சாதன பஞ்சகம்
1.1 வேதோ3 நித்யம் அதீ4தாம்
வேதாந்த சாஸ்திரத்தை எப்பொழுதும் படிக்க வேண்டும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையை
தர்மம்படி இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த
வேண்டும் என்று அறிவை. உபதேசிக்கின்ற சாஸ்திரத்தை எப்பொழுதும் படிக்கப்படவேண்டும்.
மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.
1.2 தது3திதம் கர்ம ஸ்வனுஷ்டீ2தாம்
சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளை நன்கு கடைப்பிடிக்க வேண்டும்.
சாஸ்திரம் உபதேசிக்கின்ற வாழ்க்கை முறைகளை செயல்படுத்த வேண்டும்.
1.3 தேனேஶஸ்ய விதீயதாம் அபிசிதி:
தேனே - செய்கின்ற செயல்களால்
ஈஶஸ்ய - இறைவனை
அபிசிதி: - வழிபடுதல், பூஜை செய்தல்
விதீயதாம் - செய்ய வேண்டும்
நாம் அன்றாடம் தர்மப்படி செய்கின்ற செயல்கள் அனைத்தும் இறைவழிபாடாக இருக்க
வேண்டும்
1.4 காம்யே மதிஸ்த்யஜ்யதாம்
ஆசையினால் தூண்டப்படும் புத்தியின் செயலை விட்டுவிட வேண்டும்.
1.5 பாபௌ3க4: பரிதூ4யதாம்
பாவக்கூட்டங்களை விலக்கிவிட வேண்டும். மனதிலுள்ள தீய குணங்களை நீக்கிவிட
வேண்டும். தீய எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
1.6 ப4வஸுகே தோ3ஷா அனுஸந்தீ4யதாம்
இந்த உலகம் கொடுக்கும் இன்பத்தில் குறைகள் இருப்பதை திரும்ப திரும்ப பார்க்க
வேண்டும். அதனால் வைராக்கியத்தை அடைய வேண்டும்.
1.7 ஆத்மேச்சா வ்யவஸீயதாம்
ஆத்மாவை அடைவதற்கு ஆசைப்படுவாயாக. முமுக்ஷுத்வத்தை அடைவாயாக.
1.8 நிஜக்3ருஹாத்தூர்ணம் வினிர்க3ம்யதாம்
நிஜக்3ருஹாத் - அவரவர்கள் தன்னுடைய வீட்டிலிருந்து
தூர்ணம் - உடனே
வினிர்க3ம்யதாம் - வெளியேற வேண்டும்
வினிர்க3ம்யதாம் - வெளியேற வேண்டும்
மேற்கூறிய சாதனங்களின் முதிர்ச்சியால் விவேகத்தை அடைவோம். விவேகமென்பது
வாழ்க்கையின் நிலையானது எது, நிலையற்றது எது
என்பதை பற்றிய அறிவு அடைய வேண்டும். பரம புருஷார்தத்தை அடைவதே இறுதியான லட்சியம்
என்ற அறிவை அடைய வேண்டும். நிலையற்றதில் வைராக்கியமும், நிலையானதாக
இருப்பதை அடைய வேண்டும் என்ற ஆசையும் உண்டாக வேண்டும். அடைந்த அறிவைக் காப்பாற்றுவதற்கு
சத்சங்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதே இந்த சாதனத்தின் முக்கிய குறிக்கோள்.
முமுக்ஷுத்வத்தை அடைந்தவுடன் அதை அடைய உதவும் சரியான குருவை நாடி அடைவதற்கு
உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
2.1 ஸங்க ஸத்ஸு விதீயதாம்
ஸத்ஸு - சான்றோர்களின், பெரியோர்களின்
ஸங்கஹ - சேர்க்கையை
விதீயதாம் - நாட வேண்டும்
சான்றோர்களின் நூல்களைப் படிப்பதிலும், அவர்களுடன்
சம்பந்தம் வைப்பது போன்றதாகும்.
2.2. ப4கவதே பக்தி த்ருடா ஆதீயதாம்
பகவதஹ - இறைவனிடத்தில்
த்ருடா - உறுதியான
பக்தி - பக்தியானது
ஆதியதாம் - செலுத்தப்பட வேண்டும்
இறைவன் மீது நிபந்தனையில்லாத அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாய், தந்தை, ஆசார்யர்களுடைய முழு அன்பை பெற்றிருந்தாலும்
ஆத்ம தத்துவ உபதேசம் நன்கு புரியும்.
யாரிடமிருந்து முழு அன்பை இழந்திருக்கின்றோமோ அதை இறைவனிடத்தில் பெற
வேண்டும்.
2.3 ஶாந்த்யாதி3: பரீச்சீயதாம்
ஶாந்தியாதி3 - சாந்தி முதலியவைகளை, மனக்கட்டுபாடு
முதலிய தகுதிகளை
பரீச்சீயதாம் - அடைந்திட வேண்டும்
மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், சகிப்புதன்மை,
சாஸ்திர உபதேசத்தில் உறுதியான நம்பிக்கை போன்றவை அடைந்திட வேண்டும்.
இதுவரை கூறிய சாதனங்கள் அனைத்தும் ஆத்ம விசாரம் செய்வதற்கு நம்மை
தகுதிப்படுத்துகின்றன.
2.4 த்3ருடதரம் கர்மாஸு ஸந்த்யஜ்யதாம்
த்ருடதரம் - மிகவும் உறுதியாக
கர்மாஸு - கொஞ்ச கொஞ்சமாக கடமைகளை, செயல்களை
ஸந்த்யஜ்யதாம் - துறக்க வேண்டும்
நம்மிடத்து இருக்கும் பொறுப்புக்களை கொஞ்ச கொஞ்சமாக மற்றவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இதனால் நம்முடைய
செயல்களும் மிகவும் குறைந்து விடும் அதனால் காலம் அதிக கிடைக்கும். அந்தக் காலத்தை
ஆத்ம ஞானம் சாதனங்களை பின்பற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.5 ஸத்வித்வான் உஅஸ்ருப்யதாம்
ஸத்வித்வான் - வேதாந்த சாஸ்திரத்தின் அறிவை உடையவரும், அதன்படியே வாழ்கின்றவருமான குருவை
உபஸ்ருப்யதாம் - நாட வேண்டும்
2.6 ப்ரதிதி3னம் தத்3பாது4கா ஸேவ்யதாம்
நாட்தோறும் குருவின் பாதங்களை வணங்கி, அவருக்கு
சேவை செய்ய வேண்டும். குருவுக்கு சேவை செய்வதால் மனதூய்மையை அடையலாம். அவருடைய பாதத்தை வணங்குவதனால் பணிவு என்ற
நற்குணத்தை அடையலாம். குருவும், சிஷ்யனும் ஒருவரையொருவர்
நன்கு புரிந்துக் கொள்ளப்படுகிறது. குருவை
சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யும் போது சிஷ்யனுடைய மனதினிலே ஆத்ம
தத்துவத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியும்.
2.7 ப்ரஹ்ம எகாக்ஷரம் அர்த்2யதா3ம்
ஓங்கார தத்துவமான பிரம்ம ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ள
வேண்டும்.
2.8 ஶ்ருதிஸிரோ வாக்யம் ஸமாகர்ணயதாம்
வேதத்திற்கு தலையான பகுதியிலுள்ள வாக்கியத்தை நன்கு கேட்க வேண்டும்.
3.1 வாக்2யார்தஶ்ச விசார்யதாம்
குருவினால் உபதேசிக்கப்பட்ட உபநிஷத்தின் மகாவாக்கியங்களை விசாரம் செய்து
தெளிவான, சந்தேகமற்ற அறிவை அடைய வேண்டும்.
மகாவாக்கியம் என்பது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை உபதேசிக்கும் வாக்கியம். இதுவே சிரவண
என்றும் கூறப்படுகிறது.
3.2 ஶ்ருதிஶிர: பக்ஷ: ஸமாஶ்ரீயதாம்
உபநிஷத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உபநிஷத்தின் உபதேசம்
நமது அனுபவ அறிவுக்கு நேரெதிராக இருப்பதால் நமக்கு ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம்
வரலாம். இருந்தாலும் உபநிஷத்தின் மீது சிரத்தையுடன் இருந்து உபதேச வாக்கியங்களை
அப்படியே எடுத்துக் கொண்டு விசாரம் செய்து தெளிவடைய வேண்டும்.
3.3. து3ஷ்தர்காத் ஸுவிரம்யதாம்
தவறான யுக்திகளை கையாண்டு விசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
3.4 ஶ்ருதிமத தர்கோ அனுஸந்தி4யதாம்
உபநிஷத்தின் கருத்தை தெளிவுற அறிந்து கொள்வதற்கு தர்க்கத்தை பயன்படுத்தலாம்
3.5 ப்ரஹ்ம அஸ்மிதி விபா4ய்தாம்
நான் பிரம்மனாகவே இருக்கிறேன், என்று
தியானிக்க வேண்டும். இதற்கு நிதித்யாஸனம் என்று பெயர்.
3.6 அஹரஹர் க3ர்வஹ பரித்யஜ்யதாம்
ஒவ்வொரு நாளும் நம்மிடையே எழும் அகந்தையை நீக்க வேண்டும். இந்த ஞானயோக
சாதனத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நம்மிடத்தே கர்வமும் வந்து
கொண்டிருக்கும். எனவே அதனை அவ்வப்பொழுது கண்டறிந்து நீக்கிக் கொண்டிருக்க
வேண்டும்.
3.7 தேஹே அஹம் மதி: உஜ்யதாம்
இந்த உடலை “நான்” என்று நினைக்கின்ற எண்ணத்தை நீக்கிவிட வேண்டும்.
3.8 பு3த4ஜனைஹி வாதஹ பரித்யஜ்யதாம்
கற்றறிந்தவர்களிடம், பண்டிதர்களிடம், வாதம்
செய்யக்கூடாது. நாம் அறிந்து கொண்டதை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று
முயற்சி செய்யக் கூடாது.
4.1 க்ஷுத்3வ்யாதி4ஶ்ச சிகித்ஸ்யதாம்
பசி, வியாதி இவைகளை நீக்குவதற்கான சிகிச்சையை
செய்தாக வேண்டும்.
4.2 ப்ரதிதினம் பிக்ஷு ஔஷதம் பு4ஜ்யதாம்
ஒவ்வொரு நாளும் பிக்ஷை எடுத்தும் பசியையும், மூலிகைகளைக்கொண்டு
நோயையும் போக்கிக் கொள்ள வேண்டும். பசியென்ற நோயை நீக்கிக் கொள்ள உணவை மருந்தாக
உட்கொள்ள வேண்டும்.
4.3 ஸ்வாத3ன்னம் ந து யாச்யதாம்
ருசியான உணவை நாட வேண்டாம்
4.4 விதி4வஶாத் ப்ராப்தேன ஸந்துஷ்யதாம்
விதியின் வசத்தால் கிடைத்ததில் திருப்தி அடைய வேண்டும்.
4.5 ஶீதோ3ஷ்ணாதி3 விஷஹ்யதாம்
குளிரையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய இரட்டைகளனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
4.6 ந து வ்ருதா வாக்யம் ஸமுச்சார்யதாம்
வ்ருதா2 வாக்யம் - பயனற்ற பேச்சை
ந து ஸமுச்சார்யதாம் - பேசக்கூடாது.
4.7 ஔதா3ஸீன்யம் அபீ3ப்ஸ்யதாம்
நடுநிலையில் இருக்க வேண்டும்
4.8 ஜனக்ருபானைஷ்குர்யம் உத்ஸ்ருஜ்யதாம்
மக்கள் காட்டுகின்ற கருணையும், அன்பிற்கும்,
கோபத்திற்கும் கட்டுப்படக்கூடாது.
யார் வெறுத்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது.
5.1 ஏகாந்தே ஸுக2ம் ஆஸ்யதாம்
தனிமையிலிருந்து பழகவேண்டும். தனிமையில் இருந்து சுகத்தையும், மனவமைதியையும் அனுபவிக்க பழக வேண்டும்.
5.2 பரதரே சேத: ஸமாதீ4யதாம்
மேலான பரபிரம்மனிடத்தில் மனதை வைக்க வேண்டும்.
5.3 பூர்ணாத்மா ஸுஸமிக்ஷ்யதாம்
நான் பூரணமானவன், ஆத்மஸ்வரூபமானவன் என்பதை உணரவேண்டும்.
5.4 ஜகதி3தம் தத்பா3தி4தம் த்ருஷ்யதாம்
தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகமானது வெறும் தோற்றம்தான், உண்மையானதல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.
5.5 ப்ராகர்ம ப்ரவிலாப்யதாம்
5.6 சிதிப்லான்னாப்யுத்தரை: ஶ்லிஷ்யதாம்
தான் அடைந்த அறிவினால் இதுவரை செய்துள்ள செயல்களினால் வந்திருக்கின்ற
பாவ-புண்ணியங்களை நீக்கி விடுகின்றான்.. ஞானத்தை அடைந்த பிறகு செய்யும்
செயல்களினால் வரும் பாவ-புண்ணியங்களும் வராது..
5.7 பிராரப்தம் த்வி: பு4ஜ்யதாம்
பிராரப்த பலனை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்.
5.8 அத பரப்ரஹ்மாத்மனா ஸ்தீ2யதாம்
பிறகு பரமாத்ம ஆனந்த ஸ்வரூபமாக மனநிறைவுடன் இருக்க வேண்டும்.
----OOO----
No comments:
Post a Comment