சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 17-03-2022
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது – 17-03-2022
வேதாந்தத்தின்
லக்ஷணம் எதுவென்றால் உபநிஷத்தான். உபநிஷத் என்றால் பிரம்மஞானம். உபநிஷத்தான் பிரம்ம ஞானத்தை அடைவதற்கு சரியான
பிரமாணம்(கருவி).
காண்டம்-1
ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தத்ஜலான் (சிருஷ்டி, ஸ்திதி, லயம்)
இதி சாந்தஹ உபாஸிதஹ
பிரம்ம தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் (ஆதேஷம்) பற்றி குருவிடம் கேட்டாயா? எந்த ஒன்றை அறிந்தால் எல்லாமும் அறிந்துக் கொள்ள முடியுமோ அதை அடைந்தாயா? என்று அருணி, தம் மகன் ஸ்வேதகேதுவிடம் கேட்டார்.

ஒரு விஷயம்
புத்தியில் நிலை பெற வேண்டுமென்றால் கீழே கொடுத்துள்ள நான்கு படிகளைத்
தாண்டித்தான் வர வேண்டும்.
1. ஸம்ஸயஹ - சந்தேகம்
2. ஸம்பாவனா - இருக்கலாம்
3. நிஸ்சயஹ - சரிதான், நிச்சயமானதுதான்
4. நிஷ்டா - சரியென்பதிலே நிலைபெறுதல்
இதற்கு உதாரணமாக 4,5,6 ஸ்லோகங்கள்.
காரண-காரிய தத்துவத்தில் காரணத்தையறிந்தால் எல்லா காரியங்களும் அறிந்ததாகும். (விக்ஞாதேன - அறியபட்டால்) காரணமும் காரியமும் வேறாக இல்லாத காரணத்தினால் காரணத்தை அறிவதன் மூலம் எல்லா காரியத்தையும் அறிந்து கொள்ளலாம். காரியமும், காரணமும் வேறல்ல என்பது உண்மையானால் விவகாரத்தில் ஏன் வேறு வேறாக உபயோகிக்கிறோம்? காரணம் என்கின்ற தத்துவத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை (விகாரம்) செய்வதால் அதன் விளைவாக அது காரியமாக உருவாகிறது. (உ-ம்) ஒரு களிமண் துண்டானது விதவிதமான பாத்திரங்களை செய்ய உதவுகிறது.

எனவே
காரணம்+விகாரம் = காரியம். விகாரத்தின்
மூலம் பலவிதமான பெயர்கள் வந்து விட்டது.
இந்த பெயர்கள் (நாமம்) வாக்கிலிருந்து தோன்றுகிறது. எனவே விகாரமே பெயர் (நாமம்) என்றாகிறது. அதனால் காரணம் + நாமம் = காரியம். காரணத்துடன் சில சொற்கள் இணைவதன் மூலம்
காரியங்கள் உண்டாகின்றது.
விகாரஹ = நாமதேயம் - வாக்கிலிருந்து தோன்றிய பெயரே மாற்றமடைகிறது. வாக்கினுடைய வெளிப்பாடு, வாக்கிலிருந்து உருவாகிய பெயர்தான் மாற்றம் என்றாகிறது, இது காரணத்துடன் சேரும்போது பல காரியங்களாக வெளிப்படுகிறது.
ம்ருதிகா இத ஏவ சத்யம் - களிமண் மட்டும்தான் சத்யம். காரியத்துக்குள் காரணமும், நாமதேயமும் (ரூபம்) இருக்கிறது. இதில் காரணம் சத்யமாக இருக்கிறது. ஆனால் நாம் விவகாரத்தில் நாம ரூபத்தில் ஸத்யத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். நாமதேயம் அஸத்யமாக இருக்கிறது.

காண்டம்-2- << ஸத்-வித்யா >>
சூத்ர வாக்கியம்:
ஸதே3வ ஸோம்ய இத3ம் அக்3ரஹ ஆஸீத்3 ஏகம் ஏவ அத்விதீயம் |
காரியத்தை காரணமாக பார்க்கும்போது அது சத்யம், இதை நாம் நாமரூபமாக பார்க்கும்போது மித்யா. ஜகத்-ஒரு காரியம்- இது ஸத் பிரம்மமாக இருந்தது, இப்பவும் ஸத்தாகத்தான் இருக்கிறது ஆனால் நாமரூபத்துடன் இருக்கிறது. நாமரூபம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அதனுடைய இருப்பு என்ன? நிலையானதா, நிலையற்றதா, வெறும் தோற்றமா?.
எது ஒன்றை சார்ந்து இருக்கிறதோ அது மித்யா. நாமரூபம் வெளித்தோற்றதிற்கு வராத நிலை மாயா. ஸத் என்பதுடன் நாம ரூபங்களை சேர்த்தவுடன் உலகமாக தெரிகிறது. களிமண்ணுடன் நாமரூபங்கள் சேர்க்கும்போது பானைகளாக தோற்றமளிக்கிறது. நாமரூபங்கள் வெளியே இருந்து வருவதில்லை. அவைகள் வெளிதோற்றத்திற்கு வராமல் காரணத்துக்குள்ளே இருக்கிறது.
மாயா - அவ்யக்தம் - வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபம்
வ்யக்த - ஸ்ருஷ்டி - வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபம்

· ஸத்தை மட்டும் பார்க்கும் நிலை - நிர்குண பிரம்மம்
· ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபத்தையும் சேர்த்து பார்த்தல் - சகுண பிரம்மம் - மாயா
· ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபத்தையும் சேர்த்து பார்ப்பது - உலகம்
ஸவிசேஷம் - நாம்
அனுபவிக்கும் விஷயங்கள் அஸ்தி மாத்திரமே
ஸத் மட்டும் உள்ள
லட்சணங்கள்
· நிர்விசேஷம் - குணங்களற்றது
· ஸர்வகதம் - எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது, எல்லா இடத்திலும் ஊடுருவி இருக்கிறது
· நிரஞ்சனம் - தூய்மையானது (நாம ரூபம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் தூய்மையாகவே இருக்கும்)
· நிர் அவயவம் - அவயவங்களற்றது, பிளவுகளற்றது, பகுதிகளற்றது.
சாஸ்திரம் மூன்று
விதமான வேற்றுமைகளை செல்கிறது.
1. ஸ்வகதபேதம் - தனக்குள்ளே இருக்கிற வேற்றுமை, மரம் ஒன்றுதான் ஆனால் அதற்குள்ளே விதவிதமான பகுதிகள் இருக்கிறது.
2. ஸஜாதீய பேதம் - தன்னுடைய ஜாதிக்குள்ளே வேற்றுமை இருத்தல், மரம் என்ற ஒரே ஜாதி, ஆனால் விதவிதமான மரங்கள் இருத்தல்
3. விஜாதீய பேதம் - முற்றிலும் வேறுபட்டது, மரம், விலங்கு, மனிதன்
இந்த மூன்று
வேற்றுமைகளும் பிரம்மத்தில் கிடையாது. இது ஒன்றாகவே இருப்பதால் முதல் பேதம்
கிடையாது, இது தவிர வேறொன்று கிடையாது என்பதால், அதனுடைய வேறு ஜாதி கிடையாது.
அத்விதீயம் - இரண்டற்றது.
மித்யா - இல்லாதது ஆனால் இருப்பதுபோல் காட்சியளிக்கிறது.

இல்லாததிலிருந்து இருத்தல் வராது, இல்லாததும் வராது, எனவே இருப்பது போல் தெரிவதெல்லாம் மித்யா. எனவே இவைகளெல்லாம் தோன்றுவதற்குமுன் ஸத்தாகவே இருந்தது, அது ஏகம் ஏவம் அத்விதீயம்.
விக்ஞேயம் - ஞான யோக்யம் - இந்த உலகில் நாம் அறிவதற்கு யோக்யமானது - ஸத் (பிரஹ்மம்), மற்றதெல்லாம் மித்யாதான். அபரா வித்யா என்ற அனைத்தும் அவித்யாதான் என்று அறிவது (அயதார்த்தம்). புத்தியில் வருகிற அமைதிதான் மோட்சம், மனதில் வருகிற அமைதி சோக நிவிருத்தி. இந்த பிரதிக்ஞை (ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்) காரண, காரிய விசாரத்தின் மூலம் அடையலாம்..
காரண, காரிய
விசாரம்:
· காரணம் என்கிற தன்மை ஒரு
வஸ்துவிற்கு கொடுக்கப்படுகிறது.
· காரியங்கள் தோன்றுகின்றன
(ஸ்ருஷ்டி)
· காரண காரியங்களை
ஐக்கியபடுத்துதல் என்ற அறிவை புகட்டுதல்
· காரியம் என்பது ஒன்றில்லை
என்று நிச்சயப்படுத்துதல்
· காரணமும் கிடையாது
ஸ்ருஷ்டி (படைப்பு)
ஸ்ருஷ்டி என்பது மித்யா என்று நிரூபித்தல்.
சகுண பிரம்மனான ஈஸ்வரன், ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க ஆலோசனை செய்யும்போது மாயா வந்து சேர்ந்து கொள்கிறது. நான் பலவாக ஆவேனாக, நான் என்னை பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று ஈஸ்வரன் நினைத்தார். ஸத் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறது.
அது அக்னியாக பிறப்பெடுக்கிறது, அக்னியானது நீராக பிறப்பெடுக்கிறது.

காண்டம்-3
ஸ்தூல சரீரங்கள்
மூன்று வகையாக தோன்றுகிறது. அவைகள் ஒன்று
முட்டையில் இருந்து (பறவை, பாம்பு மற்றும் பல), இரண்டவாது கர்ப்பத்திலிருந்து
(மனிதன், விலங்குகள்), மூன்றாவது பூமியிலிருந்து (மரம், செடி, கொடிகள் மற்றும் பல). இந்த சூட்சும பூதங்களுடன் சித் ஸ்வரூபமாக
(அறிவு ஸ்வரூபமாக) இதற்குள் நுழைவேன், பிறகு நாமரூபங்களை தோற்றுவிப்பேனாக என்று
ஆலோசனை செய்தது. இவ்வாறாக ஜீவன் பல நாமரூபங்களுடன் தோன்றியது. அவைகளுடன் மூன்று
தன்மைகளையும் சேர்த்துகொண்டது. பிறகு ஸ்தூல பூதமாக மாறுகிறது,
.
.
காண்டம்-4
எப்படி ஒரு ஸ்தூல
பூதத்துக்குள் மற்ற ஸ்தூல பூதங்கள் சேர்ந்துள்ளன.
அபவாதம்- நீக்குதல் (நாம ரூபங்களை நீக்குதல்)
அத்யாரூப அபவாத நியாயம்- ஒரு வஸ்துவானது பலவாக தோன்ற வேண்டும். (உ-ம்) பருத்தியிலிருந்து நூல், துணி என்ற பலவாக தோற்றமெடுத்துள்ளது. உண்மையில் எல்லா நாம ரூபத்திலும் இருப்பாக இருப்பது பருத்திதான்.

அபவாதங்கள்
· பார்க்கின்ற ஸ்தூல
விஷயங்கள் அனைத்தும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்று நிச்சயித்துக் கொள்ள
வேண்டும்.
· பின்னர் இருக்கின்ற பஞ்ச
சூட்சும பூதங்களையும் நீக்க வேண்டும்
· பிருத்வியை நீரிலும்,
நீரை நெருப்பிலும், நெருப்பை காற்றிலும், காற்றை ஆகாசத்திலும் ஒடுக்க வேண்டும்.
· கடைசியாக ஆகாசத்தை
பிரம்மத்தில் ஒடுக்க வேண்டும்.
· ஸ்தூல அக்னியானது மூன்று
சூட்சுமமான பூதங்களுடைய சேர்க்கை என்பதால் அதுவே மித்யா. ஸ்தூல அக்னியில் உள்ள மூன்று சூட்சுமமான
பூதங்கள் மூன்று நிறங்களால் குறிக்கப்படுகிறது
· சிவப்பு நிறம் - அக்னி;
வெண்மை நிறம் - நீருக்கும்; கருமை நிறம் - நிலத்துக்கும்;
உவமையாக்கப்படுகிறது.
· அக்னியில் தோன்றும்
மூன்று நிறங்களானது மூன்று சூட்சுமமான பூதங்கள். இவைகளெல்லாம் வெறும் நாம ரூபங்களே
அதாவது வெறும் வார்த்தைகள்தான். ஆகவே
ஸத்யமாக இருப்பது மூன்று சூட்சுமமான பூதங்கள்தான்.
· எனவே ஸ்தூல அக்னியானது
அறிவினால் நீக்கப்படுகிறது. இவ்விதமாக
மற்ற ஸ்தூல பூதங்களையும் நீக்கி விட வேண்டும்.
இந்த மூன்று பூதங்களே திரிவிதகரணம் மூலமாக ஜீவனை அடைந்து ஸ்தூல சரீரத்தை அடைவதைப்பற்றி இனி விளக்கப்படுகிறது.
காண்டம்-5 (ஸ்தூல, சூட்சும
சரீரத்தைப்பற்றி)
· மாயையானது மூன்று குண
வடிவானது. இதிலிருந்து ஆகாசம், வாயு,
அக்னி, நீர், நிலம் என ஐந்து பூதங்கள் தோன்றியது.
இந்த ஐந்து பூதங்களிலும் மூன்று குணமும் இருக்கிறது.
· சூட்சுமமான
பூதங்களிடமிருந்து சத்துவகுணமான மனம் போன்ற ஞானேந்திரியங்கள், ரஜோ குணமான பிராண
தத்துவம், தமோ குணமான ஸ்தூல சரீரங்கள் தோன்றுகின்றன.
· நாம் உண்ணும் உணவும்
மூன்று வகையாக உள்ளது. ஸ்தூலமானவைகள் மலமாக வெளியே போகிறது, இடையில் உடல் தசைகளாகிறது,
சூட்சும நிலை மனதுக்கு போகிறது, அதன் போக்கை மாற்றுகிறது. இது பிருத்வி தத்துவத்தை
உணர்த்துகிறது.
· நாம் நீரை அருந்தும்
பொழுது அது மூன்று பாகமாக பிரிகின்றது.
அந்த நீரிலிலுள்ள ஸ்தூலமானது சிறுநீராக வெளியேறுகிறது. மத்தியமாக இருக்கும் பாகமானது ரத்தமாக மாற்றப்படுகிறது. சூட்சுமமான பாகமானது பிராணனாக மாறுகிறது.
· நெய், வெண்ணெய், எண்ணெய்
- அக்னி வகையறாவாக கூறப்படுகிறது.
ஸ்தூலமான பாகம் - எலும்புக்கு சக்தியாகிறது
இடைப்பகுதியானது - எலும்புக்குள் உள்ளே திரவம், மஜ்ஜையாகிறது
சூட்சும பாகமானது - நாம் பேசும் சக்தியாகிறது.
காண்டம்-6
தயிரிலுள்ள சூட்சும பாகம், கடையும்போது வெண்ணெயாக வெளிப்படுகிறது. அதேபோல திட உணவு சாப்பிட்ட பிறகு அதை உடலிலிருக்கும் வெப்பமானது வாயுவின் உதவியுடன் ஜீரணித்து அதிலிருக்கும் சூட்சுமமான பகுதியை மனதுக்கு அனுப்புகிறது, இதனால மனமானது சக்தியை பெறுகிறது. அதேமாதிரி குடிக்கும் நீரிலிருந்து சூட்சுமமான பகுதியானது வெளிப்பட்டு பிராணனுக்கு செல்கிறது. சாப்பிடும் உஷ்ணமான பொருட்களிலிருக்கும் சூட்சுமமான பகுதியானது நாம் பேசும் பேச்சாக வெளிப்படுகிறது. அடுத்த பகுதியில் உணவானது எப்படி மனதுக்குள் செல்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது.

காண்டம்-7
1. மனிதர்கள் பதினாறு வகையான சக்திகளை கொண்டவர்கள். அதாவது மனதுக்கு இந்த
சக்திகள் உள்ளன. அவைகள் சுவை, ஒளி, ஊறு,
ஓசை, நாற்றம் போன்றவை. பதினைந்து
நாட்களுக்கு உணவும் எதுவும் உட்கொள்ளாமல், வெறும் நீரை மட்டும் அருந்த வேண்டும் என்று
தந்தையான குரு மகனுக்கு கட்டளையிட்டார். நீரானது பிராணனுக்கு அத்தியாவசியமானது அது
உடலை உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும்.
2. விரதம் முடித்து வந்த ஸ்வேதகேது, நான் தாங்கள் சொல்லியபடி விரதத்தை முடித்து
விட்டேன், இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். “நீ இப்போது மூன்று
வேதங்களையும் சொல்.” என்று குரு கூறினார். அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்வேதகேது, “என்னிடத்தில் இப்போது
சக்தி எதுவும் இல்லை, அதனால் ஒன்றும் சொல்ல முடியாது” என்று
பதிலளித்தான்.
3. கொழுந்து விட்டு எரியும் தீயில் எது போட்டாலும் பஸ்பமாகி விடும், ஆனால் சிறிய
நெருப்பினால் அதைவிட பெரிய பொருட்களை எரிக்க முடியாது. அதுபோல உன்னுடைய பதினாறு சக்திகளெல்லாம்
அடங்கிப் போய் ஒரு சக்திதான் இருக்கிறது, அதை வைத்துக் கொண்டு உன்னால்
வேதங்களையெல்லாம் சொல்ல முடியாது
4. இப்போது சென்று சாப்பிட்டு வா, அப்போது உனக்கு நான் சொன்னதெல்லாம் புரியும்
என்று கூறினார். உணவை உண்டு விட்டு வந்து அவர் கேட்ட எல்லா வேதங்களை சொன்னான்.
5. சிறிய நெருப்பை பெரிதாக்கினால், அதில் எதைப்போட்டாலும் எரித்து விடும். அதுபோல் உன்னிடமிருந்த ஒரு சக்தியை வைத்து உணவை
உண்ட பின் உனக்கு எல்லா சக்திகளும் திரும்ப வந்ததால்தான் உன்னால் வேதங்களை தெளிவாக
சொல்ல முடிந்தது.
6. இதிலிருந்து அன்னமானது மனம் செயல்படுவதற்கு அவசியமாகிறது என்று நிரூபிக்கப்படுகிறது
7. இதிலிருந்து நீரானது பிராணமயம், அக்னியானது வாக்குமயம் என்பதும் அவனுக்கு
புரிந்து விட்டது.
காண்டம்-8(ஆத்ம விசாரம்)
த்ருக்-திருஷ்ய விவேகம், பஞ்சகோச விவேகம், அவஸ்தாத்திரய விவேகம், தேகத்திரியா விவேகம் இவைகளெல்லாம் ஆத்ம விசாரத்திற்கு உதவும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக ஆத்ம தத்துவம் விசாரம் செய்யப்படுகிறது.

1.
ஒரு ஜீவன் ஆழ்ந்து உறங்கும்போது காரண சரீரத்திற்கு சென்றுள்ளான் என்று அறிந்து
கொள்ள வேண்டும். கனவு
உறக்கத்திலிருக்கும்போது சூட்சும சரீரத்திற்கு சென்றுள்ளான். அதாவது ஆழ்ந்த
உறக்கத்தில் ஜீவனுக்கு பிரம்ம பிராப்தி கிடைக்கிறது, தன் ஸ்வரூபத்திலே
நிலைபெறுகிறான். இதிலிருந்து பிரம்மமும்,
ஜீவனும் ஒன்றே என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது. காரண சரீரத்தை அடைவதை பிரம்மத்தை அடைகிறான்
என்று எப்படி சொல்ல முடியும். பிரம்மம்
சம்சாரமற்றது, ஆழ்ந்த உறக்கத்திலும் சம்சாரம் கிடையாது, எனவே இது பிரம்மத்தை
அடைந்ததற்கு ஒப்பாகும். உதாரணமாக நிழலில்
நிற்கிறேன் என்று கூறினாலும் அவன் நிலத்தில்தான் நிற்கிறான், அதேபோல காரண சரீரத்தை
அடைகிறான் என்பது அதனை சார்ந்திருக்கும் பிரம்மத்தைதான் அடைகிறான். ஒரு பொருள்
காரணத்தில் இருக்கும்பொழுது அதை இல்லையென்றுதான் சொல்லுவோம். (உ-ம்) களிமண்
இருக்கும்போது பானை இல்லை என்கின்றோம்
2.
பறவையை கயிற்றால் நடுக்கடலில் போய்க்கொண்டிருக்கும் கப்பலிலுள்ள ஒரு தூணில்
கட்டுகிறோம். பறவை பறந்து போக பல தடவை
முயற்சி செய்து, பிறகு துவண்டு போய் மீண்டும் கட்டப்பட்ட இடத்திற்கே வந்து
அமர்ந்து கொள்ளும். அதேபோல ஜீவன் விழிப்பு
நிலையிலும், கனவிலும் மனதைக்கொண்டு இன்பமான, துன்பமான அனுபவங்களை தன் விருப்பத்தாலும்,
அறியாமையினாலும் அடைகிறான். பின்பு எதிலும் அமைதியை அடையாமல் திரும்பவும்
பிராணனிடமே வந்து விடுகிறான். எங்கு சென்றாலும் அமைதியை பெற முடியாது,
தன்னிடத்திலேயேதான் நிரந்தரமான அமைதியை அடையலாம், அடையமுடியும். ஏனென்றால் அது
பிராணனால் கட்டப்பட்டிருக்கிறது. பிராண
பந்தனம் - ஜீவன் பிரம்மத்தை சார்ந்து இருப்பவன்.
ஆஸ்ரயம் - கட்டுபடுதல், ஜீவன் விழிப்பு நிலையில், ஸ்வப்னத்தில் அமைதியற்று
இருக்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில்
ஐக்கியமானவுடன் அமைதியாக இருக்கிறான்.
3.
ஜீவனுடைய ஆத்மா - பிரம்மஸ்வரூபம், அஸனாய - பசி, பிபாஷா - தாகம்; பசிக்கு
அன்னம் காரியம், தண்ணீர் காரணம், தாகத்துக்கு தண்ணீர் காரியம், அக்னி காரணம்.
பசிக்கும்போது நாம் உண்ணும் உணவானது நீர் தத்துவமானது, ஸ்தூலமான உணவை திரவமாக்கி
உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. தாகமானது அக்னியான நீரை வாயுவாக்கி
விடுவதால் தாகம் மீண்டும் எடுக்கிறது.
எனவே அக்னி காரணம் என்று உறுதிபடுத்துகிறது.
4.
ஸ்தூல சரீரத்திற்கு மூல காரணம் அன்னம்தான், இதைத்தவிர வேறெதுவும் இருக்க
முடியாது. இவ்வாறாக இந்த அனைத்து
படைப்புக்களும் ஸத்தை மூலமாக கொண்டுள்ளது. ஸத்மூலாஹ-ஸத் மூலமாக உள்ளது; ஸத்தாயதனஹ-
ஸத்தைச் சார்ந்துள்ளது; ஸத் ப்ரிதிஷ்டா-ஸத்தில் லயம் அடைகிறது.
5.
இந்த ஸ்லோகத்தில் நீர் காரியம், தேஜஸ் காரணம். ஜீவன் குடிக்கும் நீரை, உஷ்ணமானது
எடுத்துக்கொண்து ரத்தம் போன்ற திரவ பொருளாக மாற்றி விடுவதால் அவனுக்கு நீர்
குடிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது.
எனவே அக்னியானது “உதானன்” என்று அழைக்கப்படுகிறது.
6.
உயிர் போகும் நிலையிலுள்ள மனிதனுடைய பேச்சானது மனதில் ஒடுங்குகிறது. மனமானது பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன்
தேஜஸில் ஒடுங்குகிறது, தேஜஸானது ஸத் பிரம்மத்தோடு ஒடுங்குகிறது.
7.
சூட்சுமமான இவையனைத்தும் ஸத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதுவே உண்மையாகும்,
அதுவே ஆத்மாவாகும். அதுவே நீயாக இருக்கிறாய். அனிமா: சூட்சுமம் எந்தக்காரணத்தினால்
ஸத்தை சூட்சுமம் என்று சொல்லப்படுகிறது.
அதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவைகள்
a. நிர்குணவாத - நிர்குணமாக இருப்பதனால் குணங்கள் குறைய குறைய சூட்சுமாகிக் கொண்டே போகும்.
b. அவ்யக்தவாத - வெளித்தோற்றத்திற்கு வராததால்
c. ஆத்மத்வாத், அவிஷயத்வாத் - இந்த ஸத் நானாக இருப்பதால், அல்லது விஷயமாக இல்லாததால்
d. காரணவாத் - அனைத்திற்கும் காரணமாக இருப்பதால்
ஸத்தில் ஸ்வரூபம் - அனந்தம், இது பெரிதுமில்லை, சிறியதுமில்லை.
ஐதாத்மியம்- இதையே சாரமாக கொண்டுள்ளது. அதாவது எல்லா
ஸ்ருஷ்டிகளும் ஸத்தையே சாரமாக கொண்டுள்ளது.
உதாரணமாக எல்லா தங்க நகைகளுக்கும் தங்கமே ஆதாரமாக இருப்பதைப்போல. தங்கம் இல்லாமல் ஆபரணமில்லை, ஆனால்
ஆபரணமில்லாமல் தங்கம் மட்டும் இருக்கும். இவ்வாறாக பிரம்மம் சத்யம், மற்றதெல்லாம்
மித்யா என்றறியலாம்.
ஸத்யம், இதற்கு இரண்டு லக்ஷணங்கள் உண்டு. ஒன்று அபாத்யம்- நீக்க முடியாதது (ஞானத்தால்), அபாவத் த்ரய சூன்யம்- மூன்று விதமான இல்லாமை அற்றது. மூன்று காலங்களிலும் இருப்பது - நித்யம் என்று பொருள்.

ஆத்மா என்பது
சைதன்ய ஸ்வரூபம்; ஸத் - சித் ஸ்வரூபம், ஸத் சித்தாகத்தான் இருக்க வேண்டும்,
இல்லையென்றால் அது ஜடமாக இருக்கும்.
எதுவெல்லாம் ஜடமாக இருக்கிறதோ அதுவெல்லாம் த்ருஷயம் (பார்க்கப்படுவது). எதையாவது சார்ந்திருக்கும், இவையெல்லாம்
மித்யாவின் லட்சணமாக இருப்பதால், ஸத் மித்யாவாகி விடும். எனவே ஸத்தானது
சித்தாகத்தான் இருந்தாக வேண்டும். இது அறிவு ஸ்வரூபம், சைதன்யம். இந்த சைதன்யத்தை நீக்க
முடியாது என்று நிரூபிக்க வேண்டும். சைதன்யம்தான் எல்லா-வற்றையும் நீக்க முடியும்,
இதை எதனாலும் நீக்க முடியாது. எனவே ஸத்தை
நீக்க முடியாததாக இருப்பதால், இது ஸத்தாக இருக்கிறது.
த்வம் - இதுவரை விளக்கப்பட்ட ஸத்துதான் அஹம் என்று புரிந்து
கொள்ள வேண்டும். நான் என்று சொல்லும்போது என்ன தோன்றுகிறது? ஏதோ ஒரு அறிவை
உணர்த்துகிறது. என்னுடையது, இருக்கிறது
என்பதை பார்க்கிறேன் என்று அறிவினால் நீக்கினால் பின்பு ஸத் மட்டும்தான் இருக்கும்
அதுதான் நான் என்று தெளிவடைய வேண்டும். இந்த உடல், மனம், புத்தி எல்லாமே த்ருஷ்யம்
(பார்க்கப்படுவது) என்று உணர வேண்டும்.
இந்த ஞானத்தின்
பலன் ஜீவன் முக்தி அடைதல், அனைத்துவிதமான சம்சார நிவிருத்தி. மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி அமைதியடையலாம்.
பிரயோஜன விசாரம்
நான் ஸத்தாக இருக்கிறேன் என்ற அறிவை அடைவதால் என்ன பயன்?
பிரம்மஞானத்தால் புதியதாக ஒன்றும் அடையப்படுவதில்லை. ஆனால் ஏதோவொன்று நம்மை விட்டு போய் விடுகிறது. அவை இரண்டாக இருக்கிறது. ஒன்று கர்த்ருத்வம் மற்றொன்று போக்த்ருத்வம்.
வார்த்தைகள்தான்
சம்சாரம், ஏனெனில் வெவ்வேறு வகையில் இந்த வார்த்தைகள் நம்மை கட்டுப்படுத்துகின்றன.
ஆனால் தத்வமஸி என்ற வார்த்தை இவ்வகையில் கட்டுபடுத்திக் கொண்டிருக்கும்
தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கின்றது.
நான் எந்தப்பொருளோடும் சங்கமற்றவனாக இருக்கிறேன் என்ற அறிவை அடைகிறோம். மற்ற வாக்கியங்கள் நம்மை கர்த்தாவாகவோ அல்லது
போக்தாவாகவோ ஆக்கிவிடும். நான் பிறரது ஆணைக்கு கட்டுபட்டவன், மாற்றத்திற்கும்,
அழிவுக்கும் உட்பட்டவன் என்பதிலிருந்து விடுதலை பெற்று விடுவோம்.
பூர்வபக்ஷ விசாரம்
· அதத்வமஸி - நீ ஸத்தாக இல்லை
என்றும் பொருட்கொண்டால், நான் பிரம்மம் இல்லையென்று எனக்குத் தெரிகிறது. அதனால் இது உபதேசமாகாது. நான் ஏற்கனவே சம்சாரி என்று அறிந்துள்ளேன்
அதனால் திரும்பவும் நீ சம்சாரி இல்லையென்று வேதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
· தத் த்வம் அஸி- அதனுடையதாக நீ
இருக்கிறாய். அந்த ஈஸ்வரனுடைய அங்கமாக நீ இருக்கிறாய்
என்று சொல்வதால், அங்கம், அங்கி என்ற பந்தம் வந்து விடுகிறது. எனவே ஈஸ்வரன் எல்லா சம்சாரிகளையெல்லாம் அங்கமாக
வைத்திருக்கிறார் என்றாகி விடும்.
சூரியனும், யாகத்தில் உள்ள கம்பும் ஒன்றுதான் என்று உபாஸிக்க வேண்டும்.
மனதையும், பிரம்மமாக பாவித்து
உபாஸிக்க வேண்டும். உபசாரஹ: நீ அங்கமாக இருக்கிறாய், ஏனெனில் இரண்டுக்கும் சமமான
குணமாக இருப்பதால் இப்படி சொல்லலாம். அதேபோல ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் சில சமமான
குணங்கள் இருப்பதால் நீ அதுவாக இருக்கிறாய்.
இந்த உபசாரத்தில் பந்த நிவிருத்தம் கிடைக்காது
· ஸ்துதி வாக்யம் - வேதத்தில் சில
இடங்களில் நீ இந்திரனாக இருக்கிறாய் என்று புகழாரம் சூட்டுவது போல் இருக்கிறது இந்த வாக்கியம்
பதில்: இது உபாஸன பிரக்ரணம் அல்ல, இது ஞான பிரக்ரணம். அதாவது நமக்கு தெரியாத அறிவு நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று தெரியபடுத்துகிறது.
காண்டம்-9
ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமாதி விடுகிறோம் என்று ஜீவர்களால் எதனால் அறிய முடியவில்லை? அந்த அக்ஞானத்திற்கு என்ன காரணம்?
தேனியானது விதவிதமான மலர்களிலிருந்து தேனைக்கொண்டு வந்து தேன்கூட்டில் சேர்க்கிறது. அப்படி சேர்ந்துள்ள தேனில் எந்த மலரிலிருந்து கொண்டு வந்த தேன் எந்த பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. அதுபோல ஜீவர்கள் பிரம்மத்தோடு சேரும்போது அவர்களது தனித்தன்மையை இழந்து விடுவதால் எங்கிருந்து நான் இங்கு வந்தேன் என்ற அறிவு ஏற்படாது.
அவன் எப்படி திரும்பவும் அதே தனித்தன்மையோடு விழித்தெழுகிறேன் என்றால், அவனுடைய கர்மவசத்தாலும், ஆத்ம அக்ஞானத்தாலும் இது சாத்தியமாகிறது.

காண்டம்-10
நான் பிரம்மத்திலிருந்து வந்தவுடன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவுடன், ஏன் என்னால் பிரம்மத்திலிருந்து வந்தேன் என்று தெரியவில்லை?
பிரம்மத்தை அடையும்போது நம் தனித்தன்மையை இழந்து விடுவதால், நம்மால் சொல்ல முடியவில்லை. (உ-ம்) நதிகள் கடல்நீரால்தான் மழையாகி உருவாகின்றன். ஆனால் அவைகள் திரும்பவும் கடலிலே கலந்து விட்ட பிறகு அதனதன் தனித் தன்மையை இழந்து விடுகின்றது.
காண்டம்-11
உயிருள்ள மரத்தை எங்கு வெட்டினால், வெட்டிய இடத்திலிருந்து நீர் வருகின்றது. ஆனால் வெட்டி காய்ந்து கீழே இருக்கும் கிளையை மீண்டும் வெட்டினால், நீர் வருவதில்லை. ஜீவனுக்கு இநத சரீரம் அவன் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவிப்பதற்கும், உலக போதங்களை அனுபவித்து பாவ புண்ணியங்களை தீர்ப்பதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இந்த உடலையே ஜீவனாக பார்க்கிறோம். ஜீவன் இந்த உடலில் இருக்கும்வரை உயிருடன் இருக்கிறது அது வெளியேறியதும் உடல் ஜடமாகி விடுகிறது.
ஜீவன் என்பவன் யார்? மூன்று தத்துவத்தின் சேர்க்கையாக இருப்பவன் ஜீவன். அவைகள் அறிவு ஸ்வரூபம் (ஸத்-சித், சுத்த சைதன்யம்), சூட்சும சரீரம் (மனம்), சிதாபாசம் (மனதில் பிரதிபலிக்கும் ஸத்). எப்போது ஜீவன் இந்த உடலில் இருக்கிற அபிமானத்தை எடுத்து விடுகிறதோ அப்போது மரணம் சம்பவிக்கின்றது. எனவே உபநிஷத் கூறுகிறது, இந்த சரீரம் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, எனவே இந்த உடல் மரணத்தால் அழிந்தாலும் நீ அழிவதில்லை. மரமானது வெட்டிய கிளையிலிருந்து அபிமானத்தை எடுத்து விடுவதால் அது காய்ந்து போய் விடுகிறது. எனவே மரத்திலுள்ள காய்ந்த கிளைகளிலிருந்து அதிலிருக்கும் ஜீவன் தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அந்த கிளை அந்த நிலையிலிருக்கிறது. முழு மரமும் காய்ந்து போயிருந்தால், ஜீவன் அந்த மரத்திலிருந்தே தன் அபிமானத்தை எடுத்து விட்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அதுபோல ஜீவன் உடலிலிருந்து முழுவதுமாக தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அது மரணமடைகிறது.
காண்டம்-12
காரணத்திலுள்ள குணங்கள்தான் காரியத்தில் இருக்கும் என்பது விதி, ஆனால் நிஷ்கலம், நிர்குணமாக உள்ள பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சம் விதவிதமான குணங்களுடன் இருப்பது ஏன்? சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான உலகம் எப்படி வந்தது?
ஆல்மரத்தின் பழத்தை உடைத்து பார்த்தால், அதில் சிறிய சிறிய விதைகள் இருக்கும். அந்த விதையை உடைத்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஒன்றுமே இல்லாத விதையிலிருந்து எப்படி இவ்வளவு பெரிய ஆலமரம் வந்ததோ, அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான பிரபஞ்சம் தோன்றியது. விதையில் இல்லாத குணங்களை மரத்தில் பார்க்கிறோம். காரியத்தில் இருக்கும் குணங்கள் காரணத்தில் இருந்தும், வெளித்தோற்றதிற்கு வராமலிருக்கலாம். அதாவது எப்படி ஆலமரம் விதையிலிருந்து வளர்ந்து பெரிய மரமாக வளர்ந்திருக்கிறதோ அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து வெளிவந்த ஸ்தூலமான பிரபஞ்சத்தில் தோன்றும் குணங்கள் வெளித்தோற்றத்திற்கு வராமல் இருந்து இருக்கிறது. அதைத்தான் மாயை என்று அழைக்கிறோம். மாயைக்கும் இந்த உலகத்திற்கும் சம்பந்தம் ஆலமர விதைக்கும், ஆலமரத்திற்குமிடையே உள்ள சம்பந்தம் போன்றதுதான். பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள சம்பந்தம் கயிற்றுக்கும் அதில் தோன்றிய பாம்புக்கும் உள்ள சம்பந்தம் போன்றது. எனவே ஒன்று எதனைச் சார்ந்திருக்கிறதோ அது மித்யா என்று அறியலாம்
காண்டம்-13
ஒரு பொருள் இருந்தால் அது நமக்கு தெரியவரும். ஒரு பொருள் தெரியவில்லை, அதே சமயம் அது இல்லை என்று உறுதி செய்கின்ற மாதிரி ஏதாவது ஒரு பிரமாணம் இருந்தால் அதை உபயோகித்து உறுதி செய்ய வேண்டும். ஒரு பொருள் தெரியவில்லை என்ற ஒரு பிரமாணத்தை வைத்து சொல்லிவிடக்கூடாது, வேறொரு பிரமாணத்தையும் உபயோகித்து முடிவுக்கு வரவேண்டும்.
உதாரணமாக நீரில் கரைக்கும் முன் கண் என்ற பிரமாணத்தின் மூலம் தெரிந்த உப்பானது, அதை நீரில் கரைத்ததும் கண் மூலம் அதன் இருப்பை அறிய முடியாது, அதனால் இந்த அந்த ஒரு பிரமாணத்தை வைத்து உப்பு நீரில் இல்லை என்று முடிவுக்கு வரக்கூடாது, சுவையறியக்கூடிய மற்றொரு பிரமாணமான நாக்கை கொண்டு நீரை சுவைத்துப் பார்த்தால் உப்பின் இருப்பை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஸத்தானது எங்கும் உள்ளது அதை சரியான பிரமாணத்தில் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும். இதை புலன்களால் அறிய முடியாது வேறொரு பிரமாணம் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.

காண்டம்-14
ஸத்தை அறிவதற்கு வேதாந்த சாஸ்திரமும், அதை உபதேசிக்கும் குருவுமே சரியான பிரமாணமாகும்.
காந்தார தேசத்திலிருந்து ஒருவனை திருடர்கள் கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிட்டார்கள். அவன் கூக்குரலிட்டு உதவிக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தான். யாரோ வருவது போலிருந்ததால் திருடர்கள் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். அவன் போட்ட சத்தத்தைக் கேட்டு வந்த ஒருவர், அவனுடைய கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து, அவன் போக வேண்டிய தேசத்தின் வழியையும் கூறினார். அவனும் அவர் காட்டிய வழியிலே சென்று தன் நாட்டை அடைந்தான்.

திருடன் - பாவ, புண்ணியங்கள்
கட்டியிழுத்துவரப்பட்டவன் - ஜீவாத்மா
கண் கட்டை அவிழ்த்து விடுபவர் - குரு
காந்தாரம் -
அவன் சொந்த ஊர் - பிரம்ம ஸ்வரூபம்
ஒரு ஜீவனை
பிரம்மத்திலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டு வந்து இந்த ஸ்தூல சரீரத்திலுள்ளே
விட்டு விட்டார்கள். ஜீவன் தான் பிரம்மம்
என்றுணராமல் தேகம் என்ற அபிமானத்துடன் இருக்கிறான். இந்தக் கதையில் கண்ணை துணியால் கட்டியிருப்பது,
விவேகமானது மோகத்தால் (அவித்யாவால்) மூடப்பட்டிருப்பதை குறிக்கிறது. மோகம் என்பது
எது நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் விஷயத்தை சுகமானது என்று நினைத்து அதில் ஈடுபட
வைக்குமோ அதுதான் மோகம் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவனை சொந்த ஊரிலிருந்து கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிடுவது, ஜீவனை மோகத்தால் விவேகத்தை மறைத்து பிரம்மத்திலிருந்து (சொந்த ஸ்வரூபத்திலிருந்து) பிரித்தெடுத்துக்கொண்டு வந்து விடப்பட்டிருப்பது போன்றதாகும். கண் கட்டை அவிழ்த்து விடுபவர் குருவுக்கு ஒப்பிடப்படுகிறது. குருவானவர் மோகத்தை நீக்கி இது ஸத் இது அஸத் என்ற அறிவை கொடுக்கிறார். சொந்த ஊருக்கு செல்லும் வழியை கூறுவது சம, தம, வைராக்கியம் போன்ற தகுதிகளை போதிப்பதற்கு ஒப்பிடலாம்.
பிரவிருத்தி வழி என்பது உள்ளத்திலுள்ள ஆசைகளையெல்லாம் வெறும் அறிவினால் நீக்க முடியாமல் இருக்கும் நிலையில் இருந்தால் அதை தர்ம வழியில் அதை அனுபவித்தால், விரைவில் சித்தமானது தூய்மையடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.
நிவிருத்தி வழி என்பது ஸம, தம, வைராக்யம் போன்ற தகுதிகளை அடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.
கதையில் வந்த மனிதன் இன்னொருவர் காட்டிய வழியிலே சென்று தன் சொந்த ஊரை அடைந்தான். அதேமாதிரி குரு உபதேசத்தைக் கொண்டு நிவிருத்தி மார்க்கத்திலே சென்று ஞானத்தை அடைய வேண்டும்.
அக்ஷம் - கண்;
அபிநதம் - கட்டப்பட்ட;
விஸ்ருஜேதி - விட்டுவிட்டான்
பிரத்மாயீத - சத்தம் போடுகிறான்;
பண்டிதன் - உபதேசத்தை பெற்றவன் (சரியான லட்சியத்தை அடையும் பாதையை தெரிந்து கொண்டவன்)
மேதாவி - உபதேசம் செய்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டவன்
ஆசார்யவான்- குருவை அடைந்தவன், பிரம்ம ஞானத்தை அடைகிறான்
வேதாந்தம் என்பது அத்யாரோப அபவாதம் என்கின்ற முறையில் ஞானத்தை உபதேசிக்கும்.
அத்யாரோபம் - த்வைதத்தை ஸத்யம் என்ற பாவனையோடு ஏற்றுக் கொள்ளுதல்
அபவாதம்- நீக்குதல்; (எதையெல்லாம் ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டாரோ, சிஷ்யனுடைய மனதில் ஏராளமான விஷயங்கள் ஒத்துக் கொண்டு விவகாரம் செய்து கொண்டிருப்பது, அதையெல்லாம் ஒவ்வொன்றாக நீக்கி சரியான அறிவை கொடுத்தல்)
ஞானத்தின் பலன்
குருவையடைந்த சிஷயன் அவரது உபதேச்த்தின் மூலமாக பெறும் ஞானத்தின் பலனை அடகிறான். இது ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
விதேஹ முக்தி: ஸரீரத்திலிருந்து பிரிந்த ஜீவன் மீண்டும் பிறவாத நிலை
ஜீவன் முக்தி: ஞானம் அடைந்த பின் மீண்டும் பிறவாத நிலை. ஞானம் அடைந்த பின்னர் அவன் எதற்காகவும் காத்துக்கொண்டிருக்க மாட்டான். ஆனால் மரணத்திற்காக மட்டும்தான் காத்துக்கொண்டிருப்பான். அதுவரை அவன் ஜீவன் முக்தி நிலையிலே இருப்பான். அதாவது மரணத்தில் விருப்பமில்லாதவன் அதே சமயம் வாழ்வதிலும், விருப்பமில்லாதவன். மனநிறைவுடன் நாட்களை கழித்துக்கொண்டிருப்பான். மரணத்திற்கு பின்னர் அவன் பிரம்மத்தில் ஐக்கியமாகிறான்.
காண்டம்-15
ஞானியின் மரணத்திற்கும், அக்ஞானியின் மரணத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் ஞானியானவன் மரணத்திற்குப்பின் பிறப்பதில்லை, அக்ஞானி மரணத்திற்குப்பின் அவனது பாவ புண்ணியத்திற்கேற்ப மீண்டும் பிறப்பான். மரணப்படுக்கையில் இருப்பவனைச் சுற்றி உறவினர்கள் என்னைத் தெரிகிறதா என்று கேட்பார்கள், அவனும் தெரிகிறது என்பான். பேச்சானது மனதில் ஒடுங்கும், மனதானது பிராணனில் ஒடுங்கும், பிராணன் உஷ்ணத்தில் ஒடுங்கும், உஷ்ணமானது பிரம்மத்தில் ஒடுங்கும்.

காண்டம்-16
அந்தக்காலத்தில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவனிடமிருந்து உண்மையை வரவழைக்க ஒரு சூடான கம்பியை பிடிக்க சொல்லுவார்கள். அவன் உண்மையான திருடனாக இருந்தால் அவன் கையானது கம்பியிலுள்ள சூட்டினால் புண்ணாகி விடும், அவன் நிரபராதியாக இருந்தால், அவனுடைய கைக்கு ஒன்றும் நேராது. அதுபோல பிரம்மத்தை அறிந்தவன் உலகபோகங்களில் கட்டுபடாதவன், துயரத்தை அனுபவிக்காமல் என்றென்றும் அமைதியாக ஆனந்தமாக இருப்பான். ஆனால் அக்ஞானியானவன் இந்த சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டிருப்பான். அதனால் இன்ப துன்பத்தை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருந்து. பிறகு இறந்ததும் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி மீண்டும் பிறப்பெடுப்பான்.

-----0000-----
No comments:
Post a Comment