Tuesday, June 9, 2015

நாரதர் பக்தி சூத்திரம்

நாரதர் பக்தி சூத்திரம்

ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அருளிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.  விரிவான விளக்கத்திற்கு புத்தகத்தை படிக்கவும்:

AjÉÉiÉÉå pÉÌ£Çü urÉÉZrÉÉxrÉÉqÉÈ     || 1 ||
இப்போது பக்தியை பற்றி விளக்கப்படுகின்றது.

xÉÉ iuÉÎxqÉlÉç mÉUqÉmÉëåqÉÃmÉÉ       || 2 ||
உண்மையில் பக்தி என்பது மிக மேலான இறையன்பின் இயல்பே.

AqÉ×iÉxuÉÃmÉÉ cÉ               || 3 ||
மேலும் அது அமிர்தத்தின் இயல்பையும் உடையது

rÉssÉokuÉÉ mÉÑqÉÉlÉç ÍxÉ®Éå pÉuÉÌiÉ AqÉ×iÉÉå pÉuÉÌiÉ iÉ×miÉÉå pÉuÉÌiÉ || 4 ||
அதை (இந்த மேலான பக்தியை) அடைந்த தும், மனிதன் பூரணம் அடைகிறான்அமரத்துவம் பெறுகிறான், பரம் திருப்தியடைகின்றான்.

rÉimÉëÉmrÉ lÉ ÌMüÎgcɲÉgNûÌiÉ lÉ zÉÉåcÉÌiÉ lÉ ²å̹ lÉ UqÉiÉå lÉÉååixÉÉWûÏ pÉuÉÌiÉ || 5 ||
அதை (பக்தியை) அடைவதால், வேறு எதையும் அவன் விரும்புவதில்லை, வருந்துவதில்லை ( உற்றார் மரணம், இழப்புக்களை நினைத்து ) எதையும் வெறுப்பதில்லை, புலன் இன்பத்தில் களிப்பதில்லை.  (உலகப் பொருட்கள் எதையும் அடைய ) ஆர்வம் கொள்வதுமில்லை.

rÉe¥ÉÉiuÉÉ qɨÉÉå pÉuÉÌiÉ xiÉokÉÉå pÉuÉirÉÉiqÉÉUqÉÉå pÉuÉÌiÉ || 6 ||
இறைவனை அறிவதால் மனிதன் பித்தனாகின்றான்அமைதி எய்தி, ஆத்மானந்தக் களிப்பில் முற்றிலுமாகத் திளைக்கின்றான்.

xÉÉ lÉ MüÉqÉrÉqÉÉlÉÉ ÌlÉUÉåkÉÃmÉiuÉÉiÉç || 7 ||
பக்திக்கு ஆசைப்படும் குணமில்லை, ஏனெனில் அது துறவின் இயல்பையுடையது.

ÌlÉUÉåkÉxiÉÑ sÉÉåMüuÉåSurÉÉmÉUlrÉÉxÉÈ  || 8 ||
அதற்கு மாறாக ஆசைகளை அடக்குவதென்பது உலக விவகாரங்களையும், விதிக்கப்பட்ட செயல்களையும் ஆண்டவனிடமே விட்டுவிடுவதாகும்.

iÉÎxqɳÉlrÉiÉÉ iÉ̲UÉåÍkÉwÉÔSÉxÉÏlÉiÉÉ || 9 ||
நிரோதம் என்பது இறைவனிடத்து ஏகாக்ர பக்தியும், இறைவனுக்கு எதிரானவற்றில்
எல்லாம் உதாசீனமும் என்பதாகும்.

AlrÉÉ´ÉrÉÉhÉÉÇ irÉÉaÉÉåÅlÉlrÉiÉÉ      || 10 ||
ஐக்கியம் அல்லது ( கலப்பற்ற ) விசேஷ பக்தி என்பது எல்லாப் பிற ஆதாரங்களையும் விட்டு விடுவதாகும்.

sÉÉåMüuÉåSåwÉÑ iÉSlÉÑMÔüsÉÉcÉUhÉÇ iÉ̲UÉåÍkÉwÉÔSÉxÉÏlÉiÉÉ      || 11 ||
உலக விவகாரங்களையும், வேத த்தில் விதித்துள்ள சம்ஸ்காரங்களையும் செய்வது, அவற்றுக்கு எதிரானவற்றைச் செய்யாமலிருப்பது.

pÉuÉiÉÑ ÌlɶÉrÉSÉRûrÉÉïSÕkuÉïÇ zÉÉxÉëU¤ÉhÉqÉç               || 12 ||
ஆன்மீக நிலையில் நன்கு ஸ்திரப்பட்ட பிறகும் சாஸ்திர உண்மைகளை ஒருவன் காப்பாற்ற வேண்டும்.

AlrÉjÉÉ mÉÉÌiÉirÉÉzÉÇMürÉÉ                           || 13 ||
அப்படி ( காப்பாற்ற ) இல்லையெனில், வீழ்ச்சியுறும் ஆபத்துண்டு.

sÉÉåMüÉåÅÌmÉ iÉÉuÉSåuÉ ÌMüliÉÑ pÉÉåeÉlÉÉÌSurÉÉmÉÉUx¨uÉÉzÉÉUÏUkÉÉUhÉÉuÉÍkÉ || 14 ||
சமூக பழக்க வழக்கங்களும் அவ்விதமே ( சாஸ்திர விதிகளில் சொல்லப்பட்டன் என்ற அளவுக்கு ) கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் உண்பதும், பருகுவதும் உடுப்பதும் இந்த உடல் இருக்கும் வரை தொடர வேண்டியது.

iÉssɤÉhÉÉÌlÉ uÉÉcrÉliÉå lÉÉlÉÉqÉiÉpÉåSÉiÉç                || 15 ||
பல்வேறு கோணங்களிலிருந்து பார்ப்பதால், பல்வேறு லக்ஷணங்களை பெற்றுள்ளது பக்தி.

mÉÔeÉÉÌSwuÉlÉÑUÉaÉ CÌiÉ mÉÉUÉzÉrÉïÈ                      || 16 ||
பராசர மகரிஷியின் புதல்வரான வியாசர் இறைவனுக்கு பூஜை முதலான செய்வதில் ஆர்வமும், பற்றுமே பக்தி என்று கருதுகிறார்.

MüjÉÉÌSÎwuÉÌiÉ aÉaÉïÈ                                || 17 ||
இறைவனது மகிமை, பெருமை, லீலைகள் பற்றிப் பேசுவதே பக்தி என்பது கர்க முனிவரது கருத்து.

AÉiqÉUirÉÌuÉUÉåkÉålÉåÅÌiÉ zÉÉÍhÉSsrÉ                    || 18 ||
ஆன்மாவில் இன்புறுவதற்குத் தடையாக இல்லாமை என்று சாண்டில்யர் கருதுகிறார்.
lÉÉUSxiÉÑ iÉSÌmÉïiÉÉÎZÉsÉÉcÉÉUiÉÉ U̲xqÉUhÉå mÉUqÉurÉÉMÑüsÉiÉåÌiÉ || 19 ||
ஆனால் நாரதரின் கருத்துப்படி பக்தியின் இன்றிய்மையாத இயல்பு இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து, தன் நியம நிஷ்டைகள் உட்பட அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பதும், இறைவனை மறக்க நேர்ந்தால் தீவிர வேதனைப்படுவதுமே ஆகும்.

AxirÉåuÉqÉåuÉqÉç                                    || 20 ||
இதற்கு பல சான்றுகள் உள்ளன.

rÉjÉÉ uÉëeÉaÉÉåÌmÉMüÉlÉÉqÉç                             || 21 ||
உதாரணமாக வ்ரஜ அல்லது பிருந்தாவனத்து கோபியர்கள் போல பக்தி செலுத்த வேண்டும்.

iɧÉÉÌmÉ lÉ qÉÉWûÉiqrÉ¥ÉÉlÉÌuÉxqÉ×irÉmÉuÉÉSÈ               || 22 ||
அங்கும் கூட (கோபியரது அன்பிலும்) இறைவனது பெருமையும், மகிமையும் பற்றிய மறதி இல்லை.

S̲WûÏlÉÇ eÉÉUÉlÉÉÍqÉuÉ                              || 23 ||
அது ( இறைவனது மகிமை பற்றிய உணர்வு ) இல்லாத அன்பு, ஒரு பெண் ஒரு ஆணிடத்தில் கொள்ளும் காமமே ஆகும்.
இறைவனது பெருமை பற்றிய உணர்வு உள்ளத்தில் இல்லையென்றால், அந்த அன்பு வெறும் ஆண்-பெண் இடையே தோன்றும் காமம்தான்.
கோபியரின் அன்பு சுத்தப் பிரேமை, மாசற்ற அன்பு, ஏனெனில் அவர்களுக்கு கிருஷ்ணரின் தெய்வநிலை நன்கு தெரிந்தே, அதில் மூழ்கியிருந்தார்கள்அவர்கள் தம்மை மறந்த தெய்வக் களிப்பில் இருந்தனர்அவர்களது புலன்களும், மனங்களும் செயலற்றுப் போயினவெளியுலகைப் பற்றிய பிரக்ஞையே அவர்களுக்கு இல்லை. இதுவே தூய அன்பு.


lÉÉxirÉåuÉ iÉÎxqÉxiÉixÉÑZÉxÉÑÎZÉiuÉqÉç                   || 24 ||
இந்தக் காமவயமான அன்பில், அடுத்தவரது இன்பம் முக்கியமாகக் கருதப்படுவதில்லை.

xÉÉ iÉÑ MüqÉï¥ÉÉlÉrÉÉåaÉÉåprÉÉåÅmrÉÍkÉMüiÉUÉ                || 25 ||
அது பராபக்தி செயல், ஞானம், யோகம் இவற்றினின்று மேம்பட்டது
TüsÉÃmÉiuÉÉiÉç                                     || 26 ||
இவை அத்தனையின் பயனுடைய இயல்பு அல்லது உருவத்தை உடையதால்.

DµÉuxrÉÉmrÉÍpÉqÉÉlɲåÌwÉiuÉÉSè SælrÉÌmÉërÉiuÉÉŠ           || 27 ||
பக்தியானது மற்றதை காட்டிலும் சிறந்த துஏனெனில், இறைவன் அகந்தையை வெறுக்கின்றான், அடக்கத்தை நேசிக்கின்றான்.

iÉxrÉ ¥ÉÉlÉqÉåuÉ xÉkÉlÉÍqÉirÉåMåü                       || 28 ||
சிலர் கருத்துப்படி (அன்புக்குரிய பொருளைப் பற்றிய ) அறிவே, அறிவு மட்டுமே பக்தியை அடையும் சாதனம்.

AlrÉÉålrÉÉ´ÉrÉiuÉÍqÉirÉlrÉå                            || 29 ||
ஞானமும் பக்தியும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பது மற்றொரு சாரார் கருத்து.

xuÉrÉÇ TüsÉÃmÉiÉåÌiÉ oÉë¼MÑüqÉÉUÈ                      || 30 ||
பக்தி அதனுடைய பலனுமாக இருக்கிறதுஎன்று கருதுகிறார் பிரம்மகுமாரனான நாரதர்.

UÉeÉaÉ×WûpÉÉåeÉlÉÉÌSwÉÑ iÉjÉæuÉ SعiuÉÉiÉç
ஏனெனில் அரசன், வீடு, உணவு என்பனவற்றிலும் அப்படித்தான் காணப்படுகின்றது

lÉ iÉålÉ UÉeÉmÉËUiÉÉåwÉ ¤ÉÑkÉÉzÉÉÎliÉuÉÉï
ராஜகுமாரன் அரசனானதும், பசித்தவன் திருப்தியுற்றதும் வெறும் விஷய ஞானத்தினால் மட்டுமல்ல.

iÉxqÉÉixÉæuÉ aÉëÉ½É qÉÑqÉѤÉÑÍpÉ:
எனவே, மோட்சம் அல்லது விடுதலையை விரும்புவோர், அதையே, மேலான பக்தி மார்க்கத்தையே கடைப்பிடிக்க வேண்டும்ஞானம் முடியுமிடத்தில்தான் பக்தியும் முடிகின்றது.

iÉxrÉÉ xÉÉkÉlÉÉÌlÉ aÉÉrÉÎliÉ AÉcÉÉrÉÉï
பக்திக்கான சாதனங்களை ஆச்சாரியர்கள் பாடியிருப்பதை இனிவரும் சில சூத்திரங்கள் விளக்குகின்றது.

iɨÉÑ ÌuÉwÉrÉirÉÉaÉÉiÉç xÉÇaÉirÉÉaÉÉŠ
எல்லா சிற்றின்பங்களையும் ( இந்திரிய சுகங்களையும் ) இந்திரிய விஷயங்களில் பற்றுதலையும் விட்டு விடுவதால் பராபக்தி கிடைக்கிறது.

AurÉÉuÉ×iÉ pÉeÉlÉÉiÉç
இடைவிடாத வழிபாட்டால், பூசனையால் பக்திப் பயிற்சியில் வெற்றி கிடைக்கும்.

sÉÉåMåüÅÌmÉ pÉaÉuÉiÉç aÉÑhÉ´ÉuÉhÉMüÐiÉïlÉÉiÉç
உலகில் சாதாரண விவகாரங்களில், செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது கூட, பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய பேச்சுக்களை சிரவணம் செய்வதாலும் ( கேட்பதாலும் ) கீர்த்தனை செய்வதாலும் பக்தி வளரும்.

qÉÑZrÉiÉxiÉÑ qÉWûiM×ümÉrÉæuÉ pÉaÉuÉiM×ümÉÉsÉåzÉɲÉ
ஆனால் பக்தியென்பது முக்கியமாகச் சான்றோர்களின், மகான்களின் கிருபையாலும், ஓரளவு இறையருளாலும்தான் கிடைக்கும்.

qÉWûixÉ…¡ûxiÉÑ SÒsÉïpÉÉåÅaÉqrÉÉåÅqÉÉåbɶÉ
ஆனால், மகாத்மாக்களுடைய உறவு கிடைப்பது கடினம், அணுக இயலாதது, அதன் சக்தி அல்லது விளைவோ தோல்வியற்ற நிச்சயமானது

sÉprÉiÉåÅÌmÉiÉiM×ümÉrÉæuÉ                              || 40 ||
மகான்களுடைய சத்சங்கம் அல்லது உறவு இறைவனது அருளால்தான் கிட்டும்.

iÉÎxqÉlxiÉ‹lÉå pÉåSÉpÉÉuÉiÉç
ஏனெனில் இறைவனுக்கும், அவனது பக்தனுக்குமிடையே வேற்றுமை கிடையாது.

iÉSåuÉ xÉÉkrÉiÉÉÇ iÉSåuÉ xÉÉkrÉiÉÉqÉç
அது மட்டுமே அடையப்படட்டும், அது மட்டுமே அடையபடட்டும்.

SÒxxÉÇaÉÈ xÉuÉïjÉæuÉ irÉÉerÉÈ
எங்கும், எப்போதும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு தீயோர் நட்பை விலக்கப்பட வேண்டும்.

MüÉqÉ¢üÉåkÉqÉÉåWûxqÉ×ÌiÉpÉëÇzÉoÉÑήlÉÉzÉxÉuÉïlÉÉzÉMüÉUhÉiuÉÉiÉç
ஏனெனில் காமம், கோபம், மோகம், நினைவு தவறுதல், நல்லறிவை இழத்தல் போன்றவை அனைத்து இழப்புக்கும் காரணமாகும்.

iÉU…¡ûÉÌrÉiÉÉ AmÉÏqÉå xÉÇaÉÉixÉqÉÑSìÉrÉÎliÉ                 || 45 ||
இவைகள் ஆரம்பத்தில் சிற்றலைகளைப் போல எழுந்தாலும், தீயவர் நட்பால் பெருங்கடலாக மாறிவிடுகின்றது

MüxiÉUÌiÉ MüxiÉUÌiÉ qÉÉrÉÉqÉç? rÉÈ xÉ…¡Çû irÉeÉÌiÉ rÉÉå qÉWûÉlÉÑpÉÉuÉÇ xÉåuÉiÉå
ÌlÉqÉïqÉÉå pÉuÉÌiÉ || 46 ||
மாயையைக் கடப்பது யார்? மாயையைக் கடப்பது யார்? இந்திரிய விஷயங்களில் உள்ள தொடர்பைத் துறப்பவன், ஒரு மகானுக்குத் தொண்டாற்றுபவன், இது எனதென்ற எண்ணமில்லாதவன் எவனோ அவனே மாயையை கடக்கின்றான்.
உண்மையை மறைத்து, தோன்றி மறையும் கணநேரப் புலன் இன்பங்களில் உன்னை திருப்பிவிடுவது இறைவனின் மாயைமாயை மிக நுட்பமானது, அதைக் கண்டறிவது மிகக்கடினம். எனவே சாதகன் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்மகாத்மாவின் உறவால், ஒருவன் பற்றின்மையை எய்துகிறான்அவனுக்கு வைராக்கியம் பிறக்கிறதுபற்றின்மையால் மோகத்தை வெல்லுகிறான்மோகத்தை வென்ற நிலையில் மனம் அமைதியுற்று ஒருமுனைப்பட்டு, தன் ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதன் பிறகு ஒருவன் முக்தி அல்லது விடுதலை பெறுகிறான்.

rÉÉå ÌuÉÌuÉ£üxjÉÉlÉÇ xÉåuÉiÉå, rÉÉå sÉÉåaÉoÉlkÉqÉÑlqÉÔsÉrÉÌiÉ ÌlÉx§ÉæaÉÑhrÉÉå pÉuÉÌiÉ,
rÉÉåaɤÉåqÉÇ irÉeÉÌiÉ ||
எவன் ஏகாந்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு இருக்கின்றானோ; எவன் உலக பாசங்களை வேரோடு களைகின்றானோ, எவன் முக்குணங்களையும் தாண்டிச் செல்லுகின்றானோ, எவன் சேர்ப்பதையும், காப்பதையும் விட்டு விடுகின்றானோ அவனே மாயையை கடக்கின்றான்.

rÉÈ MüqÉïTüsÉÇ irÉeÉÌiÉ MüqÉÉïÍhÉ xÉÇlrÉxrÉÌiÉ ¨ÉÉå Ìlɲïl²Éå pÉuÉÌiÉ ||
கர்ம பலனைத் துறப்பவன், கர்மங்களையே துறப்பவன் எவனோ, அவன் இருமைகளைக் கடந்து செல்கிறான்.

rÉÉå uÉåSÉlÉÌmÉ xÉÇlrÉxrÉÌiÉ MåüuÉsÉqÉÌuÉÎcNû³ÉÉlÉÑUÉaÉÇ sÉpÉiÉå ||
எவன் வேதங்களையும், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளையும் கூட விட்டு விட்டு, இறைவன் பால் தூய, கலப்பற்ற, இடையறாத அன்பை எய்துகிறானோ
xÉ iÉUÌiÉ xÉ iÉUÌiÉ xÉ sÉÉãMüÉÇxiÉÉUrÉÌiÉ || 50  ||
அவனே மாயையைக் கடக்கின்றன், பிறவிப்பெருங்கடலையும், பிற தளைகளையும்) அவனே கடக்கிறான். மனித சமூகத்திர்கும் கடக்க உதவுகிறான்.

AÌlÉuÉïcÉlÉÏrÉÇ mÉëqÉxuÉÃmÉqÉç ||
இறைவன் பால் கொள்ளும் பிரேமை அல்லது அன்பின் இயல்பு சொற் கடந்தது..
அநிர்வசனீயம்சொற்களை கடந்த்து, வார்த்தைகளால் துல்லியமாக வர்ணிக்க முடியாதது.

qÉÔMüÉxuÉÉSlÉuÉiÉç ||
ஊமை சுவைத்த அனுபவம் போல.

mÉëMüÉzÉiÉå YuÉÉÌmÉ mÉɧÉå ||
பக்தி எங்கோ ஓரிடத்தில், எப்போதாவது ஒரு தகுந்த பாத்திரத்தில் ஒளிவீசுகிறது.

aÉÑhÉUÌWûiÉÇ MüÉqÉlÉÉUÌWûiÉÇ mÉëÌiɤÉhÉuÉkÉïqÉÉlÉqÉÌuÉÎcNû³ÉqÉç xÉÔ¤qÉiÉUqÉlÉÑpÉuÉÃmÉqÉç ||
பக்தி குணங்களற்றது, விருப்பங்களற்றது, கணத்திற்குக் கணம் விரிவடைவது, இடையறாது தொடர்வது, மிக நுட்பமானது,உன் அநுபவ இயல்பானது.
குணரஹிதம்குணங்களற்றது,
காமனாரஹிதம்விருப்பங்களற்றது
ப்ரதிக்ஷணஒவ்வொரு கணமும்,
வர்திமானம்வளருவது,
அவிச்சின்னம்இடையறாத ஒழுக்கு,
ஸூக்ஷமாதரம்மிக மிக நுட்பமானது,
அநுபவரூபம்உள்ளுணர்வு இயல்புடையது.

iÉimÉëÉmrÉ iÉSåuÉÉuÉsÉÉåMüuÉÌiÉ iÉSåuÉ ´ÉñhÉÉåÌiÉ iÉSåuÉ pÉÉwÉrÉÌiÉ iÉSåuÉ ÍcÉliÉrÉÌiÉ || 55 ||
அதை ( அந்த அன்பின் அனுபவத்தை ) பெற்றபின் பக்தன் தன் அன்புக்குரிய இறைவனை மட்டுமே காண்கிறான், அவனைப் பற்றி மட்டுமே கேட்கிறான், அவனைப் பற்றி மட்டுமே பேசுகிறான், அவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான்.

aÉÉæhÉÏ Ì§ÉkÉÉ aÉÑhÉpÉåSÉSÉiÉïÌS pÉåSÉ²É ||
இரண்டாம் நிலை பக்தி சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களுக்கேற்ப மூவகைப்படும் அல்லது மூவகை பக்தர்களுடைய தேவைகளையொட்டி (துன்பமுற்றவர்கள், ஞானத்தை விரும்புபவர்கள், பயனை வேண்டுபவர்கள்) அமையும்.

E¨ÉUxqÉÉSÒ¨ÉuxqÉÉiÉç mÉÔuÉïmÉÔuÉÉï ´ÉårÉÉrÉ pÉuÉÌiÉ ||
ஒவ்வொரு முந்தைய பக்தி நிலையும் அதனையடுத்து வரும் நிலையை விட, மேலான நன்மையை அடைய அதிகம் பயனுள்ளது.
முதல் நிலை சத்வ பக்தி, இரண்டாவது ரஜோ பக்தி, மூன்றாவது தமோ பக்தி.
தமஸ் என்பது இருள், செயலற்ற சோம்பல், ரஜஸ் அதிகாரம், அந்தஸ்து, இன்பத்தை விரும்பும் நிலை. சத்வமோ ஒருமை, இணக்கம், அமைதி, ஒளி. இவற்றுள் தமஸை விட ரஜஸ் சிறந்தது. ரஜஸை விட சத்வம் சிறந்ததுசத்வமே மிக மேலான நிலை. தமஸோ அனைத்தினும் கடைப்பட்ட நிலை தன் மனம் எந்த நிலையிலிருக்கிறது என்பதை சாதகன் விழிப்போடு கவனித்து, சத்சங்கம், ஜபம், கீர்த்தனை, தியானம் வழிபாடு முதலியவற்றால் சத்வத்தை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும்.

AlrÉÉxqÉÉiÉç xÉÉæsÉprÉÇ pÉ£üÉæ ||
உய்வுக்கு பிற வழிகளைக் காட்டிலும் பக்தி கடைப்பிடிக்க எளிதானது.

mÉëqÉÉhÉÉliÉUxrÉÉlÉmÉå¤ÉiuÉÉiÉç xuÉrÉÇ mÉëqÉÉhÉiuÉÉiÉç ||
ஏனெனில் அதற்கு பக்தி வேறொரு சான்று தேவையில்லை, பக்தியே பக்திக்குச் சான்று.  பக்தி நிலையில் இறைனோடு நேர்த் தொடர்பு பக்தனுக்கு கிடைத்து விடுகிறது.

zÉÉÎliÉÃmÉÉiÉç mÉUqÉÉlÉlSÃmÉÉŠ  || 60 ||
அமைதி வடிவாகவும் பேரானந்த வடிவாகவும் அது பக்தி இருப்பதால், பக்தி வழி எளிது.
பக்தியைக் கடைப்பிடித்தால் அது உடனேயே மன அமைதியையும், பேரின்பத்தையும் அளிக்கும்வேறு சான்றுக்கு என்ன தேவை? பக்தியே மன அமைதியாகவும், பேரின்பமாகவும் அனுபவிக்கப்படுகிறது.

sÉÉåMüWûÉlÉÉæ ÍcÉliÉÉ lÉ MüÉrÉÉï ÌlÉuÉåÌSiÉÉiqÉsÉÉåMüuÉåSiuÉÉiÉç ||
உலகத் துன்பங்களைப்பற்றி பக்தன் கவலை கொள்வதில்லை; ஏனெனில் அவன் தன்னையும், உலகையும், வேதங்களையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டான்

lÉ iÉiÉç ÍxÉ®Éæ sÉÉåMüurÉuÉWûÉUÉå WåûrÉÈ ÌMüliÉÑ TüsÉ irÉÉaÉxiÉiÉç xÉÉkÉlÉqcÉ MüÉrÉïqÉåuÉ ||
பக்தி எய்துவதற்காக ஒருவன் உலக விவகாரங்களை தன் கடமைகளை விட்டுவிடக் கூடாதுஅவற்றை நிச்சயமாகச் செய்ய வேண்டும். அவற்றின் பலனை மட்டுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விடவேண்டும்.

x§ÉÏkÉlÉlÉÉÎxiÉMüÌuÉËUcÉËU§ÉÇ lÉ ´ÉuÉhÉÏrÉqÉç ||
பெண்கள், செல்வம், நாஸ்திகர், பகைவன் ஆகியோர் வரலாறு, வர்ணனைகளைக்
கேட்கக் கூடாது.

AÍpÉqÉÉlÉSÇpÉÉÌSMÇü irÉÉerÉqÉç ||
அகந்தை, கபடம் அல்லது போலித்தனம், மற்றைய தீய பண்புகளைத் தொலைக்க வேண்டும்.

iÉSÌmÉïiÉÉÎZÉsÉÉcÉÉUÈ qÉlÉç MüÉqÉ¢üÉåkÉÉÍpÉqÉÉlÉÉÌS iÉÎxqɳÉåuÉ MüUhÉÏrÉqÉç || 65 ||
எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்பணித்துவிட்ட பின், அவன் (பக்தன்) தன் விருப்பம், கோபம், அகந்தை, கர்வம் போன்றவற்றை இறைவனிடமே காட்ட வேண்டும்.

̧ÉãmÉpÉÇaÉmÉÔuÉïMÇü ÌlÉirÉSÉxrÉÌlÉirÉMüÉliÉÉpÉeÉlÉÉiqÉMÇü mÉëåqÉ MüÉrÉï mÉëåqÉæuÉ MüÉrÉïqÉç ||
விசுவாசமுள்ள உண்மையான பணியாளன், அன்பு மனைவி இவர்கள் காட்டும் அன்பு, முன்னால் சொல்லப்பட்ட மூவகைகளையும் கடந்த அன்புஅப்படிப்பட்ட அன்பு ஒன்றே கடைப்பிடிக்கப்பட வேண்டும்,
முக்குண ஆதிக்கங்களையே கடந்து எப்போதும் இறைவனுக்கு தொண்டாற்ற விழையும் பக்தியே பக்தனுக்கு லட்சணமாக இருக்க வேண்டும்.

pÉ£üÉ LMüÉÎliÉlÉÉå qÉÑZrÉÉÈ ||
இறைவனிடம் இறைவனுக்காகவே ஒருமுகப்பட்ட பக்தியுடையவர்கள் முதன்மையான முக்கிய பக்தர்கள்.

MühPûÉuÉUÉåkÉUÉåqÉÉl¶ÉÉ´É×ÍpÉÈ mÉUxmÉUÇ sÉmÉqÉÉlÉÉÈ mÉÉuÉrÉÎliÉ MÑüsÉÉÌlÉ mÉ×ÍjÉuÉÏÇ cÉ ||
ஒருவருடன் ஒருவர் உணர்ச்சியால் கம்மிய குரலோடு, மயிர் கூச்செறிந்தவர்களாய், கண்ணீர் வழிய பேசிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் குலத்தையும், தாங்கள் பிறப்பெடுத்த இப்புவியையும் தூய்மைப்படுத்துகிறார்கள்.

iÉÏjÉÏïMÑüuÉïÎliÉ ÌiÉjÉÉïÌlÉ xÉÑMüqÉÏï MÑüuÉïÎliÉ MüqÉÉïÍhÉ xÉcNûÉx§ÉÏMÑüuÉïÎliÉ zÉÉx§ÉÉÍhÉ ||
பக்தர்கள் தலங்களை, தீர்த்தங்களை புனித நீர்த்துறைகளாக, புனிதத் தலங்களாக ஆக்குகிறார்கள்; சாதாரணச் செயல்களை நற்செயல்களாக மாற்றுகிறார்கள்; சாஸ்திரங்களுக்கு ஒரு புதிய ஏற்றத்தை தருகிறார்கள்.

iÉlqÉrÉÉ || 70 ||
ஏனெனில் அவர்கள் அவனுடைய (இறைவனுடைய) இயல்பினால் நிறைந்தவர்கள்.

qÉÉåSliÉå ÌmÉiÉUÉå lÉ×irÉÎliÉ SåuÉiÉÉÈ xÉlÉÉjÉÉÈ cÉårÉÇ pÉÔpÉïuÉÌiÉ ||
ஒரு பக்தன் தோன்றுங்கால் அவனது பித்ருக்கள் மகிழ்கிறார்கள், தேவர்கள் களிப்பில் ஆடுகிறார்கள், இப்புவியோ ஒரு ரக்‌ஷகனைப் பெறுகிறது.

lÉÉÎxiÉ iÉåwÉÑ eÉÉÌiÉÌuɱÉÃmÉMÑüsÉkÉlÉÌ¢ürÉÉÌSpÉåSÈ ||
அவர்களுக்கிடையே (பக்தர்கள்) ஜாதி, கல்வி, அழகு, குலம், செல்வம், தொழில் இவற்றினால் வரும் உயர்வு தாழ்வுகள் எதுவும் இல்லை.

rÉiÉxiÉSÏrÉÉ ||
ஏனெனில் அவர்களனைவரும் இறைவனின் உடைமைகளே.
பக்தர்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள், அவனது உடைமைகளேயாவர்கள். அவனது விசேஷ அன்புக்குரியவர்களாவர்கள்.  பக்தனுக்கு உலகிலுள்ள எல்லாமே இறைவன் தான்.

uÉÉSÉå lÉÉuÉsÉqorÉÈ ||
யாரிடமும் விவாதம் அல்லது சொற்போர் செய்யக் கூடாது.
இறைவனைப் பற்றியோ ஆன்மீக உண்மைகளைப் பற்றியோ யாரிடமும் விவாதத்தில் ஈடுபடக்கூடாது.

oÉÉWÒûsrÉÉuÉMüÉzÉiuÉÉSÌlÉrÉiÉiuÉÉŠ || 75 ||
ஏனெனில் கருத்து வேற்றுமைக்கு நிறைய இடமிருக்கின்றது.  மேலும் புத்தியை துணை கொண்டு எடுக்கும் கருத்தும் முடிவானதல்ல.  எனவே வேண்டாத வீண் விவாதங்களை விட்டுவிடு. அடக்கமாக, எளிமையாக இருந்து கொண்டு, தினசரி சாதனம் செய்.  விவாதத்தில் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதே.

pÉÌ£üzÉÉx§ÉÉÍhÉ qÉlÉlÉÏrÉÌlÉ iɲÉåkÉMüMüUçÇAÉÍhÉ MüUhÉÏrÉÉÌlÉ || 76 ||
பக்தியை அடைய அதை வளர்க்கும் நூல்கள் படித்துச் சிந்திக்கப்பட வேண்டும்.  அப்படியே பக்தியை எழுப்பும் செயல்களும் செய்யப்பட வேண்டும்.
பக்தியின் லட்சியம், மகிமை, இனிமை, இறைவனது லீலைகள், மகான்களின் வரலாறு, மற்றும் பக்தியை வளர்க்க உதவும் சாதனங்கள் இவை பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.  அத்தகைய நூற்படிப்பால் பக்தி வளரும்.
அதற்கு துணை செய்யும் முக்கியமான நூல்களாவன: ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம், பகவத் கீதை, விஷ்ணுபுராணம், அத்யாத்ம ராமாயணம், துளசி ராமாயணம், விஷ்ணு ஸஹஸ்ரநாம்ம், சாண்டில்ய சூத்திரங்கள், சிவபுராணம், தேவீ பாகவதம், நாரத பஞ்சரத்னம், பக்தியோகசாரம், பக்தியும் சங்கீர்த்தனமும், பக்திரஸாம்ருதம், தேவாரம், திருவாசகம், திவ்யப்ரவந்தம், தசபோதம், துக்காராமின் கீர்த்தனை, ஞானேசுவரி, பக்தி ரசாயனம், பக்தி ராசம்ருத ஸிந்து முதலியன.

xÉÑZÉSÒÈZÉåcNûÉsÉÉpÉÉÌSirÉ£åü MüÉsÉå mÉëiÉϤÉqÉÉhÉå ¤ÉhÉÉkÉïqÉÌmÉ urÉjÉïÇ lÉ lÉårÉqÉç ||
இன்ப, துன்பங்கள், ஆசை, லாபம், இவற்றை அனுபவித்த பின் தியானத்திற்காக இருக்கக்கூடிய நேரம் மிக குறைவு.  எனவே அரை நொடியைக்கூட ஒருவன் வீணாக்கலாகாது.

AÉÌWÇûxÉÉxÉirÉzÉÉæcÉSrÉÉÎxiÉYrÉÉÌS cÉÉËU§rÉÉÍhÉ mÉËUmÉÉsÉlÉÏrÉÉÌlÉ ||
நற்பண்புகளான அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, கருணை, வேதங்களிலும், இறைவன் இருக்கிறான் என்பதிலும் நம்பிக்க மற்றும் இவை போன்ற குணங்களையும் கட்டாயமாகப் பயின்று கடைப்பிடித்து அவற்றைக் காக்க வேண்டும்.

xÉuÉïSÉ xÉuÉïpÉÉuÉålÉ ÌlÉͶÉliÉÉæpÉïaÉuÉÉlÉåuÉ pÉeÉlÉÏrÉ ||
பொறுப்புக்கள், கவலைகளினின்றும் விடுபட்டவனாய் முழு மனதோடு, இதயபூர்வமாக எப்போதும் இறைவனை மட்டுமே வழிப்பட வேண்டும்,

xÉ MüÐirÉïqÉÉlÉÈ zÉÏbÉëqÉåuÉÉÌuÉpÉïuÉirÉlÉÑpÉÉuÉrÉÌiÉ pÉ£üÉlÉç || 80 ||
இவ்விதமாக அழைக்கப்பட்டதும், புகழப்பட்டதும் இறைவன் விரைவில்
தோன்றுகிறான்.  தன் பக்தர்களை தன்னை அநுபவிக்கவும் வைக்கிறான்.
அவர்களுக்கு அநுபூதி அருளுகிறான்.

̧ÉxÉirÉxrÉ pÉÌ£üUåuÉ aÉUÏrÉxÉÏ pÉÌ£üUåuÉ aÉUÏrÉxÉÏ || 81 ||
ஞானம், கர்மம், பக்தி என்ற மூன்று சத்தியப் பாதைகளில் பக்தியே மேலானது, பக்தியே மேலானது.

aÉÑhÉqÉÉWûÉiqrÉÉxÉÌ£üÃmÉÉxÉÌ£ümÉÔeÉÉxÉÌ£üxqÉUhÉÉxÉÌ£üSÉxrÉÉxÉÌ£ü
xÉZrÉÉxÉÌ£üuÉÉixÉsrÉÉxÉÌ£üMüÉliÉÉxÉYirÉÉiqÉÌlÉuÉåSlÉÉxÉÌ£üiÉlqÉrÉÉ
xÉÌ£ümÉUqÉÌuÉUWûÉqÉÌ£üÃmÉæMükÉÉmrÉåMüÉSzÉkÉÉ pÉuÉÌiÉ || 82 ||
இறைவனிடம் செலுத்தும் பக்தியானது விதவிதமாக வெளிப்படுத்தப்படுகின்றது.  கீழ்கண்ட பதினொரு வெளிப்பாடுகளும் பக்திதான்.
1.   இறைவனுடைய அருங்குணங்களை போற்றுதல்
2.   அவனது மோகன வடிவில் அன்பு வைத்தல்
3.   அவனது வழிபாட்டில் அன்பு
4.   எப்போதும் அவனைப் பற்றி நினைப்பதில் அன்பு
5.   அவனுடைய பணியில் அன்பு
6.   அவனை நண்பனாக நேசித்தல்
7.   அவனைக் குழந்தையாக அன்பு காட்டல்
8.   அவனை கணவனாகவோ, மனைவியாகவோ நினைந்து பக்தி செலுத்துதல்
9.   சரணாகதியில் அன்பு
10.  அவனில் முழுமையாகக் கலத்தல்.
11.  அவனிடமிருந்து பிரந்த விரகதாபம்.

CirÉåuÉÇ uÉSÎliÉ eÉlÉeÉsmÉÌlÉpÉïrÉÉ LMüqÉiÉÉÈ
MÑüqÉÉZrÉÉxÉzÉÑMüzÉÉÎhQûsrÉaÉaÉïÌuÉwhÉÑMüÉæÎhQûsrÉzÉåwÉÉå®ÉuÉÉÂÍhÉ oÉÍsÉWûlÉÔqÉ̲ÍpÉwÉhÉÉSrÉÉå pÉ£üÉcÉÉrÉÉïÈ  || 83 ||
இப்படியாக பக்தியை விளக்கும் ஆசாரியர்கள் – சனத்குமார்ர், வியாசர், சுகர், சாண்டில்யர், கர்கர், விஷ்ணு, கௌண்டில்யர், சேஷன், உத்தவ, ஆருணி, பலி, ஹனுமான், விபீஷணன் முதலானோர் ஒரு மனதாக பிறரது கடுமையான விமர்சனங்களுக்கு அஞ்சாது முழங்கியிருக்கின்றார்கள்

rÉ CSÇ lÉÉUSmÉëÉå£Çü ÍzÉuÉÉlÉÑzÉÉxÉlÉÇ ÌuɵÉxÉÌiÉ ´É®iÉå xÉ pÉÌ£üqÉÉlpÉuÉÌiÉ xÉ mÉå¹Ç sÉpÉiÉå xÉ mÉëå¹Ç sÉpÉiÉå CÌiÉ || 84 ||
நாரதரால் சொல்லப்பட்ட இந்த மங்களகரமான உபதேசத்தில் நம்பிக்கையும் சிரத்தையும் உடையவன் பக்திமான் ஆகின்றான்.  அன்புக்குகந்த மேலான இறைவனை அடைகிறான், இறைவனை அடைகிறான்.




No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...