பிரம்ம சூத்திரம்-பகுதி-2
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
ஜிக்ஞாஸா
அதிகரணம்-01
Edited on 29-08-2024
சூத்திரம்-1
अथातो ब्रह्मजिज्ञासा ।।
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।
இந்த சூத்திரம் பிரம்மசூத்திரம் என்கின்ற நூலுக்குள் நுழைகின்ற வாயிலாக இருக்கிறது. இதற்கு அனுபந்த3 சதுஷ்டயம் என்ற வேறொரு பெயரும் உண்டு. அனுபந்த சதுஷ்டயம் என்பது நான்கு அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவைகள் விஷயம், அதிகாரி, பலன், சம்பந்தம் ஆகியவைகளாகும். புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு இந்த புத்தகத்தில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை கூற வேண்டும். யாருக்காக இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், படிப்பதனால் என்ன பலனை அடையலாம் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.
வியாச பகவான் தான் எந்த விஷயத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்பதைக் கூறிவிட்டு, யார் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதையும், புத்தகத்தை படிப்பதனால் அடையும் பலனையும் கூறியிருக்கிறார். எனவே முதல் சூத்திரம் அனுபந்த சதுஷ்டயமாக அமைந்திருக்கிறது.
அதிகரணத்தின் அங்கங்களாவது விஷயம், சந்தேகம், பூர்வபக்ஷம், சித்தாந்தம் ஆகியவைகளாகும். இந்த முதல் சூத்திரமே ஒரு அதிகரணமாக இருப்பதால், இதை அனுபந்த சதுஷ்டயம் என்று அழைக்கப்படுகிறது.
1.
விஷயம் - முழு வேதாந்த சாஸ்;திரமாகும்.
2. சந்தேகம் - வேதாந்தத்தை விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
3.
பூர்வபக்ஷம் -
அனுபந்த சதுஷ்டயமே இல்லாததால் விசாரம் தேவையில்லை
4. சித்தாந்தம் - வேதாந்த விசாரம் செய்தாக வேண்டும்.
2. சந்தேகம் - வேதாந்தத்தை விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
4. சித்தாந்தம் - வேதாந்த விசாரம் செய்தாக வேண்டும்.
கேள்வி பிரம்ம சூத்திரத்தில் என்ன கருத்து சொல்லப்
போகிறீர்கள்?
பதில் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து பிரம்மத்தை நிச்சயம்
செய்யப் போகிறேன்.
கேள்வி கர்ம காண்டத்திலே சகுண பிரம்மனை
நிச்சயம் செய்து விட்டதால் திரும்பவும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு
நிச்சயம் செய்யத் தேவையில்லை.
பதில் இதில் நிர்குண பிரம்மத்தைத்தான் நிச்சயம்
செய்யப் போகிறேன்.
கேள்வி நிர்குண பிரம்மன் என்றவொன்றே இல்லாதபோது அதை
நிச்சயம் செய்யப் போகிறேன் என்று சொல்வது தேவையில்லாதது. மேலும் யாருக்காக இந்த
விசாரம் செய்யப் போகிறீர்கள்?
பதில் சாதன-சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்கள்தான்
இதற்கு அதிகாரி.
கேள்வி வைராக்கியம் என்பது அடையவே முடியாது. எனவே அதிகாரிகள்
யாருமே இருக்க மாட்டார்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் யாரும் இல்லை. அப்படியே
ஒருசிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் அதனால் அடையும் பலன்தான் என்ன?
பதில் இந்த மூன்று கருத்துக்களையும்தான் முதல்
சூத்திரத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்த உபநிஷத்துக்கம் நுழைவாயிலாக
இருக்கிறது. இந்த சூத்திரத்தில் மூன்று வர்ணகங்கள் இருக்கிறது. அவைகள்,
1வது வர்ணகம் - அக3தார்த்த2 வர்ணகம்
அக3தார்த்த2ம் - பேசி முடிக்காத
விஷயம். அதாவது நிர்குண பிரம்மன் கர்ம காண்டத்தில் பேசப்படவில்லை.
2வது வர்ணகம் - அதிகாரி வர்ணகம்
வேதாந்த சாஸ்திரத்தை படிக்க தகுதியுடையவர்கள் யார் என்று கூறப்படுகிறது.
3வது வர்ணகம் - ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்தி வர்ணகம்
2வது வர்ணகம் - அதிகாரி வர்ணகம்
வேதாந்த சாஸ்திரத்தை படிக்க தகுதியுடையவர்கள் யார் என்று கூறப்படுகிறது.
3வது வர்ணகம் - ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்தி வர்ணகம்
சூத்திரத்தின்
அர்த்தம்:
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।
வேதாந்தத்தின் அனுபந்த சதுஷ்டயம்:
1. விஷயம் - ஜீவ-பிரம்ம ஐக்கியம்
2. அதிகாரி - சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்தவர்கள்
3. பலன் - மோட்சம்; ஜீவன் முக்தி; விதேக முக்தி
4. சம்பந்தம் - அதிகாரிக்கும் அவன் அடையப்போகும் பலனுக்கான சம்பந்தம்.
முதல் மூன்று கருத்துக்களையும்
நிலை நாட்டுவதுதான் இந்த சூத்திரத்தின் நோக்கமாகும்.
அத2 - பிறகு (thereafter)
அத: - ஆகவே (therefore)
ப்3ரஹ்ம - நிர்குண பிரம்மத்தைப
ஜிக்3ஞாஸா - அறிவதில் ஆர்வம
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா - நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவதில் ஆர்வம்.
எந்தவொன்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை வந்ததும் அதை அடைய உதவுகின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கான சாதனமான உபநிஷத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த சூத்திரத்தோடு கர்த்தவ்ய என்ற சொல்லை சேர்த்துப் பொருட்படுத்த வேண்டும். இந்த சொல்லை சேர்த்து பார்க்கும்போது, பிறகு ஆகவே பிரம்ம ஞானத்தை அடைவதற்கு வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற இறுதியான அர்த்தம் கிடைக்கும்.
பிறகு - சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்த பிறகு
ஆகவே கர்மத்தினால் மோட்சத்தை அடைய முடியாது. கர்ம காண்டத்தினால் மனநிறைவை அடைய முடியாது. பிரம்மஞானமே மோட்சத்திற்கு காரணமாக இருப்பதனால்
ப்ரஹம ஜிக்ஞாஸா - பிரம்மத்தை விசாரம் செய்யவேண்டும்.
விசாரம்:
ஒவ்வொரு சூத்திரத்தை எழுதும்போதும் ஏதாவது ஒரு உபநிஷத் முக்கிய வாக்கியத்தை எடுத்து அதை நிச்சயம் செய்கிறார் வியாசபகவான்.
அத: - ஆகவே (therefore)
ப்3ரஹ்ம - நிர்குண பிரம்மத்தைப
ஜிக்3ஞாஸா - அறிவதில் ஆர்வம
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா - நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவதில் ஆர்வம்.
எந்தவொன்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை வந்ததும் அதை அடைய உதவுகின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கான சாதனமான உபநிஷத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த சூத்திரத்தோடு கர்த்தவ்ய என்ற சொல்லை சேர்த்துப் பொருட்படுத்த வேண்டும். இந்த சொல்லை சேர்த்து பார்க்கும்போது, பிறகு ஆகவே பிரம்ம ஞானத்தை அடைவதற்கு வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற இறுதியான அர்த்தம் கிடைக்கும்.
பிறகு - சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்த பிறகு
ஆகவே கர்மத்தினால் மோட்சத்தை அடைய முடியாது. கர்ம காண்டத்தினால் மனநிறைவை அடைய முடியாது. பிரம்மஞானமே மோட்சத்திற்கு காரணமாக இருப்பதனால்
ப்ரஹம ஜிக்ஞாஸா - பிரம்மத்தை விசாரம் செய்யவேண்டும்.
விசாரம்:
ஒவ்வொரு சூத்திரத்தை எழுதும்போதும் ஏதாவது ஒரு உபநிஷத் முக்கிய வாக்கியத்தை எடுத்து அதை நிச்சயம் செய்கிறார் வியாசபகவான்.
பூ.ப வேதாந்த சாஸ்திரத்தை ஏன் விசாரம் செய்யக்கூடாது? எல்லா விஷயத்தையும் கர்மகாண்டத்தில் பேசியாகி விட்டது.
மேலும் உபநிஷத்தை படித்து அறிவை அடைந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. இதைப்
படிக்கவும் அதிகாரிகள் இல்லை. ஆகவே விசாரம் செய்யத் தேவையில்லை.
பதில் விஷயம் உண்டு. அதிகாரியும் உண்டு. பலனும் உண்டு.
இதைத்தான் இந்த சூத்திரத்தில் விளக்கியுள்ளார்.
“அத2” சப்த விசாரம்:
இந்த சொல்லுக்கு 7 அர்த்தங்கள் இருக்கிறது.
அவற்றுள் இந்த இடத்திற்கு பொருத்தமான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம். ஏன்
மற்ற அர்த்தங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.
1.
மங்கலம் - தெய்வீகமானது
2. அனந்தரம் - பிறகு
3. ஆரம்பஹ - தொடக்கம்; ஆரம்பம்; துவக்கம்
4. ப்ரஶ்னஹ - கேள்வி
5. கார்க்ஸயம் - முழுமையான
6. அர்த்தாந்தரம் - பூர்வ ப்ரக்ருத அபேக்ஷா - புதிய தலைப்பு; அடுத்தது
7. க்ரமஹ - வரிசைக்கிரமம்
2. அனந்தரம் - பிறகு
3. ஆரம்பஹ - தொடக்கம்; ஆரம்பம்; துவக்கம்
4. ப்ரஶ்னஹ - கேள்வி
5. கார்க்ஸயம் - முழுமையான
6. அர்த்தாந்தரம் - பூர்வ ப்ரக்ருத அபேக்ஷா - புதிய தலைப்பு; அடுத்தது
7. க்ரமஹ - வரிசைக்கிரமம்
பூ.பக்ஷி மங்கலத்தை இந்த
இடத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எதை தொடங்கினாலும் மங்கலத்துடன்
ஆரம்பிக்க வேண்டும். இந்த பிரம்ம சூத்திரத்திற்கு இறைவணக்கம் எதுவும் இல்லாததால்
இதை இறைவணக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
பதில் அத2 என்ற சப்தமே
மங்கலத்தைக் குறிக்கிறது. 'பிறகு” என்ற அர்த்தத்தைத்தான்
எடுத்துக் கொள்கிறோம். சாஸ்திரத்தில் ஓம், அத2 என்கின்ற சொற்களின் உச்சரிப்பே மங்கலமானது. அத2 சொல்லானது சப்தமாகவும்,
அர்த்தத்தைக்
கொடுப்பதாகவும் இருக்கிறது. அத2 என்ற சொல்லின் சப்தமே
மங்கலத்தை குறிப்பதால், அதை விட்டுவிட்டு 'பிறகு” என்ற அர்த்தத்தைத்தான்
எடுத்துக் கொள்கிறோம். ஆரம்பஹ என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் பிரம்ம ஞானத்தை
அறிய விருப்பம் ஆரம்பமாகிறது என்றாகிவிடும். ப்ரஶ்னஹ என்ற அர்த்தத்தமும், கார்க்ஸயம் என்ற
அர்த்தத்தமும் பொருந்தி வராது.
6.அர்த்தாந்தரம் - புதிய தலைப்பு; அடுத்தது
பூ.பக்ஷி கர்மகாண்ட விசாரம் முடிந்துவிட்டது எனவே
அடுத்ததாக ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பது சரியாக பொருந்தி வருகிறது.
இதுவே சரியான அர்த்தமாக இருக்கிறது.
பதில் பிறகு என்ற அர்த்தத்திற்குள்ளே அடுத்தது என்ற
அர்த்தம் வந்துவிடுவதால் இந்த அர்த்தம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. மேலும்
அடுத்தது என்று சொல்லும் போது இதற்கு முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய
அவசியமில்லை. பிறகு என்று சொல்லும்போது முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதால் இந்த
அர்த்தம்தான் பொருத்தமாக இருக்கும். இந்த அர்த்தம் பிரம்ம ஞான விசாரத்திற்கு
அவசியம என்ற உறுதி கூறுகிறது.
2.அனந்தரம் - பிறகு
பூ.பக்ஷி பிறகு என்பது சாதன சதுஷ்டய சம்பத்திக்கு பிறகு
என்று எடுத்துக் கொள்ளமுடியாது. கர்ம காண்ட விசாரத்திற்கு பிறகு ஞானகாண்ட விசாரம்
செய்யப்படுகிறது என்பதுதான் சரியாக இருக்கும்.
பதில் கர்ம காண்டத்திற்கு செல்வதற்கு முன்பே
வைராக்கியம் இருந்துவிட்டால் கர்மகாண்ட விசாரம் தேவையில்லை. நேரிடையாக ஞானகாண்ட
விசாரத்திற்கு வந்துவிடலாம். சுகர், நசிகேதன் போன்றவர்கள்
கர்ம அனுஷ்டானம் செய்யாமலே பிரம்மஞானத்தை அடைந்தவர்கள். பகவான் கிருஷணர்
பகவத்கீதையில் யோகபிரஷ்டன் என்பவனைக் குறிப்பிட்டிருக்கிறார். இவன் முற்பிறவியிலே
விவேக, வைராக்கியத்தை
அடைந்திருப்பான். இவன் இந்த பிறவியில் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வருவான்
என்று குறிபபிட்டிருக்கிறார்.
7.க்ரமஹ - வரிசைக்கிரமம்
பூ.பக்ஷி அத2 என்ற சொல்லுக்கு வரிசைப்படி
என்ற முறையில் முதலில் தர்மத்தைக் கடைப்பிடித்து மனத்தூய்மையடைந்து அடுத்ததாக
பிரம்ம விசாரம் என்ற வரிசையை எடுத்துக் கொள்ளலாம்.
பதில் வரிசைப்படி இல்லாமலும் நேரிடையாக பிரம்ம
விசாரத்திற்கு வரலாம். ஒருவன் பல கர்மங்களை செய்ய வேண்டுமென்றால் இந்த கிரமத்தைப்
பற்றி பேசலாம். உதாரணமாக ஒருவன் குளித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அலுவலகம் செல்கின்றான். இந்த இடத்தில் கிரமத்தை
கடைப்பிடிக்கலாம். இந்த பிரம்ம விசாரம் வைராக்கியம் அடைந்திருப்பவன் செய்கின்றான்.
வைராக்கியம் இல்லாதவன் கர்மகாண்டத்திற்கு சென்று அதையடைந்து பிறகு பிரம்ம
விசாரத்திற்கு வருவான். கர்ம காண்டத்தில் கிரமமாக சில யாகங்களை செய்ய வேண்டும்
என்ற நியதியிருக்கிறது.
பூ.பக்ஷி ஞான-கர்ம சமுச்சயவாதி இரண்டு காண்டத்தையும்
சேர்த்து செய்து கொண்டிருப்பான். இரண்டு காண்டங்களும் மோட்சம் என்கின்ற ஒரே
பலனைத்தான் லட்சியமாக கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் மோட்சம் என்கின்ற பலனை
மறைமுகமாக பேசுகிறது. ஞானகாண்டம் நேரிடையாக மோட்சத்தைப் பற்றி பேசுகிறது. பறவை
பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவது போல மோட்சத்தை அடைவதற்கு இரண்டு
காண்டங்களும் தேவைப்படுகிறது.
பதில் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்ற இரண்டு
பொருட்களை கலக்கமுடியாது. கர்ம காண்டத்தில் இருக்கும்போது சரீரமே நான் என்ற
எண்ணத்தில் செயல் செய்து கொண்டிருப்பான். ஞானகாண்ட சாதகன் சரீர அபிமானத்தை நீக்க
முயற்சி செய்து கொண்டிருப்பான். எனவே இரண்டும் ஒன்றக்கொன்று எதிராக இருப்பதால்
சமுச்சயம் சம்பவிக்காது. இவையிரண்டையும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியாது. மேலும் இரண்டுக்கும்
இடையே மூன்று வேற்றுமைகள் இருக்கிறது.
1.
விஷய பே4தஹ - இரண்டு காண்டங்களின்
மையக்கருத்து வெவ்வேறாக இருக்கிறது. கர்ம காண்டம் புண்ணியங்களைத்தான் முக்கிய
விஷயமாகக் கொண்டிருக்கிறது. இதில் கூறப்பட்டிருக்கின்ற கர்மங்களை முறைப்படி
செய்தால் புண்ணியத்தை அடையலாம். இந்த புண்ணியத்தால் சுகத்தை அனுபவிக்கலாம்.
சுகத்தை துறந்தால் மனத்தூய்மை அடையலாம். ஆனால் ஞானகாண்ட விஷயமானது ஏற்கனவே
இருக்கின்ற ஒன்றைத்தான் பேசுகிறது.
2.
ப2ல பே4தஹ - இரண்டு
காண்டங்களின் பலன்கள் வெவ்வேறாக இருக்கின்றது. கர்ம காண்டத்தினால் அடையப்படுகின்ற
பலன்கள் நிலையற்றது. ஞானகாண்டத்தினால் அடைகின்ற பலன் நிலையானது.
3.
ப்ரவிருத்தி பே4தஹ - கர்மகாண்டம் பலனைக்
கொடுக்கும் விதமும், ஞானகாண்டம் பலனைக்
கொடுக்கும் விதமும் வெவ்வேறானது. கர்மத்தை செய்வதனால்தான் பலனை அடையமுடியும்.
யாகம் செய்யும் முறை தெரிந்தால் மட்டும் போதாது. அதை முறைப்படி செய்தால்தான் பலனை
அடைவோம். ஆனால் ஞானகாண்டத்தில் ஞானத்தை அடைவதும், பலனை அடைவதும்
ஒரே நேரத்தில் நடக்கின்றது.
“அத2” சப்த முடிவுரை:
சாதன சதுஷ்டய சம்பத்திக்குப் பிறகு பிரம்ம விசாரம் செய்யப்படுகிறது. பரீக்ஷய லோகான் கர்மசிதான் நிர்வேதம் ஆயாத் என்று தொடங்கும் முண்டக உபநிஷத் உபதேசம் உரைப்பது, இந்த உலகத்தில் அடைகின்ற அனுபவங்களை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து அடைவது வைராக்கியம், விவேகமாகும். பிறகு பிரம்மத்தை அறிவதற்கு தகுதி வாய்ந்த குருவிடம் செல்ல வேண்டும் என்பதாகும். ஆத்மனஸ்ய காமாய... என்று தொடங்கும் பிருஹதாரண்க உபநிஷத் உபதேசமானது, இந்த உலகத்திலுள்ள பொருட்களின் மீது ஆசை கொள்வது அந்தப் பொருட்களின் நிமித்தமாக அல்லவென்றும், நம் மனதில் அடைகின்ற ஆனந்தமும், ஆசைதான் காரணம்.
மேற்கூறிய உபநிஷத் உபதேகங்களைப் பார்க்கும்போது சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று இருப்பதால் “அத2” என்ற சொல்லுக்கு பிறகு என்ற அர்த்தமே சரியாக இருக்கின்றது. ஆகவே உபநிஷத் சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ஆத்ம விசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பதால் பிறகு என்ற அர்த்தம்தான் சரியாக இருக்கும்.
அத: - ஆகவே. இந்தப் பொருளுக்கு பல காரணங்கள் உண்டு. அவைகளை பார்க்கலாம்.
1.
கர்மனா மோக்ஷ அபா4வாத் - கர்மத்தினால்
மோட்சத்தை அடையமுடியாது.
2.
ஞானாதேவ மோக்ஷ ஸம்ப4வாத் - பிரம்ம ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைய
முடிவதனால் விசாரம் செய்யப்படவேண்டும்.
3.
ஸாதன சதுஷ்டய ஸம்ப4வாத் - சாதன சாதுஷ்டய
சம்பத்தி என்ற தகுதியை அடைந்து விட்டதால் விசாரம் செய்ய வேண்டும்.
4.
ஸம்ஸாரஸ்ய அத்யாஸ பூர்வத்வாத் - சம்சாரம் அத்யாஸமாக இருப்பதனால், விசாரம் செய்யப்பட வேண்டும்.
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா - இந்த சொல்லுக்குப் பிறகு கர்த்தவ்ய என்ற வினைச் சொல்லை சேர்த்து பொருட்படுத்த வேண்டும். அப்போது பிரம்ம ஞானத்திற்காக விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற அர்த்தம் கிடைக்கும். ப்3ரஹ்மஜிக்ஞாஸா என்ற சொல்லை பிரித்து சொல்ல வேண்டுமென்றால் ப்ரஹ்மன:+ஜிக்+ஞாஸா - பிரம்மத்தைப் பற்றிய விசாரம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. ஜிக்ஞாஸா என்பது ஞாதும் இச்சா - அறிவதற்கு விருப்பம்; அறிய ஆவல் என்ற அர்த்தம் கொடுக்கின்றது.
ஞானம் என்ற சொல் எதை அடைய ஞானம் தேவை என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பிரம்மத்தை அடைய வேண்டும் என்பதே பதிலாகும். எனவே பிரம்ம என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.
ஸா - விருப்பம்-
எதைப்பற்றிய ஆசை இருக்கிறது? எதையறிய விருப்பம்
கொள்கிறாய் என்ற கேள்வியெழும்போது அதற்கான விஷயத்தை சொல்ல வேண்டும். இந்த
விருப்பத்தினுடைய விஷயம் ஞானமாகும்.
பிரம்மஜிக்ஞாஸா
என்ற சொல்லின் பொருள் பிரம்ம ஞானத்தில் விருப்பம் என்பதாகும். நாம் இதனுடன்
கர்த்தவ்ய என்ற வினைச்சொல்லை பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லோடு சேர்த்துப் பார்த்தால்
பொருள் சரியாக இருக்காது. அதாவது பிரம்ம ஞானத்தில் விருப்பம் செய்யப்பட வேண்டும் என்ற
வாக்கியம் தவறாக இருக்கிறது. விருப்பம் என்பது செயல் செய்து அடைவதில்லை. அதனால்
இச்சா என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு அது சம்பந்தமான வேறொரு சொல்லை பயன்படுத்தி
வாக்கியத்தை பூர்த்தி செய்கிறோம். ஒரு பொருள் மீது ஆசை வந்தால் அதை அடைவதற்கான
சாதனத்தை பயன்படுத்துகிறோம். அதேபோல் பிரம்மஞானத்தில் ஆசை வந்திருப்பதால் அந்த
ஆசையை பூர்த்தி செய்வதற்கு வேதாந்த விசாரம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.
எனவே இச்சா என்ற சொல்லை விட்டுவிட்டு, இச்சையை பூர்த்தி
செய்கின்ற விசாரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறோம். இப்போது அந்த பிரம்ம ஞானத்தை
அடைய விசாரம் செய்யப்படவேண்டும் என்ற சரியான வாக்கியமாக இருக்கிறது.
பிரம்மன் என்ற
சொல்லுக்கான அர்த்தம் அடுத்த சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆறாவது
வேற்றுமை உருபு உடைய என்பது ஒன்றினுடைய சம்பந்தத்தைக் குறிக்கும். இங்கே இது சரியாக
பொருந்தி வராததால் இரண்டாவது வேற்றுமை உருபான ஐ எடுத்துக் கொண்டால், பிரம்மனைப்
பற்றிய விசாரம் என்பது சரியாக இருக்கும்.
பூ.பக்ஷி பிரம்ம
சம்பந்தமான விசாரம் என்று பொருட்படுத்த வேண்டும்.
பதில் பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பதுதான் சரியான
அர்த்தம். ஏனென்றால் இதுவே பிரம்மத்திற்கு சம்பந்தபட்ட விஷயங்களும் விசாரம் செய்ய
வேண்டும் என்பது சேர்ந்திருப்பதால் நீ சொல்வது சரியல்ல. பிரம்மத்தை தனியாக
சொல்வதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. உதாரணமாக ராஜா செல்கிறார் என்றால் அவர் பரிவாரங்களுடன்
செல்கிறார் என்றுதான் புரிந்து கொள்வோம்.
ஞானம் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
2. ஞானத்தை அடைவதற்கான வழிமுறை, சாதனம்.
பிரம்ம ஞானத்தை அடைவதற்கு எத்தனை காலம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற வினவினால் இதற்கு காலவரம்பெல்லாம் கிடையாது. முழுமையான ஞானத்தை அடையும்வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
4வது வர்ணகம்:
ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3தி4 - பிரம்மன் தெரிந்தும்,
தெரியாமலும்
இருக்கின்றது.
பூ.பக்ஷி நிர்குண
பிரம்மன் ஏற்கனவே தெரிந்ததா அல்லது தெரியாததா?
பதில் நிர்குண பிரம்மன் தெரிந்தும் தெரியாமலும்
இருக்கிறது. அதாவது சாமான்யமாக தெரிகிறது. விசேஷமாக தெரியவில்லை.
எனவே இதை விசாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை நிலை நாட்டுவதற்கு பகவான்
சங்கரர் விசாரம் செய்கின்றார். இதை நிலைநாட்டிவிட்டால் முதல் சூத்திரம் சொல்கின்ற கருத்தை நிலைநாட்டப்பட்டதாகிவிடும்.
பூ.பக்ஷி எந்த பிரமாணத்தின் மூலமாக பிரம்மம் சாமான்யமாக தெரிகிறது?
பதில்1 இது வேதப் பிரமாணம் மூலமாக
அறியப்பட்டிருக்கிறது. அழியாதவொரு வஸ்து இருக்கிறது என்ற வேத வாக்கியம்
இருக்கிறது. இதைக் கேட்பதன் மூலமாக பிரம்மன் இருக்கிறது என்ற சாமான்ய ஞானம்
வந்துவிட்டது. 'ப்ரஹ்மனேஹ ஆப்னோதி பரம்”, 'ஸத்யம், அனந்தம், நித்யம் பிரம்மன்”,
'பிரம்மன்
நிரதிசயமானது ( எல்லையற்றது )” என்று படிக்கும் போது
பொதுவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இது கர்மகாண்டத்திலே விசாரிக்கப்படாததால்
இப்போது விசாரம் செய்யப்படுகிறது.
பதில்2 இந்த பிரம்ம விஷயத்தில்
முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதனாலே இது சாமான்யமாக அறியப்படுகிறது, விசேஷமாக அறியப்படவில்லை என்று தெரிகிறது. சார்வாக்கர்கள்
தேகம்தான் ஆத்மா என்கின்றார்கள். கர்மகாண்டம் யாகத்தின் மூலமாக சொர்க்கத்தை
அடையலாம் என்று நம்புகிறார்கள். அதாவது ஸ்தூல உடல் ஆத்மாவல்ல சூட்சும உடல்தான்
ஆத்மா என்று நம்புகிறார்கள். ஷணிகவாதிகள் க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி
தோன்றி மறைந்து கொண்டிருப்பதால்
இதுதான் ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரே ஆத்மாதான் இறந்து பிறக்கிறது.
சூன்யவாதிகள் சூன்யம்தான் பிரம்மம் என்ற கொள்கையுடையவர்கள். இந்த சூன்யத்தை
பார்ப்பதற்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற வாதத்தினால் இந்தக் கொள்கை
நீக்கப்படுகிறது. நியாய மதக்காரர்கள் ஆத்மா கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சாங்கிய
மதக்காரர்கள் ஆத்மா போக்தாவாக மட்டும் இருக்கிறது என்கிறார்கள். யோக மதக்காரர்கள்
ஈஸ்வரனே ஆத்மா என்கின்றார்கள். அத்வைதிகள் இந்த ஆத்மாதான் நிர்குண பிரம்மம் என்ற
கொள்கையுடையவர்கள்.
பிரம்மத்தை விசேஷமாக புரிந்து கொள்ளாதவரை இந்த குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும். பிரம்மமே ஆத்மாவாக இருப்பதனால் நாம் ஆத்மாவே பிரம்மம் என்ற அறிவை அடைந்திட வேண்டும். சாமான்ய ஞானம் இருந்தால்தான் விசேஷஞானத்தை அடைந்திட முடியும். எனவே இந்த விபரீதஞானத்தை நீக்கி விசேஷ ஞானத்தை அடைந்திட வேண்டும். அஹம் என்ற விஷயத்தில் சாமான்யமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. விசேஷஞானம் அடைவதற்கு விசாரம் தேவைப்படுகிறது.
---இத்துடன் முதல் சூத்திரம்
முடிவடைந்தது.---
2வது சூத்திரம் - 2வது அதிகரணம் -
ஜன்மாத்3யதி4கரணம்
जन्माद्यस्य यतः ||2 ||
ஜன்மாத்3யஸ்ய யத: ||2 ||
இந்த சூத்திரம் பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறுகிறது.
பொருள்:
ஜன்மாத்3யஸ்ய யத: ||2 ||
இந்த சூத்திரம் பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறுகிறது.
பொருள்:
யத: - எதனிடமிருந்து யாரிடமிருந்து
அஸ்ய - இதனுடைய; இந்த உலகத்தினுடைய
ஜன்மாதி3 - பிறப்பு முதலியன
அஸ்ய - இதனுடைய; இந்த உலகத்தினுடைய
ஜன்மாதி3 - பிறப்பு முதலியன
இந்த மூன்று
சொற்களுடன் மேலும் மூன்று சொற்களை சேர்த்தால்தான் சரியான அர்த்தம் கிடைக்கும்.
அவைகள்,
ப4வதி - உண்டானதோ; தோன்றியுள்ளதோ
தத் - அது
ப்3ரஹ்ம - பிரம்மம்
பிரம்மம் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதுதான் இநத சூத்திரத்தின் கருத்து.
ப4வதி - உண்டானதோ; தோன்றியுள்ளதோ
தத் - அது
ப்3ரஹ்ம - பிரம்மம்
பிரம்மம் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதுதான் இநத சூத்திரத்தின் கருத்து.
விசாரம்
ஒரு வஸ்து இருக்கிறது என்பதை அதனுடைய லட்சணத்தின் மூலமாகவும், பிரமாணத்தின் மூலமாகவும் நிலைநாட்ட முடியும். இங்கே பிரம்மத்தை லட்சணத்தின் மூலமாக நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பொருளுக்கு லட்சணம் கொடுக்கும்போது அதனுடைய ஸ்வரூபம், அதனுடைய தன்மையையும் அறிந்து கொள்ள முடியும். வஸ்துவின் நிர்ணயம் பிரமாணத்தின் மூலமாக உறுதியாகின்றது. 3வது சூத்திரத்தில் பிரமாணத்தின் மூலமாக பிரம்மத்தின் ஸ்வரூபம் மட்டுமல்லாமல் அதனுடைய முடிவையும் நிர்ணயம் செய்துவிடுகின்றார். 4வது சூத்திரத்தில் விசாரத்தின் மூலமாக பிரம்மத்தின் இருப்பை நிர்ணயம் செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு சூத்திரமும் ஏதொவொரு உபநிஷத் வாக்கியத்தை நிச்சயம் செய்ய எழுதியுள்ளார். இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியம், தைத்திரிய உபநிஷத் 3வது வல்லி-அனுவாகம்-1ல் உள்ள “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே”. என்பதாகும். பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறி இந்த லட்சணத்துடன் கூடியதாக எது இருக்கிறதோ அதை விசாரம் செய்யப்படுகிறது என்று கூறுகிறார். மேலும் அனைத்து ஸ்ருஷ்டி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியங்களாகும்.
ஒவ்வொரு அதிகரணத்திற்கும் ஐந்து அங்கங்களை கூற வேண்டும். இந்த 2வது அதிகரணத்தின் அங்கங்களாவது:
ஒரு வஸ்து இருக்கிறது என்பதை அதனுடைய லட்சணத்தின் மூலமாகவும், பிரமாணத்தின் மூலமாகவும் நிலைநாட்ட முடியும். இங்கே பிரம்மத்தை லட்சணத்தின் மூலமாக நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பொருளுக்கு லட்சணம் கொடுக்கும்போது அதனுடைய ஸ்வரூபம், அதனுடைய தன்மையையும் அறிந்து கொள்ள முடியும். வஸ்துவின் நிர்ணயம் பிரமாணத்தின் மூலமாக உறுதியாகின்றது. 3வது சூத்திரத்தில் பிரமாணத்தின் மூலமாக பிரம்மத்தின் ஸ்வரூபம் மட்டுமல்லாமல் அதனுடைய முடிவையும் நிர்ணயம் செய்துவிடுகின்றார். 4வது சூத்திரத்தில் விசாரத்தின் மூலமாக பிரம்மத்தின் இருப்பை நிர்ணயம் செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு சூத்திரமும் ஏதொவொரு உபநிஷத் வாக்கியத்தை நிச்சயம் செய்ய எழுதியுள்ளார். இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியம், தைத்திரிய உபநிஷத் 3வது வல்லி-அனுவாகம்-1ல் உள்ள “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே”. என்பதாகும். பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறி இந்த லட்சணத்துடன் கூடியதாக எது இருக்கிறதோ அதை விசாரம் செய்யப்படுகிறது என்று கூறுகிறார். மேலும் அனைத்து ஸ்ருஷ்டி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியங்களாகும்.
ஒவ்வொரு அதிகரணத்திற்கும் ஐந்து அங்கங்களை கூற வேண்டும். இந்த 2வது அதிகரணத்தின் அங்கங்களாவது:
1. விஷயம் - பிரம்ம
லட்சணமாகும்.
2. சந்தேகம் -
பிரம்மத்திற்கு லட்சணம் இருக்கிறதா, இல்லையா
3. பூர்வ பக்ஷம் - பிரம்மன்
நிர்குண, நிர்விசேஷமாக இருப்பதால்
அதற்கு லட்சணம் சொல்ல முடியாது என்று பூர்வ பக்ஷி கூறுவதால் இதை விசாரம் செய்ய
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
4. சித்தாந்தம் - ஏற்றி
வைக்கப்பட்ட சில குணங்களின் மூலமாக பிரம்மத்திற்கு லட்சணம் கொடுக்க முடியும்.
5. சங்கதி - சென்ற
சூத்திரத்திற்கும் இந்த சூத்திரத்திற்கும் இடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.
இதற்கு ஆட்சேப சங்கதியாகும். முதல் சூத்திரத்தில் பிரம்ம விசாரம் செய்யப்பட
வேண்டும் என்று கூறியிருப்பதால், அதற்கான லட்சணத்தை
கொடுக்க வேண்டும் என்பதுதான் சம்பந்தம்.
சாஸ்திர உபதேசமானது மூன்று படிகளாக இருக்கிறது. அவைகள்,
1.
உத்தேசம் - நாம் எதைப்பற்றி விளக்கப்போகின்றோமோ அதை
சுருக்கமாக முதலில் சொல்லிவிட வேண்டும்.
2.
லட்சணம் - பிரம்மத்திற்கு லட்சணம் கொடுத்துவிட்டு அதை
நிச்சயம் செய்ய வேண்டும். இதைத்தான் இரண்டாவது சூத்தரத்தில் செய்துள்ளார்.
மூன்றாவது சூத்திரத்தில் பிரம்மத்தை அறிய உதவும் பிரமாணத்தை கூறியுள்ளார். இதன்
மூலம் பிரம்மன் என்ற ஒன்றிருக்கிறது என்று நிச்சயம் செய்துள்ளார்.
3.
பரீக்ஷா - விசாரங்கள் செய்திருக்க வேண்டும். நான்காவது
சூத்திரத்திலிருந்து இறுதி சூத்திரம் வரை இதைத்தான் வியாச பகவான்
செய்திருக்கிறார்.
ஏதாவது ஒன்றிற்கு
லட்சணம் கொடுக்கவேண்டுமென்றால் எப்படிபட்ட லட்சணத்துடன் இருக்க வேண்டும் என்றும், எந்த வரையறைக்குள் இருக்க
வேண்டும் என்பதைப் பற்றி இனி விளக்கப்படுகிறது.
1. சஜாதீய விஜாதீய
வியாவர்த்தக லட்சணம்:
வியாவர்த்தக லட்சணம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த லட்சணமானது ஒன்றை மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.
சஜாதீய - ஐந்து மனிதர்களில் நான்கு பேரை விலக்கி ஒருவரை மட்டும் காட்டுவது
விஜாதீய - மனிதர்களுக்கு வேறாக உள்ளதை நீக்கி, ஒருவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும்.
அதேமாதிரி பிரம்மத்தைப்பற்றிய லட்சணம் மற்றவைகளிலிருந்து பிரித்துக்காட்ட வேண்டும்.
வியாவர்த்தக லட்சணம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த லட்சணமானது ஒன்றை மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.
சஜாதீய - ஐந்து மனிதர்களில் நான்கு பேரை விலக்கி ஒருவரை மட்டும் காட்டுவது
விஜாதீய - மனிதர்களுக்கு வேறாக உள்ளதை நீக்கி, ஒருவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும்.
அதேமாதிரி பிரம்மத்தைப்பற்றிய லட்சணம் மற்றவைகளிலிருந்து பிரித்துக்காட்ட வேண்டும்.
2. தூ4ஷண த்ரய ரஹித தர்மஹ
எந்த லட்சணமும் மூன்று குறைகளற்றதாக
இருக்கவேண்டும்.
2.1. அதிவியாப்தி - லட்சியத்திற்கப்பால் சென்று விடக்கூடாது. உதாரணமாக காளை மாட்டின் சரியான லட்சணம் கழுத்தில் தசை தொங்கிக்கொண்டிருக்கும் என்பதாகும். நான்கு கால்களையுடையது என்பது தவறான லட்சணம். ஏனென்றால் இது மற்ற விலங்குகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
2.2. அவியாப்தி - கொடுக்கின்ற லட்சணம் லட்சியத்தை குறைவாகத்தான் வியாபிக்கிறது. இந்தியாவிற்கு லட்சணம் கொடுக்கும் போது தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடு என்பது தவறானதாகும். இது இந்தியாவின் ஒரு பகுதியைத்தான் குறிக்கிறது.
2.3. அஸம்பவஹ - தலைகீழாக லட்சணையை கொடுப்பது. காளை மாட்டைக் குறிக்க பால் கொடுக்கும் மாடு என்பது முற்றிலும் தவறானதாகும்.
எதனால் லட்சியமானது அடையப்படுகிறதோ அதுவே சரியான லட்சணமாகும். சரியான லட்சணம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள்,
2. தடஸ்த லட்சணம்
ஆகியவைகளாகும்.
ஸ்வரூப லட்சணம்
எந்தவொரு பொருளை லட்சணையால் காட்ட விரும்புகின்றோமோ அந்தப் பொருளின் ஸ்வரூபத்தைக் கூறி காட்டிக் கொடுத்தல் என்பதே ஸ்வரூப லட்சணமாகும். ஆகாசத்தை புரிய வைப்பதற்கு அதன் ஸ்வரூபமான இடைவெளியைக்(Gap) கூறி அதைக் காட்டிக் கொடுத்தல் இதற்கு உதாரணமாகும். நிலவை காட்டுவதற்கு இரவில் அதிக வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றவொன்று என்று சொல்லும் போது நிலவின் ஸ்வரூபத்தை சொல்லிக் காட்டுகிறோம். பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணம் சத்யம், அனந்தம், ஞானம் என்கின்ற ஸ்வரூபத்தை காட்டுவதாகும்.
தடஸ்த லட்சணம்
நதியின் கரையோரம் நின்று கொண்டு அதனழகை ரசிப்பது போல ஒரு பொருளைக் காட்டுவதற்கு அதனுடைய ஸ்வரூபத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஒருவருடைய வீட்டை அடையாளம் காட்டும்போது அந்த வீட்டின் மீது காகம் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அதோ காகம் அமர்ந்திருக்கின்ற வீடுதான் அவர் வீடு என்று கூறுகிறோம். இந்த லட்சணம் அந்த வீட்டின் ஸ்வரூபமல்ல ஆனால் அந்த நேரத்தில் அடையாளம் காட்டுவதற்கு பயனுள்ளதாக இருந்தது. அதன்பிறகு காகம் பறந்து சென்றுவிட்டாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வோம்.
பிரம்மத்திற்கு ஸ்வரூப லட்சணத்தை சொல்லியுள்ளது போல தடஸ்த லட்சணமும் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்வரூப லட்சணம் சூட்சுமமாக இருப்பதால் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தடஸ்த லட்சணத்தை பயன்படுத்தி ஒன்றை சுலபமாப புரிந்து கொள்ளலாம். ஜகத்தின் துணைக்கொண்டு பிரம்மத்தை புரிய வைக்கிறார். பிரம்மத்தை அடைந்ததும் ஜகத்தும் பொய்யாகிவிடும்.
பிரம்மத்திற்கு இரண்டு லட்சணங்கள் இருப்பது போல தர்மத்திற்கும் இரண்டு லட்சணங்கள் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தையும், தீய செயல்களைச் செய்து பாவத்தையும் அடையப்படுகிறது. இவையிரண்டையும் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவைகளுடைய லட்சணத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். அதேபோல பிரம்மத்தினுடைய லட்சணங்களை கொடுத்து புரிய வைத்தால் பிரம்மம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிரம்மம் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதால் அதை விசாரம் செய்ய வேண்டும்.
இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு அவைகள் விசாரம் செய்யப்படுகிறது.
எந்தவொரு பொருளை லட்சணையால் காட்ட விரும்புகின்றோமோ அந்தப் பொருளின் ஸ்வரூபத்தைக் கூறி காட்டிக் கொடுத்தல் என்பதே ஸ்வரூப லட்சணமாகும். ஆகாசத்தை புரிய வைப்பதற்கு அதன் ஸ்வரூபமான இடைவெளியைக்(Gap) கூறி அதைக் காட்டிக் கொடுத்தல் இதற்கு உதாரணமாகும். நிலவை காட்டுவதற்கு இரவில் அதிக வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றவொன்று என்று சொல்லும் போது நிலவின் ஸ்வரூபத்தை சொல்லிக் காட்டுகிறோம். பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணம் சத்யம், அனந்தம், ஞானம் என்கின்ற ஸ்வரூபத்தை காட்டுவதாகும்.
தடஸ்த லட்சணம்
நதியின் கரையோரம் நின்று கொண்டு அதனழகை ரசிப்பது போல ஒரு பொருளைக் காட்டுவதற்கு அதனுடைய ஸ்வரூபத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஒருவருடைய வீட்டை அடையாளம் காட்டும்போது அந்த வீட்டின் மீது காகம் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அதோ காகம் அமர்ந்திருக்கின்ற வீடுதான் அவர் வீடு என்று கூறுகிறோம். இந்த லட்சணம் அந்த வீட்டின் ஸ்வரூபமல்ல ஆனால் அந்த நேரத்தில் அடையாளம் காட்டுவதற்கு பயனுள்ளதாக இருந்தது. அதன்பிறகு காகம் பறந்து சென்றுவிட்டாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வோம்.
பிரம்மத்திற்கு ஸ்வரூப லட்சணத்தை சொல்லியுள்ளது போல தடஸ்த லட்சணமும் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்வரூப லட்சணம் சூட்சுமமாக இருப்பதால் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தடஸ்த லட்சணத்தை பயன்படுத்தி ஒன்றை சுலபமாப புரிந்து கொள்ளலாம். ஜகத்தின் துணைக்கொண்டு பிரம்மத்தை புரிய வைக்கிறார். பிரம்மத்தை அடைந்ததும் ஜகத்தும் பொய்யாகிவிடும்.
பிரம்மத்திற்கு இரண்டு லட்சணங்கள் இருப்பது போல தர்மத்திற்கும் இரண்டு லட்சணங்கள் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தையும், தீய செயல்களைச் செய்து பாவத்தையும் அடையப்படுகிறது. இவையிரண்டையும் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவைகளுடைய லட்சணத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். அதேபோல பிரம்மத்தினுடைய லட்சணங்களை கொடுத்து புரிய வைத்தால் பிரம்மம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிரம்மம் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதால் அதை விசாரம் செய்ய வேண்டும்.
இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு அவைகள் விசாரம் செய்யப்படுகிறது.
ஜன்மாதி3 என்ற
சொல்லின் விசாரம்
ஜன்மாதி3 - ஜகத்தினுடைய பிறப்பு, இருப்பு, லயம் முதலியவைகள்.
ஜன்ம - பிறப்பு, தோற்றம்
ஆதி3 - முதலியன (ஸ்திதி, லயம்) இருத்தல், ஒடுங்குதல்
ஜன்மாதி3 - ஜகத்தினுடைய பிறப்பு, இருப்பு, லயம் முதலியவைகள்.
ஜன்ம - பிறப்பு, தோற்றம்
ஆதி3 - முதலியன (ஸ்திதி, லயம்) இருத்தல், ஒடுங்குதல்
பூ.பக்ஷி ஸ்ருஷ்டி அனாதியாக
இருக்கும்போது முதல் ஸ்ருஷ்டியை பேசவே முடியாது. அப்படியிருக்கும் போது ஏன்
ஜன்மாதி என்று சொல்லியிருக்கிறார். லயத்தையோ அல்லது இருத்தலையோ முதலில்
சொல்லியிருக்கலாமே?
பதில்1 ஸ்ருதி வாக்கியத்தின் அடிப்படையில்தான் விசாரம்
செய்யப்படுகிறது. ஸ்ருதியில் வாக்கியத்தில் ஜன்மம் முதலில் சொல்லியிருப்பதால்
அதையே முதலில் விசாரம் செய்யப்படுகிறது.
பதில்2 நம் அனுபவத்தில் எந்தவொரு பொருளும்
பிறப்பைத்தான் முதலில் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் இருத்தல், லயம் என்ற வரிசை கிரமமாக
அதன் நிலைமாறுகிறது.
பூ.பக்ஷி யாஸ்கர் என்ற முனிவர் ஆறுவிதமான விகாரங்களைக்
கூறியிருக்கிறார். அவைகள் 1. பிறத்தல், 2.இருத்தல், 3.வளர்ச்சி, 4.மாற்றம், 5.தேய்தல், 6.இறத்தல்
ஆகியவைகளாகும். இவரும் பிறப்பைத்தான் முதலில் சொல்லியிருககிறார். எனவே ஆதி என்ற
சொல்லுக்கு பொருளாக மற்ற ஐந்து விகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?
பதில்1 யாஸ்கர் ஸ்தூல பூதத்தினுடைய விகாரங்களைத்தான்
கூறியிருக்கிறார். ஆனால் இங்கே சூட்சும பூதங்களுக்கும் முன்னாடி உள்ள நிலையைத்தான்
பேசுகிறோம். உதாரணமாக ஆகாசத்திற்கு இந்த விகாரங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
பதில்2 ஸ்ருதி இந்த ஆறு விகாரங்களைப் பற்றி பேசவில்லை.
பிறப்பு, ஸ்திதி, லயம் என்கின்ற மூன்றைப்
பற்றித்தான் பேசியிருக்கிறது. ஆகவே ஜன்மாதி என்ற சொல்லுக்கு பிறப்பு, இருத்தல், ஒடுங்குதல் என்பதுதான் சரியான
பொருளாகும்.
“அஸ்ய” என்ற சொல்லின் விசாரம்
அஸ்ய - இதனுடைய; இந்த உலகத்தினுடைய
இந்த உலகத்தை பகவான் சங்கரர் நான்கு விதமாக வர்ணிக்கிறார். இந்த வர்ணனையே சில தத்துவங்களை உணர்த்துகின்றது. இந்த வர்ணனை ஜகத்திற்கு லட்சணமாகவும் இருக்கிறது.
1. நாம-ரூபாப்4யாம்
வ்யாக்ருதஸ்ய
வ்யாக்ருதஸ்ய -
வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளது
நாம ரூபாப்4யாம் - நாம் ரூபங்களாக
இதிலிருந்து நாம் அறிந்து
கொள்ள வேண்டியது
1.1.
இந்த உலகம் நாம-ரூபங்களை உடையதாக, அறிவுள்ள ஒருவரால்
உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
1.2.
இந்த உலகம் நாம-ரூபமாக இருப்பதனால் மித்யா ஸ்வரூபமாக
இருக்கிறது.
2. அனேக3 கர்த்ருபோ4க்த்ரு
ஸம்யுக்தஸ்ய
இந்த உலகம் பலவிதமான
கர்த்தாக்களும், போக்தாக்களும்
கூடியுள்ளவர்களாக இருக்கிறது. ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஆரம்பித்து அனைத்து
தேவதைகளும் இந்த உலகத்தை படைத்தவர்கள் அல்ல. அவர்களும்
தோற்றுவிக்கப்பட்டவர்கள்தான் என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களும் கர்த்தாவாக, போக்தாவாக இருக்கிறார்கள்.
3. ப்ரதிநியதி தேஸகால
நிமித்த க்ரியாபல ஆஸ்ரஸ்ய
ஆஸ்ரஸ்ய - இப்படிபட்ட
தன்மையுடையது
ப்ரதிநியதி - விதிமுறை
தேசம், காலம், நிமித்தம், க்ரியா, பலன் என்கின்ற ஐந்தும் இந்த இடத்தில், இந்த காலத்தில் இதன்
காரணமாக, இந்த செயலுக்கு
இந்தப்பலன் என்ற நியதியுடன் கூடிய தன்மையுடையது இந்த உலகம். இதிலிருந்து நாம் தெரிந்து
கொள்ள வேண்டியது. நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு நாம்தான் காரணம் என்பதாகும்.
மேலும் அவரவர்கள் செய்த கர்மத்திற்கேற்ற பலனைக் கொடுக்கக்கூடிய ஸர்வக்ஞன் என்ற
ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அந்த ஸர்வக்ஞன் ஈஸ்வரனே
ஆவார்.
4. மனஸா அபி4 அசிந்த்ய ரசனா
ரூபஸ்ய
மனதினாலும் கூட, கூர்மையான புத்தியாலும்
கூட எட்டாதபடி இந்த உலகத்தின் அமைப்பு இருக்கிறது. யாராலும் புரிந்து கொள்ள
முடியாததாக இந்த உலகம் இருக்கிறது. ஈஸ்வரன் அனைத்து சக்தியுடையவராக இருப்பதால்
அல்ப சக்தியடைய ஜீவர்களை இந்த உலகத்தில் படைத்திருக்கிறார்.
இத்துடன் இரண்டாவது சூத்திரத்தின் இரண்டாவது சொல்லின் விசாரம் முடிவடைகிறது.
“யத” என்ற சொல்லின் விசாரம்
யத:- யாரிடமிருந்து
இது காரணத்தை விளக்குகின்ற சொல்லாகும். அதாவது இந்த உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் பிரம்மன். பிரம்மனே உலகத்தின் தோற்றத்திற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார். இங்கு உபாதான காரணம்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணமாக இருப்பது உபாதான காரணம். களிமண் பானைக்கு உபாதான காரணம். ஸ்ருஷ்டிக்கு மட்டும் காரணமாக இருப்பது நிமித்த காரணம். குயவன் பானைக்கு நிமித்தக் காரணம். ஜன்மாதி என்ற சொல் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறார் என்பது உணர்த்துகிறது.
ஜன்மாதி என்ற சொல் பிரம்ம லட்சணையைத்தான் குறிக்கிறது. பிரம்மன் காரணம் என்றால் ஜகத் காரியாமாகும். காரியத்திற்கு மூன்று லட்சணங்கள் உண்டு. அவைகள்,
2. காரணம் சேதனம், காரியம் ஜடம்
3. காரணம் வரையறுக்கப்படாதது, காரியம் வரையறுக்கப்பட்டது.
ஆகியவைகளாகும். இந்த மூன்று லட்சணங்களும் ஜகத்திற்கு பொருந்தி வருகின்றது.
கேள்வி மாயையினுடைய மாற்றமே சூட்சம பிரபஞ்சம். பிறகு
ஸ்தூல பிரபஞ்சமாக மாறுகிறது. மாயை உபாதான காரணமா அல்லது பிரம்மன் உபாதான காரணமா? மாயையின் மூன்று
குணங்களும் உலகத்தில் இருப்பதால் மாயைதான் உபாதான காரணமாக கூறமுடியும். ஏன் பிரம்மனை
உபாதானமாக கூறப்படுகிறது?
பதில் உபநிஷத் பிரம்மத்தை உபாதான காரணமாக
சொல்லியிருப்பதால், வியாச பகவான் இங்கே
பிரம்மத்தை உபாதானமாக கூறியிருக்கிறார். மாயை பரிணாமி உபாதானம், பிரம்மன் விவர்த்த
உபாதானமாகும். மாற்றத்தை அடைந்து உபாதானமாக மாறுவது பரிணாமி உபாதானமாகும். ஸ்வரூப
தியாகமில்லாமல் உபாதானமாக இருப்பது விவர்த்த உபாதானமாகும்.
மேற்சொன்ன கருத்துக்களினால் நாம் தெரிந்து கொள்வது பிரம்மத்தைத்தான் வியாச பகவான் உபாதான காரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். சாஸ்திரத்தின் மூலம் அடைகின்ற அறிவு சாஸ்திரம், யுக்தி, அனுபவம் ஆகிய மூன்றுக்கும் விரோதமாக இருக்கக்கூடாது.
---இத்துடன் 2வது சூத்திரம் முடிவடைந்தது.---
3வது சூத்திரம் - 3வது அதிகரணம்
शास्त्रयोनित्वात् || 3 ||
ஶாஸ்த்ரயோனித்வாத் || 3 ||
இந்த சூத்திரம் இரண்டு வகையாக பொருட்படுத்தப்படுகிறது. எனவே முதல் அர்த்தத்திற்கு 6வது வர்ணகம் என்றும் இரண்டாவது அர்த்தத்திற்கு 7வது வர்ணகம் என்றும் இரண்டு வர்ணமாக பிரித்து விளக்கப்படுகிறது.
ஶாஸ்த்ரயோனித்வாத் || 3 ||
இந்த சூத்திரம் இரண்டு வகையாக பொருட்படுத்தப்படுகிறது. எனவே முதல் அர்த்தத்திற்கு 6வது வர்ணகம் என்றும் இரண்டாவது அர்த்தத்திற்கு 7வது வர்ணகம் என்றும் இரண்டு வர்ணமாக பிரித்து விளக்கப்படுகிறது.
6வது அதிகரணம் -
ப்3ரஹ்மன: ஸர்வக்3ஞத்வ
இந்த வர்ணகத்தில் பிரம்மன் அனைத்தையும் அறிபவர் என்று நிலைநாட்டப்படுகிறது. மேலும் பிரம்மன் நிமித்தக் காரணம் என்பதையும் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஶாஸ்த்ர - வேதம்
யோனி - காரணம்
இந்த வர்ணகத்தில் பிரம்மன் அனைத்தையும் அறிபவர் என்று நிலைநாட்டப்படுகிறது. மேலும் பிரம்மன் நிமித்தக் காரணம் என்பதையும் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஶாஸ்த்ர - வேதம்
யோனி - காரணம்
பொருள்:
வேதத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன். பிரம்மத்தினிடமிருந்து வேதம் தோன்றியது. எனவே இவர் அனைத்தையும் அறிபவர் என்று அறிய முடிந்தது. யார் எதை படைத்துள்ளாரோ அவர் அதைப்பற்றியெல்லாம் அறிந்திருப்பார். பானையை உருவாக்கிய குயவனுக்கு அதைப்பற்றிய அறிவை உடையவராக இருப்பார். அதேபோல எல்லாவற்றையும் படைத்தவர் எல்லாவற்றைப் பற்றிய அறிவை உடையவராக இருப்பார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பூ.பக்ஷி ஈஸ்வரன் எல்லாம் அறிந்தவர் அல்ல. எல்லாவற்றையும்
படைத்தவர் அல்ல. வேதம் என்பது அனாதி. இது அனாதியாக இருப்பதாலே, ஈஸ்வரன் வேதத்தை
உருவாக்கியவர் அல்ல. அதனால் அவர் எல்லாவற்றையும் அறிந்தவர் என்ற சொல்லமுடியாது.
பதில் ஜகத்தும் அனாதிதான் என்ற சொல்கிறோம்.
ஸ்ருஷ்டியும் அனாதிதான். ஜகத்தையும், வேதத்தையும் பிரிக்க முடியாது. ஸ்ருஷ்டி என்பது
வெளிப்படுத்துவது என்று பொருட் கொள்ள வேண்டும். அதேபோல அனாதியான வேதத்தை
வெளிப்படுத்துவது ஸ்ருஷ்டி.
பிருஹதாரண்ய உபநிஷத் 2.4.10 – “அஸ்ய மஹதோ பூ4த3ஸ்ய...” என்ற வாக்கியத்தின் அடிப்படையில் இந்த சூத்திரத்தை எழுதியிருக்கிறார். இந்த வாக்கியத்தின் பொருள் பிரம்மத்தினுடைய மூச்சுக்காற்றிலிருந்து வெளிவந்ததுதான் வேதம் என்பதாகும். புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த புத்தகம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகம் அறிவை உடையவராக இருப்பார் என்பது நியதி. உதாரணமாக சமஸ்கிருத இலக்கணத்தை எழுதிய பாணினிக்கு அதைத்தவிர மேலும் அதிகமான அறிவை உடையவராக இருப்பார். அதேபோல வேதத்தை வழங்கிய ஈஸ்வரனுக்கு வேதம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகமான அறிவை உடையவராக இருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.
1.
நன்மையை உபதேசிப்பதனால் அதை சாஸ்திரம் என்று
அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்பது வெளிச்சத்தைப் போன்றது. இது நம் வாழ்க்கையை சரியான முறையில் நடத்தி
செல்ல உதவியாக இருக்கிறது.
2.
வேதம் எல்லாவிதமான அறிவையும் கொடுக்கக்கூடிய சாஸ்திரம்
என்றும் கூறப்படுகிறது. பத்துவிதமான சாஸ்திர ஞானம் இருந்தால்தான் வேதத்தை புரிந்து கொள்ள முடியும்.
அவைகள்,
2.1. புராணம்
2.2. நியாய
2.3. மீமாம்ஸ
2.4. தர்ம சாஸ்திரம்
2.5. சிக்ஷா
2.6. கல்ப
2.7. வியாக்ரணம்
2.8. நிருத்தம்
2.9. சந்தஹ
2.10. ஜோதிடம்
முடிவுரை
விஷயம் பிரம்மம்
சந்தேகம் பிரம்மம் சாஸ்திரத்திற்கு கர்த்தாவா, இல்லையா?
பூ.பக்ஷம் வேதத்திற்கு ஈஸ்வரன் காரணமல்ல. ஏனென்றால் அது அனாதியாக இருக்கிறது.
பதில் ஜகத்தும் அனாதியாக இருந்தாலும் ஈஸ்வரன்
கர்த்தாவாக இருப்பது போல வேதம் அனாதியாக இருந்தாலும் அவரே கர்த்தாவாக இருக்கிறார்.
சங்கதி பிரம்மன் அனைத்திற்கும் காரணமில்லை என்ற
ஆட்சேபம் செய்வதால் அதற்கு வியாச பகவான் பதில் கூறியிருக்கிறார்.
----ooo00ooo----
7வது அதிகரணம் - ஶாஸ்த்ரயோனித்வாத் (3வது சூத்திரம்)
ஶாஸ்த்ர - வேதம்
யோனி - பிரமாணம்
பொருள்: பிரம்மம் சாஸ்திரம் என்ற பிரமாணத்தின் மூலமாக அறியப்படுகிறது.
யோனி - பிரமாணம்
பொருள்: பிரம்மம் சாஸ்திரம் என்ற பிரமாணத்தின் மூலமாக அறியப்படுகிறது.
இந்த
வர்ணகத்திற்கு ஸ்ருதி வாக்கியமானது பிரஹதாரண்ய உபநிஷத் 3.9.26 ஓளபநிஷத்
புருஷம் ப்ருச்சாமி என்பதாகும். இதற்கு அர்த்தம் நான் அந்த உபநிஷத்தின் மூலமாக
அடையக்கூடிய பிரம்மத்தினுடைய விளக்கத்தை கேட்கிறேன்.
பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற பொருளை சாஸ்திரத்தின்
மூலமாகத்தான் அறிய வேண்டிய அவசியமில்லை. வேறொரு பிரமாணமாக மூலமாகவும் அடையலாம்.
இமயமலை எங்கே இருக்கிறது என்பதை புத்தகத்தின் மூலமாகவோ, நேரில் சென்றோ பார்க்கலாம். பிரம்மன் சித்த
வஸ்துவாக இருக்கும்போது வேதத்தின் பிரமாணத்தை தவிர வேறொரு பிரமாணத்தின் மூலமாகவும்
அறிந்து கொள்ளலாம்.
பதில் சாதாரணமாக சித்த வஸ்துவாக இருந்தால் நீ சொல்வது சரிதான்.
ஆனால் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக சொர்க்கலோகம் இருக்கிறது என்பதற்கு
சாஸ்திரம் மட்டும்தான் பிரமாணம். அதுபோல பிரம்மன் சித்த வஸ்துவாக இருந்தாலும்
வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும்.
பிரம்மம் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிவினால் நீக்க வேண்டும். இந்த
அறிவை கொடுக்கும் பிரமாணம் வேதாந்தம் மட்டும்தான்.
முடிவுரை
விஷயம் பிரம்மம்
சந்தேகம் பிரம்மத்தை அனுமானம் முதலிய மற்ற பிரமாணத்தால் அறிந்து கொள்ள முடியுமா?
பூ.பக்ஷம் வேறு பிரமாணத்தாலும் புரிந்து கொள்ள முடியும்.
சங்கதி வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள
முடியும்.
ஆட்சேபம் பிரம்மனை யூகத்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
பதில் யூகத்தால் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்தம் மூலம்தான் தெரிந்து
கொள்ள முடியும்.
---இத்துடன் 3வது சூத்திரம் முடிவடைந்தது.---
4வது சூத்திரம் - 4வது அதிகரணம் - ஸமன்வய அதிகரணம்
तत्तु समन्वयात् || 4 ||
தத்து ஸமன்வயாத் || 4 ||
இந்த சூத்திரம் 7வது வர்ணகம், 8வது வர்ணகம் என்று இரண்டு வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
तत्तु समन्वयात् || 4 ||
தத்து ஸமன்வயாத் || 4 ||
இந்த சூத்திரம் 7வது வர்ணகம், 8வது வர்ணகம் என்று இரண்டு வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
7வது வர்ணகம்
முகவுரை
உபநிஷத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருந்தாலும் அது உபதேசிக்க விரும்பும் மையக்கருத்து பிரம்மன்தான். சிலர் வேதத்தின் முக்கிய கருத்து கர்மத்தை செய்து அடைகின்ற புண்ணியம்தான் என்று கூறுகிறார்கள். இந்த சூத்திரம் வேதத்தின் முக்கியமான அறிவைக் கொடுக்க விரும்பும் விஷயம் பிரம்மன்தான் என்பதை நிலைநாட்டுகிறது.
பொருள்
தத் - பிரம்மன்; உபநிஷத்தின் மையக்கருத்து
ஸமன்வயாத் - சமன்வயப்படுவதனால்; உடன்பாடிருப்பதால்
ஸமன்வயம் உடன்பாடு; மையக்கருத்து மாறாமல் ஒத்திருத்தல்; எல்லா உபநிஷத்தும் தொடர்ந்து பிரம்மத்தை உபதேசிக்கம் விஷயத்தில் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
முகவுரை
உபநிஷத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருந்தாலும் அது உபதேசிக்க விரும்பும் மையக்கருத்து பிரம்மன்தான். சிலர் வேதத்தின் முக்கிய கருத்து கர்மத்தை செய்து அடைகின்ற புண்ணியம்தான் என்று கூறுகிறார்கள். இந்த சூத்திரம் வேதத்தின் முக்கியமான அறிவைக் கொடுக்க விரும்பும் விஷயம் பிரம்மன்தான் என்பதை நிலைநாட்டுகிறது.
பொருள்
தத் - பிரம்மன்; உபநிஷத்தின் மையக்கருத்து
ஸமன்வயாத் - சமன்வயப்படுவதனால்; உடன்பாடிருப்பதால்
ஸமன்வயம் உடன்பாடு; மையக்கருத்து மாறாமல் ஒத்திருத்தல்; எல்லா உபநிஷத்தும் தொடர்ந்து பிரம்மத்தை உபதேசிக்கம் விஷயத்தில் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
“து என்ற சொல்லுக்கு இரண்டு
அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1.
து - ஏவ - மட்டும்
2. து - பூர்வ பக்ஷ நிராகரணம் (எல்லா சந்தேகங்களும் நீக்கப்படுவதனால்)
2. து - பூர்வ பக்ஷ நிராகரணம் (எல்லா சந்தேகங்களும் நீக்கப்படுவதனால்)
விஷயம் வேதாந்த சாஸ்திரம் (உபநிஷத்)
சந்தேகம் பிரம்மத்தை தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா அல்லது ஸ்ருஷ்டி, கர்மம், தர்மம் போன்ற வேறெதையாவது
தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா?
பூ.பக்ஷம் உபநிஷத் எதாவதொரு கர்மத்தை செய்யத்தான் உபதேசிக்கிறது.
பதில் பிரம்மத்தைத்தான் மையக்கருத்தாக உபதேசிக்கிறது.
ஹேது ஸமன்வயாத் - மீமாம்ஸ மூலமாக நிச்சயம்
ஆட்சேபம் பிரம்மன் மட்டும் சாஸ்திரத்தின் விஷயம் அல்ல. பல விஷயங்களும் அதில் பேசப்பட்டிருக்கிறது.
பதில் பிரம்மன் மட்டும்தான் முக்கிய விஷயமாக பேசியிருக்கிறது.
பிரம்மத்தைப் பற்றி பேசகின்ற எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
விசாரம்:
வேதாந்த சாஸ்திரத்தின் முக்கியமான ஒரே விஷயமாக பிரம்மன் இருக்கிறது. எல்லா உபநிஷத்துக்களும் முரண்பாடில்லாமல் இதைத்தான் உபதேசிக்கிறது. கர்மகாண்டம் தர்மத்தை முரண்பாடில்லாமல் தொடர்ந்து உபதேசிக்கிறது.
ஹேது - ஸமன்வயாத் -
ஸம்+அனு+வ்யாத்
ஸம் - நன்கு; தெளிவாக; சந்தேகமில்லாமல்
அனு - தொடர்ச்சி (உ-ம்) அனுகச்சதி
- தொடர்ந்து செல்கின்றான்
வ்யாத் - சொல்கிறது.
சாத்தியம் - பிரம்மன்தான் சாஸ்திரத்தின் தாத்பர்யம்
பூ.பக்ஷி சமன்வயம் இருக்கிறதா?
பதில் மீமாம்ஸகர்கள் ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக
பிரம்மத்தை நிச்சயம் செய்கிறார்கள்.
வேதாந்தம்
பிரம்மத்தைத்தான் பேசுகிறதா என்பதை ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக உறுதி செய்யலாம்.
அவைகள்,
- உபக்ரம - உபஸம்ஹாரம் : தொடக்கத்திலும், முடிவிலும் உபநிஷத்
உபதேசிக்க விரும்புகின்ற மையக்கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
- அப்யாஸம் - முக்கிய கருத்து மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டிருக்கும்.
- அபூர்வதா - புதியதாக அந்த கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
- பலன் - சொல்லப்படுகின்ற கருத்தினால் அடைகின்ற பலனை
கூறியிருக்கும்.
- அர்த்தவாதம் - மையக்கருத்தை புகழ்ந்து
சொல்லப்பட்டிருக்கும். இந்த ஞானம் அடையவில்லையென்றால் அடைகின்ற தீமையையும்
சொல்லப்பட்டிருக்கும்.
- உபபத்தி - தர்க்கரீயாக நிரூபிக்கப்பட்டிருக்கும்.
சாந்தோக்ய
உபநிஷத் - 6வது அத்தியாயம்
- தொடக்கம்-ஸதேவ ஸோம்ய இதமேவ ஆஸீத் - பிரம்மத்தை பற்றி கூறுதல். முடிவுரை - ஐதாத்மியம் இதம் ஸர்வம் - இவைகள் அனைத்தும் பிரம்மன்தான் என்று சொல்லி முடிக்கிறது.
- அப்யாஸம் - பிரம்மத்தைப் பற்றித்தான் திரும்ப, திரும்ப
சொல்லப்பட்டிருக்கிறது. தத்வமஸி என்ற சொல் 9முறை
கூறப்பட்டிருக்கிறது
- அபூர்வதா - பிரம்மத்தை உபநிஷத் தவிர வேறெதிலும்
பேசப்பட்டிருக்கவில்லை. வேறெந்த பிரமாணத்தாலும் அறிந்து கொள்ள முடியாது.
- பலன் - பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் பிரம்மத்தை
அறிவதனால் அடைகின்ற பலன் கூறப்பட்டிருக்கிறது. பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற
பலனாக மோட்சம் கூறப்பட்டிருக்கிறது.
- அர்த்தவாதம் - பிரம்ம ஞானத்தை புகழ்ந்து கூறுதல். இந்த
ஞானம் இல்லாத நிலையை இகழ்ந்து பேசுதல். “யேன அஸ்ரும் ஸ்ருதம்” (எந்த
ஞானத்தால் கேட்கபடாததையெல்லாம் அறியப்படுகின்றதோ ) என்ற வாக்கியம் அனைத்தும்
அறிந்தவனாகின்றான் என்று பலனைக் கூறுகின்றது.
- உபபத்தி - இந்த அறிவானது தர்க்கத்திற்கு விரோதமாக இல்லையென்று புரியவைத்தல். (உ-ம்) ஏகேன ம்ருதிபிண்டேன - ஒரு களிமண் குவியலை அறிந்தவன் அதிலிருந்து உருவான அனைத்து பானைகளையும் அறிந்தவனாகின்றான். ஈஸ்வரன் உபாதான காரணமாக இருப்பதால், உலகத்தில் ஈஸ்வரனை பார்க்க முடியும்.
இத்துடன் 4வது
சூத்திரத்தின் சாமான்ய அர்த்த விளக்கம் முடிவடைகிறது.
“து” என்ற சொல்லின் இரண்டாவது அர்த்தமான பூர்வ பக்ஷி நிராகரணம் என்பதை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மம்தான மையக்கருத்து என்பதை எதிர்ப்பவர்களை நிராகரணம் செய்துவிட்டால் பிரம்மம் மட்டும்தான் உபநிஷத்தின் தாத்பர்யம் என்பது நிலைநாட்டப்பட்டுவிடும்.
பூர்வ பக்ஷி
நிராகரணம்
ஆஸ்திக தர்ஷணத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் இவர்கள்தான் இங்கே பூர்வ பக்ஷிகளாக இருக்கிறார்கள்.
* சாங்கிய மதம், யோக மதம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது
* நியாய, வைஸேசிக மதம்
* பூர்வ மீமாம்ஸகர்கள்
* உத்தர மீமாம்ஸா - விருத்திகார மதம்
இவர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வியாச பகவான் நிராகரித்து விடுகின்றார். முதல் அத்தியாயத்தில் சாங்கிய, யோக மதத்தை நீக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திக தர்ஷணத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் இவர்கள்தான் இங்கே பூர்வ பக்ஷிகளாக இருக்கிறார்கள்.
* சாங்கிய மதம், யோக மதம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது
* நியாய, வைஸேசிக மதம்
* பூர்வ மீமாம்ஸகர்கள்
* உத்தர மீமாம்ஸா - விருத்திகார மதம்
இவர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வியாச பகவான் நிராகரித்து விடுகின்றார். முதல் அத்தியாயத்தில் சாங்கிய, யோக மதத்தை நீக்கப்பட்டுள்ளது.
பூர்வ மீமாம்ஸா - வேதத்தின் கர்மகாண்ட
அர்த்தத்தை நிர்ணயம் செய்வதற்காக ஜெய்மினி மகரிஷி சூத்திரங்களை எழுதியுள்ளார்.
இந்த சூத்திரங்களுக்கு சபரஸ்வாமி என்பவர் விளக்கம் எழுதியுள்ளார். இதற்கு
ஸபரபாஷ்யம் என்று பெயர். இந்த இரண்டு நூல்களும் வேதாந்தத்திற்கு எதிரானதல்ல.
இவர்கள் எடுத்துக் கொண்ட மையக்கருத்து வேறாகும். ஆனால் பிற்காலத்தில் இந்த
நூல்களின் அடிப்படையில் குமாரிலபட்டர் என்பவர் பாட்ட மதத்தை தோற்றுவித்தார். இவர்
மோட்சம் என்பது என்ன என்பதைப் பற்றியும், கர்மத்தினால் மோட்சத்தை அடையலாம் என்றெல்லாம்
எழுதியிருக்கிறார். உபநிஷத்துக்கு முரணான கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும்
பிரபாகரர் என்பவரால் பிராபகார மதம் உருவாகியது. இது பாட்ட மதத்திலுள்ள சில
கருத்துக்கள் தவறு என்று நீக்கி புதியதாக இந்த மதமானது தோற்றுவிக்கப்பட்டது. இந்த
இரண்டு மதக்கொள்கைகளை பகவான் சங்கரர் நீக்கியுள்ளார்.
விருத்திகார மதமானது உபநிஷத்தின் உபதேசத்தை தவறாகப் பொருட்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும், மாத்வாச்சாரியாரின் த்வைதமும் நீக்கப்படுகிறது. இரண்டுவிதமான விருத்திகாரர்கள் இருக்கிறார்கள்.
விருத்திகார மதமானது உபநிஷத்தின் உபதேசத்தை தவறாகப் பொருட்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும், மாத்வாச்சாரியாரின் த்வைதமும் நீக்கப்படுகிறது. இரண்டுவிதமான விருத்திகாரர்கள் இருக்கிறார்கள்.
1.
ஸமுச்சயவாதி - ஞானமும், கர்மமும் சேர்ந்துதான் மோட்சத்தைக் கொடுக்கும்.
2.
உபாஸனவாதி - தியானத்தின் மூலமாகத்தான் மோட்சம் கிடைக்கும்.
8வது வர்ணகம் (பூர்வ மீமாம்ஸ நிராகரணம்)
பாட்ட மதம், பிராபகர மதம் இவையிரண்டு
மதங்களின் கருத்துக்கள் பார்க்கப்படுகிறது.
இரண்டு மதங்களின் ஒத்தக் கருத்துக்களை முதலில் பார்க்கப்போகிறோம்.
1. வேத வாக்கியங்கள் அனைத்தையும் இரண்டாக பிரிக்கிறார்கள். அவைகள்,
1.1. சித்த போத வாக்யாணி - ஏற்கனவே இருக்கின்றதைப் பற்றி அறிவைக் கொடுக்கின்ற வாக்கியங்கள்1.2. காரிய போதக வாக்யாணி - இதை செய், இதைச் செய்யாதே என்று போதிக்கின்ற வாக்கியங்கள். கர்மத்தைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்கள். செயலில் ஈடுபடுத்துகின்ற வாக்கியங்கள். விதி வாக்கியம் என்பது செய் என்கின்றது. நிஷேத வாக்கியம் என்பது செய்யாதே என்கின்றது.
இந்த இரண்டு
வகையான வாக்கியங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
2. பிரமாண லட்சணம் - பிரமாணத்திற்கு
இவர்கள் கொடுக்கின்ற லட்சணம். பிரமாணத்தில் இரண்டு முக்கிய பிhpவுகள் உண்டு. அவைகள் 1. அனதி3க3த,
2.அபா4திதம் ஆகும். இவைகள்
இருந்தால்தான் அறிவைக் கொடுக்கும் கருவி என்று சொல்லமுடியும்.
2.1. அனதி3க3த - வேறொன்றின் மூலமாக
அறியப்படாததாக இருக்க வேண்டும். (உ-ம்) ஒரு பொருளின் வர்ணத்தை கண் என்கின்ற
பிரமாணத்தின மூலமாக மட்டும்தான் அறிய முடியும். இதை வேறொரு பிரமாணத்தின் மூலமாக அறிய
முடியாது.
2.2. அபா4திதம் - வேறெந்த
பிரமாணத்தாலும் நீக்க முடியாததாக இருக்க வேண்டும். உதாரணமாக கானல்நீரை கண்ணால்
பார்த்தாலும், அனுபவ பிரமாணத்தால்
நீக்கப்படும்.
பூர்வ மீமாம்ஸகர்கள் மூன்றாவது நிபந்தனையை சேர்த்துக் கொள்கிறார்கள். அது பிரமாணம் பயனைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் அதை பிரமாண வாக்கியம் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று நிபந்தனைகளற்ற வாக்கியங்களை அர்த்தவாதம் என்று கூறுகிறார்கள். அவைகள் முக்கியமான பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யக்கூடியதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக வாயுதேவன் ஸ்துதி செய்கின்ற வாக்கியமான 'வாயுதேவர் வேகமாக ஓடுபவர்” என்ற வாக்கியம் ஒரு பயனையும் தராது. ஆனால் தியானம் செய்யும்போது வாயுபகவானை இவ்வாறு தியானிக்க வேண்டும். இவ்வாறு இந்த வாக்கியத்தை பொருட்படுத்த வேண்டும்.
ஜெய்மினியின் ஒரு சூத்திரத்தை எடுத்து விசாரம் செய்வோம்.
சூத்திரம்-1 - ஆம்னாயஸ்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தானாம்
ஆம்னாயஸ்ய வேதமானது (கர்ம காண்டத்தை குறிப்பது)
க்ரியார்த்தத்வாத் செயலையே தாத்பர்யமாக கொண்டிருக்கின்ற காரணத்தினால்
அதத் அர்த்தானாம் கர்மத்தைப் பற்றி பேசாத வாக்கியங்கள்
ஆனந்தக்யம் பிரயோஜனமற்றது
பூர்வ
மீமாம்ஸகர்கள் ஆம்னாயஸ்ய என்ற சொல்லுக்கு முழு வேதத்தையும் எடுத்துக்
கொள்கிறார்கள். அவர்களது வாதம்: ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை, தெரிந்துக் கொண்டிருக்கின்ற ஒன்றைப் பற்றி பேசுவது
பயனற்றது. செயலைப் போதிக்கின்ற வாக்கியம்தான் பயனுள்ளது. ஏற்கனவே இருக்கின்றதைப் பற்றி பேசுவது பிரமாணமல்ல. உபநிஷத்துக்கள் அறிவைக் கொடுக்கின்ற பிரமாணமல்ல. ஏனென்றால்
இருக்கின்ற பிரம்மத்தைப் பற்றி உபநிஷத் வாக்கியங்கள் பேசுகின்றது. மேலும் ஏற்கனவே
இருக்கின்றதை பேசுவதை வேறு பிரமாணத்தாலும் அறியப்பட முடியும்.
முழு வேதத்தை
அத்யயனம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் வேதத்திலே இருக்கிறது. இதிலிருந்து தெரிவது
கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களையும், கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களையும் படிக்க வேண்டும்
என்று சொல்கிறது. கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற
வாக்கியங்களுக்கு உதவி செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்மத்தைப் போதிக்காத
வாக்கியங்களை அர்த்தவாத வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உபநிஷத்
பிரம்மத்தை போதிக்கின்ற வாக்கியங்களை தேவதைகளை புகழ்கின்ற செய்வதாக எடுத்துக்
கொள்ளலாம். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது
கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள்
அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது.
இதுவரை கூறியது பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்களாகும்.
சூத்திரம்-2 - வித்னாத்து ஏகவாக்யத்வாத் ஸ்துதியர்தேன விதினாமஸ்யும்.
கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களை சென்று சேர்வதனால் அவைகளை ஸ்துதி செய்கின்ற அர்த்தத்தை கொடுப்பதன் மூலம் விதி வாக்கியத்துடன் இணைந்துக் கொள்கின்றது. இதன் மூலம் அனைத்து வேத வாக்கியங்களும் பயனுள்ளதாகின்றது, பிரமாணத்தை அடைந்து விடுகிறது.
பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்கள்:
* உபநிஷத் கூறுகின்ற
நிர்குண பிரம்மன் என்றவொன்று கிடையாது
* ஆத்ம அக்ஞானம் என்பதே
கிடையாது.
* ஆத்மாவைப் பற்றி பேசுகின்ற
வாக்கியங்களனைத்தும் யாகம் செய்கின்ற எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது
பூஜையில் பூஜிக்கின்ற தேவதைகளை புகழ்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* உபநிஷத்
வாக்கியங்களையெல்லாம் கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை பாட்ட மதக்காரர்களின் கருத்துக்களாகும்
* பிராபகார மதத்தினர்
இரண்டு காண்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஞான காண்டம் உபாஸனையை போதிப்பதாக
எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ம போதக வாக்கியங்களுடன் ஞான போதக வாக்கியங்கள்
சேர்த்துக் கொள்ளப்படுகிறது. உபநிஷத் வாக்கியங்களை தியானத்தை உபதேசிக்கின்ற
வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். அஹம் பிரம்மாஸ்மி என்பது ஒருவகையான
தியானமாகும். அதனால் அடைகின்ற பலன் பிரம்மலோகத்தையோ, சொர்க்கலோத்தையோ அடைவதாகும்.
சங்கராச்சாரியார்
பதில்
பூ.பக்ஷி ஏற்கனவே
இருக்கின்ற ஒன்றைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் பயனற்றது.
பதில்1 சாதாரணமாக இது சரிதான். ஆனால் விசேஷமான இடத்தில்
இத்தகைய வாக்கியங்களும் பயனைக் கொடுக்கின்றது. ஏதோவொன்று அக்ஞானத்தினால்
தோன்றியுள்ள இடத்தில் இத்தகைய வாக்கியம் பயனைத் தரும். இது பாம்பு அல்ல என்ற சித்த
வாக்கியம் இதற்கு உதாரணம். அறியாமையினால் கயிற்றில் பார்க்கின்ற ஒருவனிடத்தில்
பாம்பு இல்லை என்ற வாக்கியமே பயனைக் கொடுத்துவிடுகிறது. மேலும் நீதான் பத்தாவது
மனிதன் என்ற வாக்கியமும் அந்த சூழ்நிலையில் பயனைத் தரும். எனவே சித்த போதக வாக்கியமும் பயனைத் தரும் என்பது
அவர்கள் கருத்தை நீக்கி விடுகிறது.
பதில்2 உபநிஷத்திலுள்ள வாக்கியங்கள் ஞானத்திற்கு நேரிடையான
பலனைக் கொடுக்கிறது. எடுத்துக் காட்டிற்கு சில வாக்கியங்கள் கீழே
கொடுக்கப்பட்டிருக்கிறது.
* யாரொருவன் பிரம்மத்தை
அறிகின்றானோ அவனுக்கு சோகமும், மோகமும்
கிடையாது.
* ஞானத்தினாலே மரணமற்ற பலனை
அடைகிறான்.
* ஆத்மாவை அறிபவன் சோகத்தை
கடந்துவிடுகிறான்
* தன்னை ஆத்மாவாக அறிந்து
கொண்டவன், யாருக்காக, எதற்காக தன் சரீரத்தை
வருத்திக் கொள்வான்.
பூ.பக்ஷி சப்த பிரமாணம்
பிரத்யக்ஷ விஷயம் அல்லது அனுவாதத்தைத் சொல்லும். இதன் மூலம் புதியதாக அறிவை அடைய முடியாது.
பதில் பல இடங்களில் உண்மைதான். இதிலும் விதிவிலக்கு
இருக்கிறது. கர்மகாண்டத்தில் சொர்க்கலோகத்தை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இது
சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அறியப்படும். வேறுபிரமாணத்தால் அறிய முடியாது.
அதேபோல பிரம்மத்தை உபநிஷத் சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அடைய முடியும் என்பது
தெளிவாகிறது.
பூ.பக்ஷி ஆத்ம ஞானமே
அனர்த்தம். ஆத்ம அக்ஞானமே சம்பவிக்காது. நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருப்பதால்
ஆத்ம விஷயத்தில் விசாரம் தேவையில்லை.
பதில் ஆத்மா சம்சாரியாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
ஆனால் பிரம்ம ஸ்வரூபம் என்பது எல்லோருக்கும் தெரியவில்லை. ஆகவே விசாரம்
தேவைப்படுகிறது.
பூ.பக்ஷி பிரமாணம் மூன்று
நிபந்தனைகளை உடையதாக இருக்க வேண்டும்.
பதில் பிரமாணத்திற்கு பிரயோஜனம் என்ற நிபந்தனை
கிடையாது. நாம் வாழ்க்கையில் எத்தனையோ பயனற்றதை பார்க்கிறோம். எனவே மூன்றாவது
நிபந்தனை தேவையில்லை. இருந்தாலும் வேதாந்த வாக்கியங்களும் பிரயோஜனத்துடன்
கூடியதுதான்.
பூ.பக்ஷி எந்த வாக்கியம்
கர்மத்தை போதிக்கவில்லையோ அந்த வாக்கியத்தை கர்மத்தை போதிக்கின்ற வாக்கியத்தோடு
சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள்
என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற
வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது. எனவே உபநிஷத்
வாக்கியங்களை கர்ம வாக்கியங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பதில் உபநிஷத்துக்கள் இயற்கையாகவே பிரமாணம் என்ற
தகுதியுடன் இருக்கிறது. பிரமாணத்தினுடைய லட்சணங்கள் உபநிஷத்திற்கு பொருந்துகிறது.
அது ஸ்வ பிரமாணமாகவே இருக்கிறது. உபநிஷத்துக்கள் பலனைக் கொடுக்கக்கூடியது.
உதாரணமாக குந்திதேவி கர்ணனிடம் நான்தான் உன் தாய் என்று சொல்கின்ற வாக்கியம் சித்தபோதக வாக்கியம்தான், இருந்தாலும் அது
கர்ணனுக்கு பலனைக் கொடுத்திருக்கிறது. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியமும்
பிரயோஜனத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
உபநிஷத் கர்மத்தை நிந்தனை
செய்திருப்பதால், கர்மத்தை உபதேசிப்பது
முழு வேதத்தின் தாத்பர்யம் அல்ல என்று தெரிகிறது. மேலும் நிந்தனை செய்யப்பட்டதுடன்
எப்படி சேர்க்க முடியும். ஆத்ம ஞானத்திற்கும், கர்மத்திற்கும் இருளும்-ஒளியும் போல் விரோதம் இருப்பதால்
இரண்டையும் சேர்க்கமுடியாது. இவையிரண்டும் இருளும், ஒளியும் போல எதிரெதிர் தன்மையுடையதாக இருக்கின்றது. கர்மம்
நடக்கின்ற இடத்தில் கர்த்தா, போக்தாவாகத்தான்
இருக்க முடியும். ஆனால் பிரம்மஞான விஷயத்தில் அகர்த்தா, அபோக்தாவாக இருப்பதால்
இரண்டையும் சேர்க்க முடியாது.
கர்மத்தோடு உபநிஷத் வாக்கியங்களை
சேர்த்தால் அதில் தோஷம் வந்துவிடும். அந்த
தோஷத்திற்கு 'ஸ்ருதஹான அஸ்ருதகல்பனா” என்று பெயர்.
ஸ்ருதஹானம் - கேட்டதை விட்டுவிட்டு
அஸ்ருதகல்பனா - கேட்காததை எடுத்துக் கொள்ளுதல்.
உபநிஷத் பிரம்மன்
ஆத்மஸ்வரூபமாக இருக்கிறது என்றும் அதை அறிவதனால் பலனுண்டு என்ற உபதேசத்தை
விட்டுவிட்டு கர்ம வாக்கியத்தோடு சேர்த்துவிட்டால் இந்த தோஷம் வந்துவிடும். இந்த
தோஷம் நல்லதைக் கொடுக்காது. இந்த தோஷத்தை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
சான்றோர்கள் வாக்கியங்களில்தான் இதை பயன்படுத்த வேண்டும். இதற்கு எதிரானது
வாச்யார்த்தம், லட்சியார்த்தம். இதை
இவர்கள் விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.
பூ.பக்ஷி கர்மகாண்டம்
பிரயோஜனமற்றதா! இது சொர்க்கம் முதலிய பலன்களைக் கொடுப்பதற்கு பிரமாணமாக
இருக்கிறது.
பதில் அக்ஞானிகளுக்கு பிரயோஜனமாக இருக்கலாம். ஆனால்
முமுக்ஷுக்களுக்கும்,
ஞானிகளுக்கும்
பிரயோஜனமில்லை.
பூ.பக்ஷி ஞானிகளுக்கும்
பிரயோஜனமில்லையா?
பதில் ஞானிகளுக்கு ஞானகாண்டமும் பிரயோஜனமில்லை.
பூ.பக்ஷி ஒன்றை
சேர்ப்பதன் மூலமாக அல்லது விடுவதன் மூலமாகத்தான் பலனை அடைகிறோம். மனிதனின்
வாழ்க்கையே ஹேயம்(விட்டுவிடுதல்), உபாதேயம்(எடுத்துக் கொள்ளுதல்) வழியேதான் சென்று கொண்டிருக்கிறது.
கர்மகாண்டம் இதை நடைமுறைப்படுத்தத்தான் வழிமுறைகளை காட்டிக் கொடுக்கிறது. இதன் மூலம்
கர்மகாண்டம் ஹேயம்-உபாதேயமாக இருந்துக் கொண்டு நமக்கு உதவி செய்கிறது. ஆனால்
பிரம்மன் இவையிரண்டையும் செய்வதில்லை. இதனால் பிரம்மத்தினால் ஒருபலனும் கிடையாது.
எனவே பிரம்மனிடத்தில் உதாசீனனாகத்தான் இருக்க முடியும். பிரம்மத்தை தெரிந்து கொள்ள
வேண்டும், அடைவதற்கு
தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏன் கஷ்டப்படுத்துகிறாய்?
பதில் உன்னால் கூறப்பட்ட தோஷம் பிரம்மத்திற்கு
அலங்காரம்தான். பிரம்மன் ஹேய-உபாதேஹ ரஹிதம் என்று நீ கொடுத்த லட்சணம், பிரம்மத்திற்கு
அலங்காரமாகத்தான் இருக்கிறது. கர்மத்திற்கு நீ கொடுத்த ஹேய-உபாதேய லட்சணம்தான்
சம்சாரம். எதுவரை நம் மனதில் இதை நீக்க வேண்டும், இதை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றதோ
அதுவரை நாம் சம்சாரியாக இருப்போம்.
மோட்சம் என்பது என்னால்
நீக்கப்படவேண்டியது எதுவும் இல்லை, அடையப்பட வேண்டியது
எதுவும் இல்லை, ஏற்றுக் கொள்ள
வேண்டியதும் எதுவும் இல்லை என்ற எண்ணமே மனதில் இல்லாத நிலையாகும். எதனிடத்தில்
எதையும் சேர்க்க முடியாதோ, எதையும்
நீக்கமுடியாதோ அதுவே பிரம்மன். இப்படிபட்டவன் நான் என்ற அறிவை அடைவதே மோட்சமாகும்.
9வது வர்ணகம் (விருத்திக்கார மத நிராகரணம்)
விருத்திக்கார
மதத்தின் ஒரு பிரிவினர் ஞான-கர்ம சமுச்சயம் மூலம்தான் பலனை அடையலாம் என்று கூறுகின்றனர்.
இதற்கு சங்கரர் பலவிடங்களில் சரியான பதில் கொடுத்து நிராகரணம் செய்திருக்கிறார்.
பூ.பக்ஷி பிரம்ம
உபாசனையின் மூலம் மோட்சத்தை அடையலாம். பிரம்மத்தை தியானம் செய்வதன் மூலமும்
அடைந்து விடலாம்.
* இவர்கள் நிர்குண
பிரம்மத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
* சாஸ்திரத்தின்
மூலமாகத்தான் பிரம்மத்தை அடைய முடியும் என்பதையும்
ஏற்றுக்கொள்கிறார்கள்.
* வேதாந்தத்தின் அனைத்து
கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
* ஆனால் ஞானத்தினால்
மட்டும் மோட்சத்தை அடைந்திட முடியாது. பிரம்ம
ஞானத்தை அடைந்தபிறகு அதை
தியானிப்பதிலேயே மோட்சம் கிடைக்கும் என்று
சொல்கிறார்கள்.
* உபநிஷத் மோட்சத்தை அடைய
உதவும் சாதனம் என்பதையும், பிரம்மன்தான்
அதனுடைய தாத்பர்யம் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.
* உபநிஷத் தியானம், உபாசனம் ஆகியவைகள்
உபதேசித்திருக்கிறது. ஞானத்தை
அடைந்த பிறகு தியானம் என்ற கர்மத்தை செய்து மோட்சம்
அடையப்படும்.
* எந்தவொரு சப்தமும் செய்
அல்லது செய்யாதே என்ற ஏதாவது ஒன்றைதான்
செயல்படுத்தும்.
* பிரம்மன் இருக்கிறது
என்று சொல்வதை கேட்டு அதை தியானித்தல் என்ற
செயலோடு இணைத்திட வேண்டும்.
* ஸ்ருதி வாக்கியம்: 'ஆத்மா இத்யேவ உபாஸீத:” - ஆத்மா என்றவொன்றை
தியானிக்க
வேண்டும் என்று சொல்கிறது. மேலும பலவிடங்களில் வேத3 என்ற சொல்லுக்கு
தியானித்தல் என்ற பொருள்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
* பிரம்மத்தை
அறிந்தவர்களும் சம்சாரிகளாக இருக்கிறார்கள். அறியாதவர்களும்
சம்சாரிகளாக
இருக்கிறார்கள். அதனால்தான் அறிவை அடைந்ததும் தியானம்
செய்ய வேண்டும் என்று
சொல்கிறோம்.
* இதற்கு உபநிஷத் பிரமாணம்
சிரவணத்திற்கு மனனம்,
நிதித்யாசனம்
ஆகிய
கர்மங்களை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறது.
* ஆகவே வேதாந்தமும்
பிரம்மத்தை தியானிக்க வேண்டும் என்ற கர்மத்தை
போதிப்பதால் முழு வேதாந்தமே கர்ம
சாதனம்தான் என்ற தெரிகிறது. பிரம்மத்தை
தியானித்து இறுதியில் மோட்சம்
அடையப்படுகிறது.
பதில் வேதாந்தம் எந்த கர்மத்தையும் போதிக்கவில்லை.
வேதாந்த வாக்கியத்திற்கு நேரிடையாக பலனை கொடுக்கும் சக்தியிருக்கிறது.
வேதாந்தத்தின் மூலமாக அடைகின்ற ஞானம் நான் எதையும் செய்வதில்லை என்பதாகும்.
ஞானத்தை அடைந்தவன் எந்த கர்மத்தையும் செய்ய மாட்டான். எந்தவித விதியும் இவனைக்
கட்டுப்படுத்தாது, செயலில் ஈடுபட வைக்க
முடியாது.
கர்மத்தின் ஸ்வரூபம்: இது உற்பத்தியாகின்ற இடங்கள் உடல், மனம், வாக்கு ஆகியவைகளாகும்.
இவைகளை பிரதானமாக கொண்டு செய்கின்ற செயல்கள், திட்டமிட்டு உருவாகுகின்றதுதான். இதைத்தான் கர்மம் என்றழைககப்படுகிறது. இந்த மூன்று
இடத்திலிருந்து உருவாகின்ற செயல்கள் விதியினால்தான் செயலுக்கு வருகின்றது. ஏதொவொரு
தூண்டுதலால்தான் கர்மங்கள் செயல்படுகின்றது. உற்பத்திக்கான காரணம் செய் என்கின்ற
உத்தரவுதான். உத்தரவு வந்தாலும் அது தன்னை பார்த்துதான் சொன்னது என்று
நினைத்தால்தான் செயலும் உருவாகும். ஞானியை நோக்கி உத்தரவு வரும்போது அவர் ஏற்றுக்
கொள்ளவில்லை என்றால் அநத உத்தரவு செயல்படாது.
ஜெய்மினி
சூத்திரம்
அதத த4ர்ம ஜிக்ஞாஸா
அத - வேதத்தை அத்யயனம் செய்தபிறகு
அத - அது பலனைக் கொடுக்கின்றததனால்
த4ர்ம ஜிக்ஞாஸா - தர்மத்தை-அதர்மத்தை நிர்ணயம் செய்ய கர்மகாண்ட விசாரம் செய்ய வேண்டும்.
அதத த4ர்ம ஜிக்ஞாஸா
அத - வேதத்தை அத்யயனம் செய்தபிறகு
அத - அது பலனைக் கொடுக்கின்றததனால்
த4ர்ம ஜிக்ஞாஸா - தர்மத்தை-அதர்மத்தை நிர்ணயம் செய்ய கர்மகாண்ட விசாரம் செய்ய வேண்டும்.
* கர்மத்தினால் அடைகின்ற பலன் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். மோட்சம் என்பது
குறிப்பிட்ட பலனல்ல.
* கர்மபலனில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மோட்ச பலனில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.
* மோட்சம் தர்ம-அதர்மத்திற்கு அப்பாற்பட்டது.
* கர்மத்தை செய்வதற்கு, அனுபவிப்பதற்கு உடல், புலன்கள் தேவைப்படுகிறது. மோட்சம்
என்பது சரீரமற்றது.
* மோட்சம் கர்மபலன்களை நாசம் செய்து விடுகிறது.
* கர்மபலன்கள் நான்கு வகைகளாக இருக்கிறது. அவைகள், ஓரிடத்தை அடைதல், புதிதாக
உருவாகுதல், மாற்றியமைத்தல், தூய்மைப்படுத்துதல் ஆகியவைகளாகும்.
மோட்சத்தினால் இந்த நான்கு வகையான பலன்களையும் அடைவதில்லை.
* ஞானத்திற்கு பிறகு பிரம்ம உபாசனை செய்யமுடியாது. ஞானம் வந்தவுடன் இனி நான்
எந்த கர்மமும் செய்யத் தேவையில்லை என்ற நிலையை அடையும்போது தியானம் என்ற
செயல் நடக்கவே நடக்காது. எனவே மோட்சத்தை கர்மபலனாக கூறுவது தவறு என்று
நிலைநாட்டப்படுகிறது.
பூ.பக்ஷி ஞானம் நேரிடையாக
பலனைக் கொடுக்காது.
பதில் மூலக்காரணம் அக்ஞானமாக இருந்தால் அந்த இடத்தில்
ஞானம்தான் நேரிடையான பலனைக் கொடுக்கும்.
பூ.பக்ஷி செயலில்
ஈடுபடுத்தாத வாக்கியத்தினால் என்ன பயன்?
பதில் நிஷேத வாக்கியங்கள் நம்மை செயல் செய்ய
தூண்டுவதில்லை. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற சொல்லும் செயல் செய்ய தூண்டாது.
ஆனால் பலனைக் கொடுக்கும்.
பூ.பக்ஷி வேதாந்தம் கேட்ட
பிறகும் சம்சாரிகளாக இருப்பதால் சிரவணத்திற்கு பிறகு தியானம் என்ற கர்மம் செய்ய
வேண்டும்.
பதில் பிரம்மத்தை புரிந்து கொண்டவனுக்கு சம்சாரம்
இல்லை. பிரம்மத்தைப் பற்றி கேட்டவனுக்கு சம்சாரம் இருக்கும். சாதன சதுஷ்டய
சம்பத்தியை உடையவர்களுக்கு பிரம்மம் புரிந்திருக்கும்.
பூ.பக்ஷி சிரவணத்திற்கு
பிறகு மனனம், நிதித்யாசனம் என்ற
கர்மத்தை செய்ய வேண்டும் என்று கர்மத்தை செய்ய சொல்கிறது.
பதில் சிரவணம் ஞானத்தை அடைவதற்கு கூறப்பட்டிருக்கிறது
என்றும் மனனம், நிதித்யாசனம் மோட்சத்தை
அடைவதற்குத்தான் என்று புரிந்து கொண்டிருக்கிறாய். ஞானத்தை அடைவதற்கான தடைகளை
நீக்குவதற்குத்தான் மனனம், நிதித்யாசனம்
ஆகியவைகள் உபதேசிக்கப்பட்டுள்ளது.
பூ.பக்ஷி ஞானமும் ஒரு கர்மம்தானே? ஞானம் மானசீகமான
கர்மமாகும்.
பதில் ஞானம் வேறு, கர்மம் வேறு. கர்மம் புருஷ தந்திரம், ஞானம் வஸ்து தந்திரம்.
* கர்மத்தை செய்யப் போகும்
போது அதை செய்யலாமா, வேண்டாமா என்ற
தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. ஞானத்தில் இந்தமாதிரி வாய்ப்பு கிடையாது. அறிவு
என்பது ஒன்று எப்படியிருக்கின்றதோ அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.
* கர்மம் உத்தரவிலிருந்து
உருவாகின்றது. ஞானம் பிரமாணத்தை பயன்படுத்தி அடைவதாகும்.
இதிலிருந்து கர்மம் வேறு, ஞானம் வேறு என்று புரிந்து
கொள்வாயாக.
பூ.பக்ஷி ஆத்மாதான் (கௌன ஆத்மா) நான் என்று தெரிந்தே
இந்த உடலை நான் என்று எல்லோரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு ஞானத்தை
அடைய வேண்டும்.
பதில் எப்போது நன்கு தெரிகின்ற விஷயத்தில் தெரிந்தே
ஒன்றை வேறொன்றாக சொல்ல முடியும். வேற்றுமை தெரியாமல் மாறிக் கூறினால் அது
மித்யா ஆத்மாவாகும். ஆத்ம-அனாத்மா விஷயத்தில் வேற்றுமை தெரியாமல் இருப்பதால்
கௌனாத்மா என்று சொல்ல முடியாது. மூன்று
சரீரங்களை நான் என்ற சொல்லும் போது அது மித்யாத்மாவை குறிக்கிறது. கௌனாத்மா
சம்சாரத்தைக் கொடுக்கக்கூடாது. உடல், மனம், புலன்கள் நான்
சொல்லும் போது அவைகள் மித்யாத்மாவையே குறிக்கிறது. நான் என்ற சொல்லினுடைய உண்மையான
ஆத்மா பிரம்மமாகும்.
நான் என்ற சொல்லுக்கு ஞானி இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்துவான். உலக விவகாரத்தில் ஈடுபடும்போது கௌனாத்மா என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவான். தியானத்தின் போது முக்கிய ஆத்மாவான பரமாத்மா என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவான்
இத்துடன் பிரம்மசூத்திரம் முடிவடைந்தது.
----ooo00ooo----
No comments:
Post a Comment