வேதாந்த
அறிமுகம்
ஸ்வாமி குருபரானந்தா
புருஷார்த்தஹ: திட்டமிட்டு முறையுடன் செயல்பட்டு
ஒன்றை அடையும் திறன். தர்மம், அர்த்தம்,
காமம், மோட்சம் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடைய முயற்சி செய்ய வேண்டும்.
அர்த்தம்(பொருள்): வாழ்க்கையில் நம்மை பாதுகாத்து
கொள்வதற்காக எதை நாடுகிறோமோ அவையெல்லாம் இவ்வாறு அழக்கப்படுகிறது.
காமம்(இன்பம்): இன்பத்தை அனுபவிப்பதற்காக அடைய
நினைக்கும் எண்ணமே காம்மாகும்
தர்மம்(அறம்): புண்ணியம், அர்த்த, காமம் இவைகள்
தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால், புண்ணியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், இந்த
புண்ணியம் கிடைக்க வேண்டுமென்றால், தானதர்மங்களை செய்ய வேண்டும்.
மோட்சம்(வீடுபேறு):
சம்சாரத்திலிருந்து விடுபடுதல். சம்சாரம்
என்றால் மானஸ தாபஹ-மனதில் வருகின்ற காமம், குரோதம், லோபம் போன்ற தீய
எண்ணங்கள். துக்கம் என்பது நம்
மனதிலிருந்து வருவதுதான். “தீதும்
நன்றும் பிறர் தர வாரா”.
சாஸ்திரம்:
புருஷார்த்தத்தை அடைய எது
துணைபுரிகிறதோ அதைதான் சாஸ்திரம் என்பர்.
இது நமக்கு ஆணையிட்டு சிலவற்றைச்சொல்லும், சிலவற்றை உபதேசிக்கும். வேதத்தைத் தான் சாஸ்திரம் என்று கூறுகிறோம். புருஷார்த்தத்தை
அடைய உதவும் சாதனைத்தை உபதேசிப்பதால் வேதம் என்று அழைக்கப்படுகிறது. இது குருவின் மூலமாக சிஷ்யனால் கேட்கபடுவது,
சிரத்தையுடன் கேட்டால்தான் அதன் பயன் முழுவதுமாக அடையலாம். இதில் சொல்லப்பட்ட
கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் நூல்களை ஸ்மிருதி என்று
அழைப்பர். நடந்த நிகழ்ச்சிகளை
வார்த்தைகளாக எழுதப்பட்ட நூல்களை இதிகாசம் என்றும், வேத்த்தில் உள்ள
கருத்துக்களை உபதேசிக்கும் விதமாக கற்பணையுடன் எழுதப்பட்ட கதைகளை புராணங்கள்
என்றும் அழைப்பர். சாஸ்திரம் இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று தர்மசாஸ்திரம்
(கர்ம காண்டம்) இது வேதத்தின் முன்பகுதி மற்றொன்று ஞானசாஸ்திரம் (ஞான காண்டம்) இது
வேதத்தின் கடைசி பகுதி, இதுவே வேதாந்தம் அல்லது உபநிஷத் என்றும் கூறுவர்.
வர்ணாசிரம
தர்மம் (வாழ்க்கை முறை)
வர்ணம்:
பகவான் மனிதனை அவனது குணத்தின், செயலின் அடிப்படையில் நான்கு வகையாக
பிரித்திருக்கிறார். அவைகள் பிராமணன்,
க்ஷத்திரியன், வைசியன் மற்றும் ஸூத்ரன்.
பிராமணன்:
வேதத்தை உபதேசித்தல், ஆலயங்களை
பராமரித்தல், எளிமையாக வாழ்தல் போன்றவை.
க்ஷத்திரியன்: நாட்டைப் பாதுகாத்தல், மக்களை பாதுகாத்தல்,
அரசியல், சமுதாய சேவை போன்ற கடமைகள்
வைசியன்: நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள், விவசாயம்
செய்பவர்கள்
ஸூத்ரன்: இந்த மூன்று வர்ணத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை
செய்தல், அவர்கள் கொடுக்கும் கூலியை வாங்கி கொள்ளுதல்.
ஆசிரம்: இதுவும் நான்கு வகையாக
பிரிக்கப்பட்டிருக்கிறது. பிரம்மர்ச்சர்யம், கிரகஸ்தம், வானபிரஸ்தம் மற்றும்
சந்நியாசம். இந்த ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு
தர்மமானது இரண்டு வகையான கூறபட்டிருக்கிறது.
சாமான்ய தர்மம், விசேக்ஷ தர்மம். சாமான்ய
தர்மத்தை விட விசேக்ஷ தர்மம் மிக முக்கியமானது.
சாமான்ய
தர்மம்: இது எல்லா ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும்
உள்ள பொதுவானது
விசேக்ஷ
தர்மம்: இது வர்ண, ஆசிரமத்திற்கேற்றவாறு
அமைவது. இது மாற்றத்துக்குட்பட்டது.
பிராமணன்:
சாஸ்திரம் படித்தல், அதை உபதேசம் செய்தல்,
இந்திரிய கட்டுப்பாட்டுடன் இருத்தல், எளிமையாக இருத்தல், பொருளுக்காக எதையும்
செய்யாது இருத்தல், அஹிம்சையை கடைபிடித்து வாழ்தல்.
க்ஷத்திரியன்: நாட்டைப் பாதுகாத்தல், மக்களை பாதுகாத்தல்,
அரசியல், சமுதாய சேவை.
வைசியன்: நேர்மையாக வியாபாரம் விவசாயம் செய்தல்
ஸூத்ரன்: இந்த மூன்று வர்ணத்தை சேர்ந்தவர்களுக்கு சரீர
பணிவிடை செய்தல்.
பிரம்மச்சர்யம்: மாணவப்பருவம், சாஸ்திரத்தை படித்தல், அறிவை
அடைதல், பொருளை சம்பாதிக்க கூடாது.
குருவுக்கு பணிவிடை செய்தல், அறிவை அடைய வேண்டுமென்றால் எளிமையாக வாழ
வேண்டும்.
கிருகஸ்தம்: ஐந்து விதமான யக்ஞம் செய்தல், தானம், தவம்
செய்தல், தியானம் செய்வதற்கு சிறிது நேரம் ஒதுக்குதல்
யக்ஞம்: இது ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. தேவயக்ஞம்- இறைவழிபாடு,
ரிஷியக்ஞம் - ரிஷிகள் எழுதிய புராணங்களை படித்தல், பித்ருயக்ஞம்-சிரார்த்தம்,
தர்ப்பணம் போன்ற பித்ரு வழிபாடு, மனிதயக்ஞம்-மற்ற மனிதர்களுக்கு நல்லது செய்தல்,
உதவி புரிதல், பூதயக்ஞம்-மற்ற உயிரினங்களுக்கு உபகாரம் செய்தல், உணவு அளித்தல்.
தானம்:
மற்றவர்களுக்கு பொருளுதவி செய்தல்
தவம்: தியானம் செய்வதற்கு நாள்தோறும் சிறிது
நேரம் ஒதுக்குதல்
இதையெல்லாம் கர்ம காண்டம்
என்றும் அழைப்பர்.
வானபிரஸ்தம் கடமைகளை துறந்து விடுதல், தான் செய்து வந்த
செயல்களையும், பொறுப்புக்களையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விடுதல், முழுநேர
தியானத்தில் ஈடுபடுதல். இதற்கு உபாஸான காண்டம் என்றும் கூறுவர்.
சந்நியாஸம் சாஸ்திர சிரவணம், மனனம், நிதித்யாசனம்
செய்தல்.
கர்மயோகம்:
கர்மத்தை சாதனமாக
பயன்படுத்தி மனத்தூய்மை என்ற சாத்தியத்தை அடைவதையே கர்மயோகம் என்று
அழைக்கப்படுகிறது. மனம் தூய்மையாக இருப்பது என்றால், விருப்பு,வெறுப்பற்ற நிலையில்
இருக்கும் மனம் என்ற தெரிந்து கொள்ளவேண்டும்.
வேதத்தில் நம்மால் செய்யப்பட
வேண்டும் என்று விதிக்கப்பட்ட கர்மங்களை எப்படி கர்மயோகத்தில் செய்ய வேண்டும்
என்று சுருக்கமாக பார்க்கலாம்.
சாமான்ய கடமைகளாவது, எல்லா
காலத்திலும், எல்லா இடத்திலும், எல்லோருக்கும் பொதுவாக உள்ள கடமைகள். செய்யும்
கடமையில் பலனை எதிர்பார்த்து (சகாமமாக) செய்தால் கிடைக்கும் பலன் புண்ணியம். அதையையே கர்மயோகமாக (நிஷ்காமமாக) செய்தால்
கிடைப்பது மனத்தூய்மை (சித்தஸுத்தி). இது
மோட்ச ப்ருஷார்தத்தின் முதல்படி. கர்மம்
இயற்கையாகவே பந்தத்தில் ஈடுபடுத்தும், அதையே கர்மயோகமாக செய்வதால் மோட்சத்தை
அடைவதற்கு தகுதியாக்குகிறது, சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கிறது. கர்மத்தை செய்வதால் அதில் நமக்கு வெற்றி கிடைக்கும்
என்று நிச்சயமில்லை. ஆனால் கர்மயோகமாக
செய்யும்போது பலன் நிச்சயம் கிடைக்கும் கர்மத்தை
தவறாக செய்தால் தோஷம் வரும், பாவமும் வரும், ஆனால் இதில் தவறாக செய்தாலும் தோஷம்
வராது. கர்மத்தை முழுமையாக செய்தால்தான்
பலன் கிடைக்கும், இதில் எவ்வளவு செய்கிறோமோ அதற்கேற்றாவாறு பலன் கிடைக்கும்,
பலனில்லாமல் போகாது.
கர்மயோக
லக்ஷணம் (புத்தியோகம்)
நாம் செய்யும் செயலில் வைக்க
வேண்டிய சரியான பாவனையில்தான் அது யோகமாக மாறுகிறது. வேதத்தில் சொல்லப்பட்ட
கர்மங்கள், அதில் நமக்கு இருக்க வேண்டிய பாவனைகளாவது,
சுவதர்ம
கர்மம்:
1. கடமைகளை நிஷ்காமமாக செய்வது
2. விருப்பு, வெறுப்புக்கள் இல்லாமல்
செய்வது
3. கடமைகளிலிலிருந்து பலனை
எதிர்ப்பார்க்கலாம், ஆனால் அதில் பற்று வைக்க கூடாது. பலன் கிடைக்கவில்லையென்றால் இறைவன் ஏதாவது ஒரு
வகையில் நமக்கு அதை அளிப்பார்.
4. கடமையையே ஈஸ்வர அர்ப்பணமாத செய்ய
வேண்டும். கடமையையே இறைவழிபாடாக செய்ய வேண்டு.
காம்ய கர்மம்
1. பலனை விரும்பி செய்யும் கர்மமாக்
இருந்தாலும், பலனை அடையும்போது இது இறைவனிடமிருந்து வருவதாக நினைக்க வேண்டும்.
எவ்வளவு கிடைக்கிறதோ அதை முழுமனதுடன், திருப்தியாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நிஷித்த
கர்மம்: வேதம் தடை செய்த கர்மங்களை செய்யாதிருத்தல்
பிராயசித்த
கர்மம்
இந்த கர்மங்களைக் கூட
செய்யாமல் வந்த கஷடத்தை அனுபவித்து தீர்க்க வேண்டும். பகவான் என்னை பக்குவ படுத்துவதற்காக இதை
கொடுத்திருக்கிறார் என்ற பாவனையோடு இருக்க வேண்டும்.
உபாஸனை:
மனத்தூய்மை அடைந்தாலும்,
மனமானது ஒருமுகப்படாமல் சஞ்சலபட்டுக் கொண்டேயிருக்கும். எனவே மனதை திடப்படுத்தும், ஒருமுகபடுத்தும்
சாதனைதான் உபாஸனை. உபாஸனம் என்பதை உப + ஆஸனம் என்று பிரித்தால், இதற்கு சமீபத்தில்
இருத்தல் என்று பொருள் கொள்ளலாம். மனதை எப்பொழுதும் இறைவனிடத்தில் இருத்தி வைத்து
பழகும் சாதனம். இது மனதால் செய்யப்படும் செயல், தியான ரூபமாக ஈஸ்வரனை தியானித்தல்.
இதற்கென்று தனியாக நேரத்தையும், இடத்தையும் ஒதுக்க வேண்டும்.
கர்த்தாவான மனதை கருவியாக
மாற்றுவதுதான் உபாஸனை. உபாஸனை செய்வதற்கு
முன் நம்மை தயார் செய்ய வேண்டும். மனம் ஏற்கனவே ஒரு விதத்தில்
பழக்கப்பட்டிருக்கும்.
·
சரீரத்திற்கு
அதிக உழைப்பும் இருக்கக்கூடாது, உழைக்காமலும் இருக்க கூடாது.
·
உணவும்
அதிகமாகவும் உட்கொள்ளக்கூடாது, குறைவாகவும் உட்கொள்ளக்கூடாது.
·
கண்,
காது இந்திரியங்களை தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுத்தக்கூடாது.
·
நம்
மனது சுக துக்கங்கள் அதிகமாக அனுபவித்தாலும் தியானத்தை பாதிக்கும்
·
அதிக
பொறுப்புக்கள் இருந்தாலும் தியானத்தில் ஈடுபடக்கூடாது.
உபாஸனை
லக்ஷணம் (மனதை
குவிப்பது, விரிப்பது)
நாம் எடுத்துக்கொண்டே
காரியத்தில் நம் மனதை அதில் நிலை நிறுத்த வேண்டும்.
1. இந்திரியங்களை, சரீரத்தை அமைதி படுத்த
வேண்டும்
2. மனதில் ஓடும் எண்ணங்களை கவனித்தல்
3. தியானத்தை பழக்கமாக மாற்றுவது
4. மனதை ஒருமுகப்படுத்துவதில் ஈடுபட
வேண்டும். மானஸ பாராயணத்தை செய்யாலாம்,
அதாவது ஏதாவது ஒரு மந்திரத்தை எடுத்துக்கொண்டு அதையே தியானம் செய்து கொண்டிருக்க
வேண்டும்.
5. உபநிஷத்தில் சொல்லப்படும் உபாஸனை முறை
மனதை விரிவுபடுத்த உதவும். (உ-ம்) விராட் உபாஸனை
6. நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்
இந்த ஸாதனையை நன்கு செய்து
தகுதிப் பெற்று விட்டால் ஞானயோகம் செய்வதற்கு செல்ல உதவும்.
ஞானயோகம்
ஞானத்தை, மோட்சத்தை அடைய
உதவும் சாதனம். இதை மூன்று நிலைகளாக
சொல்லபட்டிருக்கிறது. சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
சிரவணம்: குருமுகமாக வேதாந்த சாஸ்திரம் படித்தல்
மனனம் குருவிடம் படித்ததை சிந்தித்து சந்தேகங்களை நீக்குதல்
நிதித்யாஸனம் உபநிஷத்தில் தெளிந்த அறிவு பெறுதல், அதிலேயே நிலை பெறுதல்
மோக்ஷம் என்பது மன நிறைவை அடைவது, அது பூரணமாக
இருப்பது, கால, தேச வஸ்துவுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்றாக இருப்பது. எப்பொழுதும் நம்மிடையே இருப்பது. சாத்திய வஸ்து
என்பது இல்லாததை அடையும் வஸ்து, சித்த வஸ்து என்பது அடைந்ததையே அடைதல். அறியாமையால் ஒன்றை இழந்து விட்டு பிறகு தேடி
அதை அடைதல். இதற்கு அறிவை அடைந்து பின்
இழந்ததாக கருதப்பட்ட பொருளை அடைதல்.
ஞானத்தை அடைய உதவும் கருவிக்கு பிரமானம்
என்றும், அறிபவனுக்கு பிரமாதா என்றும், அறியப்படும் பொருளுக்கு பிரமேயம்
என்றும் கூறுவர்.
ஆத்மாவை அடைந்தவன் சோகத்தைக் கடக்கிறான். இந்த ஆத்மாவே அறிய வேண்டிய பொருள். எனவே இதை
அறிய உதவும் கருவி வேதாந்த சாஸ்திரம் அதாவது உபநிஷத். நானே பிரம்மம் என்று அறியும் போது சம்சார
பந்தத்திலிருந்து விடுபட்டு நிலையான இன்பத்தை அடைவோம்.
சிரவணம்
உபநிஷத் முதலில் ஜீவனைப்பற்றிப்
பேசுகிறது. பிறகு நாம் அனுபவிக்கும் இந்த
உலகத்தைப் பற்றி பேசுகிறது. இந்த உலகத்தை படைத்த இறைவனை பற்றி பேசுகிறது. உபநிஷத்
எந்த மைய கருத்தை விளக்க நினைக்கிறதோ அது புரியும் வரை நாம் படிக்கும் நிலைக்குத்
தான் சிரவணம்.
சாஸ்திரத்தினுடைய தாத்பர்யம் எதுவென்றால்
ஜீவன்-ஜகத்-ஈஸ்வரன், இதில் ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றே எனவும் நாம் அனுபவிக்கும்
உலகம் வெறும் தோற்றம் என்ற ஞானத்தை கொடுப்பதுதான்.
உபநிஷத் நான்கு வகையான கருத்துக்களை கூறுகிறது.
அவைகளை பற்றி விரிவாக விசாரம் செய்யப்படுகிறது.
1.
ஜீவாத்மாவைப்
பற்றிய விஷயங்கள்
2.
ஈஸ்வர விசாரம்
3.
ஜீவ-ஈஸ்வர
சம்பந்தம்
4.
இந்த மூன்றை
பற்றிய விஷயங்களை அறிவதனால் அடையும் பலன்
ஜீவ விசாரம்
ஜீவனிடத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறது. அவைகளாவது சேதன
தத்வம், அசேதன தத்வம்..
சேதன தத்வம்: இதுவே ஆத்மா என்றறியப்படுகிறது. இது அறிவு
ஸ்வரூபமுடையது. (உ-ம்) நான் அறிவுடையவன் (இங்கே ஆத்மாவை குறிக்கிறது)
அசேதன தத்வம்: இது அறிவற்றது, ஜடஸ்வரூபம் (உ-ம்) நான்
நடக்கிறேன் (இங்கே உடலை குறிக்கிறது)
ஆத்மா, அநாத்மாவின் சேர்க்கைதான் ஜீவன்.
ஜீவன் மூன்று உடல்களை கொண்டவன்.
1.
ஸ்தூல் சரீரம்:
நாம் அனுபவிக்கின்ற கண்ணுக்கு தெரிகின்ற உடல்.
இது ஆறு விதமான மாற்றத்துக்குட்பட்டது. பிறத்தல், வளர்தல், மாற்றம் அடைதல்,
தேய்ந்து கொண்டே வருதல், மறைந்து விடுதல். உலகிலுள்ள போகங்களை அனுபவிக்க இந்த உடல்
தேவைப்படுகிறது.
2.
சூட்சும சரீரம்(மனம்):
இது ஐந்து விதமான சூட்சுமமான பூதங்களால் உருவாக்கப்பட்டது. இதைக்கொண்டுதான் உலக விவகாரங்களில்
ஈடுபடமுடியும். அதனால்தான் இதை போக சாதனம்
என்றும் கூறலாம். இது 19அவயவங்களுடன் சேர்ந்து உள்ளது. ஐந்து
ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம் புத்தி,
சித்தம் மற்றும் அகங்காரம்.
ஞானேந்திரியங்கள் பார்த்தல், கேட்டல், நுகர்தல், தொட்டுணர்தல்,
சுவையுணர்தல்
கர்மேந்திரியங்கள் பேசும் சக்தி, கைகளில் இருக்கும் சக்தி,
கால்களில் இருக்கும் சக்தி, மலத்தை வெளியேற்றும் சக்தி, ஜீவ உற்பத்தி செய்யும்
சக்தி
பிராணன்கள் பிராணன்- வெளியே விடும் காற்று,
அபானன்- உள்ளே இழுக்கும் காற்று
வியானன்- உடலிலுள்ள ரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும்
எடுத்துச் செல்வது
சமானன்- உண்ட உணவை ஜீரணிக்கும் சக்தி
உதானன்- எதிராக செயல்படுகின்ற சக்தி
மனம் சங்கல்பம், விகல்பம், சந்தேகப்படுகின்ற
குணத்தை உடையது
புத்தி எதையும் நிச்சயம் செய்கின்ற குணமுடையது
சித்தம் நினைவுகள், எண்ணப்பதிவுகள்
அகங்காரம் நான் என்ற எண்ணத்திற்கு காரணமாக இருப்பது.
3.
காரண சரீரம்: எது
ஒன்று இந்த சூட்சும சரீரத்திற்கும், ஸ்தூல சரீரத்திற்கும் காரணமாக இருப்பதோ அதுவே
காரண சரீரமாகும்.
விதையானது மரத்திற்கு காரணம். இது நிர்விகல்பமானது
(வேறுபாடற்றது, எப்பொழுது தோன்றியது என்று கூற முடியாது). விகல்பம் என்றால்
வேறுபாடுடையது.
அனாத்மாவில் கவனம் செலுத்துவதால், நம்மால் ஆத்மாவை அறிய
முடியவில்லை. எனவே அனாத்மா ஆத்மாவை
மறைத்து விடுகிறது. இது ஐந்து விதமான
கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது.
1.
அன்னமய கோசம்:
இது ஸ்தூல சரீரத்தை குறிக்கிறது. உணவினால் தோன்றி, உணவால் காக்கப்பட்டு இறுதியில்
உணவாகவே மாறுகிறது.
2.
பிராணமய கோசம்:
இது சூட்சும சரீரத்தை சேர்ந்தது. ஐந்து கர்மேந்திரியங்கள்,
ஐந்து பிராணன்கள் சேர்ந்தது.
3.
மனோமய கோசம்:
மனம் + ஐந்து ஞானேந்திரியங்கள் சேர்ந்தது.
4.
விக்ஞானமய கோசம்:
புத்தி + ஐந்து ஞானேந்திரியங்கள் சேர்ந்தது
5.
ஆனந்தமய கோசம்:
காரண சரீரம்.
ஸ்தூல சரீரத்தின் மீது வைக்கும் அபிமானம் நீங்கினால் முதல்
கோசமானது விலகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம்.
ஆத்மா -
1.
இது அறிவு ஸ்வரூபமுடையது.
2.
அனாத்மாவில் உள்ள மூன்று சரீரங்களின் வழியே உலகத்தை
அறிபவன். (த்ரிக் ஸ்வரூபம் - அறிபவன்)
3.
இது நிர்விகாரஹ: இது மாற்றமுடையதல்ல
4.
இது ஸத்ஸ்வரூபம்: எப்பொழுதுமிருப்பது, நிலையானது
5.
இது ஒன்றேதான்: ஏக ஸ்வரூபம்
எப்படி ஸ்படிகமானது அதற்கு
பின்னால் உள்ள சிவப்பு மலரின் வர்ணத்தை உள் வாங்கி பிரகாசிக்கிறதோ அதே மாதிரி
ஆத்மாவில் அனாத்மாவின் லட்சணங்களை ஏற்றிப் பார்க்கப்படுகிறது.
ஈஸ்வர விசாரம்
இந்த ஜகத்திற்கு காரணமாக இருப்பவர் இவரை
இரண்டு விதமான தத்துவமாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ப்ரம்மம் மற்றொன்று மாயா
மாயையானது காரண பிரவஞ்சம், இது அநாதி,
பிரஹ்மத்தை சார்ந்திருக்கிறது. மாயையும்
பிரஹ்மமும் இணைந்து ஈஸ்வரனும் என்று சொல்லப்படுகிறது. எது படைக்கப்படுகிறதோ, தோற்றுவிக்கப்படுகிறதோ
அது காரியம்
என்றழைக்கப்படுகிறது. காரியத்திற்கு எது
காரணமோ அதற்கு காரணம் என்று கூறப்படும்.
(உ-ம்) காரியம் - பானை, காரணம் - களிமண்.
எந்தப்பொருளும் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்றால் இரண்டு விதமான் காரணங்கள்
இருக்க வேண்டும். அவை உபாதான காரணம், நிமித்த காரணம். இந்த உதாரணத்தில், களிமண்
உபாதான் காரணம், அதை உருவாக்கும் குயவன், சக்கரம், தடி ஆகியவற்றை நிமித்தக்காரணம்
என்று கூறலாம். இந்த உலகம்
படைக்கப்பட்டதிற்கு இறைவன் இந்த இரண்டு காரணங்களாகவும் இருக்கிறார். மாயையின் பார்வையில் ஈஸ்வரன் உபாதான காரணம்,
பிரஹ்மத்தின் பார்வையில் ஈஸ்வரன் நிமித்த காரணம்.
ஈஸ்வரன் பிரஹ்ம ஸ்வரூபமாகவே இருந்து கொண்டு மாயையே உடலாக கொண்டுள்ளார். ஈஸ்வரன் மாயா ஸ்வரூபத்தி்ல் இருந்து இந்த பிரபஞ்சம்
தோன்றியிருக்கிறது.
முதலில்
ஸூக்ஷுமமான ஆகாயம், வாயு, நெருப்பு, நீர், நிலம் தோற்றுவிக்கப்பட்டது. பின்பு இதிலிருந்து ஐந்து சூட்சுமமான
பூதங்களிலிருந்து, சத்துவ குணத்தை பிரதானமாகக் கொண்டு அந்தக்கரணம் (மனம், புத்தி,
சித்தம், அகங்காரம்), ஐந்து
ஞானேந்திரியங்களும், ரஜோ குணத்தை பிரதானமாகக் கொண்டு
ஐந்து கர்மேந்திரியங்களளும், ஐந்து பிராணன்களும்,தமோ குணத்தை
பிரதானமாகக் கொண்டு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து ஸ்தூல பூதங்கள் தோன்றின.
சத்துவ
குணம் - அறிவைக் குறிக்கும்
ரஜோ
குணம் - செயல், சக்தியை குறிக்கும்
தமோ
குணம் - ஜடமாக இருப்பதைக் குறிக்கும்.
இவைதளிலிருந்து
ஈஸ்வரனின் உடலில் இருந்து தோன்றிய அனைத்து உயிர்களும், அவரே இருக்கிறார் என்று
ஊகிக்கலாம்.
பிரஹ்ம
லட்சணம்: ஞான ஸ்வரூபம், நிர்விகாரம், சத்தியமாக இருப்பது, வேறொன்றையும்
சார்ந்திருப்பதில்லை. அஸத் என்பது மித்யா-
ஒன்றை சார்ந்திருப்பது.
ஜீவ-ஈஸ்வர
சம்பந்த விசாரம்:
ஐக்கிய
சம்பந்தம்[மஹா வாக்கியம்]
அறிவை கொடுக்கக்கூடிய கருவிக்கு பிரமானம் என்று பெயர். சாஸ்திரத்தை பிரமானமாகக் கொண்டு ஜீவ-ஈஸ்வர
தத்துவத்தை புரிந்து கொண்டோம். சப்த பிரமான சாஸ்திரம் மஹா வாக்கியத்தை (ஜீவ-ஈஸ்வர
ஐக்கிய சம்பந்தத்தை உணர்த்துகின்ற வாக்கியம்) உபதேசிக்கிறது.
மஹாவாக்கியம்தான்
மோட்சத்தை அடைவதற்கு உதவுகிறது.
மஹா
வாக்கியம்
·
ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை
போதிக்கின்ற வாக்கியம்
·
இரண்டுமே
ஒன்றுதான் என்று எடுத்துரைக்கிறது
·
ஜீவ-ஈஸ்வரனுக்கிடையே
வேறுபாடு கிடையாது என்றும் உபதேசிக்கிறது.
·
எங்கு வேறுபாடு
இருப்பதுபோல் இருக்கிற ஒரு விஷயத்தை சமன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மஹா
வாக்கியமத்தை புரிந்து கொள்வதன் பலன்
·
மோட்சத்தை அடைவது
·
பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்திலிருந்து
விடுபடுவது
·
துக்க நிவிருத்தி
·
நிலையான இன்பம்
·
மன நிறைவை அடைவது
·
பல விஷயங்களிலிருந்து விடுதலை அடைவது
மேற்குறிப்பிட்ட
நிலையை ஜீவன்முக்தி என்று அழைக்கப்படுகிறது.
விதேஹ
முக்தி:(கர்ம விசாரம்)
கர்ம
தத்துவம்
நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பலன் கட்டாயம்
உண்டு. இந்த கர்ம பலன் இரண்டுவிதமானது,
ஒன்று திருஷ்டப்பலன்-நாம் நேரிடையாக அனுபவிப்பது மற்றொன்று அதிருஷ்டபலன்- நம்
கண்ணுக்குத் தெரியாத பலன். (உ-ம்) தானம் செய்யும் கர்மத்திற்கு பலன் புண்ணியம். இந்த பாவ, புண்ணியங்கள் சுக துக்கங்களை
கொடுத்துவிட்ட பின்னர் தீர்ந்து விடும். சேர்ந்து விட்ட பாவ புண்ணியங்கள் பலன்
கொடுக்க கால அவகாசம் இருக்கிறது. இந்த சுக
துக்கங்களை அனுபவிக்க உடலும், உலகமும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உடலுடன் பிறக்க வேண்டும் என்று
தீர்மானிப்பது நம்முடைய பாவ,புண்ணீயங்கள்தான்.
பிராரப்த கர்ம பலனை அனுபவிக்கும்போது புதியதாக சேர்க்கப்படும் பாவ, புண்ணீயங்களுக்கு
ஆகாம கர்மம் எனப்படும். ஏற்கனவே இருக்கும் பாவ,புண்ணீயங்கள், பிராரப்த கர்ம பலனை
அனுபவிக்கும் பாவ,புண்ணீயங்களை விட்டு விட்டு இருப்பது சஞ்சித கர்மம் எனப்படும்.
மனனம் சாஸ்திரம் கொடுத்த
அறிவைப் பெற்றபின், அதற்கு முரண்பாடாக இருப்பதைப்பற்றி விசாரம் செய்வதற்கு மனனம். வேதாந்த சாஸ்திர பிரமாணத்தின் மூலம் பெற்ற அறிவு
வேறொரு பிரமானம். இதற்கு வேறாக
இருக்கும்போது அதை விசாரம் செய்து, தெளிவு பெறுவது மனனம்.
நிதித்யாஸனம் சிரவனத்தாலும்,
மனனத்தாலும் பெற்ற அறிவிலே நின்று பழகுதல். ஏனென்றால் இந்த சரீரத்தை மனதை
வைத்துக்கொண்டே, நான் ஆத்மா என்ற ஞானத்தை அடைந்திருக்கிறோம். எனவே சில காலம் இந்த
ஞானத்திலே நிலையாக இருத்தலே, நிதித்யாஸனம்.
இந்த நிலையை அடைந்தவற்கு ஸ்திதபிரக்ஞன், ஞான
நிஷ்டை அடைந்தவன் என்று அழக்கப்படுவான்.
தன்னிடத்திலே என்றென்றும் திருப்தியாக, மனநிறைவுடன் இருப்பவன்.
பக்தி
v இறவனை
நேசித்தல், வழிபடுதல் பூஜித்தல், நாடுதல் இவையாவும் பக்தியென்று கூறுவர்.
v சுகப்பிராப்தி-
சுகத்தை அடைய விரும்புவது
v துக்கநிவிருத்தி
- கஷ்டங்கள் விலக வேண்டுவது.
இவையிரண்டும் நம் முயற்சியிலே அடைய முடியாத நிலையில் நம் அகங்காரம் இறைவனை
நாடுவது. எனவே ஈஸ்வரனை சாதனையாகக் கொண்டு
சுகப்பிராப்தி, துக்கநிவிருத்தியான சாத்தியத்தை நாடுவது பக்தி எனக் கூற்வது
இப்படித்தான் பக்தியானது ஆரம்பமாகிறது.
சாதனையாகவும், சாத்தியமாகவும் இறைவனை பக்தி செலுத்தும் நிலைக்கு “நிஷ்காம” பக்தி என்று
பெயர். இது இரண்டாவது நிலையிலிருக்கும்
பக்தி. ஜிக்னாஸு - மோக்ஷத்தை அடைய
விரும்பும் பக்தனின் பெயர். இதை கர்மயோகம்
என்ற சொல்லலாம். இது உபாஸனையாகவும் அமையலாம்.
ஈஸ்வரனை ஆத்மாவென்று பக்தி செலுத்துதல் மூன்றாவது நிலை. இதையே ஞான லக்ஷண பக்தி என்று சங்கரர்
கூறுகிறார். இதில் இறைவன் சாதனையும் அல்ல,
சாத்தியமும் அல்ல. பகவான் இதை பராபக்தன் என்று கூறுகிறார்.
இவ்வாறு பக்தியானது மூன்று சாதைனைகளான கர்மயோகம், உபாஸனை, ஞானயோகம் இவைகளில்
இருந்தால்தான் பரமாத்வோடு ஐக்கியமாக முடியும்.
ஞானயோகத்திற்கு அடிப்படையான பண்புகளாக சாதன சதுஷ்டய சம்பத்தி என்கின்ற
நான்கு விதமான பண்புகள் முக்கியமாக தேவை. அவைகளாவது
1.
விவேகம் - நித்ய, அநித்ய வஸ்துவை
பிரித்தறியும் சக்தியை அடைவது
இந்த உலகம்
நிலையற்றது என்பதை அனுபவமூலமாக அறிய வேண்டும். இந்த ஞானம் அனுமானத்தின் மூலமாகவும்
அறியலாம். வேத சாஸ்திரமும் இதையே
உரைக்கிறது. இதைக் கொண்டு நாம் காணும்
இந்த உலகம் நிலையற்றது என்பதை உணரலாம்.
நிலையானது
எது என்பதை உணர வேத சாஸ்திரத்தின் உதவி கொண்டு அறிந்து கொள்ளலாம். அதாவது பரம்பொருள் ஒன்றுதான் நிலையானது என்பதை
தெளிவாக அறிந்து உணரலாம்.
கர்ம யோகத்தை
சரியாக கடைபிடித்தால்தான் இந்த விவேகம் சாத்தியமாகும். மனதில் உள்ள விருப்பு, வெறுப்புக்கள் நீங்கினால்தான்
இது சாத்தியமாகும்.
2.
வைராக்யம் - போகங்களில்
விருப்பமில்லாத நிலை
இதை முயற்சி
செய்துதான் அடைய முடியும். மோகத்தை
உண்டாக்கும் பொருட்களனைத்தும் ஈஸ்வரனுடைய படைப்புக்களும் என்னுடைய போகத்திற்கு
அல்ல என்று உணர்ந்து தெளிவடைதல்.
விவேகத்தை அடிக்கடி நினைத்துப்பார்த்தால் இந்த வைராக்யத்தை அடையலாம். இந்த
உலகத்திலுள்ள பொருட்களில் உள்ள தோஷத்தை பார்த்துக்கொண்டே இருந்தால் வைராக்யம் தானே
வந்தடையும். இது இருந்தால்தான் மனதை உலகத்தில் இருந்து பிரித்து விட முடியும்.
3.
சமம்- தமம் - உபரமஹ - திதிக்ஷா - சிரத்தை - சமாதானம்
1.
சமம் (மனக்கட்டுபாடு - மனதை நம்
வசம் வைத்துக் கொள்வது)
மனதானது
இந்திரியங்களாலும், நினைவு பதிவுகளாலும் சஞ்சலமடைகிறது. ஏற்கனவே மனதில் பதிந்துள்ள நினைவுகளில்
சமபந்தம் வைக்கமலும், புதிய நினைவுகளை சேர்க்க விடாமலும் அமைதியாக
வைத்திருத்தல். காமம், குரோதம், பொறாமை,
போன்ற தீய எண்ணங்கள் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். (ஜப, தியானங்கள் செய்து இதை பழக்கிக் கொள்ள
வேண்டும்.)
2.
தமம்(இந்திரியக்கட்டுபாடு),
மனம்
சஞ்சலபடுகின்ற விஷயத்திலிருந்து இந்திரியங்களை கட்டுபடுத்துதல்
3.
உபரமஹ (சமத்துடனும்,
தமத்துடனும் நிலை பெற பழகுதல்,
சமத்தையும்,
தமத்தையும் தொடர்ந்து கடைபிடித்தல்
4.
திதிக்ஷா -(பொறுமை, சகிப்புத்தன்மை)
இருமைகளை அனுபவிக்கும்போது ஒரே நிலையில் இருத்தல்,
சுக-துக்கம், சீத-உஷ்ணம் போன்றவற்றை சகித்துக்கொள்ளுதல்,
இதன் மூலம் உறுதியான மனதை அடைதல்
5.
சிரத்தை-( நம்பிக்கை, விசுவாசம்)
வேதாந்தத்தின் மீதும், அதை உபதேசிக்கும் குருவின் மீதும் வைக்க வேண்டிய விசுவாசம், நம்பிக்கை
6.
சமாதானம்-
எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனதை நிலையாக வைத்து
இருத்தல், ஞானயோக ஸாதனையில் மனதை வைத்து பழகுதல்
4.
முமுக்ஷுத்வம்
மோக்ஷத்தைடைய வேண்டும் என்ற ஆசை. மோக்ஷத்தை அடைய விரும்புகிறவர்கள் கடைபிடிக்க வேண்டிய சரியான
பாதை ஞானயோகம்தான்.
மேற்கூறிய
நான்கும் உடையவன் அதிகாரி என்று அழைக்கப்படுகிறான்.
ஓம் தத் ஸத்
No comments:
Post a Comment