Saturday, November 11, 2017

மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-6

 மாண்டூக்ய உபநிஷத் - பகுதி-6

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது12/04/2022
www.poornalayam.org

4வது பிரகரணம்அலாதி ஶாந்தி – மனன கிரந்தம்

 

அலாதம்தீப்பந்தம்

அலாத ஶாந்தம்  - தீப்பந்தம் செயல்படாமல் இருந்து விட்டால் அதிலிருந்து எந்த உருவங்களையும் தோற்றுவிக்க முடியாது

ஜகத்தின் மித்யாத்வத்தை மீண்டும் இதில் விளக்கப்படுகின்றதுமற்ற பிரகரணத்தில் செய்யப்பட்ட அத்வைத ஸித்தி இதிலும் வேறு முறையில் செய்யப்படுகின்றதுத்வைதிகளின் கருத்துக்களை நீக்கி அதன்மூலம் இது நிச்சயிக்கப்படுகின்றது.

மூன்றுவித அறிவினால் அடைந்த அறிவில் உறுதியாக இருக்க முடியும். அவைகள்

1.   எது சரி, எது தவறு என்ற அறிவு

2.   எதனால் இது சரியான அறிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும்

3.   எப்படி இது தவறு என்ற அறிவு

 

சிரவணத்தினால் எது சரி (அத்வைதம்) எது தவறு (த்வைதம்) என்ற அறிவு வரும். இதற்கு சிரத்தை மிகவும் அவசியம்எந்தவொரு அறிவுக்கும் இரண்டு தடைகள் வருவதுண்டுஅவைகள் சம்ஸ2யஹ (சந்தேகம்), விபர்யயஹ ( விபரீத பாவனைஸம்ஸ்காரங்கள்)

·         சந்தேகத்தை நீக்குவதற்கு மனனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்சந்தேகமற்ற அறிவு திடமானதாக இருக்கும்.

·         விபரீத பாவனையை நீக்குவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்அவிவாதம்தேவையில்லாத வாதம், வாதத்தினால் எந்த அறிவையும் கொடுக்க முடியாது

·         அறிவுடையவனுக்கு வாதிபயம் இருந்து கொண்டிருக்கும், இந்த பயத்தை மனனம் மூலம் போக்கி விட முடியும்

·         மனனம் மூலம் தவறான கருத்துடையவர்களை திருத்த வேண்டும் என்ற உந்துதல் இருக்காது

·         யாரிடமும் வாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது.

 

காரிகை-1

எந்த ஞான ரூபமான ஈஸ்வரன் எங்கும் வியாபித்திருக்கின்ற ஆகாசத்தை போல உள்ள ஞானத்தினால் ஜீவர்களை அறிகின்றாரோ, அறிய வேண்டியவைகளை சரியான அறிவினால், அறிய உதவுவது ஆத்மஞானம் ஒன்றுதான் இருக்கின்றது என்று புரிய வைக்கின்றார்அந்த ஈஸ்வரனை மேலான இரண்டு கால்களையுடைய மனிதர்களுக்குள் உத்தமனாக இருக்கின்றவர் (புருஷோத்தமன் என்பதே இவ்வாறாக அழைக்கப்படுகின்றது ) அவரை வணங்குகின்றேன்

 

ஞானரூபமான நாராயணன் ஞானரூபமான ஜீவனை அறிந்திருக்கின்றார்ஜீவனை தனக்கு வேறாக கருதாமல் தன் ஸ்வரூபமே அவர்கள் என்று அறிகின்றார்அந்த நாராயணனை மனிதர்களில் உத்தமரான புருஷோத்தமனை வணங்குகின்றேன்.

 

காரிகை-2

இந்த காரிகையில் அத்வைத நாமத்தை நமஸ்கரிக்கின்றார்.

அஸ்பர்ஷ யோகம் என்ற பெயருடைய ஆத்ம ஞானம்இது அனைத்து ஜீவர்களுக்கும் சுகத்தை கொடுப்பது, ஞான யோகம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்தும்போதும் சுகமாக இருக்கும், அதனால் கிடைக்கும் பலனும் சுகமான இருக்கும்உதாரணமாக சாப்பிடும் போதும் சுகம், பசி அடங்கியது சுகமாக இருக்கும்எவைகளெல்லாம் சுகத்தை கொடுக்கின்றதோ அவைகளெல்லம் நன்மையைக் கொடுக்காதுஆனால் ஆத்மஞானம் சுகத்தையும், நன்மையையும் கொடுக்கும். இது விவாதத்திற்கு அப்பாற்பட்டது, வாதத்தினால் அடைய முடியாதுஎதற்கும் முரண்படாதது, எதனுடன் விரோதம் கொள்ளாது. சாஸ்திரம் மூலமாக குரு-சிஷ்ய பரம்பரையாக உபதேசிக்கப்படுகின்றதுமான இதை வணங்குகின்றேன்.

 

காரிகை-3

ஸத்காரிய வாதம்இருப்பது தோன்றியதா

அஸத்காரிய வாதம் - இல்லாதது தோன்றியதா?

 

இருப்பதினுடைய பிறப்பை கொள்கையாக உடையவர்கள், விரும்புபவர்கள் இருக்கின்றார்கள்

சிலர்தான் இவ்வாறு சொல்கின்றார்கள் அவர்களை சாங்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்வேறு சில அறிவுடையவர்கள், இல்லாததிலிருந்து தோன்றுகின்றது என்று சொல்கிறார்கள்இவ்வாறு ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 

காரிகை-4

அஸத்கார்யவாதி சொல்கின்றான், எந்தவொன்றும் ஏற்கனவே இருக்கின்ற நிலையிலிருந்து பிறக்காது. ஏற்கனவே அது இருப்பதனாலேயே அது பிறப்பதில்லை, உதாரணமாக பிரம்மன்இல்லாததிற்கு பிறப்பு என்பது கிடையாது என்று ஸத்காரியவாதி வாதிடுகின்றான்அது இல்லாமல் இருக்கின்ற காரணத்தினாலே பிறப்பு என்பது ஒன்று நிகழாது உதாரணமாக முயல்கொம்பு போல என்று வாதிக்கின்றான்மேற்கண்டவாறு விவாதித்து கொண்டிருப்பவர்கள் இருமைவாதிகள், த்வைதிகள் அவர்களுக்கே தெரியாமல் பிறப்பற்ற தத்துவத்தைத்தான் நிலை நாட்டுகின்றார்கள்.

 

காரிகை-5

இருமைவாதிகளின் வாதத்தினால் நிரூபிக்கபட்ட எதுவும் தோன்றவில்லை என்ற முடிவை அத்வைதிகளான நாம் சரியென்று ஏற்றுக் கொள்கின்றோம்.  அவர்களுடன் வாதம் செய்யமாட்டோம். மேலும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், எதுவும் பிறக்கவில்லை என்பதை வாதத்தினால் நிலை நாட்ட முடியாது.

 

காரிகை-6

அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹஎதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்

அஜாத அம்ருத பா4பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்

மர்த்யதாம் கதம் ஏஷ்யத்எப்படி மரணத்தை அடையும்?

 

பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.

 

காரிகை-7

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.

 

ந பவதி அம்ருதம் மர்தியம்  அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது

மர்த்யம் அம்ருதம் த்தா4     அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.

ப்ரக்ருதே அன்யதா பா4வஹஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது

கதஞ்சித் ந ப4விஷ்யதி       எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.

 

காரிகை-8

1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹமோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்

2. ப்ரதிக்ஞா ஹானிமுதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்யஇந்த கருத்துப்படி

ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹஇயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.

கச்சதி மர்த்யதாம்மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.

தஸ்யஇப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )

க்ருதகேன அம்ருதஹமரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்

கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதிஎப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.

இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

 

காரிகை-9

பிரக்ருதியின் குணத்தை இதில் கூறுகின்றார்

ஸாம்ஸித்3தி4ஹிஎன்றுமுள்ளது, அடையப்படாததுசில யோகிகள் பிறக்கும்போது சில சக்திகளுடன் பிறந்திருப்பார்கள்அதை அவர்கள் எந்த முயற்சி செய்தும் அடையவில்லைஅது அவர்களுடைய சுபாவமாக இருக்கும் அதற்குதான் ஸாம்ஸித்தி என்று பெயர்.

ஸ்வாபவிகிஎப்பொழுதும் ஒன்றோடு இயற்கையிலே இருந்து கொண்டுவருவதுஉதாரணமாக நெருப்பிடம் இருக்கும் சுடும் தன்மை எப்பொழுதும் அதனோடு இருந்து கொண்டிருப்பது போல

ஸ்ஹஜாசேர்ந்தே இருப்பது ( பறவைகளிடத்தில் இருக்கும் பறக்கும் சக்தி )

அக்ருதாசெய்யப்படாதது (-ம்) நீரானது பள்ளத்தை நோக்கி ஒடுவது போல

சயாஇப்படி இருக்கும் எந்தவொன்று

ப்ரக்ருதி இதி விஞேயப்ரகிருதி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

யா ஸ்வபாவம் ந ஜஹாதிஇதன் அந்த தன்மை மாறாமல் என்றுமிருக்கும்

 

காரிகை-10

ஜீவர்கள் உண்மையில் ஸ்வரூபமாக வயோதிகம், மரணம் போன்ற எதுவும் இல்லாதவர்கள், அதாவது சம்சாரம் அற்றவர்கள்ஆனால் வயோதிகமும், மரணமும் இருப்பதாக நினைக்கின்றார்கள்அந்த தவறான எண்ணத்தினால் வீழ்ச்சி அடைந்து சம்சாரத்தை அனுபவிக்கின்றார்கள்.

காரிகை-11

1.   இல்லாததிலிருந்து தோன்றியது இந்த ஸ்ருஷ்டி என்பது அஸத்காரியவாதம்

2.   நான்கு காரணங்களைக்கூறி இது தவறு என்று நிரூபிக்கப்படுகின்றது. அவைகள்,

2.1.   ஸ்ருதி பிரமாண அபாவாத்வேதாந்த பிரமாணம் இதற்கு கிடையாதுஅஸத்திலிருந்து எப்படி ஸத் தோன்ற முடியும்.

2.2.   நம் உடல் ஆறுவித மாறுதல்களை அடையக்கூடியது அவைகள் அஸத்-இருத்தல், ஜாயதே-பிறத்தல், வர்ததே-வளர்தல், விகாரஹ-மாறுகின்றது, தேய்கின்றது, விநஷ்யதி-அழியக்கூடியது  பா4வ விகாரங்கள் இருக்கின்ற ஒன்றினுடைய விகாரங்கள் பிறத்தல் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது

2.3.   இலக்கணத்தில் அடிப்படையிலும் நீக்கப்படுகின்றதுஇலக்கணத்தில் உள்ள வினைச்சொல் கர்த்தாவோடு சேர்ந்துதான் பொருள் கொடுக்கும்எனவே செயலுக்கு கர்த்தா கட்டாயம் தேவைபிறந்தது என்ற வினைச்சொல் கர்த்தாவை சொல்ல வேண்டும்கர்த்தா என்பது இல்லாதது என்று சொல்ல முடியாது, இருப்பதைத்தான் சொல்ல முடியும்

2.4.   வ்யாகாத தோஷம்முரண்பாடாக பேசுவது. இல்லாதது, இருக்கின்றது

இந்த நான்கு காரணங்களால் அஸத்காரிய வாதம் நீக்கப்படுகின்றது

 

ஸத்காரியவாத விளக்கம்:

·         இருப்பதுதான் பிறக்கின்றது.. ஏற்கனவே இருப்பது ஏன் பிறக்க வேண்டும். என்ற கேள்விக்கு இருத்தல் என்பது இரண்டு விதத்தில் இருக்கும்அவைகள் வெளித்தோற்றத்திற்கு வராதது, வெளித்தோற்றத்திற்கு வந்ததுஇதனால் இது சாத்தியமாகின்றது

·         தோன்றிய உலகமான இந்த காரியம், அவ்யக்தமாக காரணத்தில் இருந்தது

·         வெளித்தோற்றத்திற்கு வந்ததைதான் பிறக்கின்றது என்று கூறுகின்றோம்.

·         இது பரிணாம வாதத்தோடு ஒத்துப்போகின்றது

·         காரண காரியம் இரண்டும் ஒன்றுதான், ஆனால் இரண்டு அவஸ்தைகள் உண்டு.

 

அத்வைதியின் ஸத்காரியவாத பார்வை

·   எல்லா நிலைகளிலும் இதை நீக்கவில்லை, சிலவற்றைத்தான் ஏற்றுக்கொள்கின்றோம்.

·   ஜகத்-மாயா இரண்டுக்குமிடையே உள்ள சம்பந்தம் ஸத்காரிய வாதத்தை ஒத்து இருக்கின்றது

·   காரியமான இந்த உலகம் மூன்றுவிதமான குணங்களை உடையதுசத்வ, ரஜஸ், தமஸ் என்கின்ற இந்த மூன்று குணங்கள் மாயையில் உண்டுஏனென்றால் காரியத்தில் எவ்வளவு குணங்கள் உண்டோ அதே அளவுதான் காரணத்திலிருக்கும் என்பது நியதி

·   ஜகத்துக்குள்ளே காரண-காரியம் என்ற நியதியை பார்க்கின்றோம். அதுவும் ஸத்காரியத்தை ஒத்துதான் இருக்கின்றது.

·   மாயை பிரம்மத்தை சார்ந்திருக்கின்றதுஎனவே இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்ற கேள்விக்கு அஜாதி வாதத்தை முன்வைக்கின்றோம்.

·   பிரம்மம்-மாயை என்கின்ற விஷயத்தில் ஸத்காரிய வாதத்தை பயன்படுத்தினால், பிரம்மமே பரிணாமத்தை, மாற்றத்தை அடைந்து மாயையாக மாறிவிடும் நிலை ஏற்படும்இது பிரம்மத்தின் உண்மையான ஸ்வரூபத்திற்கு முரணாக உள்ளதால் இது சரியாக இருக்காது. எனவே இந்த சம்பந்தம் விவர்த்த சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றதுஎந்தவொன்று தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல், தன் மீது வேறொன்றை தோற்றுவிக்கின்றதோ அதற்கு விவர்த்த வாதம் என்று பெயர். கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணமாக இருக்கின்றதுஎனவே பிரம்மம் விவர்த்த காரணமாக இருக்கின்றதுஎது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை மித்யா என்று சொல்கின்றோம்மாயையிலிருந்து தோன்றிய அனைத்தும் மித்யாவாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

·   ஸாங்கிய மதத்தின் கொள்கை

§ ஜகத் என்பது படைக்கபட்டது

§ படைக்கப்பட்ட ஜகத் சத்யம், தோன்றி கொண்டிருக்கின்ற இந்த உலகம் உண்மை

§ காரணம் என்பது ஒரு பிரதானம்

§ பிரதானத்திற்கு இரண்டு தன்மைகள் உண்டு. 1. பிறப்பற்றது, 2. நித்யம்

§ காரிய-காரணமும் ஒன்றுதான், ஆனால் அவஸ்தா பேதங்கள் உண்டு.

 

காரிகையின் விளக்கம்:

எவர்களுடைய (சாங்கியர்கள்) மதக்கொள்கைப்படி காரணமே காரியமாக இருக்கின்றதோ அப்படிபட்ட கொள்கையின்படி காரணமானது பிறந்ததாக இருக்கின்றது.  இது அந்த கொள்கைக்கே முரண்பாடாக இருக்கின்றதுகாரியம் பிறந்தது என்றும், காரியமும் காரணமும் ஒன்று என்று சொன்னால் காரணமும் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும்அப்படிபட்ட பிறக்கின்ற காரணம் (பிரதானம்) எப்படி பிறப்பற்றது என்று சொல்கின்றாய்? இது பிறப்பற்றதாகத்தான் இருக்க முடியும்அந்த மாற்றத்தை அடைகின்ற பிரதானம் எப்படி நிலையானதாக இருக்க முடியும், இருக்க முடியாது.

 

·   ஸத்காரிய வாதத்தில் காரணம் மாற்றத்தை அடையலாம்

·   எது மாற்றத்தை அடைகின்றதோ அது பிறப்பற்றது என்று கூறமுடியாது

·   அது நித்யம் என்றும் சொல்ல முடியாது.

 

காரிகை-12

காரணத்திலிருந்து ஒருவேளை காரியம் வேறுபடாமல் இருந்தால், காரியமானது பிறப்பற்றதாகி விடும். ஒருவேளை பிறக்கின்ற காரியத்திலிருந்து காரணம் வேறுபடவில்லையென்றால் உன்னுடைய காரணம் எப்படி பிறப்பற்றதாகும், நித்யமாக இருக்கும்.

 

காரிகை-13

காரண-காரிய வாதத்திற்கு மூன்று நிலைகள் இருக்கலாம். அவைகள்

1.   காரணம் பிறப்பற்றதுகாரியம் பிறப்பற்றது

2.   காரணம் பிறப்பற்றதுகாரியம் பிறப்பது

3.   காரணம் பிறப்பதுகாரியமும் பிறப்பது

முதல் நிலையில் உள்ளது இயலாத காரியம். இரண்டாவதும் தவறு என்று நீக்கப்படுகின்றது. மூன்றாவதிற்கு இதன் மூலகாரணம் அடையவே முடியாது என்று நீக்கப்படுகின்றது.

 

ஸாங்கியர்களின் கொள்கைப்படி பிறப்பற்ற காரணத்திலிருந்து இந்த உலகம் தோன்றுவதாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு எந்தவித பிரமாணமும் இதை உறுதிசெய்வதற்கு இல்லைபிறக்கின்ற காரணத்திலிருந்து காரியம் பிறக்கின்றதுஇதை தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்மூலகாரணத்தை அடையவே முடியாது.

 

காரிகை-14

கேள்வி      கர்மபலன்கள்சரீரம்- காரண-காரியமாகத்தான் இருக்கின்றதுஇந்த சரீரம் தோன்றுவதற்கு காரணம் கர்மபலன்கள்தான். சரீரத்திலிருந்து பாவ-புண்ணியங்கள் தோன்றியது. சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு கூறப்படுகிறது. இந்த கர்ம சரீரம் அநாதியாக இருக்கின்றதுஇந்த இரண்டின் அடிப்படையில்தான் தோன்றியிருக்கும் பிரபஞ்சம் சத்யமானதுஎந்த இரண்டு பொருளுக்குமிடையே காரண-காரியம் என்ற சம்பந்தமே இருக்க முடியாது என்பது சித்தாந்தம்.

 

பதில்   கர்ம-சரீரம், காரண-காரிய சம்பந்தம் அநாதி என்று நிலை நாட்ட முடியாதுஎவர்களுடைய கருத்துப்படி கர்மத்திற்கு (கர்ம பலன்கள்) காரணம் உடல்தான் என்றும், சரீரத்திற்கு காரணம் கர்மபலன்கள் என்றும் இருக்கின்றதனால், கர்மத்திற்கும், உடலுக்கும் அநாதி என்று எப்படி அவர்களால் கூறமுடியும்..  எனவே உடலும், கர்மமும் அநாதியல்ல அவைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உடலிலிருந்து கர்மபலனும் கர்மபலனிலிருந்து உடலும் தோன்றிக் கொண்டிருப்பதால் அநாதி என்று சொல்ல முடியாது.

 

காரிகை-15

கர்மத்திற்கு காரணம் உடலாகவும், உடலுக்கு காரணமாக அதே கர்மபலன்கள் இருக்கின்றது என்ற கருத்துக்கு மகனிடமிருந்து தந்தை பிறந்தார் என்ற நிலை ஏற்படும்

 

காரிகை-16

கர்மத்திற்கும் சரீரத்திற்கும் அல்லது காரண-காரியமானது சம்பவிக்க வேண்டுமென்றால் ஸ்ருஷ்டி கிரமமானது உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்ஒருவேளை இந்த கிரமத்தை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டும் சேர்ந்தே தோன்றியது என்று சொன்னால் இந்த இரண்டிற்கும் காரண-காரிய இருக்கின்றது. மாட்டின் இரண்டு கொம்புகள் சேர்ந்து ஒன்றாக தோன்றுவது போல

 

காரிகை-17

பலாது உத்பத்யமானஹ ஸன்இப்பொழுது இருக்கின்ற சரீரத்திலிருந்து,  வரப்போகின்ற கர்மம் என்ற இப்போது இல்லாமலிருக்கின்ற நிலையிலிருந்து

தே ஹேது ந ப்ரஸித்4யதிஉன்னுடைய கர்மம் இன்னும் தோன்றவில்லை

அப்ரஸித்3த4ஹ கர்த ஹேதுதோற்றத்திற்கு வராத கர்மபலன்

கத4ம் பலம் உத்பாயிஷ்யதிஎப்படி சரீரத்தை தோற்றுவிக்கும்.

 

காரிகை-18

ஒருவேளை உடலிலிருந்து கர்மத்தினுடைய தோற்றம், கர்மத்திலிருந்து உடலின் தோற்றம் இந்த மாதிரி கொள்கையிருந்தால் இரண்டில் எது முதலில் தோன்றியதுஎந்த கர்மத்தினுடைய இருத்தலை முன்னிட்டு சரீரத்தின் தோற்றத்தை நீ கூறமுடியும் அல்லது எந்த உடலினுடைய இருத்தலை வைத்து கர்மத்தின் தோற்றத்தை சொல்ல முடியும்.

 

காரிகை-19

உனக்கு பதில் சொல்வதற்கு சக்தி இல்லைபோதுமான அறிவில்லாததால் இந்த நிலைமாற்றி மாற்றி பேசுகின்றாய்மீண்டும் மீண்டும் இதற்கு இவ்விதம் இருக்கின்ற காரணத்தால் எல்லாநிலைகளிலும் அறிவாளியான உங்களால் பிறப்பற்ற தத்துவமானது விளக்கப்பட்டுள்ளது

 

காரிகை-20

விதை-செடி உதாரணம் எப்பொழுதும் சந்தேகத்திற்குரியது. நிச்சயம் செய்யப்பட வேண்டியதாக இருக்கின்றதுமூலகாரணத்தை முடிவு செய்யப்பட முடியாது. நிச்சயம் செய்ய முடியாத உதாரணத்தை காரணத்தை நிரூபிக்க வேண்டிய விஷயத்தில் பயன்படுத்தக்கூடாதுஇந்த பீஜாந்திர உதாரணம் உன்னுடைய கொள்கைக்கு பொருந்தி வராது.

 

காரிகை-21

இது முன்னே வந்தது, இது பின்னே வந்ததுஇந்த அறிவே அஜாத வாதமானது அரைகுறை ஞானத்தை நிரூபிக்கின்றதுகாரண-காரிய இந்த இரண்டை பற்றிய ஞானம் இருந்தால் இந்த சம்பந்தத்தை சொல்லக் கூடாது.

 

காரிகை-22

மூலகாரணம் தெரியாமலே இந்த உலகம் காரியம் என்று சொல்கிறார்கள்பிறக்கின்ற காரியத்திற்கு முன் இருப்பது காரணம் அறியப்படவில்லை என்று எப்படி நீ சொல்ல முடியும்.

தன்னிடத்திலிருந்து ஒன்றை தோற்றுவிக்க முடியுமா? தனக்கு வேறாக உள்ள ஒன்றிலிருந்து தோன்ற முடியுமாஇரண்டிலுமிருந்தும் தோன்ற முடியுமா? எந்த பொருளும் தோன்ற முடியாது, பிறக்காது. இருத்தல், இல்லாதது, இருந்தும் இல்லாததும் இவை மூன்றிலிருந்தும் எந்த பொருளும் தோன்றாது, பிறக்காதுஇருப்பது பிறக்காது, இல்லாததலிருந்து எதுவும் தோன்ற முடியாதுஇருப்பதும் இல்லாததும் சேர்ந்து எதையும் தோற்றுவிக்க முடியாது.

 

காரிகை-23

காரணமானது பிறக்கவில்லை, தோன்றவில்லை, இல்லாததினால் மித்யாவை குறிக்கின்றது. என்றும் இருப்பதையும், எப்பொழுதும் இல்லாததும் குறிக்கின்றதுகாரணத்தினுடைய தன்மையாக காரியம் இருப்பதால் காரியமும் தோன்றவில்லைஎனவே யாருடைய கருத்துப்படி காரணம் என்பது இல்லையோ அவருடைய கருத்துப்படி பிறப்பும் இல்லை என்ற கருத்து நிலை நாட்டபடுகின்றது.

 

காரிகை-24

புத்த மதத்தில் உள்ள நான்கு பிரிவுகளின் விளக்கம்:

1.   ஹீனயானம்வெளியே உள்ள உலகம் உண்மையாக இருக்கின்றது

1.1.   வைபாஸிகம்வெளியே உள்ள பொருட்கள் பிரத்யக்ஷ பிரமாணத்தினால் அறியப்படுகின்றது

1.2.   சௌத்ரந்திகம்வெளியே உள்ள பொருட்கள் அனுமான பிரமாணத்தினல் அறியப்படுகின்றது

2.   மஹாயானம்வெளியே உள்ள பொருட்கள் உண்மையில் கிடையாது.

2.1.   யோகாச்சாரஹஇவர்களே ஷணிகவிக்ஞானவாதிகள்வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நம்முள்ளே இருக்கும் சைதன்யம், விக்ஞானம் உண்மையானதுஅந்த விக்ஞானத்தின் ஸ்வரூபம் ஷணிகம். அது ஒவ்வொரு நொடிக்கும் அது மறைந்து தோன்றுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் நதியில் பார்த்துக் கொண்டிருக்கும் நீர் மாறிக் கொண்டே இருக்கின்ரதுஇந்த விக்ஞானம் உருவத்துடன் கூடியது.  மனதில் தோன்றும் மாறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் உருவத்துடன் கூடியதாக இருக்கின்றது.

2.2.   ஸூன்யவாதி – பிரமாணம், பிரமாதா, பிரமேயம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.  வெளியே உள்ள பொருட்கள் இல்லையென்று சொல்லும்போது மற்ற இரண்டும் சேர்ந்து இல்லாது போவதால் ஒன்றுமே இல்லாத நிலை ஏற்படுகின்றது.  கற்பூரம் எவ்வாறு எரிந்து முடிந்ததும் ஒன்றுமே இல்லாததாக போகின்றதோ அதுபோல என்று கூறுகிறார்கள்.

 

இந்த காரிகையில் ஹீனயான மதவாதிகளின் கொள்கையை கூறப்பட்டிருக்கின்றது.

ஹேது1: விருத்திக்கு விஷயம் இருந்தாக வேண்டும், என்ற நியமித்தினால்

ஹேது2: விதவிதமான சுக-துக்கங்களை அனுபவிப்பதனால் வெளியே உள்ள விஷயங்கள் சத்யமாக இருந்தாக வேண்டும்,

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் அன்யதா த்வயனாசஶதஹமனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

ஸங்க்லேஷேயஸ்ய உபலப்தேதுயரங்கள் முதலிய அனுபவங்கள் இருப்பதாலும் வெளியே இருக்கும் பதார்த்தங்களும் சத்யமாகத்தான் இருக்க வேண்டும்,

பரதந்த்ரம்வேறு மதங்களால் ( ஹீனயான மதத்தினரால் கருதப்படுகின்ற)

அஸ்திதா மதாவெளியே பொருட்கள் இருக்கின்றது என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

 

காரிகை-25

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் இஷ்யதேஎண்ணத்திற்கு, மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

யுக்தி தர்ஷனாத்ஓரளவு அறிவை பயன்படுத்தி இதை தெரிந்து கொள்ளலாம்.

நிமித்தஸ்ய அநிமித்தத்வம் இஷ்யதே - அந்த விஷயங்களே வெளி விஷயங்களுக்கு இல்லாத தன்மை என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

பூத தர்ஶனாத்உண்மையின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் பானையில் தோற்றதின் அடிப்படையில் எவ்வளவு பானை இருக்கின்றதோ அத்தனை எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் களிமண் என்ற வஸ்துவின் அடிப்படையில் ஒரு விஷயம்தான் பல விஷயங்களாக இருக்கின்றதுஎனவே எண்ணங்களுக்கு விஷயங்களே இல்லை என்று நிரூபணமாகின்றதுஅதேப்போன்று கனவில் பார்க்கும் விஷயங்கள் உண்மையில் இல்லை ஆனால் எண்ணங்கள் மட்டும்தான் இருக்கின்றது.

 

காரிகை-26

பூ.பக்ஷி அறியப்பட வேண்டிய விஷயம் இல்லையென்றால் அறிவும் இருக்காதுஅறிவானது பொருளை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பதில்:   விக்ஞானம் (ஷனிக விக்ஞானிகளின் சைதன்யம்) வெளிப்பொருட்களை தொடுவதில்லைவெளி விஷயங்கள் போன்று தோன்றுவதையும் தொடுவதில்லைஎந்த காரணத்தினால் வெளிவிஷயங்கள் கிடையாதோ, பொய்யான வெளி விஷயங்கள் கிடையாதோ, தெரிகின்ற அனைத்தும் சைதன்யத்தில் இருந்து வேறாக எதுவும் கிடையாதுகனவில் பார்க்கப்படும் பொருட்கள் இருந்தாலும் பார்ப்பவனை தவிர வேறெதுவுமில்லை.

 

காரிகை-27

பூ.பக்ஷி கனவில் பார்க்கும் பொருட்கள் கயிற்றில் பார்க்கும் பாம்பை போல பொய்யானவைகனவில் தோன்றும் பொருட்கள் விழிப்பு நிலையில் அனுபவித்த பொருட்களின் பொய்யான தோற்றங்கள்இதிலிருந்து உண்மையான பொருட்கள் அனுபவித்ததனால்தான் பொய்யாக அவைகள் தெரிகின்றது இல்லையென்றால் அவ்வாறு தோன்ற முடியாது. விழிப்பு நிலை பொருட்களும் பொய்யென்று சொன்னால் அதற்கு அதிஷ்டானமாக அதைப்போல் உண்மையான பொருட்கள் எங்கேயோ இருக்க வேண்டும்.

பதில்    இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றதுஆனால் இதற்கு விதிவிலக்கும் இருக்கின்றதுஒரு பொய்யிக்குபின் பொய்யும் இருக்கலாம்உதாரணமாக இருளில் நடந்து செல்லும்போது வழிகாட்டி மரத்தை பேய் என்று நினைத்து பயந்துவிடுவது.  இந்த பயத்திற்கு மூலகாரணமான பேயும் பொய்யான ஒன்றாக இருக்கின்றதுஎனவே ஜாக்ரத் விஷயங்கள் பொய்யாக இருக்கின்றது அவற்றிற்கு மூலகாரணம் பொய்யான பொருட்களும் இருக்கலாம்.

 

காரிகையின் விளக்கம்சைதன்யத்திடம் தவறுதல் என்பது கிடையாதுஉண்மையாகவோ அல்லது பொய்யாகவோ பார்த்திருப்பதால்தான் தவறு நேரிட முடியும்உதாரணமாக குருடனுக்கு இந்த உலகத்தை சரியாக, தவறாக பார்க்கின்றான் என்ற கருத்துக்கே இடமில்லை.

நிமித்தம் ச ந ஸதா3 சித்தம் ஸம்ஸ்ப்ருஶதி – சைதன்யம் பொருட்களை எப்பொழுதும் தொட்டதில்லை, தொடுவதுமில்லை.

அதவசு த்ரிஷுமூன்று காலங்களிலும்

அனிமித்தஹ விபர்யாஸஹதவறு நேரிடுவதற்கு பொருட்களே கிடையாது

கதம் தஸ்ய ப4விஷ்யதிஅதற்கு எப்படி தவறுதல் ஏற்படும்?

 

காரிகை-28

தஸ்மாத்ஆகவே

ந ஜாயதே சித்தம்சைதன்யம் பிறக்கவில்லை, பிறப்பதுமில்லை

சித்த த்ருஷ்யம் ந ஜாயதேசைதன்யத்தினால் அனுபவிக்கும் பொருட்களும் பிறக்கவில்லை; அதாவது வெளியே உள்ள பொருட்களும் தோன்றவில்லை. அவைகள் உண்மையில் தோன்றவில்லை. இருப்பது போல காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது.  எனவே அவைகளை மித்யா என்ற வேதாந்தம் கூறுகின்றது.  ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கின்றது என்றாலும், ஒன்றைப்போல் வேறொன்று இருக்கின்றது என்றாலும்.  இவைகளை வேறொன்று பார்த்துக் கொண்டிருக்கும்.  அதுதான் என்றும் மாறாமல் நித்யமாக இருக்கின்ற சைதன்யம்.  நீங்கள் சொல்கின்ற சைதன்ய லட்சணம் எண்ணங்களைத்தான் குறிக்கின்றது. சைதன்யம்தான் பிறந்து, இறக்கின்றது, மீண்டும் பிறக்கின்றது என்று சொல்வது எண்ணங்களைத்தான் குறிக்கின்றது.

 

தஸ்ய பஶ்யந்தி யே ஜாதிம் – க்ஷணிக விக்ஞானிகளில் குறிப்பிடுகின்ற சைதன்யத்தின் பிறப்பைப் பார்க்கின்றார்களோ

கே வை பஶ்யந்தி பதம் – அவர்கள் மார்க்கத்தைதான் ஆகாசத்தில் பார்க்கின்றார்கள்.  அதாவது ஆகாசத்தில் பறந்து செல்லும் பறவைகள் சென்ற அடையாளத்தை பார்க்கின்றார்கள். உண்மையில் இது சாத்தியமில்லை.  வெறும் கற்பனையில்தான் இவ்வாறு நினைக்க முடியும்.  அதேபோல பிறப்பற்ற சைதன்யத்திடம் பிறப்பை பார்ப்பவன் வெறும் கற்பனையாகத்தான் இவ்வாறு சொல்ல முடியும்.

 

காரிகை-29

அஜாதம் ஜாயதே யஸ்மாத்எதனால் பிறப்பற்ற சைதன்யம் பிறக்கின்றது என்று சொல்பவர்களால் கருதப்பட்டு வருகின்றதோ

தத அஜாதி ப்ரக்ருதி – அதனால் பிறப்பற்றது என்பது அதன் ஸ்வருபம்

ப்ரக்ருதி அன்யதா பாவ - ஒரு பொருளின் ஸ்வரூபம் மாற்றமடைதல்

ஸ கதஞ்சன பவிஷ்யதி – ஒருபொழுதும் நடைபெறாது.

 

காரிகை-30

பந்தமும் மோக்ஷமும் மித்யா என்று விளக்கப்படுகின்றது.

விசாரம்:

பந்தமும், மோக்ஷமும் ஸத்யம் என்று சொல்வதால் இரண்டு வகையான தோஷங்கள் வரும்.

1.   ஸம்சார அநிவிருத்தி – சம்சாரம் நீங்காது இருத்தல்

2.   மோட்சம் நிவிருத்தி பிரசங்கஹ – மோட்சம் நீங்காதிருத்தல்

 

இந்த குறைகள் நீங்க வேண்டுமென்றால் இந்த இரண்டையும் மித்யா என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் கிரமம் சொல்ல வேண்டும்எது முதல், எது இரண்டாவது என்ற வரிசை சொல்ல வேண்டும், சம்சாரம் முதலில் வந்தது, மோட்சம் பிறகு வந்தது என்ற கிரமத்தைத்தான் சொல்ல முடியும்இந்த சம்சாரம் காரணத்திற்குட்பட்டு வந்ததா அல்லது எந்த காரணமில்லாமல் வந்ததாஎந்தவொன்றிற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்எனவே சம்சாரத்திற்கு காரணம் இருந்தாக வேண்டும்காரணமில்லாமல் எதுவும் நடக்காது.

எவையெல்லாம் காரணத்தினால் வந்திருக்கின்றதோ அவைகளெல்லாம் அதனுடைய ஸ்வரூபம் அல்லசூடான நீர் எப்படி சுடுகின்றது என்றால் நெருப்பினால் சூடேற்றப்பட்ட பிறகுதான் அதில் உஷ்ணம் வருகின்றதுஎனவே உஷ்ணம் என்பது நீரின் ஸ்வரூபம் அல்ல என்று தெரிகின்றதுஜீவனிடம் இருக்கும் பந்தமானது காரணத்தால் வந்திருந்தால் பந்தம் என்பது அவனுடைய ஸ்வரூபம் அல்ல, பந்தம் சத்யமில்லாததாகி விடும்இதற்கு பந்தம் என்பது அநாதி என்று வாதம் செய்தால், அநாதியான பந்தம் நீங்கினால் மோட்சம் கிடைக்கின்றதுஎனவே மோட்சம் தோன்றுகின்றது என்ற நிலை ஏற்படும்இப்படி சொல்வதால் ஒரு குறை வரும்அநாதியாக இருக்கும் ஒன்றிற்கு அழிவே வராது. எனவே சம்சாரம் நீங்காதுமோட்சம் தோன்றுகிறது என்று சொல்வதால் மோட்சம் அழிந்து விடும்.

 

அனாதே அந்தவத்வம் ச ஸம்ஸாரஸ்ய ந ஸேத்ஸ்யதிஅநாதி காலமாக சம்சாரத்திற்கு முடிவு என்பது ஏற்படாது.

அனந்ததா ச அதிமதஹ மோக்ஷஸ்ய ந பவிஷ்யதிதோற்றத்தை உடைய மோட்சத்திற்கு என்றும் இருத்தல் என்பது நடைபெறாது

எனவே இரண்டும் மித்யாவாகத்தான் இருக்க முடியும்சம்சாரம் என்பது மித்யா என்ற அறிவே மோட்சத்தைக் கொடுக்கும்.

 

காரிகை-31

ஆதாவந்தே ச யது நாஸ்தி – தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாதது

வர்தமானெ அபி தத் ததா  – இப்பொழுதும் இல்லை.

விததைஹி ஸ்த்ருஶாஹா – பொய்யான பொருட்களுக்கு சமமாக

அவித்தா இவ லக்ஷிதாஹ – அக்ஞானிகளால் உண்மையாக இருப்பது போல

                            கருதப்படுகின்றது

இங்கு பந்தம், மோட்சம் இல்லாததென்று நிரூபிக்கப்படுகின்றது. பந்தத்திற்கு முடிவும், மோட்சத்திற்கு தோற்றம் இருப்பதால் அவைகள் உண்மையாக இல்லை.  ஆனால் பொய்யாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றது.

 

காரிகை-32

பூ.பக்ஷி கனவில் அனுபவிக்கபடும், பார்க்கப்படும் பொருட்கள் நமக்கு பயன்படுவதில்லை. பயனை கொடுப்பது ஸத்யம், பயனைக் கொடுக்காதது மித்யா என்று எடுத்துக் கொள்ளலாம்

பதில்    கனவில் பொருட்கள் கனவுநிலையில் பயன்படுகிறது.  ஆனால் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  அதேபோல விழிப்பு நிலையில் உள்ள பொருட்கள் கனவு நிலையில் பயன்படுவதில்லை.  எனவே பொருளின் பயன்பாட்டை வைத்து ஸத்யம்-மித்யாவை நிரூபிக்க முடியாது.

பூ.பக்ஷி  மோட்சம் அனுபவிப்பதற்குரிய விஷயமாக இருக்கின்றது. அதேபோல பந்தம் துக்கம் என்ற பலனை உடையது, மோட்சத்தினால் சுகம் என்ற பலனை அடைகின்றோம். எனவே அவைகள் மித்யா என்று எப்படி சொல்ல முடியும்.

பதில்    பந்தமும், மோட்சமும் பலனைக்கொடுத்தாலும் அவைகள் ஸத்யமல்ல.

 

ஸப்ரயோஜனதா தேஷாம் ஸ்வப்னே விப்ரதிபத்யதே – ஜாக்ரத் நிலையில் உள்ள பொருட்கள் பயனை உடையது என்ற தன்மை கனவு நிலையில் முரண்பாடாக இருக்கின்றது. அவைகள் பயன்படவில்லை.

தஸ்மாத் ஆத்யந்தவத்த்வே மித்யைவ கலு தே ஸ்ம்ருதா – ஆகவே எந்த பொருளுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றதோ அவைகள் மித்யாவாக கருதப்படுகின்றது.

 

காரிகை-33

கனவை உதாரணமாக கொண்டு சைதன்யத்திற்கு விஷயமேதுமில்லை என்றும், அது மட்டும் தான் இருக்கின்றது என்றும் விளக்கபடுகின்றது.  த்ருக்-த்ருஷ்யம் என்ற விசாரத்தில் இறுதியாக த்ருஷ்யம் என்பது கிடையாது. த்ருக்தான் த்ருஷ்யமாக காட்சியளிக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் பார்ப்பவனை தவிர வேறில்லை. இவனே அனைத்துமாக தெரிந்து கொண்டிருக்கின்றான்.  விழித்தவுடன் அவைகள் அவன் சித்தத்தில் ஒடுங்கி விடுகின்றன.  அதேபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களும் பார்ப்பவனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸர்வே தர்மா ஸ்ம்ருஷா ஸ்வப்னே – கனவில் இருக்கின்ற எல்லா பொருட்களும் பொய்யானவை (மித்யா)

காயஸ்ய அந்தஹ நிதர்ஶனாத் – ஸ்தூல ஸரீரத்திற்குள்ளே பார்க்கப்படுவதனால்

ஸம்வ்ருதே அஸ்மின் ப்ரதேஶே வை – குறுகிய இந்த உடலுக்குள்

பூதானாம் தர்ஶனம் குதஹ – விதவிதமான ஜீவராசிகளின் தோற்றம் எப்படி காட்சியளிக்க முடியும். எனவே இவைகள் அனைத்தும் மித்யா.

 

காரிகை-34

பூ.பக்ஷம்  கனவில் பார்க்கும் பொருட்களை நாம் நம் உடலுக்குள் பார்க்கவில்லை ஆனால் அவைகள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்திருக்கலாம் அல்லவா?

பதில்     இது சாத்தியமில்லை. தேவையான காலம் இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லை.  மேலும் கனவில் எங்கு சென்றிருந்தாலும், எழுந்திருக்கும்போது எங்கு கனவு கொண்டு இருந்தோமோ அங்கேதான் இருக்கின்றோம்.

 

ந யுக்தம் தர்ஶனம் கத்வா – கனவில் வேறொரு இடத்திற்கு சென்று பொருட்களை பார்ப்பது சாத்தியமில்லை, பொருந்தாது.

காலஸ்ய அனியமாத் கதௌ – பயணம் மேற்கொள்வதற்கு தேவையான காலம் குறைவாக இருப்பதனால்

பிரதிபுத்தஶ்ச வை ஸர்வஹ – விழித்துக்கொண்ட அனைவரும்

தஸ்மின் தேஶே ந ப்ரபத்யதே – கனவு நடந் இடத்தில் இருப்பதில்லை.

 

காரிகை-35

மித்ராத்யைஹி ஸஹ ஸம்மந்த்ரய – அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்

ஸம்பூத்தோ ந ப்ரபத்யதே – விழித்ததும் அவர்களை அவன் பார்ப்பதில்லை.

க்ருஹீதம் ச அபி யத் கிஞ்சித் – எந்தப்பொருட்களையாவது கனவில் வாங்கியிருந்தால்

பிரதிபுத்த ந பஶ்யதி – விழித்ததும் அவைகள் அவனிடம் இருப்பதில்லை.

 

காரிகை-36

ஸ்வப்னே ச அவஸ்துகஹ காயஹ – கனவில் காணும் உடல்கள் உண்மையல்ல

ப்ருதக் அன்யஸ்ய தர்ஶனாத் – அதற்கு வேறான ஜாக்ரத் உடல்களை பார்க்கின்றோம்.

யதா காயஹ ஸதா ஸர்வம் – எப்படி கனவு பொருட்களோ அப்படித்தான் அனைத்தும்

சித்தம் த்ருஶ்யம் அவஸ்துகம் – சைதன்யத்தினால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் உண்மையல்ல சைதன்யம் மட்டும்தான் உண்மையானது.

 

காரிகை-37

பூ.பக்ஷம் காரணம் ஸத்யம், காரியம் மித்யா என்று கூறப்பட்டது.  பானையில் காரணமாக இருக்கும் களிமண் ஸத்யம், பானை மித்யா. ஸ்வப்ன பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது ஜாக்ரத் பிரபஞ்சம். எனவே ஜாக்ரத் காரணமாக இருப்பதால் அவை ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.

பதில்     ஜாக்ரத் பிரபஞ்சம் காரணமாக இருப்பினும் அது மித்யாதான். உதாரணமாக துணிக்கு காரணம் நூல், அது துணிக்குத்தான் ஸத்யமாக இருக்கின்றது ஆனால் அதே நூல் பஞ்சிற்கு காரியமாக இருப்பதால் அது மித்யாவாகின்றது.  எனவே ஒன்று மூலகாரணமாக இருந்தால் அது ஸத்யமாக இருக்கும்.,  இடைப்பட்ட காரணமாக இருந்தால் அது மித்யா.  அதுபோல ஸ்வப்னத்திற்கு காரணமாக இருக்கும் ஜகத் ஸ்வப்னத்துக்கு ஸத்யம் ஆனால் அதுவே பிரம்மத்திற்கு காரியமாக இருப்பதால் மித்யாவாகும்.

 

தத் தேது ஸ்வப்ன இஷ்யதி – ஜாக்ரத் பிரபஞ்சத்தை காரணமாக கொண்டது ஸ்வப்ன பிரபஞ்சம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது

ஜாகரிதவத் க்ருஹணாத் – ஜாக்ரத் பிரபஞ்சத்தை போல கனவானது அனுபவிக்குப்படுவதால்

தத் தேத்வாத் – கனவுக்கு மட்டும் காரணமாக இருப்பதனால்

தஸ்யைவ – கனவுக்கு மட்டும்

ஸத் ஜாக்ரதிம் இஷ்யதே – ஜாக்ரத் சத்யம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றதுஇதிலிருந்து அறிந்து கொள்வது ஜாக்ரத் எல்லாவற்றிற்கும் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பிரம்மத்திற்கு இது காரியமாக இருக்கின்றது என்று உபநிஷத் கூறுவதால் அது மித்யாவாகின்றதுபிரம்மத்தின் பார்வையில் இது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை-38

ஜாக்ரத் பிரபஞ்சம் கனவு பிரபஞ்சத்திற்கு காரணமே இல்லை என்று நிலை நாட்டப்படுகிறது. எந்த இரண்டிற்கும் காரண-காரிய சம்பந்தம் சத்யமானதல்ல என்று நிலை நாட்டப்பட்டது

உத்பாதஸ்யபிறப்பிற்கு, தோற்றத்திற்கு

அப்ரஸித்த4த்வாத்3நிலைநாட்டபடாத காரணத்தினால், ஜாக்ரத் சத்யம் அல்ல

அஜம் ஸர்வம் உதா3ஹ்ருதம்- அனைத்தும் பிறப்பற்ற பிரம்ம தத்துவம் என்று விளக்கப்பட்டது.

பூதாத் அபூதஸ்ய சம்பவஹஇருப்பதிலிருந்து இல்லாததனுடைய தோற்றமானது

கதஞ்சன ந அஸ்திஎந்த விதத்திலும் நடக்காது

 

காரிகை-39

பூ.பக்ஷி ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்கிறீர்கள், பிறகு காரணம் இல்லை என்றும் சொல்கிறீர்கள், இதில் எது சரி?

பதில்    ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்லும்போது அதை மித்யாவான காரணம் என்றுதான் சொல்கின்றோம்காரணம் இல்லை என்று சொல்லும்போது அது பிரம்மனுக்கு காரியமாக இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

 

அஸத் ஜாக்ரிதே திருஷ்டவாத்ஜாக்ரத் அவஸ்தையில் பொய்யான பொருட்களை பார்த்து

ஸ்வப்னே பஷ்யதி தன்மயஹஇந்த பொய்யான பொருட்களையே அதன் ஸ்வரூபமாக கனவில் பார்க்கின்றோம்.

இதிலிருந்து பொய்யான ஜாக்ரத் பிரபஞ்சத்தை கனவிலும் பார்க்கின்றோம் என்று தெரிய வருகின்றது.

 

.பூ.பக்ஷி பொய்யான கனவு பிரபஞ்சத்தை ஏன் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கவில்லை?

பதில்    அதுபோல நாம் அனுபவிப்பதில்லை. கனவு பிரபஞ்சத்தை பிராதிபாஸிக சத்யம் என்றும் ஜாக்ரத் பிரபஞ்சத்தை வியாவஹாரிக சத்யம் என்று ஸத்தா பேதத்தை விளக்கி இருக்கின்றோம்.

 

அஸத் ஸ்வப்னே அபி த்ருஷ்ட்வா சபொய்யானதை கனவில் பார்த்தாலும் கூட

ப்ரதிபுத்தோ4 ந பஷ்யதிவித்துவான்கள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்ப்பதில்லை.

 

காரிகை-40

எந்த விதத்திலும் எந்த பதார்த்தத்திற்கும் காரண-காரிய சம்பந்தத்தை நிலை நாட்ட முடியாது.

இந்த காரிகையில் நான்கு விதமான காரண-காரிய சம்பந்தத்தை கூறுகின்றார். இவைகள் சாத்தியமில்லை என்று அறிய முடிகின்றது.

1.   அஸத் காரணம்அஸத் காரியம்முயல் கொம்பிலிருந்து ஆகாய தாமரை தோன்றியது

2.   அஸத் காரணம்ஸத் காரியம்இதுவும் சம்பவிக்காதுஇல்லாத களிமண்ணிலிருந்து பானைகள் தோன்ற முடியாது.

3.   ஸத் காரணம்ஸத் காரியம்ஸத் காரிய வாதத்தில் நீக்கிய விசாரத்தில் இது நடக்காது என்று நிரூபிக்கபட்டது. களிமண் இருக்கின்றது, களிமண்ணை எடுத்துவிட்டால் காரியமான பானைகள் அங்கு இருக்காது.

4.   ஸத் காரணம்அஸத் காரியம்இது சம்பவிக்காதுபிரம்மன் ஸத்யம் காரணம்காரியமான ஜகத் மித்யா.

பிரம்மன் எதற்கும் காரணமல்ல ஏனென்றால் அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று உபநிஷத் கூறியுள்ளது.

 

நாஸ்தி அஸத்தே4துகம் அஸத்இல்லாததை காரணமாக கொண்ட இல்லாத ரூபமான காரியம் சம்பவிக்காது.

தா4 அஸத்தே4துகம் ஸத்அதேபோல இல்லாத காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் சம்பவிக்காது.

ஸத் ச ஸத்தே4துகம் நாஸ்திஇருக்கின்ற காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் தோன்ற முடியாது

ஸத்தே4துகம் அஸத்தே4இருக்கின்ற காரணம்இல்லாத காரியம் சம்பவிக்காது;

மேலே கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து காரண-காரிய சம்பவம் என்பதே நடக்காது என்று அறிந்து கொள்ளலாம்.

 

காரிகை-41

விபர்யாத்அத்யாஸம்காட்சிபிழை;

அசிந்தியான்சிந்திக்கவே முடியாத பொருட்கள்

விபர்யாஸாத் யதா4 ஜாக்ரத் அசிந்தியான்எவ்வாறு விழிப்பு நிலையில் தவறுதலினால் பொய்யான (மித்யா) பொருட்களை ( கானல் நீர், கயிற்றில் தோன்றும் பாம்பு)

பூதவத் ஸ்ப்ருஷேத்உண்மையாக இருப்பது போல அனுபவிக்கிறார்களோ

ததா ஸ்வப்னே விபர்யாஸாத்அதுபோல கனவிலும் தவறுதலினால்

தர்மான் தத்ர ஏவ பஷ்யதிகனவுப்பொருட்களை கனவில் மட்டும் உண்மையாக இருப்பது போல பார்க்கின்றான்.

 

காரிகை-42

இந்த உலகம் தோன்றியது விதம், ஸ்ருஷ்டியை சொல்வதற்கு என்ன காரணம் என்று விளக்கப்படுகின்றது.

 

நம்முடைய இந்திரியங்களின் மூலமாக அடையும் அனுபவங்களை உறுதியாக நம் மனம் ஏற்றுக்கொண்டிருக்கின்றதுபிரத்யக்ஷ பிரமானத்தின் மூலமாக அறிவை அடைந்து கொண்டிருப்பதை மனம் ஏற்று பழகியிருப்பதால் உபநிஷத் ஆத்ம ஞானத்தை நேரிடையாக உபதேசிக்காமல் முதலில் பழகிய விஷயமான இந்த ஜகத்தை உபதேசித்து பிறகு அதை நீக்கி ஞானத்தைக் கொடுக்கின்றதுபிரத்யக்ஷ பிரமாத்தில் உள்ள சிரத்தையை எடுத்து உபநிஷத் பிரமாத்தில் வைத்தால்தான் ஆத்ம ஞானம் புரிய ஆரம்பிக்கும்புத்தியின் ஸ்வரூபமே ஒரு தோஷமாக இருக்கின்றதுஒன்று நமக்கு புரியவில்லையென்றால் நாம் குழப்பத்தில் இருப்போம்புரிந்து விட்டால் அது அமைதியாகி விடும்எனவே காரண காரிய சம்பந்தத்தை சார்ந்திருப்பதாக புத்தி படைக்கப்பட்டிருக்கின்றதுஇந்த உலகம் ஒரு நியதியுடன் இயங்கி கொண்டிருக்கிறது எனவே புத்தி அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இருக்கின்றதுகனவு பிரபஞ்சத்தில் எந்தவித நியதியும் இல்லாததால் அதை புத்தி ஏற்றுக் கொள்ளவில்லை.

 

உபலம்பா4த்பிரத்யக்ஷ பிரமாணத்தினால் அடையும் அனுபவத்தினால்

ஸமாசாராத்முறையாக, நியதியுடன் உலகம் இயங்கி கொண்டிருப்பதை அனுபவிப்பதனால், காரண காரிய சம்பந்தத்துடன் இந்த ஜகத் இருப்பதை புத்தி அறிந்து கொண்டததால்தான்

அஸ்தி வஸ்து வாதினாம்இந்த உலகம் இருக்கின்றது என்று கருதுபவர்களுக்கு

ஜாதிஸ்து தேஸி2தாஸ்ருஷ்டி உபதேசிக்கப்படுகின்றது

புத்தைஹிஞானிகளால்

ஸதா அஜாதே ஸ்த்ரஸதாம்எப்பொழுதும் அத்வைதத்தை கண்டு பயந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிரம்மன் ஒன்றுதான் என்று சொல்வதனால் நான் அழிந்து விடுவேன் என்ற பயத்தினால்; ஸ்ருஷ்டியை இல்லையென்று சொல்வதில்லை.

 

காரிகை-43

அஜாதேஸ்த்ரஸதாம் தேஷாம்அவர்கள் பிறப்பற்ற வாதத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

உபலம்பாத் யே வியந்திஅனுபவிக்கப்படுவதால் தவறான முடிவை, உலகம் இருக்கின்றது வாதம் செய்கின்றார்கள் பிறப்பற்ற பிரம்மத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

ஜாதி தோஷ ந ஸேத்ஸ்யண்டிபிறப்பை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குறைகளால் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது, பாதிப்பும் ஏற்பட்து.

தோஷோ அபி அல்பஹ பவிஷ்யதிஅப்படி இருக்கும் குறைகள் மிகக்குறைவாக இருக்கும்.

 

காரிகை-44

பூ.பக்ஷி உபலம்பம் (அனுபவிப்பதால்), ஸமாசாரதி (நியதியுடன் இயங்குவதால்) இந்த இரண்டு காரணங்களால் இந்த ஜகத் உண்மையாக இருக்கின்றது.

பதில்    இந்த காரணங்கள் பொய்யான வஸ்துக்களுக்கும் பொருந்தும். எனவே ஜகத் பொய்யானதுபொய்யான மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட யானையும் நியதியுடன் இயங்குகிறது. எனவே இந்தக்காரணங்கள் சத்யத்துவத்தை நிலை நாட்ட முடியாது.

 

உபலம்பாத் ஸமாசாராத்அனுபவிப்பதனால், முறையாக செயல்படுவதாலும்

மாயாஹஸ்தி யதா2 உச்யதேஎப்படி மாயாஜாலத்தில் தோற்றுவிக்கும் பொய்யான யானை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

உபலம்பாத, ஸமாசாராத் அஸ்தி வஸ்து உச்யதேமேற்சொன்ன விதமாக இந்த உலகத்தில் உள்ள இருக்கின்ற பொருட்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றது.

 

காரிகை-45

ஜாத்யாபாஸம்பொய்யான தோற்றம்

சலாபாஸம்அசைவது போன்ற தோற்றம்

ததேவ சஅவ்விதமே

வஸ்துவாபாஸம்உலகத்தில் உள்ள பொருட்களின் தோற்றம்

அஜ அசைல, அவஸ்துத்வம்பிறக்காத, அசைவற்ற நிர்குண ஸ்வரூபம்

வஸ்துஎது குணத்தையுடையதோ அதை திரவியம் என்று சொல்லக்கூடாது.

விக்ஞானம்சைதன்யத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஸா2ந்தம்அனைத்து தோற்றங்களூம் ஒடுங்கிய நிலை

அத்வயம்இரண்டற்றது

 

காரிகை-46

ஏவம் ந ஜாயதே சித்தம்இவ்வாறு (மேலே சொல்லிய கருத்துப்படி) சைதன்யம் பிறப்பதில்லை.

ஏவம் தர்மாஹா அஜாஹ ஸ்ம்ருதாஇவ்வாறு ஜீவர்கள் பிறப்பற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஏவம் ஏவ விஜானந்தஹ ந பதந்தி விபர்யதேஇவ்விதமாகவே அறிபவர்கள் சம்சாரத்தில் வீழ்வதில்லை.

 

காரிகை-47

தீப்பந்தத்தை சுழற்றி விதவிதமான உருவங்களை உருவாக்குவார்கள். இந்த அலாதத்தை சைதன்யத்திற்கும்; தோற்றுவிக்கப்படுக் தோற்றங்களை ஜகத்திற்கும் ஒப்பிட்டு ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகின்றதுஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளும்போது ஜகத் உண்மையாக இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றதுஅலாதத்தினுடைய அசைவற்ற தன்மை சாந்தி என்றும் அதை அத்வைதத்திற்கும் ஒப்பிடுகின்றார்.

 

யதா அலாதஸ்பந்திதம்எவ்வாறு தீப்பந்தத்தின் அசைவு

ரிஜுவக்ராதிகாபாஸம்நேர்கோடு, வளைந்த கோடுகள் முதலிய உருவத்தை தோற்றுவிக்கின்றதோ

ததா விக்ஞான ஸ்பந்தி தம்அவ்விதம் சைதன்யத்தின் அசைவு, ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது

க்ரஹண, க்ராஹகா ஆபாஸம்அனுபவிக்கப்படும் பொருட்கள், அனுபவிப்பவன் என்ற விஷயங்களை பொய்யாக தோற்றுவிக்கப்படுகின்றது.

 

·         தீப்பந்தம் ஒன்று அதிலிருந்து தோற்றுவிக்கப்படும் உருவங்கள் பலவாக இருப்பது போல அத்வைதமே த்வைதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது

·         அலாதத்திற்கும் விதவிதமான தோற்றத்திற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது

·         தோற்றுவிக்கப்பட்ட வடிவங்கள் தீப்பந்தத்தை சார்ந்திருப்பதால் அது மித்யா.

·         இந்திரியங்கள் எந்த ஒரு பொருளையும் முழுமையாக கிரகிக்காது. கண்கள் உருவத்தை மட்டும்தான் பார்க்கின்றதுதீப்பந்தத்தால் உருவாக்கப்படும் வடிவங்கள் மறைவதால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் மறைந்து விடும்எனவே இந்த ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை-48

அஸ்பந்தமானம் அலாதம்அசைவற்ற தீப்பந்தம்

அனாபாஸம் அஜம் யதாஅந்த நிலையில் எந்தவிதமான வடிவங்களும் தோன்றவில்லை

ததா அஸ்பந்தமானம் விக்ஞானம்அவ்விதம் சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளாத போது

அனாபாஸம் அஜம்அதிலிருந்து எதுவும் தோன்றவில்லையென்று புரிந்து கொள்ள முடியும்.

சமாதி நிலையை அத்வைத அனுபவமாக புரிந்து கொள்ள வேண்டும்ஆழ்ந்த உறக்கத்திலும் இதை அனுபவிக்கின்றோம். இந்த நிலையில் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இருமைகள் இல்லை.

 

காரிகை-49

அலாதே ஸ்பந்தமானே வைதீப்பந்தம் அசைந்து கொண்டிருக்கின்ற போது

ஆபாஸா ஹ - விதவிதமான உருவங்கள்

ந அன்யதோபூவஹவேறிடத்திலிருந்து வரவில்லை

ந ததஹ அன்யத்ர நிஸ்பந்தாத்தீப்பந்தம் அசையாமலிருக்கும்போது அதிலிருந்து அவைகள் வேறிடத்திற்கு செல்லவில்லை

ந அலாதம் ப்ரவிஸந்தி தேஅந்த வடிவங்கள் அசைவற்ற தீப்பந்தத்திற்குள்ளும் செல்லவில்லை

 

காரிகை-50

அலாதத்திலிருந்து எந்த காரணத்தினால் விதவிதமான வடிவங்கள் தோன்றவில்லை என்று இதில் விளக்குகின்றார்.

ந நிர்கதா அலாதாத் தேஅந்த விதவிதமான உருவங்கள் தீப்பந்தத்திலிருந்து உருவாகவில்லை, தோன்றவில்லை

த்ரவ்யத்வ அபாவ யோகதஹஒரு பொருளாக இருக்கின்ற தன்மையில்லாதது இருப்பதினால் இதற்கு பிறப்பே என்பது இருப்பதில்லை. நாம ரூபங்களுக்கும், அதிஷ்டானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தத்தையும் சொல்ல  முடியாது.

விக்ஞானே அபி ததை2வ ஸ்புரஇப்படியேதான் சைதன்ய விஷயத்திலும் இருக்கின்றது

ஆபாஸஸ்ய அவிஸே22தஹஇந்த தோற்றங்களில் வேற்றுமை இல்லைதீப்பந்தத்திலிருந்து தோன்றிய உருவங்களும் தெரிகின்றது, இந்த ஜகத்தும் தெரிகின்றதுஇது தோற்றங்களில், தோன்றும் பொருட்களில் வேற்றுமையில்லை என்று கூறியிருக்கின்றார்விதவிதமான உருவங்கள் அலாதத்தை சார்ந்து இருப்பதைபோல, இந்த ஜகத்தும் பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

----oo000oo----

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...