Saturday, December 27, 2014

கடோ உபநிஷத் - பாகம்-2

இரண்டாவது அத்தியாயம்முதல் வல்லி
முகவுரை:-
இந்த அத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதுஅவைகள்
1. ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்,
2. அதை அடைய சில சாதனங்கள்,
3. ஆத்ம ஞானத்தினால் அடையும் பலன்கள்.
ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பற்றி புதிய முறையில் விளக்கப்படுகின்றதுஅவஸ்தாத்ரயம் (சரீராத்ரயம் ) விசாரமும் செய்யப்படுகின்றதுஆத்ம பலனை வெவ்வேறு வகையாக கூறப்பட்டுள்ளது.
 
ஸ்லோகம்-01
பராஞ்சி கா2னி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்த்ஸ்மத்பராங் பஶ்யதி நாந்தராத்மன |
கஶ்சித்3தீ4ர: ப்ரத்யகா3த்மானமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ன: ||
நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றதுபகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்இந்திரியங்களை பயன்படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாதுஅவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாதுஇவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றதுயாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான்இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன் மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன், மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..
 
ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.
1. ஆப்னோதி இதி ஆத்மாஎது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
2. ஆத4த்தேஎது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
3. அத்3திஎது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
4. அத்தேமூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா
 
ஸ்லோகம்-02
பராச: காமனனுயந்தி பா3லாஸ்தே ம்ருத்யோர்யந்தி வித்தஸ்ய பாஶாம் |
அத2 தீ4ரா அம்ருதத்வம் விதி3த்வா த்4ருவமுத்4ருவேஷ்விஹ ந ப்ரார்த2யந்தே ||
குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள், வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள்அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள், சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள்  இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்வயதாக ஆக இந்திரியங்களின் சக்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும் எனவே மனதுயரத்தை அடைவார்கள்ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற, கால ஸ்வரூபியாக இருக்கின்ற நிலையான மனநிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.
 
ஸ்லோகம்-03
யேன ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ன்ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2னான் |
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிஶிஷ்யதே ஏஜத்3வை தத் ||
த்ருக் த்ருஷ்ய விவேகம்பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றதுஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றதுஎந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றதுஅதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது
 
எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ, இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றதுபிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லைஇதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றதுஇப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம்இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
 
த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்லஇந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.  (-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது, அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றதுஇந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும், அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்லநம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம். நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன்எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள் வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றதுதோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது. புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றதுஇதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது
 
இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றதுஇந்த உடலை நான் அனுபவிக்கின்றேன், இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன்பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும். நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றதுஎனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்
 
அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வதுஇந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம். வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்கக்கூடாது ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம், ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம்ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றதுநாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்அதேபோல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.
 
ஸ்லோகம்-04
ஸ்வப்னாந்தம் ஜாக3ரிதாந்தம் சோபௌ4 யேனானுபஶ்யதி |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றதுநாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம். அவைகள்
1.   விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
2.   கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
3.   ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.
 
ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றதுஇவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாதுகனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்புநிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது, அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்புநிலையில் பயன்படாதுஇதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்புநிலை பிரபஞ்சமும், கனவுநிலை பிரபஞ்சமும்தான், தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது
 
நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.
 
கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள் இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும், பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.
 
ஸ்லோகம்-05
ய இமம் மத்4வத3ம் வேத3 ஆத்மானம் ஜீவமந்திகாத் |
ஈஶானம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத் ||
இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றதுஇரண்டு தத்துவங்களின் சேர்க்கைதான் ஈஸ்வரன் என்று அறிந்துள்ளோம்களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாவற்றிலும் களிமண் என்ற ஒன்றே இருப்பது போல ஈஸ்வரன் என்ற விஷயத்தில் ஸத்யமான ( என்றும் இருப்பது ) பிரம்மம் என்ற ஒன்றுதான் மித்யாவாக தோன்றி கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கின்றதுநாம ரூபங்களாக இருக்கும் இந்த பிரபஞ்சமே மித்யா, பொய்யான தோற்றம் என்று கூறப்படுகின்றதுவெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சமே மாயா என்றும், அதுவே காரண பிரபஞ்சம் என்றும் அழைக்கபடுகின்றதுஇந்த பிரம்மமானது காரண பிரபஞ்சத்தோடு சேரும்போது அது ஈஸ்வரன் என்று கூறப்படுகின்றதுஅதேபோன்று ஜீவனிடம் என்றும் இருப்பது ஆத்மாதான், அதுவே காரண சரீரத்தோடு சேர்ந்திருப்பதால் ஜீவன் என்று அழைக்கப்படுகின்றது.
 
பிரம்மம் + காரண பிரபஞ்சம் = ஈஸ்வரன்.
ஆத்மா   + காரண பிரபஞ்சம் = ஜீவன்
பொய்யான காரண பிரபஞ்சமும்காரண சரீரமும் நீக்கினால் பிரம்மமும், ஆத்மாவும் ஒன்றாகி விடுகின்றது.
 
ஸத்      – மூன்று காலத்திலும் இருப்பது
சித்       – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம்பூரணமாக இருப்பது
இதுதான் பிரம்மத்தின் லக்ஷணம், இது அநாதி, அதேப்போன்று மாயாவும் அநாதி. இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றதுமூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.
1.       மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர். மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
2.      மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றதுசூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியதுஇதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றதுஇப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
3.      சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியதுசூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.
 
இதேபோன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்
1.      ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றதுகாரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர். இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்ஆழ்ந்த உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
2.      காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறதுஇந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
3.     ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.
 
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று  பெயர்ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.
 
·         சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
·         சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
·         சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.
 
மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ).  இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.
.
ந விஜுகுப்ஸதேபலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும்?  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது, எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காதுஅழியாத பொருட்களை காப்பாற்றத் தேவையில்லைஇந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன், அதை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன், அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன், நான் அழியாதவன் அதனால் என்னைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்கயவனாக இருந்து கொண்டிருப்பேன்ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாதுஇந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிடத்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லைநானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.
 
ஸ்லோகம்-06
ய: பூர்வம் தபஸோ ஜாத்மத்3ப4ய: பூர்வமஜாயத |
கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்தந்தம் யோ பூ4தேபி4ர்வ்யபஶ்யத ஏதத்3வை ||
அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்குஇந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது
 
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் இவைகளின் ஒன்றுசேர்ந்த தொகுப்பையே சூட்சும சரீரம் என்று அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்
 
ஸ்லோகம்-07
யா ப்ரணேன ஸம்ப4வத்யதி3திர்தே3வதாமயீ |
கு3ஹாம் ப்ரவிஶ்ய தி2ஷ்டந்தீம் யா பூ4தேபி4ர்வ்யஜாயத ஏதத்3வை ||
யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றதுஇவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.
 
ஸ்லோகம்-08
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா3 க3ர்ப4 இவ ஸுப்4ருதோ க3ர்பி4ணீபி4: |
தே3வே தி3வ ஈட3யோ ஜாக்3ருவத்3பி4ர்ஹவிஷ்மத்3பி4ர்மனுஷ்யேபி4ரக்3னி: ஏதத்3வை ||
அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது. அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது. அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.
 
ஸ்லோகம்-09
யதஶ்சேதே3தி ஸூயோÅஸ்தம் யத்ர ச க3ச்ச2தி |
தம் தே3வா: ஸர்வேர்பிதாஸ்தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை தத் ||
இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்) சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ  எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லைஅந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்மம் என்று தெரிந்து கொள்
 
ஸ்லோகம்-10
யதேவேஹ தத3முத்ர யத3முத்ர தத3ன்விஹ |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமப்னோதி ய இஹ நானேவபஶ்யதி ||
இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது. எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.
 
எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்தது போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது. சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான். நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது. ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றதுஅலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும். அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.
 
மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சார சுழலிலேயே இருக்கின்றான், பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.
 
ஸ்லோகம்-11
மனஸைவேத3மாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யும் க3ச்ச2தி ய இஹ நானேவ பஶ்யதி ||
இந்த உலகம் சத்யம் என்ற எண்ணத்தை நீக்கி பிரம்மம் ஒன்றுதான் சத்யம் என்று அறிந்திட வேண்டும்இதில் ஈஸ்வரனுக்கு இந்த உலகத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை நீக்குகின்றது.
 
நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாதுஇந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லைஉலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்லவும் தேவையில்லைஇல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று  சொல்வது போல இருக்கிறது.  தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது. பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். நான் மட்டும்தான் இருக்கின்றேன் என்ற உணர்வை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.
 
சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று கூறப்பட்டிருக்கின்றதுஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்படுகின்றதுஇந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.
 
சாதாரண அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை  முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாசம்) விருத்தியை வியாபிக்கும்போது நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.
 
ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல-வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும். உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும், பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும்அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும். ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும், வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றதுஅதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாசத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.
 
ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும், மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள். இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும்இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
 
ஸ்லோகம்-12
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ மத்4ய ஆத்மனி தி2ஷ்டதி |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத்3 ||
இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தைத்தான் கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடப்படுகிறதுஇதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றதுஇந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளதுஇப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.
 
இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றதுஇந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை, பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.
 
ஸ்லோகம்-13
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக: |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ஸ இவாத்3ய ஸ உ ஶ்வ: ஏதத்3வை தத்3 ||
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது. இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது. நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம், ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாதுஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது  எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றார், நாளையும் இருப்பார். என்றும் இருப்பதும், எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.
 
ஸ்லோகம்-13
யதோ2த3கம் து3ர்கே3 வ்ருஷ்டம் பர்வதேஷு விதா4வதி |
ஏவம் த4ர்மான்ப்ருத3க் பஶ்யம்ஸ்தானேவானுவிதா4வதி ||
இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றதுமழை மலை உச்சியில் பொழியும் போது நீரானது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.
 
ஸ்லோகம்-14
யதோ2த3கம் ஶுத்3தே4 ஶுத3த4மாஸிக்தம் தாத்3ருகே3வ ப4வதி |
ஏவம் முனேர்விஜானத ஆத்மா ப4வதி கௌ3தம ||

எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி இருக்கின்றதோ அதுபோல  இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்) ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.

 
இரண்டாவது அத்தியாயம்முதலாவது வல்லி முடிவுற்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது அத்தியாயம் 2வது வல்லி

ஸ்லோகம்-01
பரமேகாத3ஶத்3வாரமஜஸ்யாவக்ரசேதஸ: |
அனுஷ்டாயந ஶோசதி விமுக்தஶ்ச விமுச்யத தத்த்3வை தத் ||
இந்த உடலானது பதினொன்று வாயில்களை உடையதாக வருணிக்கப்படுகின்றதுநாபியும், தலையுச்சியில் இருக்கின்ற இரண்டு துவாரங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ள ஒன்பது துவாரங்களான இரண்டு கண்கள், இரண்டு மூக்கு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசன துவாரம், ஒரு மூத்திர துவாரம் ஆகியவைகள்சில துவாரங்கள் வழியே வெளி விஷயங்கள் உள்ளே தள்ளப்படுகின்றது, சில துவாரங்கள் வழியே விஷயங்கள் வெளியே தள்ளப்படுகின்றதுகோளகம் என்பது இந்திரியங்களின் இருப்பிடமாக கூறப்படுகின்றது. உறங்கும் போது அவைகள் இருதயத்திற்கு சென்று விடுகின்றதுஉடலுக்கு அரசனாக இருப்பது ஜீவாத்மா.
 
வேறுபாடுகளற்ற சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற பிறப்பு-இறப்புகளில்லாத இந்த உடல் ஆத்மாவினுடையது என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது இந்த ஞானத்தை நன்கு தியானம் செய்வதனால் அடையப்பெறும் ஞானநிஷ்டையினால் துயரங்கள் வருவதில்லைஇந்த நிலையே மோட்சம், இதை அடைவதினால் சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து ஜீவன் முக்தனாகின்றான்.  ( சம்சாரம் என்பது ராக, துவேஷ, மத, மாச்சர்ய போன்ற குணங்கள் சேர்ந்த நிலையேயாகும் ).  மீண்டும் அவன் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை, பிறப்பு-இறப்புகளில்லாத நிலையை அடைகின்றான்.
 
ஸ்லோகம்-02
ஹம்ஸ: ஶுசிஷத்3வஸுரந்தரிக்ஷஸத்3தோ4 விதி3ஷத3திதி2ர்து3ரோணஸத் |
ந்ருஷத்3வரஸத்3ருதஸத்3வ்யோமஸத3ப்3ஜா கோ3ஜா ரிதஜ ஆத்3ரிஜா ரிதம் ப்3ருஹத் ||
எல்லாவிடத்திலும், எல்லா சரீரங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது ஆத்மாஇதுவே சொர்க்கத்தில் சூரியனாகவும், சொர்க்கத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள ஆகாசத்தில் வாயுவாகவும், பூமியில் அக்னியாகவும் இருக்கின்றது. நம்முடைய வீட்டில் விருந்தினராக இருப்பது போல எல்லா மனிதர்களிடத்திலும், தேவர்களிடத்திலும் இருக்கின்றது..  யாகங்களிலும், ஸத்யத்திற்குள்ளும் இருக்கின்றதுஆகாசத்திலும், நீர்வாழ் பிராணிகளிடத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்திலும், விதவிதமான யாகங்களின் அங்கங்களிடத்திலும், மலைகளிலிருந்து உருவாகும் நதிகளிலும் இருக்கின்றதுமூன்று காலத்திலும் இருப்பது, மிகப்பெரியது, பூரணமானது இந்த ஆத்மா.
 
ஸ்லோகம்-03
ஊர்த்4வம் ப்ராணமுன்னயத்யபானம் ப்ரத்யக3ஸ்யதி |
மத்3யே வாமனமாஸீனம் விஶ்வேதே3வா உபாஸதே ||
ஆத்மா இருப்பதினால் இந்த உடல் செயல்படுகின்றதுஅது இல்லாவிட்டால் உடல் ஜடமாகத்தான் இருக்கும்.
அன்வய-வ்யதிரக நியாயம்: எது இருந்தால் மற்றொன்றும் இருக்குமோ, எது இல்லாமலிருந்தால் மற்றொன்றும் இல்லாமல் இருக்குமோ அதுவே அதற்குக் காரணம்.
உதாரணமாக களிமண் இருந்தால் பானை இருக்கின்றது. அது இல்லையென்றால் பானையும் இருக்காது எனவே களிமண் பானைக்கு காரணமாக இருக்கின்றதுஅதுபோல ஆத்மா இருப்பதால்தான் பிராணன், மனம் ஆகியவை செயல்படுகின்றது, அது இல்லையென்றால் இவைகள் செயல்படுவதில்லை, எனவே ஆத்மாதான் இந்த உடலுக்கு காரணம் என்ற கருத்து இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.
 
பிராணனை மேல்நோக்கி இழுக்கின்றது, மேல் நோக்கி செல்ல காரணாமாக இருக்கின்றது, அபானனை கீழ்நோக்கி தள்ளுகின்றது. இதயத்தை இருப்பிடமாக கொண்டிருக்கின்ற , இதயத்தில் வெளிப்படுகின்ற, வணங்கதக்கதாகவும் இருக்கின்ற ஆத்மாவை, எல்லா இந்திரியங்களும் வணங்குகின்றன. எல்லா இந்திரியங்களும் அந்தந்த விஷயங்களை கிரகித்து ஆத்மாவிடம் சமர்ப்பிக்கின்றது என்பதையே வணங்குதல் என்ற சொல்லின் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
ஸ்லோகம்-04
அஸ்ய விஸ்ரம்ஸமானஸ்ய ஶரீரஸ்த2ஸ்ய தேஹின: |
தே3ஹாத்3விமுச்யமானஸ்ய கிமத்ர பரிஶிஷ்யத ஏதத்3வை தத் ||
இந்த உடலில் உள்ள உயிரானது, உடலை விட்டுப் பிரிந்து விட்டால், வெளியேறிய பிறகு அங்கு என்ன எஞ்சியிருக்கின்றது, ஒன்றுமில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இதுவே அந்த பிரம்ம தத்துவம்.
 
ஸ்லோகம்-05
ந ப்ராணேன நாபானேன மர்த்யே ஜீவதி கஶ்சன |
இதரேண து ஜீவந்தி யஸ்மின்னேதாவுபாஶ்ரிதௌ ||
பிராணன் இருக்கும் வரைதான் இந்த உடல் செயல்படுகின்றது. எனவே அனவய-வ்யதிரேக நியாயப்படி பிராணன்தானே இந்த உடலுக்கு காரணம் என்ற சந்தேகத்திற்கு பதிலாக அமைகின்றது இந்த மந்திரம்.
 
மனிதர்கள் ஒருகாலும் பிராணனாலும் வாழ்வதில்லை, அபானனாலும் வாழ்வதில்லைஇவைகளுக்கும் வேறான ஒன்றினால்தான் வாழ்கின்றார்கள்ஆத்மாவை இந்த பிராணன்கள் சார்ந்திருக்கின்றது
 
விசாரம்:-
ஆத்மாவின் ஸத் ஸ்வரூபம் எல்லாவிடத்திலும் இருக்கின்றதுஅது இருக்குமிடம் ஜடமாகவும் இருக்கலாம், அறிவுள்ளதாகவும் இருக்கலாம்அதேபோல சித் ஸ்வரூபம் உயிரினங்களில் அறிவுபூர்வமாக இயங்குகிறதுமனதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் அவைகள் இயங்குவதற்கு உதவுகின்றதுஉடலிலிருந்து ஆத்மா வெளியேறுவது என்று குறிப்பிடுவது அதனுடைய பிரதிபிம்பமான சிதாபாஸத்தின் அழிவைத்தான்உயிரற்ற உடலிலும் ஆத்மா ஸத் ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டுதான் இருக்கும்.
 
ஸ்லோகம்-06
ஹந்த த இத3ம் ப்ரவக்ஷ்யாமி கு3ஹ்யம் ப்3ரஹ்ம ஸனாதனம் |
யதா2 ச மரனம் ப்ராப்ய ஆத்மா ப4வதி கௌ3தம ||
உனக்கு மிகவும் ரகசியமானதும், எப்பொழுதும் இருக்கின்ற இதைப்பற்றி மேலும் சொல்கிறேன்அறியாமையில் இருக்கின்ற ஒரு ஜீவன் மரணத்தை அடைந்தால் அவனிடத்தில் உள்ள ஆத்மா என்னவாகும் என்பதையும் உனக்கு நான் சொல்கிறேன்.

ஸ்லோகம்-07
யோனிமன்யே ப்ரபத்3யந்தே ஶரீரத்வாய தே3ஹின: |
ஸ்தா2ணுமன்யேÅனுஸம்யந்தி யதா2கர்ம யதா2ஶ்ரதம் ||
சில ஜீவாத்மாக்கள் வேறொரு மனித உடலை எடுப்பதற்கு கர்ப்பத்தை அடைகிறதுவேறு சில உயிர்கள் தாவரங்களாகவும், விலங்குகளாகவும் பிறப்பெடுக்கின்றன.  அவரவர்களுடைய வினைப்பயனுக்கேற்பவும், அவர்கள் செய்த உபாஸனைகளின் அடிப்படையிலும் அடுத்த ஜென்மத்தில் அதற்கேற்றாவாறு சரீரத்தை எடுக்கின்றான்கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள், முட்டையிலிருந்து பிறப்பவைகள், வியர்வையிலிருந்து பிறப்பவைகள், பூமியை பிளந்து வரும் உயிர்கள் இவைகளில் ஏதாவது ஒரு வகையில் மறுபிறப்பையடைகிறான்.
 
ஸ்லோகம்-08
ய ஏஷ ஸுப்தேஶு ஜாக3ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுர்யதே
தஸ்மின்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
ஆத்மா எந்தவிதமான அவஸ்தைகளுக்குள்ளும் வருவதில்லைமூன்று அவஸ்தைகளும் மனதை சார்ந்ததுஇது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றதுஇந்திரியங்கள் உறங்கும்போதும் கூட ஆத்மாவானது விதவிதமான விருப்பமான பொருட்களை உருவாக்கியபடி விழித்துக் கொண்டிருக்கின்றதுஅதுவேதான் தூய்மையான பிரம்மம்ஆனால் இந்த அவஸ்தைகளோடு சம்மந்தப்படாமலிருப்பதையே தூய்மையானது என்று குறிப்பிடப்படுகின்றதுஅதுவே மரணமற்றதாகவும், எல்லாகாலத்திலும் இருக்கின்றதாகவும் உள்ளதுஎல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றது. இதற்கு அப்பாற்பட்டு  வேறொன்றும் கிடையாது.
 
ஸ்லோகம்-09
அக்3னிர்யதௌ2கோ பு4வனம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபுதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எப்படி ஆத்மா பலவாக தெரிகின்றது என்ற கேள்வி எழும்போது விதவிதமான மண்பாண்டங்களுக்குள் தெரிகின்ற ஆகாசமும் அவைகளுக்கு வெளியேயுள்ள ஆகாசமும்  ஒன்றுதான் என்ற உதாரணத்துடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும். மண்பாண்டங்களின் கொள்ளளவு அவைகளுக்குள் உள்ள ஆகாசத்தின் அளவை பொறுத்து அமைகின்றதுஇப்போது ஆகாசமானது வெவ்வேறு அளவுடைய ஆகாசம் இருப்பது போல தோன்றுகிறதுஇந்த வேறுபாடு மண்பாண்டத்தினுடைய வேறுபாட்டால் தோன்றுகின்றதுஇங்கு இந்த மண்பாண்டத்தை உபாதி என்று கூறப்படுகின்றதுஇது ஆகாசத்தை பலவாக இருப்பது போல் தோற்றமளிக்க செய்கின்றதுஅதேபோல பலவாக இருக்கும் சரீரத்தின் இருக்கும் ஆத்மா பலவாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது.
 
இந்த மந்திரத்தில் இதை விளக்க அக்னியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார் எமதர்ம ராசாஅக்னியானது எந்த பொருளை வியாபிக்கின்றதோ அதன் வடிவமாகவே காட்சியளிப்பது போல் ஆத்மாவும் எந்த சரீரத்தை வியாபிக்கின்றதோ அதனிடத்தில் இருப்பதாக நினைக்க தோன்றுகின்றது
 
உபாதி:-      எந்தவொன்று தன்னுடைய தன்மையை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கின்றதோ அதற்கு உபாதி என்று பெயர்.
உபஹிதம்:-   எந்தவொன்று பொய்யாக வேறொன்றின் தன்மையை பிரதிபலித்து அல்லது ஏற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றதோ அதற்கு இந்த பெயர்.
 
இந்த மூன்று சரீரங்களும் உபாதி, ஆத்மா உபஹிதம்சரீரம் த்வைதமாக இருக்கின்றது, சரீரத்தில் உள்ள குணங்கள் பொய்யாக ஆத்மாவுக்கு சென்று விட்டதால்,  ஆத்மா பலவாக காட்சியளிக்கின்றதுஆனால் அது ஒன்றாகத்தான் இருக்கின்றதுஎவ்வாறு ஒன்றாக இருக்கும் அக்னியானது உலகத்திலுள்ள பொருட்களை வியாபிக்கும் போது அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அவ்வாறு ஒன்றாக இருக்கின்ற ஆத்மா, எல்லா ஜீவராசிகளுடைய மனதிலும், சரீரங்களிலும் வெளிப்படுகின்ற ஆத்மா அந்தந்த சரீரத்தில் நுழைந்து அநதந்த சரீரத்தினுடைய ரூபத்தை அடைகின்றதோ அதுவேதான் சரீரத்திற்கு  வெளியிலும் இருக்கின்றது.
 
ஸ்லோகம்-10
வாயுர்யதை2கோ பு4வாம் ப்ரவிஷ்டோ ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எவ்வாறு வாயுவானது உலகத்திலுள்ள பொருட்களில் நுழைந்து அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா எல்லா ஜீவராசிகளின் மனதில் நுழைந்து அதன் வடிவத்தை அடைகின்றது.
 
ஸ்லோகம்-11
ஸூர்யோ யதா2 ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ன லிப்யதே சாக்ஷுஷைர்பா3ஹ்யதோ3ஷை: |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ந லிப்யதே லோகது3:கே2ன பா3ஹ்ய: ||
சூரியன் அனைத்து உலகிற்கும் கண்களாக  இருந்து கொண்டும், நம்முடைய கண்களின் அதிஷ்டான தேவதையாக இருந்து கொண்டும் அருள் கொடுக்கின்றான்நம்முடைய கண்களில் இருக்கும் குறைகளால் சூரியன் பாதிக்கபடுவதில்லை. வெளியே உள்ள பொருட்களின் குறைகள் அதை பாதிப்பதில்லைஅதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா, எல்லா ஜீவராசிகளின் உடலில் நுழைந்திருந்தாலும், மனதிற்கு, உடலுக்கு வரும் துயரங்களினால் பாதிப்பதில்லைஇவைகளையெல்லாம் கடந்திருக்கின்றது ஆத்மாஇதிலிருந்து ஆத்மா வேறு, மனம் என்பது வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
 
ஸ்லோகம்-12
ஏகோ வர்ஶீ ஸர்வபூ4தாந்தராத்மா ஏகம் ரூபம் ப3ஹுதா4 ய: கரோதி |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஸுக2ம் ஶாஸ்வதம் நேதரேஷாம் ||
ஒன்றாக இருப்பதும், அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதுமான ஆத்மா எதையும் சார்ந்தில்லாதிருப்பதால் துயரங்களை அனுபவிப்பதில்லை. பரதந்திரம் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலைமை, இந்த நிலையில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்சுதந்திரம் என்பது எதையும் சார்ந்தில்லாதிருக்கும் நிலைமை இந்த நிலையில் எதனிடமிருந்தும் துன்பத்தை அனுபவிக்க நேரிடாதுஆத்மா சுதந்திரமாக இருப்பதால் துயரங்கள் எதுவும் அது அனுபவிக்காதுஎல்லா அனுபவத்திற்கும் காரணம் இருமைதான்ஆத்மா ஒன்றாக இருப்பதால் எந்த அனுபவமும் அதற்கு கிடையாது அதனால் துயரமும், சுகமும் வருவதில்லை.
 
உத்க்ருஷ்டத்வம் என்பது என்னைக் காட்டிலும் மற்றவர்களிடத்தில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கிறது என்று எண்ணி துயரப்படுவதை குறிக்கின்றதுஆத்மா எல்லாவிடத்திலும் சமமாக இருப்பதால் இந்தவிதத்தில் துயரங்கள் வருவதில்லை  இது ஒன்றாக இருந்து கொண்டு பலவிதமாக இருப்பதுபோல் தன்னை தோற்றுவித்து கொண்டிருக்கின்றது.
 
எந்தவொரு விவேகி ( சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ) பிரம்மத்தை தன்னிடத்தில் இருப்பதாக ( குரு-சாஸ்திரத்தின் துணைக்கொண்டு ) பார்க்கின்றானோ அவனுக்கு நிலையான சுகம் கிடைக்கின்றது, அவனைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலையான சுகம் கிடைக்காது.
 
அறியாமையில் அடையும் சுகம்-துக்கம் ஏதோ ஒன்றின் காரணத்தால்தான் வருகின்றதுஅந்த ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிறதுஎனவே இந்த சுக-துக்கம் மாறி மாறி வருகின்றதுஆனால் மாறாத ஆத்ம தத்துவத்தை உணர்வதால் அவன் எப்போதும் சுகமாக,  ஆனந்தமாக இருக்கின்றான்.
 
ஸ்லோகம்-13
நித்யோÅநித்யானாம் சேதனஶ்சேதனானாமேகோ ப3ஹுனாம் யோ வித3தா4தி காமான் |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஶாந்தி: ஶாஶ்வதீ நேதரேஷாம் ||
நிலையற்றவைகளில் நிலையானதாகவும், அறிவுக்கு அறிவாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற ஈஸ்வரன் (பிரம்மம்) எல்லோருக்கும் அவரவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், கர்ம பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்இப்படிபட்ட பிரம்மத்தை தானேயென்று எந்த விவேகிகள் உணர்கின்றார்களோ அவர்களுக்கு நிலையான மன அமைதி கிடைக்கின்றதுமற்றவர்களால் இதை அடைய முடியாது.
 
ஸ்லோகம்-14
ததே3ததி3தி மன்யந்தேÅநிர்தேஶ்யம் பரமம் ஸுக2ம் |
கத2ம் நு தத்3விஜானீயாம் கிமு பா4தி விபா4தி வா ||
அந்த பிரம்மம்தான் இந்த ஆத்மா என்று சொல்கிறார்கள்இது மேலான சுகமாக இருப்பது, நிலையான சுகமாக இருப்பது, இப்படிபட்ட தன்மையுடையது என்று வாக்கால் குறிப்பிட முடியாததாகவும், அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றது இந்த சுகம்நான் எவ்வாறு இதை தெரிந்து கொள்வதுஅது தானாகவே ஒளிர்கின்றதாதெளிவாக அறியக்கூடியதா அல்லது வேறொன்றால் ஒளிர வைக்கப்படுகின்றதாக இருக்கின்றதாசந்தேகமில்லாமல் அறியக்கூடியதாக இருக்கின்றதா?
 
ஸ்லோகம்-15
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம் நேமா வித்3யுதோ பா4ந்தி  கதோயமக்னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி ||
இதை சூரியனும் விளக்காது, ஒளிர்விக்காது, சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் ஒளிர்விக்க முடியாது. இதை மின்னலாலும் ஒளிர்விக்க முடியாது. இந்த அக்னியானது எவ்வாறு ஒளிர முடியும்ஒரு பொருள் இருக்கின்றது என்றால் அது அனுபவத்திற்கு வந்து இருக்க வேண்டும்அந்த ஆனந்தமயமான ஆத்மா சுயபிரகாசமாக மற்றவர்களால் அறியப்படுகின்றது. அதனுடைய பிரகாசத்தினால்தான் உலகிலுள்ள அனைத்தும் பிரகாசிக்கின்றன.
 
அறிவை அடைய உதவுகின்ற ஞானேந்திரியங்களால் ஆத்மாவை விளக்க முடியாதுஆனால் ஆத்மாவினால்தான் அனைத்தும் செயல்பட்டு அறிவை அடைய உதவுகின்றது.
 
விசாரம்:-  ( நாம் அடையும் சுகம் எப்படி அடையப்படுகின்றது ).
நாம் கண்ணால், காதால் அடையும் இன்பம், அதை அடைய உதவும் விஷயத்தை பொறுத்து இருக்கின்றது என்று பொதுவாக சொல்வோம்ஆனால் அந்தப்பொருட்கள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சுகத்தைக் கொடுக்காது. இதிலிருந்து பொருட்களிலிருந்து சுகத்தை நாம் அடைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம்பிறகு இந்த சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு சாஸ்திரம் ஆத்மாவிடமிருந்து வருகின்றது என்று விடையளிக்கிறதுநமது மனம் அமைதியுடன் இருக்கும்போது ஆத்மாவின் சுகம் அதில் பிரதிபலிக்கின்றது அதனால் சுகத்தை அடைகின்றோம்எல்லோரும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவே விரும்புகின்றார்கள்விரும்பியதை அடைந்ததும் அந்த ஆசையானது மறைந்து மேலும் பல ஆசைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.
 
இரண்டாவது அத்தியாயம் – 2வது வல்லி முடிவடைகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது அத்தியாயம் 
3வது வல்லி 

ஸ்லோகம்-01
ஊர்த்4வமூலோÅவாக்ஶாக2 ஏஷோÅஶ்சத்த2: ஸனாதன: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே |
தஸ்திம்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
இந்த மந்திரத்தில் பிரஹ்ம ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது. சம்சாரம் என்பது நாம் மனதில் அனுபவிக்கும் சுக-துக்கமேயாகும்ஈஸ்வரனை வேராக கொண்டுள்ளது இந்த சம்சாரம்  என்கின்ற மரம்இந்த மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி செல்கின்றனஇந்த அரசமரம் பிரபஞ்சத்தை குறிக்கின்றதுமரத்திற்கு வேர் ஆதாரமாக இருப்பது போல சம்சாரத்திற்கு, பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரன் ஆதாரமாக இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
மரத்திற்கும், சம்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:
1.      மரம் நிலையாக இருப்பதற்கு அதன் வேர்கள் காரணமாக இருக்கின்றது அதுபோல சம்சாரத்தின் வேராக இருப்பவர் ஈஸ்வரன்வேர்கள் மறைந்து இருப்பது போல அவரும் நம் இந்திரியங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்.
2.      மரத்தின் நடுப்பகுதியானது ஹிரண்யகர்ப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது. முதலில் தோன்றிய சூட்சும சரீரம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்.
3.      மரத்தில் உள்ள இலைகள் வேதத்தினுடைய கர்ம காண்டத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றதுமரம் நன்கு வளர்வதற்கு இலைகள் காரணமாக இருப்பது சம்சாரம்  நன்கு வளர்வதற்கு கர்ம காண்டம் உதவுகின்றதுஇதில் கர்ம பலன்களை அடைவதற்குரிய சாதனங்களைக் கூறி மனிதனை சம்சாரத்திலே வைத்திருக்கின்றது
4.      மரம் வளர்வதற்கு உதவும் நீரானது, ஆசைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றதுநம்மை சம்சாரத்தில் வைத்திருப்பதற்கு இந்த ஆசைகள்தான் காரணம்.
5.      மரத்தினால் அடையும் பலன்கள் நாம் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு உவமையாக கூறப்படுகின்றது
6.      மரத்திலுள்ள பழங்களை முதலில் அனுபவிப்பது பறவைகள், அதுபோல சம்சார பலனை அனுபவிப்பது ஜீவர்களான நாம்தான்.
7.      இந்த பறவைகள் அந்த மரத்திலே கூடுகட்டி வாழ்வது போல நாமும் இந்த உலகத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
8.      மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடிய பெரிய அரிவாளாக வைராக்கியம் கூறப்படுகின்றது. மரத்தை வெட்டுவதற்கு, முதலில் கிளைகளை வெட்டுவோம், பிறகு நடுமரத்தை வெட்டி கடைசியில் வேரோடு பிடுங்கி எறிவது போல நாமும் ஞானத்தால் சம்சார என்கின்ற மரத்தை வேரோடு நீக்க வேண்டும்.
 
நாளை இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்ற அரசமரம். நதிக்கரையில் அமர்ந்து நீரை பார்க்கும் போது உண்மையில் சென்று கொண்டிருக்கும் நீரானது அசைவற்று இருப்பது போல தோற்றமளிக்கும்அதுபோல மாறிக்கொண்டிருக்கும் சம்சாரத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் உபதேசிக்கப்படுகின்றதுஅவைகள்
1. வைராக்கியம்,
2. ஆத்ம ஞானம்
பிரம்மமானது தூய்மையானது, மாயையோடு சம்பந்தப்படாததுஏதாவது ஒரு சம்பந்தத்தால்தான் எதுவுமே அசுத்தமாகின்றது. மேலும் அது பூரணமானது, நிறைவானது, என்றும் மாறாமல் எப்பொழுதும் இருப்பது, மரணமற்றது, அழிவற்றது இவ்வாறு பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ரிஷிகளால், பிரம்மத்தை உணர்ந்தவர்களால் கூறப்படுகின்றது. கயிற்றின் மீது பொய்யாக தோற்றமளிக்கும் பாம்பு அந்த கயிற்றை சார்ந்திருக்கின்றதோ அதுபோல பிரம்மனிடத்தில் எல்லா உலகங்களும் சார்ந்து இருக்கின்றது.இதை தவிர்த்து வேறொன்றுமில்லை, இதுதான் நீ கேட்ட அந்த உண்மை தத்துவம்.
 
ஸ்லோகம்-02
யதி3தம் கிம் ச ஜக3த்யஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம் |
ஸஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம் ய ஏதத்3விது3ரம்ருதாஸ்தே ப4வந்தி ||
எவையெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவையெல்லாம் தோற்றுவிக்கப்பட்டவைகள். படைக்கப்பட்ட உலகங்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால்தான் அவைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனஇதுவே எல்லோருக்கும் மிகப்பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றதுவஜ்ராயுதத்தை கையில் ஏந்தியிருப்பதுபோல் பய ஸ்வரூபமாக காட்சியளித்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை யார் பிரம்மன் என்று தெரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மரணமற்ற தன்மையை அடைகிறார்கள்.
 
ஸ்லோகம்-03
ப4யாத3ஸ்யாக்3னிஸ்தபதி ப4யாத்தபதி ஸூர்ய: |
ப4யாதி3~ண்த்4ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா4வதி பஞ்சம: ||
ஈஸ்வரனிட்த்தில் கொண்டுள்ள பயத்தினால்தான் எல்லா சக்திகளும் அவருக்கு கட்டுபட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றனஎல்லா தேவதைகளும் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது ஹிரண்யகர்ப்பனைத்தான்ஈஸ்வரனிடத்தில் உள்ள பயத்தினால்தான் அக்னியானது உஷ்ணத்தை வெளிப்படுத்துகிறது, சூரியனும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது, இந்திரனும் அவருக்கு பயந்து தன் வேலையை தவறாமல் செய்து கொண்டிருக்கின்றான்வாயு பகவானும், எமதர்மனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள்இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லா சக்திகளும் அவர் விதித்த நியமத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
 
ஸ்லோகம்-04
இஹ சேத3ஶகத்3போ3த்3த4ம் ப்ராக்ஶரீரஸ்ய விஸ்ரஸ: |
தத:: ஸர்கே3ஷு லோகேஷு ஶரீரத்வாய கல்பதே ||
இந்த மனித சரீரத்தில் இருக்கும் போதே பரம்பொருளை அறிந்து கொண்டால் உடல் வீழ்வதற்கு முன்னே முக்தியை அடைந்து விடலாம்ஒருவேளை அறியவில்லையென்றால் இறந்த பிறகு படைக்கப்பட்ட இந்த உலகத்திற்குள் வேறு சரீரத்தை அடைய நேரிடும்
 
ஸ்லோகம்-05
யதா2த3ர்தே2 ததா2த்மனி யதா2 ஸ்வப்னே ததா2 பித்ருலோகே |
யதா2ப்ஸு பரீவ த3த்3ருஶே ததா2 க3ந்த4ர்வலோகே சா2யாதபயோரிவ ப்3ரஹ்மலோகே ||
மனித உலகத்தை தவிர வேறெந்த உலகத்திலும் ஆத்மஞானத்தை அடைய முடியாது.
·        மனித லோகத்தில் ஆத்ம ஞானம் அடையலாம். நம்மை கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெளிவாகவும், சரியாகவும் தெரிவது போல ஆத்ம, அனாத்ம விவேகத்தை மிகத்தெளிவாக அடையலாம்.
·        பித்ரு லோகத்தில் கனவில் காணும் தெளிவற்ற உலகத்தைப்  போல ஆத்ம-அனாத்ம விவேகம் தெளிவற்று இருக்கும்.
·        கந்தர்வ லோகத்தில் அசைந்து கொண்டிருக்கும் நீரில் தெரியும் உருவத்தைப்போல இந்த விவேகம் வேறுபாடு தெளிவாக தெரியாமல் இருக்கும்.
·        பிரஹ்ம லோகத்தில் இந்த அறிவு தெளிவாக அறியப்படும்நிழலும்-நிஜமும் எவ்வாறு தெளிவாக தெரியுமோ அதுபோலதான் இருக்கும். இந்த லோகத்திற்கு செல்வது மிகவும் கடினம். அதிக உபாஸனை செய்தும், வேதாந்தம் படிக்க முடியாமல் போனவர்களால் அடையப்படும் உலகம்
இவைகளைத் தவிர வேறெந்த உலகத்திலும் இந்த அறிவை அடைய முடியாதுஇந்த அறிவை அடைவதற்கு மனித லோகமே மிக மிக உயர்ந்தது.
 
எப்படி கண்ணாடியில் உருவம் தெளிவாக தெரியுமோ அவ்விதமாக நம் மனதில், புத்தியில் ஆத்மாவினுடைய தரிசனம் கிடைக்கும், ஆத்ம-அனாத்ம வேறுபாடு மிகத்தெளிவாக புரியும்.
எப்படி கனவில் உள்ள பொருட்கள் அனைத்தும் தெளிவற்றதாக இருக்கின்றதோ அதுபோல பித்ருலோகத்தில் தெளிவற்றதாக இருக்கும்எப்படி நீரில் தெரியிம் உருவம் தெளிவற்றதாக இருக்குமோ அதுபோல கந்தர்வலோகத்தில் இருக்கும்இதுவே பிரம்ம லோகத்தில் நிழலும், நிஜமும் போல தெளிவாக இருக்கும்.
 
ஸ்லோகம்-06
இந்த்3ரியாணாம் ப்ருத2க்3பா4வமுத3யாஸ்தமயௌ ச யத் |
ப்ருத2கு3த்பத்3யமானானாம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
ஆத்மாவை இந்திரியங்களிலிருந்து வேறாக புரிந்து கொள்ள வேண்டும்நம்மை யாராவது முட்டாள் என்று யாராவது திட்டினால் நான் புத்தி என்று நினைத்தால் கோபம் வரும்ஆனால் நான் ஆத்மா என்று நினைத்தால் நமக்கு கோபம் வராதுஎல்லா இந்திரியங்களையும் அந்தக்கரணத்தையும் நான் என்ற ஆத்மாவிலிருந்து பிரித்து விட்டால் நமக்கு என்றென்றும் சோகம் கிடையாதுஇரண்டு யுக்திகள் மூலம் நாம் இந்திரியங்களல்ல என்று புரிந்து கொள்ளலாம்புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டிருக்கின்றது ஏனென்றால் அவைகள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது..  எது தோற்றுவிக்கப்படுகிறதோ அது நிலையற்றவைஆத்மா என்றும் இருப்பது, அதிலிருந்து தோன்றியவைகள்தான் அனைத்தும். இவைகள் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்இந்திரியங்கள் எழுச்சியும் (விழிப்பு நிலை ) பெறுகின்றது, ஒடுங்கியும் (கனவு நிலை) இருக்கின்றது  நான் என்ற ஆத்மா இரண்டு நிலையிலும் சாட்சியாக இருக்கின்றேன்ஆகவே இவைகள் என்னிடமிருந்து வேறுபட்டவை என்று உணர வேண்டும்இவ்விதம் அறிந்த விவேகியானவன் துயரத்தை அடைவதில்லை.
 
ஸ்லோகம்-07
இந்த்ரியேப்4ய: பரம் மனோ மனஸ: ஸத்த்வமுத்தமம் |
ஸத்த்வாத3தி4 மஹானாத்மா மஹதோÅவ்யக்தமுத்தமம் ||
புலன்களை விட மனம் மேலானதுபரம் என்பதற்கு சூட்சுமமானது, எங்கும் வியாபித்துள்ளது என்று பொருட்கொள்ளலாம், ஆத்ம சமீபம் என்றும் பொருட்கொள்ளலாம்மனதை விட புத்தி மேலானது, புத்தியைக் காட்டிலும் சமஷ்டி புத்தி மேலானதுஹிரண்யகர்ப்பனை விட மாயை மேலானது
 
ஸ்லோகம்-08
அவ்யக்தாத்து பர: புருஷோ வ்யாபகோÅலிங்க3 ஏவ ச |
யம் ஞாத்வா முச்யதே ஜந்துரம்ருதத்வம் ச க3ச்ச2தி ||
மாயைக் காட்டிலும் ஆத்மா மேலானதுஎங்கும் வியாபித்திருக்கும் புருஷனே மாயை விட மேலானதுஆத்மா அடையாளமெதுவுமற்றது.  ஆத்மாவை யூகித்து அறிய முடியாது. இந்த புருஷனை உணர்ந்த ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான், ஜீவன் முக்தி அடைகின்றான்மரணமில்லா நிலையையும் அடைகின்றான். இறந்த பிறகு விதேக முக்தியை அடைகின்றான் பிறப்பு-இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.
 
ஸ்லோகம்-09
ந ஸந்த்ருஶோ திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஶா பஶ்யதி கஶ்சனைனம் |
ஹ்ருதா3 மனீஷீ மனஸாபி4க்ல்ருப்தோ ய ஏதாத்3விது3ரஸ்ருதாஸ்தே ப4வதி ||
பிரம்மத்தினுடைய தன்மை இந்திரியத்தினுடைய வசத்துக்குள் வராதுபுலன்களால் பிரம்மத்தை அறியமுடியாதுபிரம்மத்தை யாருடைய கண்களாலும் காணப்படுவதில்லை. தெளிவான சிந்தனையால், மனதினால் அறியப்படுகின்ற, இருதயத்திற்குள் இருக்கின்ற விழிப்புற்ற புத்தியால் எவர்கள் இந்த தத்துவத்தை அறிகின்றார்களோ அவர்கள் மரணமற்றவர்களாகின்றார்கள்.
 
ஸ்லோகம்-10
யதா3 பஞ்சாவதிஷ்டந்தே ஞானானி மனஸா ஸஹ |
பு3த்3தி4ஶ்ச ந விசேஷ்டதி ஹாமாஹு: பரமாம் க3திம் ||
 
நிதித்யாஸன விசாரம்:-
நான் ஆத்மா என்ற நிலையில் முதலில் வாழ பழக வேண்டும்அதற்கு முதலில் உலக விவகாரங்களிலிருந்து விலகி கொஞ்ச நாள் தனிமையில் வாழ்ந்து பழக வேண்டும்இந்திரியங்கள் மனம், புத்தி இவைகளை துறந்து நான் ஆத்மா என்ற நிலையில் வாழ்ந்து பழக வேண்டும்
சஜாதீய விருத்தி  - ஆத்ம தத்துவத்திற்கு உகந்த எண்ணங்கள்
வியாதீய விருத்திஆத்ம தத்துவத்திற்கு முரண்பாடான எண்ணங்கள்
தியானம்         மனப்போராட்டங்கள் இல்லாமல் செய்தல்
 
சஜாய விருத்தி நிலை அடைதல் என்பது முதிர்ந்த நிலைஇதுவே சமாதானம், சமாதி யோகம் என்று சொல்லப்படுகின்றது.
 
எப்பொழுது ஞானேந்திரியங்கள் மனதோடு சேர்ந்து ஒருமுகப்பட்டு நிற்குமோ, அமைதியுடன் இருக்குமோ (சஜாதீய விருத்தி நிலை), அப்பொழுது புத்தியானது அமைதியடைந்துவிடுமபுத்தியில் ஏதாவது சந்தேகமிருந்தால் அது அமைதியடையாதுஎனவே மனனத்தின் மூலம் சந்தேகங்களை நீக்கி தெளிவடைந்துவிட வேண்டும்இந்த நிலையே மேலான நிலை என்று சொல்லப்படுகின்றது.
 
ஸ்லோகம்-11
தாம் யோக3மிதி மன்யந்தே ஸ்தி2ராமி~ண்த்3ரியதா4ரணாம் |
அப்ரமத்தஸ்ததா3 ப4வதி யோகோ3 ஹி ப்ரப4வாப்யயௌ ||
இந்த நிலையில் இந்திரியங்கள் உறுதியாக ஒடுக்கப்பட்டிருக்கும். இதை யோகசமாதி, சமாதானம் என்றும் மனம் அமைதியடைந்திருத்தல் என்றும் சொல்லப்படுகின்றதுநிதித்யாஸனம் செய்யும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்இந்த யோகமானது மேலே செல்வதற்கும், கீழே வீழ்வதற்கும் காரணமாக இருக்கும்இந்திரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்எந்த சமயத்தில் வேண்டுமானாலும் அவைகள் நம்மை வீழ்த்தி விடும்தியானம் செய்யும்போது தமோ குணத்தினால் தூக்கமும், ரஜோ குணத்தினால் மன சிதறல்களும் ஏற்படும்.
 
ஸ்லோகம்-12
நைவ வாசா ந மனஸா ப்ரப்தும் ஶக்யோ ந சக்ஷுஷா |
அஸ்தீதி ப்3ருவதோÅன்யத்ர கத2ம் த3து3பல்ப்4யதே ||
வாக்கினால் அந்த பிரம்மத்தை அடைய முடியாது என்று சொல்லும்போது ஞானேந்திரியங்களால் பிரம்மத்தை அடைய முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்அதேபோன்று கண்களால் பிரம்மத்தை அறிய முடியாது என்பதை கர்மேந்திரியங்களாலும் அதை அறிய முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்மனதாலும் அறிய முடியாது, அந்தக்கரணத்தின் உதவியாலும் அறிய முடியாதுஇந்த பிரம்மம் இருக்கிறது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றது அதை நாம் எப்படி உணர முடியும்.
 
ஸ்லோகம்-13
அஸ்தீத்யேவொபலப்4த4வ்யஸ்தத்த்வபா4வேன சோப4யோ: |
அஸ்தீத்யேவொபலப்3த4ஸ்ய தத்த்வபா4வ: ப்ரஸீத3தி ||
பரோக்ஷ ஞானம் என்பது பிறர் மூலம் கேள்விபட்டு அடைந்த அறிவை குறிக்கிறது. பிரத்யக்ஷ ஞானம் என்பது நாமே நேரிடையாக அடைகின்ற அறிவாகும்வேத வாக்கியப்படி அடையும் ஞானம் பரோக்ஷ ஞானம்இதை பிரத்யக்ஷ ஞானத்தினால் அறிய முடியாது, ஏனென்றால் அது இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றதுஇந்திரியங்களின் மூலம் அடையும் அறிவுக்கு இந்திரியங்களே பிரமாணமாக இருக்கின்றதுபிறகு வேதத்தின் உபதேசமான மகாவாக்கியமான ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால் அபரோக்ஷ ஞானத்தை அடைகின்றோம். அந்த பிரம்மத்தை நான் என்று புரிந்து கொள்ளும் போது அடையும் ஞானம் அபரோக்ஷ ஞானம்எனவே அந்த பிரம்மத்தை இருக்கின்றது என்று அறிய வேண்டும், ஆத்ம ஸ்வரூபமாக உணரப்பட வேண்டும், நான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உணர வேண்டும்இவ்விரண்டில் யார் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் தான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்ற ஞானத்தை அடையலாம்.
 
ஸ்லோகம்-14
யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேÅஸ்ய ஹ்ருதி3 ஶ்ரிதா: |
அத2 மர்த்யோÅம்ருதோ ப4வத்யத்ர ப்3ரஹ்ம ஸமஶ்னுதே ||
எப்பொழுது மனதிலுள்ள ஆசைகளெல்லாம் நீங்குகின்றதோ அப்பொழுதுதான் பிரம்மஞானத்தை அடைகின்றான்ஞானியானவன் தன்னிடத்திலே நிறைவுடன் இருப்பவன். மனம் நிறைவுடன் இருக்கும்போது ஆசைகள் எதுவும் தோன்றாதுஆசைகள் இருவகையாக இருக்கின்றது. அவைகள் 1. பந்தப்படுத்துகின்ற ஆசை, 2. பந்தப்படுத்தாத ஆசை என்பதாகும்.,
 
ஒருவனுடைய மனதில் உள்ள ஆசைகளெல்லாம் எப்பொழுது நீங்குகின்றதோ , விடுபட்டு போகின்றதோ அப்பொழுதே சம்சாரியாக இருக்கும் மனிதன் மரணமற்றவனாகின்றான். நிலையான மனநிறைவை அடைகின்றான்.
 
ஸ்லோகம்-15
யதா3 ஸர்வே ப்ரபி4த்3யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்3ரந்த2ய: |
அத2 மர்ஹ்யோÅம்ருதோ ப4வத்யேதாவத்3த்4யனுஶாஸனம் ||
மனதிலுள்ள அறியாமை எப்பொழுது நீங்குகின்றதோ அப்போதுதான் பிரம்மத்தை அடைவோம். அறியாமையிலிருந்து தோன்றுவது அத்யாஸம் (அனாத்மாவை ஆத்மாவாக பார்த்தல்). அத்யாஸத்திலிருந்துதான் ஆசைகள் பிறக்கின்றது.
 
எப்பொழுது ஒருவனுடைய இருதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் ( அறியாமையும், அத்யாஸமும், ஆசைகளும்) அவிழ்க்கபடுகின்றதோ, அதாவது அறியாமை நீங்குகின்றதோ அப்பொழுதே சம்சாரியான மனிதன் மரணமற்ற நிலையை அடைகின்றான்இதுவே நான் உனக்கு கூறும் ஆத்ம தத்துவ உபதேசங்கள்.
 
ஸ்லோகம்-16
ஶதம் சைகா ஹ்ருத3யஸ்ய நாத3ஸ்யஸ்தாஸாம் மூர்தா4னமபி4னி:ஸ்ருதைகா |
தயோர்த்4வமாயன்னம்ருதத்வமேதி விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே ப4வந்தி ||
ஞானத்தை அடையாதவர்களின் மரணகதியைப் பற்றி இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றதுஇருதயத்திலிருந்து 101 நாடிகள் உடலிலிருந்து வெளியே செல்கின்றனஅவற்றில் ஒன்று உச்சந்தலைக்குள் நுழைகின்றது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகின்றான்மற்ற நாடிகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றார்கள்
 
ஸ்லோகம்-17
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோÅந்தராத்மா ஸதா3 ஜனானாம் ஹ்ருத3யே ஸம்னிவிஷ்ட” |
தம் ஸ்வாச்ச2ரீராத்ப்ரவ்ருஹேன்முஞ்ஜாதி3வேஷீகாம் தை4ர்யேண |
தம் வித்3யாச்சு2க்ரமம்ருதம் தம் வித்3யாச்சு2க்ரம ம்ருதமிதி ||
இருதய ஆகாசத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாதான் நம்முடைய உண்மையான சைதன்ய ஸ்வரூபம், அந்தர்யாமிஅது எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் எப்பொழுதும் வசிக்கின்றதுஅந்த ஆத்மாவை நம்முடைய சரீரத்திலிருந்து முஞ்சை புல்லிலிருந்து தண்டை பிரிப்பதை போல கவனமாக பிரித்தெடுக்க வேண்டும்,.  அப்படி பிரித்தெடுத்த ஆத்மாவானது தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருப்பதாக அறிந்து கொள்.
 
ஸ்லோகம்-18
ம்ருத்யுப்ரோக்தோ நசிகேதோÅத2 லப்3த்4வா வித்3யாமேதாம் யோதவிதி4ம் க்ருத்ஸ்ரம் |
ப்3ரஹ்மப்ராப்தோ விரஜோபூ4த்3விம்ரித்யுரன்யோÅப்யேவம் யோ வித3த்4யாத்ம்மேவ ||
எமதர்மரால் சொல்லப்பட்ட, நசிகேதனால் கேட்கப்பட்ட இந்த ஆத்ம வித்யாவை, எவனொருவன் ஞானத்தை அடைய உதவும் சாதனங்களை முழுமையாக பயன்படுத்தி மனத்தூய்மையுடன் கேட்கின்றானோ அவன் பிரம்ம நிலையை அடைகின்றான, மரணமற்ற நிலையை அடைகின்றான்மற்றவர்களும் கூட இவ்வாறு அறிந்து பிரம்மத்தை அடைகின்றார்கள்.

                                இரண்டாவது அத்தியாயம் – 3வது வல்லி முடிவடைகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------------

கடோபநிஷத்தின் சுருக்கம்:

1.1. நசிகேதன் தன் தந்தையிடம் தன்னை யாருக்கு தட்சணையாக கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவர் எமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அவனும் எமலோகத்திற்கு செல்கின்றான்அங்கே எமதர்மராஜா இல்லாததால் 3 நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்அவன் தன்னை சந்திக்க 3 நாட்கள் காக்க வைத்தற்காக் 3 வரங்கள் தாம் தருவதாக அவர் கூறுகிறார்.
 
நசிகேதன் முதல் வரமாக தன் தந்தை தன் பிரிவால் வருந்தக்கூடாது எனவும், தான் திரும்பி செல்லும்போது என்னைக்கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கேட்டான்இரண்டாவது வரமாக சொர்க்கலோகத்தை அடைய உதவும் யாகத்தை செய்யும் முறையை தனக்கு சொல்லித்தர வேண்டுமென்று கேட்டான்மூன்றாவது வரமாக ஜீவன் இறந்ததற்கு பிறகு எங்கு செல்கின்றான் என்பதை தனக்கு சொல்லுமாறு கேட்டான்.
 
எமதர்மராஜாவும் அவன் கேட்ட முதல் இரண்டு வரங்களையும் அளித்துவிட்டார்மூன்றாவது வரமாக அவன் கேட்டது ஆத்ம தத்துவத்தை பற்றியதாக இருப்பதால் அதற்கு அவன் தகுதியானவனாக இருக்கின்றானா என்று பரிசோதிக்கின்றார்இது புரிவதற்கு மிகமிகக்கடினம் என்று சொல்லிப்பார்க்கின்றார். ஆனால் நசிகேதன் அப்படியென்றால அதைத்தான் தாம் அறிய விரும்புவதாக கூறுகின்றான்.
 
பலபோகங்களை தருவதாக ஆசையை தூண்டுகின்றார், அவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுளும் தருகின்றேன் என்றும் கூறினார்ஆனாலும் நசிகேதன், நிலையற்ற  அந்த போகங்களை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு தேவையில்லை என்றூ உறுதியாக கூறினான்.
 
1.2 இதில் 7 தலைப்புக்கள் பேசப்படுகின்றது அவைகள்
1.      இரண்டுவிதமான மார்க்கத்தை கூறுகின்றார்அதற்கான சாதனத்தையும் கூறுகின்றார்அவைகள் ஸ்ரேயஸ் (மோட்சம்), ப்ரேயஸ் ( சம்சார போகம்) என்பதாகும்.
2.      விவேகியானவன் ஸ்ரேயஸ் பாதையைத்தான் தேர்ந்தெடுக்கின்றான்ப்ரேயஸை தேர்ந்தெடுப்பவர்களின் துயர நிலையைக் கூறி அவர்களை நிந்திக்கின்றார்இவையிரண்டும் வெவ்வேறு பாதைகளை கொண்டிருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்.
3.      ஸ்ரேயஸ்சை தேர்ந்தெடுப்பவர்கள் வெகுசிலரே, அதை சொல்லி கொடுக்கும் குருவும் வெகு சிலரே என்று கூறுகிறார்குருவின் லட்சணமாக அவர் எதை சொல்லிக் கொடுக்கின்றாரோ அதுமாதிரியேதான் நடந்து கொள்வார் என்று விவரித்தார்.
4.      சாஸ்திரத்தை கேட்டல், சிந்தித்தல், பிறகு அதை தியானித்தல் ஆகியவற்றை ஞானயோகம் என்று உரைத்தார்.
5.      தர்ம-அதர்மத்திற்கும் காலத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்ம தத்துவத்தை நசிகேதன் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினான்.
6.      ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த அத்தியாத்தில் இந்த பாகத்தில் உள்ள 18-22 மந்திரங்கள் மிக முக்கியமானவை. மனப்பாடம் செய்து அதை நிதித்யாஸனம் செய்ய வேண்டியவை.
7.      சில சாதனங்களை சொல்கின்றார். முமுக்ஷூத்வம் ஒரு மோட்ச சாதனம், தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு சம, தம போன்ற சாதனங்களை பரிந்துரைக்கின்றார்.
 
1.3 சரீரத்தை தேராக உருவகப்படுத்தி சில உபதேசங்களை சொல்கின்றார்மனத்தூய்மையை கொடுக்கும் விவேகம், சம, தம ஆகிய மூன்று சாதனங்களை முக்கியமாக கூறுகின்றார்புத்திக்கு ஸ்ரேயஸ், ப்ரேயஸ் இவைகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளையும் அதன் பலன்களையும் தெரிந்திருக்க வேண்டும்ஐம்புலன்களையும் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், மனதை கடிவாளமாக உருவகப்படுத்தி அதை நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

 

ஆத்ம தத்துவத்தை பஞ்சகோசங்களை வைத்து விளக்குகின்றார்ஒவ்வொரு கோசத்திலும் நான் என்ற புத்தியை விட்டுவிட வேண்டும். இறுதியில் நானே ஆத்மா என்று உணர வேண்டும் என்றும் கூறுகின்றார்நம்முடைய பஞ்ச கோசங்களின் சமஷ்டியான பிரபஞ்சங்களையும் நீக்க வேண்டும்இதை அறிந்து கொள்வதற்கு இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இதை அறிவதற்கு நமது புத்தியானது மிகவும் சூட்சுமமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தையும் விவரிக்கின்றார்.
 
2.1 மற்றொரு சாதனத்தை பற்றியும் கூறுகின்றார்இந்த பகுதியில் உள்ள எல்லா மந்திரங்களும் முக்கியமானதுஎதனால் சூட்சும புத்தியை இழக்கின்றான் என்று கேட்கும் போது படைப்பிலே இந்திரியங்கள் வெளியே செல்வதாக இருக்கின்றதுவெகு சிலரே  இந்திரியங்களை உள்நோக்கி செல்லுமாறு பழக்கி வைத்திருகின்றார்கள்இதனால் சூட்சும புத்தியை அடைகின்றார்கள்விதவிதமான கோணங்களில் ஆத்ம தத்துவமானது விளக்கப்படுகின்றதுத்ருக்-த்ருஷ்ய விவேகம் மூலம் ஆத்ம ஞானம் விளக்கப்படுகின்றதுஅறிபவன்அறியப்படும்பொருள் இந்த தத்துவமும், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் விளக்குகின்றது. இருமையானது நிந்திக்கப்படுகின்றதுஇருமை புத்தியை உடையவன் சம்சாரத்தில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பான் என்று எச்சரிக்கின்றார்.
 
2.2 ஆரம்பத்தில் ஆத்ம தத்துவம் விவரிக்கப்படுகின்றது. உடலை ஒரு நகரத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கப்படுகின்றதுஅன்வய-வியதிரே தத்துவத்தின் மூலமாக இது விளக்கப்படுகின்றது. இறந்ததற்கு பிறகு அக்ஞானிகளினுடைய நிலை என்ன என்பதையும் கூறுகின்றார்உறங்கும்போது ஆத்மா உறங்குவதில்லை சாட்சியாக இருந்து கொண்டு எல்லா அவஸ்தைகளிலும் நடப்பதை பார்த்து கொண்டிருக்கின்றது. சரீரம் ஆத்மாவுக்கு உபாதியாக கூறப்படுகின்றது. ஸ்படிகத்தின் அருகின் உள்ள சிவப்பு மலரின் நிறம் அதில் பிரதிபலிப்பது போல சரீரத்தின் செயல்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு செல்கின்றதாக விளக்குகின்றார்ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்றும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்றும் விளக்குகின்றார்.
 
2.3 சம்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது. சம்சாரம் அரச மரத்திற்கு உதாரணமாக கூறப்பட்டு மரத்தைப்போல் அநித்யமானது என்றும் அதற்கு ஆதாரமாக எப்படி வேர் இருக்கின்றதோ அதுபோல சம்சாரத்திற்கு ஆதாரமாக பிரம்மம் இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகின்றார்ஈஸ்வரனே அனைத்துமாக இருக்கின்றார், அவருக்கு கட்டுபட்டுத்தான் எல்லா இயற்கை சக்திகளும் இயங்குகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றார்.
 
மனித சரீரத்தின் மேன்மையை கூறி இதன் மூலம்தான் ஆத்ம தத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று உறுதி கூறுகின்றார். ஆத்ம தத்துவத்தை மீண்டும் வேறு வகையில் விளக்குகின்றார்அதை அறிவதற்கு வேறு சில சாதனங்களையும் கூறுகின்றார்.

 

சூட்சுமான புத்தியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்நிதித்யாஸனத்தை பற்றி கூறியிருக்கின்றார்அறிவை அடைந்தாலும் பழக்க தோஷத்தால் நம் மனம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல தூண்டும் எனவே அடைந்த அறிவில் நிலைபெற்று இருக்க வேண்டும்எப்பொழுது மனமும், புலன்களும் அமைதியாக இருக்கின்றதோ அதுவே நாம் அறிவை அடைந்ததற்கான அறிகுறியாக சொல்கின்றார்மேலும்சிரத்தையை உடையவன்தான் மோட்சத்தை அடைவான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார்.   முதலில் இருக்கின்றது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்பிறகு இருக்கின்றேன் என்ற அறிவை அடைய வேண்டும்.
 

ஆத்ம பலன்களை கூறுகின்றார்.

1.      நம்முடைய மனதிலுள்ள ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், புதிதான எந்த ஆசைகளும் தோன்றாது, அப்படி தோன்றினாலும் அது நம்மை பந்தப்படுத்தாது.
2.      நம்முடைய அறியாமை நீங்கி விடும்.
3.       மனிதன் அமரத்தன்மையை இங்கேயே, இப்போதே அடைகின்றான். பூரணமான ஆத்மாவை அறிகின்றான்.
4.      தன்னிடத்தேயுள்ள அறியாமை, அத்யாஸம் இவைகள் நீங்கப்பெற்று ஆத்ம ஞானத்தை அடைகின்றான்
5.      நசிகேதன் மட்டுமில்லாமல் மற்றவர்களாலும் இந்த ஞானத்தை அடையப்படும் என்று உபநிஷத் உறுதிகூறுகிறது.
----oo00ooo----

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...