Thursday, November 16, 2017

ப்ருஹதாரண்ய உபநிஷத்-பகுதி-10

ப்ருஹதாரண்யக உபநிஷத்-பகுதி-10
அத்தியாயம்-5
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
திருத்தம் செய்யப்பட்டது17-03-2022
 
முகவுரை (சங்கரரின் விசாரம்)
இதில் 15 பகுதிகள் உள்ளதுஅவற்றில் 11  பகுதிகள் உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றதுமுதல் பகுதி ஓம்கார உபாஸனை, பிறகு 10 பகுதிகள் ஹிரண்யகர்ப்பனைக் குறித்த உபாஸனைகள்ஒரு பகுதி நற்பண்புகள், தவம் இவற்றைப்பற்றி விளக்குகிறது மற்றவைகள் பிரார்த்தனைப்பற்றி பேசுகின்றது.
 
விசாரம்:
அத பூர்ணம், இத பூர்ணம் என்று சொல்வதனால் பிரம்மமானது இரண்டு விதமாக இருக்கின்றதுஒன்று காரிய பூரணம் மற்றொன்று காரண பூரணம்எனவே எப்படி கடலில் நீரும், அலைகளும் இருக்கின்றதோ அது மாதிரி த்வைத, அத்வைத ரூபமாக இருக்கின்றது.

கேள்வி: ஒரே பொருள் எப்படி இருவேறு நிலைகளாக இருக்க முடியும்? அவஸ்தாத் பேதாத் என்ற காரணமாக, எப்படி பாம்பு ஒரு நிலையில் நீண்டிருக்கும் வேறொரு நிலையில் சுருண்டு வட்டமாக காட்சியளிக்கின்றதோ அது போலவா அல்லது திருஷ்டி பேதாத்: எந்த நோக்கிலே பார்க்கிறாயோ அந்த நிலையில் தென்படும் காட்சிப் போலவா?.  உதாரணமாக மரம் ஒன்று அதிலுள்ள கிளைகள் பலவாக இருப்பது போல பிரம்மமானது இரண்டு ரூபமாகவும் தெரிகின்றதா?
பதில்:   அவஸ்தாத் பேதாத் அடிப்படையில் பார்த்தால், எந்த அவஸ்தையிலும் விகாரத்துடன் கூடியது என்ற நிலை ஏற்படும்எது விகாரத்திற்கு உட்பட்டதோ அது அநித்யம்எது அநித்யமோ அது பிரம்மமல்ல, அது நமது புருஷார்த்தமல்ல. த்ருஷ்டி பேதாத் நிலையில் அவயவத்துடன் கூடியதாகி விடும்ஆனால் பிரம்மம் அவயவங்களற்றது.

ஸ்ருதி விரோதாத்உபநிஷத் தெளிவாக நிஷ்கலம், நிர்விகாரம், அஜஹ அத்வைதம் என்ற லட்சணங்களை கூறியிருப்பதற்கு விரோதமாக இருக்கின்றது.

தியானத்தில் விகல்பம் உண்டுதிருஷ்டியில் விகல்பம் உண்டுஅறிவில் விகல்பம் இருக்க முடியாதுபிரம்ம ஞான விஷயத்தில் விகல்பம் கிடையாதுபிரம்மத்தை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
 
த்வைதமானது ஸ்ருதியினால் நிந்திக்கப்பட்டுள்ளது, நிஷேதம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அத்வைதம் எங்கும் நிஷேதம் செய்யப்படவில்லை. த்வைதத்தை சுபாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், வேதத்தின் கர்ம காண்டம் த்வைதத்தை உபதேசிக்கவில்லை. அதை லட்சியமாக கொண்டு சில சாதனங்களை கூறியிருக்கிறதுஇந்த இடத்தில் சத்யமா, மித்யாவா என்று பேசவில்லை.

த்வைதத்தை நீக்க முடியாதவர்களுக்கு கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஞானத்திற்கு தகுதியடைந்து பிறகு ஞானகாண்டம் மூலமாக சென்று பிரம்மத்தை அடையலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 பகுதி-1 : ஆகாச, ஓம்கார தியானம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்லோகம்-1
கம்ஆகாசம்; சிதாகாசம் (என்றும் இருப்பது), பூதாகாசம் (பஞசபூதங்களில் உள்ள ஒரு பூதம்)
வாயுரம்: எதில் வாயு சஞ்சரிக்கின்றதோ அது சிதாகாசத்தை குறிக்கின்றதுஅது நானாக இருக்கின்றேன் என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும்இது முடியாவிட்டால் விரிந்து பரந்து இருக்கும் ஆகாசத்தையே தியானித்து சகுண உபாஸனை செய்யலாம்.
 
வேதஹ அயம் பிராமனஹ விதுஹு: இந்த ஒம்காரமே வேதமாக இருக்கின்றது என்று ரிஷிகள் அறிந்திருக்கின்றார்கள்.
வேத ஏனேன யத் வேதித்வயம்: இதன் துணைக் கொண்டும் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்துக் கொள்ளலாம்ஒம் என்ற சப்தத்தை நிர்குண ஆகாசத்தை அல்லது வாயு சஞ்சரிக்கின்ற ஆகாசத்தை தியானிக்கலாம்
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி-2 :  மூன்று பண்புகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில் மூன்று பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகள்,
1. தமஹ;
2. தானம்;
3. தயா
 
பிரஜாபதியின் மகன்கள் தந்தையிடமே குருகுலவாசம் செய்தார்கள்அவர்கள் தேவர், மனிதன், அசுரர் என்ற மூன்று குணங்களை கொண்டவர்களாக எடுத்துக் கொள்ளலாம்குருகுல வாசம் முடிந்ததும் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினர்அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உபதேசம் செய்ய ஆரம்பித்தார்முதலில் தேவ குணமுடையவனுக்கு  என்று உபதேசித்துவிட்டு புரிந்ததா என்று கேட்க, அவர்களும் எங்களுக்கு புரிந்தது என்று கூறினர்என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது தமத்தை பின்பற்ற வேண்டும் என்று உபதேசித்தீர்கள் என்று பதில் கூறினார்கள்குருவும் ஆமோதித்தார்இவர்கள் சத்துவ குணம் பிரதானமுடையவர்கள் ஆதலால் இந்த உபதேசம் இவர்களுக்கு பொருத்தமானது.

அடுத்ததாக மனித குணமுடையவர்களுக்கும் அதே அக்ஷரத்தை () உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ, அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தானம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற, நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.
 
அடுத்ததாக அசுர குணமுடையவர்களுக்கும் அதே அக்ஷரத்தை () உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ, அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தயாவுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற, நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.
 
இந்த உபதேசத்தைத்தான் இடியானது (தெய்வீக வாக்கு) -- என்று சத்தத்துடன் இடித்துக் காட்டுகின்றது  இதிலிருந்து நாம் தமத்துடன், தானத்தையும், தயவையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறதுதமம் என்பது இந்திரியகட்டுபாட்டையும், தானம் என்பது பகிர்ந்துண்டு வாழும் பண்பையும், தயை என்பது கருணை காட்டும் குணத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றதுஇந்த மூன்றையும் மனிதன்தான் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும், ஏனென்றால் மனிதனிடத்தில்தான் இந்த மூன்று குணங்களும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 3 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-1
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹ்ருதயத்தை ஆலம்பனமாக வைத்துகொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும். நமது மனமானது மூன்று விதமாசெயல்படுகிறதுஇந்திரியங்கள் மூலமாக வெளி விஷயங்களை கிரகிக்கிறது, அதன் மூலம் ஜீவனுக்கு அனுபவத்தை தருகிறது, வேறு உலகத்திற்கு செல்வதற்கும் உதவுகிறதுஅப்படிப்பட்ட ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 4 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-2
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹிரண்யகர்ப்பனுக்கு மூன்று குணங்களை கொடுத்து உபாஸனம் செய்தல்அவைகள்
1.   சத்தியம்மூர்த்த-அமூர்த்தமாக தியானித்தல்
2.   மஹத்மிகப்பெரியது என்று தியானித்தல்
3.   யக்ஷம்பூஜிக்கத்தகுந்தவன் என்று தியானித்தல்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 5 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-3
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை சூரியனிலும், நமது வலது கண்ணிலும் வைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 6:  ஹிரண்யகர்ப்ப உபாசனை-4
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹிரண்யகர்ப்பனுக்கு ஐந்து குணங்கள் கொடுத்து உபாஸனம் செய்தல்அவைகள்
1.   மனோமயம்
2.   பாஸதீயபிரகாச ரூபமாக
3.   ஸம்வஸ்ய ஈசானஹ
4.   ஸர்வஸ்ய அதிபதி
5.   ஸர்வஸ்ய பிராதாஸ்யஎல்லாவற்றையும் ஆள்பவர்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 7 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-5
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை மின்னலாக தியானித்தல்இப்படி தியானம் செய்வதால் நம்முடைய அறிவு பிரகாசமடையும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 8:  ஹிரண்யகர்ப்ப உபாசனை-6
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை வேதரூபமாகவே தியானித்தல்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 9:  ஹிரண்யகர்ப்ப உபாசனை-7
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை நம் வயிற்றிலிருக்கின்ற வைஸ்வாநரன் என்று அழைக்கப்படுகின்ற அக்னியாக தியானித்தல்இதனால் உடல் வலிமை, உணவு ஜீரணிக்கும் சக்தி பெருகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 10 :  உபாசகர்களின் கதி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்பவர்களின் கதியானது விவரிக்கப்படுகின்றதுஇவர்கள் பிரம்மலோகத்திற்கு செல்யவார்கள்சில தேவதைகளை கடந்து செல்ல வேண்டும்அந்தந்த தேவதைகள் நமக்கு வழிகாட்டுவார்கள்அவர்கள் துணைக் கொண்டு பிரம்மலோகம் அடையலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 11 :  தவமாக பாவிக்க வேண்டியவை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

v       நமக்கு வருகின்ற நோய்களை தவமாக பாவிப்பதே மிகப்பெரிய தவமாகும். இது வினைப்பயனை அனுபவிப்பதை உணர்த்துகிறதுஇந்த நோய் வேண்டாம் என்று நினைப்பது இறைவனின் நியதியை அவமதிப்பது போன்றதாகும்எனவே அந்த நோயை இறைவனின் பிரசாதமாக நினைத்து தவமாக அனுபவிக்க வேண்டும்தவம் என்பது கஷ்டத்தை எடுத்துக் கொள்வது என்று பொருள் கொண்டால், இது இறைவனால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
v     நாம் இறந்த பின் நமது உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது போல தியானிக்க வேண்டும்இது மிக மேலான தவமாகும்.
v      இறந்த பிறகு நம்முடலை, தகனம் செய்வது போலவும் நாம் தியானிக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை தியானத்தை தொடர வேண்டும்இவ்வாறு தியானிப்பவர்கள் மேலான உலகத்தை அடைகிறார்கள்இதனால் இந்த தேகத்தை இன்பத்தைக் கொடுக்கும் விஷயங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 12 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-8
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை அன்னரூபமாகவே தியானித்தல், பிராணரூபமாகவும் தியானித்தல். இப்படி தியானம் செய்வதால் நல்ல உணவு கிடைக்கும், பிராணன் நன்கு வேலை செய்யும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 13 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-9
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை பிராணரூபமாக நான்கு விதமாக தியானித்தல்அவைகள்
v  உக்தம்நம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருப்பவராக
v  யஜுஇந்த பிராணன் இருப்பதால்தான் மற்றவர்களுடன் விவகாரம் செய்ய முடிகிறது
v  சாமசமத்துவ குணத்துடன் இருக்கிறது
v  க்ஷத்ரம்நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறது

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 14 :  ஹிரண்யகர்ப்ப உபாசனை-10
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிரண்யகர்ப்பனை காயத்திரி மந்திரத்திலுள்ள பதங்களை வைத்துக்கொண்டு தியானித்தல்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகுதி- 15:  பிரார்த்தனை  
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈஸாவாஸ்ய உபநிஷத்திலுள்ள கடைசி நான்கு மந்திரங்களின் விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்சத்யத்தின் முகமானது தங்கமயமான பாத்திரத்தில் மூடப்பட்டுள்ளதுஇந்த உலகம் கொடுக்கும் இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து விடுகிறார்கள்.
 
முடிவுற்றது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அத்தியாயம்-6
விளக்கவுரை
பகுதி-1  இதில் பதினாறு மந்திரங்கள் உள்ளதுஇதில் ஹிரண்யகர்ப்பனை பிராண ரூபமாகவே தியானிக்க வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளதுஇதனுடைய விளக்கம் சாந்தோக்ய உபநிஷத் - அத்யாயம்-5, பகுதி-1 உள்ளது.
பகுதி-2    இதிலும் பதினாறு மந்திரங்கள் உள்ளது. இதனுடைய விளக்கங்கள் சாந்தோக்ய உபநிஷத் - அத்யாயம்-5, பகுதி-3 உள்ளது.
பகுதி-3  ஹோமங்கள், யக்ஞங்கள் இவைகளைப்பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
பகுதி-4  கிரகஸ்த ஆசிரமத்திலுள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளதுபிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
----0000----

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...