Friday, June 9, 2017

பகவான் பிரஹலாதரின் உபதேசம் - ஶ்ரீமத் பாகவத புராணம்

ஶ்ரீமத் பாகவத புராணம்
பகவான் பிரஹலாதரின் உபதேசம் ஸாரம்

பகவான் பிரஹலாதர் தன்னுடன் குருகுலத்தில் பயிலும் அசுர பிள்ளைகளுக்கு உபதேசித்த பாகவத தர்ம கருத்துக்கள்:

  • அறிவுள்ளவன் இளம் வயதிலிருந்தே பாகவத தர்மங்களை கடைப்பிடிக்க வேண்டும்.  மனிதப்பிறவி கிடைத்தற்கரியது, அதே சமயம் நிலையற்றது.  ஆனால் பலனை தரக்கூடியது.
  • இவ்வுலகில் மனிதனுக்கு பகவான் நாராயணனின் பாதங்களில் சரணடைந்து விடுவதுதான் உத்தமமானது.  பகவான் எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு கொண்டவர், நண்பனாகவும், ஈஸ்வரனாகவும் இருக்கின்றார்
  • இந்த மானிட உடலெடுத்தவர்களுக்கு உடலானது புலன்களால் அனுபவிக்க கூடிய இன்ப, துன்பங்கள் அனைத்துமே முயற்சியில்லாமலே பூர்வபுண்ணியத்தால், பிராரப்த வசத்தினால் கிடைத்து விடும்
  • புலன்களின் சுகத்திற்காக தம் ஆயுட்காலத்தை விணாக்கக்கூடாது.  பகவான் நாராயணனின் பாதங்களை சேவிப்பவன், சரணடைந்தவன் அடையும் சுகத்தை வேறு யாரும் அடைய மாட்டார்கள்
  • எனவே சம்சாரத்தில் இருப்பவன் இந்த உடல் நலமாகவும், சக்தியோடும் இருக்கும் போதே தன் ஆத்மாவிற்கு நலம் தேடிக் கொள்ள வேண்டும்.
  • மனிதனுக்கு ஆயுட்காலத்தின் பாதியானது தூக்கத்தில் வீணாக கழிந்து விடுகிறது.  சுக வருடங்கள் குழந்தைப்பருவத்திலும், இளமை பருவத்திலும், கழிந்து விடுகிறது.  வயோதிக  நிலையில்  சக்தியிழந்த உடலால் எதையும் செய்ய முடியாமல் மீதியுள்ள வருடங்களும் சென்று விடும்.
  • துயரங்களால் நிரம்பிய, பூர்த்தி செய்ய முடியாத ஆசைகளை அடைவதிலும், மதிமயக்கத்திலும், அறியாமையிலும் செல்வத்தை சேர்ப்பதிலும் மேலும் பல வருடங்கள் கழிந்து விடுகின்றன
  • பற்று, பந்தம், பாசம் போன்ற கயிற்றினால் நன்றாக கட்டப்பட்ட புத்தியை விடுவிக்க சக்தி இல்லாமல் இருப்பார்கள்.  இவர்கள் புலனடக்கமின்மையால் இந்த நிலையில் இருக்க நேரிடுகிறது
  • பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டாலும் பணத்தாசையை யாரும் விட மாட்டார்கள்
  • மனைவி, மக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் இவர்கள் மீது வைத்திருக்கும் விட முடியாத பற்றினால் கட்டுப்பட்டவர்களால் எப்படி இந்த சங்கத்தை விட முடியும்
  • தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள், வீடு, வாசல், நிலம், பசுக்கள் இவைகளை எப்படி இவர்களால் துறக்க முடியும்
  • கர்மாக்களை செய்து கொண்டு  பேராசையால் எதையும் மனநிறைவுடன் அனுபவிக்காதவன், புலனுகர் சுகத்தையே சிறதந்தாக நினைப்பவனால் எப்படி ஆசையை ஒழிக்க முடியும்
  • எச்சரிக்கையில்லாமல் இருப்பவன் வீணாகி கடந்து சென்ற ஆயுட்காலத்தையும், பரம புருஷார்த்த த்தையும் அறிவதில்லை.  எங்கும், எப்போதும் மூன்றுவிதமான துயரங்களை அனுபவித்துக் கொண்டு இல்லறத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பதாக நினைப்பவனால் எப்படி வைராக்கியத்தை அடைய முடியும்?
  • பிறர் பொருட்களை செல்வத்தை அபகரிப்பதனால் இகலோகத்திலும், பரலோகத்திலும் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அறிந்திருந்தும் புலனடக்கமின்மையினால், ஆசையினால் இல்லறத்தில் இருப்பவன் அதை செய்து கொண்டிருக்கின்றான்
  • குடும்பத்தை பாதுகாப்பதிலே கவனமாக இருந்து கொண்டு இருப்பவனால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதியற்றவனாகின்றான்.
  • உலக விஷயங்களில் பற்றுடையவர்களின் சங்கத்தை விட்டுவிட்டு பரமாத்மாவான நாராயணனை  விரைவிலேயே சரணடையுங்கள். இவர் பற்றற்றவர்களால் விரும்பப்படும் மோட்ச ஸ்வரூபம்.
  • எல்லா ஜீவராசிகளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதாலும், எங்கும் வியாபித்து இருப்பவருமான அவரை அதிக சிரமமில்லாமல் சந்தோஷம் அடைய செய்யலாம்.
  • பகவானாகவும், ஈஸ்வரனாகவும்,பரமாத்மாவாகவும் இருக்கும் அவரே ஆத்மாவாக இருக்கிறார்
  • எல்லா உயிர்களிடத்திலும் கருணையையும், நட்புணர்வையும் காட்டுங்கள். அதனால்தான் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்
  • அந்த பரமாத்மாவான விஷ்ணுவை சரணடைந்து சந்தோஷப்படுத்துவதால் எதைத்தான் அடைய முடியாது! அவரது பாதார விந்தத்தின் தேன் வாசனை என்ற சாரத்தை சேவித்து விஷ்ணு கானம் செய்யும் நமக்கு மோட்சமும் விரும்பத்தக்கதல்ல, குறிக்கோளும் அல்ல. அதாவது இவைகள் தானாக நம்மை வந்தடையும்

No comments:

A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...