறிபவனாக இருந்து கொண்டு பிரகாசிக்கிறது. அதுவே நான் என்று சொல்லப்படுகிறது.
 
இயல்பாக எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவானது பிரம்மம் என்ற சொல்லால் வர்ணிக்கப்படுகிறது. இருக்கின்றேன் என்று ஒன்றாயிருக்கும் தன்மையானது குறிப்பிடப்படுகிறது. நான் என்ற சொல்லுக்கும் பிரம்மா என்பதற்கும் ஒன்றாக இருக்கும் தன்மை குறிப்பிடப்படுகிறது. ஆகையால் நான் பிரம்மமாகவே இருக்கிறேன் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
 
ஒன்றாக மட்டும் இருக்கின்ற, இரண்டற்றதாக இருக்கின்ற ஸத்தானது எந்தவிதமாக வேற்றுமைகளும் இல்லாமல் இருக்கின்றது. நாம ரூபத்திலிருந்து விலகியிருக்கிறது. ஸத் மீது நாம-ரூபங்களை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இது அவைகளுக்கு ஆதாரமாகவும், அஸங்கமாகவும் இருக்கிறது. இப்படிபட்ட ஸத் ஸ்ருஷ்டிக்கு முன்னரே இருந்தது. இப்பொழுது கூட ஸ்ருஷ்டி இருக்கின்ற போதும் இப்படி இருக்கும் தன்மை உடையது என்று சொல்லப்படுகிறது. தத், த்வம், அஸி என்ற வார்த்தைகளினுள் தத்3 என்ற சொல்லின் பொருள்தான் கூறப்பட்டிருக்கிறது.
 
இந்த உபதேசத்தை கேட்டுக் கொண்டிருப்பவனுடைய தேகம், இந்திரியம், மூன்று உடல்களுக்கும் அப்பாற்பட்ட உண்மையான தத்துவமானது த்வம் என்ற சொல்லால் இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. மகாவாக்கியத்தில் உள்ள இருக்கின்றாய் என்ற சொல்லால் தத்3, த்வம் ஆகிய இரு சொற்களுக்கும் இடையே உள்ள ஒன்றாக இருக்கம் தன்மை அறியப்படுகிறது. இதை அனுபவ ரூபமாக அறிந்து கொள்ள வேண்டும். கற்கண்டு இனிக்கும் என்ற அறிவு மட்டும் போதாது அதை சுவைத்துப் பார்த்த அனுபவித்தால்தான் அதனுடைய இனிப்புத் தன்மையை உணர முடியும். அதுபோல இந்த ஐக்கிய தன்மையை அனுபவத்திற்கு கொண்டு வந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
இந்த ஆத்மாதான் பிரம்மன். இந்த என்ற சொல்தான் இதில் விளக்கப்பட்டுள்ளது. தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கும் தன்மையும், நேரிடையாக தெரியக்கூடிய தன்மையும்இந்த”  என்ற சொல்லினால் குறிப்பிடப்படுகிறது. இது மிக அருகில் இருப்பது. அகங்காரம் முதல் தேகம் வரை உள்ள எல்லாவற்றிற்கும் உள்ளே மிக அருகில் இருப்பது ஆத்மா என்று சொல்லப்படுகிறது.
 
பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து பிரபஞ்சத்தினுடைய ஆதாரமாக இருப்பது பிரம்மன் என்ற சொல்லால் கூறப்படுகிறது. அந்த பிரம்மம் தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ஆத்ம ஸ்வரூபமாக இருக்கிறது.
 
----ooo000ooo----

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...