பஞ்சதசி
அத்தியாயம்-4
த்வைத விவேகம்
ஈஸ்வரனால்
தோற்றுவித்த
இருமை
தெளிவாக
பிரிக்கப்படுகிறது. ஜீவனாலும்
படைக்கப்பட்ட
இருமைகளையும்
தெளிவாக
விளக்கப்படுகிறது. இந்த
இரு
ஸ்ருஷ்டிகளும்
கலந்திருப்பதால்
அவைகளை
தனித்தனியே
பிரித்து
பார்க்க
வேண்டும். இவ்விரண்டையும்
பிரிப்பதனால்
ஜீவனால்
நீக்க
வேண்டிய
பந்தமானது
தெளிவாக
விளங்கும்.
மாயையே இந்த படைப்புக்கு உபாதான காரணமாக அறிந்து கொள்ள வேண்டும். மாயையை தன்னிடத்தில் உள்ள ஈஸ்வரன் உலகத்தை தோற்றுவிக்கிறார். இங்கே அவருடைய அறிவு ஸ்வரூபம் நிமித்த காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உபதேசம் ஸ்வேதாஸ்வர உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஆத்மாதான் நாம் பார்த்து அனுபவித்து கொண்டிருக்கும் உலகம் தோன்றுவதற்கு முன்பே ஆத்மாகவே இருந்தது. இந்த ஸ்ருஷ்டிக்கு காரணமாக ஆத்மாதான் என்று இதிலிருந்து தொpந்து கொள்ளலாம். அது ஸ்ருஷ்டி செய்வேன் என்று நினைத்து தன்னுடைய சங்கல்பத்தினாலே இந்த உலகங்களை படைத்தது என்று அய்தரேய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
ப்ரத்யகாத்மாவுக்கு வேறில்லாத பிரம்மத்திலிருந்து பஞ்சபூதங்கள் வரிசை கிரமமாக தோன்றியது. ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம், தாவரங்கள், உணவு, தேகம் இவைகளெல்லாம் வரிசையாக பிரம்மத்திடமிருந்து தோன்றின. ஆத்மாவாக இருக்கின்ற பிரம்மத்தினிடமிருந்து இவைகள் தோன்றின. பார்த்து அனுபவிக்கும் அனைத்தும் பிரம்மத்திடமிருந்து தோன்றியவைகளாகும்.
நானே பலவாக ஆவேனாக, நானே பலவாக பிறப்பேனாக என்ற அவருடைய விருப்பப்படி தவத்தை மேற்கொண்டு எல்லா உலகத்தையும் தோற்றுவித்தார். இவ்வாறு தைத்திரிய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னரே ஸத் மாத்திரமாகவே இருந்தது. பிறகு அது தானே பலவாக தோன்றுவதற்கு யோசித்து அக்னி, நீர், அன்னம், முட்டையிலிருந்து தோன்றிய உயிரினங்கள் முதலியவைகளை ஸ்ருஷ்டி செய்தது என்ற சாமவேதிகள் சொல்கிறார்கள்.
எவ்விதம் நெருப்பிலிருந்து தீப்பொறிகள் தோன்றுகின்றனவோ அவ்விதமே அக்ஷரத்திலிருந்து (அழியாத பிரம்மத்திலிருந்து) விதவிதமான படைப்புக்கள், அறிவுள்ள படைப்புக்கள், ஜடமான படைப்புக்கள் என்று தோன்றின என்று அதர்வ வேதம், முண்டக உபநிஷத் சொல்கிறது.
நாம-ரூபங்களின் வெளிப்பாடே ஸ்ருஷ்டி எனப்படுகிறது. பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகம் முன்பு வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் மாயையாக பிரம்மத்தோடு இருந்தது. இப்போது வெளித்தோற்றத்திற்கு வந்திருக்கிறது. அனுபவிக்கப்படுகின்ற நாம-ரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டது. அவைகள் வெளிவாகவும் தெரிந்து கொண்டிருக்கிறது. இந்த நாம-ரூபங்கள் விராட் முதலியவைகளிடத்தில் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறது.
விராட், மனு, மனிதர்கள், பசுக்கள், கழுதை, குதிரை, வெள்ளாடு, செம்மறியாடு முதல் எறும்பு வரை இருமைகள் தோன்றின என்று பிருஹதாரண்ய உபநிஷத் சொல்கிறது. ஸ்ருஷ்டியும், உயிரினங்களும், சிதாபாஸனும் தோன்றன.
ஜீவ ரூபமாக பிராணனனுடன் கூடியிருப்பதால் ஈஸ்வரனே ஜீவனாக தன்னை மாற்றிக் கொண்டு அதன் உடலினுள் நுழைந்தார். இதுவரை கூறிய உபநிஷத்துக்களிலும் இவ்வாறாக கூறப்பட்டிருக்கிறது. பிராணனைக் கொண்டுள்ளதால் ஜீவன் என்ற பெயரை அடைந்தார்.
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா, சைதன்யம், எது சூட்சும சரீரமாக இருக்கிறதோ அதுவும் சூட்சும சரீரத்தில் இருக்கின்ற சிதாபாஸனும் (ஆத்மாவின் பிரதிபிம்பம்) இவைகள் மூன்றும் சேர்ந்து இருப்பதையே ஜீவன் என்று சொல்லப்படுகிறது.
மாயையிடம் இரு மாபெரும் சக்திகளான ஆவரணம், விக்ஷேபம் உள்ளது. அவைகளைப் பற்றி கூறப்படுகிறது. ஈஸ்வரனிடத்திலிருந்து வெளி வந்துள்ள ஜீவன் மட்டும் ஏன் சம்சாரத்தை அனுபவிக்கின்றான் என்ற கேள்விக்கு மாயையின் ஆவரண சக்தியானது ஜீவனுடைய உண்மை ஸ்வரூபத்தை மறைத்து விடுவதனால் ஜீவன் சம்சாரத்தை அனுபவிக்கின்றான் என்பதே பதிலாகும். ஈஸ்வரனிடத்தில் மாயையின் இந்த சக்தி செயல்படாது. ஆனால் விக்ஷேப சக்தி செயல்படுவதால் படைப்பு உருவாகிறது. எந்தவொரு மாயையானது ஈஸ்வரனைச் சார்ந்திருக்கின்றதோ அதனுடைய விக்ஷேப சக்தியானது படைக்கும் சக்தி இருப்பது போல மோக சக்தியும், ஆவரண சக்தியும் இருக்கிறது. இந்த ஆவரண சக்தி ஜீவனை மோகத்தில் ஆழ்த்துகிறது, மதிமயக்கத்தில் வைத்திருக்கிறது.
ஜீவனானவன் மோகவசத்தில் கட்டுப்பட்டவனாக ஆகிவிட்டான். தன்னுடைய ஸ்தூல சரீரத்தில் மூழ்கிவிட்டவனாகி விட்டான். இந்த உடலின் மீது அபிமானம் கொண்டு விட்டான். அதனால் துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றான். ஆவரண சக்தி ஜீவனை சம்சாரத்தில் ஆழ்த்தி விடுகிறது. நாம் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த உலகிலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் தோற்றுவிக்கப்பட்டது என்று எடுத்துக் காட்டப்பட்டது.
ஜகத் ஈஸ்வரனால் படைக்கப்பட்ட காரியமாக இருக்கிறது. இதுவே ஜீவனுக்கு அனுபவிக்கப்படக்கூடியதாகவும் இருக்கிறது. தந்தையால் உருவாக்கப்பட்ட விளையாட்டு பொம்மைகள் குழந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்ற பொருளாக இருக்கிறது. அதுபோல ஜீவனுக்கு ஈஸ்வர படைப்புக்கள் இருக்கிறது. ஈஸ்வர படைப்பினோடு ஏதாவதொரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதே ஜீவ ஸ்ருஷ்டியாகும். ஈஸ்வரனுடைய ஸ்ருஷ்டியானது ஒவ்வொரு விதவிதமாக சம்பந்தம் ஏற்படுத்திப கொண்டு அதை போக்யமாக மாற்றி அவைகளை அனுபவிக்கும் போக்தாவாக இருப்பதே ஜீவ ஸ்ருஷ்டியாகும். ஜீவன் ஒருவிதமான போக்யத்தை தோற்றுவித்திருக்கிறான். பிருஹதார உபநிஷத்தில் சப்தான்ன பிராஹ்மனம் என்ற பகுதியில் ஜீவனால் படைக்கப்பட்டவைகள் விளக்கப்பட்டுள்ளது. ஏழுவிதமான போக்யங்களை ஜீவன் படைத்திருக்கின்றான். கர்ம பலன்களினாலும் செய்த உபாஸனையின் பலனாகவும் போக்யங்கள் உருவாக்குகின்றனர்.
மேற்சொன்ன ஏழுவகை அன்னங்கள் இதில் கூறப்படுகிறது.
1.
மர்த்யன்னம் - மனிதன்
சாதாரணமாக
உட்கொள்ளும்
உணவுப்பொருட்கள். நெல்
போன்ற
உட்கொள்ளும்
உணவுவகைகள்
2. தேவான்னம் - இரண்டு வகையான உணவுகள் தேவர்களுக்கு கொடுப்பது. மனிதன் தேவர்களுக்கு இரண்டு வகையான யாகங்கள் மூலம் ஆஹுதிகளாக கொடுக்கின்ற போக்ய பொருட்கள்
3. பஷ்வன்னம் - பசு போன்ற விலங்குகளுக்கு உணவாக இருப்பவைகள்
4. ஆத்மானனம் - மீதி மூன்று வகைகள் மனிதன் தன்னுடைய பயன்பாட்டுக்காக கொண்டுள்ள வாக்கு, மனம், பிராணன் ஆகியவைகளாகும். இவை மூன்றும் கர்ம பலன்களுக்கேற்ப விதவிதமாக கிடைக்கினறது.
இவ்விதமாக
அன்னங்கள்
ஏழுவிதமாக
பிரிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி- இந்த ஏழு அன்னங்களும் ஈஸ்வர ஸ்ரூஷ்டியாகத்தானே இருக்கிறது. எப்படி ஜீவ ஸ்ருஷ்டி என்று கூறுகிறீர்கள்?
பதில் - அதாவது
ஈஸ்வரனால்
இவைகளனைத்தும்
உண்மையில்
படைக்கப்பட்டதாக
இருந்த
போதிலும்
ஜீவனானவன்
இந்த
அன்னங்களை
போக்யமாக
இருக்கின்ற
தன்மையை
உடையதாக
மாற்றி
படைத்தான். இவனுடைய
உபாஸனையின்
பலனாலும், செயல்களின்
பலனாலும்
இவ்வாறு
செய்கிறான்.
ஈஸ்வரனால் படைக்கபட்டவைகள், அவைகளில் போக்யத்வத்தை ஜீவனால் படைக்கப்பட்டது என இரண்டு விதமாக இந்த உலகம் இருக்கிறது. ஒரு பொருளை அதை அப்படியே பார்த்தால் அது ஈஸ்வர திருஷ்டி, அதில் நமக்கு போக்யமாக இருக்கும் தன்மையோடு பார்த்தால் அது ஜீவ ஸ்ருஷ்டி. எனவே உலகில் காணும் பொருட்கள் அனைத்தும் ஈஸ்வர ஸ்ருஷ்டியாக பார்க்கும் வரையில் அதனால் எந்த துயரத்தையும் அடைவதில்லை. இது எப்படி சாத்தியமாக இருக்க முடியும்? படைப்பவன் ஒருவனாகவும் அனுபவிப்பவன் வேறொருவனாக எப்படி இருக்க முடியும் என்றால் ஈஸ்வரன் முக்தனாக இருப்பதால் அவருக்கு எதுவும் போக்யமாக தெரியவில்லை. ஆனால் ஜீவன் சம்சாரியாக இருப்பதால் அவனுக்கு போக்யமாக தோன்றுகிறது. தந்தைக்கு பிறக்கும் பெண் வேறொருவனின் மனைவியாகி அவனுக்கு போக்யமாக இருப்பதுப்போல இது இருக்கிறது.. இந்த உதாரணத்தைப் போல ஈஸ்வரன் படைக்கிறான் அவைகளை ஜீவன் அனுபவிக்கிறான். அனுபவிக்கும் பொருளாக மாற்றிக் கொள்கிறான்.
ஈஸ்வரனுடைய சங்கல்பமானது மாயையின் வெளிப்பாடு. இது ஸ்ருஷ்டிக்கு காரணமாக இருக்கிறது. ஜீவனுடைய சங்கல்பமானது போகரூபமான படைப்புக்கு காரணமாக இருக்கிறது. மனதிலிருக்கிற எண்ணங்களே ஜீவ சங்கல்பம்.
ஈஸ்வரனால் படைக்கப்பட்ட விலையுயர்ந்த வைரம் போன்ற பொருட்களிடத்தில் ஒரு தன்மைதான் இருக்கிறது. அந்த வைரத்தை அனுபவிப்பனுடைய மனதிலிருக்கின்ற எண்ணங்களில் பலவிதமான வேற்றுமைகளினால் அந்தப் பொருளிடத்தில் இருக்கின்ற அனுபவிக்கும் தன்மை பலவிதமாக இருக்கிறது.
ஒருவன் விலை உயர்ந்த வைரத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறான். வேறொருவன் அது கிடைக்காததால் கோபத்தை அடைகிறான். மூன்றாவதாக ஒருவன் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இவன் மனதில் மகிழ்ச்சியும் இல்லை, கோபமும் இல்லை. மகிழ்ச்சி, கோபம், உதாசீனம் என்று அந்த பொருளிடத்தில் இருக்கின்ற மூன்று விதமான ஸ்வரூபங்களும் ஜீவர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரனால் படைக்கப்பட்ட வைரம் சாதாரணமாக வெறும் கல்லாக மட்டும் இருக்கிறது. அதில் மூன்று உணர்ச்சிகளான ஜீவ ஸ்ருஷ்டியும் பொதுவாக இருக்கிறது.
ஒரு பெண், அவளுக்கு வேறாக இருக்கின்ற கணவனுக்கு மனைவியாகவும், கணவனின் பெற்றோர்களுக்கு மருமகளாகவும், கணவனின் தம்பிக்கு அண்ணியாகவும் பார்க்கப்படுகிறாள். ஆனால் அவள் தன் ஸ்வரூபத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருக்கிறாள்.
ஒரு பெண்ணை பார்க்கும் விதத்தில் மாறுபடட்டும் ஆனால் அவளிடத்தில் எந்த வேறுபாடும் இல்லையே. அந்தப்பெண் சரீரத்தில் எந்தவித சேர்க்கையும் பார்க்கப்படவில்லையே. ஜுவ ஸ்ருஷ்டியாக கூறப்படும் பெண்ணிடத்தில் சரீரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லையே.
அப்படியில்லை. மாமிசத்தாளான ஒரு பெண், மனோமயமாக வேறொரு பெண் இருக்கிறாள். ஈஸ்வர ஸ்ருஷ்டியான மாமிசமான பெண்ணிடத்தில் வேறுபாடில்லை. ஆனால் ஜீவ ஸ்ருஷ்டியான மனோமய பெண்ணிடத்தில்தான் வேற்றுமைகள் இருக்கின்றன.
கேள்வி – மனதிற்குள் புதியதாக ஒரு எண்ணம் வந்துவிட்டால் அதுவே அறிவாகும். மதிமயக்கத்தினால், மனமயக்கத்தினால் அடைந்தாலும் அதுவும் அறிவுதான். பிராந்தி, கனவு, மனக்கோட்டை கட்டுதல், கற்பனை செய்தல், நினைவுக்கு கொண்டு வருதல் ஆகியவைகள் மனோமயமாக இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விழிப்புநிலையில் இருக்கும் பிரமாணத்தின் மூலம் அறியப்படுகின்ற பொருட்கள் எப்படி மனோமயமாக இருக்க முடியும்?
அறிவு எந்தெந்த நிலைகளை கடந்து நம்மை அடைகிறது? எப்படி அறிவை அடைகிறோம்? என்று விசாரம் செய்து பார்க்க வேண்டும். எந்த நிலையிலிருந்து அறிவை அடைந்தாலும் அவைகளனைத்தும் ஜீவ ஸ்ருஷ்டிதான். அடைந்த அறிவு எப்படியிருந்தாலும் ஜீவ-ஸ்ருஷ்டிதான். நாம் எல்லா நேரத்திலும் பகவான் படைத்தவற்றை அப்படியே அனுபவிப்பதில்லை. நாம் எல்லா நேரத்திலும் இந்த உலகை படம் பிடித்து கொண்டிருக்கிறோம். நம்முடைய ஞானேந்திரியங்கள் படம் பிடித்ததைத்தான், மனோமயமாக இருக்கின்ற எண்ணங்களைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கயிற்றில் தோன்றும் பாம்பை அனுபவிக்கும் போது உண்மையில் நம் எண்ணங்களைத்தான் பார்த்து உணர்ச்சி வசப்படுகிறோம்.
விழிப்பநிலையில் பிரத்யக்ஷ பிரமாணத்தை பயன்படுத்துகின்ற விஷயத்தில் அனுபவிக்கப்படுகின்ற பொருட்களுடன் எண்ணங்கள் சேரும்போது அந்தப் பொருட்களுடைய உருவத்தை எடுத்துக் கொள்கிறது. இதையே மானஸ பிரபஞ்சம் என்று அடைக்கப்படுகிறது. சங்சரரும், சுரேஷ்வரரும் இந்தக் கருத்தையே கூறியிருக்கிறார்கள். எவ்வாறு உருக்கிய உலோகமானது உருவ அச்சில் ஊற்றி கொஞ்ச நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் அதே உருவத்தை அடைகின்றதோ அதுபோல எண்ணங்களானது விஷயத்தை அடைந்து அதை முழுவதும் வியாபித்து அதேப் போன்ற உருவத்தை அடைகின்றது.
எவ்வாறு ஒளியானது பொருட்களை பிரகாசப்படுத்துகின்றது என்றால் அது பிரகாசப்படுத்து வேண்டிய பொருட்களை அடைந்து அவைகளின் உருவங்களாகவே மாறுகின்றது. எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துகின்ற காரணத்தினால் அது எல்லாப் பொருட்களையும் வியாபித்து அவைகளின் உருவமாகவே மாறிவிடுகிறது.
சிதாபாஸ பிரமாதாவிடமிருந்து எண்ணமானது (விருத்தி) தோன்றுகிறது. அந்த எண்ணமானது விஷயத்தை அடைகிறது. விஷயத்தை அடைந்த எண்ணமானது அதனுடைய உருவத்தை அடைகிறது.
மேற்கண்ட விசாரத்திலிருந்து இரண்டு வகையான ஸ்ருஷ்டிகள் இருப்பதை புரிந்து கொள்ளலாம். உதாரணமாக களிமண்மயமான ஒரு பானை, எண்ண வடிவமான ஒரு பானை. களிமண்ரூப பானையானது அந்தக்கரணம் மூலம் அறியப்படுகிறது. எண்ண ரூபமான பானைகளானது சாட்சி சைதன்யத்தினால் அறியப்படுகின்றது. ஈஸ்வர ஸ்ருஷ்டி பிரமாணத்தினால் விளக்கமுடிகிறது. ஜீவ ஸ்ருஷ்டிளை சாட்சி ஸ்வரூபமான சைதன்யத்தினால் விளக்கப்படுகிறது.
இரண்டு பொருட்களுக்குமடையே உள்ள காரண-காரிய சம்பந்தத்தை அன்வய வியதிரேகம் என்ற நியாயத்தை வைத்து கண்டு பிடிக்கலாம். இந்த நியாயப்படி ஜீவ ஸ்ருஷ்டிதான் பந்தத்திற்கு காரணமாக இருக்கிறது. இன்ப-துன்பங்களை அனுபவிக்க வைக்கிறது. இது இல்லையென்றால் இவைகளை அனுபவிப்பதில்லை. கனவு, விழிப்பு நிலைகளில் ஜீவ ஸ்ருஷ்டியிருப்பதால் பந்தமுண்டு. ஜீவ ஸ்ருஷ்டியில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் பந்தமில்லை.
மனோமயமான ஜீவ ஸ்ருஷ்டி ஜீவனுடைய பந்தத்திற்கு காரணமாக இருக்கிறது. ஜீவ ஸ்ருஷ்டி இருக்கும் போது சுகமும், துக்கமும் இருக்கின்றது. ஜீவ ஸ்ருஷ்டி இல்லாத போது இவையிரண்டும் இல்லை.
எது இருக்கும் போது அது இருக்கின்றதோ, எது இல்லாதபோது அதுவும் இல்லாது இருக்கும் நிலை என்ற வாக்கியத்தில் எது என்பது காரணத்தை குறிக்கிறது. அது காரியத்தை குறிக்கிறது. எது இல்லாத போதும் அது இருக்கின்றதோ, எது இருந்த போதிலும் அது இல்லையோ என்ற நிலையில் எது என்பது அது என்று குறிப்பிடும் பொருளுக்கு காரணமாக இல்லை. ஈஸ்வர ஸ்ருஷ்டி இல்லாத போது பந்தம் இருக்கின்றது. அதுவே இல்லாத போது பந்தம் இல்லை. கனவில் ஈஸ்வர ஸ்ருஷ்டி என்பது கிடையாது ஆனால் சுக-துக்கத்தை அனுபவிக்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் ஈஸ்வர ஸ்ருஷ்டி இருக்கின்றது ஆனால் சுக, துக்கங்களை அனுபவிப்பது கிடையாது. விழிப்பு நிலையில் ஞானிக்கு ஈஸ்வர ஸ்ருஷ்டி இருந்தாலும் எதனாலும் பந்தப்படுவது கிடையாது. வெளி உலகத்தில் ஈஸ்வர ஸ்ருஷ்டி இல்லாத கனவு, கற்பனை போன்ற நிலைகளில் ஜீவன் பந்தப்படுகிறான். சமாதி நிலை, ஆழ்வுறக்கம், மயக்கம் போன்ற நிலைகளில் வெளி உலகம் இருந்த போதிலும், ஈஸ்வர ஸ்ருஷ்டி இருந்த போதிலும் பந்தப்படுகிறான், சுக-துக்கங்களை அனுபவிக்கின்றான்.
தூரத்திலுள்ள இடத்திற்கு மகன் சென்றிருக்கிறான், அவன் உயிரோடு இருக்கும் போது பொய்யான வாக்கியத்தின் மூலம் அவன் இறந்து விட்டதாக நினைத்து தந்தை அழுகின்றார். இங்கே வெளியே ஈஸ்வர ஸ்ருஷ்டி இருக்கின்ற போதே அவன் இறந்துவிட்டான் என்ற ஜீவ ஸ்ருஷ்டியால் துயரம் உண்டாகிறது.
அந்த மகன் இறந்துவிட்ட போதிலும் அந்த செய்தி தெரியாமல் இருக்கும் போது தந்தை அழுவது கிடையாது. ஆகவே அனைத்து ஜீவர்களுடைய பந்தத்திற்து காரணம் மனோமயமான உலகம்தான், நம்மால் உருவாக்கப்படுகின்ற உலகம்தான். இதிலிருந்து நாம் அடையும் சுக-துக்கங்களுக்கு மனதில் ஏற்படும் மாற்றங்கள்தான் காரணம் என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி - உங்களுடைய வாக்கியத்தின்படி வெளியே உள்ள பொருட்கள் பயனற்றதாகி விடுகிறதே! இது ஷணிக விக்ஞானத்தைப் போல் இருக்கிறதே.
பதில் - ஜீவ
ஸ்ருஷ்டியை
தோற்றுவிப்பதற்கு
வெளிப்பொருட்கள்
பயன்படுகிறது. எனவே
அதை
முழுமையாக
பயனற்றது
என்று
சொல்லமுடியாது. மனதில்
அந்தப்
பொருட்களின்
உருவத்தை
எண்ணங்கள்
தோன்றுவதற்கு
வெளிவிஷயங்கள்
தேவைப்படுகிறது.
வெளியே இருக்கின்ற பொருட்கள் பயனற்றதாகவே இருக்கட்டும். அவைகளை நீக்க முடியாது. எந்தப்பொருளும் அதன் இருப்பிற்காக பிரயோஜனத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பிரமாணத்தின் மூலமாக அவைகளின் இருப்பை அறிந்து கொள்கிறோம், அவைகளின் இருப்பு பிரமாணத்தைதான் சார்ந்திருக்கிறது.
கேள்வி – மனதிலிருக்கும் ஜீவ ஸ்ருஷ்டி பந்தத்திற்கு காரணமென்றால் அதை அழித்து விட்டால் பந்தம் நீங்கிவிடும் அல்லவா, யோகிகள் சித்தத்திலுள்ள எண்ணங்களை அழிப்பதில் முயற்சி செய்யுங்கள், அதை விட்டுவிட்டு பிரம்ம ஞானத்தை ஏன் அடைய வேண்டும்?
பதில் - இவ்விதம் செய்வதால் சிறிது நேரத்திற்கு த்வைதம் அடங்கி இருக்கலாம். ஆனால் பிரம்ம ஞானத்தை தவிர வர இருக்கின்ற துயரத்தை, பிறப்பை, சம்சாரத்தை கொடுக்கக்கூடிய த்வைதத்தை நீக்க முடியாது.
உலகத்திடமிருந்து எதையாவது எதிர்பார்ப்பதால் துயரத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். ஈஸ்வர ஸ்ருஷ்டியான வெளி விஷயங்களும். சில ஜீவ ஸ்ருஷ்டிகளும் மித்யா என்று அறிந்து கொள்வதால் இரண்டுவகையான படைப்புகளும் இருந்தாலும் அவைகள் பொய்யானவை என்ற அறிவுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் இரண்டற்ற பிரம்மத்தை புரிந்து கொள்ள முடியும். அத்வைதிகள்தான் இந்த அறிவை அடைவார்கள். பிரம்மமும் நானும் ஒன்றே என்ற அறிவு உடையவர்களால்தான் மித்யத்வத்தை புரிந்து கொள்ள முடியும்.
பிரளய காலத்தில் இருமைகள் இல்லாத போதிலும் சாஸ்திரம், அதை உபதேசிக்கும் குரு போன்ற ஞான சாதனங்கள் அப்போது இல்லாத காரணத்தால் அத்வைதத்தை புரிந்து கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் மோட்சத்திற்கு தடையாக இருக்கும் இருமைகள் இல்லாத போதும் இரண்டற்ற தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது.
ஈஸ்வரனால் உருவாக்கப்பட்ட இந்த த்வைதத்தினால் எந்தவிதமான பாதகமில்லை. ஆனால் சாதகமாகத்தான் இருக்கிறது. மோட்சத்தை அடைய உதவிகரமாக இருந்து இருக்கிறது. அதை நீக்கவும் முடியாது. இப்படியிருப்பதால் இந்த இருமைகள் இருந்து விட்டு போகட்டுமே ஏன் அதன்மீது துவேஷம் கொள்கிறாய்?
ஜீவ த்வைதமானது சாஸ்திரியமானது, அசாஸ்திரியமானது என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. வேதாந்த சாஸ்திரத்திற்கு ஏற்றது, சாஸ்திரத்தினால் நீக்கப்பட்டது. சாஸ்திரியமான ஜீவ படைப்பு மோட்சம் வரையில், பிரம்ம ஞானம் அடையும் வரையில் வைத்திருக்க வேண்டும். சாஸ்திரத்திற்கு விரோதமானவைகளை உடனே விட்டுவிட வேண்டும். சாஸ்திரிய த்வைதத்தை ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்ளும் வரை வைத்துக் கொள்ள வேண்டும்.
சாதகர்களின் மனதில் உள்ள சாஸ்திரத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஜீவ த்வைதம் ஆத்மாவாக இருக்கும் பிரம்மத்தை விசாரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஆத்ம தத்துவத்தை புரிந்து கொண்ட பிறகு இந்த த்வைதத்தையும் விட்டுவிட வேண்டும். சிரவணம், மனன சாதனங்களையும் விட்டுவிட வேண்டும். இவ்வாறு உபநிஷத் சொல்கிறது. எல்லா மோட்ச சாதனங்களையும் விட்டுவிட வேண்டும்.
சாதன சதுஷ்டி சம்பத்தியை அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைந்தவன் வேதாந்த சாஸ்திரத்தை கேட்க வேண்டும். இதையே சிரவணம் என்று அழைக்கப்படுகிறது. கேட்டதையே மீண்டும் மீண்டும் சிந்தித்து எழுகின்ற சந்தேகங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மேலான நிர்குண பிரம்மத்தை சந்தேகமற்று மிகத் தெளிவாக அறிந்த பின் தீப்பந்தத்தை வீட்டுக்கு வெளியே விட்டுவிடுவதை போல அந்த வேதாந்து சாதனங்களை எல்லாம் விட்டுவிட வேண்டும்.
சாதகனானவன் பிரம்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து படித்துக் கொண்டு வர வேண்டும். பிரம்ம ஞானம் அடைந்தவுடன் எவ்விதம் அரிசியை விரும்புவன் அதை மூடியிருக்கும் உமியை துறக்கின்றானோ அவ்விதம் முழுமையாக வேதாந்த சாஸ்திரத்தை விட்டுவிட வேண்டும்.
ஞானயோகத்திற்கு தகுதியுடையவன் ஆத்ம தத்துவத்தை சிரவணம், மனனம் மூலம் சந்தேகமில்லாமல் அறிந்து கொண்டு நிதித்யாஸனம் செய்ய வேண்டும். ஞான நிஷ்டையை அடைந்திட வேண்டும். அதிகமான வேதாந்த நூல்களை படிக்க வேண்டாம். இது காலத்தை வீணடிக்கும் செயலாகும்.
அந்த ஒன்றாக இருக்கின்ற பிரம்ம தத்துவத்தை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சொற்களையெல்லாம் விட்டுவிடு. தேவையில்லாமல் பேசாதே. அனாத்மா விஷயங்களை பேசக்கூடாது. மிகவும் குறைவாக பேசப் பழக வேண்டும். நிதித்யாஸன காலத்தில் படிப்படியாக ஞானயோக சாதனங்களை விட்டுவிட வேண்டும். இப்படிபட்ட விஷயத்தை உபநிஷத் சாஸ்திரமே கூறுகிறது. சாஸ்திரிய த்வைதத்தையும் விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
சாஸ்திரம் அங்கீகரிக்காத த்வைதங்கள் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள் தீவிரமான அசாஸ்திரிய த்வைதம், மந்தமான அசாஸ்திரிய த்வைதம் ஆகும். ஆசை, கோபம், பொறாமை போன்றவைகள் வெளிப்பட்ட அசாஸ்திரிய த்வைதம் என்றும், அவைகளே காரண ரூபநிலையில், சங்கல்பம் என்கின்ற நிலையில் இருக்கும் போது மந்தமான அசாஸ்திரிய த்வைதம் என்று கூறப்படுகிறது. ஆசைக்கு விதையாக இருப்பதே சங்கல்பம்.
மேற்சொன்ன இரண்டு விதமான அசாஸ்திரிய த்வைதங்களை தத்துவ விசாரத்திற்கு முன்பே நீக்கி விடவேண்டும். ஞானத்தை அடைவதற்கான சாதனங்களாக இருக்கின்ற சம, தமாதிகளையுடைய சாதன சதுஷ்ட சம்பத்தியையும், மனத்தூய்மையையும், மனவுறுதியையும் அடைந்திட வேண்டும்.
ஞானம் அடைந்த பிறகும் கூட மீண்டும் இந்த ஆசைகள் வந்துவிடலாம் எனவே அவைகளை விட்டுவிட வேண்டும். ஜீவன் முக்தி நிலையை நன்கு அடைவதற்கு ஆசை, கோபம், மோகம் போன்ற தீய உணாச்சிகளாகிய பந்தத்தோடு இருப்பவனுக்கு ஜீவன் முக்தி நிலை ஏற்படாது.
இந்த ஜீவன் முக்தி எனக்கு வேண்டாம். மீண்டும் பிறக்காத நிலையே எனக்கு போதும், அதாவது விதேஹ முக்தி போதும் என்று கூறுவாயானால் உனக்கு மறுபிறுப்பும் இருக்கட்டும். சொர்க்க லோக இன்பங்களையும் அனுபவித்துக் கொள்வாயாக. இகலோக இன்பங்களையே விட்டுவிட முடியாதவனுக்கு இதைவிட அதிகமான இன்பங்களை கொடுக்கக்கூடிய பரலோக சுகத்தை அனுபவிக்க விதேஹ முக்தியையும் தியாகம் செய்து விடுவாய்.
சொர்க்கத்தில் உள்ள இன்பங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. எனவே பொறாமை போன்ற தீய குணங்களை அங்கேயும் அடைவோம். அதுவும் நிரந்தரமில்லை. புண்ணியப்பலன் தீர்ந்தவுடன் மீண்டும் பூமிக்கு வந்து பிறந்திட வேண்டும். எவ்விதம் நாசத்தையும், ஏற்றத்தாழ்வுகள் என்ற குறைகளை உடைய பரலோக சுகங்களையும் நாம் விட்டுவிடுகின்றோமோ அவ்விதம் பெரிய குறையுடன் கூடிய இந்த ஆசை போன்ற தீயகுணங்களை உன்னால் ஏன் விடமுடியவில்லை?
மனதில் மட்டும் ஆசையிருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அது உன்னை அடுத்த நிலைக்கு செல்ல விடாமல் தடுத்து கொண்டிருக்கும். ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு ஆசை போன்ற தீய குணங்களை முழுமையாக நீக்காவிட்டால் தர்ம சாஸ்திரத்தை பின்பற்றாமல் தான் விரும்பியபடி வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருக்க நேரிடும், தான்தோன்றித்தனமாக வாழ்ந்து விடுவோம்.
அத்வைதத்தை தன்னுடைய ஸ்வரூபமான தத்துவத்தை அறிந்தவனுக்கு தான் தோன்றித்தனமாக வாழும்படி நேர்ந்தால் அது அசுத்தமான உணவை உட்கொண்டு உயிர் வாழும் நாய்க்கும் உனக்கும் வேற்றமையில்லாமல் போய்விடும்.
அறிவை அடைவதற்கு முன்னால் மனதிலுள்ள ஆசை, கோபம் போன்ற குறைகளால் பாதிக்கப்படுவாய். ஞானயோகத்தை கடைபிடிக்கும் போது மனதிலுள்ள குறைகளான ஆசைகளெல்லாம் விட்டுவிடவில்லை என்றால் உலகத்திலுள்ள அனைவரும் நிந்திப்பார்கள். அதையும் சேர்த்து அனுபவிப்பாய்.
மலத்தை உட்கொள்ளும் பன்றியின் நிலைக்கு சென்றுவிடாதே. தத்துவத்தை அறிந்துள்ள நீ மிகவும் கீழான நிலைக்கு சென்றுவிடாதே. மனதிலுள்ள எல்லா குறைகளையும் நீக்குவதனால் நற்குணங்கள் உன் இயல்பாகி விடுவதால் உலகத்தாரிடையே வணங்கத்தக்கவனாக ஆகிவிடுவாய். தேவதைகளைப் போன்று உயர்ந்து விடுவாய்.
ஆசை முதலியவைகளை துறக்க கடைபிடிக்க வேண்டிய வழியானது சுகத்தை கொடுக்கின்ற பொருட்களில் உள்ள குறைகளை பார்த்தல் போன்ற சாதனங்களை பயன்படுத்துதலாகும். இது போன்ற சாதனங்கள் உபநிஷத்தில் பிரசித்தமாக இருக்கின்றன. அவைகளை கடைபிடித்து சுகமாக இருப்பாயாக.
மோட்ச சாஸ்திர உபாயங்கள்:
1.
தோஷ த்ருஷ்டி – நிலையற்ற
சுகங்களை
கொடுக்கும்
பொருட்களில்
குறைகளை
கண்டுபிடித்தல். குறையை
பார்த்தாலும்
அதனால்
அடையும்
கெடுதலையும்
சேர்த்து
பார்க்க
வேண்டும். இதனால்
அவைகளிலுள்ள
ஆசை
நீங்கி
விடும். எந்த
இன்பத்தை
அடைந்தாலும்
அதைவிட
அதிக
இன்பத்தை
கொடுக்கும்
இன்பத்தை
நாடி
மனம்
சென்று
விடும். எனவே எந்த
இன்பமும்
நமக்கு
முழு
மனநிறைவை
கொடுக்காது.
2.
நித்ய-அநித்ய
விவேகம் - ஒரு
பொருளைப்பற்றிய
முழுமையான
அறிவு, இதுதான்
தோஷ
த்ருஷ்டிகளை
கொடுக்கும்
3. கர்மயோகப்படி வாழ்தல், தர்மப்படி வாழ்தல் இவைகளால் அடையும் புண்ணியம் விவேக சக்தியைக் கொடுக்கும்.
ஆசைப் போன்றவைகள் துறக்கப்படட்டும். அவைகளை மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதால் என்ன பாதிப்பு வந்து விடும் என்று பார்க்கும் போது எல்லா தோஷங்களுக்கும் இது விதையாக இருக்கிறது என்று அறியலாம். இந்த கருத்தையே பகவான் கீதையில் கூறியிருக்கிறார்.
விஷயங்களிலுள்ள சுக அம்சத்தை தியானித்துக் கொண்டிருக்கும் (சங்கல்பம்) மனிதனுக்கு அந்த விஷயங்களில் பற்றுதல் ஏற்பட்டு விடுகிறது. அந்த விஷயங்கள் தனக்கு நன்மையும், சுகத்தையும் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையினால் பற்றுதல் ஏற்பட்கிறது. அந்த பற்றுதலே ஆசையாக மாறிவிடுகிறது. அதை அடைய வேண்டும் என்ற ஆர்வம் உருவாகின்றது ஆசைகளிலிருந்து கோபம் உண்டாகிறது. ஆசைக்கு தடை வரும்போது கோபம் உருவாகின்றது. தடை பலமாக இருந்தால் பயம் வருகின்றது. கோபத்திலிருந்து மோகம் ஏற்படும். மோகம் என்பது புத்தியில் வருகின்ற நோய். மோகமானது நல்லது, கெட்டது என்ற சிந்தனையை அழித்துவிடும். அடைந்த நல்லறிவும் சென்று விடும். இந்த புத்தி நாசத்தினால் அழிந்து விடுகிறான். ஆகவே மந்த அசாஸ்திர த்வைதத்தையும் விட்டுவிட வேண்டும்.
மனோராஜ்ஜியத்தை நிர்விகல்ப சமாதியின் மூலம் நீக்கிக் கொள்ளலாம். நிர்விகல்ப சமாதியும் கிரமமாக சவிகல்ப சமாதியின் மூலமாக சுலபமாக அடைந்துவிட முடியும்.
சகுண பிரம்மன் தியானம் என்பது சவிகல்ப சமாதி, நிர்குண பிரம்மன் தியானம் என்பது நிர்விகல்ப சமாதி. இது வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இறைவனை நாம-ரூபத்துடன் தியானம் செய்யும் போது மனம் ஒருமுகப்பட்டு தூய்மை அடைந்து நிர்குண பிரம்மத்தை தியானம் செய்வதற்கு தகுதிபடுத்தும். விஷய தியானத்தில் இருந்து விலகி இறைவனை தியானிக்க வேண்டும். மனம் சிந்திக்கும் எண்ணங்களை மாற்ற முடியாது. ஆனால் விஷயத்தை மாற்றுவதனால் மனம் அமைதிப்படும். மனதிலுள்ள வாசனைகள் மறைந்துவிடும். அறியப்பட்ட தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை தியானத்துக்குரிய விஷயமாக கொள்ள வேண்டும். புத்தியிலிருக்கும் ராக, தோஷம், கோபம் போன்ற தோஷங்கள் நீங்குவதற்காக தனிமையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அதிக காலம் தொடர்ந்து மனதுக்குள் ஓங்காரத்தை உச்சரிப்பதனால் மனோ ராஜ்ஜியம் வெல்லப்படுகிறது. இதனால் மனதிலுள்ள வாசனைகள் அழிந்து விடும்.
மனோ ராஜ்யமானது வெற்றி கொள்ளப்பட்டதும் மனமானது ஊமையைப் போல எந்தவித சங்கல்ப எண்ணங்கள் இல்லாமல் இருந்துவிடுகிறது. இந்த நிலையானது வசிஷ்டரால் ஸ்ரீராமருக்கு பலவிதமாக சொல்லப்பட்டிருக்கிறது.
பார்த்துக் கொண்டிருப்பவைகளெல்லாம் உண்மையில் இல்லை மித்யா என்கின்ற அறிவினால் மனதிலிருக்கும் சத்யத்வ புத்தியை நீக்கிட வேண்டும். இப்படி நாம் செயதால் இந்த அறிவினால் அடைவது மேலான முழமையான மனநிறைவாகும். உத்தமமான முழு மனவமைகியை அடைந்து விடுவோம்.
உபநிஷத் வாக்கியங்கள் தேவையான அளவு விசாரம் செய்யப்பட்டுவிட்டது. அதிக காலம் குருமூலமாக சீடனுக்கு புரிய ஒருவருக்கொருவர் வெகுநாளாக குரு-சீடன் கிரமமாகவும், ஞானிகளுடைய சங்கத்தினாலும் கிரகிக்கப்பட்டுவிட்டது. எல்லா வாசனைகளையும் நன்கு நீக்கிவிட்டிருக்கும் போது மோட்சத்தை அடைவோம். மௌனத்தை தவிர வேறாக உள்ள உத்தமமான நிலை கிடையாது.
அடிக்கடி மனம் சஞ்சலத்தை அடைகிறது. நம்முடைய கர்மபலன்தான் சுக-துக்கங்களை அனுபவிக்க வைக்கிறது. இதனால் மனம் சஞ்சலத்தை அடைந்து கொண்டிருக்கிறது. நிதித்யாஸன காலத்தில் மனம் சஞ்சலத்தை அடையும்போது அதை மீண்டும் மீண்டும் அமைதி நிலைக்கு கொண்டுவர வேண்டும். செய்து கொண்டிருக்கின்ற சாதனத்தை தொடர்வதில் மனதை கொண்டுவர வேண்டும். இதை சாமர்த்தியமாக முயற்சி செய்து வெற்றி கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன உபாயத்தை தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். மனதை அமைதிபடுத்திவிட்டால் அத்தகையவன் பிரம்மத்தை அறிந்தவன் என்று கருதப்படுவதில்லை. அவனே பிரம்மமேயாவான் என்று வேதாந்தத்தில் கரைகண்ட முனிவர்கள் கூறுகிறார்கள்.
வேதாந்த மார்க்கத்தையும், சம்சார மார்க்கத்தையும் விட்டுவிட்டு மோட்ச சாதனங்களின் மீதுள்ள பற்றையெல்லாம் விட்டுவிட்டு யாரொருவர் தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரோ அவர்தான் பிரம்மனாகவே இருக்கின்றார். அவர் பிரம்மத்தை அறிந்தவரல்ல.
ஜீவன் முக்தியினுடைய மேலான நிலை பிரம்மனாகவே இருத்தல் இந்த நிலையானது. ஜீவ ஸ்ருஷ்டியை முற்றிலும் நீக்கிவிடுதலால் ஏற்படுகிறது. ஆகவே இந்த ஜீவ த்வைதத்தை ஈஸ்வர த்வைதத்திலிருந்து பிரித்துக் காட்டப்பட்டது.
தொகுப்புரை
01-01 ஜீவ-ஈஸ்வர ஸ்ருஷ்டிகளைப் பற்றியும், அவைகளின் பலனையும் கூறப்பட்டுள்ளது.
02-13 ஈஸ்வர ஸ்ருஷ்டியைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விதவிதமான
உபநிஷத் வாக்கியங்களை உதாரணமாக காட்டி கூறப்பட்டுள்ளது.
14-18 ஜீவ ஸ்ருஷ்டியை விளக்கியுள்ளார். ஈஸ்வர ஸ்ருஷ்டியின் மீது நாம் வைக்கின்ற ராக துவேஷங்கள் ஜீவ ஸ்ருஷ்டி என்று புரிய வைக்கப்பட்டது.
19-31 இரண்டு ஸ்ருஷ்டிகளிடையே
இருக்கும்
வேற்றமை
விளக்கப்படுகிறது. ஈஸ்வர
ஸ்ருஷ்டி
மாயையிலிருந்து
தோன்றுபவை. நம்
மனதிலிருந்து
தோன்றுவது
ஜீவ
ஈஸ்வர
ஸ்ருஷ்டி
என்று
கூறிய
பிறகு
அவைகளின்
தன்மையையும்
கூறியுள்ளார். ஜீவ
ஸ்ருஷ்டியை
எப்படி
அனுபவிக்கப்படுகிறது
என்பதையும்
கூறியுள்ளார். ஒரு
பொருளின்
மீது
வெவ்வேறு
வகையான
அனுபவங்கள்
ஏற்படுவதிலிருந்து
இதை
புரிய
வைக்கப்படுகிறது.
32-37 ஜீவ ஸ்ருஷ்டிதான்
பந்தத்திற்கு
காரணமாக
இருக்கிறது
என்பதை
விளக்கியுள்ளார்.
38-41 மனோ நாசம்
பந்தத்தை
நீக்காது, யோக
சூத்திரம்
பந்தத்தை
நீக்காது.
42-42 ஈஸ்வர ஸ்ருஷ்டி பந்தத்திற்கு காரணமாக இல்லை. இந்த ஸ்ருஷ்டியை
சாதனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
43-48 ஜீவ ஸ்ருஷ்டியை எப்படி தியாகம் செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சாஸ்திரிய ஜீவ ஸ்ருஷ்டியை எப்போது விடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
49-69 அசாஸ்திரிய த்வைதத்தை எப்படி விட வேண்டும் என்ற வழியும் கூறப்பட்டு உள்ளது. இதை தீவிர, மந்தம் என்ற இருவகையாகப் பிரித்து ஒவ்வொன்றையும் எப்படி நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

----ooo000ooo----
No comments:
Post a Comment