ஆச்சாரக் கோவை -
பதினெண் கீழ்க்கணக்கு
ஆசாரக்கோவை என்பதற்கு 'நல்லொழுக்கங்களின் தொகுப்பு என்று பொருள் கூறலாம். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். ஆசார வித்து (பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. 1
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. 1
தனக்கு பிறர் செய்த உதவியை நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுதல், பொறுமை, இனிய சொற்களைப் பேசுதல், பிற உயிர்க்கு தீங்கு செய்யாமை, உயர்கல்வி, உலகநடைமுறையின்படி வாழ்தல், நல்லறிவுடன் இருத்தல், நன்மக்களோடு பழகுதல் ஆகிய எட்டு பண்புகளும் நல்லொழுக்கத்தை அடைவதற்கான உபாயமாக நல்லோர்களால் சொல்லப்படுகிறது.
ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் (இன்னிசை வெண்பா)
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 2
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 2
நற்குடியில் பிறத்தல், நீண்ட ஆயுள், நற்செல்வம், மனமும்,
உடலும் அழகுடன் இருத்தல், தனக்கென உரிமையுள்ள நிலத்தை உடையவனாக இருத்தல், எல்லோரும்
ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசும் சக்தியுடையவனாகவும், நற்கல்வி பெற்றல், நோயற்ற
வாழ்வுடன் இருத்தல், ஆகிய எட்டுவகையான செல்வங்களை என்றென்றும் நல்லொழுக்கத்துடன்
இருப்பவர்கள் அடைகின்றார்கள்.
தக்கிணை முதலியவை மேற்கொள்ளல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால்
ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா
கெடும். 3தானம், தட்சணை கொடுத்தல், யாகம்
செய்தல், தியானம், தவம் செய்தல், கல்வி கற்றல் என்ற இந்த நான்கினையும்
முறையுடனும், மனவொருமுகப்பாட்டோடும் செய்ய வேண்டும். முறைதவறியும், அலைபாய்கின்ற
மனதுடனும் செய்வதனால் இவைகளை செய்வதனால் எந்தப் பயனும் கிடைக்காது..
முந்தையோர்
கண்ட நெறி (இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4
விடியற்காலையில் விழித்தெழுந்து
பின் அன்றைக்கு அறவழியில் செய்ய வேண்டிய செயல்களையும், செய்ய வேண்டிய நன்மை
பயக்கும் கடமைகளயும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு பெற்ற தாய்,
தந்தையரை வணங்கி முடிவு செய்த செயல்களை செய்யத் தொடங்க வேண்டும். இதுவே கற்றறிந்த
சான்றோர்கள் வகுத்த கொடுத்த முறையாகும்
எச்சிலுடன் காணக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து.
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து.
புலையும் திங்களும் நாயிறும் நாயும் அழகிய வீழ்மீனோடு சொல்லப்பட்ட ஐந்தினையும்
எச்சிலை யுடையார் விரைந்து தெளிய நாளும் கண்ணால் நோக்கார் நன்கறிவார்.
கருத்துரை: நன்கறிவார் புலை முதலிய
ஐந்தையும் கண்ணாற் காணார்.
எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு.
எச்சில்கள் பல உள. அவற்றுள் மல மூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடு கூட
இணைவிழைச்சும் வாயினால் வழங்கிய விழைச்சும் ஆகிய இவ்வெச்சில் நான்கினையும்
பாதுகாக்க.
கருத்துரை: பலவகை எச்சில்களில் மலசலங்
கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க.
எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே, - எஞ் ஞான்றும்மேதைகள் ஆகுறுவார்.
கூறப்பட்ட இந்நான்கு எச்சிலையும்மிகக் கடைப்பிடித்து ஒன்றனையும் ஓதார்,வாயாலொன்றைச் சொல்லார், கண் துயிலார் எஞ்ஞான்றும்மதியுடையவராக வேண்டுவோர்.
கருத்துரை: நால்வகை எச்சிலு முண்டானவிடத்து ஒன்றும் படித்தலாகாது, வாயா லொன்றையுஞ் சொல்லலாகாது,தூங்கலாகாது.
காலையில் கடவுளை வணங்குக!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.சிறு காலையின்கண் ஒரு கோலாலே பற்றுடைத்துக்கண்கழுவித் தான் வணங்குந்
தெய்வத்தைத் தானறியும்நெறியால் தொழுக. மாலைப்பொழுதின்கண் தான் வணங்குந்தெய்வத்தை
நின்று தொழுதல் குற்றமாம்; இருந்து தொழுக.
கருத்துரை: விடியற்காலத்தில் பல்
துடைத்துச் சுத்தஞ்செய்து கடவுளை வழிபட்டுப் பின் ஒரு கருமஞ்செய்க.மாலைக்
காலத்தில் வீற்றிருந்தே கடவுளை வழிபடுக.
நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்
தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மையுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும்,மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேறஉறங்கிய விடத்தும், இணைவிழைச்சு உண்டாயின
விடத்தும்,கீழ்மக்கள் உடம்பு
தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள்
கான்றவிடத்தும் என இப்பத்திடத்தும்ஐயுறாதே நீராடுக.
கருத்துரை: கடவுள் வழிபாடு
முதலியபத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.
நீராட வேண்டிய சமயங்கள் (பஃறொடை வெண்பா)
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல்,ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயறாது, ஆடுக, நீர்.
தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மையுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும், மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேற உறங்கியவிடத்தும், இணைவிழைச்சு உண்டாயினவிடத்தும், கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள் கான்றவிடத்தும், என்கின்ற இந்த பத்திடத்தும் ஐயறாதே நீராடுக.
வழிபாடு முதலிய பத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.
----ooo000ooo----
No comments:
Post a Comment