குரு பூர்ணிமா
ஸ்வாமி
குருபரானந்தா
குடிசகன் - குடிசையில் வாழ்பவர்
பஹுதகன் - நதிக்கரையி வாழ்பவர்
பாரிவிராஜகன் - ஒரு
இடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்காதவர்
சாதுர்மாஸ்ய விரதம் -
நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் இருப்பது என்று முடிவெடுப்பது. மழை காலத்தில் இந்த மாதிரியான முடிவை
எடுப்பார்கள்.
தாம் பெற்ற
ஞானத்துக்காகவும், நன்றிகடனுக்காகவும் வாழ்நாள் முழுவதும் வேதம், ஈஸ்வரன், குரு
ஆகிய மூவரையும் வழிபட வேண்டும்.
வேதாந்தம் படிக்கும்
அனைத்து மாணவர்களும் குருவை வணங்கும் நாள்.
சதாசிவனில் ஆரம்பித்து
பரபரம்பரையாக வந்த எல்லா குருமார்களையும் தியானித்து வழிபடும் நாள்.
ஆத்ம ஞானத்திற்கு
அதிஷ்டான தேவதை தட்சிணாமூர்த்திதான்.
வேதமானது இரண்டு வகையாக
பிரிக்கலாம்.
தர்ம ஸாஸ்திரம் - வாழ்க்கையை
எப்படி நெறியுடன் வாழ வேண்டும் என்று
உரைப்பது,
மோட்ச சாஸ்திரம் - ஆத்ம,
அநாத்ம விவேகம்.
பிரம்ம சூத்திரத்தை
எழுதியவர் - வேத வியாஸர். இதில்
கீழ்கண்டவைகள் விளக்கப்பட்டிருக்கிறது.
·
உபநிஷத்
வாக்கியங்கள் எதை உணர்த்துகிறது
·
மற்ற மதத்தினர்
கருத்தை நிராகரிக்கும் கருத்துக்கள்
·
மோக்ஷத்திற்கு
தேவையான சாதனங்கள் படிப்படியாக விவரித்தல்
·
மோக்ஷத்தின் ஸ்வரூபம்
பிரஸ்த்னாத்ரயம் என்பது
வேதம், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் மூன்றையும் அடக்கியது. இதற்கு ஆதிசங்கராச்சாரியார் விளக்கம்
எழுதியிருக்கிறார்.
பக்தனின்
லட்சணங்கள்
Ø தன்னிடத்திலே எதுவும் இல்லாதவன்
Ø தமம்
Ø மன அமைதி
Ø அவனைச் சுற்றி ஆனந்தமயமான சூழல்
Ø எதையும் சார்ந்தில்லாமல் இருப்பவன்
Ø பக்தி ஞானம் நிரம்ப பெற்றவன்
Ø எந்த உயிர்களிடத்தும் பகை உணர்ச்சியில்லாதவன்
Ø எல்லா உயிர்களையும் சம்மாக பாவிக்கும்
மனதுடையவன்
Ø பரந்த மனமுடையவன், இறைவனிடத்தில் முழு
பக்தியுடையவன்
Ø எல்லா உயிர்களிடத்திலும் கருணையுடையவன்
பக்தன் அடையும் பலன்
Ø வைராக்யத்தைக் கொடுக்கும்
Ø இகலோக, பரலோகத்தில் உள்ள போகம் தரும்
பொருட்களில் ஆசை இல்லாதவன்
No comments:
Post a Comment