மறுஜென்மம்
உண்டு என்பதை கனவு நிலையை வைத்து உறுதி செய்யப்படுகிரது.
கனவு
நிலை-1: நான் ஸ்தூல சரீரத்திலிருந்து வேறுபட்டவன்
கனவு
நிலை-2: கனவில் காண்பதெல்லாம் மித்யா என்ற அறிதல், உறுதி செய்தல்
இங்கு
ஜீவனுக்கு இரண்டு உலகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒன்று இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும்
இந்த லோகம் இரண்டாவது பரலோகம். இது முற்பிறவியில் இருந்த லோகம் அல்லது மறு பிறவியில்
இருக்கப்போகும் லோகம். நாம் குழந்தையாக இருக்கும்போது முதல் மூன்று கண்ணுக்கு பார்க்கும் சக்தி கிடையாது. குழந்தை திடீரென்று அழும்,
சிரிக்கும், இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்மத்தின் அனுபவங்கள், வாசனைகள்,
விஷயங்கள் கனவில் வருவதால். குழந்தைக்கு இகலோக
அனுபவம் கிடையாது. பிறகு
மரணமடைவதற்கு முன் இந்த ஜென்மத்தில் தோன்றிய ஸம்ஸ்காரங்களைத்தான் கனவில் அனுபவிப்பான்.
மரண படுக்கையில் இருக்கும்போது இகலோக எல்லா இந்திரியங்களும் சக்திகளை
இழந்து விட்டிருக்கும், இகலோக ஸம்ஸ்காரங்கள் செயல்படாது.
அடுத்த ஜென்மம் பற்றிய விஷயம் ஆரம்பமாகி விடும். அவர்களுடைய கனவில் வரப்போகும் ஜென்மத்தின்
ஸம்ஸ்காரங்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவான். ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் கனவு வராது குழந்தை பூர்வ ஜென்ம ஸம்ஸ்காரங்களையும்,
மரண நிலையில் வரப்போகும் ஜென்மத்தில் ஸம்ஸ்காரங்களையும் அனுபவிக்கிறோம்.
எனவே கனவு நிலை என்பது நம்முடைய மறு ஜென்மம் இருப்பதை நிரூபிக்கிறது.
மந்திரவிளக்கம்:
ஜீவனுக்கு
இரண்டு இடங்கள் அனுபவிப்பதற்கு இருக்கிறது. அவைகள் இகலோகம்-இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும்
உலகம், பரலோகம்-முற்பிறவியிலும்,
அடுத்த பிறவியிலும் அனுபவிக்கப்போகும் உலகம்.
சந்த்யம்
த்ருதீயம் ஸ்வப்ன ஸ்தானம் – இந்த கனவு நிலையில் இருந்து கொண்டு இரண்டு
உலகங்களை அனுபவிக்கின்றான். குழந்தையாக இருக்கும்போது முற்பிறவி
லோகத்தையும், மரணதறுவாயிலிருக்கும்போது பரலோகத்தையும் அனுபவிக்கின்றான்.
தஸ்மின்
ஸந்த்யே ஸ்தானே-
இந்த இடைவெளியில் கனவு நிலையில்
திஷ்டன்
ஏதே உபே ஸ்தானே பஷ்யதி:
- இந்த இடைவெளியில் ( முற்பிறவி உலக விஷயங்கள்
அனுபவிக்கும் உலகம், அடுத்த பிறவி உலகத்தை அனுபவிக்கும்)
இப்போது இருந்து கொண்டே இந்த் இரண்டு உலகங்களையும் அனுபவிக்கின்றான்.
எதன்
அடிப்படையில் இந்த ஜீவனுக்கு அடுத்த ஜென்மம்.
அத4 யதா4
ஆக்3ரம அயம் - நம்மிடத்தே
வெளிப்படுகின்ற பாவ-புண்ணியங்களை பொறுத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது. இது சஞ்சித கர்மத்திலிருந்து வெளிப்படுகிறது. அங்கிருந்து ஒரு பகுதியை எடுத்துக்
கொண்டு அந்த பிராரப்தத்தை அனுபவிக்கின்றான்.
ஆக்கிரமஹ à
தர்ம-அதர்ம அல்லது பாவ-புண்ணியங்கள்
இவன்
எப்படிப்பட்ட பாவ-புண்ணியத்தை சஞ்சிதகர்மத்திலிருந்து எடுக்கிறானோ அதன் அடிப்படையில் சுக-துக்கங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்கிறான். இதிலிருந்து மறுபிறவி உறுதி செய்யப்படுகிறது.
ஆத்மா
ஸ்வயம் ஜோதி விசாரம்:
விழிப்பு
நிலையில் சாட்சி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. அதனால் மனம் இந்திரியங்கள்,
உலகம் இவைகளை பிரகாசிக்கிறது. இந்த நிலையில் சைதன்யம், மனம் என்ற இரண்டு ஜோதிகள் இருக்கின்றன. நம்முடைய அனுபவத்தில்தான் எல்லாவற்றையும்
அறிகிறோம். மனம் உறங்கியதும்
உலகம் கிடையாது. இந்த நிலையில் சைதன்யம் என்பது ஒன்று இருக்கிறது
என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை புரிந்து கொள்ள மனமே தடையாக இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றுமே இல்லை.
அந்த நிலையில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றும் நமக்கு தெரியவில்லை, கனவு நிலையில் சாட்சி சைதன்யம் மனதை
பிரகாசிக்கிறது. ஆனால்
மனம் அது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது. விழிப்பு நிலையில் உடலையும்,
உலகையும் விளக்கிக் கொண்டிருக்கின்ற மனம் கனவு நிலையில் வெறும் அனுபவிக்கப்படும்
பொருளாக மட்டும் இருக்கின்றது. இந்த நிலையில் வாசனாமயமாக மனமானது பரிணாமத்தை அடைந்து, அதுவே கரணமாக மாறியிருக்கிறது.
பார்ப்பவனாகவும் பார்க்கப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறது. இதைப்பார்க்கும் பொருள் எது? அதை யார் விளக்குகிறது? மனதிற்கும் வேறாக அதை பிரகாசிக்கக்கூடிய ஒன்று இருக்க வேண்டும். எனவே கனவில் ஆத்மா தானாக ஒளிர்ந்து
கொண்டு மனதையும் விளக்குகின்றது. இவ்விதம் ஆத்மா ஸ்வயம் ஜோதி என்று சந்தேகமில்லாமல் விளங்குகின்ரது. கனவு நிலை இதை உறுதிப்படுத்துவதற்கு
உதவியாக இருக்கிறது.
கேள்வி மனமே ஸ்வயம் ஜோதியாக எண் இருக்கக்கூடாது?
பதில் இதை ஏற்றுக் கொண்டால் ஐந்து வகையான
குறைகள் தெரிய வரும். மனதை ஜடமாக பார்க்கும் வாய்ப்பே நமக்கு கிடைக்கவில்லை அதனால்தான் மனதை ஜடமாக
எற்றுக் கொள்ள முடியவில்லை.
1.
அநித்யத்துவ பிரசங்கம்: மனம் விகாரமடையும்
(மாற்றம்) என்ற தன்மையுடன் இருக்கிறது. எது விகாரத்துடன் கூடியுள்ளதோ அதற்கு
அழிவும் இருக்கிறது. இப்படி மனமானது அநித்யமாக இருப்பதால் சைதன்யமே
இல்லாததாகி விடும் எனவே மனதை ஸ்வயம் ஜோதி என்று சொல்ல முடியாது. .
2.
மனஸஹ அஸம்பவாதி: மனதிற்கு
லய அவஸ்தை சம்பவிக்கிறது
3.
மனம் என்ற சூட்சும ஸரீரம் எந்தவொரு அறிவை
அடைய வேண்டுமென்றாலும் மனதில் எண்ணங்கள் வரவேண்டும். அந்த எண்ணங்களாக மனமே மாறி,
அறிவை அடைகின்றோம் அப்படி எண்ணங்கள் வரவில்லையென்றால் அறிவு கிடைக்காது. மனதால் இதை அறிகிறேன்
என்பதை அறிய செய்ய முடியாது வேறொன்றுதான் அதை செய்ய முடியும். ஒரே கணத்தில் மனம் உலகத்தை விளக்கும்போது
அதை வேறொன்று விளக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது அது என்றும் சாட்சியாக
இருக்கும் ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.
4.
ஸ்ருதி விரோதாத்: ஸ்ருதி
மனம் ஜடம் என்று கூறியிருக்கிறது. பஞ்ச சூட்சும பூதங்களிலிருந்து உருவாகியதுதான் மனம் என்பதால் அது ஜடம் என்று
அறிந்து கொள்ள முடிகிறது.
5.
அநிர்மோக்ஷம் பிரசங்கஹ: மோக்ஷம் என்ற ஒன்றே இருக்க முடியாது.
சம்சாரியாக விகாரத்துடனிருக்கும் மனதை ஏற்கனவே அடைந்து விட்டோம்.
எனவே மோக்ஷம் என்பது சம்பவிக்காது
மேற்கூறிய
கருத்துக்களிலிருந்து மனமானது ஸ்வயம் ஜோதியாக இருக்க முடியாது என்று நிரூபணமாகிறது.
மனமே
சாட்சி சைதன்யத்துக்கு பார்க்கப்படும் விஷயமாகவும், கரணமாகவும், பார்ப்பவன் என்ற மூன்று நிலைகளாக மாறி நமக்கு கனவு அனுபவம் ஏற்படுகிறது.
ஸஹ
யத்ர ப்ரச்வமிதி
- ஜீவன் எப்பொழுது கனவை அனுபவிக்கின்றானோ;
அஸ்ய
லோகஸ்ய ஸர்வாவதஹ
– ஸ்தூல சரீர அபிமானியாக இருக்கிற விஸ்வனே அனைத்தும் உடையவனாக
(ஸர்வாவதஹ) இருக்கிறான். ஐந்து தத்துவங்களை உடையவனாக இருக்கிறான்.
இந்த ஐந்தும் இருந்தால்தான் ஜாக்ரத் அவஸ்தையில் உலகத்தை அனுபவிக்க முடியும். அவைகள் ஸ்தூல சரீரம், கரணம், கரண தேவதா, விஷயம்,
வாஸனா (பார்த்த்து, செய்தது
பதிவாகியிருக்கும் நினைவகம்)
மாத்ராம்
அபாதாய –
தைஜஸன் வாசனையை மட்டும் எடுத்துக் கொண்டு,
ஸ்வயம்
விஹிதிய
- ஸ்தூல
சரீரத்தை தியாகம் செய்து விட்டு
ஸ்வயம்
நிர்மாய
– தானே ஒரு உலகத்தை உருவாக்கி
ஸ்வேன
பாஸா
– விருத்தி ரூபமாக அனைத்தும் உருவாகி
ஸ்வேன
ஜோதிஷா–
சாட்சி சைதன்யத்தின் ஜோதியினால்
ப்ரஸ்வமிதி – அவன் கனவை காண்கின்றான்.
அத்ர
அயம் புருஷ இந்த ஸ்வப்ன அவஸ்தையில், இந்த சாட்சியானது
ஸ்வயம்
ஜோதி பவதி –
சுய ஜோதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
ஸ்லோகம்-10
ஸ்வப்ன
பிரபஞ்சம் மித்யா என்று விளக்குதல்.
கயிற்றில்
தோன்றும் பாம்பும் வாஸனையிலிருந்து வந்த விருத்தி கனவில் பிரபஞ்சமாக உருவாகிறது
கேள்வி: கனவு பிரபஞ்சம்,
விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான். எனவே ஜாக்ரத்
அவஸ்தை எவ்வளவு சத்தியமோ அதே அளவு சத்தியம்தான் கனவும். காரணம் விழிப்பு நிலையில் எப்படி
அனுபவிக்கிறோமோ அதே மாதிரிதான் கனவு நிலையிலும் கர்த்தா, கரணம்,
விஷயம் என்று இருக்கிறது.
எனவே கனவு மித்யா என்று எப்படி சொல்வாய்?
பதில் கனவில் பார்ப்பதெல்லாம் வாசனையிலிருந்து உருவாக்கப்பட்டவை, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதில்லை.
மந்திரவிளக்கம்:
தத்ர: அங்கு
(கனவு நிலையில்)
ந
ரதஹ –
ரதங்கள் கிடையாது.
ந
ரதயோஹ
– ரதத்தை ஒட்டும் குதிரைகள் கிடையாது;
ந
பந்தானஹ
– பாதைகள் கிடையாது
நாம்
பார்க்கும் இவைகள் உண்மையில் இல்லை எனவே மித்யா என்பது நிரூபணமாகிறது. ஆனால் இவைகளெல்லாம்
வாசனையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ந
தத்ர ஆனந்தாஹா,
முதஹ, பிரமுதஹ – பிரியம்,
மோதம், பிரமோதம் என்ற மூன்று நிலைகளும் கனவில்
இல்லை. இந்த விஷயத்தின் காரியமான ஆனந்தம் கிடையாது. விஷய நிமித்த சுகமும் கிடையாது. இவையும் வாசனையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. கனவில் பார்க்கும் பொருட்களும் பொய்யானது
அதிலிருந்து அனுபவிக்கும் சுகமும், துக்கமும் பொய்யானது. இவைகள் வாசனையிலிருந்துதான்
தோன்றியுள்ளது. அதுபோல கனவில் பார்க்கும் குளம், குட்டை, ஆறு, ஏரி இவைகளெல்லாம்
உண்மையில் தோற்றுவிக்கப்படவில்லை. இவைகளையெல்லாம் உருவாக்குபவன் கனவு காண்பவன்தான். இந்த ஜீவாத்மாதான் கர்த்தாவாக இருக்கின்றான். விழிப்பு நிலையிலுள்ள வஸ்துவிற்கு
கர்த்தா ஈஸ்வரன்.
ஸ்லோகம்-11
இந்த
விஷயத்தை விளக்கும் ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹிரண்யமயஹ; புருஷஹ;
ஏக ஹம்ஸஹ – இவைகள் ஆத்மாவின் ஸ்வரூபங்கள்
ஹிரண்யமயஹ – சைதன்ய
ஜோதி ஸ்வபாவஹ – சைதன்யத்தை ஜோதியாக, ஸ்வரூபமாக
கொண்டது.
புருஷஹ: காரியம்-கரணாதி ஸர்வம் பூரயதி இதி புருஷஹ:
ஆத்மா என்ற தத்துவம் நம்முடைய சரீரத்தை முழுவதுமாக வியாபித்திருக்கிறது.
ஏகஹம்ஷஹ: உண்மையில்
நிலையாக இருந்து கொண்டு, சிதாபாஸ ரூபமாக தன்னை மாற்றிக் கொண்டு
ஒரு லோகத்திலிருந்து இன்னொரு லோகத்திற்கும், சரீரத்திற்குள்ளே
ஒரு அவஸ்தையிலிருந்து வேறொரு அவஸ்தைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறது
ஸ்வப்னே
வாஸனா மாத்ர லோகேன பாவனயா – கனவு மயமான உலகத்தை உருவாக்கி அதில் அபிமானிக்கும்
போது
ஸாரீரம்
அபிப்ரஹதியா
– ஸ்தூல சரீரத்தை, செயலற்றதாக, ஜடமாக மாற்றி
அஸுப்தஹ – நிர்குண
ஆத்மா, சாட்சி சைதன்யம், எப்பொழுதும் உறங்காதவன்
அலுப்த
த்ருக்
– இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
ஸுப்தான் – வாஸனா
பிரபஞ்சத்தை
அபிசாகஸீதி – சாட்சியாக
பார்த்துக் கொண்டிருப்பது; எந்தவித செயலும் செய்யாமல் பார்த்துக்
கொண்டிருப்பவன்.
தைஜஸன்
உருவான பின் விஸ்வன் உறங்கி விட்டான் அவனையும், அவன் உருவாக்கிய கனவு உலகத்தையும்
சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பது ஆத்மா.
புனஹ: விழிப்பு
நிலை வாசனை செயல்பட ஆரம்பிக்கும்போது சரீரம் தன்னுடைய இந்திரியங்களை எடுத்துக் கொண்டு
மீண்டும் விழிப்பு நிலைக்கு வருகின்றான்.
ஸ்லோகம்-12
பிராணேன
ரக்ஷன் அஹம் குலாயம் – ஐந்து பிராணன் மூலமாக இந்த ஸ்தூல
சரீரமானது பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்தூல சரீரமானது பூமியோடு
கலந்து உறங்கப்போகிறது.
பஹவுகுலாயாத்- இந்த சரீரத்திலிருந்து
அபிமானத்தை விட்டு வெளியே சென்று
சரித்வா – கனவுலகை
அனுபவித்துக் கொண்டு
சஹ
ஈயதே யத்ர காமம்
– எப்படிப்பட்ட ஆசையானது மனதிற்குள் திடமாக இருக்கிறதோ, அதுவே
எண்ணங்களாக வெளிபட்டு அதை கனவில் அடைகிறான்.
ஸ்லோகம்-13
இந்த
மந்திரத்தில் கனவு வாசனையிலிருந்துதான் வெளிப்படுகிறது என்று கூறப்படுகிறது. எந்த வாசனை வெளிப்படும் என்றால் நமது
கர்மவினை, திடமான ஆசை இவைகளின் அடிப்படையில்தான் கனவு நிலையிலும்
நாம் பிராரப்த கர்மத்தை அனுபவித்து கழிக்கிறோம்.
ஸ்வனாந்த – கனவு அவஸ்தையில்;
உச்சா
அவச்சாம்
– மேலான, கீழான,
ஈயமான – அடைந்து,
தேஹ
பஹுனி ரூபானி
– நமக்குள் இருக்கும் சைதன்ய ஸ்வரூபம் பலவிதமான தோற்றங்களை, வாஸனைகளின் அடிப்படையில் உருவாக்குகிறது.
கனவுக்கு
உபாதானகாரணம் கர்மவினை,
நிமித்தக் காரணம் வாசனை அதிஷ்டான காரணமாக இருந்து
கொண்டிருப்பது சைதன்ய ஸ்வரூபம். கனவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
உத
ஏவ – இவையெல்லாம் மித்யாவான பொருட்களை
சஹ
மோதமானே-
இவைகளையெல்லாம் அனுபவித்து இன்புறுகிறான்’
ஜக்வித்
உதே ஏவ
– மகிழ்ந்து கொண்டு
பயானி
பஷ்யன்
– பயத்தைக் கொடுக்கின்ற, துயரத்தைக் கொடுக்கின்ற
காட்சிகளை உருவாக்குகிறான்
ஸ்லோகம்-14
அஸ்ய
- இந்த ஜீவன்கள்;
ஆராமம் – கனவில்
உருவாக்கிய பொய்யான உலகத்தை
பஷ்யந்தி – அதுதான்
உண்மையென்று பார்த்து கொண்டிருப்பார்கள்
தம்
ந பஷ்யதி கஷ்சன
– யாரும் உண்மையை பார்ப்பதில்லை
தம்
ஆயதம் ந போத்யேத்
– ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களை அவசரமாக எழுப்பிடக் கூடாது.
இதி
ஆஹுஹு
– மருத்துவர்கள் இவ்வாறு எச்சரிப்பார்கள்
துர்
விஷ்ஜம்
– இவ்வாறு எழுப்பியவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு
மிகவும் கடினம்.
யம்
ஏஷ ந பிரதிபத்யதே
– இந்திரியங்கள் தத்தம் நிலையிலிருந்து கனவுலகிற்கு சென்றிருக்கும்.
ஒடுங்கிய நிலக்கு சென்றிருக்கும், ஸம்ஸ்காரங்களும்
செயல்பட்டு கொண்டிருக்கும். திடீரென்று எழுப்பினால் இந்திரியங்கள் அதனது கோளகத்திற்கு வந்து சேர வேண்டும்,
ஸம்ஸ்காரங்களும் ஒடுங்கிய நிலைக்கு செல்ல வேண்டும். இது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதோகலு
அஹுஹு
– அய்யய்யோ இப்படி கூறுகிறார்கள் அக்ஞானிகள்
ஜாகரிட்தேஷ
ஏவ அஸ்ய ஏஷ இதி - கனவும், ஜாக்ரத்
அவஸ்தையின் ஒரு அங்கமாக இருக்கிறது.
யானி
ஹ்யேவ ஜாக்ரத் பஷ்யதி
– அதை இவன் விழிப்பு நிலையில் எதை பார்க்கிறானோ
தானி
சுப்த இதி
– அதைத் தான் கனவிலும் காண்கிறான். அதனால் கனவு விழிப்பு நிலையின் ஒரு
அங்கமாக இருக்கிறது
அத்ர
அயம் புருஷஹ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி – கனவு நிலையில் அந்த புருஷன் ஸ்வயம்
ஜோதியாக இருக்கின்றான்.
ஜனகர்
இதுவரை பெற்ற உபதேசத்திற்காக மேலும் ஆயிரம் பசுக்களை குரு காணிக்கையாக தருகிறேன் என்று
கூறி மோட்சத்தை பற்றி மேலும் விளக்குங்கள் என்று வேண்டினார். ஜனகருக்கு இன்னும் முழுமையாக நிர்குண
பிரம்மத்தை புரிந்து கொள்ளாததால் மீண்டும் அதையே உபதேசிக்கமாறு கேட்கிறார்.
ஸ்லோகம்-15
ஆத்மா
அஸங்கம்தான் என்று நிலை நாட்டப்படுகிறது. கர்மத்திலிருந்தும் அஸங்கம், அனாத்மாவிலுருந்தும் சம்பந்தமற்றவன்.
·
கரணங்கள் இல்லையென்றால் கர்மம் பண்ண முடியாது
·
கர்மம் செய்து விட்டால் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
கனவில்
ஒருவன் ஏதோ ஒரு பாவ காரியம் பண்ணியிருக்கின்றான்.
அதன் பலனை அனுபவிக்க வேண்டும் ஆனால் விழித்தவுடன் அவன் அதற்கான
பலனை அனுபவிக்கமாட்டான். கர்மம் பண்ணியது தைஜஸன் அவன் மறைந்த பிறகு விஸ்வன் அனுபவிக்க வேண்டியதில்லை.
எனவே ஆத்மா மூன்று நிலையிலும் இருக்கிறான் ஆனால் எந்த கர்மத்திற்கும்
சம்பந்தம் இல்லை. இதனால்
ம்ருத்யூ ரூபங்களில் மட்டும் தாண்டி செல்லவில்லை, ம்ருத்யூவையும்
கடந்து செல்கின்றான்.
மந்திரவிளக்கம்:
ஸ: வை
ஏஷா - அவனே
ஆத்மா. அவன் என்பது விஸ்வனாகவோ, தைஜஸனாகவோ, பிராக்ஞனாகவோ இருக்கலாம்.
எதஸ்மின்
ஸம்ப்ரஸாத்3: - இந்த சூழ்நிலை உறக்கத்தில் தற்காலிகமாக சம்சாரத்தை கடந்து விடுகிறான்.
ப்ரஸாதம் : அமைதியாக
இருத்தல்;
ஸ்ம்ப்ரஸாதம்: முழுமையாக
மகிழ்ச்சியாக அமைதியாக இருத்தல்.
ரத்வ சரித்வா,
த்3ருஷ்டவா ஏவ புண்யம் ச பாபம் ச - கனவு நிலையில் மகிழ்ச்சியாக அங்குமிங்குமாக
அலைகிறான்,
புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிக்கின்றான். அதாவது சுக-துக்கத்தை அனுபவிக்கின்றான்.
புன: -
மீண்டும்,
ப்ரதின்யாயம்
- போன
வழியில் கனவு-ஆழ்நிலை உறக்கத்திருந்து திரும்பி வருகின்றான்;
ப்ரதியோனி
ஆத்3ரவதி - கனவு
நிலைக்கு வந்து விடுகின்றான்
ஸ்வப்னாய
ஏவ - கனவை
அனுபவிப்பதற்கு
ஸ: தத்ர
- எது
இவ்வாறு இங்கும் அங்கும் சென்று வரும்போது
யத் கிம்சித்
பஷ்யதி - எதையெல்லாம்
பார்க்கின்றானே,
அனுபவிக்கின்றானோ
அனன்வா
கதஸ்தேன ப4வதி - அவன் பார்க்கப்படும் பொருட்களால் தாக்கப்படாதவன், பாதிக்கப்படாதவன்
அஸங்க3
ஹ அயம் புருஷ இதி - அவனுடைய ஸ்வப்னமே அஸங்கமாக இருக்கிறது
நான் யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நிலையில் வந்து விட்டால், நாம் யாராலும் தாக்கப்படாமல் இருப்போம்.
ஏவம் ஏவ
ஏதத்3 - இப்படியே
எற்றுக்கொள்கிறேன்
என்று
கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன்
என்றும் கூறினார்.
மேலும் எனக்கு மோட்சத்தைப் பற்றி உபதேசியுங்கள்
என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்லோகம்-16
சுக-துக்கங்களை
ஸ்வப்னத்தில் அனுபவித்து விட்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகின்றான். இந்த விஸ்வன் விழிப்பு நிலையில் எதையெல்லாம்
பார்க்கின்றானோ அதனால் தாக்கப்படவில்லை ஏனென்றால் அவன் அஸங்கமாக இருக்கின்றான்.
ஏவம் ஏவ
ஏதத்3 - இப்படியே
எற்றுக்கொள்கிறேன்
என்று
கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன்
என்றும் கூறினார்.
மேலும் எனக்கு மோக்ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள்
என்று கேட்டுக் கொண்டார்
ஸ்லோகம்-17
இவன்
விழிப்பு நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மீண்டும் கனவு நிலக்கு சென்று
விடுகிறான். இதனால் அஸங்கத்வம் நிரூபிக்கப்படுகிறது. விழிப்பு நிலையில் அனுபவிக்கப்படும்
எந்தப்பொருளும் எனக்கும் சம்பந்தமில்லை என்று புரிந்து கொண்டோமேயானால் இதனால் பாதிக்கப்படாமலிருப்போம்.
கனவு நிலைக்கு செல்லும்போது நாம் விழிப்பு நிலையில் அனுபவித்ததையெல்லாம்
விட்டுவிட்டு செல்கின்றோம். எனவே நாம் எந்தப் பொருளின் காரணமாக பாதிக்கப்பட்டோமானால் அதனோடு சம்பந்தம்
வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,
ஸ்லோகம்-18
எப்படி
பெரிய மீனானது நதியின் இரண்டு கரைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறதோ அதே போல இந்த
ஜீவன் இந்த இரண்டு அவஸ்தைகளுகும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
அனுஸம்சரதி – சென்று வந்து கொண்டிருக்கின்றான் ;
அயம் புருஷ: – இந்த புருஷன்;
ஸ்வப்ன: அந்தம் – கனவு நிலை ;
பு3பா4ந்தம் – விழிப்பு நிலை
இந்த
இரு அவஸ்தைகளிலும் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்
ஸ்லோகம்-19
– 30 முகவுரை
1.
சம்சார உபாதி நிமித்தஹ – உபாதியின்
மூலம்தான் சம்சாரம். நீரானது உஷ்ணமாக அனுபவிக்கும்போது நெருப்பினால்தான் அது சூடாக இருக்கிறது.
ஜாக்ரத், ஸ்வப்ன நிலையில் ஸ்தூல, சூட்சும சரீரம் என்ற உபாதி இருப்பதனால்தான் நாம் சம்சாரத்தை அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் உபாதிகள் இல்லாததால்
சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.
2.
சம்சாரம் சம்பந்தம் நிமித்தம்: சம்சாரம்
என்பது வேறொன்றினிடத்தில் சம்பந்தம் வைக்கும் பொழுது ஏற்படுவது. சம்சாரம் அகங்கார நிமித்தத்தினால்
வருவது. ஆழ்நிலை உறக்கத்தில்
எந்த சம்பந்தமும் இல்லாததால் சம்சாரம் இல்லை
3.
ஆத்மனஹ அஹங்கத்வம்: ஆத்மா அஸங்க ஸ்வரூபம் என்பது
இந்த ஆழ்நிலை உறக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பொருட்களின் மீது வைக்கும் சம்பந்தம் நமது சுபாவமல்ல.
4.
அனாத்மாவான ஸ்தூல, சூட்சும சரீரமும் ஆத்மாவின் ஸ்வரூபமல்ல. நான் என்ற ஸ்வரூபமல்ல. நம்முடைய அனுபவம் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் இருக்கிறது. இந்தக் கருத்து ஆழ்நிலை
உறக்கத்தில் சரியாக இருக்கும். இவையிரண்டும் நமது சுபாவமாக இருந்தால் நமக்கு களைப்போ, சலிப்போ வரக்கூடாது. ஆனால் நாம் இந்த சரீரங்களால் களைப்பு, சலிப்பு ஏற்படுகிறது. நான் இவையிரண்டு சரீரங்கள் ஸ்வரூபமாக
இருப்பதால் நமக்கு களைப்போ சலிப்போ இருக்கக்கூடாது. ஆனால் உண்மையில் அப்படியில்லை. அதனால் நாம் அடிக்கடி உறங்கச் செல்கின்றோம்.
5.
ஆழ்நிலை உறக்கத்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.
ஸ்லோகம்-19
தத்3யதா2 அஸ்மின் ஆகாஶே - எவ்விதம் இந்த ஆகாயத்தில்
ஶ்யேன - பெரிய உடல் கொண்ட
கழுகு, வேகமாக பறக்கக்கூடிய கழுகு
ஸுபர்ணோ - சிறிய உடல், மெதுவாக
பறக்கக்கூடிய பறவை
விபரிப்த்ய - விதவிதமான திசைகளில்
பறந்து கொண்டு
ஶ்ராந்த: - களைப்பு ஏற்படுகிறது
ஸம்ஹத்ய: பக்ஷோ – இறகுகளை சுருக்கிக் கொண்டு
ஸம்லயாய த்4ரியதே - கூட்டை நோக்கி ஓய்வெடுக்க
சென்றது
ஏவம் ஏவ - அது போல;
அயம் புருஷ: – ஜீவனாகிய நாம்
ஏதஸ்மா அந்தாய தா4வதி – ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.
நாம்
ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளில் ஏற்பட்ட கஷ்ட-நஷ்டங்களால் அடைந்த களைப்பினால்
நம்முடைய கூடாக வர்ணிக்கப்படும் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
யத்ர: ஸுப்தோ – எந்த நிலையில் ஆழ்நிலை உறக்கத்தில்
ந கஞ்சன
காம் காமயதே - எந்தப்
பொருளுக்கும் ஆசைப்படாத நிலை
ந ஸ்வப்னேம்
ப்ஶ்யதி - எந்தக்
கனவும் காண்பதில்லை.
ஆகாயத்தில்
பறந்து கொண்டிருக்கும் கழுகுக்கு களைப்பு ஏற்பட்டால் அது ஓய்வெடுக்க தன் கூட்டிற்கு
செல்வது போல,
ஜீவனாகிய நாம் விழிப்பு நிலையிலும், கனவிலும் உடலாலும்,
மனதாலும், இந்திரியங்களாலும் செய்த செயல்களினால்
ஏற்படுக் களைப்பை போக்க நமது கூடாகிய ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
ஸ்லோகம்-20
ஆழ்நிலை
உறக்கத்தில் இருக்கும் நம்முடைய
அவித்யா நமது சுபாவமா, இல்லையா? எந்தவிதமான சம்பந்தம்? என்று விளக்கப்படுகிறது.
அவித்யாவுக்கு எதிராக
வித்யா இருப்பதால், அது வந்தவுடன் அவித்யா சென்று விடும். எனவே எது நம்மிடமிருந்து
நீக்க முடியுமோ அது நம்முடைய சுபாவமல்ல.
ஸ்தூல, சூட்சும சரீரத்தை நீக்கி ஆழ்நிலை
உறக்கத்திற்கு போக முடிவது போல, அவித்யாவை நீக்கி ஆத்ம ஞானம்
அடையலாம்.
ஒவ்வொரு
ஜீவர்களிடம் ஹிதா என்ற பெயருடைய நாடி இருக்கிறது.
இது தலைமுடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டமுடையது அதன் வழியாகத்தான்
ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறான்.
இதனால் களைப்பு நீங்கி இதமாக இருக்கிறான். அந்த நாடிக்குள் விதவிதமான ரஸங்கள் இருக்கின்றது. நம்முடைய வாஸனைகள் அந்த நாடிக்குள்தான்
இருக்கின்றது. அப்படி
போகும்போது நாடிக்குள் இருக்கும் வாசனைகளிலிருந்து பிராரப்த கர்ம
பலன்படி சிலவற்றை எடுத்துக் கொண்டு கனவுக்கு செல்கின்றான். இவன் பார்ப்பவைகளெல்லாம் வெறும் தோற்றமே
அது இவனிடத்தில் இருக்கும் அவித்யாவினால்தான் இந்த கனவு தோற்றங்கள் உருவாகின்றன. இவனுக்கு அனைத்தும் நான் என்று உணரும்
ஞானம் வரும்போது அவனிடத்திலிருந்து அவித்யா நீங்கி ஆனந்தமயமான மோட்சத்தை அடைகிறான். ஆகவே ஆத்மாவுக்கும் அவித்யாவுக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை.
மந்திரவிளக்கம்:
ஸ்தூல
உடம்பில் ஹிதா என்ற நாடி செல்கிறது. வெண்மையான, நீலமான, சிவப்பான, பச்சையான இப்படிப்பட்ட
வர்ணங்களையுடைய ரஸங்கள் நாடியில் இருக்கின்றது.
அத2 யத்ர:
ஏனம் க்4னந்தி ஏவ - யாரோ கொல்ல வருகிறார்கள்
ஜினந்தி
ஏவ, ஹஸ்தி ஏவ, விச்சா2ய ஏவ க3ர்தம் ஏவ பததி - அடிமையாக இருப்பது போல, யானை துரத்துவது
போல, குழியில் விழுவது போல பாவ-கர்ம வசத்தினால்
கனவில் அனுபவிக்கிறோம்.
யதே3வ ஜாக்3ரத்3 ப4யம் பஶ்யதி - ஜாக்ரத் அவஸ்தையில் எப்படி பயந்து கொண்டு சில விஷயங்களை
அனுபவிக்கிறோமோ அதே போல கனவிலும் பயந்து கொண்டு சிலவற்றை அனுபவிக்கிறான். கனவில்
தேவர்களைப் போலவும்,
ராஜாவை போலவும், கடவுளாகவும் நினத்துக் கொண்டு
இதுதான் என் உலகம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றான்.
இவ்விதமான
ஞானத்தினால் அவித்யாவானது நீக்கப்படுகிறது.
அஹம்
அஸ்மி இதம் ஸர்வஹ
– நானே பார்க்கப்படும் அனைத்துமாக இருக்கிறேன் என்று ஒருவன் எப்பொழுது
அறிகின்றானோ அப்பொழுதே அவன் அவித்யா நீங்கப்பெற்று முக்தனாகிறான்.
ஸஹ
அஸ்ய பரமோ லோகஹ
– இந்த ஞானிக்கு அவன் அடைந்த இந்த நிலையானது மிகவும் மேலானது
----0000----
No comments:
Post a Comment